சனி, 3 ஏப்ரல், 2010

வடக்கு கிழக்கு மாகாண சபையை தமிழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள்-வரதராஜப்பெருமாள்.

வடக்கு கிழக்கு மாகாண சபையை தமிழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள்-வரதராஜப்பெருமாள்.03.04.10
தமிழர்களின் 50 வருடக் கனவை நிறைவேற்றியதாக குறிப்பிடும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவருமான வரதராஜப்பெருமாள், வடக்கு கிழக்கு மாகாண சபையை தமிழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகவியளாளர்  தீபச்செல்வன்  என்பவருக்கு வழங்கிய செவ்வி..... 
தீபச்செல்வன் :
  இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக இருந்தீர்கள். இணைந்திருந்த தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு தற்பொழுது பிரிக்கப்பட்டிருக்கிறது. ஈழப்போராட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணசபையை பெற்றது மட்டுமே அதிகாரத்தை கைப்பற்றிய ஒரு வெற்றியாகவும் கருதப்படுகிறது. இப்பொழுது எதுவுமற்ற ஒரு தோல்வி நிலையில் நாம் இருக்கிறோம் என நினைக்கிறேன். இந்த அடிப்படையில் நீங்கள் முதலமைச்சராக இருந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை எப்படி பார்க்கிறீர்கள்?
வரதராஜப்பெருமாள் : எமக்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாக அதை நான் பார்க்கிறேன். ஆனால் அதை சரியாக பயன்படுத்த தமிழ் மக்கள் தவறிவிட்டார்கள் என்பதுதான் மிக கவலைக்குரிய விடயம். அது மட்டுமல்ல வடக்கு கிழக்கு மாகாண சபையை சீரழித்து இல்லாமல் பண்ணுவதிலும் எம்மில் ஒரு பகுதியினர் அந்த நோக்கம் கொண்ட சிங்களவர்களில் ஒரு பகுதியினருக்கு ஒத்துழைத்து விட்டார்கள் என்பதும் கவலைக்குரிய விடயம்.

அதன் பின்னர் சில வருடங்களுக்கு முன்பு ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு இன்று வட மாகாணம் வேறு கிழக்கு மாகாணம் வேறு என்று போய் விட்டது. வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசம் தமிழர்களுடைய தாயகம் என்பது தமிழர்களின் 50 வருடக் கனவு. அதை நாங்கள் நிறைவேற்றினோம்.
அது மட்டுமல்ல திருகோணமலைதான் தமிழர்களின் தலைநகரமாக இருக்க வேண்டும் என்பதும் 50 வருடக் கனவுகளாக இருக்கின்றன. அதையும் நாங்கள் நிறைவேற்றினோம். அந்த நிறைவேற்றப்பட்ட கனவுகள் மீண்டும் கனவுகளாகவே கலைந்து விட்டன. உடனடியாக வடக்கு கிழக்கு இணைந்த சபையை பெற முடியுமா என்பதில் பல சந்தேகங்கள் உளளன. அந்தக் காலகட்டம் வர வேண்டும் அதை சிங்கள மக்களும் ஏற்க வேண்டும். அதை சிங்கள தலைவர்களும் ஏற்க வேண்டும்.

தமிழர்களும் அதற்காக தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். வெறுமனே வடக்கு கிழக்கு மாகாண சபை இணைக்கப்படுவதல்ல. அதிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்படுவதில் முஸ்லீம் மக்களுக்கு சில அச்சங்கள் இருக்கின்றன. அவர்களது அச்சத்திற்கும் தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்தால் சிங்கள மக்கள் பாதுகாப்பாக வாழ முடியுமா என்று அவர்களுக்கும் அச்சம் இருக்கிறது. இல்லை பாதுகாப்பாக வாழ முடியும் என்பதை  நாங்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும்.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு நிறைந்த அதிகாரத்தை கொடுத்தால் அது பிரிவினைக்கு வழி வகுக்குமே என்று சிங்கள மக்களுக்கு அச்சம் ஏற்படலாம். ஆப்படி நடக்காது இந்த நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்திருந்தால் இந்த நாட்டுக்கு இன்னும் ஒற்றுமைக்கு அது வழி வகுக்கும் என்று நம்ப வைக்க வேண்டும். அப்படியான சூழல் ஏற்படும் பொழுது மீண்டும் ஒரு வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க முடியும். இதில் இன்னும் ஒரு விடயம் இருக்கிறது. மாநில அரசுக்குரிய நிர்வாக திறமை, வல்லமை கொண்ட தமிழர்களை எல்லாம் அந்த மாகாண சபை கொண்டிருந்தது. அப்படி பட்டவர்கள் மீண்டும் வர வேண்டும்., செயற்பட வேண்டும்., அப்படி பட்டவர்கள் தமிழ் சமூதாயத்தில் உருவாக வேண்டும்.

கடந்த கால யுத்தத்தினால் அவ்வாறான நிர்வாக திறமை கொண்ட தமிழர்களின் வளர்ச்சி என்பது குன்றிப் போய்விட்டது. கல்வியில் வளர்ச்சி கொண்ட இளைஞர்கள் இங்கு படித்து விட்டு வெளிநாடு செல்லும் நிலமை ஏற்பட்டு விட்டது. இந்த நாட்டிலுள்ள மக்களினுடைய வளர்ச்சிக்கும் தமிழர்களுடைய வளர்ச்சிக்கும் இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கும் பாடுபடும் வகையில் முன்னேற்றமுள்ள இளைஞர்கள் வரவேண்டும். அப்படி வருகிற போது சுயாட்சியுடைய நிறைந்த அதிகாரங்களைக் கொண்ட மாநில அமைப்பை கொண்டு வந்தால் அது தமிழர்களுக்கு பயன்படும். 


தீபச்செல்வன் : நீங்கள் ஈழப் பிரகடனம் ஒன்றை செய்து விட்டு இந்தியாவுக்கு சென்றிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் திரும்பி வந்துள்ள சூழலில் மகிந்தராஜபக்ஷ ஒற்றை ஆட்சிக்குள் தீர்வை முன் வைக்கிறார். எதையும் வழங்காமல் மக்கள்சபை பற்றிக் குறிப்பிடுகிறார். அப்படி இருக்க அதிகாரப்பரவலாக்கம், நிருவாகப்பரவலாக்கம் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணசபை எந்தளவு சாத்தியத்தை கொண்டிருக்கிறது?
வரதராஜப்பெருமாள் :  முதலில் நான் ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கல்விமான்கள், படித்த மாணவர்கள், படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், அரசியலில் ஆற்றல் கொண்ட அறிவு கொண்டவர்கள் நான் ஈழப் பிரகடனம் செய்ததிற்கு முதலில் என்னால் முன் வைக்கப்பட்ட 19அம்சக் கோரிக்கையை வாசிக்க வேண்டும். அதை மறைப்பதற்காகத்தான் பெருமாள் ஈழப்பிரகடனம் செய்தார் என்று பிரேமதாசா பிரசாரம் செய்தார். பிரேமதாசாவுக்கு அதில் ஒரு நோக்கம் இருந்தது.

19 அம்சக் கோரிக்கையை உலகம் அறிய விடாது தடுப்பது அவரது நோக்கமாக இருந்தது. அதேபோல விடுதலைப் புலிகளும் அந்த நியாயமான கோரிக்கையை தமிழர்கள் அறியாமல் பண்ணி விட்டார்கள். அவர்கள் அதை கொச்சைப் படுத்துவதற்காக பெருமாள் ஈழப்பிரகடனம் செய்தார் ஓடிவிட்டார் என்றார்கள். பெருமாள் ஈழப்பிரகடனம் செய்தது சரியா பிழையா எனறு சொல்லவில்லை. ஓடிவிட்டார் என்பதற்காகவே அவர்கள் முக்கியத்துவம் படுத்தினார்கள். அதனால் மீண்டும் இன் அந்தப் 19 அம்சக் கோரிக்கையை வாசிக்கும்படி தமிழ் மக்களை, கல்விமான்களை, அரசியல் ஆர்வம் கொண்டவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
வடக்கு கிழக்கு இணைப்பது மீண்டும் சாத்தியமா எனறு கேட்டீர்கள். இலங்கையில் ஒற்றை ஆட்சிக்குள் எவ்வளவு அதிகபட்ச அதிகாரங்களை எடுக்க முடியுமோ அதை நாங்கள் எடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் தொடர்ந்தும் சமஷ்டிக்காக போராட வேண்டும். சமஷ்டி வரும்வரை நாங்கள் எதையும் ஏற்க மாட்டோம் என்று இருக்க கூடாது. தனிநாடு கிடைக்கும் வரை எதையும் ஏற்க மாட்டோம் என்று கூறி கடைசியாய் இருந்த வடக்கு கிழக்கு மாகாணத்தையும் கோட்டை விட்டு விட்டோம். மீண்டும் சமஷ்டி கிடைக்கும் வரை நாங்கள் எதையும் ஏற்க மாட்டோம் என்று இருக்க கூடாது. 
13ஆவது திருத்தச் சட்டம் ஒற்றை ஆட்சிக்குள்தான் இருக்கிறது. இன்று ஐக்கிய ராய்ச்சியத்தில் பிரிட்டன், ஸ்கொட்லன்ட் இருக்கிறது.   வேல்ஸ் இருக்கிறது. வடஅயர்லாந் இருக்கிறது. அவை எல்லாம் நிறைந்த அதிகாரங்களுடன் இருக்கின்றன. உங்களுக்கு தெரியும் ஸ்கொட்லாந்துக்கு தனி கிரிக்கட் அணியே உள்ளது. இந்தியாவில் கூட இல்லை. அமெரிக்கா கூட இதற்கு ஒத்துழைக்காது. ஆனால் பிரிட்டிஷ் ராஜ்சியம் ஒற்றையாற்சிக்குள் உட்பட்டது.

இந்தியா சமஷ்டி அமைப்பு கொண்டதல்ல. சமஷ்டி மாதிரியான அமைப்பு கொண்டது. அங்குகூட ஒரு முதலமைச்சர் என்பது நிறைந்த அதிகாரம் கொண்ட பதவி. தமிழ் நாட்டு முதலமைச்சரிடம் முப்படைகள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஒரு லட்சம் பொலிஸ்படைகள் உள்ளன. விவசாயத்தில் எதை செய்ய வேண்டுமோ அது அவருடைய அதிகாரம். மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமோ அது அவருடைய அதிகாரம். எந்த வீதியில் வீடுகள் போட வேண்டுமோ அது அவருடைய அதிகாரம். உள்ளுராட்சி மன்றங்கள் அவருடைய அதிகாரம்.   இப்படி ஒற்றை ஆட்சிக்குள்ளேயும் மிக உயர்ந்த பட்ச அதிகாரங்களை நாம் பெற முடியும்.
அவற்றைப் பெறுவதில் தவறில்லை. பெற்ற பின்னர் ஒன்றையும் கேட்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.    ஆனால் பெறக்கூடியது எல்லாம் பெற வேண்டும். இன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நான் அதை தரமாட்டேன். போலிஸ் அதிகாரத்தை தர மாட்டேன் என்று சொலல்லாம். அவர் எதை தரமாட்டார் என்பதில் நாங்கள் நேரத்தை செலவழிக்க தேவையில்லை. அவர் எதை தரத் தயாராக இருக்கிறார் என்று கேளுங்கள். அதை முதல் கையில் எடுப்போம்.

பின்னர் அவர் தரத் தயாராக இல்லாததைப் பற்றி அவருடன் பேசிக் கொள்ளலாம். அல்லது அவர் நாளை பதவியில் இல்லாமல்போய் இன்னொரு ஜனாதிபதி வரும் பொழுது அவர் அவற்றை தரக்கூடும். இது ஜனநாயகத் தேர்தல் அமைப்பு. இதில் பல உறவுகளும் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதை எல்லாம் புரிந்து கொண்டு நீண்டகால இலக்கோடு இந்த அதிகாரப் பரவலாக்கத்தை பெறுவதில் தமிழ் மக்கள், தமிழ் தலைவர்கள் செயற்பட வேண்டும்.
தீபச்செல்வன் :   மே 17 இன் பின்னர் ஈழப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் முடிந்து போயிருந்தது. தமிழ் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம் மேலும் தேவைப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. இந்தச் சூழலில் அதற்கான அவசியத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
வரதராஜப்பெருமாள் :  என்றுமே ஒற்றுமைப் படுவதற்கான அவசியம் இருந்திருக்கிறது. ஒரு கையில் ஐந்து விரல்கள் உள்ளன. ஒவ்வொரு விரல்களுக்கும் தனித்தனி பலம் இருக்கிறது. இதை நான் வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்த காலத்திலும் அதற்கு முன்பும் ஒற்றுமை பற்றிச் சொல்லுகிறபோது நான் குறிப்பிட்ட உதாரணம். ஐந்து விரல்களில் பெருவிரல் மிகப் பலமானது. அதற்காக மிச்சம் நாலு விரல்களையும் வெட்டி விட முடியாது. பெரு விரலை மட்டும் வைத்திருந்தால் அது கையாகாது. அதுதான் ஒற்றுமை.  அது மே 17இற்கு பிறகு மட்டுமல்ல தேவைப்படுகிறது. தமிழ் மக்களுக்கு எப்பொழுதும் அது தேவைப்படுகிறது.
83 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழ தேச விடுதலை முன்னணி என்ற ஒன்றை உருவாக்க எவ்வளவோ பாடுபட்டு உருவாக்கினோம். ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, ரெலோ, ஈரோஸ் என்று சேர்ந்து அதற்கு பிறகு புளொட், தமிழர் கூட்டணியுடன் அதை விரிவாக்க முயற்சித்தோம். அதற்கிடையில் புலிகளும் தாங்களாக முன்வந்து இணைந்தார்கள். எங்களை முதலில் சேருங்கள் என்று அவர்கள் கேட்டார்கள். அவர்களுடன் சேர்ந்து மற்றவர்களையும் சேர்க்க வேண்டும் என்று சொன்னோம்.

பிறகு வடக்கு கிழக்கு மாகாணசபை அமைந்த காலத்தில் இந்திய - இலங்கை ஒப்பந்த்தின் பிறகு நாங்கள் மட்டும் மாகாண சபையை அமைக்கவில்லை. தமிழர் கூட்டணியை எத்தனையோ தடைவ கேட்டோம். நீங்கள் வந்து தேர்தலில் போட்டியிடுங்கள். நீங்கள் வந்து மாகாண ஆட்சியை நடத்துங்கள் நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கிறோம். அப்பொழுது விடுதலைப் புலிகள் அதற்கு தயாராக இல்லாமல் பயமுறுத்திக் கொண்டிருந்ததினால் களத்து வேலைகளை நாங்கள் பார்க்கிறோம் என்றோம்.

மற்ற இயக்கங்களையும் கேட்டோம். ஆக ஈ.என்.டி.எல்.எப் மட்டுமே தயாராக இருந்தது. அதேவேளை முஸ்லீம் கட்சிகளை கேட்டோம். அதற்கு முஸ்லீம் காங்கிரஸ் மட்டுமே அதற்கு தயாராக இருந்தது. அப்பொழுது மகாணசபையை எதிர்த்திருந்த எஸ்.எல்.பி, ஜே.வி.பி ஐயும் தேர்தலில் பங்கு பெறக் கேட்டோம். மகாணசபையில் நாங்கள் குழுநிலைப் போக்குடையவர்களாக நடந்து கொள்ளவில்லை. முஸ்லீம் காங்கிரஸ் ஊடன் மிக அணைவாகவே நடந்து கொண்டோம். அதற்கு பின்னர் அவர்கள் எங்களைப் பற்றி தவறான பிரசாரங்களை செய்தது வேறு விடயம்.
அந்த மாகாண சபையை எப்படியாவது குழப்பி விடுவதற்கு பிரேமதாசா முயற்சித் பொழுது புலிகளும் அதற்கு ஒத்துழைத்தார்கள். புலிகளுடனும் நாங்கள் பகிரங்கமாக கோரினோம். மகாணசபையில் எங்களிடமிருக்கும் 38 உறுப்பினர்களுக்கும் உரிய ஆசனங்களையும் எடுத்துக்கொண்டு ஆட்சி செய்யுங்கள் என்று. அப்பொழுதும் அவர்கள் விட்டுக் கொடுத்து ஒற்றுமைக்காக தயாராக இல்லை. அவர்கள் வெறும் பெருவிரல் மட்டும் போதும் மற்ற விரல்கள் எல்லாம் வெட்டி விட வேண்டும் என்று நினைத்தார்கள்.
இப்பொழுதும் சொல்லுகிறேன்.     தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை வேண்டும். ஆனால் அது தேர்தல் கால ஒற்றுமையை நான் சொல்லவில்லை. தமிழர்களது உரிமைக்கான குரலை ஒலிப்பதற்கான ஒற்றுமை. அரசாங்கத்திற்கு முன்னாலும் சரி, இந்தியாவுக்கு முன்னாலும் சரி, உலக நாடுகளுக்கு முன்னாலும் சரி, நாங்கள் ஒற்றைக் குரலில் ஒலிப்பதற்கு நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும்.      தேர்தல் வரும் பொழுது நீங்கள் ஐம்பது கட்சிகளாக நின்று போட்டி போட்டுக் கொள்ளுங்கள்.    அதில் எங்களுக்கு கவலை கிடையாது. ஏனென்றால் அது ஒவ்வொருவரது ஜனநாயக உரிமை. யாரை தெரிவு செய்வது என்பது தமிழ் மக்களின் உரிமை. அரசியலை முன்னேற்ற பொருளாதாரத்தை முன்னேற்ற சாதியப் பிரச்சனையை ஒழிக்க நாம் ஒற்றுமைப்பட வேண்டும்.
தீபச்செல்வன் :  80 களில் நடந்த தமிழ் தேசிய இராணுவ உருவாக்கதில் பொழுது நீங்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதைப்போல பின்னர் தமீழ விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடும் பொழுது அதை நீங்கள் கடுமையாக விமர்சித்திருந்தீர்கள்? இந்த இரண்டு விடயங்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு?
வரதராஜப்பெருமாள் : முதல் கட்டமாக நாங்கள் பலபேரை இணைத்திருந்தோம். மூவாயரம் பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அரசாங்கத்தில் அந்த மூவாயிரம் பேரை அங்கரித்து உடனடியாக ஒரு தொண்டர் படையை அமைக்க திட்டமிட்டோம். குடிமக்கள் படை எனறு அதற்கு பெயர் வைத்தோம். அது சட்ட விரோதமான படையல்ல. அதற்கு அரசாங்கம் சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தது. பின்னர் நெருக்கடி ஒன்று ஏற்பட்ட  பொழுது மீண்டும் நாங்கள் அரசாங்கததிடம் கேட்டோம்.
அப்பொழுது 64 ஆயிரம் பேர் இராணுவத்தில் இருந்தார்கள். நாங்கள் அதில் 20 ஆயிரம் பேரை தமிழ் பேசும் மக்கள் சார்பாக கேட்டோம். அப்பொழுது நாங்கள் கணக்கு பார்த்த பொழுது .06 வீதம்தான் தமிழர்கள் இராணுவத்தில் இருந்தார்கள். அப்பொழுது 27 ஆயரம் பேர் இலங்கையல் பொலிஸ் பதவியில் இருக்கும் பொழுது 9 ஆயிரம் பேரையாவது தமிழ் பேசும் மக்களிலிருந்து சேர்த்துக் கொள்ள கோரியிருந்தோம்.    அவர்கள் அதை மறுக்க முடியாது ஒத்துக் கொண்டார்கள். ஆனால் எங்களிடம் ஆட்கள் இல்லை. அதேவேளை மாநல ஆட்சிக்கும் மாநில ஆட்சி அமைக்க பொலிஸ் படைகளுக்கும் ஆட்கள் தேவைப்பட்டன. இதற்காக ஆட்களை விரைவாக திரட்ட வேண்டிய தேவை இருந்தது. அது மாகாண சபையின் முடிவாக இருக்கவில்லை. அது கட்சியின் முடிவாகவே பலவநதாமாக ஆட்சேட்பு நடந்தது.
பலவந்தமாக ஆட்களைப்  பிடிப்போம். பிறகு பிரச்சாரம் செய்வோம். அதில் விலகுபவர்கள் விலகலாம். அப்படியான முயற்சியை பல கட்சிகள் செய்தன. அன்று தமிழ் மக்களைப் பாதுகாக்க இலங்கை அரசுடன் எதிர் கொள்ளக்கூடிய மாநில படையை உருவாக்குவதுதான் அதன் நோக்கம். அதில் பல நடமுறைத் தவறுகள் உள்ளன. யதார்த்தத்தில் அப்படி வைத்து செயற்படுத்த முடியுமா என்பது பின்னர் பார்க்கும் பொழுதுதான் தெரிந்தது.
ஆனால் விடுதலைப் புலிகள் இளைஞர்களைப் பிடித்து இரண்டு வாரம் பயிற்சி கொடுத்து போர்க்களத்தில் அவர்களை முன்னரண்களுக்கு அவர்கள் அனுப்பப்பட்டார்கள். தனிநாட்டுக்காக போராடுகிறோம் என்பதற்காக பொருத்தமான போர் வீரர்களாக மாற்றாமல் முன்னுக்கு போ என முன்னுக்கும் மரணம் பின்னுக்கும் மரணம் என நிலமை இருந்தது. அதை எதிர்த்து பெற்றோர்கள் போன பொழுது முன்னர் பெற்றோர்கள் போன பொழுது பல இளைஞர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

இங்கு பெற்றோர்களே விடுபட முடியாமல் போனார்கள். இறந்த முப்பதாயிரம் பேரில் 29 ஆயிரம் பேர்தான் தமீழம் கிடைக்கும் என நம்பியிருப்பார்கள். தமீழம் கிடைக்காது என்று நம்பாதவர்களாலேயே இவர்கள் இப்படி கையாளப்பட்டார்கள். இது இரண்டும் ஒரே விடயமாக குறிப்பிட முடியாது. இதில் முழுச் சமுதாயமுமே அவலத்தை சந்தித்தது. நாங்கள் செய்த பரிசோதனை வேறு இப்படியான பரிசோதனை வேறு. இப்படியான பரிசோதனைகள் இனியும் நடக்க கூடாது.

தீபச்செல்வன் : நீங்கள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோனவர் என்ற கூறப்படுகிறது அதைப் பற்றி குறிப்பிடுங்கள்?
வரதராஜப்பெருமாள்: இந்தியா எனக்கு துணை செய்தது உன்மை ஆனால் நான் இந்தியாவுக்கு துணை செய்யவில்லை.    இந்தியா பெரிய நாடு. 1200 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு. அந்த நாட்டுக்கு என்னைப்போன்ற தனி மனுசன் துணை செய்ய வேண்டுமா? 15 லட்சம் படை வீரர்கள் அவர்களிடம் இருக்கின்றன. நான் அவர்களிடம் துணை போகவில்லை. அது பொய்யான கருத்து. ஆனால் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக இந்தியாவை பயன்படுத்த வேண்டும். அதைக் குறித்து என்னால் இந்தியாவுடன் பேச முடியும்.
தீபச்செல்வன் : தமிழ் மக்களின் அரசியலில் எதாவது தொடர்ந்து செய்யும் எண்ணங்கள் இருக்கின்றதா?
வரதராஜப்பெருமாள் :     தமிழ் மக்களின் அரசியலில் எதிர்காலத்தில் முன்னேற்ற கரமான மாற்றத்தை செய்ய இருக்கிறேன். இலங்கையில் அரச முறையில் ஒருமாற்றம்  வரவேண்டும். 87 இற்கு முன்பு ஒரு பாராளமன்றம், 87 இன் பின்னர் ஒரு மாகாணசபை என்று மாற்றம் பெற்றது. அது ஒரு ஆட்சி முறையினுடைய வளர்ச்சி. ஏங்கள் கோரிக்கை எல்லாம் மாகாணங்களுக்கு அதிகாரம் போதாது. ஏனக்கும் உங்களுக்கும் எல்லோருக்கும் ஒரு பொறுப்பிருக்கிறது. இந்த மாகாண சபைக்கான அதிகாரங்களை பெறுவதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது. சேயற்பட வேண்டும். போராட வேண்டும். சிங்கள முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் அடுத்த கட்ட சமூதாய வளர்ச்சியில் எனது பாத்திரமும் இருக்கும்.
(நன்றி: ஜீரிஎன் இணைய தளத்திற்கு

அம்மாவிற்கு 40 ஆசனம் பிரபாகரனின் பிழைத்துப்போன ராஜதந்திர நகர்வ

பிரபாகரனின் பிழைத்துப்போன ராஜதந்திர நகர்வுகளைப்? புற்றி எழுதும் ஆய்வாளர்களுக்கு
நிதர்சனன
நடிகவேள் எம். ஆர்.ராதா ஒரு நடிகன் மட்டும் அல்ல சீர்சிருத்த கருத்துக்களை கூறி வந்ததுடன், மூடக் கொள்கைகளை தகர்த்தெறிதற்கு நகைசுவையோடு கலந்த பிரட்சாரங்களை மேற்கொண்டவர். திரைப்படம் ஒன்றில் ஒருவர் இறந்தவுடன் சிலர் இழிவாக அவரை பேச்சுவார்கள். அப்பொழுது அவர் கூறுவார்” அவனைப்பற்றி யாரும் இங்கே பேசக்கூடாது, ஒருவன் இறந்தவுடன் அவனுடைய நல்லது, கெட்டது எல்லாம் அழிந்து போச்சு, ஆகவே அவனைப்பற்றி இங்கே யாரும் பேசப்படாது” என்பார்.
இதே பொன்று பிரபாரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் பரிதாபகரமான இறப்பு நிகழ்ந்ததின் பின்னர் அவர் குறித்தோ ,அல்லது அவரின் கடந்த கால நடவடிக்கைகள் குறித்தோ விமர்சிப்பது நாகரீகமாக இருக்காது என்று எண்ணியிருந்தோம். இதனால் அவர் குறித்த விமர்சங்களை அடக்கி வைத்திருந்தோம். நாம் இப்படியாக இருப்பதினால் ஆய்வாளர் என்ற பெயரில் பிரபாகரன் குறித்து ஆள் ஆளுக்கு அளவிற்கு மீறி அளந்து தள்ளுகின்றார்கள். பிரபாகரன் ஒரு தீர்க்க தரிசி, அவர் மேற்கொண்ட ராஜதந்திர நகர்வுகள் என்றெல்லாம் எழுதுகின்றார்கள்.
நெருக்கடியான காலகட்டத்தில் பிரபாகரன் மேற்கொண்ட ராஜதந்திர நகர்வுகள் என்ற தலைப்பில் அண்மை ஒரு ஒருவர் , இணையதளம் ஒன்றில் எழுதியிருந்தார். நெருக்கடியான காலகட்டத்தில் அவர் ராஜதந்திரமாக நடந்து கொண்டு இருந்திருந்தால்! வட கிழக்கு மண் இன்றும் அவரின் கட்டுப்பாட்டில் அல்லவா இருந்திருக்க வேண்டும். மண்டை பிழந்து அவர் ஏன் மாண்டு போனார்.தலைவர் போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதாக அந்த ஆய்வாளர் அறிவுறுத்தி இருக்கின்றார்.வெற்றியை கொண்டுவருவதுதான் ராஜதந்திரம், அழிவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நகர்வை, வேண்டுமானால் அழிவுதந்திரம் என்று அழைக்கலாம். சம்மந்தர் கூறியது போன்று தம்பி பிரபாகரன் விவேகம் இல்லாது மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் அவரின் அழிவிற்கான இறங்கு படிகளாகவே அமைந்து போயின.
வட கிழக்கு மக்களை வாக்களிக்க விடாது தடுத்து, மஹிந்தாவை ஆட்சி பீடம் ஏற வைத்தது பிரபாகரனின் ராஜதந்திர நகர்வா? போரிடுவதற்கு வலு இல்லாது இருந்தவேளை மாவிலாற்றில் படையினரை வலு சண்டைக்கு இழுத்தமை,கிளிநொச்சியை விட்டு வெளியேறும் போது மக்களையும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றமை, அரச படைகள் அவரை சுற்றி வழைப்பதற்கு இலகுவாக கடல் கரையோகமாக சென்று நின்றமை, இறுதி வரையும் தன்னோடு கடல் படை தலைவர், காவல் படை தலைவர், புலனாய்வு துறை தலைவர், அரசியல் துறை பொறுப்பாளர் போன்றோரை எல்லாம் ஒருமித்து வைத்திருந்தமை என்பதெல்லாம் இராஜதந்திர நகர்வுகளா? புலிகளின் தலைவருக்கும் ராஜதந்திரத்திற்கும் வெகுதூரம் என்பது பலருக்கு தெரியும். ஆனால் யுத்தத்தினை நடத்தும் ஒரு தலைனுக்கு இராஜதந்திரம் வேண்டாம், யுத்த தந்திரம் கூடவா இல்லாதிருக்க முடியும்.
முக்கிய தலைவர்கள் அனைவரையும் தன்னோடு வைத்திருக்கும் அளவிற்கு அவருக்கு யுத்த தந்திரம் இருந்திருக்கின்றது. முன்னணி தலைவர்களில் ஒருவரை இழந்தாலும் ஏனைய தலைவர்கள் விடுதலை போராட்டத்தினை முன்னெடுத்து செல்லும் அளவிற்கு தலைவர்கள் பல குழுக்களாக கலைந்து அல்லவா இருந்திருக்க வேண்டும். நகரும் குழுக்களாக (moving group) காட்டிற்கு புகுந்துவிட்டால் துப்பாக்கியில் கடைசி மகசீன் (magazine)இருக்கும் வரையில், நகர்ந்து கொண்டே இருக்கலாம். இதனை விடுத்து கடற்கரையோரமாக சென்று அனைத்து முன்னணி தலைவர்களும் ஒருமித்தா நின்றிருப்பார்கள். தான் அழிந்தாலும் விடுதலை போராட்டத்தினை தொடர்ந்து நிகழ்த்துவதற்கு ஏனைய தளபதிகள் இருக்க வேண்டும் என்றல்லவா ஒரு தலைவன் நினைத்திருப்பான். அப்படிப் பட்டதொரு தொலைநொக்கு சிந்தனை அல்லவா இருந்திருக் வேண்டும் . அதனை விடுத்து அழிந்தால் எல்லோரும் தன்னோடு அழியவேண்டும் என்று நினைப்பவன் ஒரு தலைவனா? இதனையா நீங்கள் ராஜதந்திர நகர்வு என்று அழைக்கின்றீர்கள்.
தலைவர் இக்கட்டான சூழலில் இருந்ததினை இவர் அறியாது எழுதுகின்றார் என்று நீங்கள் நினைக்கலாம். இறுதி நேரத்தில் அற்புதம் ஏதாவது நிகழாதா என்று தலைவர் காத்திருந்தது எமக்கு புரியும். வடமராட்சியினை படையினர் சுற்றி வழைத்த போது இந்திய படையினர் மிராஜ் யுத்த விமானத்தின் துணையுடன் வந்து சாப்பாட்டு பொதிகளை வீசி , ஜே. ஆரை பயமுறுத்தி அன்று புலிகளை காப்பாற்றி இருந்தார்கள். முல்லைதீவுக்குள் இந்திய படையினர் தலைவரை சுற்றி வழைத்து நின்ற போது, இந்திய படையே வெளியேறு என்று பிரேமாதாசா காப்பாற்றி இருந்தார். அமைதி உடன்படிக்கையினை கைசாத்திட்டு சந்திரிகா ஆட்சி காலத்தில் பிரபாரகரனை ரணில் காப்பாற்றி இருந்தார். இப்படியானதொரு சூழலை புலம் பெயர்ந்த புலி தலைவர்கள் நிகழ்த்துவார்கள் என்று தலைவர் காத்திருந்தார். தமிழகத்தில் இருக்கும் புலிகளின் பெயர்களை சொல்லி பொருளீட்டும் காகித புலிகளும், புலம் பெயர்ந்த புலிகளும் சர்வதேச அழுத்தங்களின் ஊடாக யுத்தநிறுத்தத்தினை கொண்டு வருவார்கள் என்று தலைவர் நம்பி இருந்தார். வை.கோ வேறு தன்பங்கிற்கு அம்மாவிற்கு 40 ஆசனம் கிடைக்கும் அதை வைத்துக் கொண்டு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்துவேன் என்று உத்தரவாதம் கொடுத்திருந்தார். மற்றும் நோர்வே நாட்டு அரச சார்பற்ற நிறுவனம் , தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இலங்கை அரசுடன் திரைமறைவில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் தன்னை காப்பாற்றும் என்று பிரபாகரன் நம்பி இருந்தார். ஆனால் இலங்கை அரசின் சகோதரர்கள் தாமே ராஜதந்திரிகள் என்பதினை முல்லிவாய்க்காலில் முடித்து காட்டினார்கள்.
ஈழத்தமிழ் மக்களின் பிரநிதிகள் புலிகளே என்று நோர்வே நாட்டு மந்திரி சர்வதேச அளவில் புலிகளுக்கு அங்கீகாரம் பெற்று கொடுத்திருந்தார். இதனை சரிவர பயன்படுத்த தவறிய தலைவருக்கு ராஜதந்திரம் தெரியும் என்கின்றார்கள். புலிகள் தொடர்ந்து தற்கொலை தாக்குதல்களையும், அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து கொலைகளையும் மேற்கொண்டமையினால் ஐயிரோப்பிய ஒன்றியம் முதலில் புலிகளுக்கு பயணதடையினை விதித்து இருந்தது.இதற்காக போர்நிறுத்த கண்காணிப்பு குழுவில் பணியாற்றிய ஐயிரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள் வட கிழக்கினை விட்டு வெளியேறுமாறும், போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் அங்கம் வகிக்க கூடாது என்று புலிகள் உத்தரவிட்டு இருந்தார்கள்.இதுவா உங்கள் தலைவரின் ராஜதந்திரம்? (Is this call diplomacy?). இப்படியாகவா இக்கட்டான காலகட்டங்களில் உங்கள் தலைவர் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டார்?
இதுமட்டுமா, வரலாற்றில் முதல் தடவையாக வட கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களின் தாயக பூமி என்று சட்ட ரீதியாக , எழுத்து வடிவில் கைசாத்தான இலங்கை இந்திய உடன்படிக்கையினை நிராகரித்தமை, அது மட்டும் அல்லாது அதனை நடைமுறைப் படுத்தும் போதும் அதற்கு உபத்திரம் கொடுத்தமை, ராஜீவ் காந்தியை கொலை செய்து, எமக்கு நட்புறவாக இருந்த நாட்டினை எதிரிக்கு நண்பணாக்கியமை, என்பனவெல்லாம் உங்கள் தலைவரின் ராஜதந்திர நகர்வுகளே!
பிரபாகரனின் ஆய்வாளர்களுக்கு!
பணம் பண்ணும் நோக்கம் இல்லாது உங்களுக்கு உங்கள் தலைவர் மீது உண்மையில் மரியாதை இருக்குமானால் ! அவர் குறித்து நீங்கள் மிகைப்படுத்தி ஆய்வு செய்யாது , அவரை ஈழத் தமிழர்களின் காவிய நாயகனாக காட்டுவதற்கு முயற்சி செய்யாமல் இருப்பதே மேலாகும். இதனை விடுத்து நீங்கள் தொடர்ந்தும் அவர் குறித்து மிகைப்படுத்தி எழுதுவீர்களாயின், நாம் அதற்கு ஹொடர்ந்து இவ்வாறாக உண்மை விளக்கம் கொடுக்க நேரிடும். தன்னால் தமிழ் மக்களின் விடுதலை வெற்றெடுக்க முடியும் என்ற விறுமாப்போடு ஏனைய இயங்களை கொன்றொழித்துவிட்டு, ஈழ தமிழர்கள் குறித்து பேசும் உரிமையினை குத்தைக்கு எடுத்துவிட்டு , 40 ஆயிரம் தமிழ் இளைஞர்களின் தியாங்களை செல்லாக் காசாக்கிவிட்டு, ஆயிரகணக்கான அப்பாவிகளின் உயிர்களை பலி கொடுத்து விட்டு , லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கிவிட்டு, இறுதியில் சைனைற் கடிப்பதற்கு தைரியம் அற்று எதிரியிடம் மண்டியிட்ட்ய் மாண்டுபோனவரை தலைவர் என்றும், ராஜதந்திரி என்றும் எழுதுவது ஏளனத்திற்கு உரிய விடயமல்லவா?
எதிரி போருக்கு அழைக்கும் போது தனக்கு முதுமை வந்து விட்டதே என்று தயங்காது , வாலிபன் ஒருவனுடன் போரிட்டு வீரமரணம் எய்திய எல்லாளன் பரம்பரையில் வந்த இனம் எங்கள் தமிழ் இனம். அப்படியான இனத்தை கெவலப்படுத்தி விட்டு சென்றவரை காவிய நாயகனாக சித்தரிப்பது தமிழ் இனத்திற்கே இழுக்கான செயல் அல்லவா? தமிழர்களை வென்றுவிட்டோம் என்ற சந்தோசத்தில் அவர்கள் ஆடிய ஆட்டத்தினை எப்படி மறப்பது.ஆயுதம் ஏந்தாத அந்த அமிர்தலிங்கம் உங்கள் குண்டை மார்பிலும் , தலையிலும் ஏந்தி வீரமரணம் அல்லவா எய்தி இருந்தா ர். அவர் உங்கள் ஆயுதத்திற்கு பயந்து அடிபணியவில்லை. ஆனால் உங்கள் தலைவன் எதிரியிடம் உயிர் பிச்சை கேட்டு மாண்டுபோனது மானகெட்ட சாவு அல்லவா? இதனையா உங்கள் தலைவரின் தீர்க்க தரிசனம் என்கின்றீர்கள்.
ஆங்கில தெரிந்தவர்கள் எல்லோருக்கு அரசியல் அத்துபடி என்றும், பட்டதாரிகள் எல்லொரும் புத்திஜீவிகள் என்றும் எமது சமுகத்தில் ஒர் பகுதியினர் மட்டில் விளங்கி கொள்ளப்பட்டுள்ளது. இதனாலேயே பிரபாகரனை ராஜதந்திரி என்றும், தீர்க்கதரிசி என்றும் எழுதும் ஆய்வாளர்களுக்கு சில ஊடகங்கள் முத்தியத்துவம் கொடுத்து அவர்களை ஆய்வாளர்களா காட்டுகின்றது. லண்டனில் இருந்து முழங்கும் ஓசையும் இதற்கு விதிவிலக்கானது அல்ல. தமிழ் விஞ்ஞானிகள், அறிஞர்கள், பேராசிரியர்கள் போன்றோரை எல்லாம் செவ்வி காணும் ஓசை, பிரபாகரனை ராஜதந்திரி என்று கூறும் ஆய்வாளர்களுடனும் அலசுகின்றது. உலகெங்கிலும் வாழும் மில்லியன் கணக்காண தமிழ் பேசும் மக்களின் அபிமான வானொலியாக முழங்கும் ஓசையின் தரத்தினையும் , மக்கள் அதன் மீது கொண்டிருக்கும் நம்பகதன்மையினையும் தொடர்ந்து பாதுகாகவேண்டும். கீத பொன்கலன் போன்ற பேராசிரியர்களை செவ்வி காணும் ஓசை தனது தரத்தை தாழ்த்தி விடக்கூடாது.

