சனி, 12 மார்ச், 2016

சத்குரு ஜாக்கி வாசுதேவுக்கு பாரத ஸ்டேட் வங்கி "1.15" கோடி நன்கொடை...மக்களின் பணம் மாபியா (வங்கி) கும்பல்களிடம்

யார் அப்பன் வீட்டுப் பணம்? நன்கொடையாம் நன்கொடை!

விஜய் மல்லியவுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆதரவு...பிசிநேஸ்ல நஷ்டம் வரதாய்ன் செய்யும்....கூட்டு களவாணிகள்

வியாபாரம் என்றால் நஷ்டம் வரதான் செய்யும் என தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் முன்னாள் பிரமதர் தேவே கௌடா.
வங்கிகளிடம் ரூ. 9000 கோடி அளவுக்கு கடன் வாங்கிய மல்லையா வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் நாட்டில் பெரும்பாலானோர் அவருக்கு எதிரான விமர்சனங்களை தொடுத்து வரும் நிலையில், முன்னாள் பிரதமர் தேவே கௌட அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
''விஜய் மல்லையா கர்நாடக மண்ணின் மைந்தன். மேலும், அவர் புகழ்பெற்ற குடும்பத்தை சேர்ந்தவர். வியாபாரத்தில் சில நேரங்களில் தவறுகள் நிகழலாம்'' என செய்தியாளர்களிடம் பேசிய கௌட கூறினார்.  தேவகவுடாவின் கட்சியால் ராஜ்யசபா எம்பியானவர் மல்லையா மட்டும் அல்ல சுப்ரமணியம் சாமியும் கூட தேவகவுடாவின் கட்சியால் ராஜ்யசபாவுக்கு ஒரு முறை  மற்றும் பாஜகவால் ஒரு முறையுமாக  தெரிவு செய்யப்பட்டவர்தான், இவர்கள்  எல்லாரும் கள்வர்களே

சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாணவர் சடலமாக மீட்பு

சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ் | படம்: ஜி.கிருஷ்ணசாமி.சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ் | படம்: ஜி.கிருஷ்ணசாமி. சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி படித்து வந்த மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்தின் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறந்த மாணவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.அபிநாத் என அடையாளம் தெரியவந்துள்ளது.
இது குறித்து சாய்ராம் கல்லூரி நிர்வாகி சாய்பிரகாஷ் லியோ முத்து கூறும்போது, "மாணவர் அபிநாத் எங்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மருத்துவராவதே அவரது லட்சியமாக இருந்துள்ளது. ஆனால், பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் அவர் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கிறார்.

கோயம்பத்தூரில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை. பின்னணியில் கல்லூரி நிர்வாகம்?

கடந்த இரண்டு நாட்களாக விக்னேஷின் செல்போன் மற்றும் அடையாள அட்டையை பறிமுதல் செய்து வைத்திருந்த கல்லூரி நிர்வாகம்...ஏன் ?
கோயம்பத்தூரை அடுத்த நிலம்பூரில், அமைந்துள்ளது கதிர் பொறியியல் கல்லூரி. இங்கு சிவில் என்ஜினீயரிங் பிரிவில் படிக்கும் விக்னேஷ் என்ற.ஏன்  மூன்றாமாண்டு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் வியாழனன்று இரவு 9 மணியில் கண்டெடுக்கப்பட்டது.
தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ், ஈரோட்டை சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர், கல்லூரி நிர்வாகம், மரணத்தை குறித்து தங்களுக்கு தெரிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, விக்னேஷின் தாயார் சாந்தி கூறுகையில், “ நான் புதன்கிழமை இரவு, எனது மகனுக்கு போனில் அழைத்தேன். அப்போது வார்டன் போனை அட்டன்ட் செய்து, அவனுக்கு ஒரு தேர்வு எழுத கொடுத்திருப்பதாகவும், அதனால் எல்லா செல்போன்களும், கல்லூரி நிர்வாகத்தால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஜெ.,வுக்கு பணத்துடன் தான் கூட்டணி: போட்டுத்தாக்கும் பழ.கருப்பையா

ஜெயலலிதாவின் ஆட்சி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில், இரண்டாவது கருத்து இல்லை. வலிமையான காளையால்தான், காலை ஊன்றி, நுரை தள்ளி, தலையை குனிந்து, மேட்டில் பார வண்டியை இழுக்க முடியும். ஆனால், வண்டிக்காரனும், பக்கத்தில் இருப்போரும், சக்கரத்தில் கை வைத்து, அதற்கு உதவுவதில்லையா?,'' என, 'மாஜி' எம்.எல்.ஏ., பழ.கருப்பையா தெரிவித்தார். நமது நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி: ஐந்து ஆண்டுகள் ஆளுங்கட்சியில், எம்.எல்.ஏ.,வாக இருந்துவிட்டு, பதவி காலம் முடிவடையும்போது, ஆளுங்கட்சிநடவடிக்கைகளை, கடுமையாக விமர்சிப்பது ஏன்?

டிராக்டர் கடன் அராஜகம்...அவமானத்தில் விவசாயி தற்கொலை! 9000 கோடி மல்லையாவுக்கு அரசு பாதுகாப்பு..ஏழை விவசாயிக்கு? ..

விகடன்,com : அரியலூர்: வாங்கிய கடனுக்காக டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்ட அதிர்ச்சியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் விளாங்குடி கைக் காட்டி அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி அழகர். தங்களது குடும்பத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை கொண்டுதான் ஜீவனம் நடத்தியிருக்கிறார்.
இவர், 2013-ம் ஆண்டு சோழ மண்டலம் ஃபைனான்ஸ் மூலமாக  கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார்.
வட்டியுடன் சேர்ந்து மொத்த தொகை 7 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாய். இதுவரை ரூ. 5 லட்சம் வரை கடன் அடைத்துள்ளார். டிராக்டரில் மணல் கொண்டு செல்ல அரசு கட்டுப்பாடுகளை விதித்ததாலும், வறட்சியின் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் சரிவர நடைபெறாததாலும், டிராக்டர் மூலம் வருமானம் ஈட்ட முடியாமல் மிகவும் சிரமத்தில் இருந்திருக்கிறார் அழகர்.

திருப்தியில் நித்தியானந்தா ரஞ்சிதா தம்பதிகள்/ சாமிகள் தரிசனம்

திருமலையில் உள்ள திருப்பதி எழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உட்பட 15 சீடர்களுடன்   சாமி தரிசனம் செய்தார். ரஞ்சிதா துறவி கோலத்தில் கழுத்தில் ருத்ராட்சம் மாலை, விபூதி அணிந்து வந்திருந்தார். அவர்களின் வித்தியாசமான தோற்றத்தைக் காண பக்தர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதிய தோற்றத்தில் சடை முடியுடன் காணப்பட்ட நித்யானந்தாவை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றனர்.அப்போது அவர் சிரித்து கொண்டே வெளியே சென்று விட்டார்.

மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை....தற்கொலை செய்துகொள்வேன் :

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் கோதைலட்சுமி (வயது 23). இவரது சொந்த ஊர் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை. இவருக்கும் அதே பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதி கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் மாயமாகினர். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இருவரையும் தேடிவந்தனர். அவர்களை புதுவை, கும்மிடிப்பூண்டி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.  வெறும் சாதாரண சட்டங்களை காரணம் காட்டி இருவரையும் பிரிப்பது சரியல்ல.  இது அவர்களுக்கு பிறக்கபோகும் குழந்தைக்கும் சேர்த்தே தண்டனை கொடுப்பது  போல் அல்லவா  இருக்கிறது? வெள்ளைக்காரன் காலத்து இ பி கோவை கட்டிக்கொண்டு அழுவதை நிறுத்தவேண்டும். மறுபரிசீலனை செய்யவேண்டும்  

சங்கரமடத்தின் உதவியை நாடியுள்ள ஜெயலலிதா....

விகடன்.com தே.மு.தி.க., தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க கட்சியினரின் மாநாடுகள் தொடர்ந்து காஞ்சி மாவட்டத்தில் நடந்ததைச் சொல்கிறீரா?’’ ‘‘அதைச் சொல்லவில்லை. காஞ்சியில் இன்னொரு அதிரடியும் நடந்ததாகச் சொல்கிறார்கள். மார்ச் 2-ம் தேதி, காஞ்சி சங்கர மடத்துக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மடத்துக்குள் முக்கியமானவர்களைத் தவிர, மற்றவர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மேல் அனுமதிக்கப் படவில்லை. பீடாதிபதிகளுக்கு நெருக்கமானவர்கள், ‘ஏதோ நடக்கப்போகிறது... ஆனால், அது என்ன’ என்பது தெரியாமல், நீண்ட நேரம் காத்துக் கிடந்தனர். அப்போது, மடத்தை நோக்கி ஒரு கார் வந்தது. ஜெயேந்திரர், விஜயேந்திரரின் காவி நிற இன்னோவா கார்கள் மட்டும் நிறுத்தப்படும் இடம் வரை, அந்த கார் வந்தது. மடத்துக் காவலர்கள் அதைத் தடுக்கவில்லை. பவ்யமாக வணங்கி வழிவிட்டனர். காரில் இருந்து இறங்கியவர்கள் இரண்டு பெண்கள். அவர்களை நேரில் பார்த்தவர்களுக்கு அப்போது​தான் மடத்தைச் சூழ்ந்திருந்த இனம்புரியாத பரபரப்புக்கு அர்த்தம் புரிந்தது. காரில் இருந்து இறங்கியவர்கள், சசிகலாவும் இளவரசியும் என்கிறார்கள். ஏறத்தாழ 15 ஆண்டுகள் கழித்து சங்கர மடத்துக்குள் காலடி எடுத்துவைக்கிறாராம் சசிகலா.

விஜயகாந்த் கூட்டணிகள் பேச்சுவார்த்தை....மூன்றும் தோல்வி! ஏன்? விபரம் வெளியானது!

விகடன்.com :மிஸ்டர் கழுகு: மூன்று பேரங்கள்... முறுக்கிக்கொண்ட விஜயகாந்த்! தனித்துப் போட்டி... முடிவின் பின்னணி!தே.மு.தி.க. மகளிர் தினப் பொதுக்கூட்டம் முடிந்தபிறகு வருகிறேன்” என்று கழுகார் செய்தி அனுப்பி இருந்தார். கழுகார் செல்கிறார் என்றால், அந்தக் கூட்டத்துக்கு ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது என்பதால் காத்திருந்தோம். எதிர்பார்த்தது மாதிரியே தனது முடிவை அறிவித்துவிட்டார் விஜயகாந்த். தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்தார். அந்த அறிவிப்பைக் கேட்டதுமே அலுவலகம் நோக்கிப் பறந்து வந்தார் கழுகார்.

‘‘விஜயகாந்த் முடிவின் பின்னணி என்ன?” என்ற கேள்வியைப் போட்டோம்.

‘‘பின்னணியில் நடந்ததில் அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அதனால்தான், இந்த முடிவுக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டார்” என்றபடி சொல்ல ஆரம்பித்தார்.

பாலியல் வன்முறைக்கு அனுமதி...சம்பளத்துக்கு பதிலாக ராணுவத்தினர் பெண்களை....தெற்கு சூடான்


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு போர் நடந்தது. ஆளும் கட்சி தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவும், தனக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு எதிராக ராணுவம் கடுமையாக தண்டனை கொடுத்ததாகவும் பெண்க்லள் கற்பழிக்கபட்டதாகவும் புகார் எழுந்தது. ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம்  விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டது அந்த அறிக்கையில் அரசுக்கு எதிராக செயல்படும் குடிமக்களை ராணுவம் துப்பாக்கியால் சுட்டும், மரங்களில் கட்டி தொங்கவிட்டும், விசவாயு அறையில் அடைத்தும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர செயலின் உச்சக்கட்டம் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நிகழ்ந்துள்ளது.

காணமல் போன மாணவனும் ஆசிரியையும் கோர்டில் ஆஜார்....தம்பதிகளாகவே வாழவிருப்பம்.....

தென்காசி
கடந்த ஓர் ஆண்டாக தலைமறைவாக இருந்த பள்ளிக்கூட ஆசிரியையும், மாணவரையும் திருப்பூர் பகுதியில் போலீசார் மீட்டனர். ஆசிரியை தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இருவரையும் போலீசார் நேற்று தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
ஆசிரியை–மாணவர் மாயம் நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தவர், கோதை லட்சுமி (வயது 23). இவர் கடந்த 2014–ம் ஆண்டில் 6 மாதம் அந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்தார்.   இது வெறும்  சட்ட பிரச்சனையாக மட்டும் பார்க்க கூடாது , இருவரும் கணவன் மனைவியாக வாழத்தொடங்கி விட்டார்கள். ஏன் அதை அங்கீகரிக்க கூடாது? பிரிடீஷ்காரன் சட்டத்தை வைத்துகொண்டு எல்லாவற்றையும் எடை போடமுடியாது.   

தேமுதிக அறிவிப்பால் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

தனித்து போட்டியிடப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பால், அதிமுக தரப்பு மகிழ்ச்சியடைந்துள்ளது.
தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்துள்ளது. மதிமுக, இடதுசாரிகள், விசிக இணைந்து மக்கள் நல கூட்டணியை அமைத்துள்ளன. பாமக தனியாக போட்டியிடுகிறது. தேமுதிகவை எதிர்பார்த்து காத்திருந்த பாஜக அடுத்த கட்டமாக என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறது. திமுக, பாஜ அல்லது மக்கள் நலக் கூட்டணியில் சேரும் என எதிர்பார்த்த தேமுதிக தனித்து போட்டியிடுவதாக நேற்று முன்தினம் அறிவித்துவிட்டது.

ரூ.5 கோடி அபராதம் செலுத்த டபுள் ஸ்ரீ ரவிசங்கர் தயார்...தேசிய பசுமை தீர்ப்பாயம்.....

புதுடெல்லி: தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.5 கோடி அபராத தொகையை தவணை முறையில் செலுத்த ‘வாழும் கலை’ அமைப்பு ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, உலக கலாசார விழா தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. டெல்லி யமுனை நதிக்கரையில் ‘வாழும் கலை’ அமைப்பு சார்பில், ‘உலக கலாசார திருவிழா’ நேற்று தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள்.< இந்த விழா ஏற்பாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் நடந்ததாகவும், எனவே விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, ‘யமுனை நதியை காப்போம்’ என்ற இயக்கத்தினர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

விகடன்:அரண்டு கிடக்கும் 'ஓபிஎஸ்' டீம்... வேட்பாளர் பட்டியலிலும் பெயர் காலி?

எவ்வளவுதான் நெருக்கத்தில் இருப்பது போல் ஒரு தோற்றம் வெளிப்பட்டாலும், மெல்லிய இரும்புத்திரையின் நடுவில் அமைத்திருக்கும் கோட்டைதான் அது என்பதை அண்ணன் இப்போது புரிந்து கொண்டிருப்பார் " என்கிறார்கள், ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள்.'வடக்கே போகலாம், தெற்கே போகலாம், கிழக்கே போகலாம், மேற்கே போகலாம்... ஆனால், மாடிக்கு மட்டும் போகக்கூடாது... என்ன புரியுதா ?' என்ற புகழ்பெற்ற சினிமா வசனம் ஓபிஎஸ் வாழ்க்கையில் நிஜமாகி விட்டிருக்கிறது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில்தான் ஓபிஎஸ்சும் எஞ்சிய நால்வரும் பரிதாபமாக உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் இல்லை, இல்லை ஓபிஎஸ் தவிர மற்றவர்கள் அவரவர் ஊரில்தான் இருக்கிறார்கள் என்றும் கடந்த சில நாட்களாக வலம் வருகின்றன தகவல்கள். திகில் மாளிகையின் மர்ம முடிச்சுக்கள்....கால் இல்லாமல் தெரியும் உருவங்கள்....அமானுஷ ராத்திரிகள்....மீண்டும் மீண்டும் வேதாளங்கள் 

தேமுதிக 234 தொகுதிகளிலும் போட்டி....59 மா .செக்களும் படு அப்செட்...மீண்டும் செலவு?

தே.மு.தி.க.,வில், 59 மாவட்ட செயலர்கள் உள்ளனர். கடந்த, 11 ஆண்டுகளாக, பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் செலவழித்துள்ளனர்.தனித்து போட்டியிட்ட போது, தேர்தல் செலவையும், இவர்களே கவனித்தனர்.
தற்போது, பல மாவட்ட செயலர்களும்
கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளனர். சட்டசபை தேர்தலில், சரியான கூட்டணியை தேர்வு செய்வதன் மூலம், இப்பிரச்னையில் இருந்து மீளலாம் என, கணக்கு போட்டனர்.இவர்கள் கனவுகளை தவிடுபொடி ஆக்கும் வகையில், தனித்து போட்டிஅறிவிப்பை, கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு உள்ளார். இதோடு, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார். இதனால், மீண்டும் செலவு ஏற்படும் என்ற அச்சத்தில், மாவட்ட செயலர்கள் உள்ளனர்.  பணம் சம்பாதிக்க இவர் பின்னால் போவதிலும் பார்க்க  போயஸ்  பக்கமே தேவல? 

ஹெச் 1 பி விசாவுக்குத் தடை விதிங்க!: குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை

மயாமி(யு.எஸ்): ஃப்ளோரிடாவில் நடைபெற்ற குடியரசுக்கட்சி அதிபர் வேட்பாளர்கள் விவாத்த்தில், ஹெச் 1 பி விசாக்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.  குடியரசுக் கட்சியின் 12வது அதிபர் வேட்பாளர்கள் விவாதம் மயாமியில் நடைபெற்றது. தற்போது களத்தில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், டெட் க்ரூஸ், மார்க்கோ ரூபியோ மற்றும் ஜான் கேசிக் பங்கேற்றனர்.  குழாயடிச் சண்டை இந்தத் தேர்தலில், முதன் முறையாக எந்த வித தனிப்பட்ட தாக்குதல் இல்லாமல் குடியரசுக் கட்சி விவாதம் நடைபெற்றது ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் மற்றவர்களை விளாசுவதும் கேலி பண்ணுவதும், மற்றவர்கள் பதில் தாக்குதல் நட்த்துவதுமாக இருந்து வந்த விவாதங்கள் கடைசி நேரத்தில் சற்று ஆரோக்கிய பாதைக்கு திரும்பியுள்ளது. 

தமிழகத்தில் மாற்று பள்ளிகளை தேடும் 5 லட்சம் மாணவர்கள் - நூற்றுகணக்கான பள்ளிகள் மூடப்படுகிறது

ராதிகா ஒரு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. அடுத்த வருடம் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற தயார் ஆக வேண்டிய சூழலில், ராதிகாவும், அவரது பெற்றோரும் மற்றொரு பள்ளி கூடத்தை தேடி அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ராதிகாவுடன், கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும் 2 மாத கால அளவுக்குள் வேறு பள்ளிக்கு இடம் மாற வேண்டிய நிர்பந்தத்தில் அலைகிறார்கள்.
கடந்த திங்கட்கிழமையன்று, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் 31 மேய் 2016 அன்றுடன் 746 தனியார் பள்ளிகளின் தற்கால அங்கீகாரம்  காலாவதியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த பள்ளிகூடங்களுக்கு, கூடுதலாக அனுமதியை நீட்டிகொடுக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை விவசாயிக்கு நடிகர் கருணாகரன் ரூ.1 லட்சம் உதவி...கடனுக்காக தாக்கப்பட்ட பாலனின் வங்கியில்

சென்னை: போலீசால் தாக்கப்பட்ட தஞ்சை விவசாயி பாலனின் வங்கிக் கணக்கில் நடிகர் கருணாகரன் ரூ.1 லட்சம் தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலன் (50). கடந்த 2011-ல் தஞ்சையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.80 லட்சம் கடன் பெற்று, டிராக்டர் வாங்கியுள்ளார். கடைசி 2 தவணைகள் செலுத்தாமல் இருந்திருக்கிறார். 
இதையடுத்து விவசாயிக்கு சொந்தமான டிராக்டரை பறிமுதல் செய்ய வந்த காவல் நிலைய ஆய்வாளர் குமாரசாமி மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள், பாலனை சரமாரியாக அடித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. 

வெள்ளி, 11 மார்ச், 2016

சுப்ரீம் கோர்ட் : மூணு மாணவிகளை கொல்லணும்னு பஸ்ஸை எரிக்கலையே! – எப்படீ,,,,,

dharmapuri mar 11aanthaireporter.com :கடந்த 2000-ல் ‘பிளசன்ட் ஸ்டே’ ஓட்டல் வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் தண்டனை வழங்கி உத்தரவிட்டபோது, தமிழகமெங்கும் அதிமுக-வினர் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, தர்ம பு ரியில் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான பஸ் ஒன்றிற்கு அவர்கள் தீவைத்தனர். இதில் பஸ்ஸில் பயணம் செய்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று மாணவிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். பஸ்ஸில் பயணம் செய்த மற்ற 44 மாணவிகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் தொடர்புடைய அதிமுக-வினர் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது.பசங்க சும்மாஉணர்ச்சி  வசப்பட்டுடாய்ங்க....கருகிப்போன மாணவிகளின் பெற்றோருக்கு உச்ச நீதமன்றம் இந்த அறிவுரையை வழங்கி உள்ளது....நீதிமன்றங்களே இப்படி என்றால் 

அழகிரி கண்டனம் ; திமுகவை தில்லுமுல்லு கட்சி என்பதா? பிரேமலதாவுக்கு தகுதியே இல்லை...

திமுகவை தில்லு முல்லு கட்சி என்று பிரேமலதா கூறியதற்கு  ஏன்  திமுகவில் இருந்து  ஒருவரும்  இதுவரை  கண்டனம்  தெரிவிக்கவில்லை? ஒரு சுயமரியாதை உள்ள உண்மையான திமுக  தொண்டன் என்ற முறையில் நான் வேதனை படுகிறேன். நிச்சயமாக  விஜயகாந்த் கட்சி  பாஜகவுடன்  கூட்டணி சேரும் என்றுதான் நம்புகிறேன். 
இந்நிலையில் திமுக மீதான விமர்சனங்கள் தொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மு.க. அழகிரி கூறியுள்ளதாவது:

விஜயகாந்த்-பிரேமலதா திருமணத்தை இதே மதுரையில் தலைவர்தான் நடத்தி வைத்தார். நான்தான் முன்னின்று ஏற்பாடுகளையெல்லாம் செய்தேன்.
திமுகவை தில்லு முல்லு கட்சி என்றெல்லாம் தரக்குறைவாக விமர்சிக்க தேமுதிகவுக்கு, பிரேமலதாவுக்கு தகுதியே இல்லை.

ஜே.என்.யுவின் விவாத சுதந்திரம் இந்துத்துவவாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

பார்ப்பனியத்தில்  ஊறிப் போன வட இந்தியாவின் இதயப்பகுதியில் JNU ஜே.என்.யு மட்டும் ஒருவிதமான ஐரோப்பிய பாணியிலான சுதந்திரத்தை இத்தனை ஆண்டுகளாக எப்படி பாதுகாத்து வருகின்றது?. பொதுவாக இருபத்தைந்து வயதுக்குள் படித்து முடித்து விட்டு வேலையில் செட்டில் ஆனால் தான் முப்பதுக்குள் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக முடியும் என்பது போன்ற எல்லைக் கோடுகளுக்குள் நின்று தான் எங்கள் இளைஞர்கள் ‘அறிவுத் தேடலில்’ ஈடுபட முடிகிறது. நீங்களோ முப்பத்தைந்து வயதில் கூட மாணவர்களாகவே இருக்கிறீர்கள்… எப்போது தான் ’செட்டில்’ ஆவதாக உத்தேசம்?
”ஏன் இப்போதே செட்டில் ஆகித் தானே இருக்கிறோம்? மேலும் அறிவுத் தேடலுக்கும் கற்றுக் கொள்வதற்கும் வயது வரம்பு ஏதும் இல்லை அல்லவா?”

ராகுல் :ரொட்டி திருடினால் அடித்து சிறையில் போடுகிறீர்கள்....9,000 கோடி திருடினால்(மல்லையா) முதல் வகுப்பில் தப்பி செல்ல உதவி செய்கிறீர்கள்?

டெல்லி: நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் எம்.பி.யாக நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அவற்றிற்கு முழுமையாக கட்டுப்பட்டவன் என தொழிலதிபரும், ரூ.9000 கோடி கடனாளியுமான விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். தொழிலதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை என்பது புகாராகும். அவர் சமீபத்தில் யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதற்காக அவருக்கு அந்த நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான டயாஜியோ பிஎல்சி நிறுவனம் 75 மில்லியன் டாலர் (சுமார் ரூ.515 கோடி) தர சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் : தேமுதிக முடிவு என்னை பொறுத்தவரை மகிழ்ச்சி தருகிறது..அந்த சிக்கல் நீங்கியது..

சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருப்பதால் திமுகவுக்கு எந்த பாதிப்பு இல்லை; இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் திமுக தொண்டர்கள் மேலும் ஊக்கமடைவார்கள் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. 

ஸ்ரீ ஸ்ரீ ரவியின் RSS பரிவார்களுக்கு மழை கொடுத்த அடி...இயற்கையின் கோபம்


பாஜகவின்  காவி பிரசார நிகழ்ச்சிக்கு  இயற்கையே இன்று கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்துள்ளது. இதைதான் அறம் என்பது. கொட்டும் மழையில் தலையில் பாலிதீன் பைகளின் உதவியுடன் மேக்கப் கலைந்த கோலத்துடன் காட்சி அளிக்கிறது உலக கலாசார விழா.  

பிரதமர் மோடி ஸ்ரீ ஸ்ரீ ரவியின் நிகழ்ச்சிக்கு வருகை...மழை அட்டகாசம் PM Modi arrives at Sri Sri Ravi Shankar's WCF despite rain threatening to dampen ..

