சனி, 5 டிசம்பர், 2020

“ஜில்லா பரிஷத் பள்ளி” 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு ரஞ்சித்சிங் திசேல்~.. Ranjitsinh Disale Wins Global Teacher Prize 2020

Vidhya Suresh : ஒரு மாட்டுத்தொழுவம், பக்கத்திலேயே சாமான்கள் போட்டு வைக்கும் குடோன். இரண்டுக்கும் இடையில் சொருகினாற்போல ஒரு ஷெட் போன்ற கட்டடம். 

“ஜில்லா பரிஷத் பள்ளி” என்ற உதிர்ந்துக்கொண்டிருக்கும் பெயர்ப்பலகையுடன் ஒரு பள்ளி. டீச்சரில்லாமல் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள். மிகச்சிறிய அந்த மலைகிராமத்தில், பெரும்பாலும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள விவசாய குடும்பங்கள். பாரதிராஜா படமெல்லாம் இல்லை. 2009 இல் ரஞ்சித்சிங் திசேல் பரிதேவாடி மலைக் கிராமத்திற்கு வேலைக்கு வந்தபோது, அவர் வேலைக்கு சேரவேண்டிய பள்ளி இப்படித்தான் இருந்தது. 70 களில் இது வழக்கமான காட்சியாக இருந்திருக்கலாம்.      2009 இல் இப்படிப்பட்ட இடங்களில் பணிபுரிய எத்தனை இளைஞர்களிடம் முனைப்பு இருக்கும்?. ரஞ்சித்திற்கும் இக்கால இளைஞர்களின் வழக்கமான IT எஞ்சினியர் கனவு இருந்தது. ஆனால், சில காரணங்களால் கனவு, கனவாகவே நின்றுவிட, அப்பாவின் ஆலோசனையின்படி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருகிறார் ரஞ்சித். பெரிய பிடித்தம் என்றெல்லாம் இல்லையென்றாலும் ரஞ்சித்திற்கு ஒன்று புரிந்தது.            “மெஷினை வடிவமைக்கிறவங்க எஞ்சினியர்னா, குழந்தைகளை, அவர்கள் மூலம் இந்த சமுதாயத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கற எஞ்சினியர்கள் ஆசிரியர்கள்தான்”. இந்தப் புரிதலுக்குப் பிறகு ரஞ்சித்தால் தன் படிப்பை, அது சார்ந்த தொழிலை ஆழமாக நேசிக்க முடிந்தது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ : என் ஆதரவில் பின்வாங்க மாட்டேன்.. மிரட்டி பார்த்த இந்தியா!

webdunia - Sugapriya Prakash : கனடா பிரதமர், மனித உரிமைகளுக்கான அமைதியான முறையில் எங்கு போராட்டம் நடந்தாலும் கனடா அதை ஆதரிக்கும் என பேச்சு. வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர்.        இந்த போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிரது. இந்நிலையில் இந்தப் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் ’இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி செய்திகள் கவலை அளிக்கிறது என்று ம் அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் என்றும் தெரிவித்திருந்தார்...... 

ஈரோடு சவுந்தர் காலமானார். பல படங்களுக்கு வசனம் எழுதி இயக்குநராகவும், நடிகராகவும் தனி முத்திரை பதித்தவர்

Writer and Actor Erode Soundhar passes away - தமிழ் News - IndiaGlitz.com

webdunia :தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு வசனம் எழுதி இயக்குநராகவும், நடிகராகவும் தனி முத்திரை பதித்தவர் ஈரோடு சவுந்தர். 

அவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.                  தமிழ் சினிமாவில் முன்னஈ இயக்குநர் மற்றும் சிறந்த வசன கர்த்தாவாக இருந்தவர் ஈரோடு சவுந்தர். இவர் முதல் சீதனம், சிம்மராசி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.            சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம், போன்ற ஹிட் படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.   

சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்

சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்
maalaimalar : சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படமாட்டார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
சசிகலா
பெங்களூரு :சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இந்த நிலையில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை சமீபத்தில் பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தினார்...... 

சூரப்பாவின் நேர்மை பிடிச்சிருக்கு!- கமல்ஹாசன்

minnambalam : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சூரப்பா மீது தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்திருக்கும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று டிசம்பர் 5-ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்... "அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்ட போது இந்த பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் தமிழ்நாட்டில் இல்லையா என்று நாமும் கேள்வி எழுப்பினோம்.
சூரப்பாவின் நேர்மை பிடிச்சிருக்கு!- கமல்ஹாசன்

வந்தவரோ வளைந்து கொடுக்காதவர். தமிழகத்தின் பொறியியல் கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்த முனைந்தவர். அதிகாரத்தின் முன்பு நெளிந்து போகாதவர். பொறுப்பார்களா ஊழல் திலகங்கள்?     வளைந்து கொடுக்கவில்லை என்றால் முடிப்பது தான் அவர்கள் பழக்கம். எவனோ அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஒரு பேடி எழுதிய கடிதத்தை அடிப்படையாக வைத்து விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறார்கள். மொட்டையில் முடி வளராததால் அவர் மீது புகார்கள் இருக்கிறதாஎன்று விளம்பரம் செய்து கடை விரித்துக் காத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கொக்கறிக்காதீர்கள்! அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை!... கமலஹாசனுக்கு..

Kandasamy Mariyappan : · கமலஹாசன் அவர்களே...... நீங்கள் பேசும் ஒளிப்பதிவை பார்த்தேன்!!! ஆஹா, என்ன வீரம், என்ன வெறித்தனம் அந்த குரலில்!!! சூரப்பாவை ஆதரித்து நீங்கள் யார் என்று காட்டி விட்டீர்கள்!!! அது உங்களது உரிமை!!! ஆனால்..... கல்வி சாலைகளில், கரை வேட்டிகளுக்கு என்ன வேலை என்று கேள்வி கேட்டீர்களே.....!!!!! இதற்குப் பிறகும் உங்களுக்கு பாடம் எடுக்கவில்லை என்றால்......
டாக்டர். நடேசனாரின் மீசை, பெரியாரின் கைத்தடி, காமராசரின் சட்டை, அண்ணாவின் குரல், கலைஞரின் பேனா எங்களை மன்னிக்காது!
கமலஹாசன் அவர்களே...
பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதிவரை பஞ்சம, ஷூத்ர மக்களுக்கு, மறுக்கப்பட்ட கல்வியை கொடுத்தது... இந்த கரை வேட்டிகள் தான் என்று தெரியுமா!

மோடி அனைத்துக் கட்சிக் கூட்டம் . டி.ஆர்.பாலுவின் மைக்ரோ போன் ம்யூட் செய்யபப்ட்டது.

minnambalam : பிரதமர் மோடி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்ற டி.ஆர்.பாலுவின் மைக் ம்யூட் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி பற்றிய கொள்கை முடிவெடுப்பதற்காக பிரதமர் மோடி நேற்று (டிசம்பர் 4) காணொலி மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்தில் தடுப்பூசி பற்றியும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை குறித்தும் பல கட்சித் தலைவர்கள் பேசினார்கள். அப்போது தடுப்பூசி வியூகத்தைப் பற்றி சொல்லிவிட்டு தற்போது நடக்கும் விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் முன் பிரச்சினையைக் கிளப்பினார் திமுக சார்பில் பேசிய அக்கட்சியின் பொருளாளரும், மக்களவை திமுக தலைவருமான டி.ஆர்.பாலு. அப்போது அவரது மைக் ம்யூட் செய்யப்பட்டது.

தோட்டக்காரி .. இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்.. 1963 இல் திரையிடப்பட்டது.


Sri Sritharan : இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெளியான முதலாவது முழுநீளத் தமிழ்த் திரைப்படம் தோட்டக்காரி. 1963 இல் திரையிடப்பட்டது. இலங்கையின் மலையகச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. பி. எஸ். கிருஷ்ணகுமார் இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அவரே திரைக்கதை, வசனம், மற்றும் பாடல்களையும் எழுதியிருந்தார். கே. எம். சவாகிர் இசையமைத்திருந்தார். வி. தங்கவேலு இப்படத்தைத் தயாரித்தார். கதாநாயகியாக நடித்தவர் ஜெயஸ்ரீ என்ற சேபாலிக்கா குரூஸ். செல்வம் பெர்னாண்டோ கதாநாயகிக்காகப் பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.
பாடல்களை பி. எஸ். கிருஷ்ணகுமார், கணேசாள் (அங்கவை) ஆகியோர் இயற்றியிருந்தனர். கே. எம். சவாகிர் இசையமைத்தார். கௌரீஸ்வரி இராஜப்பன், ஜி. எஸ். பி. ராணி, ஜி. வரதராஜா, ஹருண் லந்தரா, கே. குமாரவேல் ஆகியோர் பின்னணி பாடினார்கள்.
தோட்டக்காரி 1963 செப்டம்பர் 27 இல் கொழும்பில் கிங்சுலி, பிளாசா ஆகிய திரையரங்குகளிலும், யாழ்ப்பாணத்தில் வெலிங்டனிலும், மற்றும் நாடெங்கிலும் உள்ள பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
முதலாவது தமிழ்த் திரைப்படம் என்ற வகையில் எதிர்பார்ப்பு இதற்கு இருந்தது. கொழும்பில் இரண்டு திரையரங்குகளில் 2 வாரங்களும், ஏனைய இடங்களில் ஒரு வாரமும், அல்லது அதற்குக் குறைந்த நாட்களும் ஓடியிருந்தது.  .

