சனி, 25 ஜனவரி, 2014

இதோ Vladimir ஸ்டாலின் வடிவமைப்பில் இன்னொரு அதிமுக உருவாகி விட்டது ! சமாதான பேச்சுவார்த்தையை நிராகரித்த அழகிரி !

புரிந்து கொள்ளமுடியாத சில காரணங்கள் அழகிரி விவகாரத்தில் இருப்பது போல தெரிகிறது.
ஸ்டாலினை விட எப்படி பார்த்தாலும் அழகிரியின் வெயிட் அதிகம் என்பது திமுகவில் எல்லோரும் அறிந்த ஒன்றே ,

ஆனாலும் அழகிரி தலை தூக்க கூடாது என்று ஸ்டாலினும் இதர ஸ்டாலினிஸ்டுகளும் ஏன் இவ்வளவு காட்டமாக உள்ளார்கள் ?
அழகிரியின் மனைவி ஒரு தாழ்த்தப்பட்டவராக இருப்பதுவும் ஒரு வலுவான காரணமாகும் என்று நடுநிலையாளர்கள் கருதுவது இயல்புதான் .

ஜெயலலிதாவும் கூட ஸ்டாலினை ஒரு போதும் ஒரு எதிரியாக கருதியது கிடையாது , ஜெயா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அழகிரியைதான் எப்படியாவது வழக்குகளில் சிக்க வைத்து தொல்லை கொடுப்பார், அழகிரியின் பலம் ஜெயாவுக்கும் கலைஞருக்கும் நன்றாகவே தெரியும் . 

ஸ்டாலின் இதுவரையில் எந்த பிரச்சனையிலும் ஒரு கொள்கை ரீதியான நிலையை எடுத்தது கிடையாது, வாயை திறந்தா ஒரே வழ வழ கொழ கொழாதான் .
ஸ்டாலினின் சரியான சுயரூபம் அறியவேண்டுமாயின் ,
குஷ்பூ மீது செருப்பு எறிந்து கல்லுகளால் தாக்கிய சம்பவத்தில் ஸ்டாலின் பின்னணியில் இருந்து எப்படி செயல்பட்டார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது,

கழகம் நூறுவீதம் தனது பஜனை கோஷ்டிகளால் நிறைந்து இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புகிறார், அவரது விருப்பமும் ஏறக்குறைய நிறை வேறிகொண்டு தான் இருக்கிறது .
தமிழ்நாட்டில் ஒரு அதிமுக மட்டும் போதுமா என்ன ? இதோ ஸ்டாலின் வடிவமைப்பில் இன்னொரு அதிமுக உருவாகி விட்டது ,

ராமதாஸ் : சமூக ஜனநாயக கூட்டணி தேர்தலில் போட்டியிடும்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னையில் அனைத்து சமுதாயத் தலைவர்கள் கூட்டத்தை அண்மையில் கூட்டிய டாக்டர் ராமதாசு, ‘‘அனைத்து சமுதாயக் பேரியக்கம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது’’ என்று திடீரென அறிவித்தார் என்று ஒரு நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
வேறு சில விஷமத்தனமான வாரமிருமுறை இதழ்களோ, ‘‘கசந்தார் ராமதாஸ் – பிசுபிசுத்தது சாதிக் கூட்டணி’’ என வேண்டு மென்றே உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுகின்றன. இத்தகைய செய்திகளுக்கு மறுப்பும், விளக்கமும் அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
அனைத்து சமுதாயப் பேரியக்கத்தின் முதல் கூட்டம் கடந்த 18.08.2012 அன்று சென்னை தியாகராய நகரில் உள்ள ராஜ் பேலஸ் விடுதியில் நடைபெற்றது. அதன்பின்னர் 02.12.2012 அன்று சென்னையில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டமும், தொடர்ந்து 32 மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன. மாவட்ட அளவிலான கடைசிக் கூட்டம் கடந்த 26.03.2013 அன்று நீலகிரியில் நடைபெற்றது.

அழகிரி :ஸ்டாலின் பதவிக்காக எதையும் செய்வார் ! அவரை தலைவராக ஏற்கவே முடியாது !

சென்னை: திமுகவில் பதவிக்காக எதையும் செய்யும் மு.க.ஸ்டாலினை கட்சியின் தலைவராக ஒருபோதும் ஏற்க முடியாது என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மு.க.ஸ்டாலினை நான் தலைவராக ஏற்க மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். அவரை ஒரு போதும் தலைவராக ஏற்க மாட்டேன்.
என் மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்த பிறகு ஸ்டாலின் தலைமையை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால் நாங்கள் துவண்டு விடமாட்டோம்.
நான் சொல்வதை கேட்காத தலைவர், ஸ்டாலின் சொல்வதைத்தான் கேட்கிறார். தலைவரும், பொதுச் செயலாளரும் ஸ்டாலின் சொல்வதைத் தான் செய்கிறார்கள். எனக்கும் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. கட்சி ரீதியாகத்தான் பிரச்சினை உள்ளது

அழகிரி:போட்டி வேட்பாளரே தேவையில்லை. தானாகவே தோற்றுவிடுவார்கள். சென்னையில் குவிந்த தென் மாவட்ட திமுக நிர்வாகிகள்


திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,

ஹாங்காங்கிலிருந்து சென்னைக்கு நான் வந்தவுடன், உங்கள் ஆதரவாளர்கள் 5 பேரை நீக்கியிருக்கிறார்கள்
என்று சொன்னார்கள். யார் யார் என்று பெயர் கேட்டேன். அந்த 5 பேர் பெயரை சொன்னார்கள். ஹாங்காங் போகுவதற்கு முன்பே, அதில் நீக்கப்பட்ட கொட்டாம்பட்டி ராஜேந்திரன் என்பவர் பல மனுக்கள் கொடுத்திருந்தார். பல முறைகேடுகள் நம்முடைய கட்சியில், தேர்தல்களில் நடந்திருக்கிறது என்று என்னிடம் மனு கொடுத்திருந்தார். அதை நான் தலைவரிடம் கொடுத்தேன். உடனே விசாரிப்பதாக ஒரு மாயையை ஏற்படுத்தினர். ஆனால் அதுபற்றி விசாரிக்கவில்லை. பல ஆதாரங்களை நான் இப்போது சொல்ல மாட்டேன். மதுரையில் 31ஆம் தேதி பிரஸ் மீட் வைத்திருக்கிறேன். அங்கே சொல்லுவேன். ஆகவே ஜனநாயகம் இதில் செத்திருச்சு. அதுதான் இப்போது நான் சொல்ல முடியும். நியாயம் கேட்க போனதற்கு கிடைத்த பரிசு. அப்படி என்று நான் நினைக்கிறேன். பத்திரிகைகள் எழுதுவது பற்றி எனக்கு கவலைக்கிடையாது என்றார்.

பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: புன்னகை, பாமா விஜயம், இருகோடுகள் உள்பட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயந்தி (68). இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது இடுப்பு எலும்பில் லேசான பிளவு ஏற்பட்டது. பாத்ரூமில் இருந்த கூரான ஒரு பொருள் அவரது இடுப்பு எலும்பில் குத்தியதில் காயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய அவரை சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கூறினர். இதுபற்றி ஜெயந்தி மகன் கிருஷ்ணகுமார் கூறும்போது, ‘அம்மாவுக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பயப்படும்படியான அளவுக்கு பெரிய காயம் இல்லை என்று டாக்டர்கள் கூறினர். சில நாள் ஓய்வுக்கு பிறகு அவரால் பழையபடி நடக்க முடியும்’ என்றார். இதுபற்றி அறிந்த கன்னட நடிகர்கள், ஜெயந்தி வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தனர்tamilmurasu.org/

சொட்டு நீரில் 3 ஆயிரம் ஹெக்டேரில் சாமந்தி அமோக விளைச்சல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஓமலூர்:காடையாம்பட்டி ஒன்றியத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையில், சொட்டு நீர் பாசனம் மூலம் 3 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் விவசாயத்தை பிரதானத் தொழிலாக கொண்ட பகுதி. இப்பகுதியில் சாமந்தி மலர் சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கான நடவு பணிகள் நடைபெற்றன. டிசம்பர் மாதம் முதல் சாமந்தி பூ பூக்கத் தொடங்கி தற்போது சீசன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சாமந்தி, அதிக அளவில் மஞ்சள் நிறம் கொண்ட சாந்தினி, வெள்ளை நிறம் கொண்ட பூர்ணிமா, கோழிக் கொண்டை, மரிக்கொழுந்து என பல்வேறு வகை மலர்கள் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பூத்துள்ளன.

ராகுல்: நாடு முழுவதும் சமச்சீர் கல்வி !

நாடு முழுவதும் சமச்சீர் கல்வி கொண்டு வர தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு : ராகுல் காந்தி<சேவாகிராம்: கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகமும் புத்துணர்ச்சியும் ஊட்டும் விதமாக ராகுல் காந்தி அவர்களை சந்தித்து பேசி வருகிறார். மகாராஷ்ட்ராவில் காந்தி ஆசிரமம் அமைந்துள்ள வார்தாவில் பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள் சமூக சேவகர்கள், மற்றும் அதிகாரிகளை நேற்று சந்தித்த ராகுல் காந்தி அவர்களிடம் பேசியதாவது: இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிபேர் பெண்கள். ஆனால் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை.

அழகிரி : தி.மு.க.வின் சொத்தை அபகரிக்க சிலர் முயற்சிக்கிறார்கள் ! அடடா பட்டென்று உண்மையை போட்டுடைக்கிறாரே !

தி.மு.க.வில் இருந்து நேற்று அதிரடியாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி எம்.பி. நேற்று இரவு தந்தி டி.வி.க்கு தொலைபேசி மூலம் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு மு.க.அழகிரி அளித்த பதில்களும் வருமாறு:–
நியாயம் வெல்லும்
கேள்வி:– உங்கள் மீது தி.மு.க. தலைமை எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?.
பதில்:– என்னை நீக்கியதை பற்றி என்னிடமே கேட்கிறீர்களா?. நியாயம் என்றும் வெல்லும். அவ்வளவுதான். ஜனநாயகம் இல்லை. அந்த கட்சியில் ஜனநாயகம் செத்துப்போய்விட்டது.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

போகப்போக தெரியும்...: மு.க.அழகிரி பேட்டி

மு.க.அழகிரி திமுக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் 24.01.2014 வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று மு.க.அழகிரியிடம் பேட்டி எடுத்தது. அதில்,கேள்வி: உங்கள் நீக்கத்தால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் கூறியிருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நான் அதுபற்றி ஒண்ணும் சொல்லவில்லை. போகப்போக தெரியும்.
கேள்வி: எதிர்காலத் திட்டம் என்ன? நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?
பதில்: நாடாளுமன்றத் தேர்தலின்போது தெரியும்,
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?
பதில்: போட்டியிட மாட்டேன்.
கேள்வி: உங்கள் ஆதரவாளர்கள் நீக்கம் குறித்து தற்போது உங்களின் மனநிலை என்ன?
பதில்: என்னுடைய ஆதரவாளர்களை நீக்கியதற்காக கட்சியில் முறையிட்டேன். அதற்காக கிடைத்த பரிசு இது. (கட்சியில் இருந்து நீக்கப்பட்டது)
கேள்வி: உங்களுடைய நீக்கம் திமுகவுக்கு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: அதைப் பற்றி எனக்கு தெரியாது. இவ்வாறு பதில் அளித்தார்.

நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை கட்சியில் இருந்து நீக்கிய பின்னர், என் தொண்டர்கள் இன்னும் அதிக பலத்துடன் உள்ளார்கள். என் நிலைப்பாடு குறித்து, ஜனவரி 30 மதுரையில் நடக்கும் பிறந்த நாள் விழாவில் தெரிவிப்பேன். மதுரைக்கு ஜனவரி 26 வருகிறேன். என் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்துவேன். அது வரை அமைதியாக இருக்க வலியுறுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

ஊரறிந்த பொறுக்கி நித்தியானந்தா நீதிபதி ! தந்தி டிவியின் அயோக்கியத்தனம் !


நித்தியதர்மம்ந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே சங்கொலி ஒலிக்கிறது. டமருகத்தின் சப்தமும் தம்புராவின் மீட்டலும் கேட்கிறது. தொலைக்காட்சித் திரையில் இதழ் விரிக்கும் தாமரை ஒன்றின் மத்தியில் நிகழ்ச்சியின் பெயர் மலர்கிறது. தொடர்ந்து துவக்கக் காட்சி. கோயில் பிராகரம் போன்ற அரங்க அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தெர்மாகூலில் தங்க நிற காகிதங்களை ஒட்டி கோயிலின் தூண்கள் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மையமாக கருவறை போன்ற ஒரு ஏற்பாடும், அதன் இரு புறத்திலும் யாழியைத் தாங்கி நிற்கும் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கருவறை போன்ற அமைப்பினுள் இருந்து கடவுளைப் போல் அவர் வெளிப்பட்டு வருகிறார். தர்பார் மண்டபங்களில் இருக்கும் சிம்மாசனம் போல் அமைக்கப்பட்டிருக்கும் இருக்கையில் அமர்கிறார். மந்தகாசமான புன்னகையொன்றை வீசி ஆசி வழங்குகிறார். அந்த மண்டப அமைப்பின் வலது பக்கவாட்டுப் பகுதியிலிருந்து அழுது வீங்கிய கண்களோடும் சோகம் அப்பிய முகத்தோடும் அந்தப் பெண்மணி பிரவேசிக்கிறார்,
“எம் புருசன் வீட்டைக் கவனிக்கறதில்லீங்கைய்யா. அந்தப் பொம்பளையே கதின்னு கெடக்கறாருங்க. மூணு பொம்பளைப் புள்ளைங்கள வச்சிகிட்டு நான் அல்லாடறனுங்க. நீங்க தானுங்க எம் புருசனை மீட்டுத் தரோனும்”

மகனை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முனைந்ததன் காரணமாகவே கொலையாளியாக்கப்பட்டான்: கண்ணீர் மல்க தாயார்தனது மகனை காப்பாற்ற யாரும் முன்வராத நிலை தொடர்பிலும் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு காரினால் ஒருவரை மோதி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 21ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொலைசெய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கொம்மாதுறையினை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் நிரபராதியென அவரது தாயார் நாகரெட்னம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறையானது மட்டக்களப்பு வாழைச்சேனை –மட்டக்களப்பு பிரதான வீதியில் வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அடுத்ததாகவுள்ள கிராமமாகும்.

காலை 7.10 முதல் 8.05 வரை அழகிரிக்கும் கலைஞருக்கும் இடையில் கோபாலபுரத்தில் கடும் வாக்குவாதம்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் மிகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் இறுதியில் கருணாநிதியின் அறையிலிருந்து அழகிரி மிகக் கோபத்துடன் வெளியேறியதாகவும், அதன் பின்னரே அன்பழகனை அழைத்து உடனடியாக அழகிரியை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யும் உத்தரவை வெளியிட கருணாநிதி உத்தரவிட்டதாவும் தகவல்கள் கூறுகின்றன. அந்த வாக்குவாதத்தின்போது என்ன பரிமாறிக் கொள்ளப்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால் கருணாநிதி அறையிலிருந்து அழகிரி மிகுந்த கோபத்துடன் வெளியேறியதாகவும், கீழே காத்திருந்த தனது மகள் கயல்விழி மற்றும் மருமகனை தன்னுடன் வருமாறு வேகமாக கூறியபடி அழகிரி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இன்று காலை 7 மணியளவில் கோபாலபுரம் வீட்டுக்கு வந்துள்ளார் அழகிரி. நேராக மாடியில் இருந்த கருணாநிதி அறைக்கு விரைந்த அவர், கருணாநிதியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டாரம். சுமார் 7.10 மணி முதல் 8.05 வரை இந்த வாதம் நீடித்ததாக தெரிகிறது. அப்போது கருணாநிதியுடன் அவரது உதவியாளர் மட்டுமே இருந்துள்ளார். வேறு யாரும் இல்லை. இன்று காலை 7.10 முதல் 8.05 வரை கோபாலபுரத்தில் நடந்தது என்ன?... பரபர தகவல்கள்! அதன் பின்னர் அழகிரி கோபத்துடன் கீழே வந்துள்ளார். தனது மகள், மருமகனை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியேறியுள்ளார். அதன் பின்னர் கருணாநிதி, அன்பழகனை அழைத்துள்ளார். அவருடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளா்ர். உடனடியாக அழகிரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அழகிரி நீக்கச் செய்தியை அன்பழகன் வெளியிட்டார். கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி, அழகிரி இடையிலான கடும் வாதத்தின்போது என்ன பரிமாறிக் கொள்ளப்பட்டது என்பது குறித்த விவரம் தெரியவில்லை
tamil.oneindia.in

விஜய்காந்த்துடன் கூட்டணிக்காக அழகிரியை கட்சியை விட்டு நீக்கிய திமுக !

திமுகவில் இருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுக- தேமுதிக கூட்டணி உறுதியாகும் எனத் தெரிகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்ததில் திமுக கூட்டணியில் தேமுதிக இணணய வேண்டும் என்று கருணாநிதியும், ஸ்டாலினும் மறைமுகமாகவும், நேரடியாகவும் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் திமுக-தேமுதிக கூட்டணியை ரசிக்காத அழகிரி தன்னுடைய கருத்துக்களை கடுமையாக பதிவு செய்தார். அதற்கு கருணாநிதி உடனடியாக கண்டனம் தெரிவித்தார். அதோடு நிற்காமல் தேமுதிகவை எப்படியாவது திமுக கூட்டணியில் இழுக்க வேண்டும் என்பதற்காக அழகிரியை கட்சியில் இருந்தே நீக்கியுள்ளனர்.திமுக

கந்துவட்டி, காவல்துறை ! திருச்சியில் கந்து வட்டி நீலாவதி


டிசம்பர் மாதம் 22-ம் தேதி அன்று திருச்சிமாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில், ஆதார் அட்டை, பள்ளி கல்லூரி அனுமதி மற்றும் எரிவாயு உருளை பெற அவசியமில்லை என தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக உச்சநீதி மன்றத்தில் பெற்ற தடையாணை பற்றி விளக்கி வீடு வீடாக பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தோம், இப்பிரச்சாரத்தில் பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் ஈடுபட்டு வந்தனர். பிரச்சாரம் தொடங்கி சுமார் 2 மணி நேரம் கடந்த பிறகு அடுத்தடுத்த தெருக்களுக்கு சென்று கொண்டிருந்தோம்.
கருவாட்டுக்காரம்மா (அடைமொழி) என்ற நீலாவதி எனும் கந்து வட்டி தாதாவகையறாவினர் குடியிருக்கும் பகுதியில் பிரச்சாரம் துவங்கியதும் நா கூசும் அளவிற்க்கு அசிங்கமாக பேசத் துவங்கினார் நீலாவதி, விவரம் புரியாத மற்ற தோழர்கள், “ஏம்மா இப்படி பேசறீங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை” என கேட்டதும், நீலாவதி சாமியாடுவது மேலும் அதிகரித்தது.

ஆம் ஆத்மி : சீரழிந்த நாடாளுமன்ற அரசியலைச் சிங்காரிக்க புதிய துடைப்பம் !

அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர்கள்
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது ஆட்சியும் அமைத்துள்ளது. 2004 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் “இந்தியா ஒளிர்கிறது” என்ற பா.ஜ.க. வின் முழக்கத்துக்கு எதிராகத் தாங்கள் முன்வைத்த “ஆம் ஆத்மி” (எளிய மனிதன்) என்ற முழக்கத்தைத் திருடி விட்டதாக கேஜ்ரிவாலைக் குற்றம் சாட்டியிருந்தார் திக்விஜய் சிங். தற்போது காங்கிரசு ஆட்சிக்கெதிரான மக்களின் அதிருப்தியை அறுவடை செய்யக் காத்திருந்த டெல்லி மாநில பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியதிகாரக் கனவைத் திருடிவிட்டது ஆம் ஆத்மி கட்சி. அது மட்டுமின்றி, மோடியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்ட டில்லியின் ஐந்து தொகுதிகளில் நான்கில், பாரதிய ஜனதா வேட்பாளரை மண்ணைக் கவ்வ வைத்து, “மோடி அலை” என்ற மோசடியின் முகத்திலும் மக்கள் காறி உமிழ்ந்துவிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலிலும் பல மாநிலங்களில் போட்டியிடவிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருப்பதால், காங்கிரசு ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யக் காத்திருந்த பாரதிய ஜனதாவின் ஆசையிலும் மண் விழுந்திருக்கிறது.

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கம் ! தலைமைக்கழகம் விளக்கம் !

கட்சி கட்டுப்பாட்டை மீறியதால், மு.க.அழகிரி மீது திமுக தலைமைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.அழகிரி நீக்கம் என்று அறிவித்துள்ளது.  திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இந்த அறிவிப்பை வெளியிட் டுள்ளார்.
மு.க.அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து  திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று (24-1-2014 ) பேராசியர் க.அன்பழகன் வெளியிட்ட அந்த அறிவிப்பில், ’’கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராயப் பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்ற நிலையில்;

தனுஷுடன் நடிக்க மறுத்த அலியா பட் தற்போது OK

சென்னை:தனுஷுடன்  நடிக்க மறுத்த அலியா பட், அவருடன் ஜோடி சேர திடீர் என ஒப்புக்கொண்டார்.இந்தியில் ‘ஸ்டுடண்ட் ஆப் த இயர் படத்தில் அறிமுகமானவர் அலியா பட். தற்போது ‘ஹைவே உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அநேகன்‘ படத்தில் ஹீரோயினாக நடிக்க அலியா பட்டிடம்தான் முதலில் பேசப்பட்டது. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இந்தியில் ‘ராஞ்சனா‘ என்ற படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்தார். இப்படம் ஹிட்டானது. இதையடுத்து இந்தி திரையுலகில் தனுஷ் கவனிக்கப்பட்டார். மீண்டும் புதிய இந்தி படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பேசத் தயங்கும் விஷயங்களை இணைய எழுத்தாளர்கள் பேச வேண்டும் ! இது இணைய எழுத்தாளர்கள் காலமா?


கோப்புப் படம்
கோப்புப் படம்
விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்பு, புத்தகக் காட்சி நிறைவையொட்டி, 'தி இந்து' நாளிதழில் 'வலைஞர் எனும் எழுத்தாளர்' என்ற தலைப்பில் இன்று வெளியான செய்திக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள மூன்று எழுத்தாளர்களின் கருத்துகளை கவனிப்போம்.
சாரு நிவேதிதா, எழுத்தாளர்:
"இணையத்தில் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு தமிழில் வாசிப்பே கிடையாது; அவர்களுக்குத் தமிழில் எழுதவே தெரியவில்லை. இணையம் வழியாக நல்ல எழுத்தாளர்கள் உருவாகலாம். ஆனால், தற்போதைய சூழலில் அப்படி யாருமே உருவாகவில்லை என்றே சொல்வேன்.
ஆன்லைனிலேயே அமர்ந்து போதை அடிமைபோல புத்தக வாசமே இல்லாமல் எதையாவது மொக்கையாக எழுதிக்கொண்டிருப்பவர்கள்தான் பெரும்பாலான இணைய எழுத்தாளர்கள். அராத்து போன்றவர்கள் இதில் விதிவிலக்கு."

தாலி கட்டி திருமணம் செய்த பின் விஷம் குடித்து காதல் ஜோடி சாவு ! பெற்றோர் எதிர்ப்பால் பரிதாபம்

பெற்றோர் எதிர்ப்பால் பரிதாபம் தாலி கட்டி திருமணம் செய்த பின் விஷம் குடித்து காதல் ஜோடி சாவு நீடாமங்கலம்:நீடாமங்கலம் அருகே பொட்டு, பூ வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட பின்னர், காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த வையகளத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார்(25). பட்டதாரி. அதே ஊரை சேர்ந்தவர் ஜெயப்பிரியா(21). 10ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

தேர்தலுக்கு பின் திமுக.வுடன் கூட்டணி!- பாஜக-வின் மூடு மந்திரக் கணக்கு!! !!

 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக-வுக்கு நிகராக கூட்டணி பலத்தை திரட்டிவரும் பாஜக, தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக-வுடன் கூட்டணி அமைக்க வியூகம் அமைத்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் ரகசிய சர்வேயை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர் பாஜக-வின் முக்கிய நிர்வாகிகள்.
ஆர்.எஸ்.எஸ். சர்வே
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாடு முழுவதும் அந்தந்த மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு குறித்து ரகசிய சர்வே எடுத்து, அதனை பாஜக மேலிடத்துக்கு அனுப்பி வருகிறது. டெல்லியின் நகர்ப்புறங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி குறித்து சமீபத் தில் அந்த அமைப்பின் சர்வே முடிவுகள் காட்டின. அதன் பின்பே கடந்த சில நாட்களாக டெல்லியில் பாஜக, ஆம் ஆத்மியை கடுமையாக விமர்சித்து வருகிறது.
ந்நிலையில் தமிழக நிலவரம் குறித்து எடுக்கப்பட்ட சர்வேயின் அடிப்படையில் பாஜகவுக்கு ஆலோசனை வழங்கி இருக்கும் ஆர்.எஸ்.எஸ்., ‘திமுக எதிர்க் கட்சியாக இருந்தாலும் அதற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, கணிசமான தொகுதிக ளில் வெற்றிபெறும். என்னதான் சோவும் சு சாமியும் புகை அடித்தாலும் ஜெயாவை நம்பி சொந்த காசில் சூனியம் வைத்துகொள்ள பாஜக தயாரில்லையாம்  ஜெயாவினால் வாஜ்பாய் அடைந்த துன்பம் அப்படி பட்டது 

பட்டப்பகலில் வக்கீல் சரமாரியாக வெட்டி கொலை ! ஓட்டலுக்குள் புகுந்து 4 பேர் கும்பல் ! அதிமுக Ex கவுன்சிலர் மகன்

அண்ணாநகர்:அமைந்தகரையில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த வக்கீலை பைக்கில் வந்த 4 பேர் கும்பல் சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது. திருக்கழுக்குன்றம் அடுத்த பொன்விளைந்த களத்தூரை சேர்ந்தவர் குப்பன். அதிமுக முன்னாள் கவுன்சிலர். இவரது மகன் நித்யானந்தம் (33) வக்கீல். 3 வருடங்களுக்கு முன்பு பொன்விளைந்தகளத்தூர் பஞ்சாயத்து தலைவர் விஜயகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் குப்பனுக்கு தொடர்பு இருப்பதாக கருதி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மறைமலைநகரில் குப்பனை மர்ம ஆசாமிகள் வெட்டி கொன்றனர். இதையடுத்து குடும்பத்துடன் அமைந்தகரைக்கு வந்து விட்டார் நித்யானந்தம். அங்குள்ள தேவகி தெருவில் வசித்தார். நித்யானந்தம் மீது மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.

வியாழன், 23 ஜனவரி, 2014

காங், பாஜகவிற்கு பகவான்கள் படியளப்பது ஏன் ?


காங்கிரஸ், பாஜக
2004-க்கும் 2012-க்கும் இடையில் அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரங்களில் 75% பெயர் தெரியாதவர்களிடமிருந்து அதாவது கணக்கில் இல்லாததாக பெறப்பட்டதாகவும், 25% பெயர் பதிவு செய்யப்பட்டு பெறப்பட்டது என்றும் அதில் 87% கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டது குறித்த செய்தியை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். அந்த 8 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டபூர்வமான வழிகளில் மட்டும் ரூபாய் 378.8 கோடியை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.
காங்கிரஸ், பாஜக – கார்ப்பரேட் கட்சிகள்
2012, 2013-ம் ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து, கட்சிவாரியாக, துறை வாரியாக, நிறுவன வாரியாக நன்கொடை விபரங்களை தொகுத்து ஜனநாயக சீர்திருத்ததிற்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் கடந்த ஜனவரி 8-ம் தேதி வெளியிட்டுள்ளன.

மே . வங்கம் :காதலித்ததால் பெண்ணுக்கு பஞ்சாயத்தில் பாலியல் வல்லுறவு தண்டனை ! தலைவர் உட்பட 12 முதியவர்கள் சேர்ந்து கற்பழித்தனர்

இந்தியாவில் வேறு சாதி வாலிபரை காதலித்ததால் கிராம தலைவர் உட்பட 12 பேரால், இளம் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம்மா வட்டத்தில் சபல்பூல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண், அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபரை காதலித்தார். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இது குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தார் கூடி விசாரணை நடத்தினார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததற்காக அந்த பெண்ணுக்கு கிராம தலைவர் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராத தொகையை செலுத்த வசதி இல்லை என்று அந்த பெண் கூறினார். இதையடுத்து, அந்த பெண்ணை யார் வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தலைவர் கூறினார்.
அதை தொடர்ந்து தீர்ப்பு சொன்ன கிராம தலைவர் உள்பட பல முதியவர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினர். கற்பழித்தனர்

NRI தமிழரான ஏ.ஜே.பால்ராஜுக்கு நோபலுக்கு இணையான மார்கோனி விருது

வானொலியைக் கண்டுபிடித்த குக்லில்மோ மார்கோனியின் நினைவாக அவரது மகள் கியோயா மார்கோனி பிராகா அமைத்துள்ள மார்கோனி சொசைட்டி இந்த வருடம் 50 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடி வருகின்றது. இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வலைத்தளம், செயற்கைக்கோள் தொடர்புகளில் தங்களது கணிதக் கோட்பாடுகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் மூலம் சாதனை புரிவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுக்கு இணையான உயரிய தொழில்நுட்ப மார்கோனி விருதை வழங்கிவருகின்றது. இந்த ஆண்டிற்கான இந்த விருதும், 1,00,000 டாலர் பரிசுப்பணமும் வெளிநாடுவாழ் இந்தியரான ஏ.ஜே.பால்ராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் பிறந்த பால்ராஜ் தற்போது அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். மல்டிமீடியா துறையின் அதிவேக வளர்ச்சியான பிராட்பேண்ட் சேவைகளில் இவரின் முக்கிய ஆக்க கண்டுபிடிப்பான எம்ஐஎம்ஓ ( மல்டிபிள் இன்புட் மல்டிபிள் அவுட்புட்) இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. தமிழரான

மீண்டும் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி ஏற்படுமா? சோனியாகாந்தியுடன் கனிமொழி சந்திப்பு:


பாராளுமன்ற தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க இதுவரை எந்த கட்சியும் முன்வரவில்லை.
டெல்லி மேல்–சபை தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. தற்போது இரண்டு கட்சிகளுக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உறுதியாக அறிவித்து விட்டார்
தி.மு.க. வேட்பாளராக திருச்சி சிவா அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தி.மு.க.வுடன் தே.மு.தி.க.வை சேர்க்கவும் தீவிர முயற்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை கனிமொழி எம்.பி. நேற்று முன்தினம் சந்தித்து பேசியதாக தெரிகிறது.
அப்போது மேல்–சபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் திருச்சி சிவாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

ராஜ்யசபா - 4 வேட்பாளர்களை அறிவித்தார் ஜெ.- சிபிஎம்முக்கும் ஆதரவு


சென்னை: ராஜ்யசபா தேர்தலில் அதிமுக நான்கு இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பெயரை முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஒரு இடத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக ஆதரவு தருவதாக அவர் தெரிவித்துள்ளார். ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ள, தி.மு.க.,வை சேர்ந்த, முகமதுஅலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரசை சேர்ந்த ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பாலகங்கா, மா.கம்யூ., கட்சியை சேர்ந்த ரங்கராஜன், ஆகியோரின் பதவிக் காலம், ஏப்ரல் 2ம் தேதி, நிறைவு பெறுகிறது. இந்த பதவிக்கு பிப்ரவரி மாதம் 7ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுதாக்கல், இம்மாதம் 21ம் தேதி துவங்குகிறது. ராஜ்யசபா தேர்தல்- சசிகலா புஷ்பா உள்பட 4 வேட்பாளர்களை அறிவித்தார் ஜெ.- சிபிஎம்முக்கும் ஆதரவு

கெஜ்ரிவாலுக்கு சிதம்பரம் அறிவுரை ஆட்சி செய்ய முடியாவிட்டால், பதவி விலகுங்கள்:


டாவோஸ்: ‘ஆளும் திறமையின்மையை தெருப் போராட்டத்தால் மறைக்க இயலாது, ஆட்சி செய்ய முடியவில்லை என்றால், பதவி விலகுங்கள்' என கெஜ்ரிவாலை விமர்சித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். கட்சி ஆரம்பித்த ஓராண்டுக்குள் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு மக்களின் ஆதரவைப் பெற்றது ஆம் ஆத்மி. இந்நிலையில், டெல்லியில் சரியாக செயல்படாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் இறங்கினார் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால். டெல்லியின் முக்கிய சாலையில் நடைபெற்ற இந்த தர்ணாவால் டெல்லி ஸ்தம்பித்தது. கிட்டத்தட்ட 30 மணி நேரம் நடைபெற்ற அவரது போராட்டம் பின்னர் துணை நிலை ஆளுநரின் வேண்டுகோளை ஏற்று வாபஸ் பெறப்பட்டது. ஆட்சி செய்ய முடியாவிட்டால், பதவி விலகுங்கள்:

ஆம் ஆத்மியின் சட்ட அமைச்சர் ஆபிரிக்க பெண்ணை வீடு புகுந்து தாக்கினார் ! ஆம் ஆத்மி அரசுக்கு நெருக்கடி:

தில்லி மாநில சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பாரதியை பதவிநீக்கம் செய்யுமாறு எதிர்க்கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் வலியுறுத்துவதால் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலுக்கு தலைமை தாங்கி நடத்தியவர் சோம்நாத் பாரதிதான் என்று ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் அடையாளம் காட்டியதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு என்ற பெயரில் தலைநகரில் 2 நாள் தர்னாவை நடத்திய கேஜரிவால், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் இரட்டை வேடம் போடுகிறார் என்று மகளிர் அமைப்புளும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன.

ஆம் ஆத்மி கட்சியால் BJP க்கு அச்சுறுத்தல் இல்லை-அருண் ஜெட்லி ! அழுதுருவேன் நான் ரொம்ப நல்லவென்

பாரதீய ஜனதாவின் அருண் ஜெட்லி:
பாரதீய ஜனதாவால் மட்டுமே  நிலையான ஆட்சியை தர முடியும். பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க மறுத்து ஒரு பார்வையாளராக உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பற்ற தன்மை மற்றும் காங்கிரஸ் சராணாகதி மூலம்  எவ்வாறு ஸ்திரமான அரசை வழங்க முடியும். கடந்த சில ஆண்டுகளில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயல்திறன் மிகவும் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது .
அனைத்து தேர்தல் கணிப்புகளிலும் நரேந்திர மோடி 2014 பொது தேர்தலில் செல்வாக்கு பெற்ற தலைவராக உள்ளார் என்றும் . மற்ற தலைவர்கள் அவருக்கு பின்னால் உள்ளனர் என்றும் கூறுகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் தனது பலத்தை இழந்து விட்டது.  தமிழ்நாடு, ஒரிசா, மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில்  தற்போதைய கருத்து கணிப்புக்கள் படி பாரதீய ஜனதா கட்சி  பலம் குறைவாக உள்ளது வரும் தேர்தலில்  பாரதீய ஜனதா குறிப்பிடதக்க வகையில் ஓட்டுக்களை பெறும்.
அரசியல் களத்தில் ஆம் ஆத்மி கட்சி உள் பட எந்த புதிய வரவுகளாலும் பாரதீயஜனதாவுக்கு  அச்சுறுத்தல் இல்லை. dailythanthi.com

40 அடி உயர கோயில் இடிக்காமல் நகர்த்தப்பட்டது ! வேலூர் மாவட்டம் ஆம்பூர்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யனூரில் நாற்கர சாலையையொட்டி 100 ஆண்டுகள் பழமையான பெத்தபலி அம்மன் கோயில் உள்ளது. இந்த நாற்கர சாலை ஆறு வழிச்சாலை விரிவாக்கம் காரணமாக 40 அடி உயரம்கொண்ட கோயில் கோபுரத்தை நகர்த்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.இதற்காக கிராம மக்கள் கூடி இடிக்காமல் கோயிலை நகர்த்த அரியானா மாநிலத்தை சேர்ந்த டிடிபிடி என்ற தனியார் நிறுவனத்தை அணுகினர். ரூ.3 லட்சம் மதிப்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் ஜனவரி 2ம் தேதி இதற்கான ஆயத்த பணிகள் துவங்கியது. இதற்காக 300 சதுர அடி பரப்பளவிலான கோயில் கோபுரத்தின் அடியில் கடந்த இரு வாரங்களாக ஜாக்கிகள் பொருத்தும் பணி நடந்தது. பின்னர், கட்டைகளில் ஜாக்கிகள் மேல் வைத்து பெரிய பேரிங்குகள் கொண்டு ரயில் தண்டவாளத்தின் மீது ரயில் செல்வது போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினர்.

திமுகவில் ஒரிஜினல் தி.மு.க.,வினர் ஓரங்கட்டப்படுகின்றனர் !அழகிரி

தி.மு.க.,வில், ஸ்டாலினுடன் ஏற்பட்டுள்ள மோதல் சூடுபிடித்துள்ள நிலையில், வரும், 30ம் தேதி, பிறந்த நாளை மதுரையில் கொண்டாடுகிறார், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. அப்போது, தன் ஆதரவு பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளார்.
அதற்காக, தி.மு.க.,வின் முன்னணி பிரமுகர்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன், தொலைபேசி மூலம் பேசி, காய் நகர்த்தி வருகிறார். அழகிரி பேசியதாக, அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: கட்சியில் நான் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது. ஆனால், ஸ்டாலின், கனிமொழிக்கு கிடைக்கும் முக்கியத்துவம் எனக்கு கிடைப்பதில்லை. யாராவது என்னை நம்பி இருந்தால், அவர்களை வெளியேற்றுகின்றனர். இது என்ன நியாயம்?என்னுடன் இருந்த பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதியை பிரித்தனர். இப்போது மூர்த்தி, மூக்கையாவையும் பிரித்து விட்டனர். இதற்கெல்லாம் காரணம், சாத்தூர் ராமச்சந்திரனும், ஐ.பெரியசாமியும் தான்.
தளபதியை நான் தான் வளர்த்து விட்டேன். ம.தி.மு.க.,வில் இருந்து வந்த பொன்.முத்துராமலிங்கத்துக்கு, 1999ல் 'சீட்' வாங்கி கொடுத்தேன். மூர்த்தி, மூக்கையாவையும் நான் தான் பாதுகாத்தேன்.சாத்தூர் ராமச்சந்திரனை நான் தான் கட்சியில் சேர்த்தேன். ஐ.பெரியசாமிக்கு, லோக்கல் பிரச்னை வந்தபோது, நான் தீர்த்து வைத்தேன். இருவரும் அந்த நன்றியை மறந்து விட்டனர். நான் வளர்த்து விட்டவர்கள் எல்லாம், எனக்கு எதிராக, ஸ்டாலினை தூண்டி விடுகின்றனர்.அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கும், ம.தி.மு.க.,வுக்கு போய் வந்தவர்களுக்கும் தான், மரியாதை கிடைக்கிறது. ஒரிஜினல் தி.மு.க.,வினர் ஓரங்கட்டப்படுகின்றனர்.

மூவரை கொன்ற புலி குண்டுக்கு பலி: 19 நாள் பீதிக்குப்பின் ஊட்டியில் நிம்மதி

 ஊட்டி : ஊட்டி அருகே, இரு பெண்கள் உட்பட மூவரை அடித்துக்கொன்ற புலியை, வனத்துறை மற்றும் அதிரடிப்படையினர், நேற்று சுட்டுக் கொன்றனர். இதனால், கிராம மக்கள் ஆரவாரம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, தொட்டபெட்டா சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சோலாடா, அட்டபெட்டு, குந்தசப்பை பகுதிகளில் சுற்றித் திரிந்த புலி, அப்பகுதியைச் சேர்ந்த, கவிதா, 32, சின்னப்பன், 58, முத்துலட்சுமி, 38, ஆகியோரை அடுத்தடுத்து தாக்கி கொன்றது.அவர்களின் உடல்களும் புலிக்கு இரையாயின. இதுதவிர, இரு பசு மாடுகளையும் புலி அடித்துக் கொன்றது.இதன் காரணமாக, கடந்த 19 நாட்களாக, 100 கிராமங்களில் பீதி நிலவியது. வனத்துறையினர், அதிரடிப்படை போலீசார் என, 300 பேருக்கும் மேற்பட்டோர், புலியை தேடிவந்தனர். புலி பீதியால் தொட்டபெட்டா முதல், அட்டபெட்டு வரை 48 பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின், ஒரு சில பகுதிகளில் திறக்கப்பட்டு, தற்போது, 17 பள்ளிகளுக்கு மட்டும், 24ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

2005 ஆண்டுக்குமுந்தய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றவும் ரிசேர்வ் வங்கி வேண்டுகோள்

2005 க்கு முன்பாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது: ரிசர்வ் வங்கிமும்பை: 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின் பக்கத்தில், அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே இந்த ரூபாய் நோட்டுக்களை வருகிற மார்ச் மாதத்திற்கு பின்னர் பொது பரிவர்த்தனைக்கு, அதாவது கடைகள் மற்றும் இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாது என்றும், ஆனால் வங்கிகள் இந்த ரூபாய் நோட்டுக்களை ஏற்றுக்கொள்ளும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை, வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினால் 2005 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ள பொதுமக்கள், அது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும், அந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

புதன், 22 ஜனவரி, 2014

சுனந்தா மரணத்திற்கு முன்பு உயிரைக் காக்க யாருடன் போராடினார் ?

டெல்லி: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள், அவர் கடைசி நேரத்தில் யாருடைய பிடியிலிருந்தோ தப்பிக்கப் போராடியபோது ஏற்பட்ட காயங்கள் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் யாரிடமிருந்து தப்ப முயன்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. விஷம் காரணமாகவே சுனந்தா இறந்துள்ளார் என்று ஆர்.டி.ஓ. விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விஷம் சுனந்தாவுக்குக் கொடுக்கப்பட யார் காரணம் என்பது குறித்து விசாரிக்குமாறும் டெல்லி காவல்துறைக்கு ஆர்டிஓ பரிந்துரைத்துள்ளார். இந்த நிலையில் சுனந்தாவின் உடலில் காணப்பட்ட காயங்கள் குறித்து புதுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட காயங்கள் சுனந்தாவின் உடலில் காணப்பட்டன. இவை கடைசி நேரத்தில் யாரிடமிருந்தோ தப்ப சுனந்தா போராடியபோது ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம் என்று தற்போது பரபரப்பு எழுந்துள்ளது. உடல் ரீதியாக யாருடனோ சுனந்தா போராடியபோது இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கருத்து தெரிவி்த்துள்ளனர். மரணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இது நடந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தர்ணாவாதி' கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: கிரண் பேடி


டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஒரு தர்ணாவாதி என்றும் அவர் மீதும் அமைச்சர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி போர்க்கொடி தூக்கியுள்ளார்.

கேஜ்ரிவால் தற்போது நடத்தி வரும் போராட்டம் குறித்து ஒன் இந்தியா இணையதளத்துக்கு கிரண்பேடி அளித்த சிறப்புப் பேட்டி:
டெல்லியில் தற்போது முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் நடத்தி வரும் போராட்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன? 
கிரண்பேடி: கேஜ்ரிவாலும் அவரது கட்சியினரும் அராஜகத்தையும் சட்ட ஒழுங்கு சீர்குலைவையுமே அதிகரிக்க செய்து வருகின்றனர். இது அழிவுக்குரியது. நிறுவனங்களின் மரியாதைகளை அவமதிக்கிறார்கள். கேஜ்ரிவால் தம்மை அராஜகவாதியாக அழைத்துக் கொள்வது கவலைக்குரியது. 'தர்ணாவாதி' கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: 
கிரண் பேடி 'எக்ஸ்க்யூசிவ்' பேட்டி! கேள்வி: கேஜ்ரிவாலின் போராட்டத்தைத் தொடர்ந்து டெல்லி மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? கிரண்பேடி: பொதுமக்கள் வாக்களிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை நம்பக் கூடாது. கேஜ்ரிவாலைப் பொறுத்தவரை ஒரு நல்ல 'தர்ணா' செயற்பாட்டாளர்.. மக்களை எப்படி அணிதிரட்டுவது என்பது அவருக்கு தெரியும். ஆனால் தர்ணா வேறு ஒரு அரசாங்கத்தை நடத்துவது என்பது வேறு...

எந்தக் கட்சி 500 கோடிக்கு குறையாம குடுக்குதோ அந்தக் கட்சியோடதான் கூட்டணி

கேப்டனுக்கு என்ன கொள்கை ? "
"எந்தக் கட்சி 500 கோடிக்கு குறையாம குடுக்குதோ அந்தக் கட்சியோடதான் கூட்டணின்ற கேப்டனோட கொள்கை.  அந்தக் கொள்கையில சற்றும் வளைந்து கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டார்"
"சரி... பிஜேபி ஒன்னும் யோக்கியமான கட்சி இல்லையே.  நெறய்ய பணம் வச்சிருக்காங்க.  குடுக்கறதுக்கு என்ன ? " என்றான் வடிவேலு.
5ba6cc98-73da-4798-9f87-727543c664fdHiRes"அவங்க குடுக்கறதுக்கும் ரெடிதான்.  ஆனா, கேப்டன் இதுக்கு சரிப்பட்டு வருவாரான்னு அவங்களுக்கு சந்தேகம்.  கேப்டனுக்கு தனிப்பட்ட முறையில் பெரிய செல்வாக்கு இல்ல.  கடந்த மூன்று ஆண்டுகளில், அவரோட செல்வாக்கு கணிசமா சரிஞ்சிருக்கு. அதனால, இந்த ஆளுக்கு 500 கோடி குடுக்கறதுக்கு, அந்தப் பணத்தை நாமளே தமிழகத்தில் செலவு செய்தா, வெற்றி பெறலாம்னு நினைக்கிறாங்க.  இது தவிரவும், ஆர்எஸ்எஸ், விஜயகாந்த்துக்கு இவ்வளவு பணம் கொடுப்பது அவசியமில்லைன்னு நினைக்கிறாங்க"
"அதுவும் சரிதான். ஆனா, கேப்டன் கொஞ்சம் ஓவராத்தான் எதிர்ப்பாக்கறாரு இல்ல ? " என்று வினவினான் ரத்னவேல்.
"அதுக்கு காரணம் இல்லாம இல்லையே.  ஒரு பெரிய கட்சியான அதிமுக கூட சேந்து 27 எம்.எல்.ஏ ஜெயிச்சுட்டார்.  இன்னொரு பெரிய கட்சியான திமுக, காலில் விழாத குறையா கெஞ்சறாங்க.

திருநங்கைகளையும், தேவதாசிகளையும் ஒதுக்கி வைத்த சமுதாயத்தை தகர்த்த பெரியார்


நிழல் திருநாவுக்கரசு, டிரம்ஸ் சிவமணி, பிரியா பாபு ஆகியோருக்கு  பெரியார் விருது  திராவிடர் கழகம், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் நூலக வாச கர் வட்டம், பகுத்தறி வாளர் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் சென்னை பெரியார் திடலில் ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடத்தி வரும் தந்தை பெரியார் முத் தமிழ் மன்றத்தின் 20ஆம் ஆண்டு விழா, திரா விடர் திருநாளை பண் பாட்டுத் திருவிழாவாக வும், தமிழ்ப்புத் தாண்டு - பொங்கல் விழாவாகவும் மிகுந்த சிறப்புடன் நடத்தி வருகின்றன.

இசையமைப்பாளர் அனிருத் மீது ரஜினியின் மைத்துனர் புகார்

இசையமைப்பாளர் அனிருத்தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் மீதான புகார் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் மைத்துனர் சென்னை பெருநகர ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளை சந்தித்து விளக்கமளித்தார்.
சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்த ஜெபதாஸ் பாண்டியன், பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த "எய்ன்ட் நோபடி' என்ற ஆங்கில இசை ஆல்பத்தின் டிரெய்லர் "யூ-டியூப்' உள்ளிட்ட இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் பெண்களையும், தாய்மையையும் கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பாடல்களில் பெண்களுக்கு எதிராகவும், மத உணர்வைத் தூண்டும் வகையிலும் வரிகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாடல்களால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும். மேலும் இந்த ஆல்பம், உரிய அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அனிருத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

37 தடங்களில் பிரிமியம் ரயில்’- விமானத்துக்கு இணையான கட்டணம் ! டிக்கெட் இல்லை என்ற கவலையே இல்லை !

டிக்கெட் இல்லை என்ற கவலையே இல்லை 37 தடங்களில் ஓடப்போகிறது குளுகுளு ‘பிரிமியம் ரயில்’- விமானத்துக்கு இணையான கட்டணம் வசூலிக்க திட்டம் புதுடெல்லி: பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகை தினங்களில் ஊருக்கு போக ரயில் டிக்கெட் கிடைக்கவே கிடைக்காது.  என்னதான் முதல்நாள் இரவில் இருந்து ரயில் நிலையத்திலலேயே பாய் விரித்து காத்துக்கிடந்தாலும், முன்பதிவு தொடங்கிய சில  நிமிடங்களில் அத்தனை டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிடும். பிறகு சிறப்பு ரயில்கள் விட்டாலும், அதிலும் அதே டிமாண்ட்தான். தட்கல்  டிக்கெட் எடுக்கலாம் என்றால், டிக்கெட் கைக்கு கிடைக்கும் வரை படபடப்புதான் மிஞ்சும். இதற்கெல்லாம் புதுவழி கண்டுபிடித்திருக்கிறது  ரயில்வே. எப்போதுமே டிக்கெட் கிடைக்கும் வகையில், முழுவதும் குளு குளு வசதி கொண்ட பிரிமியம் ரயில் இயக்க உள்ளது. இதில் ஆன்-லைன்  மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். கடந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசனில் டெல்லி-மும்பை இடையே இந்த பிரிமியம் ரயில்  இயக்கப்பட்டது.

சீனத்து கலைமகளின் ஆங்கிலக்கலப்பில்லாத அழகான தமிழ் அவ்வளவு இனிமை


இன்று (ஜனவரி 21 - 2014) காலை சன்டிவி சூர்யவணக்கம் நிகழ்ச்சியின் ''விருந்தினர் பேட்டி'' பார்த்தவர்கள் பாக்கியவான்கள். எப்போதாவதுதான் காலைநேரத்து நிகழ்ச்சிகளில் இதுமாதிரி அமையும். பொதுவாக நான் சூர்யவணக்கத்தில் ''யோஹ்ஹா'' மட்டும்தான் பார்ப்பது வழக்கம். அதுவும் ''அபிதா பானர்ஜி''க்காக மட்டும்தான் பார்ப்பது. ஆனால் இன்று எதேச்சையாக விருந்தினர் பக்கம் பார்க்க நேர்ந்துவிட்டது. இந்நிகழ்ச்சியில் சீனப்பெண்ணான ''கலைமகளு''டன் ஒரு பேட்டி இடம்பெற்றது. கொஞ்சமும் பதட்டமின்றி பொறுமையாக யோசித்து யோசித்து அந்த சீனப்பெண் பேசிய ஆங்கிலக்கலப்பில்லாத அழகான தமிழ் அவ்வளவு இனிமையாக இருந்தது. கிட்டத்தட்ட நம்வீட்டு குட்டிப்பாப்பாக்களின் தத்தக்கா பித்தக்கா மழலை மாதிரி... நிகழ்ச்சி முழுக்க மாஆத புன்னகையோடு பேசினார் கலைமகள்.

வசூலிக்கப்பட்ட பணம் எங்கே? கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கேள்வி


புதுடெல்லியில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் காவல்துறை விவகாரத்தில் மோதல் போக்கு நிலவி வருகிறது. டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக் கொடுமையில் பெண் உயிரோடு கொளுத்தப்பட்ட விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்க தவறிய 4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங், கெஜ்ரிவால் சட்டத்திற்கு மதிப்பளிக்க போவதும் இல்லை, பின்பற்றபோவதும் இல்லை. அதனால் நான் அவர் செய்வதினால் எந்த அதிர்ச்சியும் அடையவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் “நான் முதலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பில் வசூலிக்கப்பட்ட பணம் எங்கே சென்றது? மக்கள் அவர்களை தேர்வு செய்தனர். அவர்களை மக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார். nakkheeran.in

செவ்வாய், 21 ஜனவரி, 2014

பார்ப்பனர்கள் மாட்டுக் கறியை உண்ட வரலாறு என்ன? யாகங்களில் பசுவை பலி இடுவதும், பசுவின் கறியை கொண்டு சமைத்த


Myth of the Holy Cow“பசுவதை தடை சட்டம் வேண்டும்.”
“பசு புனிதமானது அதன் கறியை உண்ணுவதை தடை செய்ய வேண்டும்.”
“பசுவதை என்பது இசுலாமியர்களின் ஆட்சியினால் ஹிந்துகளுக்கு வந்த சோதனை.”
“பசு ஹிந்துக்களின் கடவுள். பசுவின் மூத்திரம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி படைத்த சர்வ ரோக நிவாரணி.”
மேற்சொன்ன கூற்றுகளை இந்துமதவெறி கும்பல் நரிப் பிள்ளை போல் சொல்லி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக ஆட்சிக்கு வரும் மாநிலங்களில் முதல் வேலையாக பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்படுவதை நாம் கவனிக்கலாம்.
இந்த கும்பலின் இந்த “பசுவின் புனிதம்” என்ற கூற்று ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள இசுலாமியர்கள், கிறிஸ்துவர்கள், தலித் மக்களை குறி வைத்து தாக்குகிறது. இந்தியா முழுவதும் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் ஆயிரகணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், அதிக புரத சத்துள்ள மாட்டுக் கறி போன்ற உணவுகள் அவர்களின் உயிரை காக்க உதவும். ஆனால் இந்த இந்துத்துவ கும்பல் சிறுபான்மை மக்களை ஒடுக்கவும், பெரும்பான்மை இந்து மக்களை அவர்களுக்கு எதிராக திருப்பவும் “பசுவின் புனிதம்” எனும் இந்த தந்திரப் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.

சென்னை புத்தக கண்காட்சியைதிசைதிருப்பிய மதவாதிகள் ! பார்ப்பன பிரச்சார கறிக் கடை!


ஆன்மீகக் கடைகள்
பிட்சாக் கடைபார்ப்பன இந்துமத பண்டாரங்கள் விபூதி, பூஜை பொருட்கள் என தலை விரித்தாடுவதைப் பார்க்கையில், இது புத்தகக் காட்சியா, இல்லை நடைபாதை கோயில்களா? என சந்தேகம் வராமல் இல்லை
ஏம்ப்பா! புத்தகக்காட்சி பொறுப்பாளர்களே, படிப்பு வாசனையைத் தேடி நுழையும் போதே நுழைவாயிலில் பாப்கார்ன் வாசனையை தூக்கலாக்கிக் காட்டி சுண்டி இழுப்பதை நிறுத்தக் கூடாதா? வரும் போதே தடுக்கி விழுந்தால் சாட் அயிட்டங்களில் விழும்படி என்னய்யா அப்படி ஒரு ஏற்பாடு?! போகட்டும், படிக்கும் பழக்கம் அருகி வரும் காலத்தில் இத்தனை புத்தகக் கடைகளை ஓரிடத்தில் வரிசை வைத்துக் காட்டும் உங்கள் முயற்சியை பாராட்டலாம்” என்ற எண்ணத்தோடு பார்வையிட்டேன்.
சுயமுன்னேற்றம், பொழுதுபோக்கு, இலக்கியக் கோஷ்டிகளின் மத்தாப்புக்கள், நுகர்வு உலகின் அழிபசி தெரியாமல் இன்னும் பிள்ளையை நல்லவனாக வளர்க்க நன்னெறிக்கதைப் புத்தகங்களோடு ”இந்த வருசம் வியாபாரம் சரியில்ல!” என்று நொந்து நூலாகிக் கிடக்கும் விற்பனையாளர்கள் என பல வண்ணக் கருத்துக்களின்

கடைகளைப் பார்த்து வருகையில், இடையிடையே பெரும்பாலும் பக்தி புத்தகங்களைத் தாண்டி நடைபாதை கோயில் மாதிரியே சில கடைகள் மெல்லிய இசையுடன் ”கிருஷ்ண கிருஷ்ணா, ஓம்… ஓம்….” என்று ஊளை ரீங்காரத்தைக் காட்டி ஆள்பிடித்தன.
புத்தகக்கண்காட்சி என்ற வரம்புக்குள் மதவாதிகள் தங்கள் பிரச்சாரத்தை புத்தகங்களாக பார்வைக்கு வைப்பதைக் கூட சகித்துக்கொள்ளலாம், பல பார்ப்பன பண்டாரக் கடைகளில் அவர்களின் ‘நூல்’ விடும் முயற்சியே முறுக்கிக் கொண்டு தெரிகிறது.

தொண்டி கடற்கரை பகுதியில் தோண்ட தோண்ட சிலைகள் தொல்லியல் துறையினர் ஆய்வு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperதொண்டி:ராமநாதபுரம் தொண்டி கடற்கரை பகுதியில் தோண்ட தோண்ட கல், வெண்கல, வெள்ளியிலான சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தொண்டி நம்புதாளை கடற்கரை பகுதியில் ஏராளமான சிலைகள் கிடப்பதாக தொண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்ஐ இந்திரா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். குவியல் குவியலாக கடற்கரையை ஒட்டி மண்ணில் பாதி புதைந்த நிலையில் சிலைகள் கிடந்தன. இவற்றை போலீசார் ஒவ்வொன்றாக மீட்டு வருகின்றனர். இதில் மூன்றேகால் அடி உயரமுள்ள பெரிய காளி கற்சிலை முதலில் மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கற்சிலைகள், 50 முதல் 60 வெண்கல, வெள்ளி சிலைகள் இப்பகுதியில் புதைந்துள்ளன. அவற்றையும் போலீசார் மீட்டனர்.

கெஜ்ரிவால் தர்ணா போராட்டம் வாபஸ் ! அரசு மீது பழி போட்டு கெஜ்ரிவால் நாடகம் ! லாலு கண்டனம்

திங்கள்கிழமை முதல் நடைபெற்ற போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தார். டெல்லி துணை நிலை ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னர் இதனை அறிவித்தார்.புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத 4 போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் சம்மந்தப்பட்ட 4 போலீஸ்காரர்களையும் விசாரணை முடியும் வரை விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து தனது ஆம் ஆத்மி கட்சி தனது போராட்டத்தை முடித்துக்கொண்

டெல்லியில் முதல் அமைச்சர் கெஜ்ரிவால் நடத்திய போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத், கெஜ்ரிவால் நாடகம் அரசியல் அமைப்பையே குலைத்து விட்டது என்று கூறியுள்ளார்.
லாலு பிரசாத் யாதவ், நாட்டில் இப்போது எல்லோரும் பிரதமராக ஆசைப்படுகிறார்கள்.

விளம்பரத்துக்காக வீதியில் போராடுகிறார் கேஜ்ரிவால்: பேஸ்புக் ஆதரவு LIKE கிடுகிடு சரிவு


பேஸ்புக்கில் ஆதரவாளர்களை வேகமாக இழக்கும் கெஜ்ரிவால்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விளம்பரத்துக்காகவே வீதியில் இறங்கி போராடுவதாக, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சாடியுள்ளார்.
சென்னையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து அவர் கூறும்போது, "இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் மற்றும் இரு அரசுகளிடையே விரைவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும்" என்றார்.
மாநிலங்களவைத் தேர்தல் குறித்து கேட்டதற்கு, இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்றார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தி வரும் தர்ணா குறித்து கருத்து தெரிவித்த அவர், "டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் விளம்பரத்துக்காக சாலைக்கு வந்து போராட்டம் நடத்துகிறார். இது தவறான முன்னுதாரணமாகும்" என்றார் ஜி.கே.வாசன்.

நஸ்ரியா ஒரு மதவாதியை காதலிக்கிறாரா ? எனக்காக தன்னை தியாகம் செய்ய தயாராகவும் இருக்க வேண்டும்.காதலன் பகத்

என்னை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். எனக்காக தன்னை தியாகம் செய்ய தயாராகவும் இருக்க வேண்டும். அதுமாதிரி ஒரு பெண்ணை தேடி வந்தேன். இறுதியில் அப்படிப்பட்டவராக நஸ்ரியாவை கண்டு பிடித்தேன்
நடிகை நஸ்ரியாவும், இயக்குனர் பாசிலின் மகனும் நடிகருமான பஹத் பாசிலும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் ‘எல் பார் லவ்’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இவர்கள் காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டு திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆகஸ்டு மாதம் திருமணம் நடக்கும் என்று பகத்பாசில் தந்தையும் பிரபல மலையாள டைரக்டருமான பாசில் அறிவித்து உள்ளார். கேரளாவில் இத்திருமணம் நடைபெறும் என்றும் பெற்றோர்கள் நிச்சயம் செய்து இந்த திருமணத்தை நடத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.

ஈரோடு கல்லூரி பேராசிரியை கொலையில் சேலம் வாலிபர் கைது

இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தீபா கொலை செய்யப்பட்ட இடத்தில் ரத்தக்கறை படிந்த கத்தி கிடந்தது. இதை போலீசார் கைப்பற்றினர்.
இந்த நிலையில் தீபா கொலை வழக்கில் துப்பு துலங்கி உள்ளது. இகுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கல்லூரி பேராசிரியை தீபாவுக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அந்த வாலிபரின் நண்பர் கண்டித்துள்ளார்.
தீபாவிடமும், தனது நண்பரின் தொடர்பை துண்டித்து விடும்படி எச்சரித்துள்ளார். ஆனால் தீபா, அவரது பேச்சை கேட்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், நேற்று இரவில் தீபா வீட்டு அருகே நின்று கொண்டு இருந்தார். தீபா வருவதை பார்த்த அவர், நைசாக தீபாவை அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தாக கூறப்படுகிறது.
சேலத்தை சேர்ந்த அந்த வாலிபர் சிவக்குமார் என்பது தெரிய வந்தது. அவர் இன்று காலை சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
malaimalar.com

கேஜிரிவால் : தில்லியில் 90 சதவீத குற்றங்கள் போலீஸாருக்கு தெரிந்தே நடக்கிறது:


தில்லியில் கடமை தவறிய போலீஸ் அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் முதல்வர் கேஜிரிவால் தில்லியில் 90 சதவீத குற்றங்கள் போலீஸாருக்கு தெரிந்தே நடக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
இது மிகவும் வெட்ககேடானது துரதிருஷ்டவசமானது என்று கூறியுள்ளார். மேலும் அவர் இந்த ஆர்பாட்டம் நாடகமோ எனது சொந்த நலனுக்காகவோ நடத்தவில்லை. மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தவே நடத்துகிறோம். என்று கூறினார்.

ஆர்டிஸ்ட் வில்லேஜ்: 80களின் நடிகர், நடிகைகள் பொழுதுபோக்கும் இடமாக்க திட்டம்

நினைவுப் பகிர்வு சந்திப்பில் 80களின் நடிகர் - நடிகைகள்!
வேகமாக ஒடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் இளைஞர்கள் தங்களது பழைய நட்பை சமூக வலைத்தளங்கள் மூலமாக நலம் விசாரித்து வருகிறார்கள். வருடத்திற்கு ஒரு தடவையாவது நேரில் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
1980ல் நடித்து வந்த நடிகர், நடிகைகள் அனைவருமே இப்போது வெவ்வேறு பணிகள் பிஸியாக இருந்து வருகிறார்கள். தங்களது பணியைப் பொருட்படுத்தாது வருடத்திற்கு ஒருமுறை கூடி தங்களது நட்பை மேலும் மெருக்கூட்டி வருகிறார்கள்.
5வது வருடமாக இந்தாண்டும் கூடி "எங்களது நட்பை யாராலும் பிரிக்க முடியாது" என்று மேலும் ஒருமுறை உரக்க கூறியிருக்கிறார்கள். இவர்களது இணைபிரியாத நட்பு, இப்போதுள்ள நடிகர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசு வங்கிகளைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் !


கடன்
மொத்தக் கடன் தொகையில் 50% இந்த தனியார் கார்ப்பரேட் முதலாளிகளால் சூறையாடி தீர்க்கப்பட்டிருக்கின்றன
இந்தியா
 மதிப்பிலான வங்கிக் கடன்களை புதுப்பிக்க உள்ளன. அதாவது, அடுத்த 15 மாதங்களில் இந்நிறுவனங்கள் கட்ட வேண்டிய கடன்களின் காலக் கெடு முடிவுக்கு வருகின்றது, அந்தக் கடன்களுக்கு  மாற்றாக புதிய கடன்களை வங்கிகள் கொடுக்கப் போகின்றன. காலாவதியாகப் போகின்ற இந்த கடன்களின் மதிப்பு 2013-ம் ஆண்டின் இறுதியில் இந்திய வங்கிகளின் நிகர மதிப்பில் 29 சதவீதம் ஆகும். இந்தத் தகவல்கள் ஃபிட்ச் குழுமத்தைச் சேர்ந்த இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன
வின் 100 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்த 15 மாதங்களில் ரூ 2.1 லட்சம் கோடி.


இந்த பட்டியலில் பொதுத் துறை நிறுவனங்களோ, நிதி நிறுவனங்களோ இல்லை. இவை அனைத்தும் உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு துறையில் செயல்படும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள். தாராளவாத ஆதரவாளர்களால் வியந்து போற்றப்படும் தனியார் துறையின் செயல்திறன் என்பது மீண்டும் மீண்டும் வங்கிப் பணத்தை ஆட்டையைப் போடுவதில்தான் அடங்கியிருக்கிறது. இப்படித்தான் இவர்கள் தொழில் செய்து நாட்டையே முன்னேற்றி வருகிறார்களாம்!