சனி, 6 நவம்பர், 2021

தென் மாநில முதல்வர்கள் மாநாடு! தென்னக முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு

 மின்னம்பலம் : தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த இருக்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
சவுத் சோனல் கவுன்சில் எனப்படும் தென் மண்டல வளர்ச்சி கவுன்சிலின் 29 ஆவது கூட்டம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் திருப்பதியில் நடைபெற இருக்கிறது. தென் மண்டல கவுன்சிலின் கடந்த கூட்டம் 2018 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த நிலையில் 29 ஆவது கூட்டம் திருப்பதியில் நடைபெற இருக்கிறது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடாகா, புதுச்சேரி ஆகிய மாநில முதல்வர்களும் புதுச்சேரி, அந்தமான் நிகோபார் ஆகியவற்றின் துணை நிலை ஆளுநர்கள், லட்சத் தீவின் நிர்வாக அதிகாரி ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் மாநில முதல்வர்களோடு தலைமைச் செயலாளர்களும் கலந்துகொள்வார்கள்.

முல்லைப்பெரியாறு பேபி அணைக்குக் கீழ் உள்ள மரங்களை வெட்ட கேரள முதல்வர் அனுமதி

MK Stalin thanks Kerala Chief Minister

 நக்கீரன் : நீண்டகால கோரிக்கை நிறைவேறியது... கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!
கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை குறித்து சர்ச்சைகள் வெளியாகிய நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப்பெரியாறு அணையை கடந்த 5 ஆம் தேதி நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''பேபி அணையைப் பார்த்துவிட்டுவந்தேன். அதன் கீழ் மரங்கள் இருக்கின்றன.
அதனை அகற்றக் கேரளா அரசிடம் கேட்டால், அது வனத்துறையிடம் இருக்கிறது என்கிறார்கள். வனத்துறையிடம் கேட்டால், ரிசர்வ வனத்துறையிடம் கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

“கொரோனா பரவலை முதன் முதலாக உலகிற்கு சொன்னதால் சிறைக்கு சென்ற பெண் பத்திரிக்கையாளர் கவலைக்கிடம்” : யார் இந்த ‘ஜாங் ஜான்’ ?

“கொரோனா பரவலை முதன் முதலாக உலகிற்கு சொன்ன பெண் பத்திரிக்கையாளர் கவலைக்கிடம்” : யார் இந்த ‘ஜாங் ஜான்’ ?

கலைஞர் செய்திகள் - பிரேம் குமார்  : சீனாவில் கொரோனா பரவலை முதன் முதலாக உலகிற்கு சொன்ன பெண் பத்திரிக்கையாளர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா பற்றிய தகவலை முதன்முதலில் ஊடங்களில் சொன்னவர் பத்திரிக்கையாளர் ஜாங் ஜான்.

சென்னையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடக்கம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு

 மாலைமலர்  : தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் உள்ள குளறுபடியை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சொல்லி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை:   தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. சென்னை நொச்சிக்குப்பத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் தடுப்பூசி போடும் பணிகள் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே அரசு மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகளின் வாயிலாக சுமார் 2,800 இடங்களில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற தொடங்கியது. அதன்பிறகு வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை தொடங்கி இதுவரை 7 தடுப்பூசி முகாம்கள் போடப்பட்டு அது மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது.

தீபாவளி சமணர்களின் கடைசி தீர்தங்கரான வர்த்தமான மகாவீரர் ... தினம்!

சமணமும் தமிழும் - மயிலை. சீனி.வேங்கடசாமி:  இன்று நாம் தீபாவளி என்றுச் சொன்னாலே அது ஒரு இந்துப் பண்டிகையாகத் தான் அறியப்படும். அப்பண்டிகையை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கிருசுனர் நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற தினத்தை சிறப்பிப்பதற்காக தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்கின்றனர். இராமர் தனது பதினான்கு ஆண்டு வனவாசத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய நாளை சிறப்பிக்க தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்கின்றனர். இன்னும் பல காரணம் கூறுகின்றனர்...ஆயினும் கிருசுனர் நரகாசுரனை கொன்றதை சிறப்பிக்கவே தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்பதே பலரின் நம்பிக்கை.

கர்நாடகாவில் பாக்குகளை திருடியதாக கூறி 16 வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல்”: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

“தோட்டத்தில் பாக்குகளை திருடியதாக கூறி 16 வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல்”: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
கலைஞர் செய்திகளை பிரேம்குமார்  : கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டத்தில் 16 வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம் கடபா தாலுகா சுப்ரமண்யா போலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குத்திகார் கிராமத்தில் பாக்கு தொட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் அடிக்கடி திருடு போவதாக இடத்தின் உரிமையாளர் அப்பகுதி இளைஞர்களிடன் கூறியுள்ளார்.

இந்தியாவை விட்டு வெளியேறும் முகேஷ் அம்பானி.. உண்மை என்ன..?

  Prasanna Venkatesh -  GoodReturns Tamil :  இந்தியாவில் இருந்து பல பணக்காரர்கள் வெளிநாடுகளுக்குத் தங்களது வீட்டையும் அலுவலகத்தையும் மாற்றி வருகிறார்கள்,
இன்னும் சிலர் கடனை வாங்கிவிட்டு இந்தியாவை விட்டு தப்பித்து வெளிநாடுகளுக்கு ஓடிவிடுகின்றனர். இவ்விரண்டுக்கும் பல பேர் உதாரணமாகச் சொல்ல முடியும்
இந்தியாவின் வேக்சின் கிங் எனக் கூறப்படும் ஆதார் பூனாவல்லா தனது வீட்டைப் பிரிட்டன் நாட்டுக்கு மாற்றினார்.
இந்த வரிசையில் தற்போது இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்குச் செல்கிறார் என்ற செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

முதன்முறையாக கொரோனா சிகிச்சைக்கு மாத்திரை!

