சனி, 2 ஆகஸ்ட், 2014

கூடுவாஞ்சேரி கோயிலில் தீ மிதித்த 3 பக்தர்கள் காயம் !

 கூடுவாஞ்சேரி கோயில் விழாவில் தீமிதித்த 3 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  அளிக்கப்படுகிறது. கூடுவாஞ்சேரி ரயில்வே கேட் அருகில் கன்னியம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று இரவு 71ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் 150  பக்தர்கள் தீமிதித்தனர். கூடுவாஞ்சேரி ஈவிஆர் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (42), அவர் மகன் கேசவன் (11), நீலமங்கலம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த  பாபு (58) ஆகியோர் தடுமாறி தீயில் விழுந்தனர். இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த 3 பேரையும் மீட்டு நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் இல்லாததால் பெத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் 3  பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.
tamilmurasu.org

தருண் விஜய் BJP Mp : சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வரலாறுகள் கற்பிக்க படவேண்டும்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நாடாளுமன்ற மாநிலங்களவையில் முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கான நேரத்தில் பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அரசியல் சீடருமான தருண் விஜய், தமிழின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் எடுத்துக் கூறியுள்ளார். உலகின் தொன்மையான மொழியான தமிழுக்கு சிறப்பு செய்ய அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பாராட்டத் தக்கவையாகும்.
பொதுவாகவே வட இந்தியாவைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைவிட சிறந்த மொழி உலகில் இல்லை என்ற எண்ணம் உண்டு.

கத்தி படம் வெளிவர கட்டை பஞ்சாயத்தினர் கப்பம் கேட்கிறார்களா ?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படம் 'கத்தி'.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தினை ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. கத்தி படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டா, ஐதராபாத், சென்னை ஆகிய ஊர்களில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. செப்டம்பரில் இசை, தீபாவளிக்கு படம் என்று ‘கத்தி’ இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
தற்போது மீண்டும் இப்பிரச்னை தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால லைக்கா’ நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரண் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்து இருக்கிறாராம்.

ஜெயலலிதா: 234 தொகுதிகளும் அ.தி.மு.க. தொகுதிகள் தான் அல்லது எனது தொகுதிகள்தான் !

சட்டசபையில்  கேள்வி நேரம் முடிந்ததும், 110 விதியின் கீழ் ஜெயலலிதா 3 அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.விவாதத்தை தொடங்கி வைத்து தே.மு.தி.க. உறுப்பினர் அருள் செல்வன் (மயிலாடுதுறை தொகுதி) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-உறுப்பினர் அருள் செல்வன்:- எனது தொகுதியில் கலை-அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.ஜெயலலிதா:- இந்த அறிவிப்பை வெளியிட்டது யாரும் நன்றி சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து அல்ல. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் அ.தி.மு.க. தொகுதிகள்தான். மயிலாடுதுறை தொகுதியை தனது தொகுதி என்று உறுப்பினர் சொந்தம் கொண்டாடுகிறார். 

விஷ வாயு கசிவு ! Bhopal Union Carbide பொறுப்பேற்காது என நியூயார்க் கோர்ட் உத்தரவு !

நியூயார்க் : மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள, யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து, கைவிடப்பட்ட அந்த நிறுவனத்தால், போபால் நகரின் நிலம் மற்றும் நீர் மாசுபடுவதாக கூறி, அதற்கு அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிடக் கோரி, அமெரிக்க கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, கோர்ட் தள்ளுபடி செய்தது. கடந்த 1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில், போபால் நகரின் மத்தியில் அமைந்திருந்த, அமெரிக்க நிறுவனமான, யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்து விஷ வாயு கசிந்தது. நகரில் காற்றில் பரவிய விஷ காற்றால், 5,000 பேர் பலியாயினர்; 
இதை போல தான் 123 nuclear agreement இலும் அவர்கள் இப்போதுள்ள liability clause ஐ நீர்த்துப்போக செய்ய அலைகிறார்கள்.அது இதே மாதிரி பேரிடர் ஏற்படும் வேளையில் அந்த அணு உலை சப்பளை செய்த நிறுவனம் பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை ஏற்க மறுத்து இந்திய அரசே அதற்கான இழப்பீட்டை தர அந்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய துடிக்கிறார்கள். இப்போது ஜான் கெர்ரி வந்தது ஒப்பந்தத்தை உடன் அமல் செய்ய அழுத்தம் கொடுக்கத்தான்.அதற்குதான் மோடி ஜி க்கு விசா மூடிக்கொண்டு கொடுத்துள்ளனர் அமேரிக்கா வர.வருந்தி வருந்தி அழைப்பது போல பாசாங்கும் செய்கின்றனர்..கச்ச தீவு அபிடவிட்டு தாக்கல் பண்ணிய மாதிரி சொதப்பாமல் இங்கு நமது நாட்டின்,மக்களின் பாதுகாப்பை முன் நிறுத்தி அதை அனுமதிக்க கூடாது..

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

IAS - IPS போன்ற குடிமக்கள் சேவை பரீட்சை பிராந்திய மொழி உரிமை ! எதிர்கட்சிகள் அமளி !

புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வு பிரச்னையை எழுப்பி மாநிலங்களவையில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து,  மாநிலங்களவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த பிரச்னையில் விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் இன்று  தெரிவித்தார். மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதல்நிலை தேர்வில் ஆங்கிலத்தில்  மட்டும் கேள்வி தாள் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தி உள்பட பிராந்திய மொழி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி  வருகின்றனர். இப்பிரச்னை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துனிசியாவில் திடீரெனத் தோன்றிய ஏரி ! 600க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு நீச்சல், ஸ்கூபா டைவிங் என்று


வறட்சி மிகுந்த ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் மத்தியில் உள்ள கஃப்சா பகுதியில் திடீரெனத் தோன்றியுள்ள ஏரி ஒன்று வெயிலில் வாடித் தவிக்கும் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்குத் தலமாக மாறியுள்ளது. ஒரு ஹெக்டேருக்கும் மேலான நிலப்பரப்பில் ஒரு மில்லியன் கன மீட்டர் கொள்ளளவுடன் 10 முதல் 18 மீ வரையிலான ஆழத்துடன் இந்த ஏரி காணப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இந்தப் பகுதியில் பாஸ்பேட் சுரங்கங்கள் அதிகம் காணப்படுவதால் தண்ணீர் மாசுபட்டதாகவோ, கதிரியக்கத்தன்மை கொண்டதாகவோ இருக்கக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர். அதற்கேற்றாற்போல் முதலில் தெளிவாக நீல நிறத்தில் காணப்பட்ட இந்தத் தண்ணீர் இப்போது அடர்த்தியான பச்சை நிறத்தில் பாசி படிந்து காணப்படுவதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழகம் :300 அம்மா அங்காடிகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு !

அமுதம் அங்காடி | கோப்புப் படம்
ரூ.37 கோடியே 17 லட்சம் செலவில், தமிழகம் முழுவதும் 300 'அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்' துவங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா:
1. கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில் 114 பல்பொருள் அங்காடிகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 23 அமுதம் பல்பொருள் அங்காடிகள் என மொத்தம் 137 அங்காடிகள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. பல்பொருள் அங்காடிகள் விரிவுபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, 37 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 300 ‘அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்’ தமிழகமெங்கும் துவங்கப்படும். அம்மா தாயே எல்லா தர்மமும் பண்றீங்க கூடவே கொஞ்சம் அம்மா டாஸ்மாக் தெறந்தா கும்பிடுவேன் ஆத்தா

5 ஆண்டுகளாக உணவு உண்ணாமல் அதிசயம் நிகழ்த்தும் இலங்கையர் ! அமெரிக்க தொலைகாட்சிக்கு நேர்காணல்
உணவுகள் எதனையும் உட்கொள்ளாமல் 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என இலங்கையர் ஒருவர் கூறியுள்ளார். மனிதர்கள் உணவின்றி இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என நிபுணர்கள் நம்புகின்றனர். எனினும் கிர்பி டி லேனர்ரோல் (Kirby de Lanerolle) என்ற இந்த இலங்கையர் சுத்தமான காற்றும் ஊட்டமும் மட்டுமே மனிதர்கள் உயிர்வாழ தேவை என குறிப்பிட்டுள்ளார். சுவாசிப்பது தனது வாழ்க்கை முறை எனவும் ஒளி, காற்று மற்றும் கடவுளின் அதிர்வுகள் மூலம் நீண்டகாலம் உயிர் வாழ முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யார் இந்த நட்வர்சிங்? இராக் பெற்றோலிய ஊழலில் சோனியா தன்னை காப்பாற்றவில்லையாம் ! அதுதான் கோபமாம் ?

 இந்திய வெளியுறவுத் துறையில் 30 ஆண்டுகாலம் அதிகாரியாக பணியாற்றியவர் நட்வர்சிங். சீனா, அமெரிக்கா மற்றும் யுனிசெப் ஆகியவற்றில் முக்கிய பணிகளுக்கு அதிகாரியாக செயல்பட்டவர் நட்வர். 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் கீழ் பிரதமர் அலுவலக பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அன்று முதல் இந்திரா குடும்பத்துக்கு நெருங்கிய நபராக உருவெடுத்தார். 1984ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை செயலராக பணியாற்றிய நிலையில் தமது அரசு பணியை ராஜினாமா செய்தார் நட்வர்சிங். 1984ஆம் ஆண்டு நட்வர்சிங்குக்கு மத்தியாரசு பத்மபூஷண் விருது அளித்தது. 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்தார். 1985-க்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் நட்வர்சிங் உருவெடுத்தார். 1989ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி என்.டி. திவாரி, அர்ஜூன்சிங் ஆகியோருடன் சேர்ந்து அனைத்திந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) என்ற தனிக்கட்சியை நடத்தினார். 1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சோனியா கை ஓங்கிய பின்னரே மீண்டும் காங்கிரஸில் இணைந்தார் நட்வர்சிங். 1998- 99 ஆம் ஆண்டு 12வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் நட்வர்சிங். 2002ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யானார் நட்வர்சிங். 2004ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்த போது வெளியுறவுத் துறை அமைச்சரானார் நட்வர்சிங். 2005ஆம் ஆண்டு ஈராக்குக்கு உணவு, மருந்துக்கு எண்ணெய் என்ற ஐ.நா. திட்டத்தில் நடந்த ஊழலில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்தார் நட்வர்சிங். 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் இருந்தும் நட்வர்சிங் நீக்கப்பட 2008ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அக்கட்சியிலும் இருந்து நட்வர்சிங் நீக்கப்பட்டார். அம்பலமாகும் இந்திரா குடும்பத்து ரகசியங்கள்.. யார் இந்த நட்வர்சிங்? சோனியா மீது கோபம் ஏன்? சோனியா மீது ஏன் கோபம்? 2005ஆம் ஆண்டு உணவுக்கு எண்ணெய் ஊழலில் தன்னையும் மகனையும் சோனியா காப்பாற்றுவார் என நம்பியிருந்தார் நட்வர்சிங். இந்திரா குடும்பத்துக்கு நீண்டகால நண்பரான தனக்கு சோனியா துரோகம் செய்து கட்சியைவிட்டே நீக்கினார் என்பது நட்வர்சிங்கின் குமுறல் இதனாலேயே சோனியாவை ஒரு சர்வாதிகாரி, மாக்கியவெல்லி என்றெல்லாம் விமர்சித்தார் நட்வர்சிங். திடீரென நட்வர்சிங் சுயசரிதை என்ற பெயரில் தனக்கு தெரிந்த இந்திரா குடும்பத்து ரகசியங்களை பகிரங்கப்படுத்த சோனியா கொந்தளித்துப் போனார்.
tamil.oneindia.in

உ.பியில் 92 வயது மூதாட்டி மீது 26 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் ! பாலியல் வறுமையோ வறுமை

முசாபர்நகர், உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கண்தலா என்ற பகுதியில் வசித்த 92 வயது மூதாட்டியை கடந்த 2011–ம் ஆண்டு ஆக.10–ந் தேதி அன்று மன்ட்டு (வயது 26) என்ற இளைஞன் கற்பழித்தார். இதனையடுத்து கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. மருத்துவ அறிக்கையில் அவர் கற்பழிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. மூதாட்டியும் தனது வாக்குமூலத்தில் மன்ட்டு என்ற அந்த இளைஞன் தன்னை கற்பழித்ததாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையில் மன்ட்டு கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக கோர்ட்டு உறுதி செய்தது. அவருக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே கற்பழிக்கப்பட்ட அந்த மூதாட்டி இறந்து விட்டார். தயவு செஞ்சு யாராவது உலகநாடுகளில் இருந்து விலைமாதர்களை  மொத்தமாகவும் சில்லறையாகவும் இம்போர்ட் பண்ணுங்கப்பா ! நிலமைய பாத்தாக்கா ரொம்ப ரொம்ப பயமாக இருக்கிறது . செக்சுக்கு செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை சமயங்களும் கலாச்சாரமும் சேர்த்து உருவாக்கிட்டாய்ங்க . காப்பாத்துங்கப்பா !

மகாராஷ்ட்ராவில் நிலச்சரிவில் கிராமமே புதைந்தது பலியானவர்கள் சுமார் முன்னூறு ?

புனே, மராட்டிய மாநிலத்தில் நிலச்சரிவால் கிராமமே அழிந்தது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்தது. மீட்புப்பணிகளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நேரில் பார்வையிட்டார்.
நிலச்சரிவு
மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகாவில் மலையடிவாரத்தில் உள்ள மாலின் கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 44 வீடுகளும், ஒரு கோவிலும் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின. அந்தக் கிராமம், இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த இயற்கைப் பேரிடரில் குறைந்தது 300–க்கும் மேற்பட்டோர் புதைந்து போய் விட்டனர்.

கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் - CSE எச்சரிக்கை ! மெல்ல மெல்ல உங்களை ....


Seventeen per cent of the samples tested had more than one drug, found the CSE study, Antibiotics in Chickenஅறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஓர் ஆய்வில் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40% மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. கறிக்கோழிக்கு அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதன் காரணமாக அதனை சாப்பிடும் மனிதர்களுகும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 31 ஜூலை, 2014

நடிகன் வெங்கல்ராவ் ! தமிழ் சினிமாவின் மறுபக்கம் ! கசப்பான பக்கம் !

வெங்கல்ராவ் 3வினவு:– சினிமாவுக்கு வந்து சேர்ந்த வரலாறை விளக்குங்களேன்!
வெங்கல்ராவ்:– எங்க ஊரு விஜயவாடா பக்கத்துல நாட்டுப்புறம் சார். அதோட பேரு புனாதிபாடு. விவசாயம் தான் தொழில். அதிலயும் கூலி வேல தான். எங்களுக்கு நெலமெல்லாம் அதிகமில்ல. ஜமீன்தார் நெலத்துல தான் வேல அதிகம் செய்வாங்க. சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டாரு. நாங்க அண்ணன் தம்பி நாலு பேரு, அக்கா ஒருத்தரு. அம்மாவால எங்களுக்கு சோறு போட முடியல. காலைல அம்பது இட்லிக்கு நானு எங்கடா போறதுன்னு சொல்வாங்க. ஐதராபாத்தில் ஒரு பத்து வருசம் போராடி பாத்துட்டுத்தான் சினிமாவுக்கு வந்தேன்.
அப்போ சினிமா அங்கே எடுக்காங்க, இங்கே எடுக்காங்க, அங்கே போனா சோறு கிடைக்கும்னு கேள்விப்பட்டேன். அதற்கு யாரை பாக்கணும்னு தெரியாது. அதுக்காக ரொம்ப ட்ரை பண்ணினேன் சார். அப்ப எனக்கு தமிழே வராது. முப்பத்தெட்டு வயசுலதான் மெட்ராஸ் வந்தேன்.

ஜான் கெர்ரி : 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த பங்காளிகளாக இருக்க முடியும் !

இந்தியாவுடனான அமெரிக்க உறவு குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த பங்காளிகளாக இருக்க முடியும் என்று தெரிவித்தார். இதுகுறித்து ஜான் கெர்ரி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூடன் சற்று முன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: - இந்தியாவும் அமெரிக்காவும் பிரிக்க முடியாத கூட்டாளிகள். நம்மிருவருக்கும் இடையே வலுவான நல்லுறவு எப்போதுமே உண்டு.  உலக வர்த்தக மையத்தின் டி.எப்.ஏ ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் முடிவில் இந்தியா தொடர்ந்து நிலையாக இருக்கிறது. இந்தியாவில் அதிக அளவிலான ஏழை மக்கள் இருக்கிறார்கள். எனவே, இந்தியாவின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்க விரும்பவில்லை. எனினும், பாலி ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. ; இவ்வாறு அவர் பேசினார் dailythanthi.com. அட கருமமே ஏற்கனவே நல்ல பங்காளிகளாக தான் இருக்காக அவிங்களும் பாகிஸ்தானும் கூட நல்ல பங்காளிகளாகதாய்ன் இருக்காக ! இஸ்ரேலும் பாலஸ்தீனும் அவிங்களும் கூட நல்ல பாங்காளிகலாகதான் இருக்காக ,

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு !

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.சென்னை தேனாம்பேட்டையில் குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வேணுகோபால் ரெட்டி என்பவர் வாங்கியிருந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சேஷாத்திரி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின், இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினார் ஆனால் புகார் மீது அடிப்படை ஆதாரம் இல்லாததால், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் ஜாமீன் கோரவும் இல்லை. இதனிடையே நிலத்தை விற்றவருக்கும், வாங்கியவருக்கும் சமரசம் ஏற்பட்டதுடன், வழக்கையும் புகார் கொடுத்தவரே திரும்ப பெற்றார்.

நட்வர் சிங் படு சுயநலவாதி ! உண்மைகளைத் திரிக்கிறார்!

உண்மைகளைத்-திரிக்கிறார்-நட்வர்-சிங்-காங்கிரஸ்-தாக்குw 2004ஆம் ஆண்டு சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்காததற்கு ராகுல் காந்தியே காரணம் என்று நட்வர் சிங் கூறியிருப்பதையடுத்து அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொடர்ந்து நட்வர் சிங்கை தாக்கி வருகின்றனர். அதாவது சோனியா பிரதமரானால் அவரும் ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி போல் கொல்லப்பட்டு விடுவார் என்று அஞ்சி ராகுல் காந்தி அவரைப் பிரதமர் ஆவதிலிருந்து தடுத்தார் என்று நட்வர் சிங் கூறியுள்ளார். நட்வர் சிங்கின் ஒன் லைப் இஸ் நாட் இனஃப் (One Life is Not Enough ) என்ற சுயசரிதை நூல் வரும் ஆகஸ்டில் வெளியாக இருக்கிறது. புத்தக விற்பனைக்காக பரபரப்பான முறையில் உண்மையற்ற, அடிப்படையற்ற விஷயங்களைக் கூறுவதை அனுமதிக்க முடியாது” என்று கடுமையாகக் கூறியுள்ளார். இந்த ஆசாமி தனது புத்தகம் விற்பனையாகவும் முடிந்தால் பாஜாகமீது சவாரி செய்யவும் தான் முயற்சிக்கிறார் ?

இஸ்ரேலில் ராணுவத்திற்கு ஆதரவாக அரை நிர்வாண போராட்டம் ???

காஸா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான ராணுவ நடவடிக்கைக்கு கண்டனம் பெற்றுக் கொண்டது போல் வேறு எந்த நாட்டு ராணுவமும் இவ்வளவு எதிர்ப்புகளை சந்தித்ததாகத் தெரியவில்லை. ஆனால் இத்தகையை நிலையில், தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வாழ்த்தியும் இஸ்ரேலியப் பெண்கள் தங்கள் உடல்களில் வாழ்த்து வாசகங்களை வரைந்து ராணுவ வீரர்களை உற்சாக மழையில் நனைத்து வருகின்றனர். அந்த வகையில், இஸ்ரேல் நாட்டு ராணுவம் பெற்றது போன்ற கண்மூடித்தனமான ஆதரவை எந்த ராணுவமும் பெற்றதாகவும் தெரியவில்லை.

சோனியா சுயசரித்திரம் எழுதபோகிறார் ! பலரின் சுயரூபம் வெளிவரும் ?

கடந்த 2004ம் ஆண்டு இந்தியப் பிரதமராக வாய்ப்பு இருந்தபோது, சோனியா காந்தியை ராகுல் காந்தி தடுத்தார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர் சிங் தெரிவித்திருந்தார்>இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், சோனியா காந்தி கூறியபோது, நானும் எனது சுயசரிதையை, எனது நூலை எழுதுவேன். அப்போது உண்மையை மக்கள் அறிந்து கொள்வார்கள்>நான் இப்போது எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நான் எழுதும் புத்தகத்தில் இருந்து அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். சீக்ரம் எழுதங்க  நம்ப  காவிய தலவி உங்களுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு அப்படீன்னு சுசாமி மூலியமா புறா தூது விட்டாய்ங்க அதுல  இன்னா இன்னா வழக்குகளை ஊத்தி மூடசொன்னாய்ங்கன்னு டீடெயிலா சொல்லுங்கம்மா 

இந்தியாவில் 8,500 மாவோயிஸ்டுகள்: மத்திய அரசு தகவல்

இந்தியாவில் மாவோயிஸ்டு இயக்கத்தினர் சுமார் 8,500 பேர் உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மாநிலங்களவையில் புதன்கிழமை கூறியதாவது:
அரசுக்கு கிடைத்த தகவலின்படி, இந்தியாவில் மாவோயிஸ்டு இயக்கத்தில் சுமார் 8,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எனினும், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தும்போது ஏ.கே. 47 போன்ற அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர்.
சமீப காலமாக அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும், தீவிரமான தாக்குதல் நடத்தும் அளவுக்கு மாவோயிஸ்டுகள் தங்கள் ஆயுத பலத்தை இன்னும் தக்கவைத்துள்ளனர்.

நட்வர் சிங் :சோனியாவை பிரதமர் ஆகாமல் தடுத்து ராகுல் ! கொலை அச்சுறுத்தல் ?

மன்மோகன்சிங் தலைமையிலான முதலாவது ஐந்தாண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவர், காங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர்சிங். உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழலில் சிக்கியதால், இவர் பதவி விலகினார். அப்போதிருந்து அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுக்கி இருக்கிறார். தனது அரசியல் அனுபவங்களை அவர் ‘ஒன் லைப் இஸ் நாட் எனாப்’ என்ற பெயரில் சுயசரிதையாக எழுதி உள்ளார்.;இந்நிலையில், நட்வர்சிங் ஒரு தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:–கடந்த 2004–ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஆட்சியைப் பிடித்தபோது, சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டார்.

கும்பகோணம் :11 பேர் விடுதலை: தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் கொந்தளிப்பு

தஞ்சாவூர்: 'கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியான வழக்கில், ஆசிரியர்கள் உட்பட, 11 பேரை விடுதலை செய்து, தஞ்சை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் மனம் திருப்தியளிக்கவில்லை' என, விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோர் கொந்தளித்தனர்.தீ விபத்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று காலை, 7:00 மணி முதலே நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். அசம்பாவித சம்பவம் நடப்பதை தடுக்கும் விதமாக, நீதிமன்ற வளாகம் முன், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  குழந்தைகளை வெளியே விடாமல் தடுத்த மிக முக்கிய குற்றவாளிகளை விடுவித்தது மிக பெரிய தவறு. நாட்டாம தீர்ப்ப மாத்து அரசு தரப்பில் போதிய ஆதாரம் தாக்கல் செய்யப்படாததால், குற்றஞ்சாட்டப்பட்ட, 21 பேரில் 11 பேரை விடுதலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் நீதிபதிக்கு ஏற்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என்ற அரசின் சூழ்ச்சி தான் இதன் பின்னணியில் தெரிகிறது. சம்பந்தப்பட்ட ஊழல் அதிகாரிகளை அப்போதே பதவி நீக்கம் செய்திருந்தால் அவர்களின் அதிகாரம் தண்டனையியிலிருந்து தப்ப விட்டிருக்காது

புதன், 30 ஜூலை, 2014

தனுஷுக்கு கூட போலீஸ் வேஷம் ஓகே ஆனா BJP காரனுக்கு அறிவாளி வேடம் ஒரு போதும் பொருந்தாது ! அவிங்க ரொம்ப பாவங்க !.

தந்திடிவி விவாதம்சிறுவனாக இருந்தபோது படித்த சிறுவர்மலர் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. திரேதாயுகத்தில் ஊர்மக்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள். கலியுகம் பிறந்த உடனே அவர்கள் எல்லோரும் சுயநலக்காரர்களாகவும் கபடதாரிகளாகவும் மாறுவார்கள். கதையின் முடிவில் ”கலியுகத்தில் மனிதன் எப்படி மாறுகிறான், பார்த்தீர்களா குழந்தைகளே” எனும் அறிவுரையும் இருந்தது. கிட்டத்தட்ட அப்படியான ஒரு நிலைக்கு பாஜககாரர்கள் வந்து அறுபது நாளாகிறது.
ஜசோதாபென் மணாளன் ஆட்சிக்கு வரும் முன்னால் இவர்கள் பேச்சில் இருந்த ‘வீரம்’ என்ன! ஏழை மக்கள் மீதான ‘அக்கறை’ என்ன!! ஆனால் புதிய ஆட்சி வந்த பத்து நாளுக்குள் அவை பழங்கதையாகிவிட்டன. முன்பெல்லாம் தந்தி டிவி விவாதங்களில் தொகுப்பாளர் உட்பட பாஜகவுக்கு ஆதரவாக குறைந்தபட்சம் இரண்டு பேராவது இருப்பார்கள். ஆனால் தமிழக அரசியல் அநாதைகளுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்த பாஜக இன்று விவாதங்களில் அநாதையாக நிற்கிறது. ‘மோடி சாட்சாத் அந்த ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம்தான்’ என தேர்தலுக்கு முன்னால் சான்றிதழ் கொடுத்த கும்பலில் ஒருவர்கூட இன்று விவாதத்துக்கு வரும் நிலையில் இல்லை.
இதுகாறும் வாயை வைத்தே வண்டியை ஓட்டிய வைகோவும் தமிழருவியும் பாஜகவை தங்கள் நாவன்மையால் தாங்குவார்கள் என நடுநிலைவாதிகளே எதிர்பார்த்திருந்தார்கள். மோடி அடிக்கும் அடி ஒவ்வொன்றும் வைகோவின் ஈழ பிசினசை இருந்த இடம் தெரியாமல் செய்து கொண்டிருக்கின்றன. இனி அவர் பாதயாத்திரை போனால் காறித்துப்பக்கூட ஆளிருக்காது. ஆகவே அவரது நேரடியான ஆதரவுக்குரல் பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அமையாத சம்மந்தங்களை அமைத்துவைக்கும் தமிழக அரசியலின் தமிழ்மேட்ரிமோனி டாட்காம் தமிழருவி மணியனின் நிலை இன்னும் கேவலம்.

சட்ட அமைச்சகம் அனுமதி ! 16 வயதுக்கு மேற்பட்ட கடும் குற்றவாளிகள் இனி தப்ப முடியாது !

பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட கடும் குற்றங்களில் ஈடுபடுவோர் 16 வயதுக்கு மேல் இருந்தால், அவரை பெரியவராக கருதி தண்டனை அளிக்கும் வகையில், சிறார் சட்டத் திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்து, மற்ற அமைச்சகங்களின் கருத்தை கேட்டு சுற்றுக்கு அனுப்பி யுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களின் குற்றங்களை மட்டுமே நீதிமன்றங்களில் விசாரித்து தண்டனை வழங்க முடியும். 18 வயதுக்கு குறைந்தவர்கள் சிறார்களாக (மைனர்) கருதப்பட்டு, சிறார் நீதி வாரியத்தில் விசாரிக் கப்படுகின்றனர். அவர்கள் கடும் குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் சிறார் நீதிச் சட்டம் - 2000ன் படி, அவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க முடியும். இந்த 3 ஆண்டுகளும் அவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் தங்கினால் போதும்.
இந்த சலுகை இருப்பது தெரிந்தே, 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பலர் பாலியல் வன்முறை யில் ஈடுபடுவதாக பெண்கள் அமைப் புகள் புகார் கூறுகின்றன.  பாலியல் குற்றவாளிகளுக்கு வயது வரம்பே தேவை இல்லை.என்பதுதான் எனது கருத்து. கூடவே பெற்றோருக்கும் கொஞ்சம் தண்டனை கொடுத்தால் நல்லது . ஏராளமான அடாவடி சிறுவர்கள்  பணக்கார பெற்றோர்களால் தான் அப்படி ஆகிறார்கள்

அதிமுகவில் இணைந்த மதிமுகவினர் ! enjoy with situation song !


அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா முன்னிலையில், புதன்கிழமை இன்று மதிமுக மாநில அமைப்புச் செயலாளரும், சென்னை மாநகராட்சி 60-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான சீமாபஷீர், வட சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சு.ஆ. இயேசுராஜ், துறைமுகம் பகுதிச் செயலாளர் ஹ. மகரூப், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் முஸ்தபா, துறைமுகம் பகுதி மாவட்டப் பிரதிநிதி ஜாஹீர் ரபி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி உடன் இருந்தார் இவ்வாறு அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. s dinamani.com

கும்பகோணம் பள்ளி தீ விபத்து பள்ளி நிறுவனருக்கு ஆயுள்; ரூ.51 லட்சம் அபராதம் ! 10 பேர் குற்றவாளிகள் !

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகம்மது அலி அறிவித்தார். அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு அவர் தீர்ப்பை வெளியிட்டார்.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையானவர்களில் 8 பேர் அதிகாரிகள், 3 பேர் ஆசிரியைகள். அவர்கள் விவரம் வருமாறு:–

நான் பக்கா பொறுக்கி: நடிகை தேவதர்ஷினி

பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்தவர் தேவதர்ஷினி. இவர் தற்போது ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆண்கள் எல்லோரும் பெண்களாகவும், பெண்கள் எல்லோரும் ஆண்களாகவும் மாறி நடிக்கின்றனர். வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தில் தேவதர்ஷினி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் சொல்லும்போது, ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ படத்தில் ஆண் ரவுடியாக, பக்கா பொறுக்கியாக நடித்துள்ளேன். இதில் நடித்தது புது அனுபவமாக இருந்தது என்றார்.

ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் வீடுகளிலும் உளவு கருவிகள் ? டெல்லி மீண்டும் பரபரப்பு !

புதுடெல்லி,
மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் ஆகியோரது வீடுகளிலும் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டதாக தகவல் வெளியானதால் டெல்லி வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மீண்டும் பரபரப்பு டெல்லி தீன்மூர்த்தி தெருவில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மந்திரியும், பா.ஜனதாவின் முன்னாள் தலைவருமான நிதின் கட்காரியின் வீட்டு படுக்கை அறையில் சக்தி வாய்ந்த உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்ததாகவும், பின்னர் தற்செயலாக அவை கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.  போகப்போக தெரியும் இந்த பூதத்தின் சுய குணம் புரியும் , 

மோடிக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கெர்ரி பாராட்டு !

வாஷிங்டன்:''இந்திய பிரதமர், நரேந்திர மோடியின், 'அனைவரையும் இணைத்துச் சென்று, அனைவருக்கும் முன்னேற்றத்தை வழங்குவது' என்ற கொள்கை பாராட்டுதற்குரியது; அது போல், அவரின் பதவியேற்பு விழாவுக்கு, பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகளின் தலைவர்களை அழைத்தது மிகச் சிறந்த அணுகுமுறை,'' என, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், ஜான் கெர்ரி கூறினார்.ஒபாமாவுடன் சந்திப்பு:வரும் செப்டம்பரில், அமெரிக்கா செல்ல உள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேச உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், பேச்சுவார்த்தையின் குறிப்புகளை தயாரிக்கவும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், ஜான் கெர்ரி, இன்று இந்தியா வருகிறார். மோடி நல்லவரு வல்லவருன்னு கெர்ரி சொல்லிடாரு..கெர்ரி சொன்னா சரியாத்தான் இருக்கும்..வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் நம்புங்க மக்களே...

இனி உங்களுக்கு ரயில் பயணம் கிடையாது ? ஜாலிலோ பேருந்து காஷ்மிரு டு கன்யாகுமரி !

மோடி வந்தால் வளர்ச்சி வரும் என்று இணையத்தில் இடைவிடாமல் கரடியாய் கத்திய கோயிந்துகள் விரக்தியில் ஓடி ஒளிந்து கொள்ளும் வகையில் நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து அடுத்த தாக்குதலை துவக்கியிருக்கிறது, மோடி அரசு.< நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து அடுத்த தாக்குதலை துவக்கியிருக்கிறது, மோடி அரசு அடுத்த 5 ஆண்டுகளில் எக்ஸ்பிரஸ், மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை முழுவதுமாக நீக்கி விட்டு அவற்றின் இடத்தில் மூன்றடுக்கு குளிர்பதன பெட்டியை பொருத்தப் போவதாக ரயில்வே அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.
அதன்படி, தென்னக ரயில்வேயின் பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே டிவிஷனில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் தயாரிப்பதை முழுமையாக நிறுத்தி விடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மெல்ல மெல்ல உங்களை  பேருந்துகளில் பயணிக்க தூண்டுவோம்ல ? அப்பதய்ன் நம்ப வோல்வோ பென்ஸ் லேய்லாண்டு எல்லாம் கல்லா கட்டலாம்னே !

செவ்வாய், 29 ஜூலை, 2014

Action படங்களில் மறைந்திருக்கும் காவிய நாயகர்கள் ஸ்டன்ட் நடிகர்கள்தான் ! ஒரு நேர்காணல் !

நித்தியானந்தன்car-3
தமிழ் சினிமாவில், நட்சத்திர நடிகர்களின் இமேஜ் எனும் ஒளி வீசுவதற்கு உயிரைக் கொடுத்து நடிக்கும் சண்டை நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? நடிகர் – நடிகைகளை அட்டைப்படங்களிலும், அனைத்து வகை செய்திகளிலும் திணித்து எழுதும் ஊடகங்கள் எவையும் இத்தகைய கலைஞர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. மாறி வரும் தமிழ் சினிமாவில் சண்டை நடிகர்களின் உலகம் எப்படி இருக்கும்? மாஸ்டர் என்று அழைக்கப்படும் சண்டை இயக்குநர்களில் ஒருவரான மாஸ்டர் நித்தியானந்தனை, சென்னை-வடபழனியில் இருக்கும் தென்னிந்திய திரைப்பட சண்டைக் கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் சந்தித்து பேசினோம். சினிமா ஓடுவதற்கு மட்டுமல்ல சினிமா உலகைப் புரிந்து கொள்ளவும் சண்டை நடிகர்களின் வாழ்க்கை உதவும். படியுங்கள்!

அம்மா அங்காடி எப்போது ஆரம்பம் ? முடியல்ல !


dinamalar.com

கலைஞர் : நதிகளை இணைக்க பாஜக அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் !

தேசிய நதிகளை இணைக்க பாஜக அரசு சிறப்பு முன்னுரிமை கொடுத்து, அதனை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது.
தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று திமுக ஆட்சியில் 2007-8-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலே வலியுறுத்தப்பட்டது.
நதிகளை இணைக்க வேண்டும் என்று திமுக வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் 1983-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ம்ம்ம்  கலைஞர்  ஆதரிக்கும் ஒரே காரணத்திற்காகவே ஜெயலலிதா இதை  எதிர்க்க கூடிய  சாத்தியம் உண்டு. ஒரு வேளை ஜெயலலிதா எதிர்க்க வேண்டும் அதுதான்  பாஜகாவுக்கு சரியான ஆப்புன்னுதாய்ன் இவக ஆதரிக்ககளோ ?

ஆபாசமாகும் பதிவுகளும் முன்னெச்சரிக்கையும்! இணையத்தில் வெட்டி ஒட்டப்படும் படங்கள்

சம்பவம் 1: தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடன் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டி, அவற்றை 'இணையத்தில் வெளியிட்டு விடுவேன்' என்று காதலன் மிரட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்த கீதா தற்கொலைக்கு முயன்றார்.
சம்பவம் 2: சிதம்பரத்தைச் சேர்ந்தவர் செல்வராணி (28). இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார் செல்வராணி. தான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த ஒருவடன் நட்பு கொண்டிருக்கிறார் செல்வராணி. இவர்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அந்தப் பகுதியில் சிலரது செல்போனுக்கு பரிமாறப்பட்டுள்ளது. இதையறிந்த செல்வராணி தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா ஜெயலலிதா ஒரு சர்வதிகாரியா ? எம்ஜியார் ஏன் அதிமுகவை ஆரம்பித்தார் ?

அம்மா என்ற அழகான அற்புதமான சொல் தற்போது  மிகவும் கேவலப்படுத்த படுகிறது. அம்மா என்று  குழந்தை அழைத்தால் கூட  ஒரு மிக மோசமான அகங்காரியின் ஞாபகம் தான் வருகிறது,
அதிமுக என்ற ஒரு அரசிய கட்சி தவறான ஒரு பிறப்பு என்பதில் சந்தேகமே கிடையாது, அதன் தோற்றத்திற்கு காரணம் எம்ஜியாரின் அந்நிய செலாவணி பிரச்னை என்பது வரலாறு கூறும் உண்மை.
அவரே எதிர்பார்க்காத அளவு தமிழ் மக்கள் முட்டாள்களாக இருந்தது அவரின் அதிஷ்டம் தமிழ்நாட்டின் துரதிஷ்டம் .
அவருக்கு ஜெயாவின் மேல் இருந்த மோகம் காரணமாக அவருக்கு பின் அதிமுக ஜெயலலிதாவின் கைகளில் போய்விட்டது. இதர இரண்டாம் மட்ட தலைவர்களும் வெறும் ஊழல்வாதிகள்தான். இந்த எம்ஜியார் தமிழ்நாட்டுக்கு செய்த தீமையை விட இலங்கை தமிழர்களுக்கு செய்த தீமை மிகவும் அதிகம்,  ஒரு மோசமான பயங்கரவாதியை உருவாக்கியதன் மூலம் சகல சகோதர போராளிகளையும் அழித்தது, இதில் நிச்சயம் எம்ஜியார் மீது குற்றம் உண்டு, எந்த காலத்திலும் எம்ஜியார் பிரபாகரனுக்கு புத்திமதி சொன்னதே இல்லை. மாறாக அவரின் சகல கொடுமைகளையும் ஆதரித்தார். உதவியும் செய்தார். தான் எங்கே மலையாளி என்ற வாதம் பெருத்து விடகூடாது என்பதற்காகவும் திமுகவுக்கு பலம் வந்து விடக்கூடாது என்பதற்காகவும்  பாதி மலையாளியான பிரபாகரனுக்கு பால் வார்த்து கொண்டே இருந்தார். இதெல்லாம் முடிந்த கதை.
ஜெயலலிதாவின் mla க்களும் சரி இதர அதிமுக அடிமைகளும் சரி தற்போது எந்த விடயத்தை பேச எடுத்து கொண்டாலும்  எங்கள் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நேரடி வழிகாட்டுதலிலும்  சாதுர்யமான திட்டங்களாலும் மற்றும் அவரின் விடா முயற்சி நாட்டு மக்களின் மீது கொண்ட அளவற்ற கருணையாலும் ஒரு தாயின் பரிவோடும் பாசத்தோடும் தைரியமாக எடுத்த காரியத்தை நிறைவேற்றி தந்துள்ளார் ....... அப்பாடா இது போன்ற  பஜனை பாடல்களை சதா பாடி பாடி காவடி தூக்குகிறார்கள். . வாந்தி வருகிறது.
வரலாற்றில் இது  ஒன்றும் புதிது அல்ல . அத்தனை சர்வாதிகாரிகளும் மனநோயாளர்களும் இப்படி பட்ட ஜால்ரா சத்தங்கள் கேட்ட வண்ணமே வாழ்ந்துள்ளார்கள்..... வீழ்ந்துள்ளார்கள் , . அண்மையில் பிரபா கூட இப்படியான ஜால்றாக்களால்தான் கண்ணை மூடிக்கொண்டு பரலோகம் சென்றார்.  அவரது அடிமைகூட்டம்  ஜெயாவின் அடிமைகூட்டதிற்கும் சற்றும் குறையாத அளவு பஜனை பாடியது.

ஜெயலலிதாவுக்கு மது அருந்துவோர் பாதுகாப்பு சங்கம் கேள்வி! ஏன் கைது செய்கிறீர்கள் ?

மது அருந்துவோரை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை கைவிட வேண்டும் என்று மது அருந்துவோர் பாதுகாப்பு சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு புதிதாக மது அருந்துவோர் பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் தலைவர் பால்ராஜ். இச்சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைள் அடங்கிய மனுவை முதல் அமைச்சர் அலுவலகம், டி.ஜி.பி.அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் கொடுக்கப்பட்டதுஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பால்ராஜ்,மது அருந்துவதை வெளியில் சொல்வதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை. எங்கள் சங்கத்திற்கு ஆதரவு அதிகமாக உள்ளது. ஆனால் வெளிப்படையாக சேருவதற்கு நிறைய பேர் வெட்கப்படகின்றனர்.  வேறென்ன போலீசுக்கு மாமுல் வேண்டுமே ? அதிமுக அரசு போலீசுகளின் செல்லப்பிள்ளை

விருமாண்டி தேவர் ! ஆபிரிக்காவில் இருந்து வந்த சந்ததியின் வாரிசு மதுரையில் ....

ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குள் குடியேறிய முதல் மனிதனின் வாரிசு தமிழகத்தில், மதுரை அருகே ஒரு குக்கிராமத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவினர். விருமாண்டித் தேவர் என்ற பெயருடைய அந்த 30 வயது நபரின் ஜீன், கிட்டத்தட்ட 70,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய ஆப்பிரிக்க மனிதர்களின் ஜீன்களோடு ஒத்துப் போவதாக இக்குழுவினர் கூறியுள்ளனர். மதுரை அருகே ஜோதிமாணிக்கம் கிராமத்தில்தான் விருமாண்டி வசித்து வருகிறார். இவரது ஜீன் எம் 130 ரக ஜீனாகும். இதுதான் இந்தியாவில் தற்போதைய தேதியில் மிகவும் பழமையான ஜீனாகும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

மீண்டும் தமிழுக்கு வருகிறார் பியா ! ஏகன் கோவா போன்ற படங்களில் நடித்தவர்

சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு திரும்பியிருக்கிறார் பியா.பொய் சொல்லப்போறோம், ஏகன், கோவா, கோ படங்களில் நடித்தவர் பியா. தமிழில் வாய்ப்பு இல்லாததால் பாலிவுட்டுக்கு திரும்ப சென்று சிறு படங்களில் நடித்து வந்தார். இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் அவர் நடிக்கிறார். படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது:ஷபீர், பியா பாஜ்பாய், ஸ்ருதி ஹரிஹரன், தம்பி ராமையா உட்பட பலர் நடிக்கின்றனர். பெண் இயக்குனர்களால் கமர்சியல் படங்கள் தர முடியாது என்ற இமேஜை மாற்றும் வகையில் இது இருக்கும். திருச்சியிலிருந்து காரைக்கால் செல்லும் ஒரு லாரியில் கதை பயணிக்கிறது.

vinavu : கட்காரி வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது யார் ?

நிதின் கட்காரிசந்தர்ப்பசாட்சியங்கள், சூழ்நிலைகள், வாதப்பிரதிவாதங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தால் இந்த ஒட்டுக் கேட்பு கருவி மோடியின் காதுகளுக்கே அதிகம் தேவைப்படுகிறது.மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கிறார். முன்னர் பாஜகவின் தலைவராகவும் தற்போது மோடி அரசாங்கத்தில் மூத்த அமைச்சராகவும் பணியாற்றுகிறார்.
நிதின் கட்காரி
இவரது படுக்கை அறையில் ஒட்டுக் கேட்பு கருவி கண்டுபிடிக்கப் பட்டதாக செய்தி வெளிவந்தாலும், முக்கியமாக யார் வைத்தார் என்ற தகவல் சிபிஐ, ரா, ஏன் சிஐஏ-வுக்கே கூட தெரிந்தாலும் சொல்ல மாட்டார்கள். அப்பேற்பட்ட விசயத்தை, இந்தியாவில் வேறு எந்த ஊடகங்களிலும் நீங்கள் படிக்க முடியாத தகவலை வினவு கண்டுபிடித்து கூறுகிறது.
முதலில் இந்த தகவலை வெளியிட்ட பத்திரிகை சண்டே கார்டியன். தற்போது பாஜகவில் செய்தித் தொடர்பாளராக இருக்கும் எம்.ஜே அக்பர்தான் இந்த பத்திரிகையை தொடங்கியவர்.வினவு கூறுவது சரிதான் என்று தோன்றுகிறது நாம ஏற்கனவே  சந்தேகப்பட்ட மாதிரி இது நம்ப புது வாத்தியாரின் பாசிச காரக்டர்களில் ஒண்ணுதாய்ன் 

Solar மின்சக்தி கூரைகளில் பொருத்த புதிய நிபந்தனைகள் ! தமிழக மின்வாரியம் அறிவிப்பு !

கட்டிட மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி கருவி பொருத்து வதற்கான நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒருவர் தனது மின் இணைப்பின் திறனுக்கு அதிகமாக சூரிய மின் சக்தி கருவியை பொருத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சூரிய மின்சக்தி கொள்கை 2012-ன் படி, தமிழகம் முழுவதும் வீடுகள், அரசு கட்டிடங்களின் மேற்கூரையில் சூரிய மின் சக்தி கருவி பொருத்தி, மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

24 ஆண்டுகளுக்கு பின்னர் லாலு, நிதிஷ் ஓரணியில் !

பீகாரில் நடைபெறவுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான  இடைத்தேர்தலில், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ்  குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துள்ளதன் மூலம்  நிதிஷ் குமார், லாலு இடையேயான 24 ஆண்டுகால மோதல் போக்கு  முடிவுக்கு வந்துள்ளது. பீகார் இடைத்தேர்தல்: பீகாரில், சாப்ரா,  பாகல்பூர், ஹாஜிபூர், மொஹானியா, நர்கடியாகஞ்ச் ஆகிய 5  தொகுதிகளின் எம்எல்ஏக்கள், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்  போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
ராஜ்நகர், ஜாலே, மொகிதீன் நகர், பர்பட்டா, பங்கா ஆகிய மற்ற 5  தொகுதிகளின் எம்எல்ஏக்கள், அரசியல் காரணங்களுக்காக தங்களது  பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இதனால் காலியாக உள்ள 10  சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 21ம் தேதி  நடைபெறவுள்ளது. நிதிஷ், லாலு, காங்., கூட்டணி: இடைத்தேர்தலில்,  நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய  ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து  இந்த தேர்தலை சந்திக்க உள்ளன. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய  ஜனதா தளம் ஆகியவை தலா 4 இடங்களிலும், காங்கிரஸ் 2  இடத்திலும் போட்டியிட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  நாளை வெளியாகும் எனத் தெரிகிறது. பாஜகாவால் விழைந்த ஒரே ஒரு நன்மை இதுதான் போலும்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் மரணம் ! நீதிகிடைக்காத விரக்தி !

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண் தீக்குளித்தார். உடல் முழுவதும் தீயில் கருகியதால் அவர் மாலையில் இறந்தார்.
வேலூர் விருதம்பட்டு, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி மல்லிகா (50). இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த இருவர் வீட்டைக் காலி செய்ய மறுத்ததுடன், சீட்டுப் பணமாக ரூ.1.50 லட்சம் வாங்கிக் கொண்டு அதையும் தர மறுத்தார்களாம். இதை தட்டிக் கேட்ட மல்லிகாவை தாக்கினராம். ஊழல் மலிந்த ஆட்சியர் ஊழல் மலிந்த நிர்வாகம்  பணத்துக்கு விலைபோன அதிகாரிகள்

இந்தியாவில் 7 சதவீதம் பேருக்கு ஹெபடைடிஸ் பி வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் ஏழு சதவீதம் பேர் ஹெபடைடிஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரி கல்லீரல் மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் கே. நாராயணசாமி தெரிவித்தார்.
உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு சென்னை மருத்துவக் கல்லூரி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சார்பில் திங்கள்கிழமை பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் டாக்டர் கே.நாராயணசாமி கூறியது: எய்ட்ஸ் நோயைக் காட்டிலும் ஹெபடைடிஸ் பி வைரஸ் 100 சதவீதம் தொற்று நோயாகும். கல்லீரல் புற்றுநோயாளிகளில் 80 சதவீதம் பேர் ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.  இந்தியாவில் ஏழு சதவீதம் பேர் ஹெபடைடிஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே 2ம் வகுப்பு 'ஸ்லீப்பர்' பெட்டிகள் இனி கிடையாது ! பயணிகளின் சனிதிசை ஆரம்பம் !

புதுடில்லி: எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களில் உள்ள, இரண்டாம் வகுப்பு, 'ஸ்லீப்பர் கிளாஸ்' பெட்டிகளை, மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகளாக மாற்ற, ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில், சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டிகளே இல்லாத சூழல் ஏற்படும்.ரயில்வே துறை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழல் ரயில்வேக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், தற்போதைய காலத்துக்கு ஏற்றபடி, ரயில்வே துறையை நவீனமயமாக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.ரயில்வே துறையை நவீனப்படுத்த, அடுத்த, 10 ஆண்டுகளில், 5 லட்சம் கோடி ரூபாய் வரை தேவைப்படுவதாக, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, சமீபத்தில் தெரிவித்தார்.எனவே, ரயில்வே துறையில் வருவாயை பெருக்கும் நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாதாரண மக்கள் பற்றி சிந்திக்காத எந்த அரசும் அழிய தான் செய்யும். பாஜக விற்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நிருபிக்கும் மற்றொரு திட்டம். இனி இங்கிருந்து டெல்லி, மும்பை போகும் சாதாரண மக்கள் எல்லாம் டவுன் பஸ், டவுன் பஸ்ஸா பிடிச்சு மாறி மாறி போக வேண்டியதுதான்.

திங்கள், 28 ஜூலை, 2014

நடிகை ரோகினி : பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வு தேவை !

எண்ணம், பேச்சு, செயல் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும் என்று திரைப்பட நடிகை ரோஹிணி கூறினார்.
திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற "வையத் தலைமை கொள்' என்ற தலைமைத்துவப் பயிற்சி முகாமில், "தையலை உயர்வு செய்' என்ற தலைப்பில் அவர் பேசியது:
"நீயும் நானும் சமம் என்ற உரிமைக்கான போராட்டம்தான் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு அறிவுரை வழங்கும் நாம், பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஆண்களுக்கு ஒருபோதும் அறிவுரை வழங்குவதில்லையே, ஏன்?ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்படும்போது அந்த ஆணால் ஒரு முறைதான் பாதிக்கப்படுகிறாள். ஆனால், தொடர்ந்து அவர் சாகும் வரையிலும் அதைச் சொல்லிக் குறிப்பிட்டு அடையாளப்படுத்துவது இந்தச் சமூகம்தானே?
எனவே, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைக் கையாளும் விதம் குறித்த விவாதத்தை தொடங்கிவைக்க வேண்டும். இந்தப் பிரச்னைக்கு உளவியல் ரீதியான தீர்வை நோக்கிச் செல்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்

நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பித்து கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் கர்நாடக மாநிலம் உயர்நீதிமன்றம் 2 வாரங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது.மேலும் அவர் மீதான வழக்குகளை விசாரிக்க பிறப்பிக்கப்பட்டிருந்த  தடையையும் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜர் ஆகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. நித்தி ! சங்கரனை போல ஒரு பார்ப்பானாக இருந்திருந்தால் இதெல்லாம் ஒரு ஜுஜுப்பி . கொலையே செஞ்சுட்டு ஒன்னும் தெரியாதா பாப்பா மாதிரில்ல வேஷம் போடுதாக , நீரு ஆப்டர் ஆல் ஒரு பொண்ணு கூட ஜாலியா இருந்தீக ? அவா பாக்காத பொண்ணுங்களா நாடே நாறிச்சு . உங்க முதலியார் ஆளுங்க எங்கே போயிடாணுக ?

ஆடி மொய் விருந்து விழா: தனிநபருக்கு வசூலான ரூ.2.50 கோடி! மொய்யால் வாழ்ந்தவர்களும் உண்டு, வீழ்ந்தவர்களும்உண்டு…

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதியில் ஆடி மாதத்தில் நடைபெற்று வரும் மொய் விருந்து விழாவால் ஊரே களைகட்டியுள்ளது. இந்த மொய் விருந்துகளில் கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், சேந்தன்குடி, மாங் காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் தஞ்சை மாவட்டத் தின் தெற்குப் பகுதியான பேரா வூரணி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த 25 ஆண்டு களாக மொய் விருந்து என்ற பெயரில் கறி விருந்து அளித்து லட்சக்கணக்கிலான ரூபாய் மொய் வாங்குவது வழக்கமாக உள்ளது.
வழக்கமாக ஆடி மாதங்களில் நடத்தப்படும் இந்த விழாவை யொட்டி, கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் பொது இடங்களில் மொய் விருந்து குறித்து பெரிய அளவிலான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
தனித்தனியாக மொய் விருந்து நடத்தினால் அதிகம் செலவாகிறது என்பதால் 10, 20 பேர் சேர்ந்து ஒரே நாளில் ஒரே இடத்தில் மொய் விருந்து நடத்தும் வழக்கமும் உள்ளது.

விஜயகாந்த் சக்கர நாற்காலியில் முகத்தை மூடியபடியே காரில் ஏறிச்சென்றார் .

Two weeks after he left to Singapore, DMDK president and Opposition leader of Tamil Nadu Assembly Vijayakant made an incognito return to Chennai on Sunday. சிங்கப்பூரில் இருந்து விஜயகாந்த் சென்னை திரும்பி வந்தார். அவர் முகத்தை துணியால் மூடியபடி சக்கர நாற்காலியில் வந்து காரில் ஏறிச்சென்றார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் கடந்த 13 ஆம் தேதி சிங்கப்பூருக்கு பயணம் சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அவர் சிங்கப்பூர் சென்றதாக கூறப்பட்டது ஆனால் தனது மகன் நடிக்கும் படத்துக்கான வேலைகளை கவனிக்கவே விஜயகாந்த், சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு விஜயகாந்த் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திரும்பி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.  கப்டன் சீக்கிரம் குணமாக வாழ்த்துகிறோம் tamil.webdunia.com

Stem cell bank in chennai சென்னையில் "ஸ்டெம்செல்' சேமிப்பு வங்கி தொடக்கம்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பொது ஸ்டெம் செல் வங்கியைத் தொடங்கி வைத்த நடிகை ஐஸ்வர்யா ராய். உடன், லைஃப்செல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர் அபயா.
ஸ்டெம் செல் எனப்படும் மூல உயிரணுவைச் சேகரித்து பாதுகாக்கும் லைஃப்செல் நிறுவனத்தின், பொது ஸ்டெம் செல் சேமிப்பு வங்கியை, இந்த நிறுவனத்தின் தூதரும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
ரத்தப் புற்றுநோய், தலசீமியா, ஏபிளாஸ்ட்டி அனீமியா போன்ற ரத்த அணுக்கள் தொடர்பான பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் ஸ்டெம் செல் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தை பிறந்த 10 நிமிஷத்துக்குள் அதன் தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல்லை எடுத்து அதனை பிரத்யேகமாக பாதுகாப்பதன் மூலம், எதிர்காலத்தில் அந்தக் குழந்தையோ, அதன் உறவினர்களோ ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட ரத்த அணுக்கள் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட ஸ்டெம் செல்லைக் கொண்டு எளிதில் சிகிச்சை அளிக்க முடியும்.