ரஜினி போன்ற கருப்புப்பண முதலை களுக்கு சட்டம் எப்படி வளைந்து கொடுக் கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு

Gauthaman Munusamy : நேர்மையானவர், ஊழல் ஆற்ற ஆட்சி தருவார், ஒளித்துப் பேசத் தெரியாதவர், கள்ளங்கபடற்றவர் என்று பிம்பம் அமைக்கப்டுகிறார் ரஜினி. இந்த சின்ன வழக்கைப் பார்க்கலாம் ரஜினி போன்ற கருப்புப்பண முதலை களுக்கு சட்டம் எப்படி வளைந்து கொடுக் கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு 2014ஆம் ஆண்டு அவர் மீது பதிவு செய் யப்பட்ட வழக்கு, 6 ஆண்டுகளாக நீதி மன்றத்தில் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை!! வழக்கு எண் TCA 256/2014 2020ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்ததற்கும் காரணம் இருக்கிறது
2019ஆம் ஆண்டு பாஜக அரசு ஒரு circular அனுப்புகிறது. அதில் உயர் நீதிமன்றங்க ளில் மேல் முறையீட்டில் இருக்கும் வழக் குகளில் அபராத தொகை 1 கோடிக்கு கீழே உள்ள வழக்குகளை தொடர வேண் டாம் என்று அறிவிக்கிறது
அந்த சுற்றறிக்கையை காரணம் காட்டி, ரஜினி மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக நீதிமன்றத்தில் வரு மான வரித்துறை கூறியதால், வழக்கு குழி தோண்டி புதைக்கப்படுகிறது.

வெள்ளி, 4 டிசம்பர், 2020

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் . டிஆர்எஸ் 56.. பாஜக 48, ஓவைசி 44!

tamil.oneindia.com : ஹைதராபாத்: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் 150 இடங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆளும் டிஆர்எஸ் 56 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது, பாஜக 48 தொகுதிகளில் வென்றுள்ளது. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வென்றுள்ளன. 

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெற்றது. மாநில சட்டசபை தேர்தலைப் போல ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் களைகட்டி இருந்தது. இந்த தேர்தலில் தெலுங்கானாவின் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்து களம் கண்டன. 

பிரதமரின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்தி மட்டுமே! போர் முழங்கிய டி ஆர் பாலு திருச்சி சிவா . ஆடிப்போன மோடி

Kandasamy Mariyappan  பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் இந்தியில் பேசுவதை எதிர்த்த திமுக MPக்கள் டி.ஆர். பாலு மற்றும் திருச்சி. சிவா!!!
இன்று, சற்று முன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திரு. நரேந்திர தாமோதரதாஸ் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் நடந்தது!
கூட்டம் தொடங்கியதும், அமைச்சர் பியூஷ்கோயல் இந்தியில் பேசுவதை, திமுக MP டி.ஆர் பாலு அவர்கள் அவருக்கே உரிய பாணியில் உணர்ச்சி வசப்பட்டு, அமைச்சர் ஆங்கிலத்தில் பேச வேண்டும் சத்தம் போட்டார். 
அதை தொடர்ந்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் பேசி முடித்தபின் காணொளி கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர தாமோதரதாஸ் நிறைவுரை ஆற்றினார்.
பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் தனது உரையை இந்தியில் நிகழ்த்தும் போது, மற்ற மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் வாய் பொத்தி கிடக்க.....
அண்ணன் திருச்சி சிவா குறுக்கிட்டு அமைச்சர்கள் இந்தியில் பேசுவதை நாங்கள் எதிர்த்த நிலையில் பிரதமரே தனது உரையை இந்தியில் நிகழ்த்துவது, கடுமையான கண்டனத்திற்கு உரியது என கர்ஜித்தார் ...!
பிரதமர் தனது உரையை எங்களுக்கும் புரியும் வண்ணம் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தி இருக்க வேண்டும் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பாளர் மூலமாக மற்றவர்க்கு புரியும் படி ஏற்பாடு செய்து இருக்க வேண்டும் என பேசியதை கேட்டு.....
அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ், கொஞ்சமல்ல நிறையவே ஆடிப் போனார்!!!
ஒரு சில நிமிடங்கள் அமைதி காத்து, பிறகு பம்மியபடி உரையை நிகழ்த்தி முடித்தார்.

சாதிய பெயர்கள் எங்கள் வீதிகளுக்கு வேண்டாம்” மகாராஷ்ட்ர அரசு முடிவு

M.K.Stalin : I wholeheartedly welcome this announcement by the Maharashtra Government. Tamil Naduand DMK have always been at the forefront of the movement to rid society of caste. This will sow the seeds of Social Reform and usher in a revolution of societal progress. Maharashtra Government Decided to change the names of residential areas : tamil.indianexpress.com " சாதி அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புப் பகுதிகள், இடங்கள், சாலைகள்  பெயர்களை மாற்ற மகாராஷ்ட்ர அரசு முடிவு செய்துள்ளது. சாதி மத அடிப்படையில் பேதம் காட்டக் கூடாது என்பதை மனதில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் தெலுங்கு தேசம் முன்னணியில் ஓவைசியின் கட்சி இரண்டாவது இடத்தில் பாஜக மூன்றாவது இடத்தில்

minnambalam : ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் காலை வரை பாஜக முன்னிலையிலிருந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளன.

மொத்தம் 150 வார்டுகளை கொண்ட ஹைதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல், மாநில சட்டமன்றத் தேர்தலைப் போலவும், நாடாளுமன்றத் தேர்தல் போலவும் இந்தியா உற்றுநோக்கும் தேர்தலாக மாறி இருக்கிறது. இதற்குக் காரணம், தென்னிந்தியாவில் பாஜக வேரூன்ற தெலங்கானா மாநிலம் ஒரு சிறந்த வாய்ப்பாக பாஜக கருதுகிறது. அதோடு கடந்த சில மாதங்களாகவே பாஜகவுக்கும் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிரியச் சமிதி கட்சிக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. எனவே மத்திய பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளை முதல்வர் சந்திரசேகர் ராவ் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினி அரசியல்: நவம்பர் 30 டு டிசம்பர் 3 -.. நடந்தது என்ன... பின்னணியில் அமித் ஷாஜி இருக்காரு' என கமலாலயத்தினர்

vikatan :  1992-ம் ஆண்டிலிருந்தே தன்னை நோக்கி எழுப்பப்பட்டுக் கொண்டிருந்த கேள்விக்கு, 2020 டிசம்பர் 3-ம்தேதி விடையளித்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். 2021 ஜனவரியில் தனிக் கட்சி, டிசம்பர் 31, 2020 -ல் அறிவிப்பு என்று ட்வீட் மூலம் அறிவித்த ரஜினி, தொடர்ந்து, தமது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியையும் நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ` அரசியலில் மாற்றம் வேண்டும். இப்போ இல்லைன்னா... எப்பவும் இல்லை' என்றும் முழங்கினார். இது எல்லாமே, ஆண்டாண்டுகாலமாக காத்துக்கொண்டிருந்த ரஜினியின் ரசிகர்களுக்கு அளவில்லாத ஆனந்தத்தைக் கொடுக்க, அவர்கள் இனிப்புக் கொடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ரஜினி - பத்திரிகையாளர் சந்திப்பு
ரஜினி - பத்திரிகையாளர் சந்திப்பு

இத்தனை ஆண்டுகளாக இல்லாமல், தற்போது திடீரெனெ எப்படி இந்த முடிவுக்கு வந்தார் ரஜினி, அவர் மனதை கரைத்தவர்கள் யார்?... குறிப்பாக நவம்பர் 30-ம் தேதியிலிருந்து டிசம்பர் 3-ம் தேதிக்கு இடைப்பட்ட நாள்களில் என்ன நடந்தது என்ற பல்வேறு கேள்விகளோடு ரஜினி ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள், அவருக்கு நெருக்கமானவர்கள் எனப் பலரையும் தொடர்பு கொண்டோம்.

ரஜினியின் பார்ப்பார் அர்ஜுன்  மூர்த்தியின் ஜாதிவெறி

பாமர மக்களின் துயரை துடைக்காத ஆன்மீகத்தால் எந்த ஒரு பயனும் இல்லை.

Image may contain: 1 person, text that says 'பெண்களால் தனி ஒருத்தியாக ஆன்மீகத்தில் உயர்வான நிலைக்கு செல்வதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது வைதிக சனாதனம். அவளின் ஆன்மீக வளர்ச்சியானது அவளது பதியைச் சார்ந்தே உள்ளது, தனி ஒருத்தியாக ஆன்மா பற்றி அவள் சிந்திக்கக் கூடாது என்கின்றன சனாதன நூல்கள்.'
Dhinakaran Chelliah : · ஆன்மீகமும் பொய்  ஆன்மீக  அரசியலும்  பொய் சானதனத்தின் ஆணி வேர்தான் ஆத்மா என்பது. உடலை நம்புகிறதோ இல்லையோ சனாதனம் ஆத்மாவை நம்புகிறது.  உடல் அழிந்தாலும் ஆத்மா அழிவதில்லை என்கிறது சனாதனம். பிரபஞ்சத்தில் மொத்த ஆத்மாவின் எண்ணிக்கைகளைக் கூட கணக்கு வைத்துள்ளன சனாதன நூல்கள். ஆத்மா உடல் வழியாக எத்தனையோ ஜென்மங்களாக பிறவி எடுப்பதும் அடுத்த பிறவி மூலமாக இன்றொரு உடலில் வாசம் செய்வதும் கர்ம வினைகளின் தொடர் என்கின்றன சனாதன நூல்கள். அப்போ, ஆத்மாவை நம்பினால் மறு பிறவிகளை அதிலும் ஆயிரக் கணக்கான பிறவிகளை யுகம் தோறும் நடக்கும் தொடர் நிகழ்வாக நம்ப வேண்டும். வர்ணம் சாராத சண்டாளனாகவோ, பதிதனாகவோ
உடல் எடுக்கும் ஆத்மாவானது, எத்தனையோ ஆயிரக் கணக்கான ஜென்மங்களுக்குப் பிறகு சூத்திர உடலில் பிறப்பு எடுக்கிறது.
சூத்திர உடலில் எத்தனையோ ஆயிரம் ஜென்மங்கள் கர்ம வினை மற்றும் தர்மத்தை அனுசரித்த வித த்தைப் பொறுத்து, மறுபடியும் மறுபடியும் சூத்திரனாக ஜனிக்க வேண்டும். இப்படி எத்தனையோ ஆயிர ஜென்மங்களுக்குப் பிறகு வைசிய, சத்ரிய பிறகு பிராம்மண ஜென்மம் எடுக்க வேண்டும். அதன் பிறகே பிறவா நிலை அடைவதற்கான முதல் தகுதியே ஏற்படுகிறது.
இப்படி ஆத்மா எடுக்கும் உடல்களுக்கு கணக்கே இல்லை.

நடிகை சௌந்தர்யாவுக்கு இருந்த நன்றி உணர்வு கூட ரஜினி காந்துக்கு இல்லையே !

நடிகை சௌந்தர்யா
Manisekaran : · சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! 70 வயது வரையில் திரைத்துறையில் சூப்பர்ஸ்டாராக நிலைத்து நிற்பதே பெரும் சாதனைதான். இனி, இவருடைய சாதனையை முறியடிக்க எவரும் வரப்போவதுமில்லை. தமிழ்த் திரையுலகத்தைத் தாண்டி இந்தியத் திரையுலகம், சீனா,ஜப்பான் என்று பல நாடுகளுக்கு தன்னுடைய சினிமாப் புகழை பரவச் செய்தார். உலகநாயகன் கமல் அவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய

கதாபாத்திரத்திற்காக மிகப் பெரும் உழைப்பை அர்ப்பணிக்கிறார்.சினிமாவில் சம்பாதித்த காசை சினிமாவிற்கே செலவிடுகிறார்.போட்டப் பணம் திரும்பி வருமா என்றெல்லாம் யோசிப்பதில்லை.ஆனால்,கமல் அவர்களால் இந்திய சினிமாவைத் தாண்டி போக முடியவில்லையே! ஒரு முறை முன்னாள் பாரதப் பிரதமர் திரு.மன்மோகன்சிங் அவர்கள் ஜப்பான் பாராளுமன்றத்தில்,

"எங்கள் நாட்டு சூப்பர்ஸ்டாரை உங்கள் நாட்டு மஹாராஜா போல் கொண்டாடுகிறீர்கள். அதற்காக அவரின் சார்பாக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ",என்று சொன்னார்.
இப்படிப் புகழும் பெருமையும் கொட்டிக் கொடுத்த சினிமாவிற்கு திருப்பி என்ன செய்தார் என்பதுதான் நம்முள் எழும் கேள்வி.
சினிமா எனும் அற்புத சாதனைத்தை சார்லிசாப்ளினைப் போல் மனித சமூகத்திற்காக பயன்படுத்தியவர்கள் எவரும் இல்லை.

41 தொகுதிகள்தான் வேண்டும்.. திமுகவிடம் அடம்பிடிக்கும் காங். ..மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்..

Mathivanan Maran  - tamil.oneindia.com  :சென்னை: திமுக கூட்டணியில் தங்களுக்கு கடந்த முறை போல 41 தொகுதிகளை ஒதுக்கியாக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதாலேயே திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது என்பது விமர்சனம். ஆனால் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் 8-ல் அந்த கட்சி வென்றது.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் திமுக ஆகக் கூடுமானவரை அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை குறைத்து கொடுப்பது என முடிவெடுத்துள்ளது. ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் கூட இதனை ஏற்றுக் கொண்டதாகவே கூறப்பட்டது. 
 
இதனை உறுதிப்படுத்தும்விதமாக தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும், திமுகவுடன் தொகுதிகள் தொடர்பாக பேரம் பேசப் போவதில்லை என கூறியிருந்தார்.

யார் ஆட்சியில் ஊழல்? நேரில் விவாதிக்க வருமாறு முதல்வருக்கு ஆ. ராசா சவால்

BBC " 2 ஜி ஸ்பெக்டரம் விவகாரத்தில் தி.மு.க ஊழல் செய்ததாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், இது தொடர்பாக விவாதத்திற்கு வரும்படி தி.மு.கவின் சார்பில் சவால் விடப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் செய்யப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வியாழக்கிழமையன்று ஆய்வுசெய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.                       அப்போது, தி.மு.க. தேவையில்லாமல் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தங்கள் மீது தெரிவிப்பதாகக் கூறினார்.          “எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தினமும் அறிக்கை விடுகிறார். அவருக்கு அறிக்கை நாயகன் என்றே பெயர் சூட்டலாம். மக்களைப் பார்த்து மனு வாங்காமல், நான்கைந்து மாதமாக வீட்டிலேயே இருந்துகொண்டு இந்த ஆட்சியில் ஊழல் நடப்பதாக பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்.

கடைசி தலைமுறை அரசுமருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவத்துறை டெக்னிஷியன்கள் ....அடுத்த அதிர்ச்சி..!

Maha Laxmi : · அடுத்த அதிர்ச்சி..! இது உண்மையான தெரியவில்லை அப்படி இருந்தால் மாபெரும் கொடுமை கடைசி தலைமுறை அரசுமருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவத்துறை  டெக்னிஷியன்கள் அனைத்து பிரிவு மருத்துவ ஊழியர்களும் இப்போது  இருப்பவர்கள் தானா?

மத்திய அரசின் #மாபெரும்திட்டங்கள்!    மருத்துவ கல்விக்கு பிறகு  அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மோடி அரசின் புண்ணியங்கள்: 

இந்தியாவின் எட்டு பெரும் நகரங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் உள்ள வளாகத்தில் 50 அல்லது 100 படுக்கை வசதிக்கொண்ட கட்டிடத்தை #தனியாருக்கு 30வருடங்களுக்கு கொடுக்க வழிவகை செய்யும் ஒரு ஓப்பந்தத்தை அனைத்து மாநில அரசுக்கும் மத்திய நிதி ஆயோக் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனுப்பியிருக்கிறது. 

இதன் மூலம் இந்திய ஒன்றியத்தில் பெரும்பாலான மக்கள் நம்பிக்கொண்டு இருக்கும் அரசு மருத்துவமனைகளையே இல்லாமல் செய்யும் வேலையை மோடி அரசு செய்ய துணிந்திருக்கிறது.

Dev Anand நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அதையும் தாண்டி சினிமாவை நேசித்த இந்திய டாப் ஸ்டா

                   Ezhumalai Venkatesan :இந்திராகாந்தியை பதறவைத்த எவர்கிரீன் ஹீரோ..   ..உண்மையிலேயே பெயரை உச்சரிக்க உச்சரிக்க அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.. தன்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த இளம்பெண்ணை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி முன்னணி நடிகையாக நிலை நிறுத்தியவர். அவர் வேறு யாருமல்ல இப்போது அனில் அம்பானியின் மனைவியாக இருக்கும் டினா முனீம். ஜீனத் அமன் என்ற கவர்ச்சி புயலை உருவாக்கி இந்தித் திரையுலகம் என்ற கரையை கடக்க விட்டு அதிரச் செய்தவர் தேவானந்த். ரையில் மட்டுமல்ல திரைக்கு எதிராக நடந்த அரசியல் நிகழ்வுகளையும் கண்டு கொதித்தெழுந்து அதிரச் செய்தவர் அவர் .
1975ல் மிசா என்ற நெருக்கடி நிலையை இந்திராகாந்தி அமல் படுத்தியபோது பல்வேறு மாநிலங்களில் திரைத்துறையினர் பலரும் அவரது ஆட்சிக்கு எதிராக பம்மினர், தமிழகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வாயே திறக்காமல் மௌனப்புரட்சி செய்து சாந்த சொரூபமாக காட்சி அளித்தார்.

லாலு பிரசாத்தின் சுயசரிதை GOPALGANJ TO RAISINA “நாங்கள் ஏழைகள்தான்… ஆனால் படிக்க ஆசைப்படுபவர்கள்.

Image may contain: 1 person, smiling, eyeglasses and text

லாலு பிரசாத் முதலமைச்சராக இருந்த காலங்களில்… ”வழக்கமாக” ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தலித்துகளுக்கு வீடுகட்டித் தருவதற்கு மாற்றாக நகரின் மத்தியில் அடுக்குமாடி வீடு கட்டிகொடுத்தார். அரசு நிலத்தில் அமைந்திருந்த கோடீஸ்வரர்களுக்கான 200 ஏக்கர் பாட்னா கோல்ப் மைதானத்தை கைப்பற்றி மிருகங்கள் சுதந்திரமாக உலவட்டும் என அருகில் இருந்த பாட்னா மிருகக்காட்சி சாலையோடு இணைத்தார். பணக்காரர்கள் குடிக்கவும் கும்மாளமிடவுமாய் இருந்த பாட்னா ஜிம்கானா கிளப்பில் 60 சதவீதம் கையகப்படுத்தி... அதில் இனி ஏழை ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் வீட்டு திருமண நிகழ்வுகள் உட்பட சகலத்தையும் வைத்துக் கொள்ளலாம் என அறிவிகத்தார் . . ஒரு புறத்தில் பணக்காரர்கள் விலை உயர்ந்த மதுபானங்கள் குடித்துக் கொண்டிருக்கும்போது ஏழைகள் என்ன செய்வார்களென யோசித்து . “இனி நீங்களே உங்களுக்கான உள்ளூர் கள்ளையும் கறியையும் கையோடு கொண்டு வாருங்கள். இங்கேயே உங்களுக்கு விருப்பமான ஆடு கோழி பன்றி என சமைத்துச் சாப்பிடுங்கள். இது வசதி உள்ளவனுக்கு மட்டுமேயான இடமல்ல. இது உங்களுக்கானதும்தான் என அறிவிகொடுத்தார் லாலு பிரசாத்

andhimazhai.com :புத்தகம்… அப்படி ஒரு புத்தகம். படிக்கக் கையில் எடுத்ததில் இருந்து முடிக்கும் வரை அவ்வளவு சுவாரசியம். . எல்லாம் நம்ம தலைவர் லாலு பிரசாத்தின் சுயசரிதைதான். . லாலு பிரசாத் என்றாலே ஒரு இளக்காரப்பார்வை எண்ணற்றவர்களிடம் உண்டு. அதுவும் அவரை நம்மூர் பசுநேசர் ராமராஜனோடு ஒப்பிட்டுச் செய்த பகடிகள் ஏராளம். . ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி அவர் யார்? எப்படிப்பட்டவர்? எவ்விதம் இவ்வளவு உயரத்துக்கு வந்தார்? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை இந்த நூலில் இருக்கிறது. . அதிலும் தான் எந்த இடத்தில் தடுமாறினேன்…. தவறிழைத்தேன் என்கிற மனம் திறந்த ஒப்புதல் வாக்குமூலங்களும் உண்டு இதில். அவருக்கே உரித்தான நக்கல் நையாண்டி ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கிறது. தமிழிலேயே தடுமாறும் நான் இந்த இங்கிலீஷ் புத்தகத்தை வாசித்துவிட்டேன் என்றால் உங்களால் முடியாதா என்ன? (GOPALGANJ TO RAISINA)

ஃபைசர் பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனுமதி வழங்கிய பிரிட்டன்

BBC : ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது பிரிட்டன் அரசு. இதன் மூலம் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாகிறது பிரிட்டன். உடலில் செலுத்தப்பட்ட 95% பேருக்கு கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாப்பளிக்கும் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது பாதுகாப்பானது என்று பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான எம்.ஹெச்.ஆர்.ஏ தெரிவித்துள்ளது. அதிக முன்னுரிமை வழங்கப்படும் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு அடுத்த வாரம் முதல் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படுவது தொடங்கும். இரண்டு டோஸ்களாக வழங்கப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் நான்கு கோடி டோஸ்களை பிரிட்டன் ஏற்கனவே ஆர்டர் செய்துள்ளது.

இது இரண்டு கோடி பேருக்கு கோவிட்-19 தொற்றுக்கான நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்க போதுமானது.

மகாராஷ்டிராவில் ஊர்களின் ஜாதிப்பெயர்கள் அகற்ற முதல்வர் உத்தம் தாக்கரே உத்தரவு .. சமத்துவபுரம் பாணியில் சமதா புரம்?

Karunanidhi G - திராவிட ஆய்வு : · சமூக மாற்றத்திற்கான முதல் முயற்சி மராட்டிய மாநிலம் முழுமையும் பிராமணர்கள், மகர்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) என சாதிகளின் பெயர்களில் உள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் புதிய பெயர் சூட்டப்படும் என மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து இருக்கின்றார். இது சமூக மாற்றத்திற்கான முதல் முயற்சி தந்தை பெரியார் காட்டிய வழியில் திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் நிகழ்த்திய சமூக மாற்றத்தை மராட்டியம் பின்பற்றத் தொடங்கி விட்டது. 

மகர் வாதா, பிராமண் வாதா, மங் வாதா, தோர் வஸ்தி, பெளத் வாதா, மல்லி கல்லி போன்ற சாதிப் பெயர்கள் ஒழிக்கப்படுகின்றன. மாற்றாக, சமதா நகர், பீம் நகர், ஜோதி நகர், சாகு நகர், கிராந்தி(புரட்சி) நகர்  போன்ற பெயர்கள் சூட்டப்படும்.அம்பேத்கர் பெயரில் வழங்கப்படுகின்ற தலித் விருது அம்பேத்கர் சமஜ் பூசண் விருது என மாற்றப்படும்.  Maharashtra to rechristen all localities with caste-based names CM Uddhav Thackeray, who chaired the cabinet meeting on Wednesday, said the decision would help to create social harmony and increase national unity among all caste and creed.

வியாழன், 3 டிசம்பர், 2020

தேனில் சர்க்கரை பாகு கலப்படம் -டாபர், பதஞ்சலி, பைத்யநாத் மற்றும் ஜண்டு உள்ளிட்ட 13 முன்னணி பிராண்டுகள்! சோதனையில் சிக்கின...

maalaimalar.com :அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய கலப்படமற்ற தேனுக்கான சோதனையில் 10 முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் தோல்வி அடைந்துள்ளன. புதுடெல்லி: நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் தேனில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பல தூய்மை சோதனைகள் உள்ளன. அவ்வகையில், சமீபத்தில் சில பிரபலமான பிராண்டுகளால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவரும் தேன், தூய்மைக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய இந்த சோதனையில், பல நிறுவனங்களின் தேனில் செயற்கை சர்க்கரை பாகை கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது. ூலக்கூறு மட்டத்தில் ஒரு பொருளின் கலவையை அறிவதற்கான இந்த சோதனை (என்எம்ஆர் சோதனை) ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் செய்யப்பட்டுள்ளது. தேனை ஏற்றுமதி செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு இந்த சோதனை தேவைப்படுகிறது.

RSS-ன் மறைமுக தேர்தல் பணியின் சூத்திரமும், நோக்கமும்

Image may contain: 6 people, including Krish Marudhu, text
  madrasradicals.com : இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு போன்று வேறு எந்த அமைப்பாலும் கலச்சாரம், மதம், பண்பாடு, குடும்பம் என்று மக்களின் தனிப்பட்ட வாழ்கைக்குள் வெகுவிரைவாக சென்றுசேர முடிவது கிடையாது. எவ்வளவுதான் முற்போக்கான கட்சியாக இருந்தாலும், தன் மக்களின் மீது அக்கறை கொண்ட மாநில கட்சியாக இருந்தாலும், இடைவிடாது மக்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் கட்சியாக இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் போன்று தனிமனித வாழ்விற்குள் எளிமையாக நுழைய முடிவதில்லை. 

மதம் மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாக வைக்கப்பட்டதால் மட்டுமே இந்தியத் துணைக்கண்டத்தில் சாதி எனும் மிகக் கொடுமையான முறை பாதுகாக்கப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் பொருளாதார சுரண்டலை மையமாக வைத்து சாதிய அமைப்பு இயங்கினாலும் அது வெகுமக்களிடம் ஒரு புனிதமாக, கடமையாக, ஒரு நெறிமுறையாக கட்டாயம் உணரவேண்டிய விழுமியமாக பாதுகாக்கப்பட்டது. 

பாஜகவின் வெற்றிகளில் ஆர்.எஸ்.எஸ்-சின் கண்ணுக்கு தெரியாத கை

இதுபோன்ற ஒரு உளவியலைத்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எளிய மக்களைச் சென்றடைய பயன்படுத்துகிறது. இது மக்களுக்கு ஒரு கலாச்சார நம்பகத்தன்மை கொண்ட அடையாளத்தை வழங்குகிறது. அதன் நுட்பங்கள் அடிப்படையில் சாதி, சமூக வலைப்பின்னல்களை உடையது. இந்த வலைப்பின்னல் பாரதிய ஜனதா கட்சியால் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் நடந்த பொதுத் தேர்தலைகளை ஆய்வு செய்யும்போது பாஜக-வின் கரங்கள் வலுப்பெற்ற இடத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு தனித்துவமான வேலைத்திட்டத்துடன் களமிறக்கப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வம் : ரஜினியுடன் வாய்ப்பு இருந்தால் கூட்டணி அமையும்


nakkeeran : வருகின்ற 2021 ஜனவரி மாதம், அரசியல் கட்சித் தொடங்குவதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31 -ஆம் தேதி வெளியாகும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்துத் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், அவரது அரசியல் வருகைக்குப் பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் வீரபாண்டி அருகே உள்ள தப்புகுண்டு பகுதியில் அமைய இருக்கும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இடத்தை நேரடியாக ஆய்வு செய்தார்.

தமிழருவி மணியன் : ரசிகப் பெருமக்களுக்கும், ஊழலற்ற, நேரிய ஆட்சியைத் தர ரஜினி ஒருவரால் மட்டுமே முடியும்

alternative-politics-malara-rajini-has-landed-in-a-fray-i-will-be-like-a-squirrel-to-rama-tamilruvi-maniyan-speech
.hindutamil.in : மாற்று அரசியல் மலர ரஜினி ஒரு வேள்வியில் இறங்கியுள்ளார்; ராமருக்கு அணில்போல் நான் இருப்பேன்: தமிழருவி மணியன் பேச்சு

தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையிலும், மருத்துவர்கள் கொடுத்திருக்கிற எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு மக்கள் நலனுக்காக, மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என்பதற்காக ரஜினி இன்று ஒரு மிகப்பெரிய வேள்வியில் இறங்கியிருக்கிறார் என்று தமிழருவி மணியன் பேசினார்.


ரஜினி, போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தின் முன் கட்சி தொடங்குவது குறித்து அறிவித்தார். அதற்குப் பின், தமிழருவி மணியனைத் தனது பணிக்கான மேற்பார்வையாளராக நியமித்துள்ளதாகத் தெரிவித்தார்.... அதன்பின்னர் தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் இன்று பேசியதாவது: ...

ரஜினி teaser release : அரசியல் கட்சி துவக்கம்... மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் இப்போ இல்லேன்னாஎப்பவும்இல்ல

maalaimalar :ென்னை: ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல் கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாக இருந்து விட்டார். அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!!! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் புரேவி புயல்- யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறையில் மிக மோசமான சேதம்!

Mathivanan Maran - /tamil.oneindia.com/ யாழ்ப்பாணம்: இலங்கையில் பேயாட்டம் போட்டு கரையை கடந்த புரேவி புயல் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் புரேவி புயலால் இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே நேற்று இரவு புரேவி புயல் கரையை கடந்தது. இலங்கையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முல்லைத்தீவை ஊடறுத்து புயல் கரையை கடந்துள்ளது.

இந்த புயல் தற்போது மன்னார்வளைகுடாவுக்குள் நுழைந்து பாம்பனை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புரேவி புயல் கரையை கடந்த போது மணிக்கு 80கி.மீ. முதல் 100 கி.மீ. வரை பலத்த சூறாவளி காற்று வீசியது. பாம்பனை நெருங்கிய புரேவி புயல்- பல மாவட்டங்களில் கனமழை- இன்று இரவு அல்லது அதிகாலை கரையை கடக்கிறது இப்புயலால் இலங்கையின் பல பகுதிகளில் 20 செ.மீ மழை பதிவாகி இருக்கிறதாம். இந்த புரேவி புயல் முழுவதும் தமிழரின் தாயகப் பகுதிக்குள்தான் கரையை கடந்தது. இதனால் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னர், கிளிநோச்சி மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கு வங்கம் madrasradicals.com  : 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் விளங்குகிறார்கள். ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கியாக பீகார், உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த வட இந்திய தொழிலாளர்கள் மாறவில்லை என்றாலும், அவர்களது அரசியலுக்கு சார்பானவர்களாகவே இருக்கின்றனர். மேற்கு வங்காளத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் வரலாறு அரசியலாகச் சொல்லப்போனால் மேற்கு வங்காளம் தனக்குள் பல வங்காளங்களைக் கொண்டுள்ளது. இந்தி மொழி பேசும் வங்காளத்தின் பகுதியானது வட இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் உருவானது. இந்தப் புலம்பெயர்தல் மிக நீண்ட வரலாறு கொண்டது. காலனி ஆட்சிக்காலத்திலேயே தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் முதலானோர் அடங்கிய ஒரு மிகப்பெரிய மக்கள் தொகை வங்கத்தை நோக்கி புலம்பெயரத் தொடங்குகிறது. 1960-ம் ஆண்டு வரை இந்த புலம்பெயர்தல் நிகழ்ந்து கொண்டிருந்தது. வங்காளத்தின் தொழிற்சாலைகள் 60-களின் காலகட்டத்தில் குறையக் குறைய, புலம்பெயர்தலும் கணிசமாகக் குறையத் தொடங்கியது. 

அறிமுக போட்டியிலேயே அசத்தல்: டி.நடராஜனுக்கு முதலமைச்சர் பழனிசாமி, முக ஸ்டாலின் வாழ்த்து

maalaimalar :ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே அசத்திய டி நடராஜனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ... ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டி நடராஜன் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். கடைசி நேரத்தில் சிறப்பான யார்க்கர் பந்து வீச்சால் கடைசி நேரத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சீன பருத்தி பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதிப்பு

dailythanthi.com : உய்குர் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பருத்தி பொருட்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்து உள்ளது. 

வாஷிங்டன், சீனாவில் உள்ள முகாம்களில், சிறுபான்மை சமூகம் என அறியப்படும் உய்குர் முஸ்லிம்களில் பெரும்பகுதியினரை அரசியல் மறு கல்வியூட்டல் என்ற பெயரில் அந்நாடு சிறை பிடித்து கொடுமைகளை இழைத்து வருகிறது என அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஐ.நா. நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சீனா இதனை மறுத்து வருகிறது.  அவர்கள் தவறாக நடத்தப்படவில்லை.  உய்குர் முஸ்லிம்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது என தெரிவித்தது.

எனினும், இதுபோன்ற சிறைப்படுத்தப்பட்ட கைதிகளாக முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு, சித்ரவதை செய்தல், அடித்து துன்புறுத்துதல் மற்றும் உணவு மற்றும் மருந்து ஆகியவை மறுக்கப்படுதல் ஆகிய கொடுமைகளுடன் தங்களது மத வழக்கங்களை பின்பற்றுதல் அல்லது தங்களது மொழியை பேசுவதற்கு தடை விதித்தல் போன்ற இன்ன பிற கொடுமைகளும் நடைபெறுகின்றன என கூறப்படுகிறது.

முகக்கவசம் அணியாததால் அந்தரத்தில் விமானத்துக்குள் அடிதடி!


 puthiyamugam.com : ஆம்ஸ்டெர்டாமிலிருந்து இபிஸா நகருக்குச் சென்ற விமானத்தில் இருந்த பயணிகளுக்கிடையே முகக் கவசம் அணிவது தொடர்பான பிரச்னை வன்முறையில் சென்று முடிந்துள்ளது.

பலர் தடுக்க இரு ஆண்கள் கோபமாகச் சண்டையிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சட்டையில்லாத ஒருவரை பலர் தடுத்துப் பிடிக்கிறார்கள். அவரை மற்றொருவர் தாக்குகிறார். அங்கிருப்பவர்கள் “நிறுத்துங்கள், இங்கே குழந்தைகள் உள்ளனர்.” என்று கத்துகின்றனர். அந்த வீடியோவின் கடைசியில் சட்டையில்லாத அந்த நபர் கீழே தள்ளப்பட்டு மற்றவர்களால் தரையில் அழுத்தி பிடிக்கப்பட்டிருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த பதிவில் ’இச்சண்டையில் ஈடுபட்ட ஒருவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் மது அருந்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஎல்எம் நிறுவன விமானத்தில் நடந்த இந்த சண்டையின் காரணமாக அந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன், 2 டிசம்பர், 2020

சார்பட்டா பரம்பரையின் சாம்பியன் ‘நாக்அவுட் கிங்’ காசிமேடு ஆறுமுகம்! குத்துச்சண்டை.. தமிழகம் இழந்த ஒலிம்பிக் வாய்ப்புகள்

Gnatppan Siva : · சார்பட்டா பரம்பரையின் கடைசி காலத்து அசைக்கமுடியாத சாம்பியனாக இருந்து, ‘நாக்அவுட் கிங்’ காசிமேடு ஆறுமுகம். 1977 வரைக்கும் இவர் கொடிதான் பறந்தது. ‘‘எங்க பரம்பரைய ‘சதுர்சூரிய சார்பட்டா பரம்பரை’ன்னு சொல்வாங்க. அதுக்கு அர்த்தம் தெரியாது!, பாக்ஸிங் மேடையில முதல்ல அடிப்பதுபோல லெப்ட், ரைட்னு எதிராளி முகத்துக்கு முன்னாடி கையைக் காட்டி பயம் காட்டுவேன். ‘இவன் அடிக்கமாட்டான்’னு எதிராளி முடிவுக்கு வரும்போது சடார்னு வெயிட்டா ஒரு பன்ச் விடுவேன். இதுதான் என் ஸ்டைல். இதுக்குத்தான் ‘நாக்அவுட் கிங்’னு பேர் கிடைச்சுது. -

நாக் அவுட் ஆறுமுகம்.. வன்முறை பூமியாக இப்போது காட்டப்படும் வடசென்னைதான் அந்த வீரம் விளைந்த மண்.             இந்தப் பகுதியில்தான் இடியப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை என்ற பெயர்களில் அமைந்த இரண்டு குழுக்களிலிருந்து புறப்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மோதியிருக்கிறார்கள்.. ‘‘போட்டியில் மோதும் இரண்டு பாக்ஸர்களையும் ஸ்டூடியோவில் வைத்து முதலில் போட்டோ எடுப்பார்கள்.             இந்த போட்டோவைத்தான் பிட் நோட்டீஸ், விளம்பர தட்டிகள், போஸ்டர்கள், தியேட்டர் ஸ்லைடுகளில் காண்பிப்பார்கள். போட்டோவில் இரண்டு பாக்ஸர்களும் ஈக்குவலா தெரியணும். இல்லாவிட்டால் பாக்ஸர்களுக்கான அசோசியேஷன் அனுமதிக்காது. எல்லா போட்டிகளுக்கும் ஒரு கான்டிராக்டர் இருப்பார். அவரிடம் கான்ட்ராக்டில் கையெழுத்து போட்டதும்தான் போட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியும்." -பாக்ஸர் மோகன்..

 


 kungumam :பெருமிதம் கொள்ளவும், ஆரவாரம் செய்யவும், வெற்றித் தருணங்களை ஒலிம்பிக் போட்டிகளில் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாறுகிறோம். இந்தியனாக இது வேதனை தருகிறது; தமிழர்களுக்கு அதில் இன்னும் வேதனை. தோற்கிறார்களோ, ஜெயிக்கிறார்களோ... அதிகம் வீரர்களை அனுப்பி வைத்த மாநிலம் என சொந்தம் கொண்டாடுகிறது குட்டியூண்டு ஹரியானா. நாமோ, ககன் நரங் ஜெயித்ததும் ‘அவர் சென்னையில் பிறந்தவர்’ என ஆறுதல் அடைகிறோம்.

மேட்டுப்பாளையம்.. 17 உயிர்களை பறித்த தீண்டாமை சுவர்! மீண்டும் புதிய சுவரிலும் இதே..

மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக : 2 டிசம்பர் 2020 கடந்த ஆண்டு, டிசம்பர் 02 ஆம் தேதி அதிகாலை கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் உள்ள ஆதி திராவிடர் காலனியில் சுமார் 25 அடி உயர கருங்கல் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். 

தமிழகத்தையே உலுக்கிய அந்த கோர விபத்து நடந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், இன்றுவரை அப்பகுதியில் பாதுகாப்பில்லாத நிலையில் பல குடியிருப்புகள் இருக்கின்றன.                     சுவர் இடிந்து விழுந்த விபத்தில் தனது உறவினர்களை இழந்த மணி, வலிநிறைந்த நினைவுகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். அன்றைய தினம் எங்கள் பகுதியில் கனமழை பெய்தது. மழை பெய்தாலே ஆதி திராவிடர் காலனியை மட்டும் வெள்ளநீர் சூழ்ந்து கொள்ளும். காரணம், இப்பகுதி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. இடிந்து விழுந்த சுவரின் அருகே இருந்த ஓட்டு வீட்டில் எனது இரண்டு சகோதரர்களின் குடும்பங்கள் வசித்து வந்தன.          நான், எனது மகன் மற்றும் மருமகளோடு ஓடையின் அருகே வசித்து வந்தேன். அதிக மழைப் பொழிவு காரணமாக எனது வீட்டுக்குள் மழைநீரும் சாக்கடைநீரும் இடுப்பளவு வந்து விட்டது. அருகில் வசிப்பவர்களின் உதவியோடு வீட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த போது, எனது தம்பியின் வீடு இடிந்துவிட்டதாக தகவல் வந்தது."

மதுரையில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட ரமேஷின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

minnambalam :மதுரை பேரையூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அணைக்கரை பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மகன் ரமேஷ். கடந்த செப்டம்பர் மாதம் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர், அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். ரமேஷின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, சார்பு காவல் ஆய்வாளர்கள் ஜெய கண்ணன், பரமசிவம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மதுரை இளைஞரின் மர்ம மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
ரமேஷ்

இந்த சூழலில் பேரையூரை சேர்ந்த சந்தோஷ், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  “எனது சகோதரர் இதயக்கனி, புனிதா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். புனிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சாப்டூர், சார்பு ஆய்வாளர்கள் ஜெயகண்ணன் மற்றும் காவலர் ராஜா ஆகியோர் எனது குடும்பத்தினரை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்தனர்.

பாமக வலுவான மாவட்டங்களில் படிப்பறிவு குறைவு? பள்ளி இடைநிற்றலும் அதிகம்? தமிழக அரசு புள்ளி விபரங்கள்

 

tharmenthiran L பாமக வலுவாக இருக்கும் பெரும்பாலான மாவட்டங்களில் படிப்பறிவு குறைவாகவும்.. பாதியில் பள்ளி இடைநின்றலும் அதிகமாக இருப்பதாக தமிழக அரசு புள்ளி விபரங்கள் ....
அதற்காண விழிப்புணர்வை 30"ஆண்டுகளாக பாமக முன்னெடுக்கவில்லையே ஏன்?               
அது போன்ற ஒரு முன்னெடுப்பினால் மட்டும்தானே எந்த சமூகமும் முன்னேற முடியும்?   
90"களில் இருந்த அரசு வேலைவாய்ப்பு 2020"ல் குறைந்து தனியார் வேலைவாய்ப்புக்களே தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் படிக்காத பாதியில் நிறுத்திய வாரிசுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தால் 20% இடஒதுக்கீடு பெற்றாலும் வன்னிய சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சாரரே பயன்  பெறபோவதால் எப்படி ஒட்டுமொத்த சமூகமும் முன்னேற முடியும்?

நடிகை வித்யா பாலன் இரவு விருந்துக்கு செல்லாததால்… பட ஷூட்டிங்கை நிறுத்திய ம.பி. அமைச்சர்

Image may contain: 2 people, text that says ''で' 54 UVNEWS AMA NEWS 7 कार JUSTIN ம.பி. வனத்துறை அமைச்சர் மீது வித்யா பாலன் புகார்! இரவு விருந்துக்கு விடுத்த அழைப்பை மறுத்ததால் வனப்பகுதியில் நடைபெற இருந்த படப்பிடிப்புக்கு தடை விதித்தாக ம.பி. வனத்துறை அமைச்சர் விஜய்ஷா மீது நடிகை வித்யாபாலன் புகார்; வித்யாபாலனின் புகாருக்கு அமைச்சர் மறுப்பு! 02 DEC 2020 *TEEL 147 207 191 0711 082 020 154日 051'

maalaimalar :பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கும் ஷேர்னி படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடந்து வருகிறது. மத்திய பிரதேச வனப்பகுதியில் நடத்தப்பட்டுவரும் சில காட்சிகளின் படப்பிடிப்புக்காக அவர் கடந்த சில வாரங்களாக அந்த மாநிலத்தில் தங்கி படப்பிடிப்பில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநில அமைச்சரின் இரவு உணவுக்கான அழைப்பு நிராகரிக்கப்பட்டதால், படத்தின் படப்பிடிப்பு அங்கு நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.                       மத்திய பிரதேச வனத்துறை அமைச்சர் விஜய் ஷா இரவு உணவிற்கு வித்யா பாலனை அழைத்ததாகவும், அதை அவர் நிராகரித்ததாகவும், இது நடந்து ஒரு நாள் கழித்து திரைப்படத்தின் தயாரிப்புக் குழுவின் வாகனங்கள் படப்பிடிப்புக்காக காட்டுக்குள் நுழைவது நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

நீதிபதி சி.எஸ். கர்ணன் சென்னையில் கைது

கர்ணன்

BBC : உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் தொடர்பாக அவதூறு காணொளியை வெளியிட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் கைது செய்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கர்ணன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது செயல்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கர்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது கர்ணனுக்கு முதல் முறை அல்ல.                          3 ஆண்டுகளுக்கு முன்பே உயர் நீதிமன்ற நீதிபதி பதவி வகித்தபோதே அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளானார். அந்த வகையில் சர்ச்சைகளுடன் தமது சட்டத்துறை வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார் கர்ணன்.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் 232 வது குருமகா சன்னதி தானம் இயற்கை எய்தினார்

Image may contain: 1 person, sitting and indoor, text that says 'தொண்டை மண்டல ஆதீனம் ஞானப் பிரகாச மடம்'
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம்

காஞ்சிபுரத்தில் தொடங்கப்பெற்ற பிராமணரல்லாதோர் அர்ச்சகர் பயற்சிப்பள்ளிக்கு, பயிற்சியளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் என்பதும், 1973ம் ஆண்டு அமைக்கப்பெற்ற கோயில் நிலத்தை முறைப்படுத்தல் ஆலோசனைக்குழுவின் துணைத்தலைவர் மற்றும் பிராமணல்லாதோர் அர்ச்சகராகும் திட்ட ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் என பங்காற்றியவர் என்பதும் செங்கற்பட்டு வட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடலூர் கிராமம் மற்றும் முதலியார்க்குப்பம் ஆகிய கிராமங்களில் சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகள் அமைத்துக்கொடுத்தவர் என்பதும் போற்றுதலோடு குறிப்பிடத்தக்கது.

சிவா மயிலாடுதுறை : எனது பெரியப்பா - காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனகா்த்தா் 232 வது பட்டம் குருமகா சன்னதி தானம் சிவ பதம் அடைந்தார்.

சுவாமி அவர்கள் கிட்டதட்ட 21 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் குருமகா சன்னதி தானமாக பதவி ஏற்றுக் கொண்டார்.
இவர் எங்களது குடும்பத்தின் இரண்டாவது மூத்த பெரியப்பா - இந்தியா மற்றும் தமிழகம் முழுக்க சிவ ஸ்தலங்கள் சென்றவர் - சிவப் பக்தர்.

நாகர்கோவிலில் தமிழக பிச்சைக்காரர் ஜார்கண்ட் பிச்சைக்காரரால் அடித்துக் கொலை

               Jose Kissinger : · வடவனை உள்ளே விட்டு அவனிடம் குனிந்து கையேந்தியதில், நம்மை ஒரு வட நாட்டுப் பிச்சைக்காரனும் காவியணிந்து கொண்டு அடித்துக் கொல்கிறான். : நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அருகே அமைந்த பேக் கடைக்கு தமிழ்நாட்டு பிச்சைகாரர் முதலில் சென்று பிச்சை எடுத்துள்ளார். ஜார்கண்ட் பிச்சைக்காரரும் போட்டி போட்டுக் கொண்டு உடன் சென்றுள்ளார்.
தமிழ்நாட்டு பிச்சைக்காரருக்கு 2 ரூபாய் பிச்சை கிடைத்துள்ளது. 'யாராவது ஒருவருக்குதான் பிச்சை போட முடியும்' என்று கூறிய கடை உரிமையாளர் ஜார்கண்ட் பிச்சைக்காரரை விரட்டி விட்டுள்ளார். இதனால், ஜார்கண்ட் பிச்சைகாரர் தமிழ்நாட்டு பிச்சைக்காரரிடத்தில் கிடைத்த 2 ரூபாயில் தன் பங்காக 1 ரூபாயை தர வேண்டுமென்று கேட்டுள்ளார். தமிழ்நாட்டு பிச்சைக்காரர் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் நடுரோட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.

பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் புரெவி புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம்

maalaimalar :வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.                    திரிகோணமலைக்கு 300 கி.மீ., கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. புரெவி புயல் 6 மணி நேரத்தில் மேலும் வலுவடையும். இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது.                   கரையை கடந்த பின் புரெவி புயல் நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வருகிறது. 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 95 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.                           நாளை மறுநாள் அதிகாலை குமரி-பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புரெவி புயல் கரையை கடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாலு பஸ்சை உடைக்கிறது குடிசையை கொளுத்துறது ஆணவ கொலை செய்றது...

.
அக்னி சட்டிகளின் அராஜகத்துக்கு வெச்சி வெளுக்காம விட்டதே தவறு.. ஊடகங்களின் கவனம் மூலமாய் சொல்ல வேண்டிய செய்தியை எதிர்ப்பை பதிவு செய்வது வரை ஓகே. மேலை நாடுகளில் வெகுசன மக்களை பாதிக்காத வகையில் தான் ஏராளமான போராட்டங்களை பார்த்திருக்கிறேன். சாலையின் ஓரங்களில் பதாகைகளை ஏந்தி அவர்கள் சொல்ல வேண்டிய செய்தியை எதிர்ப்பை பதிவு செய்வார்கள். அவர்களின் கோரிக்கைகளுக்கு பள்ளி அல்லது கல்லூரி வளாகங்களில் அல்லது அரங்குகளில் வைத்து ஊடக விவாதங்களோ பேச்சுவார்த்தைகளோ நடக்கும். முடிவில் ஒரு தீர்வுக்கு வரும். அங்குள்ள தலைவர்கள் மக்களின் நியாயமான குரலுக்கு அமைதி வழி போராட்டங்களுக்கு செவி சாய்ப்பார்கள். ஆனால் இங்கே செவுட்டு மந்தைகள் தான் தலைமைகளில் இருக்கின்றன. அந்த வகையில் சாலை மறியல் ரயில் மறியல் உள்ளிட்ட சில போராட்ட வடிவங்களை ஏற்காமல் வேறு வழியில்லை.. வெள்ளைக்கார நாடுகளை போல போராட்ட வடிவங்கள் இன்னும் மேம்படணும். சக மனிதர்கள் இன்னலுக்கு உள்ளாக கூடாது

செவ்வாய், 1 டிசம்பர், 2020

1967 பின் சென்னையில் மட்டும் காணாமல் போன ஏரிகள், குளங்கள்.. 39 !

No photo description available.
    
Maha Laxmi : · 1967 பின் காணாமல் போன ஏரிகள், குளங்கள்.. இது சென்னை மட்டுமே.. தமிழகமெங்கும் கணக்கெடுத்தால் தாங்காது சாமி... சென்னையில் நகரமயத்திற்கு இரையான ஏரிகள் இவை. 1.நுங்கம்பாக்கம் ஏரி,
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4 .  .முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9.போரூர் ஏரி,
10.ஆவடி ஏரி,
11.கொளத்தூர் ஏரி,
12.இரட்டை ஏரி,
13.வேளச்சேரி ஏரி,
14.பெரும்பாக்கம் ஏரி,
15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
16.கல்லு குட்டை ஏரி,
17.வில்லிவாக்கம் ஏரி,

கனடாவில் பஞ்சாபியர்கள் மிகவும் பலம் வாய்ந்த ஒரு சிறுபான்மையோர்களாக உள்ளார்கள்

Image may contain: 6 people, beardகனடாவில் பஞ்சாபியர்க்கள் மிகவும் பலம் வாய்ந்த ஒரு சிறுபான்மையோர்களாக உள்ளார்கள் . கனடா மத்திய அமைச்சர்களாக பஞ்சாப் சீக்கியர்கள் உள்ளார்கள் . அதுவும் வெறும் சாதா அமைச்சர்கள் அல்ல. கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் மற்றும் விஞான தொழில் துறை அமைச்சர் . பதினெட்டு எம்பிக்கள் உள்ளனர் . மூன்றாவது பெரிய கட்சியின் தலைவராக ஒரு தலைப்பாகை கட்டிய சீக்கியரே உள்ளார் கனடாவின் மாகாண அரசியலிலும் அவர்கள் கணிசமான பொறுப்புக்களில் உள்ளார்கள். தொழில் வர்த்தக துறைகளில் நல்ல நிலையில் உள்ளார்கள் . இவர்களின் குரலை கனடிய அரசு எளிதில் புறந்தள்ளி வீட முடியாது.
வெறுமனே வீதியில் நின்று கோஷம் போடும் நிலையில் இருந்து அதிகார மையத்தில் ஓரளவு செல்வாக்கு மிக்கவர்களாக முன்னேறி உள்ளனர்
பெரும்பான்மையான சீக்கியர்கள் இன்னும் காலிஸ்தான் அபிமானம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள் .

நேபாளத்தின் இறையாண்மை பாதுகாக்க சீனா உறுதி

latest tamil news

dinamalar.com : பீஜிங் : நேபாளத்தின் இறையாண்மை, சுதந்திரம், எல்லை ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதாக, சீனா தெரிவித்துள்ளது.சீன ராணுவ அமைச்சர் வெய் பெங்கி, ஒரு நாள் பயணமாக நேபாளம் சென்றார். இது குறித்து, சீன பாதுகாப்பு துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:வெய் பெங்கி, நேபாள பிரதமர் சர்மா ஒலி, ராணுவ தளபதி பூர்ண சந்திர தாபா ஆகியோரை சந்தித்து பேசினார்.கொரோனாவால், நிறுத்தப்பட்ட, நேபாளம் - சீனா இடையிலான ராணுவ பயிற்சியை மீண்டும் துவங்குவது குறித்து, பேச்சு நடத்தினார். நேபாள ராணுவத்தை மேம்படுத்த, சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என, தெரிவித்தார்.

'ஒரே சீனா' கொள்கைக்கு நேபாளம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். அதுபோல, இதர நாடுகளும், தைவான், திபெத் ஆகியவை, சீனாவின் அங்கம் என்பதை ஏற்க வேண்டும். 

முக அழகிரி : நான் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் வதந்தியே

சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்.. வெற்றி திமுகவுக்கே! - அழகிரி பேட்டி |  DMK will win in Sankaran Koil election - Azhagiri | சாதனைகளைச் சொல்லி  வாக்கு கேட்போம் ...

  webdunia :தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவிலிருந்து விலகி பல காலமாக அரசியல் தொடர்பின்றி இருந்த மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அவரது ஆதரவாளர்களோடு அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில் பாஜகவோடு அவர் இணைய போவதாகவும் பேசிக்கொள்ளப்பட்டது.          ஆனால் இந்த தகவல்களை மறுத்துள்ள மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கும் எண்ணம் தமக்கு இல்லை என கூறியுள்ளார்.

ஆனால், பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், மு.க.அழகிரி பாஜகவில் இணைந்தால் கண்டிப்பாக வரவேற்போம் என கூறினார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு இருக்கும் என தெரிவித்துள்ளார். 

கனடா பிரதமர் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு!

Justin Trudeau Expresses Concern Over Farmers' Protest In India, Says Its  Their Democratic Right | HW English

minnambalam : மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அமைதியான போராட்டத்திற்குக் கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 6 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போலீசாரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் போராடி வருகின்றனர்.

‘6 மாதங்களுக்கு தேவையான பொருட்களுடன் வந்துள்ளோம், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை டெல்லியிலேயே முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ஜந்தர் மந்தர் மற்றும் ராம் லீலா ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டெல்லி புறநகர்ப் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு

maalaimalar : சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை : தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதா, தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பினை பெற்று தந்து, தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து, “சமூக நீதி காத்த வீராங்கனை” என்று அனைவராலும்
போற்றப்படுகின்றார். தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது. மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் தேவைப்படுகின்றன.

இரானின் அணு விஞ்ஞானி 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் கொல்லப்பட்டார்

Prominent Iranian scientist Mohsen Fakhrizadeh in an undated photo
BBC :இரானின் முன்னணி அணு சக்தி விஞ்ஞானியான மொஹ்சென் ஃபக்ரிஸாதேவைச் சுட்டுக் கொலை செய்ய, இஸ்ரேல் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறிய அரசுக்கு எதிரான குழுவினர், ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் ஆயுதத்தை பயன்படுத்தியதாக நம்புகிறது இரான். மொஹ்சென் ஃபக்ரிஸாதே கொலை செய்யப்பட்டதில், இஸ்ரேலின் பங்கு இருக்கிறது என இரான் குற்றம்சாட்டுகிறது. ஆனால், இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. 2000-களில், இரானின் அணுசக்தி திட்டங்களில், மொஹ்சென் ஃபக்ரிஸாதே முக்கியப் பங்கு வகித்தார். இரான் அணு ஆயுதங்களை மேம்படுத்திவிடக் கூடாது என்கிற நோக்கில், பல மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஆனால், தன்னுடைய அணுசக்தி நடவடிக்கைகள் எல்லாமே ஆக்கப்பூர்வமானவை என இரான் வலியுறுத்திக் கூறியது.

இலங்கை சிறையில் கலவரம் 8 கைதிகள் உயிரிழப்பு 50பேர் காயம்.. தொடர்ந்து பதற்றம்

veerakesari :மஹர சிறைச்சாலையில் தொடர்ந்தும் குழப்ப நிலையும் வன்முறைகளும் தொடர்வதாகவும் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50பேர் காயமடைந்துள்ளதை பொலிஸ் அதிகாரி உறுதி செய்துள்ளார்.    சிறைச்சாலையில் வன்முறைகள் ஆரம்பமாகி 12 மணிநேரத்தின் பின்னரும் துப்பாக்கி பிரயோகத்தை கேட்க முடிவதாக அந்த பகுதியில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.    இன்று காலை 7.20க்கு துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மஹர சிறைச்சாலை முன் சிறைக்கைதிகளின் குடும்பத்தவர்கள் பெருமளவில் திரண்டவேளை அவர்களை கலகம் அடக்கும் பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.   

ரஜினி : அரசியலுக்கு வர மாட்டேன்.. ஒரு நாளைக்கு 14 மாத்திரை .... வெளிய போகக் கூடாதுனு டாக்டர்கள் சொல்லிட்டாங்க

 டிஜிட்டல் திண்ணை:  அரசியலுக்கு வர மாட்டேன் -தயாராகும் ரஜினி அறிக்கை!

minnambalam :  “நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தினரிடம் நேற்று (நவம்பர் 30) அன்று சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது தனது நிலைப்பாட்டை அவர் தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.   இதுபற்றியெல்லாம் மண்டபத்தில் மன்றத்தினரிடம் ரஜினி பேசியது என்ன என்ற தலைப்பில் நேற்றே மின்னம்பலத்தில் விரிவாக வெளியாகியிருக்கிறது. ரஜினி தனது மன்ற நிர்வாகிகளிடம், இப்போதைய தனது உடல் நிலை பற்றித்தான் அதிக அழுத்தம் கொடுத்துப் பேசியிருக்கிறார். ‘அரசியலுக்கு வரணும்னு உங்களை விட எனக்கு அதிக ஆர்வமும் ஈடுபாடும் இருந்துச்சு. கட்சி ஆரம்பிக்கிறது முன்னாடி சமயபுரம் மாரியம்மன் கோயில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி சர்ச்சுக்கு போயிட்டு மக்களை சந்திக்குறதுனு முடிவெடுத்திருந்தேன். ஆனா இந்த கொரோனா எல்லாத்தையுமே மாத்திப் போட்டுருச்சு.

பஞ்சாப், அம்ரிஸ்டர் அருகே ரயில் பாதை மறிக்கும் விவசாயிகள் – பாரத் பந்த் போராட்டம்

சாய்நாத்: பஞ்சாப், அம்ரிஸ்டர் அருகே ரயில் பாதை மறிக்கும் விவசாயிகள் – பாரத் பந்த் போராட்டம்! அடுத்தது அரசு கொள்முதல் நிலையங்கள் குறித்த பிரச்சனை. அரசு கொள்முதல் நிலையங்கள் எப்படி சித்தரிக்கப்படுகின்றன.? விவசாயத்தை முன்னேற விடாமல் தடுக்கின்ற ஒரு மிகப்பெரிய தீய சக்தியாக திட்டமிட்டே இவை சித்தரிக்கப் படுகின்றன. அரசு கொள்முதல் நிலையங்கள் ஏன் ஏற்படுத்தப்பட்டன? விவசாயிகளின் மீது கந்துவட்டிக்காரர்கள் – கமிஷன் மண்டிகாரர்களும் மிகப்பெரிய வியாபாரிகளும் செலுத்தி வந்த ஆதிக்கத்தை ஏகபோகத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயத்துறையில் அரசு கொள்முதல் நிலையங்கள் இருப்பதைப் போல, மற்ற துறைகளில் என்ன இருக்கின்றன? கல்வித்துறையில் அரசுப் பள்ளிகள் தான் அரசு கொள்முதல் நிலையத்துக்கு இணையான நிறுவனங்கள். அரசுப் பள்ளிகளில் கூடத்தான் ஏகப்பட்ட குறைகள் இருக்கின்றன. ஆனால் அவை தான் கோடிக்கணக்கான ஏழைப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கான வாய்ப்பையே வழங்குகின்றன. தனியார் பள்ளிகளில் விதவிதமாக இருக்கின்றன. எதில் வேண்டுமானாலும் உங்கள் பிள்ளையைச் சேர்க்கலாம் என்று தனியார் கல்வியின் புகழ் பாடுகிறார்கள். ஏழைப் பிள்ளைகள் தனியார் பள்ளிகளுக்கு போக முடியுமா?

திங்கள், 30 நவம்பர், 2020

ரஜினி : அரசியல் பிரவேசம் பற்றி விரைவில் முடிவை அறிவிப்பேன் .. பொறுமையாக இருங்க..

Image may contain: one or more people and indoorMaha Laxmi : · அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை அறிவிப்பார் நடிகர் ரஜினிகாந்த்!” - மக்கள் மன்ற நிர்வாகிகள்... ரசிகர்கள் வெளியே போங்க நீங்க எல்லாம் பணம் கொடுத்து சினிமா பாத்து கட்அவுட் பால் ஊத்தி போஸ்டர் ஒட்ட மட்டும் தான்... கட்சி நிர்வாகிகள் லா பாஜக காரங்க சொல்லும் ஆளுங்களுத்தான் பதவி .‌‌ வாழ்க கோஷம் போட மறக்காமல் வந்து
rajini fans

BBC :சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான மண்டபத்தில் நடைபெற்று வரும் மக்கள் மன்றத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அரசியலில் களமிறங்குவது குறித்து ரஜினி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ரஜினியின் மக்கள் மன்றத்தை சேர்ந்த சுமார் 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  முன்னதாக, கொரோனா பெருந்தொற்று பரவலை கருத்திற்கொண்டு இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் காணொளி வாயிலாக பங்கேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் நேரடியாகவே பங்கேற்றுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.