பாகிஸ்தானில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படிப்பதை தடை செய்துள்ள தலிபான்களின் நடவடிக்கைகளை, குழந்தைப் போராளியான மலாலா யூசுப்சாய் தைரியமாக எதிர்த்தார். அத்துடன், பெண் கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதனால் அவர் மீது ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அவரை சரமாரியாக சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிய அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு மறுபிறவி எடுத்துள்ள மலாலா தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறார். அவரது தந்தை பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் பணியாற்றுவதால் அங்கு பள்ளிப் படிப்பைத் தொடர்கிறார். இந்நிலையில், மலாலாவின் 16-வது பிறந்தநாள் ‘மலாலா தினமாக’ உலகம் முழுவதும் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. ஐ.நா. சார்பில் நியூயார்க்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் 12-ம்தேதி மலாலா தினம் இளைஞர் அமர்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவனை ஐ.நா. தேர்வு செய்துள்ளது. 17 வயதான லட்சுமணன் ஹெம்ப்ராம் (வயது 17) என்ற அந்த மாணவன், கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிலையத்தில் படித்து வருகிறான். அவன் இந்தியாவின் இளம் தலைவர் பிரதிநிதியாக மலாலா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.
சனி, 6 ஜூலை, 2013
ஒடிசா மாணவன் அமெரிக்காவில் மலாலா தின விழாவில் கலந்துகொள்வார்
பாகிஸ்தானில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படிப்பதை தடை செய்துள்ள தலிபான்களின் நடவடிக்கைகளை, குழந்தைப் போராளியான மலாலா யூசுப்சாய் தைரியமாக எதிர்த்தார். அத்துடன், பெண் கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதனால் அவர் மீது ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அவரை சரமாரியாக சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிய அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு மறுபிறவி எடுத்துள்ள மலாலா தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறார். அவரது தந்தை பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் பணியாற்றுவதால் அங்கு பள்ளிப் படிப்பைத் தொடர்கிறார். இந்நிலையில், மலாலாவின் 16-வது பிறந்தநாள் ‘மலாலா தினமாக’ உலகம் முழுவதும் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. ஐ.நா. சார்பில் நியூயார்க்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் 12-ம்தேதி மலாலா தினம் இளைஞர் அமர்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவனை ஐ.நா. தேர்வு செய்துள்ளது. 17 வயதான லட்சுமணன் ஹெம்ப்ராம் (வயது 17) என்ற அந்த மாணவன், கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிலையத்தில் படித்து வருகிறான். அவன் இந்தியாவின் இளம் தலைவர் பிரதிநிதியாக மலாலா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.
வினவு: பாமக எனும் நச்சும்பாம்பை ஒழிக்க அனைவரும் ஒன்று திரள்வோம்!
மகளின் காதலை ஓரளவுக்கு ஏற்கும் மனநிலையில் இருந்த திவ்யாவின் தந்தை நாகராஜனின் தற்கொலையை தூண்டி விட்டதும் இதே பாமகவினர்தான். நாகராஜின் மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்த இந்த சாதி வெறியர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதும் உடன் திட்டமிட்டு தலித் மக்களின் ஊர்களை நாசமாக்கினர். அப்போதும் பாமகவின் சாதி வெறி அடங்கவில்லை. இவர்களை துணிவுடன் எதிர்த்து நின்று கணவன் இளவரசனுடன் வாழ்ந்து வந்த திவ்யாவை எப்படி பிரிப்பது என்று இரத்தவெறி பிடித்த ஓநாய் போலக் காத்திருந்தனர்.
சமூக நீதிப் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் சாதி வெறி ! கம்யூனிஸ்ட் கண்டனம்
சென்னையில் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா. பாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து
இளவரன் மரணம், என்.எல்.சி., விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து 06.07.2013
சனிக்கிழமை காலை செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, தருமபுரி திவ்யா - இளவரசன் சாதி மறுப்பு காதல் திருமணம் சாதி வெறியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டுள்ளது. திவ்யாவின் தந்தை தற்கொலைக்குப் பிறகு இப்போது இளவரசனின் மரணமும் நிகழ்ந்திருக்கிறது. மூன்று தலித் கிராமங்கள் சூறையாடப்பட்டன. சமூக நீதிப் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் நிகழ்ந்துள்ள இந்தக் கொடூரம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாகும்.தமிழக
ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் இத்தகைய சாதி வெறி மற்றும் தீண்டாமைக்
கொடுமைக்கு எதிராக வலுவாக போராட முன்வர வேண்டும் என்றும் சாதி வெறி
சக்திகளை தமிழகம் புறக்கணிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். இளவரசன் மரணம் குறித்து நியாயமான துரிதமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென இரண்டு கட்சிகளும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என்றனர்.
ரயில் இறக்கவில்லை? டாக்டர் ராமதாஸ், அன்புமணி, தேன்மொழிதான் இளவரசன் சாவுக்கு காரணம் ! பெற்றோர் புகார்
தர்மபுரி: தன் மகன் இளவரசன் சாவுக்கு பாமக நிறுவனத் தலைவர் டாக்டர்
ராமதாஸ், அவர் மகன் அன்புமணி, திவ்யாவின் தாய் தேன்மொழி உள்ளிட்ட 12
பேர்தான் காரணம் என புகார் கூறியுள்ளனர் தர்மபுரி இளவரசனின் பெற்றோர்.
இளவரசனின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அவர் ரயில் அடிபட்டி
இறக்கவில்லை என்பது கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகியுள்ளது. பிரேத பரிசோதனை
அறிக்கையும் அதற்கு வலு சேர்த்துள்ளது.
எனவே இளவரசன் உடலை வாங்க மறுத்த பெற்றோர், மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட
வேண்டும் என்று கோரியுள்ளனர். எனவே இளவரசன் உடல் தர்மபுரி அரசு மருத்துவமனை
பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இளவரசனின் பெற்றோர் இளங்கோ - அம்சவேணி ஆகியோர் தர்மபுரி
மாவட்ட கலெக்டர் லில்லியிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்கள்.
அந்த மனுவில் எனது மகன் சாவுக்கு பா.ம.க. தலைவர்கள், டாக்டர் ராமதாஸ்.
அன்புமணி, திவ்யாவின் தாய் தேன்மொழி, , தர்மபுரி முன்னாள் எம்.பி. டாக்டர்
செந்தில், மாநிலத் துணைச் செயலாளர் சரவணன், அவர்களது வழக்குரைஞர் பாலு,
செல்லன்கோட்டாய் பகுதியைச் சேர்ந்த ராஜா, முருகேசன் மற்றும் 12 பேர் தான்
பொறுப்பு. மேலும் என் மகன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த புகாரை பெற்றுக் கொண்டுள்ள போலீசார், இதற்கான விசாரணை குறித்து எந்த
உறுதியும் அளிக்கவில்லை. புகாரையும் இன்னும் பதிவு செய்யவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
வேலூர் மருத்துவ மாணவி பவித்ரா கீழே குதித்து தற்கொலை அல்லது கொலை ?
வேலூர் தொரப்பாடி ராஜா தெருவை சேர்ந்தவர் பாலு (40). இவரது மகள்
பவித்ரா(19) வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் பி.எஸ்.சி.
நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மதியம் 2 மணியளவில் கல்லூரி
விடுதியின் 7-வது மாடிக்கு சென்ற அவர் திடீரென மேலே இருந்து கீழே
விழுந்தார். பலத்த காயம் அடைந்த பவித்ராவை ஊழியர்கள் மீட்டு
மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா
உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா
என்பது குறித்து வேலூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர். எல்லா செய்திகளும் பிரபல மருத்துவ கல்லூரி என்றே குறிப்பிடுகின்றன , அந்த பிரபல கல்லூரியின் பெயர் என்னவென்று தெரிந்தால் சொல்லுங்களேன் , பணம் பத்தும் செய்யும்
ஸ்னோடெனுக்கு அடைக்கலம் வழங்க நிகரகுவா, வெனிசுலா சம்மதம்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் உளவு பார்த்த ரகசியங்களை வெளிப்படுததிய எட்வர்ட் ஸ்னோடெனுக்கு
அடைக்கலம் வழங்க நிகரகுவா மற்றும் வெனிசுலா அதிபர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து ஸ்னோடென் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். அவர் 10
நாட்களுக்கும் மேலாக மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் தங்கி இருக்கிறார்.
இவர் அடைக்கலம் கேட்டு நிகரகுவா, வெனிசுலா, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு கோரிக்கை அனுப்பினார். இந்த
கோரிக்கையை இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் நிராகரித்தன.
இதில் நிகரகுவா மற்றும் வெனிசுலா நாடுகள் ஸ்னோடெனுக்கு தஞ்சம் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.
நிகரகுவாவின் அதிபர் டேனியல் ஒர்டேகா மற்றும் வெனிசுலா அதிபர் நிகொலஸ் மதுரோ ஆகியோர் நேற்று மதியம்
தத்தமது நாடுகளில் நடந்த நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பினை வெளியிட்டனர்.
நடிகை ரோஜா YSR காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ! லக்கா? கிக்கா ? இந்த தடவையாவது கிக்கு கிடைக்காம லக்கு கிடைக்க வாழ்த்துக்கள்

ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா ‘‘மரோபிரஜா பிரஸ்தானம்’’ என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். நேற்று வரை அவர் 200 நாள் பாதயாத்திரை சென்றுள்ளார். மொத்தம் 2664 கி.மீ. தூரம் நடந்து பொது மக்கள் குறைகளை கேட்டறிந்துள்ளார். இதையொட்டி விசாகபட்டினத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஷர்மிளா பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 1 ஆண்டாக ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அரசியல் வாழ்க்கையில் அவர் தலை தூக்காமல் இருக்க காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே அவரை பழிவாங்குகிறது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியும் உடந்தையாக உள்ளது. அவர் ஜெயிலில் இருந்த போது நடந்த இடைத்தேர்தலில் 16 பேர் எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றுள்ளனர். 2014-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பார். இவ்வாறு அவர் பேசினார். ரோஜா ஆந்திரா அரசியலில் அதிஷ்டம் இல்லாதவர் என்று பெயர் எடுத்தவர் ! அடிச்ச காசை எப்படித்தான் ஜெகன் காப்பாத்த போகிறாரோ ?
சமூகநீதி இப்படி குடை சாயலாமா? கி.வீரமணி அறிக்கை!
தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.
அதே
நேரத்தில் தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் அறிவுறுத்தலில்
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முன்னேறிய வகுப்பினர்க்குத் தகுதி
மதிப்பெண்கள் தனித்தனியே நிர்ணயிக்கப்படுவது குறித்தும் விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
ஆந்திர மாநிலத்தில் முன்னேறிய பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும்
பிற்படுத்தப் பட்டோருக்கு 50 சதவீத மதிப்பெண்களும், தாழ்த்தப் பட்டோருக்கு
40 சதவீத மதிப்பெண்களும் நிர்ணயிக்கப் பட்டுள்ளன. பீகாரில் முன்னேறிய
பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்டோருக்கும்
மற்றவர்களுக்கும் 55 சதவீத மதிப்பெண்களும், ஒடிசா மாநிலத்தில் முன்னேறிய
பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும், மற்ற பிரிவினருக்கு 50 சதவீத
மதிப்பெண்களும் தனித்தனியே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சுவற்றில் வைத்து பூசப்பட்ட சிறுமியின் சடலம் மீட்பு! பலாத்காரமா?
கடந்த
4.07.2013 அன்று வீட்டில் இருந்து தண்ணீர் எடுக்க சென்றபோது, மகளை
அழைத்துச் சென்றார் உஷா சாந்தினி. அப்போது அவரது மகள் மாயமானார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து பதறிய உஷா சாந்தினி, சுற்றும் முற்றும் தேடி
பார்த்தார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இந்தநிலையில்
உஷா சாந்தினி வீட்டி-ருந்து மூன்றாது வீடான அமல்ராஜ் வீட்டில் இருந்து
இன்று (06.07.2013) துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து சிவகங்கை டவுன்
போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்.
வீட்டின் சமையல் அறையில் உள்ள சுவரில் இருந்து நாற்றம் வீசியது. அதனை
உடைத்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மாயமான சிறுமியின் உடல் என அறிந்தனர்.
இதையடுத்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு
கொண்டு சென்றனர்.
தலைமறைவான
அமல்ராஜை தேடி வருகின்றனர். அமல்ராஜை பற்றி போலீசார் கூறுகையில்,
அமல்ராஜுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவருடைய செக்ஸ் டார்ச்சர் தாங்க
முடியாமல் அவரது மனைவி இவரை பிரிந்து சென்றுவிட்டார். தனியாக வசித்து வந்த
அமல்ராஜ், சிறுமியை கடத்தி பா-யல் பலாத்காரம் செய்தாரா என்று சந்தேகம்
எழுகிறது. பிரேத பரிசோதனை முடிவு வந்தால்தான் அதுபற்றி முடிவு செய்யப்படும்
என்றனர்.
நா.ஆதித்யன் nakkheeran.in
தர்மபுரி எஸ்பியிடம் திவ்யா மற்றும் தாயாரை ஒப்படைத்தது பாமக! அவர்கள் பாமக கட்டுப்பாட்டில் உள்ளது நிருபணம்
சென்னை: இளவரசன் மனைவி திவ்யாவையும் அவர் தாயாரையும் தர்மபுரி மாவட்ட
எஸ்பி அஸ்ரா கார்கிடம் ஒப்படைத்தனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.
காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசனிடம் இருந்து அண்மையில் பிரிந்து
சென்றார் திவ்யா. "இனி ஒருபோதும் இளவசரனுடன் சேரமாட்டேன்," என்று அவரை கூற
வைத்து, இளவரசன் மர்மமான முறையில் மரணிக்க காரணமாக இருந்தன சில சமூக விரோத
சக்திகள்.
திவ்யா இப்படி சொன்ன அடித்த நாளே காதல் கணவர் இளவரசனின் உடல் தர்மபுரி
அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில்
கண்டெடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இளவரசனின் மரணம்,
தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி பெற்றோர்,
உறவினர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், திவ்யா, அவரது தாயாருக்கு பாதுகாப்பு அளிக்க மாவட்ட
காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்ற (5ஆம் தேதி)
உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, திவ்யாவையும், அவரது தாயார் அம்சவேணியையும் பா.ம.க.வினர் மாவட்ட
காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க்கிடம் இன்று (6ஆம் தேதி)
ஒப்படைத்துள்ளனர்.
இனி திவ்யாவை பாதுகாப்பது காவல்துறையின் கடமை என்றும் கூறியுள்ளனர்
tamil.oneindia.in
tamil.oneindia.in
கட்டிட தொழிலாளர் கதை சிவப்பு.. ரூபா மஞ்சரி

இயக்கும் படம் ‘சிவப்பு’. இதுபற்றி அவர் கூறியதாவது: சிவப்பு என்பது ஒரு நிறமாக தெரிந்தாலும் அதில் வறுமை, கோபம், காதல், வன்முறை என நிறத்தை மீறிய அம்சங்களும் புதைந்திருக்கிறது. அடிமைகளாக அவதிப்படுபவர்களின் உள்ளுணர்வை பிரதிபலிப்பதுடன் கட்டிடம் கட்டும் தொழிலாளர் களின் மறுவாழ்க்கை பதிவாக இக்கதை அமைக் கப்பட்டுள்ளது. ராஜ்கிரண், நவீன் சந்திரா ஹீரோக்கள். ரூபாமஞ்சரி ஹீரோயின். தம்பி ராமையா, செல்வா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மது அம்பாட் ஒளிப்பதிவு. என்.ஆர்.ரகுநந்தன் இசை. முக்தா கோவிந்த், பிரியதர்ஷினி தயாரிப்பு.
5000 பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைப்பு துண்டிப்பு! கட்டணம் செலுத்தாததால்
தஞ்சை: அரசு உரிய கட்டணம் செலுத்தாததால், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும்
அரசு உதவி பெறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளிகளில் உள்ள பிராட்பேண்ட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் இ,மெயில்
மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளின்
எண்ணிக்கை 34,208. நடுநிலைப் பள்ளிகள் 42,225, உயர்நிலைப் பள்ளிகள் 5,046,
மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 4,530. தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு
உதவி பெறும், தனியார் பள்ளிகளில் மொத்தம் 1.35 கோடி மாணவ, மாணவிகள்
படிக்கின்றனர். பள்ளிகளிலும், கல்வித் துறையிலும் கணினியின் பயன்பாடு
அதிகரித்து வருகிறது. பள்ளிகளுக்கு கல்வித் துறையிலிருந்து அனுப்பி
வைக்கப்படும் அனைத்துத் தகவல்களும் கணினி மூலமே பரிமாறிக்கொள்ளப்பட்டு
வருகிறது. மேலும், மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு
வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவைகள் ஆன்லைன்
மூலமே விண்ணப்பித்து மாணவர்களுக்கு பெற்றுத் தரப்படுகிறது.
தெருவில் குழந்தையை விற்ற தாய் கைது ! வறுமையின் கொடுமை
2D Entertainmen சூர்யாவின் படநிறுவன பெயர் இதுதான் ! பொதுவா D முதல் எழுத்தாக வருவது நல்லதில்லையாமே? 2 D வேற
தனது இரண்டு குழந்தைகளின் பெயரில் புதிதாக படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார் நடிகர் சூர்யா.
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு பிஸியாக இருக்கும் பட நிறுவனங்களில் ஒன்று
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம். இந்த நிறுவனத்தை சூர்யா, கார்த்தியின்
உறவுக்காரரான ஞானவேல்ராஜா நடத்தி வருகிறார். இந்த கம்பெனியே கிட்டத்தட்ட
சூர்யா குடும்பத்தின் சொந்தக்கம்பெனி போலத்தான் செயல்பட்டு வருகிறது.
காரணம் இந்த கம்பெனி சூர்யா, கார்த்தி இருவரை மட்டும் வைத்து படங்களை
தயாரித்து வருகிறது. சூர்யாவின் கால்ஷீட் தேதிகள் கேட்டு வரும் முன்னணி
இயக்குனர்களை, அப்படியே கார்த்தியின் கால்ஷீட் தேதிகள் கொடுத்து படத்தை
தயாரித்து விடுகிறதாம் ஸ்டுடியோ க்ரீன்.
அதாவது முதலில் வெங்கட்பிரபுவும், ராஜேஷும் சூர்யாவின் தேதிகள் கேட்டு தான் சென்றார்களாம். ஆனால் இருவருமே தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றனர். அத்துடன் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் அடுத்த படத்திற்கும் கார்த்தி தான் நாயகனாம். இந்நிறுவனம் படம் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் படத்தை வாங்கி விநியோகம் செய்தும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவும் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் வசூல் வேட்டை நடத்த தயாராகிவிட்டார். ஆமாங்க அவர் புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்நிறுவனத்திற்கு D - Diya, D - Dev என தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து 2D Entertainment என்று பெயரிட்டு இருக்கிறார். இந்த நிறுவனத்தில் முதல் படமாக சிங்கம் -2 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார் சூர்யா. அடுத்து இதன் மூலம் சிறு பட்ஜெட் படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
அதாவது முதலில் வெங்கட்பிரபுவும், ராஜேஷும் சூர்யாவின் தேதிகள் கேட்டு தான் சென்றார்களாம். ஆனால் இருவருமே தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றனர். அத்துடன் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் அடுத்த படத்திற்கும் கார்த்தி தான் நாயகனாம். இந்நிறுவனம் படம் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் படத்தை வாங்கி விநியோகம் செய்தும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவும் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் வசூல் வேட்டை நடத்த தயாராகிவிட்டார். ஆமாங்க அவர் புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்நிறுவனத்திற்கு D - Diya, D - Dev என தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து 2D Entertainment என்று பெயரிட்டு இருக்கிறார். இந்த நிறுவனத்தில் முதல் படமாக சிங்கம் -2 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார் சூர்யா. அடுத்து இதன் மூலம் சிறு பட்ஜெட் படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
பரிதியின் இரண்டாவது மனைவி உதயகுமாரி: அவர் எங்களோடு பேசமாட்டார் !
முன்னாள் அமைச்சர்
பரிதி இளம்வழுதி, சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து விலகி முதல்-அமைச்சர்
ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இந்த நிலையில், பரிதி
இளம் வழுதியின் மகன் பரிதிஇளம்சுருதி (22) வெள்ளிக்கிழமை மாலை திடீரென்று
சென்னையில் கைது செய்யப்பட்டார்.
பரிதிஇளம்சுருதி
சென்னை அயனாவரம், சபாபதி தெருவில் தனது தாயார் உதயகுமாரியுடன் வசித்து
வருகிறார். வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில், அயனாவரம் சோலை தெருவில் உள்ள
தனது சித்தி வீட்டில் இருந்தார். அப்போது போலீஸ் படையினர் திடீரென்று
சென்று பரிதி இளம்சுருதியை கைது செய்து, போலீஸ் வாகனத்தில் அழைத்து
வந்தனர். கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை
நடத்தப்பட்டது.
போர்வெல் பள்ளத்தில் விழுந்து சிறுமி பலி! கலெக்டர் அலட்சியம்! பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!
கரூரில்
போர்வெல் பள்ளத்தில் விழுந்து 12 வயது சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக
பதிலளிக்க நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் செயலாளர் மற்றும் கரூர்
கலெக்டர் ஆகியோருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்
வக்கீல் உத்தமன், மதுரை மாவட்ட கோர்ட் வக்கீல் சங்க செயற்குழு உறுப்பினர்
முத்துக்குமார், வக்கீல் அருண்குமார் ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளை பதிவாளர்
தங்ககனியிடம் ஒரு மனு அளித்தனர்.
அந்த
மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திறந்து கிடக்கும் ஆழ்துளை
கிணறுகளில் குழந்தைகள் விழுந்து பலியாகும் சம்பவம் அடிக்கடி நடக்கின்றன.
இடத்தின் உரிமையாளர்கள், போர்வெல் உரிமையாளர்கள் உரிய அனுமதி பெறாமல் ஆறு
மற்றும் 8 இஞ்ச்களில் 800 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு தோண்டுகின்றனர்.
தண்ணீர் இல்லாதபட்சத்தில் கிணறுகளை மூடாமல் அப்படியே விட்டு விடுகின்றனர்.
அந்த குழிகளில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் விழுந்து உயிரிழக்கின்றனர்.
மீண்டும் தலைதூக்கும் கல்லூரி மாணவர்கள் மோதல்: கடும் நடவடிக்கை அரசு உத்தரவு

வெள்ளி, 5 ஜூலை, 2013
தயாநிதி மாறன் தொகுதி நிதியில் இருந்து உத்தரகாண்டுக்கு 50 லட்சத்தை தாரை வார்த்தார் ! சுமங்கலி கேபிள் அங்கும் போகுமோ ?
சென்னை:உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள நிவாரண பணிகளுக்கு
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ^50 லட்சம் நிதி
வழங்கினார்.உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் ஏராளமானவர்கள்
உயிரிழந்தனர். நிலச்சரிவு காரணமாக சாலைகள், கட்டிடங்கள் இடிந்து
விழுந்ததில் பெரும் சேதம் ஏற்பட்டது. அங்கு நிவாரணப் பணிகள் தீவிரமாக
நடந்து வருகிறது. நிவாரணப் பணிகளுக்காக எம்.பி.க்கள் தங்களின் தொகுதி
மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி தருமாறு மத்திய அரசு அனைத்து
எம்.பி.க்களுக் கும் கடிதம் அனுப்பியது.இதற்கிடையில், திமுக எம்பிக்கள்
அனைவரும் ஏற்கனவே தங்களது ஒரு மாத சம்பளத்தை கருணாநிதியிடம் வழங்கினர்.
அந்த நிதி மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.இந்தநிலையில், மத்திய
அரசின் கோரிக்கையை ஏற்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தனது
மத்திய சென்னை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சத்தை ஒதுக்கி
உத்தரகாண்ட் மாநில மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு வழங்கினார்.
80 கோடி மக்களுக்கு 1 ரூபாயில் அரிசி, கோதுமை, உணவு தானியம்:சென்ற ஆட்சியில் திமுக அறிமுக படுத்திய திட்டம் விரிவுபடுத்த படுகிறது
டெல்லி: உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பாக அவசரச் சட்டத்துக்கு
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று அனுமதியளித்து கையெழுத்திட்டார்.
உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற விடாமலம நாடாளுமன்றத்தின் இரு
அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளி செய்து
வந்ததையடுத்து இந்த மசோதாவை அவசரச் சட்டத்தின் மூலம் நிறைவேற்ற மத்திய
அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஒப்புதல்
அளித்து, பின்னக் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக குடிரயசுத் தலைவர்
மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த உணவு பாதுகாப்பு மசோதாவில் பிரணாப் முகர்ஜி இன்று காலை
கையெழுத்திட்டார். இதன் மூலம், உணவு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு
அவைகளிலும் நிறைவேற்றுவதற்கு முன்பே, குடியரசுத் தலைவரின் கையெழுத்தை
பெற்றுவிட்டது.
இதன்மூலம் நாட்டின் 3ல் 2 பங்கு மக்களுக்கு, சுமார், 80 கோடி பேருக்கு, 5
கிலோ அரிசி, கோதுமை, பருப்புகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் மிகக் குறைந்த
விலையில், அதாவது கிலோ ரூ. 1 முதல் 3 ரூபாய்க்கு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ. 125,000 கோடியை
செலவிடவுள்ளது.
அத்வானி: ஆர்.எஸ்.எஸ்., காட்டும் வழியில் பணியாற்றுவோம்

ஆழமான உறவு கொண்டது என பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.,அத்வானி கூறியுள்ளார். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இன்று மகாராஷ்ட்டிர மாநிலம் நாக்பூரில் ஆர். எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத்தை சந்தித்து பேசினார்.
இவரை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அத்வானி; இன்றைய பேச்சு திருப்தியாக அமைந்தது. இதில் எதிர்கால சட்டசபை மற்றும் பார்லி., தேர்தல் பணி குறித்தும், சமீபத்திய அரசியல் நிலவரம் குறித்தும் விவாதித்தோம். பா.ஜ.,வும், ஆர். எஸ்.எஸ்., சும் மிக நெருக்கமான உறவு கொண்டது. இது மிக ஆழானது. இந்த இயக்கத்தில் நான் எனது 14 வயது முதல் இணைந்து செயல்பட்டு வருகிறேன். வரவிருக்கும் 2014 லோக்சபா தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்., காட்டும் வழியில் பணியாற்றுவோம் . இவ்வாறு அவர் கூறினார்.
மகளை விபசாரத்தில் தள்ளிய தந்தைக்கு 7 ஆண்டு ஜெயில்
இதன் பிறகு அந்த இளம் பெண்ணை ஒரு மாதம் தனது வீட்டில் அடைத்து வைத்து வீரான் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த கொடுமையில் இருந்து தப்பி வந்த அந்த பெண் கொச்சி போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து சுதீர், லில்லி, வீரான் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தனி தெலுங்கானா காங்கிரஸ் தயார்: ராவ், ஜெகன் செல்வாக்கை குறைக்க புதிய தந்திரம்
தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை ஏற்க, காங்கிரஸ் தயாராகி விட்டது.
ஆனாலும், புதிதாக உருவாக்கப்பட உள்ள, தனி மாநிலம், எல்லோரும்
எதிர்பார்ப்பது போல இல்லாமல், காங்கிரஸ் அல்லாத கட்சிகளை பலவீனப்படுத்தும்
வகையில் உள்ள, தெலுங்கானா மாநிலமாகவே இருக்கும். அதற்கேற்ற வகையில்,
காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.ஆந்திர மாநிலத்தை
இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, சந்திரசேகர
ராவின், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உட்பட, பல கட்சிகள், கடந்த பல
மாதங்களாக, தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றன.
ஆலோசனை: ஆனாலும்,
இந்த கோரிக்கை மீது, காங்கிரஸ் இதுவரை கவனம் செலுத்தவில்லை. அடுத்த ஆண்டு,
ஆந்திராவில், லோக்சபா தேர்தலும், சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளதால்,
தற்போது, இதுபற்றி தீவிரமாக பரிசீலித்து வருகிறது. விரைவில், இந்த
விவகாரத்தில், முடிவெடுக்க காங்., விரும்புவதால், கடந்த சில நாட்களாகவே,
டில்லியில், இது தொடர்பான, ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
அரசின் இலவசங்களை தடைசெய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் அரசுகள் மக்களுக்கு அளித்துவரும் இலவசங்களை தடை செய்ய வேண்டும் என வழக்கறிஞர்
சுப்ரமணியம் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது கலர் டி.வி.க்கள், எரிவாயு இணைப்புடன் கூடிய ஸ்டவ்கள் போன்றவை இலவசமாக
வழங்கப்பட்டன.
அதனையடுத்து அமைந்த அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது லேப்டாப்கள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை இலவசமாக
வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை தடை செய்ய வேண்டும் என சுப்ரமணியம் பாலாஜி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தற்போதை சட்டத்தின்படி அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவசங்களை வழங்குவதாக
தங்களது தேர்தல் வாக்குறுதியாக அளிப்பதை ஊழல் நடைமுறையாக கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிப்பதை கண்காணித்து
ஒழுங்குப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் வழிகாட்டி நெறிமுறைகளை அமைக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் வாக்காளர்களை கவர்ந்து இழுத்து ஓர் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இதனால், ஜனநாயகத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டு விடுகிறது என்றும் நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர்.
இதனால், ஜனநாயகத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டு விடுகிறது என்றும் நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர்.
திருமாவளவன்: அந்த வழியாக எந்த ரயிலும் போகவில்லை! இளவரசனின் சாவு திட்டமிட்ட சதி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், “தர்மபுரி இளைஞர்
இளவரசனின் சாவு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. உயர்நீதிமன்ற நீதிபதி
தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று
கூறியுள்ளார்.
தொல். திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “இளவரசன் மரணம் அடைந்திருக்கும் இந்த செய்தி, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ரயில் பாதை ஓரம் தலையில் மட்டும் அடிபட்டு, மூளை சிதறிய நிலையில், குப்புற விழுந்து பிணமாக கிடந்திருக்கிறார். உடலில் வேறு எந்த இடத்திலும் காயம் இல்லை.
அவர் இறந்த நேரத்தில் அந்த வழியாக எந்த ரயிலும் போகவில்லை என்று தெரிய வருகிறது. அவருடைய சாவு தற்கொலையாக இருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை.
திவ்யாவை சிலர் மிரட்டி, நீதிமன்றத்தில் ‘இளவரசனோடு இனி வாழமாட்டேன்’ என்று சொல்ல வைத்திருக்கிறார்கள். ஜூலை 1-ம் தேதி நடந்த விசாரணையில், ‘எனது கணவரோடு வாழ விரும்புகிறேன்’ என்று சொல்லிய அவர், அடுத்து 3-ம் தேதி நடந்த விசாரணையில், அவருக்கு எதிராக பேசியிருக்கிறார்.
தொல். திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “இளவரசன் மரணம் அடைந்திருக்கும் இந்த செய்தி, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ரயில் பாதை ஓரம் தலையில் மட்டும் அடிபட்டு, மூளை சிதறிய நிலையில், குப்புற விழுந்து பிணமாக கிடந்திருக்கிறார். உடலில் வேறு எந்த இடத்திலும் காயம் இல்லை.
அவர் இறந்த நேரத்தில் அந்த வழியாக எந்த ரயிலும் போகவில்லை என்று தெரிய வருகிறது. அவருடைய சாவு தற்கொலையாக இருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை.
திவ்யாவை சிலர் மிரட்டி, நீதிமன்றத்தில் ‘இளவரசனோடு இனி வாழமாட்டேன்’ என்று சொல்ல வைத்திருக்கிறார்கள். ஜூலை 1-ம் தேதி நடந்த விசாரணையில், ‘எனது கணவரோடு வாழ விரும்புகிறேன்’ என்று சொல்லிய அவர், அடுத்து 3-ம் தேதி நடந்த விசாரணையில், அவருக்கு எதிராக பேசியிருக்கிறார்.
வேலைக்காரருடன் ஓரின சேர்க்கை BJP அமைச்சர் ராஜினாமா! மத்திய பிரதேச மாநில நிதி அமைச்சர் ராகவ்ஜி

போபால்: வேலைக்காரருடன் ஓரினச் சேர்க்கை உறவு வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய பிரதேச மாநில நிதி அமைச்சர் ராகவ்ஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய பிரதேச மாநில மூத்த பாஜக தலைவரும் நிதி அமைச்சருமான ராகவ்ஜியின் (79 வீட்டில் வேலை செய்யும் நபர் ஒருவர் இன்று காலை காவல் நிலையத்திற்கு சென்று ராகவ்ஜி மீது புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து அமைச்சர் ராகவ்ஜி என்னுடன் உறவு வைத்துக் கொண்டார். மேலும் அவரது ஆட்கள் இருவரும் என்னுடன் உறவு வைத்துக் கொண்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். அமைச்சரின் பங்களாவில் பணியாற்றிய தன்னுடைய நண்பர் அமைச்சர் தன்னுடன் உறவு கொண்டதை வீடியோவாக எடுத்த சிடியையும் அந்த வேலைக்காரர் போலீசாரிடம் அளித்தார். இருப்பினும் போலீசார் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. இது குறித்து தகவல் அறிந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான் ராகவ்ஜியை ராஜினாமா செய்யுமாறு வலியறுத்தினார். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நீர்பாசனத் துறை அமைச்சர் ஜெயந்த் மால்யாவிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in
இளவரசன் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு ! பிரேதப் பரிசோதனை முடிந்தது
தர்மபுரி: இளவரசனின் உடல் பிரேதப் பரிசோதனை முடிவடைந்து விட்டது.
இருப்பினும் மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி உறவினர்கள் உடலை
வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரியில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட இளவரசனின் உடல் பிரேதப் பரிசோதனை
இன்று காலை தர்மபுரி அரசு மருத்துவமனையில் நடந்தது. முன்னதாக பிரேதப்
பரிசோதனையின்போது தங்களது தரப்பிலிருந்து இருவரை அனுமதிக்க வேண்டும் என்று
கோரி குடும்பத்தினரும், உறவினர்களும் போராட்டம் நடத்தினர்.
திருமாவளவன் : இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்
புதுச்சேரி: இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக எனக்கு
நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது என்று விடுதலைச்
சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி வந்திருந்த திருமாவளவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இளவரசன் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக நீதி விசாரணை
தேவை. அந்த நீதிபதி சாதிசார்பற்றவராக பணியில் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
காரணம், இளவரசனின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவர் அடித்து கொலை
செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பகத்தனமான தகவல் கிடைத்துள்ளது.
எங்களுக்கு தமிழக அரசு மீது நம்பிக்கை உள்ளது. அதனால் சிபிஐ விசாரணை
தேவையில்லை. நேர்மையான விசாரணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்
திருமாவளவன்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
உணவு பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

கட்சி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியாகும். அத்துடன் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இந்த திட்டத்தில் மிகவும் அக்கறை கொண்டு இருந்தார். 67 சதவீத மக்களுக்கு மலிவு விலையில் உணவு தானியம் வழங்க வகை செய்யும் இந்த சட்ட மசோதாவை கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எதிர்க்கட்சிகளின் போராட்டத்தினால் பாராளுமன்றம் முடங்கியதால், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.
ஹிட்லரின் ஜெர்மனியையும் மோடியின் இந்தியாவையும் அருகருகே நிறுத்தி வைத்து ஒப்பிட?

அடால்ஃப் ஹிட்லர் யூத இனப் படுகொலைகளை

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 2004) இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு குஜராத் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் உண்மையில் தீவிரவாதிகள் அல்ல; நடைபெற்றது போலி என்கவுன்ட்டர்தான் என்று சிபிஐ தற்போது அறிவித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக குஜராத்தைச் சேர்ந்த ஏழு காவல் துறை அதிகாரிகள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடிமீண்டும் விமரிசன வட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறார்.
ஹிட்லர் என்னும் ஆளுமை உருவான கதையும் அவர் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறும் The Rise and Fall of Third Reich-ல் விவரிக்கப்பட்டுள்ளது. ஹிட்லர் ஏன், எவ்வாறு யூதர்களைத் தேர்ந்தெடுத்தான், எப்படி வெறுப்பு அரசியலை வளர்த்தெடுத்தான், யூத எதிர்ப்பை எப்படி ஒரு சித்தாந்ததமாக வடிவமைத்தான், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி எப்படித் தன் கனவைச் செயல்படுத்தத் தொடங்கினான் என்பது இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹிட்லரையும் நரேந்திர மோடியையும் ஒப்பிடுவது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். மாறாக, ஹிட்லரின் ஜெர்மனியையும் மோடியின் இந்தியாவையும் அருகருகே நிறுத்தி வைத்து ஒப்பிட விரும்புகிறேன்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்கு: முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்
சென்னை: ""தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், அனைத்து
தரப்பினரும் பயன்பட்டு வரும் நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு
சட்டத்திலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.முதல்வர்
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: அவசரச் சட்டம் என்பது அசாதாரண
சூழ்நிலையில் மட்டுமே கொண்டு வர வேண்டியது. நான்கு ஆண்டுகளாக
விவாதிக்கப்பட்டு, கருத்தொற்றுமை எழாத நிலையில், அவசரச் சட்டத்தின் மூலம்,
தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவை, சட்டமாக்க முயல்வது, ஏற்றுக் கொள்ள
முடியாதது. உண்மையான உணவு பாதுகாப்பை, மக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென்ற
எண்ணம் இல்லாமல், தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் அரசியல் சித்து
விளையாட்டாக, இச்சட்டத்தை நிறைவேற்ற முயல்வதற்கு, கடும் கண்டனத்தை
தெரிவித்துக் கொள்கிறேன். விவாதித்து எடுக்க வேண்டிய முடிவை இப்படி அவசர சட்டம் மூலம் நிறைவேற்றுவது
சரியா என ஜெயா கேட்பதற்கு கொஞ்சமும் தகுதியிலாதவர்... இங்கே இவர்
எல்லாவற்றையுமே அவசர சட்டம் போலத்தானே நிறைவேற்றுகிறார்? எந்த திட்டத்தை
எதிர்கட்சிகளிடம் விவாதம் நடத்தி நிறைவேற்றினார்?
வியாழன், 4 ஜூலை, 2013
raanjhnaa தனுஷ் படம் பாகிஸ்தானில் தடை! இஸ்லாமிய - இந்து காதல் கதை!

ஒன்றாக கருதப்பட்ட திரைப்படம் ராஞ்சனா. தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துவிட்டு நேஷனல் அவார்டுடன் வித்தியாசமான கதைக்காக காத்திருந்த தனுஷுக்கு அடித்தது லக் இந்தித் திரைப்படமான ராஞ்சனா. தனுஷுக்கு தமிழில் உள்ள ரசிகர்களையும் திருப்திபடுத்தும் வகையில் அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது
கேளம்பாக்கம் பண்ணைவீட்டு கொலையில் திருப்பம் காதலனே கழுத்தை இறுக்கி கொன்றான்
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம்! உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சதாசிவம் கருத்து
இதனையொட்டி ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அவர்
அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: உயர்நீதிமன்றங்கள், மற்றும்
உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது இடஒதுக்கீட்டு முறை பின்பற்ற
வேண்டும். இந்நிய மனங்களின் போது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மிகப்
பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம், இடஒதுக்கீட்டை
கடைப்பிடிக்க வேண்டும்.
சாதிவெறியர்கள் அந்தப் பெண்ணையும் கொலை செய்து விடுவார்கள்.
இது தற்கொலையாகவே இருந்தாலும், தற்கொலை என்று கருதத் தக்கதல்ல. இது அப்பட்டமான சாதிவெறிக் கொலை.
இளவரசன்
திவ்யாவின் தந்தையுடைய மரணத்துக்கும் இவர்கள்தான் காரணம். ஒரு கலவரம் நடத்துவதற்காகவே திவ்யாவின் தந்தையை மரணத்துக்குத் தள்ளியவர்கள் இந்த கொலைகாரர்கள்.
நேற்று திவ்யாவை உயர்நீதி மன்றத்துக்கு அழைத்து வந்து “நான் சேர்ந்து வாழ விரும்வில்லை” என்று பேட்டி கொடுக்க வைத்தார்கள். அதை மிகவும் பெருமையாக பிரசுரித்து மகிழ்ந்தார் பசுமைப்பக்கங்கள் அருள்.
இன்று “வினவு முகத்தில் கரி பூசிய திவ்யா” என்று தலைப்பிட்டு பசுமைப்பக்கங்கள் அருள் மிகவும் சந்தோசமாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அவருடைய மட்டற்ற மகிழ்ச்சிக்கு காரணம், குரல் தழுதழுக்க திவ்யா அளித்திருக்கும் தொலைக்காட்சி பேட்டி. அவர் வெளியிட்டிருக்கும் அந்த பேட்டியில் திவ்யா கூறியிருந்தது இதுதான்.
“விருப்பப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டேன். அம்மாவும் வேணும் அவுங்களும் வேணும்னுதான் இவ்வளவு நாள் வரையிலும் இருந்திட்டிருந்தேன். ஆனா மேற்கொண்டு எனக்கு என்னுடைய அப்பாவோட நினைவுகள் இருந்துகிட்டே இருக்கிறதுனாலே எனக்கு சேர்ந்து வாழ்வதற்கான சூழ்நிலையே இல்லை. நான் எப்போதும் சேர்ந்து வாழத் தயாராவே இல்லை. நான் அம்மாவோட முடிவுப்படி வாழத் தயாராயிட்டேன். இதைத்தான் நான் நீதிபதிகிட்டேயும் சொன்னேன். ஆனா ரஜனி சார், அம்மா இளவரசன ஏத்துகிட்டா நான் சேர்ந்து வாழத்தயாரா இருக்கிறதா தவறான ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டதனால, இன்னிக்கி நான் யாரோட ஆதரவுமே இல்லாம தனிமையில நிக்கிறேன். நான் வந்ததே என்னுடை பேரண்ட்சோட எதிர்பார்ப்புக்காகத்தான், அவுங்க கூட வாழணும். எனக்கு நீங்கதான் முக்கியம். நான் செஞ்சது தப்பு அப்பிடிங்கிறத உணர்ந்து நான் வந்தேன். ஆனா அவுங்க ஒரு தவறான செய்திய வெளியிட்டதனால, எல்லார் மத்தியிலயும் எனக்கு ஒரு ஆதரவு கிடைக்காம இன்னக்கி நான் தனிமையில நிக்கிறேன். அத விளக்குறத்துக்காகத்தான் நான் இன்னிக்கி கோர்ட்டுக்கு வந்தேன்”“தனது தாய் தன் காதலை ஏற்றுக் கொள்வது வரை தாயுடன் இருக்க விரும்புவதாகவும் திவ்யா நீதிபதிகளிடம் தெரிவித்திருக்கிறார் “ என்று நாம் சென்ற பதிவில் எழுதியிருந்தோம். “நான் அப்படி சொல்லவே இல்லை” என்று தெளிவுபடுத்துவதற்காக திவ்யாவை கோர்ட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் சத்திரியர்கள்.
இந்த ஒரு வரியைக் காட்டி வினவின் முகத்தில் திவ்யா கரி பூசிவிட்டதாக கொக்கரித்திருந்தார் அருள்.
“விருப்பப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டேன்” என்று சொல்லத் தொடங்கி, “வாழத்தயாராக இல்லை” என்று கூறி முடிக்கும், பரிதாபத்துக்குரிய ஒரு பெண்ணின் கண்ணீரில் மகிழ்ச்சியடையும் மனவக்கிரம் பிடித்த இந்த மிருகங்களை என்ன செய்வது?
இளவரசனின் இறுதி நாள் ! நடந்தது என்ன ?
தரும்புரியிலிருந்து விவசாய விடுதலை முன்னணி தோழர்கள் இன்று முழுவதும்
இளவரசன் தொடர்புடைய பல்வேறு இடங்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களை இங்கே
தொகுத்துத் தருகிறோம்.
ரயில் தண்டவாளம் அருகே இளவரசன் உடல் கிடந்தது என்பதால் அவர் ரயில் முன்னே பாய்ந்து தற்கொலை செய்திருப்பதாக ஆரம்ப செய்திகள் தெரிவித்தன. ஆனால் ஒரு ரயிலின் முன்னே ஆடு மாடு பாய்ந்து இறந்தால் கூட சம்பந்தப்பட்ட ரயிலின் டிரைவர் அதை அருகில் உள்ள ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் கடந்து சென்ற குர்லா எக்ஸ்பிரசின் ஓட்டுநர் அப்படி ஒரு தகவலை ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவிக்கவில்லை.
தரும்புரி ரயில் நிலையத்தின் கேங்க் மேன்னாக வேலை செய்து வரும் கவுடு எனும் தொழிலாளிதான் இளவரசன் உடலைக் கண்டு ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவித்திருக்கிறார். இத்தகவல்களை தரும்புரி ஸ்டேசன் மாஸ்டரும், தொழிலாளி கவுடுவும் உறுதி செய்திருக்கிறார்கள்.
ரயில் தண்டவாளம் அருகே இளவரசன் உடல் கிடந்தது என்பதால் அவர் ரயில் முன்னே பாய்ந்து தற்கொலை செய்திருப்பதாக ஆரம்ப செய்திகள் தெரிவித்தன. ஆனால் ஒரு ரயிலின் முன்னே ஆடு மாடு பாய்ந்து இறந்தால் கூட சம்பந்தப்பட்ட ரயிலின் டிரைவர் அதை அருகில் உள்ள ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் கடந்து சென்ற குர்லா எக்ஸ்பிரசின் ஓட்டுநர் அப்படி ஒரு தகவலை ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவிக்கவில்லை.
தரும்புரி ரயில் நிலையத்தின் கேங்க் மேன்னாக வேலை செய்து வரும் கவுடு எனும் தொழிலாளிதான் இளவரசன் உடலைக் கண்டு ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவித்திருக்கிறார். இத்தகவல்களை தரும்புரி ஸ்டேசன் மாஸ்டரும், தொழிலாளி கவுடுவும் உறுதி செய்திருக்கிறார்கள்.
இளவரசன் மரணம் : திருமாவளவன் எழுப்பும் கேள்விகள் ! கொலையா? தற்கொலையா?

இளவரசனை பிரிந்துவிடுவதாக கோர் ட்டில் திவ்யா உறுதியுடன் கூறினார். இந்நிலையில் இன்று இளவரசன் தர்மபுரியில் அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே மரணம் அடைந்துள்ளார். இது கொலையா? தற்கொலையா? என்று சந்தேகம் நிலவி வருகிறது.இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மாலை சென் னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், ‘’முதலில் திவ்யாவையும், அவரது தாயார் தேன்மொழியையும், அவரது தம்பியையும் அவர்கள் சிக்கியிருக்கின்ற கும்பலிடம் இருந்து மீட்க வேண்டும். அரசு அவர்களை அதன் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.ஆட்கொணர்வு பேரானை வழக்கை பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட ஆள் நீதிமன்றத்தின் முன்னாள் வந்துவிட்டால் அந்த வழக்கில் வீரியம் முடிந்துவிட்டது என்று பொருள். அதன் பிறகு அந்த வழக்கில் விசாரணை நடத்த தேவையில்லை. ஆனால், நீதிமன்றத்திற்கு திவ்யாவும் இளவரசனும் வந்த பிறகும் கூட திரும்ப திரும்ப அந்த வழக்கில் விசாரிப்பதற்கு உரிய சூழல் எப்படி அமைந்தது என்று தெரியவில்லை.மார்ச் மாதம் 27ம் தேதி நடைபெற்ற அந்த விசாரணையில் தன் கணவரோடு வாழ விரும்புகிறேன் என்று சொன்னபோதே அவரை இளவரசனுடன் அனுப்பியிருக்க வேண்டும். அல்லது அவர் வயது குறைவாக இருக்கிறார் என்று கருதியிருந்தால் அவரை அரசாங்க காப்பகத்தில் வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் சில சக்திகள் அழுத்தங்களுக்கு பணிந்து அவரை தாயாரோடு அனுப்புகிறோம் என்கிற பெயரால் சதிக்கும்பலோடு அனுப்பிவிட்டார்களோ என்ற அய்யத்தை ஏற்படுதியிருக்கிறது.;எனவே, இது தொடர்பாக திவ்யா முன்னுக்கு பின் முரணாக பேசவேண்டிய நிர்ப்பந்தம் எப்படி இருந்தது என்பது உட்பட, முழுமையாக விசாரிக்க வேண்டும். தற்கொலை என்று இதை மூடிவிடவோ, இதன் பின்னணியில் இருக்கிற குற்றவாளிகளை தப்ப வைக்கவோ, சட்டமும் அரசும் இடம் கொடுத்துவிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.nakkheeran.in
சாதி மறுப்பு திருமணத்துக்கு இவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டுமா? : ஜி. ராமகிருஷ்ணன்
தர்மபுரியில் இளவரசன் மரணம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழக
மக்கள் மத்தியில் தர்மபுரி இளவரசனின் மரணச் செய்தி அதிர்ச்சியையும்,
வேதனையையும் ஒருங்கே உருவாக்கியுள்ளது. இது இளவரசன் திவ்யாவின் சாதி
மறுப்புத் திருமணத்தை ஒட்டி நடந்துள்ள இரண்டாவது உயிர் பலியாகும். ஏற்கனவே
திவ்யாவின் தந்தை இறந்ததும், அதைத் தொடர்ந்து 3 கிராமங்களைச் சேர்ந்த தலித்
மக்கள் மிகக் கொடூரமான தாக்குதலுக்கும், வன்முறைக்கும் உள்ளாக்கப்
பட்டதும் நீங்கா ரணமாகப் பதிந்துள்ளன. அந்த
வடு ஆறும் முன்னரே இளவரசனின் மரணம் நிகழ்ந்து விட்டது. சமூக நீதி
பாரம்பர்யம் கொண்ட தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணத்துக்கு இவ்வளவு பெரிய
விலை கொடுக்க வேண்டும் என்ற அவல நிலை, இளவரசனின் மரணத்தின் மூலம் மீண்டும்
ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.
தண்டவாளத்தில் கிடந்த தர்மபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் உடல்- தற்கொலையா?
தர்மபுரி கலவரம் வெடிக்கக் காரணமான காதல் ஜோடியில் இளவரசனின் உடல்
இன்று ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி என்பவரின் மகள் திவ்யா.
அவர் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரை காதலித்து திருமணம்
செய்து கொண்டு ஊரை விட்டு ஓடினார். இதையடுத்து பெரும் வன்முறை வெடித்தது.
3 கிராமங்கள் ஒட்டுமொத்தமாக சூறையாடப்பட்டன. இந்த விரக்தியில் திவ்யாவின்
தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
இந் நிலையில் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் தாக்கல்
செய்தார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி திவ்யா நீதிமன்றத்தி்ல்
ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா இளவரசனுடன் இனி வாழப்
போவதில்லை என்றும் அம்மா முடிவுப்படி தான் நடக்கப் போவதாகவும்
தெரிவித்தார்.
இதனால் இளவரசன் மனமுடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி அரசு
கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் இன்று
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மூளை சிதறிய நிலையில் உடல் கிடந்தது. தண்டவாளம் அருகே இருந்த அவரது பல்சர்
பைக் மற்றும் கைப்பையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இளவரசனின்
சட்டைப்பையில் 2 கடிதங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும் இந்த மரணத்தில்
சந்தேகம் நிலவுகிறது. இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
தென்னிந்தியா திரையில் சாதித்துவிட்ட யுவன் சங்கர் பாலிவுட் நோக்கி
Engeyo Partha Mayakam - Yaaradi Nee Mohini from Mokka Vijay on Vimeo.
தருமபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் தற்கொலை?

இந்த
சூழ்நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை கடத்தி்ச் சென்று
கட்டாய திருமணம் செய்ததாகவும் மீட்க கோரியும், அவரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த
வேண்டும் என்றும் ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்
செய்திருந்தார்.
சனிபார்வை குஜராத்துக்கு நகர்கிறது! மோடியுடன் சுப்பிரமனியம் சுவாமி சந்திப்பு ! BJP யுடன் இணைய தயார் என அறிவிப்பு !

இப்படியாகத்தானே வாஜ்பாயி முதலாக ஜெயலலிதாவரை ப்ளாக் மெயில் செய்து காலத்தை ஓட்டினார் நல்லது மோடியின் ஜோதியில் ஐக்கியமாகட்டும் நாட்டுக்கு நல்லது
tamil.oneindia.in
சரிதா நாயர் கும்பலின் 10,000 கோடி கேரள ஊழல் ! கேரளா அரசியல்வாதிகள் ஊழலில் உலகசாதனை

கேரள அரசியல் தமிழ்நாடு போல இல்லை. போலி கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி எளிமையாக இருப்பார்கள், ஊழல் செய்ய மாட்டார்கள் என்று முன்பெல்லாம் சில அறிஞர் பெருமக்கள் பேசுவார்கள். அவர்களை கிண்டல் செய்யும் வண்ணம் சமீப காலமாக ஏராளமான ஊழல் செய்திகள் கேரளத்தில் பொங்கி வழிகின்றன.
லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டினிடம் 2 கோடி ரூபாய் நன்கொடை பெற்ற சிபிஎம்மின் பினரயி விஜயன் முதல் இப்போது சரிதா நாயர் என்ற தொழில் முனைவரிடம் பல்லிளித்து நிற்கும் காங்கிரஸ் தலைவர்கள் வரை கேரளமும் மைய நீரோட்டத்தில் இணைந்திருப்பதை தனியார் மயமாக்கலின் சாதனை என்று சொல்லலாம்.
சரிதா எஸ் நாயர்
பண்ணை வீட்டில் 18 வயது செல்வநாயகி படுகொலை பலாத்கார முயற்சி? 10 நாய்களை மீறி வெளியார் வந்துவிட முடியுமா ?

இறுக்கி கொலை செய்யப்பட்டார். பலாத்கார முயற்சியில் கொலை நடந்ததா என தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தி.நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவர் பெரிய ஓட்டல்கள், தொழில் நிறுவனங்களில் கார்டன் அமைத்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இதற்காக கேளம்பாக்கம் அருகே வெளிச்சை கிராமத்தில் 40 ஏக்கரில் பண்ணை வைத்து, பலவிதமான பூச்செடிகளை வளர்த்து வருகிறார். இவரது மனைவி சுகுணா (46).
புதுக்கோட்டை அருகே போச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமையா மகள் செல்வநாயகி (18), பண்ணை வீட்டில் கடந்த ஓராண்டாக தங்கி வேலை செய்து வந்தார். வெளிச்சை மற்றும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் தினமும் பண்ணை வேலைக்கு வந்து செல்வர். வீட்டில் 10 க்கும் அதிகமான நாய்களை பன்னீர்செல்வம் வளர்த்து வருகிறார்.
கொள்ளையர்களோ வெளி ஆட்களோ உள்ளே நுழையாமல் இருக்க, இரவு நேரத்தில் நாய்களை அவிழ்த்து விட்டு விடுவர்.
கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த Douglas Engelbart காலமானார்
இதனால் கம்ப்யூட்டரின் பயன்பாடு சாதாரண மக்களிடமும் பிரபலமானது. கம்ப்யூட்டரில் மவுஸ் தற்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது.
டக்லஸ்
எங்கெல்பர்ட், அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் தனது மனைவி மற்றும்
நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர் நீண்ட காலமாக சிறுநீரக
கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று (04.07.2013) அதிகாலை
அவர் உடல்நிலை மோசமானது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணடைந்தார்
மழைவேண்டி யாகம் ? பள்ளியில் விஞ்ஞானம் கோவில்களின் யாகம்! ஜெயலலிதாவுக்கு வீரமணி கடும் கண்டனம்
மதச் சார்பற்ற தன்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மையை
நிறுத்தாவிட்டால் பிரச்சாரம், அறப்போர், நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் மதச்
சார்பற்ற தன்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின்
அடிப்படைக் கடமை என்ற பிரிவுக்கும் விரோதமாக, தமிழ்நாடு அரசின் இந்து
அறநிலையத்துறை மழைக்காக யாகங்களை ஏற்பாடு செய்துள்ளதைக் கண்டித்தும்,
உடனடியாக இது நிறுத்தப்படா விட்டால் அறப்போர், பிரச்சாரம், நீதிமன்றம் ஆகிய
தளங்களில் கழகத்தின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்த ஆண்டு, சரியான மழை - காலத்தே
பெய்யும் பருவ மழை போதிய அளவு இல்லை என்பதால் வறட்சி நிலவுகிறது.
வடமாநிலங்களில் அபரிமிதமான மழை, வெள்ளக்காடு - பல்லாயிரம் பேர்களைப் பலி
கொள்ளும் அளவுக்கு அங்கே!
மழையை வரவழைக்க யாகமா?
ப.சிதம்பரம்: மோடியின் குஜராத் வளர்ச்சி ஒரு மாயை !
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரிவினையை ஏற்படுத்துபவர் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு
திங்கள்கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பது: பாஜக தனது
நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே இல்லை. அவர்களது நோக்கம் மதச்சார்
பின்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. எனவே அடுத்த மக்களவைத்
தேர்தலிலும் மக்கள் அக்கட்சியை நிராகரிப்பார்கள். பொதுசிவில் சட்டம்,
அயோத்தி விவகாரம், காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் அரசியல்சாசன சட்டப்
பிரிவு 370-அய் நீக்குவது என்பது போன்ற பிரிவினைவாத பிரச்சினைகளை பாஜக
தொடர்ந்து எழுப்பி வருகிறது என்று சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
பாஜக நிராகரிக்கப்படும்: மோடியை பாஜக
பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதா? என்ற
கேள்விக்கு, "இது பொருத்தமில்லாத கேள்வி. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி
என்றால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும்.
மக்கள் சரியான முடிவை அளிப்பார்கள்.
பாலியல் உறவு கொண்டு ஏமாற்றும் ஆண்களுக்கு உயர்நீதிமன்றமும் கிடுக்கி பிடி
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் கர்ணன் அவர்களின் புரட்சிகரத் தீர்ப்பைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமும் வேறொரு வழக்கிலும் உறுதி!
திருமணம் செய்து
கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத்துடன் அவருடன் உறவு
கொண்டவரை நிரபராதி என விடுவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம்
கூறியுள்ளது.
இதில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல்
வன்முறை குற்றத்தை சாட்டி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப் பையும்
உச்சநீதிமன்றம் உறுதி செய் துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக வாக் குறுதி
அளித்து, பெண்ணுடன் கார்த்திக் பாலியல்ரீதியாக உறவு வைத்துள்ளார்.
இதுபோன்று பல முறை நிகழ்ந்துள்ளது. பின்னர் தன்னை திருமணம் செய்து
கொள்ளுமாறு அப்பெண் கூறியபோது, மறுத்துள்ளார். இந்த சம்பவம் 2003 ஆம்
ஆண்டில் நிகழ்ந்துள்ளது. அப்பெண் தரப்பில் காவல்துறையினரிடம் புகார்
தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கார்த் திக் மீது கைது நடவடிக்கை எடுக்கப்
பட்டது.
நீதிமன்றத்தில் கார்த்திக் மீது பாலியல்
வன்முறை குற்றச்சாட்டு உறுதி செய்யப் பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்
நீதிமன்றத்தை கார்த்திக் நாடினார். அங்கும் அவருக்கு எதிராக தீர்ப்பு
வழங்கப்பட்டது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருமணம் செய்துகொள்வதாக பொய் யாக
வாக்குறுதி அளித்து பெண்ணிடம் பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார். இந்த
சூழ்நிலையில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடு விக்க
வேண்டுமென்ற அவரது கோரிக் கையை ஏற்க முடி யாது என்று உச்சநீதி மன்றம்
கூறியுள்ளது.
நீதியரசர் கர்ணன் அவர்களின் புரட்சிகரமான தீர்ப்புபற்றிய விவரம்
இரண்டு குழந்தைகள் பெற்ற ஆண் திருமணம்
செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மனைவிக்கு பராமரிப்பு தொகை
வழங்க உத்தரவிட முடியாது என்று குடும்ப நல நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து
உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கில் நீதிபதி கர்ணன் பிறப்பித்த
உத்தரவு (17.6.2013) வருமாறு: சட்டபூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர்
(ஏற்கனவே திருமணம் ஆகாதவர்கள்) பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால்
அவர்களின் செயல் பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் - மனைவி
என்றும் கருதலாம் சட்டப் பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும்
சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்து
கொள்கின்றனர்.
தாலி கட்டுவது மாலை, மோதிரம் மாற்றுவது,
தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை
எல்லாம் மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை
திருப்திப்படுத்தவதற்காகத்தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச்
சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும் கணவன் மனைவிக்குள் பாலியல்
ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.
எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்ட
பூர்வமான ஆதாரம் என்ன வென்றால் அது அந்த இணையர்க்கு இடையே உள்ள பாலியல்
உறவுதான் என தீர்ப்பில் கூறியுள்ளார்.
பெண்ணிடம் பாலியல் உறவு கொண்டு ஏமாற்றும் ஆண்களுக்கு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சரியான பாடங்கள் ஆகும்.
குண்டாய் போன அங்காடி ! சண்டை சச்சரவால் கண்டதை தின்று ?

tamil.oneindia.in
காடுவெட்டி குரு மீது மீண்டும் பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்
பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி ஜெ.குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை நேற்று ரத்து செய்யப்பட்டது.மேலும்,
பாமகவினர் 19 பேர் மீது எடுக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையும்
ரத்து செய்யப் பட்டது. குரு உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை ஆய்வு
செய்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்ததுஇந்நிலையில் குரு மீது மீண்டும் தே.பா.சட்டம் பாய்ந்துள்ளது
புதன், 3 ஜூலை, 2013
அமெரிக்காவில் கத்தியுடன் திரிவதற்கு அனுமதி கேட்கும் சீக்கிய அடிப்படைவாதிகள் ! தியேட்டரில் இருந்து வெளியேற்றபட்டனர்

tamil.oneindia.in
குஜராத் போலி என்கவுன்ட்டர் மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் ! போலீசாரும் ஐபி உளவுப் பிரிவும் இணைந்து Encounter

உள்ளிட்ட 4 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநில போலீசாரும் ஐபி உளவுப் பிரிவும் இணைந்து நடத்திய "போலி என்கவுன்ட்டர்" நடவடிக்கை என்று சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள் என்று மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான், ப்ரனேஷ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோகர் ஆகிய 4 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த 4 பேரும் அப்பாவிகள் என்றும் குஜராத் போலீசார் நடத்தியது போலி என்கவுன்ட்டர் என்றும் புகார்கள் எழுந்தன.
நடிகை நிஷா எய்ட்ஸ் நோயினால் மரணப்படுக்கையில் உதவுவார் யாருமில்லை

எயிட்ஸ் பிடித்த ஒரு பிரபல நடிகையின் கதை.. டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதா நாயகி யாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்க வில்லை. அப்படியே சில நாட்கள் அனாதை யாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்தார் நிஷா. நிஷா பிறந்த ஊரே நாகூர் தான். அவரது அப்பா, அத்தை, பெரியப்பா என ஓர் உறவு பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது, அதிர்ச்சியான செய்தி. பின்னர் ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்தனர். தன்னை சந்தித்த பத்திரிகை யாளரிடம், “சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். நான் மறுபடியும் நடிக்கணும்!” என்று கதறினா ர். சினிமா ஒளிவெள்ளத்தி ல் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது உறுத்திய து. நிஷாவிடம் பேசி னோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறை யவில்லை. கூடவே குரலில் சோகத்தைக் கொட்டிக் குழைத்து நம்மிடம் பேசினார். ”எனக்குச் சொந்த ஊர் நாகூர்தான்.
ஒரு நடிகை, கொஞ்சம் ஆங்கிலம் ! எல்லா பெரிய மனிதர்களும் பணால்
லீனா மரியா பால் கைது செய்து அழைத்துச் செல்லப்படுகிறார்.
தப்பி விட்ட சுகாஸ் சாதாரண நபரல்ல
பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா !
சென்னை உயர்நீதிமன்றத்தில் திவ்யாவும் அவரது தாயார் தேன்மொழியும்
திவ்யா சொன்ன கருத்துக்கள் பற்றிய விபரங்கள் பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.
தான் இன்னமும் இளவரசனை காதலிப்பதாகவும், தனது தாய் தன் காதலை ஏற்றுக் கொள்வது வரை தாயுடன் இருக்க விரும்புவதாகவும் திவ்யா நீதிபதிகளிடம் தெரிவித்திருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் இளவரசனுடனான திருமணத்துக்குப் பிறகு தந்தை நாகராஜனின் தற்கொலை, அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்கள் தன்னை பெரிதும் பாதித்ததாகவும், அதே போல தனது தாயையும், தம்பியையும் இழந்து விடுவோமோ என்று பயப்படுவதாகவும் சொல்லியிருக்கிறார்.
பாமக திமுகவுடன் முறுகல் தொடர்கிறது ! அதிமுக கூட்டணியில் இடம்பெற முஸ்தீபு
தமிழ்நாட்டில்
அண்மையில் நடைபெற்று முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. கடைபிடித்த
நிலைப்பாடு தொடர்பாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து விளக்கமளித்துள்ள
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், தேவையில்லாமல் என்னை வம்புக்கு
இழுத்திருக்கிறார். காங்கிரசிடம் ஆதரவு கேட்ட தி.மு.க. ஈழப் பிரச்சினையை
மறந்து விட்டதா? என்ற எனது கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத அவர், கடந்த
2004-ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வால் தான் நான் மாநிலங்களவை
உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் ஆக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.
கடந்த 10 நாட்களில் 2-ஆவது முறையாக இதே கருத்தை தி.மு.க. கூறியிருப்பதால்
இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது எனது கடமை என்று கருதுகிறேன்.
2004-ஆம்
ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி பாட்டாளி மக்கள் கட்சிக்கு
தி.மு.க.வால் இலவசமாக வழங்கப்படவில்லை. கடந்த 1999-ஆம் ஆண்டு மக்களவைத்
தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவையில் பாட்டாளி
மக்கள் கட்சிக்கு மொத்தம் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன் பின்னர் 2004-ஆம்
ஆண்டு மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இடது
சாரி கட்சிகள் புதிதாக சேர்ந்ததால் அக்கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்குவதற்கு
வசதியாக தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகளுக்கு 1999-ஆம் ஆண்டு
தேர்தலில் ஒதுக்கப்பட்டதைவிட ஓர் இடம் குறைவாக ஒதுக்குவதென
தீர்மாணிக்கப்பட்டது. அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 இடங்கள்
ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போதிய இடங்கள் இல்லை என்பதால் 6
இடங்களை மட்டுமே ஒதுக்கிய கலைஞர், மீதமுள்ள ஓரிடத்தை மாநிலங்களவைத்
தேர்தலில் ஒதுக்குவதாக அறிவித்து ராமதாஸ் அவர்களுடன் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டார்.
சேது சமுத்திரம் குறித்த புத்தகம்... கேப்டன் ஆபிதீனுக்கு கலைஞர் பாராட்டு

புத்தக வெளியீட்டு விழா மதுரை கீற்று பதிப்பகத்தார் சார்பாக
இளையான்குடியில் நடைபெற்றது.தமுமுக தலைவர் போராசியியர் ஜவாஹிருல்லா
புத்தகத்தை வெளியிட, மதுக்கூர் ராமலிங்கம் பெற்றுக்கொண்டார். .இந்தப்
புத்தகத்திற்கு திராவிட கழக தலைவர் கி;.வீரமனி, மதுரை ஆதினம், பேராசிரியர்
ஜவாஹிருல்லாஹ் மற்றும் நக்கீரன் வாரஇதழ் ஆசிரியர் கோபால் ஆகியோர் பாராட்டி
அணிந்துரை வழங்கியிருந்தனர்.சமீபத்தில் இந்தப் புத்தகம் தமிழக முன்னாள்
முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. .
தயாளு அம்மாள் மனுவை விசாரிக்க மறுத்தார் நீதிபதி!
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் ஒரு சாட்சியாக
சேர்க்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள்,
உடல்நிலை காரணமாக ஆஜராக முடியாது என்று செய்த மனுவை விசாரிக்க டில்லி
உயர்நீதிமன்ற நீதிபதி வீணா பீர்பால் மறுப்பு தெரிவித்து பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளார்.
இம்மனுவை நீதிபதி வீணா பீர்பால் நேற்று விசாரித்திருந்தார். வழக்கை இன்று ஒத்தி வைத்திருந்தார். இன்று திடீரென ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’ இந்த வழக்கை தம்மால் விசாரிக்க முடியாது என்று கூறியிருப்பதே, பரபரப்புக்கு காரணம்.
அந்த ‘தனிப்பட்ட காரணங்கள்’ எவை என்பதே டில்லி மீடியாவை போட்டு குடைந்து கொண்டிருக்கும் விஷயம். நீதிபதிக்கு ஏதோ ஒரு வகையில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றே டில்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இம்மனுவை நீதிபதி வீணா பீர்பால் நேற்று விசாரித்திருந்தார். வழக்கை இன்று ஒத்தி வைத்திருந்தார். இன்று திடீரென ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’ இந்த வழக்கை தம்மால் விசாரிக்க முடியாது என்று கூறியிருப்பதே, பரபரப்புக்கு காரணம்.
அந்த ‘தனிப்பட்ட காரணங்கள்’ எவை என்பதே டில்லி மீடியாவை போட்டு குடைந்து கொண்டிருக்கும் விஷயம். நீதிபதிக்கு ஏதோ ஒரு வகையில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றே டில்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ராஜ்யசபா தேர்தலின் போது அண்டர் கிரௌண்டில் நடந்த கண்ணா மூச்சி ஆட்டம் ! வெளிச்சத்திற்கு வந்தது
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் முதலில் அதிமுக பொதுச்செயலரும்
முதல்வருமான ஜெயலலிதா திடீரென 5வது வேட்பாளரை விலக்கிக் கொண்டு இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்ததற்கு காரணம் எப்படியும்
‘தோற்றுவிடுவோம்' என்ற அச்சமே எனக் கூறப்படுகிறது.
ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.
சட்டசபையில் அதிமுகவுக்கு 151 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதிருப்தி
தேமுதிகவைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏக்களும் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளனர். 5
வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க மொத்தம் 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.
ஆனால் அதிமுக, தேமுதிக அதிருப்தியாளர்கள் என மொத்தமாக 158 எம்.எல்.ஏக்கள்
ஆதரவுதான் உறுதி என்ற நிலை இருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்
மார்க்சிஸ்ட் கட்சியும் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்றும் தெரியவில்லை.
இதனால் 5வது வேட்பாளர் வெல்ல முடியாத நிலை வந்துவிடுமோ என்ற நிலையில்
அதிமுக இருந்தது.
அப்போதுதான் இந்திய கம்யூனிஸ்ட் எப்படியும் அதிமுகவிடம் சீட் வாங்கிவிடுவது
என்ற போராட்டம் நடத்தியது. இதனால் தமது 5வது வேட்பாளரை வாபஸ் வாங்கிவிட்டு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.ராஜாவை ஆதரிப்போம் என்று
அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. தோற்றுவிடுவோம் என தெரிந்த நிலையில் இந்திய
கம்யூனிஸ்ட் வலிய வந்ததால் ‘வெற்றி!வெற்றி!' என்ற முழக்கம் மட்டுமே இப்போது
அதிமுக முகாம்களில்!!
விஜயகாந்த்தை ஏமாற்றிய காங்கிரஸ்
இதேபோல் தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக தம்மை நினைத்துக் கொள்ளும்
விஜயகாந்துக்கும் காங்கிரஸ் போக்குக் காட்டி வந்தது. காங்கிரஸ்- தேமுதிக
இரண்டு மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று திட்டமிட்டார்
விஜயகாந்த். அவரது இந்த போக்கை எளிதாக பயன்படுத்திய காங்கிரஸ் தம்மை
நெருங்கி வர வைத்தது. காங்கிரஸ் எப்படியும் தம்மையே ஆதரிக்கும் என நினைத்த
விஜயகாந்த் திமுகவை எதிர்த்து களம் இறங்கினார். ஆனால் காங்கிரஸோ தேமுதிகவை
காட்டியே திமுகவை தம் பக்கம் வளைத்துப் போட்டது. திமுகவைப் பொறுத்தவரையில்
அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கேட்டதைப் போலவே காங்கிரஸிடமும் ஆதரவு கேட்டு
வைத்திருந்தது. தேமுதிகவா, திமுகவா என்ற காங்கிரஸின் கணக்கில் திமுகதான்
சரியெனப்பட்டுவிட பச்சைக் கொடி காட்டி ஆதரவு தெரிவித்துவிட்டது. இதைத்தான்
இப்போது திமுக தலைவர்களும் விளக்கம் அளித்து வருகின்றனர்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
வடிவேலு 42 மனைவிகளுடன் நடனம்
காடுவெட்டி குரு உட்பட 20 பேர் மீதான தே.பா. சட்டம் மத்திய அரசால் ரத்து
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மற்றும்
பாமகவினர் 20 பேர் மீதான தேசிய பாதுகாபுச் சட்டத்தை மத்திய உள்துறை
அமைச்சகம் ரத்து செய்துள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், மரக்காணத்தில்
அப்பாவி வன்னியர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட கலவரத்திற்கு நீதி கேட்டு
போராடிய என்னையும், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க.
தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும்
மேற்பட்டோரையும் பொய் வழக்குகளில் தமிழக அரசு கைது செய்தது.
பாரதிராஜா: நாம் மூதாதையர்களை தான் வழிபட்டு வந்துள்ளோம் நாம் மதங்களற்ற மனிதர் என்பது எனக்குத் தெரியும்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்துள்ள அன்னக்கொடி திரைப்படம் பல்வேறு வகையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. பாரதிராஜா அன்னக்கொடி திரைப்படத்தின் மூலம் குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவு படுத்தியிருப்பதாக புகார் கொடுக்கப்பட்டு ‘அன்னக்கொடி’ திரைப்படத்திற்கு தடைகோறி வழக்குகள் தொடரப்பட்டுள்ளது
இந்நிலையில் பாரதிராஜா தனது ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “என்மீதும் என் படைப்பின் மீதும் குற்றம் கண்டுபிடித்துள்ள என் மக்கள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள். நாம் மதங்களற்ற மனிதர்களென்பதை. நம் முன்னோர்கள் வழிபடும் தெய்வங்கள், அதற்கு முன்னோடியாக உள்ளவர்களைத்தான் நாம் வழிபடுகிறோம் என்பதும் எனக்குத் தெரியும் வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்” என்பது பழமொழி. கண்ணகி காலத்தில் திருட்டுச் சிலம்பு என சந்தேகப்பட்டதனாலே “கோவலனைக் கொண்டு வா” என்ற வார்த்தையை தவறாக கொண்டு “கொன்று வா” என திருத்திச் சொன்னதனால் மதுரையை எரித்த கதை உண்டு. நாம் வணங்கும் மூனுசாமிக்கும், முனிசாமிக்கும் வித்தியாசம் உண்டு. மூனு சாமி என்பது முக்குலத்தோர் சாமி. முனிசாமியை முனி என்றும் சொல்கிறோம்.என் ‘அன்னக்கொடி’ திரைப்படத்தைப் பார்த்து அந்த வார்த்தையை உற்றுக்கவனித்து முனிசாமியா, மூனுசாமியா என்பதை தீர்க்கமாக தெரிந்துகொண்டு, அதன்பின் என் மக்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.வட்டார வழக்கில் வெளிவந்துள்ள ‘அன்னக்கொடி’ படைப்பு எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை. அதேபோல் இது எந்த ஒரு தனிப்பட்ட வட்டாரத்திற்கும் சொந்தமானதல்ல. இது அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து வட்டாரங்களுக்கும் சொந்தமான ஒரு பொதுவான கதை” என்று கூறியுள்ளார்
ரயில்வே ஊழல் வழக்கில் பன்சால் காப்பாற்றப்பட்டார் குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் இடம்பெறவில்லை

தருவதாக கூறி நடந்த முறைகேடு தொடர்பாக, சிறப்பு கோர்ட்டில், நேற்று சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் பெயர் இடம்பெறவில்லை ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ்குமாருக்கு, "பசையுள்ள' வேறு பதவி வாங்கித் தருவதாக கூறி, ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சாலின் உறவினர், விஜய் சிங்லா என்பவர், 90 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றார். இந்த விவகாரத்தில், பன்சாலுக்கும் தொடர்பு இருப்பதாக, குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அவர் தன் ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.மகேஷ் குமார், தன் தூதர் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட கோயல் மூலம், 90 லட்சம் ரூபாயை, விஜய் சிங்லாவிடம், சண்டிகாரில் உள்ள அவர் வீட்டில் கொடுத்தார். இதையடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள், சிங்லாவையும், கோயலையும் கைது செய்தனர். இந்த விவகாரத்தில், மகேஷ் குமார் உட்பட, இடைத்தரகராக செயல்பட்ட, மற்றொரு நபரான, மஞ்சுநாத், உட்பட, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
New dellhi : 7ம் வகுப்பு மாணவியை நண்பனின் வீட்டில் அடைத்து வைத்து 4 நாட்களாக கற்பழிப்பு
7ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று 4 நாட்களாக நண்பனின் வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த வாலிபனை டெல்லி போலீசார்
கைது செய்துள்ளனர்.
கிழக்கு டெல்லியில் உள்ள கல்யாண்புரி பகுதியில் வசிக்கும் ஒருவர், 7ம் வகுப்பில் படித்து வந்த தனது 16 வயது மகளை
காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மாணவியின் வீட்டின் அருகில் வசிக்கும் சந்தன் (24) என்பவன் மீது தங்களுக்கு சந்தேகமாக இருப்பதாக பெற்றோர் போலீசாரிடம்
தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில், அவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
நண்பனின் வீட்டில் மாணவியை அடைத்து வைத்திருப்பதாக கூறினான்.
விரைந்து சென்ற போலீசார் அந்த வீட்டில் இருந்த மாணவியை மீட்டு, சந்தன் மற்றும் அவனது நண்பன் பிரமோத் அகியோரை கைது
செய்தனர்.
போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த மாணவி, பிரமோத்தின் வீட்டில் 4 நாட்களாக அடைத்து வைத்த சந்தன் பலமுறை தன்னை
கற்பழித்ததாகவும், விபசார தரகர்களிடம் விற்பதற்காக பேரம் பேசியதாகவும் கூறினார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.maalaimalar.com
Mumbai நடைபாதையில் வசித்த 8 வயது சிறுமி கற்பழித்து கொலை!

மும்பையின் ஓர்லி பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டு வேலை செய்துக்கொண்டு தனது 8 வயது மகளுடன் நடைபாதை குடிசையில் வசித்து வந்தார். நேற்று காலை தூங்கி விழித்த அந்தபெண் மகளை காணாமல் தேடினார். குடிசைக்கு அருகாமையில் உள்ள பகுதியில் அந்த சிறுமி மயங்கிய நிலையில் கிடப்பதாக சிலர் கூறினர். இதனையடுத்து, அங்கு ஓடிச்சென்ற அவளது தாயார் சிறுமியை தூக்கிச் சென்று நாயர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். ஆனால், ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்வதற்கு முன்னதாகவே சிறுமியின் உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி கற்பழிக்கப்பட்ட பின்னர் கழுத்து நெறிக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் அதே பகுதியில் வசிக்கும் சிலரை கைது செய்து, மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிசைக்குள் தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை தூக்கிச் சென்று கற்பழித்த சமூக விரோதிகள் அவளை கொன்றுள்ள சம்பவம் ஓர்லி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.maalaimalar.com
சவுதி: நாடுதிரும்ப வேண்டிய கால அவகாசம் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

வாய்ப்புகளை இழந்த இந்தியர்கள், நாடு திரும்புவதற்குரிய கால அவகாசம், மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவில், "நிதாகத்' என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு, கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தியது. புதிய சட்டப்படி, வெளிநாட்டினர் நடத்தும் நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்க வேண்டும்,
என்ற நிபந்தனை விதிக்க பட்டுள்ளது. புதிய சட்டத்தால், ஐந்து லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. புதிய சட்டத்தின் படி, வேலையை தக்க வைத்து கொள்ளவும், முடியாதவர்கள், விரைவில் நாடு திரும்பவும், உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ள, மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம், இன்றோடு முடிகிறது. பல ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள், உரிய ஆவணங்கள் இன்றி, தாயகம் திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.
இதனால், சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசு பிரதிநிதிகள், இந்த கால அவகாசத்தை நீட்டிக்கும் படி, சவுதி அரசை வற்புறுத்தினர். இதையடுத்து, சவுதி மன்னர் அப்துல் அஜிஸ், வரும் நவம்பர், 4ம்தேதி வரை, கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)