சனி, 7 ஜனவரி, 2017

ஸ்டாலின் : காலில் விழும் அடிமைத்தனத்துக்கு முடிவு கட்டுவோம்! உண்மையான அன்பு போதும்.

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், காலில் விழும் கலாச்சாரத்தை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.";கடிதத்தில்,
”கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! உங்களில் ஒருவன் எழுதும் அன்பு மடல். கலைஞர் அவர்களின் வாழ்த்துகளுடன் பேராசிரியர் அவர்களின் முன்னிலையில் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் உங்களின் பேராதரவுடனும் நல்லெண்ணத்துடனும் கழகத்தின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன். நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. காரியமாற்ற விரைந்து வா என அவை ஒவ்வொரு நிமிடமும் அழைக்கின்றன. எனினும், உங்களைப் போன்றவர்களின் உள்ளன்பும், அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு பல கட்சிகளின் தலைவர்கள், முன்னணியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அறிஞர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், ஊடகத்தினர் எனப் பலரின் நேசமும் பேரன்பும் நேரிலும் அலைபேசியிலும் வாழ்த்து மழைகளாகப் பொழிகின்றன. பணிச்  சுமைகளுக்கிடையில் உங்களின் அன்புமழையில் நனைவது மனதுக்கு இதமளித்து, சுமையைச் சுகமாக்குகிறது.

கம்பத்தில் கட்டி வைத்து கொழுத்தப்பட்ட தம்பி சதீஷ் ... சாதிவெறியர்களின் தமிழ்பற்று? தூ !

கொலை சாதி மனநோயாளிகள்.. மாட்டு வாலை முறுக்கத் துடிக்கும் தமிழர்கள்.. அதன் மூத்திரத்தை குடித்தாலும், சாணியைத் தின்றாலும் திருந்த மாட்டார்கள். .. கொ;லை செய்வது, திருடுவது, தீயிடுவது, கொள்ளையடிப்பது, உயர்ந்த சாதி என்று நம்பும் மனநோய் ஆகியன மட்டும் தான் தமிழர் பண்பாடா என்று தெரியவில்லை..?; ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடினார் என்கிற காரணத்திற்காக விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பொியபாபு சமுத்திரம் புது காலனியை சோ்ந்த தம்பி சதிஷ் 24 அவா்களை சில ஜாதி வெறிபிடித்த மனநோயாளிகள் கம்பத்தில் கட்டி வைத்து தீயிட்டு கொளுத்தி கொலை செய்திருக்கிறார்கள்.
தமிழ் உணர்வோடு பொங்கும் பொங்கிகள் யாரும் இதற்கு எதிராக குரல் கொடுக்கவோ கண்டிக்கவோ இல்லை. கடல்தாண்டி யாராவது தமிழ் பேசினால் இவர்களுக்குப் பொங்கும் தமிழன் உணர்வு.. சீ.. சீ.. எனும் அளவிற்கு பொங்கும். தூ..தூ..
சன்னா   முகநூல் பதிவு

சசி நடா to News 7 Tv – 200 கோடி, Thanthi Tv – 400 கோடி, Satyam Tv – 150 கோடி... இதெல்லாம் உண்மையா?

சின்னம்மா அவர்கள் அம்மா ஜெயலலிதா மறைவிற்கு பின்னால் சமீபத்தில் உதவி செய்த ஏழைகள் விபரம் News 7 Tv – 200 கோடி, Thanthi Tv – 400 கோடி, Satyam Tv – 150 கோடி. Pudyathalaimurai tv – 230 கோடி, செங்கோட்டையன்- 60 கோடி, மதுசூதனன்- 120 கோடி, சரஸ்வதி – 23 கோடி. மேலும் அடுத்த வேளை சோத்துக்கு கஷ்டப்படும் அதிமுக அமைச்சர்கள் வட்டம், மாவட்டம் இளைஞரணி நிர்வாகிகளின் கைச்செலவுக்கு தலா 50 கோடி வீதம் 4500 கோடி உதவி செய்துள்ளார். இந்த மாதிரி பரம ஏழைகளுக்கு நம் சின்னம்மா உதவி செய்துள்ளார்.எனவே மேற்கண்ட பரம ஏழைகள் இந்த சின்னம்மாவின் உதவியின் பலனாக இவர்களை இத்தனைநாள் பெற்று வளர்த்து ஆளாக்கிய நம் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவின் பெயரை இன்றிலிருந்து மனம் மற்றும் வாயிலிருந்து அழித்து மறந்துவிட்டு, இன்று முதல் “சின்னம்மா”புகழ் பாடுவார்கள். எனவே, உண்மையான அம்மாவின் பிள்ளைகள் இந்த ” புதிய சின்னம்மா பஜனை கோஷ்டி” நபர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் உங்களிடம் வோட்டு கேட்டு வரும்போது நீங்களும் மன சாட்சிப் படி வாக்களியுங்கள். இவ்வாறு சமூக வளைதளங்களில் வெளிவந்து கொண்டுள்ளன. லைவ்டே

மு.க. அழகிரி மீண்டும் தி.மு.க.வில் இணைவாரா? தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

Alagiri remember school daysசென்னை சேத்துபட்டு எம்.சி.சி.பள்ளியில் 1967-ம் ஆண்டு படித்த மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பில், திமுக முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி கலந்து கொண்டு, தனது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
பள்ளிப் பருவம் என்பது ஒவ்வொரு வாழ்விலும் வசந்த காலம் எனலாம். 'மீண்டும் பள்ளிக்கு போகலாம்... நம்மை நாம் அங்கு தேடலாம்...' எனும் தங்கர் பச்சானின் 'பள்ளிக்கூடம்' படத்தில் வரும் இந்த வரிகளில் ஒளிந்து கிடப்பது, நம் ஒவ்வொருவரின் பள்ளி பருவ நினைவுகளும் தான் அந்த வகையில், சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி. பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1967- ஆம் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு மகிழ்ந்தனர்.

நாஞ்சில் சம்பத் மீண்டும் அதிமுகவுக்கு ..அரசியல்ல (விபசாரத்தில) இதெல்லாம் சகஜமப்பா?

நாஞ்சில் சம்பத் :‘மீடியாவுல நான் பேசிட்டேன். இப்போ மீண்டும் அதிமுகவுக்கு திரும்பி வந்தா எல்லோரும் தப்பா பேசுவாங்களே என்று பம்மினார், அதற்கு நடராசன் :… ‘எவ்வளவு நாள் பேசுவாங்க. எல்லாம் ஒரு நாள். அதுக்குப்பிறகு வேற வேலையை பார்க்கப் போயிடுவாங்க? நீங்க எதிர்பார்க்காத பெரிய ஒரு பரிசு தருவோம் என்றார் .   வாயெல்லாம் பல்லாக நாஞ்சில் சம்பத்து தனது அரசியல் விபசாரத்துக்கு அதிமுகவே சிறந்த இடம் மீண்டும் ஜோதியில் ஐக்கியம் ஆனார் . வைகோவுடன் தொழிலில் போட்டி போடுவார்? 
அலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “திடீரென பல்டி அடித்துவிட்டார் நாஞ்சில் சம்பத். சசிகலா தலைமையை ஏற்க முடியாது எனச் சொல்லிவந்தவர் இன்று, திடீரென சசிகலாவை சந்தித்தார். சசிகலாவுக்காக தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாகவும் சொல்லியிருக்கிறார். கடந்த 3ஆம் தேதி காலை அதிமுக-விலிருந்து கொடுக்கப்பட்ட இன்னோவா காரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார். அதற்கும் அவர் நேரில் செல்லவில்லை. தனது நண்பர் மூலமாக அந்தக் காரை கொடுத்து அனுப்பினார். சொந்த ஊரிலிருந்து கிளம்பி வந்தவர்,

மின் உற்பத்தியாளர்களுக்கு (அதானி அம்பானி) வசதியான உதய் மின்திட்டம் தமிழ்நாட்டின் தலை மீது போடப்பட்டது

புதுடில்லி : உதய் மின் திட்டத்தில் தமிழகம் இணைகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 9ம் தேதி டில்லியில் கையெழுத்ததாக உள்ளது. ‛உதய்' மின் திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 'உதய்' (உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ்) திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், 2015 செப்., வரை, மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. முதலில் எதிர்ப்பு: உதய் திட்டத்துக்கு முதலில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து கடந்த ஜூலையில், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய மின் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜெயாவும் சசியும் கங்கை அமரனிடம் இருந்து பறித்த 22 ஏக்கர் பண்ணை வீடு .. விகடன் விடியோ!



அதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தை நடத்திச் செல்வதற்கு என்ன தெரியவேண்டுமோ அது சசிகலாவுக்குத் தெரியும்.

சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி மா.மி இ.தெ பு.த ஜெயலலிதா, 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டு விட்டார். ஏ-1 சந்தனப்பேழையில் உறங்கும் நிலையில் ஏ. -2 வான சசிகலா, அதிமுக-வின் பொதுச்செயலர் ஆகி விட்டார். ஏ-3 யான இளவரசிக்கும் “சின்ன சின்னம்மா” என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவிட்டன. ஏ-4 ஆன அம்மாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஏற்கனவே சின்ன எம்ஜியார் என்பதால் அவரைப் பற்றித் தனியே சொல்ல வேண்டியதில்லை.
சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்னால், 1996 ஜுலையில், ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளான வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொமு ஆகிய அமைப்புகள் நடத்திய “விநோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம்” இப்போது நினைவுக்கு வருகிறது. 1996 தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, ஊழல் வழக்கு பதிவு செய்து ஜெயலலிதாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்யப் போவதாகக் கூறியது. ஜெயா சசி கும்பலை தண்டிப்பதோ அவர்களுடைய திருட்டுச் சொத்துக்களை பறிமுதல் செய்வதோ, சட்டபூர்வமான வழியில் சாத்தியமில்லை என்ற அரசியல் உண்மையை எடுத்துக் காட்டியது அந்தப் போராட்டம்.
அந்த காலகட்டத்தில் நாடு முழுவதும்  ஓட்டுக்கட்சிகளில் செல்வாக்கு செலுத்த தொடங்கியிருந்த புதிய வகை கிரிமினல் கும்பல்களை, திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் – என்று அடையாளப்படுத்தியிருந்தோம். கள்ளச் சாராயப் பேர்வழிகள், ஒயின்ஷாப் ஓனர்கள், கந்து வட்டிக்காரர்கள், லாட்டரி சீட்டு வியாபாரிகள், கட்டைப் பஞ்சாயத்து ரவுடிகள் உள்ளிட்ட ஒரு கூட்டம் திபுதிபுவென்று அரசியலில் நுழையத் தொடங்கியிருந்த காலம் அது.

முதலமைச்சர் பதவியை ஏத்துக்கிறது என்னோட பத்து வருடக் கனவு... சொன்னது சின்னம்மா !

அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டு விட்டு, போயஸ் தோட்டத்துக்குத் திரும்பிய சசிகலா, அங்கு தன் உறவினர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.அப்போது நடந்தது என்ன என்பது குறித்து நடராஜனுக்கு வேண்டியவர்கள் நம்மிடம் விவரித்தனர்."கார்டனில் நடராஜன் சகஜமாக உலவு கிறார். நடராஜன், திவாகரன், தினகரன், டாக்டர் வெங்கடேஷ் உட்பட்ட குடும்ப உறுப்பினர்களோடு நடராஜன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஓ.பன்னீர் மீது அதிருப்தியையும் சந்தேகத்தையும் சசிகலா வெளிப்படுத்தியிருக்கிறார். ’பொதுச்செயலாளர் பதவிக்கும் பன்னீர் ஆசைப்பட்டார். அவர் காட்டுறது பணிவல்ல, நடிப்பு. மத்திய அரசோடு நாம இணக்கமா நடந்துக்கிறதுன்னு வாக்குறுதி தந்திருக்கோம். ஆனாலும் அவங்க, பன்னீரை முழு கண்ட்ரோலில் வச்சு நமக்கு குடைச்சல் கொடுப்பாங்க. எனக்கு எதிரா எதிர்ப்புகளும் விமர்சனங்களும் அதிகரிச்சுகிட்டு வருது. இதைக் கட்டுப்படுத்த உங்களால முடியல’ என சசிகலா கூறியிருக்கிறார். அவர் அதிருப்தியா இப்படிச் சொல்லவும், கூட இருந்த உறவினர்களும் நடராஜனும் பன்னீரை நாங்க கவனிச்சுகிட்டுதான் இருக்கோம்னு சொல்ல, முதலமைச்சர் பதவியை ஏத்துக்கிறதுன்னு உறுதியானாங்க, சசிகலா. இது என்னோட பத்து வருடக் கனவுன்னு அவங்க சொன்னதும்தான் உறவினர்கள் எல்லாரும் நிம்மதியானாங்க..” என தோட்டத்து சங்கதியைச் சொன்னார்கள்.  நக்கீரன்

ஆறு பேர் நீக்கம்- 3 புதிய அமைச்சர்கள்!

ஜெயலலிதாவைப் போலவே பொட்டு வைத்து, கொண்டை போட்டுவரும் சசிகலா, அவரைப் போலவே ஒரு கருத்துக்கணிப்பை சசிகலா நடத்தியிருக்கிறார். அதில் அவருக்கு பாதகமான முடிவுகளே தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் வெளிப்பட்டுள்ளன என்கிறார்கள். இந்நிலையில் அமைச்சரவையிலும் மாற்றம் நடக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களில் ஆறு பேரை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக மூன்று பேரை அமைச்சராக ஆக்கவும் சசிகலா முடிவுசெய்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சுகாதாரத் துறை விஜயபாஸ்கர், சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் நீக்கப்பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மூன்று பேரின் விவரங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. புதிதாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தில்பாலாஜி மற்றும் அண்மையில் தஞ்சை இடைத்தேர்தலில் வென்ற ரங்கசாமி ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.  நக்கீரன்

பாஜக திட்டம்- திமுக கைவிரிப்பு...திமுகவுக்கு தூது.. 5 அமைச்சர்கள் உட்பட 25 எம்.எல்.ஏ.க்கள்

முதலமைச்சர் பதவியில் பன்னீரைத் தக்கவைக்க பாஜக தரப்பு, திமுக தரப்பிடம் பேச முயன்றது. சசிகலா தரப்புக்கு ஆட்சி போய்விடக்கூடாது என 28 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை வாங்கிவைத்தது. மேலும், தி.மு.க. வசம் 5 அமைச்சர்கள் உட்பட 25 எம்.எல்.ஏ.க்கள் சிக்கியிருக்கிறார்கள் என தகவல் அறிந்து, ஓ.பி.எஸ்.சின் முதலமைச்சர் பதவியை காலிசெய்ய சசிகலா தரப்பு முயற்சித்தால், தி.மு.க.வின் துணையோடு பன்னீரைப் பாதுகாக்க தி.மு.க. தரப்பிடம் காய்நகர்த்தினார், பாஜக தலைவர் அமித்ஷா. பா.ஜ.க.வின் திட்டத்துக்கு அறிவாலயம் ஒப்புக்கொள்ளவில்லை. பா.ஜ.க பிடியிலிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்ககளும் நழுவிவிட்டனர். முதலமைச்சர் பதவியை அடைய சசிகலா வேகம் காட்டிய சூழலில்தான், அமைச்சர் வெங்கய்யாநாயுடு மூலமாக, மத்திய அரசுக்கு அனுசரணையாக இருப்போம் என மோடியிடம் சொல்லவைத்தார் நடராஜன்.நக்கீரன்

குத்துச்சண்டை.. 9 ஆம் வகுப்பு மாணவி பலி! கடும் வெயிலில் நடந்த போட்டி! தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் 14 வயதுக்குட்பட்டோருக்கான குத்துச் சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் சோரீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவி மாரீஸ்வரி கலந்து கொண்டார். போட்டியின் போது அளிக்கப்படும் 30 வினாடி ஓய்வின் போது மாரீஸ்வரி மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.< கடும் வெயிலில் போட்டி நடந்ததால் அதிக களைப்பின் காரணமாக அந்த மாணவி உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. போட்டிக்கு முன்பு நல்ல உடல் தகுதியுடன் அவர் இருந்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லைவ்டே

தமிழக அரசு சார்பில் கடிதம் ... பன்னீர்செல்வம் - சசிகலா போட்டா போட்டி?

அதிமுகவில் அனல் பறக்கும் நீயா நானா? ஓபிஎஸ் – சசிகலா இடையே கடும் கடிதப் போர்! பிரதமர் மோடிக்கு முதல்வர் பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும் தனித்தனியாக கடிதம் எழுதி வருவது அதிமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடுவே போட்டா போட்டி நடந்து வருகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக, தனது மறைவு வரை ஜெயலலிதாவே பதவி வகித்து வந்தார். இதனால், ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்காக, அவர் பிரதமருக்கு கடிதம் எழுதும்போதெல்லாம், ஒரு அறிக்கையோடு விஷயம் முடிந்துவிடும். முதல்வர் என்ற அடிப்படையிலான கடிதம் மட்டுமே பிரதமருக்கு செல்லும். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் இரட்டை அதிகார மையங்கள் உருவாகியுள்ளன.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு: பெங்களூருவில் இன்று தொடங்குகிறது

குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்கிறார்கள்
பெங்களூருவில் இன்று 14-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு தொடங்குகிறது. இம்மாநாட்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவழியினர் பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளியுறவுத் துறை மற்றும் கர்நாடக அரசின் சார்பாக 14-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு பெங்களூருவில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டின் முதல் நாளில் வெளிநாடு வாழ் இந்திய இளைஞர் மாநாடு நடக்கிறது.

இங்கிலாந்து ராணுவத்தால் நேதாஜி கொல்லப்பட்டார் புதிய புத்தகத்தில் திடுக்கிடும் தகவல்

கொல்கத்தா, இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர், 1945–ம் ஆண்டு ஆகஸ்டு 18–ந்தேதி தைபேயில் நடந்த விமான விபத்தில் இறந்தார் என்று கூறப்பட்டு வருகிறது. நேதாஜி வாழ்க்கை வரலாறு பற்றிய ரகசிய ஆவணங்களை கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டபோதும் அவர் எப்படி இறந்தார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. > இதுபற்றி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.டி. பக்ஷி, “போஸ்: தி இந்தியன் சாமுராய்–நேதாஜி அண்ட் தி ஐ.என்.ஏ. மிலிடரி அசஸ்மெண்ட்“ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– ஜப்பானுக்கான முந்தைய சோவியத் ரஷிய தூதர் ஜேக்கப் மாலிக் உதவியுடன் டோக்கியோவில் இருந்து நேதாஜி சைபீரிய பகுதிக்கு தப்பிச் சென்றார்.

அகிலேஷ்- காங்கிரஸ் கூட்டணி- திடீர் திருப்பம்! உபியில் காங்கிரசும் .... சாமஜவாதியும் ... நம்ம வாயால ஏன் சொல்லணும்? விதி வலியது!


சமாஜ்வாதி கட்சிக்குள் நடந்து கொண்டிருக்கும் மோதலில் அகிலேஷ் யாதவ் கைதான் ஓங்கியிருக்கிறது. தந்தை முலாயம் பிரிவால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு கட்ட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அகிலேஷ் யாதவ்.
உத்திரபிரதேச முஸ்லீம் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற முலாயம் தனித்து நின்றால் தனக்கு முஸ்லீம் வாக்குகள் கிடைக்காமல் போகும் எனக் கருதும் அகிலேஷ் யாதவ் அந்த இழப்பை சமன் படுத்தும் விதமாக, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க நினைக்கிறார். காங்கிரஸும் சமாஜ்வாதியும் கூட்டணி அமைக்கும் பட்சத்தில், உத்திர பிரதேசத்தின் 403 சீட்களில், 300 -க்கும் மேற்பட்ட சீட்களை அக்கூட்டணி பெறும் என்பதுதான் இக்கூட்டணிக்கான அடிப்படை காரணமாக இருக்கிறது. கட்சிக்குள் இப்போது ஏற்பட்டிருக்கும் பிளவுக்கு முன்னால் காங்கிரஸ் கூட்டணியை முலாயம் விரும்பவில்லை.காங்கிரஸ் கட்சியுடன் எந்த விதமான தொடர்பும் சமாஜ்வாதி கட்சிக்கு இருக்கக் கூடாது என அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

"சசிகலா முதல்வர்" ... "சசிகலா கைதி இலக்கம்" ... இரு படங்களும் வெளியிட தயார் நிலையில் .. திகில் சோகம் குழப்பம் கண்ணீர் ரேஸ் கழுத்தறுப்பு மண்சோறு... முடிவு?

முதல்வராக பதவியேற்க இருக்கும் சசிகலா அ.தி.மு.க வின் முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்,பிக்கள் கூட்டத்தை நாளை 8-ஆம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் கூட்ட இருக்கிறார். வருகிற 12-ஆம் தேதி முதல்வராக பதவியேற்றுக் கொள்ளலாம் என்று முடிவான நிலையில், “12 -ஆம் தேதி பதவியேற்றுக் கொள்ளலாமா” என்று கவர்னர் மாளிகையைக் கேட்டுள்ளார்கள். ஆனால் எந்த ஒரு பதிலையும் கவர்னர் மாளிகை அனுப்பவில்லை.

1991 - 96 ஜெயலலிதா - சசிகலா தூத்துக்குடியில் மட்டும் அடித்து பறித்த நிலம் 969 ஏக்கர் .. உரிமையாளர்கள் கோரிக்கை

ஜெயலலிதாவும் - சசிகலாவும்  வாங்கி குவித்த நிலங்கள் திரும்ப கிடைக்குமா என விவசாயிகள் ஏக்கம் திருநெல்வேலி: ஏக்கருக்கு, 2,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங் கள், ஜெ., இறந்ததை அடுத்து, தங்களுக்கு திரும்ப கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.< கடந்த 1991 - 96 அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா பெயர்களில், தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டன. அவர்கள் வாங்கி குவித்த சொத்து பட்டியலில், துாத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகே சேரகுளம், வல்லகுளம், மீரான்குளம், அரசர்குளம் உள்ளிட்ட இடங்களில், 969 ஏக்கர் நிலங்களும் அடக்கம். வானம் பார்த்த பூமியான
இந்த பகுதியில், ரோட்டின் இருபுறங்களிலும், வாங்கி குவிக்கப்பட்ட இந்த நிலங்கள், தற்போது, வேலியிடப்பட்டு தரிசாக கிடக்கின்றன.  நில அபகரிப்பு போலீஸ் பிரிவு ஒன்ன அ தி மு க அரசு ஆரம்பிச்சுதே ? திருடனே போலீஸ் ஸ்டேஷன் ஆரம்பிச்ச மாதிரி இல்ல இருக்கு ? அடித்து பிடுங்கிய நிலங்கள்தான் தரிசாக கிடக்கிறது என்றால் அந்த அக்கிரமக்காரர்கள் வாழ்வும் தரிசாக போய்விட்டதே .விதி வலியதுதான்

ஜோதிமணி போலீசில் புகார் ...பாஜகவினரின் ஆபாச சமுக வலை தாக்குதல்...


சென்னை: மோடியின் செல்லாத ரூபாய் நோட்டுகள் அறிவிப்பை எதிர்த்து முகநூலில் பதிவு செய்ததை அடுத்து சமூக வலைத்தளத்தில் ஆபாச தாக்குதலுக்கு ஆளானதால் இந்த புகாரை அளித்துள்ளார் ஜோதிமணி.
ஜோதிமணி அகில இந்திய இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராக பணியாற்றியவர். தன்னுடைய 22வது வயதில் ஊராட்சி ஒன்றியக்குழு செயலர் ஆனவர். பண மதிப்பு நீக்க நடவடிக்கை, சகிப்புத்தன்மை, காஷ்மீர் தாக்குதல் என மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.; முகநூலில் பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய பாஜக தலைவர் அமித் ஷா, தமிழக பாஜக தலைவர் சகோதரி தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோருக்கு ஒரு திறந்த அறிக்கை ஒன்றினை ஜோதிமணி வெளியிட்டு இருந்தார்.

நானா படேகர் ...சினிமாவில் ஒரு ஒரிஜினல் ஹீரோ ,... விவசாயிகளின் தற்கொலையை தடுக்க போராடுகிறார் .. கட்டவுட் கழுதைகளே கொஞ்சம் பாருங்க.


பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தும், விவசாய நிலங்களைப் அபகரித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்தும், விவசாயங்களை வளர்த்தெடுக்காமல், அவர்களை கொன்றழித்து வேடிக்கைப்பார்க்கும் அரசு, தன்னை ஆள்வதற்கான வக்கற்ற அரசென்றே பிரகடனப்படுத்திக் கொள்ளவேண்டும்.அதைவிட்டு சிறப்பு பரிசென அவர்களின் இல்லாமையை அரசியலாக்ககூடாது. தமது குடிமக்களை எந்தளவிற்கு தரம் உயர்த்தியுள்ளீர்கள் என்ற அளவீடு உங்கள் பொங்கல் பரிசிலே தெரிகிறது. ஒரு அரசிற்கு இதைவிடவும் அசிங்கமும்,அவமானமும் வேறெதுவுமில்லை. மக்களுக்கு என்ன செய்யனும் என்ற அறிவும் அக்கறையும் உங்களிடம் மயிரளவும் இல்லை. கலைஞனான #நானா_படேகர் தான் சம்பாதிப்பதையெல்லாம் துவண்டு கிடக்கும் விவசாயிகளுக்கு தந்து (#மஹாராஷ்டிரா ) அவர்களை மீட்டு மகிழும், இந்த மீட்பனிடமாவது பாடம் கற்றுக்கொள்ளுங்கள்,அரசியல்வாதிகளே. இல்லையெனில் சிறப்பு பரிசு தரும் உங்களுக்கு விரைவில் செருப்புகள் பரிசாய் வரலாம்.
தமிழகத்தைப் போல நடிகர் நடிகைகளை கொண்டாடும் ஒரு நிலப்பரப்பை இந்தியாவிலேயே எங்கும் காண முடியாது. ஆனால்  நானா படேகர்  போல ஒருவர் தமிழ்மண்ணில்  உருவாகவில்லையே, ஏன்?

வெள்ளி, 6 ஜனவரி, 2017

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எந்த நேரத்திலும் வரலாம் ... கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விட்டது?

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடப் போகிறார்கள் என டெல்லியில் இருந்து வந்த தகவலால் சசிகலா பீதியில் ஆடிப்போயுள்ளாராம். அதிமுக தலைமை அலுவலகத்தில் 6 நாட்களில் 50 மாவட்ட செயலர் ஆலோசனை கூட்டத்தில் சசிகலா உற்சாகமாக கலந்து கொண்டார். ஜெயலலிதா பாணியில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்த நிர்வாகிகளை தக்க வைக்க முயற்சித்தார்.ஆனால் மதிய உணவுக்காக போயஸ் கார்டனுக்குப் போன சசிகலா ரொம்பவே அப்செட்டாகிவிட்டாரம். இது தொடர்பாக விசாரித்த போது, டெல்லியில் இருந்து வந்த தகவல்தான் அப்படி அப்செட் ஆகி அவரை பீதியில் ஆட வைத்துவிட்டதாம்.அதாவது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்திருக்கின்றனர்.இதனால் எந்த நேரத்திலும் இந்த தீர்ப்பு தேதியை உச்சநீதிமன்றம் பட்டியலிடக் கூடும். இந்த தகவல்தான் சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டதாம். முதல்வர் பதவியை குறுக்கு வழியில் கைப்பற்றி அமர்ந்துவிடலாம் என துடித்துக் கொண்டிருந்த சசிகலா இப்போது பீதியில் ஆடிப் போயுள்ளாராம். லைவ்டே

மன்னார்குடி பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் ... காலை பிடித்து எழுந்தது ... அதனாலேயே வீழ்ந்தது?

1 ஜெயலலிதா சிறை சென்றால் முதல்வர் நாற்காலியில் யார் அமர்வது” என்று ரகசியமாகச் சதி செய்த காரணத்தினால் சின்னம்மாவை போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் அம்மா
sasi-revised-post2 மிச்சமிருக்கும் நான்கரை ஆண்டுக்காலமும் எடைக்கு எடை பொன் போன்றது என்பதையும், இதுதான் அதிமுக-விற்கு வந்தனோபசார கடைசி ஆட்டம்  
3 கடந்த காலச் செயல்பாட்டை காட்டிக் கதறுகிறார் பையனூர் பங்களாவைப் பறிகொடுத்த கங்கை அமரன்.
முதல்வர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி என்ற கேள்வி எழுப்பினால், அத்தகுதியை ஜெயலலிதா பெற்றிருந்ததாக ஒப்புக் கொண்டவர்களாகி விடுவோம். தகுதி பற்றிய கேள்வியை ஜெயாவோடு நிறுத்தினால், எம்ஜிஆரின் தகுதியை நாம் அங்கீகரித்ததாக ஆகிவிடும்.>மன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை அதிகாரப் பூர்வமாக கைப்பற்றிவிட்டது.

அத்வானி பிரதமர் ஆவதற்கு ஜனாதிபதி உதவ வேண்டும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா. மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில், சிட்பண்ட் மோசடியில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் இருவர் கைது ஆனதையடுத்து மத்திய அரசின் மீதான தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை மேலும் வலுவாக்கினார். இப்போது பிரதமர்
மோடியை அனுப்பிவிட்டு வேறு ஒருவர் தலைமையில் தேசிய அரசு அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். இதுபற்றி மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:– பிரதமர் மோடி தலைமையில் அனைத்து நிறுவனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. திட்டக் கமி‌ஷனை கூட அவர்கள் கலைத்துவிட்டார்கள். இது மிகவும் ஆபத்தான விளையாட்டு. பிரதமர் மோடி காளிதாஸ் போல நடந்து கொள்கிறார்... அதாவது அவர் உட்கார்ந்து இருக்கும் மரக்கிளையையே வெட்ட முயற்சிக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் வேறொரு பா.ஜனதா தலைவர் தலைமையில் தேசிய அரசு அமைக்கப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு விடை கொடுத்து அனுப்புங்கள்.

தமிழக விளையாட்டு வீரர்கள் மீது டெல்லி விளையாட்டு வீர்கள் தாக்குதல்!


டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய கையெறி பந்து போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்களை, டெல்லி விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தேசிய கையெறி பந்து போட்டியின் கால் இறுதிச் சுற்றில், சத்திஸ்கர் அணிக்கு ஆதரவாக நடுவர்கள் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட்டுள்ளனர். இதை தமிழக அணியினர் தட்டிக் கேட்டனர். அப்போது, அணியின் பயற்சியாளருக்கும் விளையாட்டு ஒருங்கினைப்பாளர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மைதானத்தில் இருந்த தமிழக வீரர்களைத் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக அணியின் பயிற்சியாளர் ஆசீர், “ 61 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த கையெறி பந்து போட்டியில், தொடக்கத்திலிருந்தே தமிழக அணிக்கு எதிராக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட்டனர்’’ என தெரிவித்துள்ளார்.

குறைந்த மழையளவு: வரலாறு காணாத வறட்சியை நோக்கித் தமிழகம்…

thetimestamil : சரவணன் சந்திரன் சரவணன் சந்திரன்:  நம்மை மிரட்டப் போகிற, வதைக்கப் போகிற மிகப் பெரிய பிரச்சினை இது. ஏதோ இதில் விவசாயிகள் மட்டும்தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். நமக்கேன் கவலை என்றெல்லாம் ஒதுங்கிப் போக முடியாது. எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் போதெல்லாம் அடையாள ரீதியிலாக ஒரு அமைச்சரவை கூட்டத்தை மட்டும் போட்டு விட்டு, மத்தியானத்திற்கு மேல் போயஸ் கார்டனில் அட்டெண்டன்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் தீவிரத்தை உணர்ந்தார்களா என்று தெரியவில்லை? கொத்துக் கொத்தாக விவசாயிகள் செத்துக் கொண்டிருப்பதால், இது ஏதோ காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மட்டும் அனுபவிக்கப் போகிற துயர் என்கிற மாதிரியான பொதுப் புரிதல் இருக்கிறது. அது தவறு என்பதைத்தான் சொல்லப் போகும் புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன.

டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை ரூ.25 கோடி அபராதம்! உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி. தினகரன். இவரது வங்கி கணக்கிற்கு 1995, 1996–ம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் ஆனது. இதையடுத்து அவர் மீது 1996–ம் ஆண்டு அன்னியசெலாவணி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு குறித்து அவரிடம் மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர், அவருக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமலாக்கத்துறை மேல்முறையீட்டு அதிகாரிகளிடம் டி.டி.வி. தினகரன் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள், ரூ.25 கோடி அபராதத் தொகை நிர்ணயித்தது சரிதான் என்று முடிவு செய்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டி.டி.வி. தினகரன் மேல்முறையீடு செய்தார்.

நடிகர் ஓம் பூரி காலமானார் இந்திய படவுலகை மட்டுமல்ல .City of Joy போன்ற ஹாலிவூட் படங்களிலும் நடித்து உலகபுகழ் பெற்ற கலைஞன்

City of Joy அவலம் நிறைந்த ஒரு சேரியில்...அழகான மனிதம்...வெடித்த ஒரு புரட்சி! Patrick Swayze, Om Puri and Shabana Azmi.
City of Joy ஒரு இளம் அமெரிக்க டாக்டருக்கு  ஆபரேஷன் தியேட்டரில் கிடைத்த ஒரு அதிர்ச்சி! ஒரு   சிறுவனுக்கு ஆபரேஷன் செய்தார் ஆனால் அவன் கண்முன்னேயே இறந்துவிட்டான். சோகம் தாங்க முடியாத அந்த டாக்டர் (Patrick Swayze) ஒரு ஆத்மீக தேடலை நோக்கி இந்தியா வருகிறார், அதுவும் கல்கத்தாவுக்கு.
அங்கே அவர் கண்டது சந்தித்தது.....ஆத்மீகம் தேடியவருக்கு கிடைத்தது ஏமாற்றம் ..துன்பம்... துரோகம்.. வறுமை.
அவரை சிந்திக்கவே விடாமல் விதி  கல்கத்தாவின் சேரியில் கொண்டு போய் சேர்த்துவிட்டது.
கையில் உள்ள காசையும்  பாஸ்போர்ட்டையும் பறித்துக்கொண்டு அடித்து நொறுக்கியது குண்டர் கூட்டம்.
பிகாரில் கந்துவட்டி காரரிடம் தனது நிலத்தை பறிகொடுத்துவிட்டு பஞ்சம் பிழைக்க வந்த ஹன்சாரியும் அவனது மனைவியும்  மட்டுமே கூக்குரல் கேட்டு ஓடி வந்தனர்.
நினைவு மயங்கி இருந்த டாக்டர் மக்சை தங்களது குடிசைக்கு தூக்கி சென்று ஒரு வெள்ளைக்கார நர்சிடம் Joan Bethel சேர்த்தனர்.

ஜெயலலிதாவின் 306 சொத்துக்களில் 100 முதல் 200 சொத்துக்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றும் இன்றும் நாளையும் தொடரும் என்று பதிவான 'ஜெ'யின் சொத்து விவரங்களை படிப்பது கிடக்கட்டும்,, தொகுத்ததே ஒரு சாதனைதான் ஜெ அதிமுகவில் இணைவதற்கு முன்பிருந்த சொத்துக்கள் மட்டுமே திரைத்துறையில் சம்பாதித்த கணக்கில் கொள்ளலாம்,, மற்றவை 'ஒரு ரூபாய்' சம்பளத்தில் மட்டுமே வாங்கப்பட்டிருக்கும்... தண்டனை கொடுப்பார்களா இல்லையோ,, அனைத்தையும் பறிமுதல் செய்து நாட்டுடமை ஆக்கினால் இந்திய தண்டனை சட்டத்திற்கு கொஞ்சமாவது மரியாதை கிடைக்கும்,,, கிடைக்குமா என்பதல்ல,,, தேவையா என்றும் பலர் எண்ணுகிறார்களே,, அதுதான் கவலைக்குரியது ..

101. பையனுார் கிராமம், சர்வே எண். 379/2ல் மற்றும் 379/3 ஆகியவற்றில் 4.23 ஏக்கர் நிலம்.
102. பையனுார் கிராமம், சர்வே எண். 381/9 மற்றும் 392/2 ஆகியவற்றில் 51 சென்ட் நிலம்.
103. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.
104. ஊரூர் கிராமம், பரமேஸ்வரி நகர், டவுன் சர்வே எண். 2 மற்றும் 18ல் 4,565 சதுர அடி மனையும் கட்டடமும்.
105. சேரகுளம் கிராமம், சர்வே எண். 471 மற்றும் பல சர்வே எண்களில், 73 ஏக்கர் 90 சென்ட் நிலம்.
106. சேரகுளம் கிராமம், 406/2 மற்றும் பல சர்வே எண்களில், 69.78 ஏக்கர் நிலம்.
107. சேரகுளம் கிராமம், சர்வே எண். 486 மற்றும் பல சர்வே எண்களில், 60 ஏக்கர், 65.5 சென்ட் நிலம்.
108. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 823/9 மற்றும் பல சர்வே எண்களில், 42.31 ஏக்கர் நிலம்.

ஆட்சியை வாங்கிய மணல்! 500 அடியில் ஒரு அங்குலம் தண்ணீர் மட்டுமே இருக்கிறது


மின்னம்பலம்:  நீலகண்டன் 90களின் நடுப்பகுதியில் ஒய்வு பெற்றார். அதன் பிறகு, தனது பூர்விகமான செட்டிப்பாளையத்துக்கு திரும்பினார்.
பொருளாதார பேராசிரியரான இவர், தனது வாழ்வின் பெரும்பகுதியை சென்னையிலேயே கழித்தார். முதலில் ஆசிரியராகவும், பிறகு‘சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி’ கல்வி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
பிறகு அவர் தனது கிராமத்துக்கு புறப்பட்டார். கரூரில் அவரது குடும்பத்துக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் அவர்கள் கொய்யா, சப்போட்டா, மா, தென்னை போன்ற மரங்களை பயிரிட்டிருந்தனர். எனவே நீலகண்டன் விவசாயத்துக்கு திரும்பலாம் என எண்ணினார்.
20 வருடங்களுக்குப் பிறகு அவர் அம்முயற்சியில் தோல்வியைத் தழுவினார். அவர் தன்னிடமிருந்த 40 ஏக்கரில் 30 ஏக்கரை விற்றார்.

தீபா மெதுவாக ஆனால் அழுத்தமாக அரசியலை ஆரம்பித்து விட்டார்!


மின்னம்பலம்:  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமை ஏற்க வேண்டும் என விரும்பும் அதிமுகவினர் சென்னை தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு வருகிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது கவலையோடு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த தீபா பின்னர் அமைதியாகி விட்டார். அதன் பின்னர் அமைதியாக இருந்த தீபா ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அரசியல் விருப்பம் தொடர்பாக சில பேட்டிகள் அளித்தார். பின்னர் அமைதியாகி விட்டார்.
ஆனால், தமிழகத்தின் பல இடங்களில் ஜெயலலிதா தீபா பேரவை துவங்கப்பட்ட நிகழ்வும், அதையொட்டி அதிமுக தொண்டர்கள் திநகரில் உள்ள தீபா வீட்டிற்கு வருவதும் அவரது வீட்டிற்கு வெளியில் நின்று தீபாவைப் புகழ்ந்தும், சசிகலாவை இகழ்ந்தும் கோஷமிடுவதாக சில நிகழ்வுகள் நடந்து வந்தன. சில நாட்களுக்கு முன்னர் கூட அப்படி வந்தவர்களை நான் அரசியலுக்கு வருவேன். இப்போது நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பி வருகிறார் தீபா.

சசிகலா முதல்வர் ... பன்னீர்செல்வம் சபாநாயகர் ..




மின்னம்பலம்:  பொதுச்செயலாளர் ஆகி விட்ட சசிகலாவை முதல்வராக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நடராஜன் குழுவினர். சூட்கேஸ் ஜோதிடரின் கணிப்புக்காக காத்திருக்கும் அதே நேரம்.பன்னீர் செல்வத்தை அதிமுகவின் எந்த இடத்தில் வைப்பது என்ற ஆலோசனையில் தீவிரமாகியிருக்கிறார்கள் சசிகலாவின் கணவர் நடராஜன், தினகரன், திவாகரன் , ஆகியோர். ஓ.பன்னீர் செல்வத்திற்கு முதல்வர் பதவி இல்லை என்று முடிவெடுத்த இவர்கள். பன்னீர் பொருளாதார ரீதியாகவும் நல்ல நிலைக்கு வந்து விட்டார்.கட்சியிலும் ஆங்காங்கே மாவட்டம் தோறும் அவருக்கு நம்பிக்கையான ஆட்களை உருவாக்கி விடுவார்.அது பின்னாட்களில் நமக்கு சங்கடங்களை உருவாக்கும் அதனால் பொருளாளர் பதவியில் இருந்தும் பன்னீரை விலக்கி வைப்பதுதான் நம் எதிர்காலத்திற்கு நல்லது என முடிவெடுத்திருக்கிறார்கள். பன்னீருக்கு ஜெயலலிதா வழங்கிய அதிமுக பொருளாளர் என்ற கட்சிப் பதவியையும் பறிக்க முடிவு செய்துள்ளார்கள்.

வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன்.. திமுக புதிய இளைஞரணி தலைவர் !

தி.மு.க இளைஞரணித் தலைவராகவும், பொருளாளராகவும் இருந்து வரும் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகி விட்ட நிலையில், அவர் வகித்து வந்த இளைஞரணித்தலைவர் என்ற பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இப்போது திமுக இளைஞரணியின் துணை செயலராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அந்தப்பதவி வழங்கப்படுமா? என்ற பேச்சுகள் எழுந்த நிலையில்,முந்தைய கருணாநிதி தலைமையிலான திமுக அரசில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவரும், திமுக இளைஞரணியின் இணை செயலாளருமான 55 வயதாகும் வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்படுகிறது. மின்னம்பலம்

தினகரன் அன்னிய செலாவணி மோசடி ரூ25 கோடி அபராதம்... அப்பீல் மீது இன்று தீர்ப்பு!!


dinakaranசென்னை: அன்னிய செலாவணி மோசடியில் (ஃபெரா வழக்கு) ஈடுபட்டதற்காக அமலாக்கத்துறை ரூ25 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ரூ25 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன். இவர்தான் தற்போது அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்றுவதற்கான திட்டம் தீட்டியதில் முக்கிய பங்கு வகிப்பவர்.

BBC :இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சனை.. . யாழ்ப்பாணத்தில் சஞ்சே பாண்டே .. இந்திய வெளியுறவு இணை செயலாளர்

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்காக கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவு இணைச் செயலர் சஞ்சய் பாண்டே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். கொழும்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுக்கள் நடத்திய பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இந்திய நிதி உதவியின் கீழ் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்களைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இருநாட்டுப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இணை செயற்பாட்டு குழு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை சந்தித்துப் பேச்சுக்கள் நடத்துகின்றது.

ஸ்டாலின் : உள்பகை இருப்பின் உடனே ஒழிப்போம் !

உள்பகை இருப்பின் அதை உடனே ஒழிப்போம் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக செயல் தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமது கட்சியினருக்கு எழுதிய முதல் கடிதத்தின் விவரம்:
"திராவிட முன்னேற்ற கழகம் எனும் பேரியக்கத்தின் செயல் தலைவர் என்கிற மிகப்பெரிய பொறுப்பை உங்களின் பேராதரவோடு, தலைவர் (கருணாநிதி) எனக்கு வழங்கியிருக்கிறார். எந்த நம்பிக்கையுடன் என்னிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதோ, அந்த நம்பிக்கைக்கு உரியவனாக என்னுடைய செயல்பாடுகளும், அணுகுமுறைகளும் அமையும் என்ற உறுதியினை வழங்குகிறேன்.

நடராஜனும் தினகரனும் புதிய அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் ... மக்கழே மக்கழே .. காசுக்கு ஒட்டு போட்டு வழிப்பறி கொள்ளையர்களிடம்...

சென்னை: சசிகலா முதல்வராவது உறுதி என்பதால் அவரது கணவர் நடராஜனும் சகோதரி மகன் தினகரனும் அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் படுபிஸியாக இருக்கின்றராம்.
அதிமுக பொதுச்செயலர் பதவியை போடாத வேஷம் போட்டு கைப்பற்றிவிட்டார் சசிகலா. ஆனாலும் மன்னார்குடி தரப்பு சசிகலாவை முதல்வர் நாற்காலியில் அமரவைத்தே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது. இதற்காக முதல்வர் பன்னீர்செல்வத்திடம் சில நாட்களுக்கு முன்னரே ராஜினாமா கடிதம் வாங்கி வைத்துவிட்டது. வரும் 10 அல்லது 12-ந் தேதியன்று சசிகலாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைப்பதில் படுதீவிரமாக இருக்கின்றனர்.

தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ புதிய தமிழக ஆளுநர் ... மீண்டும் ஆந்திரா ..? அது ஏன்?

டெல்லி: தெலுங்கு நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவைச் சேர்ந்தவருமான கிருஷ்ணம் ராஜு தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவைச் சேர்ந்த ரோசய்யா தமிழக ஆளுநராக இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் முடிந்து நீண்ட காலமாகியும் கூட இன்னும் புதிய ஆளுநரை நியமிக்காமல் உள்ளது மத்திய அரசு. தற்காலிக ஆளுநராக ஆந்திராவைச் சேர்ந்தவரான மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் புதிய ஆளுநராக ஆந்திராவைச் சேர்ந்தவரும், நடிகருமான, முன்னாள் மத்திய அமைச்சருமான கிருஷ்ணம் ராஜுவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஆந்திர ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

புதுவை முதல்வர் நாராயணசாமியின் உத்தரவை ஆளுநர் கிரண் பேடி மறுத்தார்!

புதுச்சேரி அரசின் கட்செவி அஞ்சல், (வாட்ஸ்அப்) சுட்டுரைப் பதிவு டுவிட்டர்), முகநூல் (பேஸ் ஃபுக்) போன்ற சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்து, ஆளுநர் கிரண் பேடி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுவை மாநிலத்தின் ஆளுநர் கிரண் பேடி பொதுமக்கள் பிரச்னைகள், அரசுத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த ஏதுவாக அனைத்து அரசு அதிகாரிகள் இடம்பெற்றிருந்த கட்செவி அஞ்சல் குழுவை நடத்தி வந்தார்.
இந்நிலையில், அரசு அதிகாரி ஒருவர் ஆபாச விடியோக்களை கட்செவி அஞ்சலில் வெளியிட்டதாக எழுந்த பிரச்னையையடுத்து, கடந்த திங்கள்கிழமை அனைத்து ஐ.ஏ.எஸ்., பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு பணியாளர் நலத் துறை மூலம் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், அரசு சார்புடைய கட்செவி அஞ்சல் குழுக்கள், சுட்டுரைப் பதிவு, முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உடனே வெளியேற வேண்டும் என முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

கருத்து கணிப்பு : 63 சதிவீதம் சசிகலாவுக்கு எதிர்ப்பு .. அதிர்ந்தது மன்னார்குடி!

அதிமுக பொதுக்குழுவில் சசிகலா அடுத்த பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டிசம்பர் 31 ஆம் தேதி பொதுச்செயலாளராக அதிமுக அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார்.பொதுக்குழுவை முடித்து கொண்டு ஒவ்வொரு முறையும் ஜெ. போயஸ் கார்டன் வரும் பாதையில்  கூட்டம் அலைமோதும்.  குறிப்பாக பெண்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் சசிகலாவை பொது செயலாளராக தேர்வு செய்யபட்ட  போதும் சரி,பொதுச் செயலாளராக பதவி ஏற்க போயசிலிருந்து ,அதிமுக அழுவலகம் வரையிலும் குறைவாகவே கூட்டம் இருந்தது. அதிமுக அலுவலகம் இருக்கும் சாலையில் தொண்டர்களை விட காக்கிகளே அதிக அளவில் குவிந்து இருந்தனர்.சசிகலா பதவி ஏற்ற பின்னர் தமிழகம் முழுவதும் அதிமுக உறுப்பினர், அதிமுக வாக்காளர்கள், மற்ற கட்சியை சேர்ந்தவர்கள், கட்சி சாராத மக்கள் என பிரித்து கருத்து கணிப்பில் இறங்கினோம். அந்த கருத்து கணிப்பின் முடிவுகள் நேற்று நமது நக்கீரன் இதழில் வெளியானது. அதில் அதிமுக உறுப்பினர்கள் 63 % பேர் சசிகலாவை எதிர்ப்பதாக சொல்லிருந்தார்கள். அதைக் கண்டு  கார்டன் தரப்பு அதிர்ந்திருக்கிறது. நக்கீரன்

வியாழன், 5 ஜனவரி, 2017

புகாரி குழுமத்தின் 76 இடங்களில் வருமான வரி சோதனை ..

எம்.ஜி.ஆரின் நண்பர் பி.எஸ். அப்துர்ரஹ்மானின் புகாரி குழுமத்தின் 76 இடங்களில் வருமான வரித்துறை சோதனை! மறைந்த பிரபல தொழில் அதிபர் பி.எஸ். அப்துர் ரஹ்மானின் வாரிசுகள் நடத்தி வரும் புகாரி குழுமத்தின் 76 இடங்களில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இவரை நினைவில் வைத்து தான். “மேரே நாம் அப்துல் ரஹ்மான்” என்ற பாடலை எம்.ஜி.ஆர். ஒரு திரைப்படத்தில் பாடுவார்.   100 கோடி வரி ஏய்ப்புச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

‘இரவு 2 மணிக்கு அழைத்தாலும், சொல்கின்ற இடத்துக்கு வர வேண்டும்’ என்றுதான் வருமான வரித்துறையின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் சோதனை என்ற தகவல் யாருக்கும் சொல்லப்படவில்லை. ‘புகாரியா குழுமம், ஈ.டி.ஏ குழுமம் என பெரும் நிறுவனங்களை நேற்று குறிவைத்தது வருமான வரித்துறை. இதன்பின்னணியில், தமிழக அரசை நடத்தும் சிலரது ரியல் எஸ்டேட் வர்த்தகமும் அடக்கம்’ என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். தமிழக அரசின் பொதுப் பணித்துறை ஒப்பந்தங்களில் கோலோச்சிய சேகர் ரெட்டி, சீனிவாசலு, கீழ்பாக்கம் கார்டனைச் சேர்ந்த பிரேம் குமார் ஆகியோர் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டனர். 

நடிகர் ரஜினிகாந்த் கிறிஸ்தவராகி விட்டார்? எம்மதமும் சம்மதமோ?

நடிகர் ரஜினிகாந்த் கிறித்துவ மதத்துக்கு மாறிவிட்டார் என்று பல தகவல்கள் வந்துக் கொண்டிருக்கும் தருணத்தில் தற்போது அந்த தகவல் உண்மைதான் என்பதைபோல வாட்ஸாப்பில் சில புகைப்படங்கள் பரவி வருகின்றன.
அதுவும் முழுக்க ஞானஸ்நானம் (பேப்டிசம்) எடுக்கின்ற படமும், வெளிநாட்டு கிறிஸ்தவ போதகரிடம் ரஜினிகாந்த் ஜெபம் செய்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட படமும் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி பேப்டிசம் எடுக்கொண்டார் என்றும் குறிபிடப்பட்டிருக்கிறது.இது குறித்து ரஜினி ரசிகர்களில் மிக முக்கியஸ்தரிடம் கேட்ட போது, .தலைவர், கிறிஸ்டியனாக மாறவில்லை. கபாலி படம் முடிந்த பின்னர் அவர் நியூயார்க் சென்று அங்கு 50 நாட்கள் தங்கினார். அப்போது அங்குள்ள சர்ச்சுக்கு அவரை அழைத்திருக்காங்க. அங்க போகும் போது சும்மா அப்படி நடந்தது.
அவர் அப்போதே அங்குள்ள புகழ் பெற்ற சச்சிதானந்தா கோவிலுக்கும் போனாரே என்கிறார் அப்பாவியாய். இதுகுறித்து ரஜினி தரப்பில் கேட்டுவிட முயன்றோம் ஹீம்… ஒரு பதிலையும் காணோம். எனவே இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

நடராஜனுக்கு நான் நன்றியுள்ளவன்: வைகோ...

சென்னையில் நடைப்பெற்ற கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய வெளியீட்டு விழாவில், நான் நடராஜனை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன் என்று பேசினார்.கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய 'தம்பி ஜெயந்த்துக்கு...' என்ற நுாலின் இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் வைகோ, நடராஜன் மற்றும் பழ.நெடுமாறனும் ஆகியோர் கலந்துக்கொண்டனர். வைகோ நுாலை வெளியிட அதை நடராஜன் பெற்றுக்கொண்டார்.இதையடுத்து வைகோ பேசுகையில் கூறியதாவது:-தமிழரின் சுவடுகளே இல்லாமல் இந்திய அரசு ஈழத்தை அழித்ததே, எந்த புலிக்கொடி  தஞ்சையில்  பறந்ததோ, அதே தஞ்சையில்  முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை அமைப்பதற்கு பழ.நெடுமாறனோடு துணை நின்று இடமும் கொடுத்தவர் நடராஜன். அதை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன்,  அந்த ஆயிரத்து ஐந்நூறு .. அப்புறம் மூன்றாவது அணி அமைச்சு கப்டன், திருமா, கம்யுனிஸ்டுகள் எல்லாரையும் காலியாக்கினது .. நமக்குள்ள பேசிக்க ஆயிரமா இருக்குப்பா

தீபா : சசிகலா எங்கு போட்டியிட்டாலும் நான் அங்கு போட்டியிடுவேன் ! சசிகலா மூன்றாவது இடத்துக்கு ....?

தியாகாராய நகர் பகுதியில் உள்ள தீபாவின் வீட்டுப் பக்கம் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தன்னை சந்திக்க வருபவர்களிடம் நன்றி கூறி பேசும் தீபா, இன்னும் மூன்றே வாரத்தில் முடிவை அறிவிப்பேன் என்றும் கூறி அனுப்பி வைக்கிறார். சசிகலா முதல்வர் ஆனாலும், பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அங்கு போட்டியிடுவேன். சாதி அரசியல் என்பதெல்லாம் இங்கு எடுபடாது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள் என்றும் தீபா கூறி வருகிறார்.
ஜெயலலிதாவின் ரத்த உறவான என்னை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள். சசிகலாவின் சமூகத்து மக்களுக்கும் நான் யார் என்பது தெரியும். அவர்களும் என்னை ஆதரிப்பார்கள். இரட்டை இலை சின்னத்தினால் மட்டும் சசிகலா வெற்றி பெற முடியாது.

திருமாவளவன் : போராட்டக்காரர் மீது பாலியல் தாக்குதல் .. போலீசாரை இடைநீக்கம் செய்க:

மோடி அரசின் செல்லா நோட்டு அறிவிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரை தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,
“நரேந்திரமோடி அரசின் செல்லா நோட்டு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 31.12.2016 அன்று சென்னை மேடவாக்கம்-மாம்பாக்கம் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்மீது பள்ளிக்கரணை காவல்நிலைய உதவி ஆய்வாளரும் காவல்துறையினரும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்தியதோடு தடியடி நடத்திக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தீக்கதிர் நாளேட்டின் நிருபர் போலீசாரால் தாக்கப்பட்டு, அவரது கேமரா பறிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது: ஸ்டாலின் எச்சரிக்கை

புத்தாண்டு பிறந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு இன்னும் விடிவுகாலம் ஏற்படவில்லை. கருகிய பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட மரணங்களும், தரிசாகிப் போன நிலங்களைப் பார்த்து நிகழும் தற்கொலைகளும் இன்னும் தொடர்கின்றன. இதுவரை உயிரிழந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி விட்டது. வேதனை தீயில் விவசாயிகளை தள்ளி விட்ட சாதனையைத்தான் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக செய்து காட்டியிருக்கிறது என்று விவசாயப் பெருமக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்."
;தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேற்று நேரில் சந்தித்து, விவசாயிகளின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை அவசரமாக  மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் நலன் காக்கும் விவாதங்கள் நடத்தி, "தமிழகத்தை வறட்சி மாநிலமாக" அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்ற, தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினேன்.

திமுக பொதுக்குழு அன்றும் இன்றும்: கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக பாணிக்கு மாறும் திமுக

tamilthehindu  :  கொள்கைகளை உரு வாக்கும் அமைப்பு, கட்சியின் தலைமை நிர்வாகிகளைத் தேர்வு செய்து அங்கீகரிக்கும் அமைப்பு, காலத் தேவைகளுக்கு ஏற்ப கட்சி அமைப்பில் மாற்றங்களையும் சட்ட திருத்தங்களையும் மேற் கொள்ளும் வானளாவிய அதி காரம் கொண்ட மையம் - இது தான் திமுக பொதுக்குழு.
இதற்கு முன்பு அண்ணா மறை வுக்குப் பிறகு 1969-ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கருணா நிதிக்காக கட்சித் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு தலைவருக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப் பட்டபோது கட்சி விதிகளில் முக் கிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதற்குப் பிறகும் பல சமயங்களில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாலும், நேற்றைய பொதுக் குழுவில் ஸ்டாலினை செயல் தலைவராக்கிய சட்டத்திருத்தம் முக்கியமான ஒன்றாக பார்க் கப்படுகிறது.
இதுவரை நடந்த திமுக பொதுக்குழு கூட்டங்களில், ‘திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் அரசியல் ரீதியான இயக்கமோ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மட்டுமே தொடங்கப்பட்ட இயக்கமோ அல்ல. இது ஒரு சமுதாய இயக்கம். இது தமிழர்கள் நல னையும் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வும் தமிழர்களின் உரிமைகளை மீட்டு எடுக்கவும் தமிழர்களின் சுயமரியாதையை பேணிக் காக்கவும் தொடர்ந்து போராடி வரும் இயக்கம்’ என்கிற கருத்துக் களை மறக்காமல் பதிவு செய்து வந்திருக்கிறார் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்.
அவருடைய பேச்சின் ஊடாக இன மானம், சுயமரியாதை இந்தச் சொற்கள் அடிக்கடி வந்து போகும். ஆனால், நேற்றைய பொதுக் குழுவில், இனமான பேராசிரியர் என திமுக-வினரால் வர்ணிக்கப்படும் அன்பழகனின் உரையில் இவை அனைத்தும் மிஸ்ஸிங். ஸ்டாலினின் அருமை பெருமைகளைச் சொல்லி அவரை செயல்தலைவர் பத விக்கு வழிமொழிவதோடு தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

அதிமுக எம்எல்ஏக்கள் 136 பேருக்கும் பொங்கல் பரிசாக ஒரு கோடி ரூபாய் ,,,சசிகலா முடிவு


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலா அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்று நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் கட்சிக்குள் சசிகலாவிற்கு எதிராக யாரும் குரல் கொடுக்கவில்லை. அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக ஏகமனதாக வி கே சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று தம்பிதுரை அறிக்கைவிட்டார். இந்நிலையில் “சசிகலாவிற்கு அதிமுகவிற்குள் பெரிதாக எதிர்ப்பில்லை. ஆனாலும் ஒரு சில எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி இல்லாமல் இல்லை. ஆனால் அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள்” என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்துக்கு 2 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

tamilthehindu :ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி வருகிற பிப்ரவரி 7-ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா, தமிழகம் இடையே யான காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது.
இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.என்.கான் வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

ராமராஜன் ,ஆனந்தராஜ் ,சுதீஷ் ,நாஞ்சில் சம்பத் ... தளபதி பஜனை ஆரம்பிச்சுட்டாய்ங்க?

முன்னாள் முதல்வர் ஜெ., இறந்த பின் சசிகலா தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்த நடிகர் வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்தார். அதிமுகவில் இருந்து நிறைய மிரட்டல் வந்தது.போலீஸ் பாதுகாப்பும் போடப் பட்டது. அதைத் தொடர்ந்து ஆனந்தராஜ் அமைதியாகி விட்டார். நாஞ்சில் சம்பத் வெளிப்படையாகவே கட்சியில் இருந்து விலகி விட்டார். இன்னோவா காரையும் ஒப்படைத்தது விட்டார். நடிகர் செந்தில் இன்னும் எந்த அறிக்கையும் விடாமல் அமைதி காத்து வருகிறார். விந்தியா விலகி விட்டார். ராமராஜன் மட்டும் அம்மா இறந்த துக்கத்தில் நெஞ்சுவலி வந்து ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் தளபதி நேற்று பொதுக்குழுவில் தலைவராக தேர்ந்தெடுத்து விட்டார். இதில் உற்சாகம் அடைந்த ராமராஜன் தளபதியே இனி தமிழ் நாடு என்று அறிவித்து திமுகவில் இணைகிறார் என்கிற செய்தியை ஒரு வார இதழ் எழுதியுள்ளது. ராமராஜன் இனி மேடைகளில் தளபதி புகழ் பாடுவார் என்று எதிர் பார்க்கலாம்

வெனிசுலா ... மோசமான பொருளாதாரம் .. ஊழல் ஊழல்.. இராணுவமே மக்களை சூறையாடும் கொடுமை

மின்னம்பலம் :  வெனிசூலா ஒரு ரொட்டி துண்டு கூட கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் பொழுதில், அதன் இராணுவ அதிகாரிகள் உணவை விற்று கோடி கோடிகளாக சம்பாதிக்கிறார்கள். வெனிசுலா இராணுவம் பெரும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு, முன்னாள் வெனிசுலா அமைச்சர் ஹுகோ சாவேஸ் உணவு அமைச்சகம் ஒன்றை உருவாக்கி, உணவின் மீதான முழு கட்டுப்பாட்டையும் இராணுவத்திற்கு அளித்தது. அவருடைய அரசு, பண்ணைகளையும், உணவு உற்பத்தி செய்யும் நிலையங்களையும் தேசியமயமாக்கி பின்னர் அத்திட்டத்தை ரத்து செய்தது. இதன் விளைவாக, உள்நாட்டு உற்பத்தி குறைந்து, வெனிசுலா உணவை இறக்குமதி செய்யத் தொடங்கியது.
2014 ஆம் ஆண்டில், வெனிசுலாவின் உணவு தட்டுப்பாடு மிக மோசமான நிலையை அடைந்தது. வெனிசுலா மக்கள் ரொட்டிக்காக நாள் முழுதும் வரிசையில் காத்திருந்தனர், மருத்துவமனைகள் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளால் நிறைந்திருந்தது.

பணியிடத்தில் பாலியல் தொல்லை : 69% பெண்கள் புகார் தெரிவிப்பதில்லை!


மின்னம்பலம் : பெரும்பாலான பாலியல் தொல்லை வழக்குகள் பணியிடங்களிலேயே நடைபெறுகிறது. அதில், பாதிக்கப்பட்ட 68.9% பெண்கள் குற்றவாளி மீது ஏற்படும் அனுதாபம், பயம், பின்விளைவுகள் போன்ற காரணங்களால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பதில்லை என இந்தியன் நேஷனல் பார் அசோசியேஷன் (INBA), வழக்கறிஞர்கள் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு, அகமதாபாத்,பெங்களூர், கவுகாத்தி, ஹைதராபத், ஜலந்தர், கொல்கத்தா, லக்னோ, மும்பை,நியூடெல்லி மற்றும் புனே ஆகிய நகரங்களில் அமைந்துள்ள பிபிஓ, ஐடி, கல்வி நிறுவனங்கள், சட்ட துறை, மருத்துவமனை, உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாயம், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் துறைகள் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 78% பெண்களும், 22% ஆண்களும் பங்கேற்றனர்.

ஸ்டாலினுக்கு பன்னீர்செல்வம் வாழ்த்து!


மின்னம்பலம்:: விவசாயிகளின் பிரச்சனை குறித்துப் பேச தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை நேற்று மாலை திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் சந்தித்தார். அப்போது திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு ஓபிஎஸ் வாழ்த்துக் கூறினார். தஞ்சை, நாகை, திருவாரூர், உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு உள்ளிட்டவற்றை பயிரிட்டு இருந்தனர். இந்த பயிர்களுக்கு அணைகள், ஏரி, குளங்களில் இருந்து போதிய நீர் கிடைக்கவில்லை. அக்டோபரில் இருந்து டிசம்பர் வரையில் பெய்யக்கூடிய பருவமழையும் கைகொடுக்கவில்லை.

விகடனுக்கு மட்டும் விவசாயத்தில் இலாபம் ஏன் ? கொத்தடிமை நிருபர்களை வைத்து உடான்ஸ் விடும்...

ஆக்சன் படத்தில் அழுகை சீனுக்கு மட்டும் பயன்படும் நடிகை சரண்யாவைப் போல “தஞ்சை விவசாயிகள் தற்கொலை”, “வேளாண் அதிகாரிகளின் கொள்ளை” என்று ‘மரத்தடி மாநாடு’ தலைப்பில் நாலுவரியில் நீலிக்கண்ணீர் வடிப்பதுதான் இந்த விவசாயிகள் மீது விகடன் காட்டும் அக்கறை
  • ஒரு ஏக்கருக்கு  3,40,000 ரூபாய்! பழுதில்லாமல் லாபம்தரும்   பப்பாளி!!
  • உழவில்லை! உரமில்லை! பராமரிப்பு இல்லை! 100  தென்னை மரங்கள்! ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய்!!
  • 60 சென்ட், 70நாள், 90,000ரூபாய்!
    சின்ன வெங்காயம்…பெரிய லாபம்!!
  • அரை ஏக்கர்.. 160 நாள்.. 1,20,000 ரூபாய்! நல்ல வருமானம் தரும் நாட்டு வெண்டை!!
  • ஒரு ஏக்கரில் ஒரு லட்சம் ரூபாய் வருமானம்! வேர்கடலை!!
  • தினமும் 20 லிட்டர் பால்! மாதம் 60,000 ரூபாய் வருமானம்!!
  • 5 ஏக்கர்நிலம்! ஆண்டுக்கு  6 லட்சம் வருமானம்!
இவையெல்லாம் “வை ராஜா வை…5 வச்சா 10, 10 வச்சா 20” என்ற மூணு சீட்டுகாரன் பேச்சு என நினைத்துவிடக் கூடாது! ‘பாரம்பரியமிக்க’ விகடன் குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் ‘பசுமை விகடன்’ பத்திரிக்கையின் அட்டைப்பட வாசகங்கள்.

தமிழர்களே புரோகித சடங்குகளை புறக்கணிப்பீர்!


kolathoor mani salem
கீற்று :சேலம் மாநாட்டின் ஒற்றைத் தீர்மானம் 24-12-2016 அன்று சேலத்தில், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’  கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த ஒற்றை தீர்மானம் :
வேதங்கள் - பகவத்கீதை - மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும்.
வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றி விட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் - சமணர் - புத்தர் - சித்தர்கள் - வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக  உள்ளிழுத்துக் கொண்டது.

ராம மோகன ராவ் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்? விஜய் மல்லியா பாணியில்?

முன்னாள் தலைமைச்செயலர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதும் அதைத் தொடர்ந்து மோகன ராவ் மருத்துவமனையில் போய் அட்மிட் ஆனதும் அனைவருக்கும் தெரியும். இரண்டே நாட்களில் வெளியே வந்து மீடியாக்கள் முன்பாக கர்ஜித்ததும் உலகமே பார்த்து மிரண்டது. அதன் பின் அவரது வீட்டிற்குப் போனார். அதோடு சரி. அதன் பின் என்ன ஆனார்? எங்கே போனார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், ஒரு புலானய்வு வார இதழ் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அன்றே வெளிநாடு போய் விட்டார். அனேகமாக அவரின் மகன் செட்டில் ஆகி இருக்கும் துபாய் போய் இருப்பார் என்றும், அங்கிருந்து வசதியாக எதாவது ஒரு நாட்டில், அதாவது நார்வே போன்ற பாதுகாப்பான ஒரு தேசத்தில்போய் செட்டில் ஆகி இருப்பார் என்கிறது அந்தப் பத்திரிக்கை. விஜய் மல்லையாவை தப்பவிட்டு விட்டு இப்போது புலம்பிக்கொண்டிருக்கிறோம். அடுத்ததாக இவரைப்போய் எங்கு தேடப்போகிறோமோ..?? லைவ்டே

ஸ்டாலின் கனிமொழியை ஓரம் கட்டினார் .. here after one man show ? like admk?

இன்று நடந்த பொதுக்குழுவில் ஒரு வழியாக செயல் தலைவராகி விட்டார். கூடவே, கட்சியின் மகளிர் அணி செயலராக இருக்கும் கனிமொழிக்கு, துணைப் பொதுச் செயலர் பதவியை கொடுக்க ஒப்புக்கொண்டவர், கடைசி நேரத்தில், அதெல்லாம் கிடையாது என்று கூறினார்
சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது.  கலைஞருக்கு  உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை, காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதால், கடந்த மாதம் கடைசியில் நடக்க வேண்டிய பொதுக்குழு கூட்டம், இம்மாதம் 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.இந்தப் பொதுக்குழு மூலம் எப்படியும் தன்னை, கட்சியின் புதிய செயல் தலைவராக அறிவித்து விட வேண்டும் என கடும் முயற்சி மேற்கொண்ட, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரியும், கட்சியின் மகளிர் அணி செயலருமான கனிமொழிக்கு, எந்த புதிய பதவியும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

காவல்துறை வசூல் சக்கரவர்த்தி ஜோர்ஜ் சேட்டன் .. முந்தய ஆணையர்களின் சாதனைகள் முறியடிப்பு .. ஜெயாவுக்கும் பங்கு ...

george-sசவுக்கு ஆன்லைன் :  உன்மத்தர்களும், ஊழல் பெருச்சாளிகளும், ஊரை அடித்து உலையில் போடுபவர்களும் உத்தமர்களாக காட்சியளிக்கும் காலம் இது.   ஒரு கொள்ளைக்காரி அரியணை ஏறும் காலம் இது.   ஒரு கொள்ளைக் கூட்டம் அதிகாரத்தை கைப்பற்றுவதை நல்லவர்களும், நியாயமானவர்களும் கையறு நிலையில் வேடிக்கை பார்க்கும் காலம் இது.
ஊழல் பெருச்சாளியான ஒரு அரசு தலைமைச் செயலர், வருமான வரிச் சோதனை நடந்த பிறகு, பேட்டியளிக்கையில், ஜெயலலிதா இருந்தால் என்னுடைய அறையில் வருமான வரி சோதனை நடந்திருக்குமா என்று வெளிப்படையாக பேட்டியளித்து விட்டு, பணி இடைநீக்கம் கூட செய்யப்படாமல் ஆனந்தமாக சுற்றும் காலகட்டம் இது.    “பேய்கள் அரசாண்டால் சாத்திரங்கள் பிணந்திண்ணும்” என்று சொன்னான் பாரதியார்.   சாத்திரங்கள் பிணங்களை தின்று கொண்டிருக்கும் காலகட்டம் இது.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் நடக்கும் அக்கிரமங்களை மனம் பொறுத்துக் கொள்ளாது குமுறும்.  ஆலாய்ப் பறக்கும்.  அங்கலாய்க்கும்.  அப்படி ஒரு அங்கலாய்ப்பை பகிர்ந்து கொள்ளும் கட்டுரைதான் இது.

பெங்களூரில் புத்தாண்டு.. பெண்கள் மீது பாலியல் தாக்குதல்கள் .. வேடிக்கை பார்த்த போலீஸ் ..


பெங்களூரு : கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, சில சமூக விரோதிகள் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சாலையில் தனியாக சென்ற பெண்ணை கடத்த முயற்சித்தது ஆகிய சம்பவங்களால், அங்கு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக, பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.< கர்நாடக மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகர் பெங்களூரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, போதையுடன் கூட்டத்தில் பங்கேற்ற சில சமூக விரோதிகள், அங்கிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். ஆத்திரம் : இது குறித்து ஊடகங்களில் புகைப்படத்துடன் செய்திகளாக வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையின் தலைநகரமான பெங்களூரில், பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது குறித்து, அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரிடம் நிருபர்கள் கேட்டனர்.

தலைவர் வரவில்லையே...’ பொதுக்குழுவில் கதறியழுத உடன்பிறப்புகள்


இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக பொதுக்குழு கூடியது. காலை 7.00 மணியளவில் கட்சி பொதுக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் அரங்கத்தில் நிரம்பியிருந்தனர்.
சரியாக 9.00 மணியளவில் பேராசிரியர் அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, சுப்புலட்சுமி அனைவரும் ஒன்றாக மேடைக்கு வந்தனர். பொதுக்குழுவுக்கு ஆர்.எஸ்.பாரதி முன்மொழிந்தார், டி.கே.எஸ்.இளங்கோவன் வழிமொழிந்தார்,
அண்மையில் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோ, கோ.சி.மணி, சற்குணம் பாண்டியன், ஜெயலலிதா, சோ மற்றும் மறைந்த கழகத்தினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தனர்.

சசிகலாவுக்கு 20 கேள்விகள்! எம்ஜியார் நாளை நமதே என்று கூறியது உங்களுக்காகத்தானா?

பொதுச்செயலாளர் பேச்சு...சசிகலா முதன்முறையாக மைக் முன்பு வந்து நின்றிருக்கிறார். அவருடைய `அக்கா’வைப் போலவே எழுதிவைத்த உரையை ஏற்ற இறக்கத்தோடு முழங்கியிருக்கிறார். நவரசங்களும் கொட்டிய அவருடைய பேச்சு சொல்வது என்ன? 
அந்தப் பேச்சில் ஏகப்பட்ட முரண்பாடுகள். அதில் எழும் கேள்விகள் என்னென்ன?
‘‘என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே!’’ என உரையைத் தொடங்கினார். ‘உயிரில் சுமந்த’ ஜெயலலிதாவின் உடல்நிலை தொடங்கி, உயிர் போகும் வரையில் அவருக்கு என்ன நடந்தது என்பதை மறைத்தது ஏன்?‘என்னை பொதுச்செயலாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி’’ எனச் சொன்னார். உங்களைத் ‘தேர்வு’ செய்யவில்லை. ‘நியமனம்’தான் செய்திருக்கிறார்கள்.  இது உங்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?