சனி, 18 ஏப்ரல், 2020

கொரோனா இறப்பு இழப்பீட்டு தொகை .. ஸ்டாலின் கூற்று சரியா? ஒரு பொருளாதார ஆலோசகரின் ...

Karthikeyan Fastura : கொரோனா இறப்புக்கு அரசு கொடுக்க வேண்டிய
இழப்பீட்டுத் தொகை பற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமீபத்திய அறிக்கை பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஒரு பொருளாதார ஆலோசகராக எனது பார்வையில் இதில் எந்த பிழையும் இருப்பதாக தெரியவில்லை. கொரோனாவை பொருத்தவரை மக்கள் மீது உள்ள தவறுகளை விட அரசாங்கத்தின் தவறுகள் அதிகமாகவும் முதன்மையாகவும் உள்ளது.
ஒரு அரசாங்கம் இப்படியான ஒரு வைரல் ஃபீவர் உலகமெங்கும் பரவி வருகிறது என்று அறியும்போது விமான நிலையங்களில் துறைமுகங்களில் தேசத்தின் எல்லைகளில் உள்ள சாவடிகளில் மக்களின் போக்குவரத்தை குறைத்து இருக்க வேண்டும். அல்லது சிறிது காலத்திற்கு முற்றிலுமாக போக்குவரத்தை இன்று செய்ததைப் போல தடை செய்திருக்க வேண்டும். மேலும் அங்கேயே ஒரு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து கண்காணிக்க வேண்டும்.

பரிசோதனைக் கருவிகளின் விலை ஓடிசாவில் 337 ரூ ஆனால் தமிழகத்தில் 600 ரூ ..

மின்னம்பலம் : கொரோனா பரிசோதனை கருவிகளின் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பரிசோதனைக் கருவிகளின் விலை என்ன? ஸ்டாலின்
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை விரைவில் கண்டறிவதற்காக சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான ரேபிட் கிட் கருவிகள் வரவழைக்கப்படுகின்றன. இதன்மூலம் அரை மணி நேரத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோ தனது ட்விட்டர் பக்கத்தில், “தென்கொரியா நிறுவனத்திடமிருந்து 75,000 உயர்தர ரேபிட் கிட் கருவிகளை தலா 337 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியோடு வாங்கினோம். இது மிகவும் குறைந்த விலையில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். தென்கொரியாவுக்கான இந்திய தூதர் மற்றும் தென்கொரிய தூதர் ஆகியோரை தொடர்ச்சியாக தொடர்புகொண்டு இந்த ரேபிட் கிட்களை வாங்கியுள்ளோம் எனவும் கூறினார்.

ரேப்பிட் டெஸ்ட் கரோனா கிட் மூலம் சோதனை ஆரம்பம் . Rapid test kid..

nakkheeran.in - ராஜ்ப்ரியன் ; கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழகரசு ரேபிட் கிட்களை பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்துக்கு 400 கிட்களும், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 300 கிட்கள், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 300 கிட்கள் என அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தைவிட இராணிப்பேட்டை கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்துக்கு 300 கிட்கள் மட்டும் அனுப்பியது சுகாதார துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

ஊரடங்கு சென்னையில் 79 சதவிகிதம் குறைந்த குற்றங்கள்!

 மின்னம்பலம் :  கொரோனாவின் முதல் ஊரடங்கு காலத்தில் சென்னை
நகரத்தில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் பெரிய அளவில் குறைந்துள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 25-மார்ச் 25ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை ஒப்பிடும்போது, முதல் ஊரடங்கு காலகட்டமான மார்ச் 25-ஏப்ரல் 15 வரை 79 சதவிகிதம் குற்றங்கள் குறைந்துள்ளன.
முதல் ஊரடங்கு காலத்தில் ஐந்து கொலைகள், ஒரு வழிப்பறி, 4 கொள்ளை சம்பவம், 12 வீட்டை உடைத்து திருடியது, பிக்பாக்கெட் உள்ளிட்ட 49 சாதாரண திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதே சமயம் பிப்ரவரி-மார்ச் காலகட்டத்தில் 9 கொலைகள், 1 வழிப்பறி, 16 கொள்ளை சம்பவம், 29 வீட்டை உடைத்து திருடுதல், 263 சாதாரண திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

PM Cares அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல . வழிப்பறி கொள்ளைதான்

உண்மை கடைசியில் வீதிக்கு வந்துவிட்டது.
இந்த PM Cares எனப்படும் சேரிட்டபிள் ட்ரஸ்ட் சமீபத்தில் பிரதமர் மோடியால் அறிவிக்கப் பட்டது. இது அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல.. ஆயிரக்கணக்கான கோடி பணங்கள் இந்த பிஎம் கேர்ஸ் மூலம் நாட்டின் கொள்ளை நோய் பாதிப்புக்காக திரட்டப் பட்டிருக்கிறது. இதற்கு வழங்கும் பணம் அனைத்தும் வருமான வரி விலக்குக்கு உட்பட்டது. அதாவது.. அரசுக்கு வர வேண்டிய இந்த நிவாரணத் தொகை தனியார் துவங்கிய ஒரு சேரிட்டபிள் ட்ரஸ்ட்டுக்கு போகிறது. அதாவது இதை மத்திய தணிக்கைக் குழு எனப்படும் CAG தணிக்கை செய்யாது.
தனியான ஆடிட்டர்கள்தான் இந்த நிதியை ஆடிட் செய்வார்கள்.
கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களது “கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு“ (Corporate Social Responsibility - CSR) பணங்களை இந்த தனியார் கணக்கில்தான் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களும் தாங்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை இந்த தனியார் கணக்குக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியாக எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியும் வழக்கமாக அரசுக்கு வழங்க வேண்டிய தங்கள் லாபத்தில் இரண்டு சதவீதமான CSR நிதியை இந்த PM Cares கணக்கில் சேர்த்து தங்களது கடமையை முடித்துக் கொண்டு விடுகிறார்கள்.

இன்று. ஜெயகாந்தனின் மூன்றாமாண்டு நினைவு நாள்.


இன்று. ஜே.கே.வின் மூன்றாமாண்டு நினைவு நாள்...
ஒரு பிரபலமான எழுத்தாளரோடு பேசிக்கொண்டிருக்கையில், அவர் சொன்னார்:
‘‘ஜெயகாந்தன் ஊரில் எழுத்தாளனாக இல்லாமல் வெறுமனே கூலிவேலை பார்த்திருந்தாலும் இப்படியேதான் இருந்திருப்பார்’’
‘‘எப்படி?’’
‘‘அறச்சீற்றம் கொண்டவனாக, தன்னெதிரே நடக்கும் சமூக அநீதிக்கு எட்டி அடிப்பவனாக, அடிக்கடி முரண்படுபவனாக’’ அவர் பேசிக் கொண்டேப் போனார். நான் இடையே நின்று கொண்டேன்.
இது ஒரு மனிதனின் இயல்பு, தான் எதுவாய் ஆனபோதும், எந்தப் பூச்சையும் தன்மேல் பூசிக் கொள்ளாமல் அப்படியே இருப்பது. அப்படித்தான் தன் வாழ்வின் இறுதி நாள் வரை ஜே.கே. இருந்ததாகத் தோன்றுகிறது.
கடந்த எட்டாண்டுகளாக எந்த மனிதர்களிடமும் பௌதீக தொடுதல்கூட இன்றி இருந்தார் அவர். ஆனாலும் தமிழ் வாசகர்களும், எழுத்தாளர்களும் தங்கள் உரையாடல்களில், விவாதங்களில், எழுத்தில், அவரைத் தொடாமல் இருந்ததில்லை.

அமெரிக்காவில் ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவ உயிரழப்பு ,,, வீடியோ


latest tamil newsதினமலர் :வாஷிங்டன்: கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 4,591 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு முன் அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,569 பேர் உயிரிழந்தனர். தினமும் அதிகரிக்கும் உயரிழப்பால் அமெரிக்க மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவுக்கு புதிதாக 29,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை அங்கு 7 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 37,000க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்
நியூயார்க் நகரில் மட்டும் கடந்த வாரத்தில் 3,778 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 22, 179 பேரும், ஸ்பெயினில் 19,130 பேரும், பிரான்ஸில் 17,920 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளன iv>

நூலிழையில் தொங்கும் இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு!

சிறப்புச் செய்தி: நூலிழையில் தொங்கும் இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு!மின்னம்பலம் - ;ரகுநாத் :
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான மருத்துவக் கட்டமைப்பு நம்மிடம் இல்லாத நிலையில், போதிய அளவில் பாதுகாப்பு உபகரணங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளை உடனடியாக உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தயாரிப்புகள் நடந்துகொண்டு இருக்கின்றன. மறுபுறம், ஊரடங்கால் வேலை மற்றும் வருமானத்தை இழந்தவர்களுக்கு மிகவும் சொற்பமான அளவிலேயே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது எனும் விமர்சனமும், முடக்கப்பட்ட பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கு அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் பற்றிய விவாதங்களும் நடந்து வருகின்றன.

டாஸ்மாக் 2 மணி நேரம் திறக்க கோரிய மனு தள்ளுபடி! குடிகாரர்கள் அதிர்ச்சி ..?

tasmac9814091334dinamani.com/ சென்னை: தமிழகத்தில் மதுபோதைக்கு அடிமையானவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுபான கடைகளை தினமும் 2 மணி நேரம் திறக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சென்னை சூளைமேட்டைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ்.ஸ்டாலின் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் பல ஆண்டுகளாக அரசே மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த டாஸ்மாக் மதுபான கடைகளை மூடக் கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் அரசு மதுபானக் கடைகளைத் தொடா்ந்து நடத்தி வருவதால் தமிழகத்தைச் சோ்ந்த பலரும் போதைக்கு அடிமையாகி உள்ளனா்.

இப்ப லு லு vs தமிழச்சி விஷயத்துக்கு வருவோம் (அப்படீன்னா?)

Devi Somasundaram : ஒரு விஷயத்துக்கு இரண்டு பக்கம் உண்டு . வினை ,எதிர் வினை ..எதிர் வினை நியாயமான முறையில் இல்லன்னு சொன்னா அது வினைய ஆதரிப்பதா அர்த்தம் இல்லை..உதாரணமா மரண தண்டனைய எதிர்க்கிறோம் .அதனால வன்புணர்வ ஆதரிக்கிறோம் என்று அர்த்தம் இல்லை ..எதிர் வினையும் வினை மாதிரியே தவறா இருக்குன்னு சொல்கிறோம் .
ஒரு கொலை நடந்து இருக்கு ,ஒருவர குற்றவாளின்னு சொல்றிங்கனு வச்சுப்போம் .அவர் போலியா குற்றம் சாட்டப் படுகிறார் .இது சரி இல்லன்னு சொன்னா அது கொலைக்கு ஆதரவா ? ...
நீ செய்றது தப்புன்னு சொன்னா உடனே நீ தப்ப ஆதரிக்கிறன்னு மடை மாத்றது பகுத்தறிவு இல்லை. நம்ம மேல பழி வந்துடும் ,நம் அறிவு கேள்வி குறி ஆகிடும் என்ற பதட்டம்.
அபிராமி விஷயத்தில் தம்பிகள் இதை தான் செய்தார்கள் .அபிராமி செய்த கொலைக்கு அவள் குடும்பமும் , சமூகம் கூட காரணம் என்று சொன்ன போது கொலைய ஆதரிக்கிற கொலைய ஆதரிக்கிறன்னு கூவுனாங்க ..
இங்க நல்லவன் மாதிரி கூவிட்டு சைல்ட் போர்ன் பாக்ற சில்றைக்ள விட்றுவோம் . அவர்கள் தீர்வ தேடுபவர் இல்லை ..தன் தப்புக்கு இன்னொருத்தர கை காட்ற யோக்கிய சிகாமணிகள் ...
இப்ப லு லு vs தமிழச்சி விஷயத்துக்கு வருவோம் ...
நீ லு லு வ ஆதரிக்கிறன்னு மடை மாற்றியதன் மூலம் தமிழச்சியோட தவற நியாயப்படுத்தும் செயலை செய்தவர்களுக்கு கடைசி வரை அவர்கள் தப்பு புரிய போவதில்ல்லை .
சரி இத்தனை சமூக அக்கறை உள்ள இவர்கள் எவனாச்சும் குடிக்கிறேன்னு போஸ்ட் போட்டப்ப குடிக்காத நல்லதில்லன்னு சொன்னார்களா ? .ஏன் சொல்லவில்லை.

Serum Institute of India கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது

india may get a viable Covid-19 vaccine by the second quarter of 2022, ahead of the original estimated timeline of late 2022, says Adar Poonawalla, chief executive officer of Serum Institute of India (SII), the world’s largest manufacturer of vaccines by number of does produced
Kumaresan Asak: புனே நகரில் இயங்கிவரும் குருதி ஊனீர் நிறுவனம் (Serum Institute of India) கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது. சோதனைக் கூட விலங்குகளின் உடலில் செலுத்திப் பார்க்கும் சோதனைகள் தொடங்கிவிட்டதாகவும், 2021க்குள் மருந்து தயாராகிவிடும் என்றும் கூறுகிறார் இந்தத் தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆடார் புனாவாலா. “இதற்கு நாங்கள் காப்புரிமை பெறப்போவதில்லை. எங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குத் தயாரித்து விநியோகிப்போம்,” என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
குஜராத் உயிரித்தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் (Gujarat Biotechnology Research Centre - GBRC) அறிவியலாளர்கள் கொரோனா மரபணுப் பின்னலமைப்பைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட திசுக்களை மரபணுப் பின்னல் ஆய்வுக்கு உட்படுத்தி இதைச் சாதித்திருக்கிறார்கள் இந்த அரசுத்துறை மையத்தின் வல்லுநர்கள். சிகிச்சை, தடுப்பு இரண்டுக்குமான மருந்துகளைக் கண்டுபிடிப்பதை நோக்கிச் செல்வதில் இது ஒரு முக்கியமான அடிவைப்பு.

பெங்களுரில் இருந்து வெளிவரும் தின சுடர் பத்திரிகை நிறுவனர் ஐயா பா.சு.மணி

Susairaj Babu : தமிழகத்திற்கு அப்பால்....
கன்னட பத்திரிகை உலகின்
ஜாம்பவானாகிய பா.சு.மணி அவர்கள்.
பெங்களூரு நகரில் இருந்து வெளியாகும் ஒரே தமிழ் மாலை நாளிதழான தினச்சுடர் ( தற்பொழுது கிருஷ்ணகிரி பதிப்பும் வெளி வந்து கொண்டிருக்கிறது)பத்திரிகையின் நிருவனர் ஐயா பா.சு.மணி
தமிழர்கள் பெருவாரியாக பெங்களூரு,கோலார் தங்க வயல்,மைசூர்,பத்ராவதி,சாமராஜ்நகர் போன்ற மாவட்டங்களில் பரவி இருந்த்தினால் தமிழுக்கென்று மாலைப் பத்திரிகை வேண்டும் என்ற எண்ணத்தில், 1964ம் ஆண்டு தினச்சுடர் பத்திரிகையை பெங்களூருவில் தொடங்கியவர் பா.சு.மணி. மணி அவர்களின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் பள்ளிவாசல் பட்டியில் பிறந்தவர். தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் சி. பா. ஆதித்தனாரின் உறவினர்.
கருநாடகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பிரிந்திருந்த தமிழர்களை தினச்சுடர் மூலம் ஒன்றினைத்த சாதனையாளர் ஐயா மணி அவர்கள்.
தினத்தந்தி, மாலை முரசு ஆகிய நாளிதழ்களில் செய்தி ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு மாலை நாளிதழை தொடங்கும் யோசனையை கொடுத்தது. மேலும், முன்னாள் முதல்வர் காமராஜரும், மணி அவர்களின் இந்த முயற்சிக்கு ஊக்கம் கொடுத்ததாக கூறப்படுவதுண்டு.

ஏப்ரல் 20 முதல் சுங்கச்சாவடிகள் இயங்க மத்திய அரசு அனுமதி..!

 COVID19 - Lockdown - TollPlaza issueநக்கீரன் : உலகத்தை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த மாதம் கரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, சுங்கச்சாவடி கட்டண வசூல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சா் நிதின் கட்கரி அறிவித்தார்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

இந்துத்வாக்களுக்கு ஐக்கிய அரபு குடியரசு எச்சரிக்கை . நம் நாட்டில் இருந்து கொண்டு ...

Bhasheer Ahamed : அரபு நாடுகளுக்கு பிழைக்க போன பல லட்சம் இந்தியர்களில் மிக மிக சொற்பமான ஆட்கள் மட்டுமே மத வெறி சிந்தனை உள்ள காவி
சங்கிகள் , அந்த சில காவி சங்கிகள் செய்த & செய்யும் மத வெறி பிரச்சாரத்தால் பல லட்சம் அப்பாவி இந்திய தொழிலாளர்கள் பாதிக்க படுவார்கள்
இப்போது தான் அரபி காரர்கள் தூக்கத்தில் இருந்து முழிச்சி இருக்கிறார்கள் போல
அவங்க நாட்டிற்கு கடந்த வருடம் போன குஜராத் வளர்ச்சி நாயகனுக்கு உலகிலேயே உயரிய விருது எல்லாம் கொடுத்து கவுரவித்தார்கள் , வளர்ச்சி நாயகன் ஒரு சூப்பர் சங்கி மங்கி என்பது அரபி காரர்களுக்கு தெரியாதா ?
அரபு நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களால் நமது இந்திய நாட்டிற்கு ஒரு வருடத்தில் கிடைக்கும் அண்ணிய செலாவனி பணம் 55 பில்லியன் டாலர்கள்

மருத்துவர்களுக்கு .. மயானத்தில் இடம் தர மறுத்தவர்களுக்கு ஒரு மருத்துவரின் ...


Drprakash Surgeon Thanjavur : நேற்று குடல் ஓட்டை விழுந்து
அதனால் சீல் பிடித்து குழந்தையின் கர்ப்ப பை முழுவதும்
சீல் பிடித்து இருந்ததை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தோம் . இது முழுக்க முழுக்க infection தான் . அதற்கு பிறகு icu சென்று ஒரு குழந்தைக்கு நுரைஈரல் முழுவதும் சீல் பிடித்து , அதை ஊசி மூலம் எடுக்க முடியாததால் அறுவை சிகிச்சை நிபுணர் என்னை அழைத்தனர். காச நோயாளியான தனது தாத்தா மூலம் இந்த குழந்தைக்கு கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது
கண்டிப்பாக அந்த சீலில் காச நோய் கிருமி இருக்கும்
இதற்கு தீர்வு icd எனப்படும் சிகிச்சை தான் விலா எலும்புக்கு நடுவில் பிளாஸ்டிக் tube மூலமாக அந்த சீலை எடுக்க வேண்டும் / "என் மூஞ்சில இருமி டாத பாப்பா "னு சொல்லிட்டு Procedure ஆரம்பித்தேன்
Tube நுரை ஈரல அருகில் சென்றதும் துர்நாற்றமும் , சலமும் என் மீதும் செவிலியர் மீதும் தெறித்தது துர்நாற்றத்தில் மூச்சு விட முடியவில்லை , கண்டிப்பாக அதில் காச நோய் கிருமி இருக்கும் . பிறகு tube வழியாக சீல் வடிய தொடங்கியது ,
வடிந்த சீலை ஒரு ஊசியில் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார் பயிற்சி மருத்துவர் மாஸ்க்கை கலட்டி விட்டு முகத்தை கழுவி விட்டு மற்ற வேலைகளை பார்த்தேன்
வீடு வரும் வரை காச நோய் தொற்று ஏற்பட்டு 9 மாதங்கள் டிபி மாத்திரை சாப்பிட்ட மருத்துவ நண்பன் ஞாபகம் வந்து போனது ...
ஏதோ கொரோனா என்ற கிருமி வந்த பிறகு தான் எங்களுக்கு infection வருகிறது என்று இல்லை.

சுவாதி இறப்புக்கு 3 கோடி இழப்பீடு? Swathi’s parents seek compensation of 3 crore

LR Jagadheesan : ஒரு உயிரின் விலை ஒரு கோடியா? அதெப்படி கேட்கப்போச்சு?
ஆஹா ஊஹூ என்று நேற்றுமுதல் ஓங்காரமிடும்
உயர்குலத்தோரின் பாதார விந்தங்களில் பாமரன் அடியேன் பணிந்து சமர்ப்பிக்கும் விக்ஞாபணம் இந்த செய்தி.
தேவரீர் அருள் கூர்ந்து இந்த செய்தியை முழுமையாய் படிக்கவும். படித்தபின் தயை கூர்ந்து பெரிய மனுஷாளெல்லாம் கூடி உங்கள் பேரறிவுக்கும் பேராற்றலுக்கும் பெருங்கருணைக்கும் ஏற்றபடி கொரோனா கொள்ளைநோயில் பலியானவர்களின் உயிருக்கு என்ன விலை நிர்ணயிக்கலாம் என்பதை ஏகோபித்து அறிவித்தால் நல்லது. ஆளுக்கு மூன்றுகோடி தராவிட்டாலும் பரவாயில்லை. இறந்தவர் வர்ணத்துக்கேற்ப விலை நிர்ணயித்து அறிவிக்க வேண்டுமாய் தாள் பணிந்து தெண்டனிட்டு கேட்டுக்கொள்கிறோம்
https://www.thehindu.com/news/national/tamil-nadu/swathis-parents-seek-compensation-of-3-crore/article19994536.ece?fbclid=IwAR3cKTxmOzC9jO9T9U0Xp32HfpNaikW19FLp5mTWIA1Z3osa_Ih-Ex6lH6A 

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை


தினத்தந்தி :சென்னை, தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களாக கொரோனா பாதிப்பு 40 -க்கும் கீழே இருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 180-ல் இருந்து 283 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு

   வீரகேசரி : கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா வைரசினால் 3.3 மில்லியன் பேர் உயிரிழப்பார்கள் என ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1.2 பில்லியன் மக்கள் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. தீவிர சமூகவிலக்கல் காணப்பட்டால் கூட 122 மில்லியன் பேர் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என ஐநா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது

வெறும் 24000 பரிசோதனை கருவிகள்தான் தமிழகத்துக்கு? Rapid test kid

cm_edappadi_palanisamyதினமணி : சேலம் மாவட்டத்தில் கரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக முதல்வர் பழனிசாமி  தகவல் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
சேலத்தில் 9 பகுதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 24 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சேலத்தில் கரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. 
மாவட்ட நிர்வாகம் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறது. 98% குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் பொருள்கள் வழங்கப்பட்டு விட்டன. சேலத்தில் 78 மளிகைக் கடைகள் மூலமாக பொருள்கள் மக்களுக்கு வீட்டிற்குச் சென்று வழங்கப்படுகின்றன. அம்மா உணவகத்தில் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 11,259 பேர் உணவருந்துகின்றனர்.

ஊடகங்களின் சமுக பொறுப்பு

Devi Somasundaram : சமூக பொறுப்பு .
சோஷியல் கமிட்மெண்ட் என்பது ஒவ்வொரு தனி நபருக்கும் தேவை ..நாம பேசும் செய்தி உண்மையாய் இருந்தாலும் அதன் பொருட்டு தீமை விளையும் என்றால் அதை பேசக் கூடாது ( சமீபத்தில் அப்படி ஒரு பதிவ நானே போட்டு நீக்கி இருக்கேன் ..காரணம் அது உண்மையாய் இருந்தாலும் சமூகத்தை மிஸ்லீட் செய்யக் கூடாது என்பதற்காக .) .
அம்பத்த்தூர்ல ஒரு இறந்த மருத்துவரை மயானத்தில் அனுமதிக்க மறுத்தது உண்மை சம்பவம் என்றாலும் அடுத்தடுத்து எல்லா இறப்பையும் அதோட ரிலேட் செய்து பேசுகிறார்கள் .
கோவை டாக்டர் கொரானாவால் இறக்கவில்லை, அவர் டெங்குவால் தான் இறந்தார் .அவர் இளம் வயதில் இறந்த சோகம் தாங்காமல் ஒரே மகனை பலி தந்த வருத்ததில் அவர் தாயார் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையுல் இருக்க்கின்றார் .
அந்த மருத்துவரை அடக்கம் செய்ய எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை ..இணையத்துல் சிலர் அப்படி தெரிவிக்கப்பட்டாதாக எழுதினர் .
உண்மையாகவே இருந்தாலும் அதை பேசாமல் இருக்கலாம்.
கொரானா பாதிப்பை சரி செய்ய மருத்துவர்கள் தஙகள் உயிரை, குடும்பத்தை பணயம் வைத்து செயல்படுகின்றனர் .அதில் சில மருத்துவர் பாதிக்கப்படுவதும் நிஜம் ...

வளையல்காரரும் , மிட்டாய்காரரும், ஐஸ்காரரும் இப்போதெல்லாம் எங்கள் தெருவிற்கு வருவதேயில்லை.

சுமதி விஜயகுமார் : பாட்டி எப்போதும் இது போன்ற வளையல்காரரிடம் தான் வளையல் வாங்குவார். இன்னமும் நியாபகம் இருக்கிறது. எங்கள் தெரு
வழியாக சென்றுகொண்டிருந்த வளையல்காரரை அழைத்து வளையல்களை காட்ட சொல்லுவார். வளையல்காரர் தன் கையில் இருக்கும் பெட்டியை திறப்பார். இப்போதிருக்கும் fancy storeகளுடன் ஒப்பிட்டால் மிக மிக குறைந்த அளவே வளையல்கள் இருக்கும். 90% கண்ணாடி வளையல்கள் தான் இருக்கும். பல வண்ணங்களில். பாட்டி ஒருமுறை கூட கண்ணாடி வளையல் வாங்கி பார்த்ததில்லை. இருபுறமும் மஞ்சள், நடுவில் சிகப்பு கலந்த பிளாஸ்டிக் வளையலைத்தான் வாங்குவார்கள். ஒருவேளை வேலை செய்ய கண்ணாடி வளையல் சரிவராது என்று தவிர்த்திருக்கலாம்.
ஒவ்வொரு முறையும் வளையல்காரர் தன் பெட்டியை திறக்கும் போதும், எவ்வளவு பிடித்த விளையாட்டை விளையாடி கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு பாட்டியின் அருகே அமர்ந்துகொள்வேன். வளையல்களை காண. அவர் பெட்டியை திறக்கும் போது கிடைக்கும் அந்த எதிர்பார்ப்பு இது வரை வேறு எந்த கடைகளிலும் கிடைத்ததில்லை.ஏனோ நான் வளையல்காரரிடம் வளையல் வாங்கியதேயில்லை. அம்மா எனக்கு கடைகளில் தான் வாங்கி கொடுப்பார். ஆசையாக இருந்த போதிலும் அம்மாவிடம் வளையல்காரரிடம் வாங்கி கொடுங்கள் என்று கேட்டதில்லை.ஒரு வேளை கேட்டிருந்தால் வாங்கி கொடுத்திருந்திருப்பார்களோ என்னவோ.

கர்நாடகாவில் தேர்த்திருவிழா மக்கள் வெள்ளம் அலைமோத .. பாஜக அரசின் கொரோனா கொள்கை

ஹாட்ஸ்பாட் பகுதியில் நடந்த தேர்த்திருவிழா வெப்துனியா :  ஹாட்ஸ்பாட் பகுதியில் நடந்த தேர்த்திருவிழா
சமீபத்தில் மத்திய அரசு இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளை ஹாட்ஸ்பாட் பகுதிகள் என குறிப்பிட்டு சில மாவட்டங்களின் பெயர்களை வெளியிட்டது என்பதை பார்த்தோம். அதில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்பட 22 மாவட்டங்களில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்த ஹாட்ஸ்பாட் நகரங்களில் ஒன்று கலபுராகி. கர்நாடகத்தில் உள்ள இந்த மாவட்டத்தில் நேற்று ஒரு தேர் திருவிழா நடைபெற்றது.
இந்த தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சமூக விலகலை பொருட்படுத்தாமல் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் நடந்த இந்த தேர்த்திருவிழாவை போலீசாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

கொரோனாவுக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் உயிரழப்பு ..21 லட்சம் பேர் பாதிப்பு

தினத்தந்தி  : பாரீஸ் உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்தை கடந்தும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிலும், பலியிலும் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. அங்கு 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
ஸ்பெயினை பொறுத்தமட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவில் 2 லட்சத்தை எட்டும் நிலை உள்ளது. 19 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொரோனா பலி வாங்கியுள்ளது. இங்கிலாந்தில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிவிட்டது. அங்கு பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆயிரத்து 300-ஐ கடந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3,300-ஐ தாண்டியுள்ளது.
இங்கு சுமார் 77 ஆயிரத்து 900 பேர் குணம் அடைந்துள்ளனர். ஐரோப்பாவில் மொத்தம் 10 லட்சத்து 47 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ள இந்த வைரஸ், 90 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோர் உயிரை பறித்தும் உள்ளது. ஆசியாவில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் தாக்கியுள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 5,300-ஐ தாண்டியுள்ளது.

5 லட்சம் சீன பரிசோதனை கருவிகள் இந்தியா வந்தன: 2 நாளில் தமிழகத்துக்கு வர வாய்ப்பு

தினகரன் : புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது வைரஸ் பரவலில் அமெரிக்கா முதலிடத்திலும், இத்தாலி இரண்டாவது இடத்திலும் உள்ளன. முதன் முதலில் வைரஸ் பரவிய சீனாவின் வுகான் நகரில், இரண்டு மாத ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் இயல்புநிலை திரும்பி, அங்கு மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கி உள்ளது
ஆனால், இன்னமும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால், அங்கு வைரஸ் பரவல் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், பெரிய அளவில் இல்லை. சீனாவில் வைரஸ் வேகமாக பரவியபோது, அங்கு மருந்து, கையுறை, முகக்கவசம், முழு உடல் பாதுகாப்பு உடைகள் போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.

பேரிடர் காலங்களில் ஊனமுற்றோர் உரிமைகளும், உண்மை நிலையும்!

பார்வையற்றவன் : பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் முதல் மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் - ஏப்ரல்-2020!
பேரிடர் காலங்களில் ஊனமுற்றோர் உரிமைகளும், உண்மை நிலையும்!
19 ஏப்ரல் 2020, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி.
வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை தொடங்கப்பட்டது. ஊனமுற்றோர் உரிமைகள் குறித்தும் பிற முற்போக்கு கருத்தியல்கள் குறித்தும் மாதந்தோறும் இணையவழியில் கருத்தரங்குகளை நடத்த பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை திட்டமிட்டுள்ளது. இந்த இணையவழிக் கருத்தரங்குகள் இடம் சார்ந்த தடைகளைத் தாண்டி பல்வேறு பகுதிகளிலும் வாழும் பார்வையற்றோர் கருத்தியல்ரீதியிலான விவாதங்களில் பங்கேற்கவும், தமது உரிமைகளை அறிவதற்கும், உணர்வுகளை பதிவுசெய்வதற்கும், தமது சமூக அரசீயல் புரிதல்களை விரிவுபடுத்தி ஒருங்கிணைவதற்கும் களமாக அமையும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

நீதிமன்ற அனுமதி: ‘தி.மு.க.வின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி’ - மு.க.ஸ்டாலின் அறிக்கை

தினத்தந்தி :  ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உணவு வழங்க ஐகோர்ட்டு அனுமதி அளித்து இருப்பது தி.மு.க.வின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை, இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. ஊரடங்கால் ஏழை எளிய, அடித்தட்டு விளிம்பு நிலை மக்கள் செய்வதறியாது திகைத்து இருக்கின்றனர். அவர்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான அன்றாடத் தேவைகள், முழுமையாக கிடைக்காவிட்டாலும் பெருமளவுக்கேனும் நிவர்த்தி செய்ய மத்திய, மாநில அரசுகள் தனித்திட்டங்கள் எதையும் இதுவரை அறிவிக்கவில்லை
 இந்தநிலையில் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் பலரும் பசியால் வாடுவோர்க்கு அவ்வப்போது தங்களால் முடிந்த உதவிகளை நேரடியாக செய்து வந்தார்கள். இந்த உதவிகள் பெரும் வரவேற்பை பெற்றதால், ஆளும்கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

வியாழன், 16 ஏப்ரல், 2020

கொரோனா வைரஸ்: குஜராத்தில் இந்து - முஸ்லிம்களுக்கு தனித்தனியே சிகிச்சையா..


பிபிசி செய்தியாளர் : குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் ஒரே வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், தற்போது இந்து, முஸ்லிம் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனியே சிகிச்சையளிக்கப்படுகிறது.
“ஏப்ரல் 12ஆம் தேதிக்கு முன்பு வரை, கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைவருக்கும் அகமதாபாத் அரசு மருத்துவமனையின் ஏ4 வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சி4 வார்டு முழுவதும் வெறும் முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர்” என்று பிபிசியிடம் கூறுகிறார் சி4 வார்டில் சிகிச்சை பெற்று வரும் 19 வயதான இளைஞர் ஒருவர்.
ஏப்ரல் 12ஆம் தேதி இரவுவன்று, மேம்பட்ட வசதிகள் அளிக்கப்படும் என்ற உறுதியின் அடிப்படையில் ஏ4 வார்டில் இருந்த முஸ்லிம்கள் மட்டும் சி4 வார்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், ஆனால், “இந்து மதத்தை சேர்ந்த நோயாளிகள் அனைவரும் ஏ4 வார்டிலேயே” நீடித்ததாகவும் அவர் கூறுகிறார்.

டெல்லி - Agra சிந்திய பாலுக்கு நாய்களுடன் போட்டியிட்ட மனிதன்.... ஊரடங்கில் வீடியோ


க.சுப்ரமணியன் - நக்கீரன் : கரோனா தொற்று பயத்தில், இரண்டாம் கட்டமாக இந்தியா முழுவதும் மே-3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய- மாநில அரசுகள் அறிவித்த உதவிகள் போதாத நிலையில், இந்த ஊரடங்கில் தினக்கூலி வேலை பார்த்தவர்கள், குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்களே வாயிக்கும் வயிறுக்குமாய் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரைந்து வாழ்ந்து வந்தவர்களின் நிலை இன்னும் கவலைக்கிடமாகியுள்ளது. யாராவது வீதியில் வந்தால்தானே கையேந்த முடியும். அதேபோல் மனித மிச்சங்களையும், குப்பைத் தொட்டிகளையும் நம்பி காலம் தள்ளிவந்த தெருநாய் போன்ற உயிரினங்களும் பட்டினி கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன இந்த யதார்த்தத்தை தெளிவாகக் காட்டியுள்ளது
இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்வொன்று. டெல்லி ஆக்ரா பகுதியில், தாஜ்மகாலுக்கு அருகிலுள்ள சாலையில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதியன்று பால் கன்டெய்னர் ஒன்று கவிழ்ந்துபோனது. இதனால் அதிலிருந்த பால் பெருக்கெடுத்து ஓட, தெருநாய்கள் கும்பலாகச் சேர்ந்து அதை நக்கிக் குடித்தன.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!மின்னம்பலம் : கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்புப் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இன்று (ஏப்ரல் 16) திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இக்கூட்டத்தில், திமுக தோழமை கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் வீடியோ வாயிலாக பேசிய ஸ்டாலின், “அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். கொரோனா பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க வேண்டும். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிறப்பு நிவாரணமாக ரூ.5,000 வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

பணக்காரர்கள் இறக்குமதி செய்த கொரோனா: முதல்வர்!


பணக்காரர்கள் இறக்குமதி செய்த கொரோனா: முதல்வர்! minnambalam : சென்னை தலைமைச் செயலகத்தில், ஊரடங்கு அமலில் இருப்பது தொடர்பாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும், இன்று (ஏப்ரல் 16) மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ ஏப்ரல் 11ஆம் தேதி நடந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கருத்தை பிரதமர் முன்வைத்தார். அதன்படி, மருத்துவ வல்லுநர்கள், மத்திய சுகாதாரத் துறை, உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட கருத்தின் அடிப்படையிலேயே இந்த நோய் தடுப்பு பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 2600 பேர் உயிரிழப்பு


மலேசியாமலர் : கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், ஒரே நாளில் கிட்டத்தட்ட 2600 பேர் இறந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிலும், இதுவரை ஒரே நாளில் ஏற்பட்ட மிகவும் அதிகபட்ச உயிரிழப்பாகும். அமெரிக்காவில் இதுவரை 6 லட்சத்தி 37 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 30,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தின் உச்சத்தை அமெரிக்கா அமெரிக்கா கடந்துவிட்டதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்த நிலையில், இந்த தரவு வெளியாகியுள்ளது. மீண்டும் பொருளாதார, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் முயற்சியில் தற்போதைய நிலையில் அமெரிக்க மாகாணங்கள் வலுவான நிலையில் உள்ளது எண்டு கூறியுள்ள டிரம்ப், அது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை இன்று (வியாழக்கிழமை) வெளியிடவுள்ளார்.

நிவாரணம் வழங்க அரசு அனுமதி தேவையில்லை .. திமுக வழக்கில் தீர்ப்பு

நிவாரண உதவிகள் வழங்க அனுமதி பெற தேவையில்லை- திமுக வழக்கில் ஐகோர்ட் தீர்ப்புமாலைமலர் : ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் சார்பில் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை நேரடியாக வழங்க அரசு தடை விதித்தது. சமூக விலகலை பின்பற்றாமல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏழை, எளியோருக்கு திமுக சார்பில் வழங்கப்படும் நிவாரணத்தை உள்நோக்கத்துடன் தடுத்துள்ள அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தனது மனுவில் தெரிவித்திருந்தது. இதேபோன்று மதிமுக, காங்கிரஸ் தரப்பிலும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உணவுகளை வாங்க மக்கள் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. சமூக விலகலை கடைபிடித்தும், மக்கள் கூட்டம் சேராதவாறும் உதவிகள் வழங்கப்படுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டதுடன் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தனர்.

மும்பை போராட்டம்: பத்திரிகையாளர் கைது வீடியோ

மின்னம்பலம் :   ஏப்ரல் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா ரயில் நிலையம் அருகே ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் கூடிய விவகாரத்தில், மராட்டிய டிவி சேனலின் நிருபர் நேற்று (ஏப்ரல் 15) கைது செய்யப்பட்டிருக்கிறார். இவருடன் சேர்த்து 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஏபிபி மஜா டிவி சேனலில், பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னி தென்மத்திய ரயில்வேயின் உள் ரயில்வே ஆவணத்தை மேற்கோள் காட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கி மும்பையில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டுக்குக் கொண்டு செல்வார்கள் என்று செய்தி வெளியிட்டார். இதன் காரணமாகவே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாந்த்ராவில் குவிந்தனர்ஐபிசி மற்றும் தொற்றுநோய் சட்டம் 1897இன் கீழ் குல்கர்னியை கைது செய்த போலீஸார் அவரது செய்தி தவறானது என்று தெரிவித்துள்ளனர். போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு மராத்திய செய்தி சேனல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது,

பர்மாவில் பெரியார்.. பர்மா திராவிட முன்னேற்ற கழகம் .. வரலாறு

பாவலர் நாரா நாசியப்பம்  : பர்மாவில் பெரியார் ! இரங்கூன் வருகை!
⁠1954 ⁠அனைத்துலக புத்த சமய மாநாடு, பர்மாவின் தலைநகரான இரங்கூனில் நடக்கவிருந்தது. இம்மாநாட்டை பர்மிய அரசே முன்னின்று நடத்தியது, அப்போது பர்மாவின் தலைமை அமைச்சராக இருந்த ஊநூ, புத்தமதத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர், உண்மையான சமய நம்பிக்கை உடையவர், சமய நெறிப்படி வாழ்க்கை நடத்தியவர். அவருடைய ஆர்வமும், பெருமுயற்சியும் தான் அனைத்துலக புத்த சமய மாநாட்டின் சிறப்புக்குக் காரணமாய் அமைந்தன.
⁠புதிதாக புத்தசமயத்தில் சேர்ந்த டாக்டர் அம்பேத்காரின் தலைமையில் இந்த மாநாடு நடந்தது.
⁠டாக்டர் அம்பேத்கார் புத்த சமயத்தில் புதிதாகச் சேர்ந்ததால், அதற்குப் புது வலிவும் பொலிவும் கூடியிருந்தது, எனவே மாநாட்டைக் கூட்டியவர்கள் பெருமைக்குரிய டாக்டர் அம்பேத்கார் தலைமையில் அதனைக் கூட்டுவதே சிறப்பென்று முடிவு செய்தார்கள்.
⁠தலைமை அமைச்சர் ஊநூவின் பேரார்வத்தின் காரணமாக மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. இரங்கூனை அடுத்த கபா ஏ என்ற இடத்தில் அமைதிக் கோபுரம் ஒன்று கட்டி அதன் அருகில் மாநாடு நடைபெறுவதற்காக மலைக்குகை போன்ற அமைப்புடைய ஒரு பெரிய கூடம் கட்டப்பட்டது.
⁠அந்தக் கூடத்தில் தான் உலக புத்தசமயத் தலைவர்கள் கூடினார்கள்.
⁠டாக்டர் அம்பேத்கார், இந்த மாநாட்டில் பெரியாரும் கலந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினார். அவருடைய விருப்பத்தை மாநாட்டுக் குழுவினர் ஒப்புக்கொண்டனர்.

எம்ஜியார் ஆட்சிப் பற்றி அன்றைய இந்தியா டுடே எழுதிய விமர்சனம் ,,, சுருக்கமாக.

Muralidharan Pb : பத்து ஆண்டு எம்ஜியார் ஆட்சிப் பற்றி அன்றைய இந்தியா டுடே எழுதிய விமர்சனம் உங்களுக்காக சுருக்கமாக.
ஒருகாலத்தில் மிகப் பெரிய ஆதர்ச நாயகனாகக் கொண்டாடப்பட்ட எம்ஜியார்  இந்த பத்து ஆண்டுகளில்
தனி மனித துதிப்பாடல் அரசாங்கத்தை மட்டுமே நடத்தி மக்களை முட்டாளாக்கினார்.
இந்த பத்து ஆண்டுகளில் தமிழகம் பெரிதாக கொண்டாடிட எதுவுமே இல்லை. மூவேந்தர்கள் ஆண்ட இந்த மாநிலத்தில் நான் அனைத்தையுமே காக்க வந்த படைப்பு என்று வீர வசனம் பேசிவிட்டு, கட்சி தொடங்கி, ஆட்சி அமைத்த ராமசந்திரன், இந்த பத்து வருடங்களில் ஒரு அறிவிழந்த சர்வாதிகாரத்தையே கொடுத்தார். சர்வாதிகாரியாக மட்டுமே அல்லாமல் வந்த பாதையை மறந்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்.
அவரை அவதூறு பேசும் ஊடக விமர்சகர்களும்,  எம்ஜியாரின்  அற்பமான நலத்திட்டங்களை பெரியதாக பேசினார்கள். அதுவே மக்களை ஓட்டாண்டியாக்கும் திட்டங்கள் என்று பேசமறுத்தனர்.
அதனாலேயே அவர் மக்களின் செல்வாக்கை இழக்காமல் இருந்தார்.
அவர் எதை நலத்திட்டமென்று சொன்னாரோ, அது மக்களை பேரழிவிற்கு கொண்டு போகும் குறையுள்ள திட்டங்களே,அதுவும் பொருளாதாரத்தையும், நிர்வாகத்தையும் சீரழிக்கும் நோய் தடுப்பு திட்டங்களே அவர் ஆட்சியில் நிறைந்திருந்தது.

முள்ளிவாய்க்கால் வெள்ளைகொடியும் கம்யுனிஸ்டு பாண்டியன் மகேந்திரன்களும் .. ஒரு மீளாய்வு

முள்ளிவாய்க்கால் போர் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருந்த நேரம்
புலிகளின் நடேசனோடு இதே மகேந்திரன் தொடர்பில் இருந்தவர் ..
ஈழத்தில் நடந்து கொண்டிருந்த படுமோசமான குண்டு மழையை எண்ணி தூங்க முடியாமல் கவலை பட்டுக்கொண்டிருந்த கலைஞர் யாருக்கும் சொல்லாமல் திடீரென்று மெரீனா கடற்கரையில் போய் அமர்ந்துவிட்டார் .. செய்தி அறிந்த எல்லோரும் துடித்து கொண்டு மெரீனா நோக்கி ஓடினார்கள் ..
சோனியா காந்தி அம்மையார் இது பற்றி சிதம்பரம் பிரணாப் முகர்ஜி போன்றவர்களோடு விவாதித்து ஒரு முடிவுக்கு வந்து சிதம்பரத்தை இந்த விடயத்தில் தூண்டினார்
சிதம்பரம் ஒரு ஒப்பந்தத்தை தன் கைப்படவே  எழுதி அதை தொடர்பில் இருந்த புலிகளிடம் தெரிவித்தார் .
அதில் சுமார் பன்னிரண்டு ஆயிரம் புலிகளுக்கு புனர் வாழ்வு அளித்து விடுவிப்பது எனவும் . கிரிமினல குற்றங்க்ள உடையோரையும் ஓரளவு நீக்கு போக்கான அணுகுமுறையில் விசாரணை நடத்தி சட்டத்திற்கு உட் பட்ட விதத்தில் விடுவிப்பது என்றும்.
இதர முக்கிய புலி தலைவர்களை பாதுகாப்பாக இலங்கையை விட்டு அவர்கள் விரும்பும் நாட்டுக்கு போவதற்கு உரிய  வழியை விடுவது என்றும் எழுதப்பட்டு இருந்தது.
இந்த ஒப்பந்தத்தை மிகவும் இரகசியமாக கையாளுமாறு சிதம்பரம் புலிகளை கேட்டு கொண்டார்.
அதனிடையியே பிரணாப் முகர்ஜி இலங்கை அரசோடு பேசி கனரக குண்டுகளை பொழிவதை நிறுத்த செய்தார் . அந்த செய்தியும் வாக்குறுதியும் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து கிடைத்த பின்பு  கலைஞர்  உண்ணாவிரத்தை முடித்தார்.

கேரளா கம்யுனிசமும் தமிழக திராவிடமும் . சமுகவலையில் ஒரு விவாதம்

George RC : s · கேரளா... இடதுசாரிகள் ஆட்சி நீண்ட காலமாகக் கொண்ட சமூகம்! சமூக நீதியும், சமூக உணர்வும் கொண்ட தலைவர்கள் எழுந்த சமூகம்! இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம்கள் என மூன்று இனமும் பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்கின்ற சமூகம்.
இலக்கியவாதிகளைப் போற்றிக் கௌரவித்த சமூகம்! கலை உணர்வு கொண்ட சினிமாக்களை வெளிக்கொணர்ந்த சமூகம்.
அது தனக்கான குறைகளை கொண்டிருக்கலாம். அது இயல்பானது.
ஆனால், அதனோடு DNA முதல் மொழி, கலாசாரம் என தொடர்புகளைக் கொண்ட ஒரு கூட்டம் மட்டும் ஏன் ஈனத் தனமான இயல்புகளைக் கொண்டிருக்கிறது?
Villa Anandaram   : கேரளா புதிய கருத்துகளை உள்வாங்கியது, தன்னை மாற்றி அமைதுக்கொண்டது. அதனோடு தொடர்புகளைக் கொண்ட ஒரு கூட்டம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தை விட்டு  வர மறுக்கிறது? அதுவே தன் அடையாளமாக பெருமையாக நினைக்கிறது.

 Kalai Selvi அந்த ஊரில் தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும் ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதி மறுத்து பெண்களை வேட்டையாடிய எதிர்கட்சிகள் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர திராணியற்ற மெளனமாகிப் போன அரசும் ஆண்டுக் கொண்டுள்ளது,
இதை எதிர்த்து மக்களிடம் அவர்கள் ஏன் பிரச்சாரம் செய்யவில்லை. புலம் பெயர் தமிழர்களுக்கு ஈழ பிண வியாபாரிகளில் ஒருவரான சீமானதெரிந்தளவிற்கு திராவிட இயக்கங்களை அள் கோட்பாடுகளை, சாதித்தவைகளைத் தெரியாது தெரிந்துக் கொள்ளவும் முயலவில்லை பொது உடைமையைக் காட்டிலும் பொது உரிமையை, கோட்பாட்டை முன்னெடுத்து சென்றவை கூலி உயர்வைக் காட்டிலும் உற்பத்தியில் தொழிலாளர்களை பங்குதாரர்களாக ஆக்க வேண்டும் என்ற கொள்கை உடையது சமூக நீதி அடிப்படை .

புதன், 15 ஏப்ரல், 2020

மலைக் கிராம மக்களின் மருத்துவர்; தினமும் பரிசல் பயணம்'- கோவையைக் கலங்கவைத்த இளம் மருத்துவரின் மரணம்

சதீஸ் ராமசாமி - கே.அருண் -:விகடன் : கோவை மாவட்டத்தைப் பூர்வீகமாகக்
கொண்ட இளம் டாக்டர் ஜெயமோகன் டெங்கு காய்ச்சலால் மரணமடைந்தார்.
கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த எல்.ஐ.சி ஏஜென்ட் வாசுதேவன். இவரின் மகன் ஜெயமோகன் (29) எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு, தெங்குமரஹாடா ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. இதனிடையே, கடுமையான காய்ச்சல் காரணமாக, ஜெயமோகன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், டாக்டர் ஜெயமோகனுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. ஆனால், அதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. அதே நேரத்தில், ஜெயமோகனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

தமிழகத்தில் மட்டும்தான் அதிக மருத்துவர்கள் கிராமங்களில் ..

மறைந்த டாக்டர் ஜெயமோகன்
நிலையங்களில் மருத்துவர்கள் வேலைக்கு சேர்வதேயில்லை .
 சில மாநிலங்களில் வேலைக்கு சேர்ந்தாலும் ஆர்வமாக வேலை செய்வதில்லை காரணம் அவர்கள் எல்லாம் பெரும்பாலும் நகர பின்புலத்தில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள்.
நுழைவுத்தேர்வில் வெற்றி பெற நகர பின்புலம் அவசியம் என்பதால் பிற மாநிலங்களில் இருந்து எம்.பி.பி.எஸ் படிப்பவர்களில் பெரும்பாலானோர் நகரவாசிகள் எனவே அவர்கள் கிராமங்களில் பணிபுரிய தயாரில்லை .
ஆனால் தமிழகத்தின் நிலை முற்றிலும் வேறு இங்கு, 2017 வரை கிராமங்களில் இருந்து, எளிய பிண்ணனியில் இருந்து வந்த மாணவர்களே அதிகம் . எனவே அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வேலைக்கு செல்ல தயங்கியதே இல்லை
மேலும் அங்கு சென்ற பிறகு “ஒப்புக்கு சப்பாக” “ஏனோ தானோ என்று” வேலை பார்க்காமல் தொடர்ந்து மருத்துவத்துறையை முன்னேற்றுவது குறித்து சிந்தித்து கொண்டே இருப்பார்கள். இதனால் தான் தமிழக மருத்துவத்துறை கடந்த சில ஆண்டுகளாக அசூர வளர்ச்சி பெற்றுள்ளது. ; பல மாநிலங்களில் அரசு ஆரம்ப சுகாதார கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையத்திற்கு கிழக்கில் இருக்கும் ஒரு சிறு கிராமம் சிறுமுகை சவுத் இந்திய விஸ்கோஸ் (எஸ்.ஐ.வி) தொழிற்சாலை முழூ வீச்சில் இருந்த காலத்தில் பரபரப்பாக இருந்த ஊர் அதன் பிறகு பொலிவிழந்துவிட்டது.

கொரோனா வைரஸ்.. 2008 இல் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் அறிந்திருந்தன!

Jeevan Prasad : கொரோனா வைரஸ் குறித்து 2008 இல் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் அறிந்திருந்தன!
பேராசிரியர் சன்ன ஜெயசுமன தனது நினைவுக் குறிப்பில், அமெரிக்க தேசிய புலனாய்வு கவுன்சில் 2008 ல் அதாவது 12 வருடங்களுக்கு முன் 2020-2025 காலப் பகுதியை உலகளாவிய தொற்றுநோயாகக் கணித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த புலனாய்வு தகவலில் கீழ்வருமாறு உள்ளன.
- ​​இந்த தொற்று உலகளாவிய தொற்று நோயாக சுவாச மண்டலத்தினூடாக எளிதில் பரவும்.
- H5N1 போன்ற ஒரு வைரஸ் மரபணு மாற்றப்பட்டு, கொரோனா வைரஸ் அல்லது பிற இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் போன்ற வைரஸால் ஏற்படலாம்.
- இத்தகைய தொற்று மக்களும் விலங்குகளும் அதிகமாக வாழும் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா அல்லது தென்கிழக்கு ஆசியாவில் தோன்றக்கூடும்.
- மருத்துவத் துறையில் ஏற்படும் தாமதம் மற்றும் சரியான நோயறிதல் இல்லாமல் அதை புரிந்து கொள்ள வாரங்கள் ஆக நீண்டு போகலாம், இது உலகளாவிய தொற்றுநோயை ஏற்படுத்த போதுமானது.
- அமெரிக்காவில் மிலியன் கணக்கான அமெரிக்கர்கள் இந்த வைரஸால் இறக்கலாம்.

9வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த கேரள பாஜக தலைவர் கைது!

thamizhidhayam.com : ஒரு மாதத்திற்கு முன், ஒரு பள்ளியின் கழிப்பறையில் வைத்து, 4 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜகவின் தலைவர்களில் ஒருவரான பத்மராஜன் கைது செய்யப்பட்டார்.
இவரை கைது செய்வதிலிருந்து காப்பாற்ற பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் முயற்சி செய்தனர். ஆனால், அரசை எதிர்த்து ஆளும் கட்சியின் இளைஞர் பிரிவான வாலிபர் சங்கமும், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.
பாஜக குற்றவாளியை காப்பாற்ற முயற்சித்தது. ஆனால், ஒரு மாதம் ஆன நிலையில் இந்த கொடூரமான குற்றவாளியை போலீஸ் கைது செய்தது.
ஆசிபா கற்பழிப்பு வழக்கில் சிக்கிய ஆஷாராம் பாபு மற்றும் குல்தீப் செங்கர் ஆகியோரை காப்பாற்றியதைப் போல, இவரையும் பாதுகாக்க பாஜக முயற்சிசெய்தது. ஆனால், முடியவில்லை.

கொரோனா வைரஸ்: ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் சென்னை மாநகர ஆட்சி ...


BBC : சென்னை மாநகராட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்து செயல்படக்கூடாது என செவ்வாய்க்கிழமை மாலை முதல் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டுவருகிறது. என்ன காரணம்?
ஏப்ரல் 12ஆம் தேதியன்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில் ஆர்.எஸ்.எஸால் நடத்தப்படும் பாரதி சேவா சங்கம் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவருவதாகக் கூறப்பட்டிருந்தது.
அதற்கு முன்பாக வந்த செய்தியில், ஆர்எஸ்எஸின் தன்னார்வலர்கள் சென்னை மாநகராட்சிக்கு உணவு விநியோகத்தில் உதவுவதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையான பிறகு, தாங்கள் அதில் ஈடுபடவில்லையென்றும், பாரதி சேவா சங்கம் மட்டுமே அதில் செயல்படுவதாகவும் ஆர்எஸ்எஸ் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
பாரதி சேவா சங்கம் என்பது இதுபோன்ற பேரிடர் காலங்களில் உதவிசெய்வதற்காக ஆர்.எஸ்.எஸின் தொண்டர்களால் நடத்தப்படும் ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பாகும்.

இயங்க அனுமதிக்கப்பட்ட தொழில்கள் பட்டியல் -மத்திய அரசின் விரிவான வழிகாட்டு முறைகள்

எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி? -மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்மாலைமலர் : ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும், வெளியில் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிய சாலை
புதுடெல்லி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி
கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை

* மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி

* தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்

* பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம்

* ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும்

பாஜகவின் வானதி சீனிவாசன் காலணி வைக்கும் இடத்தில் அம்பேத்கர் படத்தை வைத்து ..

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்,
அம்பேத்கரின் புகைப்படத்தை காலணிகளை வைக்கும் இடத்தில் வைத்து மரியாதை செலுத்தியதாக இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்துள்ளன. கோவையில் உள்ள அவரின் வீட்டு வாசலில், எடுக்கப்பட்ட பழைய படம் ஒன்றையும், நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட படத்தையும் ஒப்பிட்டு அவர்மீது குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.
வானதி சீனிவாசன் வீட்டில் எடுக்கப்பட்ட பழைய படம்.
பிபிசி தமிழிடம் இது குறித்து அவர் பேசுகையில், "அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி 100 பட்டியலின பெண்களுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று எனது வீட்டில் நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்தும் வீட்டின் முகப்பு பகுதியில் நடத்தப்படுகிறது.

கொரோனா நோயாளிகளை குப்புறப்படுக்கவைப்பதால் அவர்களின் உயிர்களை காப்பாற்ற முடிகின்றது- சிஎன்என்

கொரோனா நோயாளிகளை குப்புறப்படுக்கவைப்பதால் அவர்களின் உயிர்களை காப்பாற்ற முடிகின்றது- சிஎன்என் veerakesari.lk : வெள்ளிக்கிழமை மருத்துவர் மங்களா நரசிம்மனிற்கு அவசர அழைப்பொன்று வந்தது. 40 வயது , கொரோனாவைரஸ் நோயாளியொருவர் ஆபத்தான நிலையிலிருந்தார். லோங்ஐலண்ட் யூவிஸ் மருத்துவமனையிலிருந்த அவரது சகாக்கள் அந்த நோயாளிக்கு செயற்கை சுவாசக்கருவியை வழங்கவேண்டுமா என வந்து பார்க்குமாறு அவரை கேட்டுக்கொண்டனர்.
நான் அங்கு வருவதற்கு முன்னர் அந்த நோயாளியை குப்புறபடுக்கவையுங்கள்  ஏதாவது முன்னேற்றம் ஏற்படுகின்றதா என பார்ப்போம் என நரசிம்மன் தனது சக மருத்துவரிடம் தெரிவித்தார்.
நரசிம்மன் ஐசியூவிற்கு செல்லவில்லை ஆனால் அவரது முயற்சி வெற்றியளித்தது.
நோயாளிகளை  குப்புறப்படுக்கவைப்பது,அவர்கள் தங்களிற்கு தேவையாக உள்ள அதிகளவான ஒக்சிசனை பெற்றுக்கொள்ள உதவுகின்றது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாங்கள் இதன் மூலம் நூறுவீதம் உயிர்களை காப்பாற்றுகின்றோம் என நரசிம்மன் தெரிவித்தார் என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.
நரசிம்மன் நியுயோர்க்கில் 23 மருத்துவமனைகளை கொண்டுள்ள நோர்த்வெல்ஸ் கெயரின் அவசரசேவை பிரிவின் பிராந்திய இயக்குநராக பணியாற்றுகின்றார்

நீலகிரி டெங்கு காய்ச்சலுக்கு இளம் மருத்துவர் பலி

டெங்கு காய்ச்சலுக்கு இளம் மருத்துவர் பலி!
 மின்னம்பலம் :  கொரோனா வைரஸ் மருத்துவர்களையும் விட்டுவைக்காத நிலையில், தற்போது டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சிறுமுகை அருகிலுள்ள ரேயன் நகரை சேர்ந்தவர் வாசுதேவன். எல்.ஐ.சி முகவராக இருக்கிறார். இவருடைய மகன் ஜெயமோகன். வயது 30. 2007 ஆம் ஆண்டு +2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவர். பின்னர் மருத்துவம் படிக்க விரும்பிய இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்தார்
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவராக தேர்வு பெற்றார். நீலகிரி மாவட்டத்தில் இவருக்கு பணி ஒதுக்கப்பட்டது. முதலில் நீலகிரியில் பணியாற்றிய இவர் தற்போது, சத்திய மங்கலம் அருகில் உள்ள தெங்கு மறாட்டா என்ற மலைக் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
மற்ற மருத்துவர்கள் போல பகுதி நேரம் அரசு வேலையும், மீதி நேரம் சொந்த வேலையும் பார்க்க விரும்பாத ஜெயமோகன் முழு நேரமும் தெங்குமறாட்டாவிலேயே தங்கி அங்குள்ள பழங்குடி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு  தினத்தந்தி : தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று மேலும்  31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது.பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-  தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் எண்ணிக்கை 68519- ஆகும். அரசு கண்காணிப்பில் 135 பேர் உள்ளனர்.
> வீட்டுக்கண்காணிப்பில் 28,711 பேர் உள்ளனர். இதுவரை 19,255 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

வேதத்தில் பெண்களை பற்றி என்னதான் கூறப்பட்டிருக்கிறது?

அத்தியில் பூவையும் வெள்ளை நிற காக்கவையும்  மீனுக்கு கால்களையும் கூட காணாலாம் ஆனால் பெண்களில் மனதை ஒரு போதும் அறிய முடியாது ஸ்ரீ கிருஷ்ணர்
2 - பெண்கள் ஒரு இரவு கணவனை விட்டு பிரிந்தாலும் அவளை பதிவிரதைக்கு உரிய தர்மத்தில் இருந்து விலகியவள் ஆகிறராள் .. தக்ஷர்
3 - கணவனின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு , கணவன் தூர தேசங்களுக்கு சென்ற பொழுதெல்லாம்  மெலிந்தும் உடல் நோய்வாய்பட்டும் அவன் இறந்தபோது அவனது உடல் எரியும் நெருப்பில் தானும் விழுந்து இறப்பவளே உண்மையான பதிவிரதை   - ஆங்கிரஸ்
4 -  பெண்களின் குணங்கள்   : பிற ஆண்களாய் கண்டதும் அவர்களோடு உடலுறவு வைத்து கொள்ள விரும்புவதும் , நிலையில்லாத மனமும் , அன்பு இல்லாமையும் பெண்களுக்கு மிகவும் இயல்பான குணங்களாக இருப்பதால் அவர்களை மிகவும் அவதானமாக கவனித்தலே   கடமையாயிருக்கிறது.
- மனு 9-15
5  -   படுக்கை,  ஆஸனம், ஆபரணம், காமம், கோபம், பொய், துரோஹ சிந்தனை இவைகளை பெண்களுக்காகவே மனு  படைத்தார் - மனு 9 -17
6   -  பெண்களுக்குப் பாவம் போக மந்த்ர தந்த்ர மில்லை. பொய்யைப் போலவே    அசுத்தமானவர்கள்   மனு 9-18
7  -  விபசாரம் பெண்களுக்கு இயல்பாகவே இருப்பதை  பற்றி  வேதங்கள்  கூறும் பரிகாரங்கள்  என்னவென்று கேட்போம்
8 -   இந்த கண்றாவியை தமிழில் எளிமைப்படுத்தாமல் அப்படியே பதிவிடுகிறேன் .. அவ்வளவு மோசம்   : (தன் தாய்க்கு மான்ஸவியபிசாரம் வந்ததாகப் பிராச்சித்தம் செய்கிறான்)

ஊரடங்கில் மும்பையில் பிற மாநில தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி



athivanan Maran tamil.oneindia.com : மும்பை: கொரோனா வைரஸை தடுக்க லாக்டவுனை மேலும் 19 நாட்கள் நீடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நூற்றுக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் 3000த்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மும்பையில் பிற மாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு லாக்டவுன் அமலாக்கப்பட்டதால் பிற மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பெரும் துயரத்துக்குள்ளாகி உள்ளனர்.
போதுமான வருமானம் இல்லாமல் கடந்த 21 நாட்களாக அவர்கள் அவதிப்பட்டனர் இந்த நிலையில் இன்று மேலும் 19 நாட்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால் பிற மாநிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே மகாராஷ்டிராவின் மும்பையில் பாந்தரா பகுதியில் திடீரென நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

Anand Teltumbde Arrested தேசம்.. தேசியம்.. என்பதெல்லாம் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க ஒரு கருவியாக


Shalin Maria Lawrence - மு. நியாஸ் அகமது : எனக்கு நன்றாக தெரியும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கூட்டு மற்றும் அவர்களது கோரிக்கைகளை எந்த கேள்வியும் எழுப்பாமல் ஏற்கும் ஊடகங்கள் - இவர்கள் எழுப்பப் போகும் திட்டமிட்ட அருவருப்பான ஒலியில் எனது குரல் கேட்காமல் போகும். இருந்தபோதிலும் இப்போது பேசுவது தேவையான ஒன்று என்றே கருதுகிறேன். ஏனெனில் எனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமா என தெரியாது.
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவா மேலாண்மை கல்வி நிலைய வளாகத்தில் உள்ள என் வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியதிலிருந்தே எனது உலகம் தலைகீழாக மாறிவிட்டது.
எனது மோசமான கனவுகளில் கூட, எனக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைத்துப் பார்த்தது இல்லை.
பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் நான் ஆற்றிய உரைக்கு ஏற்பாடு செய்த அமைப்பாளர்களிடம் என்னைப் பற்றி விசாரித்து போலீஸ் அச்சமூட்டிய போது, நான் கூட போலீஸார் பல காலத்திற்கு முன்பு எங்கள் வீட்டை விட்டு வெளியேறிய என் சகோதரர் குறித்து விசாரிக்கிறார்கள். நான்தான் அவர் என் தவறுதலாக நினைத்து விசாரிப்பதாகவே நினைத்தேன்.
நான் ஐஐடி கரக்பூரில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, ஒரு பி.எஸ்.என்.எல் ஊழியர் என்னை தொலைப்பேசியில் அழைத்தார். எனது நலம் விரும்பி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், எனது ஃபோன் உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாகக் கூறினார்.
நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். ஆனால், அதன் பின்பும் கூட என் சிம்கார்டை நான் மாற்றவில்லை.

மஞ்சை வசந்தன் : தமிழர் பண்பாட்டை மாற்றி, மறைத்து, ஆரியப் பண்பாட்டைப் ஆரிய பார்ப்பனர்கள்

மஞ்சை வசந்தன் துக்ளக்கில் சுதாசேஷய்யன் எழுதியதற்கு மறுப்பு
தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளை அழிப்பதிலும் திரிப்பதிலும் ஆரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மாற்றி, சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திரித்து, சமஸ்கிருத பெயரைத் தமிழ் ஆண்டின் பெயர் என்று திணித்து, தமிழர் பண்பாட்டை அழிக்கின்றனர்.
20.1.2016 ‘துக்ளக்’ இதழில் சுதா சேஷய்யன் என்ற அம்மையார், தன் ஆரிய இனப்பற்றின் உந்துதலால் சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என்று சாதிக்க முயற்சிக்கிறார். வலுவான சான்று எதையும் காட்டாது வழக்கமாக ஆரியம் செய்யும் மோசடி வேலையையே இவரும் செய்கிறார். எனவே, அதை மறுத்து உண்மையை உணர்த்த கீழ்க்கண்டவற்றை தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது.
தமிழர்கள் நாள், மாதம் ஆண்டுக் கணக்கீட்டை உலகுக்கு முதன்முதலில் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டுக் கொடுத்தவர்கள்.
காலையில் சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள்.
மாதம் என்பதற்குத் திங்கள் என்று ஒரு சொல் உண்டு. திங்கள் என்றால் நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் திங்கள் என்ற பெயர் மாதத்திற்கு வந்தது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான விஷப்பிரசாரம் . உண்மையை விட பொய் அதிகமாக பரவும்

சுமதி விஜயகுமார் ; ஒரு வார காலமாக ஒரு வித மனசோர்வு. எந்த மொழி
செய்தி ஒளிபரப்பை பார்த்தாலும் corona பற்றியதாக மட்டுமே இருப்பதால் செய்தி பார்ப்பதிலும் ஒரு வித சலிப்பு. அதனால் வெறும் திரைப்படங்களிலும் புத்தகம் படிப்பதிலும் நேரம் செலவானது. அவ்வப்போது மட்டும் செய்தி பார்த்ததில் ஒன்று மட்டும் புலப்பட்டது. காரோணவை உலகம் கையாளுவது வேறு இந்தியா கையாளும் விதம் வேறு.உலகமே ஒற்றை அணியில் நின்று கொரோனவை எதிர்த்து கொண்டிருக்க, இந்தியா மட்டும் தன் சகோதரர்களில் ஒரு பிரிவினரை மட்டும் தள்ளி வைத்து அவர்கள் மேல் பழியை போட்டுக் கொண்டிருக்கிறது.
2000 ஆம் ஆண்டாக இருக்கலாம். என்னுடைய சீனியர் ஒருவர், நெருங்கிய நண்பரும் கூட என்னிடம் சொன்னது இன்னும் நினைவில் உள்ளது. திருச்சியில் அவர் வாழும் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம். 'முஸ்லிம்ஸ் எல்லாம் அவங்க majority ஆகணும்னு நிறைய குழந்தைகளை பெத்துக்குவாங்கமா' என்றார். 'அப்படியா' என்று வாய் கேட்டது.'அதனால் என்ன என்று மனது நினைத்தது. அன்றோ இல்லை அதற்கு முன்பிருந்தோ முன்பிருந்தோ போடப்பட்ட அந்த விஷ விதை இன்று செடியாய் இல்லை மரமாகவே வளர்ந்து விட்டது என்பது தான் உண்மை.

இரு குழந்தைகளை கிணற்றில் வீசிகொன்ற தந்தை ... மட்டக்களப்பில்

  வீரகேசரி: தந்தையார் ஒருவர் நித்திரையிலிருந்த தனது 10 வயது மகள் மற்றும் 7 வயது மகள் ஆகிய இரு பிள்ளைகளையும் கிணற்றில் தூக்கி வீசியதில் இரு பிள்ளைகளும் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு ஓட்டுமாவடி பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலையில் இடம்பெற்றள்ளதாகவும் தந்தையாரை கைதுசெய்துள்ளதாகவும்  வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். ஓட்டுமாவடி மாவடிச்சேனை, பாடசாலை பின் வீதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியான  அஷிமுல் ஷிஹியா 10 வயது சிறுவனான அஷிமுல்  ஹக் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவத்தில்  உயிரிழந்த பிள்ளைகளின் தாயார் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் இரு பிள்ளைகளையும் தந்தையர் பராமரித்து வந்துள்ளதுடன் இருவரையும் கொழும்பில் பாடசாலை விடுதியில் தங்கவைத்து  கற்பித்து வந்துள்ளார்.