சனி, 11 ஜூலை, 2020

ஜோர்ஜ் புளொய்ட்டின் இறுதித்தருண வார்த்தைகள் .. “அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். என் பிள்ளைகளை நான் மிகவும் நேசிக்கிறேன் வீடியோ


“அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் போகிறேன்” மனதை பதறவைக்கும் ஜோர்ஜ் புளொய்ட்டின் இறுதித்தருண வார்த்தைகள் வெளியானது !- வீடியோneomedia247.com: : அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் புளோய்ட் என்பவர் பொலிஸாரால் கொல்லப்பட்ட இறுதி நிமிடத்தில் அவர் பேசிய வார்த்தைகள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த மே மாதம் 25ஆம் திகதி அமெரிக்காவின் மின்னெபொலிஸ் நகரைச் சேர்ந்த ஜோர்ஜ் புளோய்ட் என்ற கறுப்பினத்தவர் டெரிக்சாவின் என்ற வெள்ளை இனத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்.
தனது முட்டியால் புளோய்டின்  கழுத்தை பொலிஸ் அதிகாரி நெரித்துக்கு கொண்டிருக்க, தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று புளோய்ட் கூறிய இறுதி வார்த்தைகள் உலகத்தின் மனச்சாட்சியை இனவெறிக்கு எதிராக தட்டியெழுப்பியது.

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் ரத்து

வெப்துனியா : சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவிவரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 1 கோடி மக்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிகப்பட்டுள்ளனர். டெல்லி மாநில அரசு அனைத்துப் பல்கலைக் கழக பருவத் தேர்வுகளும், இறுதியாண்டுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது..வேகமாகப் பரவிவருவதை அடுத்து, நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலை மற்றும் கல்லூரித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இனி எப்போது தேர்வுகள் நடைபெறும் என்ற அனைவரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் பல்கலைக் கழக தேர்வுகள் மற்றும் கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகள் நடைபெறும் என யுஜிசி அறிவித்து வழிகாட்டி நெறுமுறைகள வெளியிட்டது.
இந்த நிலையில் டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் பல்கலைக் கழகங்களுக்கான தேர்வை நடத்தும் திட்டம் இல்லை எனவும் அதற்கான சூழலு, இல்லை என அம்மாநில துணை முதல்வர் மணீஸ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கல்லூரி இறுதி ஆண்டில் முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைத்திருந்தால் அதில் இணைந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சாத்தான்குளம் வீடியோவை நீக்கினார் சுசித்ரா .. போலீசால் மிரட்டப்பட்டார் பாடகி சுசீத்திரா வீடியோ


சிபிசிஐடி போலீசார் விசாரணை - சாத்தான்குளம் வீடியோவை நீக்கினார் சுசித்ரா தினத்தந்தி : சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாடகி சுசித்ரா தான் பதிவிட்ட வீடியோவை நீக்கி விட்டார்.
சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ், போலீசார் விசாரணையில் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தைத் தாண்டி உலக அளவில் பேசப்பட்டது. பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
இதனிடையே சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை விரிவாக ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார் பின்னணி பாடகி சுசித்ரா. இதையடுத்து ஆங்கில ஊடகங்கள் இச்சம்பவம் குறித்து பேசத் தொடங்கின. சாத்தான்குளம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய சிபிசிஐடி போலீசார், 10 காவல்துறையினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் விடுத்திருக்கும் அறிக்கையில், “பாடகி சுசித்ரா, என்பவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சாத்தான்குளம் நிகழ்வு குறித்த காணொளி முற்றிலும் உண்மைத்தன்மையற்றது.

விகாஸ் துபே கொல்லப்பட்ட நிமிடங்கள் .. எது உண்மை ? ஒரு போதும் வெளியே வராது .

எங்கே நடந்தது tamilondeindia : தமிலோன்டிந்திய உத்தர  பிரதேசத்தை உலுக்கிய தாதா விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் நேற்று நடந்த இரண்டு சம்பவங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. < இந்தியாவையே அதிர வைத்த ரவுடி... Vikas dubey சிக்கியது எப்படி?<உத்தர பிரதேசத்தை உலுக்கிய போலீஸ் கொலை வழக்கில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை உத்தர பிரதேசத்தை சேர்ந்த முக்கிய கேங்ஸ்டர் விகாஸ் துபேவை கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைத்து சென்றது.
தன்னை கைது செய்ய வந்த போலீசார் மீது விகாஸ் துபே துப்பாக்கி சூடு நடத்தினார். விகாஸ் துபேவின் கேங் மொத்தமாக சேர்ந்து போலீஸார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
எங்கே நடந்தது?
கான்பூரில் இருக்கும் சோபேபூர் போலீஸ் நிலையத்திற்கு அருகே இருக்கும் டிக்கூர் பகுதியில் துபே தங்கி இருப்பதாக தகவல் வந்தது. அவரை கைது செய்ய 20 போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றார்கள்.இந்த நிலையில் போலீசார் விகாஸ் துபேயின் வீட்டை நெருங்கிய போது, அங்கு இருந்த துபேயின் கூட்டாளிகள் போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அங்கு துபேயின் ஆட்கள் 20க்கும் அதிகமானோர் இருந்தனர். போலீசார் மீது சரமாரியாக அடுத்தடுத்த துப்பாக்கியால் சுட்டனர்.

கொரோனா வைரஸ் சிகிச்சை: தமிழகத்தில் இந்தியாவிலேயே 2-வது பிளாஸ்மா வங்கி

மருத்துவர்BBC : கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிளாஸ்மா தெரப்பி மூலம் சிகிச்சை அளிக்க, சென்னையில் இரண்டு கோடி ரூபாயில் பிளாஸ்மா வங்கியை நிறுவும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பிளாஸ்மா தெரபி (ஊநீர் சிகிச்சை) தொடர்பான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) ஆகியவற்றிடம் தமிழ்நாடு அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
‘பிளாஸ்மா தெரபி’ அல்லது ஊநீர் சிகிச்சை என்பது என்ன?
ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு.
இந்த அடிப்படையில் கோவிட்-19 நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செலுத்தப்படும்போது, அவர்கள் உடலில் உள்ள கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும்.

சிங்கப்பூரில் ஆளும் கட்சி மீண்டும் வெற்றி .. எதிர்கட்சிகள் முதல் தடவையாக 10 தொகுதிகளில் வெற்றி


தினத்தந்தி : சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான  மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்  பாராளுமன்ற தேர்தல் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது. முககவசம், கையுறைகள் அணிந்தபடி சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். வாக்களிக்க வழக்கமான நேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டு இருந்தது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் சாவடிகள் எண்ணிக்கையும்  அதிகரிக்கப்பட்டது.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  இதில்,  ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் போட்டியிட்ட 93 இடங்களில் 90 சதவிகித இடங்களில் ஆளும் கட்சி வெற்றி பெற்றது. அதாவது, மொத்த வாக்குகளில் 61.26 சதவிகித வாக்குகளை ஆளும் கட்சி பெற்றது. அதேவேளையில், எதிர்க்கட்சியான 10 இடங்களை பெற்றது. சிங்கப்பூரில் கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சியின் ஆட்சியே தொடர்வது குறிப்பிடத்தக்கது.

காசக்ஸ்தானில் கொரோனவை விட கடுமையான நோய் ?


latest tamil newslatest tamil news தினமலர் :  பீஜிங்: மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், கொரோனாவை விட ஆபத்தான ஒரு நோய் வேகமாக பரவி வருவதாக, சீனா எச்சரித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 'கொரோனா வைரஸ் பற்றிய தகவலை, சீனா, மற்ற நாடுகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்காதது தான், பாதிப்பு அதிகரித்ததற்கு காரணம்' என, அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், கஜகஸ்தான் நாட்டில் உள்ள சீன துாதரகம், அங்கு வசிக்கும் தங்கள் நாட்டு மக்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவை விட ஆபத்தான நோய், கஜகஸ்தான் முழுதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு, கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 1,772 பேர் பலியாகி உள்ளனர். ஜூனில் மட்டும், 628 பேர் பலியாகி விட்டனர்.

வாடகை கேட்டவரை குத்தி கொன்ற பாஜக செயலாளர் சரவணன் .. நாச்சியார் கோயில்

பாஜக சரவணன்
Savukku Shankar : வாடகையா கேக்குற ? இந்தா வாங்கிக்க.
கும்பகோணத்தில், நாச்சியார் கோவிலில், ஶ்ரீ ஶ்ரீ 1008 சத்திய அபிநவ தீர்த்தர் பிருந்தாவனம் என்ற மடம் உள்ளது. இந்த மடத்தையும் அதன் சொத்துக்களையும் பிராமண ராயர் என்ற பிரிவை சேர்ந்த ஒரு பார்ப்பன குடும்பம் பல ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறது. இந்த குடும்பத் தலைவர், கோபாலன் 60 வயதை கடந்தவர். இவர்தான் இந்த மடத்தின் சொத்துக்கள் அனைத்துக்கும் பவர் ஆப் அட்டர்னி வைத்திருக்கிறார்.
மற்ற கோவில் சொத்துக்களை போலவே, இந்த மடத்தின் சொத்துக்களிலும் குடியிருப்பவர்கள் ஒருவரும் வாடகை கொடுப்பதில்லை. 22 வருடங்களாக வாடகையே கொடுக்காமல், பலர் ஏமாற்றி வருகின்றனர். மடத்தின் நிர்வாகி கோபாலன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வழக்கு தொடுக்கிறார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உயர்நீதிமன்றம் வாடகை கொடுக்காத அனைவரையும் காலி செய்ய சொல்லி உத்தரவிட்டது. இதையடுத்து அனைவரும் காலி செய்தனர்.
இதில் மடத்தின் சொத்தில் டைலர் கடை வைத்திருந்தவர்தான் சரவணன். கடந்த 2014ம் ஆண்டு, மடத்தின் நிர்வாகி கோபாலனை டைலர் கடை வைத்திருந்த சரவணன் சந்தித்து, வழக்கை வாபஸ் பெறச் சொல்லுமாறு தகராறு செய்துள்ளார். அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

வெள்ளி, 10 ஜூலை, 2020

திருப்பதி ஊழியர்களுக்கு வேக வேகமாக பரவும் கொரோனா

latest tamil newsதினமலர் :  திருப்பதி: திருமலையில், பணிபுரியும் தேவஸ்தான ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க, திருமலையில் மார்ச், 20 முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பல்வேறு கட்ட பொது முடக்கத்திற்கு பின், அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் ஜூன், 8 முதல், ஏழுமலையான் தரிசனம் அனுமதிக்கப்பட்டது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி, 12 ஆயிரமாக உயர்ந்தது.
இந்நிலையில், தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் என, 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தேவஸ்தானம் நடத்தி வரும், 'சிம்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது.

திமுக 1971 போலவே திமுக 2021 தேர்தல் முடிவுகளும் அமையக்கூடும்? பொன்விழா வெற்றி ?

டிஜிட்டல் திண்ணை: ஐபேக் சர்வே முடிவுகள்... ஸ்டாலின் ஷாக்! மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: ஐபேக் சர்வே முடிவுகள்... ஸ்டாலின் ஷாக்! மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது
"தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திமுக தனது தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 5 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முதல் கட்டமாக திமுக தலைமைக்கு கொடுத்திருக்கிறது ஐபேக் என்று டிஜிட்டல் திண்ணையில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.
இந்த பட்டியல் ஒரு பக்கமிருக்க தமிழகம் முழுவதும் ஐபேக் டீம் நடத்திய இன்னொரு வித்தியாசமான சர்வே முடிவுகள் திமுக தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொதுவாகவே அரசியல் வட்டாரத்திலும் ஊடக வட்டாரத்திலும் சாம்பிள் சர்வே எனப்படும் முறையே அதிகமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது 7 கோடி பேர் கொண்ட தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை சந்தித்து கருத்துக்களை கேட்டு, அதன் அடிப்படையில் ஒட்டு மொத்த மக்கள் தொகைக்குமான சதவிகிதமாக மாற்றும் முறை தான் சாம்பிள் சர்வே.
ஆனால் ஐபேக் டீம் இம்முறை தமிழகத்தில் திமுகவுக்காக தனது பிரத்தியேகமான சர்வே எடுத்து கொண்டிருக்கிறது.

கீழடியில் பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!

 Sharath Chandar - //tamil.gizbot.com :  கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட 6ம் கட்ட ஆராய்ச்சியில் பல எதிர்பாராத திருப்பங்கள்
நடந்தேறியுள்ளது. தற்பொழுது இந்த ஆராய்ச்சியில் பெரிய தலையுடன் இரண்டு ஆதிகால எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது. இன்னும் பல மர்ம முடிச்சுகள் இந்த 6ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பொருட்கள் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பொருட்கள் மதுரை மாவட்டத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் தான் கீழடி கிராமம் அமைத்திருக்கிறது. இங்கு தான் தற்பொழுது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியில் சுமார் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழர் நாகரீகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வப்னா பெயரில் வெளியான ஆடியோ.. ஸ்வப்னா உயிருக்கு ஆபத்து!

swapna suresh releases an audio about gold casenakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு: கேரளாவில் பூதாகரமாக வெடித்துள்ள தங்கக்கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபராகப் பார்க்கப்படும் ஸ்வப்னாவில் பெயரில் வெளியான ஆடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் கிடைத்தது.
பொதுவாக தூதரகத்திற்கு வரும் பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யமாட்டார்கள். ஆனால், இந்த தகவலை அடுத்து கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்க கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

கேரள ஸ்வப்னாவும் 30 KG தங்கமும் ..பின்னணி என்ன? உதவிய அதிகாரிகள் யார்?

nakkheeran.in - இரா. இளையசெல்வன் : கேரள உயரதிகாரிகள் உடைந்தையுடன் நடந்துள்ள தங்க கடத்தல்களால் கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடத்தலில் தொடர்புடைய அழகி
ஸ்வப்னாவுக்கு முதல்வர் அலுவலகத்துடன் தொடர்பு இருப்பதால், கிடுகிடுத்திருக்கிறது கேரள அரசாங்கம். இந்த நிலையில், தங்கம் கடத்தல் விவகாரத்தின் அனைத்து ஆணி வேர்களையும் கண்டறிய அதிவேக புலனாய்வுகளை துவக்கியிருக்கிறது சி.பி.ஐ. இதனால் கேரள அரசியலில் பரபரப்பும் அதிர்ச்சிகளும் அதிகரித்தபடி இருக்கிறது!
 கேரள அரசில் பணிபுரியும் அழகி ஸ்வப்னாதான் தங்கம் கடத்தலின் பிதா மகள் என்கிற தகவல் றெக்கை கட்டி பறக்க கேரளா முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இந்த சூழலில் அழகி ஸ்வப்னாவை பிடிக்க பல கோணங்களில் வலையை விரித்துள்ளனர் அதிகாரிகள். இதனையடுத்து, யார் அந்த அழகி ஸ்வப்னா, அவரது பின்னணி என்ன, அவருக்கு உதவிய அதிகாரிகள் யார் என்கிற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் சி.பி.ஐ.க்கு கிடைத்துள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா!

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா!மின்னம்பலம் : தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.பழனி, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் கே அர்ஜூனன் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உபி பார்ப்பன ரவுடி என்கவுண்டர் செய்யப்படுவார் என்று முன்பே கூறிய இந்தியா டுடே .ராஜ்தீப் தேசாய்

Rebel Ravi : · உ.பி.பிராஹ்மண ரவுடி விகாஸ் துபேக்குப் பெரிய இடங்களின்
ரகஸ்யங்கள் தெரியும்.
அதனால் அவனை என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்று ஒர் உயர் அதிகாரி கூறியதாக ராஜ்தீப் சர்தேஸாய் எழுதி இருந்தார். நேற்று துபே கைது செய்யப்பட்டவுடன் சங்கிகள் ராஜ்தீப்பை ஓட்டினார்கள். இன்று காலை..வழக்கம் போல தப்பி ஓட முனைந்த துபே, ஸ்கிரிப்ட் படி என்கவுண்டர் செய்யப்பட்டார். எப்புடீ?

விகாஸ் துபே சுட்டு கொலை .. Vikas Dubey killed in encounter அரசியல் மற்றும் போலீஸ் கூட்டாளிகளை தப்ப வைக்க என்கவுண்டர்?

விகாஸ் துபே சுட்டு கொலை ..  போலீஸ் உளவாளிகளையும் பல அரசியல் பிரமுகர்களையும்  தப்ப வைப்பதற்காக  நடந்த என்கவுண்டர்கொலை இது என்ற சந்தேகம் எழுவது இயல்புதான். .

/tamil.oneindia.com : ;கான்பூர்: மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு செல்லும் வழியில் போலீசார் வாகனத்தில் இருந்து தப்ப முயன்ற ரவுடி விகாஸ் துபே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேசம் கான்பூரில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய போலீசார் சென்றனர். ஆனால் போலீசார் 8 பேரை ரவுடி விகாஸ் துபே கும்பல் சுட்டுக் கொன்றது. இதனையடுத்து ரவுடி விகாஸ் துபே கும்பலை கூண்டோடு கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக போலீசிடம் இருந்து தப்ப முயன்ற விகாஸ் துபேவின் கூட்டாளிகள் 2 பேர் நேற்று போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தமிழை கற்று கொள்ளவேண்டிய அவசியம் .. பிறருக்கு ஏற்பட்டு விட்டது ..

Sergio Marquina : நாம் ஏன் ஹிந்தி படிக்கவில்லை ?
ஆரம்பத்தில் எல்லோரையும் போல் திராவிட அரசியல் களமாடியவர்கள் எனக்கு அநீதி இழைத்துவிட்டார்கள் என்றுதான் நானும் நினைததேன். கேரளாவுக்கு போனால் எல்லோரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள்.
பெங்களூரு சென்றால் எல்லோரும் சுந்தரத் தமிழில் பேசுகிறார்கள்.
திருப்பதி போனால் தமிழ் தெரியாத தெலுங்கரே இல்லை.
குஜராத் போனால் பாணி பூரி விற்பவனுக்குக் கூட தமிழ் தெரிகிறது.
உலக அழவில் திருக்குறளை வட இந்தியர்கள் உவமை காட்டுகிறார்கள்.
அப்போது எனக்கு ஒன்று புரிந்தது. 50 வருட திராவிட ஆட்சி நமக்கு தற்சார்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
எவன் ஒருவன் ஒரு மொழியை தெரிந்து கொள்ள அவசியம் ஏற்படுகிறதோ அந்த மொழி பேசும் மக்களை சாந்து வாழவேண்டிய தேவையும் அவசியமும் இருப்பதாலேயே கற்றுக்கொள்கிறான். பயனடைகிறான்.
கேரளத்தவருக்கு தொழில்நிறுவனங்கள் இல்லாத குறை. உயர்கல்வி கட்டமைப்பு இல்லாத குறை. ஏன் ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் சென்னைக்கு வர வேண்டும். திருவனந்தபுரத்தில் ஸ்டுடியோக்களில்லை சில காலம் முன்பு வரை.
அதனால் கேரளத்தவர் தமிழ் கற்றனர். கல்வி கற்க தமிழகம் வந்தனர்.
பெங்களூரை சேர்ந்த கன்னடர்களுக்கும் அப்படித்தான் தொழில்நுட்பங்கள் வேண்டி தமிழகம் வந்தனர். குறிப்பாக அவர்களுக்கு தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவையை அண்டியிருக்க வேண்டிய அவசியமும் தேவையும் இருந்தது.

