சனி, 8 ஆகஸ்ட், 2015

இடஒதுக்கீட்டை இழக்க தயாராகிறார்களா தேவேந்திர குல வேளாளர்கள்? - கல்வியாளர்கள், அரசியல், சமூகப் பிரமுகர்கள் கருத்து

எவ்வளவோ பாரம்பரிய பெருமையும், கல்வித்திறமையும் இருந்தாலும்கூட எஸ்.சி. என்று எங்களை இழிவாக அழைக்கிறார்கள். இந்த இழிநிலை மாற இடஒதுக்கீட்டையும் கூட இழக்கத் தயாராக இருக்கிறோம்’என்று மதுரையில் தேவேந்திரகுல வேளாளர்கள் அறிவித்துள்ளது புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.
மதுரையில் தேவேந்திரர் தன்னார்வ அமைப்பின் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்றார். இதில் பேசிய அறக்கட்டளை தலைவர் தங்கராஜ், “தேவேந்திர சமுதாயத்தினர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் கிடையாது. இவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் அல்ல, பசுவை தெய்வமாக வணங்குபவர்கள். மீனாட்சியம்மன் கோயில் உட்பட பல கோயில்களை கட்டியவர்கள். நம்மளுக்கு வேற சந்தேகமுங்கோ , யார்யாரோ ராஜ்யசபா லோக்சபா சட்டசபை சீட்டு வாக்குறுதிக்காக சூதாடுராய்ங்கோ 

தலித் மக்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பா.ஜ.க. அரசு திட்டமிடுகிறதா? திருமாவளவன் கேள்வி

தலித் மக்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பா.ஜ.க. அரசு திட்டமிடுகிறதா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக தலைவர் அமித்ஷா இரண்டு நாட்களுக்கு முன் மதுரையில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். தலித் மக்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கு பாஜக முயற்சிக்கிறதோ என்ற ஐயத்தை அந்தக் கூட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. இதை தமிழக பாஜக தலைவர் தெளிவுபடுத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இடஒதுக்கீட்டை ரத்து செய்யப்போகிறோம் என்று கூறினால் மிகப்பெரிய எதிர்ப்பு வெடிக்கும் என்பதைப் புரிந்துகொண்ட பாஜகவினர் மிகவும் தந்திரமாக தேவேந்திரர்குல வேளாளர்களின் பெயரால் ஒரு சிலரைக்கொண்டு ஒரு கூட்டத்தை நடத்தி. ‘தங்கள் சமூகத்தை அட்டவணை சாதிகளின் பட்டியலிலிருந்து நீக்கிவிடவேண்டும், தங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை’ எனப் பேசச் செய்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 40 தொகுதிகள்? மோடி- ஜெ. பேச்சில் உடன்பாடு?

தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 40 தொகுதிகளை ஒதுக்க அண்ணா தி.மு.க. ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இடையேயான பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக தமிழக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த கூட்டணியில் இருந்து அனைத்து கட்சிகளுமே வெளியேறிவிட்டன

சண்டி வீரன் சிங்கப்பூரில் தடை! வண்டவாளம் வெளியே வருவதால் சிங்கப்பூர் கோபம்?

அதர்வா, ஆனந்தி நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் நேற்று வெளிவந்த படம் சண்டி வீரன். இப்படத்திற்கு கிராம பகுதிகளில் நல்ல வரவேற்பு இருந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தை சிங்கப்பூரில் தடை செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ஏனெனில் ஹீரோ சிங்கப்பூரில் வேலை செய்து விசா முடிந்து அங்கு தங்கியிருந்ததால் போலிஸிடம் பிடிப்பட்டு சிறையில் உள்ளார். அங்கு அடி வாங்கி கொண்டு ஊருக்கு வருவது போல் காட்சிகள் இருக்கும். இதனால் சிங்கப்பூர் தண்டனையை இப்படி படத்தில் வெளிப்படையாக காட்டுவதால் படத்தை அங்கு தடை செய்திருப்பதாக கூறப்படுகின்றது.  cineulagam.com

மரண தண்டனையை ஒழிக்க திரிபுரா தீர்மானம்

மரண தண்டனையை ஒழித்து விட்டு, வாழ்நாள் முழுவதுமான சிறைத்தண்டனையாக வழங்க வேண்டும் என்று இந்தியாவில் முதன் முறையாக திரிபுரா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302, கொடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கிறது. “உலகம் முழுவதும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று அனைத்து சர்வதேச சமூகமும் கோரி வருகின்றது. ஐநாவின் மனித உரிமை கவுன்சிலும் மரண தண்டனையை ஒழித்து தீர்மானம் இயற்றியுள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சில நாடுகள் தவிர பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்டு மரண தண்டனையை ஒழித்து விட்டன. இந்தியாவில் அனைத்து மனித உரிமை அமைப்புகளும் இடதுசாரி கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் 5 பெண்கள் அடித்துகொலை! மந்திரவாதிகள் என்ற சந்தேகத்தில்... 2000வது ஆண்டிலிருந்து 2012 வரை 2 ஆயிரம் பெண்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்

A group (of villagers) dragged the women out and beat them to death with sticks, accusing them of practising witchcraft,” Ranchi deputy police chief Arun Kumar Singh told AFP through phone.சனிக்கிழமையன்று அதிகாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் ராஞ்சியிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள மந்தர் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இரவில் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இந்தப் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்களை விட்டுவிடும்படி கோரியும்,
கற்களாலும் இரும்புக் கம்பிகளாலும் அந்தப் பெண்கள் அடித்துக் கொள்ளப்பட்டனர்.

ஒடிசா போலி சாமியார் சாரதி பாபா கைது


ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மிகவும் பிரபலமாக இருந்த போலி சாமியாரான சாரதி பாபா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பல்வேறு மோசடிகள், குற்றங்களில் ஈடுபட்டக் குற்றத்துக்காக சாரதி பாபாவை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது பலரையும் ஏமாற்றி பணம் பறித்ததாக பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
அவரது ஆசிரமத்தில் நடைபெற்ற சோதனையில்,  ரொக்கப் பணம், ஏராளமான தங்க, வெள்ளி நகைகள், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamani.com 

பாஜக - அதிமுக ரகசிய /கள்ள உறவு வெளிச்சத்துக்கு வந்தது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

பாஜக - அதிமுகவுக்கு இடையே இருந்த ரகசிய தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டியில், பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருந்தது என கடந்த இரு மாதங்களாக சொல்லி வந்தேன். தற்போது சென்னை வந்த மோடி, ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்து வந்திருப்பது இந்த உறவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியும் இரண்டொரு நாட்களில் மதுவிலக்கு கோரும் போராட்டத்தை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.dinamani.com 

உடல்நிலை சரியில்லை என கூறியது நாடகம்: ஜெ. மீது வைகோ தாக்கு

மதிமுக சார்பில் திராவிட இயக்க பயிற்சி பட்டரையை ஈரோட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1929ல் தந்தை பெரியார் திராவிட இயக்க பயிற்சி பட்டரையை அப்போது 15 தொண்டர்களை வைத்து தொடங்கினார். தமிழகத்திற்கு இன்றைய சூழலில் திராவிட இயக்க சிந்தனை மிகவும் அவசியமானது என்பதால் மதிமுக பயிற்சி பட்டரை தொடங்கப்பட்டுள்ளது. இதில் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். மதுவிலக்கு பூரணமாக அமல்படுத்த வேண்டும். மதுவிலக்குக்காக சசிபெருமாளின் உயிர் பறிபோகியுள்ளது.   இனி ஜெயலலலிதா உடல் ஆரோக்கியத்தையே தேர்தல் இஷுவாக கையாளுவார். அழுவதற்குதான் அடிமை மக்கள் இருக்கிறார்களே! குளுகோஸ் ஏற்றும் காட்சியும் இனி வரும்? படுத்துக்கொண்டே ஜெயிக்கும் பார்முலாதாய்ன்! வெளங்கிடும்.     