உலக கலாச்சார விழா இன்று மாலை தொடங்கியது. துவக்க உரை நிகழ்த்துவதற்காக பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். ஆனால் தற்போது அங்கு இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியுள்ளதால் தொடக்க விழா பாதிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு வருகை தந்த பார்வையாளர்கள் பாலித்தீன் கவர்களால் தங்களை மூடியப்படி மைதானத்தில் அமர்ந்துள்ளனர்.   டெல்லியில் வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் உலக கலாச்சார விழாவில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டுள்ளார். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான ‘வாழும் கலை’ அமைப்பின் சார்பில், டெல்லியில் யமுனை நதிக்கரையில் இன்று முதல் 13–ந் தேதிவரை, ‘உலக கலாச்சார திருவிழா’ நடைபெறுகிறது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்தில் திருவிழா நடக்கிறது. இந்த விழாவுக்காக, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, ‘யமுனை நதியை காப்போம்’ என்ற இயக்கத்தினர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த பசுமை தீர்ப்பாய அமர்வு, திருவிழாவுக்கு தடை விதிக்க மறுத்தது. அதே சமயத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக, விழா தொடங்குவதற்கு முன்பு, ரூ.5 கோடி அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவம்: மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

தர்மபுரியில் பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டு, மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் அ.இ.அ.தி.மு.க. கட்சித் தொண்டர்கள் மூன்று பேருக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம், திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலை அல்ல என்பதாலும் உணர்ச்சிவசப்பட்ட கும்பல் நடத்திய சம்பவம் என்பதாலும் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க.,வில் அதிரடி முடிவு: குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு 'சீட்' இல்லை!

அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. பழைய முகங்களில் ஊழல் குற்றச்சாட்டு, கிரிமினல் வழக்கு மற்றும் கட்டப்பஞ்சாயத்து புகார்களுக்கு ஆளாகியவர்களுக்கு மீண்டும், 'சீட்' கிடைக்காது என தெரிகிறது. கடந்த லோக்சபா தேர்தலின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆ.ராசாவுக்கு, நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட, தி.மு.க., தரப்பில், 'சீட்' தரப்பட்டது. இது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுவும், லோக்சபா தேர்தலில், தி.மு.க., கடும் தோல்வியை சந்திக்கவும், அ.தி.மு.க., கணிசமான வெற்றி பெறவும் ஒரு காரணமாக அமைந்தது.
மேலும் முந்தைய சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில், சமீபத்தில் வெளியான வாக்காளர் பட்டியலில், கிட்டத்தட்ட, 29 லட்சம் புதிய

திமுக, அதிமுக வாசலில் காத்து கிடக்கும் ஜாதிகட்சிகள்...

தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட ஜாதிக் கட்சிகளின் தலைவர்கள், தங்களுக்கு, 'சீட்' கிடைக்குமா என, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளின் கதவை தட்டிக் கொண்டிருக்கின்றனர். காக்க வைத்து கடைசி நேரத்தில், கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் தான், ஜாதிக் கட்சிகளால் பேரம் பேச முடியாது என, பெரிய கட்சிகள் கருதுவதால், கூட்டணியை உறுதி செய்யாமல், இழுத்தடிக்கின்றனர்.
தமிழகத்தில், ஜாதிக்கு ஒரு கட்சி மட்டுமல்ல; ஒரு ஜாதிக்கு, நான்கைந்து கட்சிகள் கூட இருக்கின்றன.தாராய் நீ தாராய் போகும் இடம் சட்டசபையிலதான்   தாராய்  சீட்டு  தாராய்...

சென்னை தொழிலதிபர் மனைவி, குழந்தைளை கொலை செய்து தற்கொலை


கடந்த  இரண்டு ஆண்டுகளாக தென் ஆபிரிக்காவில் சம்பாதித்த பணத்தை நண்பர்களின் ஆலோசனையின் படி பங்கு மார்கெட்டில் முதலீடு செய்ததாக தெரியவருகிறது. அதில் ஏற்பட்ட கடும் நஷ்டம் காரணமாகவே இந்த முடிவுக்கு அவர் வந்திருக்கிறார் என்று நம்ப படுகிறது.
 தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொலைசெய்து விட்டு, ஒரு தொழிலதிபர் தானும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொத்தவால்சவடி பகுதியில் வசித்து வருபர் தேவேந்திர குமார்(48), அவரின் மனைவி தீஷியா(38), மகள் ஷெரிபி(15), மகன் மானஷ்(12) அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர். அவர்களுடன் தேவேந்திர குமாரின்  தாய் ஷோபா தேவியும் வசித்து வந்தார்.;நேற்று இரவு அவர்கள் அனைவரும் சினிமாவுக்கு சென்றுள்ளார்கள். அதன்பின் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

வியாழன், 10 மார்ச், 2016

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்காக ஆக்கிரமிக்கப்பட்ட விளைநிலங்கள்- நூற்றுக்கணக்கான விவசாயிகள் விரட்டியடிப்பு

டெல்லி: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் உலக கலாசார திருவிழாவுக்காக யமுனை நதிக்கரையில் செழிப்பான விளைநிலங்கள் அழிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் சொந்த நிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளதாக புகார்கள் குவிந்துள்ளன. டெல்லி யமுனை நதிக்கரையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உலக கலாசார திருவிழா நடத்தப்படுகிறது. இதற்காக சுமார் 1,000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இருந்தும் 35,000 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.  பாபநாசம் பார்ப்பான்  டபுள் ஸ்ரீ ரவிஷங்கரின்  ஆர்ட் ஒப் லிவிங் என்கிறது இதுதான்  

'குக்கூ'.... குழந்தைகள் விரும்பும் காட்டுப் பள்ளி! cuckoo forest school ...under construction...

விகடன்.com ;பள்ளி என்றதும் நம் மனதில் ஒரு சித்திரம் விரியும்... இறுக்கமான கட்டடங்கள், கண்டிப்பான ஆசிரியர்கள், வீட்டுபாடம் என அதன் நினைவுகள் சில அழுத்தங்களை தரும். பெரும்பாலான பள்ளிகள் முன்முடிவுகளை நம்மிடம் திணிப்பவை, நம்மை நம் இயல்பில் சிந்திக்க விடாதவை. நிச்சயம், பள்ளிகள் மீது மட்டும் தவறல்ல, பாடத்திட்டங்களும்தான்.

விஜய் மல்லையா படகில் அவுஸ்த்ரேலியா போயிருப்பாரோ? கடன் வாங்கி வெளிநாட்டில் வாழப் போயிருக்கிறார்!

விகடன்.com :இந்தியாவைப் பொறுத்தவரை ஏழைகளுக்கு ஒரு சட்டம், பணக்காரர்களுக்கு ஒரு சட்டம்தான். கடந்த 2009-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. கல்விக்கடன் கட்டவில்லையென ஒரு மாணவியின் புகைப்படத்துடன் பேனர் ஒன்று வங்கி நிர்வாகம் சார்பில் வைக்கப்படுகிறது. இதனைப் பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் மிகுந்த ஆவேசத்துடன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மஞ்சூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது மகளின் என்ஜீனியரிங் படிப்புக்காக கடந்த  2009-ம் ஆண்டு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 2 லட்ச ரூபாய் கடன் பெறுகிறார். திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலம் 2014 ஜுன் மாதத்தில் தொடங்குகிறது.Art of leaving india

பாஜகவில் மகளிர் தினம் பார்ப்பனீய பெண்கள் ...கமலா,பத்மினி,லட்சுமி,சின்மயி,மதுவந்தி...

201603090214395346_If-the-answer-to-speculation-about-the-political-strategies_SECVPFவே.மதிமாறன்: கேக் வெட்டி கொண்டாடினாராம். மகளிர் தினமா இல்ல தமிழிசை சவுந்தரராஜனின் பிறந்த நாளா? ‘பெண் இழிவான பிறப்பு. கணவன் இறந்தால் உயிரோடு கொளுத்து. கங்கையில் அமுக்கு.’ என்ற கொடூரங்களைப் புனிதமாகவும் தனது தத்துவமாகவும் கொண்டிருக்கிற ஒரு கட்சி பா.ஜ.க.
‘இந்துப் பெண் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ளாதவள் பெண்ணே அல்ல’ என்று இன்றும் பெண்களுக்கு எதிராகப் பகிரங்கமாகப் பேசுகிற ஒரே கட்சி பா.ஜ.க.
காதல், அன்பு, பாசம் அல்ல அதன் நோக்கம். வெறுப்பு, ஆண் ஆணவம், பெண் அடிமைத் தனம் இவையே இந்து அமைப்புகளின் தத்துவம்.
கொடுமை, அந்தக் கட்சியில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதுகூட அல்ல; அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் லாபம் இருக்கிறது. இருக்கிறார்கள்.

பிரேமலதா; திமுக அதிமுக இரண்டுமே தில்லுமுல்லுதான்.... பேரம் என்ற வார்த்தை கூட எங்களுக்கு தெரியாது

பிரேமலதா | கோப்புப் படம் திமுக என்றாலே தில்லுமுல்லு. அதிமுக என்றாலே அனைத்திலும் தில்லுமுல்லு என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடந்தது.
கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:  மக்கிசிமம் நேரத்துக்கு நேரம்  மாத்தி மாத்தி  கணக்கு  போட்டு எல்லா ஏரியாக்களுக்கும்   பேரம் பேசி விலை பேசி கடைசியில்  சு.சாமி பேச்சுக்கு  பணிந்து  அவலை  நினைத்து  உரலை இடிக்கிறார்கள்..இப்ப பேரமே நடக்கலன்னு  கூசாம  முழுப்பூசனிக்காயை  வாயில மறைக்கிறாங்க...வெளங்குமா? 

பிரேமலதா: கூட்டணி பற்றி வெளியான தகவல்கள் எல்லாமே வதந்திகள்தான்...(அப்பாடா சு.சாமிக்கு தாங்க்ஸ்)

கூட்டணி பற்றி இதுவரை வெளியான தகவல்கள் அனைத்துமே வதந்திகள்தான்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக வெளியாகும் கருத்து கணிப்புகள் தவறானவை. சட்டமன்றத் தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகளாகவே உள்ளன. கூட்டணி பற்றி இதுவரை வெளியான தகவல்கள் அனைத்துமே வதந்திகள்தான். எந்த பேரத்திற்கும் படியாதவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். பால் கட்டணம் உயர்த்தப்பட்டதாலேயே அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது.

விஜயகாந்த் : இப்ப தெளிவாக சொல்கிறேன் தனியாகத்தான் தேர்தலை சந்திக்க போகிறேன்.....

இதுவரை தான் தெளிவாக இல்லை என்பதை ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக தருகிறாரோ? விஜயகாந்த் :  தனியாகத்தான் தேர்தலை சந்திக்கப்போகிறேன்: தெளிவாக சொல்கிறேன்: விஜயகாந்த் பேச்சு சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், என்னை கூட்டணிக்கு அழைத்த அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விஜயகாந்த்துக்கு பேச தெரியாது என்று எழுதுகிறார்கள். எனக்கு தெரியும் கட்சியை எப்படி கொண்டு போக வேண்டும் என்று. நீங்கள் யாரும் எனக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டாம். பத்திரிக்கை நண்பர்களை தரக்குறைவாக சொல்லவில்லை. பொதுவாக சொல்கிறேன். விஜயகாந்த் இன்று கூட்டணி குறித்து சொல்லுவாரா. ஏன் சொல்லவில்லை என்றால் என்ன. வழக்கம்போல குழப்பம்தான்.பிரேமா ஒரு பக்கம் இழுக்கிறா சு சுவாமி ஒருபக்கம் இழுக்கிறா மத்தவங்களும் இழுக்கிறாங்க எனக்கு....நான் என்ன சொல்றது....ஆங் நான் சொல்லவாறது என்ன்னனனா.....தன்னன்னா தன்னா   

ட்ராக்டர் கடனுக்காக விவசாயியை காவல்துறையினர் கடுமையாக தாக்கினர்..


ஏழை விவசாயிக்கு ஒரு நீதி மல்லையா போன்றோருக்கு ஒரு நீதி தஞ்சாவூர்: டிராக்டருக்கு வாங்கிய கடனை கட்டத் தவறிய விவசாயியை போலீசார் அடித்து இழுத்து சென்றது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தஞ்சை மாவட்டம் சோழகன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாலன், இவர் கோட்டக் மகேந்திரா வங்கியில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியிருக்கிறார். தவணைத் தொகைகட்டாததால் வங்கி, உயர்நீதிமன்றத்தில் வண்டியை கைப்பற்ற உத்தரவு பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 6ம் தேதி, மகேந்திரா ஃபைனான்ஸ் நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர், பாலனிடம் இருந்த டிராக்டரை ஜப்தி செய்ய சென்றிருக்கின்றனர். அதற்கு பாலன், இன்னும் 64 ஆயிரம் ரூபாய்தான் கட்ட வேண்டி இருக்கிறது. அறுவடை முடிந்த உடன் அதை நான் கட்டி விடுகிறேன். டிராக்டரை ஜப்தி செய்ய வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். போலீசும் அரசும் விஜய் மல்லைய போன்ற கள்ளருக்கு பாதுகாப்பும் கொடுத்து தப்பி ஓட வசதியும் ஏற்படுத்தி கொடுக்கிறது

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கருக்கு ரூ.2.5 கோடி மத்திய அரசு நன்கொடை

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்புக்கு ரூ.2.5 கோடி நன்கொடை கொடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய கலாச்சாரத் துறை மந்திரி மகேஷ் சர்மா கூறியதாவது:-< உலக கலாச்சார திருவிழா நடத்துவதற்காக வாழும் கலை அமைப்புக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் கலைகளின் முனேற்றத்திற்காக செயல்படும் அமைப்புகளுக்கு நன்கொடை கொடுப்பது வழக்கம். இதன்படி தான் வாழும் கலை அமைப்புக்கு ரூ.2.5 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இசை மற்றும் நடனத்தை ஊக்குவிக்கும் ஸ்பிக் மெகாய் அமைப்புக்கும் இதே அளவு பணம் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. நன்கொடைக் கேட்டு ஆண்டுக்கு சுமார் 100 விண்ணப்பங்கள் வருகின்றன.

மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் மறைவு...கலைஞர் இரங்கல்...

மங்கையற்கரசி லண்டனில் மறைவு : கலைஞர் இரங்கல் திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள இரங்கல்: ’’தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும், இலங்கையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான நாவலர் அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு துணைவியார் மங்கையற்கரசி, நேற்றிரவு இலண்டன் மாநகரில் மறைந்து விட்டார் என்ற செய்தியினை இன்று காலையில் திராவிடர் கழகத் தலைவர் இளவல் கி. வீரமணி தொலைபேசி வாயிலாகத் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்தேன். கணவரும் மனைவியுமாக அந்தக் காலத்தில் என்னைச் சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்தது. நாவலர் அமிர்தலிங்கம் இலங்கையில் கொல்லப்பட்ட பிறகு, அம்மையார் அந்த நாட்டிலிருந்தே வெளியேறி தமிழகத்திலும், லண்டனிலும் வாழ்ந்து வந்தார். தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்தித்து உடல் நலம் விசாரித்துச் செல்வார். அம்மையாரின் மறைவுக்காக அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் nakkheeran.in

விஜயராசு இன்று ஓவர் மவுசு, நாளை டவுசர் போயிடாம ஆடனும்...அம்மா பாடம் மறந்தாச்சா....(உங்க பாணில பேசுறோமுங்கோ)..

தமிழக கட்சிகளின் திரைமறைவு பேரத்தால், கூட்டணி எதுவும் இறுதி கட்டத்தை எட்டாமல், குழப்பமான சூழல் நிலவுகிறது.  தமிழக சட்டசபை தேர்தல், மே, 16ம் தேதி நடக்கிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் முனைப்பில் தீவிரமாகி உள்ளன. சுத்தி சுத்தி: ஒருபக்கம், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்துள்ள அரசியல் கட்சிகள், இன்னொரு பக்கம், கூட்டணி அமைப்பதிலும் தீவிரமாக உள்ளன. இதற்காக, பல கட்டங்களிலும் திரைமறைவு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. குறிப்பாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு அழைத்து செல்ல வேண்டும் என, தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும், மக்கள் நல கூட்டணியும் தீவிரமாக செயல்பட்டு வருவதால், தே.மு.தி.க.,வை சுற்றியே மொத்த அரசியல் நிகழ்வுகளும் நடக்கின்றன.

யுனிலிவரை வீழ்த்திய பாடகி சோஃபியா : எந்த அறமும் இல்லாமல் விளம்பர நிறுவனங்கள் இயங்குகின்றன.


vikatan.com :Kodaikanal won't Kodaikanal won't
Kodaikanal won't step down until you make amends now..." என்று துவங்கும்  இந்த பாடலை நிச்சயம் நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள்... எந்த வெகுஜன ஊடகங்களிலும் இந்த பாடல் ஒளிப்பரப்பபடவில்லை... ஆனால், இந்த பாடல் யுனிலிவருக்கு எதிரான கொடைக்கானல் மக்கள் போராட்டத்திற்கு முக்கிய ஆயுதமாக இருந்தது. அந்த பாடலில் வரும்  ராப் இசையுடன் கூடிய அந்த பெண்ணின் அலட்சிய குரல், யுனிலிவரை கிண்டல் செய்தது, கோபக் கேள்விகளை வீசியது, மக்களை திரட்டியது, யுனிலிவரின் முதல் செயல் அதிகாரியின் தூக்கத்தை கலைத்தது. இறுதியாக, அந்த மக்களுக்கு ஒரு தீர்வையும் தேடித்தந்துள்ளது. ஆம். யுனிலிவர், மெர்குரி நச்சால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக ஒரு தொகையை தர முன்வந்துள்ளது.

டி.டி.வி. தினகரன் முதல்வரா? அதிமுகவில் பரபரப்பு! ...தேர்தலுக்கு பின்....

விகடன்.com :தமிழகத்தின் முக்கிய தொகுதியில் அதிமுகவின் பிரதான வேட்பாளர் என்ற அந்தஸ்தோடு டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார் என்றும், அடுத்த முதல்வர் டி.டி.வி.தினகரன்தான் என்றும் ஒரு தகவல் அதிமுகவினர் இடையே பரவி தேர்தல் பரபரப்பு சூட்டை இன்னும் கூட்டியுள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தங்களது பெயர்களை எதிர்பார்த்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில்,  மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் அதிமுகவின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பட்டியலை, சசிகலாவின் ஆலோசனையுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா இறுதி செய்துவிட்டதாக  கூறப்படுகிறது. இந்நிலையில்தான் டி.டி.வி. தினகரனின் 'ரீ- என்ட்ரி'  அக்கட்சியினரிடையே புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை...நிமிடத்துக்கு நிமிடம் மாறும் விஜயகாந்தின் மனம்...பணம் பணம் பணம்

விகடன்.com :பழம் கனிந்திருக்கிறது, அது நழுவிப் பாலில் விழும் என்று காத்திருக்கிறேன்'' என்கிறார், தி.மு.க தலைவர் கருணாநிதி. "நாங்கள் பல சுற்றுக்கள் பேச்சு வார்த்தையை நடத்தி முடித்து விட்டோம்... நல்ல முன்னேற்றம் தெரிகிறது (ஆமாம், இதில் யார் பேஷண்ட்?), தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம், இரண்டொரு நாளில் டெல்லியில் இருந்து இன்னும் சிலர் வருகிறார்கள், நல்ல பதிலை உங்களுக்கு (மீடியாக்களுக்கு) சொல்வார்கள்" என்கிறது பா.ஜ.க வட்டாரங்கள். இன்னும் எந்தெந்த பிரதான கட்சிகள் தமிழக தேர்தல் களத்தின் வெள்ளோட்ட வெளியில் இருக்கின்றன என்று பார்த்தால், பா.ம.க.வும், த.மா.கா.வும்தான் மிஞ்சுகின்றன. ச.ம.க., புதிய தமிழகம், ம.ம.க., தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, இ.யூ.முஸ்லீம் லீக், தவ்ஹீத் ஜமாத்,  புரட்சிபாரதம் உள்ளிட்ட  கட்சிகளும் யாருடன் கூட்டணி என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியாத சூழலே காணப்படுகிறது.  தமிழகம் இதுவரை காணாத அளவு வியாபர அரசியலை தற்போது  விஜயகாந்த் பிரேமா சுதீஷ் மூவரும் அரங்கேற்றுகிறார்கள்.

விஜய் மல்லியா MP எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு களவு எடுத்தார் ?

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - ரூ.1,600 கோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.800 கோடி
ஐ.டி.பி.ஐ., வங்கி - ரூ.800 கோடி
பாங்க் ஆப் இந்தியா - ரூ.650 கோடி
பாங்க் ஆப் பரோடா - ரூ.550 கோடி
யுனைட்டெட் பாங்க் ஆப் இந்தியா - ரூ.430 கோடி
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா - ரூ.410 கோடி
யூகோ வங்கி - ரூ.320 கோடி
கார்ப்பரேஷன் வங்கி - ரூ.310 கோடி
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் - ரூ.150 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - ரூ.140 கோடி
பெடரல் வங்கி - ரூ.90 கோடி
பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி - ரூ.60 கோடி
ஆக்சிஸ் வங்கி - ரூ.50 கோடி
மற்ற வங்கிகள் - ரூ.2,640 கோடி
இந்த அசல் பார்பான் (பிராமணன்)   இந்தியாவின் இன்றைய பிரபலங்கள் பலருக்கும்  நண்பர். குறிப்பாக ஜெயலலிதா,தேவகவுடா,சுப்ரமணியம் சாமி, அமித் ஷா ,நரேந்திர மோடி......மற்றும் சகல சாமியார்களுக்கும்.....   
எல்லோரும் கூடி கமிஷன் வாங்கி கொள்ளை அடிக்க உதவி செய்தார்கள்.இப்போ அவர் சொல்லாமல் கொள்ளாமல் நாட்டை விட்டு ஓடிவிட்டார் என்று நாடகம் ஆடுகிறார்கள்.எல்லா களவும் பகிரங்கமாகவே கடன் என்ற போர்வையில் நடந்தது.இவரை போலவே லலித் சூரி( காபரெட் முதலை)  என்றொரு சுப்பரமணியம் சாமியின் நண்பரும் தற்போது லண்டனில் ஒளிந்து கொண்டு இருக்கறார்.இவர்கள்தான் தேச பக்தர்களாம்.  

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கருக்கு ஐந்து கோடிரூபாய் அபராதம்...பசுமை தீர்ப்பாயம் Art of Living அமைப்பு மீது கடும் கண்டனம்


வாழும் கலை அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு டெல்லி யமுனை ஆற்றங்கரையில் தற்காலிக கட்டுமானங்கள் எழுப்பி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த வாழும் கலை அமைப்புக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, உலகப் பண்பாட்டு திருவிழா என்ற பெயரில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஏற்று, 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது. அந்தக் குழு வாழும் கலை அமைப்புக்கு 120 கோடி ரூபாய் அபராதம் விதிக்க பரிந்துரைத்தது. இதுகுறித்த விசாரணையின்போது, வாழும் கலை அமைப்புக்கு 5 கோடி ரூபாயும், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்த பசுமைத் தீர்ப்பாயம், உலக பண்பாட்டு திருவிழா நடத்த அனுமதி அளித்தது nakkheeran.in

புதன், 9 மார்ச், 2016

அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு சிபி ஐ முன்வராதது ஏன்? சி பி ஐ மீது சந்தேகம்?

சிபிஐ விசாரணைக்கு முன்வராதது ஏன்? முத்துக்குமாரசாமி வழக்கில் கலைஞர் கேள்வி வேளான் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு முன்வராதது ஏன் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வேளாண் பொறியாளர்  முத்துக்குமாரசாமி  என்ற  மூத்த அதிகாரியை  துறையின் அமைச்சரும், அவருடைய ஆதரவாளர்களும்  ஓட்டுநர்கள் நியமனத்தில்  ஒவ்வொருவரிடமும்  ஒன்னே முக்கால் இலட்சம் ரூபாய் வீதம் வசூலித்துக் கொடுக்கும்படி அழுத்தம் கொடுத்ததாகவும்,  அதிலிருந்து தப்பிக்க முடியாததால்,  அதிகாரி முத்துக்குமாரசாமி புகைவண்டிக்கு முன்னால் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் ஏடுகளில் எல்லாம் விரிவாகச் செய்தி வந்தது.  தன்னுடைய கணவருக்கு அழுத்தம் கொடுத்த காரணத்தால் தான் அவர்  தற்கொலை செய்து கொண்டார் என்று அதிகாரி முத்துக்குமாரசாமியின் துணைவியாரே புகார் அளித்தார்.

வாக்காளர்கள் காலின் விழும் பாமக வேட்பாளர்கள்......மக்கள் அதிர்ச்சி!


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் அருள்மணி. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரான இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குடித் தொகதியில் தி.மு.க சுட்டணியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த முறையும் பா.ம.க சார்பில் மருத்துவர் அருள்மணிக்கே ஆலங்குடி தொகுதியில் போட்டியிட அக்கட்யின் நிறுவனர் அறிவித்திருந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பில் இருந்தே தேர்தல் பணிகளில் ஈடுபட்டும் வருகிறார். கடந்த மாதம் கீரமங்கலம் வந்த பா.மக. நிறுவனர் ராமதாஸ் ஆலங்குடித் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அருள்மணி வெற்றி பெரும்போது சுகாதாரத்துறை அமைச்சராகவும் வாய்ப்பு வழங்கப்படும் என்று விழா மேடையில் அறிவித்தார்.

விஜய் மல்லையா மார்ச் 2-ல் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்... உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் தகவல்

டெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2-ந் தேதியே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி தெரிவித்தார். இவ்வழக்கில் பதிலளிக்குமாறு விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் 17 வங்கிகளில் சுமார் 10,000 கோடிக்கு கடன் வாங்கி அதை திருப்பி கட்டவில்லை விஜய்மல்லையா என்பது புகார். அவர் தலைவராக இருந்த யுபி நிறுவனப் பங்குகளையும் இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்திடம் விற்றுவிட்டார். Vijay Mallya left the country, SC told இதில் மல்லையாவுக்கு ரூ515 கோடி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விஜய் மல்லையா வெளிநாடு சென்றுவிடக் கூடும் எனக் கூறப்பட்டது. ஆனால் இதை மல்லையா மறுத்துவந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் மல்லையா வெளிநாடு செல்லத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் 17 வங்கிகள் வழக்கு தொடர்ந்தன.  எல்லாமே நாடகம் இந்திய அரசே  மல்லையாவை  பக்குமாக பாதுகாப்பாக வெளிநாட்டில் கொண்டு போயி விட்டுருச்சோ?

தில்லி ஜே.என்.யூ-வில் மனுஸ்மிருதி எரிப்பு !

