tamil.samayam.com : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரு பெண்களை வாலிபர்கள் எட்டி உதைத்து தாக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வட மாநிலத்தில் நடப்பதை போல சென்னையில் இரு பெண்களை ஒரு கூட்டத்திற்குள் வைத்து எட்டி உதைக்கும் வாலிபர்களின் செயல் பூதாகரமாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலான இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலை மரக்காணம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள் சாலையை கடக்க முயற்சித்துள்ளனர். இதனை அனுமதிக்காத ஆண்கள் சிலர் பெண்களின் வாகனத்தை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளனர்.
சனி, 19 பிப்ரவரி, 2022
சென்னையில் இளம்பெண்களை தாக்கும் கும்பல்... பதைபதைக்கும் வீடியோ
அடிலாந்திக் கடலில் கார்கள் ஏற்றிவந்த கப்பலில் தீ: 1,100 வோல்க்ஸ் வேகன் ஆடி . போஷ்ஹ் லம்போகினி கார்கள் எரிந்தன
தினமலர் : பனாமா: அட்லாண்டிக் கடல்பகுதியில் மிகப்பெரிய சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இதில் 1,100 சொகுசு கார்கள் தீயில் கருகின நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மன் துறைமுகத்திலிருந்து கடந்த பிப்.10-ம் தேதி பெலிசிட்டி ஏஸ் என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல், 22 மாலுமிகளுடன் அமெரிக்காவின் ரோடே தீவிலுள்ள டேவிஸ்வில்லி துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. கப்பலில் வோல்ஸ்வோகன், லம்போகிரினி, போர்ஷே, ஆடி உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு ரக கார்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று அட்லாண்டிக் கடல் பகுதியில் அசோர்ஸ் தீவு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 1,100-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் தீயில் கருகி நாசமாயின. தகவலறிந்த மீட்புபடையினர் 22 மாலுமிகளை பத்திரமாக மீட்டனர். எனினும் கப்பல் தொடர்ந்து தீப்பிடித்து வருவதால், மேலும் சொகுசு ரக கார்கள் தீயில் நாசமாகும் என கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் ஜோசுவா ராஜன் காலமானார் B H அப்துல் ஹமீத் அஞ்சலி
B.H. Abdul Hameed: எத்தனையோ கலைஞர்கள் ஏற்றம் பெற, ஏனியாய் நின்றுழைத்த ஜோசுவா ராஜன் மறைந்தார் என்ற செய்தி எம்மைத் துயரத்தில் ஆழ்த்துகிறது….
குரல் மூலம் மட்டுமே அறிந்திருந்த தமிழக மக்களுக்கு எனது முகத்தை,
முதன்முதலில் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி ‘மதுரா இசை விழா’. இந்திய சுற்றுலா ஆண்டை முன்னிட்டு,அன்புச் சகோதரர் கலைமாமணி VKT.பாலன், ஏற்பாடு செய்த அந்தப் பிரமாண்டமான இசைநிகழ்ச்சியில் அத்தனை இசைக்கலைஞர்களையும் ஒருங்கிணைத்து வழிநடத்தியவர் திரு. ஜோசுவா ராஜன்.
உச்ச நட்சத்திரக் கலைஞர்கள் அனைவருமே நன்றியுடன் நேசிக்கும் அளவு அன்பும் பண்பும் நிறைந்த அற்புதக் கலைஞர்.
தமிழக கூட்டுறவு பெட்ரோல் பங் ..
பாலகணேசன் அருணாசலம் : இந்தப்படம், தமிழ்நாடு மாநில அரசால் நடத்தப்படும் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையம் ஆகும்(Tanfed)
Tamil Nadu Cooperative Marketing Federation (TANFED) தமிழ்நாடு கூட்டுறவு இணையம் தமிழக அரசால் நடத்தப்படும் ஒரு விற்பனை நிறுவனம் ஆகும்.அந்த நிறுவனத்தில் கிடைத்த லாபம் மூலமாக ஒரு பெட்ரோல் பங்க் இயங்குகிறது..அதாவது ஒரு அரசு நிறுவனம் ஸாபகரமாக இயக்குவதோடு மட்டுமல்லாது மற்றும் ஒரு வியாபாரத்தையும் நடத்துகிறது
அதே நேரம் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு என்ன செய்கிறது...
தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசின் பங்குகள் எங்கெல்லாம் இருக்கோ அதை எல்லாவற்றையும் விற்றுத் தள்ளுகிறார்கள்...
வடிவேலுவுக்கு பத்து கோடி .. மாஸ் ஹீரோக்களுக்கு சவால்!
சினிமா பேட்டை : உடல் மொழி நகைச்சுவை மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு.
இவர், 24ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக சில வருடங்கள் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார்.
இதன்பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் படத்தில் கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார்.
சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் நாய் சேகர் returns எனும் படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் வடிவேலு.
இந்நிலையில், நடிகர் வடிவேலு இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
வாக்கு சாவடி, வாக்கு எண்ணும் மையங்களில் 81 கேமராக்கள் அமைப்பு
மாலைமலர் : சீர்காழி நகராட்சி வாக்கு சாவடி, வாக்கு எண்ணும் மையங்களில் 81 கேமராக்கள் அமைக்கப்பட்டதை ஆர்.டி.ஓ ஆய்வு செய்தார்.
சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 14,340,பெண் வாக்காளர்கள் 15,273 மொத்த வாக்காளர்கள் 29ஆயித்து 615 பேர் உள்ளனர். மொத்த வாக்குச் சாவடிகள் 36 அமைக்கப்பட்டுள்ளன இதில் 15 வார்டுகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
வரும் 19ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில்24 வார்டுகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு மையம்
வெள்ளி, 18 பிப்ரவரி, 2022
திருமண விழாவில் பலகை உடைந்ததால் கிணற்றில் விழுந்து 13 பெண்கள் பரிதாப பலி! உத்தர பிரதேசத்தில்
கலைஞர் செய்திகள் : உத்தர பிரதேச மாநிலம், நெவுவா நவுராங்கியா என்ற பகுதியில் திருமண விழா நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்த கிணறு ஒன்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த பலகையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அமர்ந்து கொண்டு திருமண நிகழ்வுகளை வேடிக்கைபார்த்து வந்துள்ளனர்.
அப்போது திடீரென சுமை தாங்க முடியாமல் அந்த பலகை உடைந்துள்ளது. இதனால் அதன்மேல் அமர்ந்திருந்த அனைவரும் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர். இதைப்பார்த்து திருமண வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இளையராஜாவின் இசையை பயன்படுத்த தடை : காப்பிரைட் விவகாரத்தில் நீதிமன்றம் புதிய உத்தரவு! (குறிப்பாக எக்கோ நிறுவனம் ,அகி மியூசிக்)
கலைஞர் செய்திகள் - பிரேம் குமார் : இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது.
ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம் ,அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மீது பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்...
முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது.. கோவையில் ..
மாலைமலர் : வெளியூர் ஆட்களை மாவட்டத்தை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும், தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமான முறையில் நடத்த வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமீர் - ராஜ்கிரண் ! முஸ்லீம் இயக்குநர்களால் ஏன் முஸ்லிம் கதை களத்தை முன்னெடுக்க முடிவதில்லை ?
Saadiq Samad Saadiq Samad : குஷ்பு சினிமாவில் நடித்ததால் ஒழுக்கம்.கெட்டு விட்டது என்று பொங்கும் போராலிகள் ஏன் ராஜ்கிரண், அமீர் போன்றோரை கண்டுக்கொள்வதில்லை ?
ஷாகுல் ஹமீது. : ராஜ்கிரண் தொடையை பாத்தீங்கள்ல... பாத்துட்டுமா இம்புட்டு தைரியமா கேக்குறீங்க...
Tamilarasan Kaviya : Sukirtha Rani கலைஞரைப் போல் ஒரே அடி... நீங்களும் கலைஞர் தானே...
Sukirtha Rani ·: புர்காவை ஆதரித்து இயக்குநர் அமீர் பேசும் வீடியோ ஒன்றைக் கண்டேன். உன் வீட்டுப் பெண்களை அரைகுறை உடைகளோடு பீச்சுக்கு அனுப்புவீர்களா என்று கேட்கிறார். கன்னித் தீவு பெண்ணா கட்டெறுப்பு கண்ணா பாடலுக்கு அடுத்த வீட்டுப் பெண்களோடு ஆடியவர் அமீர்தானே? அவர்களுக்குப் புர்கா போட்டு ஆடவிடுவதுதானே?
நாத்திகன் இப்ராஹிம் : Sukirtha Raniஅமீர் நம்ம ஸ்பீடு ஆடியோ புகழ் அண்ணனால் சினிமாவிற்கு அனுப்பப்பட்டவர்.
Sukirtha Rani ·: பருத்திவீரன் க்ளைமேக்ஸ் காட்சி பற்றி அமீர் என்ன நினைக்கிறார்?
ஒரு பணக்கார நாடு நவ்ரு ... தவறான பொருளாதார கொள்கையால் இன்று ஒரு ஏழை நாடக மாறிவிட்டிருக்கிறது
Nauro அதிபர் பேரோன் வக்கா |
Senthilraj Thiraviyam : ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு நாடு நவுரு. ஜனத்தொகை 10,000 மட்டுமே. தீவின் நீளம் ஐந்து கிமி, அகலம் மூன்று கிமி. 30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நாட்டுக்கு லாட்டரி அடித்தது..
ஆம்...தீவில் லட்சகணக்கான ஆண்டுகளாக பறவைகள் எச்சமிட்டு அவை முழுக்க பாஸ்பேட் எனும் தாதுவாக மாறியிருந்தன.
பாஸ்பேட் சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள்.
தீவில் கணக்கு,வழக்கற்ற எண்ணிக்கையில் பாஸ்பேட் இருந்தது. அதன்பின் பன்னாட்டு கம்பனிகள் வந்து இறங்கின. பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன.
அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது. ஒரு கட்டத்தில் 10,000 பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170 கோடி டாலர்கள் இருந்தன.
திமுக கொடி ஏந்தி தேர்தல் பிரசாரம் செய்த ருமேனியர் மகளிர் இலவச பேருந்து சேவையால் நெகிழ்ந்தாராம்
மேலும், வெளிமாவட்டங்களில் இருந்து பிரச்சாரம் செய்வதற்காக வந்தவர்கள் உடனடியாக வெளியேறுமாறு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (19/02/2022) நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்து வருகிறது. அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் நடத்தும் வகையில், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் சுமார் 80,000- க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வியாழன், 17 பிப்ரவரி, 2022
ABVP ரவுடி கும்பல் மீது மேலும் புதிய வழக்குகள் போலி விலாசம் கொடுத்து அடாவடி
டெல்லி, மஹாராஷ்ரா, உ.பி, குஜராத்னு வடமாநிலங்களில் தொடங்கி, தற்போது கர்நாடகா வரை எல்லா மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் ங்கற பேர்ல மதக்கலவரத்தை தூண்டுவதுதான் இவர்களின் முக்கிய பணி...
இவர்கள் செய்யும் வன்முறைகளை அந்த மாநில காவல்துறை கண்டுக்காது என்பதோடு, அவர்களின் கலவர வன்முறைகளுக்கு அந்த மாநில காவல்துறையும் மறைமுகமாக சல்யூட் அடித்து துணை நிற்கும்...
சித்திரா ராமகிருஷ்ணன் மூலம் பங்கு சந்தையை கண்ட்ரோல் பண்ணிய சாமியார்
தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா, சாமியார் ஒருவரிடம் கலந்தாலோசித்து பங்கு சந்தை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிர்ந்ததாகவும் இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி தெரிவித்துள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணா தேசிய பங்கு சந்தையின் தலைமை பொறுப்பை வகித்தபோது, இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்றதாக, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமாம் (செபி) தெரிவித்துள்ளது.
கீழடியில் கிடைத்த ஆறு செவ்வக பகடை காய்கள் - அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி!
Logi - Oneindia Tamil : மதுரை: கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் 8 ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார்.
முன்னதாக, கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு நடக்க உள்ள இடத்துக்கு பாதை வழங்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தங்கள் விவசாயம் இதனால் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இளையராஜா- கங்கை அமரன் சந்திப்பு: “எங்களுக்குள் இருந்த நட்பு போய்விட்டதே என்று வருந்தினேன்”
BBC : இசைக் கடலோடு மீண்டும் சங்கமித்திருக்கிறது ‘கங்கை’.
ஆம் பல ஆண்டுகள் கழித்து தன் அண்ணன் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்திருக்கிறார் இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரன்.
இருவரும் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று இரவு 8.30 மணியளவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று நடந்த சந்திப்பு, இறை அருளுக்கு நன்றி! உறவுகள் தொடர்கதை…!!!’ என எழுதி, இளையராஜாவை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
உத்தரப்பிரதேச தேர்தலில் நடப்பது இதுதான்! சிறப்பு நேர்காணல்: உ
மின்னம்பலம் - ராஜன் குறை, ஸ்ரீரவி : உத்தரப்பிரதேசத் தேர்தல் குறித்து அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜீல் வெர்னியர்ஸுடன் ஒரு நேர்காணல்
ஜீல் வெர்னியர்ஸ் (Dr. Gilles Verniers) அசோகா பல்கலைக்கழகத்தில் பொலிடிகல் சயின்ஸ் எனப்படும் அரசியல் கோட்பாட்டுத் துறையில் பணியாற்றுபவர். உத்தரப்பிரதேச மக்களாட்சி அரசியல் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்பவர். ஆங்கில ஊடகங்களில் அரசியல் நிகழ்வுகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருபவர். அவருடன் உரையாடி உத்தரப்பிரதேசத் தேர்தல் நிலவரம் குறித்து அறிந்துகொள்ள விரும்பினோம். ஜனவரி மாத இறுதியில் அவருடன் உரையாடியதன் சுருக்கப்பட்ட நேர்காணல் வடிவத்தைத் தருகிறோம்.
புதன், 16 பிப்ரவரி, 2022
மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகள் தீவிரம்: உத்தவ் தாக்கரே - சந்திரசேகர ராவ் விரைவில் சந்திப்பு!
நக்கீரன் செய்திப்பிரிவு : 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதிலிருந்தே அத்தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தச்சூழலில் மம்தாவின் அதிரடி நடவடிக்கைகளால் அவரது தலைமையில் மூன்றாவது அணி அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மம்தாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதனால் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை எனக் கருதப்பட்டது.
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் எழுகிறது
மின்னம்பலம் : கர்நாடகாவில் ஏழு நாள் விடுமுறைக்கு பின் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், ஹிஜாப் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப்-காவி சால்வை போராட்டத்தையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை முதல் ஒன்று முதல் 10வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இன்று(பிப்ரவரி 16) 11,12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.
கனடா: மீனவர்களின் விசைப்படகு மூழ்கி விபத்து; 7 பேர் பலி, 14 பேரை காணவில்லை
தினத்தந்தி : கிழக்கு கனடாவின் கடலில் சென்று கொண்டிருந்த ஸ்பானிஷ் மீனவர்களின் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கு கனடாவின் கடலில் சென்று கொண்டிருந்த ஸ்பானிஷ் மீனவர்களின் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, நேற்று அதிகாலை காலை 5:24 மணியளவில் கலீசியா துறைமுகத்தைச் சேர்ந்த 50 மீட்டர் நீளம் கொண்ட மீன்பிடிக் கப்பலில் இருந்து மாட்ரிட்டிற்கு பேரிடர் அழைப்பு வந்துள்ளது.
கல்வியை விட ஹிஜாப் முக்கியம்..: மகளை பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற தந்தை!
மின்னம்பலம் : கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு திங்கட்கிழமையன்று பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்று ஏராளமான மாணவிகள் பள்ளிகளையும், தேர்வுகளையும் புறக்கணித்து வீடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி ஐந்து முஸ்லிம் மாணவிகள் தொடுத்த வழக்கை விசாரித்து வரும் கர்நாடக உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை மாணவர்கள் எந்தவொரு மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து செல்ல அனுமதியில்லை என்று உத்தரவிட்டது.
லண்டனில் தமிழர்கள் தமிழர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி முதிய தமிழ் தம்பதியர் வீட்டை இழக்கும் அபாயம்!!!
இவர்களிடம் இருந்து 200,000 பவுண்களை (6.6 கோடி ரூபாய்) முதலீட்டுக்காகப் பெற்றுக் கொண்ட தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் ரெய்டன் – Raidenn Limited அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது.
ரகு லோகன் என அறியப்பட்ட ராகுலன் லோகநாதன் (43) என்பவரினால்; கொம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கே இத்தம்பதியினர் முதலீட்டுக்காக 200,000 பவுண்களை வழங்கி இருந்தனர். தற்போது இந்நிறுவனம் அவர்களுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் கட்டிடம் இருக்கின்றதேயொழிய அங்குள்ள யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை.
செவ்வாய், 15 பிப்ரவரி, 2022
டிமென்ஷியா எனும் மறதி நோய்!
elukathir.lk : பேரா. சோ. மோகனா : உலகில் ஒவ்வொரு 3 வினாடிக்கும், ஒருவருக்கு மறதி நோய் (டிமென்ஷியா) ஏற்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 5.5 கோடிக்கும் அதிகமான மக்கள் மறதிநோயுடன் வாழ்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். 2030ல் 7.8 கோடியாகவும், 2050ல் 13.9 கோடியாகவும் இருக்கும். இப்படி அதிகரிப்பது பெரும்பகுதி வளரும் நாடுகளில்தான் இருக்க வாய்ப்பு உள்ளது.
மறதி நோய் பற்றிய சில தகவல்கள்
• மறதி நோய் என்பது ஒரு நோய்க்குறிதான். இதில் மனிதனின் முதுமை காலத்தில் நிகழ்வதைவிட செயல்பாட்டில் அதிகமான அறிவாற்றல் சரிவு ஏற்படுகிறது .
மிக அதிகமாக விற்ற புத்தகங்கள் பட்டியலில் சமையல் புத்தகங்கள்
Karthikeyan Fastura : சென்னை புத்தகக் கண்காட்சி அலப்பறைகள்
அலப்பறை 1:
அரங்கு எண் XXX க்கு சென்ற போது பிரபல எழுத்தாளர் தனியே நின்று கொண்டிருந்தார். நான்தான் அவருக்கு கம்பெனி கொடுத்தேன்.
அலப்பறை 2:
என்னுடைய "இத்துப்போன தத்துவம்" புத்தகம் அரங்கு எண் X, XX, XXX இல் கிடைக்கும். அங்கு வந்தால் நானே உங்களுக்கு கையெழுத்துப் போட்டு கொடுப்பேன்.
அலப்பறை: 3
இதுவரை மொத்தமாக 25 புத்தகங்கள் வாங்கினேன். சென்றமுறை வாங்கிய புத்தகங்களை எல்லாம் படித்து கிழிக்கவில்லை என்றாலும்.
அலப்பறை: 4
இந்தப் புத்தகம் குறித்து நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசினேன். ( மேடையை மட்டும் காண்பிக்கும்படி பத்திரிகையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் )
மலேசியா பெண் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூக்கு ஆபாச பதிவுகளை அனுப்பிய புதுச்சேரி பாஜக இளைஞர்
Kamache Doray Rajoo |
தினகரன் : புதுச்சேரி: மலேசியாவின் பகாங் மாநிலம், சபாய் எம்எல்ஏவாக இருப்பவர் தமிழச்சி காமாட்சி துரைராஜூ. மலேசியவாழ் தமிழரான இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிவேல் பிரகாஷ் என்ற பெயரில் மர்மநபர் ஒருவர் முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளார்.
அவருக்கு நன்றி தெரிவித்து எம்எல்ஏவும் பதிவிட்டுள்ளார்.
பதிலுக்கு அந்த மர்ம நபர் வரவேற்பு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதன்பிறகு முகநூல் பக்கத்தை தமிழச்சி காமாட்சி துரைராஜூ பார்க்காமல் இருந்துள்ளார். தொடர்ந்து அந்த மர்மநபர் முகநூல் பக்கத்தில் அவருக்கு ஆபாச எஸ்எம்எஸ் மற்றும் ஆபாச பதிவுகளை பதிவிட்டு வந்துள்ளார்.
மேலும் முகநூல் மெசெஞ்சர் மூலம் கால் செய்து தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். இதனை கவனித்த எம்எல்ஏவின் உதவியாளர், இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
மாட்டு தீவன ஊழல்: லாலு குற்றவாளி என அறிவிப்பு!
மின்னம்பலம் : : மாட்டு தீவன ஊழல் தொடர்பான ஐந்தாவது வழக்கிலும் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1990ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 950 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் ஏற்கனவே அவர் குற்றவாளி என விசாரணை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
ரேஷன் கடைகளில் பண்டங்களின் இருப்பு விவரம் விநியோக விபரம் விலை போன்றவை தகவல் பலகையில் கட்டாயம்” -தமிழ்நாடு அரசு!
கலைஞர் செய்திகள் : நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் விவரங்களை கொண்ட பலகையை கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும் என தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சுற்றிக்கை அனுப்பியுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் பராமரிக்க வேண்டிய அறிவிப்பு பலகைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் கடிதம் எழுதியுள்ளார்.
ஏர் இந்தியா ஊழியர்கள் சோகம்.. ஏர் ஹோஸ்டஸ்-க்கு புதிய கட்டுப்பாடு விதித்த டாடா..!
Prasanna Venkatesh - GoodReturns Tamil : ஏர் இந்தியாவை தூக்கி நிறுத்த டாடா அதிரடி... ஊழியர்களுக்கு புதிய உத்தரவுகள்...
டாடா குழுமம் 69 ஆண்டுகளுக்குப் பின்பு தனது ஏர் இந்தியா நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றியுள்ள நிலையிலும்,
சந்திரசேகரனுக்கு மீண்டும் 5 ஆண்டுக் காலப் பணிக் காலம் அளிக்கப்பட்டு உள்ள நிலையில் ஏர் இந்தியாவில் ஏற்கனவே திட்டமிடப்படி வாடிக்கையாளர்கள் சேவை,
ஹிஜாப் அரசியலை நேர்மையாக அணுகினேன்! சுய தெளிவும் நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
Sharmila Seyyid : யமுனா ராஜேந்திரன் உங்களுக்கு இருப்பதை விடவும் அதிக தெளிவும் உரிமையும் ஹிஜாப் விவகாரம் குறித்து பேச எனக்கு இருக்கிறது.
15 ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணி அனுபவம் பெற்றவள்.
இன்னமும் என் சமூகப் பணியை பெண்களுக்காக பல வழிகளில் தொடர்கிறேன்.
நான் வேலை செய்தது தமிழ் முஸ்லிம் பெண்களுடன். முஸ்லிம் பெண்களின் நாடி தெரிந்தவள் நான்.
என் 6 ஆம் வகுப்பில் இருந்து 23 வயதுவரையும் ஹிஜாப் அணிந்துள்ளேன்.
ஹிஜாப் அணிந்தால் எப்படி இருக்கும், இல்லாமல் எப்படி இருக்கும் என்று எனக்கு உணர்வுபூர்வமாகத் தெரியும்.
அதை அணிந்தால் சமுகம் எப்படிப் பார்க்கும் களைந்தால் என்ன சொல்லும் என்றும் தெரியும்.
முழுவதையும் அனுபவித்து அறிந்து தெளிந்து பேசுகிறேன்.
என் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் உளறுவதை விடவும் தெளிவாக முன்வைத்துள்ளேன்.
எம்ஜிஆர் முதல் விஷால் வரை .தமிழ் சினிமாவை ஆட்சி செய்த வேறு மாநில 8 ஹீரோக்கள்..
Thenmozhi cinemapettai.com : தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள சில நடிகர்கள் வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். தமிழ் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை பெற்று தற்போது தமிழ் ஹீரோக்கள் ஆகவே மாறிவிட்டார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்கள் என்று நினைத்திருக்கும் சில ஹீரோக்கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
எம்ஜிஆர் : இந்தியாவில் தலைசிறந்த நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத் தன்மையுடன் திகழ்ந்தவர் எம் ஜி ராமச்சந்திரன். இவர் ஸ்ரீலங்காவில் வாழ்ந்த மலையாளி குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் தமிழர் இல்லை என்றாலும் தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர்.
பிரியங்கா காந்தி : என் சகோதரருக்காக எனது உயிரையும் தியாகம் செய்வேன்
தினத்தந்தி : உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் கட்சி மூழ்கிக் கொண்டிருக்கிறது என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.
டேராடூன், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் 5 மாநிலங்களிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில், பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியும், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், கோவா மற்றும் மணிப்பூர் ஆகியவை பாஜக ஆளும் மாநிலங்களாகவும் உள்ளன.
முன்னதாக, பிரியங்கா காந்திக்கும் அவரது சகோதரரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்திக்கும் இடையே பிளவு ஏற்படக்கூடும் என யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்திருந்தார்.
பிரான்ஸ் தமிழச்சி தரப்பு வாதங்கள் சமூகவலை லீக்ஸ்
ThamizhachiAuthor : தமிழச்சி மீது வீசப்படுபவை விமர்சனங்களா?
தமிழச்சி. கடந்த பத்து நாட்களாக தமிழ் இணையப் பரப்பில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர்.
பல ஆண்டுகளாக இணையப்பரப்பில் இயங்கிக் கொண்டிருந்தாலும்,
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக லூலூ குழுவின் பாலியல் சுரண்டல்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போதிலும்,
இப்போது மட்டும் தோழர் தமிழச்சி மீது அதிக வெளிச்சம் விழுந்திருப்பதன் காரணம் என்ன?
இதுவரை அவர் தன்னுடைய நாட்டிலிருந்து, பிரான்சிலிருந்து இவைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார், விவாதித்துக் கொண்டிருந்தார்.
தற்போது அதன் அடுத்த கட்டமாக நேரடியாக தமிழ்நாடு வந்து இதுவரை தான் கூறிவந்ததன் தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கைகளையும்,
லூலு தேவ ஜம்லா தரப்பு வாதங்கள் சமூகவலை காரசார லீக்ஸ்
“சாரி டயம் இல்ல! வீக்கெண்ட் முடிஞ்சி போச்சி! ஆபீஸ் போகணும்!
ஆங் அதோட இப்டியே லெங்தியா வாய்லயே வடை சுட்டுட்டு டைம் வேஸ்ட் பண்ணிகிட்டு திரியாம, தெரட்டுன ஆதாரங்கள எல்லாம் வச்சி நம்ம மேல சட்டுபுட்டுன்னு கேஸ போட்டு உட சொல்லு! போ
லூலு தேவ ஜம்லா : “வாங்கம்மா இந்த பாலியல் சுரண்டல் வழக்குல நீங்க திரட்டுன ஆதாரங்கள எல்லாம் அவுத்து உடுங்க பார்க்கட்டு எல்லாம்…”
“அவரு, அதான் கொளத்தூர் மணி, வாட்சாப்ல ஒரு பொம்பளையோட நிர்வாண படம் வச்சிருந்தாரு!
இந்தா இவ தனக்கு மனசுக்கு புடிச்சவனோட இரகசியமா செக்ஸ் வச்சிகிட்டா!
அந்தா அவன் தன் பொண்டாட்டியோட நண்பர் நண்பிகளோட நட்பா பழகுனான்!
தன் பொண்டாட்டியையும் கூட்டிட்டு அவங்களோட சேர்ந்து ஒண்ணா வெளிய எல்லாம் சுத்தினான்.
தீட்சிதரை தரிசனம் செய்யவிடாமல் மிரட்டும் சக தீட்சிதர்கள்? - சிதம்பரம் கோவிலில் பரபரப்பு
பறச்சின்னு சொல்லி திட்டினாங்க;
தினகரன் : சிதம்பரம் கோயிலில் சக தீட்சிதர் மீது தாக்குதல் தீட்சிதர்கள் 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு: பெண் பக்தரும் போலீசில் புகார்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகித்து பூஜை செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் உள்ளிட்ட யாரும் சாமி தரிசனம் செய்யக் கூடாது என தீட்சிதர்கள் கட்டுப்பாடு விதித்திருந்தனர். இதுகுறித்து கோயிலைச் சேர்ந்த கணேஷ் தீட்சிதர் என்பவர் சக தீட்சிதர்களிடம் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணேஷ் தீட்சிதர் (57) நேற்று முன்தினம் இரவு கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது சிற்றம்பல மேடை முன்பு சென்ற அவரை தடுத்து நிறுத்திய ராஜாசெல்வம் தீட்சிதர், சிவசெல்வம் தீட்சிதர் மற்றும் சபேஷ் தீட்சிதர் ஆகிய 3 பேரும் கோயில் விதிமுறைகளை மீறியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் எப்படி சாமி கும்பிட வரலாம் என கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
திங்கள், 14 பிப்ரவரி, 2022
நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உள்பட 2 பேர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது
தினத்தந்தி : விழுப்புரம் வில்லியம் லேஅவுட் 2-வது தெருவை சேர்ந்தவர் சுசீந்திரன் (வயது 54). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தங்கை பிரமிளா (52). இவரது கணவரான கமல், நடிகை ஊர்வசியின் தம்பி ஆவார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரமிளாவை விட்டு கமல் பிரிந்து சென்றார். இதனால் வாடகை வீட்டில் சுசீந்திரனும், பிரமிளாவும் வசித்து வந்தனர். போதிய வருமானம் இல்லாததால் அவர்கள் வறுமையில் வாடினர்.
இந்த நிலையில் சுசீந்திரன் வீட்டில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே போலீசார், கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
சவுதி அரேபியாவில் காதலர் தின சிவப்பு ஹார்ட்டின் அனுப்பினால் சிறை தண்டனை
நக்கீரன் செய்திப்பிரிவு : உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் வேளையில், சவுதி அரேபியாவில் சிவப்பு நிறத்திலான இதய எமோஜியை மற்றவருக்கு அனுப்புவது குற்றமாகக் கருதப்படும் என அந்தநாட்டு நிபுணர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் உள்ள ஆன்டி பிராடு அஸோசியேஷன் உறுப்பினர் அல் மோடாஸ் குட்பி, சிவப்பு நிறத்திலான இதய எமோஜியை வாட்ஸ்அப்பில் அனுப்புவது அந்நாட்டு சட்டப்படி துன்புறுத்தலாகக் கருதப்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும் சிவப்பு நிறத்திலான இதய எமோஜியை அனுப்புபவர் மீது வழக்கு தொடரப்பட்டால், அனுப்பியவருக்கு ஒரு லட்சம் முதல் 3 லட்சம் சவுதி ரியால்கள் வரை அபராதமும், 2 முதல் 5 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் மதவெறி கும்பல்களால் எரித்து கொலை செய்யப்ட்ட சுதந்திர சிந்தனையாளர்
BBC News, தமிழ் : இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனை: பாகிஸ்தானில் குரான் பக்கங்களை எரித்ததாக கும்பல் கொலை செய்யப்பட்ட நபர்
இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்களை தீயிட்டு எரித்து மத நிந்தனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவர் கும்பல் ஒன்றால் கொலை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் காவல் துறை தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் சனிக்கிழமை அன்று நடந்த இந்த கொலை தொடர்பாக 80க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறை தெரிவிக்கிறது.
பஞ்சாபின் கானேவால் மாவட்டத்தில் இது நிகழ்ந்துள்ளது. கானேவால் மாநிலத் தலைநகர் லாகூரில் தென்மேற்கே 275 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை NSE நிர்வாகி சித்திரா ராமகிருஷ்ணன் வசமாக சிக்கினார் சாமியாரிடம் தகவல்களை பரிமாறினார்
இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னையில் சொந்த வீடு வாங்க ஆஃபரை அள்ளித்தரும் டிவிஎஸ் எமரெல்ட்
இது குறித்து வெளியான அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் வசிக்கும் சாமியாரிடம் பொருளாதார ஆலோசனை மற்றும் பங்கு சந்தை ரகசியங்களை பகிர்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதற்கிடையில் தான் செபியின் கட்டுப்பாட்டு வளையத்தில் சித்ரா சிக்கியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் மீது தீட்சதர்கள் கொலைவெறி தாக்குதல்!
நக்கீரன் செய்திப்பிரிவு : சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கரோனா தொற்று காரணமாகக் கோவிலின் கருவறை முன் உள்ள சித்சபையில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்யக் கோவில் நிர்வாகம் தடைசெய்து இருந்தது.
ஆனால் சித்சபையில் பூஜை செய்யும் தீட்சிதர்கள் தவிர 20-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் எப்போதும் சித்சபையில் இருப்பார்கள்.
இதனைப் பார்த்துப் பொதுமக்கள் நீங்க மட்டும் ஏன் முககவசம் அணியாமல் கரோனா தடுப்பூசியைப் போட்டுகொள்ளாமல் கூட்டமாக இருக்கிறீர்கள். இதனால் எங்களுக்குத் தொற்று பரவாதா? எனக் கூறி கடந்த 6 மாதத்திற்கு முன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியது.
உத்தர பிரதேசம் உத்தரகாண்ட், கோவா தேர்தல் ... இன்று வாக்குப்பதிவு!
மின்னம்பலம் : உத்தரகாண்ட் கோவா ஆகிய மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதுபோன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மொத்தம் உள்ள 13 மாவட்டங்களில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவை அனைத்துக்கும் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. 81,72,173 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மொத்தம் 152 சுயேச்சைகள் உட்பட 632 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022
தனுஷ் ஐஸ்வர்யா இனியும் ஒன்றாக இருக்க முடியாது என்ற முடிவில்? சோகத்தில் ரஜினி
tamil.samayam.com : தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் சேர்வார்களா என்பது பற்றி புது தகவல் வெளியாகியிருக்கிறது.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். அவர்களை சேர்த்து வைக்க தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது.
தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு: வெளியான 'திடுக்' தகவல்
தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே 6 ஆண்டுகளாக பிரச்சனையாக இருந்தது. அவர்கள் அப்பொழுதே பிரியாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறதே, தவிர தற்போது பிரிந்திருப்பது ஆச்சரியம் இல்லை என்று கோடம்பாக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
லு லு பற்றிய பிரான்ஸ் தமிழச்சி பேட்டி .. இங்கன ஈ கதா போவறது
தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி நேர்மையாளர் என்றால்,
ஒன்றரை வருட கள்ள மௌவுனத்தை தளர்த்திவிட்டு தன் செயல்பாட்டிற்கான விளக்கத்தை மக்கள் முன் விளக்க வேண்டும்.
திவிக செயற்குழுவிடமும் 'வாட்ஸ் அப்' தகவல்களை அளித்து அறம்சார் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
பெரியார் பெயரை தங்கள் பெயராக போட்டுக்கொள்ளலாமா? ( உ+ம் பெரியார் சரவணன்)
அது தங்களை மேம்படுத்தும் சிந்தனை கொண்ட மாமனிதராம் ஈ.வெ.ராமசாமிக்கு பெண்கள் அங்கீகரித்துக் கொடுத்த பட்டம் தானே.
அவர்க்கு முன்பாகவும், இணையாகவும் அவர் போன்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர் தென்னாட்டில் இல்லாததால் அவர் பெரியார் ஆக்கப்பட்டார்.எங்கள் தந்தைக்கு ,தலைவனுக்கு அரசியல் பெண்கள் கொடுத்த பொதுவாழ்வுக்கான சமூக அங்கீகாரம் அது.
அடுத்தவர் பட்டத்தை திருடி தாங்கள் போடுவது சரியா?.
நான் டாக்டர் என எப்படி போட்டுக்கொள்ள முடியாதோ அது போல் நான் பெரியார் என போட்டுக்கொள்ள பெரியாரிச அரசியலில் ஏன் தடை இல்லை?
பெரியாரிய இயக்கங்கள் பெரியாரிஸ்டுகள் இவ்வாறு தாங்களே பெயர் சூட்டிக்கொண்டு பொதுவாழ்வில் அவர் பெயரை கெடுக்க அனுமதிக்க கூடாது.
லோகநாயகி .(பெரியார் இல்லை.பெரியாரிஸ்ட்
கனடாவில் லாரி டிரைவர்கள் போராட்டம்.. தடுப்பூசி விவகாரம்
மாலைமலர் :தடுப்பூசி கட்டாயம், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டதற்கு லாரி டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது.
பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது.
வினி ராமனை (தமிழ்) மணக்க இருக்கும் கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்)
மாலைமலர் : திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படி அச்சிடப்பட்டுள்ளதால் இந்த அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் பெண்ணை மணக்க இருக்கும் கிளென் மேக்ஸ்வெல் - வைரலாகும் திருமண பத்திரிக்கை..!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்
கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல். ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கிளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார். இதையடுத்து அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது பெங்களூரு அணி.
மார்க்ஸியமென்பது பாட்டாளிகளுடையதல்ல! அது கீதையின் சாரமே!
புகச்சோவ் : மதவாதிகளின் சின்டிகாலிசம்.....!? 11)
அடக்குமுறையாளர்களுக்கும், அடக்கப்படுகிறவர்களுக்கும் இடையேவுள்ள கலாச்சார வேறுபாடானது, எவ்வளவு அதிதீவிரமானதாக இருக்கிறதோ, அவ்வளவு பரஸ்பர எதிர்ப்பை தூண்டியெழச்செய்கிறது. ஆதிக்க தரப்பு வெற்றிபெறுவதை தடுக்கிறது. அதுபோலவே,அந்த கலாச்சார வேறுபாடு குறைவாக இருந்தால், கலாச்சார ஒற்றுமை அதிகமாகவிருந்தால்! அடக்குமுறையின் கை ஓங்குகிறது, எதிர்ப்பும் குறைவாகப்போய்விடுகிறது. ஆதிக்க சக்திகளின் வெற்றியும் இலகுவாகிவிடுகிறது!
: - பிரமிள்
அக்சிலிஸும், உலிசெஸும் ஒரு நூற்றாண்டு போரிட்டனரே ப்ரமிள்!?
ட்ராயின் சாம்பலை காண உலக மக்கட்தொகையில் 25% பேர் சண்டையிட்டு அழிந்துபோயினரே ப்ரமிள்...!?
அவர்களுக்குள் நெருங்கிய கலாச்சார தொடர்புண்டே ப்ரமிள்...!?
2500 ஆண்டுகள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு, மாபெரும் தமிழகத்தை பிராமண்யத்திடம் விற்றனரே சேரசோழபாண்டியர்கள்! அவர்களிடத்தே நெருங்கிய கலாச்சார தொடர்பிருந்ததே ப்ரமிள்....!?
