ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

திரு.ஆலாலசுந்தரம் திரு. தர்மலிங்கம் - அந்நியரின் கூலிப்படைகளான உள்ளூர் ஆயுதக்குழுக்களால் கொலை செய்யப்பட தலைவர்கள்


 ராதா மனோகர் :
1985 செப்டம்பர் 5 ஆம் தேதி  இனம் தெரியாத போராளிகளால் மானிப்பாய் எம்பி தர்மலிங்கமும் கோப்பாய் எம்பி (Advocate) ஆலாலசுந்தரமும் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் 
தமிழர் விடுதலை கூட்டணி எம்பிக்கள் உயிர் பயத்தில் தமிழகத்திலும் வேறு பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் 
ஆனால் இந்த இருவர் மட்டும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து தமிழர் விடுதலை கூட்டணிக்கு உயிர் கொடுத்து கொண்டிருந்தார்கள் 
குறிப்பாக யாழ் வரும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உலக ஊடக நிருபர்கள் போன்றவர்களோடு கலந்து பேசி போரில் பாதிக்கப்படும் மக்களின் விடயங்களை வெளியுலகிற்கு கொண்டுவரும் அரும்பணியை செய்து கொண்டிருந்தார்கள் 
ஈழத்தமிழர்களின் எஞ்சிய ஜனநாயக அமைப்பின்  தூண்களாக இந்த இருவர் மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தாரக்ள் 
இவர்களின் இந்த வகிபாகத்தை முடக்க வேண்டிய தேவை யாருக்கு இருந்தது?
இயக்கங்களை சந்தேக படலாம்.