புதன், 2 ஏப்ரல், 2025

யானைகளுக்கான சுரங்க வழி! - 27 மாதங்களாக ரெயில் மோதி ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை!

 மாலை மலர் :  சென்னை தமிழ்நாடு - கேரள வனப்பகுதிகளில் தண்டவாளங்களை கடக்க முற்படும்போது ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க கோரியும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ளக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

Marine Le Pen பிரான்ஸ் தலைவர் செல்வி மரியன் லு பென்னுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

 தேசம் நெட் : பிரான்ஸ் நாட்டின் தீவிர வலதுசாரிக் கட்சியான தேசிய மறுசீரமைப்பு கட்சியின் தலைவரான மரியன் லு  பென் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு ஒதுக்கிய பணத்தை தனது சொந்தக் கட்சியின் நிதித் தேவைக்கு மோசடியாக செலவு செய்த குற்றச்சாட்டில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுள்ளது.
மரியன் லு  பென் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாய்ப்பு அதிகமாகவுள்ள வேட்பாளராக கணிக்கப்பட்டிருந்தார்.

“The History of British India”. பிரித்தானியாவில் இந்தியா பற்றி பிறர் சொல்வதை கேட்டு ஜேம்ஸ் மில் எழுதிய தவறான நூல்

May be an image of text

Dhinakaran Chelliah:   !!! இந்திய வரலாற்றியல்!!!
இந்திய வரலாற்றுக்கு நிகழ்ந்த அநீதி வேறெந்த நாட்டின் வரலாற்றுக்கும் நிகழவில்லை.
James Mill என்பவர் இந்தியா வராமலேயே பிரித்தானியாவில் இருந்து கொண்டு,
இந்திய மொழியோ எதுவும் அறியாமல், தனக்குச் சொல்லப்பட்டதை இந்திய வரலாறாக எழுதிய நூல்தான் “The History of British India”.
இந்த நூல் வெளியிடப்பட்ட ஆண்டு 1817. இதுதான் இந்தியாவைப்பற்றி எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல். இது பிரித்தானியாவிலிருந்து இந்தியாவிற்கு பணி நிமித்தமாக செல்லும் கிழக்கிந்திய கம்பனியின் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு (introduction/orientation)உதவும் நோக்கில்,
அந்தக் கம்பனியின் பொருளுதவியடன் வெளியிடப்பட்ட நூல்.
ஹிந்து இந்தியா, முஸ்லிம் இந்தியா, பிரிட்டிஷ் இந்தியா என மூன்று தொகுதிகளைக் கொண்டது இந்த நூல். இப்படி மதத்தின் அடிப்படையில் எந்த ஒரு நாட்டின் வரலாறும் எழுதப்பட்டதில்லை.

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

மோடிக்கு ஒரு ட்ரில்லியனில் எத்தனை பூஜ்யம் என்றே தெரியாது.- .டிரில்லியன் டாலர் பொருளாதாரம்

 Vasu Sumathi : 2015ல் இந்தியா ஒரு 8 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றும்,
அதை 20 டிரில்லியன் டாலராக உயர்த்துவேன் என்றும் - நம் இந்தியாவின் பொருளாதார புலி அன்று அமெரிக்காவில் அளந்து விட்டார்.
2025ல் உண்மை நிலை: இந்தியா இன்னும் 4.2 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்தான்...
அவர் மேல் கோபிக்க வேண்டாம்,
அவருக்கு ஒரு ட்ரில்லியனில் எத்தனை பூஜ்யம் என்றே தெரியாது..
அதைவிட கொடுமை என்னவென்றால்,
மூன்றாவது முறையாக இந்த குருவி மூளைகளை அரியணையில் ஏற்றி அழகு பார்க்கும் பெரும்பான்மை படிப்பறிவில்லா கோமிய பக்தர்களுக்கு, பூஜ்யம் என்றால் என்னவென்றே தெரியாது.

இந்திய மக்களிடம் இருந்து எந்தெந்த வகையில் பணத்தை கொள்ளை அடிக்கலாம்?

Maha Laxmi :  பேங்க் அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம்.
ÀTM அதிக் தடவை உபயோகித்தால் அதற்கு அபராதம். டிஜிட்டல் பேமென்ட்டிற்கும்  அபராதம். ஹோட்டலில் சாப்பிட்டால் GST.
வீட்டில் சமைத்தால் அரிசி. மளிகை பொருட்கள் முதல் காய்கறி வரை அனைத்திற்கும் GST.
உணவுக்குத்தான் வரி என்றால் பொது இடங்களில் இயற்கை உபாதையை தீர்க்க சென்றால் கழிப்பறை பயன்பாட்டிற்கும் GST.
உண்ணும் உணவு முதல் உடலில் உள்ள கழிவுகள் அகற்றும் வரை அனைத்துக்கும் வரி.
உயிர் காக்கும் மருத்துவத்திற்கும், மருந்துகளுக்கும் வரி.
மாணவர்கள் கல்வி பயிலும் சாதனங்களுக்கு, அவர்கள் உடுத்தும் உடை முதல் அணியும் காலணி வரை அனைத்துக்கும் GST.
வாகனங்களை உபயோகித்தால் சாலை வரி,

நித்யானந்தா (சாமியார்) காலமானாரா? சகோதரி மகன் வீடியோ!

