சனி, 12 நவம்பர், 2016

அருண் ஜெட்லி : நிலமை சரியாக 3 வாரம் ஆகலாம்! ம்ம்ம் அப்போலோகாரனும் இதைத்தானே சொன்னான்/

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததிலிருந்து, இந்தியா முழுவதும் நிதி நெருக்கடியும் பணப் பரிவர்த்தனையில் மாபெரும் முடக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், இன்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். “நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு மாபெரும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் ஆரம்பத்தில் சில நாட்களுக்கு சில சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும். நாட்டில் நிலவும் பணப் பரிவர்த்தனை மற்றும் நிதி நெருக்கடியை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் ஊழியர்கள் காலை முதல் இரவு வரை பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பல்வேறு பிரச்னைகளுக்கிடையே பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். நாடு முழுவதும் 2 லட்சம் ஏ.டி.எம்.கள் உள்ளன. இந்த ஏ.டி.எம்.களில் புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைக்க தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏ.டி.எம். மையங்களில் நிலவும் பணத் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய, மத்திய ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். ஏ.டி.எம்.களில் இயல்பான நடவடிக்கைக்கு இரண்டு வார காலம் ஆகலாம். அதுவரை, பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும். இதுவரை, 86% பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மொத்த டெபாசிட் ரூ.2 லட்சம் கோடி முதல் 2.25 லட்சம் கோடி வரை இருக்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மட்டும் 47,868 கோடி ரூபாய் டெபாசிட் ஆகியிருக்கிறது. இன்று 12.30 நிலவரப்படி, 58 லட்சம் பேர் எஸ்பிஐ வங்கியில் பரிவர்த்தனை செய்திருக்கிறார்கள். 22 லட்சம் பேர், 33 லட்ச ரூபாய் ஏ.டி.எம்.களில் எடுத்துள்ளார்கள். நாட்டின் நலன்கருதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை சில அரசியல்வாதிகள் பொறுப்பற்றமுறையில் விமர்சித்து வருகிறார்கள். நாட்டின் பாதுகாப்புக் கருதி இந்த அதிரடி நடவடிக்கை குறித்து முன்கூட்டி அறிவிக்கவில்லை. புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது போன்ற வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.  minnambalam.com

கருத்துகள் இல்லை: