சனி, 26 ஜூலை, 2025

இலங்கை செல்ல 40 நாடுகளுக்கு விசா தேவை இல்லை சுற்றுலா துறை வளர்ச்சிக்கு ஊக்கம்

தினமணி :  : இலங்கை வரும் பயணிகளுக்கு இலவச வீசா! (நாடுகளின் முழு பட்டியல் வெளியீடு!)
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சியாக, மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இன்று (25) கொழும்பில் நடைபெற்ற ‘Hotel Show Colombo 2025’ கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை (28) மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வடநாட்டு கொடூரனை அடையாளம் காட்டிய ர் சிறுமி!- ரயிலில் வந்து பலாத்காரம்.

 tamil.oneindia.com -   Yogeshwaran Moorthi  :  திருவள்ளூர்: திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள்ளார். 
இவரைப் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி அடையாளம் காட்டி இருக்கிறார். கைதானவரின் புகைப்படத்தை சிறுமியிடம் காட்டி காவல்துறையினர் உறுதி செய்திருக்கின்றனர். 
ஏற்கனவே 2 பேரைக் காவல் துறையினர் விசாரித்த நிலையில், உண்மை குற்றவாளி சிக்கி இருக்கிறார். 
இவர் ஆந்திராவில் இருந்து ரயிலில் வந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி அரசு உதவி பெறும் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜூலை 12ஆம் தேதியன்று பள்ளி முடிந்து நண்பகலில் தனது பாட்டி வீட்டிற்குத் திரும்பி இருக்கிறார்.

ஏமனில் நிமிஷா பிரியாவின் தூக்கு நிறுத்தம் … விரைவில் நாடு திரும்புவார்?

 தினமணி :ஏமன் நாட்டில் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக சிக்கித் தவிக்கும் கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாதான் (37) கடந்த சில நாள்களாகவே பலரின் பிரார்த்தனைகளில் இருந்து வருகிறார் எனலாம்.
அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை திரும்பப்பெறப்பட்டு, அவர் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என நாட்டு மக்கள் பலரும் வேண்டி வருகின்றனர் எனலாம்.
நிமிஷா பிரியா தனது குடும்பத்தின் வறுமை நிலையை போக்குவதற்காக 2008ஆம் ஆண்டில் கேரளாவில் இருந்து ஏமன் நாட்டிற்கு குடிபெயர்ந்தார். அங்கு செவிலியராக பணியாற்றிய அவர் ஒரு கட்டத்தில் பார்ட்னர்ஷிப்பில் சொந்தமாக ஒரு மருத்துவமனையை தொடங்கும் நிலைக்கு உயர்ந்தார்.

சார்லி சாப்ளினின் The Great Dictator – Final Speech இலகு தமிழில்.

 S T Nalini Ratnarajah :    மிகவும் பிரபலமான சார்லி சாப்ளின் உரையின் (The Great Dictator – Final Speech) இலகு தமிழில். 
"மன்னிக்கவும், ஆனால் நான் பேரரசராக இருக்க விரும்பவில்லை – 
அது என் வேலையல்ல.
நான் யாரையும் ஆள விரும்பவில்லை, வென்றெடுக்க விரும்பவில்லை.
முடிந்தவரை எல்லாருக்கும் உதவவேண்டும் – யூதர், கிறிஸ்தவர், கருப்பர்கள், பெண்கள் – எல்லாருக்கும்.
நாமெல்லாம் ஒருவருக்கொருவர் உதவ விரும்புகிறோம்.
மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறோம்.
நாம் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு வாழ விரும்புகிறோம், வேதனையோடு அல்ல.
நாம் ஒருவருக்கொருவர் வெறுக்க வேண்டாம், 
அவமதிக்க வேண்டாம்தான்.
இந்த உலகில்  எல்லோருக்கும் போதுமான இடமுள்ளது.

வெள்ளி, 25 ஜூலை, 2025

கமல்ஹாசன் விழுமிய முறைமையுடன்'.. மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதியேற்றார்

 மின்னம்பலம் - Mathi : மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் திமுக எம்.பிக்கள் இன்று பதவியேற்றனர்.
திமுகவின் மாநிலங்கவை உறுப்பினர்களாகப் பணியாற்றிய எம்.எம்.அப்துல்லா, வில்சன், சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுகவின் சந்திரசேகரன், பாமகவின் அன்புமணி ஆகியோரது பதவிக் காலம் நேற்று ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைந்தது. 

ரூ.3.24 கோடி வழிப்பறி வழக்கில் கைதான திருவாரூர் பாஜக நிர்வாகிகள்

 Hindu Tamil  : கேரளாவில் ரூ.3.24 கோடி வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூர் பாஜக நிர்வாகிகள் 2 பேரை கட்சியிலிருந்து நீக்கி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் என்ற இடத்தில் கடந்த ஜூன் 13-ம் தேதி நகைக் கடை அதிபரிடம் இருந்து ரூ.3.24 கோடி பணம் வழிப்பறி செய்யப்பட்டது தொடர்பாக கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ ஆட்சேபம் |

Hindu Tamil : சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ ஆட்சேபம்
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
மதுரை: ​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்​புச் சாட்​சி​யாக (அப்​ரூவர்) மாற சிபிஐ தரப்​பில் கடும் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது.
 தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​குளத்​தைச் சேர்ந்த ஜெய​ராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் 19-ல் போலீ​ஸா​ரால் தாக்​கப்​பட்​ட​தில் உயிர்​இழந்​தனர்.

வியாழன், 24 ஜூலை, 2025

ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஏன் - அப்போலோ விளக்கம்!

 மின்னம்பலம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறித்து அப்போலோ மருத்துவமனை இன்று (ஜூலை 24) விளக்கம் அளித்துள்ளது. Why did Stalin undergo angioplasty – Apollo explains!
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடல் நல குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தால் மீண்டும் எம்.பி ஆகலாம்- மத்திய அமைச்சர் பேச்சு

 மாலை மலர்  : பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை.
இதனால் 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய வைகோ இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மாநிலங்களவையில் வைகோ உரையாற்றினார்.

புதன், 23 ஜூலை, 2025

ஜெகதீப் தன்கரை மிரட்டிய மோடி டீம்! அடுத்த துணை ஜனாதிபதி ராஜ்நாத்சிங்- திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜி

 minnambalam.com - Mathi: நாட்டின் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் பதவி விலக வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் அவரது கேபினட் அமைச்சர்கள்தான் மிரட்டல் விடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி எம்பி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். PM Modi Jagdeep Dhankhar
இது தொடர்பாக கல்யாண் பானர்ஜி கூறுகையில், நீதிபதி வர்மாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இம்பீச்மென்ட் ( தகுதி நீக்கம்) தீர்மானத்தை மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் ஏற்றுக் கொண்டதை மத்திய அரசு விரும்பவில்லை.

அதிமுக கூட்டணிக்கு வருமாறு EPS அழைப்பு! - நிராகரித்த விஜய், சீமான்

 hindutamil.in : சென்னை: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணிக்கு வருமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி விடுத்த அழைப்பை தவெக தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் உடனே நிராகரித்தனர். 
அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, ஆங்​கில நாளிதழுக்கு அளித்த பேட்​டி​யில், "தி​முகவை தோற்​கடிக்க ஒரு​மித்த எண்​ணம் கொண்ட அனைத்து கட்​சிகளும் அதி​முக​வுடன் கைகோக்க வேண்​டும்.
இது விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் மற்​றும் சீமானின் நாம் தமிழர் கட்​சிக்​கும் பொருந்​தும். இது​வரை தவெக​வுடன் எந்த பேச்​சு​வார்த்​தை​யும் நடத்​த​வில்​லை" என கூறி​யிருந்​தார். இதற்கு பதிலளிக்​கும் வகை​யில் கொள்கை விளக்க மாநாடு பற்​றிய புகைப்படம் தவெக​வின் அதி​காரப்​பூர்வ சமூக வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

செவ்வாய், 22 ஜூலை, 2025

வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார்: மாநில எல்லைகளைத் தாண்டி பங்கேற்ற போராட்ட களங்கள்

 பிபிசி முரளிதரன் காசி விஸ்வநாதன் : வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார்: மாநில எல்லைகளைத் தாண்டி பங்கேற்ற போராட்ட களங்கள்
"மார்க்சிஸ்ட் தலைமையை மீறி கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு" - அச்சுதானந்தன் கண்ட போராட்ட களங்கள்
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த வி.எஸ். அச்சுதானந்தன், மாநில எல்லைகளைத் தாண்டியும் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் ஆர்வம் காட்டியவர். கட்சியின் நிலைப்பாட்டைத் தாண்டியும் கூடங்குளம் அணு உலை போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர்.

கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ( CPM ) (வயது 101) காலமானார்!

 மின்னம்பலம் -  Mathi : கேரளா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் CPI(M) கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் தமது 101 வயதில் இன்று ஜூலை 21-ந் தேதி காலமானார். Achuthanandan CPI(M)
இந்தியாவின் மூத்த இடதுசாரித் தலைவரான அச்சுதானந்தனுக்கு வயது 101. கேரளா மாநிலத்தில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தவர்.
திருவனந்தபுரத்தில் தமது வீட்டில் இருந்த போது கடந்த ஜூன் 23-ந் தேதி அச்சுதானந்தனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. 
இதனையடுத்து அவர் திருவனந்தபுரம் Sree Uthradom Thirunal மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

திரு அன்வர்ராஜா( அதிமுக) திமுகவில் இணைந்தார் மேலும் பல அதிமுகவினர் வருவார்கள்! !

 தினகரன்  சென்னை: தமிழகத்தில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். 
2014 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்வர் ராஜா ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு சசிகலாவின் பக்கம் நின்றார். nbsp;
பிறகு எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். முத்தலாக் மசோதாவை பாஜ அரசு கொண்டு வந்தபோது அதை கடுமையாக எதிர்த்தார். 

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா! அடுத்த துணை ஜனாதிபதி யார்? பட்டியலில் முக்கிய பிரபலங்கள்

 தினமலர் : புதுடில்லி; நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி தேர்வு பட்டியலில் ஜம்மு காஷ்மீர் கவர்னர் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜக்தீப் தன்கர் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். 2027ம் ஆண்டு ஆக.10ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிய இருந்தது. ஆனால் பதவிக்காலம் முடியும் முன்பே பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

திங்கள், 21 ஜூலை, 2025

முதல்வர் ஸ்டாலின் அப்போலோவில் அனுமதி!

 மின்னம்பலம் - Kavi :முதல்வர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். cm stalin admitten in apollo hospital
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை இன்று (ஜூலை 21) வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
அவருக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை.. புதிய வீடியோ - பொதுமக்களை அலர்ட் செய்த போலீஸ்

  tamil.oneindia.com - Mani Singh S  : சென்னை: திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். 
8 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் குற்றவாளி பிடிபடவில்லை. 
இந்த நிலையில் சந்தேகப்படும் நபரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போலீசார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். 
மேலும் சந்தேக நபர் குறித்த அடையாளம் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்குமாறு திருவள்ளூர் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தாய்லாந்து புத்த துறவி - “ரூ.100 கோடி கொடுத்து இளம்பெண்ணிடம் உல்லாசம்

தினத்தந்தி :  “பாங்காக்,தாய்லாந்து நாட்டில் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் அந்த நாட்டில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
புத்தமதம் என்பது ஏராளமான ஆன்மிக கோட்பாடுகள் கொண்டது. அன்பாக வாழ வேண்டும் பிறரை நேசிக்க வேண்டும் இல்லற வாழ்க்கையிலும் கூட கண்ணியங்களை கடைபிடிக்க வேண்டும்,
முற்றிலும் ஆசையை தூக்கி எறிய வேண்டும் என்பது உட்பட ஏராளமான ஒழுக்கங்கள் புத்த மதத்தில் வகுக்கப்பட்டுள்ளன.

ஞாயிறு, 20 ஜூலை, 2025

தெரு நாய்கள் கருத்தடையை தடுத்தால் சிறை - கேரள அரசு அதிரடி!

 மின்னம்பலம் : கேரளாவில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதை தடுத்தால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Jail for stray dogs if they prevent sterilization in Kerala
தமிழகத்தை போலவே அண்டை மாநிலமான கேரளாவிலும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் கடிப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேரள அரசு பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு மட்டும் தெரு நாய் கடித்து சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை லட்சம் என புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஆண்டு சுமார் 21 பேர் வெறி நாய் கடித்ததில் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.

திருமதி ஜெயதேவி பேட்டி! : திரு வேலு பிரபாகரனின் முதல் மனைவி!

 மறைந்த இயக்குனர் நடிகர் திரு வேலு பிரபாகரனின் முதல் மனைவி திருமதி ஜெயதேவி பேட்டி!
இவரை விட்டுவிட்டு மறைந்த நடிகை சிலுக்கு சிமிதாவோடு குடும்பம் நடத்தினர் 
பின்பு இறுதியாக நடிகை ஷெல்லி தாஸை திருமணம் செய்து கொண்டார் 
ஆனாலும் இறுதி காலத்தில் தனிமையக்கதான் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது  

மு.க. முத்து : ஸ்டாலினுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம்! 30 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய முத்து!

2011 ஆம் ஆண்டு மறைந்த மு.க. முத்துவின் பிறந்தநாளையொட்டி, அப்போதைய தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். (பழைய படம்)

 dinamani.com  :  2011 ஆம் ஆண்டு மறைந்த மு.க. முத்துவின் பிறந்தநாளையொட்டி, அப்போதைய தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். (பழைய படம்)கருவூலத்திலிருந்து...
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் இருப்பதாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே தொலைநோக்குடன் குறிப்பிட்டவர், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகனான மறைந்த மு.க. முத்து!
1996 செப்டம்பர் மாதத்தில் வார இதழொன்றுக்காக அளித்த நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்தார் முத்து.