
tamilthehindu :ஆரியம் விரிக்கும் மத - சாதி வலையில் ஈழத்தமிழர்கள் சிக்கவேண்டாம் என,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,
"ஈழத் தமிழர்கள் என்றும் திராவிட இனத்தின் தொப்புள்கொடி உறவுகள்.
ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆரியம்!
ஈழத்
தமிழர்கள் மத்தியில் ஆரியர்கள் அதிகம் புகாவிட்டாலும் ஆரியம் புகுந்து
சாதியும், பக்தி என்ற பெயரில் மூடநம்பிக்கைகளும் அவர்களிடம் உள்ளே
புகுந்தது உண்மை. இன்னும் இவ்வளவு பெரிய கொடுமை, பேரிழப்புகள்,
இனப்படுகொலைகள் நடந்தும் கூட, வேறு வழியின்றி புலம் பெயர்ந்து வாழும்
நிலையிலும், சாதியாலும், பல்வேறு மூடநம்பிக்கை மீது, இந்து மதவெறி
சாமியார்கள் மீது வைத்துள்ள அளவற்ற மூடப்பக்தியாலும் இழக்கக்கூடாத
பகுத்தறிவு - தன்மானத்தை அவர்கள் இழந்துவருவது வேதனை அளிக்கிறது.
அவர்கள்பால் உண்மையான அக்கறையும், கவலையும் உள்ளது. இதனை
வெளிப்படுத்தவேண்டிய தருணம் இதுவாகிவிட்டது.
ஈழப் போராளிகளுக்குப் பாஜக சூட்டிய பெயர்கள் என்ன?
அவர்களின்
வாழ்வுரிமைக்காக உயிர்த் தியாகங்கள், சிறைவாசங்கள் போன்ற பலவற்றையும்
இன்முகத்தோடு ஏற்றும் இன்னும் அவர்களுக்கு விடியல் வரவில்லையே என்று இன
உணர்வு, மொழி உணர்வுடனும், மனிதநேய உணர்வாலும், பண்பாட்டுப் பாதுகாப்பு
உந்துதலாலும் இன்றும் ஏக்கத்தில் உள்ள உறவுகள் திராவிட - தமிழ்
உணர்வாளர்கள். இலங்கையில் உள்ள கதிர்காம முருகன்கள் - அவர்கள் வணங்கும்
இந்துக் கடவுள் எந்த வகையில் உதவியது அவர்களுக்கு?
அங்கே
கொன்றழிக்கப்படுபவர்கள் நம் இந்துக்கள்தான் என்ற உணர்வு இங்குள்ள
ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி காவிகள் வடபுலத்தவர்களுக்கு, சமஸ்கிருத
ஆதிக்கவாதிகளுக்கு - விடுதலைப் போராளி களத்தில் நின்ற போதும் சரி, பிறகும்
இன்றுவரையில் உண்டா? அவர்கள் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராளிகளுக்குச்
சூட்டிய பெயர் என்ன தெரியுமா?
'தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், தமிழ் மொழி வெறியர்கள், தமிழ் வெறியர்கள்'