Soodram - (எப். முபாரக்) : இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களை வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகள் பார்வையிடுவர்.
இதன்மூலம் பெருமளவான அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரக்கூடிய ஒரு துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.
கடந்த வருடத்திலிருந்து, கொடிய நோயான கொவிட்- 19 பெருந்தொற்று நோயின் தாக்கம் காரணமாக, நாட்டின் சுற்றுலாத்துறை முடங்கியதோடு, தற்போது கொஞ்சம் கொஞ்சமாகச் செழித்து வருகின்றது.
இலங்கையின் எந்த மாகாணத்திலும் இல்லாத அழகும் பிரமிப்புத் தோற்றமும் கவர்ச்சியும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நகரில் மட்டுமே உள்ளது.
கிழக்கு மாகாணத்துக்குச் சுற்றுலாச் செல்லும் வெளிநாட்டவர்களில், திருகோணமலைக்குச் சென்று மான்களுடன் படம் எடுத்துச் செல்லாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.
சனி, 7 ஆகஸ்ட், 2021
திரிகோணமலையில் உணவின்றி தவிக்கும் மான்கள் ..
திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம்!
நியூஸ்18 தமிழ் :மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டவர் கோவையைச் சேர்ந்த மகேந்திரன். 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்டு 1.50 லட்சம் வாக்குகள் பெற்றார். பின்னர், 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பின்னர் கமல்ஹாசனிடம் ஜனநாயகத் தன்மை இல்லை என்று கூறி கட்சியிலிருந்து முதல் ஆளாக மகேந்திரன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சந்தோஷ் பாபு குமரவேல் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
ஆப்கானில் உச்சக்கட்ட பதற்றம்..வெறும் 24 மணி நேரத்தில் 2முக்கிய நகரங்கள்.. தாலிபான்களின் அசுர வளர்ச்சி
ஆப்கானிஸ்தானில் கடந்த கடந்த 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்கப் படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் இருந்து வெளியேறத் தொடங்கிவிட்டன.
இன்னும் சில வாரங்களில் அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனை காலம் இதற்காகவே காத்திருந்த தாலிபான்கள், அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே தங்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர்.
தாலிபான்கள் தாலிபான்கள் கடந்த காலங்களைப் போல இல்லாமல், இந்த முறை தாலிபான்களின் திட்டம் புதிய வகையில் இருந்தது.
அகாலிதள இளைஞரணி தலைவர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை!
நக்கீரன் செய்திப்பிரிவு : பஞ்சாப் மாநிலத்தில், அகாலி தளத்தை சேர்ந்த இளைஞரணி தலைவர் விக்ரம்ஜித் சிங் மிதுக்கேரா, பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
முகத்தை மறைத்திருந்த நான்கு பேரை கொண்ட கும்பல் ஒன்று காரிலிருந்த விக்ரம்ஜித் சிங் மிதுக்கேராவை நோக்கி 15 குண்டுகளை சுட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பற்றி அறிந்ததும் எஸ்எஸ்பி சதீந்தர் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் அப்பகுதியிலுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி பதிவை கொண்டு போலீஸார் குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.
பட்டப்பகலில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோவில் தங்கத்தை தன் வசமாக்கிய நீரஜ் சோப்ரா - ஈட்டி எறிதலில் வரலாற்று சாதனை
மாலைமலர் :டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வென்று கொடுத்துள்ளார்.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார்.
இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நீரஜ் சோப்ரா துவக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்து முதலிடத்தில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றார். ஜெர்மனி வீரர் வெபர், செக் குடியரசு வீரர்கள் வெஸ்லி, வத்லெஜ், பாகிஸ்தான் வீரர் நதீம் ஆகியோர் நீரஜை பின்தொடர்ந்தனர். ஆனால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
ஸ்ரீரங்கம், சமயபுரம், மலைக்கோட்டை கோவில்களில்தமிழில் அர்ச்சனை!
தினத்தந்தி :ஸ்ரீரங்கம், சமயபுரம், மலைக்கோட்டை கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
தமிழில் அர்ச்சனை திட்டம்... இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 47 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆவணப்பட (கக்கூஸ்) இயக்குனர் திவ்வியா பாரதியின் பாஸ்போர்ட் தடை நீங்கியது
Divya Bharathi : விளிம்புநிலை மக்களுக்கான எனது தொடர் போராட்டங்களுக்காக 2009ல் இருந்து என் மீது தொடரப்பட்ட வழக்குகளால்
2016 ல் எனக்கு Passport மறுக்கப்பட்டது.
அன்றிலிருந்து துவங்கிய போராட்டம் சென்ற வாரம் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முடிவுக்கு வந்தது.
ஆம் மதிப்பிற்குரிய நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் அவர்கள் எனது பாஸ்போர்ட்டை 4 வாரங்களுக்குள் தர சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார்.
எனது ஆவணப்படங்களுக்கு அரசு தொடுத்த பெரிய பொய் வழக்குகள் அனைத்தையும் முடித்து விட்டாலும், 2009ல் சட்டக்கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது தலித் மாணவர்களுக்கான அரசு விடுதியில் மாணவர் ஒருவர் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அதை கண்டித்தும் தலித் மாணவர் விடுதிகளை தரம் உயர்த்த கோரியும் நடந்த மாணவர்களின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாக கூறி என் மீது தொடுக்கப்பட்ட வழக்கை காரணம் காட்டி மீண்டும் பாஸ்போர்ட் இரண்டு மாதங்களுக்கு முன் மறுக்கப்பட்டது.
பாஸ்போர்ட் இல்லாத ஒற்றை காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகளை கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து தவறவிட்டு வருகிறேன்.
தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் தாரகை கே.தவமணி தேவி!
aanthaireporter.com :தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி கே.தவமணி தேவி!
ஆம்.. இன்றளவும் தமிழ் திரை உலகின் முதல் கவர்ச்சி கதாநாயகி என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரிவர்… இத்தனைக்கும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தந்தை கதிரேச சுப்பிரமணியன் கண்டியில் நீதியரசராக இருந்தவர்… தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்த்து சீனியர் பி.ஏ., பட்டம் பெற செய்தவர்… ஆனாலும் நடிப்பில் உள்ள மோகத்தால் தந்தையின் அனுமதியை போராடிப் பெற்று சினிமாவில் நடிக்க தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டவர். எல்லிஸ் ஆர்.டங்கன் தனது ‘சதி அகல்யா’(1937) படத்தில் கதாநாயகியாக தவமணிதேவியை அறிமுகம் செய்தார்… உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே கால் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி இவர்.
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021
பிளாஸ்டிக் தின்னும் பூஞ்சை - பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு செரித்து விடும் ...
BBC : பிளாஸ்டிக் தின்னும் பூஞ்சை -
பயோம் என்கிற உயிரியல் நிறுவனத்தில் உள்ள முதன்மை உயிரித் தொழில்நுட்பவியலாளர் சமந்தா ஜென்கின்ஸ்...
நிறுவனத்துக்காக சமந்தா ஜென்கின்ஸ் பூஞ்சைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது ஒரு பூஞ்சை செய்த செயல் அவரது கவனத்தை ஈர்த்தது.
அந்த குடுவையை ஒரு ப்ளாஸ்டி பஞ்சால் மூடி வைத்திருந்தார்கள். அந்தப் பஞ்சைத் தின்றுவிட்டு பூஞ்சை வெளியில் வந்துவிட்டது.
உயிரியல் அடிப்படையில் காப்பிடுத் தகடுகள் உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில், முற்றிலும் புதிய ஒரு வழியை இந்தப் பூஞ்சை திறந்துவைத்திருக்கிறது.
இப்போது இந்தப் பூஞ்சையை இன்னும் செயல்திறன் மிக்கதாக மாற்றி, ப்ளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் ஒழிக்க முடியுமா என்று பயோம் ஆராய்ந்து வருகிறது.
தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி அர்ச்சனை.. பக்தர்கள் உற்சாக வரவேற்பு
இதேபோல் தஞ்சை பெரிய கோவிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி இன்று அர்ச்சனைகள் நடைபெற்றது. இதை பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என கடந்த காலங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து!
மின்னம்பலம் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று (ஆகஸ்டு 6) ரத்து செய்யப்பட்டுள்ளது.
2011-16 அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி வாஙகித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் மத்திய குற்றப் பிரிவுக்கு சென்றனர்.
அதன் பேரில் செந்தில்பாலாஜி மீது வழக்குப் பதியப்பட்டது. பிறகு இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது
சில நாட்களுக்கு முன்பு கூட இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, “அமைச்சர் என்பதால் வழக்கில் இருந்து ஆஜராவதற்கு விலக்கு அளிக்க முடியாது” என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு -வழிபாட்டு தலங்களுக்கு புதிய கட்டுப்பாடு!
மாலைமலர் : தமிழ்நாட்டில் ல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு -வழிபாட்டு தலங்களுக்கு புதிய கட்டுப்பாடு
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு நிலவரங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. அவ்வகையில், தற்போது நடைமுறையில் உள்ள, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்டு 9-ந்தேதியுடன் முடிகிறது.
இதையடுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்கவும், கொரோனா விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இன்று அன்னை தமிழில் அர்ச்சனை.. விரைவில் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி
Vigneshkumar - Oneindia Tamil : சென்னை: "அன்னை தமிழில் அர்ச்சனை" என்ற திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் விரும்பினால் இனி கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று முதலாவதாகச் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் தமிழ் மொழியில் அர்ச்சனை தொடங்கப்பட்டது.
தமிழில் குடமுழுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தமிழ் மொழியில் நடத்தப்பட்ட வழிபாட்டைத் தொடங்கி வைத்து, வழிப்பட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "பெரும்பான்மை மக்கள் விருப்பப்பட்டால் தமிழ்நாட்டிலுள்ள அக்கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்யப்படும்.
அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ் பௌத்தத்தை சிங்கள சமூகத்திடம் கொண்டு சேர்த்த தருமரதன தேரோ - மயிலை சீனி வேங்கடசாமி
இக்கட்டுரையை அவர் தமிழ் நாட்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரருக்கு (Pandit Hisselle Dhammaratana Mahāthera) வெள்ளிப் பதக்கம் வழங்கிக் கௌரவப்படுத்திய போது எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. அவர் உயிருடன் இருந்த போது எழுதப்பட்ட கட்டுரை இது. 04.06.1972 அன்று அவர் காலமானார். இக்கட்டுரையை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தனது 80 வது வயதில் 08.07,1980 அன்று காலமானார்.
ஹிஸ்ஸெல்லெ தருமரதன தேரர் சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் பலவற்றை சிங்களத்துக்கு மொழிபெயர்த்து வெளியிட்டு இன்னும் பல தமிழ் இலக்கியங்களை சிங்களச் சமூகத்துக்கு கொண்டு போய் சேர்த்தவர்களில் முதன்மையானவர் என்று கூறலாம்.
வியாழன், 5 ஆகஸ்ட், 2021
தயாரிப்பாளர் சங்கங்களை இணைக்கும் திமுக: மீண்டும் சினிமா அரசியல்!
ஆனால் கலைஞர் கருணாநிதியின் குடும்பமும் திரையுலகில் கோலோச்சியதால், எந்த சினிமா துறை அவரது அரசியல் வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததோ, அதுவே பல சர்ச்சைகளிலும் அவரை சிக்க வைத்தது. 2011ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தில் இருந்த அவரது தலைமையிலான திமுக கூட்டணி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவ காரணங்களில் ஒன்றாக சினிமா துறையும் அமைந்துவிட்டது.
பாடப்புத்தகத்தில் சாதிப் பெயர் நீக்கம்: லியோனி விளக்கம்!
இது தொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி
தலித் வீராங்கனைகளாலேயே இந்தியா தோற்றது” - சாதி வெறியால் வந்தனாவின் குடும்பத்தை இழிவுசெய்த இளைஞர்கள்!
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்!
மாலைமலர் : அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் (80) உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது காலமானார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1991 ஆம் ஆண்டு அதிமுகவில் ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சராக இருந்த மதுசூதனன், 2010 ஆண்டு முதல் அதிமுகவின் அவைத்தலைவராக செயலாற்றி வந்தார்.
இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக பிரிந்திருந்த நிலையில், கட்சியின் சின்னம், கொடி ஆகியவையை தேர்தல் ஆணையம் மதுசூதனிடமே வழங்கியது.
ஒலிம்பிக் மல்யுத்தம்- வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்
மாலைமலர் : டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் ரவிக்குமார் தாஹியா, நடப்பு உலக சாம்பியன் ஜாவூர் உகுவேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
ஒலிம்பிக் மல்யுத்தம்- வெள்ளிப் பதக்கம் வென்றார் ரவிக்குமார்
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர்.
டெல்லியை உலுக்கும் 9 வயது சிறுமியின் மரணம்: 'பாலியல் வல்லுறவு என பெற்றோர் புகார்'
BBC : டெல்லியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி கொல்லப்பட்டதாக கூறப்படும் 9 வயது சிறுமி விவகாரம், தலைநகரில் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடியிருப்பு பகுதிக்கு இன்று பிற்பகல் சென்றார்.
சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், "பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமி என்றாலும் அவரும் இந்தியாவின் மகள்," என்று தமது ட்விட்டரில் தகவலைப் பகிர்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "பெற்றோரின் கண்களில் வரும் நீர் ஒன்றை தெளிவாகக் கூறுகிறது. தங்களுடைய மகளும் இந்த நாட்டின் குடிமகள்தான். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை அவர்களின் கண்ணீர் உணர்த்துகிறது. அந்த பாதையில் நான் அவர்களுடன் துணை நிற்கிறேன்," என்று கூறினார்.
இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள்
அல்லது பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடிய அவரது
உறவினர்கள், வசிப்பிடம் போன்ற தகவல்களை பொதுவெளியில் தெரிவிப்பது குற்றமாக
கருதப்படும்.இந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி, அவர்கள் வசிப்பிடம் அருகே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், தமது காரில் சிறுமியின் பெற்றோரை அமர வைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த காட்சியை ஊடகங்கள் பதிவு செய்யவும் அவர் அனுமதித்தார்.
சிறுமியின் உயிரைக் குடித்த குளிர்பான ஆலை தற்காலிக மூடல்!
நக்கீரன் : சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த சதீஷ், காயத்திரி தம்பதியினரின் இளையமகள் தாரணி (13). இவர் நேற்று மாலை வீட்டின் அருகிலுள்ள மளிகைக் கடையில் குளிர்பானம் மற்றும் ரஸ்னா வாங்கி குடித்துள்ளார்.
குளிர்பானத்தை சிறுமி குடித்த சிறிது நேரத்தில் வாந்தி ஏற்பட்டதோடு மூக்கில் சிவப்பு நிற சளி வந்ததைக் கண்டு சிறுமியின் சகோதரி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
தாரணியின் தாய் வந்து பார்ப்பதற்குள் மயங்கி விழுந்த சிறுமியின் உடல் நீல நிறத்தில் மாறியிருக்கிறது. உடனே, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதேபோல் அந்த சிறுமி குடித்த குளிர்பானத்தின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
புதன், 4 ஆகஸ்ட், 2021
கவிஞர் தேன்மொழிதாஸ் .. திரையில் பூக்கும் அத்திப்பூக்கள்
Lenin Ernesto : தமிழ்த் திரையிசை பாடல்கள் பெரும்பாலும் ஆண்களால் கட்டமைமக்கப்பட்டது. விதிவிலக்காக மட்டுமே சில பெண் பாடலாசிரியர்கள் இருந்தனர்.
பெண்பாடலாசிரியர்களின் பெயரை கூறச் சொன்னால் தாமரை, உமாதேவி என்பதோடு பலரும் தடுமாற தொடங்கிவிடுவர்.
ஆனால், நிறைய பெண்கள் பாடல் எழுதியுள்ளனர் அவர்களில் முக்கியமானவர் தேன்மொழிதாஸ்.
இவரது பாடல்களில் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று கண்களால் கைது செய் படத்தில் இடம்பெற்ற 'தீக்குருவி' பாடல்.. காதலும் காமமும் கலந்த அப்பாடலில் அவரது வரிகள் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியிருக்கும்...
குறிப்பாக தகர வரிசையிலமைந்த சொற்களை கொண்டு அமைத்த வரிகள்
"தீகுருவியாய் தேன்கனியினை
தீகைகளில் தீஞ்சுவையென
தீப்பொழுதினில்
தீண்டுகிறாய் தந்திரனே" ஒவ்வொரு சொல்லுமே தகர சொல்லாய் அமைத்திருப்பார்.. அது சந்தத்தையே அழகாக்கிவிடும்...
அதே போல அவரது சிறந்த பாடல்களில் ஒன்று சரவணா படத்தில் இடம்பெற்ற 'காதல் வந்தும் சொல்லாமல்'
தமிழில் அர்ச்சனை: அறிவிப்புப் பலகையை வெளியிட்ட முதல்வர்!
தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்பது பலரது விருப்பமாகவும் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சேகர்பாபு கோயில் நிலங்களை மீட்பது, கோயில்களில் ஆய்வு மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை
மாலைமலர் :டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஐயப்பன் அப்ரூவர் ஆனதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
சென்னையை சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வைத்து கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.
டாக்டர் சுப்பையாவை தலை, கழுத்து, கை, என்று 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் என்ற இடத்தில் உள்ள பல கோடி சொத்துக்காக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
குடிசை மாற்றுவாரியமும் கிளப் ஹவுஸ் விவாதங்களும்
Kathir RS : ஒரு சில நாட்களுக்கு முன் நான் கூவம் ஆற்று குடிசைகள் பற்றி எழுதிய பதிவில் பல நண்பர்கள் என்னிடம் முரண் பட்டனர்.
இத்தனைக்கும் அப்பதிவை அரசு மீது நம்பிக்கை இழக்க வேண்டாம் அவர்கள் நிச்சயம் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பார்கள் என்ற கோணத்தில்தான் எழுதியிருந்தேன்.
சில நெருங்கிய நண்பர்கள் கூட நீங்கள் குடிசை மாற்று வாரியத்திற்கு எதிராக எழுதியது போலிருக்கிறது என்றனர்.விளக்கிச் சொன்னபின் புரிந்து கொண்டனர்.
அதற்கு அடுத்த நாள் க்ளப் ஹவுசில் ஒரு திமுக ஆதரவாளர்கள் நிரம்பிய ஒரு சோசியல் அறையில் இதே பிரச்சனை பேசப்பட்டது.
சுமார் 4 மணி நேரம் நடந்த விவாதம் திமுகவிற்கு எதிராக திரும்பியது.சட்டென திமுகவோட பழைய கதையெல்லாம் எடுத்து விட்ருவேன் என ஒரு நபர் பேசினார்.
சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீதான பயங்கர தாக்குதல் :
Thirumeni Saravanan : சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீதான பயங்கர தாக்குதல் :
சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்
சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய் (03-08-2021 ) மாலை சுமார் 6 45 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கையில் பெரிய பட்டாக்கத்தி உடன் உள்ளே நுழைந்துள்ளார்.
அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சி மற்றும் கணிப்பொறி அலுவலகத்தின் அலங்கார கண்ணாடிகள் உள்ளிட்ட அனைத்தையும் கையில் இருந்த பட்டாக்கத்தியால் அடித்து நொறுக்கி சின்னாபின்னமாக்கி உள்ளார்.
அங்கு பணியில் இருந்தவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
*சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் அத்துமீறி நுழைந்த மர்ம நபரால் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
இது தொடர்பான அறிவிப்புப் பலகையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இந்தச் சூழலில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அமைச்சர் சேகர் பாபு கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
அன்னை தமிழில் அர்ச்சனை' என்று தொடங்கப்படும் இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 06) அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்படவுள்ளது.
முதல்வர் வெளியிட்டார் முதல்வர் வெளியிட்டார்
இந்நிலையில் இதற்கான அறிவிப்புப் பலகையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021
300 பெண்களை சீரழித்த காமகொடூரன்! ஆந்திரா .. வீடியோ காட்டி மிரட்டி மிரட்டியே.. அதிர்ச்சியில் மக்கள்
Velmurugan P - Oneindia Tamil : ஹைதராபாத் : சமூக வலைதளத்தில் காதல்வலை வீசி பெண்களின் நிர்வாண படங்களை காட்டி மிரட்டி 300க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களின் போட்டோக்களையோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் போட்டோக்களையோ பதிவிடுதை வைத்து, குறிவைத்து நட்பு பாராட்டி பெண்களை வீழ்த்தி இருக்கிறார் இந்த இளைஞர்.
பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோதட்டூர் சென்னுப்பள்ளி கிராமத்தில் பிறந்தவர்பிரசன்னகுமார் (28). இன்ஜினியரிங் படித்து வந்த இவர் படிப்பை பாதியிலேயே கைவிட்டிருக்கிறார்.
பின்னர் வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில் செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.
‘போலி’ போலிஸ் உதவி கமிஷனர் விஜயன் சிக்கினார்
கலைஞர் செய்திகள் : போலிஸ் அதிகாரி எனக் கூறி போலியாக வலம் வந்தவரை போலிஸார் கைது செய்தனர்.
டிப் டாப் உடையில் ‘போலி’ போலிஸ்... உதவி கமிஷனராக வலம் வந்த நபர்: நிஜ போலிஸிடம் சிக்கியது எப்படி?
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு சாலையில் போலிஸார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சைரன் பொருத்திய போலிஸ் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.
அப்போது, போலிஸார் பதற்றமடைந்து உயரதிகாரி யாரோ ஒருவர் வருவதாக நினைத்துள்ளனர். பின்னர் கார் அருகே வந்தபோது, ஓட்டுநரைத் தவிர வேறு யாரும் காரில் இல்லை.
''வடக்கிந்திய கம்பெனி தயாராகி வருகிறது''- North Indian Company மல்ஹாசன் விமர்சனம்!
அந்த வகையில் புதிதாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் அணைக்கட்டியே தீருவோம் என உறுதியாகக் கூறியுள்ள நிலையில்,
தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணை கட்ட தமிழ்நாடு பாஜக அனுமதிக்காது இதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாஜகவின் இந்த நிலைப்பாடு குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
அதில், "மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. கிழக்கிந்திய கம்பெனி போல வடக்கில் வடக்கிந்திய கம்பெனி தயாராகி வருகிறது" என விமர்சித்துள்ளார்.
சுவீடன் (இலங்கைப் பெண்) மெட்டில்டா கார்ஸன் ஒலிம்பிக் போட்டியில் குதிரையேற்ற வீராங்கனை .
Vinoth Balachandran SLPP : 142 கோடி ரூபா பெறுமதியான குதிரையுடன், களமிறங்கும் இலங்கைப் பெண் மெட்டில்டா கார்ஸன் .
இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளார். இவர் குதிரையேற்ற போட்டியில் தகுதிகாண் முதல் சுற்றில் நாளை போட்டியிடவுள்ளார்.
இந்தப்போட்டி இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
போட்டி தொடர்பில் மெடில்டா கால்ஸன் கூறுகையில், 6 மில்லியன் யூரோ (சுமார் 142 கோடி இலங்கை ரூபா) பெறுமதியான குதிரையுடன் தான் களமிறங்குவது வெறும் கையுடன் செல்வதற்கு அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜேர்மனியில் வாழ்ந்துவருகின்ற மெட்டில்டா, இலங்கை சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுகின்ற முதலாவது குதிரையேற்ற வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
லல்லு பிரசாத், முலாயம் சிங் டெல்லியில் சந்திப்பு
மாலைமலர் : உத்தர பிரதேசம் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
டெல்லியில் லாலு பிரசாத், முலாயம் சிங் திடீர் சந்திப்பு இருவரும் முன்னாள் பிரதமர் வி பி சிங்கின் தளபதிகளாக இருந்தவர்கள்
புதுடெல்லி: ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தலைநகர் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர்.
முலாயம் சிங் யாதவின் மகனும், சமாஜ்வாடி கட்சியின் தற்போதைய தலைவருமான அகிலேஷ் யாதவும் இந்த சந்திப்பில் உடன் இருந்தார்.
இதுதொடர்பாக லாலு பிரசாத் யாதவ் டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான சந்திப்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூடு..!
நக்கீரன் - செல்வகுமார் : தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், நாகை மீனவர் தலையில் குண்டு பாய்ந்தது பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்,
10 மீனவர்கள் கடந்த 28ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நேற்று (01.08.2021) மாலை கோடியக்கரைக்குத் தென்கிழக்கே இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில்,
அங்கு அதிவேகமாக வந்த இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு மீனவர்களின் விசைப்படகுகளைக் குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பார்த்திடாத மீனவர்கள், அதிர்ச்சியடைந்து படகுகளில் படுத்துக்கொண்டனர்.
சொகுசு வீடுகளை கட்டி விற்பனை செய்ய முடிவு செய்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்!
நக்கீரன் - மகேஷ் : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் திருச்சி மன்னார்புரத்தில் 15 மாடிகளுடனும், வரகனேரியில் 14 மாடிகளுடனும் பிரம்மாண்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுவருகின்றன.
இதன்படி மன்னார்புரத்தில் அரசு ஊழியர்களுக்கு வாடகை அடிப்படையில் வீடு வழங்கும் வகையில் 3.30 ஏக்கர் பரப்பளவில் ரூ. 103.5 கோடி செலவில் 464 வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன.
4 கட்டடங்களாக (ப்ளாக்) அமைக்கப்படும் இக்குடியிருப்பின் 2 கட்டடங்கள், 15 தளங்களுடனும், மீதமுள்ள 2 கட்டடங்கள் 14 தளங்களுடனும் கட்டப்படுகின்றன.
இதிலுள்ள ‘ஏ’ வகை வீடுகள் 1,062 சதுர அடியிலும், ‘பி’ வகை வீடுகள் 969 சதுர அடியிலும், ‘சி’ வகை வீடுகள் 828 சதுர அடியிலும், ‘டி’ வகை வீடுகள் 678 சதுர அடி பரப்பளவிலும் கட்டப்படுகின்றன.
காந்தி மார்க்கெட்டிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் வரகனேரி பகுதியில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய 14 மாடிகளுடன் கூடிய குடியிருப்பு கட்டப்பட்ட உள்ளது.
3 பிரிவுகளில் சுமார் ரூ. 96.75 கோடி செலவில் 192 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இவற்றில் முதற்கட்டமாக உயர் வருவாய் பிரிவினருக்கான வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.
14 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் இக்கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும் தலா 4 வீடுகள் கட்டப்படுகின்றன.
இதன் விலை ரூ. 66.82 லட்சம் முதல் ரூ. 69.38 லட்சம் வரையிலும் நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது.
தூத்துக்குடி: கொற்கை அகழாய்வில் 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிப்பு!
அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 7 அடுக்கு செங்கல் கட்டடம் கொற்கையில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணியில் கடந்த சில நாள்களுக்கு முன்னர், நான்கு அடுக்கு கொண்ட திரவப் பொருள்கள் வடிகட்டும் சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நேற்று 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் தொல்லியல் அகழாய்வு பணிகள், கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கொற்கையில், கடந்த 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் தமிழக தொல்லியல்துறை சார்பில் ஏற்கெனவே அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. அந்த அகழாய்வுப் பணிதான், தமிழக தொல்லியல்துறை உருவான பின்னர், செய்த முதல் அகழாய்வுப் பணியாகும். அந்த அகழாய்வில், சுமார் 2,800 ஆண்டுகள் பழைமையானது கொற்கை நகரம் என்பது உறுதியானது.
மாநிலங்களவை சீட் எவ்வளவு முக்கியம் தெரியுமா? – கடுப்படித்த அமித் ஷா; அமைதிகாத்த அ.தி.மு.க
அமித் ஷாவுடன் அ.தி.மு.க தலைவர்கள் உள்ளாட்சி கேரட்டை நம்பி, அ.தி.மு.க-வின் மூட்டைகளை பொதி சுமப்பதற்கு பா.ஜ.க தயாராக இல்லை என்பதே கமலாலயத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்.
தி.மு.க-வின் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு அஸ்திரம் பாய்ந்திருக்கும் நிலையில், அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்குப் படையெடுத்து திரும்பியிருக்கிறது அ.தி.மு.க டீம். ஜூலை 26-ம் தேதி தன்னைச் சந்தித்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவிடம், எந்தவித உத்தரவாதத்தையும் பிரதமர் மோடி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சோர்ந்து போனவர்கள் அடுத்தநாளே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து, அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் மீது தி.மு.க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுப் புலம்பியிருக்கிறார்கள். அமித் ஷாவும் பாசிட்டிவ்வாக எந்த பதிலும் சொல்லவில்லையாம்.
திங்கள், 2 ஆகஸ்ட், 2021
10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை வலுகட்டாயமாக போரில் ஈடுபடுத்தியுள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் – ஏமன் குற்றச்சாட்டு !
thesamnet.co.uk - அருண்மொழி : தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும்,
ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் “ ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் போரில் குழந்தைகளை பயன்படுத்துவதாக ஏமன் நாட்டின் தகவல் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞர் படத்தை குடியரசு தலைவர் திறந்து வைத்தார்
தினத்தந்தி :சென்னை தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள இன்று (02.08.2021) மதியம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்டைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அவரது வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. சென்னை வந்ததும் கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார் ஜனாதிபதி . மாலை 5 மணிக்கு சட்டமன்றத்தில் விழா துவங்குகிறது. விழாவில் கலந்துகொள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தலைமைச் செயலகம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் வாழை மர தோரணம், வண்ண வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
தினமலர் : சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை
tamil.news18.com : 5 நாள் பயணமாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார். இதனால் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
இதற்காக குடியரசுத்தலைவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணியளவில் சென்னை வருகிறார்.
பின்னர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து மாலை 4.35 மணியளவில் புறப்பட்டு சாலை மார்க்கமாக சட்டசபை விழா அரங்கிற்கு மாலை 5 மணிக்கு வருகை தர இருக்கிறார்.
இலங்கை போரில் - 4 மனித உரிமை ஆர்வலர்களின் நேரடி அனுபவங்கள்.. THE UNIVERSITY TEACHERS FOR HUMAN RIGHTS, JAFFNA
Balasingam Balasooriyan : இலங்கை போரின்போது நடந்தது என்ன? - 4 மனித உரிமை ஆர்வலர்களின் நேரடி அனுபவங்கள்
இலங்கையில் உள்நாட்டுப் போர் சூடுபிடித்தபோது நடைபெற்ற அனைத்து தரப்பினரின் அட்டூழியங்களையும் மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களுமான 4 பேர் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டதால் மற்ற 3 பேர் நாட்டை விட்டு வெளியேறினர்.
போருக்குப் பிறகு நாடு திரும்பிய அந்த 3 பேரையும் யாழ்ப்பாணத்தில் ‘தி இந்து’ சார்பில் மீரா ஸ்ரீநிவாசன் சந்தித்துப் பேசி உள்ளார். அந்த உரையாடலில் இருந்து...
இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் கழித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்வியாளர்கள் பலர் இணைந்து 1988-ல் மனித உரிமை அமைப்பை (THE UNIVERSITY TEACHERS FOR HUMAN RIGHTS, JAFFNA) தொடங்கினர்.
மீண்டும் ஊரடங்கிற்கு நிர்பந்தித்து விடாதீர்கள்... ''-முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 68 நாட்களுக்கு பிறகு நேற்று வரை மூன்றாவது நாளாக கரோனா பாதிப்பு சற்று அதிகரித்தது.
இரண்டாயிரத்தை நெருங்கும் அளவிற்கு கரோனா ஒருநாள் பாதிப்புபாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி சென்னையில் 9 இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 'மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள் என கடுமையாக கேட்டுக்கொள்கிறேன்'' என பேசியுள்ளார்.
கொரோனா சான்றிதழ் கட்டாயம் கேரள பயணிகள் தமிழகம் வர கட்டுப்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
dhinakaran : சென்னை: கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். மேலும், கேரளாவில் இருந்து தமிழக எல்லை வழியாக வரும் பயணிகளின் கொரோனா சான்று சரிபார்க்கப்படும். அதன் பிறகே அவர்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறை கேரள ரயில் பணிகளுக்கும் கடைபிடிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் நேற்று சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு நடக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைமுறையை ஆய்வு செய்தார். அதன்பின்பு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021
கோவில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு” : அமைச்சர் சேகர் பாபு பேட்டி!
கலைஞர் செய்திகள் : தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை பிராட்வேயில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு அப்பகுதி மக்கள் 1000 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசிய பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “தி.மு.கவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என எப்போதும் விமர்சனம் செய்யும் பா.ஜ.க தலைவர்களே தி.மு.க ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை பாராட்டி வருகின்றனர்.
வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து... ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது பதக்கம்
மாலைமலர் : இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து... ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது பதக்கம்
டோக்கியோ : ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து அரையிறுதி வரை முன்னேறினார்.
ஆனால், அரையிறுதியில் சீன தைபேய் வீராங்கனை தை சூ-யிங்கிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார்.
இதையடுத்து மற்றொரு அரையிறுதியில் தோல்வி அடைந்த சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இன்று எதிர்கொண்டார் சிந்து.
துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து, முதல் செட்டை 21-13 என வசமாக்கினார். அடுத்த செட்டில் சீன வீராங்கனை சற்று நெருக்கடி அளித்தார்.
தாலிபன்கள் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் நகரங்களில் நுழைந்திருக்கிறார்கள்.
செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து மேற்குலக படைகளும் ஆப்கனை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்கிற அறிவிப்பு வந்ததில் இருந்து, தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் கிராமப் புறங்களில் அதிவேகமாக முன்னேறினர்.
மேலே குறிப்பிட்ட மூன்று நகரங்களின் நிலை என்ன ஆகும், அரசுப் படைகளால் எவ்வளவு நேரம் தாக்குபிடிக்க முடியும் எனத் தெரியவில்லை.
ஏற்கனவே தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதி பகுதிகளைக் கைப்பற்றிவிட்டனர். இதில் இரான் மற்றும் பாகிஸ்தான் உடனான ஆப்கானிஸ்தானின் முக்கிய எல்லைப் பகுதிகளும் அடக்கம்.
சனிக்கிழமை நிலவரப்படி, லஷ்கர் கா பகுதியில் ஆளுநர் அலுவலகத்துக்கு சில நூறு மீட்டர் தொலைவு வரை தாலிபன்கள் முன்னேறிவிட்டனர். பொழுது சாய்ந்ததால் சற்று பின்தங்கினர்.
Dr. De Datta... , ஐ ஆர் 8 நெல்லும் பழம்பெரும் நடிகை எல் விஜயலட்சுமியும்
மதுரை மன்னன் : 1960’ களில் ஆசியக்கண்டத்தில் உருவான தானியப் பஞ்சத்தைப் போக்கும்வகையில்
சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகமான பிலிப்பைன்சில் உள்ள International Rice Research Institute ல் “IR8 நெல்” ஐ 1966 ல் கண்டுபிடித்தவர் டாக்டர் தத்தா என்பவர்
இவர் சர்வதேசப்புகழ்பெற்ற இந்திய வேளாண் விஞ்ஞானியாகும்
சர்வதேச அளவில் பல விருதுகள் பெற்ற, Dr. De Datta, (Surajit Kumar De Datta) பிறந்த தினம் இன்று.
(01 ஆகஸ்ட் 1936)
சுமார் 27 வருடங்கள் வேளாண் துறையில் சர்வதேச அளவில் பல பதவிகள் வகித்த இவர் 1991 ல் இருந்து அமெரிக்கா Virginia ல் Virginia Tech ன் இயக்குனர் மற்றும் துணைத்தலைவராக 2013 வரை பதவி வகித்தார். இவர் பிரபல திரைப்பட நடிகை L.விஜயலக்ஷ்மியின் கணவராவார்,
இவர்களது திருமணம் 1969 ல் நடைபெற்றது,
முன்னாள் நடிகை எல் .விஜயலக்ஷ்மி தற்போது அமெரிக்கா Virginia ல் உள்ள Virginia Polytechnic University ன் பட்ஜெட் திட்ட அதிகாரியாக உள்ளார்.
ஒரு ஹெக்டேருக்கு சுமார் 5000 முதல் 6500 கிலோ வரை மகசூல் தரக்கூடிய “IR8 நெல்” ஐ கண்டுபிடித்து 1960’ களில் இந்தியா உள்பட ஆசியக்கண்டத்தில் உருவான தானியப்பஞ்சத்தைப் போக்கி மக்களை பசி, பட்டினி பஞ்சத்திலிருந்து காத்து பசுமைப்புரட்சியை அக்காலகட்டத்தில் Dr. De Datta உருவாக்கினார்.
“IR8 நெல்” Dee-gee-woo-gen என்ற நெல் ரகத்தையும், Peta என்ற நெல் ரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும்.
'முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
நக்கீரன் செய்திப்பிரிவு : முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்து ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவிற்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 'மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலை தொடர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.