சனி, 8 டிசம்பர், 2012

இளவரசி ட்ரீட்மென்ட் எடுத்த பணிபுரிந்த இந்திய வம்சாவளி நர்ஸ் மர்ம மரணம்

லண்டன்: இங்கிலாந்தில் அரச குடும்பத்தினர், கோடீஸ்வரர்கள், அரசு உயர் பதவிகளில் வகிப்பவர்களின் அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு பத்திரிகைகள் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன. அவர்களை பற்றிய விவரங்களை சேகரிக்க பத்திரிகைகள் பல வழிகளில் முயற்சி செய்கின்றன. இந்நிலையில், இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் பணியாற்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த நர்ஸ் மர்மமாக மரணம் அடைந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவி இளவரசி கேத் மிடில்டன் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய லண்டன் பகுதியில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனைக்கு காலையில் சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற பின் மாளிகைக்கு திரும்பினார். இந்நிலையில், கிங் எட்வர்ட் மருத்துவமனையை 2 பேர் போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அந்த நேரத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நர்ஸ் ஜெசிந்தா சல்தானா என்பவர் ரிசப்ஷனில் இருந்துள்ளார். அவர் போனை எடுத்து பேசியுள்ளார்.

”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?


கமல்ஹாஸன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் விஸ்வரூபம். ஜனவரி 11-ஆம் தேதி தைத்திருநாள் கொண்டாட்டமாக வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, நேற்று(08.12.12) மதுரை,கோவை, சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றது. மதுரை, கோவை ஆகிய இடங்களில் கமலின் ரசிகர்கள் இசைத்தகட்டை கமலிடம் பெற்றுக்கொள்ள இரவு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் முன்னிலையில் விஸ்வரூபம் பட இசைத்தகட்டினை இசைஞானி இளையராஜா பெற்றுக்கொண்டார். இயக்குனர்கள், பாரதிராஜா, கே.எஸ்.ரவிகுமார், வசந்த், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, தரணி ஆகியோரும், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு உட்பட பலரும் கலந்துகொண்டனர்.  ஆனால் விஸ்வரூபம் படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ள கவிப்பேரரசு வைரமுத்து மட்டும் இந்நிகழ்ச்சிக்கு வரவில்லை. கமல்ஹாஸன் நடித்த மன்மத அம்பு படத்தை விஜய் தொலைக்காட்சி தான் வாங்கியது. அதைத்தொடர்ந்து விஜய் நடித்த துப்பாக்கி படத்தை வாங்குவதில் விஜய் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் இடையே போட்டி ஏற்பட்டு கடைசியாக விஜய் டிவி துப்பாக்கியை வாங்கியது. 
அதேபோல் விஸ்வரூபம் படத்தை வாங்குவதிலும் இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. வைரமுத்து எப்போதுமே கலைஞரை ஆதரித்து பேசுவார். எனவே இந்நிகழ்ச்சியில் வைரமுத்து கலந்துகொள்ளக்கூடாது என முதல்வர் தரப்பிலிருந்து கமலுக்கு சொல்லப்பட்டாதாக தெரிகிறது. ஜெயா டிவி விஜய் டிவியை விட இரண்டு மடங்கு காசு கொடுத்ததால் விஸ்வரூபம் ஜெயா டிவியின் கையில் ஒப்படைக்கப்பட்டதாம்.

புலிகளின் கொலை பட்டியலில் இருந்து கருணா, டக்ளஸ் போல உயிர் தப்பினேன்!” -சம்மந்தன்

Viruvirupu “விடுதலை புலிகளின் கொலை பட்டியலில் எனது பெயரும், எனது சகாக்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன” என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அப்படியிருந்தும் புலிகளிடம் இருந்து உயிர்தப்பி, தற்போது இலங்கை தமிழர்களின் அதிகபட்ச எம்.பி.க்களை கொண்ட தமிழ் கட்சியின் தலைவராக உள்ளார் இவர்.
அதே நாடாளுமன்றத்தில் தற்போது உள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர்கள்தான். அந்த வரிசையில் தாமும், தமது சகாக்களும் புலிகளின் கொலை பட்டியலில் இருந்ததை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.

கமல் விதை போட்டிருக்கிறார். விஸ்வரூபம் எடுத்து விருட்சமாக

கமல் எப்போதுமே மந்தையிலிருந்து பிரிந்து தனியே செல்லும் ஆடுதான். இந்த தோற்றத்தை அவர் வலிந்து உருவாக்குகிறார் என்றொரு விமர்சனம் உண்டு. எனக்கென்னவோ அவரது இயல்பே இதுதானென்று தோன்றுகிறது. சாரு சொல்வதைப் போல ஒருவகையில் கமல் ‘நிகழ மறுத்த அற்புதம்’தான். அவருக்கு பலவருடம் பின்னால் வந்தவர்களெல்லாம் அவரை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் தமிழ் சினிமாவுக்கு புது இரத்தம் பாய்ச்சும் பணியை அவர் தவம் போல மேற்கொண்டு வருவதை மறுக்க முடியாது. குறிப்பாக அதிசமீபத்திய தொழில்நுட்பங்களை தமிழில் அறிமுகப்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என்கிற அவரது வெறி முக்கியமானது. இதனால் கமலுக்கு தனிப்பட்ட முறையில் ஏராளமான பொருளிழப்பு என்றாலும், சினிமாவுக்கு லாபம்தான்.திருட்டு வீடியோ கேசட் காலத்திலிருந்தே தொழில்நுட்பங்களை மிகச்சரியாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப சினிமாவில் மாற்றங்கள் தேவை என்று வலியுறுத்தி வருகிறார். தொழில்நுட்பத்தை சபிக்கக்கூடாது. அதை நமக்கு வாகாக எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சிந்திக்க வேண்டும் என்பது அவரது கட்சி. http://www.luckylookonline.com/

செக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா?

தன் ஜாதி பெண்களை தலித் இளைஞர்கள் காதலித்து திருமணம் செய்வது, பணத்திற்காகவும், சொத்துக்களை எழுதி வாங்குவதற்காகவும்தான், என்கிறார்கள் ஜாதி வெறியர்கள்.
அப்படியானால்,
பெண்களிடம் வரதட்சிணை வாங்கி அவர்களை சுரண்டித் தின்கிற ஜாதிக்கரான், தன் ஜாதிக்காரனா? தலித்தா?
பார்ப்பானிலிருந்து எல்லா ஜாதிக்காரனும் தன் ஜாதி பெண்களை வரதட்சிணை என்கிற பெயரில் சூறையாடுகிறான்.
இவ்வளவு பணம், இவ்வளவு நகை தந்தால்தான்… என்று பேரம் பேசி, நடக்கிற இந்த மானங்கெட்டத் தனத்திற்கு பெயர்தான் திருமணமா?
இதில் கொஞ்சம் குறைந்தாலோ, பிறகு பண்டிகை, குழந்தை பிறப்பு போன்ற நாட்களில் சீர் செய்ய முடியாமல் போனாலோ அடி, உதை, குத்து என்று தன் ஜாதி பெண்களிடம் செயல்பட்டு தாங்கள் வீரபரம்பரை என்பதை நிரூபிக்கிறார்கள் எல்லா ஜாதிக்காரனும்.

நான் நேர்மையானவன்; பதவி விலக மாட்டேன்!' நிதின் கட்காரி

""நான் ஒரு நேர்மையான மனிதன்; அதனால், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறினார்.டில்லியில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, கட்காரி கூறியதாவது: நான் வர்த்தகர் அல்ல; சமூக நல விரும்பி. எனக்கு எதிரான கூறப்பட்ட, குற்றச்சாட்டுக்கள் எல்லாம் நிரூபிக்கப்படவில்லை.
யாரைக் கண்டும் நான் பயப்படவில்லை. ஊடகங்கள் எனக்கு எதிராக, எந்த முடிவுக்கும் வர முடியாது. எனக்கு எதிராக, ஒரு வழக்கு கூட, இதுவரை பதிவு செய்யப்படவில்லை. மகாராஷ்டிராவில், நான் அமைச்சராக பதவி வகித்த காலத்தில், எந்த ஒரு நிறுவனத்திற்கும் சாதகமாக செயல்பட்டதில்லை.அடுத்த லோக்சபா தேர்தலுக்குப் பின், மத்தியில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். தேர்தலில், பா.ஜ., 175 இடங்களுக்கு மேல் பிடித்து விட்டால், பல கட்சிகள் நாங்கள் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது நிச்சயம். பா.ஜ., கட்சியில், பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் பலர் உள்ளனர்.நான் நேர்மையானவன்; பதவி விலக மாட்டேன்!' நிதின் கட்காரி  ...கத்காரி உங்க புத்தி ரேகை ரொம்ப ஷோர்டாக இருக்குதே போதாக்குறைக்கு இருதய ரேகைவேற கீழ் நோக்கி ஒரு கிளை பாயுதே நல்லதுக்கு இல்லையே 

K.Sugavanam
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
அப்புடீன்னு நீங்க மட்டும் தானே பொலம்புரீங்க.ஒங்க கட்சி காரனே ஒங்க கால வார்ரானே.பாவம் ஒங்க நெலமைய பாத்தா நண்டு கதைதாங்க ஞாபகம் வருது... ha
http://www.dinamalar.com/

மதுரையில் முதல் சர்வதேச விமானம் துவங்கியது

மதுரை: கொழும்பில் இருந்து மதுரை வந்த, முதல் சர்வதேச விமானம், "மிகின் லங்கா' மதுரை விமான நிலையத்தில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புக்கு, நேற்று தனது பயணத்தை துவக்கியது. கொழும்பில் இருந்து, மதியம், 2:15 மணிக்கு புறப்பட்டு, மாலை, 3:00 மணிக்கு மதுரையை அடைந்தது. மொத்தம், 212 பேர் பயணிக்கக் கூடிய விமானத்தில், 108 பேர், மாலை, 4:15 மணிக்கு, மதுரையிலிருந்து புறப்பட்டு, கொழும்பு சென்றனர். திங்கள், புதன், வெள்ளியில், மதுரை - கொழும்பு சேவை உள்ளது; விரைவில் சரக்கு சேவையும் துவங்கப்படும்.

சீனாவுக்கு விசா இல்லாமல் போகலாம்! ஆனால் இந்தியர்களுக்கு அல்ல

பீஜிங்: விசா இல்லாமல் பீஜிங் நகரத்தை சுற்றிப்பார்க்கும் சலுகையை சீன அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இந்தச் சலுகை மறுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அரசு புது திட்டம் ஒன்றை நேற்று அறிவித்தது. அதன்படி, தலைநகர் பீஜிங்கில் மட்டும் 72 மணி நேரம் தங்குவதற்கு விசா தேவையில்லை. 2013 ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. விசா இல்லாமல் பீஜிங்கை சுற்றிப்பார்க்கும் சிறப்பு அனுமதி 45 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கமலுக்கு ஒத்துழைப்பு கிடையாது - திரையரங்க உரிமையாளர்கள்

டி.டி.எச். மூலம் ‘விஸ்வரூபம்' படத்தை டெலிவிஷனில் ஒளிபரப்பும் புதிய முயற்சியை கமல்ஹாசன் கைவிட வேண்டும். இந்த முடிவை மேற்கொள்ளும் எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு கிடையாது என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் டெலிவிஷனில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்.
இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில், "கமல்ஹாசன் தன் ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் திரையிடுவது பற்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு பல சந்தேகங்கள் இருந்தன. இதுபற்றி மதுரையில் இருந்த கமல்ஹாசனுடன், ‘டெலி கான்பரன்சிங்' மூலம் பல சந்தேகங்கள் கேட்டார்கள்.
அப்போது அவர் கொடுத்த விளக்கங்கள் வருமாறு:

செய்தி பொய்யாகிவிட்டது! வைகோ கட்சியில் வடிவேலு வரவில்லை

நடிகர் வடிவேலு. கடந்த, 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதிலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியதால், அவருடைய பேச்சுக்கும், பிரசாரத்துக்கும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. அந்த தேர்தலில், தி.மு.க., தோல்வியை தழுவியது. அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது. தி.மு.க.,வுக்கு பிரச்சாரம் செய்த ஒரே காரணத்தால், பட வாய்ப்புகள் அறவேயின்றி, சினிமா துறையிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலைக்கு, வடிவேலு தள்ளப்பட்டார். இதற்கிடையே, எதிர் எதிர் துருவமாக இருந்த தி.மு.க., - தே.மு.தி.க., ஒரே அணியில் வர வாய்ப்புள்ளதாக வெளியான தகவல், வடிவேலுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.;இந்நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் வடிவேலு, இன்று (6.12.2012)  ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் திருச்சியில் நடைபெற்ற ’’நாடாளுமன்றத்தில் வைகோ’’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தலித்துக்களின் ஜீன்சில் ஆதிக்கசாதி பெண்கள் மயங்குகிறார்களாம் !

லித் இளைஞர்கள் ஜீன்ஸ், கூலிங் கிளாஸ், டி-சர்ட் அணிந்து உயர்சாதிப் பெண்களை மயக்கி விடுகிறார்கள்” என்கிறார் ராமதாஸ். தர்மபுரி தலித் குடியிருப்புகளை எரித்து சாம்பலாக்கிய வெறியாட்டங்களைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு ஆதிக்க சாதி அமைப்புகளை தலித்துகளுக்கு எதிராய் ஒன்றிணைக்கும் கூட்டத்தில் தான் ஆதிக்க சாதி பெண்கள் வெறும் ஜீன்சுக்கும் டிசர்ட்டுக்கும் மயங்கிவிடுவார்கள் என்று உளறிக் கொட்டி ‘சேம் சைடு’ கோல் போட்டுள்ளார்.
வெறும் ஜீன்ஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டாலே ‘உயர்’ சாதிப் பெண்களெல்லாம் மயங்கி விடுவார்கள் என்று ராமதாசுக்கு கவலை பிறந்துள்ளதற்கு  காரணம் இல்லாமல் இல்லை. ராமதாஸ் ஒருபக்கம் தாங்கள் கலப்புத் திருமணங்களை எதிர்க்கவில்லையென்றும், காதல் நாடகத் திருமணங்களைத் தான் எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதிக்க சாதி வானவில் கூட்டணியைச் சேர்ந்த இரா. மணிகண்டன் தமது அமைப்பு காதல் கலப்புத் திருமணங்களையே மொத்தமாக எதிர்ப்பதாக அறிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்!


Viruvirupu
பிரிட்டிஷ் ஆயில் நிறுவனம் BP, உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கி, உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தரையடி எண்ணை எண்ணை வளம் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்குவதற்காக, 100 மில்லியன் டாலர் பணம் செலவிடப்படவுள்ளது.
இவர்கள் உருவாக்கவுள்ள சூப்பர் கம்ப்யூட்டரின் மெமரி, 1.5 லட்சம் iPodளின் மொத்த மெமரிக்கு சமமானதாக இருக்கும்!

வெள்ளி, 7 டிசம்பர், 2012

இசையமைப்பாளருக்கு பத்திரிக்கை வைத்து பிடுங்கிச் சென்ற ஜெயகாந்தன்


சென்னை: பிரபல நாவலாசிரியர் ஜெயகாந்தனின் மகள் திருமணம் நடந்தபோது மகாலின் பெயரைப் பார்த்ததும் அதற்கு இசையில் பெரும் ஞானமுள்ள இசையமைப்பாளர்(ilayaraja) வர மறுத்தார் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாடல் ஆசிரியர், கவிஞர் வைரமுத்து விகடன் மேடையில் கூறியிருப்பதாவது,
எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் நீங்கள் ரசிக்கும் விஷயம்?
அவரது அறச் சீற்றம்.
ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.
நான் ஜெயகாந்தன் பேசுகிறேன். வணக்கம்; வைரமுத்து" வைரமுத்து">வைரமுத்து பேசுகிறேன்.
என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது.
அது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங்கள்.
'பொன்மணி மாளிகை' பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப்பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம்.
'கட்டாயம் வருகிறேன்' என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். 'நான் அங்கு வர முடியாதே' என்று நெளிந்தாராம்.
விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, 'நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?' என்று அழைப் பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டாராம்.
இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன்.
கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டேன்.
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
என்று அவர் தெரிவித்துள்ளார்.
அந்த இசையமைப்பாளர் யார் என்பதை நீங்கள் 11வது பாராவிலேயே கண்டுபிடித்திருப்பீர்களே. அந்த நல்ல இசைஞானம் உள்ளவர் ஒரு நல்ல மனிதர் இல்லையே 

சுஹாசினி சரத்குமார், முதல்வர் 50 லட்சத்தை தூக்கிக் கொடுத்துள்ளார்

 சென்னை சர்வதேச திரைப்பட விழா திறனாய்வு மற்றும் கொண்டாட்டம் மக்கள் வரிப்பணத்தில் கூத்து 
தமிழக முதல்வர் வெள்ளிக்கிழமை(07.12.2012) தலைமைச் செயலகத்தில், சென்னையில் நடைபெறவுள்ள 10-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்காக தமிழக அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர் தங்கராஜிடம் வழங்கினார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் சார்பில் 10-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 12.12.2012 முதல் 20.12.2012 வரை நடைபெறவுள்ளது. இந்த திரைப்பட விழாவில் 54 நாடுகளில் தயாரிக்கப்பட்ட 172 திரைப்படங்கள், 8 நாட்களில் 8 திரையரங்குகளில் திரையிடப்படும்.10-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு கடந்த ஆண்டைப் போன்றே வழிகாட்டுதலும், ஆதரவும், நிதியுதவியும் அளித்திடுமாறு இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளர் முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.அந்தக் கோரிக்கையை பரிசீலித்த முதல்வர், இந்த ஆண்டு சென்னையில் நடைபெறவுள்ள 10-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்காக தமிழக அரசின் சார்பில் 50 லட்சம் ரூபாய் அனுமதித்து ஆணையிட்டிருந்தார்.

விஸ்வரூபம் டிடிஎச் உரிமை ரூ 50 கோடிக்கு sale

: விஸ்வரூபம் படத்தின் டிடிஎச் உரிமை ரூ 50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது.
ஆனால் தியேட்டர்களில் வெளியிட்டு லாபம் பார்ப்பது சிரமம் என்பதால், தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே டிடிஎச் மூலம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டுள்ளார்.
இது தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், தன் படத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் உரிமை தனக்கே உள்ளது என்று கூறியுள்ள கமல், டிடிஎச் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
முதல் கட்டமாக முன்னணி டிடிஎச் சேவை வழங்கும் ஏர்டெல் மற்றும் ஸ்டார் குழுமத்துக்கு இந்தப் படத்தை ரூ 50 கோடிக்கு விற்றுள்ளதாகத் தெரிகிறது.
தியேட்டருக்கு வருவதற்கு 8 மணி நேரம் முன்பே டிடிஎச்சில் விஸ்வரூபத்தைப் பார்த்துவிடலாம். பின்னர் தியேட்டர்களில் பார்க்கலாம். அனைத்து ஏரியாக்களிலும் கமல்ஹாஸனே ரிலீஸ் செய்கிறார்.

பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையார் காலமானார்

சென்னை: தமிழறிஞரான பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையார் (வயது 79) சென்னையில் இன்று காலமானார்.
பாவலரேறு பெருஞ்சித்திரான் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர். மறைமலையடிகளார் மற்றும் பாவாணர் ஆகியோரிடம் கொள்கைகளை கற்று பரப்பியவர். இவரது மறைவுக்குப் பிறகு துணைவியார் தாமரை அம்மையார் அப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

UK குரான்’ மனப்பாடம் செய்ய முடியாத மகனை அடித்துக் கொன்ற இந்தியப் பெண்:


Sara Ege, 33, a mathematics graduate from India, was found guilty at Cardiff Crown Court on Wednesday of beating her son Yaseen Ege to death at their home in Pontcanna, Cardiff, in July 2010 and setting fire to his body. 
She was also found guilty of perverting the course of justice at the Court. Sentence was adjourned, the BBC reported.
Sara also claimed at one point she believed the stick she used on her son had an evil spirit in it. The boy's father, Yousuf Ege, 38, was acquitted of causing Yaseen's death by failing to protect him, the Daily Telegraph reported.
It was initially thought Yaseen had died in the blaze at the family home but tests later revealed he had died hours earlier. Sara had pleaded not guilty to murder and claimed her husband was responsible for Yaseen's death. Sara said she feared her husband would kill her and target her family unless she confessed to the murder.
 லண்டன்: இங்கிலாந்தில் குரான் பாடலை மனப்பாடம் செய்யாத மகனை அடித்துக் கொலை செய்துள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர். இந்த சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த யூசுப் இங்கிலாந்தில் கார்டிப் என்ற இடத்தில் தனது மனைவி சாராவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை கற்கச் சொல்லியும், பாடல்களை மனப்பாடம் செய்யச் சொல்லியும் தனது மகன் யாசினை அடிக்கடி சாரா அடிப்பாராம்.
இருந்தாலும் யாசினால் குரான் பாடல்களை மனப்பாடம் செய்ய முடியவில்லை. இதனால் யாசின் மீது கோபமடைந்த சாரா கடந்த 2010ம் ஆண்டு மிருகத்தனமாக அடித்திருக்கிறார். இதில் சிறுவன் யாசின் இறந்து போயிருக்கிறான். எனினும் அதைப்பற்றி கவலைப்படாத சாரா, யாசின் உடலை மறைக்க எண்ணை ஊற்றி எரித்து, கருகிய உடலை குழிதோண்டி புதைத்திருக்கிறார்.http://www.walesonline.co.uk

ராஜ்யசபா..FDI ஓட்டெடுப்பில் மத்திய அரசு வென்றது

 India’s beleaguered coalition government won a major battle today, prevailing in two key votes in the nation’s parliament that will allow foreign multi-brand retailers like WalMart and Tesco to open shop in the country. The move to allow 51% foreign investment in multi-brand retail stores helped end a two-year-long period of so-called ‘policy paralysis’ when it was first announced in September, but soon ran into trouble when then-coalition partner Trinamool Congress (TMC) pulled out of the government to protest the measure. The opposition Bharatiya Janata Party (BJP), meanwhile, has been angling for a vote on the FDI issue for months.

டெல்லி: எப்டிஐ விவகாரத்தில் இன்று ராஜ்யசபாவில் விவாதமும் வாக்கெடுப்பும் நடந்தது. அதிலும் மத்திய அரசு வென்றுள்ளது.
ராஜ்யசபாவில் மொத்தமுள்ள எம்பிக்கள் எண்ணிக்கை 244. அதில் ஓட்டெடுப்பில் வெல்ல 122 எம்பிக்களின் ஆதரவு தேவை.
இதில் நியமன எம்.பிக்கள் 10 பேரில் சச்சின் தெண்டுல்கர், நடிகை ரேகா, காங்கிரஸின் முரளி தியோரா ஆகிய 3 பேர் தனிப்பட்ட காரணங்களுக்காக இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் வாக்கெடுப்பில் வெல்ல 241 பேரில் (244-3=241) பாதி அளவான 121 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால், நியமன எம்பிக்கள் 7 பேரையும் சேர்த்து காங்கிரஸ் கூட்டணிக்கு 97 எம்பிக்களின் ஆதரவே இருந்தது. இது போக லாலுவின் கட்சி எம்பிக்கள் 2 பேரின் ஆதரவைச் சேர்த்தால் 99 பேரின் ஆதரவு இருந்தது.
இதனால் வாக்கெடுப்பில் வெல்ல மேலும் 22 எம்பிக்களின் ஆதரவு காங்கிரசுக்குத் தேவைப்பட்டது. இந் நிலையில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 9 எம்பிக்கள் ஓட்டெடுப்புக்கு சற்று முன் வெளிநடப்பு செய்துவிட்டனர். இதனால் அவையில் இருந்த எம்பிக்களின் எண்ணிக்கை 232 (241-9=232) ஆகக் குறைந்தது.
இதனால் ஓட்டெடுப்பில் 232 எம்பிக்களில் பாதி அளவான 116 பேரின் ஆதரவு இருந்தாலே அரசுக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்துவிட முடியும் என்ற நிலை உருவானது.
இந் நிலையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்கள் அரசை ஆதரித்து வாக்களித்தால் எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக 123 வாக்குகளும், தீர்மானத்துக்கு ஆதரவாக (அரசுக்கு எதிராக) 109 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன.
இதன்மூலம் பாஜக-அதிமுக-இடதுசாரிகள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக உருவாக்கிய நெருக்கடியை காங்கிரஸ் கூட்டணி முறியடித்துவிட்டது.
இப்போது லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் எப்டிஐக்கு எதிரான தீர்மானங்கள் தோற்றுவிட்டதால், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

ஸ்கின் அலர்ஜியால் சமந்தாவுக்கு வாய்ப்பு ..யோசிக்கிறாராம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஸ்கின் அலர்ஜிக்கு சிகிச்சை எடுத்தாரு சமந்த நடிகை. இப்போ அவரோட முகத்துல மாற்றம் தெரியுதாம்...... பழைய அழகு இப்போ இல்லேன்னு எல்லோருமே சொல்றாங்களாம். செவன்த் சென்ஸ் நடிக்கிற படத்துல சமந்தத்தை புக் பண்ண லிங்க் இயக்கம் முடிவு பண்ணியிருந்தாராம். இப்போ அவரை செலக்ட் பண்றது பத்தி தீவிரமா யோசிக்கிறாராம்...

இந்தி ..Shall be என்ற வார்த்தைக்குப் பதிலாக May be என்ற


மொழிப்போர் / அத்தியாயம் 13
ஆட்சிமொழி ஆணையம், நாடாளுமன்றக் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி 13 ஏப்ரல் 1963 அன்று ஆட்சி மொழி மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின்படி, 26 ஜனவரி 1965 முதல் இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும். இந்திக்குத் துணையாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். இந்த இடத்தில்தான் சிக்கல் தொடங்கியது. ஷரத்துகளில் May, Shall என்ற இரண்டு ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
மத்திய அரசின் ஆணைகள், அவசரச் சட்டங்கள், விதிமுறைகள் இந்தியில் மொழிபெயர்க்கப் பட்டால் அவை அதிகாரப்பூர்வமானவையாகக் கருதப்படவேண்டும் (shall be). நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்மொழியப்படும் மசோதாக்கள், திருத்தங்களுக்கு இந்தி மொழிபெயர்ப்பும் இணைக்கப்படவேண்டும் (shall be). மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்களும்கூட ஆங்கிலத்தோடு இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் (shall be). அந்த மொழிபெயர்ப்பும் அதிகாரப்பூர்வமானதாகக் கருதப்படும்
(shall be).
அரசியல் சாசனம் தொடங்கி பதினைந்து ஆண்டுகள் கழிந்தபிறகும் மத்திய அரசின் அனைத்து அதிகாரப் பூர்வ நோக்கங்களுக்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் இந்தியோடு சேர்த்து ஆங்கில மொழியும் தொடர்ந்து பயன்படுத்தப்படலாம் (may be).  http://www.tamilpaper.net/?p=7175

செம்மஞ்சேரியில் 5000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பே இல்லை

சென்னையிலுள்ள கிரீம்ஸ் சாலைக்கு அருகே அமைந்துள்ள மர்கீஸ் கார்டன்  பகுதியில், கடந்த ஜூன் 26 அன்று 70 குடிசை வீடுகளும்; ஜூலை-2 அன்று 45 வீடுகளும்; எஞ்சியிருந்த குடிசைகள் ஜூலை 11 அன்றும் எனத் தவணை முறையில், சுமார் ஒரு மாத காலத்திற்குள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த 130 குடிசைகளும் எரிந்து சாம்பலாகின. இப்பகுதியினை அடுத்து, ஜூலை 29 அன்று சென்னை – அசோக் நகரையொட்டி அமைந்துள்ள அம்பேத்கர் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 500-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாகின. இதனைத் தொடர்ந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலானது மட்டுமின்றி, உடல்கருகி ஒருவர் இறந்தும் போனார்.
கூவம் கரையில் கட்டப்பட்டு வரும் அதிவேக நெடுஞ்சாலைப் பணியை காரணம் காட்டி, மர்கீஸ் கார்டன் பகுதி மக்களையும்; மெட்ரோ ரயில் பணியைக் காரணம் காட்டி அம்பேத்கர் நகர் பகுதி மக்களையும் அவ்விடத்தைக் காலிசெய்துவிட்டு கிளம்புமாறு அதிகாரிகளும், அமைச்சர்களும் அவர்களின் அல்லக்கைகளான உள்ளூர் கரைவேட்டிகளும்  இப்பகுதி மக்களை  தொடர்ந்து மிரட்டி வந்ததோடு, நகருக்கு வெளியே செம்மஞ்சேரியில் மாற்று இடம் தருவதாகவும் நைச்சியமாகப் பேசிவந்தனர்.

அவுட்சோர்சிங் துறையில் ஆட்குறைப்பு!

வினவு
 உலகளாவிய பொருளாதார சூதாட்டக் குமிழியின் போது ஆயிரக் கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுத்த நிறுவனங்கள், குழிழி உடைந்த பிறகு தமது லாபத்தை தக்க வைத்துக் கொள்ள அவர்களை நடுத்தெருவில் விட ஆரம்பித்திருக்கின்றன.
இந்தியாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வணிகத்தை முதன் முதலில் ஆரம்பித்து வைத்த அமெரிக்காவின் டல்லாஸை தலைநகரமாக கொண்டு இயங்கும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறது.
1985-ம் ஆண்டு செயற்கைக் கோள் வழியாக தகவல் பரிமாறிக் கொள்ளும் வசதியை பெங்களூருவில் நிறுவி இந்தியாவின் ஐடி அவுட்சோர்சிங் துறையை தொடங்கி வைத்த நிறுவனம் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (டிஐ). அந்நிறுவனம் இந்தியாவில் 1500 பொறியாளர்களை வேலைக்கு வைத்திருக்கிறது.

யாருக்கோ பணியாததால் தான் புவனேஸ்வரியை மகா மோசமானவராக

சென்னை:அடிதடி, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நடிகை புவனேஸ்வரி மீது, ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை சினிமா தியேட்டர் ஒன்றில், இரண்டு வழக்கறிஞர்களுடன், இரவு காட்சிக்கு, புவனேஸ்வரி சென்றார். அங்கு ஏற்பட்ட பிரச்னையில், புவனேஸ்வரியுடன் வந்தவர்கள், போலீஸ் உட்பட அனைவரையும் அடித்து உதைத்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வழக்குகள் பல விதம்
புவனேஸ்வரி மீது, மத்திய குற்றப்பிரிவில், 18க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 இந்த புவனேஸ்வரியின்  தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி போலீஸ் பத்திரிகைகளுக்கு கசியவிடும் செய்திகளை பார்க்கும்போது சில சந்தேகங்கள் வருகின்றன யாருக்கோ பணியாததால் தான் புவனேஸ்வரியை மகா மோசமானவராக காட்டும் முயற்சி நடை பெறுகிறதோ என்ற சந்தேகம் வருகிறது .யாரின் விருப்பத்தை அவர் பூர்த்தி செய்ய வில்லை என்று காலம் சொல்ல வேண்டும் 

டெங்கு காய்ச்சல். கொலை, கொள்ளையும்தான் மெஜாரிட்டியாக உள்ளது: மு.க.ஸ்டாலி

தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூருக்கு சென்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து பல்வேறு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அதிமுகவின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகத்தில் மக்களுக்கான எந்த நலத்திட்டங்களும் செயல்படவில்லை. சென்னை மாநகராட்சியும் செயல்படவில்லை. மக்களுக்கான பிரச்சனைகள் பற்றி பேச திமுகவினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மொத்தத்தில் மிருக பலம் கொண்ட ஜெயலலிதா ஆட்சியில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொலை, கற்பழிப்பு. கொள்ளையும்தான் மெஜாரிட்டியாக உள்ளது என்றார்.

சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி மகள் எஸ்.ஐ.யாக நியமனம்

 Murdered Punjab policeman's daughter to be appointed SI in Punjab Police
சண்டிகர்: பஞ்சாபில் மகளை ஈவ்டீசி்ங் செய்த கும்பலை ‌போலீஸ் அதிகாரி தட்டிகேட்ட தகராறில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து போலீஸ் அதிகாரியின் மகளுக்கு பஞ்சாப் அரசு எஸ்.ஐ.யாக பணிநியமனம் நியமனம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரைச்சேர்ந்த போலீஸ் எஸ்.ஐ. ரவீந்தர்பால் சிங், இவரது மகளை அகாலிதள் கட்சியைச்சேர்ந்தவர் ரஞ்சித்சிங் ராணா உள்படசிலர், நேற்று பணிக்கு சென்று கொண்டிருந்த போது கேலி செய்துள்ளனர். இதையறிந்த போலீஸ் அதிகாரி , அவர்களை தட்டிகேட்டார்.இதில் ஏற்பட்ட தகராறில் சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்நிலையில் தந்தையை பறிகொடுத்த 23 வயது மகளுக்கு, எஸ்.ஐ.யாக பணிநியமனம் வழங்கி பஞ்சாப் அரசு உத்தரவிட்டது. இதனை அம்மாநில துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதல் தெரிவித்தார். இந்நிலையில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து, சஹேத்ரா போலீஸ் தலைமை காவலர் அஸ்வினிகுமார் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்காததால் அவரை டிஸ்மிஸ் செய்து டி.ஜி.பி. சுமேத்சைனி உத்தரவிட்டார்.
Deputy Chief Minister Sukhbir Singh Badal on Thursday night ordered that the daughter of ASI Ravinder Pal Singh, who was shot dead yesterday, may immediately be enlisted as Sub Inspector in Punjab police as a special case.
"The girl displayed exemplary courage," said the Deputy Chief Minister.
The formalities to appoint the 23-year-old girl as SI will be completed soon, official sources said.
Earlier in the day, Badal had ordered the dismissal of Ashwani Kumar, SHO Chhehrta, who did not entertain the complaint of the girl. Punjab DGP Sumedh Saini has dismissed the SHO from service.
The girls' father was shot dead allegedly by local SAD leader Ranjit Singh Rana in broad daylight in Amritsar when he reached the spot to protect his daughter from being harassed by the ruling party leader.
Rana has been arrested and expelled by the party

இலங்கை தமிழர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் தலைவர்களே எதிரிகள்

புலிகள் பொல்பொட் அமைப்புபோல் செயற்பட்ட காலத்தில் த.தே.கூ மௌனம் காத்தது.

புலிகள் அமைப்பு, 'பொல்பொட்' குழுவைப்போன்று செயற்பட்ட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சத்தமின்றி இருந்து வந்தது எனவும் புலிகள் சொல்வதையெல்லாம் செய்து வந்தது என்றும் இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என் ராம் தெரிவித்துள்ளார். இலங்கையின் பத்திரிகையாளர்களை புதுடில்லியில் வைத்து சந்தித்த போதே இந்த கருத்துக்களை ஆசிரியர் ராம் வெளியிட்டுள்ளார்..
மேலும் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு நாட்டிலும் சென்று அரசியல் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. த.தே. கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவளித்து தமதுபிரச்சினைகளுக்கு தீர்வுகாண முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுதல் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான தற்போதுள்ள இலங்கை அரசாங்கத்தை போன்று எந்தவொரு அரசாங்கமும் இலங்கையில் சிறப்பாக ஆட்சி செய்ததில்லை என்றும் இந்தநிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண த.தே.கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்சவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.

வியாழன், 6 டிசம்பர், 2012

Punjab மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட எஸ்ஐ சுட்டு கொலை

அமிர்தசரஸ்: மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் உதவி எஸ்ஐ சுட்டு கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் பலர் கண்முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசின் காரின்டா போலீஸ் நிலையத்தில் உதவி எஸ்ஐயாக இருந்தவர் ரவீந்தர்பால் சிங். இவரது மகள், வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லும்போதும் வரும்போதும் ரஞ்சித் சிங் ரானா என்ற வாலிபரும் அவரது நண்பர்களும் பின்தொடர்ந்து வந்து கிண்டல் செய்தனர். ஆபாசமாக பேசினர். ரஞ்சித், பஞ்சாபில் ஆளும் சிரோன்மணி அகாலி தளம் கட்சி பிரமுகர். தனக்கு சிலர் டார்ச்சர் கொடுப்பது பற்றி இளம்பெண் தந்தையிடம் கூறி அழுதார்.

கெஜ்ரிவால் குறித்து அன்னா ஹசாரே கடுமை ! ஊழல் ஒழிக்கும் அணியில் வந்தது பிளவு

புதுடில்லி: அரவிந்த் கெஜ்ரிவால் மற்ற அரசியல் கட்சிகள்போலவே செயல்படுகிறார் என்றும் இவர் பதவி மோகம் பிடித்து அலைகிறார் என்றும் தன்னை எதிர்த்து ஆம்ஆத்மி என்று கட்சி துவக்கியுள்ள கெஜ்ரிவால் குறித்து சமூக சேவகர் அன்னா ஹசாரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பு மூலம் உண்ணாவிரதம், இருந்த இந்தியா முழுவதும் பிரபலமான அன்னா ஹசாரே தற்போது பலம் இழந்த நிலையில் இருக்கிறர். இவருக்கு பக்கபலமாக வலது கரமாக இருந்து வந்தவர் கெஜ்ரிவால் . இவர் ஹசாரேயுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். பின்னர் ஆம்ஆத்மி என்ற அரசியல் கட்சியை துவக்கினார், இவருக்கு ஹசாரே ஆதரவு முழுமையாக கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தபோது எங்களுக்குள் பிணக்கு இல்லை என்று இருவரும் சொல்லி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கூட ஹசாரே அளித்த பேட்டியில் கெஜ்ரிவால் கட்சியை ஆதரித்து தேர்தலில் பிரசாரம் செய்யப்போவதாக கூறியிருந்தார். வேட்பாளர்கள் நேர்மையானவராக இருக்கும் பட்சத்தில் என்றும் தெரிவித்தார்.http://www.tamilmurasu.org/index.asp

திரைஅரங்குகள் போர்க்கொடி விஸ்வரூபம் டிவியில் வெளியிட எதிர்ப்பு

கமலின் விஸ்வரூபம் விவகாரம் அனல் பறக்கிறது! இன்று மாலை அவசர கூட்டம்!< “எனது படம், எனது வியாபாரம்” விஸ்வரூபம் படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் என்று கமல் எடுத்துள்ள முடிவால், அவருக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் திரள ஆரம்பித்துள்ளனர்.
விஸ்வரூபம் மற்றும் கமல் மீது அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்வதென முடிவு செய்ய இன்று திரையரங்கு உரிமையாளர்களின் அசாதாரண கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், கமலின் விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் வெளியிட மறுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன், “கமலஹாஸனின் முடிவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது மிகவும் சீரியஸான விவகாரம். சினிமா தியேட்டர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக் கூடியது என்பதால், அசாதாரண கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். இன்று மாலை கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம்” என்றார்.