பார்களுக்கு 'குட்பை': 500 'ரெஸ்டோ பார்'களை துவக்க தமிழக அரசு முடிவு

 முறைகேட்டை தடுக்க, 'டாஸ்மாக்' கடைகளில் உள்ள பார்களுக்கு பதில், 500 'ரெஸ்டோ பார்'களை துவக்க தமிழக அரசு, முடிவு செய்து உள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,800 மதுக்கடைகள் உள்ளன. இதில், 4,000 கடைகளில் அரசு அனுமதியுடனும்; மற்ற கடைகளில் முறைகேடாகவும் பார்கள் செயல்படுகின்றன. போலி மது விற்பனைஅரசு அனுமதியுடன் செயல்படும் பார்களில், போலி மது விற்பனை; உரிமத் தொகை செலுத்தாதது; கூடுதல் விலைக்கு மது, நொறுக்கு தீனி விற்பனை போன்ற முறைகேடுகள் நடக்கின்றன.இதனால், 'குடி'மகன்கள், மது அருந்த அதிகம் செலவிடுவதுடன், சமூக பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இதையடுத்து, 'டாஸ்மாக்' கடைகளில் உள்ள பார்களை மூடிவிட்டு, 'ரெஸ்டாரென்ட்' என்று அழைக்கப்படும் உணவகங்களில், 'ரெஸ்டோ பார்'களை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது.  "500 உணவகங்களில், 'ரெஸ்டோ பார்'களை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது" பார் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10 லட்சம்..50 கோடி அள்ளீட்டாங்க ஒரே ஸ்ட்ரோக்கில்.. லஞ்சம் தான்..

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

பாலுறவுக்கு மறுத்த 19 பெண்களை படுகொலை செய்தனர் ஐ.எஸ். பயங்கரவாதிக

ஈராகில் பிணையக் கைதியாக பிடித்துவைத்துள்ள 19 பெண்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள்  சில பகுதிகளை கைபற்றி அதை  தனிநாடாக அறிவித்து உள்ளனர். தங்கள் பகுதியில் வாழும் குர்தீஸ் இன பெண்கள் மற்றும் சிறுவர்களை பிடித்து பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர். இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை 'பாலியல் 'அடிமைகளாக வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

கையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு…

அழுது முடித்த கண்களுக்கு..! குஜராத் படுகொலை,தலித்துகள் படுகொலை,
எதர்க்கும் வாய் திறவாமல் பக்காவான
பார்ப்பன வல்லரசு கனவு நாயகனாகி
ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியே
பாராட்டுமளவுக்கு
அப்துல்கலாம் மெய்யாலுமேமதங்களைக் கடந்த மாமனிதர்தான்!
றப்பின் துயரம்
புரிந்து கொள்ளக் கூடியதுதான்,
ஆனால்
சாவின் விளம்பரம்
சகிக்க முடியவில்லை.
கண்களை பிழிந்தெடுத்தன
காட்சி ஊடகங்கள்
காதுகளில்
சோகத்தை காய்ச்சி ஊற்றின

எங்கெங்கும் குமாரசாமிகள் by Savukku

maxresdefaultதமிழகத்தில் வைகுண்டராஜன் அடிக்கும் கொள்ளையும், அவர் ஆட்சியாளர்களுக்கு துணை போவதும் தங்கு தடையின்றி பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன.   அரசு, காவல்துறை நிர்வாகம் என்று பல அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், வைகுண்டராஜன், தற்போது, நீதித்துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். திமுகவாக இருந்தாலும் சரி.  அதிமுகவாக இருந்தாலும் சரி.    தாது மணல் கொள்ளை தங்குதடையின்றி தொடர்ந்து வந்தது. 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வைகுண்டராஜனின் கனிம சுரங்கத்தில் சட்ட விரோதமாக தாது மணல் அள்ளப்படுவதாக தொடர்ந்துவந்த புகார்களால், அந்த சுரங்கங்களில் அதிரடி சோதனை நடத்திய தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ்குமார் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.   இந்த அதிரடி சோதனைகளுக்காகத்தான் ஆஷிஷ் குமார் தூக்கப்பட்டார் என்பது பரவலாக பேசப்பட்டாலும், ஜெயலலிதா அரசு இது குறித்து எந்த கவலையும் படவில்லை.  ஜெயா டிவி மற்றும் மிடாஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் வைகுண்டராஜனின் தொழிற்சாலையில் சோதனை என்றால் ஜெயலலிதா சும்மா இருப்பாரா என்ன ?

Pakistan10-ம் வகுப்பில் சீக்கிய மாணவி சாதனை

லாகூர், ஆக. 7- பாகிஸ்தானில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் பஞ்சாப் மாகாணம் நங்கானா சாகிப் மாவட்டத்தைச் சேர்ந்த சீக்கிய மாணவி மன்பீர் கவுர் 1,100-க்கு 1,035 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அவரது சாதனையை கவுரவிக்கும் வகையில், அவருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாகிஸ்தானில் உள்ள பிரபல சீக்கிய அமைப்பான பாகிஸ்தான் குருத்வாரா பிரபந்தக் கமிட்டி இன்று அறிவித்துள்ளது மேலும், படிப்பில் சிறந்து விளங்கும் சீக்கிய மாணவர்களுக்காக ஒரு நிதியை உருவாக்கியுள்ளதாக அறிவித்த அந்த கமிட்டி, இதற்கு முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாய் நன்கொடையையும் வழங்கி உள்ளது.

போயஸ் கார்டனில் ஜெ.வுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது காவிரி பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய 21 பக்க மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். பிரதமராகப் பதவியேற்ற பின்னர் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று முதல் முறையாக தமிழகம் வருகை தந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ரோசையா, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் வரவேற்றனர்.  பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கைத்தறி தின நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார்.

ஆகஸ்ட் 6, 1945. போரில் ஈடுபடாத குழந்தைகளையும் பெண்களையும் அணுகுண்டு போட்டு.....அடுத்த 10 நாளில் நாகசாகி நகரிலும்

ஏப்ரல் 30, 1945. ஜெர்மனிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் பெர்லின் நகரை சுற்றி வளைத்துவிட, அங்கே பங்கரில் பதுங்கியிருந்த ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
இதையடுத்து ஹிட்லரின் படைகள் நேரடியாக போரை நிறுத்திவிட்டாலும் ஆங்காங்கே சிறிய அளவில் அமெரிக்கக் கூட்டணி, சோவியத் யூனியன் படைகளுடன் மோதிக் கொண்டிருந்தன.
மே 8, 1945. இந் நிலையில் ஜெர்மனியின் முப்படையினரும் மே 8ம் தேதி அமெரிக்க- பிரான்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் சோவியத் யூனியனிடம் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இத்தோடு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

பத்துகோடி லம்பாக அமுக்கிவிட்டார் காமடி...யா யா .

படம் பார்த்தவர்கள் ஐயோ அம்மா என்று பதறி ஓடினார்கள். எனில், பணம் போட்டு படம் எடுத்தவர்கள்? போட்ட பணத்தில் கால்வாசி வேண்டாம், கால் தூசியாவது திரும்பி வந்திருக்க வேண்டுமே? ம்ஹும்... அதுவும் இல்லையாம். படம் வெளியானால் ஓபனிங்கிலேயே பத்து கோடி வந்திரும், அப்பால ஒரு பத்து பதினைந்து கோடி. சேட்டிலைட் பத்து, எப்எம்ஸ் பத்து என்று பத்து பத்தாக கதை சொல்லி எட்டு கோடியை வாங்கிக் கொண்டாராம் காமெடி நடிகர். படம் வெளியாகி இந்நாள்வரை மொத்தமாக ஒரு கோடி வரவில்லையாம் தயாரிப்பாளர்களுக்கு. காமெடின்னு நினைச்சு கண்ணி வெடியில் கால் வைக்க, சிதறிப் போய் கிடக்கிறது அவர்களின் பைனான்ஸ் ஸ்டேட்டஸ். பாவம்யா. கிசுகிசு எல்லாம் விபரமா சொல்ல முடியுமா ? நீங்களே மணந்து மணந்து கண்டுபிடியுங்கள். 

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

மலேசிய விமானம் எம் எச் 370 விமானத்தின் ஒரு பகுதி ரியூனியன் தீவுப் பகுதியில் உறுதி!


கடந்த ஆண்டு காணாமல்போன மலேசிய விமானம் எம் எச் 370 விமானத்தின் ஒரு பகுதியே இப்போது இந்தியப் பெருங்கடலில் உள்ள ரியூனியன் தீவுப் பகுதியில் ஒதுங்கியுள்ளது என்பதை மலேசியா இன்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கிடைக்கும் பகுதிகள் அனைத்தும் பிரான்ஸுக்கு சோதனைக்காக அனுப்பப்படுகிறது மலேசியவின் போக்குவரத்து அமைச்சர் லியோவ் டியாங் லாய், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள காணாமல் போன விமானத்தின் இறக்கைப் பகுதியிலிருக்கும் வர்ணத்தின் நிறம், எம் எச் 370 விமானத்தின் ஆவணங்களுடன் ஒத்துப் போகிறது என்று கூறியுள்ளார்.
காணமல் போன போயிங் 777 ரக விமானத்தின் சிதிலங்கள் என்று நம்பப்படும் வேறு சில பகுதிகளும் இப்போது மேலதிக ஆய்வுக்காக பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஞாநி : ஜீவா பூங்காவில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்த...மதவெறியர்கள்?

கலைஞர் கருணாநிதி நகரில் இருக்கும் ஜீவா பூங்காவில் நாகி ரெட்டியார் தம் தெலுங்கு படப்பிடிப்புக்கு வைத்த சிவன் செட்டை அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டதால், பூங்காவின் பெயரே சிவன் பூங்கா என்று திரிக்கப்பட்டுவிட்டது. இப்போது அந்த இடத்தை கோவில் வளாகமாக மாற்றும் சதி நடக்கிறது. இந்த வாரம் அங்கே 450 கிலோ எடையுள்ள சர்வேஸ்வர லிங்கம் ஒன்று 'பிரதிஷ்டை' செய்யப்பட்டிருக்கிறது. மாநகராட்சிக்கு சொந்தமான இந்தப் பொதுப் பூங்காவில் இப்படி லிங்கம் பிரதிஷ்டை செய்ய அனுமதித்தது யார் ? மேயரா? ஆணையரா? வேறு எந்த அதிகாரி ? Saidai Sa Duraisamy

போர்ன் தடை- ஷோபாசக்தி: உங்கள் பிள்ளைகள், துணையோடு சம்போகத்தில்.........

நாளை நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள், துணையோடு சம்போகத்தில் ஈடுபடும் காட்சி இவ்வகை இணையத்தளங்களில் ‘லைவ்’வாக ஒளிபரப்பப்படுவதற்கு எல்லாவகையான சாத்தியங்களும் உண்டென்பதை மறவாதீர்கள்.
இந்தியாவில் ‘போர்ன்’ இணையத்தளங்கள் தடை செய்யப்படலாமா கூடாதா என்ற விவாதங்களைக் கவனித்தபோது ஒன்று சொல்லத் தோன்றுகிறது.
போர்ன் இணையத்தளங்களை தடைசெய்யக்கூடாது எனச் சொல்பவர்கள் தனிமனித சுதந்திரம், மேலைநாடுகளில் தடையில்லை, சிறுவர்கள் இவ்விணையங்களைப் பார்க்காமல் ஒழுங்குபடுத்தினால் போதுமானது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த சொல்விற்பன்னர்கள் அதிமுக்கியமான விடயங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.
இன்று உலகில் நடத்தப்படும் மனிதக் கடத்தல்களில் எண்பது விழுக்காடு கடத்தல்கள் பாலியல் வணிகத்திற்காகவே நடத்தப்படுகின்றன. ஜப்பானில் தொடங்கி இங்கிலாந்து அமெரிக்காவரை இந்தக் கடத்தல் தொழில் கொடிகட்டிப்பறக்கிறது. சர்வதேச மாஃபியாக்களின் கையிலிருக்கும் இந்த வணிகம் போதைப்பொருள், ஆயுதக்கடத்தல் போன்றவற்றிற்கு இணையாகப் பணம் புழங்கும் தொழிலாகயிருக்கிறது.

36 அடி உயர ராட்சத அலையால்தான் மத்திய பிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்தது: ரெயில்வே

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகர் அருகே நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து ஒரே இடத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தடம்புரண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த ரெயில்வே வாரிய உறுப்பினர் குப்தா கூறியதாவது:- இந்த விபத்திற்கு பருவமழை தயார் நிலையில் இருந்தது காரணமல்ல. ஆற்றுப்படுகையிலிருந்து 13 அடி உயரத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, திடீரென உருவான அசுரத்தனமான வெள்ளத்தின் காரணமாக, 36 அடி உயரமும் 200 மீட்டர் அகலமும் கொண்ட ராட்சத அலையடித்தது. இந்த ராட்சத அலையால்தான் ரெயில் தடம்புரண்டது. 1870-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தண்டவாளத்தில் இதற்கு முன்பாக இப்படி ஒரு கோரமான விபத்து ஏற்பட்டதில்லை. ஆனால், இந்த திடீர் வெள்ளத்தால் பாலத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார் maalaimalar.com 

சகல அயோக்கியரகளையும் வெட்கப்படவைத்த தினமணி வைத்தி!

editorரலாறு கண்ட அயோக்கியர்களை விஞ்சிவிட்டார் தினமணி வைத்தி. கொன்றவனுக்கு தீபாராதனைக் காட்டிவிட்டு செத்தவர் மீதே கத்தியைச் செருகும் ஆளைப் பார்த்ததுண்டா? பார்க்காதவர்கள் ( 03-08-15 ) தினமணி தலையங்கத்தில் பார்க்கலாம். ” தன்னை காந்தியவாதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் செல்லிடைப்பேசி கோபுரத்தில் ஏறி அதன் உச்சிக்கு சென்று அமர்ந்ததும் , தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தியதும் எப்படி சரி? சசிபெருமாள்… நடத்திய போராட்டம் அறப்போராட்டமும் அல்ல, காந்திய வழிமுறையும் அல்ல.. சசிபெருமாள் வன்முறையாளராக மாறிவிட்டது மிகப்பெரிய சோகம்..” குன்ஹாவின் தீர்ப்புக்குப் பிறகு ‘அகிம்சை வழியில்’ போராடிய அம்மாவின் வழிமுறையில் அமைந்த அரசு விளம்பரங்களை வாங்கிக்கொள்ளும் அப்பாடக்கர் ‘காந்தியவாதி’ வைத்தியின் வேத வாக்கியம் இது. அடுத்த இழவெடுத்த  ராஜ்ய சபா எம்பியோ அல்லது மந்திரியோ நிச்சயம் இவன்தாய்ன் 

சாதாரண கணபதியின் மறைவும் அப்துல் கலாமின் மறைவும்!

Cycle tea 2நீங்கள் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை காலை, மதியம், இரவு என ஏதேனும் ஒருவேளையில் கூட குறுக்கும் நெடுக்குமாக சாலையை கடந்து, சைக்கிளில் தேநீர் கொண்டு செல்லும் கணபதியை காணலாம்! பல தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு சுடச்சுட தேநீர் தருவது தான் கணபதியின் வேலை.
வேலைச்சுமையாலும், நிதிச்சுமையாலும் வாழ்க்கை கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு கண நேரமாவது கணபதியின் தேநீர் ஆசுவாசமளிக்கும்.
எங்கள் அலுவலகத்திற்கும் கடந்த ஆறு வருடங்களாக கணபதி தான் தேநீர் தருகிறார்.  மெலிந்த தேகம், ஐந்தே கால் அடி உயரம், நல்ல களையான முகம்.  ஜீன்ஸ் பேண்டை வெட்டி தைத்து முக்கால் காலுக்கு போட்டிருப்பார்.  நானும் பல வருடங்களாக கவனித்து வருகிறேன். கணபதிக்கு வயது ஏறுவதேயில்லை.

யாகூப் மேமனுக்கும் அந்தப் ‘பாழாய்ப் போன’ குற்ற உணர்வு வராமல் போயிருந்தால்?

RSS மும்பை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்கிறீர்களே, அதற்கு முன் 1992-93 மும்பை கலவரம், பாபர் மசூதி இடிப்பு கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டும் நீதி வேண்டாமா?
– யாகூப் மேமனை தூக்கில் ஏற்றிக் கொன்ற பிறகும் அதற்கு முன்னரும் ஊடக விவாதங்களில் முஸ்லீம் கட்சிகள், இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் எழுப்பும் கேள்வி இது.
இந்து மதவெறியர்களுக்கு இது பதிலளிக்க சிரமமான கேள்வி என்று கருதுகிறீர்களா? ஒரு போதுமில்லை.

டாஸ்மாக்குக்கு மாற்றாக ராமதாசின் ஜாதிமாக்? வினவு.com


புதன், 5 ஆகஸ்ட், 2015

கடத்திய தீவிரவாதியை மடக்கி பிடித்த மக்கள்! காஷ்மீரி கிராம மக்களை கடத்தியவனை சிறைபிடித்த மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியை, சிறை பிடிக்கப்பட்ட கிராம மக்களே தைரியமாகப் பிடித்து ராணுவத்திடம் ஒப்படைத்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முவில் உள்ள உதம்பூருக்கு 10 கி.மீ தொலைவில் சம்ருலி என்ற இடத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் வாகனங்களில் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். மேலும் இந்தத் தாக்குதலின் போது 3 கிராம மக்களை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

த்ரிஷா :திருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது

திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெறுவதைக் காட்டிலும் லிவ் இன் உறவில் ஏற்படும் பிரிவு மேலானது என நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
லிவ் இன் உறவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் லிவ் இன் உறவு சரி என்று தோன்றினால், பிறகு அதில் வேறு எந்தப் பிரச்னையும் இருக்கக்கூடாது. திருமணம் செய்து, கருத்துவேறுபாடுகளால் விவாகரத்து பெறுவதைக் காட்டிலும் லிவ் இன் உறவில் இருந்து பிரிவது மேலானது என எண்ணுகிறேன் என்றார்.   dinamani.com

அப்துல் கலாமின் மலிவு ஸ்டேன் கண்டுபிடிப்பு கமிஷன் வியாபாரிகளால் முடக்கப்பட்டது?

இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு, குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், பிரபல டாக்டர் ராஜுவுடன் இணைந்து, 'ஸ்டென்ட்' கருவியை கண்டுபிடித்தார். >எனினும், கமிஷன் ஆதாயத்திற்காக, தனியார் மருத்துவமனைகள் மட்டு மின்றி, அரசு மருத்துவ மனைகளிலும் இந்த கருவிகள் பயன்படுத்தப்படாததால், அவரின் கண்டுபிடிப்பு, ஏழைகளுக்கு பயனின்றி வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, மருத்துவத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அறிவியல் துறையில் அதீத ஞானமுடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ராக்கெட் தொழில்நுட்பம் தவிர, வேறு பல துறைகளிலும் சாதனை படைத்துள்ளார். போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, எடை குறைந்த செயற்கை கால்களை கண்டுபிடித்த கலாமின் சாதனை அளப்பரியது. தவிர, இதய நோயாளி களின் நலனுக்காக, குறைந்த விலையிலான ஸ்டென்ட்களை தயாரிக்க திட்டமிட்ட கலாம், பிரபல டாக்டர் ராஜுவுடன் இணைந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இருவரின் கூட்டு முயற்சியால், குறைந்த விலையிலான ஸ்டென்ட் வடிவமைக்கப்பட்டது. இதற்கு, 'கலாம் - ராஜு ஸ்டென்ட்' என, பெயரிடப்பட்டது.

1971 இல் மதுவிலக்கை ரத்து செய்த திமுக 1974ஆம் ஆண்டிலேயே மீண்டும் மதுவிலக்கை அமுல்செய்தது! 1981இல் அதிமுகவே மதுவிலக்கை ரத்து செய்தது !

1971ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்த கலைஞருக்கு 44 ஆண்டுகள் கழித்து ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது” என்றெல்லாம் வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். 71ஆம் ஆண்டில் மது விலக்கை ரத்து செய்த தி.மு. கழகம்  1974ஆம் ஆண்டிலேயே மீண்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதையும், அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியிலேதான் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு விட்டது என்பதையும் வசதியாக மறைத்து விடலாம் என்று அவர் எண்ணுகிறார் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

நெஞ்சில் ஓர் வஞ்சமிலா நீட்டோலை! என்ற தலைப்பில் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாலியல் படங்களைப் பார்ப்பது இயல்பானது: நாராயண ரெட்டி!

பாலியல் காணொளிகள், புத்தகங்கள், படங்கள் உள்ளிட்டவற்றைப் பார்ப்பது இயல்பான மனித நடவடிக்கை என்கிறார் பாலியல் மருத்துவ நிபுணர் நாராயண ரெட்டி. இது ஒரு மனநோயோ அல்லது வக்கிர நடவடிக்கையோ அல்ல என்று கூறும் நாராயண ரெட்டி, இதனால் மிகப்பெரிய தவறுகள் எவையும் நடப்பதில்லை என்பதால் இவற்றைத் தடைசெய்வதில் அரசுகள் தமது முழுக் கவனத்தையும் நிர்வாகக் கட்டமைப்பையும் ஏராளமான நிதியையும் செலவழிக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
வயது வரம்பு இல்லாமல், யார் வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய வகையில் இயங்கி வரும் 857 ஆபாச இணையதளங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இத்தகைய இணைய தளங்களுக்குள் சிறார்கள் எளிதாக நுழைந்து பார்ப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. அப்படியே அகோரி நிர்வாண சாமியார்களையும் கஜுரா சிற்பங்களையும் தடை செய்ய வேண்டியதுதானே? 

ம.பி.யில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்களின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..பயணிகள் 50 பேர் பலி ?

போபால்: மும்பையிலிருந்து வாரணாசி சென்ற காமயானி எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் ஹர்தா என்ற இடத்தில் இன்று அதிகாலை தடம் புரண்டன. இந்த 5 பெட்டிகள் தடம் புரண்டு மசாக் என்ற ஆற்றில் கவிழ்ந்தன. இந்த விபத்து நிகழ்ந்த சற்று நேரத்தில் ஜபல்பூரிலிருந்து மும்பை வந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் 10 பெட்டிகளும் அதே இடத்தில் தடம் புரண்டன. இந்த இரு விபத்துகளில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மும்பையிலிருந்து வாரணாசிக்கு காமயானி ரயில் நேற்று இரவு வழக்கம் போல் புறப்பட்டுச் சென்றது. அந்த ரயில் மத்தியபிரதேச மாநிலம் ஹர்தா என்ற பகுதியிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மசாக் ஆற்றின் மீதிருந்த பாலத்தை கடந்த போது அதன் 5 பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறினர். mp train தடம் புரண்ட வேகத்தில் ரயிலின் 5 பெட்டிகள் மசாக் ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

என்.எச்.எம் ரைட்டர் - விண்டோஸ் 8.1+, விண்டோஸ் 10-ல் வேலை செய்ய

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 8.1+ல் என்.எச்.எம் ரைட்டர் (NHM Writer) மூலம் தமிழில் (பிற இந்திய மொழிகளில்) எழுதுவது சரியாக நிகழவில்லை. ஷிஃப்ட் விசையை அழுத்தினால் அதன்பின் நடக்கவேண்டிய மாற்றங்கள் சரியாக நடக்கவில்லை. இது ஆபரேட்டிங் சிஸ்டத்தில் நுழைக்கப்பட்ட ஒரு அப்டேட்டினால் நிகழ்ந்த குளறுபடி. (Windows update KBKB2975719 changed the way of translating virtual key codes involving shift combinations into characters.) இதனை அவர்கள் சரி செய்வார்களா என்று பார்த்ததில் அந்த மாற்றம் நிகழவில்லை. விண்டோஸ் 10-இலும் இந்தப் பிரச்னை தொடர்ந்தது. எனவே என்.எச்.எம் ரைட்டரில் மாற்றங்கள் செய்து, விண்டோஸ் 8.1+, விண்டோஸ் 10 ஆகியவற்றிலும் சரியாக இயங்கும் வண்ணம் புதிய ரிலீஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதனை http://software.nhm.in/products/writer என்ற பக்கத்தில் சென்று இறக்கிக்கொள்ளுங்கள். தற்போதைய என்.எச்.எம் ரைட்டர் வெர்ஷன் 2.9. என்.எச்.எம் ரைட்டர் செயலி குறித்த சந்தேகங்களை மின்னஞ்சல் வாயிலாகக் கேட்க software@nhm.in என்ற முகவரிக்கு எழுதுங்கள். ;Badri Seshadri

விஜய்: செல்போனில் படத்தை எடுத்து எங்க பொழப்புல மண்ண போடுறாங்க...

ரசிகர்களின் பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் மேடைக்கு வந்த விஜய், “இந்தப் படத்தில் எனக்கு ஜோடிகளாக இரண்டு பெண் புலிகள் நடிச்சிருக்காங்க. புலிக்கு பிறந்தது பூனையாதுன்னு நிரூபித்து கொண்டிருக்கும் உலக நாயகன் கமல் சாரின் மகள் ஸ்ருதிஹாசன். மும்பை நமக்கு கொடுத்திருக்கிற இரண்டாவது குஷ்பூ ஹன்சிகா. இன்னும் நந்தித்தா ஒரு சின்ன கதாபதிரத்தில் ஆனா, முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க. அவங்களையும் பாராட்டனும்.

மார்பால் "போலீஸைத் தாக்கிய" பெண்ணுக்குச் சிறை; பிரா அணிந்து ஆர்ப்பாட்டம்

ஹாங்காங்கில் மூத்த காவல்துறை அதிகாரியொருவரை தனது "மார்கங்களால் தாக்கிய" குற்றச்சாட்டில் பெண் ஒருவருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டஜன் கணக்கான ஆண்களும், பெண்களும் மார்புக் கச்சை, அதாவது பிரா (Bra) அணிந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமைக் காவல்துறை அதிகாரியான சான் காஃபோ என்பவர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தனது மார்பகங்களைத் தொட்டார் என்று நிங் லாய் இங் என்னும் முப்பது வயதுடைய பெண் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால் நீதிமன்றமோ அந்தப் பெண்ணுக்கு எதிராக தீர்ப்பளித்திருக்கிறது.

பச்சையப்பா மாணவர்களை இழிவுபடுத்தும் தி இந்து ! மாணவர் போத்தலை எடுத்து சென்றாராம் ?


டாஸ்மாக் கடையை உடைப்பதற்காக போலிசிடம் அடிபட்டு, மண்டையுடைந்து போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை இழிவு படுத்துகிறது “தி இந்து” நாளிதழ்.புரட்சிகர மாணவர் இளைஞர் மாணவர் முன்னணியின் தோழர் கணேசனின் கண்டன உரை! 04.08.2015 அச்சிடப்பட்ட தி இந்து தமிழ் நாளிதழில் மாணவர்களின் போராட்டத்தை விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது இணைய பக்கத்தில் மாணவர்களை இழிவு படுத்தும் விதமாக அவர்கள் மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு சென்றார்கள் என்று எழுவது பாரிய தவறு. இதை பரிசீலித்து தி இந்து அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள் வினவு.com 

25 காங்கிரஸ் எம்.பி க்கள் இடைநிறுத்தம்! மூன்று ஊழல் முதல்வர்களும் பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை

புதுடில்லி: லோக்சபாவில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, சபை நடவடிக்கைகளில் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்திய, காங்கிரஸ் எம்.பி.,க்களில், 25 பேர் நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அவர்களை, ஐந்து நாட்களுக்கு சபை நடவடிக்கையில் பங்கேற்க, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தடை விதித்தார்.காங்., தலைமையில், அந்தகட்சி மற்றும் அதன் தோழமை கட்சிகளின் எம்.பி.,க்கள் ரகளையால், ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக, லோக்சபாவில் குறிப்பிடத்தக்க வகையில், எந்த அலுவலும் நடைபெறவில்லை. அந்த முட்டுக்கட்டையை போக்கும் வகையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டங்களிலும், அமைதிக்கான வழி காணப்பட முடியாத வகையில், காங்., திடமாக இருந்தது.நிபந்தனை: 'சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரும், மூன்று, பா.ஜ., முதல்வர்களும் பதவி விலகினால் தான், சபையை சுமுகமாக நடத்த அனுமதிப்போம்' என, காங்., தலைவர் சோனியா அறிவித்தார்.

தமிழ் சினிமா பாடல்களின் ராகங்கள் ! ஒரு அழகிய தொகுப்பு ! Ragaam in tamil film songs by Illayaraja

ilayaragam.blogspot.ca

The Ragam - The Song -The Film Name 
Aarabhi - | S R2 M1 P D2 S | S N3 D2 P M1 G3 R2 S - 
Aarabhi - Aasai Kiliye - Thambikku Entha Ooru 
Aarabhi - Madhurai Vaazhum - Pudhupatti Ponnuthayee 
Aarabhi - Mannavane Mannavane - Thandhuvitten Ennai
Aarabhi - Sandhakavigal Paadidum Manathinil - Metti 

Abheri - | S G2 M1 P N2 S | S N2 D2 P M1 G2 R2 S - 
Abheri - Chinnanjiru Vayathil - Meendum Kokila (Uses Ni3)
Abheri - En Paatu En Paatu - Poomani
Abheri - Ennai Thottu Alli Konda - Unna Ninaichen Paatu Padichen
Abheri - Guruvaayoorappa - Pudhu Pudhu Arthangal (magical prelude & interludes)
Abheri - Kaalidasan Kannadasan - Soorakottai Singakkutti
Abheri - Kaiyetha - Vinodhayathra (Malayalam)
Abheri - Kuyile Kavikuyile - Kavikuyil 
Abheri - Megam Karukkudhu - Anandha Ragam 
Abheri - Muthamizhae Muthamizhae - Raman Abdulla

ஷாஜி : நடுத்தெருச் சினிமா! 19 ஆண்டுகளுக்கு முன் ஒரு உன்னத திரைப்படம் ஸ்திரீ!


மலையாள சினிமாவின் எக்காலத்திற்குமுரிய இயக்குநர்களில் ஒருவர் என்று பெயர்பெற்ற கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய படம் ஸ்திரீ. தெலுங்கு மொழியில் அவர் இயக்கிய ஒரே படம். தனது வாழ்நாளில் அவர் இயக்கிய கடைசிப் படமாகவும் அமைந்தது அது.தென்னிந்திய சினிமாவில் எனது மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவரான ரோஹிணி அப்படத்தின் மையப் பாத்திரமான ரங்கி எனும் ஸ்திரீயாக நடித்தார். முக்கிய ஆண் பாத்திரமாக தலைவாசல் விஜய் வந்தார். ஆனால் அப்படம் ரங்கியின் கதை, அவளது வாழ்க்கை. கோதாவரிப் பிராந்தியத்தின் வட்டார வழக்கிலான பேசும் மொழியாலும், படிப்பறிவற்ற ஏழை மீனவப் பெண்ணின் உடல் மொழியாலும், நுட்பமான முகபாவனைகளாலும் ரோஹிணி அப்பாத்திரமாகவே வாழ்ந்தார். 1995ஆம் ஆண்டிற்கான தேசிய விருது அறிக்கையில் ரோஹிணியின் அந்த நடிப்பைக் குறிப்பிட்டு பாராட்டினார்கள் நடுவர் குழு. ஆனால் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு கிடைக்கவில்லை!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்திரீ படத்தின் சிறந்த குறுவட்டுப் பிரதி ஒன்று என் கைக்கு வந்தது.

சோனியா : தவறிழைத்த வசுந்தரா சுஷ்மா ஸௌகான் ஆகியோர் ராஜினாமா செய்யும் வரை பார்லிமென்டை செயல்பட

புதுடில்லி: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில், பார்லிமென்டின் இரு சபைகளிலும், காங்கிரசார் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கும் வகையில், கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டத்தில், அக்குழுவின் தலைவரான சோனியா பேசும் போது, பிரதமர் மோடியை எந்த அளவுக்கு தாழ்த்தி பேச முடியுமோ, அந்த அளவுக்கு பேசியதோடு, பா.ஜ., அமைச்சர் உள்ளிட்ட மூவர் ராஜினாமா செய்யும் வரை, பார்லிமென்டை செயல்பட அனுமதிக்க மாட்டேன் என, உறுதியாகவும் கூறினார்.   ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பாஜக ஐந்து முறைக்கும் மேலாக, ராஜினாமா முதலில் விவாதம் பின்னர் எனப் பிடிவாதமாக இருந்திருக்கிறது. அன்று பாஜக செய்ததை இன்று காங்கிரஸ்...

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

இந்த அழுகையின் இரகசியம் அடிமைத்தனம்! இந்த அழுகையின் வெகுமானம் அமைச்சர் பதவி!

கிளிசரின் வாங்காமலே கூத்துப் பட்டறை பயிற்சி இல்லாமலே கேமரா கோணம் அறியாமலே அழுகிறார்கள்…. ..அழுகிறார்கள்…. எப்படிச் சாத்தியமிது? புரட்சித் தலைவி வரும் பாதையில் கட்டவுட்கள் வைத்தார்கள். அவை காலாவதியாகி பிளக்ஸ் பேனர்கள் வந்தன. பிறகு தொலைக்காட்சி விளம்பரங்கள்… துட்டை இறைத்து/> காக்காய்களை காட்சிப்படுத்தும் இந்த ஜோடனைகளெல்லாம் அம்மாவின் அருளை பெற்றுத் தர போதுமானதா? இது குறித்து அவர்களுக்கு யாரும் பாடம் எடுக்கவில்லை. குனிந்தார்கள், வளைந்தார்கள், தொழுதார்கள், வாய் மூடீனார்கள், ஆயினும்,> ஊழல் திருட்டுக்காக தலைவி சிறை சென்ற போது முதன் முறையாக அவர்கள் அதிகம் பயன்படுத்தியிராத அழுகைக்கு வேலை வந்தது.

நொறுங்கியது டாஸ்மாக் – பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போர் !


மூடு டாஸ்மாக்கை ! குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும் ! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31 !”காந்தியவாதி சசி பெருமாளை ‘திட்டமிட்டுக்’ கொன்ற தமிழக அரசு தொடர்ந்து டாஸ்மாக்கை நடத்துவதில் வெறியாக இருக்கிறது. ஆனால் தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகளை நொறுக்குவதில் மக்களும் உறுதியா இருக்கின்றனர். ஆம் சென்னை முதல் குமரி வரை போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. நெருப்பாய் பரவி வருகின்றன.
இந்நிலையில் இன்று 03.08.2015 திங்கட் கிழமை மதியம் 12.30 மணிக்கு சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சுமார் 600 பேர் வெளியே வந்து பூந்தமல்லி சாலையில் மறியல் செய்தனர். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைத்த இந்த போராட்டத்தில் மாணவர்கள் போர்க்குணத்துடன் முழக்கமிட்டனர்.

நிர்வாணம் ஆபாசம் ஆகாது: கனடாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆண்கள் மேலாடை இல்லாமல் ஊர்வலம்

கனடாவில் மேலாடை இல்லாமல் வெளியில் செல்லும் உரிமை பெண்களுக்கு வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் மேலாடை இல்லாமல் ஊர்வலம் சென்றுள்ளனர். கனடா ஒண்டாரியோ மாநிலத்தில் பெண்கள் கட்டாயம் மேலாடை போட வேண்டும் என்று சட்டம் வலியுறுத்தவில்லை என்றபோதும் சென்ற மாதம் மேலாடை இல்லாமல் சென்ற  அலீஷா, தமீரா, நாதியா முகமது ஆகிய மூன்று சகோதரிகளை போலீஸார் பிடித்து விசாரித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  வாட்டர்லூ நகரத்தில் நூற்றுக்கணக்கானோர் மேலாடை இல்லாமல் ஊர்வலம் சென்றுள்ளனர். ஊர்வலம் சென்ற அந்த பெண்கள் கையில் ஏந்தியிருந்த அட்டையில் மார்பகங்கள்தான்; வெடிகுண்டுகள் அல்ல" என்றும், "நிர்வாணம் ஆபாசம் ஆகாது" என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் சுதந்திரமும் சம உரிமையும் இருபாலாருக்கும் வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். dinamani.com 

விரைவில் வீட்டுக்கொரு ஆளில்லா விமானம்! 5 முதல் 10 வருடங்களில்

புதிதாக வரும் மொபைல் போன்களை உடனே வாங்க தற்போது போட்டி போடும் பலரும், விரைவில் ஆளுக்கொரு ஆளில்லா விமானத்தை வாங்க போட்டி போடுவார்களோ? என்று நம்மை யோசிக்க வைக்கிறார், நாசாவில் பணியாற்றும் இந்திய வம்சாவளி விஞ்ஞானியான, பரிமல் கோபடேகர். 'ஆளில்லா விமானங்களின் அமைப்புகள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை' என்ற தலைப்பில் கடந்த வாரம் நாசா ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பரிமல் இது குறித்து பேசுகையில், "இன்னும் 5 முதல் 10 வருடங்களில் அனைத்து வீடுகளிலும் ஒரு ஆளில்லா விமானம் இருக்கலாம். அப்படிப்பட்ட எதிர்காலத்தை நான் உணர்கிறேன். நீங்கள் உங்கள் வீட்டின் மேற்கூரையைப் பார்வையிட, சூப்பர் மார்க்கெட் சென்று ஸ்க்ரூ ட்ரைவர் வாங்க என்று பல விஷயங்களுக்கு ஆளில்லா விமானத்தை பயன்படுத்தப் போகிறீர்கள்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு:! விஜயகாந்த் நம்பிக்கை!

இடைப்பாடி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு கொண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என சேலத்தில் விஜயகாந்த் தெரிவித்தார்.மதுவிலக்கு போராட்டத்தில் உயிர் இழந்த சசிபெருமாள் குடும்பத்தினருக்கு தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்த் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.அங்கு விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளேன். பாவம் கப்டன் டாக்டர்கள் இனி குடிக்க கூடாது லிவர் கிட்னி எல்லாம் பத்ரம்னு பயம் காட்டிட்டான்களோ? 

அந்த இரண்டாயிரம் ரூபாய் !

கொழும்பில் இருந்து அவசரமாக யாழ்ப்பாணம் செல்லவேண்டி இருந்ததால்  வேறு வழியே இல்லாமல் தனியாகவே ஒரு வான் வாடகைக்கு பிடிக்கவேண்டியதாகிவிட்டது .  சுமார் ஆயிரம் ரூபாயில் செல்ல கூடிய பிரயாணத்திற்கு பதினெட்டாயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கிறதே என்று எனது கால்குலேட்டர் முளை கொஞ்சம்  கணக்கு பார்த்து பார்த்து அங்கலாய்க்க தொடங்கி விட்டது .
வான் சாரதி வேறு சில பயணிகளையும் சேர்த்து கொஞ்சம் ரேட்டை குறைப்பதாக உறுதி அளித்தான்,
கொழும்பில் இருந்து புறப்பட்ட நாம் தற்போது நீர்கொழும்பை அடைந்து விட்டோம். வான்காரனோ சதா செல்போனில் பேசிக்கொண்டே ஏதோதோ பயணிகள் ஏற்பாடு பற்றி விசாரித்து கொண்டே இருந்தான்,
எனக்கு என்னவோ  இந்த வான் சாரதி வேறு ஒரு பயணியையும் தேடிப்பிடிக்க போவதில்லை என்ற எரிச்சலில் அவனிடம் பேச்சு கொடுத்தேன்.
தம்பி ஒரு ஆளும் கிடைக்கவில்லையோ?
ஒரு வயசு போன அம்மாவும் மகளும் இருக்கினம் ஆனா ... என்று இழுத்தான் .
உடன பிடிக்கவேண்டியதுதானே இவன் என்ன இழுக்கிறான்?
இதையும் கோட்டை விடப்போகிறான், வேற வான்காரர் மடக்கி கொண்டு போய்விடுவினம் ,

இலங்கையில் பெண்கள் தொழிற்சங்கம் உதயம் ! முழுக்க முழுக்க பெண்களே உருவாக்கும்....


இலங்கையில் தொழில் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு
எதிராக குரல் கொடுக்கும் நோக்குடன், முதல் முறையாக பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் தொழிற்சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது விரைவில் உரிய முறையில் பதிவு செய்யப்படும் என பெண்கள் ஒற்றுமை ஒன்றியம் எனப்படும் இந்த தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியுள்ளவர்களில் ஒருவரான பத்மினி விஜயசூரிய பிபிசியிடம் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள ஏனைய தொழிற்சங்கங்கள் பெண்களின் தொழில்சார் உரிமைகளை பெரிய அளவில் கண்டுகொள்ளாத காரணத்தாலேயே பெண்களுக்கு என்று தனியான தொழிற்சங்கத்தை தொடங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

வழக்கில் யாகுப் மேமனின் ஒத்துழைப்பு அளப்பரியது என முன்னாள் உளவுத் துறை அதிகாரி ராமன்


1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் யாகுப் மேமனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது. கருணை மனு, தண்டனை நிறுத்தி வாய்ப்புக்கான கோரிக்கை என பல்வேறு வழக்கு அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் முயற்சிகளைப் புறந்தள்ளி யாகுப் மேமனை இன்று (30-07-2015) அதிகாலை தூக்கில் போட்டுள்ளது இந்திய அரசு. 1993- ஆம் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, இந்த வழக்கில் சிபிஐ-க்கு உதவி பல்வேறு தகவல்களை அளித்த, இந்திய அரசை முழுமையாக நம்பிய ஒருவரை அறமற்ற முறையில், கருணை காட்டாமல் கொலை செய்துள்ளது இந்திய அரசு. இந்த வழக்கில் யாகுப் மேமனின் ஒத்துழைப்பு அளப்பரியது என முன்னாள் உளவுத் துறை அதிகாரி ராமன் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் உறுதி செய்துள்ளார்.
மரண தண்டனை கூடாது எனும் குரல் ஒருபுறமும், யாகுப்பைப் போன்ற பயங்கரவாதிகள் தப்பிக்கவே கூடாது என்று மறுபுறமும் விவாதங்கள் நடைபெற்றும் வரும் இன்றைய நிலையில், ஒருவரை தூக்கிலிட்டுக் கொலை செய்வதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழித்து விடமுடியும் என்பதே ஆகப்பெரிய முட்டாள்தனம்.

கலிங்கம்பட்டியில் டாஸ்மாக் கடைகளை சூறையாடிய மக்கள்!! போலீஸார் தடியடி!தூத்துக்குடியிலும் ஆர்ப்பாட்டம்!

நெல்லை:
கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, அங்கிருந்த டாஸ்மாக் கடையை மதிமுகவினர் அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனைப் படம் பிடித்த செய்தியாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அவரது தாயார் நேற்று காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அந்த ஊருக்குள் நுழைய வைகோவுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றைக்குக் காலையில் போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு வைகோ உள்ளிட்ட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தது மத்திய அரசு தகவல்!


இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 2001–ம் ஆண்டு 1000 பேருக்கு 927 என்ற அளவுக்கு இருந்த பெண்கள் விகிதம் 2011–ம் ஆண்டில் 918 ஆக குறைந்து இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அரியானா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களான மகேந்திரகார்க், ஜாஜ்ஜார், ரேவாரி, சோனாபட் மற்றும் அம்பாலா, இமாசலபிரதேசத்தில் உள்ள உனா மற்றும் ஜம்மு ஆகிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்து உள்ளது. மாநில அளவில் கேரளாவில் (950) தான் அதிக அளவு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து உள்ளது.

இணையதள வசதி இல்லாததால் கிராமத்தை புறக்கணிக்கும் மாணவ–மாணவிகள்! ஸ்மார்ட் போன்’கள் இ–மெயில், பேஸ்புக், டுவிட்டர் வாட்ஸ் அப் ....

இணையதள வசதி இல்லாததால் மாணவர்கள் தங்களின் சொந்த கிராமங்களை புறக்கணித்து வரும் வினோதம் கர்நாடகத்தில் நடந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய இடத்தை இணையதளம் பிடித்துள்ளது என்றால் மிகையாகாது. இணையதளம் இல்லையென்றால் தற்போது அனைத்து அலுவலக பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இணையதள மோகம் பள்ளி மற்றும் கல்லுரி மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் ‘ஸ்மார்ட் போன்’கள் மூலம் தினந்தோறும் இணையதளம் வழியாக சமூக வலைதளங்களான இ–மெயில், பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றுடன் வாட்ஸ் அப் உள்பட பலவற்றை பயன்படுத்தி தங்களின் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் கலந்துரையாடுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க கர்நாடகத்தில் குறிப்பாக துமகூருவில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ–மாணவிகள் சிலர் தங்களின் கிராமங்களுக்கு செல்லாமல் புறக்கணித்து வருகிறார்கள். இதற்கான காரணங்களை மாணவர்களிடம் கேட்டபோது அவர்களின் பதில்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.

கென்யா குடிகார கணவனின் ஆண் உறுப்பை வெட்டிய மனைவி! இன்னொரு 22 மாலினி பாளையங்கோட்டை?


கென்யா தலைநகர் நைரோபியிலிருந்து இரண்டு மணி நேர தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் கள்ளச் சாரயம் பலரது வாழ்வை நாசமாக்கியிருக்கிறது. குடிக்கு அடிமையான தங்கள் கணவர்களின் ஆணுறுப்பை மனைவியர் துண்டித்துவிடும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன.i குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், இரவில் இந்த இரும்புக் கவசத்தை அணிந்துகொள்ளலாம் என்கிறார் இந்த கடைக்காரர். இந்தப் பகுதியில் எளிதில் கிடைத்துவரும் கள்ளச்சாராயத்தின் காரணமாக, ஆண்கள் குடிக்கு அடிமையாவதால், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பெண்களே குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பூரண மதுவிலக்குக்கு முன்னுரிமை தர திட்டம்? தி.மு.க., தேர்தல் அறிக்கை குழு இன்று கூடுகிறது

தி.மு.க.,வில், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள, ஒன்பது பேர் குழு, சென்னையில் இன்று கூடி, முதல் கட்ட ஆலோசனையை துவங்குகிறது. இக்கட்சியின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகளில், பூரண மதுவிலக்குக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என, தெரியவந்துள்ளது.தமிழகத்தை ஆளும், அ.தி.மு.க., ஆட்சியின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. அதற்கு முன், தேர்தல் நடத்தப்பட வேண்டும். இன்னும், ஒன்பது மாத அவகாசம் உள்ள நிலையில், தேர்தல் பணிகளை, தி.மு.க., இப்போதே துவங்கி உள்ளது.சட்டசபை தேர்தலுக்கு என்னென்ன வாக்குறுதிகள் வழங்கலாம் என்பது குறித்து விவாதித்து, தலைமைக்கு பரிந்துரைப்பதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில், ஒன்பது பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சசிபெருமாளுக்கு நடந்தது என்ன?: ஜெயசீலன் விளக்கம்

நாகர்கோவில்:சசிபெருமாள் இறப்பதற்கு முன்னர் அலைபேசி டவரில் நடந்தது என்ன என்பது பற்றி அவருடன் டவரில் ஏறிய உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் விளக்கமளித்த்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:டாஸ்மாக் கடையை அகற்ற மதுபோதை ஒழிப்பு மக்கள் இயக்கம் சார்பில் தீக்குளிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நானும், சசி பெருமாளும் மண்ணெண்ணை பாட்டிலுடன் அலைபேசி டவரில் ஏறினோம். பாதி துாரம் ஏறியதும் களைப்பு காரணமாக நான் இருந்து விட்டேன். ஆனால் சசி பெருமாள் உச்சிவரை சென்று விட்டார். அவர் எனக்கு மேலே சுமார் 100 அடி உயரத்தில் இருந்ததால் அவருடன் என்னால் பேசமுடியவில்லை. வெயில் கடுமையாக இருந்ததால் நேரம் செல்ல செல்ல களைப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் கலெக்டரோ, எஸ்.பி.யோ வரவில்லை.