ரவுடி விகாஸ் துபேயின் அடியாட்களாக போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டனர் ... பார்ப்பன ஜாதி பாசம் ..


தினமலர் : லக்னோ: 'என் மகன் செய்த தவறுகளுக்கு, சரியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்' என உ.பி.,யில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபேயின் தாயார் தெரிவித்தார்.
உ.பி.,யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில், உஜ்ஜைன் நகரின் பிரபல மஹாகாலபைரவர் கோயிலுக்கு வந்த போது கைது செய்யப்பட்டான்.
விகாஸ் துபே கைது குறித்து அவனது தாயார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: என் மகன் ஒவ்வொரு ஆண்டும் மஹாகாலர் கோயிலுக்கு செல்வான். இப்போது அவனை கால பைரவர் தான், சாவிலிருந்து காப்பாற்றி உள்ளார். என் மகன் பா.ஜ.,வில் இல்லை. சமாஜ்வாதி கட்சியில் இருக்கிறான். அவன் செய்த தவறுகளுக்கு சரியான நடவடிக்கைகளை அரசு ஏடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கு நேபாளத்தில் திடீர் தடை.

Velmurugan P tamil.oneindia.com: காத்மாண்டு: இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கு நேபாள அரசு திடீரென தடை விதித்துள்ளது. டிடி செய்தி சேனலை தவிர அனைத்து செய்தி தொலைக்காட்சிகளையும் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணமைக் காலமாக நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மூன்று பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி திடீரென வரைபடம் வெளியிட்டது. வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது..
அப்போது முதல் நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேபாள பிரதமர் ஒலி, கொரோனா வைரஸைவிட, இந்திய வைரஸ் மோசமானது என்று விமர்சித்தார். இந்தியாவிற்கு எதிராக நேபாள அரசு தொடர்ந்து பல்வேறு கருத்துக்ளை வெளியிட்டு வந்தது.
இந்திய தரப்பிலும் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது. சீனா உடனான நட்பால் இந்தியாவை நேபாளம் சீண்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நேபாள அரசு இந்தியாவின் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளையும் ஒளிபரப்ப திடீரென தடை விதித்துள்ளது.

வியாழன், 9 ஜூலை, 2020

சாத்தான்குளம்:`சி.பி.சி.ஐ.டி விசாரணையே தொடர வேண்டும்!’- வியாபாரிகள் கோரிக்கை

விகடன் :
மெழுகுவர்த்தி அஞ்சலி`சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் நடவடிக்கைகள் வேகமாக இருப்பதால், சி.பி.சி.ஐ.டி விசாரணையே தொடர வேண்டும்’ என சாத்தான்குளம் வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து ஜெயராஜின் மனைவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அளித்த மனுவை ஏற்று, தாமாக முன்வந்து வழக்கினை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம். இதையடுத்து கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், தமிழக அரசும் இச்சம்பவம் குறித்த வழக்கை உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிட முடிவு செய்து, சி.பி.ஐ விசாரணைக்கு ஏற்கும் வரை சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணை தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடியை ஏமாற்றிவிட்டாரா ராஜேந்திரபாலாஜி?

எடப்பாடியை ஏமாற்றிவிட்டாரா ராஜேந்திரபாலாஜி?மின்னம்பலம் : பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மீண்டும் ஒரு சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறார். நேற்று (ஜூலை 8) ஆவின் நிறுவனம் சார்பில் 5வகையான புதிய பால் பொருட்களை தமிழக முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, ஆவின் டீ மேட் பால், பண்படுத்தப்பட்ட பால் ஆகிய ஐந்து பொருட்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
ஆனால், இந்த ஐந்து பொருட்களில் நான்கு பொருட்கள் ஏற்கனவே ஆவினால் விற்கப்பட்டு வருவதுதான் என்றும், இதில் புதிதாக தொடங்க என்ன இருக்கிறது என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ. பொன்னுசாமி வெளியிட்டுள்ள செய்தியில்,

தீவிர கண்காணிப்பில் தங்கமணி

தீவிர கண்காணிப்பில் தங்கமணிமின்னம்பலம் : தீவிர கண்காணிப்பில் தங்கமணி தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கொரோனா நோய்த்தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (ஜூலை 8) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்களில் முக்கியமானவரான தங்கமணிக்கு தொற்று ஏற்பட்டிருப்பது அதிமுக வட்டாரங்களிலும் அரசு வட்டாரங்களிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தங்கமணிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம்.
"அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டம் முழுதும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை ஊரடங்கு நேரத்தில் வழங்கினார். அதற்கு தனது மகன் தரணியை தான் பொறுப்பாளராக பார்த்துக் கொள்ளச் செய்தார். படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கட்சிக்காரர்களும் அரசு அதிகாரிகளும் தங்கமணியை தொடர்ந்து சந்தித்து வந்தனர்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஒடுக்கப்பட்டோரை முதலில் அழைத்துச் சென்றது சுயமரியாதை இயக்கங்களே!

பெரியார் அழகன் :
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஒடுக்கப்பட்டோரை முதலில் அழைத்துச் சென்றது  சுயமரியாதை இயக்கங்களே!
8 ஜீலை 1939 தமிழக வரலாற்றில் முதன் முதலாய் தாழ்த்தப்பட்ட மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வைத்தியநாத அய்யர், ராஜாஜி, முத்துராமலிங்கம் அழைத்து சென்றார்கள் என்ற அப்பட்டமான பச்சை பொய்யை எத்தனை முறை நாம் உடைத்தாலும் மீண்டும் மீண்டும் அதே பொய்யை சொல்லி வருகின்றனர் இந்த பச்சைத் தமிழ் ரத்தம் தேடும் கும்பல்..
அந்த கும்பலுக்கும் மீண்டும் பதில் தருகிறோம். அது பச்சை பொய் என்று!
1920 காலங்களில் 100க்கணக்கான ஆலைய நுழைவு போராட்டங்கள் பெரியாரும், சுயமரியாதை இயக்கக்கார்கள் நடத்தியுள்ளனர். இதை பல முறை எடுத்துக்காட்டியுள்ளேன். மீண்டும் படிக்க இதோ...
https://www.facebook.com/1157684166/posts/10217725806914410?sfns=mo
மாபொசி எனது போராட்டம் என்ற சுயசரிதையில் ஆலைய நுழைவு போராட்டம் குறித்து எழுதிய குறிப்பில் நாட்டார்கள் பலர் நாத்திகர்களாக மாறினார்கள் என்றும், நீதிகட்சிக்கு சென்றார்கள் என்றும், கிறுஸ்துவ மதத்திற்கு சென்றார்கள் என்றும், காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற செய்த தந்திரம் என்பது புரிய வரும். அவர் சுயசரிதை வரிகளை படிக்கவும்!
ஆர்எஸ் நாயுடு என்பவர் மதுரை நகரசபை தலைவராக இருந்தவர். நீதிக்கட்சியின் ஆட்சியில் அவர் மதுரை மீனாட்சி கோயில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவர் கோயிலுக்குள் பல சீர்திருத்தம் செய்கிறார். அதை அறிந்து நீதிக்கட்சியை வீழ்த்த ராஜாஜி, வைத்தியநாத பார்ப்பன கூட்டம் திட்டம் தான் ஆலைய நுழைவு.

மணமகன் மோடி புராணம் பாடியதால் கோபித்த மணமகள் .திருமணம் நின்றது .. உத்தர பிரேதசம்

Bride and groom call off wedding because of fight over PM Narendra Modi
என்னடா இது நாட்டுக்கு வந்த சோதனை: மோடியால் நின்ற திருமணம்!tamil.samayam.com/"  : பிரதமர் மோடி குறித்து மணமகன் மிகவும் உயர்வாக பேசி உள்ளார் . இதனால் கோபமடைந்த மணமகள் இப்படி ஒரு முட்டாளோடு எப்படி வாழ முடியும் என்று கோபித்து கொண்டு திருமணம் செய்ய மறுத்து விட்டார் , உத்தரபிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது., .
உத்தரபிரதேசத்தில் நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் தொழிலதிபருக்கும், அரசு பணியாளருக்கும், குடும்பத்தாரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு பிரதமர் மோடிதான் காரணம் என மணமகள் காட்டமாக விமர்சனம் செய்ததும், அதை ஒப்புக்கொள்ளாத மணமகன், மோடி இதற்கு காரணமில்லை, உலக பொருளாதார மந்தமே காரணம் என பதில் அளித்துள்ளார்.
விவாதம் சூடாகியதில் குடும்பத்தினர் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் இருவரும் திருமணத்தை நிறுத்தசொல்ல, குடும்பத்தினர் அதிர்ந்துபோயினர்.

அமைச்சர் வேலுமணி அப்போலோவில் அனுமதி ..

நக்கீரன் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பொட்டம்மானால் கொல்லப்பட்ட கிழக்கு தளபதிகள், போராளிகள் .. ஒரு முன்னாள் போராளியின் வரிகளில்

மூத்த புலி உறுப்பினர்களான ஜிம்கலிதாத்தா ராபட் துரை விசு கடாபிமாஸ்ரர் சுதா நிஷா அக்கினோ ஈஸ்வரநாதன் திருமால் ஆகியோர் உற்பட 67 கிழக்கு தளபதிகள் பொறுப்பாளர்கள் பின்னர் புலிகளிடம் சரணடைந்தனர் ஆனால் பொட்டம்மானின் தன்னிச்சையான முடிவினால் அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்
.Reginold Rgi : வரலாற்றை படித்த ஒரு மாணவனாக புலிகள் அமைப்பில் ஒரு உக்கிர தாக்குதல் படையணியில் 8 வருடங்கள் ஈழ விடுதலை கனவுடன் போராடிய போராளி என்ற ரீதியில் கிழக்கு போராளிகளின் பிளவு பற்றியும் அந்த நேரத்தில் புலிகள் அமைப்புகள் நடந்த சகோதர படுகொலை பற்றியும் ஆவணப்படுத்த நான் கடமை பட்டுள்ளேன் அந்த வகையில் ஒரு சிலருக்கு உண்மைகள் கசக்கத்தான் செய்யும் இருந்தாலும் காலத்தின் தேவை கருதி உண்மையை சொல்வதே எனது கடமையாக உணர்கிறேன் மட்டக்களப்பு அம்பாரை மண்ணில் போரிட்டு அந்த மக்களின் காலடியில் மடிவதையே இறுதி லட்டியமாக கொண்ட போராளிகளில் நானும் ஒருவன்...
யார் துரோகி...?
16 வயதில் பாடசாலை படிப்பை பாதியில் தூக்கியேறிந்து விட்டு தமிழ் மக்களுக்காக போராட போன போராளிகளில் நானும் ஒருவன் 1995 ஆண்டு புலிகள் அமைப்பில் இணைந்த நான் 2004 ஆண்டு வரை ஈழ விடுதலை கனவுடன் போராடிய போராளிகளில் நானும் ஒருவன் அந்த வகையில் 1997 ஆண்டு யாழ் வன்னி நிலங்களை கைப்பேற்றி புலிகளை அழித்தொழிக்கும் எண்ணத்தோடு ஸ்ரீலங்கா அரசு பாரிய படையணிகளுடன் பன்னாட்டு நவீன ஆயுதங்களுடன் வன்னி நிலத்தை ஆக்கிரமிக்க படை நகர்வொன்றை மேற்கொண்டார்கள்

இந்தியா சீனாவிடம் பறிகொடுத்த நிலம்.. சீனா ஆக்கிரமிப்பை மோடி கண்டுகொள்ளாதது ஏன்?


congressnakkheeran.in - தாமோதரன் பிரகாஷ் : இந்திய மண்ணிற்குள் ஒருவரும் ஊடுருவவில்லை. இந்தியாவின் பாதுகாப்பு தூண்களில் ஒரு தூணையும் யாரும் கைப்பற்றவில்லை என்று உறுதியளிக்கிறார் பிரதமர் மோடி. ஊடுருவவில்லை என்றால் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்தது ஏன்? சண்டை நடந்தது ஏன்? 20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? சீனாவுக்கு நமது பிரதமர் நற்சான்றிதழ் கொடுக்கிறாரா எனக் கேள்வி எழுப்பியிருந்தார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

என்னதான் நடக்கிறது இந்திய-சீன எல்லையில்?

சீனாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக இருக்கக்கூடிய வடக்குப்பகுதி ராணுவத்தின் உயர் பொறுப்புகளில் இருந்தவர்கள் உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். கர்னல் இ.ஜெ.சான்டிஸ் கூறுகையில், (பிரதமர் சொல்லியிருப்பது) "இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் இது.

ட்விட்டர் வாக்கெடுப்பில் News 7 செய்த தில்லுமுல்லு

Zen Selvaa  : சமீபத்தில் தான் மறு உத்தரவு வரும் வரை நியூஸ் 7 விவாதத்தில் திமுகவினர் பங்கு பெற வேண்டாம என்று திமுக தலைமை அறிவித்திருந்தது, காரணம் நிகழ்ச்சி ஒன்றின் ட்விட்டர் வாக்கெடுப்பு முடிவுகளை அதிமுகவுக்கு சாதகமாக மாற்றி வெளியிட்டதால்.
தந்தி டிவியைப் பற்றி சொல்லவே வேண்டாம், சும்மா இருக்கும் போது கூட அண்ணா சிலையின் தலையில் கொரோனாவை காரட்டூனாக வரைந்து திமுகவை சீண்டும். ஏற்கனவே பலமுறை தந்தி டிவியின் ஒருதலைப்பட்சமான போக்கால், விவாதங்களில் திமுகவினர் பங்குபெற மாட்டார்கள் என்று அறிவித்திருககிறார்கள். புதிய தலைமுறையும் அப்படியே, தவறு செய்தவர் அதிமுக அமைச்சர் என்றால் அரசியல் பிரமுகர் என்று சொல்வதும், அதுவே திமுகவில் சாதாரண நபராக இருந்தாலும், திமுக பிரமுகர் என்று செய்தி வெளியிடுவதும் வாடிக்கை.
நியூஸ் 18 டெல்லியை தலைமையிடமாக கொண்ட ஊடகம் என்பதால் தமிழகத்தின் எந்தக் கட்சிக்கும் முன்னுரிமையோ, முக்கியத்துவமோ கொடுக்காமல் தங்களுக்கு சரியென மனதில் பட்டதை செய்கிறது.
மேலும், இவர்கள் விவாதத்திற்கு அழைப்பவர்களின் பட்டியலில் மாலன், நாராயணன் முதல் பத்ரி சேஷாத்ரி, கோலாகல சீனிவாசன், ராமசுப்பிரமணியம், பானு கோம்ஸ், சுமந்த் ராமன், பட்டம் வெங்கடேஷ், ஆடிட்டர் சத்திய குமார் போன்ற எண்ணற்ற பிஜேபி ஆதரவு " குறிப்பிட்ட சமூக?" ஆர்வலர்கள் முதலிடத்தில் இருப்பார்கள்.. இவர்களுக்குத் தான் பேச அதிக நேரம் கொடுப்பார்கள்...

புதன், 8 ஜூலை, 2020

தமிழ் சமுகத்தை போல பிற்போக்கான கேடுகெட்ட சமுகத்தை ...

Kiruba Munusamy : தமிழ் சமூகத்தை போல மிகவும் பிற்போக்கான, கேடுகெட்ட ஒரு சமூகத்தை நான் பார்த்ததேயில்லை. ஆடையில் கௌரவத்தை தூக்கி சுமக்கிறது இச்சமூகம். நான் இதுவரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட
நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன். குறிப்பாக, இந்த கொரோனா முடக்க காலத்தில், வாரத்திற்கு குறைந்தது நான்கு காணொளி நிகழ்ச்சிகளிலேனும் கலந்துக்கொள்கிறேன். அதில் ஒன்றிரண்டை தவிர பெரும்பான்மை ஆங்கில நிகழ்ச்சிகளே! எனினும், ஒரு நிகழ்ச்சியில் கூட என்ன ஆடை அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
ஏனெனில், குறைந்தபட்சம் பெயரளவிலாவது ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதையும், பேச்சாளர்களின் பின்புலத்தில் இன, பாலின, ஜாதிய பன்முகத்தன்மையை பின்பற்றுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ் சூழலைப் பொறுத்தவரை ஜாதியெதிர்ப்பு களங்களில் பார்ப்பனரல்லாதோராக இருந்தால் போதும். பெண்ணுரிமை களங்களில் அதுவும் தேவை இல்லை.
ஜாதியெதிர்ப்பு மேடைகளில் பெண்ணின் பிரதிநிதித்துவத்தை கேள்வி கேட்கும் இப்பெண்கள் தான் ஜாதி-மத-இன ரீதியில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை. ஆங்கில சூழலில் பெண்ணியத்தில், மற்ற எல்லா கோட்பாட்டிலும் ஜாதியும் குறித்தும் பேச முடிவதும், ஒடுக்கப்பட்ட தலித் பெண்களின் தலைமை குறித்து விவாதிக்கப்படுவது, முற்போக்குவாதிகளாக பெருமையடித்துக்கொள்ளும் தமிழ் சூழலில் புரிவது கூட இல்லை.

பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் ! வினவின் விரிவான கட்டுரை

பிரதீப். வீ. பிலீப்
கூலி கொலை  பாரதி
லஞ்ச புரோக்கர்ஸ்
“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பலின் வரலாற்றையும், ஆர்.எஸ்.எஸ். கும்பலுடன் உள்ள கள்ளக்கூட்டையும் அம்பலப்படுத்துகிறது இக் கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்... vinavu.com - வினவு செய்திப் பிரிவு : சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொட்டடிப் படுகொலை வழக்கில், சம்பந்தப்பட்டுள்ள அனைத்து போலீசு அதிகாரிகளும்  கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு இரண்டு மாதங்களுக்கு தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை தடை செய்திருக்கிறது தமிழக அரசு. போலீசாரோடு உடன் நின்று ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் கொட்டடிக் கொலையை அரங்கேற்றிய “பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” என்ற பெயரிலான சட்டவிரோத கும்பலைக் கைது செய்யாமல் இருக்கிறது தமிழக அரசு.

நான்கு மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கீடு எடுத்து பிரித்து வசூலிக்க அதிகாரமில்லை! – உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பு வாதம்!

 There is no power to collect and collect electrical calculation once in four months! - Petitioner's Argument in High Court!
நக்கீரன் - அதி தேஜோ : மின் உபயோகத்திற்கு  ஏற்பதான் மின்கட்டணம் வசூலிக்க வேண்டும்,  நான்கு மாதத்திற்கு ஒரு முறை எடுத்து, அதைப் பிரித்து வசூலிக்க அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில்,  செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான ‘பில்’லாகவும் நிர்ணயித்து, தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக்கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பெண்களை குறிவைத்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை - மேற்கு வங்காளம்

A court in West Bengal on Monday sentenced a 38-year-old suspected serial killer, known as the ‘chain man’, to death in a rape and murder case. Known as ‘chain man’, Kamruzzaman Sarkar was arrested last June in connection with rape and murder of a 16-year-old girl. Sarkar was awarded death penalty in the case by a district court in West Bengal’s East Burdwan district on Monday. He has been booked for the murders of at least nine women and raping two of his victims.
மாலைமலர் : மேற்குவங்காளத்தில் பெண்களை குறிவைத்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பள்ளி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் கோர்ட்டு இந்த அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. பெண்களை குறிவைத்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை - அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிபதி தூக்கு தண்டனை கொல்கத்தா: மேற்குவங்காள மாநிலத்தின் பூர்பா பார்தமான் மற்றும் ஹூக்லில் மாவட்டங்களில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து 5 பெண்கள் சைக்கிள் செயினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும் அவர்கள் பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டு இருந்தனர். ஒரே பாணியில் நடந்த 5 கொலைகள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கமருஸ்மான் சர்கார் (வயது 42) என்பவர்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.