 மாலைமலர் : “பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார்.
அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற விண்ணப்பிக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஈக்கோடர் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அவர் அந்த தீவுக்கு கைலாசா நாடு என பெயரிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்தார்.

திங்கள், 31 மார்ச், 2025

மோடி பதவி விலகுகிறாரா? ஆர் எஸ் எஸ் RSS will decide PM successor says Sanjay Raut

 மின்னம்பலம் -   Kavi : அடுத்த பிரதமரை மகாராஷ்டிராவில் இருந்து ஆர்எஸ்எஸ் தேர்ந்தெடுக்கும் என்று சஞ்சய் ராவத் கூறியதற்கு பாஜக தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. RSS will decide PM successor says Sanjay Raut
பிரதமர் மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் சென்றார். அங்குள்ள ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் தலைமையகத்திற்குச் சென்ற அவர்  ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேசவ பலிராம் ஹெட்கேவர் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது பேசிய அவர்,  “ஆர்.எஸ்.எஸ்-ன் விதை 100 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்டது. அது இன்று பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு முக்கியமானது” என்று கூறியிருந்தார்.

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை! இன்று முதல் நாள்தோறும் பறக்கிறது r

 வீரகேசரி :யாழ்ப்பாணம் – திருச்சி இண்டிகோ விமான சேவை! இன்று முதல்!
47 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையிலான விமான சேவை இன்று 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமான சேவை நிறுவனத்தினால் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சியிலிருந்து 27 பணிகளுடன் இன்று மதியம் 02.02 க்கு விமானமொன்று பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதேநேரம், பலாலி விமான நிலையத்திலிருந்து மீண்டும் 36 பயணிகளுடன் குறித்த விமானம் மாலை 3 மணியளவில் திருச்சியை நோக்கிப் புறப்பட்டது.

ஞாயிறு, 30 மார்ச், 2025

கோவை மெட்ரோ ரயில் திட்டம்.. தீயாய் நடக்கும் பணிகள்!

 tamil.goodreturns.:  கோயம்புத்தூர் நகரின் போக்குவரத்து சிக்கலை குறைக்கவும், மக்களுக்கு வசதியான மற்றும் வேகமான போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில் அந்நகரில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்நகரில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு முக்கியமான கட்டமான, மெட்ரோ பாதை அமைக்க வேண்டிய இடங்களில் நில அளவை பணிகள்,தடைகள் அடையாளம் காணுதல் மற்றும் பயன்பாட்டு வசதிகளை மாற்றுதல் ஆகிய பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகின்றன.

குஜராத் கலவரத்தை பேசும் எம்புரான் : வலதுசாரிகளின் எதிர்ப்புக்கு பினராயி விஜயன் கண்டனம்!

 minnambalam.com -  christopher  :  எம்புரான் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக, சங் பரிவார் அமைப்புகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். pinararyi vijayan support empuraan
மலையாள நடிகர் மோகன்லால் கதாநாயகனாக, பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கி நடித்திருக்கும் ‘எல்2: எம்புரான்’ திரைப்படம் கடந்த 27ம் தேதி வெளியானது. இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் புதிய சாதனையை படைத்தது.

இந்த படத்தில் பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது 2002 ஆம் ஆண்டு அங்கு நடந்த கலவரம் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், காட்சிகளை நீக்கும்படி கோரினர்.

குழந்தை பாக்கியதிற்காக முதியவரின் தலையை துண்டித்து உடலை எரித்த மாந்திரீகர் – பீகாரில் கொடூரம்

 தினமணி ;பீகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி நடத்தப்பட்ட சடங்கில் முதியவரில் தலை துண்டிக்கப்பட்டு உடல் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த யுக்வல் யாதவ் (65) கடந்த வாரம் காணாமல் போனார். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இதற்கிடையே அவர் வசித்து வந்த கிராமத்தின் பக்கத்துக்கு கிராமத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெக்கப்பட்டது. சம்பவ இடத்தில் யுக்வலின் செருப்புகள் கிடந்தன.

சென்னையில் கொல்லப்பட்ட மகாராஷ்டிர கொள்ளையனின் சொந்த ஊரில் பாதுகாப்பு அதிகரிப்பு*

May be an image of 1 person, beard, smiling and text that says 'ஜாபர் குலாம் உசேன் இரானி'

M Ponnusamy :  *சென்னையில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மகாராஷ்டிர கொள்ளையனின் சொந்த ஊரில் பாதுகாப்பு அதிகரிப்பு*
சென்னையில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிர கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் இரானியின் சொந்த ஊரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 25-ம் தேதி காலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து 7 இடங்களில் வழிப்பறி நடைபெற்றது.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த ஜாபர் குலாம் உசேன் இரானி, அவரது கூட்டளிகள் சல்மான் உசேன் இரானி, மிசம்சா மேசம் இரானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருடிய நகைகள், திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை மீட்க 3 பேரும் சென்னை தரமணி பகுதிக்கு கடந்த 26-ம் தேதி அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டனர்.