சனி, 14 மார்ச், 2026

வட இந்திய சகோதர்களுக்கு 400 ஆண்டுகள் சிறை தண்டனை! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

Indian-Origin Brothers Found Guilty In Multi-Million Dollar Fraud In US, Could Face 400 Years In Prison

 தினமலர் : அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி சகோதரர்களான பாஸ்கர் சாவானி மற்றும் அருண் சாவானி ஆகியோருக்கு, பல மில்லியன் டாலர் மோசடி வழக்குகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஹெர்மன் குல்கே (1938-2026) : தென்னிந்திய வரலாற்றைத் தெளிவுபடுத்திய வரலாற்றறிஞர் - Prof.Hermann Kulke

May be an image of monument and temple

 Ravi Kumar   : ஹெர்மன் குல்கே மறைந்தார் என்ற செய்தியை நண்பர் நரேந்திரன் நேற்றிரவு பகிர்ந்திருந்தார். அதைப் படித்ததும் துணுக்குற்றேன். அவரது எழுத்துகளைப் படித்திருக்கிறேன் என்றபோதிலும் அவரை நெருக்கமாகப் பின் தொடர்ந்ததில்லை. அவரது புகைப்படத்தைப் பார்த்தபோது அவர் முதியவர் என்ற உணர்வு வந்ததில்லை. இப்போது தேடிப் பார்க்கும்போதுதான் அவர் 1938 இல் பிறந்தவர் என்ற விவரம் தெரிந்தது. நிறைவாழ்வு வாழ்ந்தவர்தான் என்றபோதிலும் அவரது மறைவு துயரமளித்தது. இந்தியாவை அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவைப் பற்றி ஆய்வு செய்யும் அயல்நாட்டு அறிஞர்களின் மறைவு ஒவ்வொன்றுமே துயரமளிப்பதுதான். ஏனென்றால் அவர்களது இடங்களை இட்டு நிரப்ப எவரும் வருவார்கள் என்ற நம்பிக்கை இப்போது இல்லை. 

வெள்ளி, 13 மார்ச், 2026

தூத்துக்குடி மாணவி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு; கனிமொழியை முற்றுகையிட்டதால் பரபரப்பு

  hindutamil.in - ரெ.ஜாய்சன் :   தூத்துக்குடி: குளத்தூர் அருகே வேடநத்தம் காட்டுப் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறுத்துள்ளனர். மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்த திமுக எம்.பி. கனிமொழியை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, நேற்று இரவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

TVK + BJP - நடிகர் விஜய் பாஜக கூட்டணி - மாவட்ட செயலாளர்கள் அமோக ஆதரவு

 தினமலர் : சென்னை: வரும் சட்டசபை தேர்தலை தேஜ கூட்டணியில் இணைந்து சந்திக்க தவெகவின் 90 சதவீதம் மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தவெக என்ற அரசியல் கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய் தற்போது கரூர் சம்பவம், நடிகை திரிஷா விவகாரம் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். அவருடன் கூட்டணி அமைக்க பாஜ முயன்று வருகிறது.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் அவருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றெல்லாம் மீடியாக்களில் செய்திகள் வந்தன. ஆனால், இது பற்றி தமிழகத்தில் கூட்டணி தலைவரான இபிஎஸ், எதுவும ் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தவெகவின் ஆதவ் ஆர்ஜூனாவும் நேற்று நடந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்றார். நிர்மல் குமாரும்இதேபோன்ற கருத்தை கூறினார்.

சிட்டிங் காங் எம்எல்ஏ-க்களில் 12 பேருக்கு சீட் இல்லை: திமுக நிபந்தனையால் அலறும் காங்கிரஸ்

hindutamil.in -வே.கோபாலகிருஷ்ணன் :  காங்கிரஸ் - திமுக தொகுதிப் பங்கீடு நீண்ட இழுபறிக்குப் பிறகு இறுதியான நிலையில், அடுத்ததாக காங்கிரஸின் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் 12 பேருக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது எனவும் அந்தத் தொகுதிகளில் சிலவற்றை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் எனவும் திமுக தரப்பிலிருந்து அழுத்தம் தரப்படுவதாகச் சொல்லப் படுவதால் மீண்டும் காங்கிரஸ் வட்டாரம் கொதிநிலைக்கு மாறி வருகிறது.
காங்கிரஸில் தற்போது எம்எல்ஏ-க்களாக இருக்கும் 17 பேரும் மீண்டும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள். 
இந்த நிலையில் தான், அவர்களில் 12 பேருக்கு மீண்டும் சீட் கிடைப்பதில் திமுக செக் வைப்பதாகச் சொல்லப்படுகிறது. 

தமிழகத்தில் 15% உணவகங்கள் மூடல் - கள்ளச்சந்தையில் சிலிண்டர் ரூ.6,000-க்கு விற்பனை

 hindutamil.in :  சென்னை: வணிக பயன்​பாட்​டுக்​கான சிலிண்டர் தட்​டுப்​பாட்​டால், தமிழகத்​தில் 15 சதவீதம் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ள​தாக தமிழக ஹோட்​டல் உரிமை​யாளர்​கள் சங்​கம் தரப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கள்​ளச்​சந்​தை​யில், வணிக சிலிண்டர் விலை ரூ.6 ஆயிரமாக உயர்ந்​துள்​ளது. ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதல் தீவிரத்​தால், மத்​திய கிழக்கு நாடு​களில் எண்​ணெய் மற்​றும் எரிவாயு உற்​பத்​தி, விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால், திரவ பெட்​ரோலி​யம் எரி​வாயு (எல்​பிஜி) விநி​யோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி கோமாவில் இருக்கிறாரா? ஒரு காலை இழந்ததாகவும் தகவல்

 dinamalar.com : டெஹ்ரான்: அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி, தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும், ஒரு காலை இழந்துள்ளதாகவும் பிரிட்டன் நாளிதழ் பகீர் செய்தியை வெளியிட்டு உள்ளது.
அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் முரண்பாடு காட்டியதால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இரு வாரங்களை எட்டியுள்ள இந்தப் போரில், ஈரானின் ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனி, வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பத்தைத் தொடர்ந்து, புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி,56, பொறுப்பேற்றுக் கொண்டார்.

வியாழன், 12 மார்ச், 2026

பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை!

 hindutamil.in- வெற்றி மயிலோன் : சென்னை: “பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வின் சுவடு மறைவதற்குள், 
மதுராந்தகம் அருகே கடந்த 09.03.26 இரவு 16 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள செய்தியும், 

ஈரான் அணுஆயுத தளம் தரைமட்டம்; வான் பாதுகாப்பு முடக்கம்: இஸ்ரேலிய இராணுவம் அதிரடி அறிவிப்பு!

 தினமணி : ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சி தளம் தரைமட்டம்; வான் பாதுகாப்புக் கட்டமைப்புகள் முடக்கம்: இஸ்ரேலிய இராணுவம் அதிரடி அறிவிப்பு!
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிரான யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 
ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் இதயமாகக் கருதப்படும் முக்கிய ஆராய்ச்சி நிலையத்தை இஸ்ரேலிய வான்படை முற்றுமுழுதாக அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் (Brig. Gen. Effie Defrin) இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
'தல்கான்' அணு ஆயுத நிலையம் தகர்ப்பு

வேல்முருகனுக்கு 2 தொகுதிகள்? திமுக விடுத்த கோரிக்கை

திமுக கூட்டணியில் அதிருப்தி! சேலம் பொதுக்கூட்டத்தில் வெடித்த வேல்முருகன்!  டென்ஷன் ஆக்கிய போலீஸ்! | Velmurugan dissatisfied with DMK alliance - Tamil  Oneindia

 hindutamil.in  - ந.முருகவேல் : திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கடந்த முறை பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றவர். 
ஆனால் இந்த முறை, அவர் தன்னை மூன்று முறை சட்டசபைக்கு அனுப்பிய பண்ருட்டிக்குப் பதிலாக, தான் வசிக்கும் நெய்வேலி தொகுதியில் போட்டியிட திமுக-விடம் விருப்பம் தெரிவித்திருக்கிறாராம்.

மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

 மின்னம்பலம் -  Kavi : மறுமலர்ச்சி திமுக அவசர உயர்நிலைக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் இன்று (மார்ச் 11) காலை நடைபெற்றது.
இதில் கட்சி நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் வைகோ, திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்தார்.
தொடர்ந்து வைகோ, துரை வைகோ ஆகியோர் இன்று மாலை அறிவாலயம் வந்தனர். அதுபோன்று முதல்வர் ஸ்டாலினும் வந்தார்.
இந்நிலையில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டது.

புதன், 11 மார்ச், 2026

சிவாஜியின் உலகுக்கு தெரியாத முதல் மனைவி ரத்னமாலாவுக்க்கு தந்த பங்களா கோடம்பாக்கத்தில்...

May be an image of one or more people

ராதா மனோகர்
: சிவாஜியும் அவரது குடும்பமும் மறைத்து வைத்த அவரின் முதல் மனைவி ஏ.ஜி. ரத்னமாலா!
இவர் ஒரு பழம்பெரும் பாடகியும் நடிகையும்  ஆவார் .
இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள மொழிகளில்  500 க்கு மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.  
எம்ஜியார் சிவாஜி போன்றோருடன் நாடகங்களிலும் நடித்துள்ளார்.. 
இந்த ஏ ஜி ரத்னமாலா கணவன் யார் தெரியுமா?
 நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் இவரது கணவர் . 
ஆனால் ஊருக்கு தெரியாமல் மறைக்கப்பட்டு விட்டது.
இவர் ஒரு கிறிஸ்தவர். இவர்களுக்கு குழந்தைகள் இருந்ததாக தெரியவருகிறது. 
 ஒரு பெண் குழந்தையின் பெயர் லைலா. அவர் தன்ராஜ் என்றொரு நாடக திரைப்பட நடிகரை கல்யாணம் செய்திருந்தார் .
திருமதி ரத்னமாலா கணேசன் 2007 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். 
மனோரமா சரத்குமார் விஜயகுமாரி போன்ற சில நடிகர்கள் பங்கு பற்றினார்கள் .
சிவாஜி குடும்பத்தினர் எவரும் அதில் கலந்து கொண்டதாக தெரியவில்லை.
சிவாஜிக்கு ரத்னமாலா மீது ஆழமான காதல் இருந்ததாக கூறப்படுகிறது. 

செவ்வாய், 10 மார்ச், 2026

நயினா தீவில் ஐயர்கள் இடையே மோதல் : ஒருவர் படுகொலை

 தமிழ்மிரோர் : யாழ்ப்பாணம், நயினா தீவு வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இரு அய்யர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிவடைந்ததில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நயினா தீவு வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் 35 வயதுடைய நிரந்தரப் பூசகருக்கும், நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமித்தம் சென்றிருந்த குருக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமாகியுள்ளது.
இச்சம்பவத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த 40 வயதுடைய கிருஷ்ணகுமார் என்ற குருக்கள் உயிரிழந்துள்ளார். இவர் வழமையாக நயினா தீவு ஆலயங்களுக்குத் தொழில் நிமித்தம் சென்று வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

காத்திருக்க வைத்து பழி வாங்கிய காங்கிரஸ்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?

 daylyseythi : காத்திருக்க வைத்து பழி வாங்கிய காங்கிரஸ்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?
திமுக கூட்டணியில் இருந்து விலகி நம்மோடு கூட்டணி வைக்க காங்கிரஸ் வந்து விடும் என ஏக எதிர்பார்ப்பில் இருந்த நடிகர் விஜய், திமுக கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்தததில் மிகவும் அதிருப்தி அடைந்தார். காங்கிரசை நம்பி காலத்தை வீணாக்கி விட்டோமோ? நமக்கு காங்கிரஸ் துரோகம் செய்து விட்டதோ? என்றெல் லாம் கவலைப்பட்டார் விஜய்.
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) உட்கட்டமைப்பை விட, விஜய்யின் தற்போதைய பெரும் கவலை 'கூட்டணி' என்பதுதான். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைத் தங்களது கூடாரத்திற்கு இழுத்து வர வேண்டும் என்பதுதான் விஜய்யின் மாஸ்டர் பிளான். இதற்காக தனது கட்சியின் டாப்-3 நிர்வாகிகளிடம் (முக்கிய ஆலோசகர்கள் மற்றும் டெல்லி வரை செல்வாக்குள்ள புள்ளிகள்) இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார் விஜய்.

உண்மையில் விஜய் சங்கீதா இடையில் என்ன பிரச்சனை??

 dailyseythi: உண்மையில் விஜய் சங்கீதா இடையில் என்ன பிரச்சனை?? 
Chronogical Order படிஸ 
1. 15, 20 வருடங்களுக்கு முன்புவரை (திருமணத்துக்குப் பின்னரும்) விஜய் சம்பாதிக்கும் பணம் அனைத்துக் கணக்கு வழக்குகளும் அவரின் தந்தை திரு SA சந்திரசேகர் தான் பார்த்துக்கொண்டிருந்தார். எனவே எதாவது செலவுக்கு வேண்டும் என்றால் கூட அவரிடம் கேட்க வேண்டிய சூழல். இதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது சங்கீதா.. இதுவே தொடக்கம். 
2. அதன் பின்னர் ஏற்பட்ட சமரசத்தில் (ஆளுக்குப்பாதி) தனியாக குடித்தனம் வந்து, விஜய் சம்பாதிக்கும் பணத்தில் சரிபாதியாய் பிரித்து, தன் வசம் வந்த பாதி பணத்தை அனைத்தையும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் முதலீடு செய்யத்தொடங்கியதும் சங்கீதாஸ 
3. இதுபோல் 10,15 வருடங்களாய் விஜய் சம்பாதித்த சில கோடிகளில், சங்கீதா செய்திருந்த முதலீடுகளின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 2000 கோடிக்கு மேல்.. 

ஈரான் மகளிர் கால்பந்து அணியினருக்கு அமெரிக்கா புகலிடம் கொடுக்கும் – டிரம்ப்

 மாலைமலர் : “ஆசியக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் மகளிர் கால்பந்து அணியினர் ஆஸ்திரேலியா சென்றனர்.
கடந்த வாரம் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின் போது, ஈரான் வீராங்கனைகள் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தைப் பாட மறுத்தனர்.
ஈரானில் நிலவும் அரசியல் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்ததாகக் கருதப்படுகிறது.
இந்தச் செயலால் ஈரானிய அரசு ஊடகங்கள், வீராங்கனைகளை “யுத்த காலத் துரோகிகள்” என்று விமர்சித்தன.
அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திங்கள், 9 மார்ச், 2026

தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் நேர்காணல் நடத்தும் விஜய்! நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய சி.பி.ஐ.

 நக்கீரன் : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்றார். 
அப்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 
இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணை மாநில காவல்துறையிடமிருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. 

மானாமதுரையில் கைதி உயிரிழப்பு: போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க தலைவர்கள் வலியுறுத்தல்

 hindutamil.in ; சென்னை: மா​னாமதுரை​யில் கைதி மரணமடைந்த விவ​காரத்​தில் காவல்​துறை​யினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்​டும் என அரசி​யல் கட்சித் தலைவர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.
மா​னாமதுரை​யில் 2 தொழிலா​ளர்​களை வாளால் வெட்​டிய வழக்​கில் கைதாகி, மருத்து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்த இளைஞர் உயி​ரிழந்​தார். இந்த விவகாரத்துக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கல்! - நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது!

 தினமணி :  பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 9) தொடங்குகிறது.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்கக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம், விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக முதல் நாளில் தாக்கலாக உள்ளது.
ஏப். 2 வரை நடைபெறும் இந்த அமா்வில் மேற்காசிய போா் நிலவரம், ஈரான் மீதான மத்திய அரசின் நிலைப்பாடு, அமெரிக்க அனுமதியின்பேரில் ரஷிய எண்ணெய் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜன. 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது. கடந்த பிப்.13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முதல்கட்ட அமா்வில் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டன.

ஈரான் ஒரு இஸ்லாமிய நாடாகவோ மதப்பற்றுள்ள நாடாகவோ முன்பு இருக்கவில்லை !

 Thesam Jeyabalan  : ஈரான் ஒரு இஸ்லாமிய நாடாகவோ மதப்பற்றுள்ள நாடாகவோ இருக்கவில்லை ! பிற்காலத்தில் மத அடிப்படைவாத நாடாக மாற்றப்பட்டது !
கொமெய்னி, தலிபான்,  ஹமாஸ், அல்கைதா, ஐஎஸ்ஐஎஸ் என்று மத அடிப்படைவாதிகளை உருவாக்கியது மேற்கின் புலனாய்வு உலகமே !
தமிழர்கள் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்தியது போல் இஸ்லாமியர்கள் அராபிய மொழியை பரப்ப முயல்கின்றனர் !
சர்வதேச விவகார ஆய்வாளர், சமூக செயற்பாட்டளர் ராதா மனோகருடன் ஈரானின் வரலாறு தொடர்பான உரையாடல்

ஞாயிறு, 8 மார்ச், 2026

ரணில் விக்கிரமசிங்க : இலங்கை கடலில் இனிமேல் தாக்குதல் நடைபெறாது என அமெரிக்காவிடம் பகிரங்க உறுதி பெறுங்கள்! - அரசுக்கு அழுத்தம்

ceylonmirror.net : கடலில் இனிமேல் தாக்குதல் நடைபெறாது என அமெரிக்காவிடம் பகிரங்க உறுதி பெறுங்கள்! – அநுர அரசுக்கு ரணிலின் கட்சி கடும் அழுத்தம்.
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் இனிமேல் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்பதற்கான உத்தியோகபூர்வ உறுதியை அமெரிக்காவிடமிருந்து இலங்கை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. கட்சியின் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.