என் மகனையும் ( மகேந்திரன்) கொன்றனர்: சாத்தான்குளம் போலீஸுக்கு எதிராக வழக்கு!

என் மகனையும் கொன்றனர்: சாத்தான்குளம் போலீஸுக்கு எதிராக வழக்கு!மின்னம்பலம் : சாத்தான்குளம் காவல் துறையினருக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை இதனை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. சிபிசிஐடி விசாரணை நடந்து வருவதோடு, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுபோலவே சாத்தான்குளம் காவல் துறையினரின் தாக்குதலுக்கு ஆளாகி மகேந்திரன் என்பவர் உயிரிழந்த தகவலையும் விரிவாக பதிவு செய்திருந்தோம்.

கொரோனாவுக்கு மத்தியில் ரூ.12ஆயிரம் கோடி டெண்டர்...

கொரோனாவுக்கு மத்தியில் ரூ.12ஆயிரம் கோடி டெண்டர்!மின்னம்பலம : தமிழகத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிகளுக்கான ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டர்கள் மூலம் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள அறப்போர் இயக்கம், டெண்டரை ரத்து செய்யவும் வலியுறுத்தியுள்ளது.
அறப்போர் இயக்கம் புகார்
தமிழக நெடுஞ்சாலைத் துறை கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 2020 வரை 12000 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரி சாலைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் அவசர அவசரமாக டெண்டர்கள் கோரியுள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ள அறப்போர் இயக்கம், இதில் பெரும்பாலானவை தேவை இல்லாத டெண்டர்கள் என்று குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து நிதித்துறை செயலருக்கும், மாநில நெடுஞ்சாலை செயலருக்கும் அறப்போர் இயக்கம் புகார் அனுப்பியுள்ளது.
எதற்கு முன்னுரிமை
அதில், “தமிழக அரசின் வரி வருவாய் குறையும் சூழ்நிலையிலும், கொரோனா தாக்கத்தினாலும், செலவினங்களில் முன்னுரிமை எதற்குத் தரப்பட வேண்டும் என்ற ரங்கராஜன் குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பே அவசரமாக நெடுஞ்சாலைத் துறையில் 12,000 கோடி ரூபாயில் டெண்டர்கள் முடிவு செய்வது கண்டிக்கத்தக்கது.

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- மேலும் 5 போலீசாரை கைது செய்தது சிபிசிஐடி

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- மேலும் 5 போலீசாரை கைது செய்தது சிபிசிஐடிமாலைமலர் : சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பான வழக்கில் மேலும் 5 போலீசாரை சிபிசிஐடி கைது செய்தது. சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.
சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.
அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 காவலர்கள என 5 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் மேலும் ஒருவர் பலி?- காவலர்கள் ரகுகணேஷ், ஸ்ரீதருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

sathankulam-death-of-mahendram-hc-sends-notice
.hindutamil.in :சாத்தான்குளம் போலீஸார் தாக்கியதில் மேலும் ஒருவர் பலியான விவகாரம் தொடர்பாக, தந்தை, மகன் கொலையில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:எனது கணவர் உயிரிழந்துவிட்டார். மகன்கள் துரை மற்றும் மகேந்திரனுடன் வசித்து வருகிறேன். இந்நிலையில், ஜெயக்குமார் என்பவர் இறந்தது தொடர்பான வழக்கில் என் மகன் துரையை விசாரிக்க சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் மே 22-ல் என் வீட்டிற்கு வந்தார்.
மறுநாள் அதிகாலை 2 மணிக்கு என் சகோதரி வீட்டிற்கு ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர் துரையை தேடிச் சென்றனர். அங்கு துரை இல்லாததால் இளைய மகன் மகேந்திரனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று 2 நாள் சட்டவிரோத காவலில் வைத்து கடுமையாகத் தாக்கினர்.

தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை

தூத்துக்குடி ஸ்டெர்லைட்  கொலையாளிகள்
தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை  மலைமலர் : தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. சென்னை: சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர்இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது.
மேலும் இச்சம்பவம் நடந்த அன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம் என சிபிசிஐடி ஜஜி சங்கர் தெரிவித்தார்.. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நடிகை ரோஜா அம்புலன்ஸ் ஓட்டினார் .. தெலுங்கு தேசம் கண்டனம் .. வீடியோ


tamiloneindia : அமராவதி: ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த நடிகையும், எம்.எல்.ஏ.வுமான ரோஜா திடீரென ஆம்புலன்ஸை ஓட்டியது அங்கிருந்தவர்களை வியப்படைய வைத்தது.
ஆந்திராவில் மருத்துவப்புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், உயிர்காக்கும் அனைத்து உபகரணங்களுடன் கூடிய 1088 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக தனது நகரி தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரோஜா கலந்துகொண்டார்.
ஆந்திராவில் உயிர்காக்கும் அவசர சிகிச்சைகள் அளிக்கக்கூடிய தரத்தில் 1088 ஆம்புலன்ஸ் சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இதனை தொடங்கி வைத்து பேசினார். ஆம்புலன்ஸ் இல்லை, ஆம்புலன்ஸ் வரத்தாமதம் என்ற அநாவசிய காரணங்களால் எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் ஜெகன்.

சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது!- (கிடப்பில் போடவே சி பி ஐ ) காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் எதிர்ப்பு

dont-change-sathankulam-case-into-cbi.hindutamil.in/: சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 'காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் - தமிழ்நாடு' சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தியாகு, செயலாளர் மீ.த.பாண்டியன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை வழக்கு குறித்து சிபிசிஐடி போலீஸார் புலனாய்வு நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், சிபிஐ இவ்வழக்கில் புலனாய்வை ஏற்றுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. தமிழக அரசு இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும் முடிவை அறிவித்தபோதே பல்வேறு தரப்பினரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

திருச்சி: `மாணவியின் பெயரை பச்சை குத்தியிருந்த வாலிபர்’ -சிறுமி மரணத்தில் திருப்பம்

எரிக்கப்பட்ட சிறுமியின் உடல்சிறுமியின் உடல்;எம்.திலீபன் - தே.தீட்ஷித் - விகடன் : அந்த வாலிபருடன் மாணவி நீண்ட நாள்களாகத் தொலைபேசியில் பேசி வந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிந்து கண்டித்துள்ளனர்.
திருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி முட்புதர் அருகே எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது. அவர்களின் அண்ணன் முறையான இருவரை போலீஸார் பிடித்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். முறையான பிரேதப் பரிசோதனை அறிக்கை வரவில்லையென்றால் நாங்கள் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று அவரது உறவினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி மகேஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகள், 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

பன்னீர் தகுதி நீக்க வழக்கு: இன்று மீண்டும் விசாரணை!

பன்னீர் தகுதி நீக்க வழக்கு: இன்று மீண்டும் விசாரணை!மின்னம்பலம் : பன்னீர்செல்வம் உள்பட 11 பேருக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி மூன்று மாதங்கள் ஆன போதிலும், இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கடந்த மாதம் திமுக உச்ச நீதிமன்றத்தை நாடியது. மணிப்பூர் தீர்ப்பை மேற்கோள் காட்டி, “11 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியது.

உலக சுகாதார அமைப்பில் இருந்து திடீரென வெளியேறிய அமெரிக்கா:

வெப்துனியா :  உலக சுகாதார அமைப்புக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் தற்போது திடீரென உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பாக கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவக் கூடியது என்பதை சீனா மறைத்ததை உலக சுகாதார அமைப்பு கண்டுகொள்ளாமல் இருந்தது என்றும் உலக சுகாதார அமைப்பின் மீது அமெரிக்கா புகார் வைத்தது
ஒரு கட்டத்தில் உலக சுகாதார அமைப்புக்காக நிதியை நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் உலக சுகாதார அமைப்பு உடனடியாக தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா கெடு விதித்தது

உமா பாரதியை அவமதிக்கும் பாஜக பார்பனர்கள் ..

Periyartv : உமாபாரதி அவமதிக்கப்படும் பின்னணி என்ன?
பாபர் மசூதி இடிப்பில் எத்தனை பார்ப்பனத் தலைவர்கள் நீதிமன்றமும், காவல் நிலையமும், வீடுமாக அலைந்துள்ளனர் என்று கணக்கிட்டால் விடை பூஜ்ஜியம்தான். உமாபாரதி பாபர் மசூதி இடிப்பின்போது தந்தையின் தோள்மீது ஏறிவிளையாடும் சின்னப்பெண் போல் முரளிமனோகர் ஜோஷியின் தோளில் உப்புமூட்டையாக ஏறிக்கொண்டு பாபர் மசூதி இடிப்பில் மகிழ்ந்து கூச்சலிட்டவர். அப்போது அவர் முகத்தில் காணப்படும் குதூகலம் சொல்லி மாளாது, ஆனால் அதன் பின்னால் என்ன நடந்தது?
அதன் பிறகு அவரது அரசியல் வாழ்க்கை செல்லாத காசாக மாறிப்போனது. உண்மையில் பாபர் மசூதி இடிப்பின் போது அதிகம் பேசப்பட்டவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி. அதற்கு அடுத்த இடத்தில் உமாபாரதி. இன்று பாஜக பெரும் பலத்துடன் ஆட்சியில் இருப்பதற்கு காரணம் பாபரி மசூதி இடிப்புதான். அந்த மதவெறியை முதலீடாக வைத்துதான் இன்றுவரை அவர்கள் அரசியல் அச்சாணி சுழன்றுகொண்டு வருகிறது.

செவ்வாய், 7 ஜூலை, 2020

காலியாகும் பெங்களூரு .. மலையாளி, குஜராத்தி. மார்வாடி .பாஞ்சாபி வங்காளி .. Run ?


Kathir RS : பெங்களூர் வாழ் தொழில் நண்பர் இன்று தொடர்பில் வந்தார்..
பெங்களூர் சிட்டியில் 60% சதவீத கடைகள் உணவகங்கள் தொழில் நிறுவனங்கள் காலி செய்து கொண்டு போய் விட்டதாகத் தெரிவித்தார்.வருத்தமாக இருந்தது.
இந்தியாவிலேயே பெங்களூரில்தான் அதிக அளவிளான மைக்ரேட்டட் முதலாளிகளின் தொழில் நிறுவனங்கள் உணவகங்கள் கடைகள் இயங்கிவந்தன.
மலையாளிகள் குஜராத்திகள் மார்வாடிகள் தில்லி வாலாக்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் வட கிழக்கு மாநிலத்தவர் என எல்லோரும் தொழில் நடத்திய ஒரு மாநகரம் பெங்களூர்..
இவர்கள் இங்கு அதிக அளவில் வந்ததது வளர்ந்தது கடந்த 10-15 ஆண்டுகளாகத்தான்..
இந்த திடீர் தொழில் பாப்புலேசன்..பெற்ற திடீர் வளர்ச்சி அந்த நகரத்தையே மற்ற இந்திய நகரங்களிடமிருந்து பிரித்து தனித்து காட்டியது.
கிட்டத்தட்ட ஒரு கிழக்கு ஐரோப்பிய நகரத்தைப் போல திகழ்ந்தது அந்நகரம்.
Mejestic,MG Road,Mayo Hall,Brigade Road போன்ற பெங்களூரின் பழைய அடையாளங்கள் அதர பழைய அடையாளங்களாயின..
கோரமங்கலா, எலக்ட்ரானிக்சிட்டி,ஜெயா நகர்,ஜேபி நகர்,மரத்தஹல்லி என பல புதிய லேன்ட் மார்க்குகள் உருவாகின.
எங்கு காணினும் சின்ன பெரிய ஸ்டைலான

கேரளா 30 கிலோ தங்கம் கடத்தல்… . ஸ்வப்னா சுரேஷ் கேரளா அரசின் நெருங்கிய உள்வட்ட பிரபலம் ?


Kerala gold seizure: Principal Secretary to CM Vijayan .. 30 kg gold seized from diplomatic baggage at Thiruvananthapuram airport
In a major development that puts the office of the Kerala Chief Minister in dock, M Sivasankar, the Principal Secretary to the CM has been sacked for his alleged involvement in the racket that saw the seizure of 30 kg of gold at the Thiruvananthapuram airport yesterday, news agency ANI reported. It said IAS Mir Mohammed has been given additional charge of the position. Sivasankar will continue to remain IT Secretary. 
வெப்துனியா :கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக முகவரிக்கு விமானத்தில் வந்த சுமார் 13 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை கேரள சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 இந்த சர்ச்சைக்குரிய வழக்கில் அம்மாநில முதல்வரின் தலைமையின் கீழ் இயங்கும் ஐடி பிரிவின் தற்காலிய ஊழியராக ஸ்வப்னா சுரேஷ் என்பவர் சிக்கியுள்ளார்.