நள்ளிரவு முதல் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று
பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து ஏ.டி.எம். இயந்திரங்களில் கூட்டம் அலை
மோதுகிறது.
மாதத்தின் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார்.&
மக்கள்
மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு பணத்தை
ஒடுக்குவதற்கான அறிவிப்பு என்று தெரிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் பெரும்
சிரமத்தை எதிர்க்கொண்டு உள்ளனர். 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை
வைத்திருப்பவர்கள், நவம்பர் 10-ந் தேதி முதல் டிசம்பர் 30-ந் தேதிக்குள்
வங்கிகள், தலைமை தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்களில் அவற்றை
டெபாசிட் செய்யலாம் என்று அரசு கால அவகாசம் வழங்கிஉள்ளது. இருப்பினும் 100
ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இப்போதைக்கு செல்லும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்த
அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் ஏ.டி.எம். மையங்களில் தங்கள் வங்கி
கணக்கில் இருந்து ரூ.100 நோட்டுகளை எடுக்க ஒரு பக்கம் கூட்டம் அலைமோதியது.
வாடிக்கையாளர்கள் 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் பெறுவதற்கு பல்வேறு முறை
ஏ.டி.எம். இயந்திரங்களை பயன்படுத்துவதை காணமுடிகிறது. மேலும் சில
வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.களிலும் 500 ரூபாய் நோட்டுகளே வருவதாக கூறினர்.
இதற்கிடையே மறுபக்கம் வங்கியின் தானியங்கி டெபாசிட் செய்யும் எந்திரத்தில்
பணத்தை டெபாசிட் செய்ய கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
சில
இடங்களில் எந்திரங்கள் செயல் இழந்தது. மக்களிடையே பதற்றமும், பீதியும்
ஏற்பட்டு உள்ளது. ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ள பகுதிகளில் கூட்டம் அலைமோதி
வருகிறது. வாடிக்கையாளர் வரிசையில் நின்று பணத்தை எடுக்கும் மற்றும்
டெபாசிட் செய்யும் வண்ணமாக உள்ளனர்.தினமலர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக