சென்னை: தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கமான மிக முக்கிய
பிரமுகர்களின் ஏடாகூட வீடியோக்கள் தம் வசம் இருப்பதால்தான் முதல்வர்
ஜெயலலிதாவை எதிர்த்து சசிகலா புஷ்பா தில்லாக மல்லுக்கட்டுவதாக செய்திகள்
வெளியாகி உள்ளன.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவால்விட்டு பேட்டி கொடுத்த அதிமுகவினர்
அண்மைக்கால சரித்திரத்தில் யாரும் இல்லை.. ஆனால் அக்கட்சியில் இருந்து
டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவோ, தமிழகத்தை தலைகீழாக
புரட்டுவேன் என மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
ஒருபோதும் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்றும் சசிகலா
தில்லாக கூறி வருகிறார். இப்படி சசிகலா புஷ்பா படுபோல்டாக ஜெ.வை
எதிர்ப்பது பல காரணங்கள் கூறப்படுகிறது.
தென்மாவட்ட தொழிலதிபர் ஒருவரது பக்க பலம் சசிகலா புஷ்பாவுக்கு
இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சசிகலா புஷ்பாவையும் தென்மாவட்ட
புள்ளியையும் வேட்டையாடும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.