சனி, 26 செப்டம்பர், 2020

18 வயதுக்கு குறைவானவர்கள் இதை படிக்காதீர்கள்.. லிங்கம் பற்றிய உண்மை..!

Dinesh DK : · லிங்கம் உருவான கதை! குறிப்பு:18 வயதுக்கு குறைவானவர்கள் இதை படிக்காதீர்கள்!! (18+)கோயில்களில் மஞ்சள் குங்குமத்தோடு பூஜை புனஸ்காரமும்   செய்யும் அய்யர்வாள் அம்பிகள்., ஹிந்துக்கள் வழிபடும்..லிங்கம் பற்றிய உண்மை..! 

"சிவன் ஒரு நாள் தருகவனத்தில் பிருந்தை ரிஷியை சந்தித்தார், அந்த ரிஷியின் மனைவியை கண்டதும் காமம் கொண்டார் சிவன் ..!! எப்படியாவது ரிஷியின் மனைவியை அடைந்தே ஆகவேண்டும் என்று தவித்த சிவன், திட்டமிட்டு நல்லிரைவில் ரிஷியின் வீட்டருகே வந்து கூவினார் சேவலை போல்... விடிந்துவிட்டது என்று விழித்த ரிஷி கங்கை நதியில் குளிக்க சென்றுவிடுகிறான் ..    ரிஷி வெளியே சென்ற நேரத்தில் சிவன் ரிஷியை போலே உருவம் மாறி ரிஷியின் மனைவியோடு படுத்து உடலுரவு கொள்கிறார் ..., கற்பழித்து முடிந்தப்பின் சிவன் ஓடிவிடுகிறார் ...!! வீடு திரும்பிய ரிஷி, தன் மனைவியின் உடலுரவுக்கொண்ட கோலத்தை பார்த்த கோபம்கொண்டு..!! "நான் இல்லாத நேரத்தில் என்னை போல நடித்து என் மனைவியோடு உடலுரவு கொண்டவனின் "லிங்கம்" அருபடட்டும்" என்று சாபம் விடுகிறான்.. உடனே சிவனின் "லிங்கம்" அறுபடுகிறது ..விஷயம் தெரிந்த தேவர்கள் உடனே சிவனின் மனைவி பார்வதியிடம் சொல்லி அழுகிறார்கள் ..

என் நண்பர் ராஜபக்சேவுடன் உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி' - தமிழில் பிரதமர் மோடி ட்விட்!

 Delighted to address my friend Rajapaksa - Modi tweet in Tamil!

 nakkeeran :இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவுடன் இந்தியப் பிரதமர் மோடி இன்று காணொளிக்காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார் . இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக, இருநாட்டு பிரதமர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் முறையாகும்.     இந்நிலையில், 'என் நண்பர் ராஜபக்சேவுடன் உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அபிவிருத்தி, பொருளாதார உறவு, கல்வி, கலாச்சாரம் குறித்த விஷயங்கள் குறித்து பேசினோம். பல்லாயிரம் ஆண்டுகளாக புத்தபெருமான் போதனைகள் எமது மக்களுக்கு வழிகாட்டுகின்றன. பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக எமது உறவு மேலும் வலுப்படும்'' என தமிழில் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாடகர் SPB யின் மறைவு காலம் தாழ்த்தி அறிவிக்கப் பட்டுள்ளது? விவசாயிகளின் போராட்டத்தை மக்கள் கண்களில் இருந்து மறைக்கவே?

Maha Laxmi : ·சிங்கப்பூர் செய்தித்தாளில் முதல் பக்கத்தில் இந்திய விவசாயிகளின் போராட்ட செய்தி.. ஆனால் தமிழக / இந்திய செய்தித்தாளில் எங்கே? ஏன் மறைக்கப்படுகிறது?

ஊடகங்களில் பெரிதாக மீண்டும் மீண்டும் ஒரு விடயம் பேசப்படுகிறது என்றால் மிகவும் சந்தேகப்பட வேண்டிய காலகட்டம் இது . பாஜகவின் வரலாறு இந்த பாடத்தை தந்துள்ளது . எஸ்பி பாலாவுக்காக ஓவராக ஊடகங்கள் கண்ணீர் சிந்துவதை  அந்த கோணத்தில்தான் பார்க்கவேண்டும்  எத்தனையோ மோசமான பிரச்சனைகளை மறக்கடிக்க இன்று எஸ்பி பாலாவுக்காக மக்களின் கண்ணீரை ஆறாக பெருக்கெடுத்தது ஓடவைப்பதில் வழக்கம் போல ஊடகங்க பெரு வெற்றி பெற்றுவிட்டன.     இவர்கள் வெற்றி பெறும்போதெல்லாம் மக்கள் தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறார்கள் .  பணமதிப்பு இழப்பாகட்டும் வேறு எந்த திடடத்தை பாஜக கொண்டுவந்தாலும் அதை முழு மனதோடு எஸ்பி பாலா ஆதரித்தவர் என்பதையும் நினைவு கூறுதல் நல்லது..  உடன் பிறப்பே வாழ்க வளர்க்க வெல்க 

Sundar P : விவசாயிகளின்  போராட்டத்தை மக்கள் கண்களில் இருந்து மறைக்கவே SPB யின் மறைவு காலம் தாழ்த்தி அறிவிக்கப் பட்டுள்ளது... 

வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பாதுகாக்காது! - நிரூபித்த அரசு...


vikatan : கு. ராமகிருஷ்ணன் :
வேளாண் சட்ட நகல் எரிப்பு
வேளாண் சட்ட நகல் எரிப்பு
`ஒப்பந்தச் சாகுபடி முறையில் கரும்புக்கே இந்த நிலையென்றால், நெல், கோதுமை உள்ளிட்ட அனைத்து விளைபொருள்களையும் ஒப்பந்தச் சாகுபடி முறையில் கொண்டுவந்தால், விவசாயிகளின் நிலை என்னவாகும்... நினைத்து பார்ப்பதற்கே மனம் பதறுகிறது.'

`மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மைகள் அதிகம்’ எனத் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவும், அந்தத்துறையின் செயலாளர் ககன்தீப் சிங் பேடியும் தெரிவித்திருக்கிறாகள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக ஒப்பந்தச் சாகுபடி முறை கொண்டு வரப்பட்டதாகவும், அதேபோல்தான் மத்திய அரசு விவசாயிகளுக்கு உத்தரவாதமான விலை கிடைப்பதற்கான சட்டத்தை கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள். இது குறித்து கருத்து தெரிவிக்கும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், `கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பணத்தை தமிழக அரசால் பெற்றுத் தர முடியவில்லை. அப்படியென்றால், தற்போது மத்திய அரசு கொண்டுவரும் சட்டமும் தோல்வியில்தான் முடியுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

maalaimalar :சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பென்னிக்ஸ்-ஜெயராஜ்

மதுரை:தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். 

அனைத்திலும் ஊடுருவிய RSS ! வித்யா பாரதி. சரஸ்வதி வித்யாமந்திர் உட்பட 13000 கல்வி நிறுவனங்கள். 75000 ஆசிரியர்கள், 17 லட்சம் மாணவர்கள்..

V
ijayasankar Ramachandran :
அனைத்திலும் ஊடுருவி நிற்கும் ஆர்.எஸ்.எஸ். (ஏ.ஜி. நூரானியின் புத்தகத்திலிருந்து) "சங்க பரிவாரம் என்கிற ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தின் அங்கங்கள் குறித்து மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் பத்திரிக்கையாளர் பாரத் பூஷன் நம் பாராட்டுக்குரியவர். அவருடைய பதிவு: “ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான் நாட்டின் சமூக, அரசியல் வாழ்க்கையின் ஓவ்வொரு நடவடிக்கைக்குள்ளும் சென்று தொடர்ந்து நுண் அரசியல் செய்யும் ஒரே அமைப்பு. அரசு சாராத கல்வித் துறையில் செயல்பட்டு வரும் மிகப் பெரிய அமைப்புதான் வித்யா பாரதி. சரஸ்வதி வித்யா மந்திர் உட்பட 13000 கல்வி நிறுவனங்களை நடத்தும் அதன் கீழ் 75000 ஆசிரியர்களும், 17 லட்சம் மாணவர்களும் இருக்கின்றனர்.

மத்திய அரசு சட்ட மீறல் ! சிஏஜி அறிக்கை ! மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்திய மோடி அரசு!

  Sivakumar Nagarajan : காலையில் ஸ்க்ரோல் தளத்தில் இந்த செய்தியை பார்த்தேன்...இந்த அதிர்ச்சியான செய்தியை வேறு மைன்ஸ்ட்ரீம் ஊடகங்கள் வெளியிட்டனவா...?
அதாவது , ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான செஸ் தொகை ரூ.47,242 கோடியை 2017-18 and 2018-19-ல் இந்திய தொகுப்பு நிதியில் (CFI-consolidated fund of India) வைத்து பிற நோக்கங்களுக்காக அந்தத் தொகையைப் பயன்படுத்தியதாகவும் இதன் மூலம் மத்திய அரசே சட்டத்தை மீறியுள்ளதகாவும் இந்திய தலைமைத் தணிக்கைக் கணக்காளரான சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ‘வருவாய் வரவுகளை அதிகப்படுத்தியும் நிதிப்பற்றாக்குறையை குறைத்தும் காட்ட முடிந்துள்ளது’ என்று சிஏஜி அறிக்கை பகீர் தக்வலை வெளியிட்டுள்ளது.
So,மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி மத்திய அரசு சட்ட மீறல் என்று வெளிப்படையாக அறிக்கை வந்து உள்ளதே என்று நிதி அமைச்சரிடம் கேட்டால்..?
அதற்கு நிர்மலா மேடம் பதில் என்ன சொன்னார்கள் தெரியுமா..? "மாநிலங்களுக்கான வருவாய் இழப்பை ஜிஎஸ்டி நிதியிலிருந்து கொடுக்குமாறு சட்டத்தில் எந்த ஒரு பிரிவும் இல்லை" என்று பதில் அளித்து இந்திய ஒன்றியத்திற்கு அதிர்ச்சி அளித்து இருக்கிறார்கள் ...Vivekanadan T

யாழ்நகரை கிழக்கு போராளிகள் கைப்பற்ற விடாமல் சூழ்ச்சி செய்தது பொட்டம்மான் - முன்னாள் கிழக்கு போராளி...

Reginold Rgi : ஈழ தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் இறுதி இலக்காக கருதப்பட்ட யாழ் நகர் நோக்கிய கிழக்கு படையணிகளின் படையெடுப்பு வெற்றியளித்திருந்தால் நிச்சயம் நாம் இன்று சுதந்திர தமிழீழ தனியரசை அடைந்திருக்க முடியும்.
ஆனால் அவ் இலக்கை அடையவிடாது தடுத்தவன் வேறு யாருமில்லை பொட்டம்மான் எனும் சுயநலவாதி
எதிரியின் பாரிய படைத்தள மையமாக கருதப்பட்ட யாழ் குடாநாட்டை தலைவர் அவர்கள் 2000மாம் ஆண்டு தான் தீட்டிய திட்டத்தின் அடிப்படையில் கைப்பற்றியிருந்தால் நிச்சயமாக நாம் தமிழீழம் எனும் தனியரசை அன்றே உருவாக்கியிருக்க முடியும்.
ஆனால் அதை தனது ஏகாதிபத்திய வெறியினாலும், தான் என்ற சுயநலமான பதவி ஆசையினாலும், தன்னைவிட வேறு எந்த தளபதிகளும் முன்னுக்கு வரக்கூடாதென்ற பொட்டம்மானின் நயவஞ்சக குணத்தினாலுமே அன்று கிழக்கு படையணிகளால் யாழ் குடாநாட்டை கைப்பற்றமுடியாமல் போனதற்கான முதன்மை காரணம்.
இல்லையென்றால் அன்றே தளபதி கருணாவின் தலைமையில் யாழ் நகரம் கைப்பற்றபட்டிருக்கும்
ஏனென்றால், ஓயாத அலைகள் மூன்றின் இராணுவ நடவடிக்கை ஊடாக நாம் எதிரியின் மிகப்பெரும் தளமாகக் கருதப்பட்ட ஆனையிறவு படைத்தளத்தை கிழக்கு படையணிகளால் வெறும் 24 மணித்தியாலத்துக்குள் கைப்பற்றிய பின்னர், ஆனையிறவு படைத்தளத்தைவிட பெரிதான படைத்தளம் எதுவும் யாழ் குடாநாட்டில் இருந்திருக்கவில்லை.

விவசாயிகள் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்களில் போக்குவரத்தை முடக்கி போராட்டம் ..

BBC : இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய விவசாயம் தொடர்புடைய மூன்று மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உட்பட பல மாநிலங்களில் உள்ள விவசாயிகள் இன்று முதல் ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். மூன்று நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் முதல் நாளான வெள்ளிக்கிழமை, விவசாயிகளும் அவர்கள் தொடர்புடைய அமைப்பினரும் பெருமளவில் கலந்து கொண்டு ரயில் மறியலில் ஈடுபட்டார்கள். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு சாதகமானது என்று இந்திய அரசு விளக்கம் அளித்தபோதும், அதன் பல அம்சங்கள், விவசாயிகளின் நேரடி வருவாயை பாதிக்கும் என்று விவசாயிகளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் தெரிவித்துள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் அடிப்படையில் விவசாயிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளதுடன் அங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசும் மசோதாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அங்குள்ள எதிர்கட்சியான ஷிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் சமீபத்தில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சந்திப்பு

   dhinakaran :சென்னை: தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர், திமுக கூட்டணியை வெற்றியடையச் செய்து மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று கூறினார்.
 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை வந்த அவருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டத்தை நடத்துவது குறித்தும், சட்டமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பிரிவு தலைவர்கள், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !

சரஸ்வதி நதியை தேடிய தருணத்தில்
vinavu.com - நந்தன் : இந்திய வரலாற்றை புரட்டும் வேலையில் சங்கிகள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிப்பதோடு, பார்ப்பனியத்தின் கீழ் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்துவதற்கான சதியாகும். ‘இந்தியக் கலாச்சாரத்தை’ ஆய்வு செய்ய  மத்திய அரசு சிறப்புக் குழு ஒன்றை அமைத்தது குறித்து வரலாற்றாய்வாளர்கள் முதல் எடப்பாடி பழனிச்சாமி வரை பலரும் தங்களது வருத்தங்களையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். ”இந்திய கலாச்சாரத்தை” மோடி அரசு ஆய்வு செய்ய அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது ?

கடந்த செப்டெம்பர் 14-ம் தேதி மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல், நாடாளுமன்றத்தில் “இந்தியக் கலாச்சார” தோற்றுவாய் பற்றி 12,000 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வு செய்ய இருப்பதாகவும், அதற்கென தனியாக ஒரு நிபுணர் குழு அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

எங்களின் கோவணத்தைப் பறிக்காதே..! - அரை நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள்!


nakkeeran : மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்

தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஒரு போராட்டத்தில், விவசாயிகள் பட்டை நாமம் போட்டுகொண்டு, மண் சட்டியோடு, அரை நிர்வாணக் கோலத்தில் ஏர் கலப்பையைத் தூக்கியவாறு ஊர்வலமாக வந்து சாலை மறியல் செய்தனர். விவசாயகளின் கோவணத்தை பறிக்காதே! என்று முழக்கமிட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் மத்திய அரசின் விவசாயகளுக்கு எதிரான சட்டத்தைத் திருப்பப் பெறக் கோரி ஒன்றியச் செயலாளர் சின்னத்துரை தலைமையில், ஊரணிபுரம் கடைவீதியில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட சுற்றுவட்டார கிராம விவசாயிகள், மண் சட்டியில் பட்டை நாமத்துடன் அரை நிர்வாணக் கோலத்திலும் ஏர் கலப்பையை சுமந்தும் ஊர்வலமாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

எஸ்.பி.பிக்கு காவல் துறை மரியாதை: முதல்வர் அறிவிப்பு!

எஸ்.பி.பிக்கு காவல் துறை மரியாதை: முதல்வர் அறிவிப்பு!minnambalm :எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.  40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இசை உலகின் சகாப்தமாக விளங்கும் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் இன்று (செப்டம்பர் 25) காலமானார். அவரது உடல் நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர், பொதும

க்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்பிறகு தாமரைப்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதியில்லை.எஸ்.பி.பி மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். எஸ்.பி.பிக்கு இறுதிப் பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஹார்லி டேவிட்சன் இந்திய சந்தையை விட்டு வெளியேறுகிறது. அதிக வரி காரணம்..

RS Prabu : ஈருருளி தயாரிப்பாளரான ஹார்லி டேவிட்சன் இந்திய சந்தையை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது. அதிக வரி விதிப்பைக் காரணம் காட்டுகிறார்கள். அஃது உண்மைதான். அதே வரி சொகுசு கார்களுக்கும் உண்டு ஆனால் அதன் விற்பனை அதிகரித்து வருகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
வருங்காலத்தில் மேலாண்மை கல்லூரிகளில் சந்தைப்படுத்தல் பிரிவில் ஹார்லி டேவிட்சன் ஓர் உதாரணமாக காட்டப்பட்டும்.
மேலை நாடுகளில் குறைவான காலமே வெயில் என்பதால் அவர்கள் road trip என்ற பெயரில் சூப்பர் பைக் வாங்கி பயணிப்பதற்கு அங்குள்ள சாலை உட்கட்டமைப்பு, போக்குவரத்து விதிகளை மதிக்கும் ஒழுக்கம் ஆகியவையும் காரணம்.
நம் ஊரில் road trip கலாச்சாரம் இராயல் என்ஃபீல்ட் ஆசாமிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏதோ ஏழைக்கேற்ற எல்லுருண்டை என்ற அளவில் ஒன்றரை இலட்சத்திற்கு ஒரு வண்டி வாங்கி லடாக் வரைக்கும் ரோட் ட்ரிப் போய் வந்துவிட்டால் பிறவிப் பயனை அடைந்துவிட்டதாக கிடைக்கும் ஒவ்வொரு நபரிடமும் அதைப் பேசியே கொல்லுவார்கள். சரி, நம்ம பயலாச்சே பேசட்டுமே என்று பாட்டிலைத் திறக்கும் போதெல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டி இருப்பது இராயல் என்ஃபீல்ட் வண்டி உரிமையாளர்களுடைய நண்பர்களாக இருப்பவர்களின் சமூகக் கடமையாகும்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

Evergreen favourite singer என்ற பெருமிதத்தோடு விடைபெறுகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!

Ravi Pallet
  Sivasankaran Saravanan : இறவாப்புகழ் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களது பாடும் திறனைப்பற்றி தனியாக எடுத்துச்சொல்லவேண்டிய அவசியம் இல்லை. 50 + வருடங்களாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை ஒருவர் பாடியிருக்கிறார் என்பது வருங்காலங்களில் பிரமிப்புடன் பார்க்கப்படும். எத்தனையோ பாடகர்கள் நல்ல குரல்வளத்துடனும் , பாடும் திறமையும் பெற்றிருந்தபோதிலும் பாலு மட்டும் ஏன் நமக்கு ரொம்ப நெருக்கமாகிறார் என யோசித்ததுண்டு.
சூப்பராக இல்லாவிட்டாலும் , சுமாராகவாது பாட வேண்டும் , பாடி பிறரை கவரவேண்டும் என்ற ஏக்கம் எனக்கு சிறுவயது முதலே உண்டு. என்னைப்போல சுமாராக கூட பாடத்தெரியாதவர்கள் தான் பெரும்பான்மையினர். இந்த பாட வராத பெரும்பான்மை மக்களுக்கு பிடித்த பாடகர் எஸ்பிபி. அதற்கு காரணம் அவர் பாடும் பாடல்கள் அவர் பாடுவதாலேயே எங்களுக்கு எளிமையாகிவிடுகிறது. எங்களைப்போன்ற சாமானியர்களுக்காகவே அவர் தனது மேதைமையை காட்டாமல் எளிமையாக பாடுவதாக நாங்கள் உணர்கிறோம். ஒருவேளை இதுதான் அவரது மேதைமையாக இருக்கலாம். நல்ல இசை ஞானமும் பயிற்சியும் பெற்று அவரை இன்ஸ்பிரேசனாக எடுத்துக்கொண்டு நிறைய பேர் பாடவருகிறார்கள். ஆனால் அப்படி வருபவர்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு , தங்களது தனித்தன்மையை காட்டவேண்டும் என முடிவெடுக்கின்றனர். அதில் தவறேதும் இல்லை. ஆனால் எஸ்பிபியின் தனித்தன்மை என்று பார்த்தால் யார் வேண்டுமானாலும் அவர் பாடலை பாடலாம். யாருக்கு வேண்டுமானாலும் அவர் குரல் அப்படியே பொருந்தும்.

ஊரடங்கால் வறுமையில் தவிக்கும் நாட்டுப்புற கலைஞர்கள்! பட்டினிச் சாவிலிருந்து காக்க வேண்டுகோள்!

ns7.tv :கொரோனா கொடூரத்தால் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் முற்றிலும் ரத்தாகிவிட்டன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள கலைஞர்கள் பட்டினிச் சாவிலிருந்து தங்களைக் காக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நகைச்சுவையாலும், நல்ல கருத்துக்களாலும் மக்களை மகிழ்விக்கும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வை சூறையாடிவிட்டது கொரோனா. உயிரைக் காக்க மக்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் கோயில் திருவிழாக்கள் ரத்தாகி விட்டன. இதனால் நாட்டுப்புற கலைஞர்கள், நடிகர்கள், நாடக கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் வருமானத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். 

திலீபனும் நல்லூர் கோயிலும் .. மறைத்த வரலாற்று தகவல்கள்

நல்லூர் கோயில் நிர்வாகி குமாரதாஸ்

Arun Ambalavanar
: முதலில் திலீபன் உண்ணாவிரமிருந்து இறக்கச் செய்யப்பட்ட நல்லூர் கோயிலில்தான் தேசிய யாவாரிகள் அனுமதி கேட்டவையாம். மாப்பாணர் எப்போதும் போலவே தன்மையாகச் சொன்னாராம்.
" இது கோயில். கோயிலில் செய்யவேண்டியதையே நான் அனுமதிப்பேன். எனது சக்திக்கப்பால் ஆயுத முனையில் முருகனின் செல்வங்களையே,கொள்ளையிட முயன்றார்கள். ஆயுத முனையில் உருக்குலைந்து துர்நாற்றம் வீசிய இராணுவத்தினரின் சடலங்களை முருகன் வீதியில் வைத்து அபச்சாரம் புரிந்தார்கள். 
ஆயுத முனையில் திலீபனை முருகன் சந்நிதிமுன் அன்னம் தண்ணீர் கொடுக்காமல் உண்ணாவிரமிருக்க வைத்து கொன்றார்கள். அப்படியே ஆயுத முனையில் இப்பவும் நீங்கள் முருகன் சந்நிதானத்தில் உண்ணாவிரதப்போர் இருக்க வருவீர்களானால் அதைத்தடுக்க என்னால் முடியாது"
இதற்குப் பிறகுதான் செல்வச்சந்நிதி கோவிலை நாடினவையாம் சிவாஜி+சிறிக்காந்தா+மாவையும் மிச்சம் நாற்பது திருடர்களும்.
  

பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு- அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக

MAALAIMALAR :புதுடெல்லி: 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடையை உள்ளது. இதையடுத்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பீகார் மாநில தேர்தல் தேதியை அறிவிக்கிறோம். பீகாரில் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பீகார் சட்டமன்றத்தில் 243 உறுப்பினர் பதவிகள் உள்ளன. அதில் 38 இடங்கள் எஸ்சி வகுப்பினருக்கும், இரண்டு இடங்கள் எஸ்.டி. வகுப்பினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.2 கோடியில் இருந்து 7.2 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்தம் 7.29 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 16 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது – சீன வைராலஜி நிபுணர்

maalaimalar.co : கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியதாக, சீனா வைராலஜி நிபுணர் லீ மெங் யான் கூறியுள்ளார். உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து சீன அரசு மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது போன்ற சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன், சீனாவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர் லீ மெங் யான் என்பவர் கொரோனா வைரஸ் உகான் மாகாண ஆராய்ச்சிக் கூடத்தில் உருவாக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து பேசிய லீ மெங் யான், கொரோனா வைரஸ் குறித்து உலகத்திற்கு தெரிவதற்கு முன்பே சீன அரசு அதனைக் குறித்து அறிந்திருந்ததாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை மறைக்க சீன அரசாங்கத்திற்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார். சீன அரசு மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் லீ மெங் யான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட் -19 - 

சசிகலாவுக்கு சிறுநீரக பாதிப்பு: கலங்கும் உறவினர்கள்!

 சசிகலாவுக்கு சிறுநீரக பாதிப்பு: கலங்கும் உறவினர்கள்!

minnambalam :சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை எப்போது என்ற கேள்வி ஒரு பக்கம் அரசியல் வட்டாரத்தில் எழுந்து கொண்டிருக்க..‌‌‌. இன்னொரு பக்கம் சசிகலாவின் உடல்நிலை பற்றிய கவலையும் அவரது உறவினர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நான்கு ஆண்டுகளாக சிறையிலிருந்து வரும் சசிகலாவுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் உண்டு. அதற்காகவும் முதுகு வலிக்காகவும் பல மாத்திரைகளை அவர் உண்டு வருகிறார்.  கடந்த வாரம் டெல்லி சென்ற தினகரன் சசிகலாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை முன்கூட்டியே விடுவிக்க உதவுமாறு மத்திய அரசுத் தரப்பிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். இதுபற்றி மின்னம்பலத்தில் நட்டா வீட்டில் அமித்ஷா தினகரன் பேசியது என்ன?என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.  இந்த நிலையில் சசிகலாவின் சகோதரரான மன்னார்குடி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஓரிரு நாட்களுக்கு முன் சசிகலாவை சிறையில் சென்று சந்தித்திருக்கிறார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி BBC

எஸ்பிபி சென்னையில் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 25) காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்படவுள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவரது உடல் எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் இருந்து அவசரஊர்தி வாகனம் மூலம் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது சொந்த ஊரான சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள பூர்விக வீட்டுக்கு சனிக்கிழமை அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படவுள்ளது.

160 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டம்.. குழிபறிக்கும் கோஷ்டிகள்

Mathivanan Maran - tamil.oneindia.com : சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிடுவது அதிமுகவின் திட்டம். ஆனால் வலிமையான தலைமை இல்லாத நிலையில் புற்றீசலைப் போல கோதாவில் குதிக்கப் போகிற குடைச்சல் அதிருப்தி வேட்பாளர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதும் அதிமுக சீனியர்களின் கவலை. அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு இடையேயான முட்டல் மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஓபிஎஸ் அணியில் புதியதாக அமைச்சர்கள் சிலரும் சேர்ந்துள்ளனர். அதிமுக தலைமை கழகத்தில் அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பும் பரஸ்பரம் கொந்தளிப்பைக் காட்டியது. இதனால் யாரை எப்படி சமாளிப்பது? சமாதானப்படுத்துவது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர் அதிமுக சீனியர்கள்.
இந்த நிலையில் சசிகலா விடுதலையாகிறார்.. அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளராகிறார்... பாஜகதான் டீல் பேசுகிறது என்கிற தகவல்கள் வெளியாகின. 

மலையக தோட்டங்களில் சொந்த காணி , தனி வீடு, தமிழ் கிராமங்கள் 13,000 தொடர்மாடி மனைகள்..

Mano Ganesan :எம்மை பொறுத்தவரை "மலையக தோட்டங்களில் 7 பேர்ச் காணி, சொந்த தனி வீடு, தமிழ் கிராமங்கள், வட கொழும்பில் சேரிபுறங்களை ஒழித்து கட்டப்பட்ட 13,000 தொடர்மாடி மனைகள், அங்கே, வெளியாட்களை குடியேற்றாமல், அந்நிலத்து சேரிகளில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களையே குடியேற்றியமை, மலையக புதிய பிரதேச சபைகள், மலைய அதிகார சபை" என நீண்ட சாதனை பட்டியல் உண்டு. வடகிழக்கில், நாம் "பதவியேற்ற போது இருந்த அரசியல் கைதிகள் தொகை சரிபாதியாக குறைந்தது, 60% க்கு மேற்பட்ட காணிகள் விடுவிப்பு, மரணித்தோரை நினைவுக்கூறும் உரிமை, கடத்தல், கொலை, கைதுகளற்ற சமாதான சூழல்" என்ற பட்டியல் உண்டு. வடகிழக்கில், நாம் "பதவியேற்ற போது இருந்த அரசியல் கைதிகள் தொகை சரிபாதியாக குறைந்தது, 60% க்கு மேற்பட்ட காணிகள் விடுவிப்பு, மரணித்தோரை நினைவுக்கூறும் உரிமை, கடத்தல், கொலை, கைதுகளற்ற சமாதான சூழல்" என்ற பட்டியல் உண்டு.

எமது நல்லாட்சி அரசாங்கத்தை இன்னமும் கரித்து கொட்டும் சிங்கள பேரினவாத முகநூலர்களின் பதிவுகளை அப்படியே காப்பியடித்து, எனது முகநூலுக்குள் உள்நுழைந்து, அவ்வப்போது மறுபதிவு செய்யும், ஒருசில "அறிவாளி" தமிழ் எழுதும் நண்பர்கள் ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா .. கர்நாடகா.. ஒரே வாரத்தில் 2 எம்பிக்கள் பலி.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு

Veerakumar - /tamil.oneindia.com : பெங்களூர்: கொரோனா பாதிப்பால் கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ நாராயண ராவ் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 65. கர்நாடகாவின் பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாண் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பி நாராயண் ராவ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மோசமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் இன்று உயிரிழந்ததாக மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் மனிஷ் ராய் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
மோசமான உடல்நிலை மோசமான உடல்நிலை அவரது உடல்நிலை மிகவும் பலவீனமாகிவிட்டது, அவரது பல உறுப்புகள் செயல்படுவதை நிறுத்திவிட்டன. அவர் வென்டிலேட்டர்கள் மற்றும் டயாலிசிஸ் உள்ளிட்ட பல கருவிகள் உதவியுடன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
டாக்டர்களின் 24 மணி கண்காணிப்பில்தான் அவர் இருந்தார். ஆனாலும் கொரோனா பாதிப்பிலிருந்தும் அதன் பக்க விளைவுகளில் இருந்தும், அவரை காப்பாற்ற முடியவில்லை. இன்று மதியம் நாராயண ராவ் உயிரிழந்தார். இவ்வாறு மனிஷ் ராய் தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின் கண்டனம் : உரிமையாளருக்குத் தெரியாமல் கட்டிடம், நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டம்; திமுக எதிர்ப்பை மீறி நிறைவேற்றுவதா?

 the-law-of-acquisition-of-building-and-land-by-which-he-is-unaware-of-the-owner-will-the-dmk-carry-out-its-opposition-stalin-condemns-the-tamil-nadu-government

.hindutamil.in : திமுகவின் கடும் எதிர்ப்பையும் மீறி, கார்ப்பரேட் மற்றும் தனியாரின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு உதவிடும் வகையில் அதிமுக அரசு கொண்டு வந்திருக்கும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் 2020-க்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

“நில உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்களுக்குத் தெரியாமல்- அவர்களுக்குச் சொந்த உரிமையுள்ள ஒரு பகுதியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க - அனுமதி வழங்கத் தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் 2020 கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

புதுச்சேரி வீட்டில் 74 தொன்மையான கோயில் சிலைகள் – தமிழக காவல்துறை சோதனையின் விரிவான தகவல்கள்

BBC  :ுதுச்சேரியில் ஒரே நபரிடம் இருந்து 74 தொன்மை வாய்ந்த சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், நகர்ப் பகுதியில் உள்ள ரோமன் ரொலான் வீதியில், தனி நபருக்குச் சொந்தமான வீட்சிலைடில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் புதுச்சேரியில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை (செப்டம்பர் 24) சோதனை மேற்கொண்டனர்.அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன், உலோகம் மற்றும் கற் சிலைகள் உட்பட 74 சிலைகளை தமிழக காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

என்னப்பா அவமானப்படுத்துறீங்க?'' -கூட்டத்திலிருந்து வெளியேறிய சீனியர்!!! தனி விமானத்தில் டிடிவி! டெல்லியிடம் சசிகலா டீல்!

admk  nakkheeran.in :எப்பொழுதும் அ.தி.மு.க.வை எதிர்த்து விமர்சனம் செய்து கொண்டிருக்கும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சமீபத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஒரு இடத்திலும் அ.தி.மு.க. அரசை விமர்சிக்கவேயில்லை. காரணம், சசிகலா ரிலீஸ் அ.தி.மு.க.வில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள்தான் என்கிறார்கள்.

 சசிகலாவின் விடுதலையை உறுதிப்படுத்தி கொள்வதற்காக செப்டம்பர் 20ந் தேதி டெல்லி பயணம் மேற்கொண்டார் டி.டி.வி.தினகரன். அதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியின்றி தனி விமானத்தை அமர்த்துவதும், சென்னை டெல்லி போன்ற விமான நிலையங்களில் அதனை தரையிறக்குவதும் எளிதல்ல. ஆகவே டிடிவியின் டெல்லி பயணத்திற்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கிறது என்கிறார்கள் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

பெட்டிக்கடை எம்.எல்.ஏ ஜி.பி.வெங்கிடு! இறுதிவரை எளிமையாகவே இருந்த திராவிட கொள்கை வீரர்


   Govi Lenin :பெட்டிக்கடை எம்.எல்.ஏ!நம்பமுடியாததுதான்! நேற்று அரசியலுக்கு வந்து, இன்று பதவி வாங்கி, நாளையே செட்டிலாக நினைப்பவர்களுக்கு, ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு கடைசிவரை அடையாளமாக இருந்தது பெட்டிக்கடைதான் என்பதை! 

கோபிசெட்டிப்பாளையம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஜி.பி.வெங்கிடு, மடியில் கனமில்லாத அரசியல்வாதி. பெரியார் கொள்கையில் உறுதி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரப் பணி, பொதுமக்களிடம் நற்பெயர் இதுதான் பொதுவாழ்க்கையில் அவரது அசையா சொத்துகள்.

1991-96 ஜெயலலிதா ஆட்சிக்காலம் என்பது ‘மோடியின் அக்கா’ ஆட்சிக்காலம். ஆட்சிக்கு எதிராக யாராவது பேசினாலோ எழுதினாலோ வழக்குப் போட்டாலோ ஆட்டோவில் வரும் ஆளுங்கட்சி குண்டர்கள் அவர்களைத் துவம்சம் செய்துவிட்டுப் போய்விடுவார்கள். வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், விஜயன், துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் உள்பட பாதிக்கப்பட்டோர் ஏராளம். தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், கவர்னர் சென்னாரெட்டிக்கான ட்ரீட்மெண்ட் தனி ரகம். சுப்பிரமணியசாமிக்கு மிகவும் ஸ்பெஷலான ட்ரீட்மெண்ட்டை வளர்மதி அண்ட் கோ வழங்கியது. சொந்தக் கட்சி எம்.எல்.ஏக்கள் முகத்திலேயே துணியைப்போட்டு அடித்து வெளுத்த வீரவரலாறும் நடந்தது.  

கர்நாடக மாநில திராவிடக்குரல் We are south வீ ஆர் சவுத்

Kathir RS : இந்தி எதிர்ப்பு,சமக்கிருத எதிர்ப்பு,நீட் எதிர்ப்பு,NEP எதிர்ப்பு இவை எல்லாத்துலயும் தமிழ்நாட்டுக்கு டஃப் குடுப்போம் ப்ரோ என்று சிரித்தபடி சொன்னார் அபி கௌடா.. கர்நாடக மாநிலத்தின் உரத்த திராவிடக்குரல்.வீ ஆர் சவுத் இந்தியன்ஸ் இயக்கத்தின் நிறுவனர்.
இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக நமது நெடுங்கால போராட்டத்திற்கு தோள் கொடுக்க முதன் முதலில் வந்து நிற்கும் சகோதரர்கள் கன்னடர்களே என்பது எப்பேர்பட்ட முரண்.
பத்தாண்டுகளுக்கு முன்னால் இப்படிச் சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருப்பார்களா?
NEET மற்றும் NEP க்கு எதிராக கன்னடத்தில் அவர் நேற்று நமது வீ திராவிடின்ஸ் ஏட்டில் நிகழ்த்திய (விளாசிய)உரை.
கன்னடம் உங்களுக்கு தெரியாது என்றாலும் பாருங்கள்..இந்த பேச்சு உங்களுக்கு நிச்சயம் புரியும்..காரணம்..அதுதான் கொள்கையில் தோய்ந்த நமது மூளையின் சிறப்பியல்பு..  Try to Experiment it.. You will be shocked to realize..
இணைப்பு முதல் கமென்ட்டில்..

வியாழன், 24 செப்டம்பர், 2020

Manu's Mind is Dirty! Dr.Shanthi Sri Pandit மனுவின் மனம் முழுவதும் அழுக்கு

Manu's Mind is Dirty! Dr.Shanthi Sri Pandit மனுவின் மனம் முழுவதும் அழுக்கு ( 2 )

அம்பானி இந்தியாவை திருடும் கதை (Part - 1)

Tha Mu : அம்பானி இந்தியாவை திருடும் கதை.  (Part - 1) 
அம்பானி எவ்வளவு கொள்ளையடித்தாலும், என்ன தில்லுமுல்லு செய்தாலும் எதுவும் நமக்கு தெரிவதில்லை. 2G என்ற ஊழல் வழக்கு மட்டும் நாடெங்கும் தொடர்ந்து விவாதிக்கபடுகிறதே.. அம்பானி மோடியின் உதவியுடன் செய்யும் ஊழல்களை யாரும் பெரிதாக பேசவில்லை. ஏன்?
Reliance உருவாக்கிய Network 18 என்ற நிறுவனம் தான் இந்தியாவில் பெரும்பாலான டிவி மற்றும் மீடியா சேனல்களின் உரிமையாளர். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ என்ன செய்தி உங்களை வந்தடைகிறது என்பதை முழுமையாக கட்டுப்படுத்துகிறார் முகேஷ் அம்பானி.
அது கிடக்கட்டும்.
நாம் முதலில் இருந்து ஆரம்பிபோம்.
2012 குஜராத் முதல்வராக இருந்த போது மோடி தனது corporate நண்பர்களான Reliance ம் அதானி குழுமமும் 1500 கோடி லாபம் பெறும் வகையில் நிதி ஆதாரங்களை தவறாக கையாண்டுள்ளார். இதை கண்டுபிடித்து அப்போதே சொன்னார் மத்திய அரசின் முதன்மை தணிக்கையாளர் CAG. யாரும் கண்டுகொள்ளவில்லை.
குஜராத் அரசின் pertroleum corporation (GSPC) 2009 ஆண்டிலிருந்து முறையாக இயங்கவில்லை. இது அதானி, எஸ்ஸார், அம்பாணி குரூப்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டது. CAG ரிப்போர்ட் சொல்வது என்னவென்றால் GPSC தனது எரிவாயுவை மிகக்குறைந்த விலையில் reliance க்கும் அதானிக்கும் விற்றுள்ளது. இதனால் அரசுக்கு 5000 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
மோடியை வைத்து குஜராத்தை சுரண்டியது போல், இந்தியாவையே சுரண்ட ஒரு திட்டம் தீட்டப்பட்டது.

ஐபிஎல்: கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் போதைப்பொருள் - பாலிவுட் நடிகை அதிர்ச்சித் தகவல்

maalaimalar :  ஐபிஎல் போட்டியின்போது கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் கோகைன்

போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்களால் கண்டேன் என பாலிவுட் நடிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஐபிஎல்: கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தினர்- பாலிவுட் நடிகை அதிர்ச்சித் தகவல்
ஷெர்லின் சோப்ரா
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அவருக்கு போதைப்பொருள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் மும்பையில் முகாமிட்டு ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடலை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கறிஞர் பா.மணியம்மை : திராவிடர் கழகம் என்பது “கொள்கை குடும்ப கட்சி தான்”

Maniammai Periyar : · தேதி : 23.09.2020 வணக்கம், 27.09.2020 நாளிட்ட ‘ஜூனியர் விகடன் இதழில் “உங்கள் குடும்பச் சொத்தா திராவிடர் கழகம்?” எனும்

தலைப்பில் பெரியாரின் உண்மைத் தொண்டன் என்று வந்த கட்டுரையைப் படித்தேன். இப்படி ஒரு இதழ் இருப்பதை மக்கள் மறந்துபோய் பல நாட்கள் ஆகிவிட்டது, நாங்களும் இருக்கின்றோம் என இருப்பதைக் காட்டிக் கொள்வதற்காக பல அரசியல் கட்சித் தலைவர்களை கடுமையாக சாடிவருதை அறிந்தோம்.
அதே பாணியில் திராவிடர் கழகத்தையும் அதன் ஒப்பற்ற தலைவரையும் சாடியுள்ளது. இந்த 87 வயதிலும் தலைவர் பெரியாரை இந்த்துத்துவ, பார்ப்பனீய சக்திகளால் தொட்டுக்கூட பார்க்க முடியாத அளவிற்கு அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் , மக்களின் ஈடு இணையற்ற தலைவராக பெரியாரை கொண்டு போய் சேர்த்துள்ளார் “தமிழர் தலைவர் , திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அந்த வயிற்றெறிச்சலை பொறுத்துக் கொள்ள முடியாமல் அதற்கு காரணமான தலைவரை கொச்சைப்படுத்த ஒடுக்கப்பட்ட மக்களின் திடீர் ஆதரவாளராக மாற்றிவிட்டது ஜூவி இதழ்.

தனியார் மருத்துவமனை சென்றாலே கரோனா பாசிட்டிவ்?-பரிசோதனையை தவிர்க்கும் பொதுமக்கள்

hindutamil.in : தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5.55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என 9 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனுமதியை தனியார் மருத்துவமனைகளுக்கும் அரசுவழங்கியது. இதற்கான கட்டணமாக ஒரு நாளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் (ஐசியூ) வரை வசூcorona-positiveலிக்க அனுமதித்தது. அதிகம் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது.ஆனாலும், அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதுகுறித்து செய்திகள் வெளியாகும் மருத்துவமனைகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மற்ற தனியார் மருத்துவமனைகள் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

கொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

thinaboomi : கொரோனா தொற்றுக்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்காக உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டை தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் முதல் நாடாக ரஷ்யா கடந்த மாத ஆரம்பத்திலேயே தடுப்பூசி ஒன்றை உருவாக்கியிருந்தது. ரஷ்யாவின் தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் 100 கோடிக்கும் அதிகமான மருந்துகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த நிலையில் ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மிகெயில் முராஸ்கோவை, உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய தலைவர் ஹன்ஸ் குளூஜ் சந்தித்து பாராட்டியுள்ளார். பாதுகாப்பு மற்றும் வலிமையான ஒரு தடுப்பூசியை உருவாக்கியதற் காக ரஷியாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய தலைவர் ஹன்ஸ் குளூஜ் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

எஸ்.பி.பிBBC : 24 செப்டெம்பர் 2020, 13:39 திரைப்பட பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் சேர்க்கப்பட்டுள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை இன்று மாலை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்மோ கருவிகள், சுவாசக்கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் ஓஎன்ஜிசி ஆலையில் பயங்கர தீ விபத்து 3 முறை வெடித்து சிதறல்.. 10 கிமீ கேட்ட சத்தம்..

tamil oneindia  : ூரத்: குஜராத்தின் சூரத்தில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக (ஓ.என்.ஜி.சி) ஆலையில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எந்தவிதமான சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை என்று ஓ.என்.ஜி.சி தெரிவித்துள்ளது.. 
ஆரம்ப தகவல்களின்படி, அதிகாலை 3:30 மணியளவில் சூரத்தில் உள்ள ஹசிராவை தளமாகக் கொண்ட ஓ.என்.ஜி.சி ஆலையின் இரண்டு முனையங்களில் தொடர்ந்து மூன்று முறை குண்டு வெடித்தது போல் வெடித்து சிதறியது. இந்த பயங்கர வெடிப்பை தொடர்ந்து பெரிய தீ விபத்து ஏற்பட்டது.  ஹசிரா எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். காலையில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. து. எந்தவொரு நபருக்கும் எந்தவிதமான சேதமோ காயமோ இல்லை" என்று ஓ.என்.ஜி.சி அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஹசிரா எண்ணெய் ஆலையில் வெடித்து சிதறிய சத்தம் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


குஜராத்தில் 81 வருட தமிழ் பள்ளியை மூடும் அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் படிப்பு!

Gujarat government to close 81-year-old Tamil school ..

nakkeeran :யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று வெளிநாடுகளிலும் இந்தியாவினுள்ளும் தமிழின் பெறுமையைப் பற்றி பேசும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் தமிழ் பள்ளியை மூட அரசாங்கம் முயன்று வருகிறது.

ள்ளியை மூட வேண்டாம் என்று மாவட்ட கல்வி அலுவலர் வரை சந்தித்துவிட்டனர் குஜராத் வாழ் தமிழ் மக்கள். ஆனால் பள்ளியை மூடி மாற்றுச்சான்றிதழை கொடுக்க காலக்கெடுவும் விதித்துவிட்டது பள்ளி நிர்வாகம்.        குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளி கடந்த 81 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த ஏராளமானோர் பல்வேறு அரசுத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர்.      இந்தநிலையில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறி பள்ளியை மூட பள்ளி நிர்வாகமும் மாவட்டக்கல்வி நிர்வாகமும் முடிவெடுத்து அறிவிப்பும் செய்துள்ளனர்.       ஆனால் தமிழ் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களான தமிழர்களும் பள்ளியை மூடக்கூடாது. பள்ளியை மூடினால் படிப்பு வீணாகும் என்று மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி கல்வி அமைச்சர் வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். 

லூலு தேவ ஜம்லா to Dr ஷாலினி : பெண்கள் சுதந்திரமா இருங்க, ஆனா ஒரு limitஓட .. அயோக்கியத்தனமா தெர்லியா மேடம்?

லூலு தேவ ஜம்லா : நீங்க சொல்ற அந்த “லிமிட்”... அது நபருக்கு நபர் வேறுபடும் என்கிறதையே நீங்க உணரல. கலாச்சாரத்தை சொல்லி சமூகத்தை சொல்லி எல்லாம் அதை உங்களோட வரையறைகளுக்கு உள்ள நிறுத்த நினைக்கிறது, உங்க benchmarksஐ வச்சி கட்டுப்படுத்த நினைக்கிறது எல்லாம் எந்த வகையில முற்போக்குன்னு நினைக்கிறீங்க? சுயசிந்தனையோட, உண்மையான சுயமரியாதையோட இருக்கிற, வாழ நினைக்கிற பெண்களால எப்டி எவனோ ஒருத்தன் வரையறுக்கிற வரையறைகளின்படி வாழ முடியும் என்கிற பேசிக் லாஜிக்கே இல்லியேமா உங்க பார்வையில?
நான் என் விருப்பப்படி வாழுறது தான் என்னோட சுதந்திரமா இருக்க முடியும். அந்த முழுமையான சுதந்திரம் தான் எனக்கு சந்தோஷத்தை குடுக்கும். என் சுதந்திரத்தால சந்தோஷத்தால என் குடும்பம் பாதிக்கப்படுதுன்னா இங்க மாற்றப்பட வேண்டியது, திருத்தப்பட வேண்டியது, சரி செய்யப்பட வேண்டியது என் குடும்ப அங்கத்தினர்களோட பார்வைக்கோளாறுகள் தானே தவிர, என்னோட வாழ்க்கைமுறை இல்ல. சமூகம் திருந்துறது வரை நீ அனுசரிச்சி அடங்கி போன்னு சொன்னீங்கன்னா, நான் எனக்காக, என் உணர்வுகளுக்கு உண்மையா எப்ப மேடம் வாழுறது? ஒரு எழுவது வருஷம் உயிரோட இருப்பேனா மிஞ்சி மிஞ்சி போனா? அந்த சின்ன life-spanஐ கூட நான் என் விருப்பப்படி வாழாம சமூகத்துக்கு கட்டுப்பட்டு தான் வாழணும்னு சொல்றது எந்த வகையில மேடம் நியாயம்?

முருகப்பா குழுமத்தில் பாலின பாகுபாடு! வெடிக்கும் பிரச்சனை! “நீதிமன்றம் போக நான் ரெடி” வள்ளி அருணாச்சலம்! என்ன ஆச்சு?

tamil.goodreturns.inசென்னை பாரிஸ் கார்னரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது முருகப்பா குழுமம். 1900-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பாரம்பரிய குழுமம், சுமாராக 38,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக வளர்ந்து இருக்கிறது. பாரிஸ் சர்க்கரை, டிஐ சைக்கிள்ஸ், சோழமண்டலம் ஃபைனான்ஸ், சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், சோழமண்டலம் இன்சூரன்ஸ், கோரமண்டல் இன்ஜினியரிங், சாந்தி கியர்ஸ், கோரமண்டல் இண்டர்நேஷனல் உரக் கம்பெனி... என சுமாராக 28 வியாபாரங்களைச் செய்து வரும் ஒரு தமிழ் நாட்டு வணிக சாம்ராஜ்ஜியம். பொதுவாகவே தமிழகத்தில் இருந்து குறைவான கம்பெனிகளே பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் எனவும் ஒரு பேச்சு உண்டு. அதிலிருந்தும் முருகப்பா குழுமம் மாறுபட்டு இருக்கிறது. இந்த முருகப்பா குழுமத்தின் 10 கம்பெனிகள், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகின்றன.

கே. பி. சுந்தரம்பாள் நடித்த பக்த நந்தனார் படத்திற்கு என்ன நிகழ்ந்தது..?

A Prabhakar TheKa :  · டிகோடட் நந்தனார் படம் நெருப்பு புகல் ஜோதி மயமாதல் பக்த நந்தனார் (1935) என்ற ஒரு பழம் பெரும் திரைப்படம் கே. பி. சுந்தராம்பாள் சுமாருக்கு 19 பாடல்கள் பாடி நடித்த படம் என்று கேள்விப்பட்டு வரலாறு
அறிவோம் என்ற திட்டத்தில் தேடினேன்.
எரடி விழுந்த இடம் தண்டபானி தேசிகர் பாடி நடித்த மற்றுமொரு நந்தனார் படம் (1942). கதை சொல்ல எடுத்திருக்கும் தளமே நமக்கு பல உண்மைகளை டிகோட் (in the underlining context) செய்து பார்த்தால் விளங்கிக் கொள்ளும் படியாக இருக்கிறது. கதையில் வரும் நந்தனார், சிவனின் மீது பக்தி கொண்டு, கருப்பசாமிக்கு படையல் போடுவதையே தவறு என்று தன்னுடைய மக்களையே மனம் மாற்றி திருப்புன்கூர் சிவ ஆலயத்திற்கு கூட்டிச் செல்கிறார். அவர் ஒரு பறையர் சமூகத்தை சார்ந்தவர்.
அங்கு சிவ லிங்கத்தை வாயிலிற்கு வெளியில் நின்று தரிசிக்க முடியாத வகையில் நந்தி குறுக்கே கட்டப்பட்டிருக்கும். அப்பொழுது கிராமவாசிகள் இதற்காகத்தானா எங்களை இவ்வளவு தூரம் நடக்க விட்டு அழைத்து வந்தாய் என்று நொந்து கொள்வார்கள்.
நந்தனார் நெஞ்சுருகி இறைந்து பாடி நந்தியை நகர்த்தி வைப்பார். அனைவரும் கன்னத்தில் போட்டுக் கொண்டு வணங்கிக் கொள்வார்கள். மற்றொரு காட்சியில், நந்தனார் தான் அடிமையாக வயல் வேலை செய்து கொடுப்பவர் என்பதால், நிலக்கிழார் ஆண்டே"யாக வாழும் ஐயரிடம் தனக்கு சிதம்பரம் சென்று சிவனை தரிசிக்க அனுமதி வேண்டும் என்று கெஞ்சுவார்.

நடிகை பூனம் பாண்டே கணவர் மீது பாலியல் புகார் ... திருமணமான இரண்டே வாரத்தில்

maalaimalar :சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இவ்வாறு சுய விளம்பரத்திற்காக அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர் பூனம் பாண்டே. 

கடந்த செப்டம்பர் 10-ந் தேதி பூனம் பாண்டே - சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை வெளியிட்டு ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்றெல்லாம் காதலர் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். திருமணம் முடிந்த கையோடு பூனம் பாண்டே தன் கணவருடன் கோவாவுக்கு சென்றார். கணவருடன் பூனம் பாண்டே கோவாவுக்கு சென்ற இடத்தில் சாம் பாம்பே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம் பாண்டே போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

புதன், 23 செப்டம்பர், 2020

பட்டப்பகலில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் PA கடத்தப்பட்டு 3 மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டார்

  zeenews.india.com : கால்நடை பராமரிப்பு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் (Udumalai Radhakrishnan) உதவியாளரான கர்ணன் அமைச்சரின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, ​​அடாவடியாக உள்ளே நுழைந்த ஒரு கும்பல், அவரை குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்று வெளியே காத்திருந்த காரில் கடத்திச் சென்றதாக (Abduction) போலீசார் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டையில், புதன்கிழமையன்று, தமிழக அமைச்சரின் பி.ஏ, கத்தி முனையில், முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டார். மூன்று மணி நேரம் கழித்து, அவர் கடத்தப்பட்ட இடத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் விடுவிக்கப்பட்டார் என்று போலீசார் (Police) தெரிவித்தனர். கடத்தலின் பின்னணி என்னவென்று தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.

ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி (65) கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

BBC ": இந்திய ரயில்வே இணை அமைச்சரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவருமான சுரேஷ் அங்காடி (65) இன்று உயிரிழந்தார். டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் உயிரிழந்த தகவல் வெளிவந்துள்ளது.  சுரேஷ் அங்காடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கர்நாடகா மக்களுக்காக அயராது உழைத்தவர் அவர் என்று கூறியுள்ளா.  

50 ஆண்டுகளில் திராவிட ஆட்சியில் தமிழ்நாடு ஒரு அபரிதமான வளர்ச்சி

Kandasamy Mariyappan : · பல வருடங்களாக வலதுசாரி இயக்கங்களும் அதன் குட்டி இயக்கங்களும், 50 வருட திராவிட ஆட்சியில் தமிழ்நாடு வளரவேயில்லை என்ற குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் கூறி வருவதால், 35 வயதுக்கு கீழுள்ள இளைஞர்கள் தமிழ் நாட்டைப் பற்றிய ஒரு தவறான புரிதலை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்!
உண்மையில் நான் பலமுறை கூறுவது போன்று, தமிழ்நாட்டின் வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் ஒரு அபரிதமான வளர்ச்சி. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வளர்ச்சி பரவலாக்கப்பட்ட வளர்ச்சி. இதுதான் மற்ற மாநிலங்களை விட சிறப்பான ஒன்று.
ஒரு சிறு புள்ளி விபரம்
தமிழ்நாட்டின் SGDP (No 2)
1970 - 2,371 Cr.
1980 - 8,081 Cr.
2000 - 1,46,796 Cr.
2020 - 20,54,000 Cr.
மராட்டியம் SGDP (No 1)
1970 - 4,892 Cr.
1980 - 16,631 Cr.
2000 - 2,38,672 Cr.
2020 - 28,78,000 Cr.
Data
Suresh Sambandam

மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு ரூ.517.82 கோடிகள் !

  webdunia:  :நம் நாட்டின் பிரதமருக்கு நாட்டை நிர்வகிக்கும் அதிகாரங்களுடன் பல்வேறு நாடுகளுடன்நட்புறவு கொள்ளவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. எனவே பிரதமர் மோடி கடந்து ஐந்து ஆண்டுகளில் வெளிநாடு பயணங்களுக்காக செலவிடப்படுள்ளது தொகை ரூ.517 என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 58 நாடுகளுக்கு அவர் பயணம் செய்ததாகவும் இதற்காக ரூ.517.82 கோடிகள் செலவாகியுள்ளதாக அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

அதிமுகவுடன் சசிகலா-டி.டி.வி இணைப்பு முயற்சி: பாஜக மும்முரம் .. கட்சித் தலைமை முடிவு அடிப்படையில் இணைப்பு?

tamil.indianexpress.com : மே 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் முயற்சியாக, வி.கே.சசிகலா தலைமையிலான அணியை அதிமுக கட்சியோடு இணைப்பதற்கான செயல்பாடுகளை பாஜக மேற்கொண்டுவருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு பொதுச் செயலாளர் டி.டிவி தினகரன் டெல்லிக்கு பயணம் செய்தார். அங்கு, பாஜகவின் உயர் தலைவர்களை தினகரன் சந்தித்ததாக கூறப்படுகிறது.

இரண்டு முறை ஆட்சியில் இருந்த அதிமுக, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக என்ற கடுமையான சவாலை எதிர்கொள்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.  ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுகவில் பிளவை ஏற்படுத்தியதில் பாஜக முக்கிய பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது. ஜெயலலிதாவின் உயிர்த்தோழியாக  இருந்த சசிகலா ஓரங்கக்கட்டப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

6 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை

tamil.indianexpress.com : நேபாளம், பூட்டான், மொரீஷியஸ் உள்ளிட்ட பதினாறு நாடுகளிலுள்ள இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத நுழைவு வழங்கப்படலாம் எனக் கடந்த செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஓர் கேள்விக்கு, 43 நாடுகள் visa-on-arrival வசதியையும் 36 நாடுகள் e-visa வசதியையும் இந்தியச் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுகின்றன என எழுத்து வடிவில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் V முரளிதரன் பதிலளித்தார்.  மேலும், “இந்தியச் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத நுழைவை 16 நாடுகள் வழங்குகின்றன” என்றும் முரளிதரன் குறிப்பிட்டார்.

அமைச்சர் வழங்கிய தகவல்களின்படி பார்படாஸ் (Barbados), பூட்டான், டாமினிகா (Dominica), கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங் SAR, மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொன்செராட், நேபாளம், நியு தீவு, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல், செர்பியா மற்றும் டிரினிடாட் (Trinidad) மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகள் இந்தியச் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இலவச விசா நுழைவை வழங்குகின்றன.

மன்னார் இலங்கையில் பாண்டியர் கால நாணயங்கள கண்டெடுப்பு

உப தவிசாளர் புவனம் தகவல்
BBC  :பாண்டியர் கால காசு என நம்பப்படும் நாணயக் குற்றிகள், இலங்கையின் வடக்கு மாகாணம் - மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் உள்ள அல்பேர்ட் என்பவரின் காணியில் வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, நிலத்தைத் தோண்டியபோது கடந்த வெள்ளிக்கிழமை இந்த நாயணக்குற்றிகள் கிடைத்துள்ளன. 

இந்த நாணயங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், 1904 நாணயக் குற்றிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாகவும் மன்னார் - நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் பி. புவனம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.   இதையடுத்து, காணி உரிமையாளர் கொடுத்த தகவலின்பேரில் அங்கு சென்ற நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளர், அந்த நாணயங்களை முருங்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேரணி

tamil.samayam.com :வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேரணி!நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாக்களுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியின் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முன்னதாக, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ராஜ்யசபா விதி 256இன் கீழ் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். அதன் பேரில் நடவடிக்கை எடுத்த மாநிலங்களவை தலைவர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்தார்.

