சனி, 15 மார்ச், 2014

தமிழ் ரசிகர்களை மிகவும் பிடிக்கும்: தமன்னா


  

நடிகைகளுக்கு கோவில் கட்டும் தமிழ் ரசிகர்களை மிகவும் பிடிக்கும் என்று தமன்னா கூறினார். இது குறித்து மும்பையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:–
நான் பத்து வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இதுவரை 30–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளேன். ஆரம்பத்தில் எனக்கு தமிழ், தெலுங்கு பேச தெரியாது. திருவிழாவில் தவறிபோன குழந்தை மாதிரி இருந்தேன். படக் குழுவினர் ஆதரவாக இருந்தனர். நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டு இருமொழிகளையும் கற்றுக் கொண்டேன். இப்போது இந்தி படத்தில் நடிக்கிறேன். ஏற்கனவே இந்தியில் நான் நடித்த ‘ஹிம்மத்வாலா’ படம் தோல்வி அடைந்தது. நான் அதிர்ச்சியானேன். பத்து வருட சினிமா அனுபவத்தால் அதில் இருந்து மீள முடிந்தது. எனது படங்கள் தோற்று இருக்கலாம். ஆனால் நடிகையாக நான் தோற்கவில்லை. அப்படி தோற்று இருந்தால் பத்து வருடம் சினிமாவில் நீடிக்க முடியாது.

பின்னணியில் இருந்த ஆர்.எஸ்.எஸ். முன்னணிக்கு வந்த மர்மம் என்ன?

ஆர்.எஸ்.எஸ். என்ற ஹிந்து சனாதன அமைப்பு இதுவரை பின்புலத்தில் இருந்து, அதன் அரசியல் கருவியான பி.ஜே.பி.யைப் பயன்படுத்தி வந்திருந்தாலும் இந்த 16ஆவது மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை - வெளிப்படையாக முன்னணிக்கு வந்து நிற்கிறது என்ற கருத்தை சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் எடுத்து வைத்தார் திராவிடர் கழகத் தலைவர்.
12.3.2014 நாளிட்ட எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் வெளி வந்த தகவல்களை எடுத்துக்காட்டி தன் கருத்துக்கு வலு சேர்த்தார்.
அய்க்கியமுற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்திரேஷ் குமார் போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் குறி வைக்கப்பட்டு இந்துப் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் நடந்து விட்டன.
அதை அனுமதிக்காமல் அதிலிருந்து வெளி வர மத்திய அரசையே மோடி போன்ற ஒருவரை முன்னிறுத்தி கைப்பற்றிட தேர்தலைப் பயன்படுத்தும் வியூகம் வகுத்துள்ளார்கள் - என்று எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்த கருத்தினை எடுத்துக்காட்டினார்.

அழகிரியின் அரசியல் ! வெத்துவேட்டா விபரமான வேட்டா ? ஒண்ணுமே புரியல்ல !

பிரதமருடன் சந்திப்பு, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு, தி.மு.க., அதிருப்தியாளர்களுடன் சந்திப்பு, ரஜினியுடன் சந்திப்பு, என, அடுத்தடுத்தடுத்த சந்திப்புகளால், அரசியல் வட்டாரங்களில், அழகிரி கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த சந்திப்புகள் எதற்கு? இதனால், அழகிரி என்ன செய்ய நினைக்கிறார்? என்பதே, அனைவரின் கேள்விகளாக உள்ளது.
இது வெறும் பூச்சாண்டி வேலை என்று, தி.மு.க.,வில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், அழகிரியை வைத்து, காங்கிரஸ் தீட்டியுள்ள 'ஏ பிளான்' (தினமலர், தேர்தல் களம், மார்ச் 13) நடவடிக்கைகள் தான் இவை என, அழகிரிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். அழகிரியின் நிலையை, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலையோடு சேர்த்துப் பார்த்தால் இந்த திட்டம் புலப்படும்.அழகிரியின் நிலை: தற்போதைய நிலையில், தி.மு.க.,வில் அழகிரிக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதில், ஸ்டாலின் உறுதியாக உள்ளார். ஸ்டாலினின் முழு கட்டுப்பாட்டில் கட்சி உள்ளதால், அழகிரிக்கு வேறு நுழைவாயில்களும் இல்லை. அதனால், ஸ்டாலினை வீழ்த்தினால் மட்டுமே, தி.மு.க.,வில் தனது முக்கியத்துவத்தை நிலைநாட்ட முடியும் என்ற, நிலைக்கு அழகிரி தள்ளப்பட்டு உள்ளார். போகப்போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் 

புதிய வழக்கில் தேவயானியை கைது செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு:

அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே மீது மீண்டும் ஒரு வழக்கினை அமெரிக்கா தொடர்ந்துள்ளதற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில் தேவயானிக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும்  இரு நாடுகளுக்கிடையேயான உறவினை பாதிக்கும என்று எச்சரித்துள்ளது. தேவயானி கோப்ரகடே மீது தொடரப்பட்ட விசா மோசடி வழக்கை நியூயார்க் நீதிமன்றம் இரண்டு தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்திருந்த நிலையில் மீண்டும்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வழக்குரைஞரான ப்ரீத் பராரா புதிய வழக்கை தொடர்ந்துள்ளார்.
இது குறித்து நீதிமன்றதில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தேவயானி, தமது வீட்டுப் பணியாளாரான சங்கீதா ரிச்சர்டுக்கு குறைவான ஊதியம் கொடுத்து, உழைப்பைச் சுரண்டியுள்ளார் என்றும், பணியாளர் குறித்து பொய்யான தகவல்களைத் தந்து விசா பெற்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
 இதனையடுத்து தேவயானியை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் இந்தியாவில் இருப்பதால் கைது செய்ய முடியாது என்றும், தேவ்யானி அமெரிக்கா வரும்போது அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் ஜெயலலிதா : காங்கிரஸ், திமுக தன்னலம் மிகுந்த கட்சிகள்: !

காங்கிரஸ், திமுக தன்னலம் மிகுந்த கட்சிகள் என தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜெயலலிதா, இன்று தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், "வரவிருக்கும் மக்களவை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வீழ்ச்சியுற்ற இந்தியாவை எழுச்சி காண வைக்கும் தேர்தல். கொடுங்கோல் ஆட்சியை துக்கு எறிந்து செங்கோல் ஆட்சியை நிலைநிறுத்தும் தேர்தல் இது. இத் தேர்தலில் மத்தியில் உள்ள மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும்" என்றார்.
மேலும், தேர்தல் அறிக்கை என்ற பெயரில் திமுக புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
தற்போது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை கடந்த 10 வருடங்களில் திமுக நிறைவேற்றாதது ஏன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மக்கள் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளுக்கு திமுக-வே காரணம் என்றார்.
அடுக்கடுக்கான ஊழல்களால் மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சி இந்திய தேசத்து பெருத்த அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் ஜெயலலிதா பேசினார். அடடா மக்களின் ஞாபக மறதியில் ஜெயாவுக்கு உள்ள நம்பிக்கை  மெய்சிலிர்க்க வைக்கிறது  tamil.thehindu.com  

MGR ரின் ஆயிரத்தில் ஒருவன் Big Bang RE Entry இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மாஸ்டர் பீஸ்


“வெற்றி! வெற்றி!!” என்று முழங்கியவாறே அறிமுகமாகும் அந்த நபரை பார்த்ததுமே பிடித்துவிட்டது.

அப்போது அனேகமாக எனக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். ஓம் பிரகாஷ் மாமா தலைமையில் என்னுடைய ஏகப்பட்ட அண்ணன்களோடு படத்துக்கு போயிருந்தேன். அம்மா, அப்பா இல்லாமல் தியேட்டருக்கு போய் பார்த்த முதல் படம் அதுவாகதான் இருக்கும். நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படமும் அதுதான். மடிப்பாக்கம் தனலஷ்மி திரையரங்கம். ஐந்து ஆண்டு லைசென்ஸில் கூரைக்கொட்டகையில் இயங்கும் தற்காலிக ‘சி’ சென்டர் தியேட்டர். அந்த தியேட்டர் இருந்த இடத்தில் இப்போது ஓர் அப்பார்ட்மெண்ட் இருக்கிறது.

காரல் மார்க்ஸ் தமிழரில்லை ! நம்ம ஜாதிக்காரருமில்ல அதனால் மார்க்சியம் தீர்வாகாது !

தமிழ் உணர்வாளரின் தெலுங்கு டப்பிங்
‘மார்க்சீயம் தோற்றுவிட்டது’ மதவாதிகளைப்போல் பேசுகிறார்கள் முற்போக்காளர்களும்.
சரி. அப்படியானல் எது ஜெயித்தது? அதைச் சொல்லுங்கள்.
அந்த பதிலில்தான் ‘காத்திருக்கிறது’ உண்மையும்; முன்பைவிடவும் மிக அதிகமான தேவையோடு எளிய மக்களின் ஆயுதமான மார்க்சியமும்.‘காரல் மார்க்ஸ் தமிழர் இல்லீங்க’
அது மட்டுமல்ல; அதவிட முக்கியம் அவர் உங்க ஜாதிக்காரருமில்ல.நீங்க சொல்றது சரிதான்.
‘தமிழரல்லாத காரல் மார்க்சுக்கு நம்மினத்தின் பிரச்சினை எப்படி தெரியும்? நம்மிடம் இருக்கும் ஜாதி பேதம் அவருக்கு எப்படி புரியும்?’
நல்லாதான் கேட்குறீங்க? இதே கேள்வியை,
‘தமிழரல்லாத இயேசுவிற்கும், நபிகள் நாயகத்திற்கும் நம்மினத்தின் பிரச்சினை எப்படி தெரியும்? நம்மிடம் இருக்கும் ஜாதி பேதம் அவர்களுக்கு எப்படி புரியும்?’ என்று ஏன் உங்களால் கேட்க முடியவில்லை?
நீங்கள் கிறிஸ்டியனா இல்லை முஸ்லீமா?
இல்லை அப்படி கேட்டால், கும்மாங்குத்து வாங்க வேண்டியிருக்கும் என்கிற பயமா? இல்லை உங்களின் இந்து ஜாதி அரசியல் அம்பலமாகி விடும் என்கிற எச்சரிக்கையா?தமிழர்கள் பிரச்சினைகை்கும் ஜாதிய சிக்கலுக்கும் தீர்வு அல்லது தமிழர்களின் உணர்வுகளோடு நெருக்கமாக இருக்க பைபிளாலும் குரானாலும் முடியும் என்றால்… ஏன் மார்க்சியத்தால் முடியாது? mathimaran.wordpress.com

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஊடகத்தினர் சிறையில் தள்ளப்படுவார்கள்’ அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஊடகத்தினர் சிறையில் தள்ளப்படுவார்கள்’’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ர்ச்சை பேச்சு
மராட்டிய மாநிலம் நாக்பூரில், கடந்த 13–ந்தேதி தேர்தல் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் அவர் பேசிய பேச்சு, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அவர் பேசியதாவது:–
கடந்த ஓராண்டு காலமாக மோடி இங்கே இருக்கிறார்; மோடி அங்கே இருக்கிறார் என்று நமக்கு சொல்லப்படுகிறது. மோடியும் அதையே சொல்லி வருகிறார். சில டி.வி. செய்தி சேனல்கள் இன்னும் ஒருபடி மேலே போய், ராமராஜ்யம் வந்து விட்டது. ஊழல் மறைந்து விட்டது என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கின்றன.
மோடியை தூக்கிவைத்து ஆடும் ஊடகங்கள் மோடியும் அமித் ஷாவும் இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தை ஏன் அமுக்கின? கேஜ்ரிவால் கேட்ட 17 கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பாத் ரூமுக்குள் ஒளிந்துகொண்ட மோடியை வெளிப்படுத்த ஏன் தயங்கின? இன்றுவரை இயற்கை வாயு விலை நிர்ணயம் பற்றி மோடி வாய் திறந்ததுண்டா? ஏன் ஊடகங்கள் அதை வெளிப்படுத்தாமல் மவுனி யாக உள்ளன? இன்னமும், தான் போட்டியிடும் தொகுதியை கூட அறிவிக்காமல் பயந்து பம்மி கொண்டிருக்கும் மோடியை பற்றி இந்த ஊடகங்கள் ஏதேனும் செய்திகள் சொன்னதுண்டா?

இந்திரன் சந்திரன் என்று தூக்கி பிடித்தவர்கள் எல்லாம், இப்போது ரவுடி, மொள்ளமாரி, முடிச்சவிக்கி, பொறம்போக்கு, பன்னாடை என்றெல்லாம் வர்ணித்து செய்திகள் எழுதினால் யாருக்குத்தான் கோபம் வராது. 

ஞானதேசிகன்: தி.மு.க.,வே காங்கிரஸ் கட்சியின் முதல் எதிரி !

தமிழகத்தில், லோக்சபா தேர்தலில், கட்சியின் ஓட்டு வங்கியைப் பலப்படுத்த, கோஷ்டி தலைவர்கள் துணிச்சலுடன் போட்டியிட முன்வர வேண்டும்' என, காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தனர்.லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளில், தமிழக காங்கிரஸ், தனித்து போட்டியிடுகிறது. தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்ட, 15 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், தற்போதைய எம்.பி.,க்கள், எட்டு பேர் இடம் பெற்றிருந்தனர்.அந்த பட்டியலுக்கு, காங்கிரஸ் தலைவர், சோனியா ஒப்புதல் அளித்து விட்டார். ஆனால், திடீரென, இரு தலைவர்கள் பெயர்களுக்கு பதிலாக, அவர்களின் வாரிசுகளின் பெயர் இடம் பெற்றிருந்தன. இதற்கு, சோனியா கடும் எதிர்ப்பு தெரிவித்து, 'தற்போதைய எம்.பி.,க்கள் அனைவரும் போட்டியிட வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார். ஞானதேசிகன் : திராவிட கட்சிகளின் பிடியில் இருந்தும் தமிழக அரசியலில் இருந்தும்  காங்கிரசுக்கு விடுதலை பெற்றுத் தந்த சோனியா, ராகுலுக்கு நன்றி? 

வெள்ளி, 14 மார்ச், 2014

ராமா உட்பட 50 பெயர்களைத் தடை செய்துள்ள சவுதி அரேபிய அரசு

சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் தங்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சமயத்திற்கு முரண்பாடாகக் கருதும் 50 பெயர்களை அந்நாட்டில் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிவில் விவகாரத்துறை தடை செய்யப்பட்ட பெயர்களை அறிவித்தபின் அங்கு வசிக்கும் பெற்றோர்கள் இனி தங்களின் குழந்தைகளை லிண்டா, ஆலிஸ், எலைன் அல்லது பின்யாமின் என்று அழைக்கமுடியாது. இதில் பெஞ்சமின் என்று பொருள்படும் அரபுப் பெயரான பின்யாமின் என்பது இஸ்லாமிய முறைப்படி யாகோபின் மகன் பெயரென்று குறிப்பிடப்படுகின்றது. இது தற்போதைய இஸ்ரேலியப் பிரதமரான பெஞ்சமின் நேதன்யாஹுவையும் குறிக்கும்.

விஜயகாந்த் :ஏன் டாஸ்மாக்கிற்கும் மட்டும் அம்மா பெயர் வைக்கல ?

வடசென்னை தொகுதிக்குட்பட்ட கொளத்தூரில் வடசென்னையில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளார் சவுந்தரபாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய காந்த்.
பிரச்சாரத்தில் அவர், ‘’ஆனா ஊனா கோடநாடு போய் உட்கார்ந்துக்கிறாங்க.  மந்திரிங்க எல்லாம் அவுங்க காலிலே விழுறாங்க.    மக்களுக்கு நல்லது செய்தா நானே காலில் விழுவேன். செய்யமாட்டேங்குறாங்களே.
என் எம்.எல்.ஏக்களை எல்லா மிரட்டி கூப்பிடுறாங்க. அதே நேரத்தில மிரட்டி மிரட்டியே எல்லோரையும் அழைச்சுக்க முடியுமா என்ன?  தொகுதி நன்மைக்காக போனேன்னு அங்க போன எம்.எல்.ஏக்கள் சொன்னாங்க.  தொகுதிக்கு நன்மை கிடைச்சிச்சா என்ன?
ஆடு தர்றோம், மாடு தர்றோம், குவா குவா வாத்து தர்றோம்னு சொல்லுறாங்க.  மனுசங்க குடிக்கிறதுக்கே தண்ணி இல்ல.  அப்படி எப்படி மிருகங்கள் வாழும்.

Youtube புக்காகப் படமெடுக்கும் காலம் வந்தாச்சு!

குறும்படம் இயக்கினால், திரைப்படம் இயக்கலாம் என்று பலரும் வரிந்து கட்டிக் கிளம்பியிருப்பதற்குக் காரணமானவர்களில் ஒருவர் பாலாஜி மோகன். முதலில் காதலித்து வெற்றிகரமாகச் சொதப்பியவர் தற்போது வாய் மூடி பேச வந்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...
‘வாயை மூடி பேசவும்' புதுசா இருக்கே தலைப்பு..?
மக்கள் மத்தியில் இப்போ கம்யூனிகேஷன் மூலமாகத்தான் நிறைய பிரச்சினைகள் வருது. அதை மையப்படுத்தி ஜாலியா ஒரு படம் பண்ணியிருக்கேன். மம்மூட்டி மகன் துல்கர் சல்மான்தான் ஹீரோ. அவருக்கு ஜோடியா நஸ்ரியா நடிச்சிருக்காங்க. முன்னாள் கதாநாயகி மதுபாலாவை இந்தப் படத்துக்காக மறுபடியும் அழைச்சிட்டு வந்திருக்கேன். எழுத்தாளர் வேடத்துல நடிச்சிருக்காங்க.
உங்க அறிமுகப் படம் படம் தமிழ் - தெலுங்கு, இப்போ தமிழ் - மலையாளம்?
இந்த ரெண்டு மொழிகளிலும் இந்த கதை ரீச்சாகுன்னு நினைச்சேன்.

சீனாவின் உகுர் தீவிரவாதிகள் விமானத்தை கடத்தினார்களா?

பீஜிங்: காணாமல் போன மலேசிய விமானத்தை சீனாவில் உள்ள உகுர் தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு கடந்த சனிக்கிழமை மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பயணிகளுடன் சென்றது. வியட்நாம் வான்வெளியில் தென் சீன கடல் பிராந்தியத்தில் பறந்த போது அதன் தொடர்புகள் கட்டுப்பாட்டு அறையை விட்டும், ரேடார் இணைப்பை விட்டும் துண்டிக்கப்பட்டது. விமானம் மாயமாக 6 நாட்களாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
விமானத்தை தேடும் பணியில் 12க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள், கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் இடதுசாரிகள் 18 தொகுதிகளில் போட்டியிட / டெபாசிட் பறிகொடுக்க முடிவு: சிபிஐ -9, சிபிஎம்-9

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 18 இடங்களில் இடதுசாரிகள் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 24ம் தேதி 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுக கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் வெளியேறின. திமுக அழைப்பை மறுத்த இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தன. அதன்படி, தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. சிபிஐ போட்டியிடும் தொகுதிகள் இரு கட்சிகளும் தங்களுக்குள் தலா 9 தொகுதிகளாகப் பிரித்துக் கொண்டுள்ளன. அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி, நாகை, திருப்பூர், சிவகங்கை, புதுச்சேரி, கடலூர், திருவள்ளூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிபிஎம் போட்டியிடும் தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோவை, மதுரை, வடசென்னை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சை, விழுப்புரம், கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதேபோல். போட்டியிடாத 22 தொகுதிகளில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் 17ம் தேதி அன்று வெளியிடப்படுகிறது. இத்தகவலை அவ்விரு கட்சிகளின் மாநில செயலாளர்களான தா.பாண்டியன் மற்றும் ஜி.ராமகிருஷ்ணன் இணைந்து அறிவித்துள்ளனர்.
tamil.oneindia.in 

களமிறங்கும் அழகிரி? விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கலில் பிரச்சாரம்? யாருக்காக யாஅருக்காஆஅக ?

மதுரை: திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி வரும் லோக்சபா தேர்தலில் மதிமுகவிற்கு ஆதரவாக செயல்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர தி.மு.க. முடிவு செய்தது. இதற்கு எதிராக மு.க. அழகிரி கருத்து தெரிவித்து இருந்தார். இந்த விவகாரத்தில் கட்சி தலைமைக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. பிறந்தநாள் போஸ்டரில் ஒலித்த கழகக் குரலால் அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். கடைசியாக அழகிரியும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு சற்று அமைதியாக இருந்த அழகிரி, பிறந்தநாள் முதல் பரபரப்பு கிளப்பி வருகிறார். லோக்சபா தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் அழகிரிக்கோ, அவரது ஆதரவாளர்களுக்கோ தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அழகிரி நேற்று திடீர் என்று டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். தி.மு.க.வும், காங்கிரசும் பிரிந்து விட்ட நிலையில் மு.க. அழகிரி பிரதமரை சந்தித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தி.மு.க. மீது கடுமையாக தாக்கி பேட்டி அளித்தார்.
கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவும், அழகிரியும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் மனம்விட்டு பேசினார்கள். அரை மணி நேரத்துக்கு மேலாக பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது அழகிரி, லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆவீர்கள் என்று வைகோவை வாழ்த்தியதாகவும் தெரிகிறது.
வைகோவை சந்தித்த பின்புதான் அழகிரி டெல்லி சென்று ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசியிருக்கிறார். பிரதமரை சந்திக்கும் முன்பு முதல் நாள் மார்ச் 12ம் தேதி இரவு பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை அழகிரி சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
டெல்லி அசோகா சாலையில் உள்ள ராஜ்நாத் சிங் வீட்டுக்கு அழகிரி சென்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக ராஜ்நாத் சிங்கிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது
அழகிரி தாமாகவே நேரில் வந்து ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். இதை நாங்கள் சற்றும் எதிர் பார்க்கவில்லை. அப்போது தமிழகத்தில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக தானாகவே முன் வந்து தெரிவித்தார்'' என்று கூறினார்கள்.
அப்போது அழகிரி தனது 3 நிபந்தனைகளை பா.ஜ.க ஏற்க வேண்டும். அப்போது தான் ஆதரவு தொடர்பான அறிவிப்பை பகிரங்கமாக வெளியிடுவேன் என்று அழகிரி கூறியதாக தெரிகிறது. அவர் என்ன நிபந்தனைகள் விதித்தார் என்பதை வெளியிட பா.ஜ.க வட்டாரங்கள் மறுத்து விட்டனர்.
மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 தொகுதிகளில் திமுக சார்பில் அறிவித்துள்ள வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கும் அழகிரி, இந்த நான்கு தொகுதிகளில் மதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டால் அப்போது யாருக்கு ஆதரவாக அழகிரி பிரச்சாரம் செய்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
tamil.oneindia.in 

அரசு செவிலியர் பள்ளிகளை ஒழிக்க தமிழக அரசு சதி ! செவிலியர்கள் உச்சிக்குடுமி மன்றங்களை மட்டும் நம்பாமல்.



ஒரு நீதி மன்றம் நேர்மையா தீர்ப்பு சொல்லணுமா இல்லைங்களா, இந்த நீதிபதிங்க அரசுக்கும், தனியாருக்கும் ஆதரவா தீர்ப்பு சொல்றாங்களே இது தான் நீதிங்களா”
பார்ப்பன பாசிச நடவடிக்கைகளையும் மேலும் செழுமைப்படுத்தி தீர்ப்பாக வழங்கி வரும் உச்சிக்குடுமி மன்றம், செவிலியர்களுக்கு என்ன மாதிரியான தீர்ப்பை வழங்கும் என்பதை ஒரு அடி முட்டாள் கூட அப்படியே வரிக்கு வரி கூறிவிடுவான்.
செவிலியர்கள் நீதி மன்றங்களை மட்டும் நம்பாமல் தமது போராட்டங்களை மக்கள் மன்றத்தில்தான் முக்கியமாக நடத்த வேண்டும்.
டந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7-ம் தேதி) “அரசு பயிற்சி பள்ளிகளில் பயின்ற செவிலியர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும்” என்கிற செவிலியர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வழக்கை தள்ளுபடி செய்து, மேல் முறையீடு செய்ய உச்சநீதி மன்றத்திற்கு செல்லும்படி தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதி மன்றம். தனியார்மயத்துக்கு ஆதரவாக வழங்கப்பட்ட இத்தீர்ப்பு வெளியான உடனே நீதி மன்றத்தில் கூடி நின்ற செவிலியர் பயிற்சி பெற்ற மாணவர்கள் நீதிபதிகளையும், அரசையும் கண்டித்து முழக்கமிட்டபடி உயர்நீதி மன்றத்தின் ஐந்தாவது மாடியில் ஏறி தற்கொலை போராட்டம் நடத்தியுள்ளனர்.

பா.ஜ.க. கூட்டணியில் மீண்டும் குழப்பம் ! டெபாசிட் தானம் செய்வதில் கடும் போட்டி ?

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொங்கு நாடு ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்து புதிய கூட்டணி அமைத்துள்ளன.
கடந்த ஒரு மாதமாக இந்த கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டில் ஆரம்பத்தில் இருந்தே இழுபறி ஏற்பட்டது.
பா.ம.க. ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்த 10 தொகுதிகளில் 2 தொகுதிகளை விட்டு கொடுக்க முன்வந்தது. ஆனால் மீதமுள்ள 8 தொகுதிகளையும் மாற்ற கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தனர்.
அதே நேரத்தில் தே.மு.தி.க. தரப்பில் பா.ம.க. தொகுதிகளில் சிலவற்றையும், பா.ஜனதா விரும்பிய தொகுதிகளில் சிலவற்றையும் கேட்டு வற்புறுத்தியதால் பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்பட்டது.

ஜெயாவுக்கு ஆதரவான அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு 65 ஆயிரம் நீதிமன்ற அபராதம்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு ரூ.65 ஆயிரம் அபராதம்: பெங்களூரு சிறப்பு கோர்ட்
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு பெங்களூரு நீதிமன்றம் ரூபாய் 65 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இறுதி வாதத்தை தொடங்க பவானி சிங் மேலும் கால அவகாசம் கேட்டதையடுத்து நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார். வழக்கை தாமதப்படுத்தும் முயற்சி என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும், இறுதி கட்ட வாதத்தை நாளை கண்டிப்பாக தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள நீதிபதி, நாளை வாதம் தொடங்காவிட்டால் மீண்டும் 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். nakkheeran.in/

BSLN இணைப்பை முறைகேடாக பயன்படுத்திய தயாநிதி: ஜெ., தாக்கு

திருப்பூர்: பி.எஸ்.என்.எல்., இணைப்பை முறைகேடாக வீட்டில் அமைத்திருந்த குற்றச்சாட்டுள்ள தயாநிதிக்கு போட்டியிட கருணாநிதி சீட் வழங்கியுள்ளார் . ஆனால் அது போன்று ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு எதிரான ஆதாரம் இல்லை என கருணாநிதி ஊழலை நியாயப்படுத்துகிறார் என திருப்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க, பொது செயலர் ஜெ., குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் மேலும் பேசுகையில்; எண்ணூர் மின் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி பெற காலதாமதமானது. இதை, ஒரு கேள்வியாக கருணாநிதி கேட்கிறார். எங்களால், "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல்போல், அவசரமாக முடிவு எடுக்க முடியாது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்துள்ளது.
ஏர்செல்' நிறுவனத்தை மிரட்டி, "மேக்சிஸ்' நிறுவனத்தின் பங்குகளை வாங்கி, 675 கோடி ரூபாய் முதலீடு பெற்றதாகவும்/// அம்மா உண்மை அம்மா. அப்படிதான் அவர்கள் பெற்றார்கள் சிவசங்கரன் கூட சொல்லி இருக்கிறார்கள் அம்மா, அப்புறம் நம்ம ஜெயா TV யின் பிரதான பங்குதாரர் திருவாளர் யாரம்மா அவர் நானும் மறந்திட்டேன், அவர் நம்ம TV யில் முதலீடு செய்வதற்கு அங்கே நீங்களும் உங்கள் தலைமையிலான் அதிமுக அரசும் மணலை, கனிம வளத்தை கொள்ளை அடிக்க பட்டா போட்டு கொடுத்ததன் விளைவாக அவர் பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து பெரும் தொழில் அதிபர் ஆகிவிட்டாராமே, அந்த பணம் தான் ஜெயா TV யில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், நண்பன் சொல்கிறான் அம்மா உண்மையா அம்மா...

அழகிரியின் மரியாதை நிமித்த சந்திப்புக்கள் ! பிரதமர், ரஜினி, வைகோ இன்னும் யார் யாரோ ?

