தேவைக்கேற்ப அவ்வப்போது மாறும் கட்டண முறை.ண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்ல காத்திருக்கும் நடுத்தர வர்க்க மக்களை இதுவரை தனியார் ஆம்னி பேருந்துகள் மட்டுமே கொள்ளையடித்து வந்தன. கடந்த அக்டோபர் 1 முதல் மத்திய அரசின் ரயில்வே துறையும் சிறப்பு அதிவேக ரயில்கள் (ப்ரீமியர் ரயில்) என்ற பெயரில் அந்த கொள்ளையை சட்டபூர்வமாக செய்ய ஆரம்பித்து விட்டன. அவ்வப்போது மாறும் கட்டணம் (டைனமிக் கட்டணம்) என்ற பெயரில் பயணிகளின் தலையை தடவும் இந்த வேலையானது சாமான்ய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மலிவு விலை பயணமாக இருந்த ரயில் பயணத்தை அவர்களிடமிருந்து பிரிக்க ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.