தங்கம் ஏன் கடத்தப்படுகிறது ? குருவி’கள் சிக்கினாலும் ‘பருந்து’கள் சிக்குவதில்லை!

எஸ்.மகேஷ் - ந.பொன்குமரகுருபரன் - ய.ஆனந்தகுமார் : ராகேஷ் பெ விகடன் :
தடதடக்கும் தங்கக் கடத்தல்..->தடதடக்கும் தங்கக் கடத்தல்...`நாட்டிலேயே ‘கடத்தல் தங்கம்’ அதிகம் பிடிபடும் முதல் ஐந்து விமான நிலையங்களில் ஒன்று’ என்கிற ‘பெருமை’ பெற்றிருக்கிறது சென்னை சர்வதேச விமான நிலையம். பலகட்ட பரிசோதனைகளைத் தாண்டியும் கள்ளச்சந்தையில் பளபளக்கிறது கடத்தல் தங்கம். சுங்கத்துறையின் வலையில் சிக்குவது சில ‘குருவி’கள் மட்டுமே. தொடர்பு எல்லைக்கு அப்பால் வானம் தாண்டிப் பறக்கின்றன கடத்தல் ‘பருந்து’கள். ஏன் நடக்கிறது கடத்தல், எப்படி நடக்கிறது, யார் இந்தக் குருவிகள்? விரிவாகப் பார்ப்போம்!   
ஏன் கடத்தப்படுகிறது தங்கம்?

சமீபத்தில், மத்திய நிதியமைச்சகம் சார்பில் மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ‘134 கோடி ரூபாய் மதிப்புள்ள 375 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் இந்த ஆண்டு மட்டும் பிடிபட்டிருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாதாரண விஷயமல்ல இது. ஆம், தங்கத்துக்கும் நம் கலாசாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்காசிய நாடுகளின் மொத்தத் தங்கத்தின் இருப்பைவிட, இந்தியர்களிடம் இருக்கும் தங்கத்தின் இருப்பு பல மடங்கு அதிகம். இந்தியர்களிடம் மட்டும் சுமார் 26,000 டன் தங்கம் இருப்பதாகக் கூறுகிறது கனடாவின் ‘இம்பாக்ட்’ ஆய்வு அமைப்பு.

ஆன்லைன் தேர்வுகள்: வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவித்த மாணவர்கள்


tamil.indianexpress.com : பொறியியல் மற்றும் கலை அறிவியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.  கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளை, இன்று முதல் வரும் 29ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.

சென்னை பல்கலைக்கழகம் இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் திறந்த புத்தக தேர்வு (Open Book Examination) முறையில் நடைபெற்றுவருகிறது. இருப்பினும், அதிகப்படியான   மாணவர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். பல மாணவர்களால்  வலைப்பக்கத்தில் உட்புகவே (Log in) முடிய வில்லை. ஸ்கேன் செய்த விடைத்தாளை பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்றும் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர்  தெரிவித்தனர்.

மு.க.அழகிரி திமுக உறுப்பினர் ஆனார்! ஆன்லைனில் உறுப்பினர் அட்டை வாங்கிய விசுவாசி

dmk online membership, dmk, mk alagiri get dmk membership card, திமுக, ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை, முக அழகிரி, முக அழகிரிக்கு திமுக உறுப்பினர் அட்டை, mk alagiri supporter applied for alagiri tamil.indianexpress.com/ :திமுகவில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிற நிலையில், திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கிவைக்்கப்பட்டுள்ள மு.க.அழகிரி சார்பில், விசுவாசி ஒருவர் விண்ணப்பித்து திமுக உறுப்பினர் அட்டை வாங்கியுள்ளார்.திமுகவில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிற நிலையில், திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கிவைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி சார்பில், அவருடைய விசுவாசி ஒருவர் விண்ணப்பித்து திமுக உறுப்பினர் அட்டை வாங்கியுள்ளார்.

தமிழகத்தில் 2021-இல் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியில் பொறுப்புகளை நியமிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக முதன்முறையாக ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை நடத்துவதாக அறிவித்தது. அதன்படி, திமுகவில் ஆண்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மராட்டிய மாநில 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து: பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

 மராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து: பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு  thinathnathi :மராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மும்பை,மராட்டிய மாநிலம் பிவாண்டியில் நேற்று முன்தினம் அதிகாலை மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கட்டிடம் மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த கோர விபத்தில் குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் . இதனைத்தொடர்ந்து நேற்று காலை வரையில் 21 சடலங்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.இந்த நிலையில், 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 33 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அவுஸ்திரேலியக் கடற்கரையில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள்.. உயிருக்குப் போராடும்..

thinakkural : அவுஸ்திரேலியக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நூற்றுக்கணக்கான திமிங்கலங்களில் இதுவரையில் 90 திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஏனையவை உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மேனியா(Tasmania)அருகிலுள்ள பெரிய மணல் திட்டில் ஏராளமான பைலட் திமிங்கலங்கள் சிக்கியுள்ளதாகவும் இதே போல் மேலும் 3 இடங்களில் 270க்கும் அதிகமான திமிங்கலங்கள் சிக்கி உயிருக்குப் போராடி வருவதாக அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பொதுமக்களைச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள அவுஸ்திரேலிய அரசு குறித்த திமிங்கலங்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் இல்லை: நிறைவேற்றப்பட்ட ஏழு முக்கிய மசோதாக்கள்!

மின்னம்பலம்  :எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் மாநிலங்களவையில் நேற்று கல்வி, பொருட்கள், சுகாதாரம், வங்கி, நிறுவனம், தடயவியல் மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பான ஏழு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

வேளாண் மசோதா மீதான குரல் வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட எட்டு எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் நீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால், கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அவையைப் புறக்கணிப்பதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் ஏழு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு.   

ஐஐடி மசோதா   ஐஐடி மசோதாவை நேற்று முன்தினம் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா புதிதாக நிறுவப்பட்ட ஐந்து இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அறிவிக்கிறது. பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஐந்து ஐஐடிக்கள் சூரத், போபால், பாகல்பூர், அகர்த்தலா மற்றும் ரைச்சூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே ...

Kalidasan Swaminathan : · 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள் 1.தமிழர்கள்
2.சீனர்கள்.
3.ஆரியர்கள்
4.அரபியர்கள்
5.ரோமர்கள்.
6.கிரேக்கர்கள்.
கிரேக்கர்கள் தங்களை கிரேக்கர்கள் அழைத்துக் கொண்டதோடு மற்றவர்களை பிசாசுகள் என அழைத்தனர்.
ரோமர்கள் தங்களை ஆளப்பிறந்தவர்கள் எனவும் மற்றவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் எனக் கருதினர்.
அரபியர்கள் தங்களைப் பேசத்தெரிந்தவர்கள் எனவும் மற்ற மக்களை அஜமிகள் அதாவது ஊமையர்கள் எனவும் கூறினர்.  
ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களை மிலேச்சர்களாகவும் அதாவது கீழானவர்களாகவும் கருதினர்.

தலித் இயக்கங்கள் ஆர் ராசாவுக்கு ஒரு அளவு கோல் மராத்திய தலித் பெண் அதிகாரிக்கு வேறொரு அளவு கோல் ..ஏன்?

LR Jagadheesan : · தமிழ்நாட்டிலிருந்து மத்திய அமைச்சரான

ஆண்டிமுத்து ராஜா இந்திய டில்லி சுல்தானியத்தாலும் கட்சிகடந்து எல்லா ஹிந்திய அரசியல் கட்சிகள், நிறுவனங்களாலும் வகைதொகையின்றி வஞ்சகத்தோடு விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தபோது,  தமிழ்நாட்டு தலித்திய கட்சிகள்; அமைப்புகள்; அதிகாரிகள்; என்ஜிஓக்கள் மற்றும் அறிவுசீவிகளில் 99% பேர் ஆண்டிமுத்து ராஜாவுக்கு எதிராக அரசியல் மேடைகளிலும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் முழங்கிக்கொண்டிருந்தது மட்டுமல்ல, அமெரிக்காவில் வீட்டுப்பணிப்பெண்ணை கொத்தடிமையாய் வைத்திருந்ததாக குற்றம்சாட்டட்டு கைதான தேவ்யானி கோப்ரகடே என்கிற மராத்திய தலித் பெண் IFS அதிகாரிக்கு ஆதரவாக முழங்கோ முழங்கென்று முழங்கிக்கொண்டிருந்தார்கள் என்பது சமீபத்திய வரலாறு.  தமிழ்நாட்டு தலித்தியம் அடிப்படையில் ஒற்றை ஜாதி அடையாளமாக மட்டுமே கட்டமைக்கப்பட்ட அவலத்தைவிட பேரவலம் அது திராவிட வெறுப்பின்மீதும் திமுக மீதான அசூசையின் மீதுமே இன்றளவும் திட்டமிட்டவகையில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதனால் தான் திராவிடத்தின் மீது நம்பிக்கையும் திமுக மீது நேசமும் கொண்ட தலித்துகள் தலித்துகளே அல்ல என்று ஆனப்பெரிய தலித்தீய பேராசிரிய பெருந்தகைகள் தெளிவாக தீர்ப்பே எழுதுகிறார்கள்  எந்த கூச்சமோ குற்றவுணர்வோ இன்றி... 

மக்கள் பாதை இயக்கம்! கொம்பு சீவி விடப்பட்ட அரைவேக்காட்டுத்தனம்

Kathir RS : · மக்கள் பாதை இயக்கத்தினர் உண்ணாநிலைப் போராட்டம் குறித்த வீடியோ ஒன்றை பார்த்தேன். உதயநிதி அவர்களை நேரில் சென்று


சந்தித்தது இந்த போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெளிச்சம். 

