சனி, 22 ஜூலை, 2017

தமிழிசை சவுந்தரராஜன் :நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்

நீட் தேர்வு எழுத தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. இதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''நீட் விவகாரத்தில் ஓராண்டு கால அவகாசம் அளித்தும் தமிழக அரசு ஏதும் செய்யவில்லை. நீட் நுழைவுத் தேர்வு எழுத அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் மதுபானங்களுக்கு விரைவில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
நடிகர் கமல் தீர்க்கமாக முடிவு எடுத்துவிட்டு அரசியலுக்குள் வர வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சர்வதேச சட்டப்படியே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது. இலங்கை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 100 படகுகளை மீட்க அரசு முயற்சித்து வருகிறது'' என்றார்tamilhehindu

மறைந்த போலீஸ் ஐ ஜி அருளின் மகன் மைக்கல் வீட்டில் வருமானவரி சோதனை!

;நமது நிருபர்;VENKATARAJ J
போலீஸ் ஐ.ஜி அருளின் மகன் மைக்கேல் வீடு
சென்னை அடையாறில் மறைந்த போலீஸ் ஐ.ஜி அருளின் மகன் மைக்கேல் அருளின் வீட்டில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு காரணமாகவே மைக்கேல் அருளிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

வருமான வரித்துறை
சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள ஒரு சொத்து, அரசு நிர்ணயித்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பை விட குறைவாக விற்கப்பட்டத்தகவல் வருமானவரித்துறையினருக்கு கிடைத்தது. உடனடியாக அந்த இடத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள் குறித்த தகவல்களை வருமானவரித்துறையினர் சேகரித்தனர். அந்த இடத்தை சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் குருமூர்த்தியின் குடும்பம் வாங்கியது தெரிந்தது.
குருமூர்த்தியின் மகன் தியாகராஜன், அரசு ஒப்பந்தக்காராக உள்ளார். இதையடுத்து வருமான வரித்துறையினர் குருமூர்த்தி மற்றும் தியாகராஜன் ஆகியோரின் பணப்பரிவர்த்தனைகளைக் கண்காணித்தனர். அப்போது, வரி ஏய்ப்பு குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக, அவர்களது வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, கிலோ கணக்கில் தங்கம், முக்கிய ஆவணங்களும், லட்சக்கணக்கில் பணமும் சிக்கின. தொடர்ந்து இன்றும் வருமானவரித்துறை சோதனை நடந்துவருகிறது.

மாதவிடாய் சோதனை: 12 ஆசிரியர்கள் நீக்கம்!

மின்னம்பலம் :உத்தரப்பிரதேசத்தில் 70-க்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆடைகளைக் களைந்து மாதவிடாய் சோதனை நடத்திய 12 ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாபர்நகரில் கஸ்தூர்பா காந்தி உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி, படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 26 ஆம் தேதி அந்த விடுதியின் வார்டனும், தாளாளருமான சுரேகா தோமர் கழிவறையில் ரத்தக்கறையை பார்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர், 70-க்கும் மேற்பட்ட மாணவிகளை அழைத்து வரிசையில் நிற்க வைத்து, ஆடைகளைக் களைந்து மாதவிடாய் சோதனை நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களுடைய உறவினர்கள் மூலம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம், கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மாவட்ட கல்வி அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, சுரேகா தோமர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கதிராமங்கலம் : ஆதரவு திரட்டிய மாணவர் கைது!

கதிராமங்கலம் : ஆதரவு திரட்டிய மாணவர் கைது!
மின்னம்பலம் :கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டிய அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நேற்று முன்தினம்(ஜூலை,20) கைது செய்யப்பட்டார்.
தஞ்சை நெடுவாசல் மற்றும் புதுக்கோட்டை கதிராமங்கலம் ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கதிரா மங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கதிராமங்கலத்தில் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது. நாளுக்கு நாள் ஆதரவு தெரிவித்து மற்ற இடங்களில் போராட்டம் அதிகரிப்பதால் போலீஸார் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டிய ‘தமிழ் தேசிய பேரியக்கம்’ என்ற அமைப்பில் தீவிர உறுப்பினராக செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ஆ.குபேரன் (32) நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
ஆ.குபேரன் தனது முகநூல் பக்கத்தில், ‘பாயும் குண்டர் சட்டங்கள்.. ஓங்கும் குண்டாந்தடிகள்..
எதேச்சார இந்திய அரசின் அரசவன்முறைக்கு எதிராக அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று 20.7.2017 வியாழன் களமிறங்குகின்றனர். அனைத்துத் துறை மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் .. அணிதிரள்வோம். அநீதிக்கு எதிராக!!
கதிராமங்கலம் போலீஸ் முற்றுகையை உடனே திரும்ப பெறு. ஓ.என்.ஜீ.சி யை உடனடியாக வெளியேற்று.

நடிகை காயத்திரி உதவி இயக்குனர் ஆகிறார்

மின்னம்பலம் :நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் நாயகியான காயத்ரி தற்போது ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆறுமுகக்குமார் இயக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் காயத்ரி, பாலாஜி தரணிதரனின் சீதக்காதி படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
இதுகுறித்து BEHIND WOODS-க்கு அவர் அளித்த பேட்டியில், “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். குறிப்பிட்ட சில காட்சிகளில் எனது தோற்றம் என் வாழ்நாளிலேயே மறக்கமுடியாததாக இருக்கும். இதுபோன்ற கதாபாத்திரம் இனி கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் நான் படப்பிடிப்புக்கு வரும் போது என்னுடைய காட்சி பற்றி கேட்பதைவிட உடைகள் பற்றி தான் ஆர்வமாக கேட்பேன்.

12 தீர்மானங்கள்! திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம்-

நக்கீரன் : தி.மு.க. விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்கள் –மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் 22.07.2017 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி அளவில் தி.மு.க. விவசாய அணி செயலாளர் டாக்டர் கே.பி. இராமலிங்கம் Ex.MP.  தலைமையில் விவசாய அணி செயலாளர் கரூர்  ம.சின்னசாமி மற்றும் விவசாய அணி துணை தலைவர்  கம்பம் இராமகிருஷ்ணன், Ex.MLA., ஆகியோர் முன்னிலையில் இணை செயலாளர் மாயவரம் ஆர்.அருட்செல்வன் Ex.MLA.,- மாநில துணை செயலாளர்கள் கே.முருகவேல், Ex.MLA., ஆர்.டி.ஏ.ஆதிசேஷன், ஆர்.கணேசன், கீழப்பாவூர் கு.செல்லப்பா, டேம் டி.வெங்கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்க கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் – 1திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தின் வரலாற்று பேரியக்கம் – இந்த இயக்கத்தின் மூல ஆதாரம் தலைவர் கலைஞர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட நமது “முரசொலி“ தலைவர் கலைஞர் தமிழ் இனத்தை பாதுகாக்க தன் பேனாவில் மை போட்டு எழுதாமல், தன் உதிரத்தை கொட்டி எழுதித்தான் நம்மை இந்த உச்சத்திற்கு கொண்டு வந்து சேர்த்தார் என்பதை நெஞ்சில் நிறுத்தி அவரது முரசொலிக்கு பவளவிழா, கழக செயல்தலைவர் தமிழக எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு தளபதி அவர்கள் முன்னின்று ஆகஸ்ட் 10 மற்றும் 11 தேதிகளில் மிகச் சிறப்பாக விழா நடத்துவதை தி.மு.க.விவசாய அணி நன்றியுடன் பாராட்டுவதுடன் - இவ்விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து விவசாய அணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

BBC :யாழ்ப்பாண நீதிபதி இளஞ்செழியன் வாகனம் மீது துப்பாக்கி சூடு! மிகவும் நேர்மையான துணிச்சலான நீதிபதி!


யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் இன்று மாலை 5.10 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் காரை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மெய்ப்பாதுகாவலர் இருவர் காயமடைந்தனர். ஆயினும் நீதிபதி இளஞ்செழியனுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. நல்லூர் பின்வீதி வழியாக தனது மெய்ப்பாதுகாவலருடன் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது காரில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். கோயில் பின்வீதி வழியாக அவரது கார் நாற்சந்தியை வந்தடைந்தபோது, அதற்கு வழிவிடும் வகையில் அவருடைய காருக்கு முன்னால் மோட்டார் சைக்களில் சென்ற அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வாகனங்களை மறித்து வழியேற்படுத்தினார்.
அப்போது, அந்த இடத்தில் நடந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த காவலருடைய இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து நீதிபதியின் காரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.
அந்த நபர் துப்பாக்கியைப் பறித்தெடுத்தபோது, அந்த காவலருடன் இடம்பெற்ற இழுபறியில் காவலர் காயமடைந்தார்.

நீட் தேர்வுக்கு எதிராக கமல் ஏன் பேசவில்லை? நீங்கள் ஏன் பேசவில்லை?

jagadheesan.lr :   : "நீட்டுக்கு எதிராக குரல்கொடுக்காமல் கமல் பம்முறாரு பார்த்தியா? ஜாதிபுத்தி தெரியுதா" என எகத்தாளம் பேசும் பெரியாரிய, அம்பேட்காரிய, திராவிட, தலித், இடதுசாரி, தமிழ்தேசிய, மற்றுமுள்ள முற்போக்காளர்களுக்கு ஒரு எதிர்கேள்வி.
திக,திமுக, அதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, பாமக, தேமுதிக, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ்நாட்டு கட்சிகள் இருக்கின்றன. இந்த எல்லா கட்சிகளிலும் மாணவர் அணிகள் இருக்கின்றன. இளைஞர் அணிகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டு மாணவர் எதிர்கால மருத்துவர் கனவை காலில் போட்டு மிதிக்கும் நீட் குழப்படிக்கு எதிராக இந்த மாணவர் அணிகள் புடுங்கிய ஆணிகள் என்னென்ன? அந்த மாணவர் அணிகளை தலைமை தாங்கும் இந்த கட்சிகளின் தலைமைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? தமிழகத்தை ஸ்தம்பிக்கச்செய்யும் போராட்டங்கள் என்னென்ன? மண்டல் கமிஷனால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்றதும் ஒட்டுமொத்த இந்தியாவையும் கலவர பூமியாக்கிய "உயர்ஜாதி மாணவர்கள்" எய்ம்ஸ் விஷயத்தில் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக அதே ஜாதித்திமிரோடு ஒன்றுகூடி தங்கள் வேலைவாய்ப்புகளை தக்கவைத்துக்கொள்ள போராடுகிறார்கள். அவர்களே இன்று நீட் ஆதரவாளர்களாகவும் நியாயம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு பெரியாரின் பேரன்கள் அந்த கிழவன் போராடி வாங்கிக்கொடுத்த ஒவ்வொரு உரிமையும் திட்டம்போட்டு பறிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் மண்ணாந்தைகளாக இருக்கிறார்கள்.

திருமாவளவன் அழைப்பு ! நீட் நுழைவு தேர்வுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்!

நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு
மனித சங்கிலி போராட்டத்தை வெற்றிபெறச் செய்வோம்
தொல்.திருமாவளவன் அழைப்பு
~~~~~~~~~~~~~
நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்கக் கோரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி 27 ஆம் தேதி மாலை திமுக நடத்தும் மனித சங்கிலிப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மாவட்டத் தலைநகரங்களில் திரளாகப் பங்கேற்று இந்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு பொதுமக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.
Ravindran Krishnamurthy இனி தமிழக கல்லூரிகள் அனைத்திலும் தகுதி திறமை என்ற போர்வையில் இதர மாநிலத்தவரின் ஆதிக்கம் கொடி கட்டப் போகின்றது. கல்வி வியாபாரிகளும் இதைப் பற்ற்யெல்லாம் சிறிதும் கவலைப்பட போவதில்லை. அடிமைகளைப் பற்றி கேட்கவேவேண்டாம்.

கோவில் சிலை கடத்தல் ... சுபாஸ் சந்திரபோஸ் ..11 பேர் கும்பல் கும்பகொண்டம் நீதிமன்றில் ...

அரியலூர் மாவட்டம் சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் சிலை கடத்தில் வழக்கில் சுபாஷ்சந்திர கபூர் உட்பட 11 பேர் கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் 2008-ம் ஆண்டு 20-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் திருடு போயின. இந்த சிலைகள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டன. தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சர்வதேச சிலை கடத்தல் குற்றவாளியான அமெரிக் காவைச் சேர்ந்த சுபாஷ்சந்திர கபூரை (60) கைது செய்தனர். இந்த வழக்கில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் குற்றவாளியான சென்னை பாக்கியகுமாருக்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை யும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், சித்தமல்லி கோயில் சிலை கடத்தல் வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். சுபாஷ்சந்திர கபூர் திருச்சி மத்திய சிறையிலும், பாக்கியகுமார் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிரபலமான Gas – மனுஷ்ய புத்திரன்

பிரபலமான Gas
ரு பிரபல மனிதருக்கு
எப்போதாவதுதான்
Gas ஐ விடவேண்டும் போலிருக்கிறது
அப்போது அவர்
எல்லோருக்கும் கேட்கும்படியாக
ஒரு Gas விடுகிறார்
அது நகரத்திற்கு மேலாக
‘டமாரெ’ன்று வெடிக்கிறது
போன மாதம்
இன்னொரு பிரபலமான மனிதர்விட்ட gas ஐ  விட’
இந்தக் gas பெரிதாக இருந்தது.
நகரவாசிகள் அனைவரும்
அந்த சத்தைக் கேட்கிறார்கள்
அவர்கள் அந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள்
அந்த gas வெடித்த இடத்தில்
ஒரே புகைமண்டலமாக இருக்கிறது
சத்தம் கேட்டு நிறையக் கேமிராக்கள்
சில நொடிகளில் வந்துவிட்டன
ஒரு GAS ஐ  படம் பிடிப்பதில்
அங்கு ஒரே தள்ளு முள்ளு நடக்கிறது

மக்களை சுரண்டியே பேரரசுகள் உருவாகின .. ராஜ ராஜ சோழன்

Jagapriyan Somasundaram: தேவதாசி கலாசாரம் மிகவும் பழமையானது. சங்கமருவிய காலத்திலெழுந்த சிலப்பதிகாரத்தில் கூட மாதவி என்ற பாத்திரம் வருகின்றது.பண்டைய இந்திய இலக்கியங்களில் கூட இது பற்றிய தகவல்கள் நிறைய வருகின்றன. பல்லவர் கால பக்தியிலக்கிய கால கட்டத்தில் இந்து மதம் மீண்டும் செல்வாக்குடைய மதமாக வளர்ந்தது. சோழர் ஆட்சிக்காலத்தில் அது பெரிய வல்லரசாக வளர்ந்ததனால் நிறைய செல்வம் குவிந்தது. அது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே அதிகம் சேர்ந்தது. அவர்களின் லௌகிக வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட கோவில்கள் உதவின. மதத்தின் பெயரை வைத்து எல்லாவிதமான சலுகைகளையும் அனுபவித்தனர். அந்த வகையில் தேவதாசி முறைமையிலும் இந்தக்கால கட்டத்தில் பெரியதொரு வளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. பண்டைய உலகில் ஆட்சி உரிமை என்பது பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது. அரசர்கள் மிகவும் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டு அவர்களின் தனிப்பட்ட ஒழுக்கக்கேடுகள் கூட மிகவும் உயர்வானவையாக பேசப்பட்டன.

தேவதாசி கலாசாரத்தை தமிழகத்தில் தொடக்கியது ராஜ ராஜ சோழன்?

ஸ்டாலின் தி ராஜராஜன் துவக்கி வைத்த தேவதாசிக் கலாச்சாரம்!
இந்து மதத்தை நிறுவனமாக ஆக்கும் பணியில் ஈடுபடுத்திக் கொண்ட ராஜராஜன், பார்ப்பனர்களுக்கும் அடியாள் பண்ணையார்களுக்கும் பாலியல் அடிமைகளாக பெண்களை ஆக்கினான்.
தமது அரச பலத்தால் சுமார் 400 க்கும் அதிகமான பெண்களை பலாத்காரமாக கொண்டுவந்து விபச்சாரத்தை நடத்தினான். அந்த விபச்சாரத்தை இறைப்பணி என்று புனித சாயம் பூசி, அப்பெண்களுக்கு 'தேவரடியார்கள்' என்றும் 'தேவதாசிகள்' என்றும் அடையாளம் கற்பித்தான். இதுவே நாளடைவில் 'தேவடியாக்கள்' என்று ஆனது.
ராஜராஜனால் இந்து மதத்தின் பேரில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட அப்பெண்களை, தமது அந்தப் புறங்களிலும் கொண்டுவந்து பலாத்காரம் செய்து நாசமாக்கினான். அப்பெண்கள் தப்பி ஓடினால் கண்டு பிடிப்பதற்காக அவர்களின் உடலில் சூடு போட்ட கொடுங்கோலன்தான் ராஜராஜன்.
(தொடரும்)

வெள்ளி, 21 ஜூலை, 2017

சிவாஜி கணேசனை இழிவு படுத்தி ஒரு நினைவஞ்சலி .. News 7 தொலைகாட்சியின் தமிழர் விரோதம்!

NEWS 7 Tamil ல் இன்று மாலை 5.30 மணிக்கு
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவஞ்சலி என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது ...
அதில்
சிவாஜி அவர்களின் நடிப்பாற்றல் பற்றியோ
திரையுலகில் அவர் நிகழ்த்திய சாதனைகளை பற்றியோ
அவர் பெற்ற விருதுகள் பாராட்டுகள் பற்றியோ
அவரது பெருமைகள், மாண்புகள் பற்றியோ..
அவரது தனிப்பட்ட குண நலன்களை பற்றியோ
ஒரே சொல்லில்...
அவரது தனி சிறப்புகளை பற்றியோ எதைப்பற்றியுமே ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ...மாறாக...

ராஜிவ் காந்தியால் மூப்பனாரால் ஒதுக்கப்பட்டார்
காங்கிரசில் செல்வாக்கு இழந்தார்...
வேறு வழி இன்றி எம்ஜிஆர் கு ஆதரவு தந்தார் ...ஜானகியோடு கூட்டணி வைத்தார்.
அவருடைய சாதி மக்கள் கூட அவரை ஆதரிக்கவில்லை..
திருவையாறில் போட்டியிட்டு தோற்றார்...அரசியல் வெறுத்துவிட்டார் முடங்கிப்போனார்...

தமிழக அமைச்சர்களின் ஈமெயிலை காணவில்லை! கமலின் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!

Sutha சென்னை: உங்களது அமைச்சர்கள் மீதான புகார்களை அவர்களுக்கே இணையதளங்கள் மூலம் அனுப்புங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்ட அடுத்த சில மணி நேரங்களில் அரசு இணையதளத்தில், அமைச்சர்களின் பக்கங்களில் இணையதள, இமெயில் முகவரிகள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர்களின் புரபைல் பக்கத்தில் இடம் பெற்றிருந்த இமெயில், இணையதள முகவரிகள் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இணையதளத்தில் திடீரென அனைத்து இமெயில் ஐடிகளும் நீக்கப்பட்டிருப்பது ஏன் என்ற குழப்பமும் எழுந்துள்ளது.
அதேசமயம், தமிழக சட்டசபை இணையதளத்திற்குப் போய்ப் பார்த்தால் அங்கு எம்.எல்.ஏக்களின் இமெயில் ஐடிகள் உள்ளன. கமல்ஹாசன் கொடுத்த இணைப்புக்குள் போனால் யாருக்கும் இமெயில் கிடைக்காத வகையில் மாற்றியுள்ளனர். ரஜினி போர் வரும் வரை காத்திருப்போம் என்று கூறியிருந்தார். ஆனால் கமல்ஹாசனோ, சொல்லாமல் கொள்ளாமல் போரைத் தொடுத்து விட்டார். இதனால் நிலைகுலைந்து போயுள்ளனர் தமிழக ஆட்சியாளர்கள்.

மம்தா பானர்ஜி : 18 எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து நாடு தழுவிய இயக்கம்....

மத்தியில் ஆட்சி செய்துவரும் பாஜக அரசு, மாநில அரசுகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்து வருவதாகவும்,எனவே பாஜக-வை வீழ்த்துவதற்காக 18 எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்தப்போவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக 21 ஆம் தேதி (இன்று) கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மோடி அரசு பொறுப்பேற்றதில் இருந்து வெளிநாடுகளுடனான இந்தியாவின் உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. மத்திய அரசு, மாநிலத்தில் ஆளும் அரசுகளை சுதந்திரமாக செயல்பட அனுமதி மறுக்கின்றது. மத்தியில் ஆட்சி செய்துவரும் பாஜக-வை வீழ்த்துவதற்காக 18 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாடு தழுவிய இயக்கம் நடத்த உள்ளோம். இதற்காக வருகிற ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி முதல் பாஜக-விற்கு எதிரான திட்டங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்க உள்ளது என்று அவர் தெரிவித்தார். மின்னம்பலம்

கண்கெட்டு போன டெல்லி ! உழுதவன் கணக்குப் பார்த்தால், உழக்குகூட தேறாது!

மோடிக்கு ஞாபகமிருக்குமா ?
உழுதவன் கணக்குப் பார்த்தால், உழக்குகூட தேறாது என்பார்கள் அனுபவசாலிகள். விவசாயிதான் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், விவசாயிகளுக்கு விவசாயம் என்பது ஒரு நஷ்டத்தை ஏற்படுத்தும் தொழிலாக இருந்தாலும் கூட, நாட்டு நலன் கருதி உணவு உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட விவசாயிகளின் முதுகெலும்பைத்தான் ஆட்சியாளர்கள் தொடர்ந்து உடைத்து வருகிறார்கள்.
தமிழகத்தில், தற்போது சுமார் 46 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் தான் இருப்பதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கிறார்கள். அந்த நிலத்தில்கூட முழுமையாகப் பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். இந்நிலையில், மத்திய அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறையாகி விட்டது. பாசனத்துக்குத் தண்ணீரில்லை. விவசாய உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான விலையில்லை. அதன் காரணமாக, விவசாயக் கடன் தொகை வாங்கியவர்களால் அதை, திருப்பிச் செலுத்த முடியாமல், கடன் நெருக்கடியால் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள், என்று கண்ணீர் வடிக்கிறார்கள் விவசாயிகள்.

ரயில்வே உணவு: மனிதர்களுக்கு ஏற்றதல்ல!

மின்னம்பலம் :இந்திய ரயில்வேயில் அளிக்கப்பட்டு வரும் உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல என்று சிஏஜி தெரிவித்துள்ளது.
இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை இந்திய ரயில்வேத் துறையின் கேட்டரிங் சேவைகள் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 21) தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், “ ரயில்வேயால் வழங்கப்படும் உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. அவை கெட்டுப் போனவையாகவும், பழையவற்றைச் சூடேற்றி வழங்கப்படுவதாகவும் உள்ளது. மேலும், ரயில்நிலையங்களில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் அங்கீகாரம் பெறாதவையாகவும், பாட்டிலில் விற்கப்படும் பொருட்கள் காலாவதியானவையாகவும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட்கா ஊழலை மறைக்கும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ! ( எஸ்.வி. சேகரின் அண்ணி)

குட்கா ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையினர் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தலைமை செயலாளர் மறைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும், குற்றவாளிகளை காப்பாற்ற அரசு துணை போகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனையில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவிவிலக வேண்டுமெனவும், சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

ஹிந்து தேசிய கொள்கையே போருக்கு இந்தியாவை தூண்டுகிறது' சீன பத்திரிகை!

முதலில் சீனர்களுக்கு மதமென்பது சங்பரிவார் போல தீவிரமாக  இல்லை ... இரண்டாவது .. ஆனானப்படட அமெரிக்காவையே ... வளைய வைப்பவர்கள் சீனர்கள் .... போயிங் ஆர்டர் ரத்து என்று அறிவித்தால் போதும் ... அமெரிக்கா வழிவார்கள் ...மேற்கு நாடுகள் செய்த அநியாயங்களை சீனா மறக்கவில்லை ... காகிதம் ..வெடி மருந்து ..வான வெடி ..அச்சு ..எல்லாம் சீனர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்தவை ..2030 இல் சீனா உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவை மிஞ்சிவிடும் .. இந்தியாவில் இன்றும் 90 % மக்களுக்கு கழிவறை இல்லை...

தினமலர் :புதுடில்லி: 'ஹிந்து தேசிய கொள்கையே, சீனாவுக்கு எதிராக போர் புரிவதற்கு, இந்திய அரசை துாண்டி விடுகிறது' என, சீன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 இந்தியாவின் சிக்கிம் எல்லை - சீனா - பூட்டான் இடையேயுள்ள டோகோலாம் பகுதியில், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட, சீனா முயன்றது; இது, நம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், நம் படைகள், அதை தடுத்து நிறுத்தின. அதையடுத்து, எல்லையில், ஒரு மாதத்துக்கு மேலாக,பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தப் பிரச்னை குறித்து, சீன அரசு நடத்தும் மற்றும் அதன் ஆதரவு பத்திரிகைகள், தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்து வருகின்றன.

சீனாவுடன் போருக்கு இந்தியா தயாராகி வருவதாக, சீன பத்திரிகைகளில் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. , 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில், நேற்று வெளி யிடப்பட்டுள்ள கட்டுரையில், ஹிந்து தேசியவாதம் என மத்திய அரசை விமர்சித்து, கட்டுரை வெளி யிடப்பட்டுள்ளது. கட்டுரையில் கூறியுள்ளதாவது:

ஆகஸ்ட் 31க்குள் உள்ளாட்சித்தேர்தல்!

திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையை அடுத்து, ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித்தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவிறுத்தியுள்ளது. தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை வரும் 2ம் தேதிக்குள் தயாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. நக்கீரன்

இங்கு திராவிட இயக்கம் என்ன செய்தது? லாலுவின் வார்த்தைகளில் தெறிக்கும் உண்மைகள்!

சாய் லட்சுமிகாந்த் : திராவிட இயக்கங்களை கொச்சைப்படுத்தும் சில புதிய துரோகிகள் கண்திறக்கட்டும்.....
லாலு பிரசாத் யாதவ் ஒரு நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் பெற்றோர் எங்களை பள்ளிக்கு அனுப்புவார்கள். பள்ளி அசம்பிளியிலேயே அந்தந்த ஜாதி மாணவர்கள் பிரிக்கப்படுவார்கள். யாதவ மாணவர்கள் ஆசிரியர்களின் வீட்டு மாடுகளை கவனிக்க அனுப்பப் படுவார்கள். நண்பகல் வகுப்பறைக்கு வந்து தூங்கவேண்டும் பிறகு மாலை வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்படித்தான் அந்த அந்த ஜாதி மாணவர்கள் அவரவர் குலத்தொழிலைச் செய்யவேண்டும். இந்தியா எங்கும் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டோம். அப்போ தெல்லாம் ஆசிரியர் மேசையில் இருக்கும் பத்திரி கையைத் தொட்டாலே காது கிழிந்து விடும் அளவிற்கு திருகிவிடுவார் என்று தன்னுடைய மாணவர் பருவ அனுபவத்தைக் கூறியுள்ளார் - லாலு பிரசாத்.
நாடோடிகளின் நிலை இதைவிடக் கொடூரம், என்.டி. டி.வி., என்ற செய்தி தொலைக்காட்சியில் பிகாரில் எலிபிடிக்கும் நாடோடிகளின் வாழ்க்கைப் பற்றி ரவீஷ் குமார் படம்பிடித்திருந்தார்.
சுதந்திரத்திற்கு முன்பு இந்த மக்கள் வயல்வெளிகளில் பயிர்களைச் சேதப்படுத்தும் எலிகளைப் பிடித்து அதற்கான கூலியை வாங்கிக்கொண்டு வாழ்க்கை நடத்தினர், கூலியாக நெல், கோதுமை, கடுகு, கடலை போன்றவை கிடைக்கும்.

பச்சை ரத்தம் .. தேநீரில் கரையும் கண்ணீர்! மலையகத்திலும் நீலகிரியிலும்.. ஆவணப்படம்!

இலங்கை மலையகத்திலும் இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பி நீலகிரி மாவட்டத்திலும் உள்ள தேயிலை தொழிலாளர்கள் வாழ்க்கையை மிக அழகாக தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது இந்த ஆவணப்படம். ... கொஞ்சம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக் பாருங்கள். .. நீங்கள் குடிக்கும் தேநீருக்குள் கலந்து இருக்கும் கண்ணீரின் கதையை கொஞ்சம் கேளுங்கள்

மாயாவதி பதவி விலகல் ஏற்பு.. ஒரு சிங்கத்தின் கர்ஜனை... முழு விடியோ! பெஹெஞ்ஜிடா !


புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிமாநிலங்களவையில் கடந்த 18ம் தேதி உத்தரப் பிரதேசம் சஹரன்பூர் மாவட்டத்தில்  தலித்துகளுக்கு எதிராக நடந்த வன்முறை குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன், ‘பேச்சை 3 நிமிடத்துக்குள் முடித்துக் கொள்ளுங்கள்’ என்று மாயாவதியை  கேட்டுக் கொண்டார். இதனால் ஆவேசம் அடைந்த மாயாவதி  எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அந்த கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.... தினகரன்

அமெரிக்கா சிரியா போராளி குழுக்களுக்கு இனி ஆயுதம் வழங்காது! அதாவது இனி ஐ எஸ் க்கு ஆயுதம் கிடைக்காது!

ரஷ்யாவுடனான உறவுகளை மேம்படுத்த சிரியாவில் அரசுப்படைகளுக்கு எதிராக போரிட்டு வரும் போராளிக்குழுகளுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரிய போராளிக் குழுக்களுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவு வாஷிங்டன்: ரஷ்யாவுடனான உறவுகளை மேம்படுத்த சிரியாவில் அரசுப்படைகளுக்கு எதிராக போரிட்டு வரும் போராளிக்குழுகளுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக போராளிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. போராளி இயக்கங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுத உதவிகள் மற்றும் நிதி உதவிகளை செய்து வருகின்றன.

ஹிந்திகாரனோ, மார்வாடியோ, கன்னடனோ, மராட்டி, தெலுங்கனோ தமிழில் மட்டுமே பேசுவது

இனி தமிழகத்தின் எந்த மூலைக்கு போனாலும் எவனாகிலும் சரி ஹிந்திகாரனோ, மார்வாடியோ, கன்னடனோ, மராட்டி, தெலுங்கனோ தமிழில் மட்டுமே பேசுவது என போன வாரம் நானும் அண்ணன் S Anbazhagan ம் முடிவெடுத்தோம். நமக்கு இருக்குற பிற மொழி ஞானத்த அவன் மண்ணுக்கு போறப்ப பயன்படுத்தலாம்னு அதன்படி
போன வாரம் நம்ப ஊர் சைக்கிள் ஸ்டேண்டுல நாலு மலையாளிக குடிச்சிட்டு டோக்கன் போடாம வண்டிய நிறுத்திட்டு கலாட்டா பண்ணிட்டு இருந்தானுக.
நானும் தமிழ்ல அவனுக கிட்ட மல்லுகட்றேன். அவனுக மலையாளத்துல பேசிட்டே இருந்தானுக, நம்ப தம்பி ஒருத்தன் கடுப்பாகி நாலுபேரையும் அடி பொளந்து வண்டி சாவிய புடுங்கி ஓரமா நிக்க வச்சான். அண்ணன் அவ்ளோ பொறுமையா பேசுறாரு நக்கல் பண்றீங்களாடானு
அடுத்த கனமே தமிழ்ல பேசி கெஞ்சி கூத்தாடி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு வண்டி எடுத்து போனானுங்க.
அதேபோல குல்பி ஐஸ் விக்குறவன், பானி பூரி, ஐஸ்கிரீம், பீடா கடை, பெட்ஷீட் விக்குறவன் , எச்சை டேபிள் தொடைக்கிறவன் ( ஹிந்தி கத்துகிட்டா இந்த வேலை சுலபமா கிடைக்கும்.

வியாழன், 20 ஜூலை, 2017

கோல்டன் பாபாவின் புனித யாத்திரை ... கிலோ கணக்கில் தங்கம் ரோலக்ஸ் ... பி எம் டபிள்யு , பார்சுனர் ஆடி கார்கள் ..

ரூ.27 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரமும், ஒரு பி.எம்.டபில்யூ கார், இரண்டு ஆடி கார்கள் மற்றும் மூன்று பார்ச்சுனர் கார்களுடன் வாகன அணிவகுப்பில் ஹரித்வாரில் இருந்து டெல்லி வரை சுமார் 200 கிமீ கண்வார் எனும் புனித யாத்திரை மேற்கொள்பவர் இந்த கோல்டன் பாபா. யாத்திரையின் போது தன் உடல் முழுவதும் தங்க நகைகளுடன் குறிப்பாக தங்கத்தாலான ஆடைகள் அணிந்து இவர் காட்சி தருவதால், இவரைக் காண பொதுமக்கள் அனவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இம்முறை புனித யாத்திரிக்காக வந்துள்ள கோல்டன் பாபா 50-க்கும் மேற்பட்ட தங்க நகைகளை அணிந்து வந்துள்ளார். அவற்றில் தங்க நெக்லஸ்கள், மோதிரங்கள், வளையல்கள் அடக்கம். அதிக எடை காரணமாக கழுத்து வலி, பார்வைக் குறைபாடு ஏற்படுவதால் இம்முறை 2 கிலோ நகைகளை கழற்றி வைத்து வந்துள்ளதாக இவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு கண்வார் யாத்திரைக்கான வெள்ளி விழாவைக் கொண்டாடவுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார். 

உங்களை இனி இயக்கப் போவது சமூகவலைத்தளங்களே ! மின்னூல் – வீடியோ


நான்காம் தொழிற்புரட்சியைப் பற்றியும், நாளை உலகை ஆளப்போவது மக்களா, முதலாளித்துவத்தின் எந்திரங்களா? என்பதன் அறிவியல் விளக்கத்தையும், அதன் சமூகவியல் நடைமுறையையும் எளிய முறையில் விளக்குகிறது இந்நூல். “செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்”  எனும் இந்த நூல் இத்தகைய துறையில் அநேகமாக தமிழில் வெளிவரும் முதல் நூல் என்று நம்புகிறோம். இதன் சிறப்பு முதல் நூல் என்பதல்ல, நிகழ்கால – எதிர்கால உலகை தீர்மானிப்பதாக இருக்கும் ஒரு நவீன அறிவியல் மற்றும் அரசியல் துறை குறித்து வாசகர்களுக்கு ஆரம்ப அறிமுகத்தை செய்கிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல்

நான் ஒரு நக்சலைட்- மனுஷ்ய புத்திரன்!.. நான் ஒரு தேச விரோதி .. ஒரு சமூகவிரோதி ..ஒரு பிரிவினைவாதி

கையில் பதாகையுடன் நின்றிருந்தஒரு இளம்பெண்ணை ஒரு போலீஸ்காரன் தலைமுடியையைப் பிடித்து கீழே தள்ளுகிறான் பிறகு அவள் நக்சலைட் என்று அழைக்கப்படுகிறாள்
நக்சலைட்
மாணவி வளர்மதி
நான் ஒரு நக்சலைட்
என்னைக் கைது செய்யுங்கள்
என்னைக் கொலை செய்யுங்கள்
நான் வெடிகுண்டுகள் செய்யவில்லை
வாகனங்களைத் தகர்க்கவில்லை
வனங்களில் மறைந்து வாழவில்லை
மக்களின் நிலம் திருடப்படுவதற்கு எதிராக
நான் ஒரு துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்
நான் அணு உலைக்கு எதிராக
உண்ணாவிரதம் இருந்தேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்
நான் பழங்குடிகளுக்கு
மருத்துவம் செய்தேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்
நான் வகுப்பறையில் மாணவர்களுக்கு
மனித உரிமையை போதித்தேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்
நான் சாராயக் கடைக்கு எதிராக
ஒரு பாட்டுப் பாடினேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்

கமலஹாசன் : நீட் ,டெங்கு பிரச்சனைகளை தீர்க்க முடியாத அதிமுக அரசு பதவி விலகட்டும்!

shankar. சென்னை: இதுவரை பிரச்சினைகளைப் பேசாமல், பொத்தாம் பொதுவாக அரசைச் சாடி வந்த கமல் ஹாஸன் இப்போது மக்கள் பிரச்சினைகளைப் பற்றி ட்விட்டரில் பேச ஆரம்பித்துள்ளார்.
இப்போது தமிழக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது நீட் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை, விவசாயம் பொய்த்துப் போன அவலம், ஹைட்ரோ கார்பன், மீத்தே இந்தப் பிரச்சினைகளுக்காக மக்கள் போராடினாலும், ஒரு தனித்துவம் மிகுந்த தலைமை இல்லாததால் அந்தப் போராட்டங்களுக்கு பலன் கிடைக்காமல் போகிறது.

நீட் தேர்வினால் வாய்ப்பை இழந்த கூலிதொழிலாளர் மகன் ... மாநில அளவில் சாதனை படைத்தவர்!

:நீட்_தேர்வை_எதிர்ப்போம் ! சேலம் மாவட்டம் இடங்கணசாலை பேரூரராட்சியில் தறி நெசவு செய்யும் கூலி தொழிலாளிகள் வடிவேல்- பெருமாயி ஆகியோரின் மகன் தான் தம்பி. ரஜினிரகு என்ற மாணவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தவர்.
தற்போது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1190 மதிப்பெண்கள் பெற்றவர். மருத்துவ படிப்பிற்கான கட் ஆப் 199.5 பெற்றிருந்தும் நீட் நுழைவு தேர்வினால் மருத்துவராகும் வாய்ப்பினை இழந்தார். நீட் நுழைவு தேர்வு இல்லையெனில் நிச்சயம் மருத்துவ படிப்பு பயில இடம் கிடைத்து 5 ஆண்டுகளில் மருத்துவராகி தனது பெற்றோரின் சிரமத்தினை நீக்கி குடும்பநிலையை உயர்த்தியிருப்பார்.

சாரு ஹாசன் அதிரடி : குற்றவாளியான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் !

s.charu.hasan :…….. மாண்புமிகு அமைச்சர் ஜயகுமார் அவர்களுக்கு…. 60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்ச நீதி மன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்…? குற்ற வாளியாக சிறையிலிருக்கும் சசிகலா அவர்கள் சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம்… கையாடல் குற்றவாளியாக திர்ப்பு முடிவான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் அது இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.. இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எங்கள் செலவில் குற்றவாளிகள் குடும்பத்துக்கு பார்ப்பன அக்கிரகாரத்தில் ஒரு மாளிகை கட்டி கொடுத்து விட்டார்கள் என்று 60 சதவிகிதம் சசிகலா அவர்கள் கட்சியை எதிர்த்தவர் நினைப்பது எங்கள் அறியாமையோ..?…
 இன்று ஆட்சியில் இருப்பவர்கள் வெளிப்படையாகவே சிறையில் இருக்கும் சின்னம்மாள் சொல்படி ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் சிந்தனையை உச்சநிதிமன்ற தீர்ப்பு மாற்றியிருக்கிறது. என்று நினைக்கிறேன்…

BBC :இந்திய-சீன எல்லை முட்டுக்கட்டை நிலை ஏன் முற்றி வருகிறது? Narendra Modi may trigger war with Pakistan to hide failures: Mayawati

They may even get a Hindu Muslim riot triggered" she said. ஒரு மாதமாக இந்திய-சீன எல்லையில் நீடித்து வரும் முட்டுக்கட்டை குறித்த சமீபத்திய தலைப்புச் செய்திகளை நீங்கள் இணையத்தில் உலவிப் பார்த்தால், ஆசியாவின் பரம எதிரி நாடுகள் தங்களுடைய ஆயுதப் போரின் விளிம்பில் இருப்பதாக நினைக்கலாம். இது குறித்து கூறப்படும் சொல்லாடல்கள் முழுவதும் அச்சமூட்டுபவையாகவும், அச்சுறுத்துபவையாகவும் உள்ளன. இந்த முட்டுக்கட்டை, முழுமையான போருக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் என சீனா எச்சரித்துள்ளதாக டெல்லி செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இதே கூற்றை எதிரொலிக்கும் மற்றொரு செய்தி, இந்தியாவை சீனா முறைத்துக் கொண்டு நிற்பதாக கூறுகிறது.
எல்லைப் பிரச்சனையினால் 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா தோல்வியடைந்ததை ,போரின் போது வெளியான பழைய அறிக்கைகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பீஜிங்கிலிருந்து வெளியாகும் சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் நினைவுப்படுத்த துவங்கியுள்ளது.
பூடானின் சாலைத் திட்டத்தில் குறுக்கீடு செய்து,அந்நாட்டின் இறையாண்மையை வலுவிழக்கச் செய்வதாக இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ள 'குளோபல் டைம்ஸ்' செய்தித்தாள், `ஒருவேளை இந்தியா இது போன்ற மோதல் போக்கை தூண்டினால், சீனாவிடமிருந்து கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்` என கூறியுள்ளது.

மாதவிடாயின் முதல் நாளில் விடுமுறை: மாத்ருபூமி பெண்களுக்கு சலுகை


thetimestamil:  கேரளாவில் இயங்கிவரும் பிரபல தொலைக்காட்சி  ஊடக நிறுவனமான மாத்ருபூமியில் 75 பெண்கள் பணிபுரிகின்றனர்.
மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் தங்கள் நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு அறிவித்துள்ளது மாத்ருபூவி. இதுகுறித்து அதன் இணை இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் அளித்த பேட்டியில், ‘நம் நாட்டில் மாதவிடாய் கோளாறு என்பது பெண்களின் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆண்களிடம் அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.
எனவே பெண்களுக்கு ஆதரவு தரும் விதமாக நாங்கள் இம்முடிவை மேற்கொண்டோம். எங்களுக்காக இரவு-பகல் பாராமல் உழைக்கும் பெண் ஊழியர்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக மும்பையைச் சேர்ந்த ஊடக நிறுவனமான ‘கல்சர் மெஷின்’.  முதன்முதலில் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டது.  “மாதவிடாய் காலத்தின் முதல்நாளில் பெண்களுக்கு அதிகளவில் சிரமம் ஏற்படும். எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இதில் கூச்சப்பட ஏதுமில்லை. இது பெண்கள் வாழ்க்கையின் அங்கம் என அந்நிறுவன மனிதவள மேம்பாட்டு தலைவர் தேவ்லீனா சன்யால் மஜும்தார் தனது விளக்கத்தை வீடியோவாக அறிவிப்பின் போது வெளியிட்டிருந்தார்.

கமல்ஹாசனை விமர்சிக்கும் அருகதை குதிரை பேர அரசுக்கு இல்லை: ஸ்டாலின் பேட்டி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (20-07-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : ஸ்டாலின்: இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக, நீட் தேர்வில் தமிழகத்துக்கு உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதை மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டிக்காட்டி வலியுறுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்வரும் 27 ஆம் தேதி, மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்த தீர்மானித்து இருக்கிறோம். குறிப்பாக, இரு தினங்களுக்கு முன்பு நான் சட்டமன்றத்தில் பேசியபோது, ”இந்திய ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபோதே இப்பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து மாநில அரசு அதற்கான செயல் வடிவத்தை உருவாக்கி இருக்க வேண்டும்.

14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு: 24ம் தேதி பதவியேற்பு

இந்திய ஜனாதிபதியாக இருக்கும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அவருக்கு பதிலாக புதிய ஜனாதி பதியை தேர்ந்து எடுக்க ஜூலை 17-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கிறார்.

ஐஐடி-யை வெறுக்கும் மாணவர்கள்!


மின்னம்பலம்   2016 - 2017ஆம் கல்வியாண்டில் 889 ஐஐடி மாணவர்கள் தங்களின் படிப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளனர்’ என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.இதில் 71 சதவிகிதம் (630) பேர் பட்டமேற்படிப்பு மாணவர்கள் (பிஜி), 196 பேர் ஆராய்ச்சி மாணவர்கள் (பிஹெச்டி), 63 பேர் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் (யூஜி) படிப்பவர்கள் ஆவர். நாடு முழுவதிலும் உள்ள 9,885 ஐஐடி இடங்களில் 73 இடங்கள் காலியாகவே உள்ளன. 2015 - 16ஆம் கல்வியாண்டில் 23 ஐஐடி-களைச் சேர்ந்த 656 மாணவர்கள் தங்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளனர். இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 35% அதிகரித்துள்ளது.மனிதவளத்துறை அளித்த தகவலின்படி, ஆராய்ச்சி மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்துவதற்கு காரணம், பொதுத்துறை நிறுவனங்களில் தங்களின் படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்காததாலும், வேறு இடங்களில் நல்ல வாய்ப்புகளைத் தேடி, தவறாக ஐஐடி படிப்பை தேர்வு செய்து அதில் சரியாக படிக்க முடியாமல் போவதும்தான்.

இறந்தவர் உயிர் பிழைத்த அதிசயம்! தருமபுரி மாவட்டத்தின் மலைவாழ் பகுதி

மின்னம்பலம் : தருமபுரி மாவட்டத்தின் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த குக்கிராமத்தில் இறந்தவர், மீண்டும் உயிர் பிழைத்து எழுந்த சம்பவம் கிராம மக்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகில், மேட்டூர் அணையும் தென் பென்ணையாறும் ஒன்றுசேரும் பகுதியில், அடர்த்தியான காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது தின்ன பெல்லூர் என்ற கிராமம். இங்கு வசிப்பவர்களுக்குச் சுகாதாரம் குறித்து அதிக விழிப்பு உணர்வுகள் இல்லை. நாட்டு வைத்தியத்தை நம்பிதான் தலைமுறை, தலைமுறையாக வசித்து வருகின்றனர்.
தின்ன பெல்லூரைச் சேர்ந்தவரான அய்யன்துரை லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி மீனா (வயது 37). இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மீனாவுக்கு அடிக்கடி மயக்கம் வந்துள்ளது. ஆனால், அதற்கு மருத்துவரிடம் சென்று சிகிச்சை பார்க்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்கள். அதையடுத்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி மீனா மயக்கத்தில் கீழே தடுமாறி விழுந்துள்ளார்.

உன்னை என்ன செய்கிறேன் பார்? சசிகலா - ரூபா கடும் வாக்குவாதம்!


ரூபாவுக்கு ராமமூர்த்தி என்கிற கைதிதான் சிறையில் நடக்கும் அநியாயங்கள் பற்றி முதலில் தகவல் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து 32 கைதிகள் ரூபாவை சந்தித்து சிறையில் நடக்கும் கொடுமைகளை சொன்னார்கள். ராமமூர்த்தியும் 32 கைதிகளும் சசிகலா சிறையில் நடத்தும் சாம்ராஜ்யத்தை பற்றித்தான் முதலில் சொன்னார்கள். அவர்கள் சொல்வதை வீடியோவில் பதிவு செய்து கொண்ட ரூபா, நேராக சசிகலாவின் ஜெயில் அறைக்குப் போயிருக்கிறார். சசிகலாவின் அறையில் டி.வி., பிரிட்ஜ் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. அவற்றை ரூபா வீடியோ எடுத்தார். சசிகலாவின் சிறை அறைக்கு முன்பு ஒரு வரவேற்பறை இருந்தது. அதையும் வீடியோ எடுத்தார் ரூபா. இதனால் சசிகலா கோபமானார். "நீ எப்படி எனது அறைக்குள் வர முடியும்' என கோபப்பட்ட சசிகலாவிடம், "நான் சிறைத்துறை அதிகாரி. எனக்கு உரிமையுள்ளது' என ரூபா கடுமையான குரலில் சொன்னார். "நீ என்னை சாதாரணமாக நினைத்துக் கொண்டாய். உன்னை என்ன செய்கிறேன் பார்' என சசி ஆவேசமாக, "அதற்குமுன் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை பார்க்கத்தானே போகிறீர்கள்' என சவால் விட்டு வந்தார் ரூபா. அதன்பிறகே, ரூபா தன் மேலதிகாரிகளுக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பினார்.

BBC :கத்தார் மீதான நிபந்தனைகளை கைவிட்டது செளதி கூட்டணி;

தனது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமான எந்த நடவடிக்கையினையும் ஏற்றுக்கொள்ள கத்தார் மறுக்கிறது கத்தார் மீதான தடையை முன்னெடுத்துள்ள நான்கு அரபு நாடுகள், கடந்த மாதம் தாங்கள் வைத்த 13 குறிப்பிட்ட நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என மேற்கொண்டு வலியுறுத்தப் போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகல், கத்தார் தற்போது ஆறு முக்கிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்க்க உறுதி பூணுவது, ஆத்திரமூட்டல் மற்றும் தூண்டுதல் செயல்களை கத்தார் முடிவுக்குக் கொண்டுவருவது போன்றவை இந்த கோரிக்கையின் முக்கிய அம்சங்களில் அடங்கும்.. தீவிரவாதிகளுக்கு உதவுவதாகக் கூறப்படுவதை மறுத்து வரும் கத்தாரிடம் இருந்து இதற்கு உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை. தனது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமான எந்த நடவடிக்கையினையும் ஏற்றுக்கொள்ள கத்தார் மறுக்கிறது.

கலைஞர் கைது . ஜெயாவின் வெறியாட்டம் .. கண்டித்த ஒரே ஒரு சினிமா நடிகன் கமலஹாசன்!

Saravanan Savadamuthu: கலைஞர் கருணாநிதியை நடு இரவில் ஜெயாவின் அடியாள் போலீஸ் முத்து கருப்பனும் முகமது அலியும் கைது செய்த வரலாறு நாடு அறிந்ததுதான் .  சுதாகரன் திருமணம் மற்றும் ஏராளமான சொத்து குவிப்பு டான்சி முறைகேடு போன்ற வழக்குகளால் கலைஞர் மீது அவர் கொண்ட கோபம் அவரை ஒரு வெறி பிடித்தவராக ஆக்கியிருந்தது . இறுதிவரை அந்த வெறி அடங்கவே இல்லை .   எதுவித முகாந்திரமும் இல்லாத ஒரு பொய்யான குற்றச்சாட்டில் கலைஞர்  நட்ட நடு இரவில்கைது செய்யப்பட்டார்.
அப்படி அராஜகமாக கைது செய்யப்பட்டபோது "சட்டம் தன் கடமையைச் செய்தது..." என்றார் வைகோ. "தி.மு.க. ஆட்சிக் காலத்தில் என்னையும் ஒரு நாள் இப்படித்தான் விடியற்காலையில் வந்து எழுப்பி கைது செய்தார்கள்..." என்று சப்புக் கட்டு கட்டினார் ராம்தாஸ்.. சூப்பர் ஸ்டார் ரஜினி வாயே திறக்கவில்லை. சோ ராமசாமியோ சட்டத்தின் முன்  அனைவரும் சமம் என்ற பொன் மொழியை உதிர்த்தார் .
"முத்தமிழ்வித்தகர்", "தமிழ்ச் சினிமாவின் முன்னோடி", "எங்களது கலையுலக பிதாமகன்" என்று தாத்தாவை அவருடைய கைதுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய தமிழ் சினிமா துறையின் அனைத்து சங்கங்களும் இந்த நேரத்தில் கையது, வாயது பொத்தி அமைதி காத்தன. ஆனால் அன்று மதியமே தன் வீட்டுத் தோட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன்.. "மூன்று முறை முதல்வராக இருந்த ஒரு பெரிய மனிதருக்கு சட்டப்படி அவருக்கு இருக்கும் உரிமையின்படி தனது கருத்தைச் சொல்வதற்கும், பேசுவதற்கும்கூட வாய்ப்பு வழங்கப்படாதது ஜனநாயகத்திற்கு விரோதமானது.." என்று கலைஞர்  கைதை வெளிப்படையாகவே கண்டித்தார்.

யாழ்ப்பாண தொல்லியல் ஆய்வில் அசைக்க முடியாத ஆதாரங்கள்... தமிழர் வரலாறு ...


தென்இந்தியப் படையெடுப்புகளின்போது, குடியேறியோர் அல்ல தமிழர்கள்; அவர்கள் அதற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாகரிகத்தில் சிறந்த வாழ்வியல் முறைமைகளுடனும் ஆட்சியதிகாரத்துடனும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள தொல்லியல் பொருள்கள் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துகின்றன.
கி.மு ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழ் இலக்கியங்களில் நாகநாடு என்றும் பாளி இலக்கியங்களில் நாகதீபம் என்று கூறப்படுவதன் வாயிலாக மட்டுமே நாம் வடஇலங்கை தொடர்பான வரலாற்றைக் காண்கின்றோம்.
நாகதீபம் என்பது அநுராதபுரத்துக்கு வடக்கில் அமைந்த பிரதேசம் என தமிழ்,பாளி மொழி இலக்கியங்களில் பிரதேச அமைவிடம் குறிப்பிடப்படுகின்றது.

காமராஜ் : அட.. மாட்டுக்கு கொடுக்கிற மரியாதையை மனுசனுக்குக் கொடுக்கக் கூடாதான்னேன்..!

prakash.jp: 1966-இல் 'பசு பாதுகாப்பு' சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய ஜனசங்க உறுப்பினர் ஒருவர், பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியைப் பார்த்து 'இதுபற்றி ஆளும் கட்சியின் கருத்து என்ன?' எனக் கேட்டார். அதற்கு சாஸ்திரி 'இதுபற்றி எம் கட்சியின் தலைவர் காமராஜர் பதிலளிப்பார்' என்று சொன்னார்.
காமராஜர் அளித்த பதில் இதோ..
'என்ன இப்போ.. பசுவுக்காக இவங்க ரொம்ப வருத்தப் படறாங்கன்னேன்..! மனுசனுக்குக் குந்த குடிசையில்ல.. கட்ட துணியில்ல.. அடுத்த வேளை சோத்துக்கு ஆலாப் பறக்கிறான். ஆனா இவுங்க பசு மாட்ட வச்சி பாலிடிக்ஸ் பண்ணப் பாக்குறாங்க..! அட.. மாட்டுக்கு கொடுக்கிற மரியாதையை மனுசனுக்குக் கொடுக்கக் கூடாதான்னேன்..! இவங்க பூர்வீகக் கதை நமக்குத் தெரியாதான்னேன்..! இந்த வன்முறைக் கும்பல்தானே தேசப்பிதா காந்தியடிகள் உயிரையே குடிச்சது..! இன்னும் யார் யார் உயிரைக் குடிக்க அலையிறாங்க..! எத்தனைப் பிரச்சனை நம்ம கண்ணு முன்னாலே கெடக்கு.. நாம இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு.. இந்த நிலைமையில இந்த ஜனசங்க ஆசாமிங்க நம்மை, காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துக்கிட்டுப் போறான்னேன்..!''

அதிமுகவுக்கு வாக்களித்தோர் பெருமைப்படவேண்டிய நேரம் : 2011 இல் 12.05 % ஆக இருந்த தொழில்வளர்ச்சி ...2017 இல் 1.64 % ஆக சரிந்திருக்கிறது

Divakar K  அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் பெருமையாக தங்கள் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.......
2011 ம் ஆண்டு,
12.05 % ஆக இருந்த தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி......

2017 ம் ஆண்டு,
1.64 % ஆக சரிந்திருக்கிறது என்ற தகவலை
மத்திய நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் வெளியிட்டிருக்கிறார்.......
2011 க்கு முன்பு பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு, சலுகைகளை வழங்கியதால், ஹூண்டாய், ஃபோர்ட் மோட்டார்ஸ் போன்ற பல புதிய நிறுவனங்களும், அவற்றுக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் ஏராளமான சிறிய நிறுவனங்களும் தலைநகரைச் சுற்றி உருவாகின.......
ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் டெட்ராய்டாக தமிழகம் திகழ்கிறது என்று பெருமையாகக் குறிப்பிடும் அளவுக்கு வேகமான வளர்ச்சி இருந்தது........
எல்லாம் 2011 வரை தான்......
ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறி விட்டது......
தொழிற்சாலைகளை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கத் தவறியதால், பல நிறுவனங்கள் ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்து விட்டன.......

புதன், 19 ஜூலை, 2017

மோடியின் கூட்டாளிகளுக்கு செல்லும் மக்கள் பணம்.

visil.in/ ஜோதிமணி ,:  காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு செய்தித் தொடர்பாளர். மோடி அரசு சத்தமில்லாமல் அதானி மின்சார நிறுவனம் 500கோடி ரூபாய் பயன்பெறும் வகையில் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடர்பான விதிகளை மாற்றியமைத்துள்ளது.
மேலும் அதானி குழுமத்தின் 1000கோடி ரூபாய் வரி ஏய்ப்பையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
இந்த இரண்டு கட்டுரைகளையும் புகழ்பெற்ற பொருளாதார அரசியல் வார இதழ் வெளியிட்டிருந்தது.
இதையொட்டி அந்த கட்டுரை பிரசுரத்திலிருந்து எடுக்கப்பட்டதோடு அதன் ஆசிரியரும் ராஜினமா செய்துள்ளார்.
முதலில் அதானிக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் சதுர அடி ஒரு ரூபாய்க்கு மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது வழங்கபட்டது.
அதை அவர் 8000ரூபாய்க்கு எட்டே மாதத்தில் விற்றார். இதில் 25000கோடி ஊழல் என்று சிஏஜி குறிப்பிட்டுள்ளது.
இதுபோல பல சலுகைகளை குஜராத் அரசு அவருக்கு வழங்கியது. அதானியின் தனி விமானத்தில் மோடி பறந்ததும், ஆயிரக்கணக்கான கோடிகள் தேர்தலில் இறைக்கப்பட்டதும் எல்லோரும் அறிந்த கதை தான்.
இந்த குஜராத் மாடல் ,மோடி பிரதமரானதும் இந்திய மாடலாக விரிவுபடுத்தப் பட்டது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள்.அதானி,பாபா ராம் தேவ் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
உலகமே தேறாது என்று கைவிட்ட ஆஸ்திரேலியா சுரங்கத்திற்காக மோடியே முன்நின்று அதானிக்கு 60,000ரூபாய் மக்கள் பணத்தை ஸ்டேட் பேங்க் வழங்க ஆவண செய்தார். மக்களின் எதிர்ப்பால் பிறகு இது கைவிடப்பட்டது.

இன்று கர்நாடகா, நாளை தமிழகம்....... தமிழக மக்களின் சுகாதாரம் காக்க, நீட்டை எதிர்ப்போம் !

சிவசங்கர் எஸ்.எஸ்: இன்று கர்நாடகா, நாளை தமிழகம்...
கர்நாடக மருத்துவத் துறை, உயர்கல்வி பயின்ற மருத்துவர்களுக்காக தத்தளிப்பதை இன்றைய 'ஆங்கில இந்து' நாளிதழ் முதல் பக்க செய்தியாக்கியுள்ளது.
சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்த திணறிய கர்நாடக மருத்துவத்துறை, இணையம் வாயிலாக பணியமர்த்த முடிவு செய்து அறிவித்தது.
ஒரு இளம் மயக்கவியல் நிபுணர், மாதம் ரூபாய் மூன்றரை லட்சம் ஊதியம் கேட்டுள்ளார். அவரது அனுபவம் ஒரு வருடம் தான். இப்படி மற்ற மருத்துவர்களும் கேட்ட தொகை, துறை செலவு செய்ய திட்டமிட்டுள்ள தொகையை விட அதிகம்.
மிகக் குறைவாக ஒரு மருத்துவர் கேட்டுள்ள தொகையே ரூபாய் ஒன்றரை லட்சம். அவரும் வட்டார அளவிலான பொது மருத்துவமனையில் பணிபுரிய மறுக்கிறார்.
இதே நேரத்தில் இன்னொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். தும்கூரு மாவட்ட மருத்துவமனையில் 26 ஆண்டுகால அனுபவத்தோடு பணிபுரியும் மயக்கவியல் நிபுணர் பெறும் சம்பளம் ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம்.
இந்த வித்தியாசம் இப்போது பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களிடம் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி கர்ணன் சிறையில் ... டி ஐ ஜி ரூபா தொலைகாட்சிகளில் கீரோயின்

Sivasankaran Saravanan · ரூபா என்ற காவல்துறை அதிகாரி தனது சக அதிகாரிகள் மீது ஊழல் புகாரை வைக்கிறார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தருகிறார் . அதைத்தொடர்ந்து அவர் பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். அரசியல்வாதிகள் பலரும் ஒட்டுமொத்த ஊடகங்களும் அவரை நேர்மையின் அடையாளமாக கொண்டாடுகிறார்கள். நீதியரசர் கர்ணன் சக நீதிபதிகள் மீது ஊழல் புகாரை முன்வைக்கிறார். அவருக்கு பைத்தியக்கார பட்டம் கட்டி அவரை கைது செய்துள்ளனர். அவருக்கு ஆதரவாக எந்த குரலையும் காணவில்லை. ஊழலை எதிர்க்கவேண்டுமென்றால் கூட இந்த நாட்டிலே ஒரு பிரிவினருக்குத்தான் அனுமதி உண்டு போல..!

மலேசியாவில் ஓங்கி ஒலிக்கும் பெரியாரின் குரல்! பட்டிதொட்டி எல்லாம் பரப்புரைகள் ..

அதி அசுரன்.
Kaattaaru: மலேசியாவில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு இடங்களில் திராவிடர் இயக்கப் பரப்புரைகள் நடைபெற்றன. திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அறிவுக்கரசு, மஞ்சை வசந்தன், இராம அன்பழகன், தோழர் மதிமாறன், பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் மலேசியாவில் நடந்த தமிழ் உணர்வாளர்கள் மாநாட்டுக்கு சென்றுள்ளனர்.
மாநாட்டுக் குழுவினர் மாநாடு முடிந்ததும் அந்நாட்டில் மேலும் சில இடங்களில் திராவிடர் இயக்கப் பரப்புரைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தோழர் பெரியார் காலத்திற்குப் பிறகு மீண்டும் மலேசிய மண்ணில் திராவிடர் கருத்தியல் பரவுவது பார்ப்பனர்களுக்குப் பயத்தை உண்டாக்கியது. பெரியாரியல் பரப்புரைகளைத் தடுக்க, வழக்கம் போலத் தமது ஏவல்படையான தமிழ்த்தேசியக் கும்பல் ஒன்றைக் களமிறக்கி விட்டுள்ளது. தமிழர் களம் என்ற அந்த அமைப்பும், அதன் ஆதரவாளர் களும் நமது தோழர்கள் பேசும் இடங்களில் சென்று குழப்பம் விளைவித்து வருகின்றனர்.
கிள்ளான் தெங்கு கிளானா மின் புத்தகசாலை மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வு தமிழ்த்தேசியம் பேசும் ஒரு கும்பலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. 28.06.17 ல் காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திலும் சலசலப்பை உண்டாக்கியுள்ளனர்.

சுத்தமான, கலப்படமில்லாத நாட்டு பன்றி ... மலேசியாவில் இருந்து ஒரு விசித்திர கோரிக்கை!

kaattaaru :“ஒரு பிராமணன் வயிற்றில் சூத்திரன் கொடுத்த உணவுடன் இறப்பின், அவன் அடுத்த பிறவியில் நாட்டுப்புறப் பன்றியாகப் பிறப்பான்.” ( வசிஷ்ட தர்மம்: இயல் 6, பா. 27-29)
‘சூத்திரர்களின் நிலை பற்றிய பிராமணியக் கொள்கை’ என்ற தலைப்பில் தோழர் அம்பேத்கர் எழுதியது. (அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 – இயல் 3)
ஆக, உங்கள் இந்து தர்மங்களின் படியேகூட, நாட்டுப்புறப் பன்றிகள் எல்லாம், பார்ப்பனர்களின் முன்னோர்கள்தானே? பித்ருக்கள் தானே? நியாயமாக, நீங்கள் உண்மையிலேயே இந்து மத தர்மங்களைப் பின்பற்றுவதாக இருந்தால், ஒவ்வொரு ஆண்டும், ஆவணி அவிட்டத்தன்று, நீங்களே உங்கள் முன்னோர்களான பன்றிகளுக்குப் பூணுால் அணிவித்திருக்க வேண்டும். உங்கள் நன்றி மறந்த செயலை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நினைவூட்டுகிறார்கள். அதற்கு ஏன் கோபம்?
த.பெ.தி.க தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நல்ல சுத்தமான, கலப்பு இல்லாத நாட்டுப்பன்றியாகப் பார்த்து பூணுால் போடுங்கப்பா.. இல்லேனா… ஆச்சாரம் கெட்டுப்போயிரும்…

டெல்லி.. தமிழக விவசாயிகளுடன் சேர்ந்துகொண்ட ராஜஸ்தான் விவசாயிகள்!

Special Correspondent FB Wing டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நான்காவது நாளாக கொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் போராட்டம் நடந்து வருவது அனைவரும் அறிந்தததே .. சென்ற முறை நாற்பது நாளுக்கு மேலாக மேலாடை இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தை கண்டு கொள்ளாத மோடி அரசு இந்த முறையும் விவசாயிகள் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை அனால் இன்று திடீர் திருப்பமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பிஜேபி மாநில அரசின் போலீஸ் குண்டு சுடப்பட்ட இறந்த விவசாயிகள் உறவினர்கள் மற்றும் மகன் மகள் கலந்து கொண்டனர் .அதில் மூன்று வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட தனது தந்தையின் அஸ்தி பானையுடன் வந்து உக்கார்ந்து இருந்தது பலரை கண்களின் கண்ணீரை வரவைத்தது..

கமலஹாசன் : ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிடுவது ..... கல்லுளி மங்கர்களே உங்களுக்கு தெரியவில்லையா?

வணக்கம்.
இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல.
அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்காளருக்கும் கூட.
ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம்.
ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ, அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச். ராஜாவோ, நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான்.
நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளிவீசுபவர்கள்... ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள்,...என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும், சிரிப்பையும் வரவைக்கிறது.
ஆதாரத்துடன் சொல்ல வேண்டுமாம்! அமைச்சர் கட்டளை இது.

விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பலிகடாவாக்கும் சூழ்ச்சிகள்

வினவு : 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தைத் தமது அரசு இரட்டிப்பாக்கப் போவதாக” அறிவித்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. “இதற்காக ஏழு அம்சங்களைக் கொண்ட ஒரு திட்டத்தை மோடி அரசு செயல்படுத்தி வருவதாக”
மோடி அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் வடமாநில விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
விளக்கமளித்திருக்கிறார், சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்.
“விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை வேண்டுமென”க் கோரி வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிராவிலும், மத்தியப் பிரதேசத்திலும் விவசாயிகள் கலகத்தில் இறங்கிய சூழ்நிலையில், இப்படிப்பட்டதொரு தேன் தடவிய அறிவிப்பைத் திரும்பத்திரும்பக் கூறி வருகிறது, மோடி அரசு. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்த அறிவிப்பு நனவாகிவிடுமா, குறு, சிறு விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பால் பலன் கிட்டுமா என்பதையெல்லாம் கீறிப் பார்க்கும் முன்பாக, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் மோடி அரசின் யோக்கியதையை உரசிப் பார்த்துவிடுவோம்.

புதிய தொழு நோயாளிகளில் 60% இந்தியர்கள் ! வல்லரசு கனவில் தெறிக்கும் அவமானம்!

வினவு : தொழுநோய், மலேரியா, அம்மை போன்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு குணப்படுத்த வாய்ப்புள்ள நோய்களையே கூட கட்டுப்படுத்த வக்கற்ற அரசு தான் வல்லரசு கனவில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
டந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய ஆறுமாத காலகட்டத்தில் மட்டும் இந்தியாவெங்கும் சுமார் 79,000 புதிய தொழு நோயாளிகள் கண்டறியப் பட்டுள்ளனர். அதிகபட்சமாக உத்திரபிரதேச மாநிலத்தில் சுமார் 13,423 பேருக்கும், பீகாரில் 12,742 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 8,000 பேருக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள மக்களில் பத்தாயிரத்துக்கு 8 பேரிடம் இந்நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு பத்தாயிரம் பேரில் ஒருவருக்கும் குறைவான தொழு நோய்த் தாக்கம் இருக்கும் நாடுகளில் அந்நோய் ஒழிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் என்கிற வரைமுறை ஒன்றை வகுத்துள்ளது. இதனடிப்படையில் 2005 -ம் ஆண்டே இந்தியாவில் தொழு நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக ஆரவாரமாக அறிவிக்கப்பட்டது. எனினும், சமீப ஆண்டுகளில் உலகளவில் கண்டறியப்படும் தொழு நோயாளிகளில் 60 சதவீதம் இந்தியாவில் கண்டறியப்படுகின்றது.

மாயாவதியின் பதவி விலகல் கடிதம் ஏற்கப்படாது! சட்ட சிக்கல்?

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி நேற்று ஜூலை 18 ஆம் தேதி மாநிலங்களவையில் தனக்கு முழுமையாக பேச வாய்ப்பளிக்கவில்லை என்ற கோபத்தில், ‘’நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று சொல்லி ஆக்ரோஷமாக வெளியேறினார். சொன்னபடியே தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் அனுப்பினார். மாயாவதி பதவி விலகியதன் மூலம் தலித்துகளின் தாக்குதலைப் பற்றி மக்கள் மன்றத்தில் விவாதிக்க பெரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். மாயாவதியை தலித் உரிமைகளை வென்றெடுக்கும் சாம்பியன் என்று இந்தி பத்திரிகைகள் புகழ்ந்துரைத்தன. இந்நிலையில் இன்று ஜூலை 19 ஆம் தேதி காலை, மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏன் என்று விசாரித்தபோது,

கோயம்பேடு சந்தை : சீல் வைக்கும் அதிகாரிகள்!


கோயம்பேடு சந்தை : சீல் வைக்கும் அதிகாரிகள்!

உயர்நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து கோயம்பேடு கடை வியாபாரிகள் சிலர் தாமாக முன் வந்து சொத்து வரி செலுத்தி வருகின்றனர்.
கோயம்பேட்டில் இயங்கி வரும் காய்கறி சந்தையில் சுமார் 2325 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 729 கடைகள் இரண்டரை கோடி வரை சொத்து வரி செலுத்தவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூலை-20 ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாத 729 கடைகளை மூடி சீல் வைத்து அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

சகாயம் விசாரணைக் குழுவை கலைக்க முடிவு : நீதிமன்றம்!


சகாயம் விசாரணைக் குழுவை கலைக்க முடிவு : நீதிமன்றம்!
மின்னம்பலம் : மதுரையில் கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்த சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையிலான விசாரனைக் குழுவை கலைப்பது குறித்து வருகிற ஜூலை 31ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் வெட்டி எடுப்பதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மதுரையில் கிரானைட் முறைகேடு பற்றி 3 மாதங்கள் விசாரணை நடத்தி, ரூ.1,11,000 கோடி அளவுக்கு கிரானைட் முறைகேடுகள் நடத்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சட்டசபைக்கு குட்காவுடன் வந்த ஸ்டாலின்!

தமிழக சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் இன்றும் வெளிநடப்பு செய்தனர். ’குட்கா சட்டவிரோதமாக விற்கப்படுகிறது’ என்பது குறித்து பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டசபை இருந்து வெளிநடப்பு செய்த ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: ‘சென்னையில் எந்தெந்த கடைகளில் குட்கா விற்கப்படுகிறது என்பது குறித்து திமுக ஆய்வு செய்தது. குட்காவை பெண்களும் குழந்தைகளும் விற்று வருகின்றனர். தடைசெய்யப்பட்ட குட்கா சென்னையில் உள்ள கடைகளில் தாராளமாக கிடைக்கிறது. இதனை சட்டசபையில் தெரிவித்தேன். ஆனால், இதுகுறித்து பேச சட்டசபையில் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே வெளிநடப்பு செய்தோம்’ என்று தெரிவித்தார்.

தெலங்கானா மாணவர் வீட்டுப்பாடங்களுக்கு தடை .. புத்தக சுமையை குறைக்கும் முயற்சி!

மின்னம்பலம் : தெலங்கானாவில் புத்தக சுமையை குறைக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்க தடை விதித்து அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளி குழந்தைகளின் புத்தகப் பை தொடர்பான சட்டம் 2006ன்படி புத்தகப் பையின் சுமை மாணவர்களின் எடையை விட 10 சதவீதம் அளவுக்கு மேல் இருக்கக்கூடாது என்பதாகும். ஆனால் இதை எந்த பள்ளிகளும் பின்பற்றுவதில்லை. அதன்படி தற்போதெல்லாம் ஆரம்ப பள்ளி மாணவர்கள் 6 கிலோவிலிருந்து 12 கிலோ எடையுள்ள பைகளையும், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 17 கிலோ வரை பள்ளி பைகளையும் சுமப்பதாக தெரியவந்துள்ளது. புத்தக சுமை மட்டுமின்றி பையில் விளையாட்டு பொருட்கள் கொண்டு வருவது, தண்ணீர் பாட்டில் சுமப்பது என கூடுதல் சுமை அதிகரிக்கிறது. குறிப்பிட்ட எடைக்கு அதிகமாகவே மாணவர்கள் தங்கள் புத்தக பையை சுமப்பதால் கூன் விழுவதோடு அவர்களது முதுகெலும்பும் பாதிப்படைகிறது.

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கோரி மாநிலங்கள் அவையில் தமிழக எம்பிக்கள் கூட்டாக குரல்!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) அதிமுக, திமுக எம்பி.க்கள் கூட்டாக குரல் எழுப்பினர்.
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகத்திலிருந்து வெகு குறைந்தளவிலான மாணவர்களே தேர்வு பெற்றனர். அவர்களும் பெரிய அளவில் மதிப்பெண் எடுக்கவில்லை. சொற்பமான அளவிலான மாணவர்களே நல்ல மதிப்பெண் எடுத்திருந்தனர்.
இந்நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) அதிமுக திமுக எம்பி.க்கள் கூட்டாக குரல் எழுப்பினர்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்.பி. ஏ.கே.செல்வராஜ், திமுக எம்.பி., கனிமொழி ஆகியோர் இணைந்து தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரினர்.

தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ 55 ஆயிரத்தில் இருந்து ரூ 1.05 லட்சமாக உயர்வு இரு மடங்கு உயர்வு ...

தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் இரு மடங்கு உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு சென்னை: தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் இதனை அறிவித்தார். பயணப்படி உள்ளிட்ட படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்த சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களின் மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கர்நாடகா தனிநாடா? தனி கொடியை வடிவமைக்க குழு

மின்னம்பலம் : கர்நாடக மாநிலத்துக்கென்று புதிய கொடி ஒன்றை உருவாக்குவது குறித்து ஆராய்வதற்காக அம்மாநில முதல்வர் சித்தராமையா, ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு அப்போதைய பாஜக ஆட்சி காலத்தில், கர்நாடக மாநிலத்துக்கென மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தைக் கொண்ட தனிக்கொடியை உருவாக்க வேண்டுமென அம்மாநிலத்தில் பரவலாக கோரிக்கை எழுந்தது. ஆனால், இந்த கோரிக்கையை அப்போதைய பாஜக அரசு நிராகரித்துவிட்டது. மேலும், ‘மாநிலத்துக்கென பிரத்யேகமான கொடி உருவாக்குதல் நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது’ என்று உயர் நீதிமன்றத்திலும் தெரிவித்தது.
இந்த நிலையில் நேற்று ஜூலை 18ஆம் தேதி கர்நாடக மாநிலத்துக்கென தனியாக ஒரு கொடியை உருவாக்க, அம்மாநில கலாசாரத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகள், கல்வியாளர்கள் என ஒன்பது பேர் அடங்கிய குழுவைக் கர்நாடக அரசு அமைத்துள்ளது.

மன்னார்குடி .. சீதனம் கேட்டு டாக்டர் மனைவி அடித்து கொலை!

மன்னார்குடி: மன்னார்குடியில், வரதட்சணை கேட்டு டாக்டர் மனைவி அடித்து கொலை செய்யப்பட்டார் என்று புகார் கூறி உறவினர்கள்  7 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் முத்தழகன் (57). இவரது மகன் இளஞ்சேரன் (32).  இவர் திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இளஞ்சேரனுக்கும் சேரன்குளம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு  பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனுடைய மகள் திவ்யா (25) என்பவருக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு முத்துக்கிருஷ்ணன் (3) என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு  திவ்யா கணவருடைய வீட்டில் படுக்கை அறையில் காயங்களுடன்  மயங்கி கிடந்தார். கணவருடைய உறவினர்கள் திவ்யாவை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். திவ்யாவை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

கமல் ஹாசன் அரசியல் ஆரம்பம் : தேடா பாதைகள் தென்படா.. வாடா தோழா என்னுடன்


தமிழக அரசின் அனைத்துத்துறைகளிலும் ஊழல் என்று நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் விமர்சித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் அநேக அமைச்சர்கள் கமலுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பொதுவெளியில் பயன்படுத்தினர்.
இதற்கிடையில் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டும் தொணியில் பேசுவதை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கண்டித்தார்.
மேலும் வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோரும் அமைச்சர்களின் அத்துமீறிய பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர். திரையுலகத்தில் நடிகர்கள் சங்கச் செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகர் பார்த்திபன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் கமலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று ஜூலை 18ஆம் தேதி இரவு பத்து மணியளவில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடி அரசியல் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
‘இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம் மன்னரில்லை
தோற்று இறந்தால் போராளி முடிவெடுத்தால் யாம் முதல்வர்…. …. ….
தேடா பாதைகள் தென்படா வாடா தோழா என்னுடன்…’ என்பதுதான் அந்த கவிதை.

'விவசாயத்துக்கு ஆதரவா போராடறது தப்பா ? குண்டர் சட்டத்தில் கைதான வளர்மதி தாயார்


விகடன் :'என் பொண்ணை நெனைச்சு ரொம்ப பெருமையா இருக்கு. அதேசமயம் அரசாங்கத்தை நெனைச்சு அவமானமா இருக்கு. தினம்தோறும் எவ்வளவோ கொலை, கொள்ளைங்க இந்த நாட்டுல நடக்குது. பச்சைக் குழந்தைகளையே பலாத்காரம் பண்றாங்க. ரவுடிகளும் போக்கிரிகளும் நாட்டை நாசம் பண்றாங்க. அவங்களையெல்லாம் எதுவும் செய்ய முடியாத போலீஸ்தான், என் மகளைக் கைது பண்ணி குண்டாஸ்ல அடைச்சிருக்கு. என் பிள்ளை சிறையில் என்ன பாடுபடுமோனு நினைக்கிறப்போ மனசு கெடந்து அடிச்சுக்குது. மூலையில் உட்கார்ந்து ஓ....னு அழணும்போல இருக்கு. ஆனால், வளர்மதி அம்மாவா யோசிச்சுப் பார்த்தா இதெல்லாம் தூசிக்குச் சமம். குண்டாஸ் மட்டுமில்லே, வேற எந்தச் சட்டம் போட்டு ஒடுக்கினாலும் நியாயத்துக்கான என் மகளின் போராட்டம் ஓயாது” எனத் தெளிவாகப் பேசுகிறார் கமலா. அரசுக்கு எதிராகக் கலகம் செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, குண்டாஸில் அடைக்கப்பட்டிருக்கும் வளர்மதியின் தாயார் கமலா.
சேலம் மாவட்டம், வீராணத்தை அடுத்து இருக்கிறது பள்ளிகொடுத்தானூர். அமைதியான விவசாய பூமி, மீடியாக்கள் படையெடுப்பால் பரபரப்பு பூமியாக மாறியுள்ளது.