சனி, 3 ஜூன், 2017

அண்ணனின் மணப்பெண் கழுத்தில் தாலி கட்டிய தம்பி .. "புதுப்பேட்டை" படப்பாணியில் காட்டுமிராண்டிகள்

திருப்பத்தூர் அருகே பெண் பார்க்க சென்ற இடத்தில் ஏற்பட்ட காதலால் அண்ணனை தள்ளிவிட்டு மணப்பெண்ணுக்கு தம்பி தாலி கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செல்லரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காமராஜ். கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ராஜேஷ், ரஞ்சித், வினோத் என்று 3 மகன்கள் உள்ளனர். இதில் ராஜேஷும், வினோத்தும் திருப்பூரில் தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.< இந்த நிலையில் மூத்த மகன் ராஜேஷுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.< கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விருதுநகரை சேர்ந்த பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தனர். திருப்பத்தூர் இலவம்பாடி வெண்கல் குன்றம் முருகன் கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.

செங்கோட்டையன் வசூலுக்காக 1900 பதவிகளை மறைத்து மோசடி ... பள்ளி கல்வி துறை அமைச்சர்...பள்ளி கல்வித் துறையின், ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கில், வசூலுக்காக, ௧,௯௦௦ இடங்கள் மறைக்கப்பட்டு, தில்லுமுல்லு நடந்துள்ளது. இதனால், கொதித்தெழுந்த ஆசிரியர் சங்கங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ளன.
பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டைய னும், செயலராக உதயசந்திரனும் பொறுப் பேற்ற பின், பொதுத் தேர்வில் ரேங்கிங் முறை ஒழிப்பு, பிளஸ் 1க்கு கட்டாய பொதுத் தேர்வு உட்பட, பல மாற்றங்கள் அமலாகின. இதனால், துறையில் இனி முறைகேடுகள் நடக்காது என, ஆசிரியர்களும், பெற்றோரும் நம்பினர். மாற்றம்:இந்நிலையில், வழக்கமாக,ஜூலை, ஆகஸ்டில் நடக்கும் ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங், மே மாதத்திற்கு மாற்றப்பட்டது. இதில், 'காலி இடங்கள் மறைக்கப்படாமல், பேரத்திற்கு வழியின்றி, வெளிப்படையாக கவுன்சிலிங் நடக்கும்' என, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், மே,24ல் நடந்த, முதுநிலை ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில், 1,900 இடங்களை, சத்தமின்றி மறைத்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.   இந்த கட்சியே ஒரு மல்டி லெவல் மார்க்கெட்டிங் கட்சி

கலைஞருக்கு வைரவிழா வாழ்த்து கவிதையை வாசித்து காட்டிய கனிமொழி

Kanimozhi wishes Karunanidhi with poem அந்தக் கவிதை,
பேசுவதை நிறுத்திக் கொண்டாய்
உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது
என்று நினைத்து விட்டாயா
பேசி பேசி அலுத்துவிட்டாயா
சொல்வதற்கு இருந்ததை எல்லாம்
சொல்லி விட்டேன் என்றா
உன் வார்த்தைகளின் எஜமானர்கள்
நாங்கள் என்று உனக்கு தெரியாதா
மௌனம் கனத்துக் கிடக்கிறது
எங்கள் பாதைகளை அடைத்துக் கிடக்கும்
அசைக்க முடியாத பாறையாய்,
வெடித்து கிடக்கும் வறண்ட வயலின்
வரப்பில், செய்வது அறியாது
நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல
நாங்கள் காத்துக் கிடக்கிறோம்
கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக.
கடல் பிளந்து மறுகரை சேரக்கிறேன் என்ற
கிழவனை, பறித்துச் சென்றது யார்?
உன் சக்கர நாற்காலி உருளும் சத்தம்...
வண்டியில் இருந்து இறங்கி நீ
வீசும் சினேகப் புன்னகை...
அதற்குப் பின்னால் எப்போதும்
ததும்பும் நகைச்சுவை...
மேடையில் இருந்து, "உடன்பிறப்பே" என்று
அழைக்கும் போது ஒரு கோடி
இதயங்கள் ஒரு வினாடி உறைந்து
துடிக்குமே அந்தக் கணம்...

நான் ரெடி நீங்க ரெடியா? தமிழகத்தை நோக்கி மம்தா பானர்ஜி கட்சி தலைவர் டெரிக் ஓ பிரையன் கேள்வி! பிராந்திய கட்சிகள் மத்தியில் ...


mayura-akilan.: சென்னை: பிராந்திய கட்சிகள் டெல்லி
அரசியலில் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும். நான் ரெடி... நீங்க ரெடியா என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.டெரிக் ஒ.பிரையன் கேட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும். ஒட்டு மொத்த மேற்கு வங்க மக்களும் கருணாநிதியை வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்< ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி சட்டசபை வைரவிழாவில் ராகுல், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, உமா அப்துல்லா டெரிக் ஓ பிரையன், நாராயணசாமி, திருநாவுக்கரசர், காதர்மொய்தீன் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
கருணாநிதி என்ற ஆளுமை மிக்க தலைவரை அனைவரும் வாழ்த்தி பேசினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் டெரிக் ஓ பிரையன், தனது பேச்சை தமிழில் உற்சாகமாக தொடங்கினார்.

கனிமொழி : கலைஞர் தொண்டர்களை விரைவில் சந்திப்பார்!

திமுக தலைவர் கருணாநிதி வெகுவிரைவில் பூரண குணமடைந்து தொண்டர்களைச் சந்திப்பார் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த தினத்தையொட்டி, இன்று ஜூன் 3ஆம் தேதி காலையில் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக் கூறி ஆசி பெற்றனர். அதன் பின்னர், அங்கிருந்து வெளியே வந்த கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: இது கட்சி விழா அல்ல. பிறந்தநாள் விழாவை அரசியல் விழாவாக்குவது ஊடகங்களே. தலைவர் கலைஞர் நன்றாக இருக்கிறார். விரைவில் அவர், தொண்டர்களைச் சந்திக்கும் அளவுக்கு நலம் பெறுவார். டாக்டர்கள் அறிவுரையின் பேரில் அனைவரும் தலைவரை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் சந்திக்க அனுமதிக்கவில்லை.

கனடாவில் தமிழிலும் தேசிய கீதம் .. தமிழுக்கு மற்றொரு மகுடம்!

மின்னம்பலம் :தமிழ்மொழி' ஒரு செம்மொழி. தமிழர்களும் உலகளவில் மலேசியா, இலங்கை, இந்தோனேஷியா, கனடா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் வியாபாரத்துக்காகவும், வேலைக்கும் சென்று நிரந்தரமாக அங்கு குடியேறியுள்ளனர். பல நாடுகளில் தமிழர்களின் உழைப்பை, ஒவ்வொரு நாடுகளும் கொண்டாடி, அவர்களுக்கு ஆட்சித்துறையில் நல்ல பதவிகள் தருவது , நிறைய அங்கீகாரங்கள் தருவது இயல்பு. அப்படி ஓர் அங்கீகாரத்தை 'கனடா' நாடு அளித்திருக்கிறது.
அதாவது வருகிற ஜூலை -1ஆம் தேதி, கனடா நாட்டின் 150வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, அங்கு வாசிக்கப்பட தமிழில் தேசிய கீதத்தை வெளியிட்டுள்ளது, கனடா அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் ஈழத்தமிழர்கள் அதிகம் பேர் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். அவர்களின் கலாசார பண்டிகைகளை கொண்டாடும் வகையில் நாட்டின் பொதுஅறிவிப்புகளை அடிக்கடி தமிழில் வெளியிட்டு, உலகத் தமிழர்களை கெளரவப்படுத்தி வருகிறது.

