சனி, 26 ஜனவரி, 2019

பிரேசில் அணை உடைந்து 9 பேர் உயிரிழப்பு 300 பேரை காணவில்லை

பிரேசில் அணை உடைந்து 9 பேர் பலி, 300 பேர் மாயம்
_105351312_b3e3c1ad-a52a-4554-bdf8-321bee9bc9a0  பிரேசில் அணை உடைந்து 9 பேர் பலி, 300 பேர் மாயம் 105351312 b3e3c1ad a52a 4554 bdf8 321bee9bc9a0_105351313_624f0b10-7ad4-48af-9b5f-11b5757fc0ef  பிரேசில் அணை உடைந்து 9 பேர் பலி, 300 பேர் மாயம் 105351313 624f0b10 7ad4 48af 9b5f 11b5757fc0ef_105351314_da5d0e22-b180-4154-8c5b-ae1a20f484a5  பிரேசில் அணை உடைந்து 9 பேர் பலி, 300 பேர் மாயம் 105351314 da5d0e22 b180 4154 8c5b ae1a20f484a5BBC : பிரேசிலின் தென் கிழக்கு பகுதியிலுள்ள இரும்பு சுரங்கத்தில் அணை உடைந்ததால், சுமார் 300 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அணை உடைந்து அடித்து செல்லப்பட்ட பெருமளவு சகதியால் இந்த அணையில் இருந்த உணவகம் புதைந்துள்ளது.
அங்கு சுமார் 800 பேர் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில் இது நிகழ்ந்து ள்ளது.
மினாஸ் கெராயிஸ் மாநிலத்தில் புருமாடின்கோ நகரத்திற்கு அருகில் நிலத்தை தோண்டும் இயந்திரங்களை பயன்படுத்தி மீட்பு பணியாளர்கள் மக்களை காப்பாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.  புதையுண்டோர் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆளுநர் ரோமியு ஜிமா தெரிவித்திருக்கிறார்,
வாலெ என்கிற பிரேசிலின் பெரியதொரு சுரங்க அகழ்வு நிறுவனத்திற்கு சொந்தமான இந்த அணை உடைந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இதே மாநிலத்திலுள்ள மரியானாவில் அணை உடைந்து 19 பேர் பலியான மூன்று ஆண்டுகளில் இந்த அணை உடைந்துள்ளது. மரியானாவில் அணை உடைந்தது பிரேசிலின் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவாக கருதப்பட்டது. ஃபெய்ஜியாவ் இரும்பு தாது சுரங்கத்திற்கு அருகிலுள்ள அணை உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு உடைந்தது. இதனால் இதற்கு கீழுள்ள இன்னொரு அணையில. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பெருமளவிலான சகதி அணை வளாகத்தின் ஊடாக சென்று அருகிலுள்ள நிறுவனங்கள், தொழிலாளர்கள் வாழுகிற பகுதிகளில் நிரம்பியதோடு, அவர்களின் வீடுகள், வாகனங்களையும் சேதமாக்கியுள்ளன. சாலைகள் அழிக்கப்பட்டுவிட்டதால், இந்த சகதியில் சிக்கிய டஜன் கணக்கானோரை, ஹெலிகாப்டர் மூலம் மீட்க வேண்டியதாயிற்று.

பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா ஏன்?.. வங்காளிகளின் வாக்குகளை அள்ளவா ? பத்ம விபூஷண் 4 , பத்ம பூசண் 14, பத்மஸ்ரீ 94 விருதுகள்..

See How Many Brahmins got Bharath Ratna & how many scs ST S OBCs
பத்ம விபூஷண் விருது 4 பேருக்கும், பத்ம பூசண் விருது 14 பேருக்கும், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
tamil.oneindia.com : டெல்லி: இன்று நமது நாட்டின் 70
வது குடியரசுத்தின விழா கொண்டாடப்பட்ட நிலையில், 3 பேருக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரனாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் சேவகராகவும், பா.ஜ.க எம்.பியா-கவும் இருந்த நானாஜி தேஷ்முக் மற்றும் பா.ஜ.க சார்பில் 2004 ஆம் ஆண்டு எம்.பி தேர்தலில் போட்டியிட்ட பாடலாசிரியர் பூபென் ஹசாரிக்காவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்ட மூவரில் பிரணாப்முகர்ஜி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருக்கு விருது அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நமது காலத்தின் சிறந்த அரசியல்வாதி என்றும், தேசத்துக்கு தன்னலமின்றி உழைத்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜாக்டோ ஜியோ ..: கைதான நிர்வாகிகளுக்கு நீதிமன்ற காவல்! தற்காலிக ஆசிரியர்களின் சம்பளம் ரூ.10 ஆயிரமாக உயர்வு

tamil.indianexpress.com : தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள், போராட்டத்தை கைவிட்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க வேண்டும் என்றும், பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே, தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் – ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கடந்த 22-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 13 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 8 லட்சம் பேர் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெற்ற மகளைக் கொன்று நாடகமாடிய தாய் கைது..

THE HINDU TAMIL : தவறான உறவை மகள் கணவனிடம் கூறிவிடுவார் என்கிற எண்ணத்தில் மகளைக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்து கொள்ளையர்கள் கொன்றதாக நாடகமாடிய தாய் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் உள்ள இலுப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (24). இவரது கணவர் கடலூர் மாவட்டம் மாங்குளத்தைச் சேர்ந்த சிவசங்கர் (28). இவர் சிங்கப்புரில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஷிவானி என்ற மகள் இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன் இவரது கிராமம் அமைந்துள்ள தலைவாசல் மும்முடி கிராமம் அருகே நெடுஞ்சாலை ஓரம் உள்ள கிணற்றில் நீரில் தத்தளித்தபடி பிரியங்கா கூச்சலிட்டத்தைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் போலீஸாரிடமும், பொதுமக்களிடமும் தனது மகள் கிணற்றில் மூழ்கிவிட்டாள் என்று கூறியதை அடுத்து அவரது மகள் ஷிவானியின் உடலும் மீட்கப்பட்டது. இதைப் பார்த்து பிரியங்கா கதறினார்.

ஆந்திராவில் காங்கிரஸ் 25 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனித்து போட்டி

vikatan.com - சக்திவேல் : “ஆந்திராவில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறோம்” என்று அறிவித்திருக்கிறது காங்கிரஸ்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், பி.ஜே.பி கூட்டணியிலிருந்து வெளியேறினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. “ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை” என்பதைக் காரணமாக சொன்னார். அடுத்த சில மாதங்களில் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கினார். தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸும் தெலுங்கு தேசமும் கூட்டணி அமைத்து களம் கண்டன. ஆனாலும், சந்திரசேகர் ராவை அரியணையிலிருந்து இறக்க முடியவில்லை, இரண்டு கட்சிகளாலும். கடந்த முறை, தனித்துக் களமிறங்கியபோதே இரண்டு கட்சிகளும் 36 (காங்கிரஸ் 21, தெலுங்குதேசம் 15) இடங்களைப் பெற்றன. ஆனால், இப்போது கூட்டணி அமைத்துக் களமிறங்கியும் 21 (காங்கிரஸ் 19, தெலுங்குதேசம் 2) தொகுதிகளையே கைப்பற்ற முடிந்தது. அப்போதே சந்திரபாபு நாயுடு யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

ஸ்டாலின் ரத்தன் டாட்டா சந்திப்பு

ரத்தன் டாடா- ஸ்டாலின் சந்திப்பு!மின்னம்பலம் : திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று ஜனவரி 25 ஆம் தேதி, அவரது சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் தொழிலதிபர் ரத்தன் டாடா சந்தித்துப் பேசினார். டாடா குழும முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவுடன் அக்குழுமத்தின் தற்போதைய தலைவருமான சந்திரசேகரும் இருந்தார்.
அரைமணி நேரம் நீண்ட இந்த சந்திப்பில் இன்றைய இந்தியாவின் தொழில் நிலவரம் பற்றி ஸ்டாலினிடம் டாடா பேசியதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தால் நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்றும், அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் நோக்கம் எட்டப்பட்டிருக்கிறதா என்றும் இந்த சந்திப்பில் பேசப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் திமுக சீனியர்கள்.

ஆந்திர மக்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். ..சந்திரபாபு நாயுடு

நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்!
மின்னம்பலம் :
மக்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் மக்கள் தொகை 133 கோடியை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. குழந்தைகள் பெற்றுக்கொள்வதை குறைக்கவும், குடும்பக் கட்டுப்பாட்டையும் தலைவர்கள் வலியுறுத்த வேண்டிய நிலையில், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார். நேற்று (ஜனவரி 25) அமராவதியில் அவர் பேசுகையில், “ஆந்திர மக்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குடும்ப அமைப்பு பாதுகாக்கப்படும். எதிர்காலத்துக்கு மனிதவளம் மிகவும் அவசியமானதாகும்.

ஜாக்டோ ஜியோ: வீடு தேடிச் சென்று கைது!

ஜாக்டோ ஜியோ: வீடு தேடிச் சென்று கைது!மின்னம்பலம் : கடந்த 4 நாட்களாக ஜாக்டோ ஜியோவினரின் போராட்டம் தொடர்ந்த நிலையில், நேற்று இரவு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அதன் முக்கிய நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஜனவரி 22ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து, அதன்படி மிகத் தீவிரமாக ஜாக்டோ ஜியோ போராட்டம் தமிழகமெங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்று (ஜனவரி 26) ஐந்தாவது நாளாகப் போராட்டம் தொடரவுள்ளது. இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்யும் முயற்சியில் காவல் துறை இறங்கியது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 10 பேர் வரை பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களது பெயர், வயது, குடும்ப விவரங்களில் இருந்து

ஜாக்டோ ஜியோ போராட்டம்....5000 கல்விக்கூடங்கள் மூடக்கூடாது என்ற கோரிக்கை


தமிழ் மறவன் : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின்
நியாயமான போராட்டத்தைப் பற்றி பலர் தவறான செய்திகளைச் சொல்லி மடைமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தன்னை பெரியாரிஸ்டுகளாக சொல்லிக் கொள்ளுகிற சில அரைகுறை அதிபுத்திசாலிகளோ ஆசிரியர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அட.., அறிவற்ற மூடர்களே! தந்தை பெரியார் காமராசரை வைத்து திறந்த ஐயாயிரம் கல்விக்கூடங்களை மூடக்கூடாதென கோரிக்கை வைத்து ஆசிரியர்கள் போராடுவதை அறியவில்லையா?
நியாயமாக.. கருஞ்சட்டைகள் செய்ய வேண்டிய போராட்டத்தை ஆசிரியர்கள் செய்வதற்கு வெட்கப்படுங்கள்!
இதோ, அதிபுத்திசாலிகளாய் தங்களை எண்ணிக் கொள்ளுகிற முட்டாள்களின் குரல்..
"ஏற்கனவே பல ஆயிரங்கள் ஊதியம் பெறும் இவர்கள் ஊதிய உயர்வு கேட்கலாமா?"
இப்படிக் கேட்போர் வடிகட்டிய முட்டாள்களன்றோ?
அட..,
முற்போக்கு மூடர்களே!
ஆசிரியர்களின் இப்போராட்ட கோரிக்கைகளில் ஊதிய உயர்வே கேட்கவில்லையே!

வெள்ளி, 25 ஜனவரி, 2019

உத்தர பிரதேச ஆதித்யநாத் ஆட்சியில் 3,000 என்கவுன்டர்கள்!

ஆதித்யநாத் ஆட்சியில் 3,000 என்கவுன்டர்கள்!மின்னம்பலம் : யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 3,000
என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதாக உ.பி மாநில தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல் உ.பி காவல்துறையினர் 3,000க்கும் மேற்பட்ட என்கவுன்டர்களை பதிவு செய்துள்ளனர். என்கவுன்டர்களில் குறைந்தபட்சமாக 78 பேராவது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த தகவல்கள் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும், 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்டதாக உ.பி டிஜிபி அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். என்கவுன்டர்கள், கொல்லப்பட்ட குற்றவாளிகள், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆகியோரின் எண்ணிக்கை அரசின் சாதனைப் பட்டியலாக குடியரசு தினத்தன்று வெளியிடப்படவுள்ளது.

கிணற்றில் தள்ளப்பட்ட குழந்தை உயிரிழப்பு

கிணற்றில் தள்ளப்பட்ட குழந்தை பலி!
மின்னம்பலம் : இரண்டு பவுன் நகைக்காக கையில் குழந்தையுடன் இருந்த பெண்ணைக் கிணற்றில் தள்ளினர் கொள்ளையர்கள். இந்த சம்பவத்தில் அந்த குழந்தை பலியானது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலுள்ள இலுப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்
பிரியங்கா காந்தி. இவரது வயது 24. இவரது கணவர் பெயர் சிவசங்கர். ஏற்கனவே, இந்த தம்பதியரின் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து, இறந்து விட்டன. இவர்களது மூன்றாவது பெண் குழந்தையின் பெயர் ஷிவானி.
தற்போது கடலூர் மாவட்டம் வேப்பூரில் வசித்து வருகிறார் சிவசங்கர். இலுப்பநத்தம் கிராமத்தில் தனது 5 வயது குழந்தை ஷிவானியுடன் இருந்து வந்தார் பிரியங்கா காந்தி. நேற்று (ஜனவரி 24) மாலை 6.00 மணியளவில் பிரியங்கா காந்தி தனது தோட்டத்து வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு கொள்ளையர்கள், பிரியங்கா கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியைப் பிடுங்க முயற்சித்தனர்.

மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்பு.. தமிழகத்தில் 39 தொகுதிகளையும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளே கைப்பற்றும்..

மின்னம்பலம் : வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் தொடர்பான பணிகள் சூடுபிடிக்கத் துவங்கிவிட்டன. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகால பாஜக. ஆட்சியில் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
ஏபிபி மற்றும் சி-வோட்டர்ஸ் இணைந்து தேசத்தின் மனநிலை என்னும் தலைப்பில் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில், மக்களவைத் தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறியுள்ளது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 233 இடங்களே கிடைக்கும் என்று சர்வே முடிகள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 167 இடங்கள் கிடைக்கும் என்றும் மற்ற கட்சிகள் 143 இடங்களில் வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் வாரியாகக் கருத்துக் கணிப்பு முடிவுகள் பின்வருமாறு
நாட்டிலேயே அதிகத் தொகுதிகள் உள்ள உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி 51இடங்களிலும் பாஜக 25 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 80 தொகுதிகள் உள்ள இம்மாநிலத்தில் கடந்த முறை பாஜக 71 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 34 இடங்களும், காங்கிரஸுக்கு 1 இடமும் பாஜகவுக்கு 7 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கனடா பெண் பஞ்சாபில் ஆணவக் கொலை .. கனடாவில் இருந்த தாய் இந்தியாவுக்கு நாடு கடத்தல் விடியோ


BBC : ஜஸ்விந்தர் சித்து இந்தியாவில் கொலை செய்யப்பட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு, அவரது தாயும், மாமாவும் விசாரணைக்காக கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கனட நாட்டை சேர்ந்த மல்கிட் கவுர் சித்துவும், சுர்ஜித்சிங் பதேஷாவும் இந்தியா வந்து சேர்ந்த மறுநாள், வெள்ளிக்கிழமை காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலுள்ள ஒரு ரிக்ஷா ஓட்டுநரை ஜஸ்விந்தர் திருமணம் செய்ததால், அவரைக் கொலை செய்ய ஆணையிட்டதாக இவர்கள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த இந்த கொலைக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தங்கள் மீதான குற்றச்சாட்டை இருவரும் மறுத்துள்ளனர்.
ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் மற்றும் இந்திய அதிகாரிகளால் நடத்தப்பட்ட சர்வதேச புலனாய்வை தொடர்ந்து, நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் 2012ம் ஆண்டு மல்கிட் கவுர் சித்துவும், சுர்ஜித்சிங் பதேஷாவும் கைது செய்யப்பட்டனர்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதிகள் முடிவை மாற்றிய வைகோ:வாதம்; வழக்கறிஞர்கள் வாழ்த்து

THE HINDU TAMIL :ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட இருந்த
நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவை மாற்றி செவ்வாய்க்கிழமைக்கு வாதத்தைத் தொடரவைக்கும் முடிவை எடுக்க வைத்தார் வைகோ. இதை அங்கிருந்த வழக்கறிஞர்கள் பாராட்டினர்.
இது தொடர்பாக மதிமுக இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோரிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் விசாரணைக்கு வந்தது. முற்பகல் 12 மணி அளவில் வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழக்கை ஏற்க முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க இன்றே ஆணை பிறப்பிக்கப் போகிறோம் என்றும், ஒருமுறைக்கு நான்கு முறை நீதிபதி நாரிமன் அழுத்தமாகச் சொன்னார்.
வைகோ, தன் தரப்பு வாதத்தை முன்வைக்க எழுந்தபோது, ‘உணவு இடைவேளைக்குப் பிறகு உங்களுக்கு வாய்ப்புத் தருகிறேன்’ என்று நீதிபதி நாரிமன் கூறினார்.

செந்தில் பாலாஜி – கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக அறிவிப்பு

ஸ்டாலினோடு செந்தில்பாலாஜிvikatan.com/ துரை.வேம்பையன் : அ.ம.மு.கவில் இருந்து தி.மு.க வுக்கு தாவிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக அறிவித்திருக்கிறார் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன். கட்சி மாறிய 40 நாள்களுக்குள் தான் நினைத்த பதவியை பெற்று, செந்தில்பாலாஜி கரூர் மாவட்ட தி.மு.கவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

அ.ம.மு.கவின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. டி.டி.வி.தினகரனோடு 18 எம்.எல்.ஏ-க்கள் பதவிநீக்கம் சம்பந்தமான வழக்கின் மேல்முறையீடு, அ.தி.மு.கவையும், அ.ம.மு.கவையும் இணைக்க நடந்த பேச்சுவார்த்தை உள்ளிட்ட விவகாரங்களால் ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக கடந்த மாதம் 14-ம் தேதி தி.மு.கவில் ஐக்கியமானார். அதோடு, கடந்த மாதம் 27-ம் தேதி ஸ்டாலினை அழைத்து வந்து கரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி, தன்னோடு 30,425 பேர்களை தி.மு.கவில் இணைத்து, ஸ்டாலினையே திக்குமுக்காட வைத்தார்.

மொழிப்போராட்டம் வரலாறு .. அனைத்து மாநில மொழிகளையும் இரத்தம் சிந்தி காத்த தமிழகம்

Muralidharan Pb : இத்தனை களோபரங்களிக்கிடையே நாம் மொழிப்போர் பற்றிய

செய்தியை மறக்கக்கூடாது.
மொழிப்போராட்டம் வரலாறு சுருக்கமாக:
உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்த்ரி ஒரு மசோதாவை வெளியிட்டார். இந்தியா முழுவதும் இனிமேல் ஹிந்தி தான் கட்டாயமாக்கப்படும். ஆங்கிலத்தை பயன்டுத்தலாம்(May be), ஹிந்தியை கட்டாயம் பயன்படுத்தவேண்டும் (Shall be). திமுக இதை தமிழுக்கு நேர்ந்த அநீதி என்றது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து போராட்டம் நடத்த திமுக தன்னை தயார் படுத்திக்கொண்டது. போராட்ட குழு தலைவராக கலைஞர் கருணாநிதி நியமிக்கப்பட்டார்.
கிளைக்கழக பிரதிநிதிகளுக்கு அவர் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதன் படி போராட விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயரை பட்டியலாக தயார் செய்து அனுப்ப கோரினார். அண்ணா பிறந்தநாளான செப்டெம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடக்குமென அறிவித்தார்.

ஜெயலலிதாவின் போயஸ் பங்களா முடக்கம் ! -நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்!

poes gardennakkheeran.in - சி.என்.ராமகிருஷ்ணன் : ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றிட,  தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்குத் தடை கோரி டிராபிக் ராமசாமி மற்றும் சென்னையைச் சேர்ந்த எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஜனவரி 3-ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி ரூபாய் அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3.42 லட்சம் கோடி முதலீடு கையெழுத்து

தினத்தந்தி : 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3.42 லட்சம் கோடி
முதலீடு கையெழுத்தானதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். சென்னை, இரண்டாவது நாளாக  இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய மாநாட்டில் முதல் நாளில் பங்கேற்ற பல்வேறு நாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் தாங்கள் முதலீடு செய்ய விரும்பும்
துறைகளுக்கான கருத்தரங்குகளில் பங்கேற்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை முதலீட்டு வாய்ப்புகள் குறித்து நடந்த கருத்தரங்கில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்றார். சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாய்ப்புகள், உணவுத்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

ஜெயலலிதா மரணத்துக்கும், கொடநாடு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறது: கனிமொழி

தினத்தந்தி : ஜெயலலிதாவின் மரணத்துக்கும் கொடநாடு சம்பவங்களுக்கும்
தொடர்பு இருக்கிறது என்று மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
ஏழை-எளிய ஒடுக்கப்பட்ட மக்களும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்காகத்தான் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் போராடி வெற்றி கண்டனர். ஆனால் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதால், இடஒதுக்கீடே வீணாகக்கூடிய நிலை உள்ளது.
தமிழக மாணவர்கள் மருத்துவ கல்வி பயில வேண்டும் என்பதற்காக கலைஞர் கருணாநிதி மாவட்டந்தோறும் அரசு மருத்துவ கல்லூரியை தொடங்கினார்.

வியாழன், 24 ஜனவரி, 2019

தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது - தேர்தல் ஆணையம் பதட்டத்தில் தினகரன்

மின்னம்பலம் : குக்கர் சின்ன வழக்கால் மீண்டும் டென்ஷனில் இருக்கிறார் தினகரன். குக்கர் சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக்கோரி, டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், அஜய் ரஸ்தோகி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணைய வழக்கறிஞர் அமித் சர்மா, பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்படாத எந்தக் கட்சிக்கும் குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்க முடியாது. அந்த வகையில் டிடிவி தரப்புக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என தெரிவித்தார்.
அதற்கு "தேர்தல் ஆணையத்தால் வழங்க முடியவில்லையெனில், ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்க உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது" என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கில் டிடிவி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடியபோது, “இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. எங்களிடம் 20 எம்.எல்.ஏக்களும், 6 எம்.பி.க்களும் உள்ளனர். (வழக்கு தாக்கல் ஆனபோது) ஒரு பொதுவான பெயரும், சின்னமும் இல்லை என்றால் எப்படி நாங்கள் அரசியலில் ஈடுபட முடியும். தேர்தல் நெருங்கும் வேளையில் எப்படி சின்னம் இல்லாமல் அரசியல் செய்ய இயலும்” என்று தெரிவித்தார்.

நடிகை பானுப்ரியா மீது வழக்கு!!! வீட்டு பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் .. நடிகையின் அண்ணன் ...

bhanupriya கமல்குமார் - நக்கீரன் :
கதாநாயகி, குணச்சித்திர வேடம் என தென்னிந்திய சினிமாவில் தனக்கென இடம் பிடித்தவர் பானுப்ரியா. தற்போது சில படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்திருந்தார். இந்தநிலையில் நடிகை பானுப்ரியாவின் வீட்டில் வேலை பார்க்கும் 14 வயது சிறுமியின் தாய் ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் “பொருளாதார ரீதியாக மிகவும் கீழ்நிலையில் இருக்கும் நான் என்னுடைய மகள் 14 வயது சந்தியாவை திரைப்பட நடிகை பானுப்ரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தேன். மாதம் ரூ.10,000 கொடுப்பதாக உறுதியளித்து என் மகளை அழைத்து சென்றனர்.
ஆனால் கடந்த 18 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை. சமீபத்தில் வேறு ஒருவரின் மொபைல் போன் மூலம் பேசிய என் மகள் சந்தியா, பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பவர் தன்னை மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார், அடிக்கிறார் என்று கூறினார்.

உலக முதலீட்டாளர் மாநாடு முதலீடு: எடப்பாடி பழனிசாமி தலைமையில் எவ்வளவு? ஜெயலலிதா தலைமையில் எவ்வளவு

eps jayalalithaaநக்கீரன் : கமல்குமார் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
இதில் 3.43 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
குறிப்பாக பெரு நிறுவனங்களில் மட்டும் ரூ.1,54,648 கோடி முதலீடு கிடைத்துள்ளது.
மேலும் பெருநிறுவனங்கள் மூலம் மட்டும் 4,73,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பல்வேறு சிறு, குறு நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015ம் ஆண்டு நடந்தது. இதற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமை வகித்தார். அப்போது நடந்த அந்த மாநாட்டில் 2.4 இலட்சம் கோடி அளவிற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

விஷால் 8 கோடி ரூபா சட்டவிரோதமாக? ... இளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு -கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்


இளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு - விஷால் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்மாலைமலர் :இளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு நடந்ததாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் ஆகியோர் விஷால் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு - விஷால் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் இருவரும் விஷால் மீது இன்று மதியம் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுபற்றி கே.ராஜனிடம் கேட்டபோது ‘தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அறக்கட்டளை நிதியில் தலைவர் விஷால் 7 கோடி வரை மோசடி செய்துள்ளார் என்று கூறி போராட்டம் நடத்தினோம். அவர் எங்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீசில் தான் சங்க நிதி எட்டே முக்கால் கோடியை செலவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் .. நவாஸ் ஷெரிப் உடல் நிலை கவலைக்கு இடம் . ..


தினமலர் :லாகூர்,:அண்டை நாடான, பாகிஸ்தானில், மூன்று முறை பிரதமராக இருந்து, ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.பாகிஸ்தான் பிரதமராக இருந்த, நவாஸ் ஷெரீப், 69, ஊழல் புகார் காரணமாக, பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள, கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஷெரீப்புக்கு, இதய நோயும் உள்ளது. சமீபத்தில், உடல்நிலை மோசமடைந்ததால், சிறையில் இருந்து, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பின், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டதையடுத்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட ஷெரீப்பின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், சிறையில், சிகிச்சை அளிப்பதற்கு போதுமான வசதி இல்லாததால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும், அவரது குடும்ப டாக்டர், அத்னான் கான் கூறியுள்ளார்.

அமைச்சர் நிலோபர் ,எம்பி அன்வர் ராஜா ஆகியோர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!..

அமைச்சருக்கு எதிராக புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!மின்னம்பலம் : மதுரை வக்பு வாரிய கல்லூரியில் உதவி பேராசிரியர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மதுரை கே.கே.நகரில் உள்ள வக்பு வாரிய கல்லூரியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், இதில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டிய மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த சர்தார் பாஷா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வெயிட்டர் பணிக்கு 7,000 பேர் விண்ணப்பம்.. மகாராஷ்ட்ரா தலைமை செயலகம்

வெயிட்டர் பணிக்கு 7,000 பேர் விண்ணப்பம்!மின்னம்பலம் : மகாராஷ்டிர மாநிலத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த சுமார் 7,000 பேர் உணவகப் பணியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமைச் செயலக உணவகத்தில் காலியாக உள்ள 13 வெயிட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் பணிக்குச் சுமார் 7,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவரும் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள். ஆனால், இந்தப் பணிக்கு நான்காம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது.

தினத்தந்தி’ இலங்கை பதிப்பு இன்று தொடக்கம் ... 18 வது பதிப்பாக .. துபாய்க்கு அடுத்து

துபாயை தொடர்ந்து மற்றொரு சர்வதேச பதிப்பு கொழும்பு நகரில் அச்சாகிறது ‘தினத்தந்தி’ இலங்கை பதிப்பு இன்று தொடக்கம்
தினத்தந்தி :இலங்கையில் தமிழ் வாசகர்களை சென்றடையும் வகையில் கொழும்பு நகரில் ‘தினத்தந்தி’ இன்று (வியாழக் கிழமை) முதல் வெளியாகிறது.
இது ‘தினத்தந்தி’யின் 18-வது பதிப்பு ஆகும். கொழும்பு, தமிழ் பத்திரிகைகளில் அதிக வாசகர்களை கொண்டு சிறப்பான இடத்தை ‘தினத்தந்தி’ பிடித்து இருக்கிறது.
; ‘தினத்தந்தி’ ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி, பெங்களூரு, மும்பை மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து வெளியாகிறது. ‘தினத்தந்தி’யின் முதலாவது சர்வதேச பதிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் தொடங்கப்பட்டது. அங்குள்ள தமிழர்களின் பேராதரவை பெற்ற ‘தினத்தந்தி’, தனது 2-வது சர்வதேச பதிப்பை இலங்கையில் வெளியிடுகிறது.

பிரியங்கா காந்தி .. இந்தியாவையும் தாண்டி உலக ட்ரெண்டிங்கில் .. பாஜகவின் அலறலுக்கு காரணம் ...

Swathi K : இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாட்டு ஊடகங்கள், சோசியல் மீடியா
முழுவதும் இன்று ஆக்கிரமித்த ஒரு செய்தி "பிரியங்காவின் அரசியல் நுழைவு". உத்திர பிரதேச மாநில (கிழக்கு) காங்கிரஸ் General Secretary யாக நியமிக்கப்பட்ட செய்தி..
** உலக அரங்கில் இன்று 2:30 PM ட்விட்டர் ட்ரெண்ட்'டில் அவரது செய்தி தான் முதலிடம்..
** இன்று இந்திய அளவில் முதல் 20 ட்விட்டர் ட்ரெண்ட்'டில் 13 ட்ரெண்டில் அவர் செய்தி தான்.
** இந்தியா மட்டுமில்லாமல் சிங்கப்பூர் உட்பட நிறைய நாடுகளில் அவரின் செய்தி தான் ட்விட்டர் ட்ரெண்டில் முதல்..
** இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பிரியங்காவிற்கு முகநூல், ட்விட்டர் அக்கௌன்ட் இல்லை இதுவரை.. ஆனால் அவருக்கு எண்ணற்ற fans pages உண்டு சோசியல் மீடியாவில்..

திருச்சியை திக்குமுக்காட வைத்த தேசம் காப்போம் ஆன்டி இந்தியன்கள்... வீடியோ


nakkheeran.in - ஜெ.டி.ஆர். : திருச்சியில் ஜி.கார்னர் பொன்மலை இரயில்வே மைதானத்தில் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் மாநாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நீண்ட காலம் திட்டம் என்றாலும், அனுமதி கிடைப்பதில் சிக்கல் தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில் திடீர் அனுமதிக்கு பிறகு குறைந்த நாளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சி.பி.ஐ.(எம்) பொதுசெயலாளர் சீத்தாராம்யெச்சூரி, சி.பி.ஐ. பொதுசெயலாளர் ராஜா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி, சி.பி.ஐ(எம்) மாநில பொதுசெயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் முன்னால் மத்திய அமைச்சர் கொடிக்குனில் சுரேஷ், சி.பி.ஐ. பொதுசெயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர், இந்தியன் மூஸ்லீம்லீக் தேசிய தலைவர் காதர்மொஹிதீன், மனிதநேயமக்கள்கட்சி தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றினார்கள்.

புதன், 23 ஜனவரி, 2019

ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார்? .உபி கிழக்கு பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள

ndtv.com : அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரியங்கா காந்தி
வதேரா.New Delhi:காங்கிரஸ் கட்சியில் புதிய பொறுப்புக்கு வந்திருக்கும் பிரியங்கா காந்தி தாயார் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சிகளுடன் கூட்டணி கிடைக்கும் என்ற பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அங்கு செல்வாக்கு மிக்க கட்சிகளாக இருக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய 2 கட்சிகளும் காங்கிரசை சேர்க்க மறுத்து விட்டன.
காங்கிரசுக்கு தொகுதிகளை வழங்கினால் தங்களுக்கு சீட்டுகள் குறையும் என்று இரு கட்சிகளும் எண்ணுகின்றன. இந்த நிலையில் இன்று அதிரடி திருப்பமாக பிரியங்கா காந்திக்கு கட்சியில் புதிய பொறுப்பை கட்சி தலைவர் ராகுல் காந்தி அளித்தார்.
உத்தரப்பிரதேசதின் கிழக்குப் பகுதிக்கு பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தாயார் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலை சிறுத்தைகள் மாநாடு: 14 தீர்மானங்களை வாசித்தார் திருமாவளவன்

VCK Conference at Tiruchi, விடுதலை சிறுத்தைகள் மாநாடு, திருச்சிராப்பள்ளி, திருமாவளவன்tamil.indianexpress.com திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருமாவளவன் அதற்கான தீர்மானத்தை வாசித்தார். MK Stalin, Thol Thirumavalavan at Tiruchi VCK Conference:: விடுதலை சிறுத்தைகள் மாநாடு திருச்சியில் தொடங்கியது. இதில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்தியாவில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வர வேண்டும் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ‘தேசத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் மாநாடு திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாடு இன்று (ஜனவரி 23) மாலையில் தொடங்கியது.
இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
VCK Conference in Tiruchi Live: விடுதலை சிறுத்தைகளின் மாநாடு தொடர்பான நிகழ்வுகள் இங்கே:
8:10 PM: புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி நிகழ்ச்சிக்கு வந்தார். அவரை திருமாவளவன் வரவேற்றார்.

சபரிமலை - கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டிய குடும்பத்தினர்

சபரிமலையில் சாமி தரிசனம்- கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டியடித்த குடும்பத்தினர்
மாலைமலர் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த கனதுர்காவை அவரது மாமியார் வீட்டை விட்டு விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனகதுர்கா வீட்டின் முன்பு சோகத்துடன் நின்ற காட்சி. திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய இருந்த தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் தற்போது நீங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

சிம்பு மீது பால் முகவர்கள் சங்கம் புகார்!

சிம்பு மீது பால் முகவர்கள் சங்கம் புகார்!மின்னம்பலம் :
பாலபிஷேகம் செய்யும்படி ரசிகர்களை உசுப்பேற்றிய சிம்பு மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையர் அலுவலகத்தில் பால் முகவர்கள் சங்கம் புகாரளித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், என்னுடைய ரசிகர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கத் தேவையில்லை. என்னுடைய கட் அவுட், பேனர்களுக்கு பால் ஊற்றத் தேவையில்லை. அதற்கு செலவழிக்கும் பணத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தால் நான் மகிழ்ச்சியடைவேன் என்று சிம்பு தெரிவித்திருந்தார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படம் வெளியாகவுள்ள சூழலில் அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஜாக்டோ ஜியோ போராட்டம்: 1 லட்சம் பேர் கைது!

ஜாக்டோ ஜியோ போராட்டம்: 1 லட்சம் பேர் கைது!மின்னம்பலம் : பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் செய்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களைக் கைது செய்து சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு கொண்டுவரும் கல்வித் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று முன் அறிவிப்பு செய்துவிட்டு, நேற்று (ஜனவரி 22) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். இதனால் தமிழகத்தில் பல பள்ளிகள் மூடப்பட்டன.
இரண்டாவது நாளான இன்று (ஜனவரி 23), தமிழகம் முழுவதும் 292 தாலுகாக்களில் போராட்டம் செய்தவர்களைக் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்தனர் போலீசார். மாவட்டம்தோறும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கைது எண்ணிக்கையைக் கணக்கெடுத்து, மேலிடத்துக்கு அனுப்பி வைத்தனர் உளவுத் துறையினர்.

தெஹல்கா' மேத்யூஸ் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழக்கு...முதல்வருக்கு எதிராக பேட்டி அளிக்க 7 பேருக்கு உயர் நீதிமன்றம் தடை

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேர் முதல்வருக்கு எதிராக பேசவோ, பேட்டி அளிக்கவோ, ஊடகங்கள் அதை ஒளிபரப்பவோ தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
tamilthehindu :தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடியே 10 லட்சம் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் இதில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் பலியானார், சயானின் மனைவி குழந்தைகளும் விபத்தில் பலியானார்கள்.

அரசு ஊழியர்கள் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மாலைமலர் : போராடும் அரசு ஊழியர்கள் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு சென்னை: தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மறியலிலும் ஈடுபட்டனர். சென்னை மாவட்டம் சார்பில் மாநகராட்சி வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர். மாநகராட்சியின் பின்பகுதி வழியாக ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு குவிந்த அரசு ஊழியர்கள், அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.

நீட் கொடுரம் ஒழிகிறது , கல்வித்துறை மாநிலத்திற்கு (அனிதாக்களிற்கு சமர்ப்பணம் )

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதி இது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு. NEET என்கிற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளை கொள்ளையடிக்கும் டில்லி ஏகாதிபத்திய விரிவாக்கத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கும் அறிவிப்பு இது. தமிழர்கள் ஒவ்வொருவரும் தம் நெஞ்சில் நிறுத்தவேண்டிய வாக்குறுதி இது. மத்திய அரசில் இதை ஏற்க வைப்பதற்குத்தானே தமிழ்நாட்டில் திமுக தேவை. அதுவும் மத்திய கூட்டணி ஆட்சியை  வலியுறுத்தத்தேவையான அளவுக்கு வலிமையோடு.
subaguna.rajan : நீட் கொடுரம் ஒழிகிறது , கல்விதுறை மாநிலத்திற்கு
(அனிதாக்களிற்கு சமர்ப்பணம் )

ராகுல் எனும் இளைஞர் ஏன் நமது பிரதமர் தேர்வு என்பதற்கான நியாயங்களை தொடர்ந்து விரிவாக்கிக் கொண்டே செல்கிறார் .
இதோ ஒரு அறிவிப்பு :
மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருந்து ஒன்றியத்தின் ஆதிக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ‘கல்வியை’ ஆட்சி வாய்ப்பு கிடைத்ததும் ,மீண்டும் மாநிலங்களுக்கு திரும்ப வழங்குவோம் .
இந்த இனிப்புச் செய்தி ஒன்று போதும் . என் வாழ்நாளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென இவ்வளவு விரும்புவேனென கனவிலும் நினைத்தவனில்லை. ஆனால் அந்த எண்ணம் வலுவடையும்படியான நிலைப்பாடுகளை தொடர்ந்து எடுத்து வருகிறீர்கள். கூடுதலாக கல்விக்கான ஒதுக்கீடு 6% ஆக்கப்படும் என்பது இன்னும் நற்செய்தி .நன்றி ராகுல் . உங்களை பிரதமர் என முதல் குரல் கொடுத்த தலைவர் தளபதி அவர்களுக்கும் நன்றி.
தொடர்ந்து இதே திசையில் பயணியுங்கள் , இந்தியாவை வலிமையான கூட்டாட்சி ஒன்றியமாக்குவோம் உங்கள் தலைமையில்.

பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டம்... விளம்பரத்திற்கே 50% மேல் செலவாய்ருச்சாம்

Protection of Girl Child Scheme 50 Percent of the Money Spent on Advertisements tamil.oneindia.com - alagesan.: டெல்லி: பெண்
குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், விளம்பரத்திற்கு மட்டும் 56 சதவீதம் செலவழிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் இத்திட்டத்தை ஹரியானாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்' திட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 648 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும். இதில் ரூ.364.66 கோடி விளம்பரத்திற்காக மட்டும் செலவு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை இணை அமைச்சர் வீரேந்திர குமார் மக்களவையில் தாக்கல் செய்த தகவலில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், 2017-18-ம் ஆண்டில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.200 கோடி நிதியில் ரூ. 135.71 கோடி (68% நிதி ) விளம்பரங்களுக்காகவே செலவிடப்பட்டது.
மேலும், 2018-19-ம் ஆண்டுக்கு இத்திட்டத்திற்காக ரூ.280 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.155.71 கோடி ஒதுக்கப்பட்டது என்றும் 70.63 கோடி ரூபாய் மட்டும் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

திருச்சியில் இன்று தேசம் காப்போம் மாநாடு .. சனாதனம் ஒழிப்போம் . சனநாயகம் காப்போம்! விடுதலை சிறுத்தைகள் எழுச்சி முழக்கம்!

திருச்சி - திரிச்சரணப் பள்ளி' என்ற சமணப் பெயர் கொண்ட திருச்சிராப்பள்ளி 
தினகரன்: திருச்சி, ஜன.23:  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
தொல்.திருமாவளவன் தலைமையில் திருச்சியில் இன்று நடக்கும் தேசம் காப்போம் மாநாட்டிற்கு அனைவரும் திரண்டு வரவேண்டும் என்று மாநில நிர்வாகிகள் ரமேஷ்குமார், பிரபாகரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில துணை செயலாளர் ராஜா, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரபாகர், அரசு ஊடக மையத்தின் மாநில துணை செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:  சனாதானம் என்பது பழமைவாதத்தை குறிக்கும், ஆனால் பழமைவாதம் என்பது காலத்தால் பழமையானது என்று மட்டுமே பொருளாகாது.
மாறாக தற்போதைய காலச்சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத புதிய மாற்றங்களையும் துளியும் ஏற்காத ஒரு அடிப்படை வாதக்கருத்தியிலை குறிக்கும். இத்தகைய சனாதானம் மிகவும் கொடிய பயங்கரவாத கருத்தியலாகும். இது இந்திய தேசத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடியதாகும். சனாதான பயங்கரவாதம் எனும் இக்கருத்தியல் மென்மேலும் வலிமை பெற்றால் இங்கே ஜனநாயகத்திற்கு பாதுகாப்பு இருக்காது.

நெல்லையில் 12 அடி உயர லெனின் சிலை... வீடியோ .. சீதாராம் யெச்சூரி திறந்து வைத்தார்...

பரமசிவம் - nakkheeran.in ப.ராம்குமார் : நெல்லையில் உடையார்பட்டி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது, சிபிஎம்-இன் மாவட்ட அலுவலகம். அதன் முன்னே கம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கம்பீரமாக நிற்கும் இந்த சிலையை தமிழகத்தின் தலைசிறந்த சிற்பி டாக்டர் சந்துரு வடிவமைத்துள்ளார். அவருக்கு உதவியாக காத்தப்பன் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக செயல்பட்டுள்ளனர். இச்சிலையை திறப்பதற்கு சிபிஎம்-இன் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி நெல்லைக்கு மதியமே வந்தார். மாலை ஐந்து மணியளவில் நடந்த சிலை திறப்பு விழாவில் சிபிஎம்-இன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மத்திய கமிட்டி உறுப்பினர் வாசுகி மற்றும் சம்பத் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சிபிஎம்-இன் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். மாலை ஆறு மணியளவில் லெனினின் மாபெரும் சிலையை சீதாராம் யெச்சூரி திறந்து வைத்தார். அப்போது திரண்டிருந்த தோழர்கள் கரவொலி எழுப்பினார்கள்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

வீரகேசரி :லண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பதைபோன்று சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கழுத்தை அறுப்பதைபோன்று பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை காட்டியமை தொடர்பில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம்: தடை விதிக்கக் கோரிய வழக்கில் புதன்கிழமை விசாரணை

jacto protest, jacto geo protest, jacto geo protest today, jacto geo protest reason, protest in tamil nadu today, jacto geo protest in tamil nadu today, state government employees strike today, jactor protest live updates, ஜாக்டோ-ஜியோ போராட்டம், கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசு, ஆசிரியர்கள் போராட்டம்tamil.indianexpress.com :Strike: சில தொடக்கப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்க சென்றதால் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டது
Association of State Government Employees in Tamil Nadu Calls for Strike Today: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
2003-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி வருகிறது.

உலகின் மிகப் பழமையான கிராம்பு, மிளகுகள் இலங்கை,மாந்தையில் கண்டுபிடிப்பு!

Archaeologists believe world's oldest clove found in Sri Lanka
மிளகுகள்
Veeramani Veeraswami : உலகின் மிகப் பழமையான கிராம்பு, மிளகுகள்
இலங்கை,மாந்தையில் கண்டுபிடிப்பு!
Eleanor Kingwell-Banham
மன்னார் – மாந்தையில் அகழ்வு ஆராய்ச்சியின் போது, கண்டுபிடிக்கப்பட்ட கிராம்பு, உலகின் மிகப் பழமையான கிராம்பு (லவங்கம்) என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் என அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, பழமையான மாந்தை துறைமுகத்தில் மிகப்பெறுமதி வாய்ந்த கருப்பு மிளகுகள் தொடர்பான சான்றுகளையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், ௨௦௦௯ /௨௦௧௦ [ 2009 - 2010 ]காலப்பகுதியில், பன்னாட்டு ஆய்வாளர்கள் குழுவொன்று மாந்தை துறைமுகப் பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்டது.
சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம், சீலிங்ஸ், மற்றும் இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் தொல்பொருள் நிறுவகம் ஆகியன இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தன.
இதன்போது, கண்டுபிடிக்கப்பட்ட கிராம்பு, பொது யுகம் ௯௦௦ [ 900 ] ஆம் ஆண்டுக்கும் ௧௧௦௦ [ 1100 ] ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளதாக, ஆய்வாளர் Eleanor Kingwell-Banham தெரிவித்துள்ளார்.

ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக சமுகவலையில் புயல்


உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?
வினவு :சென்னை லயோலா கல்லூரி அண்மையில் வீதி விருது விழாவை நடத்தியது. இதில் தோழர் முகிலனின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை வினவு தளத்தில் ஏற்கனவே வெளியானவைதான் என்றாலும் இந்துத்துவ கோஷ்டி, லயோலா என்ற கிறித்துவ கல்லூரி நிகழ்ச்சியில் பாரத் மாதாவை ‘இழிவாக’ சித்தரிப்பதாகக் கூறியது. குருமூர்த்தி, எச்.ராஜா, தமிழிசை போன்ற தமிழக காவிப்படையின் தலைகள் இந்து அடையாளங்களையும் பாரத் மாதாவையும் புண்படுத்தியதாக பேசினார்கள்.மத சிறுபான்மையினரை குறிவைத்து காத்திருக்கும் காவி கும்பல் இதுதான் வாய்ப்பென்று லயோலா கல்லூரிக்கு எதிராக களமாடத் தொடங்கியது. ஓவியங்களை காட்சிப் படுத்திய ஒரே காரணத்துக்காக கல்லூரியை இழுத்து மூட வேண்டும் என்றது.  ட்விட்டரில் உள்ள அத்தனை காவிப் படையும் திட்டமிட்டதுபோல், இந்த விசயத்தை வைத்து நாள் முழுக்கவும் களமாடியது. இது சர்ச்சையாக்கப்பட்டு தேசிய ஊடகங்களில் செய்தி ஆனது.

கொலையை காட்டி கொடுத்த சூயிங்கம்! – அத்தையை கொன்ற 15 வயது மாணவன் .. சினிமா போதித்த வன்முறை

கொலையைக் கண்டுபிடிக்க உதவிய சூயிங்கம்! – 15 வயது மாணவன் சிக்கிய பின்னணிவிகடன் : கொலையைக் கண்டுபிடிக்க உதவிய சூயிங்கம்! – 15 வயது மாணவன் சிக்கிய பின்னணி January 22 சென்னை அமைந்தகரையில் அத்தையைக் கொன்ற வழக்கில் மாணவனைப் பிடிக்க பெரிதும் உதவியது சூயிங்கம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
tamilselvi_swingam_15404  கொலையைக் கண்டுபிடிக்க உதவிய சூயிங்கம்! - 15 வயது மாணவன் சிக்கிய பின்னணி tamilselvi swingam 15404சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர், கடந்த 2-ம் தேதி படுக்கையறையில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து அமைந்தகரை இன்ஸ்பெக்டர் பெருந்துறைமுருகன் விசாரணை நடத்தினர். மேலும், இந்தக் கொலையைக் கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர்கள், சரவணன், ஜார்ஜ் மில்லர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தக் கொலையைக் கண்டுபிடித்தது எப்படி என்று போலீஸார் நம்மிடம் விவரித்தனர். “தமிழ்ச்செல்வியின் சடலத்தைப் பார்த்ததும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதினோம். இடது கை நரம்பு அறுக்கப்பட்டிருந்தது.