எதையாவது செய்ய வேண்டும் என்பதிற்காக செய்கிறார்கள்.சித்தார்த்தன்

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கடல் கடந்த தமீழம் நாடு கடந்த தமீழம் வட்டுக் கோட்டை தீர்மானம் என்று சொல்லிக் கொண்டிருக்க இங்கு மகிந்த இங்கு ‘புலிகள் மீண்டும் உருவாகி விடுவார்கள்’ என்று அவர்களை விடுதலை செய்ய பின்னடிக்கிறார். இது வெளி நாட்டில் உள்ளவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. அவர்களுக்கு இங்குள்ள மக்களின் நிலமைகளை சரியாகத் தெரியும். இங்குள்ள போராட்டத்தின் நிலை தெரியும். அவர்கள் தாங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்பதிற்காக செய்கிறார்கள். அவர்கள் இந்த மக்களுக்கு எத்தனையோ வித்தில் உதவிகளைச் செய்ய முடியும். தேவையான அதிகாரப் பரவலாககம் சம்பந்தமான பல வேலைகளைச் செய்யலாம். அழுத்தங்களைக் கொடுக்கலாம்.
இது மகிந்தவுக்கு வசதியை அமைத்து கொடுக்கின்றது. சிறார்களுக்கு புனர்வாழ்வு கொடுக்கிறோம் என்று மகிந்த சொல்லும் பொழுது சிறார்களுக்கு புனர்வாழ்வை பெற்றோர்களால் தான் கொடுக்க முடியும் என்று நான் குறிப்பிட்டேன். இன்று அரச கட்சியில் போட்டியிடும் கனகரத்தினம் போன்றவர்கள் அவர்களை விதலை செய்வதற்காக என்று கூறி விண்ணப்ப படிவம் நிரப்புகிறார்கள். அரச கட்சியில் போட்டியிடுவர்கள் ஏன் விண்ணப்ப படிவம் நிரப்ப வேண்டும்? இங்கு இவர்களது தேர்தலுக்காக அந்த மக்களின் வேதனைகள் எல்லாம் பாவிக்கப்படுகிறது. நாங்கள் படிப்படியாக அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். ஆனால் முதலில் பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.
உலகம் முழுவதிலும் யுத்தம் முடிந்தவுடன் ஒரு சமாதானம் எதரிர்பார்க்கப்படும். எனவே இப்படியான விடயங்களுக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்திருக்கிறோம்.
சம்பந்தன் அய்யா என்னை வந்து தங்களுடன்தான் கேட்க வேண்டும் எனக் கேட்டார். நானும் அதற்கு சம்மதித்திருந்தேன். புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் விலக்கப்பட்டார்கள். அந்த இடங்களுக்கு இவ்வளவு காலமும் பேராட்டத்துடன் நின்ற சிலருக்கு ஆசனங்களைக் கேட்டிருந்தோம். அவர்கள் தந்திருக்கலாம். இது பற்றி செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் நான் தெளிவாக சொல்லியிருந்தேன். அவர் பேசி விட்டு சொல்லுவதாக சென்றார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு பொது இணக்கத்திறகு வர முயற்சி செய்தோம். ஆனால் எல்லா கட்சிகளும் முற்று முழுதாக தேர்தல் ஒப்பந்தம் ஒன்றையே செய்து கொண்டன. அத்தோடு தத்தமது கட்சிகளின் நலன்களை பார்க்கும் பொழுது நாங்கள் எங்கள் கட்சியின் நலநனை பார்க்க வேண்டியிருந்தது. மற்றும்படி ஒன்றிணைந்து செயற்படுவதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. பொதுவான வேலைத் திட்டத்திற்கு உரியவர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டு அவர்களை நேர்காணல் ஊடாக நியமனம் கொடுத்திருக்கலாம். இறுதி வரை நாங்கள் அவர்களது பதிலுக்கு காத்திருந்தோம். செல்வம் அடைக்கலநாதன் எங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை அதனால் நாங்கள் இறுதி நேரத்திலேதான் இப்படி போட்டியிடுவது என தீர்மானித்தோம்.

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

புலிப்பயங்கரவாதிகளால் கட்டாய ஆட்சேர்ப்புக்குட்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தில் வன்னி மாணவன் கருணாநிதி தற்கொலை.

யாழ் பல்ககைலக்கழக முகாமைத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் பா.கருணாநிதி இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். வன்னியில் பூநகரியைச் சேர்ந்த இவர் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவராவர்.


யுத்தம் காரணமாக தனது கல்வியை தொடர முடியாமல் தடைப்பட்ட இவர் பின்னர் நீண்ட காலம் வவுனியா தடுப்பு முகாமிலும் இருந்தவர்.  இவைகளால் மனநிலை பாதிக்கப்பட்ட இவரை அடையளம் கண்டு தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மீண்டும் கல்வியைத் தொடர பல்கலைக்கழக்கத்திற்கு வந்த கருணாநிதி தான் சுகம் அடைந்திருப்பதாக கூறியுள்ளார்.
தனக்கு குறித்த மனநிலை பாதிப்பு இருப்பதை அறிந்து கொண்ட அவர் கடந்த 4 மாதங்களாக கல்வியை கற்று வந்தார். அவரது மனநிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையிலிருப்பது தெரிந்துள்ளது. இன்று காலை நாச்சிமார் கோயிலடியில் உள்ள தன் அறையில் வைத்து கருணாநிதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 

சுட்டுக்கொன்றதன் பின்னர் எம்பி பதவியை பெற்றுக்கொண்டார்.

தமிழ் தேசியம் என கோஷம் கிளப்புகின்ற சம்பந்தன் மாவை போன்றோர் தமது தலைமுறைகளை செல்வந்த நாடுகளில் குடியேற்றியிருக்கின்றார்கள். இவர்களுக்கு தமிழ் தேசியத்தில் பற்று இருந்திருக்குமாக இருந்தால் தமிழ் தேசியம் என்ற கோஷத்துடன் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்திருக்கவேண்டும். மாறாக மாவை தனது ஒரு புதல்வியை பிராண்சிலும் ஒரு புதல்வியை லண்டனிலும் திருமணம் செய்து கொடுத்துள்ளதுடன் சம்பந்தன் தனது புதல்விக்கு கொச்சினில் திருமணம் செய்துகொடுத்திருக்கின்றார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் மேற்கண்டவாறு கூறிய பிள்ளையான மேலும் பேசுகையில், ஒஸ்லோ பிரகடணத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத்தரப்போவதாக கூறுகின்றார் அரியநேந்திரன். அதன் பொருட்டு வன்முறை கலாச்சாரம் கொண்ட கட்சிகளை நிராகரிக்க கோருகின்றார். நான் இங்கு கேட்பது யாதெனில் யார் வன்முறைக் கலாச்சாரம் கொண்டவர்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் சேவகனான கிங்ஸ்லி ராஜநாயகத்திடம் புலிகளுடன் இணைந்து பலாத்காரமாக இராஜனாமா கடித்தை பெற்றுவிட்டு அவரை சுட்டுக்கொன்றதன் பின்னர் எம்பி பதவியை பெற்றுக்கொண்டார். இச்செயலை வன்முறை என்று சொல்லாமல் எவ்வாறு என்ற கேள்வியை எழுப்பினார்.

வியாழன், 1 ஏப்ரல், 2010

வாக்களிக்கும் சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொடுத்தோம் என்பது இங்கு முக்கியமானதாகும். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நான் உங்களை சந்திக்க வந்தேன். எனக்கு வாக்களித்தமைக்காக நான் நன்றி கூறுகின்றேன். தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை விட வாக்களிக்கும் சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொடுத்தோம் என்பது இங்கு முக்கியமானதாகும்.
விடுதலைப் புலிகளின் வழியில் செல்வதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களை இனங்கண்டுகொள்ள வேண்டும். நாட்டு மக்கள் எல்லோரையும் நான் ஒரே கண்ணோட்த்திலேயே பார்க்கிறேன்” என அவர் அங்கு மேலும் தெரிவித்தார். கூட்டத்துக்கு முதல் ஜனாதிபதி நல்லூர் ஆலயத்தில் மத வழிபாட்டில் ஈடுபட்டதாக அங்கிருந்து வரும்  செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (01) முற்பகல் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நல்லூர் ஸ்தான சி.சி.த.க பாடசாலை மைதானத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அதன் பின்னர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் யாழ் நாகவிரைக்கும் சென்ற ஜனாதிபதி அங்கு நடைபெற்ற விசேட பூசை வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.

இப் பிரச்சாரக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரைநிகழ்த்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடபகுதியில் நாளுக்கு நாள் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடந்த 30 வருடங்களில் நீங்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் எல்லாம் நீங்கி தற்போது நிம்மதியானதும் சுதந்திரமானதுமான வாழ்வை ஆரம்பித்துள்ளீர்கள் எனத் தெரிவித்ததுடன், இங்குள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக யாழ்.பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை  ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீண்ட காலத்துக்குப் பின்னர் யாழ்.தேவி ரயில் மீண்டும் யாழ்ப்பாணம் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும், அதற்கான தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் புனர்வாழ்வளித்து, கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இன்றைய தினம் அவர்களில் 164 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எமது நாடு மென்மேலும் அபிவிருத்தியடைந்து, ஆசியாவின் ஆச்சரியமிக்க ஒரு நாடாக இலங்கையை உருவாக்குவதே தமது எதிர்காலத் திட்டம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துரையப்பா மேற்படி கூட்டத்தில் உரைநிகழ்த்துகையில், யாழ்.குடாநாட்டிற்கான ஜனாதிபதியின் வருகை எமது மண்ணுக்கு மகிழ்ச்சியையும், உயர்ச்சியையும் தரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும், நம்பிக்கையும் தமக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.

தென்னிலங்கையில் சுதந்திரம் தங்கமென்றால், வடபகுதிக்கானச் சுதந்திரமும் தங்கத்தினால் ஆனதாக இருக்கவேண்டுமென்றும், தமிழ் மக்களின் வாழ்வியல் அரசியல் உரிமைகளையும், வளமான வாழ்க்கையையுமே எமது மக்கள் விரும்புகிறார்கள் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் மீள் குடியேற்றப்படும்போது அந்த மக்களுக்கான சகல கட்டுமான வசதிகளும் பூரணப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்ததுடன் தென்னிலங்கையில் உயர் பாதுகாப்பு வலயங்கள் எவ்வாறு இருக்கின்றதோ அதுபோலவே வடபகுதியிலும் உயர் பாதுகாப்பு வலயங்கள் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

துரையப்பா விளையாட்டரங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியருந்த இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் உரைநிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

1300பேர் இன்று முதலாம் திகதி விடுவிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடமும்

புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அங்கவீனர்களடங்கிய சுமார் 1300பேர் இன்று முதலாம் திகதி விடுவிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்படவுள்ளனர். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி சிறுவர் பேராளிகள் விடுவிக்கப்பட்டு பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே மேலும் ஒரு பகுதி சிறுவர் போராளிகள் இன்று விடுவிக்கப்படுவர். புளொட் தலைவர் திரு.சித்தார்த்தன் தலைமையிலான பிரதிநிதிகள் அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் பேசியிருந்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு தொகுதி சிறுவர் போராளிகள் பெற்றோர், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேலுமொரு தொகுதி சிறுவர் போராளிகள் விடுவிக்கப்படவுள்ளதாக புளொட் தலைவர் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்மை குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவர் பதவிக்கு நிச்சயம் போட்டியிடுவேன் - அழகிரி

சென்னை: திமுக [^] தலைவர் பதவிக்கு நிச்சயம் போட்டியிடுவேன் என்று மத்திய அமைச்சரும், முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுக தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முன்பு வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு அழகிரி அளித்த பேட்டியில், கருணாநிதியைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த இன்னொரு பேட்டியில் தலைவர் பதவிக்கு யார் வருவது என்பதை தனி நபர் யாரும் முடிவு செய்ய முடியாது. எனக்கே கூட அந்த அதிகாரம் கிடையாது என்று கூறியிருந்தார்.

இநத நிலையில் இன்று காலை அழகிரி சென்னை திரும்பினார். பின்னர் நேராக கோபாலபுரம் சென்ற அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் அவர் மதுரைக்குக் கிளம்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் தலைவர் பதவி குறித்து கேள்விகள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அழகிரி, தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் நிச்சயம் நான் போட்டியிடுவேன். ஜனநாயக முறைப்படி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முதல்வர் கருணாநிதியின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.

ஜனநாயக முறைபபடி தேர்ந்தெடுக்கப்படும் தலைவரைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். எனது மனசாட்சிக்குத் தோன்றுவதைத்தான் நான் பேசினேன். தலைவர் பதவிக்குப் போட்டியிட எனக்கு உரிமை உள்ளது. அதை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார் அழகிரி.

மு.க.ஸ்டாலின் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், தலைவர் இப்போது இருக்கும்போது மற்றவை குறித்து இப்போது எதற்குப் பேச வேண்டும் என்று கோபமாக கேட்டார் அழகிரி.

