சனி, 29 அக்டோபர், 2016

சீன பொருட்களை புறக்கணிப்பதால்... இரு தரப்பு உறவு பாதிக்கும் என மிரட்டல்

புதுடில்லி:'எங்களுடைய பொருட்களை புறக் கணித்தால், இந்தியாவுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவு கடுமையாக பாதிக்கும்' என, சீனா மிரட்டல் விடுத்துள்ளது.
உற்பத்தி நாடான சீனா, தன்னுடைய பல்வேறு பொருட்களை மற்ற நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. அதன் ஏற்றுமதியில், தெற்காசியாவில் மிகப் பெரிய சந்தையாகவும், உலக அளவில் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில், ஒன்பதாவது இடத்திலும், இந்தியா உள்ளது. இன்றய பொருட்களை பிரித்துப் பார்த்தால்  .... சீன தயாரிப்பு 100 % முழுப்பொருட்களை மட்டுமே தவிர்க்கிறோமே தவிர பகுதி பொருட்களை அல்ல... நாம் உபயோகிக்கும் பல மின்னணு சாதனங்கள் உற்பத்தியை வேறு ஒரு நாடு தான் தயாரிக்கிறது என்றாலும், அதில் ஒரு பகுதியை சீன தயாரிக்கிறது... உதாரணம் BlackBerry உபயோகம் செய்கிற நாடு கனடாவை சேர்ந்த பொருள் என்றாலும், அதன் பேட்டரி சீனாவில் தான் தயாராகிறது....

கோர்ட்டுகளை மூடிவிடலாமா' என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

'நீதிபதி பணியிடங்களை நிரப்பாமல், அரசு நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வருகிறது; பேசாமல், கோர்ட்டுகளை மூடிவிடலாமா' என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில், காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பு வது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு கூறியதாவது: நீதிபதிகள் நியமனம் குறித்து, சுப்ரீம் கோர்ட் டின் தலைமை நீதிபதி அடங்கிய, 'கொலீஜியம்' பல்வேறு பரிந்துரைகளை அளித்தும், அதை நிறைவேற்றாமல், அரசு நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வருகிறது. நீதித்துறையை செயல்பட விடாமல் முடக்குவதை ஏற்க முடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், ஒரு குமாரசாமி-ஒரு கூட்டல் கணக்கு தெரியாத நீதிபதி வதந்தி வழக்கு நீதிபதி இவர்கள் எல்லாம் இருப்பதற்கு பதில் நீதிமன்றத்தை மூடுவது தான் சிறந்தது

நடிகை ரம்பா 2.50 லட்சம் இடைக்கால ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல்

நடிகை ரம்ப தனக்கும் தனது இரு பெண் குழந்தைகளுக்கும் மாதந்தோறும் ரூ.2.50 லட்சத்தை இடைக்கால ஜீவனாம்சமாக கணவர் தரவேண்டும் என்று கோரி நடிகை ரம்பா கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகை ரம்பா, தனது கணவர் இந்திரகுமார் பத்மநாதனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகக் கூறி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அந்த மனுவுடன் சேர்த்து தனக்கு இடைக்காலமாக மாதந்தோறும் ரூ. 2.50 லட்சத்தை ஜீவனாம்சமாகத் தர கணவருக்கு உத்தரவிடக் கோரி மற்றொரு மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘‘ நான் இப்போது படங்களில் நடிக்கவில்லை. நடிப்பதை நிறுத்தி விட்டேன். எனவே எனக்கும், எனது இரு மகள்களுக்கும் படிப்பு மற்றும் மருத்துவச் செலவுக்காக இடைக்கால ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ. 2.50 லட்சத்தை வழங்க எனது கணவருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார். இந்த மனு டிசம்பர் 3-ம் தேதியன்று சென்னை மாவட்ட 2-வது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

தீபாவளி போனஸாக 1,260 கார்கள், 400 வீடுகள்: ஊழியர்களை வியக்கவைத்த வைர வியாபாரி


குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக 1,260 கார்களையும், 400 வீடுகளையும், நகைகளையும் வழங்கியுள்ளார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சாவ்ஜிபாய் தொலாகியா வைரங்களை ஏற்றுமதி செய்து வருகிறார். இவர் தனது நிறுவனம் நிர்ணயித்த இலக்கை அடைந்ததால், தனது ஊழியர்களுக்கு 1,260 கார்கள், 400 வீடுகள், நகைகள் ஆகியவற்றை தீபாவளி பரிசாக அளித்திருக்கிறார். இது குறித்து சாவ்ஜிபாய் தொலாகியா கூறும்போது, "எங்களுடைய இலக்கு என்பது எங்கள் நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரிடமும் வீடும், காரும் இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதினோம். அதற்காகவே இந்தப் பரிசுகளை எங்கள் ஊழியர்களுக்கு வழங்கினோம்" என்றார். முன்னதாக 2012, 2014ஆம் ஆண்டுகளிலும் சாவ்ஜிபாய் தொலாகியா இதே போன்ற விலை உயர்ந்த பரிசுகளை தனது ஊழியர்களுக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.tamil,thehindu,com

உணவு பாதுகாப்பு மசோதா தமிழக அரசு புது விளக்கம்!


மின்னம்பலம்.காம்  இதுவரை தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த மத்திய உணவு பாதுகாப்பு மசோதா நவம்பர் மாதம் முதல் தமிழகத்தில் அமலாக இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த திட்டம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நிதியமைச்சர் பன்னீர்செலவ்ம் தலைமையிலான அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில் அமலாக இருக்கும் நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது அந்த விளக்கத்தில், 10 உறுப்பினர்கள் கொண்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.'மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

ஜெ சிகிச்சைக்கு சிங்கப்பூர் ஓமி ரங்கபாஷ்யம் வருகிறார்..

அப்பல்லோவில் ஜெ.,வுக்கு சிகிச்சை அளிக்க புதிய வெளிநாட்டு டாக்டர் ஒருவர் ரகசியமாக வந்து சென்றுள்ளார். ஜெ.,வுக்கு சிச்சை அளிக்க ரிச்சர்ட் மற்றும் இரண்டு சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் என மூன்று வெளிநாட்டு டாக்டர்கள் இதுவரை சிகிச்சை அளித்துள்ளனர். நான்காவதாக சிங்கப்பூரில் இருந்து ஓ.எம்.இ.ஐ. ரங்கபாஷ்யம் என்கிற ஓம்பிரகாஷ் ரங்கபாஷ்யம் என்கிற டாக்டர் சிங்கப்பூரில் இருந்து அப்பல்லோவிற்கு ஜெ.,வுக்கு சிகிச்சை அளிக்க வரவழைக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த பிரபல குடல் நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் ரங்கபாஷ்யத்தின் மகன். டாக்டர் ரங்கபாஷ்யம், முன்னாள் முதல்வர் கலைஞர், மறைந்த முரசொலி மாறன், ஆகியோருக்கு சிகிச்சை அளித்ததால் புகழ் பெற்றவர். கலைஞர் குடும்பத்திற்கு நெருக்கமான டாக்டர் ரங்கபாஷ்யத்தின் குடும்பத்தில் இருந்து ஒருவர் ஜெ.,வுக்கு சிகிச்சை அளிப்பது மருத்துவ வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லீரல் சிகிச்சை நிபுணாரான இந்த டாக்டர் இதுவரை எந்த பாதிப்பிற்கும் உள்ளாகாத ஜெ.,விற்கு கல்லீரல் சிகிச்சைக்காக ஏன் அழைத்து வரப்பட்டார் என மருத்துவ உலகம் ஆச்சரியப்படுகிறது. -தாமோதரன் பிரகாஷ் நக்கீரன்,இன்

உள்ளாட்சி தேர்தல் மனுவில் கையெழுத்து - இடைத்தேர்தல் மனுவில் கைநாட்டு : அதிமுக மீது பாயப்போகும் வழக்கு.. மோசடி அம்பலம்

ஜெ. உடல் நலம் இல்லாமல் சுய நினைவின்றி கடந்த மாதம் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்ட உடன் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதற்காக ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் தமிழகம் எங்கும் களம் இறங்கினார்கள். மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் அரசியல் கட்சிகள் தங்கள் சின்னத்துடன் நேரடியாக மோதும் இடங்களில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு பி - பார்ம் எனப்படும் கட்சி தலைமையின் அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டது;"
அந்த பி-பார்ம்களில் கட்சியின் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவின்n கையெழுத்து பெறப்பட்டிருந்தது.  வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஜெ.வின் கையெழுத்தோடு  வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் திடீரென உள்ளாட்சி தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

பத்து வயதில் 40 மொழிகளை பேசி டைப்பிங் செய்யும் சாதனையாளர் அக்ரம்

muthupetmedia.com :தமிழ்நாடு, இராமநாதபுர மாவட்டம், அபிராமம் கிராமத்தை
பத்து வயதே ஆகியுள்ள இச்சிறுவன், உலக இளம் வயது தட்டச்சு சாதனையாளன் (World Youngest Multilingual Typist ) என்ற அவார்டை பெற்றுள்ளான். பல மொழிகளின் ஆற்றலையும் தனது 7 வயது முதல் கற்று வந்துள்ளான். இந்திய,வெளிநாட்டு மற்றும் பழங்கால கல்வெட்டு மொழிகளை கற்று, 400 ற்கும் மேற்பட்ட மொழிகளிகளில் படிப்பதற்கும், எழுதுவதற்கும், டைப் ரைட்டிங் செய்வதற்கும் பயிற்சி எடுத்துள்ளான். 400 மொழிகளில் வேகமாக டைப்பிங் செய்யும் அபாரத் திறமையின் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறான்.
இதோடு மட்டுமில்லாமல் இந்தியாவின் தேசிய கீதமான ”ஜன கண மன” வை சுமார் 40 மொழிகளில் பார்க்காமல் 2 மணி நேரத்தில் எழுதி முடித்து விடுகிறார்

ஈரான் .. பலாத்காரம் செய்யவந்தவனை கொன்றதால் தூக்கிலிடப்பட்ட பெண் .. 19 வயதில் சம்பவம் 26 வயதில் தூக்கு .

ஈரானைச் சேர்ந்த ரேஹானே ஜப்பாரி என்ற 26 வயதே நிரம்பிய இளம்பெண் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தூக்கிலிடப்பட்டார்.ஏன் இந்த இளம்பெண் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் என்பது தெரியுமா? 2009ஆம் ஆண்டு டெஹ்ரானை சேர்ந்த ஒரு உளவுத்துறை அதிகாரி இவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, தனது கையில் வைத்திருந்த பேனாவால் அவரை குத்தியுள்ளார்.இதில் அந்த அதிகாரி மரணமடைந்து விட்டார். இதனால் கொலை குற்றவாளியாக ஈரானிய அரசு ரேஹானே ஜப்பாரியை தூக்கிலிட்டது..இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில். தூக்கிலிடப்பட்ட ரேஹானே ஜப்பாரி, தனது தாய்க்கு இறுதியாக உருக்கமான செய்தி ஒன்றை தெரிவித்து இருந்தார். தாயாருக்கு தெரிவித்த கடைசி செய்தி குரல் வடிவில் வெளியாகி இருந்தது.அது அனைவரது மனதையும் கரையச் செய்வதாக உள்ளது. நமது சட்டங்கள் எவ்வளவு கல் நெஞ்சோடும், மனசாட்சி அற்ற தன்மையோடும், வறட்டுத் தன்மையோடும் இருக்கின்றன என்பதற்கான சிறு உதாரணம்தான் இது.
அதன் தமிழாக்கம் கீழே:
"அன்பிற்கினிய ஷோலே [அவரது அம்மா பெயர்], எவ்வாறு ஈரானிய ஆட்சியின் சட்டதிட்டங்களை எதிர்கொள்வது எப்படி என்பதை இப்போது கற்றுக்கொண்டேன்.
நான் எனது வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை அடைந்துவிட்டேன் என்று நீயாகவே ஏன் எனக்கு தெரிவிக்கவில்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. எனக்கு இந்த விஷயம் தெரிய வேண்டுமென உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக இருப்பது என்னை எவ்வளவு வெட்கமடைய செய்கிறது என்பது உனக்கு தெரியுமா?

மருத்துவர்கள் அலட்சியப் போக்கால் அலிகர் பல்கலைக் கழக தமிழ் பேராசிரியர் மூர்த்தி மரணம்: மமக கண்டனம்

thetimestamil.com : மருத்துவர்கள் அலட்சியப் போக்கால் அலிகர் பல்கலைக் கழக
தமிழ் பேராசிரியர் மூர்த்தி மரணமடைந்துள்ளார். இதற்குக் காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:
உத்திரப் பிரதேசத்தில் உள்ள  அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் நவீன இந்திய மொழிகள் துறையின் தலைவர் தமிழ் பேராசிரியர் து.மூர்த்தி அவர்களின் மரணச் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மெக்கா நகரம் மீது போராளிகள் ஏவுகணை தாக்குதல்

இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா மீது அண்டைநாடான ஏமனில்
உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. மெக்கா நகரம் மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: சவுதி அரேபியா குற்றச்சாட்டு ரியாத்: ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

பன்னீர்செல்வமா? பழனிச்சாமியா? பதவிப்போர் ஆரம்பம் ! இருதரப்புமே அதிமுகவையும் தமிழகத்தையும் பாஜகவுக்கு ஏலம் கூறி விற்பனை...

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் துறைகளை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்ததில் அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசிகலா நடராஜன் தரப்புக்கு உடன்பாடில்லை என்பதை பகிரங்கப்படுத்தியிருக்கிறது அதிமுக வெளியிட்ட அறிக்கை. முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது துறைகளை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க நினைத்தது சசிகலா தரப்பு. ஆனால் மத்திய அரசின் நெருக்கடியால் அமைச்சரவையில் 2-வது இடத்தில் இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்திடம் அந்த துறைகளை ஒப்படைத்தார் ஆளுநர் வித்யாசகர் ராவ். இதில் கடும் அதிருப்தி அடைந்தது சசிகலா தரப்பு என்பதை நாம் தொடர்ந்து சுட்டிகாட்டி வந்தோம். தற்போது இந்த அதிருப்தியை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருக்கிறது சசிகலா தரப்பு. சாமி சென்டிமெண்ட் .. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுவை நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நேற்று அதிமுக அறிவித்தது. வழக்கமாக அதிமுகவின் வேட்பாளர் பட்டியல், பொறுப்பாளர் நியமனங்களில் 'சாமி' சென்டிமெண்ட் எப்போதும் இருக்கும். ஆச்சரிய அறிக்கை ஆச்சரிய அறிக்கை சாமி பெயர்களைக் கொண்ட ஊரில் இருந்துதான் வேட்பாளர் பட்டியல் தொடங்கும் என்பது அதிமுகவை கவனித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் நேற்றைய பொறுப்பாளர்கள் அறிவிப்பு அறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அதில் எடப்பாடி பழனிச்சாமியை உள்ளடக்கிய அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல் முதலில் இடம்பெற்றிருந்தது. இதற்கு காரணமே எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்துவதுதான் என்கின்றன

ஆஸ்திரேலியாவில் பஞ்சாபி ஓட்டுனர் பேருந்தில் எரிந்து கொலை Brisbane bus driver set on fire and killed


சிட்னி, ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்மீத் அலிஷேர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். பஞ்சாபி இனத்தை சேர்ந்த இவர், தனது பணியில் இருந்த போது பயணி ஒருவரால் திடீரென தீ வைத்து கொளுத்தப்பட்டார். இந்த கொடூர சம்பவம் பேருந்து பயணிகள் முன்னிலையிலே நடைபெற்றது. பேருந்தில் இருந்த பயணிகள் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்தை செய்த 48 வயதான நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலைக்கு எதுவும் குறிப்பிட்ட பின்னணி உள்ளதாக தெரியவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக பேருந்து முழுவதும் எரியவில்லை எனவும் இதனால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது dailythanthi.com

ஜெயலலிதாவை போயஸ்கார்டனுக்கு கொண்டு செல்ல சசிகலா முயற்சி .. தடுத்த லண்டன் டாக்டர்! கார்டன்லன்னா இஷ்டப்பட்ட அளவு பெருவிரல் கைரேகை அழுத்தலாம் சொத்துக்களை மாத்தலாம்“தீபாவளிக்கு முன்னர் ஜெயலலிதாவை போயஸ் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல சசிகலா நடராஜன் விரும்பிய நிலையில், அதற்கு மருத்துவர்கள் அனுமதிப்பார்களா? சிகிச்சையில் இருக்கும் ஜெயலலிதா இன்று வீடு திரும்புவாரா?” என்று மதியம் ஒரு மணி செய்தியில் விரிவாக குறிப்பிடுவதாக எழுதியிருந்தோம். “இன்று காலை முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் தீவிரமான ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள். அவரது உடல்நலம் தொடர்பான பல்வேறு அறிக்கைகள், பரிசோதனைகளைச் செய்தவர்கள் அதை லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேலுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், அங்கு அதிகாலை என்பதால் அவரிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. இங்குள்ள நிலைமைகளை விரிவாக அனுப்பியிருக்கும் இவர்களது ரிப்போர்ட்டுகளை வைத்துதான் ரிச்சர்ட் பேல் ஆய்வு செய்து ஜெயலலிதா டிஸ்சார்ஜ் தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும்” என்பது அந்த செய்தியின் சாராம்சம்.

விஜயகாந்தும் இடைதேர்தலும் ..

யார் சொல்லை கேட்பது : குழப்பத்தில் விஜயகாந்த்மூன்று தொகுதி
இடைத்தேர்தலில், வேட்பாளர் களை நிறுத்துவதா, வேண்டாமா என்ற குழப்பத் தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தவித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க. போட்டி யிட்டது. அனைத்து இடங்களிலும் தோல்வி மட்டுமல்ல; டிபாசிட்டையும் பறிகொடுத்தது. தற்போது, மூன்று தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால்வேட்பாளர்களை நிறுத்த விஜயகாந்த் விரும்புகிறார். ஆனால், கட்சியினரோ, 'ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும்; போட்டியிட்டாலும் தோல்வி நிச்சயம்; மேலும் செலவழிக்கவும், எங்களிடம் பணம் இல்லை'

வெள்ளி, 28 அக்டோபர், 2016

ஜெயலலிதாவுக்கு நினைவு இருக்கிறதா? இல்லையா? பெருவிரலை பதித்து யார் அதிகாரம் செலுத்துவது? யார் இந்த போர்ஜ்ரி 420 வேலையை செய்து இருப்பார்கள்?

Special Correspondent FB Wing 5 mins · இடைத்தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்களின் All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) கட்சி அங்கீகார கடிதமான பி -பார்ம் விவாதத்தை கிளப்பியுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு கையெழுத்து போட்ட ஜெ. அப்போதே கையெழுத்திட்ட நிலையில், இப்போது ஜெயலலிதாவின் கைநாட்டை பெற்று இடைத்தேர்தலில் வேட்புமனுவை சமர்ப்பித்திருக்கிறார்கள். உடல் நலம் தேறி வருகிறார் , வதந்தி பரப்பியவர்கள் கைது என்றெல்லாம் பேசிய நிலையில் , பேசுகிறார் தீபாவளி வீடு திரும்புகிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் ஏன் கைநாட்டு போட வேண்டும்... நடந்தது என்ன .. சிபிஐ விசாரணையை ஜெயலலிதாவை சுற்றி ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் மீதும் , முக்கியமாக ஒப்புதல்  சாட்சி கையெழுத்து போட்ட 1) அரசு டாக்டர் பி.பாலாஜி 2) அப்பல்லோவில் ஜெ.வுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய குழுவின் தலைவராக இருக்கும் டாக்டர் பாபு ஆபிரஹாம் மீதும் #CBI விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை #அதிமுக கட்சி உள்ளே கேக்க ஆரம்பித்து உள்ளது 
பேசினார்கள் என்று சொன்னிர்கள் கடைசியில் கைநாட்டு #jayalalithaa போட்டு இருக்கிறார் .. யார் இந்த போர்ஜ்ரி 420 வேலையை செய்து இருப்பார்கள் மாலன் நாராயணன் Rangaraj Pandey Sumanth Raman Gunaa Gunasekaran Nelson Xavier ..

கோவா முன்னாள் முதல்வர் சசிகலா ககோத்கர் காலமானார்

பனாஜி: கோவா மாநில முன்னாள் முதல்வர் சசிகலா ககோத்கர் உடல் நலக்
குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 81.
கோவாவின் முதல் முதலமைச்சர் தயானந்த பண்டோத்கரின் மகள் சசிகலா ககோத்கர். தயானந்த பண்டோத்கர் 1973-ம் ஆண்டு மரணம் அடைந்தபிறகு சசிகலா ககோத்கர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1979 ஏப்ரல் மாதம் வரையில் முதல்வர் பதவியில் நீடித்தார். கோவா மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற அவர் 90-களில் கல்வியமைச்சராகவும் இருந்தார்.

உணவு பாதுகாப்பு மசோதா துரோகம்: ராமதாஸ்!


தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து வந்த உணவு பாதுகாப்பு மசோதா தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அமலாகிறது. இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை ஏற்றுக் கொள்வதாகவும், தமிழகத்தில் இச்சட்டம் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும், இச்சட்டத்தை ஏற்றதன் மூலம் மாநில உரிமைகள் தாரை வார்க்கப்பட்டுள்ளன. நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013ஆம் ஆண்டு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இத்திட்டம் பல மாநிலங்களுக்குச் சாதகமானது என்ற போதிலும், தமிழகத்துக்கு மிகவும் பாதகமானது ஆகும்.

துரோகம் ... ஜெ' எதிர்த்த உணவு மசோதா தமிழகத்தில் அமலாகிறது! ஜெயாவுக்கு குனிந்து குனிந்து... இப்போ மோடிக்கும் குனிந்து குனிந்து தமிழக உரிமைகளை தாரை வார்க்கும் பன்னீரு~!


மின்னம்பலம்,காம்  :கடந்த காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் ஆட்சியில் 06-05-2013 அன்று நாடாளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்த்தன. இதில் மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் ரேஷன் சிஸ்டத்தை இல்லாமல் ஆக்கிவிடும் திட்டம் இது என்று கடுமையாக எதிர்த்த நிலையில் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 02-08-2013ல் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் “இம்மசோதா குழப்பங்கள் நிறைந்ததாக உள்ளது .இந்தியா போன்ற கூட்டாட்சி நடக்கும் நாட்டில், மாநிலங்களுக்கே மக்களுடன் நெருங்கிய மற்றும் மறைமுக தொடர்புகள் உள்ளன. எனவே உணவு பாதுகாப்பு மசோதா போன்ற மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தும் உரிமையை மாநிலங்களுக்கே அளிக்க வேண்டும். மேலும் மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிட முயற்சிக்க வேண்டாம்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்ட ஜெயலலிதா உணவு பாதுகாப்பு மசோதாவில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ம.பி.யில் சாதி அடையாளத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பைகள்!

thetimestamil.com :அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, தலித் மற்றும்
பழங்குடிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் தமக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக பேசினார். ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கும் பாஜக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கிய இலவச பைகளில் ‘ஆதி திராவிடர்/பழங்குடி நலத்திட்டத்தில் வழங்கப்பட்டது’ என முத்திரை குத்தி வழங்கியிருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் மண்டாசூர் மாவட்ட அரசு கல்லூரியில் 250 ஆதி திராவிடர்/பழங்குடி மாணவர்களுக்கு வழங்கிய பைகளில் இப்படியான வாசகங்களை பளிச்சென அச்சிட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

அபத்தம் +அயோக்கியத்தனம் = தீபாவளி ... அறிவியல் அபத்தம் தீபாவளி:

ஆதியிலே ஒரு அசுரன் பூமியை பாயாக சுருட்டி எடுத்துக்கொண்டு போய்
கடலுக்குள் ஒளிந்து கொண்டான். உடனே தேவர்கள் ஓடிப்போய் மகாவிஷ்னுவிடம் முறையிட அவர் பன்றி அவதாரம் எடுத்து போய் அசுரனை கொன்றுவிட்டு பூமியை எடுத்து வந்து பாயாக சுருட்டப்பட்ட பூமியை மீண்டும் விரித்துவிட்டார். பழைய நிலைக்கு திரும்பிய பூமி பன்றியோடு உறவுகொள்ள ஆசைப்பட்டது. பன்றி உருவிலிருந்த மகாவிஷ்னுவும் மனமிரங்கி பூமியோடு உறவுகொள்ள, பூமிக்கும் பன்றிக்கும் மகனாக நரகாசூரன் பிறந்தான். நரகாசூரன் வளர்ந்து தேவர்களை கடுமையாக சித்தரவதை செய்ய துவங்கினான். எப்போதும் போல நியாயவான்களான ஆரியர்கள் மீண்டும் மகாவிஷ்னுவிடம் முறையிடவே, மகாவிஷ்னு போரிட்டு நரகாசூரனை கொன்றார். அந்த நரகாசூரன் இறந்தநாளையே தீபாவளி என கொண்டாடுகின்றனர்.

அப்போலோவில் கல்கி பகவான் (அம்மா பகவான்) அனுமதி ...சீரியசாம் . ... Kalki Bhagavan admitted in Apollo hospital

கல்கி பகவான் உடல்நிலை சரியில்லாமல் சென்னை ஆயிரம் விளக்கில்
உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஜெ., அனுமதிக்கப்பட்டுள்ள கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் கல்கி பகவானும் அனுமதிக்க ப்பட்டுள்ளார். இதனால் கல்கி பகவான் பக்தர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறைக்கும் கல்கி பகவான் பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதை தவிர்க்க கல்கி பகவானின் காவல்துறை நண்பர்கள் பக்தர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்து அவர்களை கல்கி பகவானை பார்க்க அப்பல்லோவுக்கு வரவேண்டாம் என அன்பு வேண்டுகோள் விடுத்துக்கொ ண்டிருக்கி றார்கள். -சுபகார்யா சீக்கிரமஸ்த்து ,,, தாமோதரன் பிரகாஷ் நக்கீரன்,இன்

டொனால்ட் ட்ரம்ப்... மோடியே பொறாமைப்படும் அளவு நாறவாய்... நானும் ரவுடிதாய்ன்..

ஆட்டோ சங்கர், விஜய் மல்லையா, ஈமு கோழி அதிபர், மகா பெரியவா ஜெயேந்திர சரஸ்வதி போன்ற ‘ஆளுமைகள்’ அனைவரையும் சேர்த்து செய்த கலவையான “அவர்” – டொனால்ட் டிரம்ப்.
சுமார் 3,500 சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார். அந்த வழக்குகளில் சரிபாதி அவர் பிறர் மேல் தொடுத்த வழக்குகள் – மறுபாதி பிறர் அவர் மேல் தொடுத்த வழக்குகள். அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்ட வருமான வரி தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளது. வருமான வரி கட்டாமல் ஏய்ப்பது ஒருவரின் தனிப்பட்ட திறமை என்று பொது மேடையிலேயே அறிவித்துள்ளார். அவர் மேல் சுமார் 14 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். தனது சொந்த மகளையே பாலியல் கண்ணோட்டத்துடன் விமர்சித்திருக்கிறார்.
அவருக்கு சுமார் 500 தொழில் நிறுவனங்களில் முதலீடு உள்ளது. ரியல் எஸ்டேட், சூதாட்ட விடுதிகள், மதுபானங்கள், அழகுப்போட்டிகள் நடத்துவது போன்ற ’தொழில்களே’ அவரது பிரதானமான வருவாய் மூலங்கள்.

ஓட்டுனர் இல்லாத காண்டேயினர் லாரி .. அமெரிக்காவில் தானியங்கி லாரி அறிமுகம் Otto and Budweiser: First Shipment by Self-Driving Truck

மக்களை வியக்க வைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதாவது, செல்போன் மூலம் தானாக இயங்கக்கூடிய கார், ரோபோ என இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் டிரைவர் இல்லாத லாரி ஒன்று தானாக இயங்கி 50,000 லிட்டர் பீர் விநியோகித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் தன்னிச்சையாக இயங்கக்கூடிய லாரியை உபெர் மற்றும் அன்கியுசர் புஸ்க் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். அந்த லாரி ‘ஓட்டோ’ என அழைக்கப்படுகிறது.

ஜெயாவின் சொத்துக்கள் கைமாறுகின்றன .. சட்டப்படி சுயநினைவோடு அவர் இருக்கவேண்டும், இல்லாவிடில் அவரின் ஒப்பம் செல்லாது! இப்போ விளங்குகிறதா எது வதந்தி எது உண்மை?

மிஸ்டர் கழுகு : கையெழுத்து... பத்திரம்... ஜெயலலிதா!
ரேப்பர் ரெடி செய்யவும்’ என்று கழுகார் அனுப்பிவைத்த ‘கையெழுத்து...  பத்திரம்... ஜெயலலிதா!’ என்கிற டைட்டில் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன.    லே-அவுட்டுக்கு தலைப்பை அனுப்பிவிட்டு கழுகாருக்காகக் காத்திருந்தோம். தீபாவளி கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகப் புத்தாடையில் வந்தார் கழுகார். குறிப்பு நோட்டை புரட்டியபடியே பேச ஆரம்பித்தார ‘‘அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்தைத் தாண்டிவிட்டது. அவரது உடல்நலம் தேறிவர வேண்டும் என தமிழகமே பிரார்த்திக்கிறது. லண்டன், சிங்கப்பூர், எய்ம்ஸ் என டாக்டர்கள் படையெடுத்தபடியே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் சத்தமில்லாமல் ஒரு காரியம் நடந்து கொண்டிருக்கிறதாம். அடுத்து நான் சொல்லப்போகும் தகவல் அ.தி.மு.க-வின் உள் வட்டத்தில் உள்ள முக்கியப் புள்ளி ஒருவர் சொன்னது. ‘சில சொத்துக்களைக் கை மாற்றும் காரியங்கள் ரகசியமாக நடக்க ஆரம்பித்துவிட்டன’ என்பதுதான் அவர் சொல்வது.”
‘‘அதிர்ச்சியாக இருக்கிறதே!’’
‘‘ஹைதராபாத் ஜிடிமேட்லா ஏரியாவில் சுமார் 15 ஏக்கர் விவசாய நிலத்தை 1968-ம் ஆண்டு ஜெயலலிதா வாங்கினார். அப்போது அதன் மதிப்பு 1.78 லட்சம் ரூபாய். ஜெயலலிதா மற்றும் அவருடைய தாய் பெயரில் இந்த நிலம் வாங்கப்பட்டது. இப்போது இந்த சொத்தின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டிவிட்டது.

