ஜாப்னா முஸ்லீம் : நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனது பாதையிலேயே பயணிக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் இந்தியாவிலிருந்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
"நான் முன்னெடுத்த வேலைத்திட்டங்களையும், நான் ஆரம்பிக்கவிருந்த அபிவிருத்திகளையும் முன்கொண்டு செல்ல தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திடசங்கற்பம் பூண்டுள்ளார்.
ஞாயிறு, 29 டிசம்பர், 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா போட்ட பாதையில் பயணிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகே!
மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய அரசோடு பேசுவேன் - மருத்துவர் அர்ச்சுனா ராமநாதன் எம்பி
Ramanathan Archchuna : யாழ்ப்பாண மீனவர் சமூகத்தினுடைய பிரச்சனைகள் தொடர்பாக தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதிகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்த வண்ணமே இருந்தது.
அதனால் அவர்கள் தொடர்பில் சுகாதாரத்துக்கு அடுத்ததாக அவர்கள் பிரச்சனைகளை கேட்டு அறிவதற்கு முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடினேன்.
இது சம்பந்தமான மேலதிக தகவல்கள் எனது youtube தளத்தில் பதிவிட்டுள்ளேன்.
நன்றி
விமான விபத்து – 167 பேர் உயிரிழப்பு.. தென்கொரியாவில் விமானம் தரை இறங்கும்போது ..
தினமணி : தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 167 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
ராமதாஸ் Vs அன்புமணி: மோதலுக்கு முன் தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது என்ன? யார் இந்த முகுந்தன்?
minnambalam.com -Aara : “பாமக பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோர் பேசி முடித்த நிலையில் நன்றியுரைக்கு முன்பாக… டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ஒரு அறிவிப்பும் அதற்கு பகிரங்கமாக அன்புமணி தெரிவித்த எதிர்ப்பும்தான் இன்று அரசியல் வட்டாரத்தில் ஹாட்டான விவாதமாக மாறி இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தனை நியமிக்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அறிவித்தபோது கூட அந்த முகுந்தன் மேடை ஏறவில்லை.
ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை வாங்கிய அன்புமணி, ‘அவர் கட்சிக்கு வந்தே நாலு மாசம் தான் ஆகுது. அவருக்கு என்ன அனுபவம் இருக்கப் போகுது. அவருக்கு எதுக்கு இந்த பதவி?’ என்று கேட்க டாக்டர் ராமதாஸ் சூடாகிவிட்டார்.
‘இது என் கட்சி. நான் சொல்வது தான் இங்கே நடக்கும். யாருக்கு பிடிக்கவில்லையோ வெளியே போ’ என்று ஆவேசமாகவே தெரிவித்தார்.