 மின்னம்பலம் : உலகிலேயே முதன்முறையாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கொரோனா தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றாலும், காலம் செல்ல செல்ல தடுப்பூசியின் வீரியம் குறைய வாய்ப்பு இருப்பதால்தான், தற்போது பூஸ்டர் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி குறித்து இன்னும் மக்களிடையே அச்சமும் தயக்கமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

அமேசானில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்தவருக்கு ஒரிஜினல் பாஸ்போர்ட் - கேரளா வாடிக்கையாளரை அதிரவைத்த... Amazon

மாலைமலர் : கேரளாவில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்தவருக்கு ஒரிஜினல் பாஸ்போர்ட்டை அனுப்பிய அமேசான் நிறுவனத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டின் கனியம்பேட்டா கிராமத்தில் வசித்து வருபவர் மிதுன் பாபு. இவர் சமீபத்தில் தான் வாங்கிய பாஸ்போர்ட்டை வைப்பதற்காக கவர் ஒன்றை அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்துள்ளார்.

வெள்ளி, 5 நவம்பர், 2021

நான்தான் ஜெயலலிதாவின் மகள்.. இது எல்லாருக்கும் தெரியும்..” - ஜெ., நினைவிடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மைசூர் பெண்

"I am Jayalalithaa's daughter .. Everyone knows this .." - Mysore girl who came to Jayalalithaa memorial!

நக்கீரன் செய்திப்பிரிவு :  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அதன்பின் சிறிது காலம் ஓ.பி.எஸ். முதல்வராகவும், அதன்பின் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் மீதி ஆட்சிக் காலத்தின் முதல்வராகவும் இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில், எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்காக 2018 மே 8ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 9.09 ஏக்கரில், 50,422 சதுர அடி பரப்பளவில், சுமார் 79 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம், கடந்த 27.01.2021 அன்று திறக்கப்படட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன்

 மாலைமலர் :  தேனி .தமிழக அரசுதான் முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார்.
முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன்
அணையில் ஆய்வு செய்த அமைச்சர்கள்
தேனீ .கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கடந்த  29-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்தார். சொன்னபடியே, மொத்தமுள்ள 13 மதகுகளில், 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இன்னும் நீதி கிடைக்காத ஜெய் பீம் கதைகள் இங்கு ஆயிரம் உண்டு

Karthikeyan Fastura  :  JaiBhim படம் வாழ்வு நெடுக நான் பார்த்தும், கேட்டும், படித்தும், அனுபவித்தும், விசாரித்தும் தெரிந்த பல சாதிய அடக்குமுறைகளை ஒட்டுமொத்தமாக கிளறிவிட்டதால் எதுவும் உடனே எழுதத் தோன்றவில்லை.
ஜெய்பீம் படம் திரைக்கதைக்காக non-linearல் செல்லாமல் இருந்தால் பலரால் படத்தை பார்க்க சகிக்காமல் திரையை பாதியில் மூடி இருப்பார்கள். நான் அறிந்த கதைகள் எல்லாம் அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டன.  அவர்கள் சொல்லும்போது அழுகையையும் கோபத்தையும் அடக்குவது அத்தனை கடினம். அதை விட கொடுமை அந்த சம்பவங்களில் யார் ஒருத்தரும் நீதியை பெற்றதாக எனக்கு சொல்லவில்லை. போராடி வருவதாக தான் சொல்லியிருக்கிறார்கள். தெளிவாக சொல்வதென்றால் நீதி கிடைக்காத கதைகள் தான் இங்கு ஆயிரமாயிரம்.

.உணவுக்காக 9 வயது சிறுமியை விற்ற ஆப்கன் தந்தையின் கதறல் ... என் மகள் சிறுமி அவளை அடிக்காதீர்கள்..

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வெளியேற்றத்தை தொடர்ந்து தாலிபான்களின் கொடூர ஆட்சி அரங்கேறியது . முதலில் அவர்களை தங்கள் முன்பு இல்லை கொஞ்சம் திருந்தி விட்டதாக கதை அளந்தார்கள். ஆனால் நிலைமை முன்னைவிட படுமோசமானதாக உள்ளது. தாலிபான்களை ஒரு தேசிய போராளிகள் என்று வர்ணித்து புளகாங்கிதம் அடைந்தார்கள் பலர் குறிப்பாக மதிமாறன் போன்றோர் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு ஆதரவாக காணொளி எல்லாம் வெளியிட்டார்கள் . இப்போது இவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் ஒருபுறம் பெரியார் பெயரை உச்சரித்து கொண்டு மறுபுறம் படுமோசமான மதவெறி கூட்டமான தாலிபான்களுக்கு ஆதரவு கோஷம் வேற. இவர்களின் தாலிபான் ஆதரவு பாஜகவுக்கு ஒரு வரப்பிரசாதமாக போய்விட கூடாதே என்பதுதான் நம்முன்னே உள்ள கவலை எல்லாம்.

 Abdul Muthaleef -   Oneindia Tamil :   ஆப்கனின் கொடிய நிலை காரணமாக வீட்டில் உள்ள மற்றவர்களை காப்பாற்ற உணவுக்காக 55 வயது நபருக்கு தனது 9 வயது மகளை விற்ற ஆப்கன் தந்தை என் மகள் சிறுமி அவளை அடிக்காதீர்கள் என கெஞ்சலாக கதறும் சம்பவம் பார்ப்போரை கலங்க செய்துள்ளது. தாலிபான்களின் ஆட்சியில் இதுபோன்ற பல சம்பவங்கள் சிறார்களின் வாழ்க்கையையே அழித்து வருகிறது. ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி ஏற்பட்டப்பிறகு அங்கு வசிக்கும் மக்கள் அடையும் துயரத்திற்கு அளவே கிடையாது.
குடிமக்களை கொல்வது மிகச்சாதாரண விஷயமாக உள்ளது.
பெண்களின் நிலை படுமோசம், குழந்தைகளின் நிலை சொல்லவே வேண்டாம்.

ஐயா நீங்கள் என் வீட்டுக்கா?... நெகிழ்ந்துப்போன நரிக்குறவ சமூக பெண்... நலமா? விசாரித்த முதல்வர்

 Abdul Muthaleef  -   Oneindia Tamil  :  சமீபத்தில் அன்னதானம் போடாமல் விரட்டப்பட்டு உரிமை பேசிய நரிக்குறவ சமுதாய பெண் அஸ்வினி சமூக வலைதளங்களில் வைரலானார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உணவருந்தினார். இந்நிலையில் அஸ்வினி வசிக்கும் பகுதிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அஸ்வினி வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார். ஐயா நீங்களா? என் வீட்டுக்குள்ளா? என அஸ்வினி நெகிழ்ந்துப்போய் நன்றி சொன்னார்.
நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு.. நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு.. நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்
நரிக்குறவ சமுதாய மக்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவதும், அவர்களை எச்சில் இலை பொறுக்குபவர்களாகவும் சித்தரிப்பதும், இயல்பு வாழ்க்கையில் நடத்துவதும் சமீப காலம் வரை வாடிக்கையான ஒன்றாக இருந்தது. ஆனால் காலம் மாறி வருகிறது.

ஜெய்பீம் தொடர்பாக… அந்த அக்கினிக் குறியீடுகள் இல்லாமலேயே படம் சிறப்பாகத்தான் இருந்திருக்கும்.

May be an image of 1 person and text that says 'minnambalam.com ஜெய்பீம்: மாற்றப்பட்ட காலண்டர் காட்சி! 2021-11-04T07:30:01+5:30 த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், தமிழ் உட்பட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜெய்பீம். இப்படத்தில் கொடூரமான காவல் ஆய்வாளர் வேடமொன்று உள்ளது. அந்த வேடத்தில் வேட இயக்குநர் தமிழ் நடித்திருக்கிறார். ஒருகாட்சியில் அவருடைய பின்னணியில் வன்னிய சமூக மக்கள் பயன்படுத்தும் சங்க நாட்காட்டி சுவற்றில் மாட்டப்பட்டி மாட்டப்பட்டிருக்கிறது.இதனால், வன்னியர் சமுதாயத்தைக் கொடூரமாகச் சித்தரித்துவிட்டார்கள் என்கிற விமர்சனங்கள் வரத்தொடங்கின'

Kanmani Gunasekaran : ஜெய்பீம்  தொடர்பாக…
     விவசாயம், வேலை, எழுத்து என கிராமம் சூழ் வாழ்வாகவே எனக்கு வாய்த்துப்போனதில் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் சினிமாவின் மீது எனக்கு எப்போது ஈடுபாடு இருந்ததில்லை.
         இச்சூழலில் வாசகராய் அறிமுகயிருந்த தம்பி ஒருவர் என்னை பார்க்க வருவதாய் சொல்லியிருந்தார். அதன்படிக்கு நான் வீட்டில் காத்திருந்த வேளையில் நாலைந்து பேர்களுடன் தம்பி மகிழுந்தில் மணக்கொல்லை வந்தார்.  தலமானாக தெரிந்தவரை இயக்குநர் என அறிமுகம் செய்துவைத்தார்.  மேலும் என் எழுத்தின் மீது அக்கறை கொண்ட ஊடகவியலாளர் அண்ணாச்சி ஒருவரும் தொலைபேசி செய்து விஷயத்தை சொன்னார்.
       கதை கம்மாபுரம் காவல்நிலையத்தில் ரொம்ப நாளைக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம். நானும் கேள்வி பட்டிருக்கிறேன். படம் இந்த பகுதியின் களம் என்பதால் இங்கத்திய காட்சிகளில் வரும் உரையாடல் நடுநாட்டு  வட்டாரமொழியில் இருந்தால் சிறப்பாக இருக்குமென்று பிரதியில் மாற்றித்தரவேண்டுமென  சொன்னார்கள்.

வியாழன், 4 நவம்பர், 2021

தமிழ்ல பேசு ..தெலுங்குல மாட்லாடு ஒரே அறைதான்.. வடஇந்தியாவை அடித்து துவைக்கும் ஜெய் பீம் படத்தின் ஒற்றை காட்சி!

ஜெய் பீம் படத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு மார்வாடியின் கன்னத்தில் அறைந்து தமிழ்ல பேசு என்று கூறுவதும், அதன் தெலுங்கு மொழிப்பதிப்பில் தெலுங்குல மாட்லாடு என்றும் கூறிவதுமான அந்த சின்னஞ்சிறு காட்சி Shyamsundar  - Oneindia Tamil :   சென்னை: ஜெய் பீம் படத்தில் வரும் ஒற்றை காட்சி மொத்த வடஇந்தியாவையும் உலுக்கி உள்ளது.
இணையம் முழுக்க இதை பற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த காட்சி ஏன் விவாதம் ஆனது... ஏன் இந்த காட்சி முக்கியத்துவம் பெற்றது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் இன்னொரு மகுடமாக வந்திருக்கிறது ஜெய் பீம் படம்.
பொதுவாக மக்கள் போராட்டங்களை பேசும் படங்கள், பிரச்சார நெடி வீசும் படங்களாக இருக்கும்.. விறுவிறுப்பாக இருக்காது என்று நிறைய விமர்சனங்கள் வைக்கப்படுவது உண்டு.
அந்த "பிரச்சார நெடி" விமர்சனத்தை அசுரன், கர்ணன் போன்ற படங்கள் அடித்து உடைத்தன.
இப்போது அதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறது தா. செ. ஞானவேல் இயக்கிய ஜெய் பீம்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 294 வழக்குகள் பதிவு!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதற்கான நேரத்தினை தமிழக அரசு அறிவித்திருந்தது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதேபோல் உச்ச நீதிமன்றமும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை நீட்டிப்பது தொடர்பான வழக்கில், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்க, வாங்க, வெடிக்கத் தடை விதித்திருந்தது. சரவெடி உள்ளிட்ட வெடிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் போலீசாரே பொறுப்பேற்க வேண்டும். 

முதலமைச்சர் ஸ்டாலின்: அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல .. மறுக்கப்பட்டது சுயமரியாதை ! அஸ்வினி : 'முப்பாட்டன் காலத்துலகூட இவ்வளவு கிடைக்கல'

  BBC - ஆ விஜயானந்த்  -      பிபிசி தமிழ்  :  தீபாவளி தினத்தன்று மாமல்லபுரத்தில் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். "முப்பாட்டன் காலத்தில் கிடைக்காத உதவி எல்லாம் இப்ப கிடைச்சிருக்கு" எனக் கண்கலங்குகிறார், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி அஸ்வினி.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரியில் நரிக்குறவர்கள், இருளர் சமூக மக்கள் என சுமார் 81 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் ஊசி, பாசிமணி விற்பதுதான் இவர்களின் முழுநேர வேலை. இந்நிலையில், கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அங்குள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவர் சாதியைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது விரட்டியடிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
"அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க" என நரிக்குறவ பெண்மணி அஸ்வினி கேள்வி எழுப்பிய காணொளி வைரலானது.

தாம்பரம் மாநகராட்சி உதயமானது! அரசிதழில் வெளியீடு

 மாலைமலர் : ஐந்து நகராட்சி, ஐந்து பேரூராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 15 கிராம ஊராட்சிகளும் அடங்கும்.
தமிழநாடு  சட்டசபையில் தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்றது. சமீபத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கான காவல் ஆணையம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் 20-வது மாநகராட்சியாக தாம்பரம் தரம் உயர்த்தப்பட்டதற்கான அறிவிப்பை அரசிதழில் அரசு வெளியிட்டுள்ளது.
பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனாகபுத்தூர் உள்ளிட்ட ஐந்து நகராட்சிகள் சிட்லபாக்கம், பெருங்களத்தூர், திருநீர்மலை, பீர்க்கன்கரணை ஆகிய பேரூராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் 15 கிராம ஊராட்சிகளும் அடங்கும்

குன்றத்தூரில் . காதலனை கொன்று இளம் பெண் பலாத்காரம் செய்து கொலை! காவலாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

tamil.asianetnews.com : குன்றத்தூர் அருகே தனியார் தொழிற்சாலை ஒன்றில் காதலனை  கொன்றுவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற காவலாளிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் ஒரு தனியார் தொழிற்சாலை இயங்கி வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் இந்த தொழிற்சாலை எரிந்து நாசமானதால் மூடப்பட்டது. தற்போது இங்கு பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று அத்தொழிற்சாலையின் 3-வது தளத்தில் பழுதுபார்ப்பு பணிகளை கட்டிட தொழிலாளர்கள் செய்து கொண்டிருந்தனர். அங்குள்ள 2 கழிவறைகளைத் திறந்து பார்த்தபோது, ஒரு ஆணும் பெண்ணும் தனித்தனியே அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை யாரும் தாக்கவில்லை என பெங்களூரு போலீஸ் தெரிவிப்பு!

நக்கீரன் செய்திப்பிரிவு  :  பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்று பெங்களூர் போலிசார் விளக்கமளித்துள்ளனர்.
பெங்களூர் விமானநிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி சில நண்பர்களுடன் போலீஸ் பாதுகாப்போடு வெளியேற முயன்ற போது மர்ம நபர் ஒருவர் பின்னால் இருந்து அவரை தாக்குவது போல் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.
அந்த மர்ம நபர், யாரை தாக்க முயன்றார் என்று தெரியாத நிலையில், உடனடியாக அருகில் இருந்த சிஆர்பிஎப் காவலர்கள் தாக்குதல் நடத்தியவரை பிடித்தனர். என்ன காரணத்திற்காக அந்த நபர் தாக்குதல் நடத்தினார் என்ற விபரம் இதுவரை வெளியாக இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

இடைத்தேர்தலில் அடிவாங்கிய பா.ஜ.க ! பெட்ரோல், டீசல் விலை குறைத்ததன் பின்னணி?

 Prem Kumar  - கலைஞர் செய்திகள்  : கடந்த அ.தி.மு.க ஆட்சியின் காரணமாக தமிழ்நாடு கடும் நிதிச்சுமையில் சிக்கியுள்ள நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு மக்களின் நலன் கருதி பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது. முன்னதாக, பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் 3 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டார்.

புதன், 3 நவம்பர், 2021

தமிழ்நாடு தின கொண்டாட்டம்: சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  சேலம் அம்மாபேட்டையில் கடந்த திங்கட்கிழமை (01.11.2021) அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு தின  கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அதேபோல், இந்தக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தை தொடங்குவதற்கு முன்னதாக மூவேந்தர்களின் சின்னங்கள் பொறித்த கொடியை சீமான் ஏற்றினார். இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனால் இது தொடர்பாக அம்மாப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் ராஜா போலீசிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கணேசன், சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் கட்டுகட்டாக சிக்கிய பணம்!

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் கட்டுகட்டாக சிக்கிய பணம்!

மின்னம்பலம் : வேலூர் பொதுப்பணித்துறை தொழில்நுட்பக் கல்வி செயற்பொறியாளர் வீட்டில் கட்டு கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித் துறை தொழில்நுட்பக் கல்வி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. செயற்பொறியாளராக ஷோபனா என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கட்டப்படும் அரசுக் கல்லூரிகளின் கட்டுமான பணிகளுக்கு நிதியை விடுவிப்பது, கட்டடப் பணிகளைப் பார்வையிடுவது, ஒப்பந்தம் போடுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கேரளா பெண் ஷர்மிளா முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மோசடி, கொலை மிரட்டல் புகார்.. நெல்லை DGPயிடம் மனு!

கலைஞர் செய்திகள் - Prem Kumar  : அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார் அளிக்க தமிழ்நாடு வரவுள்ளதால், தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஷர்மிளா என்ற பெண் நெல்லை டி.ஐ.ஜி.,யிடம் மனு அளித்துள்ளார்.
கேரளா மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த ஷர்மிளாவும், அவரின் கணவர் ராஜீவும் தொழிலதிபர்கள். கடந்த 2020, ஜூலை மாதம் ஷர்மிளா அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி பேசிய வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஷர்மிளா பேசிய வீடியோவில் அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறிப்பிட்டு, “ஹைகமாண்ட் பெயரைச் சொல்லி அவர் முடித்துக் கொண்ட காரியங்கள் பற்றி எனக்குத் தெரியும். அவர் எவ்வளவு கீழ்த்தரமான மனிதர் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் ஒப்புதல்

 மாலைமலர் : நீண்ட நாட்கள் ஆய்வுக்குப்பின், கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க உலக சுகாதார மையம் ஒப்புதல் அளித்துள்ளது.
கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் ஒப்புதல்
கோவேக்சின் தடுப்பூசி
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்தியாவில் கோவிஷீல்டுக்கு அடுத்தப்படியாக கோவேக்சின் தடுப்பூசி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கும் நட்பு முறையில் இந்தியா ஏற்றுமதி செய்தது.

பாமக-வினர் நடத்திய போராட்டத்தில் அரசுப் பேருந்து அடித்து உடைப்பு: ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயம்

 tamil.news18.com : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமகவினர் நடத்திய போராட்டத்தின் போது அரசுப் பேருந்தை கல்வீசி தாக்கியதில் பேருந்து ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். பதற்றம் அதிகரித்துள்ளதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டுரோட்டில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கோரியும் பா.ம.க.வினர் கோஷங்களை எழுப்பினர்.

சரத் பவாரின் மகன் அஜித் பவாருக்கு சொந்தமான ரூ.1,000 கோடி சொத்துகள் முடக்கம்....

 தினமலர் : மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010 ல் மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில், மாநில கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை ஆலை குறைந்த விலையில் ஏலத்தில் விடப்பட்டது.
அப்போது, கூட்டுறவு வங்கியின் கூட்டுறவு வங்கியின் இயக்குநர்கள் வாரியத்தில் பிரதான உறுப்பினராக இருந்த, தற்போதை துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அஜித் பவார் இருந்தார்.
அந்த ஆலையை வாங்க உபயோகப்படுத்தப்பட்ட நிதிகளில் பெரும்பாலான தொகை அஜித்பவாருக்கு சொந்தமான 'ஸ்பார்க்லிங் சாயில் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதும், இந்த ஆலையை வைத்து வங்கிகளில் பல கோடி கடன் ரூபாய் பெறப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி முகம் இம்மாச்சல் பிரதேசத்தில் கோட்டைவிட்ட பாஜக.. தட்டி தூக்கிய காங்கிரஸ்

 Vigneshkumar -   Oneindia Tamil :  டெல்லி: பாஜக ஆளும்கட்சியாக இம்மாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற 3 சட்டசபை மற்றும் ஒரு மக்களவை இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
அங்கு அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 29 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 மக்களவை தொகுதிகளுக்குக் கடந்த 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றன.
கொரோனா காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல்கள் அனைத்தும் நடத்தப்பட்டன.
இதில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

1927 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த திராவிடன் இதழ் . மற்றும் "சுன்னாகம் திராவிட வித்தியாசாலை.. மறக்கடிக்கப்பட்ட வரலாறு

1927 ' திராவிடன் ''' யாழ்ப்பாணத்திலிருந்து,,


செல்லபுரம் வள்ளியம்மை :
யாழ்ப்பாணம் சுன்னாகம் என்ற கிராமத்தில் 27 - 11  -1927  "சுன்னாகம் திராவிட வித்தியாசாலை என்ற பள்ளிக்கூடம் ஆரம்பிக்கபட்டது
திராவிட வித்தியாசாலை.. சுன்னாகம் யாழ்ப்பாணம்!
யாழ்ப்பாணம் வட்டுக்கோடடையை சேர்ந்த திரு மு.சி .ராசரத்தினம் 1905 இல் கல்கத்தா பல்கலை கழகத்தில் எம் ஏ பட்டம் பெற்று யாழ்ப்பாணம் திரும்பி 1906 ஆண்டு வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியில் ஆசியராக பணியில் இணைந்தார்.
பின்பு வட்டுக்கோட்டை இந்து கல்லூரியிலும் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார்.
அதே காலக்கட்டத்தில் சட்டம் பயின்று  1911 ஆண்டு வழக்கறிஞராகவும் பணியாற்ற தொடங்கினார்.
1923 ஆம் ஆண்டு சைவ வித்தியா விருத்தி சங்கம் ஏற்படவும் காரணமாக இருந்தார் .

சிறுமி வன்புணர்வு குற்றவாளி மணிகண்டனால் சிறுமி குடும்பத்திற்கு ஆபத்து?

 Arumugam Selvi  :  சிறுமியை வன்புணர்ச்சி செய்த டிராக்டர் ஓட்டுனர் மணிகண்டன்  கைது.
திருநெல்வேலி மாவட்டம் இராமநாதபுரம் வட்டத்திற்குட்பட்ட ஆத்தாங்கரை பள்ளிவாசல் அருகில் உள்ள சிதம்பராபுரத்தில் வசிக்கிறவர் சூசை நாதன் லெட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு இரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சூசைநாதன் மலேசியாவில் வேலை செய்து வருகிறார்.
கடந்த சனிக் கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் தெருவின் சென்ற சூசைநாதன் மகளை அதே தெருவில் வசித்த மணிகண்டன் என்ற டிராக்டர் ஓட்டுனர் சிறுமியை கையைப் பிடித்து இழுத்து சத்தம்போட விடாமல் வீட்டிற்குள் வன்புணர்ச்சி செய்துள்ளான்.
 நீண்ட நேரம் சிறுமியை தேடிய லெட்சுமி தனது மகள் ‌மணிகண்டன் வீட்டிற்குள் இருந்து வருவதை பார்த்து அதிர்ச்சியுற்று விசாரித்த போது மணிகண்டன் தவறு செய்ததை கூறி சிறுமி அழுதுள்ளார்.

இந்திய தொடர்பு ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலுள்ள 702 இலங்கையர்கள் !

ISIS அமைப்புடன் தொடர்பில் இருந்த 702 பேர் இலங்கையில்

thesamnet.co.uk - அருண்மொழி  : இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தபடும் ISIS அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் 702 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிரவாத ஒழிப்பு பிரினால் இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவானிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய புலனாய்வு பிரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் தொலைபேசியை பரிசோதனை செய்த போது குறித்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரியசந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செவ்வாய், 2 நவம்பர், 2021

இலங்கைக்கு பார்ப்பனீயத்தை இறக்குமதி செய்த ஊடகங்கள்! ஹரிஜன் என்ற கபட சொல்லை...

 செல்லபுரம் வள்ளியம்மை  இலங்கையில் ஹரிஜன் என்ற சொல் எந்த காலத்திலும் பேச்சு வழக்கில் இருந்ததில்லை.
இந்த சொல்லே பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை .
இந்நிலையில்  தமிழக பார்ப்பனர்கள் எப்படி ஒவ்வொரு பார்ப்பனீய கருத்துக்களாக அங்கு விதைத்தார்கள் என்பதை இந்த 1956 ஆம் ஆண்டு இலங்கை வீரகேசரி பத்திரிகை காட்டுகிறது.
இலங்கை அரசியல் அமைப்பிலோ சட்டத்திலோ ஜாதி இல்லை . நடைமுறையில் ஜாதி பாகுபாடு மட்டுமல்ல குற்றங்களும் இருந்தன தற்போதும் ஓரளவு இருக்கின்றன..
ஆனால் அந்த ஜாதி ஏற்றத்தாழ்வுக்கு ஒரு சமூக அங்கீகாரம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த செய்தியும் தலைப்பும் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது என்றெண்ணுகிறேன்.
கோயில்கள் எல்லா ஜாதியினரும் வழிபடுவதற்காக திறந்து விடப்பட்டன என்றுதான் பிற்கால பத்திரிக்கை செய்திகள் கூறின.
ஆனால் இந்த வீரகேசரி பத்திரிகையோ ஹரிஜனங்கள் என்ற காந்தியின் கபட வார்த்தையை இறக்குமதி செய்திருக்கிறது.

100 நாள் வேலை ஊதியம்: நாளைக்குள் கொடுக்கப்படுமா? நூறு நாள் வேலை நிதி: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

minnambalam : பண்டிகைக் காலங்கள் வரவுள்ள நிலையில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே கொடுக்க வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று (நவம்பர் 2) சந்தித்து வலியுறுத்தினார்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.1178 கோடியை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். இந்நிலையில் இந்த கடிதத்தை திமுக எம்.பி.டி.ஆர்.பாலு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது தீபாவளிக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், இந்த ஊதியத்தை நம்பியிருக்கும் ஏழை எளிய மக்களைக் கருத்தில் கொண்டு ஊதிய தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ஒன்றிய அரசு கொடுத்த ரூ.3,525 கோடி ஊதியமாகக் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு 1/11/2021 வரை ரூ.1,178 கோடி ஊதிய தொகை நிலுவையில் இருக்கிறது.

பயிர் கடனில் பல குளறுபடிகள் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

 நக்கீரன் செய்திப்பிரிவு  - குமரேஷ்  : சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 2021 - 2022 வரவு செலவு திட்ட உரையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பின்வரும் அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, “பயிர்க்கடனில் உள்ள குளறுபடிகள் எல்லாம் நிறைய தெரியவந்து, ஏற்கனவே ஒத்திவைக்கப்படாத கடன்களை சீர்திருத்தி, எவையெல்லாம் தகுதி இல்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கும் மக்களுக்கும் பெரிய சேமிப்பு வந்துள்ளது.
அதேபோல், நகைக்கடன் தள்ளுபடியில் நடந்த ஆய்வில் பல தகவல்கள் தெரியவந்துள்ளன. அதனால் ஒரு கணிசமான தொகை இழப்பாக ஏற்படாமல், தவறான தகவலை சமர்ப்பித்து கடன் பெற்றவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல: முதல்வர் ஸ்டாலின்

மின்னம்பலம் : இலங்கை அகதிகள் முகாம், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என்றும் இலங்கைத் தமிழர் மேம்பாட்டுக்காக 317 கோடி ரூபாயில் புதிய நலத் திட்டங்கள் தொடங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தின் தொடக்க விழா வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் இன்று (நவம்பர் 2) நடைபெற்றது.
அப்போது, புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்காக 3,510 புதிய குடியிருப்புகள் மற்றும் 30 கோடி மதிப்பீட்டில் முகாம்களில் அடிப்படை திட்டப்பணிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்கு-வங்காளம் இடைத்தேர்தல்: திரிணாமுல் - காங்கிரஸ் மாபெரும் வெற்றி.

 தினத்தந்தி : மேற்கு-வங்காள மாநிலத்தில் தின்ஹடா, கர்தஹா, கொசபா, சாந்திபூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்ற  நான்கு சட்டமன்ற தொகுதிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றுள், கர்தஹா தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோவண்டேப் சட்டோபத்யாய் 93 ஆயிரத்து 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாபநிப்பூர் சட்டசபை தொகுதியில் அவர் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த நிலையில், அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், அவருக்கு பதிலாக மம்தா அந்த தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.  எனவே, அவருக்கு  கர்தஹா தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
தின்ஹடா தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உதயன் குஹா 1 லட்சத்து 64 ஆயிரத்து 89 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆப்கானிஸ்தான்: இசையை நிறுத்த துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி, 10 பேருக்கு காயம்

BBC :  ஒலித்துக் கொண்டிருந்த இசையை நிறுத்த, கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருந்த திருமண விழாவில் தாலிபன்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சில நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர், 10 பேருக்கு மேல் காயமடைந்தனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தாக்குதல் நடத்திய மூன்று பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தாலிபன் அமைப்பின் சார்பில் அதைச் செய்யவில்லை என்றும் தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
1996 முதல் 2001ம் ஆண்டு வரை இருந்த தாலிபன்கள் ஆட்சியில் இசைக்கு ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இசைக்கு அப்படிப்பட்ட எந்தவித அதிகாரபூர்வமான தடைகளும் விதிக்கப்படவில்லை.

இடைத்தேர்தல் 3 எம்.பி., 29 எம்.எல்.ஏ. தொகுதிகளில் இன்று ஓட்டு எண்ணிக்கை

 தினத்தந்தி :  புதுடெல்லி,  தாத்ரா நகர் ஹவேலி, இமாசலபிரதேசத்தில் மண்டி, மத்தியபிரதேசத்தில் காண்ட்வா ஆகிய 3 மக்களவை தொகுதிகளிலும், 13 மாநிலங்களில் இடம்பெற்றுள்ள 29 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த மாதம் 30-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதில் பதிவான ஓட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. இந்திய தேசிய லோக்தளம் தலைவர் அபய் சவுதாலா, முன்னாள் முதல் -மந்திரி வீரபத்ரசிங் மனைவி பிரதிபா சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

திமுகவில் உதட்டளவே ஒற்றுமை: நேரு முன்னிலையில் பார்த்திபன் எம்.பி. பாய்ச்சல்

மின்னம்பலம் : அமைச்சர் பதவி கிடைக்கப்பெறாத மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து கட்சி விவகாரங்களிலும், ஆட்சி நிர்வாக விவகாரங்களிலும் அந்த அமைச்சர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
இந்த வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரிதும் தோல்வி அடைந்த கோவை மாவட்டத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜியும், சேலம் மாவட்டத்துக்கு அமைச்சர் கே.என்.நேருவும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதுபோல் அமைச்சர் பிரதிநித்துவம் இல்லாத நாகப்பட்டினம், திருவாரூர். தஞ்சாவூர், நெல்லை, தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திங்கள், 1 நவம்பர், 2021

கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி- அரசாணை வெளியீடு.. யாரெல்லாம் பயனடைவார்கள்.. விரிவான தகவல்

  Vigneshkumar  -   Oneindia Tamil News  :  சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்யும் அரசாணையைத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி 40 கிராமுக்குக் குறைவான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்டு 6,600 கோடி ரூபாய் நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நகைக்கடன் தள்ளுபடி என்பது குடும்பத்திற்கு 5 சவரன் உட்பட சில தகுதிகளின் கீழ் தள்ளுபடி செய்யப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தள்ளுபடி தொடர்பான கூடுதல் நெறிமுறைகளைக் கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் வகுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது

 நக்கீரன் செய்திப்பிரிவு : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்  என்ற நிலையில்  இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த 12.09.2021அன்று  நடைபெற்றது.
இந்தியா முழுவதும் 16.14 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் மட்டும் 1.10 லட்சம் பேரும் இத்தேர்வை எழுதினர். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது : உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு

 மாலைமலர் : வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரை:  தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
முதலில் இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம், பழங்குடியின மக்களுக்கு 1 சதவீதம் என இட ஒதுக்கீடு இருந்தது.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களும் இருந்தனர். ஆனால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றன.
குறிப்பாக டாக்டர் ராமதாஸ் தலைமையில் தீவிர போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து 1989-ம் ஆண்டு அப்போது இருந்த தி.மு.க. அரசு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற தனிப் பிரிவை உருவாக்கியது.

முத்துராமலிங்க தேவர் விழா ..பொதுமக்களை அச்சுறுத்திய.. இளைஞர்கள் மீது நடவடிக்கை? டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

  Vigneshkumar  -   Oneindia Tamil : சென்னை: தேவர் பிறந்த நாள் விழாவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் பேருந்து மற்றும் காவல்துறை வாகனங்களின் மீது ஏறி ஆடுதல், சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களையும் வீடியோ காட்சி பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கத் தமிழகக் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முத்துராமலிங்கத் தேவரின் 114வது பிறந்த நாள் -  59 குருபூஜை விழா அக். 30ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களும் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நடிகர் ரஜினிகாந்த் குணமாகி மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பினார்

 Actor Rajinikanth discharged from hospital

நக்கீரன் செய்திப்பிரிவு  : கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது.
இதற்காக டெல்லி பயணம், விழாவில் பங்கேற்றது, பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றது, தொடர்ந்து நண்பர்கள் சந்திப்பு, வாழ்த்து பெற்றது என இருந்தார்.
 டெல்லி பயணம், தலைவர்கள், நண்பர்கள் சந்திப்பு என இருந்தநிலையில் சென்னை திரும்பினார். தலைச்சுற்றல் காரணமாகக் கடந்த 28 தேதி சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்று நாள் சிகிச்சைக்கு பின் தற்போது அவர் வீடு திரும்பினார்   

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ரகசியப் போர் தொடுக்கும் தாலிபன்

 சிகந்தர் கெர்மனி   -      பிபிசி செய்திகள், ஜலாலாபாத் :  ஜலாலாபாத்தில் தலிபான் வீரர். இந்த குழு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான் கிளை கிட்டத்தட்ட தினமும் தாக்குதலை சந்தித்து வருகிறது.
படக்குறிப்பு,ஜலாலாபாத்தில் தலிபான் வீரர். இந்த குழு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான் கிளை கிட்டத்தட்ட தினமும் தாக்குதலை சந்தித்து வருகிறது.
கிழக்கு ஆப்கானிஸ்தானின் புறநகர் பகுதியில் உள்ள ஜலாலாபாத் நகரில் மனித உடல்கள் அவ்வப்போது புதைக்கப்படுக்கின்றன.
சிலர் சுட்டுக்கொல்லப்படுக்கின்றனர்; சிலர் தூக்கிலிடப்படுக்கின்றனர்; சிலரின் தலை துண்டிக்கப்படுகிறது. பலரின் பாக்கெட்டுகளில் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் உள்ளன.

மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு ஒரு திறந்த மடல்!

மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு ஒரு திறந்த மடல்!
மின்னம்பலம் :  வணக்கம்.  தமிழகத்தைச் சேர்ந்த கோடானுகோடிக் குடிமக்களில் ஒருவன் என்கிற முறையில் என் சகக் குடிமகனொருவரின் சார்பாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கடந்த ஏப்ரலில் உங்கள் கட்சிக்கு வாக்களித்து, தங்கள் தலைமையில் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தவர்களில், கொண்டிருப்பவர்களில் ஒருவனாகவும் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
பல பத்தாண்டுகளுக்கு முன் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘ஏழை பங்காளன் எமிலி ஜோலா’ என்ற நூலில் காணப்படும் உணர்வே இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுமாறு தூண்டியது  19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு ராணுவத்தைச் சேர்ந்த ‘ட்ரைஃபஸ்’ என்னும் யூதர், ஜெர்மனி அரசாங்கத்துக்கு உளவு பார்த்தார் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட கொடுமையை எதிர்த்துத் துணிச்சலாகக் குரல் கொடுக்க வந்தவர் அந்த நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் எமிலி ஜோலா. சமுதாயத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட ஏழைகள், வேசிகள், சுரங்கத் தொழிலாளர்கள் ஆகியோரின் அவலங்களைத் தன் இலக்கியப் படைப்புகளில் வெளிப்படுத்தியவர் எமிலி ஜோலா. ‘ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண வேண்டும்’ என்ற பொன் வாசகத்தை எழுதிய அறிஞர் அண்ணா, எமிலி ஜோலா நமக்கொரு சீரிய எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவரைப் போற்றும் எழுத்துகளைத் தீட்டினார்.

சென்னை - விடுதியில் அடைத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - காதலன் உட்பட 4 பேர் கைது!

 கலைஞர் செய்திகள்  : சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு இளைஞர்களை போலிஸார் கைது செய்தனர்.
சென்னை ஜே.ஜே. நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளைக் காணவில்லை என கடந்த 27ம் தேதி திருமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்திருந்தார்.இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதையடுத்து அடுத்தநாள் காணாமல் போன சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி தன்னை நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று தனியார் விடுதி ஒன்றில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகத் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இதன்படி போலிஸார் விசாரணை நடத்தியதில், பாடி பகுதியைச் சேர்ந்த ஏழுமைலை என்ற இளைஞர் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார்.

ப்ரெய்ன் அட்டாக்: ரஜினியின் அடுத்த மருத்துவப் போராட்டம்!

ப்ரெய்ன் அட்டாக்: ரஜினியின் அடுத்த மருத்துவப் போராட்டம்!
minnambalam L நடிகர் ரஜினிகாந்த் சினிமா உலகின் உயரிய விருதான தாதா சாஹிப் பால்கே விருதை கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி துணை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு, பிறகு 27 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார்.

விருது பெற்ற மகிழ்ச்சியை குடும்பத்தினரோடு அனுபவித்துக் கொண்டிருக்கும்போதே 28 ஆம் தேதி இரவு திடீரென ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

சரவெடி, பேரியம் கலந்த பட்டாசுகளை வெடித்தால்...குற்றவியல் நடவடிக்கை பாயும்.. தமிழக அரசு எச்சரிக்கை

 Vigneshkumar -   Oneindia Tamil :   சென்னை: உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள பேரியம் கலந்த பட்டாசுகள் மற்றும் சரவெடிகளைத் தயாரித்தாலோ, விற்றாலோ, வெடித்தாலோ குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்று மாசும் பருவநிலை மாற்றமும் உலக நாடுகள் மத்தியில் மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
குறிப்பாகக் காற்று மாசு காரணமாகச் சுவாசப் பிரச்சினை தொடங்கி பல்வேறு பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது.
இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தீபஒளித் திருநாளன்று தமிழ்நாடு முழுவதும் இறைச்சிக் கடைகள் திறக்கலாம் - தமிழ்நாடு அரசு அனுமதி!

 கலைஞர் செய்திகள்  : தீபஒளித் திருநாளன்று தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இறைச்சிக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாவீர் நிர்வான் என்ற ஜெயின் மத பண்டிகையை ஒட்டி நவம்பர் 4ஆம் தேதி இறைச்சிக் கடைகள் மூடப்படும் என சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை வெளியிட்டது.
பெரும்பாலானோர் தீபஒளித் திருநாளறுதான் அதிகளவில் இறைச்சி எடுப்பார்கள் என்பதால் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என இறைச்சிக்கடை உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்தும் தமிழ்நாடு அரசு, இறைச்சிக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.
ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளும் மூடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பௌத்தம் - சமணம் தமிழ்நாட்டில் அழிந்தது எப்படி... பதில் : கழுவேற்றம்

prakash jp :  சுமார் ஆறு அடி உயரமுள்ள கூர்மையான கைத்தடிமன்
அளவுள்ள உலோககம்பி செங்குத்தாக நிறுத்திவைக்கப் பட்டிருக்கும்... சமண துறவிகளை நிர்வாணமாக்கி அதன் கூர்மையான முனையின் மீது அவர்களது ஆசனவாயை சொருகி உட்கார வைத்துவிடுவார்கள்...
கொஞ்சம் கொஞ்சமாக அந்த கம்பி அவர்களது ஆசனவாயின் வழியாக தலையை அடையும் வரை பலமணி நேரத்திற்க்கு அவரகள் உயிருடன் துடித்துக் கொண்டிருப்பார்கள்...//
By ஹரி ஹரன் in FB
சமணர் கழுவேற்றம் குறித்தான விவாதம் என்பது பல வருடங்களாக நடந்து கொண்டிருப்பது. இத்தகைய விவாதங்கள் நம்மை நமது வரலாற்றுடன் பொருத்தி பார்ப்பதற்கானது அல்ல, நாம் அந்த வரலாற்றில் இருந்து பாடம் படித்துக் கொள்ளவே.