மாநில உரிமைகளைக் காக்க திமுக எப்போதும் துணை நிற்கும்: மம்தா பானர்ஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
கலைஞர் செய்திகள் : எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்து ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் மாநில அரசுகளின் திட்டங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்திவிட்டு மீண்டும் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி.
பேராசிரியர்கருணானந்தம் : கால்டுவெல் இல்லாவிட்டால் திராவிட மொழிகள் குடும்பம் என்பதே இல்லாமல் போயிருக்கும்
கூடாரங்களில் வாழ்ந்தவர்களா அல்லது கோட்டைகளில் வாழ்ந்தவர்களா தொன்மையானவர்கள்? பேராசிரியர். கருணானந்தம் :
Mr Justice என்று அமெரிக்காவில் அழைப்பார்கள் .. இங்கே நாம் மை லார்ட் என்கிறோம் .. வழக்காடுபவர்கள் பிச்சை எடுப்பவர்கள் போலவும் .. தீர்ப்பை கொடுப்பவர் பிச்சை அளிப்பவர் போலவும் ஒரு ஜனநாயக நாட்டில் .. நீதிக்கு உகந்ததுதானா?
தன்வழக்கு என்று வந்தால் தானே தீர்ப்பு அளிப்பதுவும் .. அடுத்தவர் வழக்கென்று வந்தால் பெரிய சம்பிரதாயங்களை பார்ப்பதுவும் ..
சில சமயத்தில் விபத்துக்களை போல நல்ல தீர்ப்புக்கள் வருவதுண்டு
ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அங்கம் அல்ல! கேரள ஆளுநர் ஆரிப் முகமத் கான் : குரானில் 7 முறை மட்டுமே ஹிஜாப்!
Vishnupriya R - Oneindia Tamil : திருவனந்தபுரம்: ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அங்கம் அல்ல என்று கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னையில் சொந்த வீடு வாங்க ஆஃபரை அள்ளித்தரும் டிவிஎஸ் எமரெல்ட்
கர்நாடகா மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில் (பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் இருக்கும்) ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்துத்துவா மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். சிலர் கல்வீச்சு சம்பவத்திலும் ஈடுபட்டனர்.
Rahul Bajaj -தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார்.. முதன்முதலில் CEOவாக பதவியேற்ற இளம் இந்தியர்!
கலைஞர் செய்திகள் : பஜாஜ் குழும முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 83. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ராகுல் பஜாஜ் குறிப்பிடத்தக்கவராக திகழ்ந்தார்.
1938ஆம் ஆண்டு பிறந்த ராகுல் பஜாஜ் பொருளாதாரம் மற்றும் சட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளார்.
ராகுல் பஜாஜ், 1965ஆம் ஆண்டு நிர்வாக அலுவலராக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் 1968ல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார். இத்தகைய பதவியை ஏற்ற இளம் இந்தியர் என்ற பெருமையையும் ராகுல் பஜாஜ் அப்போது பெற்றார்.
உக்ரைன் போர் பதற்றம் - . விளாதிமீர் புடினுக்கு, பைடன் எச்சரிக்கை
மாலைமலர் : ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் என்று பைடன், புடினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறும் வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெதிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை குவிப்பு குறித்து பைடன் கவலை தெரிவித்தார்.
பிரியதர்ஷினி டீச்சரின் வாழும் காதல்...
Michael Raj Y பிரியதர்ஷினி ... வாழும் காதல்...
பிரியதர்ஷினி டீச்சர் வேலை செய்யும் பொழுது ஒரு லோகோ பைலட்டை காதலித்தார்.
மங்களூர்-சென்னை வழித்தடத்தில் டீச்சரின் காதலர் ட்ரெயின் ஓட்டினார்.
தலச்சேரி ஸ்டேஷனில் ட்ரெயின் நிற்கும்பொழுது இருவரும் சந்தித்து பேசிக் கொள்வார்கள்.
மொபைல் போன்கள் மிகவும் அரிதாக இருந்த அந்தக் காலத்தில் இவர்களின் காதல் அப்படி வளர்ந்தது.
டீச்சர் மிக அழகாக இருப்பார்கள்.
ஒருநாள் டீச்சர் காதலித்த ட்ரெயின் டிரைவர் ரயில் விபத்தில் உயிரிழந்தார்.
இந்த விஷயத்தை செய்தித்தாள்கள் மூலமாக தெரிந்துகொண்ட டீச்சருக்கு மனநிலை பாதித்தது.
உண்மையான தமிழ் தாத்தா ஜி.யு.போப் ..உ வேசா-வுக்கும் முன்பே, ஊர் ஊராக அலைந்து.... தமிழ் காத்த George Uglow Pope
Sundar P : முதல் தமிழ் தாத்தா ஜி.யு.போப் ...(ஜார்ஜ் உக்லோ போப்.)
உவேசா-வுக்கும் முன்பே, ஊர் ஊராக அலைந்து, சுவடிகள் திரட்டி புறநானுறை பதிப்பித்த ஜியு போப்தான் முதல் தமிழ் தாத்தா.
உவேசா 1894 ல் புறநானூறை இரண்டாம் பதிப்பு செய்தார்.
ஆனால் ஜியு போப் 1886 ல் முதல் பதிப்பு செய்தார்.
ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கு அருந்தொண்டாற்றிய ஜார்ஜ் உக்லோ போப்.....
அவரைப் பற்றி:
• கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் 1820-ல் பிறந்தவர்.
• தந்தை வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது.
• ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார்.
• கப்பலில் பயணம் செய்த அந்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.