roar.media/profile/Vimalathithan :
ஆறுமுக நாவலரின் மானநஷ்ட வழக்கு
19ஆம்
நூற்றாண்டில் தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் பேசப்பட்ட பெரும் சர்ச்சையாக,
'அருட்பா-மருட்பா' தர்க்கப் பூசல் நிலவியது. அதில் சம்பந்தப்பட்ட சிலர்
இறந்த / மறைந்த பின்னரும்கூட அந்த தர்க்கம் நிற்கவில்லை. கிட்டத்தட்ட
நாற்பது ஆண்டுகளுக்கு அந்த 'அருட்பா-மருட்பா' தர்க்கம் தொடர்ந்து
நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டின்
தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவரும் அருட்பிரகாச வள்ளலார் என்று
சொல்லப்பட்டவருமான இராமலிங்க அடிகளுக்கும், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்தவரும் புகழ்பூத்த தமிழறிஞருமான ஆறுமுக நாவலருக்கும் இடையில் தோன்றிய
கருத்து முரண்பாடே, இந்த 'அருட்பா-மருட்பா' தர்க்கத்தின் வித்தாக
அமைந்தது.
சைவ மரபில்
அருட்பாவாக கருதப்படுவது, தேவாரமும் திருவாசகமுமேயாகும். இந்த நிலையில்,
அருட்பிரகாச வள்ளலாரின் பாடல்கள் அக்காலத்தில் அருட்பா எனப் பெயர்சூட்டப்
பெற்றதையடுத்து சைவ மதவாதிகளின் பாரிய எதிர்ப்பைப் பெற்றது. ஆன்ம
அனுபூதிநிலையைப் பெற்றவராக கூறப்படும் வள்ளலார் தனது பாடல்களூடாக, சமூகக்
கட்டமைப்புகளை விமர்சித்தார். அக்காலத்தில் கடுமையாக பின்பற்றப்பட்டு வந்த
சாதிமுறை வள்ளலாரின் பாடலில் கடுமையாக விமர்சிக்கப் பட்டது.
திருச்சி நகைக்கடைக் கொள்ளைக் குற்றவாளிகளான மணிகண்டன் மற்றும் கனகவல்லி ஆகியோர், பல மணி நேர விசாரணைக்குப் பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். nakkheeran.in - ஜெ.டி.ஆர். : - மகேஷ், பகத்சிங் :
சுவரில் துளையிட்டு திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி
மதிப்புள்ள தங்க, வைர, பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சி.சி.டி.வி. கேமராவில்
சிக்காமல் இருக்க மிருக முகமூடி அணிந்தும், மோப்ப நாயை திசை திருப்ப
மிளகாய்ப் பொடி தூவியும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எப்போதும்
ஆட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதி. நான்கு காவலர்கள், 15 நாய்கள் என்று
கொள்ளையர்களுக்கு சவாலாக நிறைய இருந்தும், லேசான மழைத்தூறலும்,
இடிக்கப்பட்டுக்கொண்டிருந்த பழைய கட்டிடத்தின் சத்தமும் சாதகமாக
அமைந்திருக்கிறது.
தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கிளைகள் பரப்பி
உள்ள மிகப்பெரிய நகைக்கடை சாம்ராஜ்யம் லலிதா ஜுவல்லரி. இதன் திருச்சி கிளை
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது. சத்திரம் பேருந்துநிலையம்
அருகே 160 பணியாட்களுடன் இயங்கிவரும் இக்கடையில் அக்டோபர் 1-ஆம் தேதி
இரவில் 13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைபோன தகவல் கிடைத்ததில் இருந்தே...
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர்கள் மயில்வாகனன்,
நிஷா தலைமையிலான டீம் இவ்வழக்கை சவாலாக எடுத்துக்கொண்டு விசாரித்து
வருகிறது.
மின்னம்பலம்: 2016
சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளும்,
19,20,21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளும் சென்னை உயர் நீதிமன்ற
வளாகத்தில் நேற்று மீண்டும் எண்ணப்பட்டன. அதன் முடிவுகள் மட்டும் இன்னும்
அறிவிக்கப்படவில்லை.
இந்த வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ணுவதற்கு
காரணம் என்னவென விசாரித்தோம். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு
எண்ணிக்கை மே 19ஆம் தேதி நடந்தது. காலை முதலே திமுகவும் அதிமுகவும் மாறி
மாறி முன்னிலையில் இருந்துவந்தன. மதியம் வரை ஆட்சியமைக்கப்போவது யார் என்ற
இழுபறியே நீடித்தது. ஆனால், திமுகவை விட சில இடங்களிலேயே அதிமுக
முன்னிலையில் இருந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு
வாழ்த்து தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி காலை 11.15
மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, “தமிழக முதல்வர்
ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் உரையாடினேன். தேர்தல் வெற்றிக்காக அவரிடம்
வாழ்த்து தெரிவித்தேன்.” என்று அதிமுகவின் ட்விட்டர் பக்கத்தை இணைத்து
கருத்து தெரிவித்திருந்தார்.
மின்னம்பலம் :
நடந்து
முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல்
நிதி கொடுத்த விவகாரம் அடுத்த கட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது.
இந்திய
கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு திமுக தேர்தல்
நிதியாக 25 கோடி ரூபாய் கொடுத்ததாக அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் தாக்கல்
செய்திருந்த கணக்கு வழக்கு அறிக்கையை மேற்கோள் காட்டி கடந்த மாத இறுதியில்
செய்திகள் வெளிவந்தன. இந்த விவகாரத்தில் அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள்
திமுகவிடம் விளக்கம் கேட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், ‘இதுபற்றி
உரியவர்களிடம் விளக்கம் சொல்லிவிட்டோம். மற்றவர்களிடம் சொல்ல அவசியம்
இல்லை’ என்று பதிலளித்தார்.
இந்நிலையில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் டிஜிட்டல் திண்ணை பகுதியில், தேர்தல் நிதி: ஸ்டாலினை வளைக்கும் டெல்லி தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில்
, “இந்த விவகாரத்தில் பாஜக இதுவரை ஒரு மௌனப் பார்வையாளராகவே இருந்து
வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகவும் அவரது குடும்பத்தினருக்கு
எதிராகவும் பல்வேறு புகார்களை தயாரித்துவைத்திருக்கும் பாஜக, அது
சம்பந்தமாக மேல் நடவடிக்கை எடுத்தால் பழிவாங்கும் நோக்கில், அரசியல்
நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக விமர்சனங்கள் வரும் என்று கருதுகிறது.
`உடல்
சுகத்துக்கான திருமணங்களுக்கு'' எளிதில் இலக்காகும் பெண்களை பாலியல்
தொழிலில் ஈடுபடுத்தும் இராக்கிய மதகுருமார்கள் பற்றி பிபிசியின்
பிரத்தியேகமான புலனாய்வு கண்டறிந்துள்ளது
இராக்கில் உள்ள
மதகுருமார்கள், உடல் சுகத்துக்காக இளம்பெண்களை பாலியல் தொழிலில்
ஈடுபடுத்தும் தரகு வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை, ஷியா பிரிவினரிடம்
நடைமுறையில் உள்ள ``உடல் சுகத்துக்கான தற்காலிக திருமணம்'' என்ற வழக்கம்
குறித்து பிபிசி அரபிக் செய்தி புலனாய்வுப் பிரிவு நடத்திய ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது.
இராக்கில் மிகவும் முக்கியமான வழிபாட்டுத்
தலங்களின் அருகில் மதகுருமார்களால் நடத்தப்படும் திருமண அலுவலகங்களில்,
தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் இந்தக் குழுவினர் விசாரித்ததில்,
``உடல் சுகத்துக்கான திருமணங்களுக்கு'' மிகவும் குறுகிய காலங்களுக்கு
ஏற்பாடு செய்ய பெரும்பாலான மதகுருமார்கள் தயாராக இருந்தது தெரிய வந்தது.
சில நேரங்களில் அது ஒரு மணி நேர உறவாக, உடலுறவு அளிப்பதற்கான அவகாசமாகவும்
இருந்தது தெரிய வந்தது. ஒன்பது வயது மட்டுமே ஆன சிறுமிகளையும் கூட இந்த,
குறித்த காலம் வரையிலான திருமணங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கும் சிலர் தயாராக
இருந்தனர்.
hindutamil.in :இந்தியாவில் 100 பேரில் 11 பேர் பாதிப்பு; குக்கரில்
சமைப்பதை நிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம்: ஸ்டான்லி மருத்துவமனை
டாக்டர் கே.கண்ணன் அறிவுரை
சென்னை .
குக்கரில் சமைத்து சாப்பிடுவதை நிறுத்தினால் இதய நோய்களை தடுக் கலாம்
என அரசு ஸ்டான்லி மருத்துவ மனை டாக்டர் கே.கண்ணன் அறி வுறுத்தியுள்ளார்.
>
உலக இதய தினத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்து வமனையின் இதய
இயல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது.
மருத்துவமனை டீன் ஆர்.சாந்திமலர் தலைமையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில்
ஆர்எம்ஓ ரமேஷ், ஏஆர்எம்ஓ கீதா, இதய இயல் துறைத் தலைவர் டாக்டர் கே.கண்ணன்,
டாக்டர்கள் ஜி.மனோகர், சி.இளமாறன், மருத்து வம் மற்றும் செவிலிய மாணவ, மாண
வியர், ஊழியர்கள் பங்கேற்றனர்.
மின்னம்பலம் :2016
சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக
சார்பாக இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். வாக்கு
எண்ணிக்கை முடிவில் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்றதாகவும். அப்பாவுவிற்கு
69,541 வாக்குகள் கிடைத்ததாகவும், அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம்
பெற்ற இன்பதுரை வெற்றிபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு
சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ராதாபுரம் தொகுதியில் நடந்த
சம்பவங்கள் குறித்து முக்கிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
2016
சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 19ஆம் தேதி நடைபெற்றது. அப்போது
போயஸ் தோட்டத்தில் சசிகலா தரப்பு ஆதிக்கம் செலுத்திவந்தது. சசிகலாவுக்கு
நம்பிக்கையான ரஜினி என்பவரும் போயஸ் தோட்டத்தில் இருந்தார். அவருடைய போன்
வந்தால், அதிகாரிகளே அலறுவார்கள் என்ற அளவுக்கு அவரின் ஆதிக்கம் இருந்தது.
ராதாபுரத்தில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட இன்பதுரையும் ரஜினியும்
நல்ல நண்பர்கள். இன்பதுரை சசிகலாவின் ஆசிபெற்ற வேட்பாளர் வேறு.
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றிருக்கிறார் என்ற தகவல்கள் வந்துள்ளது.
அதிகாலை 2.30 மணிக்கு அவரது உடல் நிலையில் ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு சிறையில் வழங்கப்பட்ட உணவு நோய்க்கு காரணம் என்று தெரியவருகிறது
தேபோல் தற்போது வரை அவர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை மருத்துவ பரிசோதனைக்கு தான் சென்றுள்ளார் என்ற மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது
"ஒடிசாவில் கோராபுட் மாவட்டத்தில் குவி என்ற திராவிட மொழி பேசும் அந்த
கிராமத்தின் பெயர் தமிலி (Tamili) அங்கு சிறப்பு ழகரம் இல்லாததால் தமிளி
என்றே ஒலிக்கப்படுகிறது. தமிளிக் குடி என்ற ஓர் ஊரும் உண்டு" என்கிறார்
ஆய்வாளர் Balakrishnan R. கூகுல் மேப் இல் தேடினால் கூட கிடைக்கிறது.
கீழடி ஆய்வை தமிழர்களுடன் சுருக்கி விடாதீர்கள். இதைத்தான் எச்.ராஜா போன்ற
ஆரியர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் மொழியில் இருந்து 80 (84) மொழிகள்
தோன்றி இருக்கின்றன. தற்போது தமிழ்நாட்டுக்குள் மட்டும் 64 மொழிகள்
பேசக்கூடிய பழங்குடிகள் இருக்கிறார்கள். அத்தனை மொழிக் குடும்பத்தையும்
இணைக்கவே திராவிடர் மொழி குடும்பம். ஆரியர்களுக்கு எதிர் சொல் திராவிடர்.
பி.ஜே.பி எச்.ராஜா இன்று கீழடி ஆய்வுகளை கண்டு, "ஆகா! தமிழ் நாகரிகம் தான்
உண்மை. திராவிடம் பொய்த்து போய்விட்டது" என்று கூறும் போதே தமிழர்கள்
விழித்துக் கொள்ள வேண்டாமா?
'தமிழ்' பேசும் 'தமிழர்கள்'
போர்வைக்குள் 'பார்ப்பனர்கள்' தங்களை தமிழர்கள் என்று கூறிக் கொள்வார்களே
தவிர, பூணூல் அறுத்துவிட்டு, சமஸ்கிருதம் மொழியை புறக்கணித்துவிட்டு
சமத்துவம் பேசவும், சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று பேசவும் செய்வார்களா என
கேட்டார் பெரியார்.
பெரியார் சவாலை எச்.ராஜாவால் ஏற்க முடியுமா?
தினமணி :கேரள மாநிலம், கொச்சியில் கடலோர
ஒழுங்குமண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளை
இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அந்த குடியிருப்புகளில்
வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை
தெரிவித்தனா்.
கொச்சி நகரின் மரடு பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள
4 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மொத்தம் 343 வீடுகள் உள்ளன. இந்த
சட்டவிரோத குடியிருப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில்
வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தக் குடியிருப்புகளை 138
நாள்களுக்குள் இடிக்குமாறு கடந்த மாதம் 27-ஆம் தேதி உத்தரவிட்டதுடன்,
வீடுகளின் உரிமையாளா்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ. 25 லட்சத்தை 4
வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும்,
குடியிருப்புகளை இடிக்கும் பணியை மேற்பாா்வையிடுவதற்கு ஓய்வு பெற்ற
உயா்நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவையும் நியமித்தது.
அதையடுத்து, அந்தக் குடியிருப்புகளில் வசிப்பவா்களை வெளியேற்றுவதற்கான
பணியை மாநில அரசு தொடங்கியது. குடியிருப்புவாசிகளை வெளியேற்றுவதற்கான கெடு
வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.
மின்னம்பலம் :
சுமி கிருஷ்ணா :
எழுத்தாளர்
பூமணியின் வெக்கை நாவலை மையக்கருவாக வைத்து, தனுஷ்-வெற்றிமாறனின் வெற்றிக்
கூட்டணி எடுத்துள்ள அசுரன் திரைப்படம் தியேட்டர்களுக்கு வந்துவிட்டது.
வெக்கை நாவல் பல்வேறு பாராட்டுகளையும், சிறப்புகளையும் பெற்றது. ஆனால்,
இதனை சினிமா ரசிகர்களுக்காக எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பதைப்
பார்ப்போம்.
இருள் சூழ்ந்த அடர்ந்த காட்டுக்குள் தனது மகன்
சிதம்பரத்துடன்(கென் கருணாஸ்) சிவசாமி(தனுஷ்) ஒருபுறமும், முகமெங்கும் பயம்
மிளிர சிவசாமியின் மனைவி(மஞ்சு வாரியர்) அவரது அண்ணன்(பசுபதி) மற்றும்
மகளுடன் மறுபுறமும் தப்பிச்செல்வதாக அசுரன் திரைப்படம் தொடங்குகிறது. அந்த
முதல் காட்சியில் பார்வையாளர்களுக்குள் கடத்தப்படும் உணர்வுகளும், அடுத்து
ஏதோ நடக்கப்போகிறது என்ற பீதியும் இறுதிக் காட்சி வரை தொடர்கிறது.
சிவசாமிக்கு ஏன் இந்த நிலை?
மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.
“ராதாபுரம்
சட்டமன்றத் தொகுதியில் யார் எம்எல்ஏ என்பதை நிர்ணயிக்கும் மறு வாக்கு
எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்திய தேர்தல் அரசியல்
வரலாற்றிலேயே முதல் முறையாக நேற்று நடந்து முடிந்திருக்கிறது. முடிவை
உச்சநீதிமன்றம் வெளியிடத் தடை விதித்திருக்கும் நிலையில் திமுக
வழக்கறிஞர்கள் மத்தியில் நம்பிக்கை தென்பட்ட அதேவேளை இப்படிப் பல
ராதாபுரங்களை நாம் தவறவிட்டுவிட்டோம் என்ற குமுறல் ஒலியும் நேற்று
நீதிமன்ற வளாகத்திலேயே கேட்டது.
இதுபற்றி விசாரித்தபோது அவர்களைவிட கூடுதல் சுவாரசிய தகவல்கள் கிடைத்தன.
கடந்த
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக 500 வாக்குகள் குறைவாக ஐந்து
தொகுதிகளிலும், ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான்கு தொகுதிகளிலும்
ஆயிரம் முதல் இரண்டாயிரம் வாக்குகள் இடைவெளியில் நான்கு தொகுதிகளிலும்
2000 முதல் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் ஐந்து தொகுதிகளிலும் வெற்றி
வாய்ப்பை இழந்தது. ஆக 18 தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பு அப்போது
கடைசி நேரத்தில் சூறையாடப்பட்டதாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.
மின்னம்பலம்: இந்திய
அரசியல் தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக ராதாபுரம் சட்டமன்ற
தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள்
நேற்று அக்டோபர் 4 ஆம் தேதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு
அதிகாரி முன்னிலையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.
மக்கள்
மன்றத்தின் முடிவுகள் அதிகார மன்றத்தால் மாற்றி அமைக்கப்பட்டன என்ற
குற்றச்சாட்டின் பேரில் தொடுக்கப்பட்ட வழக்கில், உண்மை இருப்பதாக கருதிய
நீதிமன்றம் தன்னுடைய வளாகத்திலேயே மறு வாக்கு எண்ணிக்கை உத்தரவிட்டதை
இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அனைத்து அரசியல் அமைப்பு
ஆர்வலர்களும் உன்னிப்பாக உற்று நோக்கினர்.
நேற்று காலை 12 மணிக்கு
தொடங்கிய தபால் ஓட்டு வாக்கு எண்ணிக்கையில் அப்பாவு -இன்பதுரை ஆகிய இரு
தரப்பினருக்கும் இடையே நடந்த விவகாரங்களை வாக்கு எண்ணிக்கையில்
நடைபெற்றதையும் நேற்று மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் ராதாபுரம்: மறுவாக்கு எண்ணிக்கை முடிவு-சிரிப்பவர் யார்? என்ற தலைப்பில் விரிவாக வெளியிட்டிருக்கிறோம்.
B.h. Abdul Hameed :
‘திரித்துக்’ கூறப்பட்ட வரலாற்றைத்
‘திருத்திக்’ கூறும் திரைப்படம்-‘Giri Vasi pura’ (கிரி வெசி புர)
நேற்று (29/9/18)இத்திரைப்படத்தின் வெள்ளோட்டக் காட்சிக்கு வந்த அழைப்பினை ஏற்று, போயிருந்தேன். கண்டியினை ஆண்ட நாயக்கர் வம்சம், நயவஞ்சகத்தால் அழிந்தொழிந்த கதை.
‘ஹங்குரங்கெத’ பிரதேசத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ‘கண்ணுச்
சாமி’, எனும் இளைஞன், ஶ்ரீவிக்ரம ராஜசிங்கனாக்கபட்ட கதையையும்,
மதவாதம்,இனவாதம் என்ற பேரில், பேரின வாதிகள் தம் சுயநலத்திற்காக
எவ்வாறெல்லாம் சூழ்ச்சிகள் செய்து அம்மன்னனைப் பலிகடாவாக்கினார்கள்.
என்பதையும், வரலாற்று ஆசிரியர்கள் எவ்வறெல்லாம் பொய்யுரைத்து அவனக்
கொடுங்கோலனாகச் சித்தரித்துள்ளார்கள், அவனது உண்மையான குண இயல்புகள் என்ன,
என்பதையெல்லாம் மிக நேர்த்தியாகவும் நெகிழ்ச்சியோடும்
சித்தரித்திருந்தார்-திரைக்கதாசிரியரும் இயக்குனருமான திரு. Daevinda
Kongahage. தமிழில் பேசவேண்டிய கதை மாந்தர்கள் தமிழிலேயே பேசினார்கள்.
பிரித்தானிய பாத்திரங்கள் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். பெரும்பாலான
உரையாடல்கள் சிங்கள மொழியில் அமைந்திருந்தாலும், இதனை ஒரு மும்மொழித்
திரைப்படம் என்றுதான் வகைப்படுத்தவேண்டும். கண்ணுச்சாமி என்ற ஶ்ரீவிக்ரம
ராஜசிங்கனாக நடித்த Pubudu Chathuranga நிறைவாகவே அந்த பாத்திரத்திற்கு
உயிரூட்டினார். மகாராணி வேங்கட ரெங்கம்மாள் பாத்திரமேற்ற நிரஞ்ஜணி
ஷண்முகராஜாவுக்கு இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் என்றுதான் சொல்லவேண்டும்.
Chinniah Kasi : புதுதில்லி: பிரதமர் மோடி, அண்மையில் அமெரிக்காவுக்கு
சென்றுவந்ததற்குப் பின், “அமெரிக்காவில் மோடி அளவிற்கு வேறெந்த இந்தியப்
பிரதமரும் மதிக்கப்பட்டது இல்லை” என்று பாஜகவினர் பிரச்சாரம்செய்து
வருகின்றனர். நாளுக்குநாள் இது அதிகரித்துக் கொண்டேவும்
செல்கிறது.இந்நிலையில், ‘பிரதமருக்குதான் மரியாதையே தவிர, தனிப்பட்ட
மோடிக்கு மரியாதை அல்ல’ என்ற தலைப்புடன், சமூகவலைத்தளங்களில்
வீடியோ ஒன்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ்
கட்சியினர் இந்த வீடியோவை பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர். “மோடிக்கு
முன்னதாக, உலக நாடுகள் மத்தியில் இந்தியப் பிரதமர்களுக்கு மரியாதையே
இருந்தது இல்லை என்று பெருமை பீற்றும் பாஜக-வினருக்கு இந்த வீடியோ
சமர்ப்பணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த வலைத்தளபதிவில்: 34
ஆண்டுகளுக்கு முன்பு 1985இல் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அமெரிக்கா
சென்றிருந்த போது, அவருக்கு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் குடை
பிடித்து, கார் வரைசென்று வழியனுப்பி வைக்கும் வீடியோ பதிவேற்றப்பட்டு
உள்ளது. அந்த வீடியோவின் கீழ், “மோடி பிரதமர் ஆவதற்கு முன்பும் இந்தியா
இருந்தது! அது இதைவிட சிறப்பானதாகவும், உலக அரங்கில் பெரும் மரியாதைக்கு
உரியதாகவும் இருந்தது என்பதற்கு இந்த வரலாறே சாட்சி” என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்னம்பலம் :
கடலூர்
மஞ்சக்குப்பத்திலுள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் -2
படித்தவர் மாணவர் தினேஷ். அதே வளாகத்தில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு
படிக்கிறார். சக மாணவர்களுடன் நேற்று பள்ளிக்குச் சென்ற தினேஷ், அரசின்
இலவச மடிக்கணினியை வழங்குமாறு கேட்டிருக்கிறார். அந்த சமயம், அங்கு வந்த
உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன், மாணவர் தினேஷை சரமாரியாகத் தாக்கினார்.
இந்த வீடியோ பெரிய அளவில் பகிரப்பட்டது. ஆசிரியர் மீது புதுநகர் காவல்
நிலையத்தில் புகார் அளித்த தினேஷ், கடலூர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரையடுத்து, ஆசிரியர்
சந்திரமோகன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இந்த
நிலையில் ஆசிரியரை உடனடியாக விடுவிக்கக் கோரி, அவருடன் பணியாற்றும் சக
ஆசிரியர்கள் நேற்று பள்ளியிலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளி மாணவர்கள்தான் வேன்றுமென்றே வந்து பிரச்சினை செய்ததாகவும் அவர்கள்
குற்றம்சாட்டினார்.
அவர்களிடம் பேசிய இன்ஸ்பெக்டர், “ஆசிரியருக்கு
ஆதரவாக நீங்கள் போராட்டம் நடத்தினால், மாணவருக்கு ஆதரவாக சக மாணவர்களும்,
பெற்றோர்களும் போராட்டம் நடத்துவர். எனவே போராட்டத்தைக் கைவிடுங்கள்” என்று
சுமூகமாகப் பேசி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
மின்னம்பலம் :
இந்தியாவிலேயே
முதல் முறையாக தேர்தல் வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை உத்தரவிடப்பட்ட
வழக்கு, அதுவும் நீதிமன்றத்திலேயே வாக்கு எண்ணிக்கை நடக்கும் வழக்கு
என்றால் அது ராதாபுரம் தொகுதி வழக்குதான்.
அதனால் இந்தியா முழுதும்
பல அரசியல் சாசன வழக்கறிஞர்கள் இதன் நகர்வை அறியக் காத்திருந்தார்கள்
என்றால், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக, திமுகவைச் சேர்ந்த ஏராளமான
வழக்கறிஞர்களும், கட்சிக்கார்களும் ஊடகத்தினரும் திரண்டிருந்தனர் .
அக்டோபர்
1 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்ட
நிலையில் திட்டமிட்டபடி இன்று காலை 11. 30க்கு வாக்கு எண்ணிக்கை நடத்த
சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
நீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்ட ஊழல் கண்காணிப்புப் பதிவாளர் சாய் சரவணகுமார் நீதிமன்ற
அறைக்கு வந்துவிட்டார். வாக்கு எண்ணிக்கை என்றாலே வேட்பாளர்கள் சார்பில்
ஏஜெண்ட்டுகள் கலந்துகொள்வார்கள். இந்த விசித்திர வாக்கு எண்ணிக்கையில்
ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் இன்பதுரை ஒரு வேட்பாளராகவே
கருதப்படுகிறார். எனவே அவர் சார்பில் அவரே ஏஜென்ட்டாக உள்ளே வந்தார்.
திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஏஜென்ட்டாக
வந்தார். இன்பதுரையோடு உள்ளே இருவர் சட்டையில் ஜெயலலிதா படத்தோடு
நுழைந்தனர். அவர்கள் ஏற்கனவே ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை
வேட்பாளர்களின் ஏஜென்ட்டுகள்.
கிடைத்தற்கரிய பெரும்பேறு பெற்றநாள் இன்று. மகிழ்ச்சியை எவ்வாறு
வெளிப்படுத்துவதென தெரியாத அளவிற்கு மீமகிழ்ச்சியாய் இருக்கிறேன். தமிழி
மற்றும் வட்டெழுத்துகளில் எழுத நான்கைந்து ஆண்டுகளாக செயலிகளைத்
தேடிக்கொண்டிருந்தேன். எங்கும் கிடைக்கவில்லை. தமிழியில் அனைத்து
எழுத்துகளும் அடங்கிய ஒரு எணினி வடிவக்கோப்பு கிடைத்தது. அதிலிருந்து
ஒவ்வொரு எழுத்தையும் படமாகமாற்றி வெட்டி ஒட்டி சேர்த்து
எழுதிப்பதிவிட்டுவந்தேன்.
நான்காண்டுகளுக்கு முன்பு www.thevaaram.org
என்னும் வலைத்தளத்தில் தமிழி மற்றும் வட்டெழுத்து எழுத்துரு{Font}
கிடைத்தது. அவற்றை கணினியில் நிறுவிப்பார்த்தேன். அதில் தற்போதைய தமிழில்
தட்டச்சு செய்தால் இவ்விரு எழுத்துகளாக மாறுமாவென்று பார்த்தேன்.
வட்டெழுத்துகளில் மட்டும் மாறியது. தமிழியில் மாறவில்லை. மிகவும் வருந்தி
கவல்புகொண்டேன். கடந்த ஒருமாதமாக மிகவும் முயன்று தமிழி மாற்றியை
தேடிவந்தேன். இந்த நேரத்தில், இன்று நண்பர் தமிழ வேள் அவர்கள்
இவ்வெழுத்துமாற்றி மென்பொருள் தளத்தை பதிவிட்டிருந்தார். கண்டதும்
அளவிடற்கரிய பெருமகிழ்வுற்றேன். அதைப்பதிவிட்ட நண்பருக்கு கோடி நன்றிகூறி
வணங்குகிறேன்.
திருச்சி கொள்ளையும்... திருவாரூர் முருகனும் ... ஆங்கில கிரைம் தொடரை பார்த்து கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரபலமான வங்கி கொள்ளை தொடர் ஒன்றை
பார்த்து திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை நடந்து உள்ளது.
சென்னை,
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்
அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30
கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில்
கடைச்சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கம் மற்றும் வைர
நகைகளை அள்ளிச் சென்றனர். பிரபல நகைக்கடையில் நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட
சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்டிடத்துக்குள் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை
போலீசார் ஆய்வு செய்தபோது, அடையாளம் காணமுடியாத அளவிற்கு முகமூடி, கையுறை
அணிந்து, உடல் முழுவதும் மூடப்பட்ட உடை அணிந்திருந்தது தெரியவந்தது.
ஹாலிவுட் பாணியில் திட்டமிட்டு சுவரில் துளையிட்டு மிக நிதானமாக அங்குலம்,
அங்குலமாக நகை ரேக்குகளைத் திறந்து நகைகளை எடுத்து பையில் போடும் காட்சி
கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
நக்கீரன் : ராதாபுரம் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கடைசி மூன்று சுற்றுகளின் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்குப்பதிவு எந்திரங்களில் 19, 20, 21 ஆகிய மூன்று சுற்றுகளின் வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. அத்துடன் 203 தபால் வாக்குகளும் எண்ணப்பட்டன. இதனை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தேர்தல் ஆணைய அலுவலர்கள் 24 பேர் வாக்குகளை எண்ணும் பணியை ஈடுபட்டனர். இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை விவரங்களை நீதிபதி ஜெய்சந்திரனிடம் பதிவாளர்கள் சமர்ப்பித்தனர். இருப்பினும் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சிறுவன் : தமிழ்நாட்டுல காமராஜர்.கலைஞர்,எம்ஜியார்.அம்மா யாருமே காலேஜுக்குப் போவல. பெரிய முதல் அமைச்சர் ஆவலியா? தெண்டுல்கருன்னு ஒருத்தர் கிரிக்கெட் ஆடுறாராமே.கோடி கோடியா சம்பாதிக்கிறார்னு கேள்விப்பட்டேன். அவரும் பத்தாம் கிளாசு தானாம்மே..பிஹார்ல பியூன் வேலைக்கு டாக்டருக்கு படிச்சவங்க்ய எல்லாம் அப்ளிகேசன் போட்டாங்களாமே? அதுக்கு நாங்க பரவாயில்லதான? Rebel Ravi : இளமையில் கல் !
எங்கள் வீட்டுக்கருகில் ஒரு பெரும் கட்டடம்
எழும்பிக் கொண்டிருந்தது. பலர்
கற்களைத் தூக்கியும், மண்சுமந்தும், கட்டைகளைத் தூக்கியும், சிமெண்ட்
மூட்டைகளோடு் மாடிப் படிகள் ஏறியும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு
இது என்னவோ உழைப்பாய்த் தெரியவில்லை.
அந்த கட்டடத்தினைச் சுற்றி
வந்தேன். அங்கே கல் இறக்கி விட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஒரு
சிறுவனை என்னருகில் வரும்படி அழைத்தேன். அவன் எதுக்கு என சாடையில்
கேட்டான். சும்மாதான் வா என்றேன். தயங்கித் தயங்கி வந்தான்.
டீ
சாப்பிடலாம் வர்றியா என்றேன். வேல நேரத்தில வெளிய போனா அடிப்பாங்க்ய
என்றான். சரி வேல முடிஞ்சதும் வர்றியா என்றேன்..ஒரு வித தயக்கத்துடன்
ஒப்புக்கொண்டான்.
அவன் வரும் வரையில் அங்கே என்ன நடக்கிறது எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
Venkat Ramanujam :
மறுவாக்கு எண்ணிக்கை 42 மாதம் கழித்து ராதாபுரம்
தொகுதியில் கோர்டில் இன்று..
மாண்புமிகு பாரத பிரதமர் சொல்படி செயல்
படும் மதிப்புமிக்க தேர்தல்
ஆனையம் .. போஸ்டல் 203 ஓட்டை எண்ணாமல் 49 ஒட்டில் வென்ற அதிமுக MLA
பயத்தில் மறுஎண்ணிக்கை தடை கோரும் வழக்கும் இன்று கோர்டில் இன்று..
விசித்திரம்.. விந்தை .. வினோதம் ..
நிற்க ..
இந்த வழக்கில் திமுக கோரிய மறுவாக்கு எண்ணிக்கையில் 16,17,18,19 இறுதி
சுற்றுகளை எண்ணினால் திமுக வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம் என்றால் ..
காலையில் 11 மணிக்கே திமுக + 108 லீடிங் ; அதிமுக + 115 லீடிங்க நிலையில்
பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொன்ன பிறகு கவுண்டிங் சுற்றுகள்
அத்தனையும் மறு எண்ணிக்கை செய்தால் திமுக காங் கூட்டணி 131 இடங்களை
வென்றது தெரிய வரும் ..
அதுவும் bogusvotesCM ஜெயலலிதா 30 லட்சம் கள்ள ஓட்டுகளை வைத்து விளையாடிய பின்பும் இந்த நிலை ..
கள்ள ஓட்டுகள் மட்டும் இல்லை என்றால் 2016ல் அதிமுக 60 இடங்களை பெற்று இருப்பதே பெறும் பாடாக இருந்து இருக்கும் ..
சரி நடந்தது நடந்து விட்டது ..இதை மாற்ற முடியாது இனியாவது தேர்தல் ஆனையம் ஒரு விதி செய்யலாமே ..
மின்னம்பலம் :
மணிரத்னம்
உள்பட இந்தியாவைச் சேர்ந்த 49 திரைப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்,
“இஸ்லாமியர்கள், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது
நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என
கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். அக்கடிதத்தில்,
“ஜெய் ஸ்ரீராம்’ பெயரில் பல தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. மதத்தின்
பெயரால் நடைபெறும் கும்பல் தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மக்கள் இந்த அரசை எதிர்த்தால், அவர்களை சிறையில் அடைப்பதோ அல்லது
ஆண்டி-நேஷ்னல், அர்பன் நக்சல் என்று முத்திரை குத்தவோ கூடாது. மேலும்,
ஆளும் கட்சியை விமர்சிப்பது, தேசத்தை விமர்சிப்பது என்று பொருள் ஆகாது”
என்று குறிப்பிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உரிய முறையில்
பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதத்தில் வலியுறுத்தியிருந்தனர்.
கடிதத்தில்,
இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக்
காஷ்யப், அபர்ணா சென், ராமச்சந்திர குஹா, கொங்கனா சென் சர்மா உட்பட 49
பிரபலங்கள் கையெழுத்திட்டிருந்தனர். இந்த நிலையில் கடிதம் எழுதிய
காரணங்களுக்காக அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நக்கீரன் :டான் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, பாகிஸ்தானின்
கைபர்
பக்துன்கவா மாகாணத்தை சேர்ந்த 4 முடிதிருத்துபவர்கள் தங்களது
வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் சொல்லியது போல தாடியை வெட்டியுள்ளனர். ஆனால்
அந்த தாடி இஸ்லாமிய விதிகளுக்கு முரணாக இருப்பதாக கூறி காவல்துறையினர்
அப்பகுதியில் முடி திருத்தம் செய்யும் 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம்
செப்டம்பர் 30 ஆம் தேதி நடந்த நிலையில், காவல்துறையால் கைது செய்யப்பட்டு
காவலில் வைக்கப்பட்டுள்ள முடி திருத்துபவர்கள் இருக்கும் வீடியோ சமூக
ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, இந்த செய்தி தற்போது வெளிச்சத்திற்கு
வந்துள்ளது.
முடிதிருத்துபவர்கள் தொழிற்சங்கம், வாடிக்கையாளர்களுக்கு தாடி ஸ்டைலாக
வடிவமைப்பதை தடைசெய்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது என
கூறப்படுகிறது.
samayam.com : ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட
இடைக்கால தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த
2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில்
அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு உள்ளிட்டோர்
போட்டியிட்டனர். இதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்
இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் அதிமுக வேட்பாளரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை.
அவை செல்லாது கூறி புறக்கணிக்கப்பட்டு விட்டது. மேலும் 19, 20, 21 ஆகிய
சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையின் போது, தன்னை வெளியே அனுப்பிவிட்டதாகவும்
குறிப்பிட்டிருந்தார்.
;
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியில் பதிவான
தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து,
ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
" நீ வடுகன், வந்தேறி என பட்டமளித்து பகடி செய்வது நியாயந்தானா?
சீமானை வைத்து தமிழக அரசியலில் குழப்பம் விளைவிப்பதும், திராவிடத்தை ஒழிப்போம் என முழங்குவதும் பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
"நாம் தமிழர்" கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழக அரசியலில் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஈழத்தமிழர்களுக்கு வழங்கியவர்கள் யார்?
மலையகத் தமிழர்களைக்கூட தம்மக்களாக கருதாத ஈழத்தவர்கள் எந்த உரிமையில் தமிழக அரசியலில் தலையிடுகிறார்கள்?
தமிழகத்திலிருந்து அயல் தேசங்களுக்கு செல்லும் திராவிட இயக்கத் தலைவர்களை இழிவுபடுத்த முனையும் புலம்பெயர் ஈழத்தவர்களின் செயல் அநீதி இல்லையா?
ஈழத்தமிழர்களின் ஆதரவு நிலை, தமிழக மக்களின் அரசியலை ஆபத்தில் கொண்டு சேர்ப்பதை ஒருக்காலும் ஏற்க இயலாது!
பல ஈழத்தமிழர்கள் போலி இனவாத கூட்டத்திற்கும், இந்துத்வாவிற்கும் பகிரங்கமாய் ஆதரவு நிலை எடுப்பது "உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வதற்கு ஒப்பானதே"
ஈழத்தில் யார் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என தமிழக அரசியலாளர்கள் முடிவெடுப்பது எப்படி தவறோ, அதேப்போல தமிழகத்தில் யார் எப்படி அரசியல் செய்ய வேண்டுமென ஈழத்தமிழர்கள் முடிவெடுப்பதும் தவறுதான்!
ஒவ்வொரு தேசத்தின் மக்களே அவர்களின் அரசியலை தீர்மானித்தல் வேண்டும்.
tamil.goodreturns.in : ஜூன் 30, 2018 நிலவரப்படி இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி இடம்
Contingency Fund, Asset Development Fund (ADF), Currency and Gold
Revaluation Account (CGRA), Foreign Exchange Forward Contracts Valuation
Account (FCVA) and Investment Revaluation Account Rupee Securities
(IRA-RS) போன்ற கணக்குகளில் 9.63 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது.
இப்போது
இதை அடித்துப் பிடிங்கி தேர்தலை சந்திக்க எத்தனிக்கிறது பாஜக.
தலைவாரியாக
Contingency Fund (CF) - 2,32,108 கோடி ரூபாய்
Asset Development Fund (ADF) - 22,811 கோடி ரூபாய்
Currency and Gold Revaluation Account (CGRA) - 6,91,641 கோடி ரூபாய்
Foreign Exchange Forward Contracts Valuation Account (FCVA) - 3,262 கோடி
ரூபாய்
Investment Revaluation Account Rupee Securities (IRA-RS) - 13,285 கோடி
ரூபாய்
Contingency Fund
Contingency Fund
எதிர்காலத்தில் வர இருக்கும் எதிர்பாராத செலவுகளுக்கு ஒரு குறிப்பிட்ட
தொகையை ஒதுக்கி வைப்பதற்குப் பெயர் தான் இந்த Contingency Fund.
இது சின்ன
நிறுவனம் தொடங்கி, வங்கிகளை நெறிப்படுத்தும் ஆர்பிஐ வரை வைத்திருப்பார்கள்.
இப்படி அவசர தேவைக்கு மட்டும் 2.32 லட்ச, கோடி ரூபாயை
வைத்திருக்கிறார்கள். ஆர்பிஐ. இதை தான் மோடி அரசு முதலில் வழித்துச்
சாப்பிட துடிக்கிறது. ஏன் என்றால் நாளை ஆர்பிஐ-ல் ஒரு பணப் பிரச்னை என்றால்
கூட ஆர்பிஐ-யை இழுத்து மூடிவிடலாம் இல்லையா..?
அதற்குத் தான்.
tamil.oneindia.com - VelmuruganP :
சீனாவின் முன்னாள் மேயர் வீட்டின் பாதாள அறையில் 13 டன் தங்கம் பறிமுதல்
பெய்ஜிங்:
சீனாவில் ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் மேயர் தனது வீட்டின்
அடித்தளத்தில் 13 டன் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை சீன அதிகாரிகள்
கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் 2லட்சத்து 31 ஆயிரத்து 341 கோடி லஞ்ச பணம்
வங்கி கணக்கில் இருந்தைதையும் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவில் மிக
அதிக அளவில் ஊழல் செய்து சொத்து சேர்த்தவர்கள் என்றால் அவர்களுக்கு மரண
தண்டனை விதிக்கப்படும்.
இதேபோல் சீனாவில் முதல்முறையாக ஊழல் செய்தவர்கள்
என்றால் 10 முதல் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
ஒரு
காலத்தில் சீனாவின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் உயர் பதவியில்
இருந்தவர் ஜாங் குயின் (58 வயது). இவர் டான்ஜோவின் முன்னாள் மேயரும் ஆவார்.
ஜாங் குயின் மீது ஊழல் புகார் எழுந்ததையடுத்து அவரது வீட்டில் சீனா போலீஸ்
அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
tamil.news18.com :பிரசாத் ஸ்டுடியோ இயக்குனர் உட்பட மூன்று பேர் மீது இசையமைப்பாளர் இளையராஜாவின் உதவியாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவிலுள்ள ஸ்டூடியோ 1 ஐ, அதன்
நிறுவனர் எல்.வி.பிரசாத் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கியுள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக இளையராஜா அந்த ஸ்டுடியோவில் வைத்து ஒலிப்பதிவு பணிகளை
மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோ இயக்குனரும், எல்.வி. பிரசாத்தின் பேரனுமாகிய
சாய் பிரசாத் ஸ்டுடியோ 1-ல் சில மேசைகளை போட்டு சுமார் 20 கணினிகளை வைத்து
இசையமைக்க விடாமல் இடையூறு செய்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதீக் ராஜ், ஸ்ருதி மோகன் மேனன் - hindutamil.in/news :
பொருளாதார வளர்ச்சி பெற உகந்த வகையில் அனைத்து அம்சங்களிலும்
முன்மாதிரியாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு மூல விசையாகவும், சமூக
முன்னேற்றத்துக்கு உந்து மேடையாகவும் தென்னிந்திய மாநிலங்கள் இருக்கின்றன.
தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகன உற்பத்தி ஆகியவற்றுக்குக் கேந்திரமாக
விளங்குகின்றன. விவசாயத்தில் அதிக உற்பத்தித்திறன் கொண்டவையாகவும் காபி,
தேயிலை, ஏலக்காய், கிராம்பு என்று தோட்டக்கலை, நறுமணப் பயிர்களுக்குத்
தாய்வீடாகவும் திகழ்கின்றன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம்,
தெலங்கானா என்ற ஐந்து மாநிலங்களின் நபர்வாரி வருமானமானது உத்தர
பிரதேசத்தைப் போல மூன்று மடங்காகவும், பிஹாரைப் போல ஐந்து மடங்காகவும்
இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியில் மட்டுமின்றி, சமூக வளர்ச்சியிலும் தென்னிந்திய
மாநிலங்கள் முன்னேறியுள்ளன. நாட்டின் பிற பகுதிகளை விட தென்னிந்தியாவில்
பெண்கள், பட்டியலினத்தவரின் சமூக-பொருளாதார நிலை மேம்பட்டதாக இருக்கிறது.
பாலின விகிதம் கிட்டத்தட்ட சமமாக இருக்கிறது. குடும்பக் கட்டுப்பாடு முறை
சிறப்பாக அமலில் இருக்கிறது. சிறு குடும்பம்தான் பெரும்பாலும் ஏற்கப்பட்ட
நெறியாகிவிட்டது. தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளிலும் தென்னிந்தியா முன்னிலை
வகிக்கிறது.
மின்னம்பலம் :
உயர்
நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு மேல்முறையீட்டு வழக்கை
விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகள்
மறுப்பு தெரிவித்து வழக்கில் இருந்து விலகிய சம்பவங்கள் இந்திய நீதித்துறை
வரலாற்றில் இதுவரை நடைபெறவில்லை. வழக்கறிஞர்கள், நீதித்துறை பணியாளர்கள்,
அரசியல் வட்டாரத்தினர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பிலும் இந்த விவகாரம்
அதிர்ச்சியோடு பார்க்கப்படுகிறது.
கௌதம் நவ்லகா என்ற மனித உரிமை
ஆர்வலர் மீது மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த கொரேகான் வன்முறை
சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.2017 இல் நடந்த புனே
வன்முறை சம்பவங்களில் தொடர்பும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பும்
கொண்டிருப்பதாக கௌதம் நவ்லகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன்
மீதான வழக்கை தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு அவர்
மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதைத் தள்ளுபடி செய்த
மும்பை உயர்நீதிமன்றம் கைதுசெய்வதற்கு 3 வார தடை விதித்து கடந்த
செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி
மின்னம்பலம் :
கடலூர்
மஞ்சக்குப்பத்தில் செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு
வருகின்றன. ஒரே வளாகத்தில் எல்கேஜி முதல் கல்லூரி வகுப்புகள் வரை நடைபெற்று
வருகின்றன. செயின்ட் ஜோசப் பள்ளியில் ப்ளஸ் 2 வகுப்பு முடித்துவிட்டு,
அங்கிருக்கும் கல்லூரியிலேயே பி.ஏ வரலாறு முதலாமாண்டு சேர்ந்துள்ள தினேஷ்
ராஜகுமார் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி முதல்வர் அருள்நாதனை
நேற்று (அக்டோபர் 3) காலை 11 மணிக்குச் சந்தித்துள்ளனர். அப்போது,
தங்களுக்கு வழங்க வேண்டிய இலவச மடிக்கணினி தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அலுவலகத்தில் சென்று கேட்கச் சொல்லியிருக்கிறார் பள்ளி
முதல்வர்.
இதையடுத்து, அலுவலகத்தை நோக்கிச் சென்ற மாணவன் தினேஷை
வழிமறித்த உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன், “பள்ளிக்கூடமா, என்னண்ணா
கேக்குற, இப்ப பேசுடா” என்று சரமாரியாகக் கன்னத்தில் மாறி மாறி அறைந்தபடி,
சட்டையைப் பிடித்து தரத்தரவென உள்ளே இழுத்து வருகிறார். அங்கு வைத்தும்
சரமாரியாகத் தாக்குகிறார். இது சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
முன்னிலையிலேயே நிகழ்கிறது.
ஆசிரியர்
தாக்கியதில் காயமடைந்த மாணவர், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில்
ஆசிரியருக்கு எதிராக புகார் அளித்தார். இதையடுத்து, கடலூர் அரசு
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமலர் : சென்னை: பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்கும்
நிகழ்ச்சிக்காக பேனர் வைத்துக்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ள சென்னை ஐகோர்ட், பொது மக்களுக்கு இடையூறு இன்றி வைக்க அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்ட விரோதமாக பேனர் வைக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சமீபத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால், வைத்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்து இறந்தார்.
இதனிடையே மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து பேச உள்ளனர். இந்த ஆலோசனை வரும் 11 முதல் 13 வரை நடக்க உள்ளது. தமிழகம் வரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை வரவேற்க, விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மனு தாக்கல் செய்தது
தினத்தந்தி : திருச்சி லலிதா ஜூவல்லரி நகை
கடையில் கொள்ளையடித்த நகை கொள்ளையன் வாகன தணிக்கையின் போது சிக்கினான்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
நேற்று முன் தினம் அதிகாலை 2 மணி அளவில் கடைச்சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றனர். பிரபல நகைக்கடையில் நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொள்ளை தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், திருவாருரில் வாகன தணிக்கையின் போது, நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. நகைகளில் இருந்த பார்கோடுகள் மூலம் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போன நகைகள் தான் அவை என்பது தெரியவந்தது. தப்பியோடிய சீராத்தோப்பு சுரேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்
Six elderly men were tortured and forced to consume human excreta over suspicions of witchcraft in Odisha's Ganjam district, tamiloneindia.com : பெர்ஷம்பூர்:
திடீர் திடீர் என பெண்கள் மரணம் அடைந்துவிட்டனர்.. இது சம்பந்தமாக ஊர்
மக்களுக்கு 6 தாத்தாக்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களின் பற்களை
கொடூரமாக பிடுங்கி எறிந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலம்
கன்ஜம் மாவட்டத்தில் கோபாபூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் போன 6
மாசத்தில் மட்டும் 3 பெண்கள் மர்மமான முறையில் இறந்துவிட்டனர். மேலும் 7
பேர் உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டனர்.
திடீர்
திடீர் என உயிரிழப்பு சம்பவங்கள் நடந்ததால், ஒட்டுமொத்த கிராமத்துக்கும்
யாரோ சூனியம் வெச்சிட்டாங்க என்று ஊர் மக்கள் நினைத்தனர். இப்படி
நினைத்ததுடன் மட்டும் இல்லாமல், அந்த கிராமத்தில் இருந்த 60 வயது
தாத்தாக்கள் 6 பேர் மீது சந்தேகமும் வந்தது. அவர்கள்தான் ஏதோ மாய, மந்திரம்
செய்து, இப்படி பெண்களை பலி வாங்கி விட்டதாக நினைத்தனர்.
(எச்சரிக்கை: சௌதி பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டதை விவரிக்கும் இந்தக் கட்டுரை உங்கள் மனதை சங்கடப்படுத்தலாம்.)
இஸ்தான்புல்
நகரில் வரிசையாக மரங்கள் நின்றிருந்த அமைதியான ஒரு பகுதி வழியே நான்
நடந்து சென்று, நிறைய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியிருந்த நிற
கட்டடம் ஒன்றை நெருங்கினேன்.
ஓராண்டுக்கு முன்பு நாடு
கடத்தப்பட்டிருந்த சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் படம் இதே
கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. அதுதான் அவருடைய கடைசி படமாக இருக்கும்.
சௌதி அரேபிய தூதரகத்தில் அவர் நுழைந்தார். அங்குதான் அவர் கொலை செய்யப்பட்டார்.
ஆனால்
தூதரகத்தை துருக்கி புலனாய்வுத் துறை உளவு பார்த்து வந்தது. இதற்கான
திட்டமிடல், கொலை எல்லாமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒலிநாடாக்களை
மிகவும் சிலர் மட்டுமே கேட்டிருக்கின்றனர். அதில் இரண்டு பேர் பிபிசியின்
பனோரமா நிகழ்ச்சிக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளனர்.
ஜமால் கஷோக்ஜி உயிரைவிடும் தருணத்தில் பேசியவற்றை பிரிட்டிஷ் வழக்கறிஞர் பாரோனெஸ் ஹெலனா கென்னடி கேட்டிருக்கிறார்.
வெள்ளாளன் கார்த்தி பாலா : முதலில் யார் நீங்க ? உங்க குடி என்ன? பூர்வீகம் என்ன? குலதெய்வம் என்ன? மூன்று தலைமுறைகள் பெயர் என்ன? Subashini Thf :
கடந்த இரு தினங்களாக என்னை தமிழரா தெலுங்கரா கன்னடரா...
எனது பூர்வீகத்தை அறிய வேண்டும்.. ஓலைச்சுவடி இவர் என்ன செய்கின்றார்..
என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் தமிழக சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்..
எனக்கு வரிசையாக அடுத்த சில தினங்கள் பல்வேறு தமிழ் தொடர்பான ஆய்வுப் பணிகள் தமிழகத்தில் உள்ளன.
நானும் எனது தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களும் செய்கின்ற பணிகளில்
ஒரு பத்து விழுக்காடு பணியையாவது நீங்கள் செய்தால் தமிழ் மக்களுக்கும் இளம்
தலைமுறையினருக்கும் உலகத் தமிழ் மக்களுக்கும் பயன்படும்.
அதனை செய்யுங்கள்.!
நல்ல காரியங்களைச் செய்து புகழ் பெறுவது ஒருவகை.
நல்ல காரியங்கள் செய்பவர்களை குறைகூறி அதன்மூலம் தனது பெயரை
வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முயற்சி செய்வது மற்றொரு வகை. இது தவறு. நம்
தமிழ் சமூகத்திற்கு இதனால் எந்த பலனும் இல்லை.
இன்றைய
காலகட்டத்தில் இளைஞர்கள் உங்கள் கவனத்தை முழுமையாக கல்வி வளர்ச்சியிலும்
தமிழ் வரலாற்று பாதுகாப்பு நடவடிக்கைகளையும் குவித்து செயல்படுங்கள். அது
தான் இன்றைய தேவை.
மின்னம்பலம் :
பிரதமர்
மோடி, சீன அதிபரை
வரவேற்று பேனர் வைக்கத்
தமிழக அரசுக்கு அனுமதி
வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத
வண்ணம் பேனர் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக
பேனர் வைக்கப்படுவதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில்,
சென்னை உயர் நீதிமன்றம் சில விதிமுறைகளை வகுத்தது. சமீபத்தில் இளம்பெண்
சுபஸ்ரீ சட்டவிரோத பேனரால் உயிரிழந்ததைத் தொடர்ந்து அரசுக்கு கடுமையான
கண்டனங்களைத் தெரிவித்திருந்த சென்னை உயர் நீதிமன்றம் விதிமுறைகளை
கடுமையாக்கியது.
இந்தநிலையில் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்
வருகையையொட்டி விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 16 இடங்களில் பேனர்
வைக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டிருந்தது. இந்தமனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன்,
சேஷசாயி அமர்வு இன்று (அக்டோபர் 3) விசாரிப்பதாகத் தெரிவித்திருந்தது.
அதன்படி
மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞர்
விஜய் நாராயண், பேனர் வைக்க அனுமதி கேட்டு மத்திய அரசும் மனு அளித்துள்ளது.
விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க 16 இடங்களைத் தேர்வு
செய்துள்ளோம் என்று கூறி அதற்கான மாதிரி வரைபடத்தையும் தாக்கல்
செய்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா
வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில்
அடைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.
சிதம்பரத்துக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை வழங்க சிறப்பு நீதிமன்றம்
இன்று அனுமதியளித்துள்ளது.
எனினும், இது சிறையில் இருக்கும் வேறு
கைதிகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கக்கூடாது என்று நீதிமன்றம்
தெரிவித்துள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிபிஐ
காவல் முடிந்து செப்டம்பர் 5 முதல் சிதம்பரம் திகார் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலும் அக்டோபர் 17 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக் கோளாறுகள் காரணமாக வீட்டில்
சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ள அனுமதி வேண்டி சிதம்பரம் தரப்பில்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சிபிஐ தரப்பில்
நீதிமன்றத்தில் ஆஜரான இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா,
சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு வழங்குவதில் தங்களுக்கு ஆச்சேபனை
ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்டு 21 அன்று சிபிஐ சிதம்பரத்தை, அவரது டெல்லி இல்லத்தில் கைது செய்தது.
.vikatan.com : சி.ய.ஆனந்தகுமார் - மலையரசு - என்.ஜி.மணிகண்டன்:
அந்த
வீடியோவில் உள்ள கொள்ளையர்கள், உடை மற்றும் செயல்பாடுகள் குறித்து
அவர்களின் கொள்ளை பாணியை வைத்து, அவர்கள் வட இந்தியத் திருடர்களை
ஒத்திருப்பதால், போலீஸார் அந்த நோக்கில் விசாரித்து வருகிறார்கள்.
திருச்சி
லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில், தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் கொள்ளை
போன சம்பவத்தில், கொள்ளையர்களின் வீடியோ வெளியாகியுள்ளது பெரும்பரபரப்பை
உண்டாக்கியுள்ளது. திருச்சியில்,
லலிதா ஜுவல்லரி நகைக்கடை பின்புறமுள்ள தனியார் கல்லூரி மைதானம் வழியே வந்த
கொள்ளையர்கள், அங்குள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தை ஒட்டியுள்ள சுவரின்
கீழ்ப்பகுதியில், ஆள் நுழையும் அளவிற்குட் துளையிட்டு, உள்ளே
நுழைந்துள்ளார்கள். அந்தக் கொள்ளையர்கள் இருவரும், குழந்தைகள்
விளையாடும் பொம்மை முகமூடி அணிந்தவாறு, கடந்த 2-ம்தேதி நள்ளிரவு 2.30 மணி
முதல் விடியற்காலை 4.30 மணி வரை நகைக் கடைக்குள் இருந்து கொள்ளைச்
சம்பவத்தில் கைவரிசை காட்டியுள்ளனர்.
மாலைமலர் :திருச்சியில் பிரபல நகைக்கடையில் ஒரே ஒரு
ஸ்குரு டிரைவரை கொண்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்த வீடியோ
தற்போது
வெளியாகியுள்ளது.
திருச்சி:<
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கரூர் பைபாஸ் சாலையில் உள்ள லலிதா
ஜூவல்லரி நகைக்கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பல கோடி ரூபாய்
மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின்
பின்பக்க சுவரில் துளையிட்டு, முகமூடிகள் அணிந்து உள்ளே நழைந்த
கொள்ளையர்கள், சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அள்ளிச்
சென்றுள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல் ராஜ் நேரிடையாக விசாரணையில் இறங்கியுள்ளார்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அதில் கொள்ளையர்கள் பெரிய ஆயுதங்கள் எதுவுமின்றி ஒரே ஒரு ஸ்குரு டிரைவை கொண்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நக்கீரன் :
ராதாபுரம்
தொகுதியில், அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு ஆகியோர்
போட்டியிட்டனர். இந்த தேர்தல் முடிவுகளில் இன்பதுரை 69,590 வாக்குகளை
பெற்றார். அப்பாவு 69541 வாக்குகளை பெற்றார். 49 வாக்குகள்
வித்தியாசத்தில், இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவத்தது.
இந்நிலையில் 203 தபால் ஓட்டுகளை செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்ததை
எதிர்த்த அப்பாவு, அந்த வாக்குகளை எண்ண வேண்டும் என்று கோரிக்கை
விடுத்தார். ஆனால், இதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. அதை மீறி தர்ணாவில்
ஈடுபட்ட அப்பாவு, காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினரால்
வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து இன்பதுரை வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஜெயச்சந்திரன்
முன்னிலையில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று
தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 203 தபால்
ஓட்டுக்களை எண்ண, வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 19, 20, 21
சுற்றுகளின் வாக்கு பதிவு எந்திரங்களின் நீதிமன்றத்தில் சமர்பிக்க
வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரவி, நானி, ராகுல், ஏசு, துர்கா, சாயி, ஸ்ரீனு, ராகேஷ், ஆலா மகேஷ், வெங்கடேஷ், பிண்டி ராஜூ ஆகிய அந்த 10பேர் கும்பல் மின்னம்பலம் :
சென்னையில்
செல்போன்களைத் திருடுவதற்குப் பயிற்சி அளித்த கும்பலைக் காவல் துறை கைது
செய்துள்ளது பொதுமக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில்
சாலையில் நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறித்துச்செல்வது என்பது
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலையுயர்ந்த போன்களைப் பறிகொடுப்பது
மட்டுமின்றி அதில் இருக்கும் விவரங்களையும் பறிகொடுக்கும் நிலை உருவாகும்.
இந்தச் சூழலில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபடும் நபர்களை போலீசார்
தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
அதன்படி சென்னையில் பயிற்சி
அளிக்கப்பட்டு ஆந்திர கும்பல் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. பூக்கடை பகுதியில் சந்தேகப்படும்படியாகச் சுற்றித்
திரிந்த ஆந்திராவைச் சேர்ந்த நபரை போலீசார் கண்காணித்துப்
பின்தொடர்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்தே ஒட்டுமொத்த கும்பலும்
சிக்கியிருக்கிறது.
.nakkheeran.in - kalaimohan :
திருச்சி
லலிதா ஜூவல்லரி நகை கடையில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்கள் தான்
எனவும், இரு நாட்களில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும்
காவல்துறையினர் சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்
அருகே உள்ள பிரபல நகைக் கடையான லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்பு
மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சுவரில் துளையிடப்பட்டு இரு
கொள்ளையர்கள் உள்ளே சென்று நகைகளை கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சிகளும்
கைப்பற்றப்பட்டுள்ளது.
தினத்தந்தி :
லண்டன் வங்கியில் இருக்கும் ஐதராபாத்
நிஜாமின் சுமார் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம் என இங்கிலாந்து
கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
லண்டன் வங்கியில் இருக்கும் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கிய இங்கிலாந்து கோர்ட்டு
லண்டன்
பிரிட்டிஷ் இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கிய ஐதராபாத், 1948-ம்
ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. அப்போது ஐதராபாத்தை ஆண்டு வந்த நிஜாம்
உஸ்மான் அலி கான், 10 லட்சத்து 7 ஆயிரத்து 940 பவுண்டு பணத்தை (தற்போதைய
மதிப்பு சுமார் ரூ.8.70 கோடி) பாகிஸ்தானுக்கான அப்போதைய இங்கிலாந்து தூதர்
ஹபிப் இப்ராகிம் ரகிம்தூலாவுக்கு கைமாறினார்.
இந்த பணத்தை அவர் லண்டனில் உள்ள நாட்வெஸ்ட் வங்கியில் போட்டு
வைத்திருந்தார். 70 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்த பணம் தற்போது 35
மில்லியன் பவுண்டாக (சுமார் ரூ.300 கோடி) உயர்ந்துள்ளது.
.meiarivu.com தந்தை பெரியாரின் 141-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு லண்டனில்
நடைபெற்ற நிகழ்வில், பெரியாரை நேரடியாக தாங்கள் சந்தித்த நிகழ்வையும்,
ஈழப்போராட்டம் தொடர்பாக பெரியார் என்ன கருதினார் என்பதையும் பதிவு
செய்துள்ளார் ஈழப்போராட்டத்தில் முக்கியமானவர்களில் ஒருவராக திகழும்
சத்தியசீலன்.
லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட
நிகழ்வில், தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும், ஈழ
ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவருமான தோழர் சத்தியசீலன், தமிழ்
சொலிடாரிட்டி அமைப்பைச் சேர்ந்த சேனன், புதிய திசைகள் அமைப்பின் தோழர்
புவி, மக்கள் கலை பண்பாட்டு களம் அமைப்பின் தோழர் கோகுலரூபன், விம்பம் –
கலை , இலக்கிய ,திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பில் தோழர் வேலு
உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
tamil.oneindia.com - hemavandhana
திருச்சி:
சுவரில் உள்ள அந்த ஓட்டையை பார்த்தால் அவ்வளவு பெரிசாக இருக்கிறது. ஒரு
ஆள் உள்ளே புகுந்து வெளியே வரும் அளவுக்கு கனகச்சிதமாக ஓட்டைய போட்டு..
லலிதா ஜுவல்லரியில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை ஆட்டைய போட்டுள்ளனர்
கொள்ளையர்கள்!
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே லலிதா ஜூவல்லரி நகைக் கடை உள்ளது. 5 வருஷமாக இங்குதான் செயல்பட்டு வருகிறது.
நேத்து
ராத்திரி வழக்கம்போல, கடை ஊழியர்கள் வேலையை முடித்து வீட்டுக்கு
சென்றுவிட்டார்கள். எப்பவுமே 6 வாட்ச்மேன்கள் இந்த கடைக்கு வெளியே நைட்
டியூட்டியில் இருப்பார்களாம். அப்படிதான், கடைக்கு வெளியே இரவெல்லாம் காவல்
இருந்துள்ளனர்.
ஆனால்
இன்று காலை கடையை திறந்து பார்த்தால், நகைகள் அனைத்தும் மாயமாகி இருப்பது
கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது 3 மாடி கட்டிடம்.. இங்குள்ள
முதல் தளத்தில்தான் கொள்ளை நடந்துள்ளது. ஷோ-கேஸில் அடுக்கி
வைக்கப்பட்டிருந்த நகைகள் எல்லாமே அபேஸ் ஆகி இருந்தது. இதையடுத்து,
உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
Karthikeyan Fastura
: இந்திய பெருந்தலைவர்களில் புத்தக வாசிப்பு இல்லாத
ஒரே தலைவர் காந்தியார் என்பது என் கருத்து.
நேரு, அம்பேத்கார், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், மௌலானா ஆசாத், சுவாமி
விவேகானந்தர், பாரதியார், பெரியார் என நான் படித்த பல தலைவர்கள் தேர்ந்த
வாசிப்பு உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.
காந்திக்கு புத்தக
வாசிப்பு இல்லாததன் விளைவு தான் அவரை சனாதன வாதிகளால் சுட்டுக்கொல்ல
வைத்தது. எப்படி என்றால் அவர் நீண்ட வாசிப்பு உடையவராக இருந்திருந்தால்
இந்து மத சனாதன தர்மம் ஒரு அதர்மம் என்று புரிந்திருப்பார். உலக நாடுகளின் வரலாற்றையும், அறிவியலையும் பொருத்தி பார்த்து தேச மக்களிடம் பேசியிருப்பார்.
இந்துத்துவ சிந்தனை கொண்ட காங்கிரஸ் காரர்களையும், இஸ்லாமிய அடிப்படை
வாதத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்குள் சண்டை மூட்டிவிடும் சங்கிகளின்
தந்திரத்தை புரிந்துகொண்டு இந்தியா பாகிஸ்தான் என்று பிரிய வேண்டிய சூழல்
வரும்போது பிடிவாதம் பிடிக்காமல் சுமூகமாக பிரித்திருப்பார்.
சனாதனத்துடன் எப்போதும் பிற மதங்கள் சகிப்புத்தன்மையுடன் சமநீதியுடன்
வாழ்வது கடினம் என்று அம்பேத்கார், ஜின்னா உள்ளிட்ட தலைவர்கள் பாகிஸ்தான்
பிரித்துவிடுவது நல்லது என்று சொன்ன போதும் கேட்காமல் வீண் பிடிவாதம்
பிடித்ததால் தான் வங்காளத்தில் மிகப்பெரிய மதக்கலவரம் தோன்றியது.
தேவையில்லாமல் டென்சனை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்த்தார். 4000 பேர்
கொல்லப்பட்டார்கள். பிறகு அவரே அதை நிறுத்தவும் உண்ணாவிரதம் இருந்தார்.
அதன் பிறகு தான் பாகிஸ்தான் பிரியவும் ஒப்புக்கொண்டார்.
tamil.indianexpress.com :முன் அனுமதி பெறாமல்
சென்னையை விட்டு, வசுமதி வெளியேறக் கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.
Chennai Doordarshan Assistant Director R Vasumathi Suspended:
தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் சென்னை உதவி இயக்குனர் வசுமதி திடீரென
சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற
நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்யாத காரணத்தால் இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் சென்னை கேந்திர உதவி
இயக்குனராக பணியாற்றி வந்தவர் ஆர்.வசுமதி. இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை
தொடங்கியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் அவர் உடனடியாக சஸ்பெண்ட்
செய்யப்படுவதாகவும் பிரசார் பாரதியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஷஷி சேகர்
அறிவித்திருக்கிறார். இந்த நடவடிக்கை காலத்தின் முன் அனுமதி பெறாமல்
சென்னையை விட்டு, வசுமதி வெளியேறக் கூடாது என்றும் அந்த உத்தரவில்
கூறப்பட்டிருக்கிறது.