சனி, 27 ஆகஸ்ட், 2016

சாய்பாபா நேரில் வந்ததாக பொதுமக்களிடம் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் சாய் பாபா கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு இன்று காலை முதியவர் ஒருவர் வந்துள்ளார். அவர் புகைப்படத்தில் உள்ள சாய் பாபாவைப் போல் அமர்ந்து மக்களுக்கு ஆசி வழங்க தொடங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் சாய் பாபாவே நேரில் வந்து ஆசி வழங்குவதாகச் சொல்ல, விஷயம் பரபரப்பாகி குமாரபாளையத்தில் உள்ள பக்தர்கள் கோயிலுக்கு படையெடுத்தனர். இதனால் கூட்டம் கூடியது. முதியவருக்கு மாலை போட்டு பூக்களால் அபிஷேகம் செய்தார்கள் மக்கள். அந்த முதியவரும் எல்லோருக்கும் ஆசி வழங்கினார். மக்களின் நம்பிக்கை இப்படியிருக்க, நீண்ட நேரத்திற்குப் பிறகு அந்த முதியவரே நான் சாய் பாபா அல்ல நானும் உங்களைப்போல் பாபா பக்தர்தான் எனக் கூறி விட்டு சென்றுள்ளார். --ஜீவாதங்கவேல்  nakkeeran.in

இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியா ..!!

ஒரு மூதாட்டி ரயிலில் அடிபடுகிறார். அருகில் மகன் துடிக்கிறான். தாய் உயிர் போனதும் ரயில்வே போலீஸ் வருகிறது. போஸ்ட்மார்ட்டம் செய்ய அந்த ஊர் ஆஸ்பத்திரியில் வசதி இல்லை. அடுத்த ஊருக்கு போக வேண்டும். ஆம்புலன்ஸ் கேட்கிறது. கிடைக்கவில்லை. வாகனம் தேடுகிறது. கட்டணம் கட்டுபடி ஆகவில்லை.
ரயிலில் கொண்டு செல்ல தீர்மானிக்கிறது. இரு தொழிலாளிகளை அழைத்து, சடலத்தை ரயிலில் ஏற்ற சொல்கிறது.
துணியில் கட்டி தூக்கிச் செல்ல சடலத்தின் நீளம் இடைஞ்சலாக இருக்கிறது. இரு தொழிலாளிகளில் ஒருத்தர் சடலத்தின் இடுப்பில் ஒரு காலால் மிதித்து அழுத்தி, அதன் கால்களை மடக்குகிறார்.
சடலம் இரு துண்டுகளாக உடைகிறது. பொட்டலமாக கட்டி மூங்கிலில் பிணைத்து தூக்கி செல்கிறார்கள்.
”அய்யோ அம்மா.. என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. மன்னித்து விடு அம்மா” என்று மகன் கதறுகிறான்.
யார் காதில் விழப் போகிறது..!!  முகநூல் பதிவு

பூங்குன்றனுக்கு 'கல்தா' கொடுத்ததா கார்டன்? -வில்லங்கம் விளைவித்த விடுமுறை

விகடன்.காம்     அதி.மு.க தொண்டர்களைப் பொறுத்தவரையில், கார்டன் என்றாலே அது பூங்குன்றன் மட்டும்தான். ' தற்போது கார்டனில் இருந்து அவரை அனுப்பிவிட்டார்கள். புதிதாக கார்த்திகேயன் என்பவரை நியமித்துவிட்டார்கள்' என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 
போயஸ் கார்டனைப் பொறுத்தவரையில், பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கும் பெருமை பூங்குன்றனுக்கு மட்டுமே உண்டு. மாவட்டங்களில் அமைச்சர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரையில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்பவர் அவர். " தினம்தோறும் கார்டன் முகவரிக்கு ஏராளமான கடிதங்களை அனுப்பி வருகின்றனர் தொண்டர்கள். இதில், அமைச்சர்கள் மீதான புகார்களை தலைமையின் கவனத்திற்கே கொண்டு போகாமல் இருட்டடிப்பு செய்கிறார். நாங்கள் கொடுக்கும் புகார்களை கிடப்பில் போட்டுவிடுகிறார்.

நடிகர் அருண் விஜய் தலைமறைவு.. போலீஸ் வாகனத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார் !

சென்னை : குடிபோதையில் கார் ஓட்டி, போலீஸ் வண்டி மீது மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய், கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய். ‛முறைமாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார், ஆனால் அவரால் முன்னணி நடிகராக உயரமுடியவில்லை. ஹீரோவாக ஜெயிக்க முடியாதவர் அடுத்து அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தார். அதுவும் கை கொடுக்கவில்லை. தற்போது வா டீல், குற்றம் 23 உள்ளிட்ட அவரது படங்கள் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

காவிரி, பாலாறு பிரச்சினையைவிட சசிகலா புஷ்பாவை சிறையில் அடைப்பதுதான் ஜெயலலிதாவுக்கு முக்கியம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஜெயலலிதாவின் ஆட்சி என்பது அதிகார துஷ்பிரயோகத்துக்கு எப்போதுமே பெயர் போனது. கிட்டத்தட்ட அதுவொரு சர்வாதிகார ஆட்சி. அதே சமயம் சுரண்டப்படும் மக்களின் முன்னால், அதுவரை அதிகாரத்தை சுவைத்துக்கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி செருப்பால் அடிப்பதன் மூலம் மக்களை கிளுகிளுப்புக்கு உள்ளாக்குவதும் அவரது வாடிக்கை. இது அவரது எல்லா ஆட்சிக் காலத்திலும் நடக்கும். இதற்கு சமீபத்திய உதாரணம் சசிகலா புஷ்பா விவகாரம்.
ஜி. கார்ல் மார்க்ஸ் அவரது குடும்பத்தினர் மீது, அவர்களது வீட்டில் வேலை செய்தவர்கள் கொடுத்த பாலியல் அத்துமீறல் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டிருக்கும் அவரை நேரில் ஆஜராகச் சொல்லி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால் தாம் தமிழகம் வந்தால் கைது செய்யப்படுவோம் என்று அவர் உச்சநீதிமன்றத்தை அணுகுகிறார். நீதிபதிகள், தமிழக அரசின் வழக்கறிஞரைப் பார்த்து ‘அவர் தமிழகம் வர வேண்டும் என்று ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள்? அவர் எங்கும் பறந்துவிடப் போவதில்லை’ என்று கேட்கிறார்கள். வழக்கறிஞர், ‘அவருக்கு எந்த கருணையும் காட்டக்கூடாது’ என்று வாதிடுகிறார்.

விஷவாயு தாக்கி பலியான 41 தொழிலாளர்கள் குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியவில்லை: தமிழக அரசு சொல்கிறது

தீக்கதிர் : விஷவாயு தாக்கி இறந்த 41 துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்ப ங்களைக் கண்டுபிடிக்க முடியாததால், அவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.‘தமிழகத்தில் கழிவுநீர் தொட்டி கள், குழாய்களுக்குள் இறங்கி அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டதுப்புரவுத் தொழிலாளர்களில், சுமார்200 பேர் விஷவாயு தாக்கி பலியாகி யுள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ‘மாற்றத்திற்கான இந்தியா’ என்ற அமைப்பின் இயக்குநர் நாராயணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கல்விக் கொள்ளையன் பச்சமுத்து – வீடியோ.. வினவு.காம்


ஏதாவது கைது செய்து கணக்கு காட்டவேண்டிய நிலை என்று வந்த பிறகு முதல்வர் அலுவலகத்தில் அனுமதி கேட்டிருக்கின்றனர். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு போன்று இந்த அனுமதியும் பல மணி நேரங்களுக்கு பிறகு வந்திருக்கிறது. ஒரு கொள்ளையரை கைது செய்ய எதற்கு முதல்வர் அனுமதி?
டந்த பத்து – பதினைந்து ஆண்டுகளில் எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பச்சமுத்துவிடம் தானாகவே பணத்தை பறிகொடுத்தவர்கள் பல பேர். அதில்  112 மாணவர்கள் தற்போது புகார் கொடுத்திருக்கின்றனர். இவர்களிடம் மதன் மூலமாக பச்சமுத்து கொள்ளையடித்த பணம் சுமார் 72 கோடி ரூபாய். இந்தக் கொள்ளைப் பங்கில் ஏற்பட்ட தகராறு காரணமாக மதன் தலைமறைவாக பச்சமுத்து தனக்கும் மதனுக்கும் தொடர்பில்லை என்று அலட்சியமாக கைவிரித்தார்.

நடிகர் அருண் விஜய் கைது ! போதையில் காரோட்டி போலீஸ் வாகனத்தை மோதினார்


Arun Vijay arrested in Chennai Police
Arun Vijay arrested in Chennai Police அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், அளவுக்கு அதிகமாக குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது. நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் நடிகர் விஜயகுமார் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் வந்தார். அதைத் தொடர்ந்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் அருண் விஜய் மீது, மோட்டார் வாகனச் சட்டம்- 185-வது பிரிவு மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 279-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து அருண் விஜய்யை கைது செய்துள்ளளனர்.

தமிழகத்திற்கு தண்ணீரா? எப்படி முடியும் ?- கர்நாடகா முதல்வர்!

மின்னம்பலம்.காம் :‘செழிப்பும், மகிழ்ச்சியும் ஓங்கிய டெல்டா மாவட்டங்கள் எனுமளவுக்கு தஞ்சையைச் சுற்றியுள்ள மாவட்டங்களை அழைப்போம். குறிப்பாக, காவிரிப்படுகை எப்போதும் வளமாக இருக்கும். ஆனால் இன்று? அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. காவிரியை கர்நாடகம் கட்டுப்படுத்தி தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறதே. காவிரி வந்தால் மட்டுமே மீண்டும் செழிக்கும்’ என வேதனையைப் பகிர்கின்றனர் டெல்டா மாவட்ட விவசாயிகள். மனவுணர்வுகளை உணர்ந்து காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக, தமிழ்நாட்டுக்கு 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக நடத்தினார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமய்யா, ‘இந்த ஆண்டு எங்கள் கர்நாடகாவிலேயே வறட்சி நிலவுகிறது. எங்கள் மக்களே தண்ணீருக்காகத் தவிக்கும்போது, எங்கிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர இயலும்? கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காக 45 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது.

பச்சமுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்..

மின்னம்பலம்.காம் :‘பச்சமுத்துவை கைது செய்தாலும் சிறையில் அடைக்கக் கூடாது என்பதில் காவல்துறை அதிகாரியொருவர் ரொம்பவே ஆர்வம் காட்டினார் என்பதை, நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தேன். ஆனால், அவரது முயற்சிகள் பலிக்கவில்லை. நேற்று மாலை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பச்சமுத்துவுக்கு முதலில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த மருத்துவர்களோ, ‘இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு இங்கே டெஸ்ட் எடுக்க முடியாது’ என்று சொல்லிவிட, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பச்சமுத்து. அங்கே பரிசோதனைகள் முடிந்தபிறகு, ரகசியமாகவே வெளியில் அழைத்துவரப்பட்டார். காத்திருந்த மீடியா கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மூன்று போலீஸ் வண்டிகள் வெவ்வேறு திசைகளில் பறந்தன.
எப்படியும் சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குத்தான் அழைத்துவருவார்கள் என மீடியா அங்கே காத்திருந்தது. ஆனால் இரண்டு மணிநேரம் பச்சமுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை’ என்பதுதான் அந்த மெசேஜ்.
‘அப்படியானால் எங்கே போனார் பச்சமுத்து? சென்ட்ரலில் இருந்து சைதாப்பேட்டைக்கு வர இரண்டு மணி நேரம் ஆகுமா? என்று கேட்டது ஃபேஸ்புக்’

தயாநிதி மாறன் சிபிஅய் நீதிமன்றத்தில் ஆஜார் ...



டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானபின்னர் தயாநிதிமாறன் செய்தியாளர்கள் சந்திப்பதை தவிர்ப்பதற்காக ஆட்டோவில் சென்றார். ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த மாறன் சகோதரர்களில் தயாநிதிமாறன் வழக்கு விசாரணை முடிந்தபிறகு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார். வழக்கமாக நீதிமன்றத்தில் இருந்து வெளியே செல்லும்போது சொகுசுகாரில் செல்லும் தயாநிதிமாறன், பத்திரிகையாளர்கள் சூழ்ந்திருப்பதை தெரிந்து கொண்டு, அவர்களின் கேள்விகளை தவிர்ப்பதற்காக அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார். நக்கீரன்.இன்

இஸ்லாமிய பெண் குடும்ப அங்கதவர்களால் கொல்லப்படுவதற்கு முன் விடியோ


உத்தர பிரதேசத்தை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் கவுரவக் கொலை செய்யும் முன்பு வீடியோ எடுத்தது இணையதளங்களில் வைராகியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்தவர் சோனி(26).
இஸ்லாமிய பெண்ணான அவர் தனது குடும்பத்தாருடன் மும்பையில் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தார் அவரை ரயிலில் ஹத்ராஸுக்கு திடீர் என்று அழைத்துச் சென்றனர். ரயில் கழிவறையில் சோனி தனது செல்போனில் தன்னை வீடியோ எடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என் தந்தை, சகோதரர் என்னை கொலை செய்ய விரும்புகிறார்கள்.

8 மாத குழந்தை பாலியல் வன்முறை கொலையில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி

பெண்களின் பாதுகாப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்துக் கட்சியினருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில்,
பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும், சில ஆலோசனைகளையும் உள்ளடக்கிய உங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி.
பெண்கள் மீதான வன்முறை பல வகைப்பட்டது. பெண் என்பதால் வரும் பாலியல் தாக்குதல்; தொழிலாளி, விவசாயி, அலுவலக ஊழியர் என்று வேலை தலத்தில் எதிர்நோக்கும் வன்முறை; போராட்டங்களின் போது அரசு/காவல்துறை கட்டவிழ்த்து விடும் வன்முறை; தலித்/பழங்குடியின பெண் என்பதால் வரும் சாதிய வன்முறை, மதவெறித் தாக்குதலில் நடக்கும் வன்முறை. இவை அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் கட்சி அணியினர் முன்வரிசை படையாக நிற்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறது.

மும்பை ஹாஜி அலி தர்கா கருவறைக்குள் பெண்கள் செல்ல அனுமதி ஐகோர்ட்டு தீர்ப்பு

மும்பை ஒர்லி கடல்பகுதியில் அமைந்துள்ள ஹாஜி அலி தர்கா கருவறைக்குள் பெண்கள் செல்வதற்கு அனுமதி அளித்து மும்பை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
பெண்களுக்கு தடை மும்பை ஒர்லி கடல்பகுதியில் அமைந்துள்ள ஹாஜி அலி தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒர்லி கடற்கரையில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்த தர்கா, மும்பையின் எழில்மிகு காட்சியை பிரதிபலிக்கிறது. இந்த ஹாஜி அலி தர்காவின் கருவறைக்குள் பெண்கள் சென்று வழிபாடு நடத்துவதற்கு கடந்த 2012–ம் ஆண்டு தர்கா அறக்கட்டளை திடீரென தடைவிதித்தது.
இதனால், பெண்கள் ஹாஜி அலி தர்கா கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தடையை நீக்க கோரி ‘பாரதீய முஸ்லிம் மகிளா அந்தோலன்’ என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சாகியா சோமன் மற்றும் நூர்ஜஹான் நியாஸ் ஆகிய இரண்டு பெண் உறுப்பினர்கள் மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.

தஞ்சாவூரு மண்ணெடுத்து' பாடலுடன் நாதனுக்கு இறுதி அஞ்சலி

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் அவருக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடலான ‛தஞ்சாவூரு மண்ணெடுத்து' பாடல் ஒலிபரப்பப்பட்டது.
சிங்கப்பூரின் நீண்ட நாள் அதிபர் என்னும் பெருமை பெற்றவர் எஸ்.ஆர்.நாதன். தமிழ் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட அவர் கடந்த 22 ம் தேதி உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார்.
சிங்கப்பூர் பார்லிமென்ட் ஹவுசில் நடந்த இறுதி அஞ்சிலி நிகழ்ச்சியில் 20,000 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். அங்கு நடந்த புகழஞ்சலி கூட்டத்தில் நாதன் மிகவும் விரும்பி கேட்கும் தமிழ் பாடலான ‛தஞ்சாவூரு மண்ணெடுத்து, தாமிர பரணி தண்ணிய விட்டு சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம' என்ற பாடல் முழுவதுமாக ஒலிபரப்பப்பட்டது. கவிஞர் வைரமுத்துவின் வரிகளால் அமைந்த இந்த பாடாலை அங்கு கூடியிருந்தவர்கள் உருக்கத்துடன் கேட்டனர்.

சுவாதி கொலை ! ஏழு கேள்விகளுக்கும் பதில் அளிக்கவேண்டும் .. தமிழச்சியின் தொடர் சாட்டை

சுவாதி வழக்கில், ராம்குமாரை அப்பாவி என்றும், தொடக்கத்திலிருந்தே போலீசார் உண்மைகளை மறைத்து வருகின்றனர் என்றும், சமூக வலைதளத்தில் பிரபலமான தமிழச்சி என்பவர்  குற்றம் சாட்டிவருகிறார். மேலும், சுவாதி வழக்கில் யார் குற்றவாளி என்ற உண்மை தெரிந்த பெண்ணை, தமிழகத்தை சேர்ந்த ஒரு காவல் அதிகாரியே கொலை செய்ய முயன்றார் என்று கூறி, அந்த பெண் பேசிய ஆடியோக்களையும் அவர் தன்னுடைய முகநூலில் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அவர் நேற்று தன்னுடைய பக்கத்தில், சுவாதி வழக்கு குறித்து பல அதிரடியான தகவல்களை கூறியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
\"சுவாதி படுகொலையை இந்துத்துவ அமைப்புகள்தான் திட்டமிட்டு செய்தன என்று பொய்யான தகவல்களை உண்மை என நிறுவ இஸ்லாமியர் / திராவிடர் / தலித் அமைப்புகள் முயலுகின்றன" என்று கருப்பு முருகானந்தம் குற்றம் சாட்டியுள்ளார்

SRM பச்சமுத்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் ... ஐஜேகே கட்சி தொண்டர்கள் சாலை மறியல்

Pachamuthu bail plea rejection by Saidapet courtசென்னை: மருத்துவ கல்லூரியில் இடம்தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம். குழும தலைவரும் ஐ.ஜே.கே. கட்சி தலைவருமான பச்சமுத்துவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாகக் கூறி ரூ.72 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவருமான பச்சமுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ஜீ டிவி லட்சுமி ராமகிருஷ்ணனின் சுயநல திமிரினால் லாரி உரிமையாளர் நாகப்பன் மரணம்! போலீஸ் என்ன செய்கிறது?


இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் டிவியில் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் சென்னையில் லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் மனைவியை விட்டு பிரிந்து மைத்துனியுடன் குடும்பம் நடத்துகிறார்; மகள்களிடம் தவறாக நடக்கிறார் என்ற புகார்களுடன் அண்மையில் ஜீ தமிழ் டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி டிவியில் ஓடிக் கொண்டிருந்த போது இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஜீ தமிழ் டிவி நிர்வாகத்திடம் நாகப்பன் கெஞ்சினாராம்.
ஆனால் அவர் எதிர்ப்பையும் மீறி நிகழ்ச்சி ஒளிபரப்பானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குடும்பத்தினர் புகார்.

ரங்கராஜ் பாண்டே அதிமுக ராஜ்யசபா எம்பி........ஆவாரா?

அன்புள்ளே #சவெரா அவதூறு வழக்கில் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் அறை வாங்கிய விஷயத்தை இவர்கள் பேச மாட்டார்கள் .. உச்சநீதிமன்றம் #sasikalpushba விற்கு காட்டும் கருணையை இவர்கள் பேச மாட்டர்கள் #பச்சைமுத்து_கைது கூட இவர்கள் பேச மாட்டார்கள் .. பின்னே எதுக்கு Rangaraj Pandey & co கோட்டு சூட் போட்டு வாய் கிழிய பேச வேண்டும் Jaya.T.V யுடன் இணைத்து விடலாமே Thanthi TV யை ... விளக்கு எல்லாம் ஒழுங்கா பிடித்து , நடிகைக்கு ரேட் கார்டு போட்டு - ஜாதி பாசம் பொங்க தினமலர் அணைப்பில் வளர்ந்தவர் அவர் ..அவரின் லட்சியமான #அதிமுக MP Post அடையும் நோக்கத்தை இப்படி பப்ளிக்காக போட்டு உடைப்பது எப்படி நியாயம் ஆகும் அன்பரே .. Instead of Criticisng in public one should appreciate his dedication towards his goal ..  முகநூல் பதிவு  சவேரா

புதிய கல்விக் கொள்கைக்கு சொம்படிக்கும் தி இந்து – ஆய்வுக் கட்டுரை

கல்வியாளர் வசந்தி தேவிvinavu.com :கடப்பாரையை தொண்டைக்குள் குத்தியிறக்கிவிட்டு சுக்கு கசாயத்தை பரிந்துரைக்கும் புதியகல்விக் கொள்கை!< -இதற்கு சொம்படிக்கும் பார்ப்பன இந்து பத்திரிகை! புதிய கல்விக் கொள்கைக்கான உள்ளீடுகள் வெளியானதிலிருந்து தமிழ்நாடு தழுவிய அளவில் அதற்கெதிரான போராட்டங்கள் மற்றும் கருத்தரங்கங்கள், அறைக்கூட்டங்கள் ஆகியவை பல முற்போக்கு அரசியல் இயக்கங்களாலும், கல்வியாளர்களாலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு கடந்த நவம்பர் மாதத்திலிருந்து காட்ஸ் ஒப்பந்தத்தை அடியொற்றி எழுதப்படும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான இயக்கத்தை பல்வேறு மட்டங்களில் – அறிவுஜீவிகளிலிருந்து, மாணவர்கள் மற்றும் மக்கள் வரை எடுத்து செல்வதோடு, வரும் ஆகஸ்டு 30-ம் தேதி கருத்தரங்கமும் நடத்த இருக்கிறது.

ராம்குமாருக்கு சுவாதியையே தெரியாது ! சுவாதி கொலை ஆய்வில் புதிய தகவல்கள் எவிடன்ஸ்


தொடக்கத்திலிருந்தே அவர் ராம்குமாருக்கும், இந்த கொலைக்கும் தொடர்பில்லை என்று கூறி பல ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார். இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு பெண்ணை போலீசாரே கொல்ல முயன்றனர் என்று கூறி, அந்த பெண் பேசும் ஆடியோக்களை வெளியிட்டார். அதேபோல், இந்த கொலையில் தொடர்புடையாக கூறி கருப்பு முருகானந்தம் என்பவரை பற்றிய பல தகவல்களை அவர் நேற்று வெளியிட்டார்.சுவாதி கொலை செய்யப்பட்டு, ராம்குமார் கைது செய்யப்பட்டவுடன், ராம்குமார் பேஸ்புக் மூலம் சுவாதிக்கு அறிமுகமானவர் என்றும், அவர்கள் இருவரும் அவ்வப்போது பேஸ்புக்கில் சேட் செய்வார்கள் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது . ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன. அதேபோல், சுவாதியை பார்த்து காதல் கொண்ட ராம்குமார், அவரின் பின்னாலேயே சுற்றி அவருக்கு தொல்லை கொடுத்ததாகவும், தன் காதலை தெரிவித்த போது தன்னை தேவாங்கு என்று திட்டியதால் அவரை ராம்குமார் கொலை செய்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. தற்போது ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சாதாரண பள்ளி ஆசிரியர் 15 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதியானது எப்படி?

thetimestamil.com
வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன விவகாரத்தில், எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் தாண்டவராயபுரத்தில் பிறந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரான பச்சமுத்து, 1969-ம் ஆண்டு சென்னையில் பிளாரண்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரில் தொடக்கப் பள்ளியை தொடங்கினார்.
ஐந்தாம் வகுப்பு வரை இருந்த அந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்ற 12 ஆண்டுகள் ஆனது. ஆனால் அடுத்த 20 ஆண்டுகளில் 30-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களைத் தொடங்க எஸ்.ஆர்.எம். குழுமத்திற்கு எங்கிருந்து பணம் வந்தது? என கேள்வி எழுப்புகிறது நியூஸ் 7 தொலைக்காட்சியின் இணையதளத்தில் வெளியான கட்டுரை. கட்டுரையிலிருந்து …

இந்துத்துவத்தை வளர்க்கும் வித்யாலயா, விகாஸ், விஹார் பள்ளிகள்:...பெற்றோருக்கு இது தெரியுமா?

இனியன்thetimestamil.com  இனியன் :90களின் காலகட்டத்தில் தமிழகத்தில் துவங்கிய பிள்ளையார் சதுர்த்தி தினக் கொண்ட்டாட்டங்களும் அதனைத் தொடர்ந்த ஊர்வலங்களும். அவற்றினால் ஆங்காங்கே ஏற்பட்ட சிறுசிறு மற்றும் பெருங்கலவரங்களும் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியவையல்ல. தற்காலங்களில் அத்தகைய கலவரங்கள் நடைபெறுவது கிடையாது என்றாலும் ஒருவிதப் பதட்டமான சூழல்களுடனே ஒவ்வொரு வருடமும் சிலைகரைப்பு ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.
இளைஞர்களைக் குறிவைத்து இந்த ஊர்வல நிகழ்வினை மதம் சார்ந்த கட்டாயச் சடங்காக மாற்றியமைத்ததில் இந்துவா அமைப்புகள் குறிப்பிடத்தக்க வெற்றியடந்திருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது ஒவ்வொரு வருடமும் பெருகிவருகிற நமது இளைஞர் பட்டாளங்களையும் அதில் அவர்களுக்கான ஈடுபாடுகளை மீறிய வெறித் தன்மையைப் பார்கின்ற போது. இதுபோன்ற வெறித் தனமான செயல் பாடுகளில் அதிகளவில் ஈடுபட வைக்கப்படும் இளைஞர்கள் யார்யார் எனச் சற்று ஆராய்ந்தால் அனைத்திலும் பின்தங்கியிருக்கக் கூடிய அடித்தட்டு இளைஞர்கள் தான்.

பழங்குடி தலைவர் K.A.குணசேகரன் அஞ்சலி

சந்திர மோகன்thetimestamil.com  சந்திர மோகன்: தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் (மலையாளீ) பேரவையின் நிறுவனத் தலைவரும், தென்னிந்திய பழங்குடியினர் யூனியன் தலைவருமான மதிப்பிற்குரிய K.A.குணசேகரன் அவர்கள், 71 வயதில் நோயின் காரணமாக இறந்தார். மாலை 4 மணியளவில், பள்ளிப்பாளையம் மின்மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.
கொல்லிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட மலையாளீ பழங்குடியைச் சார்ந்தவர். தொலைத் தொடர்புத் துறையில் அரசுப் பணியில் ஊழியராக வாழ்க்கையைத் துவங்கிய அவர், 45 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டார்.
நான் பயின்ற பல்கலைக்கழகங்கள் !
நான் எனது உலக அறிவை வெறும் கம்யூனிசப் புத்தகங்களிலிருந்து மட்டுமே பெறவில்லை. நான் பயின்ற பல்கலைக்கழகங்களில் புரட்சிகரமான கிராமப்புற வேலையும், பழங்குடியினர் வேலையும் முக்கியமானவை ஆகும்.

அவரு ஜெயிலுக்குப் போகக்கூடாது!’ - உத்தரவிட்ட உயரதிகாரி!

மின்னம்பலம்.காம் :வெள்ளி, 26 ஆக 2016 மொபைல் டேட்டாவை ஸ்வைப் செய்ததும் வாட்ஸ் அப், ‘எஸ்.ஆர்.எம். நிறுவனர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து ஒருவழியாக கைது செய்யப்பட்டார்!’ என்ற மெசேஜை அனுப்பியது. நினைவூட்டலுக்காக நாம் ஏற்கனவே டிஜிட்டல் திண்ணையில் சொன்ன சில தகவல்களை அனுப்பியிருக்கேன்...’ என்ற மெசேஜும் அதைத்தொடர்ந்து சில மெசேஜ்களும் வந்து விழுந்தன.
‘‘மதன் காணாமல்போன விவகாரத்துக்கும் பாரிவேந்தருக்கும் தொடர்பு இருப்பதால், இதை அரசியலாகவும் பார்க்கிறார்கள். தேர்தலுக்குமுன்பு திமுக-வுக்கு தேர்தல் நிதியாக ரூ.10 கோடி கொடுத்திருக்கிறார் ரவி. அதாவது பாரிவேந்தரின் மகன். ஆனால், அதிமுக-வுக்கு எதுவும் நிதி கொடுக்கவில்லை. மதன் காணாமல்போன விவகாரம், தேர்தல் நிதி விவகாரம் எல்லாம் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போயிருக்கிறது. ஆனால், அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால் போலீஸ் அமைதியாக இருக்கிறது.

கைதான பச்சமுத்துவுக்கு மருத்துவ பரிசோதனை ( படங்கள்)

வேந்தர் மூவிஸ் மதன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக மதன் மீது புகார்கள் குவிந்தன. இந்த புகாரின் அடிப்படையில் மதன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த மோசடி வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவருமான பச்சமுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

சசிகலா புஷ்பாவை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியில் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா வீட்டில் பணிபுரிந்த தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு இளம்பெண்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனை அடிப்படையில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன் ஆகியோர் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர்.

சீமான் : மாயோன்தான் ( கிருஷ்ணன்) மாயாண்டி ஆனது... நானும் மாயாண்டி குடும்பத்து மகனே

Seeman speaks on "Mayoon Peruvizha" சென்னை: முப்பாட்டன் முருகனைத் தொடர்ந்து கிருஷ்ணஜெயந்திக்காக முப்பாட்டன் மாயோன் பெருவிழா என நாம் தமிழர் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டியிருப்பது குறிப்பது அக்கட்சித் தலைவர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.சீமான் அளித்துள்ள விளக்கம்: கிருஷ்ணரும் நம்முடைய மூதாதையர்தான். கண்ணன் என்ற பெயரே கிருஷ்ணராக மருவிவிட்டது. குறிஞ்சி நிலத் தலைவனாக முருகன் போற்றப்படுவது போல, முல்லை நிலத் தலைவனாக கண்ணன் போற்றப்படுகிறார். மாயோன் மேய காடுறை உலகு என்று தொல்காப்பியம் போற்றுகிறது.
மருத நிலத் தலைவனாக இந்திரனும் நெய்தல் நிலத் தலைவனாக வருணனும் பாலை நிலத் தலைவியாக கொற்றவையும் போற்றப்படுகிறார்கள்.

பிரிட்டனில் 5 தமிழர் இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம்

பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட் கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத் தமிழர்களில் இருவர் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் நால்வர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், ஒருவர் 27 வயதானவர் எனவும் தெரியவந்துள்ளது.
லண்டனின் கிறின்விச் பகுதியிலிருந்து ஹம்பர்சான்ட் கடற்கரைக்குச் சென்ற குறித்த ஐந்து பேரும் கடற்கரையில் கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது திடீரெனக் கடல் மட்டம் மிகவேகமாக உயர்ந்து அவர்களை கடலுக்குள் இழுத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

உயிர்காக்கும் 100 நாள் வேலைத்திட்டமும் – விமர்சனங்களும்

theekkathir.in::   நூறுநாள் வேலைத்திட்டம் தேவையற்றது; சோம்பேறிகளை உருவாக்குகிறது; வேலை செய்யாமல் கூலி பெறும் மனநிலையை வளர்க்கிறது; 100 நாள் வேலைத்திட்டத்தால் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது; இதற்கு ஒதுக்கப்படும் நிதியை வளர்ச்சித்திட்டங்களுக்கு மாற்றலாம் என பலர் பேசுவதையும் பத்திரிகைகளில் எழுதுவதையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவாதிப்பதையும் பார்க்கிறோம். 100 நாள் வேலைத்திட்டத்தை சிலர் இப்படித்தான் பார்க்கிறார்கள். இவர்களுக்கு நூறுநாள் வேலைத்திட்டமும் புரியவில்லை. கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்நிலையும் தெரியவில்லை என்பதுதான் உண்மை.
 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது. தமிழகத்தில் 86 லட்சமாக இருந்த விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் புதிதாக சேர்ந்துள்ளவர்கள் 10 லட்சம் பேர். இவர்கள் யார்? சிறு, குறு விவசாயிகளாக இருந்தவர்கள் தங்கள் நிலங்களை இழந்து விவசாயத் தொழிலாளியாக மாறியுள்ளனர். விவசாய வேலைகளில் 46 நாட்கள் மட்டுமே இவர்களுக்கு வேலை கிடைக்கிறது.

டெல்லி JHU சமுக நீதி மாநாட்டு வாசலில் அன்புமணிக்கு கடும் எதிர்ப்பு .. கொடும்பாவி எரிப்பு !


புதுடெல்லி; நாங்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் கிடையாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் பேட்டியளித்தார்.
அன்புமணி ராமதாசுக்கு எதிர்ப்பு
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சமூக நீதி தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்க சென்றார். கடந்த 2 நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் இந்த கருத்தரங்கில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பது குறித்து மிகவும் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன.
இந்தநிலையில் கருத்தரங்கில் கலந்து கொள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் அன்புமணி ராமதாஸ் சென்றபோது, பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ்நாடு மாணவர்கள் உள்பட மாணவர்கள் அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் அவர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் தனபால் மீது ஜெயலலிதா கடும் கோபம்... வீணாக நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக வைத்துவிட்டார் ?


சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது முதல்வர் ஜெயலலிதா கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் புதிய சபாநாயகர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Dhanapal to resign from TN Speaker post? சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதாக 80 திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் தனபால் கடந்த 17-ந் தேதி அறிவித்தார். ஆனால் இந்த அமளியின் போது சபையில் இல்லாத 2 திமுக எம்.எல்.ஏ.க்களையும் சஸ்பெண்ட் செய்துவிட்டாராம் தனபால்.
இந்த 2 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மதுரை பிடிஆர்பழனிவேல்ராஜன் தியாகராஜன் இதை நீதிமன்றத்தில் குறிப்பிட்டு மனுத் தாக்கல் செய்திருக்கிறார். மற்றொரு எம்.எல்.ஏ.வை சஸ்பெண்ட் பட்டியலில் இருந்து சபாநாயகர் நீக்கிவிட்டார்.

ஆயிரத்துக்கு மேற்பட்ட செல்போன் அழைப்புக்கள் ஏன்? தமிழச்சி தொடர்ந்து வெளியிடும் அதிர்ச்சி தகவல்கள்


சுவாதி வழக்கில், ராம்குமாரை அப்பாவி என்றும், தொடக்கத்திலிருந்தே போலீசார் உண்மைகளை மறைத்து வருகின்றனர் என்றும், சமூக வலைதளத்தில் பிரபலமான தமிழச்சி என்பவர் குற்றம் சாட்டிவருகிறார்
சுவாதி வழக்கில் யார் குற்றவாளி என்ற உண்மை தெரிந்த பெண்ணை, தமிழகத்தை சேர்ந்த ஒரு காவல் அதிகாரியே கொலை செய்ய முயன்றார் என்று கூறி, அந்த பெண் பேசிய ஆடியோவையும் சமீபத்தில் முகநூலில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில், நேற்று தன்னுடைய முகநூலில் அவர் மீண்டும் ஒரு பரபரப்பு குற்றசாட்டுகளை தமிழக போலீசார் மீது கூறி மீண்டும் அந்த பெண் பேசும் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். மேலும், அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
சுவாதியின் குடும்பத்தினரே தன்னை வெளிநாடுக்கு தப்பிச் செல்லும்படி கூறினர்" என்கிறார் வெளிநாட்டுக்கு தப்பியோடிய பெண். குறிப்பாக சுவாதியின் அப்பா இதில் தீவிரமாக இருந்துள்ளார். ஏன்? எதற்காக? இதன் உள்நோக்கம் என்ன? என்பதை சுவாதியின் அப்பாவே விளக்க வேண்டும்"

ஓஷோ கொலைசெய்யப்பட்டார்... ஜானும் ஜெயேசும் உடலை அவரசம் அவசரமாக எரித்தார்கள்... 1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் ?


நீங்கள் எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தன்னை அறிய முடியும். நீங்கள் உயிர்ப்புடன் இல்லாவிடில், வாழ்க்கையை அறியவே முடியாது’’ என்பார் ஓஷோ. 26 ஆண்டுகள் ஆனப் பின்னும் அவர் மரணம் குறித்த சர்ச்சை உயிர்ப்புடன்தான் இருக்கிறது. ஆனால், விடையைத்தான் அறிய முடியவில்லை. ஓஷோ மரணத்தில் சர்ச்சை! யோகா, ஜென், தாவோயிசம், தந்த்ரா போன்ற கலைகளை இந்தியாவைத் தாண்டி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு சென்றவர் ஓஷோ. இவரது எளிமையான, தெளிவான தத்துவ உரைகளைக் கேட்க வெளிநாட்டுச் சீடர்கள் குவிந்தனர். ஐரோப்பிய நாடுகளில் வேற்று மதத்தைப் பரப்புகிறார் என ஓஷோ மீது சில ஐரோப்பியச் சங்கங்களுக்குக் கடுகடுப்பு ஏற்பட்டது. இதனிடையே அமெரிக்காவில் ஒரேகான் என்ற பகுதியில் ரஜ்னீஷ்புரம் என்ற ஆன்மிக நகரத்தை ஓஷோவின் சீடர்கள் உருவாக்கினார்கள். இனியும் அவரை விட்டுவைத்தால், சரிவராது என நினைத்த அமெரிக்கா, புரட்சிகரமான கருத்துகளைப் பரப்பியதாகக் கூறி, அவரைக் கைதுசெய்தது. ஓஷோ சிறையில் இருந்தபோது, உணவில் அவருக்கு ‘ஸ்லோ பாய்ஷன்’ கொடுக்கப்பட்டாதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சசிகலா புஷ்பா சிங்கப்பூரில்.. மறைந்த அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார் !

AIADMK MP Sasikala Pushpa says, i am in singaporeடெல்லி: அதிமுவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா வாட்ஸ் அப்பில் ஒரு புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தான் சிங்கப்பூரில் இருப்பதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா புஷ்பாவின் வீட்டில் பணிபுரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் அளித்த புகாரின்பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்க கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா உட்பட 3 பேரும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி வி.எம்.வேலுமணி முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தன.

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

குஜராத்: பட்டேல்களின் போராட்டத்தை பெரிதாக்கிய ஊடகங்கள், தலித்துகளின் தன்னெழுச்சியை கண்டுகொள்ளவே இல்லை.

குஜராத்தில் பசு பாதுகாப்பு கும்பலால் செத்த மாட்டின் தோலை உரித்த காரணத்துக்காக தாக்கப்பட்ட தலித் இளைஞர்களுக்கு ஆதரவாக எழுந்த தலித் மக்களின் எதிர்வினை, இந்தியா முழுமைக்கு அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆயிரம் ஆண்டுகால ஒடுக்குமுறையை எதிர்த்து, வெகுண்டெழுந்து இனி செத்த மாடுகளை தோலுரிக்க மாட்டோம் என அரசு அலுவலகங்கள் முன் செத்த மாடுகளை தூக்கி எறிந்த் நடத்திய போராட்டமும் அதற்குப் பிறகு தன்னெழுச்சியாக கட்டி எழுந்த ‘உனா பேரணி’யும் பெரும் அதிர்வலைகள்தான். அந்த அதிர்வலைதான் பசு பாதுகாப்பு கும்பலுக்கு பாதுகாப்பு வழங்கிய பாஜகவின் பிரதமரை பேச வைத்தது. அந்த அதிர்வலைதான் மாநில முதல்வர் பதவி விலக காரணமாக இருந்தது. பெண்களும் குழந்தைகளும் இளைஞர்களும் சிறுபான்மையினரும் உணர்வுடன் திரண்டெழுந்த இந்தப் பேரணியின் இறுதி மூன்று நாட்கள் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பங்கேற்று திரும்பியிருக்கிறார். அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பிய கேள்விகளுக்கு இங்கே பதிலளித்திருக்கிறார். பதில்கள் விளக்கமாகத் தந்திருக்கிறது. நம் காலத்தின் தன்னெழுச்சியான போராட்டத்தை ஆவணப்படுத்துகிறவிதமாக அவை அமைந்துள்ளன…
30 ஆண்டுகளில் இல்லாத தலித் எழுச்சியை குஜராத் கண்டிருக்கிறது. நேரில் அதைப் பார்த்திருக்கிறீர்கள். எப்படி இருந்தது அந்த அனுபவம்?
“முதலில் முப்பதாண்டுகளுக்கு முந்தைய தலித் எழுச்சி என்பதை பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

மோடியே தேசத்துரோகி! : ரம்யாவை ஆதரிக்கும் காங்கிரஸ்


பாகிஸ்தான் குறித்த தன் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. முடிந்தால் நான் பாகிஸ்தானுக்கு நடந்தே செல்வேன் என்று, அதிரடியாகக் கூறியிருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான ரம்யா. மேலும் பாகிஸ்தானில் விருந்துண்ட மோடிதான் தேசத்துரோகி; ரம்யா அல்ல என்றுகூறி, கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்ததாக நடிகை ரம்யாமீது தேசத்துரோக வழக்கு கோர்ட்டில் தாக்கல் ஆனது. ஆனாலும் இதற்காக மன்னிப்புக் கேட்கமாட்டேன் என்று மறுத்துவிட்டார் ரம்யா. மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், பாகிஸ்தான் செல்வது நரகத்துக்குச் செல்வதற்கு ஒப்பானது என்று, சமீபத்தில் கூறியிருந்தார்.

ராகுல் : மன்னிப்பா? நெவர் ! ஆர்.எஸ்.எஸ்.பற்றிய எனது கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை!


மகாராஷ்டிர மாநிலம், சோனாலேயில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியபோது, 'மகாத்மா காந்தியை கொலை செய்தது ஆர்எஸ்எஸ் அமைப்புதான்' என்று குற்றம்சாட்டி பேசியிருந்ததாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக, பிவண்டி பகுதி ஆர்எஸ்எஸ் செயலாளர் ராஜேஷ் மகாதேவ் குந்தே என்பவர், பிவண்டியில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நடைபெற்று தற்போது, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தீப்பொறி’ ஆறுமுகம் -மு.க.ஸ்டாலின் உணர்வுபூர்வ சந்திப்பு


இப்போது தொலைக்காட்சிகளில் விவாதங்களைப் பார்க்கிறோம். காரசாரமாக விவாதித்துக் கொள்கின்றனர். தங்கள் கட்சி நியாயங்களை தங்கள் மொழியில் எடுத்துரைக்கின்றனர். இதுவே ஒரு பொதுமேடையில் நிகழ்ந்தால்? எதிரே மக்கள் திரண்டிருக்க, தமது ‘மொழியில்’ தாம் நம்பும் கட்சிக்காக எதிர்க்கட்சிகளின் தவறுகளை அம்பலப்படுத்துவார். எதிர்த்து பொதுமக்கள் தரப்பில் புகுந்த எதிர்க்கட்சியினர் யாரேனும் கேள்விகேட்டாலும் சளைக்காமல் பதிலளிப்பார். ‘வெளிப்படையான’ இவரின் பேச்சு சிலரால் விமர்சனத்துக்கு ஆளானாலும், தான் சார்ந்த கட்சிக்காக பல மேடைகளைக் கண்டு தொண்டாற்றினார். பல மேடைகள்கண்ட அந்த முழக்கம்தான் இன்று குரல் உடைந்து மௌனித்து கட்டிலில் சுருண்டு கிடக்கிறது.

சென்னை ..Gujarat Files புத்தக எழுத்தாளர் ரானா அயுப் .. போலி என்கவுண்டர்களை அம்பலபடுத்தி இந்துத்வாவுக்கு....


ராணா அய்யூப். தற்போது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் பெயர். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட‌ போலி என்கவுன்ட்டர்கள் குறித்து இவர் எழுதிய புத்தகமான ‘குஜராத் ஃபைல்ஸ்’, இன்று டெல்லியின் அதிகார வர்க்கத்தைக் கதிகலங்க வைத்திருக்கிறது. அந்தப் புத்தகம் தமிழில் ‘குஜராத் கோப்புகள்’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயத்தால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதன் வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம் முன்கதை பூர்வீகம் உத்தரப் பிரதேசம். அப்பா அய்யூப் வகீஃப் உருது கவிஞர். ‘பிளிட்ஸ்’ பத்திரிகையில் பத்திரிகையாளர். முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்திலும் இருந்தவர். அவரைப் பின்தொடர்ந்து, ராணாவும் பத்திரிகைத் துறையில் காலடி எடுத்துவைத்தார்.
இதழியல் தொடர்பான படிப்பை முடித்துவிட்டு 2006-ம் ஆண்டு ‘ஆஜ் தக்’ தொலைக்காட்சியில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு ஆரம்பித்த அவரது பயணம் ‘தெஹல்கா’வில் உச்சத்தைத் தொட்டது. குஜராத் கலவரங்கள், போலி என்கவுன்ட்டர்கள் தொடர்பாக அங்கு அவர் எழுதிய கட்டுரைகளால் பாரதிய ஜனதா கட்சியின் இந்நாள் தலைவர் அமித் ஷா அன்று கைது செய்யப்பட்டார்.

போலீசின் வேலையே மாமூல் வேட்டையும், ஓட்டல்களில் ஓசியில் தின்பதும்...கிரிமினல் போலீசைப் பாதுகாக்கும் ஊடகங்கள் !

police-atrocities-chengamதொலைக்காட்சிகளில் அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ந்து போயிருப்பார்கள். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநரான கணவன், மனைவி, மகன் மூவரையும் பட்டப்பகலில் கடைவீதியில் பலரும் பார்க்க போலீசார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குகிறார்கள். சுற்றி நின்ற பொதுமக்கள் மீதும் தடியடித் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கிறார்கள். எந்த ஏரியா என்று அக்குடும்பத்தினரைக் கேட்ட போலீசார், அவர்கள் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் முன்பைவிட வெறியுடன் தாக்குகிறார்கள்.

ராமதாஸ் திருமாவுக்கு எதிராக கடிதம்! ஜெ., கருணாநிதி, வைகோ உள்ளிட்டோருக்கு .. காதலுக்கு எதிராக கூட்டணி?

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் இடதுசாரி தலைவர்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீரென நேற்று ஒரு கடிதத்தை கொடுத்தனுப்ப பரபரப்பு ஏற்பட்டது. ராமதாஸ் கொடுத்தனுப்பிய கடிதம் எது என்ற விவரமும் உடனே வெளியிடப்படாததால் பல யூகங்கள் கிளம்பின. தற்போது "தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய கடிதத்தைத்தான் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ராமதாஸ் கடிதம் கொடுத்தனுப்பியது தெரியவந்துள்ளது. மேலும் அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பெயரை குறிப்பிடாமல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதை மறுபதிவு செய்து கடுமையாகவும் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

JHU யில் அன்புமணி உருவபொம்மை எரிப்பு ...குடிசை கொளுத்தியே வெளியேறு”: டெல்லி மாணவர்கள் போராட்டம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்கச் சென்ற அன்புமணிக்கு எதிராக பாப்சா, எஸ்எஃபை, ஏஐஎஸ்ஏ உள்ளிட்ட மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்பு‌மணியின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய மாணவர்கள், தலித் மக்களுக்கு எதிராக அன்புமணி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.

சேரன் :இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது

மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.P  மற்றும்  எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில்  E.சிவசுப்பிரமணியன்  K.R. சீனிவாஸ்  தயாரிப்பில் முழுக்க  முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம்  கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம்  தான் ‘கன்னா பின்னா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சேரன் பேசியபோது,இயக்குனர் சேரன் பேசும்போது,“இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சிவா, நான் ஹீரோவாக நடிக்கும்போது எனக்கு ஜிம்மில் ட்ரெய்னிங் கொடுத்தவர்.. இந்தப்படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல் நடிகராகவும் மாறி இருக்கிறார். என்னோட ராசி என்ன வென்றால், எனக்கு ஜிம்ட்ரெய்னிங் கொடுத்தவர்கள் எல்லோரும் ஹீரோவாக ஆகிவிடுகிறார்கள்.. நடிகர் ஆரி எனக்கு ட்ரெய்னிங் கொடுத்தவர் தான். இப்போ ஹீரோ ஆகிவிட்டார்.

BBC :இத்தாலியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 247 ஆக உயர்வு

மத்திய இத்தாலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்க, மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளை தோண்டியும் மற்றும் தங்களது கைகளால் இழுத்தும் உயிர் தப்பியவர்களை மீட்புப் படையினர் காப்பாற்றி வருகின்றனர். மீட்புப்பணி நடைபெறும் இடங்களில், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மலைப் பகுதிகளான அம்பிரியா , லசியோ மற்றும் மார்ஷ் பகுதிகளில் நூற்றுக்கணக்கான படைவீரர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தன்னர்வ தொண்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மனைவியின் சடலத்தை 12 கி.மீ. தோளில் சுமந்து சென்ற கணவர்: அமரர் ஊர்தி தர மறுத்த அரசு!


ஒடிசாவில் அரசு மருத்துவமனையில் உதவிகள் மறுக்கப்பட்டதையடுத்து மனைவியின் சடலத்தை 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு தோளில் சுமந்து சென்றுள்ளார் கணவர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் ஏற்படும்போது, சடலத்தை இலவச வாகனங்களில் எடுத்துச் செல்லும் சட்டம் ஒடிசாவில் அமலில் உள்ளது. இந்த நிலையில் காளஹன்டி மாவட்டம், மெல்கரா என்ற கிராமத்தைச் சேர்ந்த தானாமாஜி என்பவரின் மனைவி காசநோய் காரணமாக மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலை 60 கிலோ மீட்டரில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல எந்த உதவியும் மருத்துவமனை நிர்வாகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

பிரான்ஸ் போலீசார் முஸ்லிம் பெண்களின் புர்க்கினி ஆடையை தடை செய்தனர்


3785A72A00000578-3754395-image-a-35_1471979224583  புர்கினி  அணிந்திருந்த  முஸ்லீம் பெண்ணை   கட்டாயப்படுத்தி  கழட்டவைத்த ஆயுதம் தாங்கிய பொலிசார்!! (படங்கள், வீடியோ) 3785A72A00000578 3754395 image a 35 1471979224583ilakkiyainfo.com :பிரான்ஸ் நாட்டில் உள்ள கடற்கரை ஒன்றில் பெண் அணிந்திருந்த புர்கினி ஆடையை கட்டாயப்படுத்தி நீக்கியதுடன் அவருக்கு பொலிசார் அபராதமும் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள சில நகரங்களில் இஸ்லாமியர்கள் அணியும் புர்கினி ஆடையை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு முதல் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்து வருவதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இரண்டு பிள்ளைகளுக்கு தாயான சியாம் என்பவர் நேற்று நைஸ் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அப்போது, இஸ்லாமிய பெண்கள் அணியும் புரிகினி ஆடையை அவர் உடுத்திக்கொண்டு கடற்கரையில் படுத்திருந்துள்ளார்.
சில நிமிடங்களில் அங்கு வந்த 4 பொலிசார் சியாமை எழுப்ப வைத்து அவர் அணிந்திருந்த புர்கினி ஆடையை நீக்க வலியுறுத்தியுள்ளனர்.

சசி புஷ்பா :எனக்குப் பதவி கொடுத்தது கடவுள்தான்; ஜெயலலிதா அல்ல!'

கார்டனுக்குள் நடந்த கொடுமைகளை நான் மறக்கவில்லை. அவர்கள் என்னை அடித்தது மட்டுமல்ல, கார்டன் போலீஸ்காரர்கள் கையில் லத்தியைக் கொடுத்து அடிக்கச் சொன்னார்கள். காலில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்தார்கள்.அவர்களின் சமரசத்திற்கு உடன்பட்டால், நான் அடி வாங்கியதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.;
நேற்று நடந்த வழக்கு விசாரணையில் மனுத் தாக்கலில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து, அரசுத் தரப்பில் அடுக்கடுக்கான கேள்விகள் தொடுக்கப்பட்டன. குறிப்பாக, ' முன்ஜாமீன் மனுவில் சம்பந்தப்பட்டவர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆகஸ்ட் 17-ம் தேதி சிங்கப்பூருக்குச் சென்றார் சசிகலா. ஆனால், ஆகஸ்ட் 17-ம் தேதி மதுரையில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வரையில் அவர் வெளிநாட்டில்தான் இருக்கிறார். அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராகும்போது, 'இம்மனுவை தாக்கல் செய்ய நான் அறிவுறுத்தினேன்' என ஜாமீன் கோருபவரின் ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் மீறப்பட்டுள்ளன' என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி முன்வைத்த வாதங்களை அடுத்து, ' ஆகஸ்ட் 29-ம் தேதி சசிகலா புஷ்பா நேரில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார் நீதியரசர். 

18 வருடங்களாக வெறும் தேநீர் அருந்தியே உயிர் வாழ்கிறார் சத்தீஸ்கார்

Chhattisgarh woman never had food in last 18 yearsIt’s is very hard to imagine someone not having a morsel of food in the last 18 years and still keeping alive. But Pili Bai from Korea district in Chhattisgarh is one of those rare woman that is keeping alive on just a cup of black tea a day. 38-year-old Pili drinks a cup of tea just one time in a day in the evening. She also does not take milk for the tea. Pili says she has left eating food in 1998 and surviving on tea since then. She says she never gets an urge to eat food or drink water. Pili’s father says she was studying in Patna when she left eating food. Her father also says that he also took Pili for treatment but in vain. Her family also tried their best to convince Pili to eat something but she always declined. A doctor in Baikunthpur has termed Pili’s condition as a miracle as no one can survive without food for such a long time.

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உணவு உட்கொள்ளாமல் 18 ஆண்டுகளாக தினமும் இரண்டு அல்லது மூன்று கப் பிளாக் டீ மட்டுமே குடித்து ஒரு பெண் உயிர் வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டத்தை சேர்ந்தவர் பீலி பாய். சிறுவயதில் பாட்னாவிற்கு படிக்க சென்ற போது உணவு அருந்துவதையே தவிர்த்திருக்கிறார், அதிலிருந்து சாப்பிடுவதே இல்லை. என்ன காரணத்திற்காக அவர் சாப்பாட்டை தவிர்த்தார் என்பது தெரியவில்லை.

நாய்களை கொல்லும் திட்டம்; கேரள அரசின் முடிவுக்கு விலங்கு நலவாதிகள் எதிர்ப்பு

திருவனந்தபுரம் : ஆபத்தான தெரு நாய்களை கொல்லும் கேரள அரசின் முடிவுக்கு, விலங்குகள் நல அமைப்பு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.;சுப்ரீம் கோர்ட்டில்... கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது; இங்கு, தெரு நாய் தொல்லை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது; கடந்தாண்டில் மட்டும், ஒரு லட்சம் பேர், நாய் கடிக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் நடக்கின்றன. இந்நிலையில், திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான, புல்லுவிலா கடற்கரை அருகே வசித்து வந்த, 65 வயதான பெண், தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்தார்; இந்த சம்பவம், கேரளாவில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 'ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய தெரு நாய்களை பிடித்து, அவற்றை கொல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என கேரள அரசு அறிவித்தது; இதற்கு, விலங்குகள் நல அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த யுவராஜ் சென்னை மீண்டும் கைது செய்யப்பட்டார். சென்னை கீழப்பாக்கத்தில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைதான யுவராஜை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்லப்படுவதாக தகவல். கோகுல்ராஜ் கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்த யுவராஜ் சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில், யுவராஜின் நிபந்தனை ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து மீண்டும் சிபிசிஐடியால் கைதாகியுள்ளார் நக்கீரன்.இன்

புதன், 24 ஆகஸ்ட், 2016

ஜெயலலிதா, கருணாநிதி, இடதுசாரி தலைவர்களுடன் பாமக வக்கீல் பாலு திடீர் சந்திப்பு

pmk balu meets jayalalithaa and karunanidhiசென்னை: பாமக வழக்கறிஞர் பாலு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர்களை இன்று திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாமக சார்பில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டவர் பாமக வழக்கறிஞர் பாலு.

இவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதேபோல் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து தொடர்ச்சியாக அதிமுக, திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தது பாமக.
இந்நிலையில் இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை பாமக வழக்கறிஞர் சந்தித்தாக கூறப்படுகிறது.

அனுராக் காஷ்யபும் சில செல்லா காசுகளும் .. செலவு 180000.. வரவு 5000 ..தமிழ் ஸ்டுடியோவின் நல்ல சினிமாவுக்கு ..

thetimestamil.com :மோ. அருண்   : ஒரு பெரும் கொண்டாட்டத்தை, நல்ல சினிமா கலந்துரையாடல் என இரண்டு நாட்களும் சேர்த்து ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றார்கள். இரண்டாம் நாள், ராமன் ராகவ் திரைப்படத்தை பார்க்க முண்டியடித்த கூட்டத்தைப் பார்த்த பிரசாத் திரையரங்கின் கல்யாணம் கூட டோக்கன் கொடுங்கள், அல்லது நூறு ரூபாய் வாங்கி கொண்டு இருநூறு பேரை மட்டும் உள்ளே அனுமதியுங்கள் என்றார். ஆனால் நான் அப்போதும், தமிழ் ஸ்டுடியோ ஒரு இயக்கம், வந்திருக்கும் அத்துணை நண்பர்களையும் உள்ளே அனுமதித்தாக வேண்டும். டோக்கனோ, பணமோ வசூலிக்கக் கூடாது என்றே கண்டிப்பாக சொல்லிவிட்டேன். சொன்னது போலவே அனைவரையும் இடம் பிரச்சனை தாண்டி உள்ளே அனுமதித்தோம். ஆனால் இந்த இரண்டு நாட்களும் வந்திருந்த பெருந்திரளான கூட்டத்தி0ல் இருந்து தமிழ் ஸ்டுடியோவிற்கு கிடைத்த நன்கொடை 5000 கூட இல்லை. நிகழ்விற்காக தமிழ் ஸ்டுடியோ செலவழித்த மொத்த தொகை 180000 த்தை தாண்டியிருக்கிறது.