மாயாவதி:மாநிலங்களவையில் அரசுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி வாக்களிக்கும்

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மாயாவதி பேசியதாவது:- நாங்கள் எப்போதெல்லாம் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கிறோமோ அப்போதெல்லாம் சிபிஐ-க்கு பயந்து நடிக்கிறோம் என்று கூறுகிறார்கள். சிபிஐ அழுத்தம் காரணமாகவே நாங்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக சுஷ்மா சுவராஜ் கூறினார். அந்த குற்றச்சாட்டை மறுக்கிறேன். பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக அவர் கூறிய அந்த வார்த்தை கடுமையாக கண்டிக்கத்தக்கது. பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, அரசியல் எதிரிகள் மீது சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்தியது. அன்னிய முதலீடு தொடர்பான வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி வாக்களிக்கும். இவ்வாறு அவர் பேசினார். மாயாவதியின் இந்த அறிவிப்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆறுதல் அளித்துள்ளது.

விஜயகாந்த்: காவிரி நீர் பெற்றுத் தந்த கருணாநிதி

ஊட்டி: தமிழகத்துக்குரிய காவிரி நீரை முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் பெற்றுத்தந்தனர்.. ஆனால் தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் பெற்றுத்தர முடியவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக திமுக- தேமுதிக இடையே 'இயற்கையான' கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது. தேமுதிக எம்.எல்.ஏ பார்த்திபன் கைது செய்யப்பட்ட போது, பிணவறையிலா பேச்சு சுதந்திரம் என்று கேள்வி எழுப்பி அறிக்கைவிட்டிருந்தார் திமுக தலைவர் கருணாநிதி.
தற்போது காவிரி நீர் விவகாரத்தில் கருணாநிதியை புகழ்ந்திருக்கிறார்

உங்க பெயரையே நான் இழுக்கலை! Why This கொலவெறி டாக்டரே?

Viruvirupu
“நான் கருத்து கூறியபோது, ராமதாஸின் பெயரையே உச்சரிக்கவில்லை. அப்படியிருந்தும் அவருக்கு ஒய் திஸ் கொலவெறி என்மீது?” என்று கேட்டிருக்கிறார், கருணாநிதி.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், “கருணாநிதிக்கு, என் மீதும், வன்னியர்கள் மீதும் எந்த அளவுக்கு வன்மம் இருக்கிறது என்பதை, நாங்கள் செய்வதை சாதிய அரசியல் என்று அவர் சொல்வதில் இருந்து உணர முடிகிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு பற்றி கருத்து தெரிவித்தபோதே, கருணாநிதி அவ்வாறு தெரிவித்தார்.
என்ன சொல்கிறார், கருணாநிதி,
“செய்தியாளர் ஒருவர் என்னிடம், ‘டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து சாதிப் பிரச்சினைகளை கிளப்புகின்ற வகையில் பேசிக் கொண்டே இருக்கிறாரே, அதைப்பற்றி அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே?’ என்று கேட்டார். அதற்கு பதில் கூறிய நான், ‘சாதி வெறியை கிளப்புகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதுதான் எங்களுடைய கருத்து’ என்றுதான் பதில் அளித்திருக்கிறேன்.

Japan சுய இன்பப் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறோம்

 Japan S First Masturbation Bar Women பெண்களுக்கான முதல் சுய இன்ப 'பார்'.. ஜப்பானில் திறப்பு!

Posted by:

ஜப்பானில் லவ் ஜூல் என்ற பெயரில் ஒரு பார் திறந்துள்ளனர். இது முற்றிலும் பெண்களுக்கானது என்பது விசேஷமானது. அதை விட விசேஷமானது, இந்த பாரானது, சுய இன்பம் அனுபவிக்க விரும்பும் பெண்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாம்.
டோக்கியோவின் ஷிபுயா என்ற இடத்தில் இந்த பார் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாரில் முற்றிலும் செக்ஸ் தொடர்பானவைதான் உள்ளன. சுவர்களைக் கூட செக்ஸ் பொம்மைகளைக் கொண்டு அலங்கரித்துள்ளனர்.
பாரின் உரிமையாளரான மெகுமி நககவா கூறுகையில், வைப்ரேட்டர் உள்ளிட்டவை எங்களது சுவரை அலங்கரித்துள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும் பெண்களுக்கு செக்ஸ் மீதும், தங்கள் மீதும் நம்பி்க்கை பெருகும்.
மேலும் சுய இன்பப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான விவாதங்களும் இங்கு நடைபெறுகிறது. பெண்கள் அனைவரும் ஒரே இடத்தில் குழுமி சுய இன்பப் பழக்கம் குறித்து இங்கு விவாதிக்கலாம். தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம்.http://tamil.oneindia.in/

Viswaroopam First release in TV விஸ்வரூபம் முதலில் டிவியில்

சென்னை: விஸ்வரூபம் படத்தை முதலில் டிடிஎச் மூலம் டிவியில் வெளியிடுவதில் உறுதியாக நிற்கிறார் கமல்ஹாஸன். தனது இந்த முடிவை அவர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தெரிவித்துவிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.
கமல் திட்டப்படி, விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!
விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பும் உரிமையை முக்கியமான டிடிஎச் ஆபரேட்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த பிரதான ஆபரேட்டர், மற்ற டிடிஎச் நிறுவனங்களுடன் பேசி படத்தை விற்கப் போகிறார். கிடைக்கும் வருவாயை கமலும் டிடிஎச் நிறுவனமும் பகிர்ந்து கொள்வார்கள்.
இப்படி வெளியிடுவதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. முக்கியமாக, திருட்டு டிவிடி பிரச்சினை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்பட்டுவிடும்.
டிடிஎச்சில் படம் வெளியாகி 8 மணி நேரம் கழித்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல். கிடைக்கும் தியேட்டர்களில் இதை வெளியிடப் போகிறாராம். இதில் இன்னொரு நன்மை... முதலிலேயே படம் டிவியில் காட்டப்பட்டுவிடுவதால் பிளாக் டிக்கெட் பிரச்சினையும் இருக்காது.
டிடிஎச்சில் படம் வெளியிடும் தனது முடிவைத் தெரிவிக்க நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்தார் கமல். அங்கே சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரபல தயாரிப்பாளர்களிடம் தனது பிரச்சினையை விளக்கினார்.
தன் படத்தை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற உரிமை அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே உண்டு என்பதை மறைமுகமாக, ஆனால் அழுத்தமாகத் தெரிவித்துவிட்டு சென்றாராம் கமல்.

Priyamani:அமீர் இருக்கும் மேடைக்கு நான் வர மாட்டேன்

அமீர் இருக்கும் மேடைக்கு நான் வரமாட்டேன் என்று அடம்பிடித்தாராம் பிரியாமணி.
ப்ரியாமணியின் நடிப்பு வாழ்க்கையில் பெரிய திருப்பம் தந்த படம் பருத்தி வீரன். இந்தப் படம் மூலம் தேசிய விருது பெற்று நாடறிந்த நடிகையானார்.
ஆனால் பருத்தி வீரன் படத்துக்குப் பிறகு,. அமீர் இருக்கும் திக்கைக் கூட திரும்பிப் பார்க்க மறுக்கிறாராம் அம்மணி.  விசுவாசத்திற்கும் ஒரு அளவு இருக்கிறதல்லவா ? டைரக்டர் அமீர்  சற்று மனிதாபிமானம் குறைந்தவர் என்று ஒரு வதந்தி உண்டு உண்மையா?!

பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள்

களப்பிரர் காலத்தை ‘இருண்ட காலம்’ எனத் தமிழ் ஆய்வுலகம் வரையறுத்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அக்கருத்தை மறுத்து எழு தப்பட்டது ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ எனும் இந்நூல். கிடைக்கும் இலக்கியத் தரவுகளின் அடிப்படையில் தமிழ்ப் பண்பாடு தழைத்தோங்கிய காலகட்டம் அது என மயிலை சீனி இந்நூலில் நிறுவுகிறார். இந்நூலின் முதற்பதிப்பு வெளிவந்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் ஒடிவிட்டது. இடைப்பட்ட காலங்களில் களப்பிரர் காலம் குறித்து நமது புரிதல் அதிகரிக்கத்தக்க அளவிற்கு தமிழக வரலாறு குறித்த பல புதிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அவற்றை எல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டு மயிலை சீனி அவர்களது நூலில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகட்கு விடைகாண முயலும் ஆய்வுரை ஒன்றையும் இப்பதிப்பில் உள்ளது
 களப்பிரர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? இங்கிருந்த மூவேந்தர்களையும் வென்று மூன்று நூற்றாண்டுகள் அரசோச்சியது எவ்வாறு என்பவை குறித்து ஒருமித்தக் கருத்து இதுகாறும் எட்டப்படவில்லை. “கி.பி.3ஆம் நூற்றாண்டில்தான் கர்நாடகாவில் நந்திமலையைச் சுற்றி வாழ்ந்த களப்பிரர் என்ற முரட்டுக்குடியினர் மூவேந்தர்களையும் வென்று சுமார் மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர்… என்று ஒரு கருத்துள்ளது” ( தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து/ பக்கம்- 7 )
“மதுரையைச் சிறிதுகாலம் ஆண்டுவந்த கருநாடகரே களப்பிரர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது… வேங்கடத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த களப்பிரர்கள் திடீரென்று குடிபெயர்ந்து தெற்கு நோக்கிப் பாய்ந்து பல்லவரையும் சோழரையும் பாண்டியரையும் ஒடுக்கி…” என்கிறார் கே.கே.பிள்ளை ( தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்/ பக்கம் 184, 185 )
இப்படி களப்பிரர்களை வெளியேயிருந்து வந்தவர்கள் என்று நீலகண்டசாஸ்திரி, ஒளைவை துரைசாமிப்பிள்ளை, மு.அருணாசலம்பிள்ளை, என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்க, களப்பிரர்களின் தோற்றுவாய் குறித்து பர்டெயின் ஸ்டெயின் வேறுவகையாக சொல்வதை தனது பொற்காலங்களும் இருண்டகாலங்களும் என்ற கட்டுரையில் கவனப்படுத்துகிறார் பொ.வேல்சாமி ( தலித் கலை இலக்கியம் அரசியல்- பக்கம் 154-160).

டெல்லி அரசு திருப்பி கொடுக்கும் மின்சாரத்தை கேரளாவுக்கு கொடுக்கும் மத்திய அரசு

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 2 மணி நேரமும் மற்ற மாவட்டங்களில் நீண்ட நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மின்பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக் குறையை சமாளிக்க தமிழக அரசு மத்திய அரசிடம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தது.

GMR .. Maldives தனியார் லாபத்துக்கு அரசு மானியம் கொடுக்க வேண்டும்’

Despite an injunction by a competent forum— the Singapore High Court—the Maldives government has announced it will take over the operations of the airport on Friday.
NEW DELHI: Maldives last week terminated its agreement with the GMR-led consortium to run the Male international airport after it unsuccessfully waited 45 days for an appointment with Prime Minister Manmohan Singh for a special envoy of President Mohammed Waheed to convey a letter explaining why the deal was unsustainable, a senior official from the President's office told ET.
மாலத்தீவுகளின் மாலே பன்னாட்டு விமான நிலையத்தை இந்தியாவின் ஜிஎம்ஆர் குழுமத்திடமிருந்து மீட்டு தானே நடத்தப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
‘ஒரு வாரத்துக்குள் மாலத்தீவு விமான நிலைய நிறுவனத்திடம் விமான நிலையத்தை ஒப்படைக்க வேண்டும்’ என்றும் ’30 நாட்களுக்குள் தனது பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறி விட வேண்டும்’ என்று மாலத் தீவு அரசு ஜிஎம்ஆர் குழுமத்துக்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது. அதன்படி வரும் சனிக்கிழமை முதல் (டிசம்பர் 8, 2012) விமான நிலையம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வரும்.
மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கு தென் மேற்கே இருக்கும் தீவுகளின் தொகுப்பு ஆகும். வெறும் 300 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய மாலத்தீவுகளில் 3.2 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
2010-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த அதிபர் ரஷீதின் அரசு உலக வங்கியின் கட்டளைகளுக்கு பணிந்து மாலத்தீவின் விமான நிலையத்தை தனியார் கட்டுப்பாட்டுக்கு விடுவதற்கான முடிவை எடுத்தது. உலக வங்கி தனது மேற்பார்வையில் அதற்கான டெண்டரை தனியார் நிறுவனங்களுக்கு விட்டது. இந்தியாவுக்கு அருகில் இருக்கும் மாலத் தீவில் தமது காலை பதிக்க இந்திய நிறுவனங்கள் போட்டி போட்டன. இறுதியில் ஜிஎம்ஆர் குழுமம் அந்த குத்தகையை வென்றது.

ராஜ்யசபாவிலும் வெற்றி பெறுவோம்: மன்‌மோகன், சோனியா நம்பிக்கை

புதுடில்லி: புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு மீதான ஓட்டெடுப்பில் லோக்சபாவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ராஜ்யசபாவிலும் வெற்றி பெறுவோம் என பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார சீர்ததிருத்தத்திற்காக சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளிப்பது என மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் பா.ஜ. உள்ளிட்ட எதிர்‌கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.http://www.dinamalar.com/

ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா,பாகிஸ்தான் 27.இலங்கை 71

புதுடில்லி: ஊழல்கள் நிறைந்த நாடுகளில் 36-வது இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இது உலக அளவில் 94 ரேங்க் பெற்றுள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.உலக அளவில் அரசுத்துறை, பொதுத்துறை உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் ஊழல்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஊழல்கள் நிறைந்த நாடுகள் எவை என்பது குறித்து ,டி.ஐ.ஐ. எனப்படும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் இந்தியா என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை வெளியிட்டது. அதன்படி 2012-ம் ஆண்டு வரை மொத்தம் உள்ள 182 நாடுகளில் இந்தியா 36 இடத்தில் உள்ளது. இது உலக அளவில் 94வது ரேங்க் ஆகும்.இதுகுறித்து டி.ஐ.ஐ. அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.கே.அகர்வால் கூறியதாவது;உலக அளவில் ஊழல்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் 10 நாடுகள் பட்டியலில் ஆப்ரிக்க நாடான சோமாலியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.ஊழல்கள் குறைந்த உள்ள நாடுகளில் பின்லாந்தும், நியூசிலாந்தும் உள்ளன. http://www.dinamalar.com/

பா.ம.க.,வின் ஒரே தலித் மாவட்ட செயலரும் விலகல்

சென்னை: ""தலித்துகளை இழிவுபடுத்தும் ராமதாஸை கண்டித்து, பா.ம.க., மாவட்டச் செயலர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுகிறேன்,'' என வேலூர் வட மேற்கு மாவட்டச் செயலர் சாமுவேல் செல்லபாண்டியன் கூறினார். செல்லபாண்டியனின் முடிவால், பா.ம.க.,வில் இருந்த ஒரே தலித் மாவட்டச் செயலரையும் அக்கட்சி இழந்துள்ளது. இதுகுறித்து, செல்லபாண்டியன் கூறியதாவது: தருமபுரி நாயக்கன் கொட்டாயில் தலித்கள் மீது வன்னியர்கள் நடத்திய தாக்குதலில், 400 குடிசைகள் எரிக்கப்பட்டன. தலித் மக்களின் நகை, பணம் மற்றும் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவத்துக்கு, கண்டனமோ, வருத்தமோ, ஆறுதலோ தெரிவிக்காத ராமதாஸ், தலித் மக்களை குற்றம்சாட்டுவதோடு, இழிவுபடுத்தும் வேலையையும் மேற்கொண்டுள்ளார். தலித்துக்கு எதிராக, பிற ஜாதியினரை திரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

புதன், 5 டிசம்பர், 2012

தடை! ஒலிம்பிக் கவுன்சிலில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு

இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்வு சமீபத்தில் நடந்தது. இதில் சர்வதேச விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என்று குற்றச் சாட்டு எழுந்தது. தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என்று சர்வ தேச ஒலிம்பிக் கவுன்சில் உத்தரவிட்டது. அவ்வாறு நடத்தப்படவில்லை என்றால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலில் இருந்து தடை  செய்யவும் முடிவு செய்திருந்தது. இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் முறைகேடு புகாரில் சிக்கிய லலித் பனோட், இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து லாசேனில் (சுவிஸ்) நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இந்த சஸ்பெண்ட் மூலம் இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும். மேலும் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலில் இருந்து நிதிஉதவி கிடைக்காது.

உச்ச நீதிமன்றம் உள்ளிட்டு ஊழலுக்கு எதிராக சவுண்டு விடுபவர்கள்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு-ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவால் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஜனவரி 10, 2008-க்குப் பின் வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் ரத்து செதது.  மேலும் அத்தீர்ப்பில், அலைக்கற்றை போன்ற இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய நேர்மையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடத்தப்படும் ஏலமுறைதான் சிறந்தது” என்ற வழிகாட்டுதலையும் முன் வைத்தது.

அவரை பெரிய ஆளாக்காதீர்கள்? வைகோ, என்னிடம் கேட்காதீர்கள்

கடந்த சில நாட்களாக இருவருக்கும் உள்ள மனகசப்பு பற்றி வைகோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மதுரையில் நடந்த கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவுக்கு வைகோ இன்று (05.12.2012) வந்தார். அப்போது செய்தியாளர்கள் நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இணைந்தது பற்றி கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த வைகோ, என்னிடம் கேட்காதீர்கள். செய்தியும் போடாதீர்கள் என்றார்.வைகோவுடன் காரில் உடனிருந்தவர்கள், நாஞ்சில் சம்பத்தை பற்றி கேட்டு அவரை பெரிய ஆளாக்காதீர்கள். அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினர். 

ராஜ்யசபா.. 244.. முலாயம்-மாயாவதி வெளிநடப்பு செஞ்சா மட்டும் போதாது.. ஓட்டும் போடனும் அரசை காக்க!

டெல்லி: எப்டிஐ விவகாரத்தில் இன்று லோக்சபாவைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் வரும் வெள்ளிக்கிழமை விவாதமும் வாக்கெடுப்பும் நடக்கவுள்ளது. இங்கு தான் மத்திய அரசுக்கு பெரும் சிக்கல் காத்துக் கொண்டுள்ளது. காரணம், அங்கு எதிர்க் கட்சிகளிடம் தான் அதிக எம்பிக்கள் உள்ளனர்.
ராஜ்யசபாவில் மொத்தமுள்ள எம்பிக்கள் எண்ணிக்கை 244. அதில் ஓட்டெடுப்பில் வெல்ல 122 எம்பிக்களின் ஆதரவு தேவை.
இங்கு காங்கிரஸ் கூட்டணிக்கு 90 எம்பிக்களே உள்ளனர். இது போக நியமன எம்பிக்கள் 10 பேரும், லாலுவின் கட்சி எம்பிக்கள் 2 பேரும் உள்ளனர். ஆக மொத்தம் 102 எம்பிக்களே அரசுக்கு ஆதரவாக உள்ளனர். எனவே வாக்கெடுப்பில் வெல்ல மேலும் 20 எம்பிக்களின் ஆதரவு காங்கிரசுக்குத் தேவை.

புதிய வழக்கு: காரில் இருந்த கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி புடவையை கவர வந்த கயவர்!

கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மீது 2-வது வழக்கு பாய்ந்துள்ளது என்று செய்தி போட்டால், கிறுகிறுத்துப் போவீர்கள். “அவர்மீது இரண்டே இரண்டு வழக்குகள் மட்டும்தானா?” என்று மூக்கின் மேல் விரலை வைப்பீர்கள். எனவே விளக்கமாக சொல்லலாம். சமீப காலத்தில் அவர்மீது இரண்டாவது வழக்கு பாய்ந்துள்ளது.
சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் டிரைவ் இன் தியேட்டருக்கு தனது ஆதரவாளர்களோடு போய் பெரும் ரகளையில் ஈடுபட்டது, சமீப காலத்தைய முதலாவது வழக்கு. அதைத் தொடர்ந்து புவனேஸ்வரியும், அவரது ஆட்களையும் போலீஸார் கைது செய்தனர். தற்போது, ‘உள்ளே’ இருக்கிறார்.
இந்த விவகாரம் பைசல் பண்ணப்படும் முன்னர், இரண்டாவது வழக்கு பாய்ந்துள்ளது. மடிப்பாக்கம் விநாயகராஜ் என்பவர் புவனேஸ்வரி மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ள விவகாரமும், ஒரு பக்கா கிரிமினல் கேஸூக்குரிய காரம், மணம், குணம் நிறைந்தவை.
மடிப்பாக்கம் விநாயகராஜூக்கு, புவனாவுடன் என்ன டீலிங்? “நடிகை புவனேஸ்வரியிடம் இருந்த ஒரு காரை கடந்த ஆண்டு ரூ.6 லட்சத்திற்கு வாங்கினேன். முதல் தவணையாக அந்த காருக்கு ரூ.5 லட்சம் தந்து விட்டு, காரை வீட்டிற்கு எடுத்து வந்தேன்.

விஸ்வரூபம் கோடிகளில் உதைக்கிறது கணக்கு!!

கமலின் விஸ்வரூபம் படத்துக்கு கடைசி நேர சிக்கல்! கோடிகளில் உதைக்கிறது கணக்கு!!

Viruvirupu
ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்வதில், திரை மறைவில் கடும் சிக்கலை எதிர்நோக்குகிறார் கமலஹாசன் என்று சொல்லப்படுகிறது. விநியோகஸ்தர்கள் கைவிட்ட நிலையில், தமது சொந்த நிறுவனத்தின் மூலம் ரிலீஸ் செய்ய வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேனல் சார்பில் விஸ்வரூபம் படத்தை தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், அதிகபட்சம் 400 தியேட்டர்களுக்கு மேல் கிடைக்காது என்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்புவரை, இந்தப் படத்துக்கு ரூ 40 கோடி வரை விலை கொடுக்க தயாராக இருந்தனர் சில விநியோகஸ்தர்கள். ஆனால் படத்தின் தயாரிப்பு செலவு அதிகம் என்பதால், ரூ 100 கோடிக்கு விற்க வேண்டிய நிலையில் தயாரிப்பு தரப்பு இருந்தது. இதனால், துண்டு விழும் மீதி ரூ 60 கோடியை சரிக்கட்ட, படத்தை தியேட்டரில் ரிலிஸ் செய்யும் தினமன்றே தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிட விலை பேசினார் கமலஹாசன்.
இந்த முயற்சி பற்றி கதை வெளியே தெரிய வந்ததும், திரையரங்க உரிமையாளர்கள் கமலுக்கு ரெட்கார்ட் போட முடிவு செய்தனர். நிலைமை விபரீதமாவதை புரிந்து கமல் தன் டிவி ரிலீஸ் முடிவை கைவிட்டார்.
ஆனால் அதன்பின் படத்தை வாங்க தகுந்த விநியோகஸ்தர்கள் இல்லாத நிலை உருவாகிவிட்டது.

FDI மத்திய அரசு வெற்றி! பாஜக தீர்மானம் தோல்வியடைந்தது.

சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் வெளிநடப்பு செய்து உதவி: எப்.டி.ஐ. வாக்கெடுப்பில் மத்திய வெற்றி! டெல்லி: சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக லோக்சபாவில் பாஜக கொண்டு வந்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 218 வாக்குகளும் எதிராக 253 வாக்குகளும் பதிவாயின. இதையடுத்து மத்திய அரசு தப்பியது.
இந்தத் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடந்தது. மாலையில் வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில் அரசைக் காப்பாற்ற பல திரைமறைவு வேலைகள், பேரங்கள் நடந்தன.
குறிப்பாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி ஆகியவற்றை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க பல்வேறு முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டது.
இந்த விவகாரத்தில் இருவருமே திட்டவட்டமாக எதையும் கூறவில்லை. ஆனாலும் இருவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோ அல்லது வெளிநடப்பு செய்தோ மத்திய அரசைக் காப்பாற்றி விடுவார்கள் என்பது காலையிலேயே தெரிந்துவிட்டது.

balu mahedra:பள்ளிக் கல்வித்திட்டத்தில் சினிமா

பாலுமகேந்திரா: 'சினிமா ரசனையை' பள்ளிக் கல்வித்திட்டத்தில் சோக்க வேண்டும் ! இது குறித்து சினிமாத் துறையிலிருந்து தொடர்ந்து ஒலிக்கிற ஒரே குரல் பாலுமகேந்திராவுடையது மாத்திரமே. தமிழ்ச் சமூகத்தில் சினிமா எத்தனை வலிமையான ஊடகம் என்ற முறையில் அவரது முறையீடு மிக முக்கியமானது. அரசியல்வாதிகள் யாரும் அவரது முறையீட்டை தீவிரமாக பரிசீலிக்கவில்லை என்கிற அவரது ஆதங்கம் நியாயமானது.
எந்தவொரு உலக சினிமாவைப் பற்றியும் யாராவது பரிந்துரைத்தால் உடனேயே கவனமாக குறித்துக் கொள்வேன். அதிலும் ஒத்த அலைவரிசையுள்ளவர்களின் பரிந்துரை என்றால் பொக்கிஷம்தான். ஏனெனில் ஒருவர் சராசரியாக ஐந்தாறு திரைப்படங்களைப் பார்த்து விட்டுதான் அதில் சிறந்ததொன்றாக கருதுவதை மற்றவருக்கு பரிந்துரைப்பார். எனில் நாம் நேரடியாக அந்த சிறந்தததை தேர்வு செய்து மற்ற படங்களை தவிர்ப்பதின் மூலம் நம் உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்தானே?. அந்த வகையில் எஸ்.ரா தனது கட்டுரைகளில் குறிப்பிடும் ஒவ்வொரு திரைப்படத்தையும் எப்படியாவது பார்த்துவிட முயல்வேன். பெரும்பாலும் அவரின் பரிந்துரைகள் என்னை ஏமாற்றியதில்லை. சுஜாதாவால் தூண்டப்பட்டு பின்பு ஒரு கட்டத்தில் எனக்குள் அணைந்து போயிருந்த உலகசினிமா பற்றின ஆர்வம்  மறுபடி ஏற்படுவதற்கு பிரதான காரணம் எஸ்.ரா. அவரின் கலை சார்ந்த தேடலும் அதற்கான உழைப்பும் வெளிப்பாடும் எப்போதும் நான் பிரமிக்கும் விஷயம்.http://pitchaipathiram.blogspot.in/2012/12/blog-post_5.html

ஐ.டி துறை ஊழியர்களின் வேலைச்சுமைக்கு காரணம் என்ன?