ஏ.பி.வி.பி மாணவர் பங்கேற்புடன் எரிக்கப்படும் மனுஸ்மிருதி
ஏ.பி.வி.பி மாணவர் பங்கேற்புடன் எரிக்கப்படும் மனுஸ்மிருதி – படம் நன்றி: The Hindu மார்ச்-8 உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் (ஜே.என்.யூ) பார்ப்பன இந்துமத பயங்கரவாதத்தின் அடையாளங்களில் ஒன்றான மனுஸ்மிருதி கொளுத்தப்பட்டது. மனுஸ்மிருதியில் இடம்பெற்றிருக்கும் பெண்களுக்கு எதிரான 40 சட்டதிட்டங்களை சுட்டிக்காட்டி இந்த எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
ஜே.என்.யூ மீதான மோடி அரசின் அடக்குமுறை மற்றும் மனுஸ்மிருதி குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யிலிருந்து வெளியேறிய மாணவர்களும், தற்போதைய ஏ.பி.வி.பி-ஜே.என்.யூ கிளையின் துணைத் தலைவர் ஜதின் கோரயாவும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இளங்கோவன்: ரஜினியால் இனி தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது...

ரஜினி குறித்த காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் விமர்சனம் ரஜினி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இளங்கோவன், இப்போது விஜயகாந்தை பற்றிதான் அனைவரும் பேசுகிறார்கள். ரஜினி பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ரஜினியால் இனி எந்தத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. கடந்த தேர்தலிலும் அவரால் எந்த தாக்கத்தையும் எற்படுத்த முடியவில்லை என்றார். ரஜினி நினைத்தால் அமெரிக்க ஜனாதிபதியாகக்கூட ஆவார் என்று நம்பிக் கொண்டிருக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்த விமர்சனம்  கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இங்கோவனுக்கு எதிராக போஸ்டர் யுத்தம் தொடங்கப்படலாம்.வெப்துனியா.com

BBC:தில்லி பாலியல் வன்முறை...எரிக்கப்பட்ட 15-வயது சிறுமி மரணம்

இந்திய தலைநகர் தில்லியில் இரண்டு நாட்களுக்கு முன்னர்,பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, தீயினால் எரிக்கப்பட்டதாக நம்பப்படும் 15-வயது சிறுமி இன்று உயிரிழந்துள்ளார். அந்த சிறுமியின் உடலின் 95 சதவீதமளவுக்கு தீக் காயங்கள் ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த சிறுமியை பின் தொடர்ந்தவராக நம்பப்படும் ஒரு சந்தேக நபரை காவல் துறையினர் தடுத்து வைத்துள்ளனர். சந்தேக நபர் அந்த பெண்ணின் நெருங்கிய ஆண் நண்பராக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

திமுக-தேமுதிக கூட்டணி உறுதி - தேமுதிகவுக்கு 55 தொகுதிகள்...11 தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு....

சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை ஒட்டி திமுகவுடன் தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது எனவும், வருகின்ற 11 ஆம் தேதியன்று கருணாநிதி,விஜயகாந்த் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழக சட்டசபைக்கு 15 ஆவது முறையாக மே மாதம் 16 ஆதேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. டெல்லியில் இருந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்துவிட்டு கூட்டணியை உறுதி செய்து சென்றார். இந்நிலையில், தேமுதிகவையும் உள்ளிழுக்க தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷை சந்தித்து முதற்கட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்தார். அதில் முன்னேற்றம் ஏற்படவே அடுத்து பிரேமலதாவுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

சென்னை வெள்ளம் ரூ 5,000 கோடிகளுக்கு மேல் இன்சுரன்ஸ் கம்பனிகளுக்கு இழப்பு

The massive flood in Chennai and adjoining areas in Tamil Nadu turned out to be costly for the insurance companies, saddled with claims touching close to Rs 5,000 crore.
"For the entire insurance industry, the losses are about Rs 5,000 crore. For National Insurance at gross it will be Rs 300 crore," company's chairman and managing director K Sanath Kumar said here today.
"At the company level, the net hit to us will be anywhere between Rs 80 and Rs 90 crore. The industry thought loss would not be more than Rs 500 crore after the November flood, but the second round of flood in December was severe causing the major damage," NIC director & General manager M Vasantha Krishna said.
Besides loss of lives, according to estimates, some 80,000 vehicles, four and two-wheelers combined, are estimated to have been damaged in the deluge.

JNU நேரடி ரிப்போர்ட் 2 – ‘தேசத் துரோகி’களோடு ஒரு சந்திப்பு ! வினவு செய்தியாளர்கள்

JNUGateதில்லியின் காற்றில் குளிர் அலைந்து பரவிக் கொண்டிருந்த ஒரு பிப்ரவரி மாத நள்ளிரவில் வினவு செய்தியாளர்கள் உலகிலேயே மிக அதிகளவில் ‘தேசதுரோகிகளை’ உற்பத்தி செய்து வரும் ஜே.என்.யு வளாகத்தின் நுழைவாயிலுக்கு எதிரே காத்துக் கொண்டிருந்தார்கள். நாடே கண்டு அஞ்சும் தீயசக்திகளாக வட நாட்டு ஆங்கில ஊடகங்கள் சித்தரிக்கும் ’தேசவிரோதிகளை’ காண்பதும், அவர்களின் விளைநிலமாக சித்தரிக்கப்படும் ஜே.என்.யு குறித்த ஒரு நேரடி சித்திரத்தை தீட்டுவதே எமது பயண நோக்கம்.
பின்பனிக் காலத்தின் குளிர் ஈரப்பதமின்றி வறட்சியாய் நாசியில் நுழைந்து வெளியேறச் சிரமப்பட்டது. தமிழ்நாட்டின் வெப்பத்திற்குப் பழகிய நாசியின் உட்சுவர்கள் அந்த வறண்ட குளிரில் லேசாகப் புண்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் ஒரு நண்பர் எம்மை முக்கிய நுழைவாலுக்கு வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார். அவரது நள்ளிரவு உறக்கத்தை கெடுக்கிறோமோ என்கிற உறுத்தலோடு காத்திருந்தோம்.
ஜே.என்.யுவின் முக்கிய நுழைவாயிலின் முன் தடுப்பரண்கள் போடப்பட்டு சில போலிஸ்காரர்கள் அமர்ந்த வண்ணம் உறக்கத்திற்காக தங்களைச் சுற்றி வளைத்துத் தாக்கிக் கொண்டிருக்கும் கொசுப் படைகளோடு ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வே.மதிமாறன் : ஜெயகாந்தன் VS கே.பாலசந்தர்

எழுத துவங்கிய ஜெயகாந்தன் தன்னுடைய கதாபாத்திரங்களாகத் தெருவில் சோறு விற்கும் பெண், வண்டி இழுக்கும் முதியவர், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் என்று எளிய மனிதர்களைச் சுற்றி, சுற்றியே கதையமைத்தார். அவர்தான் அதை முதலில் செய்தார். அந்தச் சிற்பபுக்குரியவர் அவர் ஆனால் அந்தத் தகுதி பிரபலமாவதற்குப் போதாது. நவீன இலக்கிய அந்தஸ்தும் கிடைக்காது என்பதால்; தி.ஜானகிராமன், லா.சா.ரா. முறையில் பார்ப்பனக் குடும்ப பின்னணி அல்லது பார்ப்பனர்களைப் பாத்திரங்களாக வைத்து கதை செய்தார். நவீன இலக்கியத்திற்கு இதுதான் அப்போதும் அடிப்படைத் தகுதி.
அவர் ஆனந்த விகடனில் அனுமதி வாங்கியதே இந்தப் பின் புலத்தில்தான்.
அவருடைய ‘அக்னிப்பிரவேசம்’ சிறுகதை தான் விகடனில் முதலில் பிரசுரமானது. அது அதுவரை வந்த சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பின்புலம்.

தமிழக பாஜக கோஷ்டி மோதல்.....கதை கந்தல்....

தினமலர்.com : மத்தியில் ஆட்சி பொறுப்பு; எட்டு மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பு என, ஆட்சி அதிகாரங்கள் பல இருந்தும் என்ன பிரயோஜனம்? விஜயகாந்த் என்ற தனி மனிதனிடம் கேவலப்பட்டல்லவா கிடக்கிறது கட்சி?' என, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தின் முன் நின்று, புலம்பிக் கொண்டிருந்தார், நீண்டகால, பா.ஜ., உறுப்பினர் ஒருவர்.கட்சியின் உள்விவகாரங்களை நன்கு அறிந்த அவரை ஓரங்கட்டி விசாரித்ததில், தமிழக பா.ஜ.,வின் கோஷ்டி கானங்களை நார் நாராக கிழித்து தொங்க விட்டார். ஆஹா  அருமை  அருமை அருமை ...இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க  ஆளாளுக்கு பப்ப்ளிக்கவே போட்டு குடுப்பாய்ங்க ....அவங்க குவாலிபிகேசன் கொஞ்சமா நஞ்சமா? ...ஆளாளுக்கு கரகம் ஆடிடமாட்டாய்ங்க?  

மக்களின் எதிர்ப்பால் இ.பி.எப். வரி விதிக்கும் திட்டம் வாபஸ்


புதுடில்லி : தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து,இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வரி விதிப்பை, வாபஸ் பெறுவதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சமீபத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, 'தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது, திரும்பப்பெறும் இ.பி.எப்., தொகையில், 60 சதவீதத்துக்கான வட்டி மீது வரி விதிக்கப்படும்' என அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, 'ஓய்வூதியத் திட்டத்தில், தொழிலாளர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் நோக்கில், இ.பி.எப்., நிதியில், 60 சதவீதத்துக்கான வட்டி மீது வரி விதிக்கப்படுகிறது' என, மத்திய அரசு விளக்கம் அளித்தது.  சாமானிய மனிதனின் குரல்வளையை நசுக்கும் முயற்சி தான் EPF மீதான வரி. நல்லவேளையாக, மனம் திருந்தி நீக்கி விட்டார்கள். இதை பற்றி பேசிய ராகுல் மற்றும் மம்தாவிற்கு பாராட்டுகள். ஓய்வு பெறும் காலத்திற்காக சேர்க்கப்படும் நிதியும், fixed டெபொசிட்டில் போடப்படும் நிதியும் ஒன்றா? அரசு எப்படி இவை ரெண்டையும் ஒன்றாக பார்க்க முடியும்? அருண் ஜெட்லி முட்டாள்தனமான முடிவு. நாடெங்கிலும் இதற்கு எழுந்த எதிர்ப்பு, பிஜேபி கட்சியை மனமாற்றம் செய்து விட்டது.

கண்ஹையா குமார் போலி விடியோ ஒளிபரப்பிய Times Now,Zee News, NewsX மீது ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை?


Three television news channel, Zee News, NewsX and Times Now, aired doctored videos of the 9 February JNU protest led by JNUSU President Kanhaiya Kumar. The Delhi government has reportedly ordered legal action against these channels.
JNU ஜவர்கர்லால் பல்கலை கழகத்தில் மாணவர் தலைவர் பேசியதாக கூறப்படும் ஒரு போலி விடியோவின் அடிப்படையில் அவசரம் அவசரமாக அவர் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்தது. பார்ப்பனீய ஊடகங்கள் எல்லாம் பாய்ந்து பாய்ந்து தேசபக்த சாமியாடின. பாராளுமன்றில் ஸ்மிருதி இராணி ஆக்ரோஷமாக முழங்கி தள்ளினர்.அவரது தேசபக்தி மற்றும் சங்க்பரிவர்களின் தேசபக்தி டாப் கியரில் எகிறியது. இப்போது இவர்களும் இவர்களின் கைகூலி ஊடகங்களான ஜீ டிவி, டைம்ஸ் நவ்,நியுஸ் எக்ஸ் போன்றவை மீண்டும் மீண்டும் அந்த போலி விடியோவை ஒளிபரப்பி தேசபக்தி ஒப்பாரி வைத்தன .ஏன் இந்த ஊடகங்கள் மீது இன்னும் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?
.

JNU கண்ஹையா குமாரின் பேச்சின் தமிழ் வடிவம்....சமுக வலை தளங்களில் பட்டைய கிளப்புகிறது


இந்தியாவிலிருந்து விடுதலை கேட்கவில்லை; இந்தியாவுக்குள் விடுதலை கேட்கிறோம் என விடுவிக்கப்பட்ட மாணவர் தலைவர் கண்ணைய்யா குமார் கூறியிருக்கிறார். கண்ணைய்யா குமாரின் பேச்சைக் கேட்க 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டிருந்தனர். அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து கூட்டம் நடத்தியபோது இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதாகக் கூறப்பட்டு, தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணைய்யா குமார் வியாழக்கிழமையன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட கண்ணைய்யா குமார், கைதுசெய்யப்படுவதற்கு முன்பாக எங்கு பேசினாரோ அதே இடத்தில் மீண்டும் உரை ஒன்றை நிகழ்த்தினார். இதனைக் கேட்க 3000க்கும் மேற்பட்டவர்கள் அங்கே திரண்டிருந்தனர். இந்தியாவில் இருந்து அல்ல, இந்தியாவுக்குள் சுதந்திரம் கேட்கிறோம் என கண்ணைய்யா குமார் கூறினார்.

செவ்வாய், 8 மார்ச், 2016

நாசிக் சிவன்கோவிலில் பெண்கள் நுழைவு போராட்டம்....திரியம்பக தீஸ்வரர்

நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள திரிம்பாகேஸ்வரர் கோயில் கருவறை சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என கோரி பெண்கள் அமைப்பினர் இன்று பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர் . இதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாசிக்கில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் புகழ் பெற்ற திரிம்பாகேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பெண்கள் நுழைய அனுமதி இல்லை. ஆனால் பல நாட்களாக பெண்கள் அனுமதி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர் . இன்று சிவராத்திரி நடக்கவிருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில் இந்த கோயிலில் நுழைய அனுமதி வேண்டும் என பெண்கள் இன்று பேரணியாக கோயில் நோக்கி புறப்படவுள்ளனர். இது குறித்து பெண்கள் அமைப்பு நிர்வாகியான டுருப்தி தேசாய் கூறுகையில்; அரசியலமைப்புக்கு எதிரான செயல்களில் நாங்கள் ஈடுபடவில்லை. பெண்களின் உரிமையைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம் .

கேபிள் டிவி துறையிலும் அம்பானி முதலைகள் வாயை பிளக்கின்றன....சிறு கம்பனிகள் கோவிந்தா...

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்து வரும் முகேஷ் அம்பானி மிகப்பெரிய முதலீட்டுத் திட்டத்துடன் கேபிள் டிவி துறையில் இறங்க உள்ளார். (பிஎப் மீதான வரி விதிப்பு வாபஸ்.. தப்பித்தது இளைஞர்கள் பட்டாளம்..) இதனால் தனது தம்பி அனில் அம்பானி மட்டும் அல்லாமல் நாட்டில் சிறு, குறு கேபிள் டிவி நிறுவனங்களையும் ஆட்டிப்படைக்க வேண்டும் என முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாட்டின் மிகப்பெரிய தனியார் மற்றும் லாபகரமான நிறுவனம் எனப் போற்றப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் சிறந்து விளங்கி வருகிறார். ஆனால் சமீப காலமாக இவரது கண் வாடிக்கையாளர் சேவையின் பக்கம் திரும்பியுள்ளது.

அ.தி.மு.கவின் ஐ.டி விங் செயலாளர்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டே இல்லையாம்!

விகடன்.com :தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அதிமுகவில் பலரின் பதவி தப்பித்தது எனலாம். ஆனாலும், உட்கட்சி சீரமைப்புகளில் 'அறுவடைகள்' என்பது மணிக்கு ஒருமுறை என்ற அளவில்  ர.ர.க்களை திக்.. திக்.. ரேஞ்சில் அலற விட்டுக் கொண்டுதானிருக்கிறது. அப்படி அலற விட்ட இடமாற்ற அறுவடைகளில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக அமைந்து விட்டது,  புதிதாக உருவாக்கப்பட்ட  போஸ்டிங்குகள். அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவிற்கு (ஐ.டி.விங்க்), கட்சியின் அமைப்பு ரீதியான  50 மாவட்டங்களுக்கும் செயலாளர்களை நியமித்து ஜெயலலிதா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுகவின் ஐ.டி. விங்கில் புதிதாக போடப்பட்டிருக்கும் பல மாவட்டச் செயலாளர்களுக்கு ஃபேஸ்-புக் அக்கவுண்ட்டே கிடையாது என்பதுதான் இதில் கிளம்பியிருக்கும் குமுறல் பஞ்சாயத்து.  வண்டி வண்டியா நோட்டு கட்டுகள் மட்டும் சேர்த்தாங்க   இவனுக  அறிவை எங்க  சேர்த்தாங்க?

அன்று பிளாட்பாரம்... இன்று கோடீஸ்வரர்... ஒரு அதிமுக விசுவாசியின் தில்லாலங்கடி கதை!

விகடன்.com :பிளாட்பார வியாபாரியாக இருந்த ஆளுங்கட்சியின் விசுவாசியான சிதம்பரம், இன்று பலகோடிக்கு அதிபதியாக இருக்கிறார். இவரை சென்னை சாஸ்திரி நகர் போலீஸார், நிலமோசடி வழக்கில் கைது செய்து விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. சிதம்பரத்தால் பாதிக்கப்பட்ட லண்டனில் டாக்டராக பணியாற்றும் சுப்பிரமணியத்திடம் பேசினோம்.
"என்னுடைய உறவினரான சிதம்பரம் மூலம் தமிழகத்தில் சில இடங்களை வாங்கினேன். ஆரம்பத்தில் இடங்களை சரியாக வாங்கிக் கொடுத்த அவர், ஒரு கட்டத்தில் என்னை ஏமாற்றி விட்டார். லண்டனில் நான் இருந்த சமயத்தில் எனக்கே தெரியாமல் சில இடங்களை பவர் மூலம் விற்றுவிட்டார். அடையாறில் உள்ள வீட்டை விற்றபோதுதான் சிதம்பரம் என்னை ஏமாற்றிய விவரம் எனக்குத் தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டால் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் போலீஸில் புகார் கொடுத்து மிரட்டுகிறார்.