இயக்குனர் வேலு பிரபாகரன் நடிகை சேர்லி தாஸ் திருமணம்

‘வேலு பிரபாகரனின் காதல் கதை’ போன்ற ‘ஏ’டாகூடமான படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கத்தில் நேற்று வெளியான படம் ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’. இவரே ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், பொன். ஸ்வாதி  என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பவர், இளையராஜா.இந்த நிலையில், இன்று காலை ‘வேலு பிரபாகரனின் காதல் கதை’யில் நடித்த ஷெர்லி தாஸும், வேலு பிரபாகரனும்  மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்டனர். வள்ளுவர் கோட்டம் பின்புறமுள்ள ‘லீ மேஜிக் லேண்டர்ன்’ பிரிவியூ  தியேட்டரில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது. வெப்துனியா

சென்னை சில்க்ஸ்.. அக்கம் பக்கத்து வீடுகளில் விரிசல்.. பெரும் அச்சத்தில் மக்கள்

நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு
 Gajalakshmi  : சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் விரிசல் ஏற்படுவது குடியிருப்புவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 31ம் தேதி அதிகாலையில் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டடம் தீ விபத்துக்கு ஆளானது. 35 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கட்டடத்திற்குள் தீ மென்மேலும் பரவி வருவதால் நேற்று முதல் ஜா கட்டர் என்னும் ராட்சத எந்திரம் மூலம் கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது. கட்டடத்தின் 7வது மாடியை இடிக்க முடியாததால் 6வது மாடியில் இருந்து இடிக்கும் பணி தொடங்கியது.
கட்டட இடிபாடு கழிவுகள் உள்பக்கமாகவே விழும் வகையில் இடிபாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே மாலை நேரமாகிவிட்டதால் பணி நிறுத்தப்பட்ட நிலையில் இன்று காலை முதல் மீண்டும் இடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு கட்டட இடிபாடு பணிகள் காரணமாக தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்: இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருப்பவர் கலைஞர்

திமுக தலைவர் கலைஞரின் 94வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டமன்ற வைரவிழா இன்று மாலை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது. விழாவில், தேசியத்தலைவர்கள் பங்கேற்றனர். விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்றுப்பேசினார். அவர் தனது உரையில், ’’ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக பாடுப்பட்ட மாபெரும் தலைவர் கலைஞர். சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவராக திகழ்கிறார் கலைஞர். தனது எழுத்தால் மக்களை சீரிய சிந்தனையில் அழைத்துச்சென்றவர் கலைஞர். சட்டமன்றத்தில் புதிய சரித்திரத்தை படைத்தவர் கலைஞர். கலைஞரின் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் இந்தியாவிலேயே யாருக்கும் இருக்காது. அகில இந்திய அளவில் கலைஞர் படைத்த சரித்திரத்தை யாரும் தகர்க்க முடியாது. இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருப்பவர் கலைஞர். விதவைகள் மறுவாழ்வு திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். பீகாரில் நான் பூரண மதுவிலக்கை கொண்டுவந்தேன். மதுவிலக்கில் பீகார் அரசு முழு வெற்றியை பெற்றிருக்கிறது. பீகாரில் மதுவிலக்கு கொண்டு வந்ததை போலவே தமிழ்நாட்டிலும் கொண்டுவருவேன் என்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டவர் கலைஞர் ’’ என்று தெரிவித்தார்.

தினகரன: சென்னை திரும்பியதும் கட்சி பணியாற்றுவேன் .

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்றுள்ள டிடிவி.தினகரன் சென்னை திரும்பும் வழியில் டில்லி விமான நிலையத்தில் மீடியா நிருபர்களை சந்தித்தார். அவர் கூறும்போது, என்னை கட்சியில் இருந்து யாரும் நீக்க முடியாது. நான் தான் அதிமுகவின் துணை பொதுச் செயலாளர். பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்டவன். சென்னை திரும்பியதும் கட்சிப்பணிகளில் என்னை மீண்டும் ஈடுபடுத்திக்கொள்வேன். எனக்கென்று கட்சியில் தொண்டர்கள் உள்ளனர். தொண்டர்களுக்காக நான் கட்சிப்பணி செய்தே ஆக வேண்டும் என்று கூறினார். ஆனால், தான் கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பேன். அதிமுக அழிந்து போய்விடக்கூடாது என்றெல்லாம் பேசிய தினகரன் தற்போது இப்படி மாறியதற்கு இரண்டு தூண்கள் தாங்கிப்பிடித்திருப்பதால் வந்திருக்கும் தைரியம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கலைஞருக்கு ஒரு உடன்பிறப்பின் வைரவிழா அழைப்பிதழ் .

பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டத்தை நிறைவேற்றியவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டமியற்றி, முறையான பயிற்சி அளித்தவர். குடிசை மாற்று வாரியத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கி ஏழைகளை மாடிகளில் குடியேற்றியவர். பேருந்துகளை நாட்டுடைமையாக்கி அரசுடைமையாக்கியவர். கை ரிக் ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக் ஷாக்களைக் கொண்டு வந்தவர். ஏழை எளியோரும் உயர் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தந்தவர். சாதி சமய ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைய சமத்துவபுரங்களை உருவாக்கியவர். தொழிலாளர் தினமான மே நாளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்தவர்.
என் உயிரில் கலந்துள்ள தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வைரவிழா அழைப்பு மடல்.
நீண்டகாலம் தழைத்து நின்று நிழலும் பலனும் தரும் உறுதியான மரத்தினை வைரம் பாய்ந்த மரம் என்பார்கள். தி.மு.கழகம் எனும் ஆலமரம் பேரறிஞர் அண்ணாவின் காலத்திற்குப் பிறகும் தழைத்து, செழித்து வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணமான நம் தலைவரின் உறுதிமிக்க நிலைப்பாடு, வைரத்தின் உறுதிக்கு எந்தளவிலும் குறைந்தவை அல்ல.
நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கிக் கொண்டிருக்கும் பெருமை கொண்டவர் நம் உயிரினும் மேலான அன்புத்தலைவர் கலைஞர் அவர்கள். ஏறத்தாழ 50 ஆண்டுகாலமாக தமிழக அரசியலின் ஆணி வேராக நிலைத்து, அச்சாணியாக செயல்படுபவர். இந்திய அரசியல் அரங்கில் பல குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றியவர். தேசிய அளவிலான அணிகளை அமைப்பதிலும், அவற்றுக்கான ஒருமித்த பொதுக்கொள்கைகளை வகுப்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்து நாட்டின் நலனைக் காத்திட்டவர்.

கோபாலபுரம் விழாக்கோலம்! கல்லக்குடி கண்ட கலைஞர் அகவை 94 ,,,சிறப்பு விருந்தினர்களாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் நிறுவனத் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் வி.நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரையன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
விகடன் :தி.மு.க தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா மற்றும் 94-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் வைரவிழா நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

தினகரன் மீது இனி நடவடிக்கை இல்லை? பேரம் படிஞ்சிடுத்தோன்னா?

புதுடில்லி: ''சசிகலா அக்கா மகன் தினகரன் மீதான வழக்கு, பொய் வழக்கு போல தெரிகிறது,'' என, மூத்த வழக்கறிஞர் நவீன் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.< தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சசிகலா அக்கா மகன்
தினகரன் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஜாமின் அளித்து, டில்லியில் உள்ள, லஞ்ச தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட் நீதிபதி பூனம் சவுத்ரி நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பு குறித்து, மூத்த வழக்கறிஞர் நவீன் மல்ஹோத்ரா கூறியதாவது: தினகரன் மீது அரசியல்பழிவாங்கும் நடவடிக்கை யாகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இடைத் தரகர் சுகேஷ் சந்தருடன், தினகரன் பேசியதாக கூறப்படும் ஆடியோ, தினகரனின் மொபைல் ஆகியவற்றைத் தவிர, வேறு எந்த ஆதாரத்தையும் டில்லி போலீஸ் இதுவரை தாக்கல் செய்யவில்லை. மேலும் இந்த வழக்கில், இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. இவையெல்லாம், தினகரனுக்கு சாதகமாக உள்ளன.மேலும் தன் தீர்ப்பில், 'தினகரன் மீதான வழக்கு, அரசியல் பழிவாங்கல்' என, நீதிபதி பூனம் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

லியோ வரத்கார் .... அயர்லாந்து புதிய பிரதமாராக இந்தியர் வெற்றி பெற்றுள்ளார்


Leo Varadkar is set to become the Republic of Ireland's next taoiseach (prime minister) after winning the leadership of the Fine Gael party.
லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மருத்துவரான லியோ வரத்கர், அயர்லாந்தின் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அயர்லாந்தின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பினை பெற்றுள்ளார். அயர்லாந்தின் இளம் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்க இருக்கிறது. 38 வயதாகும் வரத்கர், ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு உடையவர். பைன் கேயல் கட்சியைச் சேர்ந்த இவர் வெற்றிபெற்றதை பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் அயர்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. வரத்கர், கட்சியின் மூத்த தலைவர்கள் இருவரின் ஆதரவு கிடைத்ததால் 60 சதவீத வாக்குகளைப் பெற்று உள்துறை அமைச்சருக்கு எதிராக வெற்றி பெற்று கட்சியின் 11-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கவிக்கோ அப்துல்ரகுமான் உடல் அடக்கம் இன்று நடக்கிறது

சென்னை, இலக்கிய உலகில் ‘கவிக்கோ’ என்று அழைக்கப்பட்ட கவிஞர் அப்துல் ரகுமான் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. சென்னை அடுத்த பனையூரில் வசித்து வந்த அப்துல் ரகுமானுக்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு, காலமானார். இவருக்கு வகிதா என்ற மகளும், டாக்டர் செய்யது அஷ்ரப் என்ற மகனும் உள்ளனர். மனைவி மஹபூப் பேகம் 2012-ம் ஆண்டு காலமாகி விட்டார்.< கவிஞர் அப்துல்ரகுமான் 1937-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி மதுரை கிழக்கு சந்தை பேட்டையில் உருது கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத்-ஜைனத் பேகம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். தனது தொடக்ககல்வியையும், உயர்நிலைப்பள்ளி கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளிலேயே பயின்றார். பின்னர் மதுரை தியாகராஜர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று எம்.ஏ., பி.எச்.டி. பட்டங்களை பெற்றார். தமிழ்த்துறையின் தலைவர்

ஐ.ஐ.டி வளாகம் முன்பு போராடிய பெண்ணின் கையை முறித்த போலீஸ்....


நேற்று மதியம் ஐ.ஐ.டி. வளாகத்தில் உணவு சாப்பிட சென்ற சூரஜ்ஜை ஹிந்துத்வ கோஷம் எழுப்பி ஆதரவு வட இந்திய மாணவர்கள் சிலர் சுற்றி வளைத்து தாக்கினர். இந்த தாக்குதலில் சூரஜ்ஜின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. கேரளாவை சேர்ந்த மாணவர் மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்து ஐ.ஐ.டி. வளாகத்தில் முன்புற வாசல் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், புரட்சிகர மாணவர் அமைப்பு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாடடத்தில் ஈடுபட்டனர். பெண்களும் இதில் பங்கேற்றனர். இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த போதே ஐ.ஐ.டி. வளாகத்தில் மற்றொரு நுழைவு வாயில் பகுதியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.; அவர்கள் மோடி மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

காருக்குள் எரிந்தநிலையில் ... தற்கொலை அல்ல கொலை? ஆடிட்டர் ஜெயதேவன் மனைவி மகள் மூவரும் ...

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜெயதேவன், அவரது மனைவி, மகள் ஆகியோர் தீயில் எரிந்து சாம்பலான வழக்கில் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் திடீரென எழுந்துள்ளது. குரோம்பேட்டையை சேர்ந்தவர் 55 வயதான ஜெயதேவன். ஆடிட்டரான இவருக்கு ரமாதேவி என்ற மனைவியும், திவ்யஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கடந்த 27-ந் தேதி 3 பேரும் காரில் சுற்றுலா செல்வதாக பக்கத்து வீட்டாரிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றுள்ளனர். அன்று இரவு மாமல்லபுரத்தை அடுத்த மணமை அருகே உள்ள தனியார் வீட்டுமனை காலி இடத்தில் திடீரென அவர்களது கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஜெயதேவன், ரமாதேவி, திவ்யஸ்ரீ ஆகிய 3 பேரும் உடல் கருகி சாம்பலானார்கள்.

கலைஞர் வைரவிழா மலரை ரசித்து பார்க்கும் காட்சி வெளியானது


திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா மற்றும் 94-வது பிறந்த நாள்விழா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை ஜூன் 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. விழாவிற்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்பட பல்வேறு அகில இந்திய அளவிலான அனைத்துக்கட்சித் தலைவர்கள் நாளை ஜூன் 3ஆம் தேதி சென்னைக்கு வருகை புரிகின்றனர்.

ஹரியான .. ஆண்டுக்கு 35000 பெண்சிசுக்கள் இனக்கொலை ... மாட்டு பயங்கரவாதம் .. பாஜகவின் கோர முகம் ..

ஆயிரம் ஆண்களுக்கு வெறும் 877 பெண்களே கொண்ட ஹரியானா மாநிலத்தில், ஆண்டொன்றுக்கு சுமார் 35,000 பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். நாட்டின் மொத்த குழந்தைப் பிறப்பில் 2.2 சதவீதம் ஹரியானா பங்களிக்கிறது – ஆனால், பிறப்பதில் நான்கு சதவீத பெண்குழந்தைகளைக் கொன்று விடுகின்றது. 1947-க்கு பிந்தைய புள்ளி விவரங்களை மொத்தமாக தொகுத்துப் பார்த்தால், பெண்களின் மேல் ஒரு இனப் படுகொலையையே ஏவிவிட்டுள்ளது ஹரியானா என்கிற ஒரே ஒரு மாநிலம்.
ஹரியானாவைச் சேர்ந்த மாட்டு பயங்கரவாதிகள் (கௌரக்ஷக்) மீண்டும் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தில்லியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர் சிவம் என்பவரை கௌரக்ஷக் தள் என்கிற கும்பலைச் சேர்ந்த மாட்டு பயங்கரவாதிகள் பலமுறை கத்தியால் குத்தி மரண காயங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர் சிவம் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
மாணவர் சிவம் செய்த ‘குற்றம்’ என்ன?

BBC: பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பத்ததில் இருந்து அமெரிக்கா ... தலைவர்கள் கண்டனம்


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பருவ நிலை மாற்றம் தொடர்பான 2015ல் கையெழுத்தான ஒரு ஒப்பந்தத்தில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளதற்கு ஆதாரவாகவும், எதிராகவும் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.  
பாரிஸ் ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளின்போது, அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ''பாரிஸ் ஒப்பந்தத்தில் நீடிக்கும் நாடுகள்தான் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் மூலம் பயன்களை பெரும் நாடுகள் ஆகும். இந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால் அமெரிக்காவின் தலைமை இல்லாத நேரத்தில் கூட, எதிர்காலத்தை நிராகரிக்கும் ஒரு சில நாடுகளுடன் இந்த நிர்வாகம் கைகோர்த்தால் கூட, நமது மாகாணங்கள், நகரங்கள், தொழில்நிறுவனங்கள் முயற்சித்து, ஒப்பந்தத்தில் இருப்பதை காட்டிலும் அதிகமாக செய்து, நமக்குக் கிடைத்தி்ருக்கும் ஒரே உலகத்தை, நம் எதிர்கால சந்ததிகளுக்காக காப்பாற்ற உதவ வேண்டும்.''

வெள்ளி, 2 ஜூன், 2017

சென்னை சில்க்ஸ் .. எரியும் வீட்டில் புடுங்க முயற்சிக்கும் அதிகாரிகள்!

டிஜிட்டல் திண்ணை :‘எரியுற வீட்டுல புடுங்காதீங்க...’ முதல்வரிடம் முறையிட்ட சென்னை சில்க்ஸ்!”தி.நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் தீப்பற்றி எரிந்து சரிந்துவிட்டது. இரண்டு நாட்களாக தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறினர். கிட்டத்தட்ட முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி தீ தானே அடங்கியது என்றுதான் சொல்ல வேண்டும். விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடம் என்ற சர்ச்சை ஒருபக்கம். அமைச்சர்களுமே கூட சென்னை சில்க்ஸ்க்கு எதிராகத்தான் பேசினார்கள். மிச்சமிருக்கும் கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான வேலைகளும் தொடங்கிவிட்டது. சென்னை சில்க்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சில விசயங்களை சொல்லி இருக்கிறார்கள்.

ஒருவருக்கு இரண்டு இதயங்கள்.. தமிழக மருத்துவர்கள் சாதனை . இந்தியாவில் முதல் முறையாக..


ஒரு மனிதனில் இரண்டு இதயங்கள்: மருத்துவர்கள் சாதனை!
மின்னம்பலம் : இந்தியாவிலேயே முதன்முறையாக இதயம் செயலிழந்தவரின் உடலில் மற்றொரு இதயத்தைப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த 45 வயதான ஒருவருக்கு இதய கோளாறு ஏற்பட்டுள்ளது. இவர் கோவை மருத்துவ மைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருடைய இதயம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. வேறு இதயம் பொருத்தினால் தான் அவரால் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் மருத்துவர்கள் பழைய இதயத்தை எடுத்துவிட்டு புதிய இதயம் பொருத்தாமல், இரண்டு இதயத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்

மாட்டிறைச்சி விற்பனை தடையின் பின்னணி...ANIMAL MARKET .. மாட்டு வியாபாரம் அரசாங்கம் / வங்கிகளின் கைகளுக்கு செல்லப்போகிறது

tamil.thehindu.com :மாட்டையும் என் தாத்தாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. 10க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வந்தார். அவ்வப்போது மாடுகளை விற்கவும் வாங்கவுமாக இருப்பார். தாத்தா ஒரு மாட்டை விற்கப் போகிறார் என்றால் வீட்டில் ஏதோ விஷேசம் போல என்று தெரிந்து கொள்ளலாம். மாடு விற்க தாத்தா புறப்படும் ஜோரே அலாதி தான்.
மாடு விற்கப் போகும் நாளில் மட்டும் வழக்கமாகப் போடும் மேல் துண்டிற்கு பதிலாக வேறு ஒரு துண்டை எடுத்துச் செல்வார். சற்று கடினமானதாகவும். அடர் பச்சை நிறத்திலும் இருக்கும்.
அப்பாரு ஏன் இன்னைக்கு வெள்ளத் துண்டு எடுத்துக்கலீங்களா என்று கேட்டால், இல்ல சாமி மாட்டை விலை பேசணும்ல அதுக்கு இந்த துண்டு தான் சரி என்பார். விரல்களில் பேசப்படும் விலை வெளியில் தெரியாமல் இருக்கவே அந்த ஏற்பாடு.

கலைஞர் வைரவிழா மலரை பார்க்கும் .. விடியோ லீக்கானது அல்லது வெளியானது ?


சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்த நாள் விழாவோடு, அவரது சட்டப்பேரவை வைர விழாவையும் சேர்த்து சிறப்பாக கொண்டாட தி.மு.க. தலைமை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை (ஜூன் 3–ந் தேதி) மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்கிறார். இந்த விழாவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரள முதல்வர் பிரனாயி விஜயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். சில நாள்களுக்கு முன்பு சட்டப்பேரவை வைர விழா அழைப்பிதழை கருணாநிதியிடம் நேரில் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்தநிலையில், சட்டப்பேரவை வைர விழா மலரை இன்று கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின் நேரில் காண்பித்தார். 

28 வீத ஜி எஸ் டி.. கமலஹாசன் கடும் எதிர்ப்பு! தமிழ்,பிராந்திய மொழி படங்களின் சந்தையை இந்தி ,ஆங்கில சந்தையோடு ஒப்பிடுவது தவறு

சென்னை:அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கும், நமது படங்களுக்கும் ஒரேஅளவில் ஜி.எஸ்.டி வரி விதிப்பா என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் ஜுலை ஒன்றாம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பில், சினிமாவிற்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா டிக்கெட்டுகள் விலையானது தற்போதுள்ள அதிகபட்ச ரூ.120-லிருந்து, ரூ.153- ஆக உயரக் கூடும் என்று தெரிகிறது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஷால் தலைமையில், சங்க நிர்வாகிகள் அனைவரும் மத்திய நிதியமைச்சர் ஜெட்லீயை சந்தித்து பேசினார்கள். விரைவில் இது குறித்து அறிவிப்பு ஏதேனும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள திரைப்பட வர்த்தக கழக அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது.
ஒரு வரிவிதிப்பின் அடிப்படையில், அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், நமது படங்களையும் நீங்கள் ஒரே அடிப்படையில் வைக்க இயலுமா? அதே போல் இந்தியா முழுமைக்கும் பரவியுள்ள ஹிந்தி மொழி பேசும் மக்களுக்கு எடுக்கபப்டும் ஹிந்தி படங்களுக்கும், நமது தமிழ் படங்களுக்கும் ஒரே அளவு வரிவிதிப்பு என்பதும் சரியாகாது.

நீதிதேவன் குன்ஹாவின் தீர்ப்பு... .3,000 ஏக்கர் சொத்துகள் பறிமுதல் - மூச்சுமுட்டும் கணக்கு!

சிறப்புக் கட்டுரை: 3,000  ஏக்கர் சொத்துகள் பறிமுதல் - மூச்சுமுட்டும் கணக்கு!
மின்னம்பலம்: சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை கையகப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசு தொடங்கிவிட்டது. இதுபற்றி ஏற்கெனவே நமது மின்னம்பலம் இதழில் விரிவாக எழுதியிருந்தோம்.
இந்நிலையில் பறிமுதல் செய்யப்படும் சொத்துகளின் மதிப்பு எவ்வளவு என்ற கணக்கு, அதிகாரிகளைத் தலைபிய்த்துக் கொள்ளவைக்கும் அளவுக்கு இருக்கிறதாம்.
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு நடந்தபோது ஜெயலலிதா உள்ளிட்டோரின் 128 சொத்துகள் அட்டாச் செய்யப்பட்டன. அதாவது நீதிமன்றத்தால் கையகப்படுத்தப்பட்டன. இதில் 68 இடங்களில் சொத்துகளைப் பறிமுதல் செய்யலாம் என்று 2௦14ஆம் ஆண்டு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார். இதை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

திருமுருகன் காந்தியை மீண்டும் கைது செய்த போலீஸ் ... எழும்பூர் நீதிமன்றம் ஜாமீனில ஆனால் ...

. கடந்த 2016-ஆம் ஆண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது போராட்டம் நடத்திய வழக்கில் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தியை இன்று மீண்டும் கைது செய்துள்ளது காவல்துறை. புழல் சிறையில் இருக்கும் போதே அவரை மீண்டும் மீண்டும் கைது செய்து வருகிறது காவல்துறை.
மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடந்த 21ஆம் தேதி சென்னை மெரீனாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி மெழுகுவர்த்தி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அனுமதி மறுத்தும் தடையை மீறி கூடியதாக போலீசார் அவரையும் மேலும் சிலரையும் கைது புழல் சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று ஒரு வழக்கு அவர் மீது போடப்பட்டது. இன்றும் ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. இன்று போடப்பட்ட வழக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக வள்ளுவர்கோட்டம் அருகே நடத்திய ஆர்ப்பாட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறி வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்குக்காக இன்று சென்னை எழும்பூர் 14வது நடுவர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை, நீங்கள் இந்த வழக்கில் பெயில் எடுக்க விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, சரி என்றார் திருமுருகன்.

ஒ.பன்னீர்செல்வத்தின் ராக்கெட் வேக சொத்துக்குவிப்பு ..ஜெயா -சசிக்கு அடுத்த ஸ்தானம் ...

தமிழகத்தின் முதல்வராக மூன்று முறை பதவி ஏற்ற ஓபிஎஸ் நான் சசிகலா ஆதரவாள இல்லை என்று கூறிய பிறகு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்து இரண்டு முறை சிறைக்குச் சென்ற போதும், ஜெயலலிதா மறைவின் போதும் இடைக்கால முதல்வராகத் தமிழகத்தைப் பெரிய அளவில் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பொறுப்பு இவருக்கு உண்டு. அதே வேலையில் எம்எல்ஏ, தமிழக முதல்வர், நிதி அமைச்சர் எனப் பல பதவி வகித்த ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அதுவும் மூன்று முறை அதிமுக அரசு பதவி ஏற்கும்போதும் இவருடைய சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு 20.8 லட்சம் ரூபாய், 2011-மாண்டு 60.3 லட்சம், 2016-ம் ஆண்டு 1.53 கோடி என ஓபிஎஸ்-ன் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துகொண்டே வந்துள்ளது. 2006-ம் ஆண்டு 1 ஏக்கராக இருந்த சொத்து மதிப்பு 2011-ம் ஆண்டு 21.92 ஏக்கராக மாறியது, 2016-ம் ஆண்டு 32.61 ஏக்கராகச் சொத்து மதிப்பு உயர்ந்தது. 2006-ம் ஆண்டு வாகனம் ஏதும் குறிப்பிடவில்லை, 2011-ம் ஆண்டு மகேந்திரா ஜெனியோ, 2016-ம் ஆண்டு மகேந்திரா ஜெனியோ மற்றும் இன்னோவா. 2005-2006- நிதி ஆண்டில் ஓபிஎஸ்-ன் வருவாய் வருமான வரி செலுத்துவதற்கும் குறைவாகவும், அவரது மனைவிக்கு 36,251 ரூபாயும் மட்டுமே வருவாயாக இருந்தது.

கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகள்: இந்தியா - ரஷியா ஒப்பந்தம்.. பெரும் பணம் ரஷ்யாவிற்கு செல்லும்

Stanly Rajan :கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகள்: இந்தியா - ரஷியா ஒப்பந்தம் கையெழுத்து
அழைத்து வைத்து கையெழுத்து வாங்கியிருக்கின்றார் புட்டீன், நேரடியாக ரஷ்யா சென்றால் இமேஜ் ஏதும் பிரச்சினை வருமோ என கூட 3 நாடுகள் + பிரியங்கா சோப்ராவின் கால் என பார்த்துவிட்டு ரஷ்யாவிற்கு மோடி சென்றிருக்கின்றாரோ என்னமோ?
அதுவும் புட்டீனின் ராஜதந்திரமான வார்த்தைகள் முக்கியமானவை, அன்னார் என்ன சொல்லியிருக்கின்றார், நன்றாக கவனியுங்கள்
"பாகிஸ்தானுடன் எங்களுக்கு ராணுவ உறவு இருந்தாலும் இந்திய உறவும் ஒத்துழைப்பும் என்றும் ஆழமானவை"
இந்த‌ சர்வதேச டிப்ளமேட்டிக் வார்த்தையின் அர்த்தம் என்ன தெரியுமா?
"எங்களை விட்டு விட்டு இந்தியா எந்த நாட்டுடன் ராணுவ ரீதியாக, அணுசக்தி ரீதியாக‌ நெருங்கினால், நாங்கள் பாகிஸ்தான் பக்கம் முழுமையாக சாய தயங்கமாட்டோம்"

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்... இன்று(ஜூன் 2) அதிகாலைm

சென்னை: கவிக்கோ அப்துல் ரகுமான்(80) உடல் நலக்குறைவு காரணமாக
இன்று(ஜூன் 2) அதிகாலை காலமானார்.
சாகித்ய அகாடமி விருது வென்ற ‛கவிக்கோ' அப்துல் ரகுமான், மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். சென்னை பனையூர் வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் உயிர் பிறந்தது. வாழ்க்கை குறிப்பு:'கவிக்கோ' என்று போற்றப்படும் தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர். இவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி' 1974ம் ஆண்டு வெளிவந்தது.

நிச்சயமாக இளையராஜா மணிமேகலையின் அட்சய பாத்திரம், ,,, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Stanly Rajan :1970கள் வரை தமிழக இசை குறிப்பாக திரைஇசை கர்நாடக சங்கீதத்திலேதான் சிக்கி இருந்தது, அதாவது கர்நாடக இசைவடிவிலேதான் பாடல்களும்,பிண்ணனி இசை எல்லாமே அமைந்திருக்கும், தவறென்று சொல்லுவதற்கில்லை. காரணம் இசை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது அக்காலம் வகுத்திருந்த விதி.
1975களில் இந்திதிணிப்பு தமிழகத்தில் தடுக்கபட்டிருந்தாலும், இந்திபாடல்கள் தாக்கம் ஆரம்பமானது, பெரியாரும் இல்லை,அண்ணாவுமில்லை. இந்தியை எதிர்த்தார்களே தவிர, இந்தி இசை வரவேற்பினை பெற்றகாலம்.
அப்பொழுதுதான் மக்களின் இசையாக, தமிழரின் ஆதி இசையின் பிரதிபலிப்பாக, உண்மையான கிராமத்து பண்ணாக அறிமுகமானார் அந்த இளைஞன், படம் "அன்னகிளி", மொத்த தமிழகமே திரும்பி பார்த்தது.
அதன்பின் அற்புதமான இசையை அவர் கொடுத்தார், கண்ணதாசனின் இறுதி 5 காலங்களில் அவரின் ஈடுஇணையில்லா கவிதைகளை அற்புதமாக பாடலாக்கிய வரலாறு இளையராஜா.

அனுஷ்காவின் கரவன் பறிமுதல் .. முறையான ஆவணங்கள் இல்லை ..

நடிகை அனுஷ்காவின் கேரவன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகை அனுஷ்கா நடிக்கும் தெலுங்கு படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இதற்காக நடிகை அனுஷ்கா அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளார். தினமும் அவர் அங்கிருந்து சினிமா படப்பிடிப்புக்கு சென்று வந்தார். ஆனைமலை பகுதியில் இன்று படப்பிடிப்பு நடந்தது. இதில் அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவனுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறி போக்குவரத்து அதிகாரிகள் கேரவனை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சில்க்ஸ் ரூ.300 கோடி சேதம் - தீப்பிடித்த கட்டிடம் இன்று இடிக்கப்படுகிறது

80 கோடி ரூபாய் பெறுமதியான துணிகளும் 20 கோடி ரூபாய் பெறுமதிக்கு தங்க நாயகிகளும் ... சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் பற்றிய தீ 37 மணி நேர போராட்டத்துக்கு பின் அணைக்கப்பட்டது. சேதம் அடைந்த அந்த கட்டிடம் இன்று இடிக்கப்படுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர். சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் ரூ.300 கோடி சேதம் - தீப்பிடித்த கட்டிடம் இன்று இடிக்கப்படுகிறது" சென்னை தியாக ராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள 7 மாடிகளை கொண்ட சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை, அசோக்நகர், வண்ணாரப்பேட்டை, தேனாம்பேட்டை உள்பட 12 நிலையங்களில் இருந்து 35 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. ‘எப்.54-எச்.டி.டி.’ எனும் 170 அடி உயரமுள்ள ராட்சத உயிர் காக்கும் ‘ஸ்கை லிப்ட்’ வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

United States of South India: Can a southern collective get us a better deal from Delhi?

thenewsminute.com  :The politics of the South has made it economically comparable to Hong Kong, while the atavistic politics of the North has dropped it far down the scales.  
Tara-Krishnaswamy" i
After all, 20% of the population contributes a full 30% of India's tax revenues. This is the money that runs the country.
The South also delivers a fourth of India's GDP.  It is not only an economic bellwether with low unemployment, a high rate of industrialisation and a per capita GDP that is over double that of the Hindi belt, it is also leaps ahead on human development and social indicators.
Child development indices are double to 7 times higher than the Hindi states, literacy rates tend towards an average of 80% with a 10-point difference against the North, and accessibility to health and hygiene facilities is radically better.
The gulf in human development is so stark that while fertility rates in the South are closer to that of Western Europe, much of the North is still getting their act together on basic issues like birthing babies without losing mothers.

சோனியா காந்தி : தமிழ் மக்களுக்கு பணியாற்றவேண்டும் என்பதற்காக தேசிய பதவிகளை துறந்தவர் கலைஞர் கருணாநிதி!

தமிழக மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே தேசிய அளவில் கிடைத்த வாய்ப்புகளை திமுக தலைவர் கருணாநிதி தவிர்த்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் 94 -ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு சோனியா காந்தி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி:
தற்கால அரசியல் தலைவர்களில் சிறந்த தலைவரான கருணாநிதியின் 94 -ஆவது பிறந்த தின விழா சிறப்பாக நடைபெற இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டு நூற்றாண்டுகளிலும் மக்களுக்கு பணியாற்றிய தலைவர்களாக சிலரை மட்டுமே கூற முடியும்.
1940 -இல் தொடங்கிய கருணாநிதியின் அரசியல் வாழ்வு, 20 -ஆம் நூற்றாண்டில் பெரும் பங்களிப்பை செலுத்தி, 21 -ஆம் நூற்றாண்டிலும் 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. முதல்வராக கருணாநிதி இருந்த காலங்களில் சிறந்த நிர்வாகியாகவும், திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கைகளை நிறைவேற்றுவதில் விரைந்து முடிவு எடுக்கக்கூடியவராகவும் திகழ்ந்தார். எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருந்தபோது அறிவுப்பூர்வமான வாதங்களால் ஆளும் கட்சியை இயக்குபவராக இருந்தார்.

ஜிகா வைரஸ் குஜராத்திலும் வட இந்தியாவிலும் ... மிகவும் கொடுரம் .. குழந்தைகளை ..Zika Virus Reaches India


stanley.rajan ஜிகா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுகின்றது என்கின்றது வெளிநாட்டு செய்தி, அது மருந்து இல்லா கொடூர நோய்..
இப்பொழுது இந்தியாவில் ஜிகா விஸ்வரூபமெடுக்கின்றது, ஆனால் அரசு இன்னும் கவனத்தில் கொள்ளவில்லை
குஜராத்திலும் வட இந்தியாவிலும் பிறந்த குழந்தைகள் ஜிகா நோயால் பாதிக்கபட்டிருப்பது உறுதி செய்யபட்டிருக்கின்றது தொடக்கத்திலே கண்டறியபட்டும் அரசின் அஜாக்கிரதையோ அல்லது மறைத்துவிட்ட கொடுமையோ நடந்திருக்கின்றது, உங்கள் நாட்டில் இந்த நோய் இருந்தும் ஏன் அறிவிக்கவில்லை என இந்தியாவோடு உறவாடும் நாடுகள் கேட்கின்றன‌
அதாவது இங்கு ஜிகா வைரஸ் இருப்பது தெரிந்தால், அந்நாட்டு மக்களை அவர்கள் எச்சரிக்கை செய்யவேண்டுமல்லவா? அதற்காக‌
இந்திய அரசு இருக்கு ஆனால் இல்லை என்ற ரீதியில் என்னமோ சொல்லிவிட்டு நழுவியது
சர்வதேச விவகாரமாக இந்த பிரச்சினை உருவெடுக்கின்றது, இந்தியாவிற்கு தலைகுனிவு
இந்நிலையில் மாட்டுகறி சர்ச்சை ஏன் கிளம்பியது என்ற சிந்தனை இப்பொழுது உங்களுக்கு வரகூடாது, ஆம் வரவே கூடாது, அதெல்லாம் பசுவினை காக்கும் நடவடிக்கை
ஜிகா வைரஸ் கொடூரமமானது, பரவுகின்றது ஆனால் அரசு என்ன திட்டம் வைத்திருக்கின்றது என்றே தெரியவில்லை, ஒருவிதமான பரிதாப நிலை இது
மருந்து கண்டிபிடிக்காத , பிஞ்சுகளை, கருக்களை அழித்துவிட கூடிய ஒரு பெரும் நோய் பரவிகொண்டிருக்கும் வேளையில் இத்தேசம் மாட்டை கட்டி அழுகின்றது

இந்து தேச பரப்புரையை நிறுத்துங்கள்: பாஜகவுக்கு சித்தார்த் வேண்டுகோள்

நாங்க சொன்னா ஆன்டி இந்தியன்ஸ் னு சொல்வீங்க. இவர் சொல்கிறார் இதற்கு என்ன பதில்.
இந்து தேச பரப்புரையை நிறுத்துங்கள் என்று பாஜகவுக்கு நடிகர் சித்தார்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''அன்புள்ள பாஜக. உங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதைக் கொண்டு இந்திய தேசத்தை வலுப்படுத்துங்கள். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள். இந்து தேச பரப்புரையை நிறுத்துங்கள். நாம் அதைவிட மேலானவர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சி தடை சட்டத் திருத்தம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு விவகாரங்களில் தமிழகத்தில் அதிருப்தி நிலவி வரும் நிலையில் சித்தார்த் இத்தகைய வேண்டுகோளை விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

வியாழன், 1 ஜூன், 2017

ராமேஸ்வரத்தில் 16 கிலோ தங்கம் பிடிபட்டது இலங்கையில் இருந்து கடத்தல் ... கூட்டாளிகளே தகவல் கொடுத்தனர் ..

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வருவதும், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. அவ்வகையில் இன்று ராமேஸ்வரம் அருகே உள்ள குந்துக்கால் கடற்கரை பகுதிக்கு, தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவான் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. எனவே, குந்துக்கால் பகுதியில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, 16 கிலோ தங்கத்துடன் இரண்டு நபர்கள் சிக்கியுள்ளனர். இலங்கையில் இருந்து இந்த தங்கம் கடத்தி வரப்பட்டிருப்பதாகவும், அவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் வருவாய் புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே ரூ.6 கோடி மதிப்பிலான 16.32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இந்த தங்கம், ரகசியமாக படகில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மாலைமலர்

பசுவை வணங்குபவர்கள் பால் குடிக்க கூடாது .. பெரும் பண்ணைகளில் பசுவுக்கு கொடூர வதை


Sridhar Subramaniam பசுவை கோமாதா என்று வணங்குபவர்கள், பசுவின் மீது கருணை காட்ட வேண்டும் என்பவர்கள் பால் குடிக்கக் கூடாது, தயிர், நெய், பனீர் போன்றவற்றை உண்ணக்கூடாது.
ஏனெனில் Commercial Dairy Industry என்று சொல்லப்படும் வாணிப-ரீதியான பால் துறை பசுக்களின் மீது சொல்லவொண்ணா குரூரங்களை அவிழ்த்து விடுகிறது. பசுக்கள் செயற்கையாக கருத்தரிக்கப் படுகின்றன. அந்தக் கன்றுகள் ஓரிரு மணிகளில் அவற்றிடம் இருந்து தனிப்படுத்தப் படுகின்றன. அவற்றின் அளவுக்கு மேல் மூன்று நான்கு மடங்கு பால் தினமும் மெஷின் மூலம் கறக்கப் பட்டு அவற்றின் காம்புகள் தொடர்ந்து காயப்படுகின்றன. 20 வருடங்கள் வரை வாழக்கூடிய பசுக்கள் எட்டே வருடங்களில் இறந்து போய் விடுகின்றன. வருடக்கணக்கில் கொடும் சித்ரவதைகளை அனுபவித்து வாழ்ந்து மடிகின்றன. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், கொன்று புசிப்பவர் பால், தயிர் உண்பவர்களை விடப் பசுக்களின் மீது பெரும் கருணை காட்டுகிறார்கள். எட்டு வருடங்கள் கொடும் சித்ரவதை அனுபவிப்பதை விட ஒரே வெட்டில் மடிந்து விடுவது கருணைதானே?
(இது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும், நம்ப முடியாத, செய்தியாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ மற்றும் போட்டோ லிங்க்களைப் பார்க்கவும்.)

ஐ ஏ எஸ் தேர்வு ... தமிழ் விருப்பு தேர்வாக எடுத்த மாணவர்கள் மீது பெரும் அநீதி! 40 பேருக்கு மட்டுமே சித்தி..

ilangovan.balakrishnan.: மெல்லத் தமிழ் இனி சாகும்? நேற்று வெளியாகியிருக்கும் ஐ ஏ எஸ் தேர்வு ரிசல்ட், தமிழ் பாடம் விருப்பு தேர்வாக (optional) எடுத்துப் படித்த தமிழ் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் வகையில் வந்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு தமிழ் ஆப்சனல் பாடம் எடுத்து எழுதி மெயின் எக்ஸாமில் வெற்றிபெறும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் நூறு ஆக அமைந்திருக்கும்.
ஆனால் இந்த வருடம் அப்படியான மாணவர்கள் வழக்கத்துக்கு மாறாக சுமார் 40 பேர் மட்டுமே மெயின் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்கள்.
ஒவ்வொரு வருடமும் இறுதிப் பட்டியலில் தமிழை ஆப்சனலாய் எடுத்துத் தேர்வெழுதியவர்கள் முதல் பத்து இடத்தில் ஒருவரேனும் இடம் பிடித்திருப்பார்கள்.
ஆனால், நேற்றைய ரிசல்ட்டிலோ, தமிழ் விருப்பு தேர்வாக  எடுத்துப் படித்தவர்களுக்குள் முதலாவது வந்தவரே 300க்கும் கீழான ரேங்கிற்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இந்த வருடம் மட்டும் தமிழ் மொழி எடுத்துப் படித்தவர்கள் அதால பாதாளத்திற்கு திடீரென தள்ளப்பட்டதன் காரணம் தெரியாமல் மாணவர்கள் திகைத்துப் போய் இருக்கிறார்கள்.
யாரிடம் கேட்பார்கள் நீதி?
தமிழ் நாட்டுக்கோ, தழிழுக்கோ நாதி இல்லாத இந்தச் சூழலில்...
தமிழ் மாணவனுக்கு ஏது நாதி?

ஹெரிடேஜ் பால் உரிமையாளர் சந்திரபாபு நாய்டு... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நடுக்கம் .. நாடுயுத் 10 MLA க்களை வாங்கி அரசையே கவிழ்த்து விடுவார்?

சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஓவர் சவுண்டால் இப்போது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுதான் தமிழக அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாகிவிட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சி நடுங்கி போயுள்ளார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனத்தை கலக்கின்றன; தனியார் நிறுவனங்களின் பால் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை கிளப்பினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அத்துடன் தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்யவில்லை எனில் தூக்கில் தொங்குவேன் எனவும் ஆவேசமாக கூறினார் ராஜேந்திர பாலாஜி. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
ஆவின் நிறுவனத்திலும் பாலில் கலப்படம் இருக்கிறது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களாக அமைதி காத்து வருகிறார். இது குறித்து கோட்டை வட்டாரங்களில் விசாரித்த போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தொடர்ச்சியான பேட்டிகளை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரை அழைத்து பேசினார்.

டெல்லி ஐ ஐ டி யில் மாணவி மரணம் .. மின்விசிறியில் தொங்கினார் .. கொலையா? தற்கொலையா?

27-Year-Old PhD Student Found Dead In IIT Delhi Campus. Manjula Devak, was found hanging from a ceiling fan in her room around 7.40 ...
டெல்லி: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா தேவக். 29 வயதான இவர் டெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் பிஎச்.டி. இறுதியாண்டு படித்து வந்தார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று இரவு மின்விசிறியில் பிணமாக தொங்கினார் . மஞ்சுளா தேவக் அறைக்கு மற்றொரு மாணவி சென்றபோது, விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் அவர் பிணமாகத் தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுபற்றி காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து போலீசார் வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தியா ஜிடிபி 6.1 ஆக சரிவு . இனி நாம் வளரும் நாடுகள் பட்டியலில் இருக்கப்போவதில்லை.

swaravaithee: இந்த நிலைக்குக் காரணம் டிமானிடைசேசன் எனப்படும் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று ஒரே ராத்திரியில் அறிவித்ததே.
உடனே சில தேச விரோதிகள் நரேந்திரமோடி மீது பாய்வார்கள். அவர்களுக்கெல்லாம் பொருளாதாரத்தைப் பற்றி என்ன தெரியும் நம் நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பது தானே தவிர, ஜிடிபியை உயர்த்துவது அல்ல.
இப்போது வெளிவந்திருக்கக்கூடிய ஜிடிபி அறிக்கைகூட சில கருப்பு பண முதலைகள் செய்துள்ள சதி.
உங்களுக்கு என்ன தெரியும்? கருப்புபண முதலைகளை ஒடுக்க நம் பாரத பிரதமர் நரேந்திரமோடி எவ்வளவு பாடுபடுகிறார். எவ்வளவு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார் என்பது எனக்குத் தெரியும்.

Chennai IIT மாணவன் சூரஜ் ஐ தாக்கிய பாஜக மாணவ குண்டன் மனீஷ் வைத்தியசாலையில் ...போலீசின் என்கவுண்டர் பாணி நாடகம்

ஐஐடியில் மாணவர் சூரஜை தாக்கிய மாணவர் மணீஷை மருத்துவமனையில் சென்று சந்தித்து வந்திருக்கிறார் பாஜகவின் இளைஞரணி தலைவரான வினோஜ் ப செல்வம்.
மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தைக் கண்டித்து சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்து நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட ஐஐடி மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் ஒருவர் ஆய்வு மாணவர் சூரஜ். அவரை சக மாணவர் மணீஷ் மாட்டிறைச்சி சாப்பிட்டு சைவ மெஸ்ஸுக்கு வந்தார் என்ற காரணத்தால் பலமாக தாக்கினார். சூரஜை தாக்கியதால் அவருடைய கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மணீஷ் கை உடைந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக பாதிக்கப்பட்ட சூரஜை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார். பல்வேறு கட்சிகள், முற்போக்கு அமைப்புகள் சூரஜ்ஜுக்கு நீதி வேண்டி போராட்டம் நடத்தினர். கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து சூரஜை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார். மணீஷை காப்பாற்றும்வகையில் பாஜக தலைவர்கள் பலரும் பேசி வருகின்றனர்.

வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது!

thetimestamil.com :வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டின் பொருளாதார வளர்ச்சி அட்டவணை குறைந்துள்ளதாக டாய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளதே காரணம் என செய்தி தெரிவிக்கிறது.
ஜனவரி-மார்ச் மாதத்துக்கான பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக உள்ளது. இது எதிர்பார்த்த அளவைவிட 1 சதவீதம் குறைவு. பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பார்த்த அளவு 7.1 சதவீதம் ஆகும். சீனாவின் வளர்ச்சி சதவீதமான 6.9 விட இது குறைவாகும். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் காலாண்டின் வளர்ச்சி சதவீதமான 6.0விட தற்போதைய காலாண்டின் வளர்ச்சி சதவீதம் குறைவு எனவும் ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது.

விதிமீறலில் 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள்! சென்னை சில்க்ஸ் அணையா தீ!

thetimestamil.com : ஜாக்கி சேகர்: 20 மணி நேரம் போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்.? நேற்று இரவு சாதர்ன் கிரைஸ்ட் ஓட்டலின் மொட்டை மாடியில் இரவு பதினொன்றரைக்கு மேல் வரை இருந்தேன்..அப்போது வரை தீ கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டுதான் இருந்தது… சென்னை சில்க்ஸ்… மூன்று பக்க சுவர்… எந்த இடத்திலும் ஜன்னல் என்று ஒன்றுஇல்லவே இல்லை…விடியற்காலை நாலே முக்காலுக்கு தீ பிடித்து பரவ ஆரம்பித்து இருக்கின்றது.. இரவு பணியில் இருந்து ஊழியர்கள் பதினோரு பேரை பத்திரமாக மீட்டு இருக்கின்றார்கள்..
200 கோடிக்கு நட்டம் என்று முதல் தகவல் அறிக்கை சொல்கின்றது…
இதுவே ஞாயிறு மாலை பரபரப்பான வியாபார நேரத்தில் தீ பிடித்து இருந்தால் 200க்கு மேற்ப்பட்ட குடும்பங்களில் தாலி அறுத்து இருப்பார்கள்..விசேஷத்துக்கு துணியெடுக்க வந்தவர்களில் வீட்டில் பதினாறு நாள் கழித்து காரியம்தான் செய்து இருப்பார்கள்..

கலைஞர் மேடைக்கு வருவாரா? வரலாம்தானே ? ஸ்டாலின் மறுப்பு?

மின்னம்பலம்: நாளை மறுநாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு  94-வது பிறந்தநாள். கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகிறது திமுக. ஆனால், கருணாநிதி கோபாலபுரத்தில் அமைதியாக இருக்கிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதே, கருணாநிதிக்கு ஆக்சிஜன் செலுத்துவதற்குத் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. டிராக்கியோஸ்டமி எனப்படும் இந்தச் சிகிச்சையின் மூலமாகத்தான் கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் அப்போது செலுத்தப்பட்டது. மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகும் கூட, கருணாநிதிக்குத் தொடர்ந்து செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது. டாக்டர் மோகன் காமேஷ்வரன் தினமும் கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதி உடல்நிலையைக் கவனித்து வந்தார். இன்னும் அவர்தான் தினமும் கோபாலபுரத்துக்கு வந்து போகிறார். கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் இப்போது தேவைப்படுவதில்லை. அவராகவே சுவாசிக்க ஆரம்பித்துவிட்டார்.

சென்னை சில்க்ஸ் குமரன் தங்க மாளிகை'யின் கிலோ கணக்கிலான தங்கம் ......?

இன்று காலை முதல் சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. கட்டிடத்தின் முன்பகுதியில் ஒரு பாகம் இடிந்து விழுந்ததோடு, கடையின் ஏழு மாடியில் உள்ள பொருட்கள் அனைத்தும் கருகி சாம்பலாகிவிட்டது. இந்த நிலையில் சென்னை சில்க்ஸ் உள்ளே இருந்த குமரன் தங்க மாளிகையில் கிலோ கணக்கில் தங்கம் இருந்ததாகவும், அந்த தங்கம் என்ன ஆயிற்று என்ற கேள்வி எழுந்துள்ளது. கடை ஊழியர் ஒருவர் இதுகுறித்து போலீசாரிடம் கூறியபோது, 'ஒவ்வொரு நாளும் கடையை மூடும்போது கடையின் ஷோகேஷில் உள்ள நகைகள் தவிர மீதி நகைகள் மற்றும் தங்கக்கட்டிகள் அனைத்தையும் ஒரு பெரிய இரும்புப்பெட்டியில் வைத்து பூட்டிவிடுவார்கள் என்றும் எவ்வளவு பெரிய தீவிபத்து ஏற்பட்டாலும், அந்த இரும்புப்பெட்டி உருகாது என்பதால் நகைகள் உள்ளுக்குள் பத்திரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

BBC :டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் , அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. n டிடிவி தினகரனுக்கு நிபந்தனை ஜாமீன் டிடிவி. தினகரனுக்கும், இதே வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவுக்கும் ஜாமீன் அளிப்பதாக டெல்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். இருவரும் 5 லட்சம் ரூபாய் செலுத்தி, சொந்த ஜாமீனில் செல்வதற்கு நீதிபதி பூனம் சவுத்ரி அனுமதி அளித்துள்ளார். டிடிவி. தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா ஆகியோர் ஜாமீனில் வெளியே சென்று சாட்சியங்களை கலைக்கக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை இருவருக்கும் ஜாமீன் வழங்கும்போது நீதிபதி விதித்துள்ளார்.

காரில் எரிந்த மூவரும் தற்கொலை ... சந்தேகம் ... மாமல்லபுரத்தில் கடந்த 27 தேதி சம்பவம்

சென்னை: மாமல்லபுரம் அருகே மணமை கிராமத்தில் உள்ள தனியார் வீட்டு மனைப்பிரிவில்,  கடந்த 27ம் தேதி இரவு, காருக்குள் இருந்த 3 பேர் உடல் கருகி இறந்தனர். விசாரணையில், குரோம்பேட்டையை சேர்ந்த ஆடிட்டர் ஜெயதேவன் (52), அவரது மனைவி ரமாதேவி (46), மகள் திவ்ய (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. ஒரே மகளான திவ்யக்கு கடந்த டிசம்பரில் திருமணம் நடந்ததும், அவரது கணவர் சரத் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் ராணுவ மையத்தில் அதிகாரியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரின் மரணத்திலும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர். தடயவியல் துறையினர் சோதனை முடிவு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று மாமல்லபுரம் போலீசாரிடம் வழங்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், 3 பேரின் உடல் மீதும் தீ பிடிப்பதற்கு முன்பாக பெட்ரோல் ஊற்றப்பட்டுள்ளதும், கார் இன்ஜின் மற்றும் ஏ.சி இயந்திரத்தில் கோளாறு ஏதும் ஏற்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து விழுந்தது

After almost 24 hours of blazing fire, the massive Chennai Silks building in Chennai's T-Nagar started collapsing at around 3 am on Thursday. At around 3.20 am, portions of six floors of the building came crashing down even as fire fighters struggled to put out the blaze. The fire, which had pretty much been brought under control in the night started blazing dangerously at 1.00 am.
சென்னை: தீவிபத்தில் சிக்கி இடிந்து விழுந்து நொறுங்கியது சென்னை சில்க்ஸ் கட்டடம். இதனால் தி.நகர் மக்களின் இயல்பு வாழ்க்கை இரண்டாவது நாளாக முடங்கிப்போயுள்ளது.
நேற்று அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட திடீர் தீவிபத்து, காலை 7 மணிக்குப் பிறகே சென்னை மக்களுக்கும் மாநிலத்தின் பிற பகுதியினருக்கும் தெரியவந்தது. முதலில் சாதாரண தீ விபத்து போலத்தான் கருதப்பட்டது.
ஆனால் இரண்டாவது நாளாகவும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் தி.நகர் வாசிகள்.
பயங்கரமான புகையால் மூச்சுதிணறல், நெஞ்செரிச்சலால் இரண்டாவது நாளாகவும் தி.நகர் வாசிகள் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில், வெப்பம் தாங்க முடியாமல் கட்டடத்தின் 4 தளங்கள் இன்று அதிகாலை 3.19 மணிக்கு இடிந்து விழுந்துள்ளன. மேலும் மீதமுள்ள தளங்களும் முற்றிலும் இடிந்து விழும் ஆபத்து உள்ளது தீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ் பகுதியில் 100 மீட்டர் சுற்றளவுக்கு யாரையும் அனுமதிக்காமல் போலீசார் தீவிர கண்காணிப்பு பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள்.

பதஞ்சலி .. 40 சதவீதப் பொருட்கள் தரம் குறைவானவை: ஆர்.டி.ஐ தகவல்

Ramdev's Patanjali products fail quality test, RTI inquiry finds
பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளில் 40 சதவீதப் பொருட்கள் தரம் குறைவானவை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. பாபா ராம்தேவின், பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. இதில், பதஞ்சலி நிறுவனத்தின் 40 சதவீதம் பொருட்கள் முழுமையான ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்றும், பொருட்களின் தரம் குறைவாக இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் மற்றும் ஷிவிங்கி பீஜ் ஆகிய பொருட்கள் தரமற்றவை எனவும், இதில் 31.68 சதவீதம் அந்நிய நாட்டு மூலப்பொருட்கள் கலந்திருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பழ.நெடுமாறன் அல்ல.... பழம் தின்ற நெடுமாறன்?

stanley.rajan.: தமிழக தினசரி பல உண்டு, அதில் நீண்ட பாரம்பரியும் தனி தன்மையும் கொண்டது தினமனி, இன்றும் அதன் தமிழும் கருத்துக்களும் தனித்துவமாக நிற்பவை
தினதந்தி போன்றவை தமிழை கொலை செய்தன, சீமான் போன்ற பண்பாடில்லாத தமிழனைத்தான் கொடுத்தன‌, தமிழ் நாகரீகம், பேச்சு நாகரீகம், எழுத்து நாகரீகம் என தமிழருக்கிருந்த பல நல்ல விஷயங்களை கெடுத்தது
அதாவது தாழகிடக்கும் தமிழரை மேலே எடுத்து சென்று நல்ல தரத்தில் நிறுத்த தவறி, அவர்கள் அளவிற்கு தமிழை இழுத்து சென்று அதன் தரத்தை கெடுத்தார்கள், அப்படி பல உண்டு
தினமணி போன்றவை அதில் தனித்து நின்றவை
அப்படிபட்ட தினமணி இன்று பழ.நெடுமாறன் எனும் தேசவிரோதியினை எழுத வைத்திருக்கின்றது
எதில்? இந்தியா உலகில் தனிமைபடுகின்றதாம், நட்புநாடு எனும் சொல்லபடும் இலங்கை இந்தியாவினை ஏமாற்றுகின்றதாம், இப்படி உளறுகின்றார்
இதனை ஒரு பாரம்பரிய மிக்க தினமணி அனுமதித்தது பெரும் தவறு
இலங்கை நமது நட்பு நாடு என்பது அரசியல் ராஜ தந்திரத்தில் சொல்லபடும் வார்த்தையே அன்றி, என்றுமே அது நம் சந்தேகத்திற்குரிய நாடு

திராவிடத்தை எதிர்த்து பேசியவர்கள் ... பார்பனீயத்தின் பாதங்களில் விழுந்ததுதான் வரலாறு?

marx.anthonisamy: திராவிடக் கருத்தாக்கம் வாழ்க! வளர்க !
சற்று முன் ஒரு வட இந்திய இதழிலிருந்து, "இந்த 'திராவிடநாடு' என 'ஹேஷ் டாக்' பிரச்சாரம் நடக்கிறதே அதனால் ஏதும் அரசியல் ரீதியான பயன் உண்டா? 1963 லேயே திராவிடநாடு கோரிக்கை சட்டவிரோதமாக ஆக்கப்பட்ட நிலையில் இதெல்லாம் சாத்தியமா?" - என்று கேட்டார்கள்.
நான் சொன்னது:
"திராவிடநாடு மட்டுமல்ல எந்த நாடும் கேட்டுப் பிரிவினை கேட்பதுதான் இங்கு சட்டவிரோதம் ஆக்கப்பட்டுள்ளது. திராவிடநாட்டுக்கு மட்டும் போடப்பட்ட சட்டம் இல்லை என்பதை முதலில் நாம் கவனத்தில் வைக்க வேண்டும்..
அடுத்து, திராவிடநாடு என்பது சாத்தியமாகுமா ஆகாதா என்பதற்கு அப்பால் அப்படியான ஒரு அடையாளம் இயல்பானது என்பது கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் முன்பே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயம்.