சனி, 20 ஜனவரி, 2024

திமுக இளைஞரணி மாநாடு! 150 கிமீ தூரத்துக்கு 3,000 போஸ்டர்கள் ஒட்டிய அன்பில் மகேஸ்!

tamil.oneindia.com -  Arsath Kan : திருச்சி: திமுக இளைஞரணி மாநாட்டை ஒட்டி திருச்சியிலிருந்து சேலம் வரை வழிநெடுகிலும் 3,000 போஸ்டர்கள் ஒட்டி கவனம் ஈர்த்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு சேலத்தில் நாளை நடைபெறும் திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டை ஒட்டி சேலம் புறநகர் பகுதி திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தை நோக்கி இளைஞரணியினர் சாரை சாரையாக குவிந்து வருகின்றனர்.

முல்லைத்தீவில் கரையொதுங்கிய பங்களாதேஷ்காரரின் உடல் !

வீரகேசரி :  முல்லைத்தீவில் கரையொதுங்கிய பங்களாதேஷ்காரரின் உடல் !
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (19) காலை கரையொதுங்கிய சடலம் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவருடையதென இனம் காணப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
சடலம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு பொலிஸார் குறித்த சடலத்தை பரிசோதனை செய்துள்ளார்.

திமுக தேர்தல் பணிகள் ஸ்டார்ட்... கூட்டணிக் கட்சிகள் கேட்டது கிடைக்குமா? ஸ்டாலினுக்குச் சென்ற ரிப்போர்ட்!

மின்னம்பலம் Aara : ”பொங்கல் முடிந்த கையோடு திமுக தனது நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவிட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (ஜனவரி 19) நாடாளுமன்றத் தேர்தலுக்காக முக்கியமான குழுக்களை அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும் குழு, மக்களவைத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு ஆகிய மூன்று குழுக்கள்தான் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மண்டலத்தை கவனிப்பார்கள் என்றும் அறிவாலய வட்டாரத்தில் சொல்கிறார்கள். 

நடிகை காயத்ரி ரகுராம் அதிமுக-வில் இணைந்தார்

மாலை மலர் :  பிரபல நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், தமிழக பாஜக-வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டிய அவர், பாஜக-விற்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அதிமுக-வில் இணைத்துக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுக-வினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுக-வில் இணைந்துள்ளேன் எனக் கூறினார்.
பாஜக உடனான கூட்டணில் இருந்து அதிமுக விலகிய பிறகு, பாஜக-வை சேர்ந்த பலரும் அதிமுக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பாஜக-வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், இன்று அதிமுக-வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 19 ஜனவரி, 2024

எம்எல்ஏ மகன் வீட்டில் பணிபுரிந்த இளம் பெண் புகாரில் வழக்குப் பதிவு

 Hindu Tamil  :  சென்னை: திருவான்மியூரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்தபோது, அவ்வீட்டின் உரிமையாளரர்களான கணவன், மனைவி தன்னை அசிங்கமாக பேசியும், அடித்தும் காயப்படுத்தியதாகவும் கூறி
18 வயது பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிட்ட தகவல்: கடந்த ஜன.16 அன்று உளுந்தூர்பேட்டை, அரசு மருத்துவமனையில் இருந்து கொடுத்த தகவலின் பேரில், மேற்படி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு சுமார் 18 வயது பெண் வந்திருப்பதாகவும்,
அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், சென்னை - திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

கனிமொழி தலைமையில் மக்களவை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு!

 மின்னம்பலம் - christopher :  இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான  கனிமொழி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (ஜனவரி 19) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்கும் குழுவில் கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.  அதன் விவரம்:
தலைமை:
கனிமொழி கருணாநிதி எம்.பி., (கழகத் துணைப் பொதுச் செயலாளர்)
உறுப்பினர்கள் :
டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்புத் தலைவர்)
ஏ.கே.எஸ்.விஜயன் (கழக விவசாய அணிச் செயலாளர்)
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்)

குஜராத் படகு கவிழ்ந்து 14 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு,, பள்ளி சுற்றுலாவில் விபத்து

மாலை மலர் :  குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என மொத்தம் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களும், 4 ஆசிரியர்களும் இன்று மதியம் அங்குள்ள ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஹர்னி காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை, 14 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் இறந்துள்ளனர். மீட்கப்பட்ட ஒரு மாணவர், எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது" என்று தெரிவித்தார்

கிராமப்புறத்தில் திமுக வாக்கு வங்கி சரிகிறதா? எழுகிறதா? சமூகவலையில் விவகாரமான கருத்து மோதல்!

 Kandasamy Mariyappan : வருத்தமான செய்தி.!
2021ம் ஆண்டை ஒப்பிடும் போது... கிராமப்புறங்களில் திமுக வாக்கு வங்கி பாதியாக சரிகிறது.!
உதய மாறன் : ஏன்?
Sri Nivas : ஏன்?
Meena Palaniappan : Why?
Rajendra Selvaraj : நீங்களே இப்படி சொல்லும்போது அதிர்ச்சியாகத்தானிருக்கிறது...
Kumarchandran Sundararajan : How sir
ராஜூ. செல்வமணி : கடுமையான கோஷ்டி பூசல்..
மேல்மட்டத்திலிருந்த பூசல்கள் கிளை கழகம் வரை கோஷ்டி பூசல்.
Sridharan Chakrapani : எப்படி சொல்கிறீர்கள்! இப்போது பெண்களுக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வேறு கிடைக்கிறது
Mohandas Marudhamuthu : இதை எழுதினால் எழுதுபவர்களை திட்டுவாங்க..
வேண்டாம் விடுங்க..
Devakar Kaliyaperumal : ஆமாவா
Duraiswami Sundaravadivelu : சார் இந்த கருத்து எந்த அடிப்படையில். யாருக்கு இது பலன் அளிக்கிறது

வியாழன், 18 ஜனவரி, 2024

பௌத்தத்தின் தோற்றமே திராவிட ஆரிய பெரும் போருக்கான ஒரு தொடக்கம்

May be an image of 1 person and text that says 'பவுத்தம் ஆரிய -திராவிடப் போரின் தொடக்கம் எழில். இளங்கோவன் ටல் ரிதகாககம் 1'

 Vimalaadhithan Mani :   பிறப்பால் திராவிடரான புத்தர் சாதிகளற்ற சமத்துவம், சமூக நீதி,பெண் விடுதலை போன்ற திராவிட கருத்தியலை தூக்கிப்பிடித்து மது, களவு, பொய், திருட்டு, கொலை என்ற பஞ்சமா பாதகங்களை ஒழிப்பதற்காக தேரவாதம் என்றழைக்கப்பட்ட  புத்த மதத்தை தோற்றுவித்தார்.
ஆரிய கருத்தியலை அடியோடு அழிக்க  முயன்ற புத்த மதத்தின் வளர்ச்சி அதுவரை இந்தியாவில் புத்தர் குறிப்பிட்ட பஞ்சம பாதகங்களையும் அரசகுரு, அரச ஆலோசகர் என்ற போர்வையில் அரசு ஆதரவுடன் நிகழ்த்தி கொண்டு இருந்த பார்ப்பனீய வெறியர்களை அதிர்ச்சியிலும் பயத்திலும் ஆழ்த்தியது.
திராவிட போராளியான புத்தரை நேரடியாக எதிர்த்து வெல்ல முடியாது என்று உணர்ந்த பார்ப்பனீயம் நயவஞ்சகமாக பௌத்தத்தை ஆரிய கருத்தியலுடன் இசைவு கொண்டதாக மாற்றும் மகாயானம் என்ற புதிய பிரிவை நாகார்ஜுனர் என்ற ஆரிய பார்ப்பனர் மூலம் தோற்றுவித்து,
 புத்தர் ஆரம்பித்த தேரவாதம் என்றழைக்கப்பட்ட நிஜ பௌத்தத்தை ஹீன(ஈன) யானம் என்ற பெயரை கொடுத்து சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக ஈனப்பிறவிகளாக அடையாளப்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கான புத்தமத பிரிவாக ஹீனயானத்தை தாழ்த்தினர்.

சீமானுக்கு சென்னையில் வீடு எடுத்து கொடுத்த திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்

எனக்கு தமிழச்சி அக்கா தான் வீடு புடுச்சு கொடுத்தாங்க"சபாஷ் அக்கா !! சபாஷ் ! கலைஞரையும் கலைஞர் குடும்பத்தையும் மிக கேவலமான பேசும் சீமான் தமிழச்சி தங்கபாண்டியனின் நட்பு வட்டத்தில் இருக்கிறார். திமுக மீது இல்லாத பொல்லாத பொய் பிரசாரங்களை எந்த வித கூச்சமும் இன்றி தினசரி வாந்தி எடுக்கும் சீமானுக்கு சென்னையில் தங்குவதற்கு வீடு எடுத்து கொடுத்திருக்கிறார் திமுகவின் தென் சென்னை எம்பி திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் இப்படி பட்டவர்களை விட சங்கிகள் மேல் என்று திரு மனோஜ் குமார் ( தந்தை பெரியார் திராவிடர் கழகம் ) கூறியுள்ளார்.

இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய திமுக எம்எல்ஏ கருணாநிதி குடும்பம்? : நடந்தது என்ன?


மின்னம்பலம் - christopher :  திமுக எம்.எல்.ஏ  மகன் வீட்டில் வேலை செய்துவந்த தனக்கு சம்பளம் கொடுக்காமல் கொடுமை செய்ததாக இளம்பெண் ஒருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநரங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்ற இளம்பெண், கடந்த ஏழு மாதமாக திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ மதிவாணன் வசிக்கும் திருவான்மியூர் வீட்டில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் எம்.எல்.ஏ ஆட்கள் ரேகாவை கடந்த 15 ஆம் தேதி இரவு, திருநரங்குன்றத்தில் உள்ள அவரது பெற்றோரிடம் விட்டு சென்றனர்.

ஊழல் குற்றச்சாட்டு – சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் தனது பதவியை ராஜினாமா!

தேசம் நெட்  : சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இ லஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், தாம் குற்றமற்றவரென அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் வாதிட்டுள்ளார்.
Formula One Grand Prix கார் பந்தயம் சிங்கப்பூரில் நடைபெற்ற போது, அந்நாட்டு சுற்றுலாத்துறையை மேற்பார்வை செய்தவராக அவர் நன்கு அறியப்படுகின்றார்.
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, அவர் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

திராவிடத்தால் உயரத்த தமிழக வியாபாரிகளுக்கு வடக்கன்களால் இவ்வளவு விரைவாக வீழ்ச்சி எப்படி சாத்தியமானது?

Raja Rajendran :  இது உங்களைக் கிளறும் பதிவு.  நீங்கள் யோசித்து பதிலளியுங்கள்.
1.) வளமான ஆதிக்க இடைச்சாதியினருக்கென்று இருந்த பல வணிகங்கள் (Monopoly) உங்கள் பகுதிகளில் இன்றும் அவர்கள் கைகளிலேயே உள்ளனவா ?
அதாவது, தென்னகத்திலிருந்து 100 வருடங்களுக்கு முன் படையெடுத்து சென்னைக்கு வந்த நாடார்கள் சென்னை முழுவதும் பரவலாக வைத்தது மளிகைக் கடைகள்.
அந்த மளிகைக்கடைகள்தான் அரிசிக்கடை, பாத்திரக்கடை, துணிக்கடை, மரக்கடை, நகைக்கடை, உணவகங்கள் என்று படிப்படியாக செழித்து வளர்ந்தன.
2.) ராஜஸ்தானிலிருந்து வந்த மார்வாடிகள் பெரும்பாலும் அடகுகடைகள், வட்டிக்கு பணம் கொடுத்தலில் மட்டுமே  கவனம் செலுத்தி பிறகு பணத்தை அவர்களும் படிப்படியாக வேறு தொழில்களில் முதலீடு செய்தனர் !
3.) பஞ்சாப்பிலிருந்து வந்த சர்தார்ஜிகள் அண்ணாசாலை சந்து பொந்துகள் அனைத்திலும் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள், மின் & மின்னணு சாதனங்கள் கடைகளை வைத்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: `அரசியல் நுழைவதால் குளறுபடிகள்!’ - மாடுபிடி வீரர் புகார்; நடந்தது என்ன?

Vikatan: : உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் இரண்டாவது பரிசுக்கு அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரர் எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான களமான மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாலை 6 மணி வரை 10 சுற்றுக்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் 810 காளைகளுடன் 500 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.
முதல் பரிசு பெறும் கார்த்திக்
போட்டியில் மாடுபிடி வீரர்களை திணறச்செய்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளே அதிக அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளிச் சென்றது.

புதன், 17 ஜனவரி, 2024

யாழ்ப்பாணத்தில் மாபெரும் பட்டப் போட்டி

ஜாப்னா முஸ்லீம்  - எம்.றொசாந்த் : யாழ்ப்பாணம் - வல்வை உதயசூரியன் கடற்கரையில்  நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற மாபெரும்  பட்டப் போட்டியில் 60ற்கு மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டு இருந்தன.
போட்டியில் முதலாம் இடத்தினை, "ஆகாய விமானம் தாங்கிய போர் விமானம்" என்ற பட்டம் பெற்றது. அதற்கான பரிசினை அந்த பட்டத்தினை வடிவமைத்த  வினோதன் பெற்றுக்கொண்டார்.  
இரண்டாம் இடத்தினை " விண்வெளியில் நிலை நிறுத்திய செயற்கை கோள்" என்ற பட்டம் பெற்றது. அதற்கான பரிசினை , அந்த பட்டத்தினை வடிவமைத்த பிரசாந்த் பெற்றுக்கொண்டார்.

ஜப்பானில் விமானங்கள் மோதி விபத்து

மாலைமலர் : ஜப்பானின் வடக்கு ஹோக்காய்டோ மாகாணம் சப்பரோ தீவில் உள்ள நியூ சித்தோஸ் விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று 289 பயணிகளுடன் புறப்பட தயாரானது.
விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு வானில் எழும்ப முயன்றபோது அங்கே பயணிகள் யாரும் இல்லாமல் நின்று கொண்டிருந்த கேத்தே பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்துடன் மோதியது. இந்த விபத்து காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Iran Pakistan War ? பாகிஸ்தான் உள்ளே ஏவுகணை அனுப்பி.. 2 இடங்களில் தாக்கிய ஈரான்!

Shyamsundar tamil.oneindia.com : கராச்சி; பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் இரண்டு தளங்கள் ஈரான் நாட்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு உள்ளன. ஈரானின் உயரடுக்கு ராணுவ குழு மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகளை ஏவுகணைகளால் தாக்கிய ஈரான் தற்போது பாகிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல் அட்ல் தீவிரவாத அமைப்பின் முகாம்களில் ஈரான் சரமாரியாக ஏவுகணை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. .... பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் ஈரான் பாதுகாப்புப் படையினர் மீது அந்த தீவிரவாத அமைப்பு முன்பு தாக்குதல் நடத்தியது.

துக்ளக்’ ஆண்டு விழாவில் சசிதரூர் குற்றச்சாட்டு.. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை அரசியல் பிரச்சாரம் ஆக்கும் பாஜக

hindutamil : சென்னை: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை, தேர்தல் ஆதாயங்களுக்கான அரசியல் பிரச்சாரமாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்று ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றம்சாட்டியுள்ளார். ‘துக்ளக்’ இதழின் 54-வது ஆண்டு விழா, சென்னையில் கடந்த 14-ம் தேதி நடந்தது. அதன் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வரவேற்றார். .. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சசிதரூர் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசியதாவது: பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை குறிவைக்க அமலாக்கத் துறையை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இது கூட்டாட்சியை சிதைக்கும் செயல். மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது. 16-வது நிதி ஆணையம் செயல்பாட்டுக்கு வந்தால், மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் இன்னும் மோசமான நிலை உருவாகும்.

செவ்வாய், 16 ஜனவரி, 2024

ஆந்திர காங்கிரஸ் தலைவரானார் ஒய்எஸ் ஷர்மிளா

மாலை மலர் : ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய் எஸ் ஷர்மிளா (YS Sharmila), தனது சகோதரருடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டால் 2021 ஜூலை மாதம் அவரது கட்சியில் இருந்து விலகினார். தொடர்ந்து, ஷர்மிளா ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி (YSR Telangana Party) எனும் புதிய கட்சியை தொடங்கினார்.ஆனால், சில மாதங்களுக்கு முன் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் ஷர்மிளா இணைந்தார். தனது கட்சியையும் காங்கிரசுடன் இணைத்தார்.

கடந்த திங்கட்கிழமையன்று ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜு (Gidugu Rudra Raju) தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை, ராஜு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு அனுப்பி வைத்தார்.

சந்திரபாபு வாழ்வில் நடந்த சோகம்! சாவித்திரியுடன் ஏற்பட்ட உறவு

மனைவியை கொடுமைப்படுத்திய சந்திரபாபு? Chandrababu tortured his wife? ஷீலா எழுதிய கடைசி கடிதம்!

மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெடு

Hindu Tamil   :  புதுடெல்லி: மார்ச் 15-ம் தேதிக்குள் மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெடு விதித்துள்ளார்
கடந்த ஆண்டு செப்டம்பரில் மாலத்தீவு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் தேசியகாங்கிரஸ் தலைவர் முகமது முய்சுபுதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மாலத்தீவில் 88 இந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் வெளியேற வேண்டும் என்று முகமது முய்சு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த சூழலில் மார்ச் 15-ம் தேதிக்குள் மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று அதிபர் முய்சு கெடு விதித்துள்ளார்.

திங்கள், 15 ஜனவரி, 2024

அமேசான் காட்டில் பிரமிக்க வைக்கும் வீடுகள், சாலைகளுடன் 2,500 ஆண்டுகள் பழைய நகரம்

BBC Tamil :  அமேசான் காட்டில் பிரமிக்க வைக்கும் வீடுகள், சாலைகளுடன் 2,500 ஆண்டுகள் பழைய நகரம் பழங்கால வீடுகளுக்கு அடிப்படையாகக் கருதப்படும் 6,000 மேடுகள் இங்கு இருந்ததற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

காட்டுக்குள் செழித்துப் படர்ந்த பசுமையான தாவரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பண்டைய நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு அமேசானில் வாழும் மக்களின் வரலாற்றைப் பற்றிய நமது புரிதலை மாற்றுவதாக அமைந்துள்ளது.
கிழக்கு ஈக்வடாரில் உள்ள உபானோ பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பொதுவெளிகள், சாலைகள் மற்றும் கால்வாய்களின் அற்புதமான வலையமைப்பால் இணைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் வளமான மண்ணை உருவாக்கிய எரிமலை, இந்தச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுத்திருக்கலாம்.

இலங்கை கடற்­படைக் கப்­பல் செங்கடல் பாதுகாப்பு பணியில் ரணில் விக்கிரமசிங்க அதிரடி

வீரகேசரி - சுபத்ரா : இலங்கைக் கடற்­படைக் கப்­பலை செங்­க­ட­லுக்கு அனுப்பும், அர­சாங்­கத்தின் முடிவு, வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்­திலும் இந்த விவ­காரம் எதி­ரொ­லித்­தது. அதற்கு வெளி­யேயும், இந்த முடி­வுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்­பி­யி­ருக்­கி­றது.
ஆனால் அர­சாங்­கமோ தமது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்­கி­றது.
கடந்த 3ஆம் திகதி கொழும்பில் நடந்த விழா ஒன்றில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஹெளதி படை­களின் தாக்­கு­தல்­களில் இருந்து வணிக கப்­பல்­களைப் பாது­காப்­ப­தற்­காக, செங்­க­ட­லுக்கு கடற்­படைக் கப்பல் ஒன்றை அனுப்­பு­வ­தற்கு அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­தி­ருப்­ப­தாக திடீர் அறி­விப்பை வெளி­யிட்­டி­ருந்தார்.
காஸா மோதல்கள் வெடித்த பின்னர், மத்­திய கிழக்கு மாத்­தி­ர­மன்றி, செங்­கடல் பிராந்­தி­யமும் அமை­தியை இழந்­துள்­ளது.

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா நெருக்கடி? லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்து 'அடம்'?

tamil.oneindia.com -  Mathivanan Maran :   டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிட்டாக வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நெருக்கடி தருகிறாராம்;
ஆனால் வயது முதுமையை காரணம் காட்டி தேர்தலில் போட்டியிட மறுக்கிறார் கார்கே என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
கர்நாடகா காங்கிரஸின் முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் மல்லிகார்ஜூன கார்கே.
 9 முறை கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக 2 முறை எம்பியாக தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். ஆனால் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் முதல் முறையாக தோல்வியைத் தழுவினார் கார்கே.

இந்திய ராணுவத்தினரை திரும்ப பெற வேண்டும் - மாலத்தீவு அதிபர் திட்டவட்டம்

மாலை மலர் :   தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் பெற்று கடந்த மாதம் அதிபராக தேர்வு பெற்றார்.
அதனைத்தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டப்படி நாட்டின் 8-வது அதிபராக அந்நாட்டு தலைமை நீதிபதியின் முன்னிலையில் பதவியேற்றார்.
சீன ஆதரவு நிலைப்பாடு உள்ள முகமது மூயிஸ், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டி இனி எந்த நாட்டு ராணுவத்திற்கும் இடம் கிடையாது என அறிவித்தார். மேலும், மாலத்தீவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் எனவும் அறிவித்தார்.

PTR ஏன் நிதியமைச்சில் இருந்து மாற்றப்பட்டார்? விமலாதித்தன் மணி

 Vimalaadhithan Mani : அண்ணன் PTR போல நானும் வங்கி துறையில் பணியாற்றுபவன்தான். அதனால் அவர் விஷயத்தில் என்ன நடந்திருக்கும் என்று என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது.

1 - அவர் அரசின்  வருவாய் செலவீனங்களை நிர்வகிக்கும் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்ததால் தமிழக அரசின் பல்வேறு அமைச்சகங்கள் அவர்களுக்கு  ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக கையாளாததால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை (Revenue Leak) புள்ளி விவரங்களுடன் கண்டுபிடித்தார் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை.

2 - மேலும் தமிழ்நாடு அரசின் மனிதவள மேம்பாடு மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் துறையும் அவர் கீழ் இருந்ததால் தமிழக அரசின் பல அமைச்சங்கங்களின் செயல்பாடுகளில் இருந்த மிக பெரும் நிர்வாக சீர்கேடுகளை கண்டுபிடித்து அவற்றின் பொறுப்பு அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

புத்தரின் போதி பண்டிகையை போகி பண்டிகை என்று மாற்றிய ஆரிய பார்ப்பனர்கள்

 B Anand Kumar  :  புத்தர் இறந்த நாளான போதிப் பண்டிகையை
போகிப் பண்டிகையாக்கியப் பார்ப்பனியம்.
புத்தரின் வரலாற்றின் படி மார்கழி கடைசி_நாளில் இறக்கிறார்.
அவர்
இறந்ததைப் புத்த மதத்தினர் அதிகாலையில் தீபம் ஏற்றி அழுது வணங்குகின்றனர்.
தமிழகத்தில் திருப்பத்தூர் அருகே கௌதமாபேட்டை என்ற ஊரில் இந்த வழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது.
பார்ப்பனியத்தின் எதிராக சிம்ம சொப்பனமாகவே புத்தமும் சமணமும் இங்கு இருந்தது.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற போதனையோடு வைதீகம் தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்ட ஏற்பாடே புத்தர் இறந்த நாளான இன்றையப் போதிப் பண்டிகையை  போகிப் பண்டிகையாக மாற்றியது.

தஞ்சை ஆணவக் கொலை: மேலும் மூவர் கைது!

மின்னம்பலம் - Selvam : தஞ்சாவூர் பட்டுக்கோட்டை ஐஸ்வர்யா ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினர்கள் மூன்று பேரை காவல்துறையினர் இன்று (ஜனவரி 13) கைது செய்தனர்.
தஞ்சாவூர்  மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் நவீன் (வயது 19). நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா (வயது 19).
இருவரும் பள்ளி படிக்கும் போது இருந்தே காதலித்து வந்துள்ளனர். மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தெரிவு .. ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்க நிதிஷ் குமார் மறுப்பு

tamil.news18.com - Mohan :   நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன.
 ஏற்கனவே பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லி என 4 இடங்களில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், 5 ஆவது கூட்டம் காணொலி வாயிலாக இன்று (ஜனவரி-13) நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயர் முன்மொழியப்பட்டதாகவும், அதனை கூட்டணி கட்சிகள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மொழிக் கொள்கை பற்றி கேள்வி கேட்ட நபருடன் அமைச்சர் பிடிஆர் காரசார வாக்குவாதம்: அண்ணாமலை கண்டனம்

tamil.oneindia.com - Nantha Kumar R :  சென்னை: மொழிக் கொள்கை பற்றி கேள்வி கேட்ட நபருடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரசாரமாக வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரவும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்தி மொழிக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. புதிய கல்வி கொள்கை மூலம் மும்மொழி திட்டத்தை மத்திய அரசு தயாரித்தது. இதற்கும் திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மும்மொழி கொள்கை மூலம் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் தான் சென்னை அயலக தமிழர்கள் விழா நடந்தது. இந்த விழாவில் ‛ஒளிரும் எதிர்காலம்.. வாய்ப்புகளும், சவால்களும்.. என்ற தலைப்பில் 3வது அமர்வு நடந்தது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பேசினார்.