மின்னம்பலம் - Kavi : விவாகரத்து மனுவை முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா வாபஸ் பெற்றிருக்கும் நிலையில், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேவைப்பட்டால் எதிர்காலத்தில் புதிய மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
1998ஆம் ஆண்டு முதல்வர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சங்கீதா லண்டனில் வசித்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சனி, 8 ஆகஸ்ட், 2026
சங்கீதா விஜய் மீதான விவாகரத்து மனுவை மீளப்பெற்றார்
'வில்லங்க’மான பி.ஆர். சுந்தர் கைது.. கடுப்பான நீதிமன்றம்.. ‘திருவிளையாடலின்’ பின்னணி?
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026
பாஜ கூட்டணியில் மீண்டும் தேமுதிக? மோடி, அமித் ஷாவுடன் சுதீஷ் 'திடீர்' சந்திப்பு
dinamalar.com : சென்னை : டில்லியில் அடுத்தடுத்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை, தேமுதிக பொருளாளரும், அக்கட்சி எம்பியுமான சுதீஷ், சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில், பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த காலங்களில், பாஜ மற்றும் அதிமுக கூட்டணியில், தேமுதிக இடம் பெற்று, தேர்தல்களை சந்தித்தது. இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், அதிமுக- பாஜ கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.
திமுக வழங்கிய ஒரு ராஜ்யசபா 'சீட்' வாயிலாக, தேமுதிக பொருளாளர் சுதீஷ், எம்பியானார். சட்டசபை தேர்தலில் பத்து தொகுதிகள் ஒதுக்கியதில், தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா மட்டும் வெற்றி பெற்றார்.
வியாழன், 6 ஆகஸ்ட், 2026
ஸ்டாலினை சந்தித்த 2 மதிமுக எம்.எல்.ஏ.க்கள்! வைகோ மீது குற்றச்சாட்டு!
மின்னம்பலம் - Mathi : மதிமுக எம்.எல்.ஏ.க்களான திமு ராசேந்திரன், சீர்காழி செந்தில்செல்வன் ஆகியோர், “அமைச்சர் பதவி தருவதாக சொன்ன ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் தாங்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் திமுக எம்.எல்.ஏ.க்களாகவே தொடருகிறோம்”g என்று அறிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை திமு ராசேந்திரன், சீர்காழி செந்தில்செல்வன் ஆகியோர் இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
சவுக்கு சங்கரின் 13 வயது மகன் உயிரை மாய்த்து கொண்டார் - நடந்தது என்ன?
தினமலர் : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன், தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Savukku Shankar Son : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன், விழுப்புரத்தில் உள்ள மரக்காணத்தில், 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், இவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில், யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். சவுக்கு சங்கருக்கும், அவரது மனைவி ஆர்த்தியும் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு தியோ ஆழிசை என்கிற மகன் இருக்கிறார். இவர், தன்னுடைய தாத்தா-பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இவர், மரக்காணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
புதன், 5 ஆகஸ்ட், 2026
முதலில் வளாகமாவது வரட்டும் ஒத்துழைக்காவிடினும் இடையூறு வேண்டாம்- யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா கருத்து
![]() |
![]() |
ராதா மனோகர் : யாழ்ப்பாணத்தில் பல்கலை கழகம் அமைய கூடாது என்று எஸ் ஜெ வி செல்வநாயகம் தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராடினர். அவரின் கைங்கரியத்தால் அவர் ஆக்டிவாக இருக்கும் வரையில் அது அமையவில்லை.
1970 தேர்தலில் ஸ்ரீ மாவோ அம்மையார் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததும்தான் இவரின் கொட்டம் அடங்கியது.
செல்வநாயகத்தின் கடிதங்களுக்கு பதில் கூட ஸ்ரீ மாவோ அம்மையார் போடுவதில்லை
அந்தளவு செல்வநாயகத்தின் கபட அரசியலை அவர் புரிந்து கொண்டிருந்தார்
ஏற்கனவே திரு அல்பிரட் துரையப்பாவுக்கு உறுதி அளித்த படி
1974 இல் யாழ்ப்பாண பல்கலை கழக வளாகத்தை நிறுவினார்
அப்போது கூட இது வெறும் வளாகம்தானே இதிலென்ன இருக்கிறது என்று இதை மலின படுத்தும் முயற்சியில் தமிழரசு கட்சியினர் விஷ பிரசாரம் செய்தவண்ணம் இருந்தனர்
அவர்களுக்கு திரு அல்பிரட் துரையப்பா அவர்கள் கொடுத்த பதிலடிதான் இந்த பேட்டி
ஈழநாடு 26 - 6 - 1974 யாழ்ப்பாணம்
திரு அல்பிரட் துரையப்பா :
முதலில் வளாகமாவது வரட்டும் ஒத்துழைக்காவிடினும் இடையூறு வேண்டாம்
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026
சூடானில் அரங்கேறி வரும் இனப்படுகொலைகள் - ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிதி, ஆயுத உதவிகளோடு
ilakkiyainfo.com : தற்போது ஈரானுக்கு எதிரான இஸ்ரே லிய--அமெரிக்க காட்டுமிராண்டி போரின் மீது உலகக் கவனம் திசை திரும்பியுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி மற்றும் ஆயுத உதவிகளோடு சூடானில் அரங்கேறி வரும் இனப் படுகொலைகள் காரணமாக சூடான் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்ளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
ஏப்ரல் 2023 இல் மோதல்கள் மூண்டதில் இருந்து 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள். அண்டை நாடான சாட், எகிப்து மற்றும் தெற்கு சூடானுக்கு தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியன்களுக்கும் அதிகமாகும்.
திங்கள், 3 ஆகஸ்ட், 2026
உலகின் முதல் பாசிச அரசை நிறுவிய விளாடிமிர் லெனின் - இதைத்தான் முசோலினியும் ஹிட்லரும் பின்பற்றினார்கள்
Santhirapalan Saminathar :1918/01/18 உலகில் முதலாவது பாசிச அரசு சோசலிச அரசு என்னும் பெயரில் லெனினால் பிரகடனப்படுத்திய நாள். தாமே முதல்முதலாக நடத்திய பொதுத் தேர்தலில் தாம் படு தோல்வி அடைந்ததும் ஆயுத முனையில் தள்ளுபடி செய்து பாசிச சர்வாதிகாரத்தை அரங்கேற்றியநாள். மற்ற கட்சிகளை தடைசெய்து துரோகிகள்,எதிர்புரட்சியாளர், முதலாளித்துவ வாதிகள் என கொன்று ஒழிக்க தொடங்கிய நாள். லெனினிடம் இருந்து கற்றுக்கொண்ட இந்த பாசிச சர்வாதிகாரத்தையே முசோலினி கையில் எடுத்தார். அதில் இருந்து பின்னர் கிட்லர் கையில் எடுத்தார். உலகம் முழுவதும் பாசிச சர்வாதிகாரத்தின் முன்னோடி லெனின் ட்ரொஸ்கி என்றால் மிகை ஆகாது. அதை பின்தொடர்ந்து ஸ்டாலின் மிகத் தீவிரமாக பாசிசத்தை அமுல் படுத்தினார். ஸ்டாலின் கை ஓங்கியதும் லெனின் ட்ரொஸ்கியின், ஜனநாயக குரல் சந்தர்ப்பவாதம் ஆகும். அவர்கள் ஏற்படுத்திய பாசிச சர்வாதிகாரத்துக்கு கட்சிக்குள் முதல் பலியானவர்கள் லெனினும் ட்ரோஸ்கியும் தான்.
பிரஸ்னேவ் சோவியத் ஒன்றியத்தின் தலைவர்களில் மிகவும் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்களில் ஒருவர். அவர் 1964 முதல் 1982 வரை நாட்டை வழிநடத்தினார்.
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ அதிரடி குற்றச்சாட்டு
thentamil.com -Su.tha Arivalagan : சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் கொளத்தூர் தொகுதி எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அத்தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எந்திரங்களின் செயல்பாடு குறித்து திமுக தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகளும் சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஸ்பெயினின் எல்லையை உடைத்துக்கொண்டு அடாவடியாக நுழையும் மொரோக்கோ முஸ்லிம்கள்
hindutamil.in -போத்தி ராஜ்.க : வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா தீவுக்கு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடல்வழியாக அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஸ்பெயின் அரசு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது.
2021-ம் ஆண்டில் இதேபோன்ற அகதிகள் ஊடுருவலை ஸ்பெயின் அரசு சந்தித்தது. ஆனால், முன் எப்போதும் இல்லாத இந்த அளவு அகதிகளின் சட்டவிரோத வருகையைப் பார்த்து திகைத்து நிற்கிறது.
இதனால், எல்லைப் பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படைகளை ஸ்பெயின் நிறுத்தியுள்ளது.
தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிகள்! கப்பல்ல வேலைனு சொன்னதை நம்பி.. திமுக மூவ்.. விஜய்க்கு சிக்கல்!
tamil.oneindia.com -Rajkumar R :சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கி இருக்கின்றன. ஆளும் கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும் என ஆசைப்பட்டு அதிமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் புலம்பித் தவிக்கிறார்கள். விஜயை பார்க்க முடியவில்லை, உள்ளூர் நிர்வாகிகளும் மதிக்கவில்லை என பெரும்பாலான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கலைஞர் பற்றி அவதூறு பேசினால்..’ அமைச்சர் நிர்மல் குமாருக்கு திமுக பரந்தாமன் கடும் எச்சரிக்கை!
மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : தமிழ்நாட்டை, காவிரி டெல்டா விவசாயிகளை அவமானப்படுத்திவிட்டார் விஜய், இன்னும் சொல்லப்போனால் விவசாயிகளின் துரோகி விஜய். விவசாயிகளின் துரோக ஆட்சி இந்த தவெக ஆட்சி என திமுக கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஆகஸ்ட் 2) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் கலைஞர் தலைமையிலான ஆட்சிக் காலத்திலும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

