supreme court judgesகீற்று :மோடி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் காவிமயமாக மாறி வருகின்றது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு முற்போக்கு ஜனநாயக இயக்கங்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதிலும் நீதித்துறையில் இந்துத்துவ சக்திகளின் ஆக்கிரமிப்பு நாட்டில் இதுவரை இருந்துவந்த குறைந்தபட்ச ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் மொத்தமாக தின்று செரித்திருக்கின்றது. நீதிமன்றங்களே இந்திய ஜனநாயகத்தைக் காத்து நிற்கும் புனித அரண், அது சரியாக தன் நீதி பரிபாலன முறையை நடத்தும்வரை இந்த அமைப்பு முறையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் மக்களுக்கு ஏற்படப் போவதில்லை என்ற நம்பிக்கையில் நீதித்துறையின் மீது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கையை ஏற்படுத்தி, நீதித்துறையே அனைத்து சமூகப் பிரச்சினைகளையும் தீர்க்கும் மாமருந்து என நம்ப வைத்துக்கொண்டிருந்தன ஆளும்வர்க்கங்கள். மக்களும் அப்படித்தான் இதுவரை நம்பி வந்தார்கள்.