தலைவர் பதவிக்கு நிச்சயம் போட்டியிடுவேன் என்று அழகிரி கூறியிருப்பது திமுக வட்டாரத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

22 M.P's ????? www.soodram.com

22 Ngu; $l;lhf? ,Ue;J xd;Wk; ,tu;fs; fpop;f;tpy;iyNa

rup xU Ngr;Rf;F cq;fs; thjg;gb jkpou;fspd; ghuhSkd;w gpujpepjpj;Jtk; Fiwag; Nghfpd;wJ vd;W itj;Jf;nfhs;Nthk;. mJ gy jkpo; cWg;gpdu;fs; Nju;jypy; epw;gjpdhy; vd;Wk; vLj;Jf;nfhs;Nthk;. ,jd; ghjpg;G Kjd;ikahf ,Uf;Fk; jpUkiyapy; rk;ke;ju; ,e;j js;shj tajpy; Nju;jypy; ,Ue;J XJq;fp jkpo; gpujpepjpfs; njupT nra;tij cWjpg;gLj;jl;Lk; ghu;fyhk;. ,Nj Nghy; Rk;kh ,Ue;J nrhj;J Nru;j;J> clk;ig kl;Lk; tsu;j;j RNu]{k;> khitAk;> nry;tk; milfyehjDk; Nju;jypy; ,Ue;J gpd;thq;fp Vida jkpo; cWg;gpdu;fSf;F toptpll;Lk; ghuf;fyhk;. ,tu;fs;jhd; jkpou;fs;. Vidatu;fs; jkpou;fs; ,y;iyah? mtu;fs; kf;fSf;fhf Nghuhltpy;itah?
fle;j ghuhSkd;wj;jpy; 22 Ngu; $l;lhf? ,Ue;J xd;Wk; ,tu;fs; fpop;f;tpy;iyNa. ntspehLfspy; jq;fs; FLk;gj;jpw;F nrhj;Jf;fis Nru;j;jijj; jtpu. vdNt ePq;fs; toptpl;L> xJq;fp toptpLj;J Nju;jypy; Nghl;bapLk; Ntl;ghsu; vz;zpf;ifia Fiwj;J ty;ytu;fs;> ey;ytu;fs;> jpwikahdtu;fs;> nraw;ghlhsu;fs; Nghd;w jkpo; Ntl;ghsu;fspd; ntw;wpia cWjp nra;Aq;fs; ghu;fyhk;. thf;Ffisr; rpjwhky; nra;J ghuhSkd;wj;jpy; jkpo; gpujpepjpfspd; vz;zpf;ifia $l;l cjTq;fs; ghu;f;fyhk;. ,JNghd;w Nfhupf;ifia my;yJ Ma;Tf;fl;Liu vOjl;Lk; ghu;f;fyhk;. ,tw;iw rpwg;ghf jkpo; Njrpak; NgRk; fdthd;fs;nra;al;Lk; ghu;f;fyhk;.  
jkpo;ehL toruthf;fj;jpy; nrhj;Jf;fisAk;> aho;ghzj;jpy; rPl;Lf;fk;gdp elj;jp kf;fspd; gzj;ij #iwahba muRld; ey; cwtpy; cs;s rg;wh rutzgtidAk; Ntl;ghsuhf ,y;yhky; xJq;f nrhy;yl;Lk; ghu;f;fyhk;. Vd; RNu]pd; md;Gj; jk;gpia kPz;Lk; tpLjiyapd; ngauhy; tpLjiyg; Nghuhl;l fhyfl;lj;jpy; VidNahiu Nghu; Kidf;F mDg;gptpl;L jhd; kl;Lk; gbg;igj; njhlu;e;jijg; Nghd;W ,d;Wk; gbg;igj; njhlur; nrhy;yyhk; jhNd. MUapu; ez;gd; [q;fuNerid tpl ty;ytu;fs;> kf;fSf;fhf Nghuhbatu;fs; ,e;j kz;zpy; ,y;iyah? Ra tpsk;gu tpUk;gp Iq;fuNerd; RNu]pd; ez;gidj; vd;gijj; jtpu NtW vd;d jFjp cz;L mtUf;F>
ML eidAJ vd;W Xeha; mOj fijjhd; cq;fs; (Vfg;gpujpepjpj;J Gypf; $l;lq;fspd;)  jkpo; ghuhSkd;w gpujpepjpj;Jtk; Fiwfpd;wJ vd;w $g;ghL. jkpo; Njrpaf; $l;likg;gpd; gpujpepj;Jtk; Fiwag; Nghfpd;w vd;w gL gpw;Nghf;Fj;jdkhd Ra eykhd rpe;jidfspd; ntspg;ghLfNs ,it NtW xd;Wk; my;y. ghuhSkd;w ehw;fhypfspd; Rfk; mg;gb. ghuhSkd;wk; aho; Nkl;Lf;fbapdupd; G+u;tPf nrhj;jh?
kfpe;j murplk; jkpo; NgRk; kf;fSf;fhd murpay; jPu;Tj;jpl;lk; xd;W ,Uf;fpd;wJ. mjid ahu; ghuhSkd;wk; te;jhy; vd;d? ahu; tuhtpl;lhy; vd;d mtu;fs; mKy;gLj;jj;jhd; Nghfpd;wdu;. ,J KOikahd jPu;Tj;jpl;lkhf ,Uf;Fk; vd;W ehk;  $wtpy;iy. ,J xU Muk;gj;jpw;fhd jPu;Tj;jpl;lkhf KOik ngwhjjhfj;jhd; ,Uf;Fk;. ,e;j ajhu;j;;j epiyikia ehk; Gupe;J nfhs;s Ntz;Lk;. ,jpypUe;Jjhd; ehk; Muk;gpf;f Ntz;Lk; vd;w gytPdkhd  #oypy; vk;ik GypfSk;> jkpo; Njrpaf; $l;likg;Gk; nfhz;Lte;J epWj;jpapUf;fpd;wJ jkpo; kf;fis. Ey;y jiytu;fs; Gj;jp [Ptpfs;> fy;tpkhd;fs; gyiu Gyp nfhd;W tpl;lJ. my;yJ ehl;ilAk; tpl;L Juj;jptpl;lJ. ,d;W <oj;jpy; vQ;Qp ,Ug;gtu;fs; rpyNu. ,d;Ws;s epyikapy; jkpo; NgRk; kf;fs; jPu;khdpf;Fk; rf;jp my;y vd;w gytPdkhd epiyf;F js;sp nfhz;Lte;Jtpl;ldu; fle;j 30 tUlk; VfNghfk; nra;jtu;fs;. jkpo; NgRk; kf;fs; jPu;khdpf;Fk; rf;jp my;y vd ehk; Idhjpgjpj; Nju;jypYk; vjpu;T $wp ,Ue;Njhk;. eilngwg;NghFk; ghuhSkd;wj; Nju;jypYk; ,JNt cz;ik epiyahf mikag; Nghfpd;wJ. ,e;j ajhu;j;jj;ij Vw;Wf; nfhz;Ljhd; Mf Ntz;Lk;. vjpu;fhyj;jpy; kPz;Lk; ehk; jPu;khdpf;Fk; rf;jpahf khwyhk;. vy;yhk; vq;fs; iffspy;jhd; jq;fpapUf;fpd;wJ. jPu;khdpf;Fk; rf;jp vd;w kkijtpLj;J ,zf;fg;ghl;Lld; vt;thW gpur;ridfisj; jPu;f;fyhk; vd;w ,uh[je;jpu mZFKiwia gpd;gw;w Ntz;ba epyikapy; ehk; cs;Nshk;.
If;fpa Kd;dzp mikj;J Nju;jiyr; re;jpf;Fk; fl;rpfs;> rpwg;ghf %tpd kf;fspd; $l;L Kd;dzpapy; ,Uf;Fk; fl;rpfs; xNu Nkilapy; Njhd;Wk;NghJ ,dthjk; NgRtijj; jtpu;j;;jhYk;> jdp Nkil Nghl;L NgRk; NghJ jd(k)J ntw;wpia cWjpg;gLj;Jk; Nehf;Fld; ,dthjk; NgRtij jtpu;f;f Kbtpy;iy. ,jidr; rpwg;ghf fpof;F khfhzj;jpy; gutyhf fhzf; $bajhf ,Uf;fpd;wJ. ,NjNghyNt tpUg;G thf;Ffs; vd;w Kwik xU fl;rpf;Fs;NsNa Fj;J ntl;L f;fis Vw;gLj;jhky; ,y;iy. ,dq;fSf;fpilahd Gupe;Jzu;T> tpl;Lf; nfhLg;G> If;fpak; ,d;W kpf Kf;fpak;. ,jpy; rfy jug;gpdUk; nghWg;Gld; nraw;glNtz;ba flg;ghl;by; ,Uf;fpd;wdu;. ,jid jkpo; Njrpak; kl;Lk; NgRk; FWk; NjrpathjpfsplKk;> rpq;fs ,dntwpf; fl;rpfsplKk;> K];yPk; kf;fs; kj;jpapy; cs;s FWfpa ,dthj> kjthjr; rpe;jidAld; nraw;gLk; gjtp ntwp gpbj;jtu;fsplKk; vjpu;ghu;f;f KbahJ. Mdhy; ,dthjk; NgRk; Ntl;ghsu;fis kf;fs; ,dk; fz;L epuhfupf;Fk; epyikfs; NkNyhq;fp ,Ug;gJ xU MNuhf;fpakhd epyikfNs?
60 tUlfhyk; epytpte;j gpw;Nghf;F jyikia jkpo; kf;fs; kj;jpapy; ,Ue;J xU tUlj;jpy; Jhf;fp tPrp KOikahf mfw;w KbahJ. rpwg;ghf fle;j 30 tUlkhf Gypfspd; Jg;ghf;fpfspd; kj;jp;apy; xU jiyg;gl;rkhd nra;jpfisAk;> fUj;Jf;fisAk; kl;Lk; Cl;b %isr;ryitapy; ,Uf;Fk; kf;fis xU tUlj;jpw;Fs;; njspTgLj;jp khw;wpaikf;f KbahJ. Mdhy; rpwpa Ml;lj;ij fhz itf;f KbAk;. ,t; Ml;lk; vjpu;fhyj;jpy; gyij khw;wpaikf;fj;jhd; Nghfpd;wJ. rpwg;ghf jkpo; kf;fs; kj;jpapy; epytp te;j VfNghf jyik> rpe;jidia> nraw;ghl;il cilj;njwpag; Nghfpd;wJ. xU fjk;gkhd epiyapy; vw;glg; NghFk; jkpo; ghuhSkd;wg; gpuepjpfspd; nraw;ghl;il xOq;FgLj;jp kf;fs; eyd;fis Kd;dpiyg;gLj;Jk;> r%g; gpuQ;iQAs;s xU nghJ Ntiyj;jpl;lj;jpd; mbg;gilapy; Kd;Ndhf;fp efu itg;gjpy;jhd; ,jd; ntw;wpapd; msT mikag; Nghfpd;wJ. mJ vg;gb ,Ug;gpDk; 60 tUlk; epytptUk; jkpo; Nkl;Lf;Fb ghuhSkd;w VfNghfj;ij tpl ,J Kw;Nghf;fhdjhfTk;> MNuhf;fpakhdjhfTk; ,Uf;Fk;.
2

புதன், 31 மார்ச், 2010

ஐ.ம.சு.மு 65% வாக்குகளால் வெற்றியீட்டும்; களனி பல்கலை கருத்துக்கணிப்பில் தகவல்

ஐ.ம.சு.மு 65% வாக்குகளால் வெற்றியீட்டும்; களனி பல்கலை கருத்துக்கணிப்பில் தகவல்
களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு, நாடளாவிய ரீதியில் நடத்திய கருத்துக்கணிப்பின் பிரகாரம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 65 வீத வாக்குகளையும் ஐக்கிய தேசிய முன்னணி 28 வீத வாக்குகளையும் பெறும் என அறிவிக்கப்படுகிறது.

கருத்துக்கணிப்பின் பிரகாரம் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு எந்தவித ஆசனங்களையும் பெறாது என களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு கலாநிதி ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, வடக்கு, கிழக்கு உட்பட சகல தேர்தல் தொகுதிகளிலும் நடத்திய சுயாதீனமான கருத்துக் கணிப்பில் பல்வேறு வயது மட்டங்களைச் சேர்ந்த 16 ஆயிரம் பேர் உட்படுத்தப்பட்டனர். நாடு முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினை வெற்றிபெறும் கட்சி எது என்பது உட்பட 12 கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நடத்திய கருத்துக்கணிப்பை விட இம்முறை தேர்தலில் மக்களின் ஆர்வம் குறைவாகக் காணப்பட்டது. நாடு முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் மக்கள் திருப்தி தெரிவித்தனர்.

நாம் நடத்திய கருத்துக் கணிப்பின் படி ஐ.ம.சு.முன்னணி 129 ஆசனங்களையும் ஐ.தே. முன்னணி 55 ஆசனங்களையும் வடக்கு, கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் 12 ஆசனங்களையும் பெறும். இதன்படி ஐ.ம.சு.முன்னணி 16 அல்லது 17 தேசியப் பட்டியல் ஆசனங்களை பெறலாம். இந்தக் கணிப்பு தேர்தல் தினமாகும் போது 1-5 வீதங்களினால் கூடிக் குறையலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாம் நடத்திய கணிப்பீடுகள் பெருமளவு ஒத்ததாக அமைந்தன.

இந்தப் பெறுபேறுகளின்படி ஐ.ம.சு. முன்னணி சுமார் 145 ஆசனங்களைப் பெற்று 2/3 பெரும்பான்மை பலத்திற்கு நெருக்கமான அதிகாரத்தை பெறும்.

ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறும் தேர்தல் முடிவுகளின் சரியான பிரதியாக இந்த முடிவு அமையாது. 95 வீதம் இதனை ஒத்ததாகவே முடிவு அமையும்.

Mr.Varadaraja Perumal return to Lanka

Mr.Varadaraja Perumal,Ex chief minister of north and eastern provincial government of Sri lanka has return to Sri lanka.
According to historian's this government was only best option ever provided to tamils.But as usual, tamils in lanka mislead by tigers and sabotage his elected government with the help of then the president Premadasa.This opportunity was lost for ever.
We hope that "people who instrumental to bring his government down " has to admit their historical blunder at least now.
thanks to  www.newsji.blogspot.com

செவ்வாய், 30 மார்ச், 2010

வரதட்சணைக் கொடுமை - மாமனார், மாமியார், நாத்தனார் கைது- கணவர் ஓட்டம்

சென்னையில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண்ணின் கணவர் தலைமறைவாகி விட்டார்.

சென்னை கீழ்ப்பாக்கம் ஆம்ஸ்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அருண் அகர்வால். இவரது மகள் பிரியா அகர்வால் (23). இவருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ரவீந்தர் அகர்வால் மகன் சுனில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ரவீந்தர் அகர்வால் ஜவுளிக் கடை அதிபராவார்.

ரூ. 5 கோடி செலவில் மகளைக் கல்யாணம் செய்து கொடுத்திருந்தார் அருண் அகர்வால். திருமணத்துக்குப் பின் பிரியா அகர்வால் ஆந்திராவில் கணவர் குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் பிரியாவிடம் அவரது மாமனார் குடும்பத்தினர் ரூ. 2 கோடி வரதட்சணை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தி வந்தனர்.

அவர்களது கொடுமை தாங்க முடியாமல் பிரியா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில், வரதட்சணை கொடுமை குறித்து தனது பெற்றோருடன் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஆந்திரா விரைந்தனர். அங்கு ரவீந்தர் அகர்வால், மாமியார் வந்தனா, நாத்தனார் ஷில்பா ஆகியோரைக் கைது செய்தனர். சுனில் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

இறுதி யுத்தத்தின் போது வங்கிகளின் பெட்டகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகள

வன்னியில் இறுதி யுத்தத்தின் போது வங்கிகளின் பெட்டகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகள் என்பன பாதுகாப்பாகவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமை வேட்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிரிந்துவத்தை பிரதேச வங்கி ஊழியர்களின் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் இன்று காலைபேசிய அவர், வன்னியிலிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள், பணம் என்பன பாதுகாப்புப் படையினரால் கையளிக்கப்பட்டபோது அது தொடர்பான கணக்கெடுப்புக்கள் நடாத்தப்பட்டு அவை பாதுகாப்பாக இரு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்செயற்பாடானது உலகிற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் நாம் அவற்றை உரிய முறையில் கையாண்டுள்ளோம். எமது செயற்பாடுகளையிட்டு வன்னி மக்கள் திருப்தியடைந்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 36,354 வாக்குகள் வித்தியாசத்தில்

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 36,354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் மொத்தம் 77,669 வாக்குகள் பெற்றார்.

பாமக வேட்பாளர் தமிழ்க்குமரன் 41,285 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

அதிமுக வேட்பாளர் அன்பழகன் 26,787 வாக்குகளும்
தேமுதிக வேட்பாளர் காவேரி வர்மன் 11,406 வாக்குகளும் மட்டுமே பெற்று டெபாசிட்டையே இழந்தனர்.

பதிவான மொத்த ஓட்டுக்களில் 6ல் ஒரு பங்கு ஓட்டுக்களை வாங்காததால் அதிமுக, தேமுதிகவின் டெபாசிட் காலியானது.

மேலும் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட 27 சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.

இத் தொகுதியில் உள்ள 2,01,008 வாக்காளர்களில்,​​ 84.95 சதவீதம் பேர் வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது
கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பதிவானதை விட 13 சதவீதம் அதிகமாகும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட
பெரியண்ணன் 74,109 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் 47,177 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் தனபாண்டி 10,567 வாக்குகளும் பெற்றனர்.

இம்முறை அதிமுகவின் வாக்கு வங்கி பெருமளவில் சரிந்து போய்விட்டது. அந்தக் கட்சி 20,390 வாக்குகளை இழந்து டெபாசிட்டையும் பறி கொடுத்துள்ளது.

அதே நேரத்தில் தேமுகவின் வாக்குகள் 839 அதிகரித்துள்ளது. ஆனாலும் அக் கட்சியின் டெபாசிட் இழப்பு தொடர் கதையாகியுள்ளது. கடந்த தேர்தலிலும் இங்கு தேமுதிக டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 29 மார்ச், 2010

இந்த நிம்மதியைக் கெடுக்காமல் விட்டால் போதும்.

பொதுதேர்தலில் யாழ் .மக்களின் உணர்வலைகள்.28.03.10
தேர்தல் வந்திருக்கிறது ஒரு வகையில் சந்தோஷம் தான். எங்களுக்கு விரும்பியவர்களுக்கு இந்தத் தடவை நாங்கள் வாக்களிக்கலாம். கனகாலத்துக்குப்பிறகு இந்த முறைதான் இப்படி ஒரு தேர்தலில் வாக்களிக்கப் போகிறோம்.
சனங்கள் எல்லாம் வாக்களிக்க வேணும். அப்பதான் எங்கட சமூகம் வளர்ந்திருக்கிறது என்று தெரியும்.
நாங்கள் எங்கட உரிமையை விடக்கூடாது.  எங்களுக்கு வருகிற சந்தர்ப்பங்களை நாங்கள் எதற்காக இழக்க வேணும்? நாங்கள் வாக்குப் போடா விட்டால் போடாமல் விட்டவர்களுக்கு சிறப்பாக எதுவும் கிடைக்கப் போறதில்லை. நாங்கள் வாக்களித்தால்தான் எங்களுக்குப் பொருத்தமான தலைமைகளை தெரிவு செய்யலாம். வாக்களிக்காமல் விட்டால் எங்களுக்குப் பொருத்தமில்லாத தலைமைகள் சில வேளை வந்தாலும் வரக்கூடும். அப்படி வந்தால் பிறகு என்னதான் செய்ய முடியும்? ஆகவே, கட்டாயம் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்று விரும்பகிறேன் என்றார்  ஒரு பெண் (விபரம் குறிப்பிட விருப்பவில்லை)
சுப்பிரமணியம் (பருத்தித்துறை)
ஓய்வுபெற்ற மின்சார சபை உத்தியோகத்தர் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் இருக்கின்ற நிலைமையில் இப்ப இந்தத் தேர்தல் தேவையில்லை. முதலில் எங்களுக்கு ஒரு நல்ல நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தித் தரவேண்டும். அதற்குப் பிறகுதான் தேர்தலை அரசாங்கம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் அடுத்தடுத்து தேர்தலை வைத்து எங்களை ஏமாற்றப் பார்க்கிறது.
இந்தத் தேர்தலை நாங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது எங்களுக்கு எந்த நன்மையையும் தராமல்தான் இருக்கப்போகிறது. ஆனால், என்னைப் போல பலருக்கும் தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை. அப்படி வாக்களித்தாலும் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியவில்லை.  இப்படி ஒரு நிலைமையை நான் என் வாழ்நாளில் காணவேயில்லை என்றார்.
வே. சுப்பிரமணியம் (அராலி கிழக்கு) கருத்துக் கூறுகையில்,

தமிழர்களுக்கு என்று இனி ஒரு தலைமை வந்தால்தான் நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம். இப்போது எங்களுக்கு யார் ஒரு நல்ல தலைமை இருக்கிறதென்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஆளுக்கு ஆள் குத்துப்படுகிறார்கள். பிரச்சினைப்படுகிறார்கள்.  இந்த நிலையில் யாரை நம்புவது, எதை நம்புவது?
எனக்குத் தெரிந்தவர்கள் என்று நான்குபேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அப்படியென்றால், நாங்கள் யாருக்கு வாக்களிப்பது? அதை விட இதில் யாருக்குப் போட்டுத்தான் என்ன ஆகப் போகிறது? ஏதோ சின்னப் பெடியளின் விளையாட்டுப் போல கண்டவன் நிண்டவன் எல்லாம் போட்டி போடுகிறான். போற போக்கில ஊருக்குள்ள வாக்குப் போடவே ஆளில்லாமல் எல்லோரும் போட்டிபோடுவாங்கள் போல இருக்கிறது.
தெருவில் பார்த்தீர்கள் என்றால் தெரியும் எவ்வளவு காசை இப்படி வீணாக இறைச்சுக் கொட்டியிருக்கிறார்கள் என்று.   யாருக்கு மனச்சாட்சி இருக்கிறது?   இந்தப் பணத்தை வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொண்டு போய் உதவியிருக்கலாம். என்ன இருந்தாலும் வெளியில் இருந்து வந்த ஆக்களைவிட எங்களுக்கு எப்பவும் உதவிய மகேஸ்வரனை ஆதரிக்கலாம் என்று நினைக்கிறேன்.
கஜேந்திரன் (கொடிகாமம்)38 வயதுஆசியர்

எங்களைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் ஒரு சோதனைக்கட்டமாகவே வந்துள்ளது. எல்லோரும் தவறு விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மக்களுடைய மனநிலை என்ன, அவர்களுடைய தேவை என்ன என்று அறிவதில் எவருக்குமே அக்கறை இல்லை. இதற்குக் காரணம் இவர்கள் எல்லோரும் நீண்டகாலமாக மக்களுடன் தொடர்பில்லாமல் இருந்து விட்டனர்.   இப்போதுள்ள நிலைமையில் அரசாங்கத்துக்குத்தான் நன்மைகள் அதிகரித்துக் கொண்டு போகிறது. அரசாங்கத்துக்கான ஆதரவு வாக்குகள் அப்படியே இருக்கப் போகிறது.

சிலவேளை இன்னும் அது கூடலாம். அதே வேளை தமிழ்த் தேசியத்துக்கான வாக்குகள் உடைந்து மூன்றாகச் சிதறப்போகின்றன. இதற்கு, முன்னர் போல இனியும் மக்களுக்கு உதவிகளைச் செய்து கொள்ளாமல், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றாமல் தமிழ்த்தேசியத்தைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்க முடியாது.  அப்படி உதவி செய்து கொண்டு உரிமைக்கான அரசியலைப் பற்றிக் கதைத்தால் எந்தச் சக்தி வந்தாலும் எங்களை அசைக்க முடியாது என்றார்.
சிவகுமார் முள்ளியவளை (தற்போது கோண்டாவிலில் வசிக்கிறார்)

தேர்தல் வந்திருக்கு என்று சொல்லவே சிரிப்புத்தான் வருகிறது. அதில் போட்டியிடுகிற ஆட்களைப் பார்க்க இன்னும் சிரிப்பாகவே இருக்கிறது. நான் யாருக்கும் வாக்களிக்கவே போவதில்லை.  வன்னியில் நாங்கள் பட்ட பாட்டுக்கு இப்பதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறம்.   இந்த நிம்மதியைக் கெடுக்காமல் விட்டால் போதும்.

இப்போது தேர்தலில் வாக்களிக்கக் கூடிய மனநிலை எங்களுக்கு இல்லை. அதை விட எங்கட வாக்கை எங்கே போய் இந்த முறை அளிக்கவேண்டும் என்றும் தெரியவில்லை.
நாங்கள் குடும்பமாகவே வாக்களிக்கப் போவதில்லை. முதலில் எங்கட ஊருக்குப் போகவேணும். அதுக்குப் பிறகுதான் எதுவும் என்றார்.
விமலராணி (பெண்) கோண்டாவில்.நாங்கள் கட்டாயம் வாக்களிப்போம். எங்களுக்கு விருப்பமான ஒரு தரப்பக்குத்தான் வாக்கு போடப்போகிறோம். ஆனால் அதை வெளிப்படையாக நாங்கள் சொல்ல விரும்பவில்லை.    இன்னும் எங்களுக்குத் தேவைகள் நிறைய இருக்கின்றன. நாட்டுப் பிரச்சினை இன்னும் தீரவேயில்லை. அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டே போகிறது. நாங்கள் எங்கட வாக்குகளால் எங்கட விருப்பங்களைத் தெரிவிக்க வேணும். யாழ்ப்பாணத்தில் தான் போட்டியிடுகிற வேட்பாளர்களின் தொகை அதிகம் என்கிறார்கள். யாழ்ப்பாணத்தில்தான் வாக்களிப்பவர்களின் தொகையும் அதிகம் என்று வரலாறு சொல்ல வேணும்.
திருக்குமார் ( சாவகச்சேரி)நான் பொதுவாக எந்த அபிப்பிராயம் சொல்ல விரும்பவில்லை. என்னுடைய வீடு இன்னும் என்னுடைய கைகளுக்குக் கிடைக்கவில்லை. ஒன்றுக்கு இரண்டு வீடுகள் எனக்கு உண்டு. ஆனால் நான் யாழ்ப்பாணத்தில் இப்ப வாடகை வீட்டில் இருக்கிறேன். என்னுடைய வீட்டுக்குப் போகும் ஒரு நிலை வந்தால்தான தேர்தலுக்கு வாக்களிப்பதைப் பற்றிச் சிந்திக்க முடியும்.
என்னுடைய வீட்டை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காகவே நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அந்த அயலில், என்னுடைய வீட்டில் இன்னும் படையினர் நிலை கொண்டிருக்கிறார்கள்.  முதலில் இந்த நிலை மாறட்டும். பிறகு தேர்தலைப் பற்றி யோசிக்கலாம் என்றார்.
பெண் (வயது 32)ஊர்காவற்றுறை நீண்ட காலத்துக்குப் பிறகு ஊருக்குப் போயிருக்கிறம். இவ்வளவு காலம் யாழ்ப்பாணத்தில்தான் இருந்தோம்.    தீவுப் பகுதியைப் பொறுத்தவரையில் அங்கே எல்லாக் கட்சிகளும் வருவதில்லை. ஒன்றிரண்டு கட்சிகள்தான் வந்திருக்கின்றன. 
அந்தப் பகுதியில் யாழ்ப்பாணத்தைப் போல சனத்தொகையும் அதிகம் இல்லைதான். அதனால் தானோ என்னவோ தெரியவில்லை, யாழ்ப்பாணத்தைப்போல போட்டிகள் குறைவு.  அங்க தனிய ஒரு கட்சிதான் நிற்குது, அது ஈ.பி.டி.பி.தான் ஏன் மற்றக் கட்சிகள் வரவில்லை என்று தெரியவில்லை. 
நாங்கள் கனகாலத்துக்குப் பிறகு வாக்களிக்கப் போகிறோம் என்கிறது ஒரு மகிழ்ச்சிதான்.
சுதா சங்குவேலி 25 (பிரதேச செயலக உத்தியோகத்தர்.)நாங்கள் எங்களுக்கென்றொரு அடையாளத்தோடு எப்பவும் இருக்க வேணும். என்னதான் சோதனைகள் வந்தாலும் தளரக்கூடாது. இப்ப வந்திருக்கிறதும் ஒரு சோதனைக் காலம் தான்.  தமிழருக்கு எப்பவும் சோதனைக்காலம்தான்.  ஆனால், சனங்களுக்குத் தேர்தலில் அக்கறை இல்லை. எனக்கும் பெரிசா அக்கறை இல்லை தான். ஆனால் வாக்களிப்பதாக இருந்தால்.  அது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குத்தான்.  சரியோ பிழையொ இந்தத் தடவை ஒருக்கால் போட்டுப் பார்ப்போம்.
ஆனால், மக்களைத் திசை திருப்புவதற் கென்றே ஊர் ஊராக ஏராளம் குழுக்கள் இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் இந்தமுறை வாக்களிக்க மாட்டார்கள் போலவே தெரிகிறது.   எங்கள் வீட்டில் கூட வாக்களிப்பதா இல்லையா என்று போராட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது. எங்கள் தங்கை தனக்குப் படிப்பித்த ஆசியர் ஒருவர் தேர்தலில் நிற்பதால் அவருக்கே வாக்களிப்பதாகச் சொல்கிறாள்.  நான் இன்னொரு கோணத்தில் சிந்திக்கிறேன்.  இப்படித்தானே பல இடங்களிலும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

ஞாயிறு, 28 மார்ச், 2010

் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்'.. ஒரு காலத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ரெட்டி சகோதரர்கள், தற்போது, தங்கள் சுரங்கம் அமைந்துள்ள இடங்களுக்கு கூட ஹெலிகாப்டரில் தான் செல்கின்றனர்.

பெல்லாரி :கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களின் சட்ட விரோத சுரங்கத் தொழிலால், 4,500 எக்டேர் பரப்பளவிலான விளைநிலம், பாலைவனமாக மாறிப் போய் விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவின் பெல்லாரி, ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள், சுரங்க மாபியாக்களின் சுரண்டலால் முழுவதும் பாழ் பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் இம்மாநில எல்லையில் உள்ள ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டங்களில் ஏராளமான கனிமச் சுரங்கங்கள் உள் ளன. இங்கு எடுக்கப்படும் மணல்களில் இரும்புத் தாதுப் பொருட்கள் அதிகம் உள்ளன. இவற்றுக்கு சர்வதேச அளவில் கடும் கிராக்கி நிலவுகிறது.இந்த பகுதியில் தான் கர்நாடக அமைச்சர்களும், சுரங்கத் தொழில் அதிபர்களுமான கருணாகர ரெட்டி, ஜனார்த்தன் ரெட்டி ஆகியோரின் சுரங்கத் தொழில் கொடி கட்டி பறக்கிறது. இங்குள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் மற்றும் விளை நிலங்களில், சுரங்கத் தொழில் ஏகோபித்த செல்வாக்குடன் நடக்கிறது. ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு, குறுக்கு வழியில் இங்குள்ள கனிம வளம் சுரண்டப் பட்டு வருகிறது.


கடந்த 2008ல் சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. இதற்கான ஏற்பாட்டுக்காக, அங்கு பெருமளவில் இரும்புத் தாதுப் பொருட்கள் தேவைப்பட்டன. இதனால், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, இரும்புத் தாதுப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது.டன்னுக்கு 100 ரூபாய் என்ற அளவில் இருந்த இதன் விலை, 5,000 ரூபாயாக அதிகரித்தது. இதனால், சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட மாபியாக்கள், டன் கணக்கில் இரும்புத் தாதுக்களை ஏற்றுமதி செய்து, கொள்ளை லாபம் பார்த்தனர். கடந்த சில ஆண்டுகளாக, இந்த சுரங்கத் தொழில், உச்சகட்ட வளர்ச்சியை எட்டியுள்ளது.ரெட்டி சகோதரர்களின் சட்ட விரோத சுரங்கத் தொழிலால், இயற்கை வளம் மிக்க இப்பகுதியின் சுற்றுச்சூழல், மிகப் பெரிய அளவில் மாசடைந்து விட்டதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


விளை நிலங்கள் பாழ்:இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:ரெட்டி சகோதரர்களின் சுரங்கத் தொழிலால், 120 மலைக் குன்றுகள், ஐந்து லட்சம் மரங்கள், 2,500 எக்டேர் வனம், 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாழ்பட்டு போய் விட்டன. மேலும், நான்கு நீரோடைகள், 17 ஏரிகள், 28 நீர்க்குட்டைகளும் அழிக்கப்பட்டு விட்டன. கடந்த 50 ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து நடந்து வரும் சுரங்கத் தொழிலுக்கு, இந்த இயற்கை வளங்களை பலி கொடுக்க வேண்டியதாகி விட்டது. சுரங்கங்களைச் சுற்றி அமைந்துள்ள 45 ஆயிரம் எக்டேர் பரப்பளவிலான விளைநிலம், வறட்சி பகுதியாகி விட்டது.இவ்வாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


தொழிற்சாலையாக மாறிய வனம்:சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.ஆர்.ஹிராமத் கூறியதாவது:சுரங்கத் தொழிலுக்காக பாறைகள், தொடர்ந்து வெடி வைத்து தகர்க்கப்படுகின்றன. இதனால், பூமிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் நிலையற்ற தன்மையும் உருவாகிறது. அந்த பகுதியில் மரம், செடி, கொடிகள் அழிந்து போய் விட்டன. விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஒரு காலத்தில் பசுமையாக காட்சியளித்த அந்த பகுதி, தற்போது ஜெலட்டின் குச்சிகள் ஏற்படுத்தும் தூசியால், செம்மண் வடிவில் வறண்டு போய் காணப்படுகிறது. சுரங்கத் தொழிலுக்காக ஈடுபடுத்தப்படும் கனரக இயந்திரங்களால், அமைதியான அந்த பகுதி, தற்போது தொழிற்சாலையாகவே மாறிப் போய்விட்டது.இவ்வாறு ஹிராமத் கூறினார்.


தினமும் 5,000 லாரியில் ஏற்றுமதி:ஒரு லாரி இரும்புத் தாது விலை 40 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தினமும் 5,000 லாரிகளில் இரும்புத் தாது மற்றும் இதர கனிம வளங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. சுரங்கத் தொழிலில் பெரிய அளவில் ஈடுபடுவோருக்கு, இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 8,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், இதற்காக அவர்கள் அரசுக்கு ராயல்டியாக வெறும் 80 கோடி ரூபாய் மட்டுமே செலுத்துகின்றனர்.


மோசடி எப்படி?சட்டவிரோத சுரங்கத் தொழில், மிகவும் நேர்த்தியாக நடக்கிறது. முதலில், சுரங்கத் தொழில் நடத்த அனுமதியில்லாத வனப் பகுதியில், மணலை தோண்டி எடுக்கின்றனர். பின்னர், ஏற்கனவே செயல்படும் சுரங்கங்களின் பெயருக்கு, அவற்றின் உரிமையை மாற்றி, தோண்டி எடுத்த தாதுப் பொருட்களை, வாகனங்களில் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியில் கொண்டு வந்து விடுகின்றனர்.இதன் பின், பெரிய வர்த்தகர்களிடம் இவற்றை ஒரு டன் 200 ரூபாய் என்ற அளவுக்கு விற்று விடுகின்றனர். ஆனால், இதே தாதுப் பொருட்கள் மூலம் அந்த பெரிய வர்த்தகர்கள், ஒரு டன்னுக்கு 1,800 ரூபாய் வரை வருமானம் பார்த்து விடுகின்றனர்.


இதுகுறித்து கர்நாடகா தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த புத்தனைய்யா என்பவர் கூறுகையில், 'சண்டூர் என்ற ஒரு பகுதியில் மட்டும் 80 ஆயிரம் டன் இரும்புத் தாதுப் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. உலகின் எந்த ஒரு பகுதியிலும், இத்தனை பெரிய அளவுக்கு இரும்புத் தாது பொருட்கள் எடுக்கப்படுவது இல்லை' என்றார்.சட்ட விரோத சுரங்கத் தொழிலை, எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை, சுரங்க மாபியாக்கள் செய்துள் ளனர். தங்களுக்கு சொந்தமான சுரங்கப் பகுதிக்குள், யாரும் எளிதில் நுழைந்து விடாமல் இருப்பதற்காக, ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களை அவர்கள் நியமித்துள்ளனர்.


ஆயிரம் கோடி ரூபாய் சொத்து?கடந்தாண்டு, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஜனார்த்தன் ரெட்டி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'எனக்கும், என் மனைவிக்கும் 115 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது. எங்களுக்கு சொந்தமாக ஒரு ஹெலிகாப்டர் உள்ளது. இதை 15 கோடி ரூபாய்க்கு வாங்கினேன். இதுதவிர, நான்கு கோடி ரூபாய்க்கு டீலக்ஸ் பஸ், ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள காரும் உள்ளது' என்றார்.சட்டசபையில் ஒருமுறை அவர் கூறுகையில், 'எங்களுக்கு 100 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துள்ளதாக சிலர் கூறி வருகின்றனர்; இது தவறு. எங்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்' என்றார். ஒரு காலத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ரெட்டி சகோதரர்கள், தற்போது, தங்கள் சுரங்கம் அமைந்துள்ள இடங்களுக்கு கூட ஹெலிகாப்டரில் தான் செல்கின்றனர்.


சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு : சுரங்கத் தொழிலில் கொடிகட்டி பறக்கும் ரெட்டி சகோதரர்களுக்கு, சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய உத்தரவால், பெரும் அடி விழுந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில், 'ஆந்திரா - கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள சுரங்கங்களில் இருந்து, இரும்புத் தாதுப் பொருட்கள் வெட்டி எடுப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.ஓபுலாபுரம் பகுதி சுரங்க உரிமையாளர்களால், அங்குள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பது குறித்து இந்திய சர்வே அதிகாரிகள், ஏப்ரல் 6ம் தேதி கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்' என அறிவித்தது. இதனால், ரெட்டி சகோதரர்கள் வட்டாரம் அதிர்ந்து போயிருப்பதாக, கர்நாடகா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவில் உள்ள தமிழ் இளைஞர்களிடையே முன்பை விட இப்போது அதிக அளவில் குற்றச் செயல்கள் அதிகரித்து


தமிழ் சினிமா [^]ப் படங்களில் இடம் பெறும் வன்முறை [^]க் காட்சிகளால் மலேசியா வாழ் தமிழர்களிடையேயும் அது பரவுகிறது என்று மலேசிய நாட்டின் பினாங்கு மாகாண நுகர்வோர் சங்க கல்வி அதிகாரி சுப்பாராவ் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் சினிமா [^]க்களில் பெருமளவில் வன்முறை உள்ளிட்டவை இடம் பெறுகிறது. இதைப் பார்க்கும் மலேசியா வாழ் தமிழர்கள், குறிப்பாக இளைஞர்கள், அந்த வன்முறைப் பாதைக்குத் திரும்பும் அபாயம் அதிகரித்து வருகிறது.

தொட்டதெற்கல்லாம் அடிதடி, வன்முறை எனறு அவர்கள் இப்போது இறங்கி விடுகின்றனர். இதற்கு தமிழ் சினிமாப் படங்கள்தான் காரணம். அதில் வரும் ஹீரோக்கள் பெருமளவில் வன்முறைக் காட்சிகளில் இடம் பெறுவதால் அதைப் பார்த்து இங்குள்ள இளைஞர்கள் கெடும் வாய்ப்பு ஏற்படுகிறது.

மலேசியாவில் உள்ள தமிழ் இளைஞர்களிடையே முன்பை விட இப்போது அதிக அளவில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது கவலை தருகிறது. இதற்கு தமிழ் சினிமாப் படங்கள்தான் முக்கிய காரணம்.

இதுபோன்ற நிலையை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, அரியல்வாதிகளும், அரசும், தமிழர் அமைப்புகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதிலேயே காலத்தை வீணடித்து வருகின்றன என்றார்.

மலேசியாவிலிருந்து வெளியாகும் மலேசிய நண்பன் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் சுப்பாராவ்.

மலேசியாவில் வாழும் வம்சாவளி இந்தியர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
இரணமடு பகுதியில் விடுதலைப் புலிகள் அமைத்திருந்த தற்காலிக விமானதளத்தை பயிற்சி மற்றும் ஆய்வு வளாகமாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாம்.