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி இன்று காலை நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்துக்கு தனது மகன் தயாநிதியுடன் வந்தார் அழகிரி. பின்னர் இருவரும் நடிகர் ரஜினியை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி: "ரஜினிகாந்த் எனது நீண்ட கால நண்பர். அவரை சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து சொல்லவே வந்தேன். மற்றபடி வேறு எந்த அரசியல் பேச்சும் அவரிடம் பேசவில்லை. மன ஆறுதலுக்காகவே சந்தித்தேன்" என்றார்.
மேலும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் கோச்சடையான் பாடல்களை கேட்டு ரசித்ததாகவும், அதற்காக ரஜினியை பாராட்டியதாகவும் அழகிரி கூறினார்.
நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, அழகிரி சந்தித்தார். ஏற்கெனவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் அழகிரி அண்மையில் சந்தித்தார்.
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரி தொடர்ந்து அரசியல் தலைவர்களை சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. tamil.thehindu.com/

அழகிரி to வைகோ : விருதுநகர் தொகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராகிறீர்கள். அதற்கு எனது வாழ்த்துகள்”


“நீங்க டில்லிக்கு போக டிக்கெட் எடுங்க..  நாங்க விருதுநகர்ல பாத்துக்கிறோம்”
“நீங்க டில்லிக்கு போக டிக்கெட் எடுங்க.. நாங்க விருதுநகர்ல பாத்துக்கிறோம்”
மதுரை விமான நிலையத்தில் ‘எதேச்சையாக’ சந்தித்துக்கொண்ட வைகோ, மு.க. அழகிரி இருவரும் அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசியதாக வெளியான தகவல், தி.மு.க.வில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் அழகிரி மீது கடுங் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
“வைகோவின் தூண்டுதலின் பேரில் விடுதலைப்புலிகள் என்னைக் கொல்ல திட்டமிட்டுள்ளனர்” என குற்றம்சாட்டிய கருணாநிதி, இந்தக் குற்றச்சாட்டின் பேரில் 1993-ம் ஆண்டு வைகோவை கட்சியிலிருந்து நீக்கினார். அதேபோல சமீபத்தில், “சில மாதங்களின்பின் ஸ்டாலின் உயிரோடு இருக்க மாட்டார்” என அழகிரி கூறியதாகக் கூறி அவரை கட்சியிலிருந்து நீக்கினார்.
“என் மீதான குற்றச்சாட்டு அபாண்டம்” என 1993-ல் வைகோ கூறினார். 2014-ல் அழகிரியும் அதே பதிலைக் கூறினார்.
இந்நிலையில், (கலைஞர் கூற்றுப்படி) தந்தையை கொல்லத் திட்டமிட்ட வைகோவும், தனையனை கொல்ல திட்டமிட்ட அழகிரியும், மதுரை விமான நிலையத்தில் எதேச்சையாகச் சந்தித்துக்கொண்டு சுமார் அரை மணி நேரம் மனம் விட்டுப் பேசியதாகக் கூறப்படும் விஷயத்தில், இப்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

விஷால் :நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகளுக்கும் சரி, முன்பு நடித்த நடிகைகளுக்கும்


விஷால் நடிப்பிலும் தயாரிப்பிலும் இயக்குனர் திரு இயக்கியிருக்கும் ’நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(13.03.14) காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர்கள் பாலா, ஹரி, விஷ்ணுவர்தன், விஜய் மற்றும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான விஷ்ணு, விக்ராந்த், சாந்தனு, ஜித்தன் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில், வழக்கமான வாழ்த்துகள் மட்டுமல்லாமல் சுவாரஸ்யமான பேச்சுக்களும் இடம்பெற்றன.
இயக்குனர் பாலா பேசியபோது “நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் ஹீரோ எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார். எனக்கென்னவோ இது என்னை பழிவாங்க விஷாலும், திருவும் இணைந்து யோசித்த திட்டம் என்றே தோன்றுகிறது. நான் தான் எப்பொழுதும் தூங்கிக்கொண்டே இருப்பேன். காலையில் ஷூட்டிங்கிற்கு ஸ்பாட்டிற்கே 11 மணிக்குத் தான் செல்வேன். இரவு 7.30 மணிக்கு ஷூட்டிங் என்றால் விடியற்காலைக்கு சற்று முன்பு தான் செல்வேன்” என்று கலகலப்பாக பேசினார். 

பாரீஸில் பொதுப் போக்குவரத்து இலவசம் Paris promises free public transport if high pollution continues

Authorities in the Paris region say they will make public transport free if they have to bring in emergency restrictions on traffic because of high pollution levels caused by unseasonably warm weather. பாரீஸ் மற்றும் அதன் புறநகரங்களில் வளி மண்டலம் மிகவும் மாசடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த நகரம் மாசுபடுதலின் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஃப்ரான்சில் ஏற்பட்டுள்ள திடீர் குளிரினால் பாரீஸ் முழுவதும் காற்று இல்லாமல் போனது. மேலும், வாகனங்கள் வெளியேற்றும் நச்சு புகையும், குளிரைப் போக்கிக் கொள்ள மக்கள் வீடுகளில் பயன்படுத்தும் ரேடியேட்டர் கருவிகளும் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றது. இதையடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாகனங்களின் புகையை தவிர்க்கவும் அங்கு மூன்று நாளைக்கு பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது. பாரீஸ் மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் வசிப்பவர்கள் இந்த பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று நகர போக்குவரத்து அமைப்புத் தலைவர் ஜீன் பால் ஹூச்சோன் கேட்டுக் கொண்டுள்ளார். லாரிகள் போன்ற வர்த்தக வாகனங்களை நிறுத்தி வைக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. maalaimalar.com

jeyamohan :அகதிகளாக புகுந்து குடியுரிமை பெற்ற அனைத்து நாடுகளிலும் ஆயுத கும்பலுக்கு நிதி தேடிய இலங்கை அகதிகளையையும் அமைதியை விரும்பும் திபேத் அகதிகளையும் ....


திபேத் அகதிகளையும், இலங்கை அகதிகளையையும் நேர் செய்தல் சரியாக வருமா என தெரியவில்லை. இலங்கை அகதிகளின் பின்புலத்தில் ஆயுத மோகமும், வன்முறை சாய்வும் உண்டு. அவர்கள் அகதிகளாக புகுந்து குடியுரிமை பெற்ற அனைத்து நாடுகளிலும் தீவிரவாத ஆயுத கும்பலுக்கு நிதி ஆதாரம் தேடும் அமைப்பை உண்டாக்கி உள்ளார்கள். அவர்கள் மீது கட்டுப்பாடான நிலைப்பாடு இந்திய போலீசாரால் உருவாக்க படவில்லையெனில் இந்தியாவிலும் அப்படியான அராஜக அமைப்பை உருவாக்கி இருப்பார்கள்.
தீவு அரசியலில் நிகழ்ந்த ஜனநாயக முடக்கத்துக்கு, மனித வளைய தாக்குதலுக்கு, கல்வி , தொழில் முடக்கத்துக்கு, விதவைகளுக்கு, அனாதை குழந்தைகளுக்கு, ஊனம் உற்றோருக்கு இந்த புலம் பெயர்ந்த நிதியும் காரணமே.
காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு தனக்கு இருக்கும் குறைவான பொருளாதாரத்தில் கல்வி அமைப்புகள், மருத்துவ அமைப்புகள், நீர் ஆதாரங்கள், வேலைவாய்ப்புகள் ,சாலை அமைப்பு, துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு செலவிட்டு கொண்டிருக்கும் பொழுது, பக்கத்து தீவில் இருந்தவர்கள் தாங்கள் உழைத்த பணத்தை ஆயுத கொட்டடிகளில் செலவிட்டு ஒங்காரம் இட்டு கொண்டு இருந்தார்கள்.
காங்கிரஸ் தோல்வி அடைய பலகாரணங்கள் உண்டு. ஆனால் இலங்கையில் ஒரளவு இன்று அமைதி இருக்கிறதென்றால் அதற்கும் இந்தியாவே காரணம். இந்தியாவின் ஜனநாயக பொறுப்பை ஏற்று நடத்திய காங்கிரஸின் நாடாளுமன்றமும், அதன் தலைவர்களுமே காரணம்.

சொத்துகுவிப்பு ஜெயலலிதா: ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு தி.மு.க.,வில் 'சீட்! கடும் தாக்கு

ஈரோடு: தமிழகத்தில், பல முனை போட்டி ஏற்பட்டுள்ள சூழலில், முதல்வர் ஜெயலலிதா, தன் பிரசார உரையில், மாற்றம் செய்துள்ளார். நேற்று, பேசும் போது, தி.மு.க.,வில், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ராசா, தயாநிதி, ஆகியோர் மீண்டும் போட்டியிட, வாய்ப்பு வழங்கி உள்ளதை, கடுமையாக சாடினார்.
ஈரோடு தொகுதியில், ஜெயலலிதா பேசியதாவது:மத்திய காங்கிரஸ் அரசு செய்த ஊழல்களில், மிகப் பெரியது, 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல். இது தொடர்பாக, ராசா மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது; நீதிமன்ற விசாரணை, நடந்து வருகிறது. 'குற்றம் சாட்டப்பட்டவர்களை, தேர்தலில் போட்டியிட, அனுமதிக்கக் கூடாது' என்பது, பொதுமக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது.
இவரே ஒரு கின்னஸ் சாதனை ஊழல்வாதி. தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றத்திலிருந்து தப்பிக்க பதினாறு வருடங்களுக்கு மேலாக ஜெகதால பிரதாபங்களை நடத்தி வருபவர். மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளால் ஏற்பட்ட இழப்பை பொய் குற்றச்சாட்டாக்கி, அந்த சலுகை வழங்கியவர்களை குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களைப்போல் கேள்வி கேட்கிறார். திருடனுக்கு யாரை பார்த்தாலும் திருடனாகத்தான் தெரியும். 

பேராயர் எஸ்றா.சற்குணம்:காங்கிரசுடன் கூட்டணி இல்லையேல் தி.மு.க., தோற்கும்:

தி.மு.க., கூட்டணியில், கிறிஸ்தவர்களுக்கு போதிய பிரதிநித்துவம் அளிக்காதது அதிருப்தி அளிக்கிறது. காங்கிரசுடன், தி.மு.க., கூட்டணி அமைக்காவிட்டால், குறைவான ஓட்டுக்களில் தோற்கும் நிலை ஏற்படும்,'' என, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவரும், கிறிஸ்தவ பேராயருமான எஸ்றா.சற்குணம் கூறினார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நீண்ட நாள் நண்பரும், தி.மு.க.,வின் ஆசிபெற்ற கிறிஸ்தவ பேராயருமான எஸ்றா.சற்குணம், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
முன்னாள் பிரதமர் இந்திரா, அவசரநிலையை பிரகடனம் செய்த போது, தி.மு.க.,வினர், கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதற்கு எதிராக, பெரும் போராட்டங்களையும் நடத்தினர். ஆனால், அவசரநிலை பிரகடனம் முடிந்த மூன்று ஆண்டுகளில், காங்கிரஸ் உடன்தி.மு.க., கூட்டணி அமைத்தது.இப்போது, காங்கிரசுடன் கூட்டணியை முறிக்க, தி.மு.க., கூறும் காரணங்கள் சரியாக இல்லை. ஈழ மக்களுக்கு, காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என்கின்றனர். விடுதலை புலிகளால், சிங்களர்களை விட, ஈழத் தமிழர்கள் தான் அதிகம் கொல்லப்பட்டனர். புலிகள் இயக்கம் கொலைகார இயக்கமாக செயல்பட்டது. நாடு தாண்டி வந்து, ராஜிவையும் கொன்றது; இச்செயலை யாரும் ஏற்கமாட்டார்கள். அதேநேரத்தில், ராஜிவ் கொலையாளிகள் விடுதலையைத் தடுக்க, காங்கிரஸ் இவ்வளவு ஆர்வம் காட்டக் கூடாது. இரு கட்சிகளும் விட்டுக் கொடுத்து, கூட்டணியை உருவாக்க வேண்டும். எதிராளிகள் வீசிய அம்புகளுக்கு சி பி ஐயை வைத்து விஷம் தடவியவர்களின் நட்பை என்னவென்று சொல்வது.சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் கூடா நட்பு தான்.

காங் அப்செட் ! TRS BJP பேச்சுவார்த்தை ! TRS angry because of Vijayasanthi merged with congress. ..

புதுடில்லி: தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு முக்கிய காரணியான டி.ஆர்.எஸ் கட்சி பா.ஜ., உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
தெலுங்கானா மாநிலம் உருவானால் டி.ஆர்,.எஸ் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் உடன் இணைவதாக சந்திரசேகரராவ் தெரிவித்திருந்தார். ஆனால் டி.ஆர். எஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் காங்., உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், அதே நேரம் காங்., உடன் கூட்டணி வைத்து கொள்ள டி.ஆர்.. எஸ். கட்சியினர் சம்மதம் தெரிவித்தனர்.
வரும் பொது தேர்தலுடன் சேர்த்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. புதிய மாநிலத்தில் உள்ள லோக்சபா தொகுதி மற்றும் சட்டசபை தொகுதி யில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இருகட்சியினரும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று வருகின்றனர்.  கூடுதல சீட் வாங்கதான் ஜஸ்ட் டிராமா ?  

வியாழன், 13 மார்ச், 2014

தமிழ் படம் இயக்காமல் பின்வாங்கினார் மணிரத்னம் ! பைனான்ஸ் யோசிக்கிறார்கள். ?

தமிழ் படம் இயக்காமல் பின்வாங்குகிறார் மணிரத்னம். ஆய்த எழுத்து, விக்ரம் நடித்த ‘ராவணன்‘, அபிஷேக்பச்சன் நடித்த ‘குரு‘ படங்களை இந்தி, தமிழ் என இருமொழிகளில் இயக்கினார் மணிரத்னம். இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் தமிழ், தெலுங்கில் அடுத்த படத்தை இயக்க எண்ணி இருந்தார். இதற்காக மகேஷ்பாபு, நாகார்ஜுனா  இருவரையும் ஹீரோக்களாக தேர்வு செய்தார். திருமணத்துக்கு பிறகு இப்படம் மூலம் ஐஸ்வர்யாராயும் ரீ என்ட்ரி ஆக உள்ளார். அதேபோல் தமிழுக்கும் நட்சத்திர தேர்வு நடத்த முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில் தமிழில் கடைசியாக அவர் இயக்கிய கடல் படம் படு தோல்வி அடைந்தது. இதனால் பைனான்சியர்கள், வினியோகஸ்தர்கள் மணிரத்னம் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர். இப்போது அவரது அடுத்த தமிழ் படத்துக்கு பைனான்ஸ் செய்ய பலரும் யோசிக்கிறார்கள். இதனால் டோலிவுட்டுக்கு சென்று அந்த மொழியில் மட்டுமே இப்படத்தை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். அதே சமயம், ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்க வருவதை அவரது மாமியார் ஜெயா பச்சன் விரும்பவில்லை. மகள் ஆராத்யாவை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் இருப்பதால் நீண்ட கால்ஷீட் தருவது முடியாத காரியம் என ஐஸ்வர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மொழியில் மட்டும் மணிரத்னம் படம் இயக்குவதற்கு இதுதான் காரணம் என்று அவர் தரப்பில் கூறப்படுகிறது. - tamilmurasu.org

அமெரிக்கா : இந்திய மாணவியின் சடலம் மீட்பு தற்கொலையா? போலீஸ் விசாரணை

நியூயார்க்:அமெரிக்காவில் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்த இந்திய மாணவியின் சடலம் காரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவி ஜாஸ்மின் ஜோசப் (22). இவர் கடந்த மாதம் 24ம் தேதி மர்மமான முறையில் மாயமானார். சம்பவத்தன்று மாணவி கடைசியாக பெற்றோரிடம் தான் லைப்ரரிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன்பின்பு அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. புகாரின் பேரில் அவரை தீவிரமாக தேடி வந்த நாசி கவுன்டி போலீசார், சியோசெட் பகுதியில் உள்ள ஷாப்பிங் மால் கார் பார்க்கிங் பகுதியில் இருந்த காரில் சடலமாக ஜாஸ்மினை மீட்டனர்.

BJP உட்கட்சி சண்டை ! பிரதமர் கனவு மூழ்கும் கப்பலாகி விட்டது !

புதுடில்லி, மார்ச் 12- பாரதீய ஜனதா கட்சிக்குள் எங்குப் பார்த்தாலும்
உள் கட்சிச் சண்டை நடந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக பிரதமர் கனவு என்னும் கப்பல் மூழ்கும் கப்பலாகி விட்டது என்று படம் பிடித்துள்ளது தி எக்னாமிக் டைம்ஸ் ஏடு.
தேநீர்க் கடை விவாதம் (சண்டை) கட்சித் தலைமை அலுவலகத்தில் தீவிரமாக நடந்து கொண்டு இருக் கிறது.  பாரதீய ஜனதா கட்சி யின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி தலைமை யின் முடிவில் மிகவும் அதி ருப்தியில் உள்ளார்.
முரளிமனோகர் ஜோஷி யின் நாடாளுமன்ற தொகு தியான வாரணாசிமீது பார தீய ஜனதாவின் பிரதம ருக்கான வேட்பாளர் கண் வைத்துள்ளார். தொடக்கம் முதலே இந்த தகவல் முரளி மனோகர் ஜோஷிக்குத் தெரியவந்தாலும் அதை தலைமை தமக்கான தொகு தியை அவருக்கு ஒப்புக் கொள்ளாது என்று நினைத்து வந்தார். ஆனால் இறுதியில் வாரணாசித் தொகுதியை நரேந்திரமோடிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு முரளிமனோகர் ஜோஷி தள்ளப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – 5

லீனா கீதா ரெகுநாத்லீனா கீதா ரெகுநாத் அம்பாலா மத்திய சிறையில் வாழ்ந்து வந்த அசீமானந்தாவிடம் ஜனவரி 10, 2012, ஜூன் 22, 2013, ஜனவரி 9, 2014, ஜனவரி 17, 2014 என அடுத்த 2 ஆண்டுகளில் நான்கு முறை பேட்டி எடுத்திருக்கிறார். இந்த உரையாடல்களின் பதிவு செய்யப்பட்ட கால அளவு 9 மணி, 26 நிமிடங்கள்.
அசீமானந்தா நேரில் கூறிய விபரங்களுடன் அசீமானந்தாவின் சொந்த ஊரான கமர்புக்கூர், அசீமானந்தா தனது குற்றச் செயல்களை நடத்தி வந்த குஜராத்தின் டாங் மாவட்டம், பிரக்யாசிங் சிகிச்சை பெற்று வரும் போபால், தேசிய புலனாய்வு ஆணையத்தின் டெல்லி அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் அலுவலகம் என்று இந்த வழக்குடன் தொடர்புள்ள நபர்களை சந்தித்து தகவல்கள் திரட்டியிருக்கிறார், கட்டுரையாளர். மேலும் சம்ஜவுதா குண்டு வெடிப்பு வழக்கு, அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கு, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்குகள், மற்றும் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கு இவை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிகைகள், பத்திரிகை செய்திகள் இவற்றையும் இணைத்து, ஒரு விரிவான குற்றப் புலனாய்வு செய்திருக்கிறார் கட்டுரையாளர் லீனா கீதா ரெகுநாத்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகளான பா.ஜ.க, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்வற்றின் வன்முறை வெறிச்செயல்களை ஆதாரத்துடன் நிரூபிக்கும் இந்தக் கட்டுரை இந்திய ஊடகவியல் வரலாற்றில் முக்கியமான ஒரு சாதனை.

மாயமான பிறகும் 4 மணிநேரம் பறந்த மலேசிய விமானம்?

நியூயார்க்: மாயமான மலேசிய விமானம் ரேடாரில் இருந்து மாயமான பிறகும் 4 மணிநேரம் வானில் பறந்ததாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மலேசிய விமானம் MH370  239 பேருடன் கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது. கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய ஒரு மணிநேரத்தில் விமானம் மாயமானது. அந்த விமானம் விபத்துக்குள்ளானதா?, கடத்தப்பட்டதா? என்பது இப்போது  வரை தெரியவில்லை.இந்நிலையில் அந்த விமானம் ரேடாரில் இருந்து மாயமான பிறகு 4 மணிநேரம் விண்ணில் பறந்ததாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக  செய்திகள்  தெரிவிக்கின்றன.dinakaran.com/ படத்தில் காண்பது அந்த விமானம்தான் 

Delhi மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்: 4 பேருக்க தூக்கு உறுதி !

டெல்லி: டெல்லியில் 2012 டிசம்பர் மாதத்தில் மருத்துவ மாணவியை பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 4 பேர் அடங்கிய கும்பலுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தூக்கு தண்டணை விதித்து தீர்பளித்துள்ளது. பாலியல் பலாத்காரத்தில் சம்பந்தப்பட்ட முகேஷ், வினய் ஷர்மா, பவான், மற்றும் அக்ஷய் தாகூர் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்த டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.  2012 டிசம்பர் 16ல் ஓடும் பேருந்தில் 6 பேர் கும்பலால் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம்
2013 செப்டம்பர் 13ல் 4 பேருக்கு மரணதண்டனையை விதித்துள்ளது. வழக்கில் தொடர்புடைய ஒருவர் ஏற்கனவே சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்  dinakaran.com/

பாலியல் பொறுக்கிகள் இருக்கவேண்டிய இடம் தமிழ்த்துறை அல்ல! ஜெயசாந்தியை கட்டாயப்படுத்தியிருக்கிறார் !

சென்னை லயோலா கல்லூரியில் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியராக பணி புரிந்து வருகிறார் ஜோஸ்பின் ஜெயசாந்தி. 2008-ம் ஆண்டு அவர் பணி புரிந்து வந்த தமிழ்த்துறையில், தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் எஸ்.ஏ. ராஜராஜன். இவர் துறை தலைவர் எனும் முறையில் அதிகாரத் திமிரில், ஜெயசாந்திக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். துறைத் தலைவரான தன்னுடன் வெளியூர்களில் நடக்கும் கல்வித்துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்படி அழைப்பதும், தங்குவதற்கு ஹோட்டலில் அறை எடுப்பதாக கூறுவதும் அவரது வாடிக்கையாக இருந்திருக்கிறது. ராஜராஜனுடைய நோக்கத்தை புரிந்து கொண்ட ஜெயசாந்தி அவரது அழைப்புகளை உறுதியாக மறுத்து வந்திருக்கிறார்.

தங்கபாலுவும் ஓட்டம் !வாசன் சிதம்பரம் போன்றோரும் போட்டியிடவில்லையாம்

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவினை சேலம் உள்ளிட்ட எந்த தொகுதிக்கும் அளிக்கவில்லை. மூன்று மாவட்ட தலைவர்கள் தாங்களாகவே இந்த மனுக்களை அளித்துள்ளனர். 2011 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தார்மீக பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகி அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் அனுப்பினேன். உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வரும் சட்ட மன்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும் தலைமைக்கு தெரிவித்து இருக்கிறேன். தேர்வு குழு தலைவர் குலாம் நபி ஆசாத், பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் போன்றோரிடம் மீண்டும் தனது நிலைப்பாட்டை தெரிவித்து உள்ளேன். தொடர்ந்து ஒருவரே தொகுதியில் போட்டியிடுவதற்கு பதிலாக புதியவர்கள், தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். வேட்பாளர்களாக அந்தந்த தொகுதியில் நியமனம் பெற வேண்டும் என்ற என் விருப்பத்தை தலைமையிடம் தெரிவித்து உள்ளேன். தலைமை தேர்வு செய்யும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்வேன்.
இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.maalaimalar.com 

குஷ்பு தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் ! ஜாக்கிரதை ஸ்டாலினிடம் பெர்மிஷன் வாங்கியாச்சா ?

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 24-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம் செய்கிறார். இதுதொடர்பாக, நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு குஷ்பு அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எப்போது பிரசாரத்தை தொடங்குகிறீர்கள்?
பதில்:- அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி, பிரசாரத்தை தொடங்க இருக்கிறேன்.
கேள்வி:- எத்தனை நாட்கள் பிரசாரம் செய்ய இருக்கிறீர்கள்?
பதில்:- ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கி, 22-ந்தேதி வரை பிரசாரம் செய்வேன்.
கேள்வி:- திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்வீர்களா, பொதுக்கூட்டங்களில் பேசுவீர்களா?
பதில்:- திறந்த வேனில் நின்றபடியும் பேசுவேன். பொதுக்கூட்டங்களிலும் பேசுவேன்.
கேள்வி:- 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வீர்களா?
பதில்:- அதுபற்றி இன்னும் திட்டமிடவில்லை.
கேள்வி:- எந்த பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்வீர்கள்?
பதில்:- கடந்த மூன்று வருடங்களில், அ.தி.மு.க. ஆட்சியில் எதையும் சாதிக்கவில்லை. அதையே முன்வைத்து பிரசாரம் செய்வேன்.
கேள்வி:- தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்:- பிரகாசமாக இருக்கிறது. இவ்வாறு குஷ்பு கூறினார். maalaimalar.com/

பிரதமர் அழகிரி சந்திப்பு ! தி.மு.க. தலைவர்களிடம் கடும் அதிர்ச்சி ! தென் மாவட்டங்களில் தி.மு.க. வெற்றி வாய்ப்பு ?


தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள மு.க.அழகிரி தி.மு.க.வை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். கடந்த திங்கட்கிழமை தி.மு.க. பாராளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட போது, ‘‘பணம் வாங்கிக் கொண்டு சீட் கொடுத்து இருக்கிறார்கள்’’ என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தாலும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக மு.க.அழகிரி செயல்பட மாட்டார் என்று கூறப்பட்டது. இதனால் மு.க.அழகிரியின் செயல்பாடுகளை தி.மு.க. மூத்த தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
இந்த நிலையில் மு.க. அழகிரி ஐதராபாத் சென்றிருந்தார். அங்கிருந்து அவர் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று காலை மு.க.அழகிரி சந்தித்து பேசினார். பிறகு வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் காங்கிரஸ் + அழகிரி Versus ஸ்டாலின் ?

மன்றாடிப் பார்த்தும் மசியாத தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, அதிரடி திட்டம் ஒன்றை, காங்கிரஸ் மேலிடம் கையில் எடுத்து உள்ளது என்ற தகவல் கசிய துவங்கி உள்ளது. கூட்டணி கதவுகளை திறக்க விடாமல் கடைசி வரை முட்டுக்கட்டை போட்ட, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு, அது பெரும் சவாலாக இருக்கும் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியான அதே நாளில் சென்னையில் இருந்த அழகிரி, 'தனி கட்சி துவங்குவது குறித்து, ஆதரவாளர்களுடன் பேசி, இரண்டு மாதத்தில் முடிவெடுப்பேன்' என, பேட்டி அளித்து, பரபரப்பை ஏற்படுத்திவிட்டு, மதுரை திரும்பியுள்ளார். அந்த பேட்டி, காங்கிரசின் ரகசிய திட்டத்தின் ஒரு வெளிப்பாடு தான் என, கூறப்படுகிறது. தி.மு.க.,வை கூட்டணிக்கு இழுக்க, காங்கிரஸ் தலைவர்கள் சிதம்பரம், குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், வாசன் உள்ளிட்டோர் முயற்சி எடுத்தனர். இதில், சிதம்பரம் தான் ஸ்டாலினுடன் மணிக்கணக்கில் பேசிப்பார்த்தார். இருப்பினும் ஸ்டாலின் இசையாததால், சிதம்பரம் 'அப்செட்' ஆகிவிட்டார். 'அவரது அரசியல் வாழ்க்கையில் இந்தளவுக்கு யாரிடமும் இறங்கிப் பேசியதில்லை என்பது தான், அவரது வருத்தத்திற்கு காரணம்' என்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

விஜயகாந்த் : தே.மு.தி.க., கூட்டணியால் கருணாநிதி, ஜெ.,க்கு பயம்: ! உன்னைய பாத்து உன் வேட்பாளரே பயப் படுரான்ல நீதான் குட்டுவியே !

பா.ஜ., தே.மு.தி.க., கூட்டணியை பார்த்து, ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் பயம் வந்து விட்டது. அதனால், மாற்றி, மாற்றி பேசுகின்றனர்,'' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் கூறினார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நாளை தேர்தல் பிரசாரம் துவக்குகிறார். விஜயகாந்த் பிரசாரத்திற்கு வரும்போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும், தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த, தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கு நேற்று ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர், விஜயகாந்த் பேசியதாவது: பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணியை பார்த்து, முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும் பயம் வந்துவிட்டது.  ஒரு பக்கம் சொர்ணாக்கா மறுபக்கம் புல் டண்டனக்கா 

டெபாசிட் கூட தேறாத நிலையில் ஓடி ஒழிக்கும் காங் தலைகள் Ex MP etc

தமிழகத்தில், 'காமராஜர் ஆட்சி அமைப்போம்' என்ற கோஷத்தை, தேர்தலுக்கு தேர்தல் கூவி விட்டு, தேர்தல் வந்ததும், அந்த கோஷத்தை காற்றில் பறக்கவிட்டு, திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து வந்த, தமிழக காங்., இந்த லோக்சபா தேர்தலை, மாறுபட்ட கோணத்தில் சந்திக்கிறது. அதாவது, காங்கிரசை கூட்டணியிலிருந்து, தி.மு.க., கழற்றி விட்டது. அதேநேரத்தில், இலங்கை தமிழர்கள் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை உட்பட, தமிழர்கள் நலன்சார்ந்த விஷயங்களுக்கு, காங்., மேலிடம் முக்கியத்துவம் அளிக்காததால், அக்கட்சியுடன் கூட்டணி சேர, அ.தி.மு.க.,வும் விரும்பவில்லை.   காங்கிரஸ் கட்சி எப்படி தனித்து விடப்பட்டதோ அதே மாதிரிதான் அதிமுக வையும் எந்த கட்சியும் சீண்ட வில்லை. ஆனா அத பத்தி யாரும் பேசறது இல்ல,தாபா கோஷ்டி என்பதை தனி கட்சிகள் வரிசையில் சேராது ! 

தூதரக அதிகாரி தேவயாணி மீதான வழக்கு தள்ளுபடி

நியூயார்க்: இந்திய தூதரக அதிகாரி தேவயாணி மீதானவழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளளது. கடந்த சில மாதங்களுக் முன்னர் விசா குளறுபடி பணிப்பெண்ணி்ற்கு வழங்கப்பட்ட ஊதிய வேறுபாடுகாரணமாக இந்திய தூதரகத்தி்ல் பணியாற்றி வந்த தேவயாணி கோப்ரகடே அமெரி்க்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தால் இருநாட்டு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவானது. இதனையடுத்து அவர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப் பட்டார். இருப்பினும் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்து வந்த அமெரி்க்க நீதிமன்றம் தேவயாணியை விடுதலை செய்துள் dinamalar.com

புதன், 12 மார்ச், 2014

சதா: மலையாளத்தில் ஹசிம் மோரிகர் இயக்கும் படத்தில் நான் நானாகவே நடிக்கிறேன்.

சென்னை: தமிழில் ‘ஜெயம்‘, ‘அந்நியன்‘, ‘திருப்பதி‘, ‘வர்ணஜாலம்‘, ‘பிரியசகி‘ உள்ளிட்ட படங்களில் நடித்தார் சதா. அஜீத், விக்ரம் என பிரபல நடிகர்களுடன் நடித்தும் சதாவுக்கு வாய்ப்பு குவியவில்லை. இந்நிலையில் விஷால் நடித்துள்ள ‘மத கஜ ராஜா‘ படத்தில் கெஸ்ட் ரோல் வேடம் ஏற்றார். இப்படம் வெளிவராமல் முடங்கி உள்ளது. சதா கூறியது: மலையாளத்தில் ஹசிம் மோரிகர் இயக்கும் படத்தில் நான் நானாகவே நடிக்கிறேன். ‘நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன்?‘ என்கிறார்கள். நிறைய படங்களில் நடிக்க காத்திருக்கிறேன். ஜெயராமன் ஜோடியாக புதிய மலையாள படமொன்றிலும் நடிக்கிறேன். இப்படம் பற்றி இயக்குனர் நோவெல் சொன்ன கதை பிடித்ததால் உடனே ஏற்றுக்கொண்டேன். எனக்கு நடனம் என்றால் பிடிக்கும். நடன பின்னணியில் அமைந்த ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. பிடித்த கதையாக இருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்து வருகிறேன். இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை என்றார். ‘ஜெயம் படத்தில் அறிமுகமானபோது சதாவுக்கு ரசிகர்கள் ஏராளமானவர்கள் திரண்டனர். அவரது கிராமத்து பாங்கான முகம்தான் இதற்கு காரணம். ஆனால் அடுத்தடுத்து அவர் நடித்த படங்களில் படுகிளாமர் வேடம் ஏற்றதால் கிராமத்து பெண் இமேஜை இழந்தார். இது அவருக்கு மைனஸாக அமைந்துவிட்டதுÕ என்றார் ஒரு இயக்குனர். - tamilmurasu.org

சவுதி அரேபிய இளவரசிகள் சிறைவைப்பு! தாயார் அலானவுடு அல்பயஷ் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலுக்கு கடிதம்

)

ONCE upon a time there were four beautiful princesses called Sahar, Jawaher, Maha and Hala.They lived in a fabulous palace and every year would go on two long holidays with their friends.In winter they would ski at an exclusive resort in the French Alps. In summer they went to parties in Italy and Greece. Then, abruptly, the fairytale ended.
For the four sisters were part of the Saudi Arabian royal family and they had made the mistake of crossing the patriarchy that rules one of the most oppressive states in the world.
Now, instead of the carefree existence they once enjoyed as children of King Abdullah, they are trapped in a gilded cage.
The heavy metal gate that serves as the main entrance to the beachfront villa they occupy in the grounds of the royal palace in the Saudi capital Riyadh is padlocked at all times.
Guards in a watchtower keep them under observation 24 hours a day helped by the glare of spotlights after dark. And escape by sea is made impossible by underwater nets and concrete obstacles.
சவுதி அரேபியாவின் மன்னர் ஆக இருப்பவர் அப்துல்லா. இவரது மகள்கள் சாஹர் (42), ஜவாகர் (38), ஹாலா (39), மாகா (41). இளவரசிகள் அந்தஸ்து பெற்றுள்ளனர்.
இவர்களில் சாஹர், ஜவாகர் ஆகியோர் சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கைக்கு இ–மெயில் மற்றும் டெலிபோனில் பேசினர்.
அப்போது, தாங்கள் இருவரும் ஜெட்டாவில் தனி சொகுசு பங்களாகளில் அடைத்து சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதேபோன்று தனது தங்கைகள் ஹாலா, மாகா ஆகியோரும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறினர்.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என கடுமையான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. பெண்கள் கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விசுவாசிகளுக்கு இடமில்லாத தி.மு.க. வேட்பாளர் பட்டியல்- தி.மு.க.வின் நீண்டகால நிர்வாகிகள் அதிருப்


கட்சியில் நீண்டகாலம் இருப்போர் திமுக வேட்பாளர் தேர்வில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அதிருப்தி கிளம்பி இருப்பதால், ஒரு சில வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக வேட்பாளர் பட்டிய லில், தொழிலதிபர்கள், டாக்டர் கள் எனக் கட்சிக்கு தொடர் பில்லாதவர்களுக்கு சீட் கொடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஒப்புத லின்றி, பல வேட்பாளர்கள் தேர்வாகியுள்ளதாகவும் கட்சியினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். தஞ்சாவூரில் திமுக வேட்பாளரின் உருவபொம்மையைக் கொளுத்தி, வெளிப்படையாகவே எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

மாநகர பேருந்து தொழிலாளர்கள் ! டிப்போல குடிக்கத் தண்ணி கூட இல்லைங்க ! டாய்லெட் மலஜலம் வெளியேறி நாற்றம்

மாநகரப் பேருந்துஇந்த டிப்போவுக்கு தினமும் 12,000 லிட்டர் டீசல் வருது சார், அதுல ஒரு லிட்டருக்கு 30 பைசா – அதுக்கு மேலயும் கூட இருக்கலாம் சரியாத் தெரியல – கிளை மேலாளருக்கும், அதிகாரிகளுக்கும் கமிஷனா போகுது. டீசலை மொத்தமா வாங்குனா மத்திய அரசு அதிக வரி விதிக்குது, அது இவங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கு, துறையை காப்பாத்துறோம்ங்கிற பேர்ல பெட்ரோல் பங்க் முதலாளிகள்கிட்ட பேசி வச்சிக்கிட்டு சந்தை விலைக்கு வாங்குறோம்கிற பேர்ல தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோலை ஒரே பங்குல போட ஏற்பாடு பன்னிக்கிட்டு அதுல ஒரு கமிஷன் அடிக்கிறாங்க. மைலேஜ் மைலேஜ்னு டிரைவர்களை விரட்றதெல்லாம் இந்த கொள்ளையை மறைக்கத்தான், இவங்களை ஒழிச்சாலே லாபமும் கிடைக்கும், மைலேஜும் கிடைக்கும்” என்று ‘நமது இலக்கு 5 KMPL’ என்கிற ஏமாற்று முழகத்திற்கு பின்னால் உள்ள உண்மையை போட்டு உடைத்தார் மெக்கானிக் முத்து.
“டீசல்ல மட்டும் இல்ல சார், வண்டிகளை வாங்குறதுலயும், விக்கிறதுலயும், ஓடுற வண்டிக்கு ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குறதுலயும் கூட சுருட்டுறானுங்க, வேலைக்கு சேரணும்னா ஒரு ரேட்டு, ரூட்டை மாத்தணும்னா ஒரு ரேட்டு, லீவு வேணும்னா அதுக்கு ஒரு ரேட்டுன்னு இந்த துறை முழுக்கவே அதிகாரிங்களோட கொள்ளை தான் நடக்குது.”

சென்னை நகரில் இருக்கும் ஆயிரக்கணக்கான பேருந்து நிறுத்தங்களில் ஒன்றாவது உங்களுக்கு நிச்சயம் பரிச்சயமுடையதாக இருக்கும். இப்பொழுதெல்லாம் காலை நாலரை மணிக்கும், இரவு பதினோரு மணிக்கும் கூட சென்னையின் பல்வேறு பகுதிகளின் சிக்னல்களில் பச்சை விளக்குக்காக வண்டிகள் காத்திருக்கின்றன.
காலை ஏழு மணி முதல் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும், தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், கூலித் தொழிலாளர்கள், வேலை தேடிச் செல்பவர்கள் என்று பல்வேறு வேலைகளுக்காக பயணிப்பவர்கள் சிறிது சிறிதாக நூற்றுக்கணக்கில் கூடுகிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்து நிற்கும் பேருந்துகள் அனைத்தும், இரண்டாம் உலகப்போரின் போது நிரம்பி வழிந்தபடியே புகையைக் கக்கிக்கொண்டு வரும் ரயிலைப் போல, உள்ளே நுழைய வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் மக்கள் கூட்டம் பிதுங்கி வழிந்தபடி தான் வந்து நிற்கும். இந்த டிப்போல குடிக்கத் தண்ணி கூட இல்லைங்க, இங்க மட்டுமில்ல எனக்குத் தெரிஞ்சு எந்த டெப்போவிலும் இல்ல. வெயில் காலத்துல ஒரு டிரிப்ப முடிச்சிட்டு இறங்கினா, அவ்வளவு தாகம் எடுக்கும், தாகத்தோட வந்தா டெப்போவில் தண்ணியோ, யூரின் போகவோ எந்த வசதியும் இல்லை, இருக்கிற டாய்லெட்டை சுத்தம் பண்ணாம அப்படியே வச்சிருக்காங்க. அந்த பக்கமே போக முடியாதபடி, மலஜலம் வெளியேறி நாற்றம் புடுங்குது. ஆனா ஆபீஸ்ல அதிகாரியா வேலை செய்றவங்களுக்கு மட்டும் எல்லா வசதிகளும் இருக்கு.”

நியூயார்க்கில் பயங்கர வெடிவிபத்து: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்தது

அமெரிக்காவின் நியூயார்க் அருகில் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. கிழக்கு ஹெர்லம் பகுதியின் 114-வது தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று காலையில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. குண்டு வெடித்ததாக நினைத்து பொதுமக்கள் பீதியடைந்து வெளியில் வந்தனர். வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது. சக்திவாய்ந்த வெடிமருந்துகள் வெடித்துச் சிதறியதால் தீப்பிடித்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும், 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சுமார் 150 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடும் புகை எழுந்ததால் மீட்புக்குழுவினர் முக கவசம் அணிந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்ததையடுத்து, அருகில் உள்ள மெட்ரோ ரெயில் பாதையில் ரெயில்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.maalaimalar

ஜெயலலிதாவின் ஊழல்களை மறந்தும் கண்டு கொள்ளாத ஆம் ஆத்மி ஆ.ராசா, கனிமொழி மீது மட்டும் காய்ச்சல் ஏன் ? CASTE , CLASS !

சென்னை: முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர்கள் ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரை எதிர்த்து தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண்குமார் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் தமிழக வேட்பாளர்களின் பட்டியல் வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை வெளியிடப்படும். ஊழலில் மூழ்கிய வேட்பாளர்களை எதிர்த்து எல்லா இடங்களிலும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதி மாறன் ஆகியோரை எதிர்த்து நிச்சயமாக வேட்பாளர்களை நிறுத்துவோம்' என்று தெரிவித்தார். உதயகுமாருக்கு வாய்ப்பு உங்கள் கட்சியில் சேர்ந்திருக்கும் உதயகுமார் மீது ஏராளமான வழக்குகள் உள்ள நிலையில் அவருக்கும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டேவிட் பருண்குமார், 'அவர் கைது செய்யப்பட்டாலும் சிறையில் இருந்தபடியே வேட்பு மனுவினை தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிடுவார்' என்று கூறினார். பெரிய நேர்மையாளன் புரட்சி வாதி என்று நடிக்கும் இந்த அரவிந்த் கேஜ்ரிவால் நிச்சயமாக ஒரு ஜமுக்காளத்தில் வடிகட்டின சந்தர்ப்பவாதி.
தப்பி தவறிக்கூட இவன் ஜெயலலிதாவின் ஊழல்களை பற்றி பேசியதே இல்லை.

ஊழல் ஊழல் என்று கோஷம் இடும் எவனும் ஜெயலலிதாவை மறக்கவே முடியாது, 
இந்திய சரித்திரத்தில் ஜெயலலிதா அளவு அதிகார துஷ்பிரயோகம் ஊழல் முதலைமச்சர் யாரும் இருந்ததில்லை .
டாம்பீகம் நாட்டு நலனை புறந்தள்ளி மாற்றுகட்சி கொண்டுவந்த நல்ல திட்டங்களை எல்லாம் கூசாமல் கிடப்பில் போட்டு அரசு கஜானாவை  தெருவில் அள்ளிவீசும் ஊதாரித்தனம் போன்றவற்றில் அகில இந்திய சாதனை படைத்தது கொண்டிருக்கும் ஒரு அய்யங்கார் பெண்மணிக்கு  எப்பொழுதும் சாமரம் வீசும் மீடியாக்கள், இதர மேல்தட்டு பிரமுகர்கள் !
tamil.oneindia.in 

பாஜகவின் நமோ டீக்கு தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி- இலவச டீ லஞ்சத்திற்குச் சமம் என்று எச்சரிக்கை!


டெல்லி: பாஜகவினரின் நமோ டீ விற்பனைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து விட்டது. இலவசமாக எதையும் வாக்காளர்களுக்கு தரக் கூடாது என்றும் அது எச்சரித்துள்ளது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் மிகக் குறைந்த விலைக்கு இந்த டீ விற்பனையை அவர்கள் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆணையம் அதிரடி- இலவச டீ லஞ்சத்திற்குச் சமம் என்று எச்சரிக்கை! டீ விற்றவர் மோடி என்று காங்கிரஸார் பிரசாரம் செய்யப் போக அதையே தனக்கு சாதகமாக்கி நமோ டீ ஸ்டால் என்ற பெயரில் நாடு முழுவதும் டீக்கடைகளை நிறுவி இலவசமாக டீ விநியோகித்து வருகிறார்கள் பாஜகவினர். மோடி கூட்டம் நடக்கும் இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்த நமோ டீஸ்டால்களைத் திறந்து இலவசமாக டீ விநியோகித்து வருகின்றனர்.

Cambodia தமிழர்கள் நிர்மாணித்த கெமர் பேரரசு !

)

‘இமயமலை குத்தகைக்கு’ நேபாள அரசு முடிவு

காத்மாண்டு:இமயமலை சிகரங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சிகரங்களை குத்தகைக்கு விட நேபாள அரசு முடிவு செய்துள்ளது.இமயமலையில் ஆண்டுதோறும் மலையேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றில் பெரும்பாலான உயரமான மலை சிகரங்கள் நேபாள நாட்டின் எல்லைக்குள் அமைந்துள்ளன. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகளை நேபாள அரசு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. நேபாளத்தின் வருவாயை பெருக்குவதற்காகவும், சுற்றுலா பயணிகளை கவருவதற்காகவும் நேபாள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 326 சிகரங்கள் மலையேறுபவர்களுக்காக திறந்து விடப்பட்டு உள்ளன.

ராஜ்யசபா பதவிக்காக காங்கிரசை உடைக்க முயன்று தோற்றுப்போன ஜி.கே.வாசன்


சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருக்கும் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தனிக் கட்சி தொடங்குவது குறித்து தமது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக உரிமைப் பிரச்சனைகளில் மத்திய அரசை விமர்சித்து வருபவர் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன். ஆனால் காங்கிரஸ் மேலிடம் தம்மை புறக்கணிப்பதாலேயே இந்த அஸ்திரங்களை ஜி.கே.வாசன் நீண்டகாலமாக வீசி வருகிறார் என்றே கூறப்பட்டு வருகிறது.  ராஜ்யசபா எம்.பி. பதவியை வேறு மாநிலத்தில் இருந்து தருமாறு ஜி.கே.வாசன் கேட்க, ராகுல் காந்தியோ லோக்சபா தேர்தலில் நின்று ஜெயித்து வாருங்கள் சொல்லியிருக்கிறார். இதில் கடும் காட்டமான ஜி.கே.வாசன் அன்று முதல் காங்கிரஸ் தலைமையை மிகக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். தனிக்கட்சிக்கு திராணியில்லை.. ஆனால் தமது அப்பா ஜி.கே. மூப்பனாரைப் போல தமிழ் மாநில காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை மீண்டும் தொடங்க திராணியில்லாமல் பயந்து கொண்டே காங்கிரஸுக்குள் கலகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.பின்னர் கடைசியாக நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் எப்படியாவது போட்டியிடுவது என்று கடைசி நேரத்தில் பெரும் போராட்டமே நடத்தினார் ஜி.கே.வாசன். ஆனால் எந்த கட்சியும் வாசனை ஆதரிக்க முன்வரவில்லை.

மலேசிய விமானம் மலாக்கா பகுதியில் மாயமாகவில்லை: குழப்பும் மலேசிய விமானப்படை!


கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம், சீனா செல்லாமல் வழி மாறி மலாக்கா வழியில் கடைசியாக தென்பட்டது என்றத் தகவலை மலேசிய விமானப் படை அதிகாரி மறுத்துள்ளார். கடந்த வாரம் 7ம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் மாயமானது. தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோதுதான் இந்த விமானம் ரேடார் தொடர்பை இழந்தது என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. அடுத்து இந்த விமானம், ரேடார் திரையில் இருந்து மறைவதற்கு முன்பாக பீஜிங் செல்வதற்கான திட்டமிட்ட பாதையிலிருந்து விலகி, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியதற்கான சுவடுகள் ரேடாரில் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியானது. அதன் தொடர்ச்சியாக, ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக அந்த விமானம், மலேசியாவின் கிழக்கு கடலோர நகரான கொட்டா பாருவுக்கும், வியட்நாமின் தெற்கு முனைக்கும் இடையே 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்ததாக தகவல்கள் வெளியாகின.

கிரீமியா சுதந்திரம் அடைந்ததாக அறிவிப்பு

சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. இங்குள்ள கிரீமியா தீபகற்ப பகுதி ரஷியாவை ஒட்டியுள்ளது. இங்கு வாழ்பவர்களில் 65 சதவீதம் பேர் ரஷியர்கள். இப்பகுதி தன்னாட்சி உரிமை பெற்றது.
அவர்கள் ரஷியாவுக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். சமீபத்தில் உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கிரீமியா பகுதியை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்தது. அதற்கு கிரீமியா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போது அங்குள்ள பாராளுமன்ற கட்டிடம், மற்றும் அரசு அலுவலகங்களில் ரஷிய தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது. ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. அதை ரஷியா கண்டு கொள்ளவில்லை.