போனையே எடுக்காத அழகிரி இப்போதாவது நேரில் வந்து சந்தித்தாரே...... கலைஞர் நெகிழ்ச்சி

சென்னை: எத்தனையோ முறை போனில் முயற்சித்தும் கண்டுகொள்ளாத மு.க. அழகிரி இப்போதாவது தம்மை வந்து சந்தித்ததாரே என கருணாநிதி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளாராம்.
திமுகவில் இருந்து அழகிரி டிஸ்மிஸ் செய்யப்பட்டு 2 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. இதன் பின்னர் திமுக தொடர்பான விவகாரங்களில் அவ்வளவாக அழகிரி தலையிடுவதில்லை. ஆனால் அழகிரியின் மகன் தயா அழகிரி அவ்வப்போது திமுகவினரை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வந்தார மேலும் கோபாலபுரம் வந்து செல்லும் அழகிரி தாயார் தயாளு அம்மாளை மட்டுமே சந்தித்துவிட்டு செல்வார். மேல் தளத்தில் இருக்கும் கருணாநிதியை சந்திப்பதை தவிர்த்து வந்தார். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திடீரென கருணாநிதியை சந்தித்து பேசினார் அழகிரி. இதனால் அழகிரி மீண்டும் திமுகவில் சேர்க்கப்படலாம் எனக் கூறப்பட்டது.
ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. இதனிடையே தம்முடைய உதவியாளர் நித்யாவிடம் அழகிரிக்கு போன் போடுமாறு கருணாநிதி சொல்லுவதும் ஆனால் அந்த போனை எடுக்காமல் தவிர்ப்பதுமாக அழகிரி இருந்து வந்தார்.

பாஜக பொறிக்குள் சிக்கிய தமிழக அரசு ... காவிரியில் மௌனம் .. என்ன கேட்டாலும் ஒகே .. பறிபோன மாநில அதிகாரம்?

தமிழ்நாட்டில் நாம் நினைத்திருந்தால்…!’ -அமித் ஷாவிடம் கூறிய மோடி?

தமிழக அரசில் இலாகா இல்லாத முதல்வராக தொடர்கிறார் ஜெயலலிதா. அப்போலோவில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 33 நாட்கள் கடந்துவிட்டன. ‘ தமிழக அரசியல் சூழல்களுக்கு ஏற்ப மாறுபட்ட முடிவுகளை பா.ஜ.க அரசு எடுத்திருக்க முடியும். அவ்வாறு செய்யாமல் போனதற்கும் பல காரணங்கள் உள்ளன’ என்கிறார் தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவர் மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் சேராமல் இழுத்தடித்து வந்த தமிழக அரசு, தற்போது இத்திட்டத்தில் சேர ஒப்புதல் அளித்துவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்துப் பேசினார் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி. அதேபோல் காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொண்டாலும், இதுகுறித்த எந்த எதிர்ப்பையும் அ.தி.மு.க நிர்வாகிகள் பதிவு செய்யவில்லை.

250 குழந்தைகளை பேக்கரி இயந்திரத்தில் கொடூரமாக கொலை செய்த ஐஎஸ் முஸ்லிம் பயங்கரவாதிகள் !


சிரியாவில் 250க்கும் மேற்பட்ட கிறிஸ்டியன் குழந்தைகளை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் பேக்கரி மிசினில் போட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டதாக சிரியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் கழகம் சிரியாவைச் சேந்த ஆலைச் அசப் என்ற பெண்ணிடம் நேர்காணல் எடுத்துள்ளது.
அப்போது அவர் கூறிய சில தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தன. அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சிரியாவின் முக்கிய நகரமான ஆட்ரா அல் உம்மாலையா ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவர்கள் கட்டுப்பட்டுக்குள் வந்தவுடன் அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

சசிகலா பன்னீர்செல்வம் மோதலால் மோடி கும்பலின் பினாமியான ஆட்சி .. இதுதான் சு.சாமி சொன்ன மெடிகல் மிராக்கில் .. பாஜகவுக்கு அடித்த ஜாக்பாட் !


சென்னை : ஓ.பி.எஸ்-சசிகலா
மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இறுதியில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது குறித்து தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்புகளை உருவாகியுள்ளது. இதனால் பலர் சூதாட்டத்திலும் பணம் கட்டியுள்ளனர். அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனால் அறிமுகமாகி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா மூலம் அமைச்சரானவர். கட்சிக்கு வந்தவுடன் இவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வர் பதவி இழந்தபோது திடீரென ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. சசிகலா டி.டி.வி.தினகரனை முதல்வராக்க பார்த்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டதால் சசிகலா அதிர்ச்சியானார்.
முதல்வர் பதவி வழங்கப்பட்டதால் ஓ.பன்னீர் செல்வம் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை ஓவர்டேக் செய்ய ஆரம்பித்தார். ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்கி அவரின் அசைக்க முடியாத சக்தியாகவும் திகழ தொடங்கினார்.

தமிழக அதிமுக பாஜக கூட்டணி ஆட்சியில் தொடரும் பால்குட பலிகள்!: .கைப்பற்றிய காவிகள் ? இன்னுமா சந்தேகம்?


உடல்நலம் பாதிக்கப்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி சேலம் நெய்க்காரப்பட்டியில் நேற்று அதிமுகவினர் நடத்திய பால்குட ஊர்வலகத்தில்  பங்கேற்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். முதலமைச்சர் நலம்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக நடத்தப்படும் நிகழ்வுகளில் உயிரிழப்புகள் ஏற்படுவது மிகவும் கவலையளிக்கிறது” என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள கரைபுரநாதர் கோவிலில் நேற்று நடைபெற்ற இந்த பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு வழிபாட்டுக்கு அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்றுள்ளார். 3508 பேர் பங்கேற்றதாகக் கூறப்படும் நிகழ்வுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  

மல்கான்கிரி போலி என்கவுண்டரில் 28 மாவோயிஸ்ட் போராளிகள் படுகொலை: சொந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்!

thetimestamil.com  : சே.வாஞ்சி நாதன்: கடந்த 24.10.2016 அன்று ஆந்திரா-ஒரிசா
எல்லைப் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் 28 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றுவிட்டதாக அறிவித்திருக்கிறார் ஆந்திர மாநில டி.ஜி.பி. சம்பாசிவராவ். ஒடிசா முதல்வர் காவல்துறைக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். மாவோயிஸ்டுகள் மீது சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்களும் திருப்பிச் சுட்டதாகவும் சொல்கிறது காவல்துறை. மாவோயிஸ்டுகளை முன்பே பிடித்துவைத்து நிராயுதபாணிகளான அவர்களை போலி மோதலில் போலீசு சுட்டுக் கொன்றுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார் எழுத்தாளர் வரவரராவ். மாவோயிஸ்டுகளுக்கு உணவு கொண்டு செல்பவர் மூலம் உணவில் நஞ்சு கலந்து அவர்களை வீழ்த்திவிட்டு, அதன்பின்னர் சுட்டுக் கொன்றிருப்பதாக மாவோயிஸ்டு அமைப்பினைச் சார்ந்த ஷ்யாம் அளித்துள்ள பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

வீரமணி: தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் கிடையாது .. காவிரி கிடையாது .. தமிழக எம்பிக்களோ ஆழ்ந்த உறக்கத்தில்


எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமையவிருந்தநிலையில், திடீரென அந்த முடிவை மத்திய அரசு மாற்றிக்கொண்டதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை நிறுவ ஒப்புக்கொண்டு, ஆய்வுகளும் நடத்தப்பட்டு, அதற்கான நிலம் உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தமிழ்நாடு அரசு இசைவளித்தநிலையில், இப்போது அந்த முடிவை மத்திய பி.ஜே.பி. அரசு மாற்றிக் கொண்டுள்ளது என்ற தகவல் கண்டிக்கத்தக்கது என்றும், தமிழக எம்.பி.,க்கள் பிரதமரைச் சந்தித்து மத்திய அரசின் முடிவைத் தடுக்கவேண்டும் என்றும், அதற்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக - ஆர்.எஸ்.எஸ். அரசு, தமிழ்நாட்டை வஞ்சித்து வருவது முற்றுப்பெறாத ஒரு தொடர்கதையாக நாளும் நடந்து வருகிறது.

வியாழன், 27 அக்டோபர், 2016

இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பொதுமக்கள் அச்சம்

div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> ரோம் : இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. கட்டடங்கள் குலுங்கின : மத்திய இத்தாலி மற்றும் ரோம் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பெருஜியா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவில் 5.6 என பதிவாகியுள்ளதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாலைகளில் தஞ்சம் : ரோம் பழமையான கட்டடங்கள் நிரம்பியுள்ள நகரம். அங்குள்ள பழமையான கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. div dir="ltr" style="text-align: left;" trbidi="on">

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! - ஸ்டாலின்!

மின்னம்பலம்.காம் : நிதியமைச்சர் ஓ.பன்னீசெல்வம் முதல்வரின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று அவரை இரண்டாவது முறையாக தலைமைச் செயலகம் வந்தார். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க முடியாத நிலையில் அவருடைய அலுவலகத்தில்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் நகலை வழங்கினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் ஆன நிலையில் அவரது அமைச்சரவைப் பொறுப்புகளை நிதியமைச்சர் ஓ.பன்னீசெல்வத்துக்கு மாற்றி கடந்த 10ம் தேதி உத்தரவிட்டார் கவர்னர் வித்யாசாகர்

அழகிரி கோபாலபுரத்தில் கலைஞரை நலம் விசாரித்தார்

கலைஞர் விரைவில் பூரண குணமடைந்துவிடுவார் : மு.க.அழகிரி ஒவ்வாமையினால் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட திமுக தலைவர் கலைஞர், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை மு.க.அழகிரி கோபாலபுரம் வந்து கலைஞரை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றார். அப்போது கலைஞரின் நலன் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அழகிரி, ‘’தலைவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்துவிடுவார்’’ என்று தெரிவித்தார். நக்கீரன்.இன்

ஜெ.வின் சிகிச்சையில் இருந்து விடைபெறுகிறார் ரிச்சர்ட் பேல்!

உடல்நலக் குரைறவு காரணமாக செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஜெயலலிதா. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக இங்கிலாந்து நாட்டில் இருந்து பிரபல டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை வந்தார். லண்டனில் உள்ள பிரிட்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு, அடுத்து எத்தகைய சிகிச்சை முறைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போதுவரை அவர் லண்டனில் இருந்து சென்னைக்கு அவ்வப்போது வந்து ஜெ.வுக்கு சிகிக்சை அளித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட அப்பாயிண்மென்ட்டுகளை தவிர்க்க முடியாது என்பதால், வருகிற 7ஆம் தேதி ஜெ.வின் சிகிச்சையில் இருந்து விடைபெறுகிறார் என அப்பல்லோ மருத்துவ வட்டடாரங்கள் தெரிவிக்கின்றன. தாமோதரன் பிரகாஷ்<  நக்கீரன்,இன்

தனியார் சட்டக்கல்லூரி தொடங்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனியார் சட்டக்கல்லூரிகளை அமைக்க தடை விதிக்கும் தமிழக அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், புதிய கல்லூரிகள் அமைக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக நீதிப்பேரவை தலைவர் பாலு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தற்போது 65,000 வழக்கறிஞர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் 3,500 புதிய வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்து வருகின்றனர். இந்திய சட்டக் கமிஷன் பரிந்துரையின்படி, நாட்டில் 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் வீதம் இருக்க வேண்டும்.

ஜெ. குணமடைய 3,000 பேர் நடத்திய மிருத்யுஞ்ச யாகம்! ...பிரம்ம ஹத்தி தோஷம் நீங்குமா?


தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி 3,000 அதிமுக தொண்டர்கள் மிருத்யுஞ்ச யாகத்தில் ஈடுபட்டனர். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் அமைச்சர்களும் தொண்டர்களும் பல்வேறு வகையான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியில் பிரமாண்டமான மஹா அமிர்த மிருத்யுஞ்ச யாகம் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி காளியம்மன் ஆலயத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 200 குருக்கள் கலந்துகொண்ட இந்த யாகத்துக்கு ரூபாய் 35 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேஷனல் ஜியோகிராபி ஆப்கான் பெண் பாகிஸ்தானில் கைது

இஸ்லாமாபாத் உலகப் புகழ்பெற்ற, 'நேஷனல் ஜியாகிரபிக்' இதழின் அந்த படத்தில் இடம்பெற்றிருந்த, ஷர்பாத் குலா என்ற அந்த சிறுமி குறித்து அதன் பின் எந்தத் தகவலும் இல்லை. படம் வெளியான, 18 ஆண்டுகளுக்குப் பின், 2002ல், ஆப்கானிஸ்தானின் ஒரு சிறிய கிராமத்தில், குலாவை தேடிக் கண்டுபிடித்தார் மெக்கரி. அப்போது குலாவுக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருந்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் போலி அடையாள அட்டைகளுடன் தங்கியுள்ளவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை தீவிரமடைந்தது. அதில், குலா, போலியான பெயரில், பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த விசாரணையின் முடிவில், குலா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு, 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், கடும் அபராதமும் விதிக்கப்படும்.

ஊழல் வழக்கை ஊத்தி மூடிவிட்டு விடுதலையானார் எடியூரப்பா .. மோடி கும்பலின் மற்றுமொரு சாதனை.. கர்நாடகாவில் பாஜக ஆட்சி?

:கர்நாடகாவில், சுரங்க ஊழல் வழக்கில் இருந்து, முன்னாள் முதல்வரும்,
அம்மாநில, பா.ஜ., தலைவருமான, எடியூரப்பா உள்ளிட்ட நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2008ல், பா.ஜ.,வைச் சேர்ந்த, எடியூரப்பா முதல்வராக இருந்த போது, பெல்லாரி பகுதியில் சுரங்க ஒதுக்கீடு செய்ததில், 40 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. எடியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோகன் குமார் ஆகியோர் மீது, குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது; 2015ல், எடியூரப்பா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சொல் புதிது .. இளைய சமுதாய பேரவை அமைப்பு விழா சிதம்பரத்தில் ... சுபவீ அறைகூவல்

தம்பரம் : 'சொல் புதிது' இளைய சமுதாய பேரவை என்ற புதிய சமூக அமைப்பு துவக்க விழா சிதம்பரத்தில் நடந்தது.
சிதம்பரம் ஈ பைவ் கல்வி அறக்கட்டளை சார்பில் இளைஞர்கள், மாணவர்கள் முன்னேற்றத்திற்காக 'சொல் புதிது இளைய சமுதாயப் பேரவை' என்ற புதிய அமைப்பு துவக்க விழா சிதம்பரத்தில் நடந்தது. விழாவிற்கு, அறக்கட்டளைத் தலைவர் அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஈ பைவ் அறக்கட்டளை அறங்காவலர் பேராசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். சுப வீரபாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கிணற்றில் மழைநீர் சேகரிக்கும் முறை

கிணற்றில் மழைநீர் சேகரிக்கும் முறை.

தமிழகத்தில் பருவமழை தாமதமாகி மலையடிவார மாவட்டங்களில் விவசாயக் கிணறுகள் வறண்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதனால், கிணறுகளில் மழைநீரைச் சேமிக்கும் புதிய முறையைப் பின்பற்ற வேளாண் துறை வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கிணற்றுப் பாசனமே விவசாயத்துக்கு அடிப் படையாகவும், குடிநீர் ஆதாரமாக வும் விளங்குகிறது. கடலோர மாவட்டங்களில் 25 அடி முதல் 40 அடி வரையிலான 75 ஆயிரம் கிணறுகளும், மற்ற மாவட்டங்களில் 40 அடி முதல் 90 அடி வரையிலான 2.7 லட்சம் கிணறுகளும் உள்ளன. பொதுவாக ஏரிகள், குளங்கள், ஊருணி, கால்வாய் மூலம் கிணறு களின் நீர் ஆதாரம் செறிவூட் டப்படுகிறது. தற்போது வறட்சி யால் நிலத்தடி நீர்மட்டம் சரிவு, ஆழ்துளைக் கிணறுகள் பெருக்கம் காரணமாக விவசாயக் கிணறுகளில் நீர் ஆதாரம் வறண்டு விட்டது.

கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டும்;தேவாங்கு!” : வங்கி பெண் ஊழியர் குறித்து ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் ஒரு வங்கி ஊழியர்
குறித்து இப்படிச் சொல்கிறார் ’தேவாங்கு’. செந்தில்ராஜ் என்பவர் வங்கி ஊழியர் ஒருவர் (அநேகமாக அவர் ஏதேனும் மருத்துவ பிரச்சினைக்கு ஆளானவராக இருக்கலாம்) மிக மெதுவாக வேலைப் பார்க்கும் வீடியோ ஒன்றை அனுப்பி அது குறித்து ஜெயமோகனிடம் கருத்து கேட்டிருக்கிறார். அதற்கு ஜெயமோகன் எழுதியவை:

மீண்டும் 3 கண்டெய்னரில் கோடிக்கணக்கான பணம் இருந்ததால் பரபரப்பு

உளுந்தூர்பேட்டைக்கு கோடிக்கணக்கான ரூபாய்களுடன் 3 கன்டெய்னர் லாரிகள் நின்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.;கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் விரைவு ரயில் மூலம் அனுப்பப்பட்டன. வரும் வழியில் அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.ங்கு ரயில் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சீலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரயில் பெட்டியின் மேற்கூரை வெல்டிங் கருவி மூலம் உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த 4 மரப்பெட்டிகளை உடைத்து உள்ளே இருந்த 500 ரூபாய் கட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.இந்த சம்பவத்தை அடுத்து வங்கிகளுக்கு எடுத்து செல்லும் பணம் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ்? - கவர்னர் அதிரடி!

minnambalam.com “சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. துறைகள் இல்லாத முதல்வராக மட்டுமே அவர் தற்போது இருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றி எப்போதும் பாதுகாப்பு பலமாகத்தான் இருக்கும். மத்திய கமெண்டோ படையின் இசட் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பும் முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார். அதனால் இசட் பிளஸ் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் எந்த வேலையும் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் கிழக்கும் மேற்குமாக நடந்தபடி இருக்கிறார்கள். தேசிய பாதுகாப்புப் படை கமெண்டோக்கள் மூலமாகத்தான் இசட் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த கமெண்டோ பிரிவில் பணிபுரிபவர்களுக்கு அதிநவீன எம்.பி.5 ரக துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.

மிராகிள்.. ஜெயலலிதா நலமாகிவிட்டார்.. விரைவில் வீடு திரும்புவார்: சு.சுவாமி தகவல்

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா சுய நினைவுக்கு திரும்பி நலமாக இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் எனவும், பாஜக ராஜ்யசபா எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி இன்று மதியம் வெளியிட்ட ஒரு டிவிட்டில், இத்தகவலை கூறியுள்ளார். "ஜெயலலிதாவின் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து கொள்ளலாம். ஜெயலலிதா சுய நினைவுக்கு திரும்பிவிட்டதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படியென்றால், அது ஒரு அதிசயம்" என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.  ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உடனேயே, அவரை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிப்பதுதான் நல்லது என கருத்து கூறியவர் சுப்பிரமணியன் சுவாமி. முதலில் அவரது கருத்தை யாரும் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் லண்டனிலிருந்து டாக்டர் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டபோது, சுப்பிரமணியன் சுவாமிக்கு, ஜெயலலிதாவின் உடல் நல பிரச்சினையின் தீவிரம் குறித்து தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. tamil.oneindia.com

புதன், 26 அக்டோபர், 2016

ரம்பா : தினமும் குடிபோதையில் அடித்து உதைத்தார்.. எனது சொத்துக்களை தனது பெயருக்கு... கேட்ட கணவர்

அடித்து உதைத்தார். அவர்கள் தினமும் என்னை கொடுமைப்படுத்தினர். என் கணவர் தினமும் குடிபோதையில் வந்து என்னை சித்ரவதை செய்ய தொடங்கினார். என் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் தன் பெயருக்கு எழுதி வைக்கவேண்டும் என்று கேட்டார். இதற்கு சம்மதிக்காததால் என்னை தினமும் அடித்து உதைத்தார
 சென்னை: தனது கணவர் இந்திரகுமாரை மிகவும் நேசிக்கிறேன். அவருடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் ரம்பா எனவே அவருடன் சேர்த்து வையுங்கள் என்று நடிகை ரம்பா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்துள்ளார். நடிகை திவ்யபாரதியின் மரணத்திற்குப் பின்னர் அவர் நடித்த படங்கள் பாதியில் நிற்க அவரைப் போல இருப்பதாக கூறி விஜயலட்சுமியை திரைஉலகிற்கு கொண்டு படத்தை முடித்து வெளியிட்டனர் இயக்குநர்கள். டூப் போட வந்த விஜயலட்சுமி ரம்பாவாக பெயரை மாற்றிக்கொண்டு, தமிழில் நடிகர் பிரபு நடித்த உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சுந்தர் .சி இயக்கத்தில் கார்த்திக் உடன் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா மாபெரும் வெற்றி பெற்றது. ரசிகர்களின் உள்ளத்தை அள்ளியதால் ரம்பாவிற்கு தமிழ் திரை உலகில் ஒரு முக்கிய இடம் கிடைத்தது.

மாமுலுக்காகவே பல சட்டங்கள் ... ரயிலில் பெட்டிக்கு 72 பேர்தான் அனுமதி ரயில்வேயிடம் மாமூல் வாங்கமுடியுமா?

ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க......?அதுக்கு இவ்ளோ
கோவமா? உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட் காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய வரும்புகிறேன். 1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல்
செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
விடவேண்டும்.
2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும் தான்
நிற்கும்.
3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?

கொதித்த அழகிரி..நான் கழகத்துக்காக எவ்வளவோ செய்திருக்கேன் ...

‘‘விகடனில் வந்த கருணாநிதியின் பேட்டியும் தி.மு.க-வுக்குள் அதிர்வலைகளை உண்டாக்கிவிட்டது’’ என செய்திகளை சொல்ல ஆரம்பித்தார். ‘‘தி.மு.க-வில் அழகிரி இல்லாததை பற்றிய கேள்விக்கு, ‘இருப்பதை எண்ணி மகிழ்ந்து மேலும் மேலும் முன்னேற்ற பாதையில் நடைபோட வேண்டுமே தவிர, கழகத்தில் இப்போது இல்லாத யாரையும் நினைத்து ஏங்கி நிற்பது பயணத்துக்குத் தடையாகிவிடும்’ என சொன்ன கருணாநிதி, ‘ஸ்டாலின்தான் என்னுடைய அரசியல் வாரிசு’ எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேட்டி கழகத்துக்குள் கலகத்தை ஏற்படுத்திவிட்டது. பேட்டியைப் படித்துவிட்டு அழகிரி கொதித்துப் போனார். 20-ம் தனது ஆதரவாளர்களுடன் வீட்டில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். ‘தலைவர் பேட்டியைப் படிச்சீங்களா’ என ஆதரவாளர்களிடம் கேட்க, யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ‘நான் எவ்வளவோ கட்சிக்கு செய்திருக்கிறேன். இவ்வளவு புறக்கணிப்புக்குப் பின்னாலும் அமைதியாக இருக்கிறேன். இருந்தாலும் என்னைக் கண்டுகொள்ள வேண்டாம் என சொல்லியிருக்கிறார் அதைத்தான் தாங்க முடியவில்லை’ என விரக்தியாக சொல்லியிருக்கிறார் அழகிரி.

முதல்வர் இன்னும் கிரிட்டிகல் பொசிஷனை தண்டவில்லையா?

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ‘அவர் பேசுகிறார்; அவருடைய உணவை அவரே சாப்பிடுகிறார்’ என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் சொல்வது போல முன்னேற்றம் அல்ல. ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட மயக்க மருந்துகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. செயற்கை சுவாசமும் தொண்டையில் டியூப் போடப்பட்ட டிரைக்கியோடாமி சிகிச்சையும் இன்னும் தொடர்கிறது. கடந்த 22-ம் தேதி சில நிமிடங்கள் மட்டும் ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்டுள்ள வென்டிலேட்டரை எடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரால் இயற்கையாக சுவாசிக்க முடியவில்லை. உடனே, மீண்டும் வென்டிலேட்டரை இணைத்துவிட்டார்கள். பொதுவாக நுரையீரல் நோய் வந்தால் அது குணமாக மாதக்கணக்கில் ஆகும். கடந்த மே மாதத்தில் இருந்து செப்டம்பர் இரண்டாவது வாரம் வரையில் குடும்ப டாக்டர்கள் சிலர் மூலம் உலக அளவில் பெஸ்ட்டான ஸ்டீராய்டு மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஜெயலலிதா பயன்படுத்தி வந்தாராம்.’’

மலையக தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் .. ஜேவிபி அனுரா நிகழ்த்திய உரை .. கண்டுகொள்ளாத யாழ்ப்பாண அரசியல்வாதிகள்

;ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..! பாராளுமன்றில் அனுர குமார அவர்கள் மலையக மக்கள் தொடர்பாக நிகழ்த்திய உரை என்னை நெகிழச் செய்தது. உணர்ச்சி பூர்வமான, நியாயமான உரைக்காக தனிப்பட்ட ரீதியில் எனது நன்றிகளை பகிர்கிறேன். நான் இங்கு யாரையும் குறை கூறவில்லை. கீழே வாசித்து பாருங்கள்.
* அவர்களுக்கு சாதாரண வாழ்க்கை வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.
பெருந்தோட்டங்களில் சுமார் 9.5 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
* கம்பனி உரிமையாளர்கள், தோட்ட உயர் அதிகாரிகள், தேயிலை ஏற்றுமதியாளர்கள் ஆகியோர்களின் வீடுகளையும் தொழிலாளர்களுடைய வீடுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
நாளாந்தம் 450 ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கின்றது. உங்களுடைய வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது 450 ரூபாவால் என்ன செய்ய முடியும்?

தீபாவளி பற்றி பெரியார் கேட்ட கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை!

தீபாவளி கொண்டாட்டம் என்றாலே நடுவில் எங்க "பெரியார் தாத்தா" மேட்டர்
இல்லாமல் இருக்குமா ?
தீபாவளி குறித்து பெரியார் கேட்ட கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை.
அது என்னென்ன கேள்விகள எந்த பார்ப்பானாவது பதில் சொல்ல முன்வருவானா? தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக்கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.
3. விரித்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
4. ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.  அதென்னடா புராண கதைகள் எல்லாமே  பக்கா போர்னோவாக இருக்கிறது? யார் யாரோட  எப்படி எப்படி எல்லாம் செஞ்சான்கிறதுதான் முக்காவாசி வர்ணனைகள்

ரம்பா குடும்ப நல நீதிமன்றத்தில் கணவரோடு சேர்த்து வைக்குமாறு கோரிக்கை

இந்திரன் பத்மநாபன் - ரம்பா தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ரம்பா கடந்த சில வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்வதாக இணையதளங்களில் செய்திகள் உலாவின. தற்போது தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ரம்பா மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், கடந்த சில வருடங்களாக தான் கணவரை பிரிந்து வாழ்வதாகவும், இந்த நிலையில் தான் குழந்தைகளை பார்த்துக் கொள்வது சிரமமாக இருப்பதாகவும், குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்து கொண்டுள்ளதால், கருணை அடிப்படையில் தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 3-ந் தேதி விசாரணைக்கு வரும் என்றும் கூறுப்படுகிறது.மாலைமலர்.காம்

பிரித்தானிய கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு ரூ.18 கோடி நன்கொடை அளித்த லைக்கா அல்லிராஜா

பிரித்தானிய நாட்டின் பிரதமராக டேவிட் கமெரூன் இருந்தபோது அவருடைய கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு இலங்கையை சேர்ந்த தமிழ் தொழிலதிபர் ரூ.18 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய பிரதமராக டேவிட் கமெரூன் பதவி வகித்தபோது இலங்கையை சேர்ந்த லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவரான சுபாஷ்கரன் அல்லிராஜா என்பவர் தான் இந்த நன்கொடையை அளித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டில் முடிவுக்கு வந்தபோது அந்நாட்டிற்கு அளித்துவந்த உதவிகளை பிரித்தானிய அரசு தற்காலிகமாக நிறுத்தியது.இந்நடவடிக்கைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு லைக்கா மொபைல் கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு நன்கொடை அளிக்க தொடங்கியுள்ளது.இந்த  பணத்தில்   தனது தாய்நாட்டுக்கு (இலங்கைக்கு) எவ்வளவோ  செய்திருக்கலாம் செய்யலையே?

கடைசி விவசாயி .. மணிகண்டன் இயக்கத்தில் உருவாகிறது .. காக்கா முட்டை இயக்குனர்

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற
வித்யாசமான படங்களை யதார்த்தத்திற்கு அருகில் நின்று படம் பிடித்துக் காட்டிய இயக்குனர் மணிகண்டன் தற்போது ‘கடைசி விவசாயி’ என்னும் படத்தை எடுத்து வருகிறார். தலைப்பை கேட்கும்போதே இது விவசாயிகளின் கதை என்பதை நம்மால் உணர முடிகிறது. இதில் 70 வயது நிரம்பிய விவசாயிதான் படத்தின் நாயகனாம். கதைக்கேற்ற நடிகரை மணிகண்டன் தற்போது தேடி வருவதாக கூறப்படுகிறது. ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது காவிரி விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், தண்ணீரால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகளின் நிலையை இந்த படம் பிரதிபலித்து காட்டுவதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகளை அள்ளி வழங்கும் மத்திய அரசு, நம் விவசாயிகளின் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருப்பதை இந்த படம் வெளிச்சம்போட்டு காட்டும் என ஒருதரப்பு கூறுகிறது.