ஆனால் அதை அவர்கள் பயன் படுத்திக் கொண்டார்களா என்றால், நிச்சயமாக இல்லை. உணர்ச்சிகரமாக இருவர் பேசினார்கள்..ஆனால் வெறும் உணர்ச்சிகள் தீர்வை தந்துவிடுமா?      நீட்டை நிறுத்திவிடுமா? அப்படிப்பட்ட சூழல் இந்நாட்டில் இருக்கிறதா?        உண்மையில் அவர்களின் உணர்வுகளை மதித்து பார்க்கச்சென்ற உதயநிதியை அவர்கள் சரியாக கையாளவில்லை அல்லது நடத்தவில்லை என்றே சொல்லுவேன் 

 "நீங்க ரெண்டு கட்சியும்தான் மத்திய மாத்தி வர்றீங்க.. 50 வருசமா ஆள்றீங்க ஏன் உங்களால நீட்டை நிறுத்த முடியல" என உண்ணாநிலையில் உள்ளவர் நா வரளப் பேசுகிறார்.  ஒரு பக்கம் அவரது நிலை குறித்து கவலை இருந்தாலும் மறுபுறம் அவரது பக்குவமற்ற பேச்சு பெருங்கவலை தருகிறது.

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

மக்களவையில் வெடித்த தயாநிதி.. பிரதமர் 8 மணிக்கு பேசும்போதெல்லாம்:

minnambalam: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கொரோனா தடுப்பு நடைமுறைகளுடன் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் உரையாற்றிய மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதி மாறன், கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

தயாநிதி மாறன் தனது பேச்சை தொடங்குகையில், ‘இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’ என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி, “நல்ல ஆலோசனையும், அறிவுரையும் கூறுபவர்கள் பக்கத்தில் இல்லாத மன்னன், கெடுதல் செய்ய யாரும் இல்லாவிட்டாலும் கூட தோற்றுப் போவான். அதுபோல, அமைச்சரவையில் இருப்பவர்கள் பிரதமர் தவறு செய்யும் போது அதை தைரியமாக சுட்டிக் காட்ட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

திமுக முன்னாள் எம் எல் ஏ மா. மீனாட்சிசுந்தரம் காலமானார் . கொரோனா ..

நக்கீரன் :கீழத்தஞ்சை திராவிட  முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும் -  வேதாரண்யம் தொகுதியின் சட்டமன்ற கழக முன்னாள் உறுப்பினரும் - கொண்ட கொள்கையில் உறுதிமிக்கவருமான, 'மா.மீ' என அன்புடன் அழைக்கப்படும் அண்ணன் மா.மீனாட்சிசுந்தரம் அவர்கள், கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இயற்கை எய்திய கொடுஞ்செய்தி, இன்று அதிகாலை நேரத்தில் இடிபோல என்னைத் தாக்கியது என இரங்கல் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.   அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும், கழகத்தின் முப்பெரும் விழாவில் மா.மீ. அவர்களுக்கு "பெரியார் விருது" வழங்கி ஒருவாரம் கூட நிறைவுறாத நிலையில், இயற்கையின் இந்த சதியை ஏற்க மனம் மறுக்கிறது.தனது 17-வது வயதில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை உறுப்பினராக இணைத்து கொண்ட மா.மீ. அவர்கள், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் அடியொற்றி, இறுதிவரை சுயமரியாதைக் கொள்கைக்காரராகவே வாழ்ந்து மறைந்துள்ளார்.


முதலமைச்சர் பழனிசாமி :வேளாண் மசோதா பற்றி தெரியாமல் பேசுகிறார் ஸ்டாலின்!

maalaimalar :வேளாண் மசோதா பற்றி தெரியாமல் பேசுகிறார் முக ஸ்டாலின் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேளாண் மசோதா பற்றி தெரியாமல் பேசுகிறார் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி
செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி
மதுரை: மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:< அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது. தமிழகத்தில்தான் அதிக அளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது.   தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை ஒட்டியே இந்த சட்டமும் உள்ளது.  நான் எப்போதுமே விவசாயி தான். வேளாண் மசோதா பற்றி தெரியாமல் பேசுகிறார் ஸ்டாலின். எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் வேளாண் சட்டத்தில் குறைகாண முடியாது என தெரிவித்துள்ளார்.

 

ஒருங்கிணைந்த இந்தியா என்றால் ... உன் மொழி அவனுக்கு தெரியாது, ஆனால் அவன் மொழியை நீ கற்க வேண்டும்.....

Sundar P : · ஒருங்கிணைந்த இந்தியா என்றால் என்ன..?... படித்த வட இந்தியர் யாரிட‌மாவ‌து இந்த கேள்விகளைக் கேட்டுப்பாருங்க‌ள் இப்ப‌டித்தான் ப‌தில் வ‌ரும் கேள்வி - வீரபாண்டிய கட்டபொம்மனை
தெரியுமா ?
-. அது யாரு ?
கேள்வி - பாரதியாரை தெரியுமா ?
பதில் - கேள்விப்பட்டதே இல்லையே
கேள்வி - வீர மங்கை வேலு நாச்சியார் தெரியுமா...?
பதில்: நோ
கேள்வி - திருவள்ளுவரைத் தெரியுமா..?
பதில் - நகி..நகி
கேள்வி - வாஞ்சிநாதன் கேள்விப்பட்டி
ருக்கிறாயா ?
பதில் - இல்லையே
கேள்வி - மருது பாண்டியர்களையாவது அறிவாயா..?
பதில் - நோ ப்ரோ
கேள்வி - முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனை தெரியுமா..?
பதில் - நஹி பைய்யா
கேள்வி - கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரமாவது ..?
பதில் - கிடையாது ஜி.

கனிமொழி MP : தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக்கவேண்டும்:

tamil.oneindia.com - Mathivanan Maran :  சென்னை: இலங்கையில் முதலீடு செய்யும் சீனாவுக்கு பதிலடி தர தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் அமைக்க வேண்டும் என்று லோக்சபாவில் திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார். 

 இது தொடர்பாக லோக்சபாவில் கனிமொழி பேசியதாவது: தூத்துக்குடி துறைமுகம், பல்வேறு சர்வதேச கப்பல் போக்குவரத்தின் ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது. இத்தகைய சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையமாக அமைக்க தேவையான வசதிகள் அங்கே இருக்கிறது. ஆகையால் சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையமாக உடனடியாக அமைக்க வேண்டும்.  தூத்துக்குடி துறைமுகமானது, சர்வதேச சரக்குக் கப்பல் போக்குவரத்துகளை அதிகமாக கொண்டுள்ளது. இந்த துறைமுகத்தில் சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் அமைப்பது இலங்கையில் முதலீடுகளை அதிகரித்து வரும் சீனாவுக்கு பதிலடியாக அமையும். தற்போது, இந்திய சரக்குப் பெட்டகங்களில் 60 சதவிகிதத்துக்கும் மேல் கொழும்பில் பரிவர்த்தனை செய்து வருகின்றன. 

பா.ஜ.கவின் வேளாண் சட்டத்திருத்த மசோதா ஆபத்தான பல... .. அவற்றில் சில

Ganesh Babu : · பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள இந்த வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை பாரதிய கிஸான் சங் போன்ற ஆர்.எஸ்.எஸ் விவசாய அமைப்புகள் எதிர்க்கின்றன. 'ஆர்.எஸ்.எஸ் விவசாய அமைப்புகள் எதிர்க்கின்றன' என்பது வெறும் செய்தித் தலைப்புதான். அவர்கள் எப்படி எதிர்க்கிறார்கள் என்பதை உற்றுநோக்கினால் நம்மைச் சுற்றி நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் பற்றிய தெளிவு கிடைக்கும்.
"இம்மசோதாக்களில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் இல்லை" என்பதைத்தான் பாரதிய கிஸான் சங் அமைப்பு தங்களின் எதிர்ப்புக்கான அடிப்படை காரணமாகச் சொல்கிறார்கள்.
அவர்களின் இந்த எதிர்ப்பை சந்தேகப்பட அவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்கிற ஒரு காரணமே நமக்கு போதும். ஆனால் "நல்ல விசயத்தை யார் பேசினாலும் ஆதரிக்கவேண்டும்" என்று நம் நடுநிலையாளர்கள் அட்வைஸ் செய்வார்கள் இல்லையா?
அதற்குதான் இந்த விளக்கத்தை எழுதுகிறேன்..
விவசாயிகள் இந்த வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை எதிர்ப்பதற்கான பல காரணங்களுள் ஒன்றுதான் 'இது குறைந்தபட்ச ஆதார விலைக்கு எதிரானது' என்பது. விவசாயிகளை அச்சுறுத்தும் இதைவிட ஆபத்தான பல அம்சங்கள் இதில் உள்ளன. அவற்றில் சில:
1. மாநிலப் பட்டியலில் உள்ள வேளாண்மையில் மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.
2. இதுவரை அத்தியாவசிய சட்டத்தில் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட பொருட்களை விவசாயிகளைத் தவிர யாரும் இருப்பு வைக்கமுடியாது. ஆனால் புதிய சட்டத்திருத்தத்தின்படி பணம் வைத்திருக்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்தப் பொருளை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைக்கமுடியும்.

:அரியலூர் ..இந்தி தெரியாதா? கடன் கொடுக்க முடியாது" - வாடிக்கையாளரை திருப்பி அனுப்பிய IOB வங்கி மேலாளர்,

BBC :அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் இயங்கி வரும் தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கியின் கிளை உள்ளது. இந்த

வங்கியில், இதே மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளராக இருக்கிறார்.இவர் தனக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக வங்கிக் கடன் உதவி கோரி விண்ணப்பித்து இருக்கிறார். இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்கிக் கடன் தொடர்பாக மேலாளரைச் சந்திக்க கட்டட பொறியாளருடன் சென்றுள்ளார். அப்போது அந்த கிளை மேலாளர், "உங்களுக்கு இந்தி தெரியுமா? நான் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவன், மொழி பிரச்சனை இருப்பதால் என்னால் உங்களுக்கு உதவ முடியாது" என்று சொல்லி திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக தென் மாநிலங்களில் இந்தி மொழி திணிப்பதாகக் கூறி நாடு முழுவதும் சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன.