சனி, 9 ஜூன், 2012

ஓரின சேர்க்கைக்கு ஆதரவு : பாலிவுட் ஹீரோயின்

‘ஓரின சேர்க்கையை ஆதரிப்பதற்கு வெட்கப்படவில்லை’’ என்கிறார் பாலிவுட் ஹீரோயின் வீனா மாலிக். பாகிஸ்தான் நடிகை வீனா மாலிக். பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
 சில மாதங்களுக்கு முன்பு நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். திடீரென்று காணாமல் போய்விட்டதாகவும் அவரை கடத்தி விட்டதாகவும் தகவல் வெளியானது. அதை மறுத்து மீண்டும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தோன்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் கன்னடத்தில் உருவாகும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படமான ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

Amala Paul:நீச்சல் உடை என்ன... எந்த விதமான கவர்ச்சி வேடத்துக்கும் தயார்

அமலா பால் தமிழில் அறிமுகமான படமே, கிட்டத்தட்ட பலான படம் ரேஞ்சுக்குதான் இருந்தது.
ஆனாலும் அவர் அடுத்து நடித்த மைனாவில் குடும்பப்பாங்காக வந்து, முதல் பட பலான பட முத்திரையை துடைத்துக் கொண்டார். அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியாக நடிக்க மறுத்துவிட்டார்.
இப்போதைக்கு அவர் மலையாளம், தெலுங்குப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் வரும் அனைத்துக் கதைகளையும் 'சரியில்லை' என்று கூறி தவிர்த்து வருகிறார்.
ஆனால் இப்போது என்ன மனமாற்றமோ... எல்லாவிதமான வேடங்களையும் செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார்.

நித்தியானந்தா தலைமறைவு?: ஆசிரமத்தைக் கைப்பற்ற கர்நாடக அரசு திட்டம்

நித்தியானந்தா தலைமறைவு?: ஆசிரமத்தைக் கைப்பற்ற கர்நாடக அரசு திட்டம்
 சாமியார் நித்தியானந்தா மீது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, பெங்களூரை அடுத்த பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆர்சிரமத்துக்கு எதிரே கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
 அப்போது, ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையில் திடீரென்று மோதல் வெடித்தது.
 இந்நிலையில், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
 பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீடத்தில் நடைபெறும் ஆட்சேபகரமான நடவடிக்கைகள் காரணமாக, அந்த ஆசிரமத்தின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். தியான பீடத்துக்கு ஒரு நிர்வாகியை நியமிக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.

T.R.Balu,E.V.K.S.Ilankovan மத்திய அமைச்சராகிறார்கள்

ஸ்டாலின், பிரதமரிடம் கொடுத்த சீட்டில் உள்ள ‘எதிரணி’ இரண்டு பெயர்கள்!


Viruvirupu

டில்லி சென்ற ஸ்டாலின், பிரதமரையும், சோனியாவையும் சந்தித்தது பற்றிய சில விபரங்கள் தற்போது டில்லி அரசியல் வட்டாரங்களில் அடிபடுகிறது. வழமையாக கருணாநிதி கையாளும் இப்படியான விவகாரங்களை முதல் தடவையாக ஸ்டாலின் ஹான்டில் பண்ணியிருக்கிறார்.
ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்வது தொடர்பாகவே டில்லிக்கு அழைக்கப்பட்டார் என்பதே வெளியே கூறப்படும் பேச்சு. ஆனால், வந்த இடத்தில் ஓசைப் படாமல் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டு திரும்பினார் என்பதே டில்லி வட்டாரத் தகவல்.
உண்மையில் டில்லி அழைத்திருந்தது கருணாநிதியைத்தான். ஆனால், டில்லி சென்று திரும்ப தனது உடல்நிலை இடம் கொடுக்காது என்று கூறி, ஸ்டாலினை அனுப்பி வைப்பதாக தெரிவித்தாராம். அதையடுத்தே ஸ்டாலின், டில்லி ஹை-கமாண்டை சந்தித்திருக்கிறார்.

Vishvarupam அமெரிக்கா இனி கமல்ஹாசனை விருந்தினராக

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

கமல்ஹாசனுக்கு இனி அமெரிக்காவிற்கு விசா உடனே கிடைக்கும்.
இந்திய இஸ்லாமியார் என்பதற்காகவே அப்துல்கலாம், ஷாருக்கான் போன்ற பெரிய தில்லாலங்கடிகளையே பேண்டை அவிழ்த்து சோதனை செய்யும் அமெரிக்கா, இனி கமல்ஹாசனை விருந்தினராக உபசரிக்கும்.
அதை நம்மஊர் அறிஞர்கள் ‘உலக நாயகனை ஹாலிவுட் அழைக்கிறது, இனி ஹாலிவுட் படங்களின் தரத்தை நம்மவர் உயர்த்துவார்’ என்று மொழி மாற்றம் செய்வார்கள்.

கமல்ஹாசனின் புதிய படம் விஸ்வரூபம்.
சமீபத்தில் வெளியான இதன் விளம்பரத்தில், விஸ்வரூபம் என்கிற வார்த்தை அரபி எழுத்து வடிவத்தில் வெளியாகி இருந்தது.
இந்த வடிவம் இந்த படத்தின் அரசியலை புரிந்து கொள்வதற்கான குறியீடாக எனக்கு பட்டது.
‘தசாவதாரம்’ என்று கடந்த முறை படம் எடுத்த கமல், இந்த முறை அதன் தொடர்ச்சியாக, ‘விஸ்வரூபம்’ என்று வருகிறார்.

வருகிறது ”டிராபிக் ஜாம்” வரி! Traffic Jam சென்னைக்கு


சென்னை நகரிலும், அதன் புறநகர் சாலைகளிலும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தத் தனியார் வாகனங்கள் மீது நெரிசல் வரி விதிக்கும் திட்டத்தைக் கொண்டுவரப் போவதாகவும்; இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை மாநகருக்குள் அமைந்துள்ள அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜவஹர்லால் நேரு சாலை ஆகிய மூன்றிலும் இவ்வரி விதிக்கும் நடைமுறை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தொடங்கிவிடுமென்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
டிராபிக் ஜாம் வரிஇந்த வரி விதிப்பைத் தவிர்க்க எண்ணும் தனியார் வாகன ஓட்டிகள், இந்தச் சாலைகளுக்குள் நுழையாமல் சுற்றிச் செல்ல வேண்டும்;

பழங்குடி மக்களை சித்திரவதை செய்த பிடாரிக்கு DGP பதவி

சங்கர் பிதாரி
வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழகத்தின் மலைவாழ் மக்களைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்த கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் சங்கர் பிதாரி, அம்மாநிலத்தின் காவல்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பிதாரியை விடப் பணியில் மூத்தவரான இன்ஃபான்ட் என்ற போலீசு அதிகாரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பட்டாசு வெடித்தால் சிறை பொது இடங்களில்

மதுரை:""பொது இடங்களில் பட்டாசு வெடித்தால் மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை, அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தால் ஆறு ஆண்டு சிறைத் தண்டனையும் கிடைக்கும்,'' என மதுரை போலீஸ் எஸ்.பி., பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: திருமணம், கோயில், அரசியல் விழா <உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, ரோட்டில் பட்டாசு வெடிப்பதால் பொதுமக்கள், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுகிறது. தங்களது வீடுகள், சொந்த இடங்களில் பட்டாசு வெடிக்க தடை இல்லை. பொது இடங்கள், ரோட்டில் வெடிக்க அனுமதியில்லை. மீறினால், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 285(தீப்பற்றக்கூடிய பொருள், அசட்டை) மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படும். இதற்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
அதேபோல், பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி பெற வேண்டும். அவற்றில், பிறர் மனதை புண்படுத்தும் வாசகங்கள், படங்கள் இருக்கக்கூடாது.

Arms dealer அபிஷேக் வர்மா மனைவியுடன் கைது

புதுடில்லி:சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக, ஆயுத டீலர் அபிஷேக் வர்மாவும், அவரது மனைவியும், சி.பி.ஐ., அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர்.இந்திய கடற்படை தலைமையகத்தில் உள்ள ஆவணக் காப்பக அறையில் இருந்த, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய தகவல்களை வெளியில் கசியவிட்டது தொடர்பான வழக்கில், பிரபல ஆயுத டீலர் அபிஷேக் வர்மா மீது ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதற்காக, சுவிட்சர்லாந்தை சேர்ந்த, "ரெய்ன்மெட்டல் ஏர் டிபன்ஸ்'என்ற ஆயுத தயாரிப்பு நிறுவனத்தை, மத்திய அரசு, கறுப்பு பட்டியலில் வைத்திருந்தது. தன் செல்வாக்கை பயன்படுத்தி, கறுப்பு பட்டியலில் இருந்து, அந்த நிறுவனத்தின் பெயரை நீக்குவதாகக் கூறி, அந்த நிறுவனத்திடம் இருந்து, பல லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக, அபிஷேக் வர்மா மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அபிஷேக் வர்மாவுக்கு சொந்தமான, டில்லி மற்றும் குர்கானில் உள்ள, 10 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வெள்ளி, 8 ஜூன், 2012

சென்னை வந்த ராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

 முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று மாலை டில்லியில் இருந்து சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு, தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி, 15 மாத சிறை வாசத்திற்கு பின், ஜாமினில் வெளி வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தமிழகம் செல்வதற்கு சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் அனுமதியளித்தது. இதை தொடர்ந்து, இன்று மாலை, 5.30 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய ஓய்வறையில், 40 நிமிடம் அமர்ந்திருந்தார். ராஜாவை வரவேற்க, விமான நிலையத்திற்குள் சென்றிருந்த முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., ரங்கநாதன் மற்றும் சில நிர்வாகிகளிடம், அவர் பேசிக் கொண்டிருந்தார். சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு, 6.15 மணிக்கு ராஜா விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தார்.

CBI வாய்க்குள் India Cements& Cricket இயக்குனர் சீனிவாசன்

எல்லா பண முதலைகளும் சி.பி.ஐ.,வாய்க்குள் ; தமிழகத்தை சேர்ந்த சீனிவாசனுக்கும் சம்மன்

ஐதராபாத்: சமீப 3 ஆண்டுகளில் பெரும், பெரும் பணக்காரப்புள்ளிகள் எல்லாம் சி.பி.ஐ.,வலையில் சிக்கி சிறையில் கம்பி எண்ணி வருகின்றனர். அந்த வரிசையில் தமிழகத்தை சேர்ந்த புகழ்பெற்ற இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன மானேஜிங் டைரக்டரும் சிக்கியுள்ளார். இவரை சி.பி.ஐ., முன்பு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் இவர் மீதான நடவடிக்கை எந்த நிலையில் இருக்கும் என்பது தெரிய வரும். ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகரரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சி.பி.ஐ.,யினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பபட்டுள்ளார். இவர் மீது சுரங்க மோசடி வழக்கும் நிலுவையில் இருக்கிறது.

ராமஜெயம் கொலை..வினோத்துக்குத் தெரியாமல் எதுவும் நடந்து இருக்காது?

ராமஜெயம், வினோத்துக்கு சித்தப்பா முறை.

விஸ்வரூப வினோத்!
விரட்டும் காவல்துறை
ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸார் எத்தனையோ பேரை விசா​ரித்​தார்கள். அனுப்பி விட்டார்கள். ஆனால், ஒருவரை மட்டும் ஏனோ நெருக்கமாகக் கண்​காணித்தபடியே இருக்கிறார்கள். அவர் பெயர்... வினோத்!

ராமஜெயம், வினோத்துக்கு சித்தப்பா முறை.
திருச்சி மாவட்டம் பெருவளநல்லூரைப் பூர்வீக​மாகக்கொண்டவர் வினோத். ஆறு அடி உயரம். அதிர்ந்து பேசாத பால்வடியும் முகம். கோ​பால்​ராஜ் - செல்வி தம்பதியின் மூத்த வாரிசு. செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர். அதன் பிறகு, எம்.பி.ஏ. படித்ததாகவும் சொல்லப்படுகிறது. இவருடைய சகோதரி ப்ரீத்தா, திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

அம்பானிகளுக்காக பெட்ரோல் விலையை ஏற்றும்

அஜித்... மாணிக்கம் நாராயணனை ஏமாற்றினாரா?

தயாரிப்பாளரை ஏமாற்றினாரா அஜித்?
நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அவரது நடிப்பிற்காக மட்டும் ரசிகர்களாக இல்லை அவரது சாதாரண மனித இயல்புகளுக்காகவும் தான். ரசிகர்கள் மட்டுமின்றி அஜித்துடன் இணைந்து நடிக்கும் நடிகர் நடிகைகள் உள்பட அனைவரும் அஜித்தை புகழ்ந்து பேசும் போது ஒரு தயாரிப்பாளர் மட்டும் அஜித் என்னை ஏமாற்றிவிட்டார் என அஜித் மீது குற்றம் சுமத்துகிறார். 
வித்தகன் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தான் அவர். கே.எஸ்.ரவீந்திரன் தயாரிப்பில் அஜித் நடித்து 2003-ல் வெளியான படம் ‘என்னை தாலாட்ட வருவாளா’. 1996-ல் துவங்கிய இந்த படம் தயாரிப்பாளரிடம் பணம் இல்லாததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, ஒருவழியாக 2003-ல் ரிலீஸானது. 

மார்கெட் போன நடிகைகளுக்கு அரணாக சாமியார் நித்யானந்தா

பெங்களூரு: சாமியார் நித்யானந்தா பேட்டியின் போது, "கன்னட "டிவி' சேனல் நிருபர்' நீதிமன்ற சம்மன் பற்றி, கேள்வி எழுப்பியதால், அவரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனால், பத்திரிகையாளர் சந்திப்பில் ரகளை ஏற்பட்டது.
சாமியார் நித்யானந்தா வழக்கில், சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஆர்த்தி ராவ் சென்னையை சேர்ந்தவர். அமெரிக்க குடியுரிமை பெற்றவர். 2004 முதல், 2010 வரை, நித்யானந்தா ஆசிரமத்துடன் தொடர்பு வைத்திருந்தவர். இவர், "கன்னட "டிவி' சுவர்ணா'வில் அளித்த பேட்டியில், "நித்யானந்தா, காவி அணிந்து மக்களை ஏமாற்றுகிறார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அந்தஸ்தை எண்ணி, வெளியில் சொல்லாமல், குமுறிக் கொண்டுள்ளனர். அவரிடம் எந்த சக்தியும் இல்லை. பக்தர்களை ஏமாற்றி, பணம் சம்பாதித்தார். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் சொத்துகள் உள்ளன. இது குறித்து, அரசு விசாரணை செய்ய வேண்டும். தியானம் கற்றுக் கொள்ள வந்த என்னிடம், பல முறை தொடர்பு கொண்டார். அவரால் பாதிக்கப்பட்ட நான், அவர் மீது வழக்கு தொடர உள்ளேன்' என்று கூறியிருந்தார்.

சிக்கலில் சிதம்பரம்??? தேர்தல் வழக்கு

ப.சிதம்பரம்: “புரியாம பேசாதிங்க.. கண்ணப்பனுக்கே கதை கந்தல்!”

Viruvirupu
உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தலில் வெற்றி பெற்றது தொடர்பாக அவர் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, தேசிய அளவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
“இதற்கெல்லாம் போய் நான் ராஜினாமா செய்ய முடியாது” என்று அறிவித்துள்ளார் அமைச்சர் ப.சிதம்பரம்.
சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த வழக்கு தான் இந்த சர்ச்சைகள் அனைத்துக்கும் தொடக்கப் புள்ளி. கண்ணப்பன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

வியாழன், 7 ஜூன், 2012

ஆ.இராசா, நாளை சென்னை வருகிறார்: டில்லியில் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசாவை தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் 6.6.2012 அன்று சென்று நலம் விசாரித்தார். உடன் இடமிருந்து ஆ. இராசாவின் துணைவியார் பரமேஸ்வரி, ஆ. இராசா, மு.க. ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், மயூரி இராசா.

ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவு கிளி ஜோசியம்


பாதாளத்தை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது ரூபாயின் மதிப்பு. வளர்ச்சி, வல்லரசு என்ற வெற்று ஜம்பங்களையும், முறுக்கேற்றிவிடப்பட்ட முட்டாள்தனங்களையும் நிலை தடுமாற வைத்திருக்கிறது இந்த வீழ்ச்சி. டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கடந்த 7 மாதங்களில் மட்டுமே 25% வீழ்ச்சியடைந்து, 56க்கும் 57க்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கிரீஸின் நிலைகுலைவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடியும்தான் ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணமென்றும், ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி ஜப்பானும் நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னேறினால்தான், இந்தியாவும் மீளமுடியும் என்றும் கூறியிருக்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.  இந்தியாவின் எதிர்காலம் குறித்து இதைவிட நம்பகமானதொரு விளக்கத்தை நாம் கிளி ஜோசியக்காரனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளமுடியும்.

பாண்டியனின் கடல்கடந்த அரசியல் விபசாரம்


இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்! தா.பாண்டியன் மீது கலைஞர் பாய்ச்சல்!அதிமுகவை திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காக திமுக மீது தேவையில்லாமல் குறை சொல்வதை தா.பாண்டியன் இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும் என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் வெளியிடுட்டுள்ள அறிக்கையில்,புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரனின் மரணத்தின் காரணமாகவே அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. அப்போது தோழமைக் கட்சியாக போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்குத்தான் அரசியல் நாகரீகப்படி அத்தொகுதியில் போட்டியிட அதிமுக வாய்ப்பளித்திருக்க வேண்டும்.ஆனால் அதிமுக தோழமைக் கட்சிகளையெல்லாம் தூசுக்கு கூட மதிப்பதில்லை. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரை பொது வேட்பாளராக கருதி ஆதரிக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியும் அதை அவர்கள் ஏற்கவில்லை.

சாதாரண பிரஜைகள் ஏறிய அதே கூண்டில், சிதம்பரமும் ஏறணுமா?

Viuvirupu “தேர்தல் முறைகேடு செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குக்காக நான் கூண்டிலேற மாட்டேன்” என்று கூறி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்திருந்த மனுவை, உயர் நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. இதையடுத்து மாண்புமிகு அமைச்சர் ப.சிதம்பரமும், மற்றைய சாதா இந்தியர்கள் ஏறும் அதே கூண்டில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தாம் வெற்றி பெற்றது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் தம்மை கூண்டில் ஏற்றி விசாரிக்கக் கூடாது என்றே அமைச்சர் ப.சிதம்பரம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

இது கூட தெரியாத Vijayakanth கைகட்டி வாய் பொத்தி கூனிக்குறுகி பேசவேண்டும்


“நாட்டியம் ஆடிய ஜெயலலிதாவுக்கு, ஒரு ஆணைப் பார்த்து பேச தெரியாதா?

Viruvirupu
சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா தமக்கு சவால் விட்டதற்கு, ஒரு ஸ்பெஷல் டச் கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். “ஒரு ஆணைப் பார்த்து ஒரு பெண் எப்படி பேசவேண்டுமோ, அப்படித்தான் சட்டசபையிலும் பேசவேண்டும்” என்பதே விஜயகாந்த் கொடுத்துள்ள ஸ்பெஷல் டச்.
சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, “திராணியிருந்தால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட்டுப் பாருங்கள்” என்று விஜயகாந்துக்கு சவால் விட்டதும், விஜயகாந்த் பதில் கூறும்போது கையை நீட்டிப் பேசினார், நாக்கைத் துருத்திப் பேசினார் என்று காரணங்கள் கூறி, அவரை சட்டமன்றத்தில் இருந்து சஸ்பென்ட் செய்ததும் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இந்த விவகாரம், அதன் தொடர்ச்சி.
சட்டமன்றத்தில் இவர்கள் மோதிக்கொண்டது, வெவ்வேறு தரப்பினருக்கு வெவ்வேறு மாதிரி தெரிந்தது நிஜம். அ.தி.மு.க.-வினருக்கு, விஜயகாந்த் பேசிய பாணி, அ.தி.மு.க.-வினருக்கு ‘தெய்வக் குற்றமாக’ தெரிந்திருக்கும் என்பது உண்மை. காரணம், கட்சியில் சேர்ந்த நாளில் இருந்தே அவர்கள் அப்படி பழக்கப்பட்டு விட்டவர்கள்.

தேர்தல் வழக்கில் மனு தள்ளுபடியெல்லாம் ஒரு பின்னடைவா?: ப.சிதம்பரம்

 Hc Order Not Set Back P Chidambar
டெல்லி: தேர்தல் வழக்கில் தமது கோரிக்கை மனு நிராகரிப்பட்டுவிட்டதாலேயே தமக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம் கடைசிவரை தோல்வி முகத்தில் இருந்து திடீரென வென்றதாக அறிவிக்கப்பட்டார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கையே விசாரிக்கக் கூடாது என்று சிதம்பரம் தொடர்ந்த மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்டது.

மர்ம சந்நியாசி – 2 கற்பனையை மிஞ்சும் உண்மைகதை Bhawalpur Prince
மேஜோ குமார் தனக்குப் பிரியமான ஃபுல்மாலா யானையின் மீது ஏறி வேட்டைக்கு செல்வோரை வழிநடத்திச் சென்றான். மரத்தின் உச்சியில் மறைவான கூடாரம் அமைக்கப்பட்டது. கீழே, புலியை வரவைப்பதற்காக மூன்று மாடுகள் கட்டப்பட்டிருந்தன. கூடாரத்தில் கிச்சனர் துரை துப்பாக்கியும் கையுமாக தயாராக இருந்தார். கூடவே மேஜோ குமார் மற்றும் வேட்டைக்குழுவை சேர்ந்தவர்களும் தயாராக இருந்தனர். ஆனால் புலிதான் வரவில்லை. கிச்சனர் துரை பொருத்து பொருத்துப் பார்த்தார், புலி வருவதாகத் தெரியவில்லை. வேறுவழியில்லாமல், அங்கு அப்பாவியாக வந்த ஒரு மானைச் சுட்டுவிட்டு, தனக்கு இது போதும் என்று புலியைச் சுட்ட பெருமிதத்துடன் விடைபெற்றுக்கொண்டார்.

மத்திய அமைச்சராகின்றார் டி.ஆர்.பாலு?

சென்னை: திமுக சார்பில் மீண்டும் மத்திய அமைச்சராக டி.ஆர்.பாலு பதவியேற்க கூடும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் மிக ரகசியமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகி்ன்றன.
1941 ம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், தளிக்கோட்டையில் பிறந்த டி.ஆர்.பாலு, 1957 ம் ஆண்டு முதல் திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருபவர்.
மிசா காலத்தில் ஒரு ஆண்டு சிறையில் இருந்த அவர், திமுக சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 20 முறைக்கு மேல் சிறை சென்றவர். 1986 - 1992-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

அதுக்குள்ளே என்னை ரேப் பண்ணிக்கோ "தடையறத் தாக்க "

விளிம்புநிலை மனிதர்களின் யதார்த்த வாழ்வை பதிவு செய்யும் உலக சினிமாவெல்லாம் இல்லை. ஹாலிவுட்டுக்கோ, பாலிவுட்டுக்கோ இணையாக தமிழ் திரைப்படங்களை தரமுயர்த்தும் முயற்சியும் நிச்சயமாக இல்லை. படம் பார்ப்பவர்கள் அசந்துப்போய் மூக்கின் மேல் விரலை வைக்கும் பிரும்மாண்ட காட்சிகளும் சத்தியமாக இல்லை. ஆனாலும் மிக முக்கியமான சினிமாவாக பரிணமித்திருக்கிறது தடையறத் தாக்க.
கடைசியாக தமிழில் வெளிவந்த ‘டைரக்டர்ஸ் மூவி’ எதுவென்று பெருமூளையையும், சிறுமூளையையும் ஒருங்கே சேர்த்து கசக்கி நினைவுகூர்ந்தாலும் எதுவும் சட்டென்று நினைவுக்கு தோன்றவில்லை. கொஞ்சம் மெனக்கெட்டு யோசித்தால் மெளனகுரு, நாடோடி, சுப்பிரமணியபுரம் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் சில படங்கள் நினைவுக்கு வருகிறது.

ஹீரோ பற்றி கவலையில்லை - அஞ்சலி!

தமிழில் இரண்டு, தெலுங்கில் ஒன்று என பிஸியான நடிகையாக இருக்கிறார் அஞ்சலி. சமீபத்தில் அஞ்சலி அளித்த பேட்டியில் “ சிறு வயதில் எனக்கு பிடித்த ஹீரோ அமிதாப் பச்சன் தான். இப்போது நான் சந்திக்க விரும்பும் நடிகர்கள் ரஜினி சாரும், அமிதாப் சாரும் தான். 
நடிகைகளில் அனைவரையும் எனக்கு பிடிக்கும். ஆனால் ஸ்ரீதேவி போல் புகழ் பெற வேண்டுமென்பதே என் குறிக்கோள்(இந்தி படத்தில் நடிக்க ஆசை என்பதை வெளிப்படையாக சொல்லலாமே).

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற வீபீஷணர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்!


திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பார்ப்பன மேலாண்மையாளர்களின் அம்பாக - தெரிந்தோ, தெரியாமலோ மாறிவிட்ட சில திடீர்த் தலைவர்கள், அரசியலில் அடிக்கடி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து நிலையான வெற்றியைப் பெற முடியாததோடு, பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டு திணறும் சில ஜாதித் தலைவர்கள், திராவிடர் இயக்க சாதனைகள் ஒன்றுமே இல்லை என்பது போல, நன்றி மறந்து உளறித் திரிகின்றனர்!
இத்தகைய விபீஷணத்திருக் கூட்டத்திற்கு பார்ப்பன ஊடகங்களும் விளம்பரம் தந்து, தூக்கிப் பிடிப்பதன் மூலம், உண்மையான சமூகநீதி, ஜாதிஒழிப்பு, பகுத்தறிவு, பெண்ணடிமை ஒழிப்பு - ஆகிய லட்சியங்களில் ஈடுபாடுள்ளவர்களை திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அழித்து ஒழித்து விடலாம் என்ற நப்பாசை கொண்டு, நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகின்றன!

ஆணாதிக்கக் கற்பனைகள் படைத்தளித்த கடவுள் கற்பனைகள்

கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க...

 - மகிழ்நன் http://www.unmaionline.com/new/
டவுள் கற்பனைதான் எல்லாம் அறிந்த, முழுமை பெற்ற, அன்பால் நிறைந்த என்று கருதப்படும் உங்கள் கடவுள், நீங்கள் நம்பும் கடவுள் மனித இனத்தின் சரிபாதி பங்கான பெண்ணை வெறுப்பதையும், பெண்கள் மீதான வன்மத்தை கக்குவதையும் பாருங்கள். கருஞ்சட்டைக்காரனும், செஞ்சட்டைக்காரனும் பெண்கள் சம உரிமை பெற வேண்டுமென்று பேசும் வேளையில் எல்லாம் வல்ல இறைவனுக்கு பெண்களுக்கு உள்ளமுண்டு, அவர்கள் ரத்தமும், சதையும், உணர்வும் ஊரிப்போன மனிதர்களே என்பதுகூட தெரியாதா?

Solar விமானம் வெற்றிகரமாக மொராக்கோவில் தரையிறங்கியது!

Viruvirupu,

Casablanka, Morocco: A solar energy plane landed in Morocco yesterday (Tuesday), completing the world’s first intercontinental flight. The Solar Impulse took off from Madrid at 0322 GMT on Tuesday and landed at Rabat’s International airport after a 19-hour flight.

The Solar Impulse project began in 2003 with a 10-year budget of €90m.”The flight was absolutely wonderful but I almost did not enjoy it because I told myself that Andre and I have the responsibility to bring this aircraft to Morocco,” the pilot said.

நம்மூரில் மின் பற்றாக்குறையை சமாளிக்க சோலார் எனர்ஜி (சூரிய சக்தி) சாதனங்களை பயன்படுத்த முயன்று கொண்டிருக்க, நேற்று (செவ்வாய்க்கிழமை) சோலார் எனர்ஜியில் இயங்கும் விமானம், தனது முதலாவது இன்டர்கன்டினென்டல் பயணத்தை முடித்துக்கொண்டு, மொரக்கோவில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.

நேரு மொட்டை?ராமஜெயம் கொலை இறுதிக்கட்டம்

திருச்சி, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு திடீரென மொட்டை அடித்துக் கொண்டதால், ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகள் பிடிப்பட்டு விட்டதாக, தி.மு.க.,வினரிடையே பரபரப்பான தகவல் பரவியது.
திருச்சி, தி.மு.க., மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தம்பி ராமஜெயம், 2012 மார்ச் 29ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். கொலைக் குற்றவாளிகளை கண்டறிய, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், ஏழு தனிப்படை அமைக்கப் பட்டன.திருச்சியில் வெகுகாலம் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம், சிறப்பு(!) விசாரணைக்காக கன்னியாகுமரியில் இருந்து வரவழைக்கப் பட்டார். தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள், கூலிப்படைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

புதன், 6 ஜூன், 2012

பிரபலங்கள் அரசிடம் பெறும் சலுகைகள் அதிகம் அநியாயம்

எதற்காக மக்கள் பணத்தை வீணாக்குகின்றனர்? தேவவிரதன், அடையாறு, சென்னையிலிருந்து எழுதுகிறார்:
ஐந்தாவது முறையாக, உலக செஸ் சாம்பியன் ஆன விஸ்வநாதன் ஆனந்திற்கு, இரண்டு கோடி ரூபாயை, பரிசாக, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவது நல்லது தான்.ஆனால், நம் நாட்டில், விளையாட்டு வீரர்களையும், திரை உலக நட்சத்திரங்களையும், அளவுக்கு மீறி சலுகைகள் கொடுத்து கொண்டாடுகிறோமோ என்று தோன்றுகிறது.மேற்கு வங்க முதல்வர் மம்தா, ஐ.பி.எல்., கிரிக்கெட் வீரர்களுக்கும், திரை நட்சத்திரங்களுக்கும் தங்கச் சங்கிலி கொடுத்து, பெரிய விழா எடுத்து, கொண்டாட்டம் நடத்தி இருக்கிறார். இந்த அழகில், இந்த பெண்மணி, தன்னை மிகப்பெரிய ஏழை பங்காளர் என்றும், எளிமையின் சிகரம் என்றும் கூறிக் கொள்கிறார்.

Citizen of Spain ஆனந்துக்கு கோடிகள் வழங்கிய கோடீஸ்வரி

செஸ் சாம்பியன் ஆனந்த்துக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகை வழங்கினார் ஜெ.


 Viswanathan Anand Get Rs 2 Crore Cash Award Jayalalitha
சென்னை: உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இன்று தலைமை செயலகத்திற்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துகளை பெற்று கொண்டார். அப்போது தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.2 கோடி பரிசுத் தொகையை முதல்வர் ஜெயலலிதா, விஸ்வநாதன் ஆனந்த்திற்கு அளித்தார்.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய செஸ் வீரரான விஸ்வநாதன், இஸ்ரேல் வீரர் போரிஸ் ஜெல்பாண்டை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
5வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் விஸ்வநாதன் ஆனந்த்திற்கு இந்திய அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என்று பலத்தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை பாராட்டி, தமிழக அரசு தரப்பில் ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். உலக சாம்பியன் பட்டம் வென்றதற்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு விஸ்வநாதன் ஆனந்த் நேற்று தனது  தற்போதைய  நாடான ஸ்பெயினில் இருந்து   இந்திய  திரும்பினார்.

இந்த படம் நன்னா போகலையாமே? சேறு வீசும் திரை வியாபாரிகள்

வயசுப் பிள்ளைகளோடு பெற்றோரும் பார்க்க வேண்டிய வழக்கு எண் : 18/9

 சமா.இளவரசன்

தப்பித்தவறி ஒரு நல்ல படம் வந்துவிட்டால், அதை மக்கள் ரசித்து வெற்றி தந்துவிட்டால், அதைத் தொடர்ந்து அது டிரண்ட் என்று உருவாகி எங்கே நமது கமர்சியல் படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் எப்போதுமே தமிழ் சினிமா வியாபாரிகளுக்கு உண்டு. திடீரென்று நடிகர்கள் நல்ல படங்களில் நடிக்கத் தொடங்கி அது தொடர்ந்து விட்டால் என்னாவது? நமக்குத் தெரிந்த மசாலாக்களை எப்படி மக்கள் மண்டையில் அரைப்பது என்ற கவலையெல்லாம் அவர்களை வாட்டி வதைக்கும். அதனால் தான் 1987களில் ரஜினியும், கமலும் நல்ல படங்களைத் தேடி கொஞ்சம் நகர்ந்த பொழுதும், பின்னாளில் விக்ரம் அது போல் செய்யத் தொடங்கியபோதும் தெளிவாக அவர்களை கமர்சியல் பக்கம் நகர்த்தி வைத்துக் கொண்டது. இந்தச் சதிச் சிந்தனையின் கோரத்தை நம்மால் வழக்கு எண் 18/9  திரைப்படத்தின் மீதான கருத்துப் பரப்பலில் புரிந்துகொள்ள முடிந்தது. மாற்றுசினிமாவை நோக்கிய தடத்திலும், மக்கள் ரசிக்கத்தகுந்த சில இனிப்புகளைத் தடவி தெளிவாக மக்களைச் சேரும் விதத்தில் வழங்குவதிலும், அதனையும் மிகக் குறைந்த செலவில் படமாக்கிக் காட்டுவதிலும் திறமையோடிருக்கும் பாலாஜி சக்திவேலின் மீதும், அவரது படைப்புகளின் மீதும் அத்தனை வன்மம் இருக்கிறது திரைப்படத்தைக் கலையாகப் பார்க்காத தமிழ் சினிமா வியாபாரிகளுக்கு!
 இந்த படம் நன்னா போகலையாமே சேறு வீசும் திரை வியாபாரிகள் 

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இப்படம் ஒன்னும் விக்கல போலிருக்கே..., தேறலையாமே, படு மோசமா இருக்காம்.. சுத்தமா தேறலையாம் செகண்ட் ஹாஃப்.. காசை வீணடிச்சிட்டாங்க என்றும், படம் வெளிவந்து மக்கள் வரவேற்பைப் பெற்ற பிறகும் கூட அதெல்லாம் ரொம்ப நாள் ஓடாதுங்க... என்றும் இவர்கள் செய்த பிரச்சாரத்தை தேர்தல் பிரச்சாரத்தில் கூடப் பார்க்க முடியாது. இந்த வியாபாரிகள் வீசிய சேறுகளையெல்லாம் பற்றி கவலைபடாமல் தன் பாணியில் பிறருக்கும் வழிகாட்டும் வண்ணம் படம் தந்திருக்கிறார் வழக்கு எண் 18/9 -ன் இயக்குநர்.

ராசா தமிழ்நாட்டுக்குப் போகலாம் நீதிமன்றம் அனுமதி

 Raja Can Visit Tamil Nadu Says Cbi Court
டெல்லி: முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராசா தமிழ்நாட்டுக்குப் போக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதான முதல் நபர் ராசா. ஆனால் கடைசி நபராக சமீபத்தில்தான் அவர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார். ஆனால் தமிழ்நாட்டுக்குப் போகக் கூடாது என அவருக்கு சிபிஐ கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் டெல்லியில் உள்ள மத்திய தொலைத் தொடர்புத்துறை அலுவலகத்துக்கும் அவர் போகக் கூடாது என்றும் நிபந்தனை உள்ளது.இந்த நிலையில், நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராசா.

Hyundai ஹூண்டாய் ஹவாசின்: ஆறு தொழிலாளிகள் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஹூண்டாய்-நரபலி
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தொழிலாளர்கள்
சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்து போன சிரமன், திலோத் மத்வான். இதில் சிரமனின் வயது 16 மட்டுமே.
ஸ்ரீபெரும்புதூர் அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் இரத்தச் சகதியில் கிடத்தப்பட்டிருந்த நான்கு உயிரற்ற உடல்கள். சென்னை அரசு பொதுமருத்துவமனையின் சவக்கிடங்கில் வெள்ளைத்துணி போர்த்தப்பட்டிருந்த இரு உடல்கள். அதே மருத்துவமனையின், தீவிர சிகிச்சைப் பிரிவில் நாசி வழியே வழிந்தோடும் இரத்தத்தை துடைத்தெடுக்கக்கூடத் துணை எவருமின்றி, சுயநினைவற்றுப்போன நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இரு உடல்கள். விபத்து சிகிச்சைப் பிரிவின் படுக்கையொன்றில் கிடத்தப்பட்டிருக்கும் ஒர் உயிரிருள்ள உடல்.

35 லட்சத்தில் 2 கழிப்பறைகளை புதுப்பித்த திட்டக்குழு

டெல்லி: தினமும் ரூ.28 செலவு செய்ய முடிபவர்கள் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களாகிவிடுவார்கள் என்று கூறிய திட்டக் குழு தற்போது ரூ.35 லட்சம் செலவில் 2 கழிப்பறைகளை புதுப்பித்துள்ளது.
டெல்லி யோஜனா பவனில் உள்ள திட்டக் குழு அலுவலகத்தில் உள்ள 2 கழிப்பறைகள் ரூ.35 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்து இந்த தகவலை பெற்றுள்ளார்.
தினமும் ரூ.28 செலவு செய்ய முடிபவர்கள் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களாகிவிடுவார்கள் என்று திட்டக் குழு கூறியது சர்ச்சையை எழுப்பியது. இந்நிலையில் திட்டக் குழு அலுவக கழிப்பறையை புதுப்பிக்க ரூ.35 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அந்த 2 கழிப்பறைகளை புதுப்பிக்க ரூ.30,00,305ம், கதவில் பாதுகாப்பு கருவி பொருத்த ரூ. 5,19,426ம் செலவு செய்யப்பட்டுள்ளது.

கோட்டு சூட்டு கனவான்களின் எளிய வாழ்க்கை

  "திட்டக் கமிஷனைப் பொறுத்த வரை கிராமப் புறங்களில் வாழும் ஒருவர் நாளைக்கு ரூ 22.50க்கு மேல் செலவழித்தால் அவர் ஏழை என்று கருதப்படமாட்டார். ஆனால், அதன் துணைத் தலைவர் சென்ற ஆண்டு மே மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையே மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களில் அவரது ஒரு நாளைக்கான சராசரி செலவு ரூ 2.02 லட்சம்." - படம் www.thehindu.com
  கோட்டு-சூட்டு-கனவான்களின்-எளிய-வாழ்க்கைஎளிய வாழ்க்கையின் அவசியம் பற்றிய பிராணாப் முகர்ஜியின் வேண்டுகோளில் இருந்த உருக்கம் நாட்டில் கண்ணீரை பெருக்கியது. பிரதமர் மன்மோகன் சிங் கடந்த காலத்தில் எளிமைக்காக மன்றாடிய போது அவரது சகாக்கள் அதை படைப்பாக்க உணர்வுடன் தழுவி கொண்டார்கள்.

  ஜெயலலிதாவுக்காக விடியோவை தேடி அலைந்த போலிஸ்  சசிகலா மீண்டும் கார்டனுக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்று ஜெ.வின் உண்மை விசுவாசிகள் தீர்க்கமாக நம்பிக் கொண்டிருந்த வேளையில்தான், ஒருநாள் அந்த நம்பிக்கையில் மண் விழுந்தது... மீண்டும் கார்டனுக்குள் என்ட்ரி ஆனார் சசி. முன்னதாக சகோதரிகள் மாறி மாறி உருக்கம் மேலிட அறிக்கைகள் விட்டு உறவுகளை புதுப்பிக்கும் செமி பைனலுக்குள் நுழைந்தது தனிக்கதை. கார்டனில் சசி நுழைந்ததும் அவர் பெயரில் ஓர் அறிக்கை வெளியானது. "உறவினர்கள் ஒருவ ரோடும் தொடர்பு இல்லை... அவர்கள் அக்கா (ஜெ.)வுக்கு துரோகம் செய்து விட்டார்கள். அவர்களை மன்னிக்கவே முடியாது' என்ற ரீதியில் இருந்தது அந்த அறிக்கை.

  போலீசார் என்கவுண்டர் செய்யபோகிறார்கள் நடராஜன் பொங்குகிறார்

  ''சிங்கத்தைச் சீண்டிவிட்டது மாதிரி நடராஜன் சிலிர்த்து எழ ஆரம்பித்து இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிரான யுத்தத்தைத் தொடங்கி விட்டார் நடராஜன் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். போலீஸுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட நடராஜன், இப்போது மனித உரிமை கமிஷனின் கதவைத் தட்டிவிட்டார். 4-ம் தேதி, காவல்துறைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் நடராஜன் புகார் அளித்தார். புகார் கொடுத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், 'கடந்த பிப்ரவரி 18-ம் தேதி டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் வந்த 15-க்கும் மேற்பட்ட போலீஸார் என் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து உள்ளே நுழைந்து என்னைத் தாக்கினார்கள். ஏன், எதற்கு என்றுகூட எனக்குப் புரியவில்லை. அதன்பின், என்னை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றி, செங்கிப்பட்டி, வல்லம் கிராமங்களுக்கு இடையே உள்ள காட்டுப் பகுதிக்குக் கொண்டுசென்றனர். அங்கு என்கவுன்ட்டர் செய்து என்னைக் கொல்லப்போவதாகப் பேசிக்கொண்டனர். அதன் பிறகு, எங்கிருந்தோ வந்த உத்தரவை அடுத்து என்னை தஞ்சாவூர் கொண்டு சென்றனர்.

  இளையராஜா:இசை எளிமையான விஷயம் அதைச் சிக்கலாக்கியது நாமே  Music Is Simple We Made It Complicated Ilayaraaja
  இசை எளிமையான விஷயம்தான். ஆனால் அதைச் சிக்கலாக்கியது நாமே என்றார் இசைஞானி இளையராஜா.இளையராஜாவின் பால்நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழாவில், அனைத்து சிறப்பு விருந்தினர்களும் பேசி முடித்த பிறகு, இசைஞானி வழங்கிய ஏற்புரை:
  "ஏற்புரை என்றால்.. இங்கே என்னவெல்லாம் நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வது. சின்ன வயதில் வாத்தியார், ‘முட்டாளே... அறிவுகெட்டவனே...' என்றார். அது பிடித்ததோ பிடிக்கவில்லையோ ஏற்றுக்கொண்டேன். வீட்டிலும் அண்ணன் மிகவும் திட்டுவார்கள், ‘கருவாயா, மடையா, அறிவிருக்கா உனக்கு?' என்று. ஏற்றுக்கொண்டேன். இன்று இங்கும் நிறைய விஷயங்கள் நடந்தன. எப்போதும் புகழ் மொழிகள் மனதுக்கு இதமாகத்தான் இருக்கும்.

  நிர்மலா பெரியசாமி:தந்தையால் உயிருக்கு ஆபத்து என்று அழுதுகொண்டே இருந்தார் பார்கவி

  சென்னை: பார்கவி தனது தந்தை குறித்தும், அவர் செய்ததாக கூறப்படும் 3 கொலைகள் குறித்தும் உறுதிப்படுத்திய பின்னர அந்த டாக் ஷோவை ஒளிபரப்பினோம் என்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் நடத்துனர் நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், பார்கவி நிகழ்ச்சியி்ன்போது தனது தந்தை குறித்து அச்சம் தெரிவித்தபடியே இருந்தார். ஏன் பயப்படுகிறாய் என்று அவரிடம் நான் தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டபோதுதான் அவர் கண்ணீர் விட்டு அழுதபடி தனது தந்தை மூன்று கொலைகளைச் செய்ததாக கூறினார். அதேபோல தன்னையும், தனது காதலரையும் அவர் கொலை செய்து விடலாம் என்றே தான் அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.
  பார்கவி சொன்ன தகவலால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இதையடுத்து அவர் சொல்வது உண்மையா என்பதை அறிய எங்களது நிறுவ அதிகாரிகள் சிலரை பார்கவியின் ஊருக்கு அனுப்பி வைத்தோம். லாவண்யா, சேகர், சிலம்பரசன் ஆகியோர் காணாமல் போனது உண்மைதான் என்பது அப்போது எங்களுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து நிகழ்ச்சியை மே 28ம் தேதி ஒளிபரப்பினோம் என்றார் நிர்மலா பெரியசாமி

  போலீஸ் பிடியில் ராமஜெயம் கொலையாளி?-வெளியில் சொல்ல முடியாத காரணத்திற்காக கொலை??

   Ramajayam Killer Police Custody
  திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி கே.என். ராமஜெயம் படுகொலை வழக்கில் குற்றவாளி போலீஸ் பிடியில் உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட திமுக செயலாளருமான கே.என்.நேருவின் தம்பியும், பிரபல தொழில் அதிபருமான ராமஜெயம் (40) கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி காலை வாக்கிங் சென்றபோது கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.
  ராமஜெயம் படுகொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் ராமஜெயம் சம்பந்தப்பட்ட பலரிடமும், பிரபல ரவுடிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால் குற்றவாளி குறித்த தகவலோ அல்லது அதற்கான தடயத்தையோ போலீசாரால் நெருங்க முடியவில்லை.

  ZEEtamil மகள் என்றும் பாராமல் உல்லாசத்திற்கு அழைத்தவர் எனது தந்தை-முருகனின் மகள் பார்கவி

  http://www.deccanchronicle.com/channels/nation/south/triple-murder-comes-light-tv-show-002
  விழுப்புரம்: எனது தந்தை முருகன் மோசமான நடத்தை கொண்டவர். பெற்ற மகள் என்று கூடப் பார்க்காமல் என்னை பலமுறை உல்லாசத்திற்கு அழைத்தவர் என்று குமுறியபடி கூறியுள்ளார் விழுப்புரத்தில் நண்பர், அவரது மகள், மருமகன் ஆகியோரைக் கொலை செய்து புதைதது சிக்கியுள்ள முருகனின் மகள் பார்கவி.பார்கவிதான், முருகனை ஜீ தமிழ் டாக் ஷோ மூலம் அம்பலப்படுத்தியவர். தனது தந்தை குறித்து அவர் போலீஸாரிடம் கூறுகையில்,
  எனது தந்தை முருகன் நல்லவர் கிடையாது. அவர் பலமுறை மகள் என்றும் பாராமல் என்னையே உல்லாசத்திற்கு அழைத்தவர்.

  A.K.Anthoni next president?ஏ.கே.அந்தோணி ஜனாதிபதி?

  ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஹமீது அன்சாரி, பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் தற்போது ஏ.கே.அந்தோணியின் பெயரும் அடிபடுகிறது.
  காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நேற்று முன்தினம் டில்லியில் நடந்தது. தமிழகத்திலிருந்து சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அமைச்சர் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கோபிநாத் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.

  அனுராதா ரமணன் :ஜெயேந்திரர் ஆபாசமாக அறுவறுப்பான சிரிப்புடன் Flash Back


  சில ஆண்டுகளுக்கு முன் சங்கர மடத்திலிருந்து என்னை அழைப்பதாக சங்கர மடத்திற்கு நெருக்கமான ஒரு பெண் என்னை அழைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார்களை தெய்வமாக நினைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவள் நான். எனவே தெய்வமே என்னை அழைத்துள்ளதாக எனது தந்தை சந்தோஷப்பட்டார். உடனே செல்லுமாறு என்னைஅனுப்பி வைத்தார். நானும் மிகவும் சந்தோஷமான மன நிலையில் அந்தப் பெண்மணியுடன் காஞ்சிபுரம் சென்றேன். சங்கர மடம் சார்பில் தொடங்கப்படவுள்ள அம்மா என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றுவது தொடர்பாக என்னுடன் ஜெயேந்திரர் பேசினார். அவர் பேசியவற்றில் சிலவற்றை எனது குறிப்பேட்டில் நான் எழுதிக் கொண்டிருந்தேன். தற்செயலாக நான்நிமிர்ந்து பார்த்தபோது, என்னை அழைத்து வந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் ஜெயேந்திரர். அவர்கள் இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு செய்த அசிங்கம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அதிலிருந்து நான் சுதாரிப்பதற்குள், ஆன்மீகவாதியாக பேசிக் கொண்டிருந்த ஜெயேந்திரர் ஆபாசமாக பேசத்தொடங்கினார். அறுவறுப்பான சிரிப்புடன் அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் மிகவும் அநாகரீகமானவை. அந்தப் பெண்மணியைப் போலவே என்னையும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதிர்ந்து போன நான் சட்டென எழுந்து விட்டேன். சீ, நீயும் ஒரு மனுஷனா என்று வேகமாக கேட்டவாறே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். உடனே அதிர்ந்த ஜெயேந்திரர், முன் கூட்டியே இவளிடம் (என்னிடம்) எல்லாவற்றையும் கூறவில்லையா என்று அந்தப் பெண்ணிடம் ஆவேசமாக கேட்டார். அவர் இல்லை என்றவுடன், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் அந்தப் பெண்மணியை திட்டினார். பின்னர் அதே வேகத்தில் என்னிடம் திரும்பி, என்னுடன் ஒத்துழைத்துப் போனால் நல்லது.

  Niththi:போதை ஊசி போட்டு காஞ்சி பெரியவரை கொன்றார்.

  உழைத்து, உழைத்து ஓடாய் போனவர்கள் வாழும் நாட்டில். வறுமைக்கு வாழ்க்கைப் பட்டவர்களை பெரும்பான்மையாக கொண்டு வாழும் நாட்டில், இன்னும் மக்களை சேரியில் இருத்தி வைப்பதும், வாயில் மலம் திணிப்பதும், மலம் அள்ளுவதற்கென்றே ஒரு குறிப்பிட்ட சாதியார்களை மட்டும் கட்டாயமாக பணிக்கும் இந்த நாட்டில் கோடியாய் பணப்பரிமாற்றம் நடக்கிறது, மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்டு யார் கண்காணிப்புமின்றி கைமாறுகிறது. இதைக் குறித்து தட்டிக்கேட்க வக்கில்லாதவர்கள், சைவ வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்தான் மடத்திற்கு வரவேண்டும், நித்தியானந்தா சைவவேளாளர் இல்லை என்கிறார் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் கணபதி சந்தானம். இன்னொருவர் நித்தியானந்தா மண்டையிலிருந்து மயிரை மழிக்கவில்லை. ஆகையால் அவர் தகுதியற்றவர் என்கிறார்.
  இந்துக்கள் அனைவரும் ஒரே சமூகம் என்பதுபோலும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை கயமைத்தனத்தோடு மறைத்துவிட்டு கிறித்துவ, இஸ்லாமியர், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக வன்மத்தை வளர்த்தே அரசியலில் சுகம் காண துடிப்பவர்கள், புராணங்கள்  முழுக்க ஆபாச குப்பைகளை வைத்துக் கொண்டும், ஒழுக்க கேட்டையே பண்பாடாய் வைத்துக் கொண்டு ஊருக்கு ஒழுக்கம் கற்பிக்க முனையும் இந்து மதவெறி அமைப்புகளுக்கு நித்தியானந்தா தொண்டையில் சிக்கிய முள்ளைப்போல பெரிய இடைஞ்சலாக இருந்திருக்க வேண்டும். பெரிய மனப்போராட்டத்தை தந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அயோத்தியில் இராமர் பாலம் கட்டும் அதிஉயர்(!) பிரச்சினையை பற்றி பேசிய வாய்கள், மதுரை ஆதீனமாக மிகப்பொருத்தமாக நித்தியானந்தா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு  இத்தனை  எதிர்ப்புகள் பதிவாகியிருக்காது.