சனி, 26 ஜூன், 2010

மைக்ரோசாப்ட் வல்லுனர் கப்ளான் யுனிக்கோடுக்கு மாறினால் தமிழ் மேலும் வளர்ச்சியடையும்

யுனிக்கோடுக்கு மாறினால் தமிழ் மேலும் வளர்ச்சியடையும்
யுனிகோட் முறைக்கு மாறினால் தமிழ் மேலும் வளர்ச்சி அடையும் என்று மைக்ரோ சாப்ட் நிறுவன தொழில் நுட்ப வல்லுனர் கப்ளான் கூறினார்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியில் தமிழ் இணைய ஆய்வரங்குகள் நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்க வந்த மைக்ரோசாப்ட் நிறுவன தொழில் நுட்ப வல்லுனர் கப்ளான் கூறியதாவது,
வட இந்திய மொழிகளுக்கான இன்டிக்கட்டமைப்பில், யுனிக்கோடு தமிழை இணைத்து பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. அதனால் யுனிக்கோடு தமிழுக்கான கட்டமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

இது போன்று கட்டமைப்பு ஏற்படுத்தினால் அனைத்து வசதிகளையும் கம்ப்யூட்டரில் எளிதாக கையாளலாம்.  கம்ப்யூட்டரில் தமிழை பயன்படுத்துவோர், யுனிக்கோட் தமிழுக்கு மாற்றிக்கொண்டால் தான், கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும், இன்டர்நெட் பயன்பாட்டிலும், தமிழ் வளர்ச்சியடையும் என்றார்.

நோபல் பரிசே வழங்கலாம் தினமலர் ஆசிரியருக்குஅறிஞர் பாராட்டு
கோவை: டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசே வழங்கலாம் என்று அறிஞர் கணபதி ஸ்தபதி தெரிவித்தார். இவர் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தை வடிவமைத்த சிற்பி ஆவார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சாத்தனார் அரங்கில் நாணயவியல் தொடர்பாக 'தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார். அவர் பேசிய பின் உரைக்கு நன்றி தெரிவித்து பாராட்டிய கணபதி ஸ்தபதி இக்கருத்தை தெரிவித்தார்.

 தினமலர் ஆசிரியர் பேசியதாவது: பழங்கால நாணயங்கள் தொல்லியல் ஆய்வு செய்பவர்களுக்கு நேரடியாக கிடைப்பதில்லை. அதை தேடி சேகரிக்க வேண்டியுள்ளது. பின்னர் அதை ஆய்வு செய்து சமுதாயத்துக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது. கொடைக்கானலில் நாணயம் விற்பவரிடம் தகவல் சேகரித்து மதுரையில் இஸ்மாயில் என்பவரை கண்டறிந்தேன். அவரிடம் இருந்து வைகை ஆற்று மணலில் கண்டெடுக்கப்பட்ட  நாணயங்களை விலை கொடுத்து வாங்கினேன். அவற்றில் இரண்டு நாணயங்கள் பெருவழுதியினுடையது என்பதை சங்க இலக்கிய ஆய்வுக்கு பின் தெரிந்து கொண்டேன். நாம் அனைவரும் மொழியால் வேறுபட்டிருந்தாலும், கலாச்சாரத்தால் ஒன்று பட்டிருக்கிறோம். இவ்வாறு, தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

இந்த சொற்பொழிவின் போது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சங்க கால நாணயங்கள் பற்றி தினமலர் ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டார். சோழர்களின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதா? என தங்கம் தென்னரசு கேட்டார். சோழர்களின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம், நாணயவியல் சங்கத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது என ஆசிரியர் விளக்கமளித்தார்.


* கணபதி ஸ்தபதி, சங்க இலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்த நிபுணர். வரலாற்றின் அருமையையும் கட்டடக்கலையின் பெருமையையும் அறிந்தவர். தொல்லியல், நாணயவியலில் ஆழ்ந்த அறிவும் கொண்டவர். தினமலர் ஆசிரியரின் நாணயவில் கண்டுபிடிப்பை பாராட்டிய அவர், அதற்காக நோபல் பரிசே வழங்கலாம் என்றார். அவருடைய பாராட்டு தினமலர் ஆசிரியருக்கு அவர் அளித்த பெரிய கவுரவம்.

* தினமலர் ஆசிரியர் அரங்கில் பேசிய போது, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பார்வையாளர் மத்தியில் அமர்ந்திருந்தார். ஆசிரியர் பேச்சை மிகவும் ரசித்துக் கேட்ட அவர், ஆசிரியர் மற்றும் அறிஞர்களை கேள்விகள் கேட்டு தன்னை ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

* கருத்தரங்கில் தனது கண்டுபிடிப்புகளை விளக்கிய போது, தினமலர் ஆசிரியர், மேடையிலிருந்து கீழே இறங்கி, புரஜக்டர் திரை அருகே சென்று, பல்கலைக்கழக ஆசிரியர் போல், நாணயத்தின் ஒவ்வொரு பகுதியையும் விளக்கினார். நாணயத்திலிருந்து துல்லியமான தகவல்களைப் பெறுவதற்கான உத்திகளைப் பற்றி அவர் பேசும் போது, நாணயவியல் துறையினர் வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுதர்சனம் மறைவு:செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற, காங்கிரஸ் தலைவரும்

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற, தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரும், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான சுதர்சனம் காலமானார்.

தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கடந்த 23ஆம் தேதி கோவை வந்தார். திடீர் நெஞ்சுவலி காரணமாக, 24ஆம் தேதி அதிகாலை 2.40 மணிக்கு அவினாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு ஆபரேஷன் நடந்தது. சுதர்சனம் எம்.எல்.ஏ.,வுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

மறைந்த சுதர்சனம் உடலுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், தமிழக மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மல்லிகா ஷெராவத் தங்க நகை ஆபரணங்களை விளம்பரப்படுத்தும் தூதுவராக இருப்பதற்கு ரூ.10 கோடி

இந்தி நடிகர், நடிகைகள் திரைப்படங்களில் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை வாங்குகிறார்கள்.
 
பெருந்தொழில் அதிபர்களும் கோடீஸ்வரர்களும் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு பல கோடிகள் கொடுத்து நடிகர், நடிகைகளை வர வைப்பது வட இந்தியாவில் பேஷனாக மாறி வருகிறது.
 
மல்லிகா ஷெராவத் தங்க நகை ஆபரணங்களை விளம்பரப்படுத்தும் தூதுவராக இருப்பதற்கு ரூ.10 கோடி கேட்டாராம். நகைக்கடையின் உரிமையாளர்கள் சமீபத்தில் மல்லிகா ஷெராவத்தை அணுகினர்.

நகைகளை விளம்பரப்படுத்தும் படமொன்றில் நடிக்கவும் விளம்பர தூதுவராக இருக்கவும் கேட்டனர். அதற்கு மல்லிகா இவ்வளவு பெரும் தொகையை கேட்டாராம். அவரது கோரிக்கைகளை நகைக்கடை அதிபர்கள் பரிசீலிக்கின்றனர்.
 
இவ்வளவு தொகையை கொடுத்து மல்லிகாவை ஒப்பந்தம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

திரு.நோயல் நடேசன் அவர்கள் கலந்து கொள்கின்றார,டான் தமிழ் ஒளியின் அரசியல் களத்தில்

டான் தமிழ் ஒளியின் அரசியல் களத்தில் புலம்பெயர்ந்த தமிழர் நல்லிணக்க குழுவின் இணைப்பாளரும் அவுஸ்திரேலிய உதயம் பத்திரிகையின் ஆசிரியருமான திரு.நோயல் நடேசன் அவர்கள் கலந்து கொள்கின்றார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த வாரம் இலங்கைக்கு சென்றிருந்த புலம்பெயர்ந்த தமிழர் நல்லிணக்க குழுவின் இணைப்பாளரும் அவுஸ்திரேலிய உதயம் பத்திரிகையின் ஆசிரியருமான திரு.நோயல் நடேசன்; கடந்த வியாழனன்று புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.ய+.குணசேகரவை சந்தித்து புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள விடுதலைப் புலிகளின் நலன் குறித்த கலந்துரையாடியுள்ளார். அதே வேளை புனர்வாழ்வு ஆணையாளர்நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்கவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். புனர்வாழ்வு முகாம்களிலிருந்த 400 பெண் போராளிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் வைபவம் வெள்ளியன்று (25.06.2010) தம்பதெனியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெண் போராளிகளின் பெற்றோர்கள் யாழ்ப்பாணம், வவுனியா பிரதேசங்களிலிருந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்விலும் திரு. நோயல் நடேசன் கலந்து கொண்டார். டான் தமிழ் ஒளி தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஐரோப்பிய நேரம் 6.30 மணியிலிருந்த 10.30 மணி வரை நடைபெறும் அரசியல் களம் நிகழ்ச்சியில் இந்த வார  (26.06.2010) அரசியல் களத்தில் திரு. நோயல் நடேசன் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.அவருடனான உங்களது உரையாடல்களுக்கு நீங்கள் அழைக்கவேண்டிய  தொலைபேசி இலக்கம் : 00 94 112 62 30 62

அறிவாலயம் வந்த சாமிகள், மாமிகள்-வாலி கவிதை

செம்மொழி மாநாட்டில் நேற்று முதல் அரசியல் வாடை அதிகம் வீச ஆரம்பித்துவிட்டது. நேற்று நடந்த கருத்தரங்கு மற்றும் கவியரங்கில் பேசியவர்களும், கவிதை பாடியவர்களும், முதல்வர் கருணாநிதியை வெகுவாகப் பாராட்டிப் பேசினர்.

இந் நிலையில் இன்று நடந்த கவியரங்கில், அதற்குத் தலைமை தாங்கிய கவிஞர் வாலி ஜெயலலிதாவையும், சசிகலாவையும் 'மாமிகள்' என்று சாடி கவிதை பாடினார். தனது கவிதையில் அவர் சொன்னது:

ஆலயம்தானே சாமிகளுக்கான இடம்; சாமிகள் மாறலாமா தடம்;
இதை உணர்ந்து இப்போது அறிவாலயத்தில் வந்து அமர்ந்து கொண்டன முத்துச்சாமி, சின்னச்சாமி எனும் இரு சாமிகள்;
இதற்கு காரணம் இரு மாமிகள்! என்றார்.

மேலும் தமிழ் மாநாட்டை விமர்சிக்கும் சோ ராமசாமியையும் தாக்கினார்.

அது அய்ய நோக்கு அல்ல.. 'அய்யர் நோக்கு':

அதேபோல சோவையும் கடுமையாக சாடினார் வாலி. சோ குறித்து அவர் கூறுகையில்,

''புணைந்தான் அய்யா ஒரு பாட்டு அது செம்மொழி மாநாட்டின் மையநோக்கு.
அந்த மையநோக்குப் பாடல் ஈர்த்தது வையநோக்கு

ஆனால் என் அருமை நண்பர் சோ’வுக்கு மட்டும் அதன் உட்பொருளில் ஒரு அய்யநோக்கு
அது அய்ய நோக்கு அல்ல.. 'அய்யர் நோக்கு'
அதுவும் வையநோக்கையும் வையும் நோக்கு! என்றார்.

இலையை விட்டு வந்த பூ.. குஷ்பு:

தொடர்ந்து நடிகை குஷ்பு திமுகவில் இணைந்தது குறித்து வாலி தனது கவிதையில் கூறுகையில்,

'பூ' ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது.
ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதயசூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது
அப்பூ... எப்பூ?’’
புடவை கட்டிய பூ! என்றார் வாலி.

முன்னதாக இன்று காலை 10.45க்கு வாலி தலைமையில் கவியரங்கம் தொடங்கியது.

தொடக்கமாக கவிஞர் மு.மேத்தா கவிதை பாடினார். பின்னர் பா.விஜய், பழனி பாரதி, தணிகைச்செல்வன், இளம்பிறை, உமா மகேஸ்வரி, தமிழ்தாசன் ஆகியோரும் கவிதை பாடுகிறார்கள்.

இந்தி நடிகை தூக்கு போட்டு தற்கொலைமும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி விவேகா பானர்ஜி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்
விவேகா பானர்ஜி,  2000 ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை முன்னணி மாடல் அழகியாக இருந்தார். ஏராளமான விளம்பர படங்களிலும், சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
மொரீசிஸ் நாட்டில் விவேகா பல ஆண்டு காலம் தங்கி இருந்தார். அதன் பிறகு மும்பை திரும்பி தனியாக கார் அப்பார்ட் மென்ட்டில் தங்கி வந்தார்.

நேற்று அவர் தங்கி இருந்த வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு அவர் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் குறும்பட போட்டி: 1500 படங்கள் பங்கேற்பு

உலகத் தமிழ் குறும் படங்கள் மறறும் ஆவணப்படங்கள் போட்டி சென்னையில் அடுத்த மாதம் நடக்கிறது.

பச்சை என்கிற காத்து என்ற படத்தை தயாரித்து வரும் “அ” திரை நிறுவனம் இந்த போட்டிகளை நடத்துகிறது.

குறும் படங்கள், ஆவணப் படங்கள், விளம்பர படங்கள் மற்றும் தமிழிசை தொகுப்புகள் இப்போட்டியில் பங்கேற்கலாம். உலகம் முழுவதும் இருந்து இதுவரை 1500 போட்டியாளர்கள் குறும்பட போட்டியில் பங்கேற்க பதிவு செய்து இருப்பதாகவும் படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூலை 5 ந்தேதி என்றும் இப்போட்டிகளை நடத்தும் பச்சை என்கிற காத்து திரைப்பட இயக்குனர் கீரா, தயாரிப்பாளர்கள் அசுவத்தாமன், இந்துமதி, வைகறையாளன், தனலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.

போட்டியில் வெற்றி பெறும் 25 படங்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது. இந்த குறும்பட விழாவில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வறுமை-தந்தை, தாய், 2 மகள்கள் தீக்குளித்து தற்கொலை: பெற்றோர், 2 குழந்தைகள் தூக்கிட்டு தற்கொலை

பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை [^]செய்து கொண்டனர். அதே போல சென்னையில் 2 குழந்தைகளை தூக்கிலிட்டுக் கொன்ற கணவனும், மனைவி [^]யும், தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டரான ராஜாங்கத்தின் (49) மனைவி மல்லிகா, மகள்கள் திவ்யா (12), தீபிகா (9).

ராஜாங்கத்திற்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் அவரால் சரியாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் குடும்பம் வறுமை வாடி வந்தது.

இதனால் விரக்தியடைந்த ராஜாங்கம் தனது மனைவி மற்றும் மகள்களுடன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தனர்.

2 குழந்தைகளை தூக்கிலிட்டு தம்பதி தற்கொலை:

இந் நிலையில் 2 குழந்தைகளை தூக்கிலிட்டுக் கொன்ற கணவனும், மனைவியும், தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை ஜாபர்கான்பேட்டை காமராஜர் காலனியில் அப்பாதுரை தெருவில் வசித்து வந்தவர் அன்வர் (32). ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். தி.நகர் பகுதியில் ஆட்டோ சங்க துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

இவருக்கு பரீதா (23) என்ற மனைவியும், ரைனா (4), ரிஸ்வானா (2) ஆகிய 2 குழந்தைகளும் இருந்தனர்.

வீட்டில் வறுமை தாண்டவமாடியதால் பெருமளவில் பணம் கடனாக வாங்கியிருந்தார். கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் பணத்தை கந்து வட்டிக்கு வாங்கியிருந்தார் அன்வர். இதற்காக தினசரி ரூ.300 வட்டியாக செலுத்த வேண்டுமாம்.

ஆனால் சமீப காலமாக அவரால் வட்டிப் பணத்தைக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடன் கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்தனர்.

இந் நிலையில் முதலில் தனது குழந்தைகள் ரைனாவையும், ரிஸ்வனாவையும் கயிற்றை கட்டி தூக்கில் தொங்கவிட்டார் அன்வர். பின்னர் அன்வரும், பரிதாவும் தூக்குப் போட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

இன்று காலை நான்கு பேரும் பிணமாக தூக்கில் தொங்கியதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கதறினர். போலீஸார் நான்கு பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அன்வருக்கு கந்து வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் மிரட்டலே இந்த மரணத்திற்குக் காரணமாக கருதப்படுவதால், அன்வரை யார் யார் மிரட்டினார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


பதிவு செய்தவர்: கருணாநிதி
பதிவு செய்தது: 26 Jun 2010 5:55 pm
இது எதிர் கட்சியின் திட்டமிட்ட சதி. இரு குடும்பத்தை தற்கொலை செய்ய வைத்து என் செம்மொழி மாநாட்டுக்கு களங்கம் விளைவிக்க சூழ்ச்சி செய்கிறார்கள்.

பதிவு செய்தவர்: அனுபவசாலி
பதிவு செய்தது: 26 Jun 2010 5:28 pm
இனி இது அதிகமாகும் காரணம் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் -- எல்லாத்தையும் பூசி மெழுகிரதுகான் செம்மொழி மாநாடு - வாழ்க தமிழ். தமிழர்கள் செத்தால் பரவாயில்லை முக்கியமா சில குடும்பங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் அதுதான் தலைவரின் குறிக்கோள்.

[ Post Comments ]

கே.பி யும் ஒன்பது புலிப்புத்தி ஜீவிகளும் ் இனி BORE ஆட்டம் ?

கே.பி.யின் ஏற்பாட்டில் கோத்தபாயவுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டு புலிகள்!

*மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி-அவுஸ்திரேலியா
*திருமதி. சந்திரா மேகன்ராஜ்-அவுஸ்திரேலியா
*ஸ்ரீபதி சிவனடியான்- ஜேர்மனி
*பேரின்பநாயகம் (அம்பிகா நகைமாடம் அதிபர் கனடா)
*விமலதாஸ்- பிரித்தானியா
*சார்ல்ஸ்-பிரித்தானியா
*மருத்துவர் அருண்குமார்- பிரித்தானியா
*கங்காதரன்- பிரான்ஸ்
*சிவசக்தி-கனடா
ஆகியோர் அடங்கிய ஒன்பது பேர் கொண்ட குழுவே வெளிநாடுகளில் இருந்து அரச அதிகாரிகளையும், படை அதிகாரிகளையும் சந்தித்து பேச்சு நடாத்திய வெளிநாட்டு உண்டியல் புலிகள் என்று தெரியவந்துள்ளது.

கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் ஏற்பாட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த புலிகள் அரசுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். ஈழம் ஈழம் என்று இனத்தையே விற்று பிழைக்கும் இந்த கூட்டம் மண்மீட்பு நிதி என்று வெளிநாட்டில் திரட்டிய நிதியை உள்ளூரில் முதலீடு செய்து தமது வருவாயை தக்கவைத்து கொள்ளும் நோக்குடனேயே சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தவென்று வெளிநாடுகளில் இருந்து கொழும்பு வந்துள்ள பினாமிகள் ஆவர்.
www.neruppu.com 

கமல் ஹாஸனின் பொன்விழாவைக் கொண்டாடும் டெல்லியில் மத்திய அரசு விழா

நடிகர் கமல் ஹாஸனை கவுரவிக்கும் விதத்தில் டெல்லியில் மத்திய அரசு [^] சிறப்புத் திரைப்பட விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

கமல் ஹாஸனின் பொன்விழாவைக் கொண்டாடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் [^] அம்பிகா சோனி வரும் ஜூலை 2-ம் தேதி திறந்து வைக்கிறார்.

முன்பு சென்னை வந்திருந்த அமைச்சர் அம்பிகா சோனி, கமலை கவுரவிக்கும் வகையில் அவருக்கு மத்திய அரசே விழா எடுக்கும் என்று கூறியிருந்தார். இப்போது அதை அரசு நிறைவேற்றியுள்ளது.

ஜூலை நான்காம் தேதி வரை டெல்லி ஷ்ரிபோர்ட் அரங்கில் இந்த திரைத் திருவிழா நடக்கிறது. பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த விழாவில் மூன்று நாட்களிலும் கமல் ஹாஸன் நடித்த படங்கள் திரையிடப்படும்.

கமல் ரசிகர்களுக்கு இந்த விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம்.

துவக்க நாளில் ஹே ராம் படம் திரையிடப்படுகிறது. மேலும் ஏக்துஜே கேலியே, சாகர சங்கமம், நாயகன், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம் [^] உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட உள்ளன.
பதிவு செய்தவர்: மக்களே உஷார்
பதிவு செய்தது: 25 Jun 2010 11:39 pm
என்னமோ மக்களுகாக படம் எடுத்து இலவசமாக நடித்து போல் அல்லவா விழா எடுகுரானுங்க. கூத்தாடி பய ,இவனுக்கெல்லாம் விழா ஒரு கேடா. அம்பிகா சோனிக்கு பிடித்திருந்தால் தன செலவில் ஒரு என்னமோ மக்களுகாக படம் எடுத்து இலவசமாக நடித்து போல் அல்லவா விழா எடுகுரானுங்க. கூத்தாடி பய ,இவனுக்கெல்லாம் விழா எடுத்திருக்கலாம். சினிமா நடிப்பு எல்லாம் ஒரு தொழில் ரொக்கம் வாங்கிட்டு தான் நடிகுரானுங்க. அப்புறம் எதுக்குடா இந்த நாதாரிக்கு பாராட்டு விழா. நாட்டு மக்கள் நிம்மதியா வாழ எல்லையிலும் , ராணுவத்திலும் கிடக்குற சிப்பாய்க்கு

பதிவு செய்தவர்: மஞ்சுளா
பதிவு செய்தது: 25 Jun 2010 6:36 pm
இந்த விழாவின் போது மூன்று நாட்கள் அனைத்து நடிகைகளையும் வைத்து ஒரு brothel நடத்தப்படும்.

ஆனந்தசங்கரி, எதிர் காலத்தில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக

-வீ. ஆனந்தசங்கரி
யுத்தம் முடிந்த பின் நாட்டின் புனர்நிர்மாணம், மீளக்கட்டியெழுப்புதல் போன்றவகைகளுக்கு அரசுக்கு உதவ முன்னைநாள் போராளிகளின் அனுதாபிகள் புத்திஜீவிகள் முன்வந்துள்ளதாக செய்தி வெறும் கேலிக் கூத்தாகும். யார் இந்த கே.பி என அழைக்கப்படும் பத்மநாதன் என்பவர்? அவருக்குரிய நன்மதிப்பு தராதரம் என்ன? பிற நாடுகளில் இருந்து தூது குழுவாக வருகை தந்து அரச உயர் அதிகாரிகளுடன் பேசி நாட்டின் புனர்வாழ்வு மீள் கட்டுமானப் பணிகளுக்கு உதவ வந்துள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்?.

சர்வதேச அரங்கில் பிரசித்தி பெற்ற பெயர் போன பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்ட கே.பி.யின் தலைமையில் இக் குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் வெளிவிகார அமைச்சரையும் சந்தித்துள்ளது என்ற செய்தி எனக்கு பெரும் ஆச்சரியமாகவும் அனேகமாக முழு இலங்கையருக்கு அதிர்ச்சியும் தந்துள்ளது.
திரு.பிரபாகரன் மரணித்த உடன் அவரின் வாரிசாக உரிமை கோரிக்கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் எனக் கூறிக்கொண்ட திரு. கே.பி அவர்கள் அதிகாரிகளிடம் தானாக சரணடையவில்லை. மிக்க தந்திரமான முறையில் அவர்கள்; கைது செய்யப்படாதிருந்தால் இன்று அவர் கடந்த காலத்தில் திரு. பிரபாகரன் யார் யாருக்கு அச்சுறுத்தலாக இருந்தாரோ அத்தனைபேருக்கும் இவர் அச்சுறுத்தலாக இருந்திருப்பர். இப்போது கூட அவர் எதிர் காலத்தில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. அரசுக்கு அதன் புனர்நிர்மாண மீள் கட்டுமாண பணிகளுக்கு அரச உயர் அதிகாரிகளை சந்தித்து உதவ முன்வந்துள்ள தூது குழுவில் இடம் பெற்றுள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்? சரிபிழைகளை ஆராய்ந்து அறிவை வளர்ப்பவரே புத்திஜீவியார். ஆனால் இந்த புத்திஜீவிகள் என்ன செய்தார்கள். சரிபிழைகளை ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கிறதா?
சிறிய அபிப்பிராய பேதங்களுக்கு நாம் இடம் கொடுக்கப்படாது. பல கஸ்டங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த சமாதானத்தை நிலைக்கச் செய்ய வேண்டும் என்று திரு கேபியோ அன்றி அவரின் அணியில் உள்ள வேறுயாருமோ எமக்கு கூறுவது கேலிக்கிடமாகும். இலங்கையராகிய நாங்கள் இந்த புத்திஐPவிகள் யார் என்பதனையும் வெளிநாட்டில் வாழும் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைக்கு உதவுபவர்கள் நாட்டின் கள நிலையை விளங்கிக் கொள்ள தொடங்கிவிட்டார்கள் என்று உத்தரவாதம் தருவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது.
இவர்களுக்கு இதுவரை காலமும் கள நிலை பற்றி விளங்காமல் போனது கவலைக்குரியதே. மீண்டும் ஒரு தடவை எவரேனும் எம் மீது சவாரி செய்ய அனுமதிக்கக்கூடாது. இத்தகைய எவருடனும் அரசு எத்தகைய தொடர்பு வைத்திருப்பதை ஆட்சேபிக்கும் உரிமை எனக்குண்டு. இவர்களுடன் நாம் உறவு வைத்திருப்பதை பார்த்து உலக நாடுகள் நகைக்கும் என்பதோடு இந்நாட்டு மக்கள் ஒருவர் இருவருக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே துரோகம் செய்ததாக கருதப்படும். நம் நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான். நாம் ஏறக்குறைய இரண்டு லட்சம் உயிர்களை இழந்துள்ளோம். அவற்றில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள்இ ஆயிரக்கணக்கான படை வீரர்கள் பலாத்காரமாக விடுதலைப்புலிகளுடன் இணைக்கப்பட்ட போராளிகள் பலர் அடங்குவர். ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் விதவைகளாக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானவர்கள் அனாதைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டும் 42000 பேர் விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ போர் தமது பார்வைகளையும் கால் கைகளையும் இழந்துள்ளனர். இரு கால்களையும் இரு கைகளையும் இழந்தவர்கள் ஒரு காலால் நடப்பவர்கள் தவழ்ந்து திரிகின்றவர்கள் இவ்வாறு பலர். இந்த அப்பாவிகள் அiனைவரும் எஞ்சியுள்ள நாட்களை இப்படித்தான் செலவிட வேண்டும் என்பது விதி. எத்தனை ஆயிரம் மாணவர்கள் தம் கல்வியை இழந்துள்ளனர். இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டு உயிரற்ற சடலங்களாக கண்டபோது அனுபவித்த கவலைகள் பற்றி இப் புத்திஐPவிகள் அறிவார்களா? ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு அல்லது தமக்கு மிகவும் விருப்புடைய ஒரு உறவை இழந்திருந்தால் மட்டும்தான் இந்த வேதனையை உணர முடியும். எத்தனை குடும்பங்கள் முழு உறவினரையும் சில குடும்பங்கள் உறவுகள் சிலரையும் இழந்துள்ளனர். பல கோடி பெறுமதியான தனியார் பொது சொத்துக்கள் அழிக்ககப்பட்டுள்ளன. கிளிநொச்சி முல்லைத்தீவு பகுயில் முழுமையான ஒரு வீடும் இல்லை. வவுனியா மன்னார் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிக்கும் இதே கதிதான். கிழக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்து இரண்டு ஆண்டுகளின் பின்பும் எமது மக்கள் கூடாரங்களில் தான் வாழுகின்றனர். கிளிநொச்சி முல்லைத்தீவில் உள்ள கிராமங்களுக்குள் சென்று அக்கிராமங்கள் எவ்வாறு சீரழிக்கப்பட்டு;ள்ளன என்றும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகளையும் அரசு பார்வையிட வேண்டும். முல்லைத்தீவு கிளிநெச்சி மக்கள் முற்றாகவும் மன்னார் வவுனியா பகுதியில் உள்ள மக்களில் பெரும் பகுதியும் வீட்டுக்கூரை யன்னல் கதவு உட்பட எதுவும் இல்லை. உண்மையாக நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன்; என்பதை உணருகின்றேன். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டதை விட அதிகமாகும். இப் புத்திஐPவிகள் எங்கிருந்து வந்தார்களோ சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இவர்களை நாடுகடத்தி தரும்படி இலங்கையரசு கோரிக்கை விடவேண்டும். இதுவரை எநத் ஒரு நாடும் விடுதலைப்புலிகளி;ன் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் அண்மையில் தடைகளை நீடீத்துள்ளன.
இத்தகைய நபர்களே நாம் இழந்த அத்தனை இழப்புக்கும் சம பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்களை உபசரிப்பது மறைமுகமாக அவர்களின் தடைகளை நீக்குவதற்குச் சமமாகும். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட விடுதலைப்புலிகளின் கடும் போக்காளர்களை இராணுவம் உபசரிக்கும் போது தடுப்புக்காவலில் உள்ள 10000 பேரில் பெரும் பகுதியினர் விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக சேர்க்கப்பட்டிருப்பதனால் அவாகளை ஏன் தொடர்ந்தும் தடுப்புக்காவலிலும் சிறையிலும் ஏன் அரசு வைத்திருக்கின்றது என்று கேட்கின்றார்கள். இத்தகைய நபர்கள் தான் பின்னனியில் இருந்து எமக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கும் பொருள் இழப்புகளுக்கும் பொறுப்பாக இருந்திருக்கின்றார்கள். ஆகவே அரசு வீடு முற்றாகவும் பகுதியாகவும் இழந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். இரண்டாவதாக உயிர் இழப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஏனைய இழப்புகளுக்கும் முழு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அரசு மேலும் தாமதிக்காது மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புகளின் பெறுமதியை கணக்கிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். குண்டு வெடிப்பு தற்கொலைத் தாக்ககுதல் கண்ணிவெடி போன்றவற்றிற்கு பலியாகிய நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் சேர்ந்தவர்களுக்கு முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். நாட்டின் பிற பகுதியில் இருந்து 500 ரூபாயுடன் வெளியேற்றப்பட் இஸ்லாமிய மக்கள் முழு சொத்தையும் இழந்தமையால் முழு நட்ட ஈட்டுடன் மீள குடியமர்த்தப்பட வேண்டும். அன்று தொட்டு இன்று வரையும் இவர்களில் அனேகர் மிக வறுமைப்பட்டு வாழ்கின்றார்கள்.
இந்த நபர்களின் பல் வேறு நாடுகளிலும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட அரசுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொள்ள வேண்டும். இவர்கள் எல்லோரும் இலட்சியத்துடன் செயறட்படாது சுயநலத்துடன் செயற்படுகிறார்கள் என்பது தெரியாமல் கண்மூடிதனமாக விடுதலைப் புலிகளை ஆதரித்த நபர்களின் தற்போதய கருத்து இதுவாகும். பல ஆண்டுகள் அமைதியான தூக்கம் இன்றி சுகந்திரமான முறையில் வீதியில் நடமாட முடியாது கருத்துக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு சிலரைப் போல் வாழ்ந்தவன் நான்.
இதுபலவிதத்தாலும் பாதிக்கப்ட்ட ஒரு தனி மனிதனின் உணர்ச்சிமிக்க உள்ளக் குமுறலின் வெளிப்பாடாகும.கிளிநொச்சியில் வாழுகின்ற உரிமை மறுக்கப்பட்டது உட்பட. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் குறிப்பாக வட-கிழக்கு வாழ் மக்களின் கருத்துக்களினைத்தான் நான் பிரதிபலிக்கின்றேன். நான் செய்வது தவறு என யாரும் கருதினால் நான் அவர்களிடம் அதற்கு மன்னிப்புக் கோரி ஒத்த கருத்துள்ளவர்களை எனது பணி தொடர ஆதரவு நலகுமாறு வேண்டுகிறேன்.

ஈழத்தில் சாதி இல்லையாம்? சீமானே நன்றாக கண்ணை திறந்து பத்திரிக்கை விளம்பரங்களை

தமிழ் ஈழத்தில் சாதி கிடையாது தமிழன் தமிழனாக வாழ முடிந்தது’’என்றுசீமான் பேசினார.

நம் நாட்டில் ஹிந்தி தேசிய மொழியாக உள்ளது. தேசிய கீதம் வங்க மொழியில் உள்ளது. ஆனால் நாம் தமிழனாக இருந்தும் தமிழில் பேச முடியவில்லை. தமிழில் வழக்காட முடியவில்லை.
இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்,பெண்ணீய விடுதலை பற்றி இன்றும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.

இன்னும் நமக்குத் தேவையான மின்சாரம் கூடக் கிடைப்பதில்லை. ஆனால் நம் இந்தியா 2020-ல் வல்லரசாகும் என்று மட்டும் நம் அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்கள் சிந்திக்கக் கூடாது, அறிவான சமுதாயம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முனைப்பில் வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்து வைத்து சாதித்துள்ளார்கள். அனைத்து குற்றங்களுக்கும் கருவறையாக இந்த மதுக்கடைகள் உள்ளதை இளைஞர்கள் உணர வேண்டும்.
தமிழ் ஈழத்தில் சாதி கிடையாது பெண் சுதந்திரம் இருந்தது. தமிழன் தமிழனாக வாழ முடிந்தது’’என்றுசீமான் பேசினார்.
comments: 
தம்பி சீமான் நன்றாக கனவு காண்கிறார் .  சினிமா கதைவிடுவது வேறு நிஜம் வேறு அன்பரே. திரையில் உமது கற்பனை வளத்தை அவிழ்த்து விடும் நாமும் ரசித்து விட்டுப்போகிறோம். சும்மா சும்மா அம்புலிமாமா கதை அளக்க வேண்டாம்.
ஈழத்தில் சாதி இல்லையாம்?  சீமானே நன்றாக கண்ணை திறந்து பத்திரிக்கை விளம்பரங்களை பாரு ஒய்.
உயர்குடி யாழ்ப்பாண வெள்ளாள குலத்தில் உள்ள படித்த மணமகளுக்கு என்ற வரிகள் எத்தனை தரம் வருகிறது என்று படித்து பாரும்.

திருமாவளவன், விடுதலைப்புலி சிவதம்பி என்று முத்திரைக் குத்தி வெளியேற்றப்பட்டார்,ஆனால் இப்போது

இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்ட போது, நீங்கள் (கலைஞர்) உங்கள் உள்ளத்துக்குள் ரத்தக் கண்ணீர் வடித்ததை உணர்ந்தவன் நான் என்று பேசிய திருமாவளவன், ஈழத் தமிழனத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திட வேண்டும், தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு இரண்டு கோரிக்கைகளையும் விடுத்துள்ளார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 25.06.2010 அன்று எங்கும் தமிழ் எதிலும் தமிழ் சிறப்பு கருத்தரங்கில் பேசிய திருமாவளவன்,

தமிழுக்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர், மிகப் பொருத்தமான சூழலில் இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தி வருகிறார்.

இம்மாநாடு இன்றையச் சூழலில் மிக மிக அவசியம் வாய்ந்த ஒன்று. இலங்கையில் தமிழினமே அழிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அங்கு தமிழ் மக்கள் அழிவுப் பாதைக்குச் செல்ல வேண்டிய மோசமான நிலை நிலவி வருகிறது.

இந்தச் சூழலில், உலகிலுள்ள தமிழ் மக்களை, தமிழ் இனத்தவரை ஒன்றுகூட்ட வேண்டியது அவசியமாகிறது. மொழியால் ஒன்றுபாட்டால் தான் ஓரினம் ஒற்றுமையாக இருக்கும். அந்த வகையில் இப்போது தமிழினம் ஒற்றுமையாக இருந்து, அந்த இனம் அழியாமல் இருப்பதற்கு இந்தத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வழிவகை செய்திருக்கிறது. இம்மாநாட்டின் மூலம் தமிழினத்தை ஒன்று சேர்த்திருக்கிறார் தமிழக முதல்வர்.

இந்த மாநாட்டில் தமிழக முதல்வருக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறேன். அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.

ஈழத் தமிழினத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்பதே முதல் கோரிக்கை. அங்கே தமிழினம் அழிக்கப்பட்ட போது, நீங்கள் உங்கள் உள்ளத்துக்குள் ரத்தக் கண்ணீர் வடித்ததை உணர்ந்தவன் நான்.

அப்போது தஞ்சை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு விடுதலைப்புலி என்று முத்திரைக் குத்தி வெளியேற்றப்பட்டார், சிவதம்பி. ஆனால் இப்போது அவரை தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் முன்னிலையில் மேடையிலே பேசவைத்து அழகு பார்த்திருக்கிறீர்கள்.

ஒட்டுமொத்தத் தமிழர்களின் தாயகமாக இருந்தது இலங்கை. இதற்கு ராமாயணமே சாட்சி. ஒட்டுமொத்த தமிழனையும் ஆண்டான், ராவணன். அந்தத் தமிழ் தேசம் இப்போது தமிழனுக்குச் சொந்தமாக இல்லை. ஒட்டுமொத்த தமிழர்களுக்குச் சொந்தமான இலங்கை தேசத்தை சிங்களன் கொடுங்கோலாட்சி செய்து வருகிறான். தமிழினத்துக்கு ஏனிந்த வீழ்ச்சி.

தமிழினத்தைக் காக்கக் கூடிய வல்லமை படைத்த முதல்வர், ஈழத் தமிழர்களுக்கு தனி தாயகம் அமைத்து தர வேண்டும்.

தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்பது எனது மற்றொரு கோரிக்கை. தமிழை ஆட்சி மொழியாக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்தப் பலனும் இல்லை.

இந்தியாவில் ஆட்சிமொழியாக இருக்கிறது, இந்தி. அம்மொழி செம்மொழியா? சமஸ்கிருதத்துக்கு முன்பே வளமான மொழியாக வாழ்ந்திருக்கிறது நமது தமிழ் மொழி.

தமிழை ஆட்சிமொழியாக்கவில்லை என்றால், பல தலைமுறைகளுக்குப் பிறகு தமிழ் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. அப்போது 'செம்மொழித் தமிழ்', 'செத்தமிழ்'மொழியாகிவிடக் கூடாது. எனவே, தமிழை ஆட்சிமொழியாக்க முழுவீச்சில் முதல்வர் நடவடிக்கை வேண்டும் என்று இங்கே கோரிக்கை வைக்கிறேன் என்றார்.

வெள்ளி, 25 ஜூன், 2010

தமிழை தலைநிமிர வைத்தவர் கலைஞர் என்று முஸ்லிம் லீக் மாநில செயலாளர்

தமிழை தலைநிமிர வைத்தவர் கலைஞர் என்று முஸ்லிம் லீக் மாநில செயலாளர் முகமது ரபி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலக அரங்கில் தமிழ் ஒய்யாரமாகத் திகழ்கிறது. செம்மொழி அந்தஸ்து பெற்று இமயமாய் உயர்ந்து நிற்கிறது. அனைவரது பார் வைக்கும் ஆனந்த ஜோதியாய் ஜொலிக்கிறது. அத்தகைய தமிழுக்கு விழா நடத்தி மேலும் மெருகூட்டிய பெருமை, நம் தமிழக முதல்வர் கலைஞர் ஒருவருக்கே உரித்தாகும்.

நமது முதல்வர் கலைஞர், துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அரும்பாடுபட்டு, வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும், இந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழர்களாகிய ஒவ்வொருவரும் பங்கு கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி குடும்பத்துடன் தவறாது கலந்து கொள்ள வேண்டும். கொங்கு சீமையில் சிங்காரத்தமிழுக்கு நடக்கும் வசந்த விழாவை நாமும் கரம் கோர்த்து வெற்றியடைய செய்ய வேண்டும். தமிழகத்தின் தலைவர் கலைஞர் நடத்தும் இச்செம்மொழி மாநாடு மாபெரும் வெற்றியடைந்தது கண்டு பூரிப்படைவோம்.

இந்த நூற்றாண்டில் இதுபோன்ற வெற்றி விழா நடத்துவது மிகவும் அரிது. அத்தகைய வெற்றி விழாவை மேலும் வெற்றியடைய செய்வதில் நமக்கு பெரும் பங்கு இருக்கிறது. தமிழன்னையை நேசிக்கும் ஒவ்வொருவரும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில தலைவர் தாவூத் மியான்கானுடன் இணைந்து தமிழுக்கு குரல் கொடுப்போம். தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி தமிழன் பெருமையை கொண்டாடி மகிழ்வோம். தமிழக முதல்வரின் கரத்தினை வலுப்படுத்துவோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செலவுகள் அனைத்தையும் நயன்தாராவே பெரும் தொகை கரைந்து போய் விட்டது

சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்ற ஆதங்கம் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் இருக்கிறது. ஐதராபாத்தில் நட்சத்திர ஓட்டல்களில் ரகசியமாக தங்கினர். அது பிரபுதேவா மனைவி வரைக்கும் தெரிய வந்துள்ளது. சென்னையிலும் ஒன்றாக வசிக்க முடியவில்லை. இருவரும் தனிகுடித்தனம் நடத்த பிரபுதேவா வீடுபார்த்தார். அதுவும், நடக்க வில்லை.

இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. திருமண கோலத்தில் இருப்பது போன்ற படமும் இண்டர் நெட்டில் வெளியாயின. அவற்றை அவர்கள் மறுக்க வில்லை.

பிரபுதேவா தனது மனைவி ரம்லத்திடம் ஒரே ஒரு தடவை மட்டும் நயன்தாராவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள அனுமதி தரவேண்டும் என்றும் சம்மதம் கேட்டார். ஆனால் ரம்லத் பிடிவாதமாக மறுத்ததால் அதன் பிறகு இந்த விஷயம் பற்றி அவரிடம் பேசுவதே இல்லை.

சென்னைக்கு வரும் நாட்களில் அண்ணாநகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று ரம்லத் மற்றும் குழந்தைகளுடன் தங்குகிறார். பிறகு எந்த ஊருக்கு செல்கிறேன் என்பதை சொல்லாமலேயே புறப்பட்டு சென்று விடுகிறார். அவரது நடவடிக்கைகள் மர்மமாக இருப்பதால் ரம்லத்தால் வெளிப்படையாக எதுவும் கேட்க முடியவில்லை.

ரம்லத் மற்றும் ரசிகர்கள் கண்களில் சிக்காமல் இருப்பதற்கும் சந்தோஷமாக சுற்றுவதற்கும் வெளிநாடுகளே சிறந்தவை என கருதுகின்றனர். எனவே தான் அடிக்கடி அயல்நாடுகளுக்கு பறக்கிறார்கள்.
பிரபுதேவாவுக்கான செலவுகள் அனைத்தையும் நயன்தாராவே கவனித்துக் கொள்கிறாராம். இதனால் அவரிடம் இருந்த பெரும் தொகை கரைந்து போய் விட்டது என்கின்றனர்.
நிதிநெருக்கடியிலும் சிக்கியுள்ளாராம். தனது ஆடம்பர “பி.எம்.டபுள்யூ வெளிநாட்டு காரை விற்பதற்காக விலை பேசி வருவதாகவும் கிசுகிசுக்கள் பரவியுள்ளன.

மகளிர்கள் கொண்டுவரப்பட்டு எமது இளைஞர்களுக்கு வலைவிரிப்பதாகவும் ,நீதியரசர் விக்னேஸ்வரன்

காலஞ்சென்ற சட்டத்தரணி எஸ்.ஆர். கனகநாயகத்தின் உருவப்பட திரைநீக்கம் நேற்று யாழ்ப்பாணம் சட்ட நூலகத்தில் இடம்பெற்றது.   இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உருவப்படத்தினை   திரைநீக்கம்   செய்த   பின்னர் உரையாற்றுகையிலேயே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது: குடாநாட்டில் சமூக சீரழிவு   நடைபெறுகிறது.  தெற்கிலிருந்து வரைவின்மகளிர்கள் கொண்டுவரப்பட்டு எமது இளைஞர்களுக்கு வலைவிரிப்பதாகவும் கேள்விப்பட்டேன்.        அத்துடன் போதைப் பொருட்கள் கல்விக்கூடங்களுக்கு அருகில் விற்பனைக்கு விடப்படுவதாகவும் அறியக்கிடைத்தது.
எமது சொந்த  தமிழ் இரத்தங்களும் இப்படிப்பட்ட சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில்    நேரடியாகவும் மறைகமாகவும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று கேள்விப்படும்போது மனதிற்கு வேதனை அளிக்கின்றது.       சமூகச் சீரழிவு நடவடிக்கைகளைத் துணிச்சலுடன் கண்டிக்க விளையும் அல்லது தட்டிக் கேட்கும் நீதிபதிகள்   திடீர் என இடமாற்றம் செய்யப்படுவது  அதிர்ச்சியளிக்கின்றது.
தமிழ் மக்கள் சொல்லொண்ணா துயரங்களிற்கு ஆளாகி இனியாவது விடிவு காலம் வருமோ, சட்ட ஒழுங்கு நிலைநிறுத்தப்படுமோ, நீதிகிடைக்குமோ என்று அங்கலாய்க்கும்  வேளையில் துணிச்சலுடனும் உண்மையாகவும்   செயற்படும்    நீதிபதிகளைக் குற்றம் புரிந்தவர்கள் போல் இடமாற்றம் செய்வது நீதித்துறைக்கு உகந்ததல்ல.
எனினும் இந்த அழிவில்  இருந்து  குடாநாட்டை மீட்பதற்கு சட்டத்தரணிகள்,       நீதிபதிகள் ஆகியோரின் ஒன்றிணைந்த,   ஒருமித்த, ஒற்றுமைமிக்க, துணிச்சலான  பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.    நீங்கள் யாவரும் துணிந்து நின்று சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டி நடைமுறைப்படுத்துவதன்    மூலம் இப்படிப்பட்ட வெளியார் தாக்குதல்களை சமாளிக்கலாம்.
உங்கள் நாடு, உங்கள் பிரதேசம், உங்கள் கலாசாரம், உங்கள் பாரம்பரியம்  இவை பறிபோகின்றன என்றால் நீங்கள் வாளாதிருக்கலாமா? பின்னணியில் வன்முறையைக் கையாள்பவர்கள் இருக்கின்றார்கள்,      அவர்களுக்கு    அதிகாரத்தில் உள்ளவர்கள் துணை போகின்றார்கள் என்று பயந்து சட்ட நடவடிக் கைகளைச் செய்யாது அல்லது எடுக்காது இருக்கக்கூடாது.
எமது சூழலில் இன்று நடப்பவை   நீதிமன்றங்களில்     பிரதிபலித்தால்தான்   வேற்று நாட்டவர் கூட அவற்றை கவனத்திற்கு எடுப்பர்.  எஸ்.ஆர். ஐயா போன்றோர் இன்றில்லையே என்று வருத்தப்படுகின்றேன்.

நிலம் ஆக்கிரமிப்பு இயேசு அழைக்கிறார்,அப்பல்லோ மருத்துவமனை , அடையாறில் உள்ள மலர் மருத்துவமனை


நிலம் ஆக்கிரமிப்பு: 10 தனியார் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
 சென்னை பாரிமுனையைச்சேர்ந்த கிருஷ்ண மணி என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில் கூறி இருப்பதாவது:

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி, யூ.டி.ஐ. நிறுவனம், இயேசு அழைக்கிறார், ஒலிம்பிக் கார்டு நிறுவனம், ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை மற்றும் அடையாறில் உள்ள மலர் மருத்துவமனை உள்பட 10 தனியார் நிறுவனங்கள், தங்கள் இடம் அருகே உள்ள மாநகராட்சி இடங்களை ஆக்கிரமித்துள்ளன.

வேலி போட்டு அந்த இடங்களை “பார்க்கிங்” பகுதியாக மாற்றியுள்ளனர். பொதுமக்கள் யாரையும் அந்த நிறுவனங்கள் அந்த இடங்களுக்குள் அனுமதிப்பது இல்லை.

மாநகராட்சி இடங்களை அனுபவித்து வரும் இந்த நிறுவனங்கள் இதற்காக அரசிடமோ, மாநகராட்சியிடமோ முன் அனுமதி எதுவும் பெறவில்லை. இதனால் மாநகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதை தடுத்து அந்த இடங்களை மீட்க வேண்டும் என்று தனது மனுவில் கிருஷ்ண மணி கூறி இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி திருஞானம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு நடந்தது.

அரசு தரப்பில் வக்கீல் ராஜா கலிபுல்லா ஆஜராகி வாதாடினார். நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. எந்த நிறுவனமும் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றார்.

இதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் அருகில் உள்ள இடங்களை ஆக்கிரமித்துள்ளதற்கு மனுதாரர் புகைப்படம் ஆதாரம் இணைத்துள்ளார். ஆனால் நீங்கள் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டனர்.

மேலும் தனியார் நிறுவனங்கள் மாநகராட்சி இடத்தில் வேலி போட்டுக் கொள்ள எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? என்றும் நீதிபதிகள் கேட்டனர்.

பிறகு நீதிபதிகள் தீர்ப்பளிக்கையில், மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக 10 தனியார் நிறுவனங்களும் 2 வாரத்துக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அரசு செலவில் வெளிநாட்டு பயணம் என்றால் எல்லாருக்குமே ஆனந்தம்

வெளிநாட்டு டூருக்காக ஏங்கும் தேர்தல் ஆணையர்கள்

அரசு செலவில் வெளிநாட்டு பயணம் என்றால் எல்லாருக்குமே ஆனந்தம் தான். ஆனால், இப்படி மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் ஆணையர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளன.ஒரு தேர்தல் ஆணையர், பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள விரும்பி, அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். எங்கு செல்வது, என்ன செய்வது என்று ஒரு பெரிய லிஸ்டே தயாரித்துவிட்டார். தன் பயணத்திற்கு அனுமதி தருமாறு பிரதமருக்கு பைல் அனுப்பினார். இந்த அனுமதி ஒரு சம்பிரதாயம் தான், உடனே அனுமதி கிடைத்துவிடும் என்று கிளம்ப தயாராக இருந்தவருக்கு அதிர்ச்சி. வெளிநாட்டு பயணம் வேண்டாம் என்று பிரதமர் மறுத்துவிட்டார். வழக்கமாக தேர்தல் ஆணையர்களின் பயணங்களை பிரதமர் ரத்து செய்ததே கிடையாது. இன்னொரு தேர்தல் ஆணையர், அமெரிக்காவிற்கு செல்ல ஆசைப்பட்டார் 20 நாட்களுக்கும் மேலாக டூர் செல்ல விரும்பினார். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் லெக்சர் என்று பிரதமர் அலுவலகத்திடம் அனுமதி கேட்டார். இந்த பைல் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு தான் விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் லெக்சர் எதுவும் கிடையாது, உணவு இடைவேளையின் போது மாணவர்களிடையே கலந்துரையாடல் தான் என்று விவகாரம் அம்பலமானது. மேலும் ஆணையர் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் பலவும் நம்ம ஊர் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் போல தரம் தாழ்ந்தது என்றும் தெரியவந்தது. இந்த பயணம் தேவையற்றது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆனால், ஆணையர் விடவில்லை, 20 நாள் பயணத்தை எப்படியோ கெஞ்சி கூத்தாடி 10 நாட்களுக்கு அனுமதி வாங்கிவிட்டார்

பேராசிரியர கைது,் பி.எச்டி. பயின்ற மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற

பேராசிரியர் மீது 4 பெண் பேராசிரியைகள் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை மாநில கல்லூரி பேராசிரியர் மாதவன் என்பவர் சமீபத்தில் தன்னிடம் பி.எச்டி. பயின்ற மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், மேலும் ஒரு பேராசிரியர் மீது மாநில கல்லூரியில் வேலைபார்க்கும் 4 பெண் பேராசிரியைகள் நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுத்தனர்.
குறிப்பிட்ட பேராசிரியர் தங்களை தகாத வார்த்தைகளை சொல்லி அடிக்கடி திட்டுவதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், மேலும் தகாத செயல்களில் ஈடுபட முயற்சிப்பதாகவும் 4 பெண் பேராசிரியைகளும் தங்களது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி திருவல்லிக்கேணி துணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கவிழ்ப்பது காங்கிரசின் கலாசாரம்,என்ன தான் நெருக்கமாக இருந்தாலும், கடைசியில் காங்கிரஸ் தன் வேலையைக்

தி.மு.க., - பா.ம.க.,விற்கு காங்கிரஸ் செக்
என்ன தான் காங்கிரசுக்கு நெருக்கமாக இருந்தாலும், கடைசியில் காங்கிரஸ் தன் வேலையைக் காண்பித்துவிடும் என்பது அக்கட்சியுடன் நெருக்கமாக உள்ள அனைவருக்குமே தெரியும். உடன் இருந்தே ஆளைக் கவிழ்ப்பது காங்கிரசின் கலாசாரம். இந்த பாணியை தமிழக அரசியல் கட்சிகள் மீதும் காங்கிரஸ் செயல்படுத்தியுள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.தி.மு.க., அமைச்சர் ராசா மீது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, தற்போது தொலைத் தொடர்பு அதிகாரிகள் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. சி.பி.ஐ., விவகாரத்தை காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இன்னொரு பக்கம் பா.ம.க.,விற்கு செக் வைத்துள்ளது காங்கிரஸ். மீண்டும் தி.மு.க., - காங்., கூட்டணியில் இணைய பா.ம.க., விரும்புகிறது. இதை தடுக்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது. அன்புமணி அமைச்சராக இருந்த போது அவர் மீதும் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. சமீபத்தில் மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாயை சி.பி.ஐ., கைது செய்தது. கோடிக்கணக்கில் தேசாய் பணம் வாங்கியுள்ளார் என்று அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அன்புமணியையும் சம்பந்தப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளதாக சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா 500 கைதிகளை விடுதலை செய்யக்கூடாது

500 கைதிகளை விடுதலை செய்யக்கூடாது: ஜெ.
செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500 சிறைக்கைதிகளை அரசு விடுதலை செய்யப்போவதாக தகவல் வந்தது.

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’செம்மொழி மாநாட்டினை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட ஆயுட் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்ய தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

மனித சமுதாயத்தில் தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதை மீறி ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது என்பது சட்டத்திற்கு புறம்பான, கொலையாளிகளை ஊக்கப்படுத்தும் செயல்.
இது கொலை, கொள்ளை போன்ற கொடூர சம்பவங்கள் மேலும் அதிகரிக்க வழி வகுக்கும். சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசே, இது போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபடுவது வேதனைக்குரியது.

கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல்; காவேரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பொன்னையாறு போன்ற அண்டை மாநிலங்களுடனான நதி நீர்ப் பிரச்சினை; நாடாளுமன்றத்தில் அமைச்சர் தமிழில் பேசுகின்ற உரிமை.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழி ஆக்குவது என எந்த உரிமைகளையும் பெற்றுத்தர முடியவில்லை. தமிழ் நாட்டின் அனைத்து உரிமைகளும் பறிபோய் கொண்டிருக்கின்றன.

தமிழக மக்களுக்கு இருக்கின்ற ஒரே உரிமை வாக்குரிமை. அதையும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வருகின்ற ஆயுள் கைதிகள் மூலம் பறிக்க நினைக்கும் ஜனநாயக விரோதச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஜனநாயகத்தை சீர்குலைக்கின்ற வகையில் ஆயுட் கைதிகளை விடுதலை செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

20 பேர் கைது,செம்மொழி மாநாட்டிற்கு கண்டனம் தெரிவித்த


செம்மொழி மாநாட்டிற்கு கண்டனம் தெரிவித்த 20 பேர் கைது
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவை மாநகரில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது.  இன்னும் இரண்டு நாட்கள் இம்மாநாடு நடைபெறவிருக்கிறது.
முதல் நாள் மாநாட்டை குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கிவைத்தார்.    அரசியல் பிரமுகர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என்று பலரும் மாநாட்டிற்கு திரண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, கீரமங்கலம், வடவாளம், ஆவணம் உள்ளிட்ட பகுதிகளில் செம்மொழி மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போஸ்டர் மற்றும் பிட் நோட்டீஸ் அச்சடித்து வெளியிடப்பட்டது.

போஸ்டர்களை பார்த்த வடகாடு போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிவா என்ற லெனின்(32), விஜய்(27), சீராளன்(29), ஆவணம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி(33), சேந்தங்குடியைச் சேர்ந்த பகலவன்(31), பனங்குளம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன்(35) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிவா என்ற லெனின், முத்துசாமி, பகலவன், சௌந்தர்ராஜன் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடிவருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியிலும் செம்மொழி மாநாட்டை எதிர்த்து போஸ்டர் ஒட்டப்படிருந்தது.  சுமை தூக்கும் பாதுக்காப்பு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
நாதியற்ற தமிழர்களுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா? என்று போஸ்டரில் வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.

திருச்சி காந்தி மார்க்கெட், பாலக்கரை ஆகிய இடங்களில் அதிகமாக ஒட்டப்பட்டிருந்தது.
பாலக்கரை இன்ஸ்பெக்டர் பிரபாகரன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இந்த போஸ்டர் தொடர்பாக 20 பேரை கைது செய்துள்ளார்.

துக்ளக் கருத்து என்ன?புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்திருப்பவர்களில் டக்ளஸ்

புலி ஆதரவாளர்களின் கோபம்!

ஜி. சுந்தர்ராஜன் சென்னை-42

கே : கொலை ஆள் கடத்தல் என வழக்குகளில் சிக்கி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்ஷவுடன் இந்தியா வந்தது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறதே? இது பற்றி துக்ளக் கருத்து என்ன?

ப : டக்ளஸ் தேவானந்தா இதற்கு முன்பே சில ஆண்டுகளில் பல முறை இந்தியா வந்து சென்றிருக்கிறார். பல முக்கியஸ்தர்களை (அரசியல் தலைவர்கள் உட்பட) சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்த அவருடைய விஜயங்கள் ரகசியமானவை அல்ல. அப்போதெல்லாம் எழாத எதிர்ப்பு இப்போது எழுந்துள்ளது விசித்திரமாக இருக்கிறது.

புலிகள் ஒடுக்கப்பட்டதிலிருந்து புலிகளின் இந்திய ஆதரவாளர்களுக்கு ராஜபக்ஷ மீது கடும் கோபம். அதை அவர்கள் வெளிக்காட்டுகிறபோது, டக்ளஸ் போன்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். டக்ளஸ் தேடப்படுபவர் என்று சொல்லப்படுவதை அவர் மறுத்திருக்கிறார்; இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக தன் மீது உள்ள குற்றச்சாட்டுகள் ரத்தாகி விட்டன என்றும் அதை இந்திய அரசு ஏற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதற்கு இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை.

புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்திருப்பவர்களில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். புலிகளின் மிருக வெறியை எதிர்த்ததால் அவர் பலமுறை புலிகளால் பயங்கரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். ஒருமுறை நடந்த கடும் தாக்குதலில் அவர் தொடர்ந்து பல மாதங்கள் ஆஸ்பத்திரியில் கவலைக்கிடம் என்ற நிலையில் இருந்தார். தெய்வாதீனமாக உயிர் பிழைத்த பின்னரும் சற்றும் அஞ்சாமல் புலி எதிர்ப்பைத் தொடரத் தயங்காதவர் அவர். இதனாலேயே இங்குள்ள புலி ஆதரவாளர்கள் அவர் மீது கோபம் கொண்டு, அவரைப் பற்றி ஏதாவது சொல்லி அவரை ஒரு குற்றவாளி ஆக்கிவிட முடியாதா என்று முயற்சிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

வழிபாடுகளில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன,'' என்று, இந்தியன் யூனியன் முஸ்லிம்

கோவை : ""இறைத் தன்மை மற்றும் வழிபாடுகளில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன,'' என்று, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கத்தில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: "தமிழ்ச் செம்மொழியும், அரபியும் ஓர் ஒப்பாய்வு' என்ற தலைப்பிலான ஆய்வரங்கத்தில் பங்கேற்கிறேன். இறைவன் தன்மையில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. "அல் -இலாஹ்' என்பதே, "அல்லாஹ்' என மருவியது என்பவர். "அல்லாஹ்'வுக்குரிய மூலச் சொல் அல், இல், எல் என்பது, இஸ்லாமிய அறிஞர்களின் முடிவாகும். இச்சொற்கள், தமிழிலும் உள்ளன என்பதை, அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். "எல்லே இலக்கம்' என்பது தொல்காப்பிய சூத்திரம்; "எல்' என்றால், ஒளிக்கடவுள் என்ற பொருள் உண்டு. இதே போன்று, அரபி - தமிழ் இடையேயான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான 2,000 வார்த்தைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், திருமணம், வழிபாடு, சடங்கு போன்றவற்றிலும் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. தமிழ்நெறியில், திருமணத்தின் போது பெண்கள் குலவையிடுவர். இதே போன்ற வழக்கம், இஸ்லாமிய நெறியிலும் பின்பற்றப்படுகிறது. கோவிலில் வலம் வந்து வழிபடுவதை போன்று, மெக்காவிலும் வலம் வந்து வழிபடும் முறையை இஸ்லாமியர் பின்பற்றுகின்றனர். இதே போன்று எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. இவற்றை முன்வைத்தே தமிழுக்கும், அரபிக்கும் உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு, காதர்மொய்தீன் தெரிவித்தார்.

ஏவுகணை விஞ்ஞானி, சிவதாணுப்பிள்ளை குமரிக் கண்டத்தை ஆராய வேண்டும்

கோவை: குமரிக் கண்டத்தை ஆய்வு செய்யும் பட்சத்தில் உலக வரலாறு தெரிய வரும் என்று பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி, சிவதாணுப்பிள்ளை தெரிவித்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், கம்பர் அரங்கில் நேற்று நடந்த அறிவியல் தமிழ் அமர்வில் சிவதாணுப்பிள்ளை பங்கேற்ற பின், தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்தது:

தமிழ் மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்த்து அமைந்திருந்த லெமூரியா எனும் குமரிக் கண்டத்தில்தான் முதல் மனிதன் தோன்றியிருக்க வேண்டும். இன்றும் இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் திராவிடக் கலாச்சாரப் பண்புகள் இருப்பதைப் பார்க்க முடியும். நம்மூரில் மறைந்துவிட்ட வழக்கங்கள் கூட அங்கிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
சிலப்பதிகாரத்தில் குமரிக் கண்டம் மூழ்கியது குறித்த தகவல்கள் காணக்கிடைக்கின்றன. தமிழர்கள் வாழ்ந்த இந்த பூர்விக இடத்தைப் பற்றி நன்கு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். கடந்த 38 ஆண்டுகளாக, குமரிக் கண்ட ஆய்வுப் பணிகள் நின்றுவிட்டன. நம் கப்பல் படையே இந்த ஆய்வை நடத்த முடியும். அவ்வாறு ஆய்வு நடத்தும் பட்சத்தில் உலகின் வரலாறு தெரியும். நாம் இந்த ஆராய்ச்சியை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

திப்பு சுல்தான் 6 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஆங்கிலேயர்களை தாக்கியிருக்கிறார். உலகின் முதல் ராக்கெட்டைத் தயாரித்தது இன்றும் நம்மால் மறக்க முடியாத வரலாறு. ராக்கெட் தயாரிக்கும் பணியை 1983ல் இந்தியா துவக்கிய போது, நாம் உலக அளவில் 20 ஆண்டுகள் பின்தங்கி இருந்தோம். ஆனால் இன்று விண்வெளியில் சர்வதேச அளவில் சாதனை நடத்தியிருக்கிறோம். அதற்கு தமிழரான அப்துல் கலாமுக்கே பெருமைகள் சேரும்.

பிரம்மோஸ் ஏவுகணையை நிலத்திலிருந்து கப்பல் இலக்கைத் தாக்கவும், கப்பலிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கவும், கப்பலிலிருந்து கப்பலில் உள்ள இலக்கைத் தாக்கவும் பயன்படுகிறது. இது செலவு குறைந்த தொழில்நுட்பம். அதே சமயம் துல்லியத் தன்மையும் புதுமைகளையும் கொண்டது.

தமிழ் மொழி சக்தி வாய்ந்த மொழி. பாரதியின் தொலைநோக்குப் பார்வைகள் நம் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்கள் அறிவியல் துறையில் வர வேண்டும். அறிவியல் சிந்தனை அதன் வழி வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரவூப் ஹக்கீம, செம்மொழி மாநாட்டில் ஓர் இலங்கையனாக பங்கேற்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாக

தமிழக முதலமைச்சரின் அழைப்பினை ஏற்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஓர் இலங்கையனாக பங்கேற்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கோவையில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொது அரங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹக்கீம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் எமக்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெகு விமரிசையாக கோவையில் நடைபெறுகின்ற இச்சந்தர்ப்பத்திலே தமிழக அரசின் அழைப்பினை ஏற்று இங்கு பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். அதிலும் வந்தாரை வரவேற்று வாழவைக்கும் கோவை மாநகரிலே இந்த மாநாடு நடைபெறுகின்றது. அதனால் சந்தோசமடைகிறேன்.
எந்த பேதங்களுமின்றி தமிழ்பேசும் முஸ்லிம்களாகிய எம்மையும் மதித்து இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
விழாக்கோலம் பூண்டிருக்கும் கோயம்புத்தூரில் தொடர்ந்தும் தங்கியிருந்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் பார்ப்பதற்குக் காத்திருக்கிறோம் என்றார்.
இந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பஷிர் சேகுதாவுத், ஹசன் அலி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

120 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் மலேசியாவுக்கு தமிழர்கள் சென்றனர

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடை முன்னிட்டு, சர்வதேச அளவில் உள்ள தமிழ்ப்புத்தகங்கள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதற்கென 125 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகில் எங்கும் கிடைக்காத அளவிற்கு இங்கு புத்தகங்கள் குவிந்துள்ளன. பண்பாடு, கலச்சாரங்களை விளக்கும் இந்த புத்தகங்களை, வாங்கி அனைவரும் பயன்பெற வேண்டும்.
இது போன்ற புத்தக கண்காட்சி, கலாச்சார விழாக்கள், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியும் கல்லூரியும் நடத்த வேண்டும். அவ்வாறு நடத்துவதால், பண்பாடு, கலாச்சாரம் வளர்ச்சி பெறுவதோடு, தமிழ் மொழியும் வளம்பெறும். இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதாக இது அமையும்.

மலேசிய அரசின் மனிதவளத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் பேசியதாவது: சிவகங்கையிலிருந்து 120 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் மலேசியாவுக்கு தமிழர்கள் சென்றனர். மலேசியாவின் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைத்ததால், குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். வளர்ந்து வரும் மொழியாக தமிழ் மொழி உள்ளது. கலத்தில் அழியாத மொழியாக இம்மொழி இருக்க, பல புதுமைகள் வந்தாலும், பழமை மாறாமல் உள்ளது. எனவே, செம்மொழியாக மாற்றம் பெற்றுள்ளது. மலேசியாவில் இன உணர்வுகள் இருந்தாலும், தமிழ் உணர்வு தான் தழைத்தோங்கியுள்ளது. 1970ம் ஆண்டில் முதல் தமிழ் மொழி புத்தகம் மலேசியாவில் வெளி வந்தது. அன்றுமுதல் இன்று வரை தமிழ் அங்கு நிலைபெற்றுள்ளது. மலேசியாவில், 523 பள்ளிகளில் தமிழ் உள்ளன. பள்ளி, பல்கலையில் 8000 தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர். பெரும்பாலான பள்ளி, பல்கலையில் தமிழ் மொழி பாடமாக உள்ளது.  "செம்மொழியான தமிழ்மொழி' பாடலில் பழமை அதிகம் கூறப்பட்டிருந்தலும், இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்ப இயற்றப்பட்டு, இசை அமைக்கப்பட்டுள்ளது. கூகுள் இணைய தளத்தில் செம்மொழி மாநாடு குறித்துதேடினால், 95 சதவீதம், செம்மொழி பாடலை பற்றியதாக மட்டுமே உள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சி பெற, இணையத்தளத்தில் பயன்பாட்டிற்கு எளிதாக மாற்றி அமைக்க வேண்டும்.  இவ்வாறு மலேசியா நாட்டு மனித வளத்துறை அமைச்சர் சுப்ரமணியம் பேசினார்.

நளினிக்கு வக்கீலான ஒருவர் என்மீது சேறு பூசும் முயற்சி, டக்லஸ் தேவானந்தா

பத்மநாபா கொலையில் என்னை சம்பதப்படுத்த முயற்சி நடைபெற்றது, கலைஞர் அம்முயற்சியை தடுத்துவிட்டார். அதன்பின்பு நடைபெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக டி ஜி பி துறை அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்.
சூலை மெட்டு சம்பவம் நடைபெற்றபோது நான் அந்த இடத்திலேயே இருக்க வில்லை. சம்பவத்தை கேள்விப்பட்டு நான் விரைந்தேன்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு ஆஜார் ஆனா வக்கீல் ஒருவர் என்மீது சேறு பூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சட்டப்படி சந்திப்பேன்.
பத்துக்கு மேற்பட்ட தடவை திரு டக்லஸ் தேவானந்தாவை கொல்ல முயன்று தோற்றுப்போன புலிகளின் நிறைவேறாத விருப்பத்தை புலிப்பினாமிகள் தற்போது இப்படியாக வெளிப்படுத்துகிறார்கள். இது ஒரு கயமைத்தனத்தின் உச்ச வெளிப்பாடு.புலிப்பினாமிகளிடம் இருப்பது கயமைத்தனம் மட்டுமே.

வியாழன், 24 ஜூன், 2010

கே.பி. சர்வதேச மட்டத்தில் உள்ள பிரச்சினைகள் ,உதவுவாராக இருந்தால் பத்மநாதனை அரச சாட்சியாளராக

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும், தற்போது இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளவருமான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அரச சாட்சியாளராக ஏற்றுக்கொள்ள சட்டத்தில் இடமிருப்பதாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் அமைச்சரவை மாநாட்டில் வைத்து, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒருவர் தற்போதைய நாட்டின் பிரச்சினை மற்றும் சர்வதேச மட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில், அரசாங்கத்துக்கு பயனுள்ள விடயங்களில் உதவுவாராக இருந்தால், அரசாங்கம் என்ற வகையில் முடியுமான விடயங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வேளையில், உலக நாடுகளுடன் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SMS எ‌‌ஸ்ஸை ந‌ம்‌பி ரூ.57 ல‌ட்ச‌‌த்தை மோசடி கு‌ம்ப‌லு‌க்கு கொடு‌த்து இழ‌ந்‌‌திரு‌க்‌கிறா‌ர் செ‌ன்னை பெ‌ண்

மயிலாப்பூரை சேர்ந்த பூஜா (பெயர் மாற்றம்) எ‌ன்பவ‌ரி‌ன் செல்போனுக்கு கடந்த மாதம் ஒரு எஸ்.எம்.எஸ். வந்து‌ள்ளது.அதில், “உலககோப்பை கால்பந்து போட்டியையொட்டி நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில் உங்களுக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. பரிசுத் தொகையைப் பெற கீழ்கண்ட இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்து இ‌ன்ப அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த பூஜா, உடனே அந்த இ-மெயிலுக்கு தனது முகவரியை அனுப்பி உ‌ள்ளார். அதன் பிறகு அவருக்கு வந்த இ-மெயிலில், “உங்கள் பரிசுப் பணத்தை ஒப்படைக்க இங்கிலாந்தில் சில சட்ட விதிகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளது. இதே போல் இந்தியாவில் சுங்கத் துறைக்கும் பணம் செவழிக்க வேண்டி உள்ளது. இதனால் நாங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விடுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை ந‌ம்‌பிய பூஜா ரூ.57 லட்சம் வரை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் பணம் செலுத்தி ஒரு மாதம் ஆகியும் குலுக்கல் பரிசு பணம் வந்து சேரவில்லை. அ‌ப்போதுதா‌ன் தா‌ன் ஏமா‌ற்ற‌ப்ப‌ட்டதை பூஜா உண‌ர்‌ந்து‌ள்ளா‌ர்.
இதைய‌டுத்து செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்து‌ள்ளா‌ர் பூஜா. இ‌ந்த வழ‌க்கை ‌விசா‌‌ரி‌த்த மத்திய குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌‌யின‌ர், ஜல்பிகார், ஜரியார், ஜாவித்கான், இம்ரான் ஜாரி ஆகியோர் பெயரில் உள்ள தனியார் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்த மர்ம நபர்கள் பற்றிய விவரங்களை வங்கி அதிகாரிகளிடம் காவ‌ல்துறை‌யின‌ர் சேகரித்து வருகி‌ன்றன‌ர்.
இ‌ந்த பண‌த்தை டெல்லி, மும்பையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் அ‌ந்த ம‌ர்ம நப‌ர்க‌ள் எடுத்துள்ளனர். இதனால் ஏ.டி.எம். மையங்களில் உள்ள ரக‌சிய கேமராவில் பதிவான படங்களை பார்க்க காவ‌ல்துறை‌யின‌ர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் எளிதில் மோசடி கும்பலை கண்டுபிடித்து விடலாம் என்று காவ‌ல்துறை‌யின‌ர் தெரிவித்து‌ள்ளன‌ர்.
போலி பெயர்களில் கணக்கு தொடங்கி இருந்தால் ம‌ர்ம கு‌‌ம்பலை கண்டுபிடிப்பது கடினம் எ‌ன்று‌ம் ஏ.டி.எம். மையங்களில் வேறு நபர்களை வைத்து பணம் எடுத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது எ‌ன்று‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
காவ‌ல்துறை‌யினரு‌க்கு கடும் சவாலாக திகழும் இந்த எஸ்.எம்.எஸ். பரிசு குலுக்கல் மோசடி கும்பலை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை நடைபெற்றுள்ளது.

தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான அணுகுமுறை குறித்து பொது உடன்பாடு காணவும் மற்றும் அன்றாட அவலங்களுக்கு உடனடித் தீர்வு காண்பதில் ஒருமித்து செயற்படும் நோக்கிலும் தமிழ் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின வாசஸ்தலத்தில்; நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈபிஆர்எல்எப் (நாபா) அணியின் தலைவர் திரு சிறிதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சிவாஜிலிங்கம் திரு.சிறிகாந்தா சிறி ரெலோ அமைப்பின் தலைவர் திரு உதயன் ஈரோஸ் கட்சியின் செயலாளர் திரு பிரபா மனித உரிமைளுக்கான ஆர்வலர் ஷெரீன் சேவியர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அழைப்பு விடுக்கப்படாததன் மர்மம் என்னவோ?தமிழ்் எம்.பி.க்களுக்கு அழைப்பு இல்லை

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு இலங்கையின் தமிழ்பேசும் எம்.பி.க்களுக்கு அழைப்பு இல்லை
 "செம்மொழி எம்மொழி,அதனை வளர்ப்பது எம் பணி என்று கூறினார் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர்.
நேத்திரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தென்னிந்தியா கோயம்புத்தூரில் ஆரம்பமாகும் செம்மொழி மாநாடு சம்பந்தமாக கேட்கப்பட்ட பல கேள்விகளுக்குப் பதிலளித்த அஸ்வர் மேலும் கூறியதாவது;

தமிழர் இனிமைக்கும் மேன்மைக்கும் மேலும் மெருகூட்டும் வண்ணம் இவ்விழா நடைபெறுவதையிட்டு இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லிம்களும் மகிழ்ச்சியடைகின்றனர்.

தமிழ் மொழியின் செழுமையை சர்வதேசம் அங்கீகரித்துப் பெருமைப்படுத்தும் வண்ணம் இந்த 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் அன்னைக்கு ஆரம் சூட்டி தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் இம்மாநாடு நடைபெறுவது வரவேற்கத்தக்கதாகும்.

இப்பணியில் பகீரத முயற்சியெடுத்த தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியை தமிழ் நெஞ்சங்கள் என்றும் பாராட்டி மகிழும்.

எனினும் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறந்துவிட்ட ஒரு விடயத்தை அவரது கவனத்துக்குக் கொண்டு வருவது எம் கடமையாகும். செந்தமிழின் ஓசையை தமிழ் கூறும் நல்லுலகில் மட்டுமன்றி, இப்பரந்த உலகமே அறிந்து போற்றிப் புகழக்கூடிய வண்ணம் 20 ஆம் நூற்றாண்டு இறுதிப் பகுதியில் அகில உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்காக வித்திட்டவர் நம் தாய்நாட்டைச் சேர்ந்த பிதா பேராசிரியர் சேவியர் எஸ்.தனிநாயகம் அடிகளாவார்.

ஆங்கிலம்,பிரெஞ்ச்,ரஷ்ய,ஸ்பானிய மற்றும் ஆபிரிக்க மொழி அறிஞர்களும் தமிழ் மகரந்தத்தின் மணம் நுகரும் வண்ணம் செய்த இப்பெரும் சமயகுரவரின் பணி உலகத் தமிழ் உலக ஏட்டில் மிக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை எவரும் மறைக்க முடியாது.

இவரது எண்ணக் கருவில் உருவான அகில உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்ற விருட்சத்தின் கிளையாக உதித்ததுதான் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாடு. இம்மாநாட்டின் சிற்பி பேராசிரியர் அல்லாமா ம.மு.உவைஸ் அவர்களாவார்.

இவரது தமிழ்ப்பணி மகத்தானது. தமிழ் உலகம் இவரது திறமையை மதித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியத் துறைத் தலைவராக நியமித்துக் கௌரவித்தது. இந்நியமனத்துக்கு அடிகோலியவரும் அன்றும் முதலமைச்சராகவிருந்த கலைஞர் மு.கருணாநிதி என்பதை நாம் சற்றும் மறப்பதற்கில்லை.

தமிழின் செழுமைக்கு மகோன்னதமான பணி செய்து அணி சேர்த்துப் பெருமை கொண்ட தனிநாயகம் அடிகளாரையும் பேராசிரியர் உவைஸையும் செம்மொழி மாநாடு மறந்துவிட்டது என்பதுதான் இலங்கைத் தமிழ்,முஸ்லிம் மக்களின் பெரும் மனக்குறையாகும்.

உலகளாவிய ரீதியில் தேன் தமிழுக்குச் சுவையூட்டும் ஆரம்பப் பணிகளை மேற்கொண்ட இப்பெரியார்களின் சேவையை மதிக்கும் முகமாக இவர்கள் இருவரின் பெயர்களிலும் இரு அரங்குகளையாவது செம்மொழி மாநாட்டில் அமைத்திருக்கலாம். அல்லது வேறு வழியில் அவர்களைக் கௌரவித்திருக்கலாம். அது ஒரு புறமிருக்கட்டும்.

அதுமட்டுமல்ல, தமிழின் மேன்மைக்கும் தமிழினத்தின் மேம்பாட்டுக்குமாக உழைத்து வருகின்ற இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்பேசும் உறுப்பினர்களுக்கு இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கான அழைப்பு விடுக்கப்படாததும் இம்மாநாட்டின் பெருமையை மழுங்கடிக்கச் செய்யும் என்பது எம் ஊகம்.

உலகின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தலைவர்களும் இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளபோதிலும் இலங்கை தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கு அழைப்பு விடுக்கப்படாததன் மர்மம் என்னவோ? என தமிழ் உலகம் இன்று கேள்வியெழுப்புகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தொட்டுப் பேசும்போது தொப்புள் கொடி உறவு குறித்து மேலோட்டமாகப் பேசி வருகின்ற தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற செம்மொழி மாநாடு. அந்தத் தொப்புள்கொடியை செம்மையாகச் சிதறடித்துள்ள பாங்கினைக் கண்டு இங்கு தமிழ்பேசும் மக்கள் வியப்போடும் நகைப்போடும் நோக்குவதைத் தவிர்க்க முடியாது.

அது மட்டுமா? ஆறரைக்கோடி தமிழர்கள் வாழ்கின்ற இவ்வுலகில் உலக தாய்ச்சபையாகிய ஐக்கிய நாடுகள் சபையில் தமிழில் உரை நிகழ்த்தி தமிழுக்கு ஆரம்சூட்டிப் பெருமைப்பட்டவர் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒருவரேயாவார்.

சிங்களமொழி பேசும் பெரும்பான்மை மக்கள் வாழ்கின்ற இலங்கைத் தீவினில் தமிழ் தழைத்தோங்கி நிற்கின்ற பாங்கினை நோக்கின் இன்று இலங்கை பூராவுமுள்ள கோவில்கள் திருவிழாக் கோலம் பூண்டு நிற்கின்றன. கொழும்பிலே தமிழ்ச்சங்கம் தமிழை வளர்ப்பதில் முன்னணியில் திகழ்கின்றது. வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷனில் பாரதி விழாக்கள் தொடர்ந்தும் நடத்தப்படுகின்றன. கொட்டாஞ்சேனை விவேகானந்த மண்டபத்தில் தமிழ் விழாக்கள் என்றும் இதழ் விரிக்கின்றன. இம்முறை கொழும்பில் ஆடிவேல் விழாவை சரித்திரம் காணாத முறையில் அவ்வளவு சிறப்பாக இந்து பக்தர்கள் கொண்டாடும் வண்ணம் அரசும் அரச தலைவர் ஜனாதிபதியும் சகல ஒத்துழைப்புகளையும் தர முன்வந்துள்ளனர் என்பதை உலகறியச் செய்வது எம் கடன்.

தமிழ்மொழி மெல்ல இனிச் சாகும் என்று தமிழகத்தில் கூறினாலும் எமது தாயகத்தில் சிங்களமொழியுடன் இன்பத் தமிழும் சாகாவரம் பெற்றுத் திகழும் என்பதை அழுத்தமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். செம்மொழி செழுமை பெற வாழ்த்துக்கள்!

மூன்று நிமிட முத்தம்... முரண்டுபிடித்த நாயகி!

படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் போதும், எந்த அளவும் இறங்கிவந்து நடிப்பேன் என்று கற்பூரமடித்து சத்தியம் செய்யாத குறையாக அக்ரிமெண்டில் கையெழுத்துப் போடுவதும், படப்பிடிப்பில் கவர்ச்சிக் காட்சி வந்தால் முரண்டு பிடித்து நடிக்க மறுப்பதும் தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்க்கும் காட்சிகள்.

இதோ அப்படி ஒரு காட்சி.

படத்துக்குப் பெயர் 'சாந்தி'. ஏ ஒன் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிக்க ஒப்பந்தமானவர் மும்பை [^]மாடல் அர்ச்சனா. இப் படத்துக்காக நடிக்க ஒப்பந்தம் ஆனபோது, 'மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தாராம்' நடிகை [^]. கதையையும் இந்தக் காட்சியையும் அவருக்கு முன்கூட்டியே தெரிவித்து சம்மதமும் பெற்றிருந்தாராம் இயக்குநர் [^].

ஆனால் படம் ஆரம்பித்த இருபதாவது நாளில் தகராறு பண்ண ஆரம்பித்துள்ளார். குறிப்பாக ஒரு முத்தக்காட்சியைப் படம்பிடிக்கும் போது கோபித்துக் கொண்டு போயே போய்விட்டாராம்.

அந்தக் காட்சியில் நடிகைக்கு முத்தம் தரத் தயாராக காத்திருந்த புதுமுக ஹீரோ மகா ஆதித்யா 'வட போச்சே' என வடிவேலு ஸ்டைலில் புலம்பிக் கிடக்க, இன்னொரு பக்கம், 'நான் இப்பவே மும்பை போகணும்' என சலம்பினாராம் அர்ச்சனா.

விஷயத்தை தயாரிப்பாளர் கவனத்துக்குக் கொண்டுபோனார் இயக்குநர் முரளி விஷ்வா.

"சரி போனா போகட்டும் போய்யா... ஐஸ்வர்யா ராய் கோவிச்சுட்டுப் போறதா கெட்டுப் போச்சு... கையில கட்டோட நின்னா ஆயிரம் புதுமுகம் கிடைக்கும்..." என்று நடிகையை ஒரேயடியாக பேக் பண்ணுகிற முடிவுக்கு வந்துவிட்டாராம். தயாரிப்பாளர்.

விஷயத்தை நடிகைக்கு 'பாஸ்' பண்ணிவிட்டு அமைதியாகிவிட்டாராம் இயக்குநர். அடுத்து அவர் நினைத்தது நடந்தது. இறங்கி வந்தார் நடிகை.

'குளத்துல இறங்கியாச்சு... ட்ரஸ்ஸோடதான் குளிப்பேன்னு அடம்பிடிச்சா சினிமாவுல ஒத்துக்க மாட்டாங்களே" என நடிகையின் நலம் விரும்பிகள் (?!) ரொம்ப அட்வைஸ் பண்ணியதால், மீண்டும் ஷூட்டிங்குக்கு வந்தாராம் நடிகை.

கேட்டதை விட பல மடங்கு கிறக்கத்துடன் அவர் கொடுத்த முத்தத்தை மூணு கேமிரா வைத்து படம் பிடித்தாராம் முரளி விஷ்வா. ஒரு நிமிடம் 12 வினாடிகள் ஒரே ஷாட்டாக நீடித்த அந்த முத்தத்தை மூன்று நிமிட முத்தமாக திரையில் தரப்போகிறார்களாம். தேன் குடித்த நரி மாதிரி, இந்த முத்த முற்றுகையிலிருந்து இன்னும் தெளியாமலேயே திரிகிறாராம் அந்த புதுமுகம் ஹீரோ.

முத்தம் கொடுத்துவிட்டு மேக்கப்பைக் கலைத்த நடிகை, 'இப்போ டென்ஷன் இல்லை' என்றாராம்.

அடடா.. ஒரு முத்தம் வாழ்க்கையின் பல தத்துவங்களை புட்டுபுட்டு வச்சிடுச்சே!
பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 24 Jun 2010 6:05 pm
அடடா.. ஒரு முத்தம் வாழ்க்கையின் பல தத்துவங்களை புட்டுபுட்டு வச்சிடுச்சே! இந்த வறியை தவிர மற்ற அனைத்தும் tamilcinema.comல இருந்து காப்பி அடித்தது... thatstamil எடிடருக்கு சொந்தமா செய்தி சேகரிக்க முடியாதா? இதெல்லாம் ஒரு பொழப்பு...தூத்..தெரி...

ஆரிய நாகரீகம் அழியாமல் காத்ததும் தமிழ்தான்-கருணாநிதி

கோவை: தமிழ்நாட்டு எல்லை கடந்து இந்தியாவின் வடபுலம் வரை மட்டும் அல்ல, கடல் கடந்து அயல்நாடுகளுக்கும் சென்று, திரைகடலோடித் திரவியம் தேடியது மட்டுமன்றித் திக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம் தமிழ் இனம். திராவிடம் தந்த செழிப்பும் வலிவும்தான் ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்று முதல்வர் [^] கருணாநிதி [^] கூறினார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் 2வது நாளான இன்று ஆய்வரங்கத் தொடக்க விழா நடந்தது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு ஆய்வரங்குளைத் தொடங்கி வைத்தார்.

மாநாட்டு அரங்கான தொல்காப்பியர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், நிதியமைச்சர் அன்பழகன் [^]சிறப்பு விழா மலரை வெளியிட்டார்.அதை முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.

ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி தலைமை தாங்கதினார். வெளிநாட்டு அறிஞர்களான ஜார்ஜ் ஹார்ட், கிறிஸ்டினா, அஸ்கோ பபலோ, அலெக்சாண்டர் துபியான்ஸ்கி, கிரகோரி ஜேம்ஸ், உல்ரிச் நிக்கோலஸ் உள்ளிட்ட அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை...

அன்னைத் தமிழுக்கு அரிய பயன்தரும் கட்டம் இது. இன்றிலிருந்து தொடங்கி, நான்கு நாட்களுக்கு நடைபெறப்போகும் ஆய்வரங்கங்களின் மூலம்தான், தமிழ் மொழியை மேலும் செழுமைப்படுத்திடவும், அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்திடும் வகையில், அதனை வளர்த்து, 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துரைகளையும் நாம் பெறவிருக்கிறோம்.

தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது எல்லா முனைகளிலும் புதிய ஆர்வத்தையும், எழுச்சியையும் நம்மாலே காண முடிகிறது. ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேலான நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது நமக்குப் புதிய தெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.

ஆழ்ந்த ஆய்வுகளின் காரணமாக உருவாகிடும் சிந்தனைகளைச் சேகரித்துக் கோவைப்படுத்துவதே ஆய்வரங்குகளின் பணியாகும். இத்தகைய
ஆய்வரங்குகள் நடப்பதிலிருந்து நல்ல பலன்களை எதிர்பார்த்திடும் மக்கள் முன், ஆய்வறிஞர்கள்; எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள கருத்துக்களை வழங்கிட வேண்டும்.

ஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களைப் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும்.

அந்த அளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாகக் கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு, இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்.

கொல்கத்தாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786ல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம் சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது. திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816ல் எல்லிசு, அவரைத் தொடர்ந்து 1856ல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர்.

இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட மொழிக் குடும்பம். அக்குடும்பத்தின் முதன்மை மொழி. தமிழ் என்னும் உண்மையை உலகத்திற்கு அவர்கள் உணர்த்தினர்.

1927ல் ஜான் மார்ஷலின் சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்னும் கண்டுபிடிப்பு உலகத்தின் கருத்தைத் தமிழின்பால் ஈர்த்தது.

அதன்பின், உலக நாடுகளின் அறிஞர்கள் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் முதலியன குறித்தெல்லாம் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

அவர்கள் ஆராய்ந்து தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை, தமிழர்தம் இலக்கிய விழுமியம், கலைநலம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சி முதலியவற்றை எல்லாம் வெளிப்படுத்தினார்கள். திராவிட இனத் தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர்.

ரவீந்திரநாத் தாகூர், திராவிடம் தந்த செழிப்பும் வலிவும்தான் ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்கிறார்.

சோவியத் நாட்டு மொழி அறிஞர் சாகிரப் என்பவர் வட இந்திய திராவிட மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டவர். அவர் தமிழர்கள் தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என வாதிட்டு நிலை நாட்டுகிறார்.

காஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள் திராவிட மொழிப் பிரிவின் கிளைமொழியைப் பேசுகின்றனர். பீகாரின் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் “குருக்கர்” என்போர் திராவிட மக்களே என்பது அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது.

இந்திய நாகரிக அடையாளமான சேலையும், வேட்டியும் திராவிட நாட்டின் கொடையாகுமென்று பேராசிரியர் எஸ்.கே.சட்டர்ஜி; “இந்தோ-ஆரியன்- இந்து” என்ற நூலில் எழுதியுள்ளார்.

ஆரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ வழிபாடு திராவிட வழிபாடேயாகும்.

அமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன் கோயில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது.

திச்சநல்லூரின் மண்டை ஓடுகள் சிந்துவெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன.

சோவியத் நாட்டுப் பேராசிரியர் கோந்திரதோவ் என்பார், உலகின் பழமை மிகு நாகரிகங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைப் பிற இனத்தவர்க்கும், இரு பங்கினைத் திராவிடர்களுக்கும் உரியதாக்குவதே உண்மையான பங்கீடு என்று கண்டறிந்து உரைக்கின்றார்.

எழுத்து முறையை எகிப்தியருக்குத் திராவிடர் கொடையாகக் கொடுத்தனர்.

பாபிலோனிய மதகுரு ஒருவர் எழுதிய பழங்கதை ஒன்றில், மெசபடோமியர்க்கு நாகரிகம் கற்பித்த “ஒனசு” என்பார், தமது குழுவினருடன் வந்தார். நாகரிகம் கற்பித்தார். ஏர் உழவுக் கருவிகளைக் கொடுத்தார். அறிவியல் கலை, கட்டடக்கலை, ஆண்டவன் வழிபாடு ஆகியவற்றைக் கற்பித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்களின் சம்பளங்கள் முக்காலும் கருப்பு

It would be shocking to know the salaries received by our actors. Some of the salaries are given below: 
Rajnikanth                                                        Rs 30 Crores               
Kamal Haasan                                                   Rs 25 Crores 
Vijay                                                                Rs 10 Crores and Chennai City rights worth Rs 3000 Crores 
Ajith                                                                 Rs 7 Crores 
Vikram                                                              Rs 7 Crores 
Surya                                                               Rs 6 Crores 
Simbhu                                                             Rs 5 Crores 
Dhanush                                                            Rs 4 Crores 
Vishal                                                               Rs 2 Crores 
Jayam Ravi                                                       Rs 2 Crores 
Aarya                                                               Rs 1 Crore 
Vadivelu’s one day call sheet                             Rs 6 Lakhs 
Actresses 
Asin                                                                  Rs 2 Crores 
Nayanthara                                                       Rs 1 Crore 
Thamanna                                                         Rs 1 CRORE 
Anushka                                                            Rs 75 Lakhs 
Trisha                                                              Rs 70 Lakhs 
Shreya                                                             Rs 40 Lakhs 
Music composers  
A R Rahman                                                       Rs 3 Crores 
Harris Jayaraj                                                 Rs 1.50 Crores 
Yuvan Shankar Raja                                          Rs 1 Crore 
Though the individuals salaries have gone up, the box office collections are not so good.   Chennai, Chengalpattu and Kanchipuram Distributors Council President Kalaipuli G Sekaran while speaking said,” That out of 131 films released last year, only films Ayan, Nadodigal and Padikadhavan were successful. Films like Vennila Kabadi Kuzhu, Maayandi Kudumbathar, Siva Manasula Sakthi, Peranmai and Pasanga just recovered the money they had invested. All the other films were utter flops.