சனி, 13 ஏப்ரல், 2013

தன் உண்மை தாயை இலங்கையில் கண்டு பிடித்த லண்டன் பெண்

வாழ்க்கையில் நிகழும் உண்மை சம்பவங்கள், கற்பனை கதைகளை விட மிகவும் சுவாரஸ்யமானது.
இங்கிலாந்தில் வசிக்கும் 19 வயது யுவதியான பொப்பி ஒரு பிரச்சினையால் மிகவும் குழப்பமடைந்திருந்தாள். அவளது தாய் தந்தையரின் உடல் நிறமோ வெள்ளை. அவளுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமே வெள்ளை நிறம். ஆனால், அவள் மட்டும் கறுப்பு.
பொப்பி சட்ட கல்லூரி மாணவி. இங்கிலாந்தில் மென்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தாள்.
தன் நிற வேற்றுமையைக் கண்டு குழப்பமடைந்த அவள், இது தொடர்பில் தனது பெற்றோரிடம் முறையிட்டாள்.
மகளின் கேள்வியால், அவளது தாய் ஜெனியும், தந்தை கிளிப்பும் திகைத்து போனார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியில் அவளிடம் உண்மையை கூறினார்கள்.

வைகோநெடுமாசீமாதாபா: ஜெயாவின் கோபத்தை வாங்காமல் தமிழ் வீரா வேசமும் காட்டவேண்டும் ! ரொம்ப கஷ்டமுங்கோ

 தமிழக அரசை சங்கடப்படுத்திவிடக் கூடாது, அதே நேரம் தமிழுணர்வு இமேஜுக்கும் பங்கம் வந்துவிடக்கூடாது என்று இரட்டை வேடம் போடும்  வைகோநெடுமாசீமாதாபா பஜனைக் கோஷ்டிகளுக்கு அறிய வாய்ப்பு
 தூக்குத்தண்டனை என்பது அறவே ரத்து செய்யப்பட்டு சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு” என்று மரணத்தண்டனை குறித்த திமுகவின் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கலைஞர் மரணத்தண்டனை குறித்த அச்சத்தை மத்தியில் இருக்கும் அரசும், குடியரசுத்தலைவரும் ஏற்கனவே விதைத்து விட்டார்கள். அதை ஊதிப்பெருக்கும் விதமாக சமீபமாக உச்சநீதிமன்றமும் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இந்திய அரசியலின் மூத்தத் தலைவரான கலைஞரின் இக்கருத்து மரணதண்டனை எதிர்ப்பாளர்களுக்கு ஓரளவுக்கு ஆசுவாசம் தரக்கூடியது. மத்திய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு மரணத்தண்டனையாக நிறைவேற்றிக் கொண்டே வருவதை காணும்போது, அடுத்து எங்கே பாசக்கயிறு வீசப்போகிறார்கள் என்பதை சுலபமாகவே யூகிக்க முடிகிறது. ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணத்தண்டனை உறுதியான நால்வரில் நளினிக்கு மட்டும் 2000ஆம் ஆண்டு திமுக அரசு தண்டனையை குறைத்தது. முன்னதாக தோழர் தியாகு, புலவர் கலியபெருமாள் போன்றவர்களின் மரணத்தண்டனையையும் திமுக அரசு மாற்றியமைத்திருக்கிறது.

பிரதமரை காப்பாற்ற சி.பி.ஐ., அறிக்கை திருத்தம் ? இன்னொரு ராசா கிடைக்கலையாம்

புதுடில்லி: ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., தயாரித்த விவர அறிக்கை திருத்தப்பட்டதாக மத்திய அரசு மீது தற்போது ஒரு புகார் எழுந்திருக்கிறது.
தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், தகுதி இல்லாத நிறுவனங்கள் இதனை பெற்றுள்ளதாகவும், இதனால் நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து பார்லி.,யில் பெரும் அமளி கிளம்பியதை அடுத்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் சி.பி.ஐ.,விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவர அறிக்கையினை மத்திய சட்ட அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் தலையிட்டு திருத்தியதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பு சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், சி.பிஐ.,இயக்குனர் ரஞ்சித்சின்காவை அழைத்து பேசியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்! ஐக்கிய ஜனதா தளம்

புதுடில்லி: வரவிருக்கும் பொது தேர்தலில் நரேந்திரமோடியை பிரதமர்
வேட்பாளராக ஏற்க மாட்டோம் என பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தள கட்சி அறிவித்துள்ளது. இதனால் மோடி பிரதமர் வேட்பாளர் ஆவதில் முதல் சிக்கல் துவங்கியிருக்கிறது. இதனால் கூட்டணி கட்சிகள் முக்கியம் என கருதும் பட்சத்தில் அத்வானியே பிரதமர் வேட்பாளராக அங்கீகாரம் பெறுவார் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. பேரம் பேச மாட்டோம்:
பல ஆண்டுகளாக பா.ஜ., கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டில்லியில் நடந்தது. கூட்டத்தில் 3 வது முறையாக சரத்யாதவ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கூட்ட முடிவிற்கு பின்னர் கட்சியின் பொது செயலர் தியாகி நிருபர்களிடம் பேசினார். அவர்கள் கூறியதாவது: பா.ஜ.,வை பொறுத்த வரை நண்பராகத்தான் இருக்கிறோம். பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் நாங்கள் பேரம் பேச மாட்டோம். பா.ஜ.,வை நாங்கள் நிர்பந்திக்கவில்லை. பா.ஜ., கூட்டணி கட்சிகளை சரியாக மதிப்பதில்லை. பல மாநிலங்களில் இது போன்று கசப்பு இருந்து வருகிறது. கூட்டணியினரை மதிக்கும் எண்ணத்தை பா.ஜ., வளர்த்து கொள்ள வேண்டும். காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

காரால் அடித்துவிட்டு நிற்காமல் ஓடிய அதிமுக மந்திரி ! இளைஞர் மரணம்

அதிமுக அமைச்சரின் கார் மோதி இளைஞர் பலி! மந்திரியை தப்ப வைக்க வழக்கை மாற்றிய காவல்துறை!

    வாகைக்குளத்தில் சலூன் கடையில் வேலை பார்த்து வந்த உடன்குடி ஜே.ஜே.நகரைச் சேர்ந்த வயனப்பெருமாள் மகன் ராமர் (வயது 18).  முடிவைத்தானந்தல் என்ற ஊரில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி நெடுஞ்சாலையில் வாகைக்குளம் என்ற இடத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக, அசுர வேகத்தில் வந்த தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனின் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சுமார் 50 அடி தூரம் இழுத்துச் சென்று தூக்கி எறியப்பட்டார் ராமர். மோதிய அமைச்சரின் வாகனமும், வாகன அணிவகுப்பில் உடன் சென்ற வாகனங்களும் நிற்காமல் சென்று விட்டன. அங்குள்ள பொதுமக்கள் 108 அவசர உதவியை நாடியதில்,  ராமர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.&அமைச்சரின் எண்டவர் கார் மோதியதற்கு காவல்துறையினர், ஆழ்வார்திருநகரி ஒன்றியப் பெருந்தலைவர் விஜயகுமாருடைய ஸ்கார்பியோ வாகனத்தின் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் என அப்பகுதியில் செய்தி பரவுகிறது. அமைச்சரின் வாகனங்களுடன் வந்த சேர்மேன் விஜயகுமார் வாகனம் டீசல் போடுவதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஒதுங்கியது. டீசல் பிடித்துவிட்டு கிளம்பும்போது, அமைச்சரின் கான்வாய் வெகுதொலைவில் சென்றுவிட்டதால், அதை பிக்கப் செய்வதற்காக சேர்மேனின் வாகனம் அதிவிரைவாக சென்றதால், அப்போது சாலையை கடக்க முயன்ற ராமர் மீது வாகனம் மோதியது. அதில் விபத்து ஏற்பட்டு ராமர் மரணம் அடைந்தார் என்பதால், விஜயகுமார் வாகனத்தின் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். -சி.என்.இராமகிருஷ்ணன்

பெண் தீக்குளிப்பு எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில்


எம்.ஜி.ஆர். நகர் சூளைப் பள்ளம் அவ்வை தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன், இவரது மனைவி சுனிதா(29).வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிவந்த இவர்  கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மாயமானார்.
இது தொடர்பாக அவரது தாய் மேரியம்மாள் கடந்த 5-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்,சேகர் என்ற கிறிஸ்தவ போதகருடன் எனது மகள் சுனிதா சென்று விட்டாள்.எனவே அவளை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்தார்.இந்த புகார் மனு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில்  சுனிதாவுக்கும், கிறிஸ்தவ போதகர் சேகருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும்,அவருடன் சுனிதா சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து இன்று காலையில் சேகர் போலீசில் சிக்கினார்.அவரிடம் நடத்திய விசாரணையில் புழுதிவாக்கத்தில் சுனிதா இருப்பதாக கூறினார்.இதைத்தொடர்ந்து போலீசார் சுனிதாவை எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். இந்நிலையில் கழிவறைக்கு சென்ற சுனிதா திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.  போலீசின் இந்த தகவல் பெரும் சந்தேகத்தை அளிப்பதாக உள்ளது . காவல் நிலையத்தில் எப்படி இது சாத்தியமாகும்?  சிபிஅய் விசாரிக்க வேண்டும்

இந்திய அதிகாரி மோகனுக்கு ரூ.550 கோடி போனஸ் கொடுத்த Google

வாஷிங்டன்:தங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து நீடிக்க, இந்திய
வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகனுக்கு, "கூகுள்' நிறுவனம், 550 கோடி ரூபாயை போனசாக கொடுத்துள்ளது.பிரபல இணையதளமான, "கூகுள்' நிறுவனத்தில், விளம்பரப் பிரிவு அதிகாரியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் பணிபுரிகிறார். "கூகுள்' நிறுவனத்தின் வளர்ச்சியில், இவர் பெரும் பங்கு வகித்தார்.தற்போது, "கூகுள்' நிறுவனத்தின் துணை தலைவராக பதவி வகிக்கும் நீல் மோகன், "டிவிட்டர்' சமூக வலை தள நிறுவனத்திற்கு செல்ல முடிவெடுத்தார்.அவரைத் தடுத்து நிறுத்த விரும்பிய, "கூகுள்' நிறுவனம், அவருக்கு பெரும் தொகையைக் கொடுக்க முடிவு செய்து, 550 கோடி ரூபாயை போனசாக கொடுத்துள்ளது.எல்லாம் கார்பிரெட் சமாசாரங்க

வித்தியா பாலன்: மதர் இந்தியா நர்கீசாக நடிக்க தைரியம் இல்லை

சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற வித்யாபாலன் தொடர்ந்து நடித்த கஹானி படமும் வெற்றி பெற்றது. சமீபத்தில் ஒரு மேகசின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் வித்யாபாலன்.;


அந்த மேகசினின் அட்டைப்படத்தில் ‘மதர் இந்தியா’ திரைப்படத்தில் நடித்த நர்கீஸ் கதாபாத்திரத்தைப் போன்று வித்யாபாலன் மாடலிங் செய்திருந்தார். தனது மகனைக் கொன்றவனை பழிவாங்க  போராடிய தாயின் அன்பைப் பற்றியது மதர் இந்தியா திரைப்படம். ஒருவேளை அந்த திரைப்படத்தை ரீமேக் செய்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு வித்யா பாலன் “மதர் இந்தியா திரைப்படத்தை இப்போது யாராவது ரீமேக் செய்ய துணிந்தால் அவர்களுக்கு எனது சல்யூட்.ஆனால் அந்த ஸ்கிரிப்டில் நான் கண்டிப்பாக இருக்கமாட்டேன். நர்கீஸ் அந்த தாயின் கதாபாத்திரத்தோடு ஒன்றி அபாரமாக நடித்திருந்தார். அவரைப் போல நடிக்க முடியும் என்ர நம்பிக்கை எனக்கு கண்டிப்பாக இல்லை” என்று கூறினார்

நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீசில் ஆஜாரானார்

ஐதராபாத் ஓட்டலில் இருந்த நடிகை அஞ்சலி கடந்த 8ம் தேதி முதல்
மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் போலீசில் புகார் செய்தார். அவரது சித்தி சென்னை போலீசில் புகார் செய்தார். சென்னை ஐகோர்ட்டிலும் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். இந்நிலையில், 12.04.2013 வெள்ளிக்கிழமை இரவு நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீஸ் முன் ஆஜரானார்.ஐதராபாத்தில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஐதராபாத் போலீசாரின் விசாரணைக்குப் பிறகு நடிகை அஞ்சலி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

வலைதளங்களின் தாக்கம் இனி தேர்தல்களில் காணலாம்

வருகின்ற மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு குறித்து ஐ.ஆர்.ஐ.எஸ். நாலெட்ஜ் ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசிசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டன.
ஆய்வின் முடிவில், மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 160 தொகுதிகளில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கின்ற சக்தியாக வலைத்தளங்கள் இருக்கக் கூடும் என்று தெரிய வந்திருக்கிறது. 
மகாராஷ்டிராவில் 21 தொகுதிகளிலும், குஜராத்தில் 17 தொகுதிகளிலும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் இருக்கலாம். தமிழகம், ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் முறையே 12, 11 மற்றும் 10 தொகுதிகளில் இதன்  தாக்கம் இருக்கக்கூடும் என்று அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், முக்கியப் பிரச்னைகளில் சமூக வலைத்தளங்களும் இணைய ஆர்வலர்களும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருவது நாம் அறிந்த ஒன்றே.  அண்ணா ஹஜாரே போராட்டம், இலங்கைத் தமிழர் பிரச்னை, டெல்லி பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் கவனத்தை ஈர்த்ததற்கு சமூக வலைத்தளப் பதிவர்களே மிக முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர். 

உயிர் பயம் மேலிட பொட்டு சுரேஷ் கடைசியாக 15 நிமிடங்கள் பேசியது      ""மதுரைல எந்த லாட்ஜுல, எத்தனாம் நம்பர் ரூம்ல, எத்தனை நாளு தங்கி இருந்து, பொட்டுவ எப்படி கொன்னாங்கன்னு  அத்தனையவும்  மொதமொதல்ல புட்டுப் புட்டு வச்சது நக்கீரன்தான். எந்த பத்திரிகையிலும் வெளிவராத விஜயபாண்டி, பிரபு போட்டோவ போட்டு இவங்களும் பொட்டு கொலைல சம்பந்தப்பட்டவங்கதான்னு கொலைகாரங்க முகத்த பளிச்சுன்னு அடையாளம் காட்டுனதும் நக்கீரன்தான். இனியும் தப்பிக்க முடியாதுன்னு நெனச்சோ என்னவோ, அந்த ரெண்டு பேரும் இன்னைக்கு  சேலம் கோர்ட்டுல சரண்டர் ஆயிட்டாங்க தெரியும்ல.''’காவல்துறையில் உள்ள அந்த உயர் அதிகாரி, புலனாய்வுச் செய்திகளை முன் கூட்டியே  வெளி யிடுவதில் தொடர்ந்து நக்கீரன் காட்டி வரும் வேகம் குறித்து  சிலாகித்துச் சொல்ல... ‘"எல்லாப் பெருமையும் வாசகர்களுக்கே'’என மனதுக்குள் தியானித்தவாறே, வெளிப் படையாகப் பாராட்டிய அவருக்கு ஒரு சல்யூட்’ வைத்தோம்.இனி வழக்கு வேகம் பிடிக்குமா?

அஞ்சலி: டேய்… கேஸை வாபஸ் வாங்குறா

வீரப்பனுக்கு பிறகு இரு மாநில போலீசார் தேடுகிற ஒரே வி.ஐ.பி அஞ்சலிதான் போலிருக்கிறது. இந்த தேடுதல் வேட்டையில் சித்தியில் ஆரம்பித்து நடிகர் ஜெய் வரைக்கும் அஞ்சலிக்கு தெரிந்த அத்தனை பேரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்த போலீஸ், குணா கமல், அபிராமியை தேடியலைகிற மாதிரி அலைந்து கொண்டிருக்கிறது.
பிரபல பத்திரிகை ஒன்று, ‘அஞ்சலி வரலாறு’ என்று தொடர் கட்டுரை போட தொடங்கியிருக்கிறது.
ஆனால் அஞ்சலியோ தனது ஒரே செல்போனிலிருந்து ஆங்காங்கே சிலரிடம் பேசி “ஐ ஆம் சேஃப்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
“தங்கச்சிய காணலைங்க” என்று போலீசில் புகார் கொடுத்திருக்கும் அவரது அண்ணனுக்கு நேற்று வந்த செல்போன் அழைப்பில் பேசியது அஞ்சலியேதான். “டேய்… கேஸை வாபஸ் வாங்குறா” என்று அவர் பேசியதை அப்படியே ஒலிபரப்பி உஷார் நிலையிலிருந்த தீயணைப்பு வண்டிகளை சற்றே ஆசுவாசப்படுத்தின ஆந்திர சேனல்கள்.

வசந்தபாலன் உருக்கம்: அவள் அப்படியொன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் ....

 திரைக்குடும்பத்தில் இல்லாத ஒரு பெண் திரைத்துறையில் நுழைய எத்தனை ஒரு பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கிறது.
அத்தனை பிரச்சினையும் தீர்ந்து மீண்டு வா அஞ்சலி - வசந்தபாலன் உருக்கம் சென்னை: நடிகை அஞ்சலிக்கு, அங்காடித் தெரு மூலம் புதிய அடையாலம் கொடுத்தவரான இயக்குநர் வசந்தபாலன் அஞ்சலி குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.வசந்த பாலனின் வரிகளிலிருந்து...
கற்றது தமிழ் படம் பார்த்த போதுநெசமாத்தான் சொல்றீயா என்று அஞ்சலிபல இடங்களில் கேட்கும் போதுஎனக்கு மிக மானசீகமான பெண் கேட்பதுபோன்ற சித்திரத்தை ஏற்படுத்தியது.
பறவையே எங்கு இருக்கிறாய் என்ற பாடலில்அவள் சுடிதாரின் நிறம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானதுமான பொருளாக உணர முடிந்தது.சுடிதாரை வேண்டாமுன்னு சொல்லும் போதுமனஎழுச்சியூட்டும் சித்திரங்களை எழுப்பியடியிருந்தாள்.
உனக்காக தான் இந்த உயிர் உள்ளது என்ற பாடல்எல்லையற்ற மனதின்சந்தோச பெருவெள்ளத்தில்காதலை தேடும் ஒருவனின் மன வெளியை பிரதிபலிப்பதாக இருந்தது.
அதில் அஞ்சலி உருவாக்கிய சித்திரங்கள்ஒரு இலக்கிய நினைவூட்டலாக இருந்தது.ரத்தமும் சதையுமானபல்வேறு பெண்களின் சித்திரங்களைஅஞ்சலி தனக்குள் கொண்டிருந்தாள்.
ஒரு வானம் பல்வேறு வண்ணங்களை எழுப்பி எழுப்பி காட்டுவது போல பல்வேறு மத்திய ரக பெண்களில் ஒன்றாக எனக்கு தோன்றினாள்.
இப்படியாக அந்த படம்என் மனசுக்குள் ஆயிரம் எண்ணங்களை உசுப்பி விட்டது/
மஹாராஸ்ராவில் எங்கோ மாமாவின் வீட்டில் அவள் தங்கியிருப்பாள்ஜீவா போய் பார்க்க போவார்அதன் பிறகு ஒரு விபசாரவிடுதியில் அஞ்சலியை பார்ப்பான்.

வடிவேலு வீட்டுக் கல்யாணம்!


1991-ல் நடிக்க வந்த வடிவேலுவுக்கு  இப்போது வயது 53.   சுமார் 300 படங்களில் நடித்து, அதில் சரிபாதிப் படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இந்த காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம் என்றால், எத்தனை சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும்? ஆனால், நம்பினால் நம்புங்கள்… ஒரே ஒரு சினிமா பிரபலம்கூடக் கலந்துகொள்ளாத வகையில் திட்டமிட்டு, தன் மகள் கன்னிகா பரமேஸ்வரியின் திருமணத்தை மதுரையில் நடத்தியிருக்கிறார் வடிவேலு!
சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்குத் தகவல் மட்டும் தெரிவித்துவிட்டு, ‘ஆனா, தயவுசெஞ்சு கல்யாணத்துக்கு வரணும்னு சிரமப்பட்டுக்காதீங்க. பிள்ளைங்களை நானே ஒரு நாள் உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துர்றேன்!’ என்று பாலீஷாகச் சேதி சொல்லி யிருக்கிறார் வடிவேலு. பத்திரிகை யாளர்களுக்கு அந்தத் தகவலும் இல்லை. ரசிகர் மன்றத்தினருக்கு ‘வர வேண்டாம்!’ என்று மிகக் கண்டிப் பான கட்டளை.

பிரகாஷ் ராஜுக்கு ஜாதி சங்கம் கொலை மிரட்டல் ! கௌரவம் படத்தை ஏன் எடுத்தாய்?

எனக்கு கொலை மிரட்டல் வருகிறது”
என்று கூறியுள்ள நடிகர், தயாரிப்பாளர்
பிரகாஷ்ராஜ், “கௌரவம் என்று படத்தை எடுத்ததால், கன்னடக்காரன் உனக்கு எதுக்கு இந்த வேலை… தொலைத்துவிடுவோம்” என்கிறார்கள்” என்றார். அருகில் இருந்த இயக்குனர் ராதாமோகன், ‘எனக்கு கொலை மிரட்டல் வரவில்லை. ஆனால் ஏன் இந்த படத்தை எடுத்தாய் என்று மிரட்டுகிறார்கள் என்றார்.
ஜாதி விட்டு ஜாதி காதலிக்கும் விவகாரத்தில் ‘கௌரவக் கொலை’ செய்வது பற்றிய படம் என்பதால், குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த சங்கம் ஒன்று, “இது நம்ம ஜாதி பற்றிய படம்” என்று ஆக்ரோஷமாக அறிக்கை விட்டுள்ளது.
இது பற்றி பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழில் மொழி, அபியும் நானும், அழகிய தீயே என நல்ல படங்கள் தயாரித்து வருகிறேன். தற்போது ராதாமோகன் இயக்கத்தில் ‘கௌரவம்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறேன். கவுரவ கொலை பற்றிய கதை.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் ஏன் உலகம் முழுவதும் பல இடங்களில் நடக்கிறது. தருமபுரி சம்பவத்தை பற்றியோ, கோவையில் உள்ள ஒரு சமுதாயத்தை பற்றிய கதையோ இது கிடையாது. ஆனால் எனக்கு ட்விட்டரில் ஒரு சிலரிடம் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. கவுரவ கொலை பற்றி உனக்கு எதுக்கு கவலை. கன்னடக்காரனான நீ எப்படி இந்த படத்தை எடுக்கலாம். தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்.
மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. ஒவ்வொரு முறை படம் வரும்போதும் இதுபோல் சிலர் பிரச்னை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதை யார்தான் தட்டிக்கேட்பது? நான் கேட்பேன். எனக்கு துணையாக இளைஞர்கள், ரசிகர்கள், அரசு இருக்கிறது.
தற்கொலையே தவறு என்று சட்டம் சொல்கிறது. அப்படி இருக்கும்போது கவுரவம் என்ற பெயரில் ஒரு உயிரை கொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. அதைத்தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறேன். குறிப்பிட்ட ஒரு சமுதாயத்துக்கு எதிராக இப்படத்தை எடுக்கவில்லை” என்று கூறினார்.
ஜாதிச் சங்கம் ஒன்றும் அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். அதில் பிரகாஷ்ராஜின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து திட்டியிருக்கிறார்கள்.
இப்போதெல்லாம், தடை போடணும் என்று யாராவது கிளம்பினால் பிய்த்துக் கொண்டு படம் ஓடும் காலம்!

தமிழகத்தில் படிக்கும் வடஇந்திய மாணவர்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்களா ?

The Tamil Nadu Police have dispatched two teams to Bihar and West Bengal to verify the identities of the men killed. The four other alleged burglars, besides Chandrika, were Vinod Kumar, Harish Kumar, Vinay Kumar (all from Bihar) and Abhay Kumar (from West Bengal), all aged between 30 and 35 years.


“வட மாநில மாணவர்களை

கண்காணிக்க வேண்டும்” என்று கூறியுள்ள
டாக்டர் ராமதாஸ், அவர்கள் துப்பாக்கி சகிதம் நடமாடுகிறார்கள்” என்கிறார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும், பொறியியல் கல்லூரிகளிலும் பயிலும் பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களில் சிலர், தங்களது மாநிலங்களில் இருந்து கள்ளத்கள்ளத் துப்பாக்கிகளை கடத்தி வந்து இங்குள்ள ரவுடிகளுக்கு விற்பனை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தங்களது கல்லூரிகளில் வட இந்திய மாணவர்களைச் சேர்க்கத் துடிக்கும் கல்வி நிறுவனங்கள், அதற்கு ஆள் பிடிப்பதற்காக தங்களது வட இந்திய முன்னாள் மாணவர்களையே தரகர்களாக அமர்த்தியுள்ளன. மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடித்து தரும் தரகர் வேலை பணம் கொழிக்கும் ஒன்றாகிவிட்டதால், அதில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை மிரட்டவும், தாக்கவும் துப்பாக்கிகளை சர்வ சாதாரணமாக பயன்படுத்துகின்றனர்.

இலங்கையில் இருந்து 2000 இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற அரசு உத்தரவு!

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள
நிலையில், இலங்கை அரசு வெளிப்படையாக அதற்கு கவுன்டர் கொடுக்கவில்லை. ஆனால், ஓசைப்படாமல் சில காரியங்கள் செய்யப்படுகின்றன. இலங்கையில் கப்பல் கட்டும் அரசு நிறுவனமான கொழும்பு டொக்யார்ட்டில் (Colombo Dockyard) பணியாற்றும் 2000 இந்திய தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அரசு விரைவில் மேற்கொள்ளும் என்று தெரிகிறது. கொழும்புத் துறைமுக பொதி இறக்கும் பணியாளர் சங்கத்தின் தலைவர் அண்மையில், “தமிழகத்தில் இருந்து வரும் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம்” என்று  எச்சரித்திருந்தார். அவர் சார்ந்த தொழிற்சங்கம், அரசு தொழிற்சங்கம். இப்போது, கொழும்பு டொக்யார்ட்டில் பணிபுரியும் இநந்திய தொழிலாளர்கள் பற்றி அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். இலங்கையில் கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் கொழும்பு டொக்யார்ட் நிறுவனம், கொழும்புத் துறைமுகத்தில் செயற்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர்.

திரிணாமுல் CPM தொண்டர்கள் மோதல் மே.வங்கம் பதட்டம்


டெல்லியில் திரிணாமுல்
காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மீது சிபிஎம்
கட்சியை சேர்ந்த மாணவர் அமைப்பினர் நடத்திய தாக்குதலை கண்டித்து மேற்கு வங்கத்தில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில நிதியமைச்சர் அமித் மித்ராவுடன் வந்திருந்தார். அப்போது அவரை இந்திய மாணவர் சங்கத்தினர் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பினர். அமித் மித்ரா தாக்கப்பட்டார். காவல்துறையினர் மம்தாவை காப்பாற்றினர்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் இறங்கினர். இதில் 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டன. பல அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தடுக்க வந்த கம்யூனிஸ்ட் தொண்டர்களும் தாக்கப்பட்டனர். சில இடங்களில் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

Malini Fonseka: தமிழ்த் திரையுலகினர் நடத்திய போராட்டம் தவறானது


கொழும்பு: ஈழத் தமிழர்களுக்கு
ஆதரவாக தமிழ் நாட்டில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் இருந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் சிங்களத் திரையுலகினர்.தமிழ் நடிகர் நடிகையருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று மாலை கொழும்பு சுதந்திரா மைதானத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பிரபல சிங்கள நடிகையும், பைலட்பிரேம்நாத் படத்தில் சிவாஜிகணேசனுடன் இணைந்து நடித்தவருமான மாலினி பொன்சேகா கூறியுள்ளார். இதுகுறித்து மாலினி கூறுகையில், இலங்கைக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் நடத்திய போராட்டம் தவறானது. போராட்டம் நடத்திய அனைவரையும் இலங்கைக்கு அழைக்கிறோம். இங்கு வந்து உண்மை நிலவரம் என்ன என்பதை அவர்கள் பார்க்க வேண்டும்.இன்று மாலை தர்ணா போராட்டம் நடத்திய பிறகு இந்தியத் தூதரகம் சென்று எங்களின் செய்தியை அளிப்போம். பின்னர் அந்த செய்தியை, இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் விளம்பரமாக வெளியிடவுள்ளோம் என்றார்.இன்றைய போராட்டத்தில் விளையாட்டு வீரர்கள், மகளிர் அமைப்புகள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் கநல்து கொள்ளவுள்ளனராம்.மாலினி பொன்சேகா யார்?< 1978ம் ஆண்டு வெளியான படம் பைலட் பிரேம்நாத். இதில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் இணைந்து நடித்தவர் தான் மாலினி பொன்சேகா. இவர் இலங்கையைச் சேர்ந்த பிரபல நடிகையாவார்.தற்போது இவர் எம்.பியாக இருக்கிறார்.

வியாழன், 11 ஏப்ரல், 2013

பத்மநாபசாமி கோவிலில் 700 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு ! மக்களிடம் சுரண்டி கொழுத்த மன்னர்கள்

திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளில் இருந்து 700 கிலோ எடை கொண்ட தங்க காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு தங்க சங்கிலியில் மட்டுமே 997 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளனவாம்.திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. ஏ முதல் எப் வரை பெயரிடப்பட்டுள்ள இந்த அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளன. பி அறையை தவிர மற்ற 5 அறைகள் ஏற்கனவே திறக்கப்பட்டு, அவற்றில் உள்ள பொக்கிஷங்கள் உச்சநீதிமன்றம் நியமித்த 6 பேர் அடங்கிய குழுவினர் மதிப்பீடு செய்து வருகின்றனர்.இதன் விபரம் பற்றி 4 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இது வரை செய்யப்பட்ட மதிப்பீட்டின் விபரங்களை உச்சநீதிமன்றத்தில் இக்குழு தாக்கல் செய்தது.அதில் கூறப்பட்டுள்ளதாவது, 'சி,டி, இ மற்றும் எப் அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி முடிந்து விட்டது. ஏ அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கிடும் பணி நடைபெறுகிறது. 216 நாட்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. 1 லட்சத்து 5 ஆயிரத்து 656 பொருட்கள் கணக்கிடப்பட்டுள்ளன. ஒரு நாளில் அதிக பட்சமாக 3 அல்லது 4 ஆபரணங்களை மட்டுமே மதிப்பீடு செய்ய முடிந்தது.ஒவ்வொரு ஆபரணத்திலும் குறைந்தது 75 முதல் 300 வரையிலான வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது தான் மதிப்பீடு தாமதத்துக்கு காரணம். இதுவரை ரூ. 19.50 லட்சம் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் எடை 700 கிலோ. இந்த நாணயங்களை மதிப்பீடுவதற்கு குறைந்தபட்சம் 2 மாதமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட்டினியாக வேலை பார்க்கும் Fast Food தொழிலாளிகள்

துரித உணவு பலகைமெரிக்காவில் இயங்கும் தனியார் துரித உணவகங்களின் ஆண்டு லாபம் உயர்ந்து கொண்டே போக அதில் வேலை பார்க்கும் ஊழியர்களின் நிலைமையோ படு மோசமாக உள்ளது. இதை எதிர்த்து பல்வேறு துரித உணவகங்களின் ஊழியர்கள் ஒன்று திரண்டு சங்கம் அமைத்து, ஊதிய உயர்வு கோரி அடையாள வேலை நிறுத்த போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் எதிர்த்துப் போராடும் பல்வேறு துரித உணவகங்கள் இந்தியாவில் சமீப காலமாக கோலோச்சி வருவது குறிப்பிடத்தக்கது.
“போதும், நான் சோர்ந்து போய் விட்டேன், கடந்த பல ஆண்டுகளாக அதே சம்பளத்திற்கு பணியாற்றி வருகிறேன், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது, நிறுவனத்தின் லாபம் விண்ணைத் தொடுகிறது ஆனால் என் சம்பளம் அப்படியே தான் இருகிறது. வேலை நிறுத்தம்தான் ஒரே வழி ” என்று குமுறுகிறார் பிரபல துரித உணவு விற்பனை நிறுவனமான பர்கர் கிங்ஙில் வேலை செய்யும் தபிதா.

இலங்கைத் தமிழர்கள்: தமிழக கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை

இலங்கைத் தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கவில்லை, தங்களுக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளே ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள் என மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.26 லட்சத்தில் காரைக்கால் புளியங்கொட்டை சாலை மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜை விழாவில் பிரதமர் அலுவலக விவகார இணை அமைச்சர் வி.நாராயணசாமி புதன்கிழமை கலந்து கொண்டார்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர்,
இலங்கைத் தமிழர்கள் மீது நலன் கொண்டது காங்கிரஸ் கட்சி மட்டுமே. தமிழக கட்சிகள் சில, இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகிறார்கள். மாணவர்ளை தூண்டிவிடுகிறார்கள்.

வட கொரிய ஜனாதிபதி உத்தரவுப்படி நான் 115 பேரை கொன்றேன்” ‘டாப்’ பெண் உளவாளி சொல்கிறார்

தற்போது தென் கொரியாவில் வசிக்கும் வட கொரியாவின் முன்னாள் ‘டாப்’
பெண் உளவாளி, “வட கொரிய ஜனாதிபதியின் உத்தரவுப்படி நான் 115 பேரை கொன்றேன்” என்று தெரிவித்திருக்கிறார். மரண தண்டனையில் இருந்து மன்னிப்பு வழங்கப்பட்டு, தற்போது தென் கொரியாவில் வசிக்கிறார் இவர்.
வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், தென் கொரியாவில் ரகசிய இடம் ஒன்றில் இருந்து இவர் கொடுத்த பேட்டி, தென் கொரிய மீடியாக்களில் பரபரப்பாக வெளியாகியுள்ளது.
இந்த முன்னாள் பெண் உளவாளி, தென் கொரியா விமானம் ஒன்றில் பயணியாக சென்று குண்டு வைத்துவிட்டு பாதி வழியில் இறங்கிவிட, விமானம் வானில் வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த 115 பேரும் கொல்லப்பட்டனர்.

கடற்படை அதிகாரி மீது மனைவி புகார்! அதிகாரிகளுடன் செக்ஸ் வற்புறுத்துகிறார்

Police registered a case today against a Naval officer and nine others, following a complaint by his wife, alleging that she was sexually and mentally harassed by top naval officials in front of his husband.
Besides the Naval officer, the police have also registered case against six Naval officials and three family members of the complainant's husband.
According to the complaint Sujatha (25), a native of Orissa, who married Lt Col Ravi Kiran in 2012 at Visakhapatnam, she was allegedly sexually harassed in front of her husband.
In the complaint she also alleged that her husband forced her to indulge in sex with several top officials in order to get promotion and when she resisted, she was mentally and physically harassed by him.
 லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றும் தனது கணவர் ரவி கிரண் மீது கொச்சி போலீசில் சுஜாதா செக்ஸ் தொல்லை புகார் கொடுத்து உள்ளார். அதில், பதவி உயர்வு பெறுவதற்காக கணவர் ரவி கிரண், மூத்த அதிகாரிகளுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறி உள்ளார்.
 இந்திய கடற்படையில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றுபவர் ரவி கிரண். இவரது மனைவி பெயர் சுஜாதா (வயது 25). இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திருமணம் நடைபெற்றது.
கணவரின் கண் முன்னாலேயே தான் செக்ஸ் தொல்லைக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அஞ்சலி: நான் நன்றாகவே இருக்கிறேன். என்னை யாரும் கடத்தவில்லை

 நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் மாயமானது குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. படப்பிடிப்புக்கு ஐதராபாத்துக்கு சென்ற அவர், அங்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அங்கு கடந்த 8ஆம் தேதி முதல் மாயமாகியுள்ளார். அஞ்சலியை கண்டுபிடித்து தருமாறு அவரது சகோதரர் ரவிசங்கர் ஜீப்ளி ஹில்ஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அஞ்சலியை காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அஞ்சலி தானாக ஓட்டலை விட்டு வெளியேறினாரா அல்லது அவரை கடத்தினார்களா என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அவர் தங்கியிருந்த ஓட்டலின் சிசிடிவி கேமராவை அம்மாநில போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். அப்போது அதில் அஞ்சலி ஓட்டலைவிட்டு வெளியேறிய காட்சி பதிவாகி இருந்தது. அதில் ஜீன்ஸ் பேன்டும், சர்ட்டும் அணிந்து, வெளியேறி வெளியே தயாராக இருந்த காரில் ஏறி செல்வது போன்றும் வீடியோ காட்சியில் பதிவாகி இருக்கிறது.
ஓட்டலை விட்டு வெளியேறிய அஞ்சலி, ஐதராபாத் நகருக்கு வெளியே உள்ள விமான நிலையித்தில் இருந்து கிட்டதட்ட 20க்கும் மேற்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்றும், அதில் சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டரிடமும் பேசியுள்ளதாகவும், அவரிடமும் போலீசார் விசாரணை நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
சகோதரர் ரவி சங்கருடன் நடிகை அஞ்சலி செல்போனில் பேசிய பதிவு வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அஞ்சலி எங்கே?புது புது கேள்விகள் ! ஊகங்கள் !

எந்த மீடியாவைப் பார்த்தாலும் அஞ்சலி அஞ்சலி என்று கதறிக் கொண்டிருக்க
, அஞ்சலியின் செல்போனில் இருந்து எங்கெங்கெல்லாம் அழைப்புகள் சென்றன என்பதை துருவிக் கொண்டிருக்கிறது ஆந்திரா போலீஸ்
சித்தப்பா சூரிபாபுவிடம் சொல்லி கொள்ளாமல் ஹைதராபாத் தஸ்பல்லா ஹோட்டலில் இருந்து காலை 8.05 மணிக்கு வெளியேறிய நடிகை அஞ்சலி, ஷம்ஷாபாத் ஏர்போர்ட்டில் உள்ள நோவாடெல் ஓட்டலில் காலை 10.20 மணி வரை தங்கி இருக்கிறார். பின்னர் அங்கிருந்து வெளியேறி விட்டார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அவரது செல்போனில் இருந்து 18 அழைப்புகள் சென்று உள்ளன.
அவற்றை போலீசார் ஆய்வு செய்ததில் அமெரிக்காவில் இருக்கும் ஒரு டாக்டரிடம் அவர் பேசி இருப்பதும், கடைசியாக வேணு மல்லாடி என்ற தெலுங்கு புதுமுக நடிகரிடம் பேசி இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. மற்ற அழைப்புகள் பற்றி ஆய்வு செய்து வருவதாக சொல்கிறார்கள் போலீசார்.
அஞ்சலி அவரது தாயாரிடம் பேசியதாக கூறப்படும் தகவலை நம்புவதற்கில்லை என்றும் போலீசார் கூறினார்கள்.
இதற்கிடையே, நடிகை அஞ்சலி சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு டாக்டரிடமும் பேசியதாகவும் இது தொடர்பாக ஆந்திர போலீசார் விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆமா இந்த புதுமுக நடிகர் விவகாரம் என்ன… புதிதாக இருக்கிறதே!

விஷால் ஜோடியாக லட்சுமி மேனன்

சுந்தரபாண்டியன்’, ‘கும்கி’ படங்களில் நடித்த லட்சுமி மேனன், சசிகுமாருடன்
‘குட்டிப்புலி’, விமலுடன் ‘மஞ்சப் பை’ படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து விஷால் ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 10ம் வகுப்பு தேர்வு முடிந்தது. அடுத்த மாதம் ரிசல்ட் வருகிறது. இனி தமிழில் அதிக படங்களில் நடிப்பேன். விஷால் பிலிம் பேக்டரிக்காக விஷால் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் ‘பாண்டியநாடு’ படத்தில், அவரது ஜோடியாக நடிக்கிறேன். இதையடுத்து ‘சிலம்பாட்டம்’ சரவணன் இயக்கும் படத்தில், கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்கிறேன். தமிழில் 4 படங்களில் நடிப்பதால், மலையாளத்தில் நடிக்க முடியவில்லை

ஒட்டி பிறந்த சிறுமிகளை கருணைகொலை செய்ய பெற்றோர் அனுமதி கோரிகின்றனர்

புதுடில்லி:பீகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த, சபா, பராக் சலீம் ஆகிய இருவரும், உடல் ஒட்டிப் பிறந்த சகோதரிகள். இப்போது, 15 வயதாகும்
இருவரின் உடலையும், அறுவை சிகிச்சை மூலம் தனித்தனியாக பிரிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.ஏழைச் சிறுமிக
ள்: இவர்கள், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அறுவை சிகிச்சை செலவை, இந்த சிறுமிகளின் பெற்றோர் ஏற்க முடியாத நிலையில் உள்ளனர்.இது பற்றி அறிந்த, அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத், அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவை ஏற்பதாகஅறிவித்தார்.இருப்பினும், இக்குழந்தைகளின் பெற்றோர், கருணை கொலை செய்ய அனுமதி கோரி, கோர்ட்டில் மனு செய்தனர்.இது குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.பாட்னா குழந்தைகளை தனியாக பிரிப்பது குறித்து, மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யும் படி, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, டில்லியில் அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் நரம்பியல் நிபுணர் தலைமையிலான குழுவினர், கடந்தாண்டு பாட்னா சென்று, ஒட்டிப்பிறந்த குழந்தைகளை பார்வையிட்டு, மருத்துவ அறிக்கை தாக்கல் செய்தனர்.அதில், "அறுவை சிகிச்சைக்கு பின், ஒரு குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடியும்; இருவர் உடல் வேறாக இருந்தாலும், சீறுநீரகம், மூளை, ரத்தக்குழாய் ஒன்று தான் உள்ளது. எனவே, பிரிப்பது நல்லதல்ல; பிரித்தாலும், பிழைக்கும் ஒருவரின் நிலைமையும் உறுதியாக சொல்ல முடியாது' என குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறுமி கற்புக்கு விலை 50 ஆயிரம் ரூபாய் பஞ்சாயத்து தீர்ப்பு !

காதலித்து கர்ப்பிணியான
சிறுமியை ஏமாற்றிய காதலனுக்கு ரூ.50 ஆயிரம்
அபராதம் விதித்து பஞ்சாயத்து அதிர்ச்சி தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திர மாநிலம் குப்பம் அருகே உள்ள குடுபள்ளி மண்டலம் சின்ன கொல்லப்பள்ளி பஞ்சாயத்து வட்ட கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (25), விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். சிறுமி தற்போது 3 மாத கர்ப்பிணியானார். Ôதான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் வீட்டில் கொன்று விடுவார்கள். ஆதலால் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்Õ என காதலன் சிவக்குமாரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிவக்குமார் மறுத்துள்ளார்.இதனால் வேதனையடைந்த சிறுமி தாயிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் கிராமத்து பெரியவர்களிடம் எனது மகளை சிவக்குமார் திருமணம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டார்.

காருக்கும் ஆளுக்கும் என்ன சம்பந்தம்? எந்த சம்பந்தமும் இல்லை.

இப்பொழுதெல்லாம் இந்தியாவில் இல்லாத கார் வகைகளே இல்லை
போலிருக்கிறது. உலகின் பணக்கார கார் கம்பெனிகள் அத்தனையும் இந்தியாவில் கார்களை விற்பனை செய்கின்றன.அப்படியே சில கார்களுக்கு  நேரடி விற்பனை இல்லையென்றாலும் ஹம்மர் போன்ற கார்களை நம்மவர்கள் ஹவாலாவிலாவது வாங்கிவிடுகிறார்கள். சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களின் சாலைகளில் முப்பது லட்சம், நாற்பது லட்சம் ரூபாய் கார்களெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. அசால்ட்டாக ஒரு கோடியில் வீடு வாங்குகிறார்கள், நாற்பது லட்சத்தில் கார் வாங்குகிறார்கள், ஐந்தாயிரம் ரூபாயில் செருப்பு வாங்குகிறார்கள், அட அவ்வளவு ஏன்? நாய்க்கு போடும் 3 கிலோகிராம் பெடிக்ரீயின் விலை நானூற்றைம்பது ரூபாய். பணத்தை இப்படி தாறுமாறாக செலவு செய்தால் பணம் வீங்கத்தான் செய்யும், விலைவாசி ஏறத்தான் செய்யும். ஆனால் இதெல்லாம் நம் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவுக்கு கண்ணில்படுவதில்லை போலிருக்கிறது.  “ஏழைகள் சத்து பண்டமாகத் தின்கிறார்கள் அதனால் விலைவாசி ஏறி போயிடுச்சு” என வெட்கங்கெட்டு பேசியிருக்கிறார்.

புலி ஆதரவாளர்கள் தமிழ் சினிமாவில் நடிப்பதால் இலங்கையில் தடை

“தமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை இலங்கையில் தடை செய்துவிட்டு கேரளாவில் தயாரிக்கப்படும் மலையாள திரைப்படங்களை திரையிட வேண்டும்” இவ்வாறு புத்த துறவிகள் அமைப்பு, இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளது
. ‘ராவணா சக்தி’ என்ற பெயருடைய இந்த புத்த துறவிகள் அமைப்பின் செயலாளர் இத்தாகந்த சத்தாதிஸ்ஸ தேரர், இது தொடர்பாக இலங்கை தேசிய திரைப்பட கார்ப்பரேஷனுடன் பேசியுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் இந்த துறவி, “விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் நடிக்கும் தமிழக திரைப்படங்களை தடை செய்துவிட்டு மலையாள படங்களை இலங்கையில் திரையிட்டால், அதனால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படாது” என்றும் தெரிவித்துள்ளார். (பிட்டு படம் இல்லைத்தானே.. துறவி?)
புத்த துறவிகள் அமைப்பு இந்த ரூட்டில் செல்ல, தமிழக திரைப்பட நட்சத்திரங்களுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்த போவதாக, தெரிவித்துள்ளார் பிரபல சிங்கள திரைப்பட நடிகை.
மாலினி பொன்சேகா என்ற இந்த பேரிளம் நடிகை, இலங்கையில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பைலட் பிரேம்நாத் என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
நாளை வியாழக்கிழமை தமிழக நட்சத்திரங்களுக்கு எதிரான இந்த போராட்டத்தை நடத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார். viruvirupu.com

புதன், 10 ஏப்ரல், 2013

ஜெயாவின் ஈழத்தாய் சீசன் 3 – கேள்வி பதில்!

ஈழத்தாய் ஜெயலலிதாவின்  பழைய வரலாறு என்ன?, என்று முழுமையிலிருந்து மதிப்பிடாமல் சில பல அதிரடி சவடால்களை வைத்து ஏமாந்தோம் என்றால் எந்த மக்கள் பிரச்சினைக்காகவும் நாம் போராட முடியாது. அப்படி போராடுபவர்களை வலுவிழக்கச் செய்வதற்குத்தான்  ஜெயாவின் புரட்சி-புரட்டு நடவடிக்கைகளை பார்த்து ஆதரிப்பவர்கள் துணை போகிறார்கள்.
கேள்வி 1:
ஈழம் தொடர்பான குரல்கள் பலமாக எழும் இவ்வேளையில், ஜெயலலிதாவின் ஐ.பி.எல் லில் இலங்கை வீரர்களை புறக்கணிக்க சொல்லும் குரலையும், அதன் தொடர்ச்சியாய் சுப்பிரமணிய சாமி ஜெ.அரசை  356 வது பிரிவை பயன்படுத்தி கலைக்க கோருவதையும் எப்படி பார்க்கிறீர்கள்? ஈழம் தொடர்பான ஜெயாவின் போக்கு இனிவரும் காலத்தில் எப்படி இருக்கும்?
கேள்வி 2:
கெயில் எரிவாயு குழாய் பதிப்பு மற்றும் ஈழம் தொடர்பான விசயங்களில் ஜெயலலிதா தொடர்ந்து சரியான பாதையில் நடப்பதாக ஒரு பரப்புரை நடக்கிறதே. உண்மையில் இம்மாதிரியான விசயங்களில் ஜெயாவை இயக்கும் அடிப்படை எது?
கேள்வி 3:
கேள்வி பதில் பகுதி தற்போது இயங்குவதே இல்லையே ஏன்? வினவில் அதிக செய்திகள் வரும் இக்காலகட்டத்தில் வாசகர்களின் பழைய பொருத்தமான கேள்விகளோடு இன்றைய செய்திகளை இணைத்து வழங்கலாமே…
- சீனிவாசன்
__________________________________________
ன்புள்ள சீனிவாசன்,
வேலைச்சுமை காரணமாகவே கேள்வி பதில் பகுதி தொடர்ச்சியாக இடம் பெறவில்லை. இனி முடிந்த மட்டும் எழுத முயல்கிறோம்.
ஐபிஎல் தொடர்பாக ஜெயாவும் சு.சாமியும் நேரெதிர் நிலை எடுத்திருப்பதாக தோன்றலாம். அப்படி இல்லை. காலந்தோறும் பார்ப்பனியம் என்ற வழக்கின் படி இந்த இரண்டு கருத்துக்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே!
முதலில் ஜெயாவின் ஈழத்தாய் சீசன் 3 வெளியீடைப் பார்த்து விடுவோம்.

அஞ்சலிக்கு கொடிய நோய் இருக்காம் சித்தி சொல்கிறார் எங்கேயோ இடிக்கிறது

நடிகை அஞ்சலிக்கு கொடிய நோய் உள்ளதாகவும் தினமும் மாத்திரை
சாப்பிடாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்றும் அவரது சித்தி பாரதிதேவி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.இதுகுறித்து பாரதி தேவி,  ‘’அஞ்சலியை என் மகள் போல் பார்த்துக்கிட்டேன். ஒரு தோழி மாதிரி கூடவே இருந்தேன். சினிமாவில் இவ்வளவு அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்தது நான்தான். என்னைப்போய் சொத்துக்களை அபகரித்ததாக சொல்லி நோகடித்து விட்டார். அஞ்சலி மனதை யாரோ கெடுத்திருப்பது தெரியுது ஒரு தமிழர்தான் இதற்கு பின்னணியில் இருக்கிறார். அஞ்சலிக்கு தனியாக வசிக்க ஆசை வந்து விட்டது. நான் அவரை யாருடனும் பேசவிடவில்லை, சித்ரவதை செய்கிறேன் என்கிறார். இவ்வளவு காலமாக வளர்த்து ஆளாக்கி இருக்கேன். அவள் அம்மா, அண்ணன் யாரும் வந்து பார்க்க வில்லை. இப்போ சம்பாதிக்கிறார் என்றதும் ஓடி வருகிறார்கள். எனக்குள்ள பயமெல்லாம் அவர் உடல் நிலை பற்றிதான். அஞ்சலிக்கு கொடிய நோய் இருக்கு.   அதற்காக தினமும் அவர் மாத்திரை சாப்பிட வேண்டும். மாத்திரை சாப்பிடாவிட்டால் உயிரோடு இருக்க முடியாது. என்ன நோய் என்பதை சொல்ல மாட்டேன். அதுபற்றி சொன்னால் அவர் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும்.நான்தான் சினிமாவில் வளர்த்து விட்டேன். நானே அவள் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்க மாட்டேன். அஞ்சலி சம்பாத்தியத்தில் வீடு, கார் வாங்கி இருக்கேன். அவர் பணம் எதுவும் எனக்கு தேவை இல்லை. எல்லாவற்றையும் திருப்பி கொடுத்து விடுவேன்’’என்று தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்முறை! மதங்கள் போடும் இரட்டை வேடம்!lord krishna with gopis
மாதவிலக்கை தீட்டாக பார்ப்பதும், அதன் காரணமாகவே பெண்களை இழிவுப்படுத்துகிற பழக்கமும் எளிய மக்களிடம் எப்போதும் இருந்ததில்லை. ஆதிக்க ஜாதிகளிடமும் நில உடமையாளர்களிடமும் உள்ள இழிவான செயல் அது.
எவன் பெண்ணை வெறும் ‘உடல் உறவுக்கான உறுப்பு மட்டுமே’ என்று பயன்படுத்தினானோ, அவனே மாதவிலக்கை தீட்டு, என்று சொல்லி இழிவுப்படுத்தினான். காரணம், அந்த நாட்களில் உறவு கொள்ள முடியாது என்பதினாலேயே.

‘பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?’ என்ற தலைப்பில் ஜனவரி 10 தேதி  நான் எழுதிய கட்டுரை பெரியதாக இருந்தது, அதனால் அதை  படிக்க பலருக்கு நேரம் அமையவில்லை. ஆகையால் அந்தக் கட்டுரையை இரண்டு பகுதிகளாக வெளியிடவேண்டும் என்றும் தோழர்கள் கேட்டு கொண்டதற்காக அதன் முதல் பகுதி. குறைந்த உடையில் ‘நடிக்க’ வைக்கப்பட்ட நடிகைகளின் படங்களை பத்திரிகையில் பெரிதாக பிரசுரித்து, தன்னுடைய ஆண் வாசகர்களுக்கு ‘மாமா வேலை’ பார்க்கும் ‘அந்த’ பத்திரிகைகள்; ‘உடல் அழகை அதிகம் வெளியில் காட்டாமல் உடுத்தும் பெண்களை பார்க்கும் ஆண்களுக்கு விபரீதமான எண்ணங்கள் ஏற்படுவதில்லை.’ என்று பாலியல் கொடுமைகளுக்கு காரணம், பெண்களின் உடைதான் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் போல் கருத்து சொல்கின்றன. ஆனால், டெல்லியில் ஒரு பெண்ணை கொடூரமாக குதறி எடுத்தவர்கள் பற்றி எழுதும்போது, அதே பத்திரிகைகள் ரொம்ப யோக்கியர்கள் போல்,
பாலியல் வன்புணர்வு செய்தவர்களை, வெறிநாய்கள் என்றும் எல்லோரையும் தாயாகவும், நாட்டையே தாயாக பார்க்கும் நாட்டில் இப்படிப்பட்டவர்களை தூக்கில் போடவேண்டும் என்றும் தீர்ப்பெழுதின.
தாய் நாடு என்று பெண்ணை நாடாக பார்ப்பார்கள், பெண்ணை நதியாக பார்ப்பார்கள், பெண்ணை கடவுளாக பார்ப்பார்கள்; ஆனால் பெண்ணை பெண்ணாக மட்டும் பார்ப்பதில்லை.

ஐதராபாத்தில் நடிகை அஞ்சலியை காணவில்லை ! கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம்

ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த நடிகை அஞ்சலியை
நேற்று காலையில் இருந்து காணவில்லை என்று அவரது அண்ணன் ரவிசங்கர் ஜூபிளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார்.மார்ச் மாதம் 31–ந்தேதியில் இருந்து நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தனது சித்தப்பாவுடன் தங்கியிருந்தார். நேற்று காலை சித்தப்பா குளிக்கச் சென்ற சமயத்தில் 8 மணியில் இருந்து 9 மணிக்குள் நடிகை அஞ்சலி மாயமாகிவிட்டார்.அஞ்சலி எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவர் காணாமல் போனதில் இருந்து அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அஞ்சலியை யாராவது கடத்திச்சென்றிருக்கலாம் என்று சந்தேகமாக இருக்கிறது. எனவே அவளை கண்டுபிடித்து தரும்படி புகாரில் ரவிசங்கர் கூறியிருக்கிறார். ஜூபிளி ஹில்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நடிகை அஞ்சலியை வைத்து பணம் பண்ணிய சித்தியும் களஞ்சியமும்


களஞ்சியமும்  அஞ்சலியின் சித்தியும்  நீட்டி முழக்கும் தோரனையை பார்க்கும்  போது  மிக தெளிவாக தெரிகிறது .  இவன் ஒரு பெரிய தமிழ் தலைவன் என்று தன்னை தானே சாயம் பூசுகிறார்  , அது தான் போகட்டும்  தான்  உலக தமிழர்களின்   ஒரு பெரிய தலைவராக இருக்கிறாம்  சொல்கிறார்  பாருங்கள் ? இவரை மிக விபரமாக  விசாரிக்க வேண்டும்  . வேறு பல  சமாச்சாரங்களும் வெளியே வரும்

வளம் தரும் பனையை அழிய விடலாமா?

tamilmurasu.org   மரங்களின் பலன் வார்த்தைகளால் அளக்க
முடியாதது. ஒவ்வொரு மரமும் தன் வாழ்நாள் முழுவதும் காய், கனி, மரக்கட்டை என பல விதங்களில் பயன்படுகிறது. எல்லா மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்க, பனை மரங்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து விட்டது. கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மரங்களை சார்ந்துள்ள பனைநார் தொழில்களும் நலிந்து கிராம பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஉலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும்  தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்த வரை, அதனால் வருமானம் கிடைத்தவரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. அதன்பிறகு, பனை மரங்களை கைவிட்டு விட்டனர் விவசாயிகள். வறட்சி காரணமாக பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடிதான் உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

அசிட் விற்பனைக்கு தடை ? பெண்கள்மீதான அசிட் வீச்சுக்கு STOP

இங்கே  காணப்படும்  vinothini  போன்ற   பெண்களின்  வாழ்வை  கருக்கியது  அசிட் மட்டுமல்ல   ஆணாதிக்க  பயங்கரவாதமும்தான் 

சென்னை: பெண்கள் மீது, "ஆசிட்' வீசப்படுவதை
தடுக்க, தமிழக அர” தீவிர
நடவடிக்கை எடுக்க உள்ளது. "தமிழகத்தில், "ஆசிட்' விற்பனையை ஒழுங்குபடுத்த, சட்டம் கொண்டு வரப்படும்; அதுவரை, "ஆசிட்' விற்பனை, விஷம் சட்டத்தின் கீழ், ஒழுங்குபடுத்தப்படும்' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில், ஈரோட்டைச் சேர்ந்த, சாந்தி என்பவர், தாக்கல் செய்த மனு:உரிமம் பெறாமல், கடைகளில், "ஆசிட்' விற்பனை நடக்கிறது. சமீபத்தில், வினோதினி என்பவர், "ஆசிட்' வீச்சுக்கு பலியானார். பெண்கள் மீது தாக்குதல் நடத்த, "ஆசிட்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. "ஆசிட்' விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும்தடை வேண்டும்:உரிமம் பெறாமல் விற்பவர்கள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். வெடிபொருள் சட்டத்தை, கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். உரிமம் இன்றி, கடைகளில், "ஆசிட்' விற்பனை செய்வதற்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி கிருபாகரன் முன், விசாரணையில் உள்ளது. நேற்று, இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் மணிகண்டன் வதன், ""கடைகளில், "ஆசிட்' தாராளமாக கிடைக்கிறது; "ஆசிட்' விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.தமிழக அரசு சார்பில், சிறப்பு அரசு பிளீடர் இன்பதுரை, ""தடை விதிக்க சாத்தியமில்லை; விற்பனையை ஒழுங்குபடுத்த, கட்டுப்படுத்த, சட்டம் கொண்டு வரப்பட உள்ளது,'' என்றார்.

Wikileaks: புலிகளே தமிழக மீனவர்களை கடத்தி படுகொலை செய்தனர்

புலிகளே தமிழக மீனவர்களை கடத்தி படுகொலை செய்தனர் என்று தமிழக
சட்டசபையில் முதல்வராக இருந்தபோது கருணாநிதி அறிவித்தது ஆச்சரியமானது என்று அமெரிக்க தூதரகம் கருத்து தெரிவித்திருக்கும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.2007ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 12 மீனவர்கள் கடத்தப்பட்டனர். இந்த மீனவர்களை கடத்தியதும் படுகொலை செய்ததும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தான் என்று 2007ம் ஆண்டு சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி பேசியிருந்தார். இதை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் பதிவு செய்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, கொழும்பு அமெரிக்க தூதரகங்களுக்கும் வோஷிங்டனுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. அமெரிக்க தூதரகம் அனுப்பி வைத்த அந்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் தற்போது பகிரங்கப்படுத்தியிருக்கிறது. < அமெரிக்க தூதராக ஆவணத்தில் குறிப்பிடப்படுவது,
2007ம் ஆண்டு மார்ச் 29ம் திகதியன்று தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் சுட்டுக் கொன்றனர். என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வாயடைக்கப்பட்டுள்ளனர்.புலிகள் இது போன்ற எத்தனையோ கொலைகளை செய்துள்ளார்கள் ஆனாலும் புலிகளுக்கு வெள்ளை அடிப்பதையே தமிழக பத்திரிகைகள் செய்து வருவதால் இது போன்ற பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டன

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் அஞ்சலியை ஏன் எதிர்க்கிறார் என்னத்தை எதிர்பார்த்தார் ?

அஞ்சலிக்கு எதிராக புகார் தர தயாராகும் நடிகர் வெங்கடேஷ்! ஏன்... ஏன்? ஹைதராபாத்: நடிகை அஞ்சலிக்கு எதிராக புகார் தரத் தயாராகிறார் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ். இது பலவிதமான சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.நடிகை அஞ்சலி விவகாரம் ஒவ்வொரு நாளும் புதிய பரபரப்பைக் கிளப்பி வருகிறது. நேற்று முன்தினம் தனது சித்தி மீதும், இயக்குநர் களஞ்சியம் மீதும் பல அதிரடி புகார்களை மீடியாவிடம் கூறிய அஞ்சலி, ஹைதராபாதில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.தெலுங்கில் அவர் இரு படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் நடிக்க வசதியாக, நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவரும் அவரது அங்கிள் பாபாய் என்பவரும் தங்கியிருந்தனர்
இந்த நிலையில் இன்று அஞ்சலி மீது சென்னையில் புகார் கொடுத்திருந்தார் மு.களஞ்சியம் . அடுத்த சில மணி நேரங்களில் அஞ்சலியைக் காணவில்லை என்று ஹைதராபாதிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. இதனை அஞ்சலியின் சகோதரர் ரவிசங்கரும் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்த நிலையில் ஏற்கெனவே பலவித பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் அஞ்சலி மீது, படப்பிடிப்புக்கு வரவில்லை என்று கூறி புகார் தரப்போவதாக நடிகர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இவருடன் போல்பச்சன் பட ரீமேக்கில் நடிக்கத்தான் அஞ்சலி ஹைதராபாதில் முகாமிட்டார்.பொதுவாக இந்த மாதிரி சிக்கலில் நடிகைகள் சிக்கித் தவிக்கும்போது, உடன் நடிப்பவர்கள் உதவுவதுதான் வழக்கம். ஆனால் அஞ்சலிக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக வெங்கடேஷ் அறிவிப்பு அமைந்துள்ளது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. குறிப்பாக வெங்கடேஷ் படத்தை ஒப்புக் கொண்டதிலிருந்துதான் அஞ்சலிக்கு டார்ச்சர் ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

காதல் தோல்வியால் துவண்டிருந்த ஆண்ட்ரியா காதலுக்கு ரெட் கார்ட்

ஆண்ட்ரியாவை நான் காதலிக்கிறேன்’ என்று பிரபல மலையாள இயக்குநரின்
மகனும், குறிப்பிடத்தகுந்த நடிகருமான ஃபஹத் ஃபாசில் அறிவித்தாலும் அறிவித்தார், கேரள திரையுலகமே ரணகளமானது. ஆனால், தமிழ்த் திரையுலகம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் ஆண்ட்ரியாவின் பல காதல்களைப் பார்த்து சலித்து விட்டதுதான். ஒரு வாரம் மவுனமாக இருந்த ஆண்ட்ரியா, பிறகு திருவாய் மலர்ந்தார். ‘என்னை காதலிப்பது அவரது விருப்பம். அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. பட், நான் அவரை காதலிக்கவில்லை’ என ஆசிட் ஊற்றியிருக்கிறார். இருவருக்கும் இடையில் என்னதான் நடந்தது? ‘அன்னையும் ரசூலும்’ மலையாளப் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அப்போது தொடர் காதல் தோல்வியால் துவண்டிருந்த ஆண்ட்ரியா, உடன் நடித்த ஃபஹத்திடம் நட்பாகப் பழகியிருக்கிறார்.

காதல் கௌரவ கொலைகள் பற்றிய ராதாமோகனின் புதிய படம்


கவுரவ கொலைக்கு எதிராக
ராதாமோகன் இயக்கியுள்ள படத்துக்கு எதிர்ப்பு
கிளம்பி உள்ளது. ‘பயணம்‘, ‘மொழி‘ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராதா மோகன். அடுத்து பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ‘கௌரவம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் ஜாதி பிரச்னையையும், தருமபுரி சம்பவத்தையும் மையமாக வைத்தும் உருவாகியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த சிலர் கவுரவ கொலை என்ற பெயரில் ஒருவரை கொல்வதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதை ஏற்கமுடியாது. படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று கோவை பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி ராதாமோகன் கூறும்போது, ‘இப்படம் கவுரவ கொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்ப்பதற்கு முன் படத்தை பார்க்கும்படி குறிப்பிட்ட சமூகத்தினரிடம் கேட்டிருக்கிறேன். மேலும் தருமபுரி சம்பவத்தை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்படவில்லை. அந்த சம்பவம் நடந்த நேரத்தில் எனது படத்தின் 80 சதவீத பணிகளை நான் முடித்துவிட்டிருந்தேன். இப்படத்தை பார்த்தால் எனது நோக்கம் என்ன என்பது எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு புரியும். அரசு கேட்டுக்கொண்டால் இப்படத்தை ரிலீசுக்கு முன்பே திரையிட்டு காட்ட தயார்‘ என்றார்.

தமிழக தாலிபான்கள் : மாணிக்க வினாயகம் இலங்கையில் பாடக்கூடாதாம்

யாழ்பாணத்து  நல்லூர் கோவிலின் அழகிய தோற்றங்கள் 
இலங்கைக்குப் போய், அங்குள்ள கோவில் ஒன்றில்
இசை நிகழ்ச்சியில்
பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டனர் பெரியார் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்.
இலங்கையில் நடக்கும் விழாக்களுக்கு தமிழகத்திலிருந்து யாரும் போகக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக திரையுலகினர் யாரும் இலங்கைக்குப் போகக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி என அனைத்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே இலங்கை சென்று வந்த அசின், பாடகர் கிரீஷ், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி ஆகியோருக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தற்போது மிகப்பெரிய  தொல்லையாக உருவாகி இருப்பது தமிழ் நாட்டில்  தமிழ் தீவிரவாதி போர்வையில்  அரசியல் பண்ணும் சமுக விரோதிகளும்  கூத்தாடிக்களும்தான்
viruvirupu.com

நடிகை அஞ்சலி: என்னை உயிரோடு விட்டால் போதும்! கொத்தடிமையாக வைத்து பணம் பண்ணிய களஞ்சியமும் பாரதிதேவியும்

இவன்தான் அந்த களஞ்சியம் எங்கே மறைந்திருக்கிறான் என்று பாருங்கள் 
டைரக்டர் களஞ்சியம் அஞ்சலியை பற்றிய தெரியாத ரகசியங்களை போட்டுஉடைப்பேன் என்று பேட்டி கொடுத்துள்ளார் .இந்த பேட்டிஒன்றே போதும்  இவர் யாரென்று  தெரிகிறது ,  இவர்அஞ்சலியைகடுமையாக பயன்படுத்தி அவரின் சொத்துக்களைஎல்லாம்சூறையாடி இருக்கிறார்என்பதை நிரூபிக்கஇதைவிட வேறு ஒப்புதல்வாக்குமூலம்தேவைஇல்லை அஞ்சலியின் உயிருக்கு நிச்சயம் ஆபத்துஇருப்பதாகதான்தெரிகிறது 

நான் இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறேன். ஆனால் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை சொல்லமாட்டேன். அப்படி சொன்னால் எனக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறேன். விரைவில் களஞ்சியம் மீதும் எனது சித்தி மீதும் போலீசில் புகார் கொடுப்பேன்.”- என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்
 சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் இதுநாள்வரை என்னை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சினிமாவில் நான் நடித்து சம்பாதித்த சொத்து முழுவதையும் அவர்கள்தான் வைத்திருக்கிறார்கள். சென்னை வளசரவாக்கத்தில் ஒரு வீடு தான் என் பெயரில் உள்ளது.
இத்தனை நாள் அவர்களின் கொடுமையை நான் தாங்கிக்கொண்டேன். சமீபகாலமாக அவர்களது கொடுமை எல்லை மீறிவிட்டது. சினிமாவில்தான் நான் உறசாகமாக ப்ரீயாக இருப்பதுபோல் தோன்றுகிறேன்.அப்படி வெளியுலகுக்கு என்னை கலர் புல்லாக காட்டி விட்டு வீட்டுக்கு சென்றதும் சித்தியும், டைரக்டர் களஞ்சியமும் என்னை டார்ச்சர் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.என்னை யாரும் போனில் தொடர்புக் கொண்டால் கூட அதை வைத்து கேள்விகளாக கேட்டு மெண்டலாக்க முயன்றார்கள்..
அவர்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தால் கையில் கிடைத்ததை எடுத்து என்னை அடிப்பார்கள். இதையடுத்து என்னை சுதந்திரமாக விடச் சொல்லி கேட்டதும் இன்னும் மிரட்ட தொடங்கிவிட்டார்கள்.எங்கே என்னை கொலை செய்து விடுவார்களோ என்று எனக்கு இப்போதும் பயமாக இருக்கிறது. என் அம்மாவையும் கூட அவர்கள் மிரட்டுகின்றனர். நான் இதுவரை சம்பாதித்த சொத்துக்களைகூட அவர்களே எடுத்துக் கொள்ளட்டும். என்னை உயிரோடு விட்டால் போதும். எப்படியோ தப்பித்து வந்து ஹைதராபாத்தில் நான் இப்போது இருக்கிறேன்.
ஆனால் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை சொல்லமாட்டேன். அப்படி சொன்னால் எனக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறேன். விரைவில் களஞ்சியம் மீதும் எனது சித்தி மீதும் போலீசில் புகார் கொடுப்பேன்.மேலும் இந்த பிரச்னைக்கு காரணம் ஜெய்யை நான் காதலிப்பதுதான் என்றும் அவர்கள் கட்டிவிட்ட கதைதான்.அது மட்டுமில்லாமல் நான் வேறு யாருடனோ ஓடிவிட்டதாக கூட சித்தி அவதூறு பரப்பக்கூடும். அதனால்தான் உணமைகளை கேட்கும் பத்திரிகையாளர்களிடம் நடந்த்தைச் சொல்கிறேன்.விரைவில் எல்லா பத்திரிகையாளர்களையும் சந்தித்து இன்னும் நிறைய பேசுகிறேன்””.என்று அஞ்சலி தெரிவித்தார். இந்த சம்பவத்தால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.