வினவு
ஐ-கேட் நிறுவனத்தின் “சதித்திட்டம் அம்பலம்” என்ற தொடர் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கும் ஐடி சேவைகளை வழங்கும் அதன் போட்டி நிறுவனங்களுக்கும் கடுப்பேற்றியிருக்கிறது.
ஐகேட்
-கேட் நிறுவனத்தின் “சதித்திட்டம் அம்பலம்” என்ற விளம்பரத் தொடர் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு ஐடி சேவைகளை வழங்கும் அதன் போட்டி நிறுவனங்களுக்கு கடுப்பேற்றியிருக்கிறது.
பொதுவாக அமெரிக்க, ஐரோப்பிய கார்ப்பரேட்டுகளுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் time & material எனப்படும் நேரம்& பொருட்செலவு அடிப்படையில் கட்டணம் வசூலிப்பது வழக்கம். தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை அனுப்பும் கான்ட்ராக்டர் போல, வாடிக்கையாளரின் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்கள் வேலை செய்த நேரம், கூடுதலாக ஆன செலவுகள் இவற்றை கணக்கிட்டு மாதா மாதம் இன்வாய்ஸ் அனுப்பி பணம் பெற்றுக் கொள்வார்கள்.
இந்த முறையில் வாடிக்கையாளருக்கு பலன் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் காண்டிராக்டருக்கு பணம் வந்து விடும். வேலையை முடிக்க அதிக நேரம் பிடித்தால் அதிக பணம் கொடுக்க வேண்டியிருக்கும். சீக்கிரம் முடிந்து விட்டால் குறைந்த அளவுதான் வருமானம் வரும். நிறைய ஆட்கள் வேலையில் ஈடுபட்டால் வருமானம் அதிகம்.

தோழி எரித்து கொலை : காதல் ஜோடிக்கு வழங்கிய ஆயுள் தண்டனை ரத்து

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
மதுரை: வீட்டுக்கு தெரியாமல் குடும்பம் நடத்தியதை பெற்றோருக்கு தெரிவிப்பதாக மிரட்டிய தோழியை எரித்து கொன்ற வழக்கில் காதல் ஜோடிக்கு கீழ்கோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. திருச்சி கருமண்டபம் அசோக்நகரை சேர்ந்த பாலதண்டாயுதபாணி மகன்  வெங்கடேசன்(27), சுப்பிரமணியன் மகள் வசந்தி(25). ஒரே கல்லூரியில் படித்த இருவரும் காதலித்தனர். காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு, அலைபாயுதே சினிமா பாணியில் அவரவர் வீடுகளில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்த விவரம் வசந்தியின் தோழி நித்யாவுக்கு தெரியும். அவர், இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து வசிப்பதை பெற்றோருக்கு சொல்வதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டு கழிவறையில் எரிந்த நிலையில் இளம் பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பிணமாக கிடந்தவர் வசந்தி என்றும், அவரை கொலை செய்து எரித்ததாக அவரது தந்தை சுப்பிரமணியன், கன்டோன்மென்ட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே, நித்யாவை சில நாட்களாக காணவில்லை என அவரது தந்தை போலீசில் புகார் செய்தார்.http://www.tamilmurasu.org/index.asp இந்த பையன் லுக்கே சரியில்லை இவனை நம்பி ஒரு பெண் ம்ம்ம்ம் 

குஜராத், இமாச்சலில் நேரடி மானிய திட்டத்தை நிறுத்தி வைங்க : தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி : "குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்த மாநிலங்களில், நேரடி மானிய திட்டத்தை, தற்போது அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களுக்காக, அரசு வழங்கும் மானிய தொகையை, "ஆதார்' அடையாள அட்டை திட்டம் மூலமாக, நேரடியாக, சம்பந்தப்பட்ட பயனாளிகளின், வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது.முதல் கட்டமாக, 51 மாவட்டங்களில், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், குஜராத்தை சேர்ந்த, நான்கு மாவட்டங்களும் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த, இரண்டு மாவட்டங்களும் அடங்கும்.http://www.dinamalar.com/

தேர்தல் பணம் பறிமுதல் விதிமுறைகளில் அதிரடி மாற்றம்

அகமதாபாத்: சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் பணம் பறிமுதல் செய்வதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. குஜராத்தில் வரும் 13 மற்றும் 17 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அங்கு நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்தும் வகையில் முறையான ஆவணங்கள் இன்றி வெளியிடங்களில் ரூ. 1 லட்சத்துக்கு அதிகமாக பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.http://www.tamilmurasu.org/index.asp

மின்வெட்டால் முதலாளியாக இருந்தவர் செக்யூரிட்டி ஆனார் தகர்ந்தது தொழில்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
கோவை: கோவையில் கடும் மின்வெட்டு பிரச்னையால் தொழில் நலிந்ததால், முதலாளியாக இருந்தவர் இன்று செக்யூரிட்டியாக மாறிவிட்டார். கோவையில் தினமும் 16 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுவதால், பொறியியல், ஜவுளி, வார்ப்படம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. ஆர்டர்கள், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்கின்றன. கணபதியை சேர்ந்த செல்வம்(32) ‘முகுந்தன் பாலிமர்ஸ்’ என்ற பிளாஸ்டிக் மோல்டர் உதிரி பாகங்கள் ஆலையை 5 ஆண்டாக நடத்தி வந்தார்.
கடும் மின்வெட்டால் ஜாப் ஆர்டர்களை இழந்த இவர், மேலும் நஷ்டத்தை தாங்க முடியாமல், இரு வாரம் முன்பு ஆலையை இழுத்து பூட்டிவிட்டு செக்யூரிட்டி வேலைக்கு சென்று வருகிறார். செல்வம் கூறியதாவது: கம்பெனி, வீடு வாடகை, வங்கி வட்டி, குழந்தைகள் கல்வி கட்டணம் என எல்லா செலவுகளும் போக மாதம் ரூ.5 ஆயிரம் லாபம் கிடைத்தது. தற்போது பகலில் 4 மணி நேரம்கூட தொடர்ச்சியாக மின்சாரம் இல்லை.http://www.tamilmurasu.org/index.asp

சிலிண்டர் மாற்றுவதில் விபரீதம் : நான்கு நோயாளிகள் மரணம்

புதுடில்லி: படிப்பறிவு குறைவானவர்களை கொண்டு ஆக்ஸிஜன்சிலிண்டர்கள் மாற்றியதால் ஏற்பட்ட விபரீதத்தில் நான்கு நோயாளிகள் பலியாயினர். இதனையடுத்து நோயாளிகளின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இச்சம்பவம்பற்றிய விபரம் வருமாறு:
புதுடில்லியில் அரசுக்கு சொந்தமான சுஷ்ருத் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு புதுடில்லியை சேர்‌ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை இன்டென்சிவ் கேர் யூனிட் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவு பற்றாக்குறை காரணமாக நான்கு நோயாளிகள் பலியாயினர். இந்த பிரிவில் நோயாளிகளை கவனிப்பதற்கு என்று தொழில்நுட்ப பணியாளர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் உதவியாளர் வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் அளிப்பதற்கான சிலிண்டர்கள் மாற்றும் போது முறையான வழிமுறைகளை பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.http://www.dinamalar.com/

செவ்வாய், 4 டிசம்பர், 2012

Norway குழந்தைக்கு சூடுவைத்த இந்திய தம்பதிக்கு 18 மாதம் சிறை

நார்வே: குழந்தையை அடித்து துன்புறுத்திய இந்திய தம்பதியருக்கு நார்வே நீதிமன்றம் 18 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர்-அனுபமா தம்பதியர் நார்வேயில் வசித்து வருகின்றனர். இவர்களின் 7 வயது மகன் சாய் ஸ்ரீராம் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்துவந்தான்.
பள்ளிப் பேருந்தில் பயணம் செய்தபோது சாய் ஸ்ரீராம் சிறுநீர் கழித்து விட்டதாகவும், அவன் விதியை மீறி பள்ளிக்கூடத்தில் இருந்து விளையாட்டு பொம்மைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றான் என்றும் சந்திரசேகர் தம்பதியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சாய் ஸ்ரீராமை கண்டித்த பெற்றோர்கள், அவனை இந்தியாவுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

நாஞ்சில் சம்பத் அதிமுகவில் துணை கொ ப செ யானார்

மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபல பேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார். வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டென ரத்து செய்யப்பட்டன.
ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்கப் போவதாகவும் கூட செய்திகள் வலம் வந்தன. திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார். http://tamil.oneindia.in/  இனி அம்மாவுக்கு எடுத்ததெல்லாம் வெற்றிதான் ! வைக்கோவின் வெற்றிகளுக்கு பின்னால் இந்த சம்பத்து தம்பிதான் இருந்தார் அம்மாவை ஒருவழியாக பிரதமர் ஆக்காமல் ஓயமாட்டார். ஆனால் என்ன பழைய ஜால்ராக்களுக்கு இவரை போல் சத்தமாக அடிக்க தெரியாது அவர்கள்தான் பாவம் 

பச்சைப் படுகொலை.சவீதா..கத்தோலிக்க மத அடிப்படைவாதம்!

சவீதா
சவீதாவுக்காக போராட்டம்யர்லாந்தின் கத்தோலிக்க அடிப்படைவாத சட்டத்தின் கீழ் கருக்கலைப்பு உரிமை மறுக்கப்பட்டு உயிர் இழந்த சவிதாவின் குடும்பம் ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருக்கிறது.
சுகாதரத் துறை அமைச்சர் பொது விசாரணை நடத்த மறுத்ததை அடுத்து சவிதாவின் கணவர் பிரவீன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் ஜெரார்ட் ஓ டொன்னல் தெரிவிக்கிறார். அயர்லாந்தின் சுகாதாரத் துறை நடத்திய இரண்டு விசாரணைகளை பிரவீனின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை.
31 வயதான சவிதா ஒரு பல் மருத்துவர். இந்தியாவைச் சேர்ந்த கணவனும் மனைவியும் திருமணமாகி நான்கு ஆண்டுகளாக அயர்லாந்தில் உள்ள கேல்வேயில் வசித்து வந்திருக்கின்றனர். 17 வார கர்ப்பிணியான சவிதா கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட கடும் முதுகு வலியால் கேல்வே பல்கலைக்கழக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.