சனி, 15 செப்டம்பர், 2012

இளம் நடிகை கண்ணீர் வாக்குமூலம்: என்னை பயன்படுத்திய தயாரிப்பு ஆட்கள்

 பைனான்சியர் மற்றும் அவரது ஆட்கள் என்னை எப்படியெல்லாம் பயன்படுத்தினர் என்பது, எனக்கு மட்டுமே தெரியும்.படம் நல்லபடியாக வெளியில் வர வேண்டும் என்பதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு, அவர்கள் சொல்படியெல்லாம் கேட்டேன்
சென்னை:கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு படத்தின் கதாநாயகி புவனேஸ்வரி, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். சினிமா ஷூட்டிங்கில் இஷ்டத்திற்கு என்னை பயன்படுத்தி விட்டு, போலீசில் சிக்க வைத்து சிறையில் தள்ளி விட்டனர் என, இளம் நடிகை கண்ணீர் விட்டார்.சென்னை, விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருநாதன், 42. இவர், ரியல் எஸ்டேட் தொழிலுடன், சினிமா படங்கள் தயாரிக்க பைனான்ஸ் கொடுத்து வந்தார்.

Google நிராகரிப்பு சர்ச்சைக்குரிய திரைப் படத்தின் வீடியோவை நீக்க அமெரிக்கா வேண்டுகோள்

சான்பிரான்சிஸ்கோ: யூ டியூப்பில் இருந்து சர்ச்சைக்குரிய படத்தின் வீடியோவை நீக்குமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ளது.
இந்தப் படத்தின் சில பகுதிகள் யூ டியூப்பில் வெளியானதையடுத்து எகிப்து, லிபியாவில் பயங்கர கலவரம் வெடித்து மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இந்த வீடியோவை நீக்குமாறு அமெரிக்க அரசு விடுத்த வேண்டுகோளை கூகுள் நிராகரித்துள்ளது.

U.P.யில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கிடையாது: முதல்வர் அகிலேஷ்

லக்னோ: மத்திய அரசு அனுமதித்தாலும் உத்தரப்பிரதேசத்தில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கப் போவதில்லை என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு தங்களது சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து ஆதரவளித்தாலும், கட்சி மேலிடமானது சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை ஆதரிக்கவில்லை என்றார் அவர்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் மாநில அரசுகள் இதில் இறுதி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பாஜக மட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் கேரளம், காங்கிரசுக்கு ஆதரவளிக்கும் சமாஜ்வாதி ஆளும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளன.

சென்னையில் இன்று அமெரிக்க தூதரக முற்றுகை

சென்னை: நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சென்னையில் இன்று அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில், அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயாரித்தவர்களையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள யூடியூபையும் கண்டித்து கொளுத்தும் வெயிலில் கோஷங்களை எழுப்பினர்.

இஸ்லாம் எதிர்ப்பு சினிமா டைரக்டர் வீட்டுக்கு முன் குவிந்த மீடியா!

Viruvirupu
தற்போது மத்திய கிழக்கு நாடுகள் எங்கும் அமெரிக்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற தொடக்க காரணமாக இருந்த, இஸ்லாம் எதிர்ப்பு திரைப்பட டைரக்டர், எந்த நிமிடத்திலும் சிறைக்கு அனுப்பப்படலாம் என்று தெரிகிறது.
இவரது திரைப்படத்தால் ஏற்படுத்தப்பட்ட பதட்டம், லிபியாவில் இருந்த அமெரிக்க தூதர் உட்பட சில உயிர்களை பலிவாங்கியுள்ளது. வேறு சில நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டதுடன், அமெரிக்காவுக்கு எதிரான கிளர்ச்சிகளும் இடம்  பெற்றுள்ளன.
Innocence Of Muslims என்ற இந்த திரைப்படம், நிஜமாகவே மிகவும் கீழ்த்தரமானது. இஸ்லாமியர்களை மட்டுமன்றி, நாகரீக மனோபாவமுடைய அனைவரையும் திகைக்க வைக்கக்கூடியது. இதன் டைரக்டர் நகோலா பஸிலி, அமெரிக்கா கலிபோர்னியாவில் வசிக்கிறார். இவர் எந்த நிமிடமும் சிறைக்கு அனுப்பப்படலாம் என்று US federal probation office அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லிங்குசாமியின் யானை! பல கோடி விலை!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கௌதம் பிரபு நடித்து வெளிவரவிருக்கும் கும்கி படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரித்துள்ளார். தமிழ்த் திரைத்துறையில் லிங்குசாமி நல்ல இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என பெயர் பெற்றுள்ளார்.
 லிங்குசாமி தயரித்த கும்கி படத்தை, நடிகர் சூர்யாவின் உறவினரான ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் விற்கப் போவதாக தெரிகிறது. இவ்வளவு பெரிய தயாரிப்பாளர், தான் தயாரித்த படத்தை இவரே வெளியிடாமல் ஏன் மற்றவருக்கு வெளியிட வேண்டும் என்று எழுந்த கேள்விக்கு பணம் என்ற வார்த்தையை பதிலாக சொல்கிறதாம் கோடம்பாக்கம். 

பவர் ஸ்டார் சீனிவாசன் 15 நாள் சிறையில் அடைப்பு!

 வங்கியில் பத்து கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 65 லட்சம் கமிஷன் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக பவர் ஸ்டார் சீனிவாசன் என்ற திரைப்பட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னை அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் சீனிவாசன். இவர் பிரபல மருத்துவராவார். கடந்த சில ஆண்டுகளாக லத்திகா பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தார். தான் தயாரித்த படங்களில் தானே ஹீரோவாக நடித்தும் வந்தார். சென்னையில் அரசியல் கட்சிகளுக்கு ஈடாக தண்ணீர் பந்தலை வைத்து பவர் ஸ்டார் தாகம் தீர்ப்பகம் என்ற பெயரில் பானைகளில் விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

டூரிஸ்ட் புரோக்கர் ஷாருக்கானின் காஷ்மீர் காதல்!



ஷாருக்-கான்
இதய பூர்வமாய் சொல்கிறேன், என் இதயத்தில் காஷ்மீருக்கு எப்பொழுதுமே தனியான ஒரு இடம் இருக்கும்” என்று காஷ்மீர் மக்களை பார்த்து சொல்லியிருக்கிறார் இந்தி நடிகர் ஷாருக்கான். யாஷ் சோப்ரா இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றது. அதன் முடிவில் கோடைக் காலத்தில் உருகும் காஷ்மீரின் பனி மலைகளை போல உருகி விட்டிருக்கிறார் ஷாரூக்கான்.
க்கப்பட்டால் படத்தைப் பார்க்கும் மக்கள் அந்த இடங்களுக்கு போய் வர ஆசைப்படுவார்கள். அதே போல இந்தப் படம் காஷ்மீரில் பெருமளவு எடுக்கப்பட்டதால் பார்க்கும் மக்கள் இங்கு வர விரும்புவார்கள்” என்ற தனது நம்பிக்கையை அவர் வெளியிட்டார். பனி படர்ந்த மலைகள், சில்லென்ற குளிர் “புது வெள்ளை மழை பொழியும்” சூழலில் காதல் பாட்டு. இப்படி அழகாய் போய்க் கொண்டிருக்கும் இளம் காதலர் வாழ்க்கையில் ரோஜா மலரை சுற்றிய முட்கள் போன்ற முஸ்லீம் தீவிரவாதிகள் காதலனை கடத்தி சென்று விடுவார்கள். படம் பார்க்கும் நடுத்தர வர்க்க இந்தியர்கள் ‘இப்படிப்பட்ட அழகான ஊரில் தீவிரவாதமா?’ என்று தேசபக்தியில் கொதிப்பார்கள். 1990களில் காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை  ரோஜா படம் மூலம் இப்படிக் காட்டி பணம் சம்பாதித்ததோடு தேசபக்த மதிப்பெண்களையும் பெற்றுக் கொண்டார் மணிரத்தினம்.

ஆசிரியையின் தண்டனையால் மரணத்தை தழுவிய பள்ளி மாணவன்

  100 முறை, உட்கார்ந்து எழுந்திருக்கும் (தோப்புக்கரணம்) தண்டனையை தந்தார் மாணவன் மரணம் 
வகுப்பில் குறும்பு செய்த மாணவனை கண்டிக்க, ஆசிரியை தந்த தண்டனை, அந்த, 15 வயது மாணவனின் உயிரை பறித்தது.
ஆந்திர தலைநகர், ஐதராபாத்தில் உள்ளது ராயல் எம்பசி பள்ளி. இங்கு, 10ம் வகுப்பில் படித்த மாணவன் முகமது இஸ்மாயில் உசேன். இவன், வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்யவில்லை என்பதற்காகவும், பாடத்தை கவனிக்காமல், சக மாணவர்களுடன் ஓயாமல் பேசிக் கொண்டிருந்ததாலும், வகுப்பு முடியும் வரை, 100 முறை, உட்கார்ந்து எழுந்திருக்கும் (தோப்புக்கரணம்) தண்டனையை தந்தார் ஆசிரியை, முபினா பேகம்.
சிறுவன் முகமது இஸ்மாயில் உசேனுக்கு, ஏற்கனவே, காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, உலோகத் தகடு பொருத்தப்பட்டிருந்தது. அதனால், அவனால், சிறிது நேரத்துக்கு மேல், ஆசிரியை கொடுத்த தண்டனையை தாங்க முடியவில்லை. "வலிக்கிறது' என, கூறினார். இருப்பினும், ஆசிரியையின் மிரட்டலால், தொடர்ந்தது தண்டனை.வகுப்பு முடிந்து வீட்டுக்கு சென்ற உசேனுக்கு, பல்வேறு உடல் பிரச்னைகள் ஏற்பட்டன. இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். 10 நாட்களுக்குப் பின், சிகிச்சை பலன் அளிக்காமல், உசேன் நேற்று பரிதாபமாக இறந்தான்.

மத்திய கிழக்கு முழுவதிலும், அமெரிக்க எதிர்ப்பு! எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம்!!

Viruvirupu
எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம்!
அமெரிக்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகங்களுக்கு முன் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, மத்திய கிழக்கின் பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கிவிட்டது. லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டு, தூதர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, ஏமன் நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது.
இப்போது, டுனிசியா, எகிப்து, சூடான் என பரவிக் கொண்டே போகிறது.
இஸ்லாமுக்கு எதிரான அமெரிக்க திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க என்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இப்போது, முற்று முழுதான அமெரிக் எதிர்ப்பு போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது. மத்திய கிழக்கிலும், வேறு இஸ்லாமிய நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் எந்த நேரத்திலும் அடித்து நொறுக்கப்படலாம்.

தம்பி இனி எல்லாம் வெற்றி தான்: கட்சியினருக்கு ஜெ., கடிதம்

சென்னை:"அரசியல் களத்தில், இனி எல்லாம் வெற்றி தான்' என, அண்ணாதுரையின், 104வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தொண்டர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடித விவரம்:கட்சி உறுப்பினர்களை, தம்பி என, அழைத்து, கொள்கை, கோட்பாடுகளை, கடிதங்கள் மூலம் நாள்தோறும் பகிர்ந்து கொண்டவர், அண்ணாதுரை.பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை, அகற்ற வேண்டும்; மூட நம்பிக்கைகளால், மனிதனை மனிதனே தாழ்த்தும் கொடுமை, ஒழிய வேண்டும் என, உறுதி கொண்டார். இதற்காக, ஈ.வெ.ரா.,விடம் பயிற்சி பெற்று, சமூக போராளியாக, களத்தில் இறங்க உறுதி பூண்டார். சமூக நீதியையும், சமூக சீர்திருத்தத்தையும், ஆட்சி அதிகாரம் மூலம் சாதிக்க முடியும் என, தேர்தல் அரசியலில் ஈடுபட்டார். எம்.ஜி.ஆரை இணைத்து, குறுகிய காலத்தில் வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆட்சி செய்த, இரண்டு ஆண்டு காலத்தில், பல்வேறு சாதனைகளை புரிந்தார். நம் மாநிலத்துக்கு, தமிழ்நாடு என, பெயர் சூட்டினார். ஏழை, எளிய மக்கள் நலனில் அக்கறை கொண்டு, ஒரு ரூபாய்க்கு, ஒரு படி அரிசித் திட்டத்தை அமல்படுத்தினார். சுய மரியாதை திருமணங்களுக்கு, சட்ட ரீதியான அங்கீகாரம் அளித்தார்.

மந்திரவாதி, சூனியக்காரர் போதிதர்மர் / அத்தியாயம் 8

மன்னன் வே சினத்துடன் வெளியேற, புன்னகையுடன் போதிதர்மர் மேற்கு திசை நோக்கிப் புறப்பட்டார். யாங்ஸி நதியைக் கடந்து புத்த பிக்குகளுக்கு திருப்தியாகத் திகழ்ந்த லியோயாங் என்ற இடத்துக்குச் செல்வதுதான் அவரது நோக்கம்.
யாங்ஸி நதி தென் சீனாவையே செழிப்பாக வைத்திருக்க உதவும் பெரும் நதி. இன்றும் கூட அது அப்படித்தான்.
அந்த நதியைக் கடக்க பல படகுகள் இருந்தன. அப்படி ஒரு படகில் ஏற போதிதர்மர் காலடி எடுத்து வைத்தார்.  அதற்குள் அங்கிருந்தவர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.   இறுதியில், போதிதர்மர் அப்படகில் ஏறவில்லை என்று சொல்லப்படுகிறது.
மக்கள் பேசியதனைத்தும் போதிதர்மர் காதிலும் விழுந்தது. படகில் ஏறப்போனவர் படகிலிருந்து தன் காலை கீழிறக்கினார். நேராகச் சென்று அங்கிருந்த புல் ஒன்றை முறித்தார். புல் என்றால் நம்மூர் அருகம்புல் இல்லை. அது சீனப் புல். சோளத்தட்டை அளவில் இருக்கும். அதனை ஆற்றில் மிதக்கவிட்டார். பிறகு, அந்தப் புல்லின் உதவியுடன் யாங்ஸி ஆற்றை மின்னல் வேகத்தில் கடந்தார். படகில் இருந்தவர்கள் அனைவரும் அந்தக் காட்சியை வாய்பிளந்து பார்த்தனர்.www.tamilpaper.com

கட் அவுட்டுக்கு' பதில் கிராமத்தை தத்தெடுக்கலாம்: வெளிநாடு வாழ் மாணவிகள்

காரைக்குடி:""தமிழ்நாட்டில் வைக்கும் பிளக்ஸ், "கட் அவுட்டுக்கு' பதில், கிராமத்தை தத்தெடுக்கலாம்,'' என தமிழகத்தை சுற்றி பார்க்க வந்த மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மத்திய வெளியுறவுத்துறை சார்பில், இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு, இந்திய கலாச்சாரம், உணவு பழக்க வழக்கங்கள், மக்களின் வாழ்க்கை முறை, இந்திய அரசியல் அமைப்பு, கோயில்கள், தொழில் குறித்து அறிந்து கொள்ள, ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இஸ்ரேல், மலேசியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 36 மாணவர்கள், இந்திய வெளியுறவுத்துறை அலுவலர் அஸ்வானி குமார் தலைமையில், ஆக.,28 ல் இந்தியா வந்தனர். டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகம் மற்றும் வரலாற்று சின்னங்களை பார்வையிட்டு, தமிழகத்திற்கு செப்., 8 ல் வந்தனர். நேற்று முன்தினம் காரைக்குடி வந்தனர். கானாடு காத்தான் அரண்மனை, அரியக்குடியில் உள்ள, "தாபா கார்டன்' நிர்வாக இயக்குனர் நாராயணனின் பழங்கால வீட்டை சுற்றி பார்த்தனர்.அவர்களின் டூரிசம் மேலாளர் சுவாதி கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாநிலத்தை தேர்ந்தெடுப்போம். இந்த ஆண்டு தமிழகத்தை தேர்ந்தெடுத்தோம். இந்தியாவில் மல்டிமீடியா வளர்ச்சி, கிராம பழக்க வழக்கங்கள், இந்திய ஆட்சி முறை, கட்டடக்கலை, ஆயுர்வேதிக் முறைகள் குறித்து விளக்கப்பட்டது, என்றார்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ரோஜாதேவி, குஷ்பூ, த்ரிஷா 'JUST FOR WOMEN

JUST FOR WOMEN' என்ற பெண்களுக்கான பிரபல மாத இதழ், தனது 5-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ் சினிமாவின் மூன்று தலைமுறை நடிகைகளான சரோஜாதேவி, குஷ்பூ, த்ரிஷா ஆகிய மூவரின் ஃபோட்டோக்களை அட்டைப்படத்தில் இடம்பெறச்செய்து இம்மாத இதழை வெளியிட்டது. நடிகைகள் சரோஜா தேவி, குஷ்பூ, த்ரிஷா ஆகிய மூவரும் கலந்து கொண்டு 'JUST FOR WOMEN' சிறப்பிதழை வெளியிட்டும், இதற்கான ஃபோட்டோஷூட்டில் கலந்துகொண்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை சரோஜா தேவி “எனக்கு இந்த ஃபோட்டோஷூட் எல்லாம் புதிதாக இருக்கிறது. நான் நடித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் ஷூட்டிங் சென்று நடிப்போம், டையலாக் பேசுவோம், நடனமாடுவோம் வந்துவிடுவோம். ஆனால் இது புதிதாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

நடுக்கடலில் 17 நாளாக தத்தளித்த 67 இலங்கையர்கள் மீட்பு!


நாகை::பிழைப்பு தேடி 67 இலங்கையர்கள்  ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்றனர். அவர்கள் சென்ற படகு பழுதானதால் 17 நாட்களாக கடலில் தத்தளித்த அவர்களை நாகை மீனவர்கள் மீட்டு கொண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இலங்கையர்கள் பிழைப்புதேடி வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும் அவலம் தொடர்கிறது. கடந்த மாதம் 24ம் தேதி இரவு யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து தமிழர்கள் 63 பேர் ஒரு தனியார் விசைப்படகில் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி சென்றனர்.
இவர்கள் 3 நாள் கடலில் பயணம் செய்தனர். அதன்பின் எதிர்பாராதவிதமாக அந்த படகில் இருந்த ரேடியோ கட்டுப்பாட்டு கருவி, மற்றும் திசை காட்டும் கருவி(ஜிபிஎஸ்) ஆகியவை பழுதடைந்து விட்டது.

கூடங்குளமும், த்ரிஷாவின் கல்யாணக் கவரேஜும்!

லைப்பை படித்துவிட்டு கோபத்துடன் காறி உமிழத் தோன்றுகிறதா? கொஞ்சம் நில்லுங்கள்.
சந்தேகமே வேண்டாம். வரும் வாரம் வெளியாகும் ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் உள்ளிட்ட வார இதழ்களின் அட்டைப்படக் கட்டுரையாக கூடங்குளம் போராட்டமே இடம் பெறப் போகிறது. அந்தந்த செய்தியாளர்களை பொறுத்தும், அதை ரீ ரைட் செய்யும் உதவியாசிரியர்களின் இலக்கிய அறிவை கணக்கில் கொண்டும் அந்தச் செய்திகள் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருக்கும். புகைப்படக்காரர்கள் எடுத்த  படங்களில் எது ‘மனதை தொடுகிறதோ’, அது செய்தியின் பக்கங்களை அலங்கரிக்கும். ஆனால், அனைவருமே சொல்லி வைத்தது போல் மக்களின் பயத்தை அரசு போக்க வேண்டும் என முடித்திருப்பார்கள். மக்கள் போராட்டம் நியாயமற்றது, அணு உலை தேவை என்பதை பத்திக்குப் பத்தி உணர்த்தியிருப்பார்கள் அல்லது அணு உலை ஆபத்தானதுதான் இருந்தாலும்… என இழுத்திருப்பார்கள்.
மொத்தத்தில் செய்திக் கட்டுரை எப்படி இருந்தாலும் ஒருபோதும் கூடங்குள போராட்ட புகைப்படம் இந்த இதழ்களின் அட்டையை அலங்கரிக்காது. ஏதேனும் ஒரு நடிகையின் படத்துக்கு கீழே அல்லது ஓரத்தில் அநேகமாக எழுத்தில் மட்டும் போராட்டம் தொடர்பான தலைப்பை பொறித்திருக்கிறார்கள்.www.vinavu.com

நான் ஏன் அழகாகப் பிறந்தேன்...? 4 வயது மகளுடன் தீக்குளித்து உயிர் நீத்த இளம்பெண்!

நாகர்கோவில்: எங்கு போனாலும் தப்பாகப் பேசுகிறார்கள், பெற்ற தாயே தவறாகப் பேசுகிறார். எனது அழகே எனக்கு பெரும் துயரத்தைக் கொடுத்து விட்டது. இதனால் எனது மகளுடன் நான் இந்த உலகை விட்டே போகிறேன் என்று எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண்.
பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த துயரச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு...

நான் ஈ..50 நாளில் 24.5 கோடி... இரு மொழிப் பட வரலாற்றில் புதிய சாதனை


சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு மத்திய அரசு அதிரடி

 Government Clears Fdi Multi Brand Retail டெல்லி: கூட்டணிக் கட்சிகள், எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு இன்று அதிரடியாக அனுமதி வழங்கியது.
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு நாடு முழுவதும் வணிகர் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
மேலும் திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இத் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. ஒற்றை பிராண்டை விற்கும் நிறுவனங்களில் மட்டும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தரப்பட்டது.
இந் நிலையில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சரான பிறகு இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இன்று நடந்த பொருளாதார விவகாரங்களுங்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதியை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசு 40 ஏக்கர் நிலம் தானம்! கீத்திகா வழக்கில் சிக்கிய காண்டாவுக்கு


Viruvirupu
விமானப் பணிப்பெண் கீத்திகா ஷர்மா தற்கொலை வழக்கில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைமறைவாகி, பின்பு கைதான முன்னாள் அமைச்சர் காண்டா, “வெளியே இருந்தாலும் ஆயிரம் பொன், சிறையில் இருந்தாலும் ஆயிரம் பொன்” ரகமான ஆள் போலிருக்கிறது!
அவர் ‘உள்ளே’ உள்ளபோதே, ஹரியானா அரசு அவரது நிறுவனத்துக்கு 40 ஏக்கர் ‘சூப்பர்’ நிலத்தை, கண்களை மூடிக்கொண்டு கொடுத்துள்ளது. ‘விவசாய நிலம்’ என்ற பிரிவில் இருந்து, ‘குடியிருப்பு நிலம்’ என்ற பிரிவுக்கு இந்த 40 ஏக்கர் நிலம் மாற்றப்பட்டுள்ளது.
அதன் அர்த்தம் புரிந்திருக்குமே… ஆம்! காண்டாவின் நிறுவனம் இந்த 40 ஏக்கரில் அப்பார்ட்மென்ட் மற்றும் வீடுகள் கட்டியோ, பிளாட் போட்டோ சுடச்சுட விற்க முடியும்!

Chief Minister Jeyalalitha :He is black in heart and appearance


இந்த சிறு வியாபாரி கருப்பாக இருப்பார். அவர் நிறம் மட்டும் கருப்பாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், அவர் உள்ளமும் கருப்பு என்பதை அவர் நிரூபித்துவிட்டார். உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர்'': 'கருப்பு எம்ஜிஆர்' விஜயகாந்த் மீது ஜெயலலிதா தாக்கு!
 Tamilnadu Chief Minister Miss.J.Jeyalalitha had made a comment against her political opponent Mr.Vijeyakanth, He is black  in heart and appearance.
ஸ்ரீரங்கம்: உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த்தை முதல்வர் ஜெயலலிதா மறைமுகமாகத் தாக்கினார்.
முதல்வர் ஜெயலலிதா தனது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதற்கான விழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்தது. மேலும் இந்தத் தொகுதியில் பல்வேறு புதிய நலத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ஜெயலலிதா பேசுகையில்,

வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா..கல்யாணமுங்கோ


தண்டாயுதபாணி, வள்ளியம்மை ஆகியோரது மகன் அருண் - தம்பி அய்யா, வளர்மதி ஆகியோரது மகள் பிரசன்னா ஆகியோரது வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழக தலைவர் வீரமணி நடத்தி வைத்தார். உடன் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராசகிரி கோ.தங்கராசு, பொதுச் செயலாளர் இரா.செயக்குமார் உள்ளனர். (தஞ்சை, 12.9.2012) கல்யாணமுங்கோ 

எல்லா இடங்களிலும் கேமரா பள்ளி கழிவறை உள்பட

இங்கிலாந்தில் பள்ளிகளில் மோதல் மற்றும் திருட்டுகள் அதிகரித்து வருவதால், மாணவர்களை கண்காணிக்க கழிவறை உள்பட எல்லா இடங்களிலும் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு சமூக அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் பள்ளிகள், அகடமிகளில் மாணவர்கள் மோதல் அதிகரித்து வருகிறது. அத்துடன் திருட்டு போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இதை தடுக்க பள்ளி முழுவதும் ரகசிய கேமராக்கள் வைத்து மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். பள்ளி வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், உடை மாற்றும் அறைகள், லாக்கர் இருக்கும் இடங்களில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதைவிட கழிவறைகளில் கூட கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 24 கேமராக்களும், அகடமிகளில் 30 கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளன. சில பள்ளிகளில் 5 மாணவர்களுக்கு ஒரு கேமரா வைக்கப்பட்டுள்ளது.

ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கு : மனுவை திருப்பி அனுப்பியது கோர்ட்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஆங்கில நாளிதழ் மீது முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி அவர் சார்பில் தாக்கல் செய்த மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.  தமிழக அரசு டிரைவர்களுக்கு லைசென்ஸ் வழங்குவது கொலை செய்வதற்காகத்தான் என்றும் ஒரு சிலரின் லைசென்ஸ்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் 25ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது. இந்த செய்தி தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

முரசொலி’ செல்வத்துக்கு கோர்ட் சம்மன்

முரசொலி பத்திரிகையில் கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதியும், 6-ந்தேதியும் தமிழக அரசு பற்றியும், முதல மைச்சர் ஜெயலலிதா பற்றியும் கட்டுரை  வெளியாகி இருந்தது. இதை எதிர்த்து சென்னை செசன்சு கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும்  வகையில் கட்டுரை அமைந் துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர் செல்வம், செய்தியாளர் மூர்த்தி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு முதன்மை நீதிபதி பொன்.கலையரசன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செல்வம், மூர்த்தி ஆகியோர் அக்டோபர் 10-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெ. கையால் பரிமாறியதை சாப்பிட 3 மணி நேரம் காத்திருந்த 304 பேர்!


வியாழன், 13 செப்டம்பர், 2012

ஸ்ரீரங்கம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் :

 ஜெயலலிதா தனது தேர்தல் வேண்டுதல் கை கூடியதால் ரங்கநாதர் கோவிலில் நிரந்தர அன்னதானத்தை தொடக்கிவைத்தார். தனது சொந்த வேண்டுதலுக்கு காணிக்கையாக சொந்த பணத்தில் அல்லவா நேர்த்தி கடன் செலுத்த வேண்டும்? அரசாங்க கஜானாவில் கைவைத்து தானம் செய்வது பித்தலாட்டம் . வாழ்க பெரியார் வாழ்க அண்ணா 
திருச்சி :ஸ்ரீரங்கம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். முதல்வர் ஜெயலலிதா, தனது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தில் ஏற்கனவே 2 முறை நடந்த அரசு விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

Jeyalalitha: சிங்களர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் எனது அரசு உறுதியுடன் உள்ளது”

முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்துக்கு வரும் சிங்கள பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதில் தமது அரசு உறுதியுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழகத்துக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட சிங்கள பக்தர்களை வை.கோ.வின் ம.தி.மு.க., மற்றும் சீமானின் நாம் தமிழர் அமைப்பு ஆகியவை கற்களாலும், செருப்புகளாலும் எறிந்து அடித்துத் துரத்தியிருந்தனர்.
அந்த அசம்பாவிதத்தையடுத்து, அவர்களை திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்று இலங்கைக்கு அனுப்பி வைத்தது தமிழக காவல்துறை.
இந்தியாவுக்கு உலக அளவில் தலைகுனிவை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. வாஷிங்டன் போஸ்ட், சியாடில் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளும், ஃபாக்ஸ் நியூஸ், ஏ.பி.சி. போன்ற டி.வி. சேனல்களும் இந்த செயலை விமர்சித்திருந்தன.
“நாம் நினைத்திருந்தால் சிங்களவர்களை அடித்து துவைத்திருப்போம். அப்படி செய்யவில்லை. ஒரு சாம்பிள்தான் காட்டியிருக்கிறோம்” என்றார் சீமான். “இலங்கையில் அந் நாட்டு அரசு ஆயுதமற்ற அப்பாவித் தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் உலக நாடுகளுக்கு தெரிய வேண்டும்” என்றார் வை.கோ.
தமிழகத்தில் இருந்து அடித்துத் துரத்தப்பட்ட சிங்கள மக்கள் கொழும்பு சென்று இறங்கியபோது, அங்கு வசிக்கும் இந்தியர்கள் யாரும் தாக்கப்பட்டதாக தகவல் இல்லை.

அன்புமணி ராமதாஸ் கோர்ட் படி ஏறினார்!

Viruvirupu
எப்படித்தான் தலைகீழாக நின்று முயற்சித்தும் விசாரணையில் இருந்து தப்பிக்க முடியவில்லை. பா.ம.க. சின்ன ஐயா அன்புமணி ராமதாஸ் மீதான சி.பி.ஐ. வழக்கு வரும் அக்டோபர் 30-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேடாக மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் 9 பேருக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த இந்த வழக்கில் அக்டோபர் 30-ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என டில்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த முறைகேடு வழக்கின் ப்ரீலிமினரி ஹியரிங், நேற்று நீதிபதி தல்வந்த்சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
எப்படி சமாளிக்கலாம்?

Hijack IC-814 ஆயுதம் கொடுத்தவர் காஷ்மீர் காட்டுக்குள் சிக்கினார்!

இந்திய விமான கடத்தலுக்கு ஆயுதம் கொடுத்தவர் காஷ்மீர் காட்டுக்குள் சிக்கினார்!

Viruvirupu,
கந்தகார் விமான கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபராக தேடப்பட்டு வந்த ஜாவித் அஹ்மத், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர், கிஸ்ட்வார் வனப்பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது கைது செய்யப்பட்டிருக்கிறார் இவர்.
இந்தியன் ஏர்லைன்ஸ் (தற்போது ஏர்-இந்தியாவுடன் இணைந்துவிட்டது) விமானம் தடம் இலக்கம் IC-814, 1999-ம் ஆண்டு கிருத்துமஸ் தினத்துக்கு முன்தினம் கடத்தப்பட்டது. காத்மன்டு நகரில் இருந்து டில்லி வரவேண்டிய விமானத்தை, டேக்-ஆஃப் ஆகி 40 நிமிடங்களில் கடத்தல்காரர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

லோக்சபா தேர்தல் ஏற்பாடுகளில் அ.தி.மு.க.!

மற்றைய கட்சிகளை முந்திக் கொண்டு லோக்சபா தேர்தல் ஏற்பாடுகளில் அ.தி.மு.க.!

Viruvirupu
மற்றைய தமிழக கட்சிகளை முந்திக்கொண்டு, லோக்சபா தேர்தலுக்கு தம்மை தயாராக்கும் பணியை தொடங்கியுள்ளது அ.தி.மு.க. லோக்சபா தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் வகையில், லோக்சபா தொகுதி வாரியாக, கூட்டங்களை நடத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர்.
வரும் 19-ம் தேதி முதல், இந்த நால்வர் அணி தொகுதி வாரியாக கூட்டங்களில் பங்கேற்கவுள்ளனர். லோக்சபா தேர்தலுக்கு முன், தொகுதி வாரியாக தேவைகளை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்யவேண்டுமென, கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்பட்ட வழக்கு: கருணாநிதி நேரில் ஆஜராக கோர்ட்

 தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அக்டோபர் 10-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 4.8.2012 அன்று முரசொலி பத்திரிகையில், கலைஞர் கேள்வி-பதில் செய்தி வெளியாகியுள்ளது. அதில், கோத்தகிரியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.5 விற்பனை செய்யப்படுவதாக புகைப்படத்தோடு ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதே? என்ற கேள்விக்கு, `கோத்தகிரி குடிநீர் பிரச்சினையை போக்குவது பற்றி கோடநாட்டில் முதல்-அமைச்சர் ஆய்வு நடத்துகிறார் என்ற அரசின் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிடலாமே?' என்று கருணாநிதி பதில் அளித்துள்ளார். இது ஜெயலலிதாவின் நற்பெருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

MGR:திரைப்படத்தொழிலில் தூய தமிழுக்கு வித்திட்டது திமுக தலைவர்கள்தான்

எம்.ஜி.ஆர். பேட்டிகள்
பல பத்திரிகைகளுக்கு மக்கள் திலகம் அளித்த பேட்டிகள்,ரசிகர்களூக்கு அவர் அளித்த பதில்கள் ஆகியவற்றின் அரிய தொகுப்பு, ‘’எம்.ஜி.ஆர்.  பேட்டிகள்’’ .
வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும்  இயங்கி வரும் எஸ்.கிருபாகரன் என்பவர் இந்நூலை தொகுத்துள்ளார்.
இந்நூலில், திமுக தலைவர்களால் திரைப்பட உலகம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது?என்ற கேள்விக்கு, ’’திரைப்பட உலகம் என்பது திரைப்படத் தொழிலை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பைப் பற்றிய ஒரு வார்த்தை என்று நான் நினைக்கிறேன்.   வேறு ஒரு கேள்விக்கு நான் பதில் சொன்னதுபோல திரைப்படத்தொழில் ஒரு சில பகுதிகளை மட்டும் கொண்ட தொழில் அல்ல.  திரைப்பட உலகம் என்று நீங்கள் கேட்பது தமிழ்திரைப்பட உலகம் பற்றித்தான்  என்று நான்சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா?
அப்படி உங்கள் அனுமதி கிடைக்குமானால் தமிழ்த் திரைப்படத்தொழிலில் தூய தமிழுக்கு வித்திட்டது திமுக தலைவர்கள்தான் என்று நான் அறுதியிட்டுக்கூற முடியும்’’ என்று பதிலளித்துள்ளார்எம்.ஜி.ஆர்.

69 சதவிகிதத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

திராவிடர் கழகம் தன்னை இணைத்துக் கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர் பேட்டி

 69 சதவிகித இட ஒதுக் கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போடப் பட்ட வழக்கில், திரா விடர் கழகம் தன்னையும் இணைத்துக் கொண்டு, தம் கருத்தைத் தெரிவிக் கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நேற்று முன்தினம் ஒரு செய்தி: தமிழ்நாட் டில் கடந்த 33 ஆண்டு களுக்கு மேலாக செய லில் இருக்கக் கூடிய 69 சதவிகித இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட, மலை வாழ் மக்கள், பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குத் தரப் படக் கூடிய அந்த சிறப் பான இட ஒதுக்கீடு, திராவிடர் கழகத்தின் அரிய முயற்சியினால் நடைமுறைப்படுத்தப் பட்டது என்பது உங் களுக்கெல்லாம் தெரிந் ததே! 31(சி) சட்டத்தின் கீழ்!

தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும்.. இலங்கை பயணிகள் தாக்குதலுக்கு

சென்னை: தமிழகம் வந்த இலங்கை பயணிகள் மீது, நடந்த தாக்குதலுக்கு, ஜெயலலிதாவின்  வாக்குவேட்டை நோக்கம் மற்றும் அலட்சியம் தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கத் தவறி விட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது, வழக்கு கூட பதிவு செய்யவில்லை
 இலங்கை, புத்தளம் மாவட்டம், சிலாவம் பகுதியைச் சேர்ந்த, 65 ஆண்கள், 83 பெண்கள், 36 குழந்தைகள் என, 184 பேர், வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவுக்காக, நான்கு குழுக்களாக, செப்., 2ம் தேதி, விமானம் மூலம் தமிழகம் வந்தனர். தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோவில், வேளாங்கண்ணி மாதா கோவில், சென்னை சாந்தோம் சர்ச் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இவர்கள் பயணத் திட்டப்படி, வேளாங்கண்ணியில், 8ம் தேதி வரை தங்கி, பின், 15ம் தேதி வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புனித யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால், தமிழகத்தில் வந்து இறங்கிய அவர்களுக்கு, அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் அரங்கேறின.
அடக்கவில்லை:

Karnataka CM:காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது இயலாத காரியம்

பெங்களூரு: ""காவிரி நீர் திறந்து விடுவது இயலாத காரியம். தமிழகத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் பேசக்கூடாது. அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும்,'' என, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
லண்டனில் நடந்த பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிரிஷாவுக்கு நடந்த பாராட்டு விழாவில், அவருக்கு, 20 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கி, அரசு சார்பில் அவருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உறுதியளித்தார்.
பின்னர், நிருபர்களிடம் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது;உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து, கன்னட ரக்ஷன வேதிகே, விவசாயிகள் சங்கம் மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், தும்கூர் உட்பட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கர்நாடகத்தில், வறட்சி நிலவும் நேரத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது இயலாத காரியம்.

மக்கள்: இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர் வன்முறையாளர்களின் மிரட்டலை

கூடங்குளம்: உதயக்குமார் ஆதரவு வன்முறையாளர்களின் மிரட்டலை புறக்கணித்த கூடங்குளம் மக்கள், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
உதயக்குமாரின் ஆதரவாளர்கள், கூடங்குளம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். அதனால், கூடங்குளத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அனைவரும் வீட்டில் முடங்கினர். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கிய போதும், வன்முறையாளர்களின் மிரட்டலால், பயன்பாட்டை மக்கள் தவிர்த்தனர். கட்டாயப்படுத்தி வன்முறையில் ஈடுபடுத்தப்பட்ட சிலர், கைதாகினர்.
உதயக்குமார் ஆதரவாளர்களின் மிரட்டலால் ஏற்பட்ட துன்பத்திலிருந்து விடுபட முடிவு செய்த கூடங்குளம் மக்கள், நேற்று இயல்புநிலைக்கு திரும்பத் தொடங்கினர். ரேஷன் பொருட்களை வரிசையில் நின்று ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

புதன், 12 செப்டம்பர், 2012

கொல்கத்தாவில் இரு மாணவிகள் 18 மாடியில் இருந்து குதித்து தற்கொலை

கொல்கத்தாவில் உள்ள 18 மாடி குடியிருப்பில் இருந்து குதித்து 9ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சபிபா சந்தனா(15). அவர் கிழக்கு ஜாதவ்பூர் காவல் நிலையம் அருகே உள்ள 18 மாடி சொகுசு குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது தோழி நேஹா பஞ்சரி(15). இருவரும் ஒரே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். அவர்கள் இருவரின் நட்பு அவர்களின் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை.

சட்டை ரூ.15.000, ஜீன்ஸ் 13.000, கைப்பை 1 இலட்சம்…..!

அத்தியாவசிய பொருட்களுக்காக முழுவாழ்க்கையையே அடகு வைக்கும் மக்கள் வாழும் நாட்டில் இத்தகைய சீமான்களுக்கான இந்த ஆடம்பர மார்க்கெட் எதைக் காட்டுகிறது?








  • ஒரு கைப்பையின் விலை ரூ 1 லட்சம்
  • சட்டைகளின் விலை ரூ 15,000 முதல்..
  • ஒரு ஜீன்ஸ் விலை ரூ 13,000.
தலை சுற்ற வைக்கும் இந்த விலைகளில்தான் ரிலையன்ஸ் புதிதாக குதித்திருக்கும் சொகுசுப் பொருட்களுக்கான சில்லறை விற்பனை கடைகளில் பொருட்கள் விற்கப்படுகின்றன.
தர்ஷன் மேத்தா – தலைமை நிர்வாக அதிகாரி ரிலையன்ஸ் பிராண்டஸ் – படம் நன்றி பிசினஸ் லைன்
ரிலையன்ஸ்-பிரான்ட்ஸ்உலக அளவில் 37  பிரபல பிரண்டுகளுடன் கை கோர்த்து சட்டைகள், பாண்டுகள், காலணிகள், கைப்பைகள் போன்ற பொருட்களின் விலை உயர்ந்த சொகுசு பிராண்டுகளை வாங்கி இந்திய சீமான்களுக்கு விற்க ஏற்பாடு செய்துள்ளது ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்.

கதைக்காக அல்ல விளம்பரங்களுக்காக ஓட்டப்படும் சினிமா

இந்த மாதம் 23-ம் தேதி “ஹீரோயின்” எனும் இந்திப் படம் வெளியாகப் போகிறது.   ஒரு இந்தி சினிமாவின் வரவு மாபெரும் விளம்பரப் படையெடுப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. முக்கியமாக விளம்பரங்களை தவிர்க்கும் உரிமை பார்வையாளருக்கு இனி இல்லை. கதைக்காக ஓடும் சினிமாக்கள் போய் விளம்பரங்களுக்காக ஓட்டப்படும் சினிமா
பொதுவாக தியேட்டரில் படம் ஆரம்பிப்பதற்கு முன்னாலும் இடைவேளையிலும் நிறைய விளம்பரங்கள் போடுவார்கள். பலர்  அந்த நேரத்தில் வெளியே தம் அடிக்க போய் விடுவாரக்ள, அல்லது பக்கத்தில இருப்பவர்களோடு அரட்டை அடிப்பார்கள். தொலைக்காட்சி பார்க்கும் போது விளம்பர இடைவேளையில் சமையல் வேலையை தொடர்வது, கழிப்பறை போவது, என்று அவரவர் சொந்த வேலையை பார்க்க போய் விடுகிறோம். இது விளம்பரம் கொடுக்கின்ற முதலாளிகளுக்கு கடுப்பை ஏற்படுத்துகிறது.
விளம்பரம் போடும் முதலாளிகள் பட முதலாளிகளோடு சேர்ந்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்க போட்ட திட்டம்தான் கதையோடு விளம்பரப் பொருளை இணைப்பது. ‘படத்தின் கதையோடு சேர்த்து என் பொருளை காட்ட வேண்டும்’ என்று ஒரு தொகையை கொடுத்து விளம்பர முதலாளி சினிமா முதலாளியுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்.

அண்ணா வளைவு.. ஜெயலலிதா சொல்வது பெரிய பொய்

சென்னை அண்ணா வளைவை அகற்றுவதற்கான முடிவினை தான் எடுக்கவில்லை என்றும், கடந்த திமுக ஆட்சியிலேதான் எடுக்கப்பட்டது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது பெரிய பொய் என்று திமுக தலைவர் கலைஞர்  கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி,
கேள்வி: மூன்று நாட்களாக கூடங்குளத்தில் தொடர்ந்து கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறை துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: கூடங்குளம் சம்பவம் குறித்து ஓர் அறிக்கையை விரிவாக இன்று காலையில் கொடுத்திருக்கிறேன். அதைப் படித்தவர்கள், ஏதாவது ஐயம் இருந்தால் கேளுங்கள்.
கேள்வி: போராட்டக்காரர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: அதைப் பற்றியும் அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறேன்.

முன்பு உசுப்பி விட்டது ஏன்?:கூடங்குளம் எதிர்ப்பாளர்களை அடக்கும் ஜெயலலிதா

சென்னை: தொடக்கத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஜெயலலிதா அரசு ஆதரவு தெரிவித்து, அவர்களை உசுப்பி விட்டு விட்டு, தற்போது அவர்களை அடக்கி ஒடுக்கிவிடக் கருதுகிறது. காவல் துறையினரை மட்டுமே நம்பி ஆட்சி செய்த, எந்த ஆட்சியும் நிலைத்ததில்லை என்பதை இந்த 'மெஜாரிட்டி' அதிமுக அரசு உணர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. அரசு காவல் துறையை அங்கே கொண்டு போய் குவித்து வைத்து, அவர்கள் மூலமாகவே போராட்டத்தை அடக்கி ஒடுக்க எண்ணுகிறது. துப்பாக்கி பிரயோகம் வரை நடைபெற்று மீனவர் ஒருவர் தன் உயிரைக் காணிக்கையாக்கியிருக்கிறார்.
அன்றாடம் நமது மீனவர்களை இலங்கைக் கடற்படையிடமிருந்து காப்பாற்ற நாம் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், காவல்துறையே இன்று நம்முடைய மீனவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கிறது. தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் முயற்சியிலே அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது.

திமுகவுக்கு 2 கேபினட் பதவிகள்.. அமைச்சரவையை மாற்ற சோனியா முடிவு

 டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, விஜயன், டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரில் இருவரை மத்திய கேபினட் பதவிக்கு கருணாநிதி நியமிக்கலாம் என்கிறார்கள்.
டெல்லி: மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். இதில் திமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இரு கேபினட் பதவிகள் தரப்படும் என்று தெரிகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸை தயார் செய்யும் வகையில், சில மூத்த அமைச்சர்களை கட்சிப் பதவிக்குக் கொண்டு வர சோனியா முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில் நிலக்கரி ஊழல் விவகாரத்தில் அரசுக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயர் துடைக்க நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோக் காந்த் சகாய் ஆகியோரை நீக்கவும் முடிவு செய்துள்ளார்.
அதே போல சில அமைச்சர்களின் இலாகாக்களிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

விருந்தில் அனுஷ்காவை நாய் கட்சிடிச்சிப்பா!

இயக்குநர் செல்வராகவன் வைத்த விருந்தில் கலந்து கொண்டபோது நடிகை அனுஷ்காவை நாய் கடித்துவிட்டது. அவருக்கு ஊசிகள் போட்டு சிகிச்சை செய்து வருகின்றனர்.
டாப் நடிகையான அனுஷ்கா இப்போது செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்' மற்றும் ‘தாண்டவம்' படங்களில் நடித்து வருகிறார்.
‘இரண்டாம் உலகம்' படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது. இந்தப் படத்துக்காக பெரும் ரிஸ்க் எடுத்து, கொட்டும் பனியில் ரஷ்யக் காடுகளில் தங்கி நடித்துக் கொடுத்தாராம் அனுஷ்கா.
எனவே படப்பிடிப்பு முடிந்ததும் அனுஷ்காவுக்கு செல்வராகவன் விசேஷ விருந்து கொடுத்தார். சென்னை நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நடந்தது. ‘இரண்டாம் உலகம்' படத்தில் நடித்த இதர நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களும் விருந்தில் பங்கேற்றார்கள்.

ஊட்டியின் பயங்கர முகம் ரசாயான கழிவுகள்

அந்த போட்டோவை பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை. சகலவிதமான கெமிக்கல் விஷத்தையும் சுமந்துகொண்டு ஆறு போல அந்த தண்ணீர் வளைந்து, நெளிந்து போய்ச் சேர்ந்து கொண்டு இருந்தது, சேர்ந்த இடம் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக மழைநீர் தேக்கிவைக்கப்பட்டிருக்கும் அணைப்பகுதியாகும்.
விஷ(ய)ம் இதுதான். மலைகளின் அரசி, நீலகரி மாவட்டத்தின் தலைநகர், உலகில் உள்ள 14 முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்று, பொட்டனிக்கல் கார்டன், ரோஸ்கார்டன், போட்ஹவுஸ், மலைரயில் என்று மக்களை மகிழ்விக்கும் அனைத்தும் இங்கே உண்டு. ஆம், இவ்வளவு நேரத்திற்குள் தெரிந்துதிருக்கும் ஊட்டியைப்பற்றித்தான் சொல்கிறோம் என்று.
அழகான, பசுமையான, குளுமையான ஊட்டியைத்தான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஊட்டியை நாசப்படுத்திக் கொண்டிருக்கும் வகையில் அங்கே இன்னொரு கோரமுகம் இருப்பது நிறையபேருக்கு தெரியாது. அந்த கோரமுகம் அங்குள்ள பைகாரா அணைப்பகுதியில் மருந்து கம்பெனி என்ற பெயரில் அமர்ந்திருக்கிறது.

கூடங்குளத்தின் வேதனைக் குரல்கள் உதயக்குமார் ஒரு உதவாக்கரை குமார்

கூடங்குளம்: "சிலர் அரங்கேற்றி வரும் வன்முறையால், பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர்,' என கூடங்குளத்தை சேர்ந்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.
அணுமின் நிலைய எதிர்ப்பாளர் உதயக்குமாரின் ஆதரவாளர்கள், கடந்த இரண்டு நாட்களாக, கூடங்குளம் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பொது சொத்துகளையும், தனியார் சொத்துகளையும் சேதப்படுத்தி, பொதுமக்கள் மத்தியில், போலீசாருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத்திற்கு அழைத்தது போல், வன்முறைக்கும், "வீட்டில் இருந்து ஒருவர் வரவேண்டும்,' என கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதனால், சிறுவர் முதற்கொண்டு, கட்டாயப்படுத்தி, வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உதயக்குமார் ஆதரவாளர்களின் இந்த செயலால், பலரின் உடமைகள் சேதமடைந்ததுடன், வழக்கிலும் சிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விரக்தி அடைந்த பெண்கள் சிலரின் குமுறல் இதோ:
பஞ்சவர்ணம்:
என் கணவர் தங்கச்சாமிக்கு 75 வயதாகிறது. அவரால் நடக்கவே முடியாது.

அமைச்சர் காரை நிறுத்திய டிராபிக் போலீசுக்கு அடி, உதை : போலீஸ்காரர்கள் கைது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஸ்ரீநகர் :காஷ்மீர் மாநிலத்தில் அமைச்சரின் காரை நிறுத்திய டிராபிக் போலீசுக்கு அடி, உதை விழுந்தது. இது தொடர்பாக அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்தில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர் தாஜ் மொய்தீன். ஸ்ரீநகரின் லால் சவுக்கில் நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு பாதுகாப்பாக முன்னும் பின்னும் கார்கள் சென்றன. ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மற்ற வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்க அமைச்சரின் கார் படை நிற்காமல் சென்றது. அங்கு பணியில் இருந்த டிராபிக் எஸ்ஐ மோகன்லால், இதை பார்த்தார். அதிரடியாக முன்னால் சென்று காரை மடக்கி நிறுத்தினார். ‘டிராபிக் விதிகள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஏன் காரை நிறுத்தாமல் சென்றாய்Õ என கார் டிரைவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, காரில் இருந்து விறுவிறுவென இறங்கிய அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்கள், மோகன்லாலை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது இடது கண்ணில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

Supreme Court:T.R.Balu familly சாராய ஆலை அனுமதி ரத்து

தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான, எரிசாராய தொழிற்சாலை துவங்குவதற்காக, இதுவரை பெறப்பட்ட அனைத்து அனுமதிகளும், ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே, வடசேரி எனும் பசுமையான கிராமத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களை பங்குதாரர்களாக கொண்டு, "கிங்க்ஸ் இந்தியா கெமிக்கல் கார்பரேஷன் லிமிடெட்' என்ற நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த ஆலைக்கு, அக்கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு, எரிசாராயம் தயாரிப்புக்கு பயன்படுத்திவிட்டு, அதில் இருந்து, சில லட்சம் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படும். இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும். கழிவு நீரால், விவசாயம், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் என, அப்பகுதியினர் தெரிவித்தனர்.இதற்கிடையில், தஞ்சை மாவட்டம், பூதலூர் யூனியன், செல்லம்பட்டியில், எரிசாராய ஆலை துவங்குவதற்காக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பெறப்பட்ட அனுமதிக்கான ஆவணங்களை திருத்தி, வடசேரி பகுதியில் ஆலை துவங்க முற்பட்டதாக, வடசேரி வாழ் விவசாய சங்கங்கள், வடசேரி போராட்டக் குழுவைச் சேர்ந்த சுவாமிநாதன், வழக்கறிஞர் மணிகண்டன் மற்றும் ஏராளமானோர் புகார் தெரிவித்தனர்.

சி.பி.ஐ. சாட்சி மீது ஆ.ராசா குற்றச்சாட்டு

 டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பு சாட்சியாக மத்திய தொலை தொடர்புத்துறை முன்னாள் துணை டைரக்டர் ஜெனரல் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா சாட்சியம் அளித்திருந்தார். அவரிடம் முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா சார்பில் அவருடைய வக்கீல் சுஷில் குமார் நேற்று குறுக்கு விசாரணை செய்தார். இன்றும் குறுக்கு விசாரணை தொடர்ந்தது. அப்போது ஸ்ரீவஸ்தவாவை பார்த்து, ஆ.ராசாவின் செயலாளராக இருந்த சந்தோலியா, யுனிடெக் குரூப்பின் ஸ்பெக்ட்ரம் லைசென்சு விண்ணப்பம் வந்துள்ளதா?என்று கேட்டதாக கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி இந்த கோர்ட்டில் கூறி இருக்கிறீர்கள். ஆனால் இந்த தகவலை நீங்கள் சி.பி.ஐ.யிடம் அளித்த வாக்குமூலத்தில் ஏன் கூறவில்லை? என்று வக்கீல் சுஷில்குமார் கேட்டார்.மேலும், சி.பி.ஐ. யின் நிர்ப்பந்தத்தால் ஸ்ரீவஸ்தவா பொய் சாட்சி அளிப்பதாகவும் சுஷில் குமார் குற்றம் சாட்டினார். அதை ஸ்ரீவஸ்தவா மறுத்தார்.

கூடங்குளம் போராட்டக்காரர்கள் பின்னணி விசாரிக்க வேண்டும்

சென்னை : ""கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டக்காரர்கள் பின்னணி குறித்து, விசாரிக்க வேண்டும், அவர்கள் விரிக்கும் மாயவலை என்ன? என்பதை, மத்திய அரசு கண்டறிய வேண்டும்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
சத்தியமூர்த்திபவனில் அவரது பேட்டி: கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. அதிலிருந்து உற்பத்தி செ#யப்படும், 2,000 மெகாவாட் மின்சாரத்தை, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என, தமிழக அரசும், தமிழக காங்கிரசும், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மிகப்பெரிய மின் வெட்டு பிரச்னையை சந்தித்து வரும் தமிழகத்துக்கு, இந்த அணு உலையின் மூலம் கிடைக்கும் மின்சாரம், மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த அணு மின் நிலையத்தை, தி.மு.க.,- அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரிக்கின்றன. ஆனால், ஐந்து பேர் கொண்ட சிறிய கூட்டம் மக்களிடம் அச்சத்தை உண்டாக்கி, போராட்டத்தை தூண்டி விட்டு வருகிறது.

மீண்டும் ஒழித்து ஓடிய உதயகுமார்:போலீசாரிடம் சரணடைய மாட்டேன்

கூடங்குளம்: இடிந்தகரைக்கு நேற்று மாலை 4.45 மணிக்கு உதயகுமார் வந்தார். அங்கிருந்த தனது ஆதரவாளர்களிடம் பேசினார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் என்னை ஒசாமா போலவும், எனது ஆதரவாளர்களை பயங்கரவாதிகள் போலவும் பார்க்கிறது. கூடங்குளம் அணு மின் உற்பத்தி வரக்கூடாது, என மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. முதல்வர் ஜெயலலிதாவிற்கு கிடைத்த தோல்வி. எங்களிடம் ஜெயலலிதா தோற்று விட்டார். மாயவலையில் மக்கள் வீழ்ந்து விடாதீர்கள் என ஜெ., கூறியுள்ளார். ரஷ்ய கப்பல் தமிழகம் வந்தபோது வரக்கூடாது என தடுத்தவர் ஜெ., என்பதை மறந்து விடக்கூடாது

21ஆசை நாயகியை கட்டி வைத்து செக்ஸ் அனுபவித்த 68 வக்கீல்

21 வயது ஆசை நாயகியால் 68 வயது வக்கீல் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக புதிய அதிர்ச்சித் தகவல்கள் பலவும் வெளியாகி உள்ளன. கொலையாளியான யுவதியால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற பிந்திய வாக்குமூலம் முன்னைய வாக்குமூலத்தைக் காட்டிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 
ஆரம்பத்தில் சொல்லப்பட்டு இருந்த வாக்குமூலத்துக்கும், பின்னர் சொல்லப்பட்ட வாக்குமூலத்துக்கும் இடையில் அடிப்படையில் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக சட்டத்தரணியை பல்கணியில் இருந்து தள்ளி விட்டு இருந்தார் என்று ஆரம்பத்தில் சொல்லி இருந்தார் யுவதி. ஆனால் படுக்கை அறையில் வக்கீலை  கட்டிப் போட்டு படுகொலை செய்து உள்ளார் என்று பிந்திய வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டு உள்ளார்.

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

2012ல் தமிழ் சினிமா..லாபம் சம்பாதித்த டாப்-10 .

 1.ஒரு கல் ஒரு கண்ணாடி
2.நான் ஈ
3.வேட்டை
4.நண்பன்
5.அம்புலி
6.கலகலப்பு
7.காதலில் சொதப்புவது எப்படி
8.மெரீனா
9.அட்டக்கத்தி
10.மனம் கொத்தி பறவை.
தமிழ் சினிமா சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு திரைப்படங்களின் வருகை டாஸ்மாக் சரக்கு விலை போல் மளமளவென உயர்ந்திருக்கிறது. காவிரியில் தண்ணீர் பொய்த்தாலும் கோடம்பாக்கத்தில் சினிமா பொய்ப்பதில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. இந்த ஆண்டு விநாயாக என்ற படத்துடன் செண்டிமெண்டாக தமிழ் சினிமா கணக்கை துவக்கியது. ஆகஸட் 31 முகமூடி வரையில் 100 படங்களை வெளியிட்டு செஞ்சுரி அடித்தது. இந்த ஆண்டு முடிய இன்னும் 4 மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் இதே வேகத்தில் படங்கள் வெளிவந்தால் நேரடி தமிழ் படங்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டும். இது எந்த ஆண்டும் இல்லாத சாதனை அளவாக இருக்கும்.

பி.ஆர்.பி. நிறுவனம் டபுள் ஓகே, அழகிரி மகன் நிறுவனம் நாட் ஓகே!! ஏன்? ஏன்?

Viruvirupu



மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்குச் சொந்தமான ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் லைசென்ஸை தமிழக அரசு ரத்து செய்தது தொடர்பாக ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பெரியளவு முறைகேடு செய்ததாக காவல்துறையால் கூறப்படும் பி.ஆர்.பி.-யின் நிறுவனத்தின் லைசென்ஸ் அப்படியே இருக்க, துரை தயாநிதியின் நிறுவனத்தின் லைசென்ஸை ரத்த செய்ததற்கு பின்னணியில் அரசியல் காரணம் உள்ளதா என்பதே அந்த சர்ச்சை.
கிரானைட் விவகாரம் தொடர்பாக மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் அதிகாரிகள் குழு தீவிர சோதனை நடத்தி, முறைகேடுகளுக்கு தலைமை வகித்த பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு சீல் வைத்தனர். அதன் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அவரது நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து செய்யப்படவில்லை.
இது தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாக தரப்பில் விசாரித்தபோது, திருப்திகரமான பதில் ஒன்றை வைத்திருக்கிறார்கள்.
ஒலிம்பஸ் கிரானைட் குவாரியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில் உள்ள விபரங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, ஒலிம்பஸ் கிரானைட் நிறுவன பங்குதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்களோ, அவர்கள் சார்பாகவோ யாரும் எந்தவித விளக்கத்தையும் தரவில்லை.
அதையடுத்தே ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக, சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த வேறு சில குவாரிகளின் லைசென்சுகளை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரியவருகிறது.

செக்ஸ் சிந்தனை அதிகம் இல்லாதவர்கள் கவலைக்குரியவர்கள் என்கின்றனர் நிபுணர்கள்


மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலியல் குறிந்த சிந்தனைகளும், உணர்வுகளும் ஏற்படுவது இயல்பு. ஆணோ, பெண்ணோ தினந்தோறும் செக்ஸ் பற்றி சிந்திக்காமல் இருக்கவே மாட்டார்கள். இது இயல்பானதுதான் என்று கூறும் நிபுணர்கள் செக்ஸ் பற்றிய சிந்தனைகள் அதீதமாக இருந்தாலே அல்லது எதுவும் தோன்றாமல் இருந்தாலோதான் அது இயற்கைக்கு மாறானது என்று கூறுகின்றனர்.
7 விநாடிக்கு ஒருமுறை
ஆண்களின் மூளை ஒவ்வொரு 7 விநாடிக்கும் ஒருமுறை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அப்படிப் பார்த்தால், ஒரு ஆண், சராசரியாக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் விழித்திருப்பதாக எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு 8000 முறை அவன் செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்கியிருக்க வேண்டும். ஆனால் இது சாத்தியமா, 7 விநாடிகளுக்கு ஒருமுறை ஆண்கள் செக்ஸ் நினைப்பில் மூழ்குகிறார்களா என்று செக்ஸாலஜிஸ்ட்டுகளிடம் கேட்டால், கண்டிப்பாக வாய்ப்பே இல்லை என்று மறுக்கிறார்கள். இதுபோன்ற சிந்தனைகளில் திளைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மனநல மருத்துவர்களை பார்க்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள்.
நாளுக்கு 20 முறை மட்டுமே
சராசரி மனிதனுக்கு தினசரி 20 முறை மட்டுமே செக்ஸ் பற்றிய சிந்தனைகள் எழும் என்று ஒகியோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது.

Software காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலனும் தற்கொலை!

 போதை, குடிப் பழக்கம், பெண்களுடன் தொடர்புகள்

சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண்ணை வாலிபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தியும், கழுத்தை வெட்டியும் கொலை செய்தார். பின்னர் தானும் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார். பட்டப்பகலில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் இன்று காலை இந்த சம்பவம் நடந்தது.
சென்னை திருவொற்றியூர் மாணிக்கம் நகரைச் சேர்ந்த செந்தமிழ் செல்வனின் மகள் கார்த்திகா (23) துரைப்பாக்கத்தில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களாக நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் புராஜெக்ட் வேலைக்காக சென்று வந்தார். இதற்காக காலையில் திருவொற்றியூரில் இருந்து பஸ்சில் பாரிமுனை சென்று அங்கிருந்து வேறு பஸ்சில் நந்தம்பாக்கம் செல்வார்.
வழக்கம்போல் இன்று காலை 8.30 மணிக்கு பாரிமுனை பஸ் நிலையத்துக்கு வந்தார் கார்த்திகா.
அப்போது ஒரு வாலிபர் கார்த்திகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திகாவை குத்தினார்.
கத்திக் குத்துப்பட்ட கார்த்திகா அலறியபடியே அந்த வாலிபரிடமிருந்து தப்பி ஓடினார்.

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் குண்டு வீசி கொலை!

Viruvirup
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சீர்காழி அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தால், அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து ராஜேந்திரன், சீர்காழி அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள தனது வணிக வளாகம் முன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. முத்து ராஜேந்திரனை நோக்கி முதலில் நாட்டு வெடிகுண்டு ஒன்றை அவர்கள் வீசினர்.
குண்டு வெடித்து புகை மண்டலம் கிளம்பியதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். அப்போது பைக்குகளில் வந்த அந்தக் கும்பல் முத்துராஜேந்திரன் சரமாரியாக அரிவாளால் வெட்டித் தள்ளியது.
தலையில் பலத்த வெட்டுபட்ட முத்து ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்தக் கும்பல் தப்பி சென்று விட்டது.

மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தார் சுப. உதயகுமார்!

Viruvirupu
கூடங்குளத்தில் நேற்று நடைபெற்ற போலீஸ் தடியடி மற்றும் வீட்டுக்கு வீடு தேடுதலை அடுத்து, தலைமறைவாக இருந்த சுப. உதயகுமார், இன்று மதியத்துக்குப் பின், வெளிப்பட்டுள்ளார். இன்னமும் போராட்டம் நடைபெறும் இடிந்தகரை பகுதிக்கு அவர் திரும்பினார்.
இடிந்தகரையில் 48 மணி நேர தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் பொதுமக்களோடு இணைந்து கொண்ட உதயகுமார், செய்தியாளர்களை சந்தித்தார்.

நிலக்கரி முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு கிடைத்த சலுகை வேறு இருவருக்கு இல்லை?

Viruvirupu
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரம் நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்து கொடுத்திருப்பதால், அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, சோனியா காந்தி, இரு மத்திய அமைச்சர்களை ‘காவு’ கொடுக்க முடிவு செய்திருப்பதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சேச்சே.. அவசரப் படாதீர்கள். நம் மண்ணின் மைந்தனான தி.மு.க. மந்திரி ஜெகத்ரட்சகனும் அதில் ஒருவர் அல்ல.
மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் ஆகிய இருவரையும்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜினாமா செய்ய உத்தரவிடுவார் என்று தெரிகிறது. எதிர்க்கட்சிகளால், இவர்கள் இருவரையும் மிகச் சுலபமாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் தொடர்பு படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

டக்ளஸ் தேவானந்தா: “மத்திய அரசு கொடுத்த துப்பாக்கியே என்னிடம் இருந்தது”

Viruvirupu



“சென்னையில் 1986-ம் ஆண்டு கலகம் விளைவித்ததாகவும், ஆயுதம் வைத்திருந்ததாகவும் மட்டுமே என்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், நாம் வைத்திருந்த அந்த ஆயுதங்கள் எம்மிடம் எப்படி வந்தன? எங்களுக்கு இந்திய மத்திய அரசுதான் வழங்கியிருந்தது” என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
1986-ம் ஆண்டு சூளைமேடு கொலைச் சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியாக அவரை சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சில் ஊடகங்களில் பிரசாரம் செய்யப்படுவது போல, என்மீது கொலைக் குற்றச்சாட்டுகள் இல்லை. கலகம் விளைவித்ததாகவும் ஆயுதம் வைத்திருந்ததாகவுமே குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய சட்டப் பிரிவில் ஈபிகோ 148-ம் பிரிவின் கீழேயே என்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

பிலிம் நியூஸ் ஆனந்தன் சிறப்பு பேட்டி!


முக்தா சீனிவாசனின் சகோதரர் வி.ராமசாமி, 1982ல் தயாரித்த படம் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’. மேடை நாடகமான இது படமாக எடுக்கப்பட்டது. கே.சுந்தரம் திரைக்கதை, வசனங்களை எழுதியிருந்தார். முக்தா சீனிவாசன் இயக்கினார். எம்.எஸ்.வியின் இசையில் உருவான படம். சிவாஜி, சுஜாதா, பூர்ணிமா, மனோரமா நடித்தனர். நாடகத்தில் நடித்த ஒய்.ஜி.மகேந்திரன், அதே வேடத்தில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்தார். அவருக்கு படத்தில் டபுள் ரோல்

526 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம், ‘பயணங்கள் முடிவதில்லை’. மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைதம்பி தயாரித்தார். கதையும் அவரே. திரைக்கதை, வசனங்கள் எழுதி ஆர்.சுந்தர்ராஜன் இயக்கினார். இளையராஜாவின் இசை, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மோகன், பூர்ணிமா, எஸ்.வி.சேகர், நாகேஷ், கவுண்டமணி நடித்தனர். கமல், ரஜினி திரையுலகில் ஆர்ப்பாட்டத்துடன் வெற்றிகளை தந்து கொண்டிருந்த நேரம் அது. காதல் கதை, மெலடி இசை ஆக¤யவற்றை பக்க பலமாக கொண்டு அமைதியாக வெற்றிகளை பதிவு செய்து கொண்டிருந்தார்

கம்பனிகளிடம் தாராளமாக பணம் பெற்ற கட்சிகள்

 மிக அதிகமான நன்கொடை பெற்ற கட்சிகள் 
காங்கிரஸ் 2,008 கோடி 
பாஜக 994 கோடி
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி  484 கோடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  417 கோடி
டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு டாடா, பிர்லா, வேதாந்தா, அம்புஜா சிமெண்ட்ஸ், ஜிண்டால், எஸ்ஸார் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடைகளை அள்ளி வழங்கி வருகின்றன. இதில் பிர்லா நிறுவனம் தான் முன்னணியில் உள்ளது.
இது குறித்து ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் (Association for Democratic Reforms and the National Election Watch) திரட்டியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ள விவரம்:
பிர்லா நிறுவனத்தின் பொதுத் தேர்தல் அறக்கட்டளை 2003-04 மற்றும் 2010-11ம் ஆண்டுகளில் மட்டும் ரூ. 36.46 கோடியை காங்கிரஸ் கட்சிக்கும், ரூ. 26 கோடியை பாஜகவும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

உதயகுமார், புஷ்பராயன் இன்று இரவு (வைகோ தலைமையில்?) கைதாகின்றனர்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவின் தலைவர்களாக உள்ள உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோர்,  கூடங்குளம் காவல் நிலையத்தில் இன்று இரவு 8 மணிக்கு நேரில் வந்து கைதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.செய்தியாளர் ஒருவருக்கு அளித்துள்ள தகவலில், மக்கள் மீது காவல்துறையினர் நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்தவே, மக்களுக்காகவே நாங்கள் கைதாகிறோம்.மேலும், மக்கள் மீது எந்த வன்முறையும் நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. எப்படி இருந்தாலும், அணு உலைக்கு எதிரான எங்களது போராட்டம் தொடர்ந்து அறவழியில் நடைபெறும். எங்களது போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகக் கூறுவது அபாண்டமானது. போராட்டக்காரர்கள் போலிஸாரை தாக்கியதாகக் கூறுவதில் உண்மையில்லை, அவர்கள் தடியடி நடத்தியதற்கு பொய்க் காரணம் கூறுகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அழகிரி மகனின் olympus நிறுவனத்துக்கு சீல்!

மதுரை பஸ் ஸ்டான்டில் துப்பறியும் போலீஸ்!!

Viruvirupu
மதுரை கிரானைட் முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு, ‘போல்ட்’டான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்குச் சொந்தமான ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் லைசென்ஸை ரத்து செய்துள்ளது.
கிரானைட் விவகாரத்தில் விசாரணைகள், தேடல்கள் என்று மதுரை ஏரியாவே பரபரப்பாக இருக்க, இதுவரை போலீஸ் கையில் சிக்கிக் கொள்ளாத சில கிரானைட் நிறுவன அதிபர்கள், கிரானைட் கிங் பி.ஆர்.பி.-யின் மகன்கள் உள்பட தொடர்ந்து தலைமறைவாக உள்ள 15 பேரில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும் ஒருவர்.
துரை தயாநிதியின் ‘தலைமறைவு’ தொடர்பாக எமக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அது தொடர்பாக விறுவிறுப்பில் ஏற்கனவே எழுதியிருந்தோம்
துரை தயாநிதி நடத்திய கிரானைட் நிறுவனம், ஒலிம்பஸ். இதில் அழகிரி மகனுடன் பங்குதாரராக இருந்தவர், மற்றொரு தி.மு.க. பிரமுகர் சூடம் மணியின் மகன் நாகராஜன்.

போலீசாரை கட்டையால் தாக்கிய கூடங்குளம் போராட்டக் குழுவினர்

 Don T Fall Prey Designs Anti Nuke போலீசாரை கட்டையால் கூடங்குளம் போராட்டக் குழுவினர் அடித்ததால் போலீசார் நடவடிக்கை: ஜெயலலிதா

சென்னை: கூடங்குளம் போராட்டக் குழுவினர் போலீசாரை கட்டையால் தாக்கியதால் தற்காப்புக்காக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். மேலும் அணு உலைக்கு எதிராக குழுவினரின் மாயவலையில் மீனவர்கள் சிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காலை 6 முதல் மாலை 6 வரை நடந்தது என்ன? கூடங்குளம் கலவரம் TIMELINE

viruvirupu.com
கடந்த ஓராண்டுக்கும் மேலாக அமைதியாக நடைபெற்று வந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், வன்முறையில் முடிந்தது. இடிந்தகரை, கூடங்குளம், வைராவிக்கிணறு ஆகிய இடங்களில் நேற்று தொற்றிக் கொண்ட பதட்டம், தடியடிப்பிரயோகம், கண்ணீர் புகை குண்டு வீச்சு, வீட்டுக்கு வீடு தேடுதல் என்று மாறிமாறி நடந்த காட்சிகள் இதோ:
காலை
0600: இடிந்தகரை உண்ணாவிரத பந்தலில் பெரியளவில் கூட்டமில்லை. காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
0700: பந்தலில் இருந்த ஏற்பாட்டாளர்கள், ஊருக்குள் சென்று அறிவித்தல் செய்ய ஆளனுப்பினர். சுற்றுவட்டார கடற்கரை கிராம மக்கள் வரத்  தொடங்கினர்.
0800: போராட்ட நடவடிக்கைகளை விளக்கும் கூட்டம் நடைபெற்றது. போராட்டம் முடியும்வரை யாரும் ஊருக்குள் போகவேண்டாம் என்று சொல்லப்பட்டது.
0900: பக்கத்து கடலோர கிராமங்களுக்கும் தகவல் போய், மக்கள் படகுகள் மூலமாக இடிந்தகரை நோக்கி வந்தனர்.