வடக்கு இலங்கையில் இரணமடு என்ற இடத்தில் வனப்பகுதிக்குள் அருமையான விமானதளத்தை ஏற்படுத்தியிருந்தனர் விடுதலைப் புலிகள். இங்கிருந்துதான் அவர்களின் விமானப்படை செயல்பட்டு வந்தது. இங்கிருந்து கிளம்பிச் சென்ற குட்டி விமானங்கள்தான் கொழும்பு நகரைச் சுற்றிலும் பலமுறை தாக்குதல் நடத்தி விட்டு வெற்றிகரமாக திரும்பி வந்தன.

உலகிலேயே வான் வழித் தாக்குதலை நடத்திய போராளி இயக்கம் என்ற பெயரை விடுதலைப் புலிகளுக்குப் பெற்றுத் தந்த இந்த விமானதளம் தற்போது இலங்கை விமானப்படையின் ஆய்வு மற்றும் பயிற்சி வளாகமாக மாறப் போகிறதாம்.

இதுகுறித்து இலங்கை நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் ஜியோகிராபிகல் தகவல் அமைப்பின் தலைவர் இந்திரசிரி என்பவர் கூறுகையில், இங்கு மிகப் பெரிய விமான ஆ

இத்தகைய தலை கீழான நிலைக்கு யார் காரணம் என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.


வீ.ஆனந்தசங்கரி உதயனுக்கு வழங்கிய செவ்வி இது.
கேள்வி: எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம்?
பதில்: நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. ஒரு காலத்தில் நாடாளுமன்றில் கௌரவமான கனவான்கள் அங்கத்துவம் வகித்தார்கள். அத்தகையவர்களோடு சேர்ந்திருந்தது பெருமையாக இருந்தது. ஆனால் இன்று அப்பிடியல்ல சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள்; கொலைகளுடன் தொடர்புடையவர்கள், தூள் ("குடு")  வியாபாரிகள் போன்ற சமூக விரோதிகள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கிறார்கள். நான் பல தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் பண உதவியோ, மதுபானங்களோ, யாருக்கும் கொடுத்தது கிடையாது. எனது சொந்தப்பணத்திலே தேர்தல் பிரசாரங்களினை மேற்கொண்டேன். ஆனால் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்தவர்கள் தோற்றுப் போன வரலாறும் இருக்கிறது. தேர்தல் காலமென்றபடியால் லொறிகளில் சைக்கிள்களை ஏற்றி வந்து மக்களுக்கு அன்பளிப்புச் செய்கிறார்கள். தைப்பதற்குக் கிழிந்த கந்தையைத் தவிர எதுவுமில்லாதவர்களுக்கு "தையல் மெஷின்' கொடுக்கிறார்கள். இந்நிலையில் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் நம்மத்தியில் உள்ளார்கள். இன்றைய சூழ்நிலையில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைப்பற்றி தைரியமாகப் பேசுபவர்கள் எவருமில்லை. பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு தமிழ் மக்களின் நேர்மையான பிரதிநிதியொருவர் தெரிவு செய்யப்படவேண்டும்.அந்தத்தகுதி எனக்கிருக்கிறது. ஆதலால் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
கேள்வி: நீங்கள் மூத்த அரசியல்வாதி என்ற ரீதியில் அரசியல் அனுபவம் நிறையவே இருக்கிறது. இந்நிலையில் இன்றைய தேர்தல் கள நிலைமைகள் எவ்வாறிருக்கிறது?
பதில்: தேர்தல் களநிலைமை எவ்வாறிருக்கிற தென்பதைவிட இத்தகைய தலை கீழான நிலைக்கு யார் காரணம் என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.தமிழ்க் கட்சிகளில் எந்தக் கட்சிக்கும் இரண்டு பேருக்குமேலே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படக் கூடாது என்ற சதித்திட்டத்திற்கு சிலர் தம்மையறியாமல் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். வந்தவர்கள், நின்றவர்கள் எல்லோரும் வேட்பாளர்கள். அவர்களில் சிலர் எதற்கு வாக்குக் கேட்கிறோம் என்று தெரியாமல் கேட்கிறார்கள். இத்தகைய கொள்கையற்ற வேட்பாளர்களுக்கு தேர்தலில் தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டவேண்டும். எது எப்படியிருப்பினும் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்கத்தவறின் வரலாறு காணாத அபத்தம் தமிழ் மக்களுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.
கேள்வி: எதுவுமே தெரியாது, ஏன் போட்டியிடுகிறோம் என்று கூட தெரியாமல் தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று கூறுகிறீர்களே!  புத்திஜீவிகள், இலக்கியவாதிகள் எல்லாம் சுயேச்சையாக போட்டியிடுகிறார்களே?
பதில்: இலக்கியவாதிகள், புத்திஜீவிகள் இவர்களெல்லாம் யார்? எமது மண்ணிலே எத்தனையோ இடர்கள், அவலங்கள் இடம்பெற்றன.மாணவர்கள், கல்விமான்கள் இளைஞர், யுவதிகள் எனப் பல்வேறு தரப்பினர் கொலைசெய்யப்பட்டும், கடத்தப்பட்டபோதும் இந்தப் புத்திஜீவிகள், இலக்கியகர்த்தாக்கள் எல்லாம் எங்கு போய் நின்றார்கள். மக்களின் அவலங்களைக் கண்டு கண்டிக்காது மௌனம் சாதித்துவிட்டு இப்போது வேட்பாளர்களாக எம் மக்கள் முன் வந்து நின்று வாக்குக் கேட்கிறார்கள்.இந்த வேட்பாளர்கள் யாரோ ஒருவரிடத்தில் சலுகைகளைப் பெற்று ஏவலாளராகவே செயற்படுகின்றனர். இத்தகைய நபர்களுக்கு காலம் பதில் சொல்லிக்கொள்ளும்.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கைகளில் இருந்து விலகிவிட்டதாக பரவலாக கதை அடிபடுகிறதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: தேசியம், சுயநிர்ணயம், மரபுவழித் தாயகம் இவையெல்லாம் உளுத்துப்போன சுலோகங்கள். எந்தத் தமிழனும் இதற்கு மாறானவன் அல்ல. இருப்பினும் கூட்டமைப்பினர் இந்தச் சுலோகங்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாடுகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 22 ஆசனங்களைப் பெற்ற கூட்டமைப்பு எம்.பிமார் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலாப்பயணங்களை மேற்கொண்டுவிட்டு தமது மக்களைப்பற்றி சிறிதளவேனினும் சிந்திக்காது இருந்து விட்டு தேர்தல் வந்தவுடன் மீண்டும் அதே கோஷங்களுடன் மக்களிடம் வாக்குக் கேட்டுவந்துள்ளார்கள்.காலத்துக்குக் காலம் பசப்பு வார்த்தைகளைக் கூறி இனியும் எம் மக்களை ஏமாற்றமுடியாது. அவர்கள் ஏமாறவும் மாட்டார்கள். உரிய நேரத்தில் உரியவர்களுக்கு சரியான ஆலோசனைகளை வழங்கத் தவறியமையால் பல்லாயிரக் கணக்கான மக்களின் சொத்தழிவுகளுக்கும், உயிர் அழிவுகளுக்கும் முழுப்பொறுப்பை யும் கூட்டமைப்பே பொறுப்பு ஏற்கவேண்டும்.
கேள்வி: கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கு பிரசாரத்துக்கு சென்றிருக்றீர்கள்? அங்குள்ள மக்களின் நிலை எவ்வாறுள்ளது?
பதில்: மிகவும் பரிதாபமான முறையில் அங்குள்ள மக்கள் தமது வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். நண்பர்கள் பலரைக் காணவில்லை, அங்கவீனர்கள், ஏழைகள் என எமது மக்கள் ஏதிலிகளாக உள்ளனர். மீள்குடியேற்றம் என்பது பெயரளவிலேயே நடைபெறுகிறது. இன்றும் கூட மக்கள் முகாம்களிலும், தமது உறவினர்களின் வீடுகளிலும் தங்கி உள்ளார்கள். கறல்கட்டி உக்கிப்போன சைக்கிள்களைத்தான் அங்கு வழங்குகிறார்கள். அதைக்கூட மக்கள் விழுந்தடித்து வாங்குகிறார்கள். உக்கிப்போன அந்தச் சைக்கிள்களை வழங்குவதில் கூட பெருமை தேடிக் கொள்ள எமது மண்ணில் அமைச்சர்களும் இருக்கிறார்கள்.
கேள்வி: வன்னி மக்களின் இத்தகைய அவலங்களை நீக்க நீங்கள் எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பீர்கள்?
பதில்: முதற் கட்டமாக வன்னியுத்தத்தில் இறந்தவர்கள் யார்? இருப்பவர்கள் யார்? என்ற விவரங்களைத் திரட்டுவேன். இழந்து போன உடைமைகளுக்கு முழு நஷ்ட ஈட்டையும் பெற்றுக்கொடுப்பது, தடுப்பு முகாமில் உள்ள இளைஞர், யுவதிகளின் விடுதலைக்குக் குரல் கொடுத்தல், காணாமற் போனவர்களின் விவரங்களை தேடிக்கண்டுபிடிப்பது, வருடக் கணக்கில் கல்வியை இழந்து நிற்கின்றவர்களின் வாழ்வை மேம்படுத்துவது, அங்கவீனர்களின் குறைபாடுகளைத் தீர்க்க உரிய வசதிகளை மேற்கொள்ளல், மக்களின் மீள்குடியேற்றம் ஆகிய விடயங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பேன்; எடுக்கவுள்ளோம். ஆளுநர் நியமனத்தை உடனடியாக நிராகரித்தேன்
கேள்வி: உங்களுக்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ வடமாகாண ஆளுநர் பதவியை வழங்கத் தீர்மானித்திருந்தாரே அதுபற்றி?
பதில்: வடமாகாண ஆளுநர் பதவிக்கு என்னைத்தெரிவு செய்துள்ளதாக ஜனாதிபதி தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு சொல்லியிருந்தார். நான் அதனை உடனடியாக நிராகரித்தேன். இந்த ஆளுநர் பதவியைப் நான் பெற்றுக்கொள்வதால் அது தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வுகாண எந்தவகையில் உதவும் என்று ஒரு கேள்வியையும் கேட்டேன். அத்துடன் ஜாதிக ஹெல உறுமய எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தருவதாகக் கூறியிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் என்னுடன் தொடர்புகொண்டு எனக்கு எம்.பி.பதவியும், அமைச்சுப் பதவியும் தருவதாகக் கேட்டிருந்தார். இவற்றையெல்லாம் நிராகரித்தேன். இத்தகைய பதவிகளை ஏற்றுக்கொள்வதால் அது தமிழர்களுடைய பிரச்சினைக்குத் எந்தவகையில் உதவும் என்று யோசித்தேன்; ஆராய்ந்தேன்;  அதனால் எதுவுமே நடக்கப்போவதில்லை என்று முடிவுசெய்து அந்தப் பதவிகள் அனைத்தையும் தூக்கியெறிந்து விட்டேன்!
கேள்வி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் எதிர்கால அரசியல் நகர்வுகள் எப்படியிருக்கும்?
பதில்: கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் தீர்வுத்திட்டமொன்றை முன்வைத்திருந்தேன். அதாவது இந்த நாட்டில் சமஷ்டி ஆட்சிமுறை, ஒற்றையாட்சிமுறையை விரும்பாதவர்களுக்கு ஏற்புடையதான தீர்வாகும். அதாவது இந்தியப் பாணியிலானது. அது சமஷ்டி முறையென்றும், ஒற்றையாட்சி முறையென்றும் விவரிக்கப்படுவதில்லை. இலங்கைப் பிரச்சினைகளில் அக்கறை கொண்டுள்ள தமிழ் நாட்டில் வாழும் ஆறு கோடி மக்களுக்கும் கூட ஏற்புடையதாக இருக்கும். நம் நாட்டு அரச சார்பிலும், எதிர்க்கட்சி சார்பிலும் செயற்படும் பல தலைவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் கத்தோலிக்க உயர்பீடத்தினர், பௌத்த பீடாதிபதிகள், கல்விமான்கள், தமிழ்சிங்கள புத்திஜீவிகள் அனேகரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்வாகும். இத்தகைய அரசியல் தீர்வு அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு அமையவேண்டும் என்று எதிர்காலத்தில் குரல் கொடுப்போம்.
கேள்வி: தற்போதைய யாழ்ப்பாண அரசியல் நிலைவரங்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்...?
பதில்: நாடு பற்றி எரிகிறது. நாடு எதிர்நோக்கும் ஆபத்துகளை உணராமல், சிந்திக்காமல் பதவிகளுக்காகவும், அற்ப சலுகைகளுக்காவும் போட்டியிடுகின்ற சுயேச்சைக் குழுக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த அன்பர்களே! உங்களை மன்றாட்டமாகக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற எண்ணத்தைக் கைவிடுவது பற்றி யோசியுங்கள். எம் மக்களை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்றுங்கள். இன்னும் காலம் கடந்து விடவில்லை. அதில் இருந்து வாபஸ் பெறுங்கள்.
இதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப்   பெறுவீர்கள். அத்துடன் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமது நிலைப்பாட்டை   மறுபரிசீலனை   செய்து இனத்தைக் காப்பாற்ற ஒன்றுபட்டு செயற்பட வருமாறும் அன்புடன் அழைக்கிறேன்.       
செவ்வி கண்டவர்:கவிநேசன