சனி, 8 செப்டம்பர், 2018

பாசிச பா.ஜ.க.வுக்கு எதிரான கோஷம்! -சென்னையில் நந்தினி குடும்பத்தினர் கைது!

nannசி.என்.ராமகிருஷ்ணன்- நக்கீரன்  : ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!’ இந்த கிராமத்து சொலவடை,  தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையின் சமீபத்திய செயல்பாட்டுக்கு மிகவும் பொருந்திப் போகிறது. விமான பயணத்தின்போது,  பா.ஜ.க.வுக்கு எதிரான சோபியாவின் முழக்கத்தை, ஒட்டுமொத்த இந்தியாவின் குரலாக்கிவிட்டார். இதோ இன்னொரு பெண் கிளம்பியிருக்கிறார். அவர், வேறு யாருமல்ல! மதுவுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்திவரும் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினிதான்!
‘சோபியா விமானத்தில்தானே கோஷம் போட்டார். நான் பா.ஜ.க. தலைமை அலுவலகத்திலேயே கோஷம் போடுகிறேன்’  என்னும் உந்துதலோடு, தன்னுடைய தந்தை ஆனந்தன் மற்றும் சகோதரி நிரஞ்சனா ஆகியோருடன் கமலாலயம் நோக்கிச் சென்றார். அப்போது,  ‘சர்வாதிகார BJP ஒழிக!’ என்றும், ‘பாசிச BJP ஒழிக!’ என்றும்,  ‘டெல்லியில் மோடி வீட்டின் முன்பு போராடியதற்காக கொலை மிரட்டல் விடுத்து மிக இழிவான தனிமனித தாக்குதலில் ஈடுபடும் பார‘தீய’ ஜனதா கட்சியைக் கண்டித்துப் போராட்டம்’ என்றும் இவர்களின் கையில் பதாகைகள் இருந்தன. இவர்களை பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்குச் செல்லவிடாமல், வழியிலேயே தி.நகர் போலீசார் கைது செய்தனர்.

பதட்டத்தில் குட்கா ஜார்ஜ் சொல்வது உண்மையா?' - விவரிக்கும் ஐபிஎஸ்அதிகாரிகள்

குட்கா விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜார்ஜ் vikatan : எஸ்.மகேஷ் : செங்குன்றத்தில் செயல்பட்ட குட்கா குடோனில், அப்போதைய கமிஷனரின் உத்தரவின்பேரில் சோதனை நடத்தியபோது, கிரைண்டர் மட்டும்தான் இருந்தது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குட்கா விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள சிபிஐ, தமிழகம் முழுவதும் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில்,  முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்தார். அதில், குட்கா ஊழல் நடந்த சமயத்தில் நான், கமிஷனராகக்கூட இல்லை என்று தெரிவித்தார். அதே நேரத்தில், குட்கா ஊழல் நடந்தது உண்மை என்று தெரிவித்த அவர், சில போலீஸ் அதிகாரிகளைக் குறிப்பிட்டுள்ளார். ஜார்ஜ் தெரிவித்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வீழ்ச்சி

தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வீழ்ச்சி
மாலைமலர் :கர்நாடகாவில் பருவமழை அதிகரிப்பால், தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
 இந்தியாவின் தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் இந்த ஆண்டு அதிக அளவில் தென்மேற்கு பருவமழை பெய்தது. இதில் கேரளாவில் சில இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் அதிக மழை பெய்ததால் இந்த ஆண்டு அரிசி உற்பத்தி அதிகரித்து இருக்கிறது.
மேலும் தென்மேற்கு பருவமழையால் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, தமிழகத்துக்கு தேவையான நீர் வந்தடைந்தது. இதனால் தமிழகத்திலும் நெல் அறுவடை அதிகரித்தது. இந்த நிலையில் கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அரிசி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மிரட்டல்: ‘புல்லட்’ நாகராஜனைப் பிடிக்க தனிப்படை!

மிரட்டல்: ‘புல்லட்’ நாகராஜனைப் பிடிக்க தனிப்படை! மின்னம்பலம் : மதுரை மத்திய சிறை பெண் எஸ்பிக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி 'புல்லட்' நாகராஜனைப் பிடிக்க தனிப்படை போலீசார் தேனிக்கு விரைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் 'புல்லட்' நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரது சகோதரர், 2006ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிக்பாஸ் 2 தமிழ் செட்டில், ஏசி மெக்கானிக் மரணம் ! சந்தேகப்பட முகாந்திரம் ?

 பிக் பாஸ்: ஊழியர் மரணம்!மின்னம்பலம் : கமல் தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அரங்கில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2ஆவது சீஸனுக்கான படப்பிடிப்புகள் சென்னையை அடுத்த பூந்தமல்லி செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. பலர் இதில் பணியாற்றிவரும் நிலையில் அரியலூர் மாவட்ட மாத்தூரைச் சேர்ந்த குணசேகரன் எனும் நபர் இங்கு ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு இவர் தங்கியிருந்த அறையின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவல்துறை சார்பில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

கலைஞரை மிரட்டி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்- முக அழகிரி புதிய தகவல்

கலைஞரை மிரட்டி என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள்- முக அழகிரி புதிய தகவல் மாலைமலர்: தி.மு.க.வில் தான் வளர்ந்து விட கூடாது என்பதற்காக தந்தையிடம் பேசி மிரட்டும் தொனியில் ஈடுபட்டு பலரும் சேர்ந்து தன்னை நீக்கி விட்டதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை: ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க. அழகிரி அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- 2014-ம் ஆண்டு என்னை கட்சியில் இருந்து நீக்கியது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் எந்த தப்பும் பண்ணவில்லையே என்று வருந்தினேன். தொண்டர்களுக்காக பாடுபட்டேன். சில குறைகளை கூறினேன். சில ஆதாரங்களை எடுத்துக் கொண்டு காட்டினேன். அதனால் கலைஞருக்கு என்னை நீக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. பொதுச்செயலாளருக்கு கூட அந்த எண்ணம் கிடையாது.
என்னை நீக்கியதில் பல சதிகள் இருக்கிறது. நான் வளர்ந்து விட போகிறேனோ என்ற எண்ணம் சிலருக்கு இருந்தது. ஜெயலலிதா இருக்கும் போதே நான் எதிர்த்து பல வெற்றிகளை பெற்றவன். என் மீதும், மனைவி, மகன் மீதும் பல வழக்குகளை தொடுத்தனர்.

செபஸ்டியன் ஜார்ஜின் ஆணவம் குறித்து ஜனவரி 2013ல் எழுதிய கட்டுரை Savukku ·

george1Shankar.A :அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும்.  அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும் என்கிறார் அய்யன் வள்ளுவர்.
“ஜார்ஜ்.  இவர் ஐஐடியில் படித்தவர்.  பொதுவாகவே ஐஐடியில் படித்தவர்கள் மற்றவர்களை எருமை மாடுகளாகவே பார்ப்பார்கள். அதுவும் ஐஐடி முடித்து விட்டு ஐபிஎஸ் ஆகி விட்டால் மற்றவர்களை பன்றிகளைப் போலவே பார்ப்பார்கள்.   ஐஐடியில் படித்து ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, அமெரிக்காவில் உள்ள மாசச்சூசெட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் படித்தால் … … மற்றவர்களை புழுக்களைப் போலத்தான் பார்ப்பார்கள்.  ஜார்ஜ் அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டியில் எம்.டெக் படித்தவர். இதையும் படித்து விட்டு, எம்.பி.ஏ மற்றும் எம்.பில் படித்தவர். கேட்க வேண்டுமா…”
இது பிம்ப் ஃபிக்ஷன் என்ற கட்டுரையில் சவுக்கு ஜார்ஜைப் பற்றி எழுதியிருந்தது.   ஜார்ஜின் அணுகுமுறை குறித்து சவுக்கில், அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற கட்டுரையிலும் விரிவாக எழுதப்பட்டிருந்தது.
கடந்த 9ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் ஆறுமுகசாமி ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

திராவிட சினிமாவை உருவாக்கிய வித்தகர்-2! கலைஞர்!

சிறப்புக் கட்டுரை: திராவிட சினிமாவை உருவாக்கிய வித்தகர்-2!மின்னம்பலம் ::கலைஞரின்  சினிமா வரலாறு குறித்து முந்தையக் கட்டுரையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
குண்டலகேசி காப்பியத்தில் இருந்து எடுத்தாண்டு அவர் இதே பெயரில் எழுதிய நாடகத்தை அடிப்படையாக கொண்டு இதன் திரைக்கதை அமைந்ததது. தமிழ் திரைப்பட உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய கடைசி படமாக மந்திரி குமாரி அமைந்தது. ஹாலிவுட்டுக்கு சென்று பணியாற்றிய பிறகு அவர் திரும்பி வந்து, மாடர்ன் தியேட்டர்சுக்காக பாரதிதாசன் எழுதிய பொன்முடியை இயக்கினார். அதன் பிறகு மந்திரி குமாரி அமைந்தது. மந்திரி குமாரி படம் டங்கன் மற்றும் டி.ஆர்.சுந்தரம் இணைந்து இயக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கருணாநிதி பரிந்துரையின் அடிப்படையில் எம்.ஜி.ஆர் இந்தப் படத்தின் நாயகனாக நடித்தார். அப்போது கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் நல்ல நண்பர்களாக ஆகியிருந்தனர். மூன்று படங்களில் இணைந்து பணியாற்றினர்.

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை தமிழக அமைச்சரவை நாளை அவசர கூட்டம்

தினதந்தி :தமிழக அமைச்சரவை நாளை அவசரமாக கூடுகிறது.
இந்த கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரைப்பது பற்றி முடிவு எடுக்கப்படுகிறது. சென்னை, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.< 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது.
ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு, 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்தினார்கள்.

அமைச்சர் வேலுமணியின் ஒப்பந்த ஊழல் Times now ஊடகம் விடியோ லீக்ஸ்


மின்னம்பலம் :அமைச்சர் வேலுமணி தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கியதற்கான ஆதாரங்களை டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்டுள்ளது.
அமைச்சர் வேலுமணி மீது ஊழல் சர்ச்சை!தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடைபெற்றுவருவதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல், சுகாதாரத் துறை சார்ந்த நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் ஊழல் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த ஊழல் சர்ச்சையில் அமைச்சர் வேலுமணி சிக்கியுள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக வேலுமணி உள்ளார்.
சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் உள்ளாட்சித் துறை தொடர்பான ஒப்பந்தங்களை வழங்கியுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை டைம்ஸ் நவ் ஊடகம் நேற்று (செப்டம்பர் 7) வெளியிட்டுள்ளது.

மதுரையில் அழகிரி கலைஞருக்கு வெண்கல சிலை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் ...

மாலைமலர் :மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் வெண்கல
சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு மு.க அழகிரி கடிதம் எழுதியுள்ளார். மதுரை: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். ஸ்டாலினுக்கு எதிராக அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்த மு.க அழகிரி, கடந்த 5-ம் தேதி சென்னையில் கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி ஒன்று நடத்தினார். இந்நிலையில், அடுத்தகட்டமாக மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அனுமதி கேட்டு அவர் மாவட்ட கலெக்டருக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார்.  'நான் 35 ஆண்டுகளாக வாழுகின்ற மதுரை மாநகரில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் தலைவர் கலைஞர் அவர்களின் வெண்கல சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டுகிறேன்” என அழகிரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹர்திக் படேல் 20 கிலோ எடை குறைந்த சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில்

ஹர்திக் படேல்ஹர்திக் படேல்vikatan.com/-sathya-gopalan" : படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடுகாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட ஹர்திக் படேலின் உடல்நிலை திடீரென மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தாருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதியின் (Patidar Anamat Andolan Samiti) தலைவர் ஹர்திக் படேல் கடந்த 2015-ம் ஆண்டு மிகப் பெரிய போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தின் இறுதியில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி அதே கோரிக்கையை வலியுறுத்தி அகமதாபாத்தில் உள்ள தன் பண்ணைவீட்டில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் ஹர்திக் படேல் . இன்று இவரின் போராட்டம் 15-வது நாளை எட்டியுள்ளது. கடந்த 15 நாள்களாக தண்ணீர் கூட அருந்தாமல் ஹர்திக் போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் போராட்ட நாள்களில் பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் வந்து ஹர்திக்கின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று திடீரென ஹர்திக்கின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழிசை வழக்கினை வாபஸ் பெற்றால், நாங்களும் வாபஸ் பெறுவோம்" - ஷோபியா வழக்கறிஞர்

``தமிழிசை வழக்கினை வாபஸ் பெற்றால், நாங்களும் வாபஸ் பெறுவோம்
தமிழிசை.vikatan.com இ.கார்த்திகேயன் : "பி.ஜே.பி. மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மீது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? இதற்காகவே நாங்கள் நீதிமன்றம் செல்வோம்'' என மக்கள் கண்காணிப்பகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் தெரிவித்துள்ளார்.
விமானத்தில், `பாசிச பி.ஜே.பி. ஒழிக' என கோஷம் எழுப்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஷோபியாவின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார், ஹென்றி டிபேன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஷோபியாவின் வழக்கறிஞர் என்கிற முறையில் சில விளக்கங்களை நான் சொல்ல விரும்புகிறேன். கடந்த 3-ம் தேதி காலை, விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து வெவ்வேறு விதமான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. கோஷம் போட்டதாகவும், கையை உயர்த்தி கோஷம் போட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதை மறுக்கிறோம். தமிழிசை 3-ம் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஷோபியா 8-ம் இருக்கையில் அமர்ந்திருந்தார். விமானம் தரை இறங்கிய பின், 3-ம் இருக்கையிலிருந்து 8-ம் இருக்கையைத் தமிழிசை கடந்துசெல்லும் போதுதான் ஷோபியா, அந்த வாசகத்தைச் சொல்லியிருக்கிறார்.

ஜோர்ஜ் :நான் கிறிஸ்தவன் என்பதால் பழி வாங்கப்படுகிறேன் ! திருவனந்தபுரம் செபஸ்டியன் ஜோர்ஜூ சேட்டன்

Sivakumar Nateshan : தன் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக கடவுளை துணைக்கு
அழைத்து வரும் காவிகளுக்கும் உனக்கும் ஏதும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லையே மிஸ்டர் ஜார்ஜ். >
நீங்கள் குற்றமற்றவர் என்றால் ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே உண்மையை சொல்லியிருக்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு இன்று சிக்கிக்கொண்ட பிறகு நான் கிறிஸ்துவன் பொய் சொல்லமாட்டேன் என்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம்.
ஜல்லிகட்டு...  செபஸ்டியன் ஜோர்ஜ் வன்முறை
ஜெயலலிதா ஆணைக்கினங்க கலைஞரை நள்ளிரவில் கைது செய்த போது நீங்கள் கிறிஸ்தவர் என்பது மறந்து போனதா..? அந்த வழக்கில் உங்கள் நேர்மை நிலைநாட்டிய நீதி என்ன..? ஜெயலலிதா என்ன இறை தூதரா.? அவர் சொன்னால் அப்பீல் இன்றி செய்ய..?
ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலவரமாக மாற்றிய போது தெரியவில்லையா நீங்கள் கிறிஸ்தவர் என்று..? 
உங்கள் தவறுகளை கிறிஸ்து மன்னித்து விட்டாரா..? அது எப்படி பரிகாரம் இல்லாமல் இறைவன் மன்னிப்பார்... உன் தரப்பு நியாயத்தைக் கேட்டால் ராஜேந்திரனுக்கும் சேர்த்து வக்காலத்து வாங்கி உனக்கு கீழ் நிலை அதிகாரிகளை போட்டுக்கொடுக்கிறாய். அப்படியே உன்னை இயக்கியவர்களையும் காட்டிக்கொடுத்து விட்டு சி.பி.ஐ. தரப்பு சாட்சியாக மாறி விடு. தண்டனையாவது குறையட்டும்.
உங்களை போன்ற இழி பிறவிகளால் தான் மதமே மாசு படுகிறது. மனிதம் தூசு படிந்து போனது. திருந்துங்கடா..! மதத்தின் பின்னால் ஒளிந்து கொண்டால் யோக்கியனாகி விட முடியாது ஜார்ஜ்..!!

குட்கா ஊழல் போலீஸ் ஜோர்ஜ் .. சட்டவிரோதமாக கலைஞரை கைது செய்து நேரடியாக ஜெயாவுக்கு ஒளிபரப்பிய கமிஷன் அடிமை

இந்த ஜார்ஜ் .. கலைஞர் அலறும் சத்தத்தை நேரடியாக ஜெயாவும் சசியும்
கேட்டு ரசிக்க  ஒலிபரப்பியதை_ மறக்கமுடியுமா???
Kalidasan Swaminathan :  என்னை குறிவைத்து தாக்குகின்றனர்...
Image may contain: 2 people, textமுன்னாள்  காவல்துறை ஆணையர் ஜோர்ஜ் . 30.6.2001-ம் தேதியன்று அதிகாலையில் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மேம்பாலஊழல் என்னும் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டார்
நடந்த நிகழ்வுகளை #ஜூனியர்விகடனும்_நக்கீரனும் ஸ்பெஷல் காவரேஜ் செய்து கட்டுரைகளை வெளியிட்டிருந்தன.
ஜூன் 30... பொழுது விடிந்து சூரியன் உதிக்கும் நேரத்தில், கீழ்ப்பாக்கம்
டெய்​லர்ஸ் ரோடு!
நீதிபதிகள் குவார்ட்டர்ஸில் பிரின்சிபல் செஷன்ஸ் ஜட்ஜ் அசோக்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் படை சூழ... தள்ளாடியபடி வெளியில் வந்த
கலைஞ​ரிடம் சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. அருகில் நின்று இருந்த மகள் கனிமொழி வாய்விட்டுக் கதற, அவரை சமாதானப்படுத்திவிட்டு நம்மிடம் பேசினார் கலைஞர்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

மேகம் கருக்கையிலே ..புகழ், காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார் . 200 படங்களுக்கும் மேல் நடித்தவர்

m.dailyhunt.in : மேகம் கருக்கையிலே" ..புகழ், காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார் பழம் பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா,80 உடல் நலக்குறைவால் காலமானார்,
வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு மட்டுமல்லாது 3 தலைமுறை நடிகர்களோடு நடித்தவர் .சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டியில் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவதியுற்ற நிலையில் இன்று காலமானார்.

சோஃபியா : கொண்டாடத்தக்க சீற்றம் ! . எது எதிரியை அச்சுறுத்துகிறதோ அதனை கொண்டாடுவோம்!

வில்லவன் vinavu :சென்னையில் தன் குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பிய அபிராமி செய்திகளால் எல்லா ஊடகங்களும் மக்கள் மனங்களும் நிறைந்திருந்த வேளையில், மாணவி ஒருவர் ஒற்றை கோஷத்தின் மூலம் அவர்கள் கவனத்தை திருப்பியிருக்கிறார். அது வெறுமனே ஒற்றை வாசகமாக இருக்கலாம். மிகை ஆர்வம் காரணமாக வெளிப்பட்ட எதிர்வினையாக இருக்கலாம். ஆனால் சோஃபியா விமானத்தில் ஏறுகையில் எடுத்த ஒரு தீர்மானமும் அதனையடுத்து எடுத்த சிறு முயற்சியும் தமிழக அரசியல் சூழலில் மிக முக்கியமானவை. அது வெறும் ஒற்றை கோஷம் என்றால் பா.ஜ.க. இத்தனை பதற அவசியமில்லை.முதலில் சோஃபியாவின் விமான முழக்கத்துக்கு பா.ஜ.க. கூடாரத்தின் எதிர்வினைகளை கவனியுங்கள் (இந்துத்துவாவுக்கு தாலிகட்டினாலும் ஒரிஜினல் கள்ளக் கணவர்களாகவே வாழும் ”நடுநிலை” பார்ப்பனர்கள் உட்பட). விமான நிலைய வளாகத்தில் தாவித் தாவி குதிக்கிறார் தமிழிசை. அவரை தடுக்க அங்கிருந்த பெண் போலீஸ்காரர் ஒரு கபடியாட்டமே நடத்த வேண்டியிருந்தது. “சோஃபியா இடத்தில் என் மகளை வைத்து பார்க்கிறேன் ஆகவே அவரது எதிர்காலம் பாதிக்கப்படுமே என கவலையாக இருக்கிறது” என ரங்காராவ் பிட்டை போடுகிறார் தினமலர் வெங்கடேஷ். அவர் ஏன் மாணவி வளர்மதியை மகளாக நினைக்கவில்லை, சோஃபியாவை ஏன் மகளாக நினைக்க முடிகிறது என்பதில் இருக்கிறது சூட்சுமம்.

இடைத்தேர்தல்களில் திமுக தோற்கும்: அழகிரி

இடைத்தேர்தல்களில் திமுக தோற்கும்: அழகிரிமின்னம்பலம் :திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தோல்வியடையும் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் தன்னை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறார். திமுகவின் உண்மை தொண்டர்கள் தன்பக்கம் தான் உள்ளனர் என்று கூறியதோடு, அவர்களை ஒருங்கிணைத்து தனது தந்தை கலைஞரின் சமாதி நோக்கி பேரணி செல்லப்போவதாகவும் அறிவித்தார். அதன்படி, கடந்த 5ஆம் தேதி பேரணி சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, “பேரணியில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர். முடிந்தால் இவர்களைக் கட்சியில் இருந்து நீக்கிப்பார்க்கட்டும்” என்று கூறியிருந்தார்.

குட்கா ஜோர்ஜ் அப்பாவியாம் ? பேட்டி :நான் டி.ஜி.பி. ஆவதை தடுக்கவே குட்கா விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டது"


BBC :தானோ டி.கே. ராஜேந்திரனோ காவல்துறை தலைவராவதைத் தடுக்கவே குட்கா ஊழல் விவகாரத்தில் தங்களை சம்பந்தப்படுத்தி தகவல்கள் வெளியிடப்பட்டன என சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ். ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை ஜார்ஜின் வீட்டில் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா என்ற பாக்கிற்கு தடைவிதிக்கப்பட்ட 2013ஆம் ஆண்டில் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர் ஜார்ஜ். அந்த காலகட்டத்தில் சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தில் ஒரு குட்கா கிடங்கு ஒன்றில் மிகப் பெரிய சோதனை நடத்தப்பட்டது. இதற்கு பிறகு இந்த விவகாரத்தில் பெரிதாக ஏதும் நடக்கவில்லை.
சில ஆண்டுகளுக்குப் பிறகு வருமானவரித் துறை எம்டிஎம் குட்கா உற்பத்தியாளர் மாதவராவின் இருப்பிடங்களில் நடத்திய சோதனையில், அவரது நாட்குறிப்பு சிக்கியது. அதில் காவல் ஆணையர் ஜார்ஜ் பெயரும் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அமைச்சர் விஜயபாஸ்கர் மிரட்டல் : மொத்த அமைச்சர்களுமே கம்பி எண்ணுவீங்க! ... அலறும் மாண்புமிகுக்கள்..

குட்கா விஜெயபாச்க்கர் -குட்கா ஜோர்ஜ் -குட்கா ராஜேந்திரன்
tamil.asianetnews.com --sathish-k: ஓபிஎஸ் அவரை
சமாதனம் செய்ய முற்பட்ட
போது, அம்மா இருக்கும் போதே நடந்த 5000 கோடி ஊழல் விஷயம் எனக்கு நியாபகம் இருக்கிறது. என கிடுக்குப்பிடி போட்டிருக்கிறார் விஜயபாஸ்கர். தற்போது சிபிஐ விசாரணையில் அப்ரூவல் ஆகி இருக்கும் மாதவராவ் கொடுத்திருக்கும் வாக்கு மூலமும் இந்த வழக்கை மேலும் வலுவாக்கி இருக்கிறது. இதனை தொடந்து நேற்று விஜயபாஸ்கர், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடைபெற்றது.
இதனால விஜயபாஸ்கர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனும் சூழலும் தற்போது நிலவுகிறது.
இந்த வழக்கை இவ்வளவு தூரம் கொண்டு சென்று சிபிஐ வசம் ஒப்படைக்க முயற்சி எடுத்தது திமுக தான்.
தற்போது இந்த வழக்கு விசாரணையை உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதும் திமுக தான்.
2013ல் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்ட விரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில், சிபிஐ இடம் மாட்டி அப்ரூவலாக மாறி இருக்கிறார் மாதவராவ்.
இவரிடம் இருந்து ஏற்கனவே கைபற்ற பட்ட டைரியில் அவர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சென்னை காவல்துறையில் ஆணையர்களாக இருந்த ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்த விவரம் வெளியாகி இருந்தது.

திமுக மேடையில் உதயநிதியின் படம் ... அருவருப்பாக இருக்கிறது .. தொண்டனின் மனக்குமுறல் ... தவறு இனி நடக்காது உதயநிதி டுவீட்

tamilthehindu :திமுக கட்சிபேனரில் எப்படி உங்கள் படம் உள்ளது என்ற கேள்விக்கு சாதாரண ட்விட்டரை மதித்து இனி அப்படி நடக்காது என்று உதயநிதி பதில் அளித்துள்ளார். அதை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.
மு.க.ஸ்டாலினின் மகனும் திரைப்பட நடிகருமான உதயநிதி திமுக கட்சிக்கூட்டங்களில் பங்கேற்கிறார். ஆனால் கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பும் இல்லை. முரசொலி அறக்கட்டளையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் 1965-ல் கட்சியில் இணைந்தாலும் அவருக்கு பொறுப்புகள் பல ஆண்டுகளுக்கு பின்னரே வழங்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்கூட 19 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. திமுகவின் மூன்றாம் தலைமுறை கருணாநிதியின் வாரிசாக உதயநிதி முன்னணியில் நிற்கிறார். சினிமா நடிகராக உதயநிதி பிரபலமாகி உள்ளார். நவீன சோஷியல் மீடியா தளத்தில் உதயநிதி பிரபலாமாக உள்ளார். உதயநிதியை கட்சியில் வரவேற்றும் வரக்கூடாது என்றும் இருவித கருத்துகள் நிலவுகிறது.
சமீபத்தில் நடந்த ஒரு திமுக நிகழ்ச்சியில் பிளக்ஸ் பேனரில் கருணாநிதி ஸ்டாலின் படத்துடன் உதயநிதி படத்தையும் போட்டுள்ளதை மேற்கோள் காட்டி ஷாமுராய் என்பவர் பதிவிட்டிருந்தார்.

தூய்மை பணியாளர் நலனுக்காக ஒரு சதம் கூட மோடியின் நான்கு ஆண்டுகளில் கொடுக்கப்படவில்லை

சிறப்புக் கட்டுரை: ஒரு பைசா கூட வழங்காத மோடி அரசு!மின்னம்பலம் :தீரஜ் மிஸ்ரா
நரேந்திர மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக இதுவரையில் ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. அதுமட்டுமல்ல, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியிட்ட நிதியில் ஏறத்தாழப் பாதியை மோடி அரசு இன்னும் செலவிடவில்லை.
தி வயர் செய்தி தளம் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை மனு வாயிலாகக் கிடைத்த தகவல்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன. ஒன்றிய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2013-14ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் ரூ.55 கோடி வெளியிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக ஒரு பைசா கூட வெளியிடப்படவில்லை. சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘துப்புரவுத் தொழிலாளர்களுக்கான சுய வேலைவாய்ப்பு’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை சுயஸ் நிறுவனத்துக்கு முறைகேடாக கொடுக்க....

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் முறைகேடு!மின்னம்பலம் :நெமிலி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை, முறைகேடாக சூயஸ் நிறுவனத்துக்குக் கொடுக்கவிருப்பதை கைவிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் நேற்று (செப்டம்பர் 6) வெளியிட்ட அறிக்கையில், “செங்கல்பட்டு, நெமிலியில் நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்துக்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்ததாரர்களை முடிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட AECOM கன்சல்டன்ட் நிறுவனம், இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ள ஐந்து விண்ணப்பதாரர்களும் தகுதியற்றவர்கள் என்று கூறிவிட்டது.

கோபாலபுரத்திற்கு பிரணாப் முகர்ஜி வருகை ...


கலைஞர் குடும்பத்தினருக்கு பிரணாப் ஆறுதல்!மின்னம்பலம் :கோபாலபுரம்
இல்லத்துக்கு நேற்று மாலை சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கலைஞரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கடந்த மாதம் 7ஆம் தேதி காலமான நிலையில், அவரது உடலுக்குப் பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். கலைஞர் உடல் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த ஒரு மாதமாகப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நேற்று (செப்டம்பர் 6) மாலை கோபாலபுரத்திலுள்ள கலைஞரின் இல்லத்துக்குச் சென்றார். அவரை ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் ஆகியோர் வரவேற்றனர். அங்கு கலைஞரின் உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய அவர், ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலும் கூறினார். சந்திப்பின்போது தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் உடனிருந்தார்...

பாஜக எம் எல் ஏக்கு மகளிர் ஆணையம் அழைப்பாணை .. பெண்களை கடத்தி வருவேன்' என பேசியதால்

இளைஞர்களுக்காக பெண்களை கடத்துவதாக கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்தினத்தந்தி : மும்பை காட்கோபரில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், உங்கள் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வருவேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்காக தனது செல்போன் நம்பரை குறித்து வைத்து கொள்ளுங்கள் என்று கூறி நம்பரையும் கொடுத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித் தனர்.பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, ராம்கதம் எம்.எல்.ஏ. தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு எதிராக நேற்று 2-வது நாளாக மும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன.இந்தநிலையில், ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.இதேபோல சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு ராம் கதம் எம்.எல்.ஏ.வுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.

8 நாட்களாக அடையாளத்தை வெளியிடாமல் கூலியாக வேலை செய்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் .. கேரளா நிவாரண முகாமில் ..

tamilthehindu :ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்   –  படம்உதவி: ட்விட்டர்
8 நாட்களாக அடையாளத்தை வெளியே கூறாமல் கேரள நிவாரண முகாமிலும், லாரியில் பொருட்கள், ஏற்றும், இறக்கும் பணிகளில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வேலை செய்துள்ளார்.
9-வது நாள் ஐஏஎஸ் அதிகாரி என்ற விவரம் வெளியே தெரிந்ததும் எந்தவிதமான பரபரப்பின்றி தான் பணியாற்றும் இடத்துக்கே சென்றுவிட்டார். கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 8-ம் தேதிக்குப் பின் பெருமழை பெய்து மாநிலத்தின் பெரும்பகுதியை வெள்ளக்காடாக்கியது. 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின, 400-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்துக்கும், நிலச்சரிவுக்கும் பலியானார்கள்.

ஜெயலலிதாவால் நாசமாக்கப்பட்ட ஓமந்தூரார் வளாகம் .. புதிய தலைமை செயலக கட்டிடம் .

Mahalaxmi : திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய தலைமை செயலகம்
பற்றி என்ன தெரியும் ?
1. இந்தியாவிலேயே மிக பெரிய அரசு கட்டிடம் !!
2. தங்க சான்றிதல் பெற்ற கட்டிடம்.
3. திராவிட தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அடக்கிய கட்டிடம்.
4. தண்ணீர் மற்றும் மின்சார சேமிப்பை குறித்த திட்டம் அடங்கிய கட்டிடம்.
5. சக்கர வடிவிலான 36 isosceles த்ரியாங்க்லஸ் கொண்ட கட்டிடம்.
6. ஒரே சமயத்தில் 500 வாகனங்களை நிறுத்த முடியும்.
7. பூங்கா லைப்ரரி என உள்ளடக்கியது !!
8. ஆசியாவிலே மிக பெரிய சிறந்த பசுமை வீடு கட்டிடம்.
9. ஒரு சட்டமன்றம் இயங்க தேவையான மின்சாரத்தில் அதிக அளவு (20%) தானே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் படைத்த கட்டிடம்.
10. ஆசியாவில் இருந்து பல மாணவர்கள் இந்த கட்டிடம் பற்றி வந்து பார்த்து கற்று படித்தது வரலாறு !
11. சட்டமன்றத்தில் பகல் நேரங்களில் இயற்க்கை சூரிய ஒளி விளக்காக இயங்கும் வண்ணம் அமைக்க பெற்றது.
12. அணைத்து மின் உபகாரணங்களும் தேவை கேற்ப தானாகவே ஆன் ஆப் ஆகும் திறன் கொண்டது.
13. அணைத்து கட்டிடமும் ஓர் இணைப்பில் இணைக்கபட்டே உள்ளது !

இக்கட்டிடம் நடைமுறையில் இருந்திருந்தால் இது தமிழகத்தின் அடையாளமாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் மூக்கின் மேல் விரலையும் வைக்க செய்திருக்கும்

வியாழன், 6 செப்டம்பர், 2018

ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகாத நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை

கதிரவன் nakkheeran.in : ஆண்மை பரிசோதனைக்கு
nஆஜராகாத நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று முறை ஆஜராகாததால் கர்நாடக ராம்நகர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கர்நாடகத்தில் நித்தியானந்தா நடத்தி வரும் பிடதி ஆசிரமத்தில், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார் நித்தியானந்தா என்று ஆர்த்திராவ், லெனின், பரத்வாஜ் ஆகிய மூவரும் 2010ல் சென்னை காவல்துறையிடம் புகார் அளித்தனர்.  அந்தப்புகார் கர்நாடக மாநில காவல்துறைக்கு அனுப்பப்பட்டது.

சோபியாவின் செல்போன் முடக்கம்? அடுத்து பாஸ்போர்ட்? : நடப்பது என்ன?

webdunia :விமானத்தில் பாஜகவிற்கு எதிராக கோஷம் எழுப்பிய மாணவி சோபியாவின் செல்போன் சிம்கார்டு முடக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு விமானத்தில் சென்றபோது 'பாசிச பாஜக ஒழிக' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மாணவி ஷோபியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால், அவர் ஜாமீன் பெற்று விடுதலை ஆகியுள்ளார்.அதேபோல், தன் மகள் சோபியாவுக்கு தமிழிசை மற்றும் அவருடன் இருந்த பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், இதுவரை அந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், சோபியா தன் அசல் பாஸ்போர்ட்டுடன் வருகிற 7ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தூத்துக்குடி புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையம் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், சோபியாவின் சிம்கார்டு முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கி அவர் வெளிநாடு தப்பி செல்ல விடாமல் தடுக்கும் முயற்சியும் நடப்பதாக சோபியாவின் தந்தை பேட்டியளித்துள்ளார்.

வடமாநிலங்களில் முழு கடையடைப்பு எஸ் சி .. எஸ் டி சட்டத்திருத்தத்தை எதிர்த்து ..


மின்னம்பலம் :எஸ்சி, எஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாநிலங்களில் இன்று (செப்டம்பர் 6) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த மார்ச் 20ஆம் தேதி தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் லலித் மற்றும் கோயல் அடங்கிய அமர்வு. “சில நேரங்களில் நேர்மையாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்து, அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
இதனால், அப்பாவி ஊழியர்கள் குற்றவாளிகளாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். ஆனால், அந்த நோக்கங்களுக்காக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்பு சட்டம் கொண்டுவரப்படவில்லை. எனவே, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை இந்தச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்யப்படுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டது.

இந்தியாவில் பெண் விமானிகள் அதிகம்! உலக சாதனை ...

இந்தியாவில் பெண் விமானிகள் அதிகம்! மின்னம்பலம் : உலகிலேயே பெண் விமானிகள் அதிகமுள்ள நாடு இந்தியா என்றும், அவர்களின் எண்ணிக்கை சர்வதேசச் சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்றும், ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதில் பெண் விமானிகளின் பங்கு மிக அதிகமாக உள்ளது. உலகப் பெண் விமானிகளில் 12 சதவிதத்தினர் இந்தியாவில் தான் உள்ளனர். போயிங் நிறுவனக் கருத்துக்கணிப்பின்படி, அடுத்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 7 லட்சத்து 90 ஆயிரம் விமானிகள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தெலங்கானா! ஆட்சி கலைப்பு: தேர்தலுக்கு தயாராகும் தெலுங்கான ராஷ்ட்ரியா சமிதி .. ஆளுநரிடம் ..

ஆட்சி கலைப்பு: தேர்தலுக்கு தயாராகும் தெலங்கானா! மின்னம்பலம் : தெலுங்கானா அரசைக் கலைக்க அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், அதனை ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெலங்கானா புதிய மாநிலமாக உருவானது. மக்களவைத் தேர்தலுடன் தெலங்கானாவுக்கும் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது. மாநிலத்தின் முதல் முதல்வராக அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் பொறுப்பேற்றார்.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தலுடன் தெலங்கானா சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற இருந்தது. ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியமைக்க உகந்த சூழல் நிலவுவதால், முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முதல்வர் சந்திரசேகர ராவ் அரசு திட்டமிட்டது. இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற்றது.

ராஜீவ் கொலை .. ஏழு பேர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு... உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

tamilthehindu : ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை
செய்யும் விஷயத்தில் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, தமிழக அரசு இதுதொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரையை அனுப்பலாம் என  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறும்போது, ''ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரைக்கலாம்'' என்றார்.< அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், ஆளுநர் அந்தப் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கேட்க வாய்ப்புள்ளது.
என்ன நடந்தது?
கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

விருதுநகர் 60 கோடி ஊழல். 15 பேர் கொலை. SBI வங்கி மூலம் 169 விவசாயிகளிடம் பென்ஷன் மோசடி .. தமிழக ஊடகங்கள் இருட்டடிப்பு

Alwar Narayanan : 60 கோடி ஊழல். 15 பேர் கொலை. விருதுநகரில்.
பென்ஷன் வாங்கித்தருகிறேன் என்று சொல்லி சுமார் 169 விவசாயிகளிடமிருந்து ஏமாற்றி கையெழுத்து வாங்கிக்கொண்டு SBI வங்கிமூலம் 60 கோடி ருபாய் அளவு ஊழல் செய்திருக்கிறது ஒரு கும்பல்.
இது விருதுநகர் மற்றும் தேனீ மாவட்டத்தில். வங்கி கடன் நோட்டிஸ் அனுப்பியவுடன்தான் இது வெளியில் தெரியவந்திருக்கிறது.
காவல்துறை விசாரிக்கும் முன்பே 15 பேர் மர்மமான முறையில் மரணித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பாதிபேர் RMPT விருதுநகர் பருப்பு ஆலையில் பணியாற்றியவர்கள்.
இந்த செய்தி வெளிமாநிலங்களில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வந்துள்ளது. தமிழ்நாட்டில் இதைப்பற்றிய பேச்சு மூச்சு காணோம்.

ஓரின சேர்க்கை குற்றமல்ல....157 ஆண்டுகால சட்டத்தை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்


BBC :லிங்க வழிபாடு செய்யும் நாட்டில் ஒருபாலுறவு குற்றமா?'..
Kanimozi is the Only politician voicing in favor of LGBTQ community
சட்டப்பிரிவு 377 வியாழக்கிழமை முற்பகல். இந்திய உச்ச நீதிமன்ற வளாகம். இந்திய
தண்டனைச் சட்டப்பிரிவு 377 ஒருபாலுறவைக் குற்றமாக்குவதை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்குகிறது என்பதை அறியாத பலரும், "இன்று உச்ச நீதிமன்றத்தில் ஏதேனும் சிறப்பான நிகழ்வு உண்டா?" என்றபடியே கேள்வி எழுப்பினார்கள்.
தீர்ப்பை அறிந்துகொள்ள கூடியிருந்த LGBT எனப்படும் பாலின சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்தவர்களின் கூட்டத்தால் உச்சநீதிமன்ற வளாகமே நிரம்பியிருந்தது.
வழக்கத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் நீதிமன்றத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்த ஊடக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு மட்டுமல்லாது, கடந்து செல்பவர்களின் குழப்பம் கலந்த வியப்புக்கும் காரணமாக இருந்தன.

குட்கா ஊழல் வழக்கில் கைதான 5 பேருக்கும் நீதிமன்ற காவல் விதித்து சிபிஐ கோர்ட் உத்தரவு

குட்கா ஊழல் வழக்கில் கைதான 5 பேருக்கும் நீதிமன்ற காவல் விதித்து சிபிஐ கோர்ட் உத்தரவுமாலைமலர் :குட்கா ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
GutkhaScam #CBIRaid
குட்கா ஊழல் வழக்கில் கைதான 5 பேருக்கும் நீதிமன்ற காவல் விதித்து சிபிஐ கோர்ட் உத்தரவு
சென்னை: குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகிய நால்வரும் இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
 இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச ராவும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஜல்லிகட்டு போரட்டத்தில் மாணவர்களை தாக்கிய ஜார்ஜ் (மலையாளி) வீட்டில் விடிய விடிய சோதனை


splco.me : குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நேற்று காலை முதல் நடைபெற்ற சிபிஐ அதிகாரிகள் சோதனை விடிய விடிய நடந்து தற்போது தான் நிறைவடைந்தது.
சோதனையின் முடிவில் 7 அதிகாரிகள், 2 பைகளில் ஆவணங்களை எடுத்து சென்றனர். குட்கா முறைகேட்டில் ரூ.40 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட 35 பேரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
நேற்று சென்னை வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணகள் குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள ஜார்ஜிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர். அப்போது, குட்கா வழக்கில் லஞ்சம் பெற்றதாக 30 அதிகாரிகள் மீது அதன் அடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி தமிழக உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பினீர்கள்.

5 நாட்களில் இரண்டுமுறை கடற்கரை-வேளச்சேரி ரயிலை கவிழ்க்க சதி:... சிமென்ட் சிலாப் வைத்து

tamilthehindu : வேளச்சேரி கடற்கரை பறக்கும்ரயில் - வேளச்சேரி- பெருங்குடி இடையில் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப்பை வைத்து ரயிலை கவிழ்க்கும் முயற்சி 5 நாட்களில் இரண்டுமுறை நடந்துள்ளது. சம்பவ இடத்தில் கூடுதல் டிஜிபி ஆய்வு நடத்தினார்.
சென்னையில் வேளச்சேரியிலிருந்து கடற்கரை வரை பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தற்போது அதிக அளவில் பயணிகள் பிரயாணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். பறக்கும் ரயில்சேவை புறநகர் ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையை அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தினாலும் பராமரிப்பு சரியில்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
ரயில் நிலையங்களில் போதிய பராமரிப்பு, பாதுகாப்பின்மை காரணமாக சமூக விரோதிகள் அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. சில இடங்களில் வழிப்பறி நடக்கிறது.

பிரபல தீஸிஸ் திருடனின் பிறந்தநாள், ஆசிரியர் தினமா.!?

Adv Manoj Liyonzon : ஜாதுநாத் சின்ஹா கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1915ல் ஸ்மித் மற்றும் க்ளின்ட் நினைவு பரிசுகளையும் வென்று, 1917ல் முதுகலையும் முடிக்கிறார். உடனடியாக கல்கத்தா ரிப்பன் கல்லூரியில் தத்துவவியல் துறை துணை பேராசிரியராக தேர்வாகி பணி செய்கிறார்
இளங்கலை தத்துவவியல் முடித்து, புகழ்பெற்ற ஃபிலிப் சேமுயல்
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பிரேம்சந்த் ராய்சந்த் மாணவர் கல்வி உதவித்தொகைக்காக 1922ம் ஆண்டு, “இந்திய உளவியல் ஞானம்” என்ற தலைப்பில் தொகுதி 1 மற்றும் 2 என்ற இரண்டு ஆராய்ச்சி ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க தொடங்குகிறார். அதற்கு தேர்வாளராக பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார். ஆராய்ச்சியின் ஒவ்வொரு வகுப்பீடும் தேர்வாளர் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடம் சமர்பிக்கப்படுகிறது. 1923ம் ஆண்டு ஜாதுநாத் சின்ஹாவுக்கு புகழ்பெற்ற க்ரிஃப்ஃபித் பரிசும் மௌஅத் பதக்கமும் வழங்கப்படுகிறது. 1925ல் ஆராய்ச்சியின் முழு அறிக்கையும் சமர்பிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஜாதுநாத் சின்ஹா தனது ஆராய்ச்சி ஆய்வறிக்கையின் சாறுகளை மீரட் கல்லூரி இதழில் 1924 மற்றும் 1926ம் ஆண்டுகளில் வெளியிடுகிறார்.

புதன், 5 செப்டம்பர், 2018

தமிழ்நாட்டில் பாலியல் கல்வி.. உலகப் பாலியல் சங்கம் கோரிக்கை..

சி.காவேரி மாணிக்கம் -tamil.thehindu.com தமிழ்நாட்டில் பாலியல் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைக்க ‘வாஸ்’ எனப்படும் உலகப் பாலியல் சங்கம் முடிவு செய்துள்ளது.
பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் இந்தக் காலத்தில், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தப் பிரச்சினை தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி, உலக அளவிலும் காணப்படுகிறது.
எனவே, ‘வாஸ்’ எனப்படும் உலகப் பாலியல் சங்கம், இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காப்பது எப்படி என்பது குறித்து உலகம் முழுவதும் பல்வேறு கருத்தரங்குகள், விவாத மேடைகள், , விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 4-ம் தேதியை உலகப் பாலியல் சுகாதார தினமாக அறிவித்து, அன்றைய தினம் பல்வேறு செயல்திட்டங்களை அறிவித்து வருகிறது ‘வாஸ்’ அமைப்பு.

மோடி மீது குற்றம் சாட்டிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி 22 ஆண்டு பழைய வழக்கில் கைது

மோடி மீது குற்றம் சாட்டிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி 22 ஆண்டு பழைய வழக்கில் கைதுமாலைமலர் :குஜராத் கலவரத்துக்கு மோடி உடந்தையாக இருந்தார் என குற்றம் சாட்டி பின்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பாட், 22 ஆண்டுகால பழைய வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார்.
காந்திநகர்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் பாட் 1996-ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாவார். குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் மோடி முக்கிய உடந்தையாக இருந்ததாக, சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
தொடர்ந்து பணிக்கு வராத காரணத்தால் கடந்த 2016-ம் ஆண்டு காவல் துறை பதவியில் இருந்து சஞ்சய் பாட் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், 22 ஆண்டுகால பழைய வழக்கில் பாட் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 1996-ம் ஆண்டில் சஞ்சீவ் பாட் பனஸ்கந்தா மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தார். வழக்கில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, 1996-இல் ஒரு கிலோ அளவில் போதைப் பொருள் வைத்திருந்ததாக சஞ்சீவ் பாட் தலைமையிலான பனஸ்கந்தா போலீஸார் சுமர்சிங் ராஜ்புரோஹித் எனும் வழக்கறிஞரை கைது செய்துள்ளனர்.
பலன்பூர் நகரில் ராஜ்புரோஹித் தங்கியிருந்த விடுதியில் இருந்து அந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பனஸ்கந்தா போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 21...உண்மையான தினமாகக் கொண்டாட வேண்டியநாள்.. மகாத்மா_பூலே #சாவித்ரிபாய்_பூலே

Natarajan Rajakumar Rajkamal : மனசாட்சியோடு வரலாற்றை நோக்குபவர்களுக்குப்
புரியம். இந்திய வரலாறு பெரும்பகுதி துரோகத்தாலும் இருட்டடிப்பாலும் உருவானது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். எழுதப்பட்டுவிட்டதாலேயே ஒரு வரலாறை கட்டி அழவேண்டிய அவசியம் நமக்கு தலைவலியாய்தான் நாளும் பின்தொடரும்.
எழுதப்படாத வரலாற்றில் புதைந்துள்ள உண்மைகளை நாம் எப்போது கைப்பற்றி நடக்கிறோமோ அப்போதுதான் உண்மையான ஜனநாயகத்தையும் சோஷலிசத்தையும் நம்மால் படைக்கமுடியும்.
ஆம்! அப்படி இருட்டிப்புக்கும் துரோகத்திற்கும் ஆளானவர்கள்தான் "மகாத்மா ஜோதிராவ் பூலே-சாவித்ரிபாய் பூலே" ஆவார்கள். நான் இதை எழுதுவதற்கு முக்கியமான காரணம், செப்டம்பர் 5 சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுப்படுவதின் வரலாற்று பிழைகளைச் சுட்டிக்காட்டாவே..
பூலே பிறந்தது 1827 ஏப்ரல் 21 , இராதாகிருஷ்ணன் பிறந்தது 1888 செப் 5. பூலே பிறந்தது சரியாக 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ராதாகிருஷ்ணன் பிறக்கிறார். பூலே, ராதாகிருஷ்ணன் பிறந்த இரண்டாமாண்டே அதாவது 1890 லேயே இறந்துவிடுகிறார். அப்படியெனில் இராதாகிருஷ்ணன் பிறப்புக்கு முன்பே தன் வாழ்நாள் பணியை புரட்சிகரமாக செய்து முடித்துவிட்டார்.