வெள்ளி, 11 நவம்பர், 2016

90 சதவீத இந்தியர்கள் முட்டாள்களே: மார்கண்டேய கட்ஜு

ரூபாய் 500 மற்றும் 1,000 நோட்டுகளை திரும்பபெறும் அரசின் நடவடிக்கையை
ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கட்ஜு, இன்றைய பணவீக்கத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பெரும்பாலானவர்களிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் முறை குறித்து விமர்சித்துள்ள அவர், பெரும்பாலான கிராமங்களில் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் இல்லை. அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில் நம்பிக்கையிழந்த இந்த அரசின் ஸ்டண்டே 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு. அரசின் இந்த அறிவிப்பை பெரும்பாலான மக்கள் வரவேற்பதில் இருந்தே 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்களே என்ற தனது முந்தைய கருத்து உறுதியாகியுள்ளதாகவும் கட்ஜு பதிவிட்டுள்ளார். thetimestamil.com

கருத்துகள் இல்லை: