சனி, 11 நவம்பர், 2017

ஸ்டாலினை சுற்றி ஒரு ஜால்ரா கூட்டம் ? தொண்டர்கள் புலம்பல்....

நக்கீரன்: சுற்றியிருக்கிற பலரும் தளபதியோட மனசுக்குப் பிடிச்சதை மட்டும் சொல்லி, தங்களோட காரியத்தைச் சாதிச்சிக்கிறாங்களே தவிர, கட்சியோட உண்மையான நிலவரத்தையோ, கட்சிக்காரங்களோட நிலைமையையோ சொல்றதேயில்லை. சொன்னால், கோபத்துக்கு ஆளாகி, கிடைக்கவேண்டிய எதிர்கால வாய்ப்புகள் பறிபோயிடுமோங்கிற பயமும் சில பேருக்கு இருக்குது. இதுதான் தலைமையோட நிலவரம்'' என்கிறார்கள் மாவட்ட -ஒன்றிய -நகர தி.மு.க. நிர்வாகிகள் பலரும்.
2 மீண்டும் ஒரு "நமக்கு நாமே' டைப் பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கப்போகிறார் என்றதுமே ஷாக் ஆன தி.மு.க. நிர்வாகிகள், அது தள்ளிவைக்கப்பட்டதால் கொஞ்சம் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.
 கட்சிப் பொறுப்புல இருக்கோம்ங்கிறதுக்காக கடந்த 6 வருடமா எதிர்க்கட்சியா இருந்துக்கிட்டு ஆளுங்கட்சி லெவலுக்கு செலவு செய்துக்கிட்டிருக்கோம். ஆட்சியில தி.மு.க. இருந்தப்ப சம்பாதிச்ச பலபேரு அதை பாதுகாப்பா சேமிச்சிட்டு, ஒதுங்கி நிக்கிறாங்க.

களைவு ,,, லக்ஷ்மி நடித்த மற்றொரு குறும்படம்


Veera Kumar Oneindia Tamil அந்த குறும்படத்திற்கே ஷாக் ஆகுறீங்களே...வீடியோ சென்னை: 'லக்‌ஷ்மி' என்ற குறும்படம் சமூக வலைத்தளங்களில் மக்களால் பெருமளவுக்கு விவாதத்தை கிளப்பியிருந்தது.இதில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த லட்சுமி ப்ரியாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவரது குடும்ப பாங்கான கேரக்டர், பிற ஆடவன் புகழும்போது முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன் போன்றவை இவரை ஒரு தேர்ந்த நடிகையாக வெளிக்காட்டியுள்ளது. இந்த குறும்படத்தில் லட்சுமி போல்ட்டான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். கடும் விமர்சனங்கள் வரும் என தெரிந்தே எடுக்கப்பட்ட இந்த குறும்படத்தில் லட்சுமியை விட்டால் வேறு நடிகை நடித்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான். வேறு ஆடவனுடன் உறவு வைப்பதோடு, அதை தொடரப்போவதாக கணவனிடம் மறைமுகமாக சொல்லி அந்த குறும்படம் நிறைவு செய்யப்பட்டது.
அவரது கணவருடன் உடலுறவு செய்யும் காட்சிகளை தயக்கமின்றி இவர் செய்திருந்தார். அப்போதும் முகத்தில் பல எக்ஷ்பிரஷன்ஸ்களை அவர் காட்டியிருந்தார். இதுபோன்ற காட்சி குறும்படத்தில் இடம் பெற்றது மிகப்பெரிய கட்டுடைத்தலாக வர்ணிக்கப்படுகிறது.

வீரமணி :பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளில் வெளி மாநிலத்தவர் நுழைந்தது எப்படி?


நக்கீரன் :தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக்குகளுக்கான விரிவுரையாளர்கள் பணிகளில் பிற மாநிலத்தவர்கள் இடம் பிடித்தது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:’’தமிழ்நாட்டில் பாலிடெக்னிக்களில்  விரிவுரையாளர் பணிகளுக்கான 1058 பணியிடங்களுக்கு விளம்பரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 28.7.2017 அன்று வெளியிடப்பட்டது. அதற்கான எழுத்துத் தேர்வும் 16.9.2017 அன்று நடைபெற்றது. இப்பொழுது அதுபற்றிய முடிவுகள் வெளிவந்துள்ளன. (7.11.2017)இதில் அதிர்ச்சிக்குரிய தகவல் என்னவென்றால் வெளி மாநிலத்தவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இடங்களைப் பிடித்துள்ளனர் என்பதுதான்.பொதுப் போட்டிப் பிரிவில் (General Turn) இது நடந்திருக்கிறது. இது மத்திய அரசின் வேலை வாய்ப்பல்ல, தமிழ்நாடு அரசின் பணி நியமனம். இதில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பிற மாநிலத்தவர் ஆதிக்கம் எவ்வாறு நிகழ்ந்தது?
தமிழ்நாட்டில் உரிய கல்வித் தகுதியுடன் ஏராள மான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், அவர்களின் பணி வாய்ப் பினைப் பறித்து, பிற மாநிலத்தவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு என்பது தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் மாபெரும் அநீதி அல்லவா?

1000 கோடிக்கு மேல் பெறுமதியான ஜாஸ் சினிமாஸ் How விவேக் கைக்கு சென்றது? ... எல்லாம் ஜெயா & சசி பறிச்சதுதாய்ன்!

வெப்துனியா :சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 180-க்கும் மேற்பட்ட இடங்களில் 1800-க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை நடத்தினர். சமீபத்தில் நடந்த ரெய்டுகளிலேயே இது தான் மிகப்பெரியது என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்த சோதனையில் ஜெயா டிவி அலுவலகம், கொடநாடு எஸ்டேட் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை ஆகியனையும் மிஞ்சவில்லை. இந்நிலையில், இளவரசியின் மகன் விவேக்குக்கு சொந்தமான வேலச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் பற்றி வருமான வரித்துறையினர் குடைச்சல் கொடுக்க துவங்கியுள்ளனராம். 2015 ஆம் ஆண்டு வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கையகப்படுத்தியது.
அந்த தியேட்டர்களை ரூ.1000 கோடிக்கு இளவரசியின் மகன் விவேக் விலைக்கு வாங்கினார் என அப்போதே குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தியேட்டர்களை விலைக்கு வாங்கவில்லை, 5 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்துள்ளதாக பதில் அறிக்கை விடப்பட்டது. இது மட்டுமின்றி விவேக் கட்டுப்பாட்டில் மொத்தம் 136 தியேட்டர்கள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து ஜாஸ் சினிமா தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்க ரூ.1000 கோடி பணம் எப்படி வந்தது என விவேக்கிடம் சரமாரியாக கேள்வி கேட்கப்பட்டதாம்.

வழக்கறிஞர் செம்மணி தாக்குதல்: காவல்துறையினர் 6 பேர் பதவி இடைநீக்கம் !

வழக்கறிஞர் செம்மணிவிகடன் :பி.ஆண்டனிராஜ் நெல்லை மாவட்டம்,;வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீதான தாக்குதல் காரணமாக பணகுடி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் மாறன்குளம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செம்மணியை நவம்பர் 3-ம் தேதி பணகுடி போலீஸார் அத்துமீறி வீட்டில் இருந்து தூக்கிச் சென்று அடித்து உதைத்து காலை உடைத்தனர். இதற்கு நெல்லை மாவட்ட வழக்கறிஞர் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். போராட்டங்களும் வலுத்து வருகின்றன.
நெல்லையில் 12-ம் தேதி நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாகவும் வழக்கறிஞர்கள் அறிவித்து பரபரப்பை கிளப்பினார்கள்.

சசிகலாவால் எடுக்கப்பட்ட ஜெ., சிகிச்சை வீடியோ, விசாரணை ஆணையத்திடம் வழங்கப்படும்! - தினகரன் பேட்டி

விகடன் :டி.டி.வி தினகரன், திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, “நான் காந்தி பேரனும் இல்லை; கோட்சேவின் வழித்தோன்றலும் இல்லை. கற்களை வைரமாக நினைத்தால், நான் பொறுப்பல்ல. எனது வீட்டில் பாதாள அறையும் இல்லை. வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததற்கான ஆதாரங்களும் இல்லை. வெறும் 3 மணி நேரத்தில் முடியவேண்டிய சோதனை, 3 நாள்களாகத் தொடர்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ, விசாரணை ஆணையத்திடம் வழங்கப்படும். வீடியோவை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அது ஒப்படைக்கப்படும்” என்றார்.

BBC பிலிப்பைன்ஸ் அதிபர் : ஒருவரை கத்தியால் குத்தி கொன்றேன்" - Philippines' President Duterte: I killed when I was 16. ... (CNN)T

தான் இளைஞராக இருந்தபோது ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே கூறியுள்ளார். "எனக்கு பதினாறு வயதிருக்குபோது யாரோ ஒருவரை கொன்றேன்," என்று வியட்நாமின் நகரமான டா நாங்கில் நடைபெற்ற ஒரு பிராந்திய மாநாட்டின்போது அவர் தெரிவித்தார். டுடெர்டே "வேடிக்கையாகவே" அவ்வாறு பேசியதாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக, டாவோ மேயராக இருந்தபோது சந்தேகத்திற்குறிய குற்றவாளிகளை தானே கொன்றதாக டுடேர்டே தெரிவித்திருந்தார். ' பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே, மற்ற பிராந்திய தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ளார். டுடெர்டே பிலிப்பைன்ஸில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவர்களை நீதிக்கு புறம்பாக கொல்லப்பட்டதை ஊக்குவித்தார்.

18 சதவீத ஜி.எஸ்.டியை ரத்து செய்யாவிடில் தீப்பெட்டி தயாரிப்பு ஆலைகளை மூட முடிவு


மாலைமலர் : தீப்பெட்டி மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யாவிட்டால் தீப்பெட்டி தயாரிப்பு ஆலைகளை மூட முடிவு செய்துள்ளோம் என உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை: கடந்த ஜூலை மாதம் முதல் தேதி நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின்படி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான வணிகர்கள் மற்றும் மக்களிடையே இந்த வரிவிதிப்பு முறை அதிருப்தியை ஏற்படுத்தியது. அவசர கதியில் கொண்டு வரப்பட்ட வரி விதிப்பு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

குமரி அனந்தன் அரசு மருத்துவமனையில்

Yuvan Swang : அடடா அவர் எவ்வளவு பெரிய அரசியல்வாதி,மகள்,மருமகன்,பேரன்,பேத்தி எல்லாம் டாக்டர்கள்.இருந்தும் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற அரசு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறாரே! அவருக்கா இந்த அவலம்,அவர் மகள் தமிழிசைக்கு மனிதநேயம் இல்லையா போன்ற புலம்பல்கள்.....
சிம்பிளாக சொல்லி விட்டார் குமரி அனந்தன்.என்னைப் போன்ற அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் சாமான்ய மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை பிறக்கும்.அரசு மருத்துவர்கள் அக்கறையுடன் மருத்துவம் பார்க்கிறார்கள் என்று.
உண்மைதானே, முக்கியஸ்தர்கள் எல்லாம் அரசு மருத்துவமனையை நாடினால் பொதுமக்களுக்கும் நம்பிக்கை பிறக்கும்தானே,அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் எல்லாம் பொது மருத்துவமனைக்கு வரக்கூடாது என்கிற நம் பொதுபுத்தி மாற வேண்டும்.

திமுக அதிமுக வாக்குகள் கமலுக்கும் ரஜினிக்குமாம் ..அப்ப சீமான்?

Veera Kumar- Oneindia Tamil : சென்னை: அதிமுக வாக்குகளை ரஜினியும், திமுக வாக்கு வங்கியை கமலும் சூறையாடும் திட்டத்தோடு இருவரும் அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருங்காலத்தில் அரசியலில் ரஜினி vs கமல் என்ற சூழ்நிலையை உருவாக்க இருவருமே முடிவு செய்துவிட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. கமல் தான் கட்சி துவங்க உள்ளதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ஜனவரிக்கு பிறகு முழு வீச்சில் அரசியலில் அவர் இறங்குவார் என தெரிகிறது. கமல் அடிமட்ட அளவில் அரசியல் ஆயத்த வேலைகளை ஆரம்பித்துவிட்டார். மக்கள் பிரச்சினைகளை கேட்பது, மக்களின் பிரச்சினைகளை அறிவதற்காக ஆப் தொடங்குவது என்று அவர் அடிப்படையை பலமாக மாற்றிக்கொண்டுள்ளார். மேலும், பினராயி விஜயன், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி என பாஜக இந்துத்துவா குறித்து கடும் கண்டனத்தை அவர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்து தீவிரவாதிகளும் உருவாகியுள்ளதாக கமல் தெரிவித்த கருத்து அவரை இடதுசாரி ஆதரவாளராக மக்களிடம் முன்னிருத்தியுள்ளது.

மேலும் திராவிடம் என்பது தொடர்ந்து நீடிக்கும் கருத்தாக்கம் என கமல் கூறியுள்ளார். இந்த கருத்துக்கள் அனைத்துமே, திமுகவின் அடிப்படை கொள்கைகளோடு தொடர்புள்ளது. கருணாநிதி உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் திமுக வாக்கு வங்கியை தனது பக்கம் திருப்ப கமலின் இந்த கருத்துக்கள் பெரிதாக உதவியுள்ளன.

ஏமன் மீது சவூதி அரேபியா போர் ,,, ஆயுத வியாபாரிகள் காட்டில் மழை

Chinniah Kasi : ஆயுத வியாபாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரியாத், நவ.10 -
ஏமன் மீது சவூதி அரேபியா நடத்தி வரும் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் ஆயுத வியாபாரத்தில் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளனர். ஏமன் நாட்டில் அந்நாட்டு ஜனாதிபதி அப்ரப்பு ஹாதிக்கு எதிராகக் கலகம்நடைபெற்றது. கலகக்காரர் களின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாத அவர் சவூதிஅரேபியாவுக்கு ஓடிப்போய் அங்கு தஞ்சமடைந்தார். அவர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு செல்லப் பிள்ளை யாக இருந்து வந்ததால், கலகக்காரர்களைத் தாக்கி அவர்கள் பிடியிலிருந்து ஏமனை மீட்குமாறு சவூதி அரேபியாவைத் தூண்டிவிட்டனர். தங்கள் படைகளையும் அனுப்பி வைப்பதாக உறுதியளித்த அமெரிக்கா, தாக்கு தலுக்கான ஒட்டுமொத்த செலவை சவூதி அரேபியா வின் தலையில் ஏற்றியது. மேலும், இந்தப் போரை ஆயுத ஏற்றுமதிக்கும் பயன்படுத்திக் கொண்டி ருக்கிறது.

மோடியின் மலையாள ஜிமிக்கி கம்மல் பாட்டு விடியோ


பணமதிப்பழிப்பின் முதலாமாண்டு துயரத்தை பகடி செய்து ஜிமிக்கி கம்மல் மெட்டில் ஒரு மலையாளப் பாடல் வெளியாகியுள்ளது…. பாருங்கள்…
மோடி அரசு மாட்டுக்கறிக்கு தடை விதித்த போது அதை எதிர்த்து ட்விட்டரில் கேரள மக்கள் இது எங்கள் கேரளா “போ மகனே மோடி” (#PooMoneModi) என்ற வார்த்தையை வைரலாக்கி பாஜக-வை அலறவைத்தனர்.
பார்ப்பனியத்தற்கு எதிரான திராவிட நாடு ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் வைரலாக்கினர். அந்த வரிசையில் மோடி அறிவித்த பணமதிப்பழிப்பின்  துயரத்தை பகடி செய்து, ஜிமிக்கி கம்மல் மெட்டில் ஒரு மலையாளப் பாடல் வெளியாகியுள்ளது. ஜிமிக்கி கம்மல் எனும் மலையாளத் திரைப்படப் பாட்டு யூடியூபில் வைராலாகி பலரும் அதற்கு நடனமாடி வீடியோ வெளியிடுகின்றனர்.

4 லட்சம் வாகனங்கள் பறிமுதல்! காற்று மாசு காரணம் ..

மின்னம்பலம் : டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமாக நான்கு லட்சம் பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதம் கொண்டாடிய தீபாவளி பண்டிகையால் டெல்லியின் இயல்பு நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. காற்று மாசுபாட்டால் ஒரு மாத காலமாக திணறிக்கொண்டிருக்கிறது டெல்லி. புகை மூட்டம் அதிகமாகக் காணப்படுவதால் அங்குள்ள மக்களுக்கு ஆஸ்துமா, சுவாச கோளாறு போன்ற நோய்கள் ஏற்படுகிறது. இதில் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனி மூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுவதால் அங்கு புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் 201 பேர் கைது! ஊழலாம் .. கோட்டைக்குள் பதவி போட்டி ...


சவுதியில்  ஊழல்: 201 பேர் கைது!மின்னம்பலம் :சவுதியில் மேலும் 12 பேர் 100 பில்லியன் டாலர் வரையில் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் அண்மையில் அந்நாட்டின் அதிகாரம் மிக்க இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிதாக ஊழல் தடுப்பு கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு அமைக்கப்பட்ட சில மணி நேரங்களில் அதிரடியாகச் செயல்படத் தொடங்கியது. முதல் நாளிலேயே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையதாகக் கூறி அந்நாட்டின் 11 இளவரசர்கள், 4 அமைச்சர்கள் மற்றும் 12 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரை கைது செய்தது. இதில் உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான இளவரசர் அல்வாலிடு பின் தலாலும் ஒருவராவார்.

அறம் ,, முதல் பார்வை ... விமர்சனம்


tamilthehindu : விவசாயக் கூலியான ராமச்சந்திரன் துரைராஜ் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் கிராமத்துவாசி. மகன் விக்னேஷுக்கு நீச்சலில் சாதிக்க ஆசை. முன்னாள் கபடி வீரரான ராமச்சந்திரன் படித்தால் சம்பாதிக்கிறோமோ இல்லையோ, மரியாதையாவது கிடைக்கும் என்று அறிவுரை சொல்கிறார். பொருளாதாரப் பிரச்சினை வாட்டி எடுக்கும் சூழலிலும் பாசமும், அன்பும் இவர்கள் வாழ்க்கையை அழகாக்குகிறது. இந்த சூழலில் ராமச்சந்திரனின் மனைவி சுனுலக்‌ஷ்மி தன் நான்கு வயது மகளுடன் முள்ளு மரம் வெட்டச் செல்கிறார். அந்தப் பகுதியில் இருக்கும் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் சிறுமி மகாலட்சுமி எதிர்பாராவிதமாக விழுந்துவிடுகிறார்.
உயிரோட்டமான கதைக்களத்தில் உணர்வுபூர்வமான காட்சிகள் மூலம் தரமான சினிமாவைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். இவரின் வரவால் தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆரோக்கியமான முயற்சிகள் தொடரும் என்று தாராளமாக நம்பலாம்.

தினகரன் தரப்புக்கு கசிந்தது ரெய்டு ரகசியம்!

தினமலர் : சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மொத்தம் 187 இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் தலைமை செயலர், ராமமோகன் ராவ் வீட்டில் சோதனைக்கு போன போது, மத்திய படையுடன் சென்ற வரித்துறையினர், தமிழகம் முழுவதும், சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களது நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்கு, போலீஸ் பாதுகாப்பை தான் நாடினர். மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழ்நாடு முழுவதும் நடக்கும் சோதனைக்கு, தேவையான மத்திய வீரர்களை பெறுவதற்கு, கால அவகாசம் கிடைக்காததால், தமிழக போலீசாரின் உதவியை நாடினர்.

தீக்கதிர் முன்னாள் பொறுப்பாசிரியர் அகத்தியலிங்கத்திற்கு facbook பதிவுக்காக காவல்துறை சம்மன்

நக்கீரன் :தீக்கதிர் முன்னாள்பொறுப்பாசிரியர் சு.பொ.அகத்தியலிங்கம்  கடந்த செப்டம்பர் 13ம் தேதி அன்று தனது முகநூலில், ‘’நீதிபதி கிருபாகரன் யாருடைய ஊதுகுழல்? நிச்சயம் நீதியின் குரல் அல்ல..’’ என்று பதிவிட்டிருந்தார்.  இதையடுத்து, நீதிபதி கிருபாகரனை விமர்சித்ததற்காக அகத்தியலிங்கத்திற்கு சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆய்வாளர் அன்பரசன் பெயரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அந்த நோட்டீசில், ‘’சு.பொ.அகத்தியலிங்கம் என்ற பெயரில் உள்ள முகநூல் கணக்கில் நீதித்துறையை பற்றி விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. நீதித்துறையையும், நீதிபதிகளையும் விமர்சிப்பது சட்டப்படி குற்றமாகும். ஆகவே, இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்றவுடன் விளக்கத்தை இரண்டு நாட்களில் நேரில் தெரிவிக்க வேண்டும்.‘’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.<>அந்த நோட்டீசில் அக்டோபர் 17ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால், நம்பவர் 10ம் தேதியான இன்றுதான் அகத்திலியங்கத்திடம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஜெ.பி.;
நக்கீரன்

திவாகரன் தினகரன்,விவேக்,பாஸ்கரன் மற்றும் ஏராளமானோர் கூண்டோடு கைது செய்யப்படுவர்?

நக்கீரன் : டிடிவி தினகரன் மற்றும் அவரது
குடும்பத்தினரை குறிவைத்து வியாழக்கிழமை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. நேற்று வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய சசிகலா தரப்பினர், இன்று யாரும் எதிர்ப்பு தெரிவித்து எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை.அதற்கு காரணம் சசிகலா, இளவரசி, சுதாகரன், தினகரன் மனைவி அணுராதா, கார்த்திக்கேயன், சிவக்குமார், பூங்குன்றம், விவேக், திவாகரன் என விரிவில் சசிகலா உறவில் உள்ள கம்பெனிகளில் ஆயிரக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
;உதாரணமாக திவாகரனுக்கு சொந்தமான செங்கமலதாயார் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் ரூபாய் 25 லட்சம், 6 ரோலக்ஸ் வாட்சுகள், தங்கம், வைரம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. பெண்கள் விடுதியில் யாரும் சோதனை செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த விடுதியில் திவாகரன் ஒளித்து வைத்திருந்த தங்கமும், வைரமும் மாட்டியுள்ளது.

ஜெ ,வுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டது உண்மை கார் ஓட்டுனர் விடியோ பேட்டி

livenewstamil.com :ஜெயலலிதாவை கொன்றது யார்?..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே தமிழச்சி என்பவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வந்தார்.
அவர் தற்போது தனது முகநூலில் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.அவர் தெரிவித்துள்ள தகவல் பின்வருமாறு… "அக்டோபர் 1 முதல் சசிகலா, ஜெயலலிதாவை பார்க்கவில்லை" - #தினகரன்
"ஜெயலலிதா, இட்லி சாப்பிடவில்லை. பொய் சொன்னதற்கு மன்னித்து விடுங்கள்." - #அமைச்சர்திண்டுக்கல்சீனிவாசன்
மேற்குறிப்பிட்ட இரு செய்திகளும் ஒரே நாளில் பத்திரிகைகளில் வந்தவை.
"ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எங்கள் யாரையும் சசிகலா குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் கூட்டாக அப்போது சொல்லியது பொய்" என்கிறார்  #திண்டுக்கல்_சீனிவாசன்.
தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக சசிகலா குடும்பத்தினரை புறக்கணிக்க வேண்டும். ஜெயலலிதா படுகொலைக்கு முழு பொறுப்பும் சசிகலா குடும்பத்தினர் மீதே விழ வேண்டும் என்பதற்காக ஏவப்பட்ட ஒரு அம்பு திண்டுக்கல் சீனிவாசன்.

அசைவம் உண்பவர்கள்,புகை பிடிப்பவர்களுக்கு இனி தங்க பதக்கம் கிடையாது .. புனே பல்கலைக்கழகம்

அசைவம் சாப்பிடக்கூடாது tamiloneindia -Kalai Mathi: புனே: அசைவம் சாப்பிடாதவர்கள், மது அருந்தாதவர்களுக்கே 'கோல்டு மெடல்' வழங்கப்படும் என புனே பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
புகழ்பெற்ற புனே பல்கலைக்கழகம் 1949 ஆம் தொடங்கப்பட்டது. 411 ஏக்கர் பரப்பளவில் இந்த பல்கலைக்கழகம் பரந்து விரிந்துள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கோல்ட் மெடல்களை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.அதன்படி கோல்டு மெடல் பெற விரும்பும் மாணவர்கள் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் போதாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள்

பண்ணை வீட்டில் ரகசிய பாதாள அறைகள்... சாணி, உரம்னு தினகரன் சகட்டுமேனிக்கு உளறியது

Mathi - Oneindia Tamil : பண்ணை வீட்டில் ரகசிய
பாதாள அறைகள்....சாணி, உரம் இருந்ததா?- வீடியோ புதுவை: புதுவை பண்ணை வீட்டில் ரகசிய பாதாள அறைகள் இருந்ததால்தான் அங்கே போனால் சாணிதான் கிடைக்கும்.. உரம்தான் கிடைக்கும்... ஏதாவது வைத்துவிட்டு பழிபோடுவார்கள் என சகட்டுமேனிக்கு செய்தியாளர்களிடம் தினகரன் உளறினாரா? என்கிற கேஎள்வி எழுந்துள்ளது.
தினகரனின் சென்னை வீடு தவிர, சசிகலா சிறைவாசம் அனுபவிக்கும் பரப்பன அக்ரகார சிறையைத் தவிர அந்த குடும்பத்தின் அத்தனை உறவினர்களையும் பினாமிகளையும் ஒரே நாளில் அமுக்கிவிட்டது வருமானத்துறை. 190 இடங்களில் 2,000 அதிகாரிகளைக் கொண்டு சசிகலா குடும்பத்தினரை வளைத்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது வருமான வரித்துறை. சென்னை தினகரன் வீட்டுக்கு காலையில் ஒரு வருமான வரித்துறை சென்றிருக்கிறார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் வெளியே சென்றுவிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் மிகவும் பதற்றத்துடன் பேசினார் தினகரன்.

கனிமொழி : கடலைப் பொட்டலம் கட்டப்ட்ட காகிதத்தைக்கூட படிப்பார் அப்பா!


tamilthehindu : தலைவருக்கும் மறைந்த மாறன் மாமாவுக்கும் நடைபெற்ற வாக்குவாதங்கள், சிறு மோதல்கள் கட்சி வட்டாரங்களில் பிரசித்தி பெற்றவை. எப்போதும் தனக்குச் சரி என்று பட்டதை எவ்வித வெளிப்பூச்சும் இல்லாமல் பேசக் கூடியவர் மாறன். சில நேரங்களில் இருவருக்கும் இடையிலான உரசல் கொஞ்சம் பெரிதாகி, அவர் கோபித்துக்கொண்டு போகும் அளவும் போய்விடும். என்றாலும், சில மணி நேரங்களில் அந்த ஊடல் சரியாகி இருவரும் சமாதானமாகிவிடுவார்கள்.
ஒருநாள் அப்படிப்பட்ட ஒரு விவாதத்தின் முடிவில், மாறன் கோபித்துக்கொண்டு விடுவிடு என்று மாடியில் இருந்து இறங்கி கீழே வந்தார். வெளியில் நின்றுகொண்டு இருந்த என்னிடம் “உங்க அப்பாகிட்ட சொல்லு… எல்லா நேரத்துலேயும் அரசியல்வாதியாவே இருக்கக் கூடாதுன்னு” என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறிப் போய் விட்டர். தலைவர் என்னை அழைத்தார். “என்ன சொன்னான் உன் பெரிய அத்தான்?” என்றார். அவர் சொன்னதைத் தலைவரிடம் சொன்னபோது, அவர் முகத்தில் ஒரு புன்னகை ஓடியது. திரும்பிவிட்டார்.

ரெயிடுக்கு 200 கார்களை பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொடுத்தார்... தெரியாமல் கொடுத்தாராம் ,,,, நம்புறோம் சாமி!

வெப்துனியா :நேற்று சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்களின் 187 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது தெரிந்ததே. இந்த ரெய்டுக்கு கார்களை அனுப்பிய நிறுவனம் ஃபாஸ்ட் டிராக் நிறுவனம். ஆனால் இவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்றும், ஓபிஎஸ் கட்டளையிட்டதன் பேரிலேயே கார்கள் அனுப்பப்பட்டதாகவும் தினகரன் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஃபாஸ்ட் டிராக் உரிமையளர் ரெட்சன் அம்பிகாபதி கூறியதாவது: நவம்பர் 9ஆம் தேதி 200 கார்கள் ஒரு திருமணத்திற்கு தேவை என்று முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த கார்கள் ரெய்டுக்கு பயன்படுத்தப்பட்டது என்பது எனக்கே டிவி பார்த்து தான் தெரியும்.. 200 கார்களை கொடுக்கும் எந்த நிறுவனமும் கண்ணை மூடிக்கொண்டு கொடுப்பதில்லை. கார் திருட்டு , உதிரிப்பாகங்கள் திருட்டு போன்ற வற்றை தவிர்ப்பதற்காக மிகவும் தீர்க்கமாக விசாரித்துதான் இவ்வளவு அதிகமான  கார்களை கொடுக்கும் என்று  இத்தொழிலில்  உள்ள ஏனையோர் தெரிவிக்கின்றனர். 

வெள்ளி, 10 நவம்பர், 2017

சத்தீஸ்கார் 8 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்


மாலைமலர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 8 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரக்சிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாநில போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் அடங்கிய பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சிண்டா குபா பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திருவாரூர் ...ONGC நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க முகாமிட்டுள்ளது.

தயவுசெய்து படித்து பரப்புங்கள்.. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சி மாப்பிள்ளை குப்பத்தில் ONGC நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க முகாமிட்டுள்ளது...
இதுக்குறித்து விளக்கம் கேட்க அப்பகுதி இளைஞர்கள் சென்ற போது, ongc நிறுவனத்தின் சைட் இன்சார்ஜ் ராகுல் என்பவர் மாப்பிள்ளை குப்பம் மாரியம்மன் கோவிலில் பேச்சுவார்த்தை நடத்துவோம்னு கூறி நடத்தியும் உள்ளனர்...
அப்பேச்சுவார்த்தைக்கு ongc காவிரி படுகை மண்டல தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி #இராசசேகர் என்பவர் முன்னின்று நடத்தியுள்ளார்... அப்பேச்சுவார்த்தையில் சுமார் 200 பொதுமக்கள் பங்கேற்று தங்களின் சந்தேகங்களை கேட்டுள்ளனர்... மக்களில் ஒரு இருபதுபேரை மட்டும் தனியே அழைத்து விளக்கம் சொல்வதாக ongc கூறியதை மக்கள் ஏற்கவில்லை... மேலும் இது தொடர்பான அரசின் அனுமதிகளின் ஆதாரங்களை மக்கள் கேட்டப்பொழுது ஒரு வாரத்தில் "நன்னிலம் காப்போம்" இயக்கத்திடம் தருவதாகவும் அதுவரை பணிகளை நிறுத்து வைப்பதாகவும் ongc கூறியுள்ளது...

சசிகலா தப்புன்னா.... ஜெயலலிதாவும் தப்பு...! ஜெயலலிதா சரின்னா.... சசிகலாவும் சரி...!

SowmianV : இந்தியாவிலேயே ஆகப் பெரிய ஊழல்வாதியாக ஜெயலலிதா இருந்ருந்திருந்தால் மட்டுமே....
அவரது பினாமியாக இருந்த சசிகலாவின் குடும்பத்த்தினருக்குச் சொந்தமான நூஊஊஊஊத்தித் தொண்ணூறு இடங்களில் ரெய்டு நடத்த முடிகிறது. அப்படிப்பட்ட ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகங்களில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும். அது முடியாது என்றால் சசிகலா குடும்பத்தினர் குற்றமற்றவர்கள் என்று அறிவித்து இந்த ரெய்டு நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு... முடிந்தால் சசிகலாவையும் விடுதலை செய்துவிட வேண்டும்...! அதாவது...
சசிகலா தப்புன்னா.... ஜெயலலிதாவும் தப்பு...!
ஜெயலலிதா சரின்னா.... சசிகலாவும் சரி...!

எடப்பாடி :நானும் பன்னீர்செல்வமும் கட்சி, ஆட்சியை காப்போம்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில்

தேனி அருகே நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை. கட்சியையும், ஆட்சியையும் நானும், துணை முதல்வரும் இரட்டை குழல் துப்பாக்கிபோல் காப்போம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தேனி அருகே போடிநாயக்கனூர் விலக்கில் தனியார் ஆலை மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகித்தார். இதில் எம்.ஜி.ஆர். உருவப் படத்தை திறந்து வைத்தும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் பழனிசாமி பேசியது:

விஜய் சேதுபதி 774 அங்கன்வாடிகளுக்கு தலா 50 ஆயிரம் , 10 செவிப்புலன் அற்றோர் ,,, மொத்தம் 50 லட்சம் உதவி

Vignesh Selvaraj"Oneindia Tamil : சென்னை: நீட் கொடுமைக்கு எதிராக தன் உயிரைக் கொடுத்துப் போராடிய அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்ட கல்வி வளர்ச்சிக்காக ரூ 50 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
அரியலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.38 லட்சத்து 70 ஆயிரமும், தமிழ் நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சமும் வழங்குவதாக அறிவித்தார்... மேலும், 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரமும், அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஹெலன் கெல்லர் என்ற செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தமாக ரூ.49 லட்சத்து 70 ஆயிரம் என இந்தத் தொகையை அரியலூா் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளதாகத் தெரிவித்தார் விஜய் சேதுபதி.

படசுருள் LGBT... தமிழ் சினிமா பத்திரிக்கை வரலாற்றில் ஒதுக்கபட்ட ஒடுக்கபட்ட மக்களுக்காக

Malini Jeevarathnam ; எத்தனேயோ தமிழ் பத்திரிக்கைளில் அரை பக்கத்திலும் 4 வரியிலும் ஏதோ ஒரு மூலையில் அங்கங்கு LGBT பற்றிய கதைகளையும் காதலையும் படிக்கும் போது அந்த நாளே முழுமையாகிவிடும் ... ஆனால் எனக்கு இந்த மாதம் முழுமை பெற்றது ... ஒரு மாத இதழ் முழுக்க முழுக்க ஒடுக்கபட்ட பாலீர்ப்பு மக்களின் காதலின் கண்ணீரின் கொண்டாடத்தின் குரலாய்... படசுருள் LGBT நவம்பர் மாத இதழ் 2017 🙂
ஆக தமிழ் சினிமா பத்திரிக்கை வரலாற்றில் ஒதுக்கபட்ட ஒடுக்கபட்ட மக்களுக்காக ஒதுக்கபட்ட பக்கங்கள் மட்டுமில்லாமல் ஒரு முழுஇதழின் குரலாய் இந்த மாத இதழ் .... மகிழ்ச்சி தோழர் Arun Mo
தோழர் மௌலி ஆர்த்தி வேந்தனின் கடிதங்களாலும் கட்டுரைகளாலும் இன்ன பிற LGBT படங்களை பற்றிய புரிதலாலும் வாசிப்பில் மகிழ்ந்திருக்கிறேன் ...
ஆர்த்தியின் தோளோடு தோள் சேர்த்து கடிதத்தில் மார்க் ஆஸ்டனுக்கு எழுதும் வரிகள் என் தூக்கத்தை கலைத்தன
// அடக்குபவர்களின் வார்த்தைகளை பறித்தே அவர்களுக்கு எதிராக போராடுவது என்பது எவ்வளவு அற்புதமானது //

இரட்டை இலை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்!

இரட்டை இலை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தரப்பிலிருந்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மின்னம்பலம் :அதிமுக சசிகலா, பன்னீர்செல்வம் என இரு அணிகளாகப் பிரிந்தபோது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்தை சொந்தம் கொண்டாடியதால், சின்னம் முடக்கப்பட்டு மாற்றுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி தினகரன் தரப்பைத் தவிர்த்துவிட்டு இரு அணிகள் ஒன்றிணைந்ததைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த அணிகள் தரப்பும், தினகரன் தரப்பும் தங்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னம் வேண்டும் என்று கூறித் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளன.

ஜிஎஸ்டி: 177 பொருட்களின் வரி குறைப்பு!

மின்னம்பலம் :ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டக் கலந்தாய்வின் முடிவில் 177 பொருட்களின் வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் முக்கியக் கூட்டம் இன்று (நவம்பர் 10) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 28 சதவிகித வரி விகிதாச்சாரத்தில் இருந்த 227 பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் சாக்லேட், ஷாம்பூ, சூயிங் கம், குளிர்பானங்கள், மார்பிள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட 50 பொருட்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
"இதுவரை 227 பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முடிவில் அது 50 பொருட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல பொருட்களின் வரி விலக்கு பரிசீலனையில் உள்ளது.

மைத்ரேயன்: அ.தி.மு.க ரெய்டு என்பது அரசியல் நோக்கம் கொண்டது ... மன்னார்குடி சாம்ராஜ்யம் முடிவுக்கு வருகிறது?

எஸ்.கிருபாகரன்சசிகலா
விகடன் :எஸ்.கிருபாகரன்: டெங்கு, மழை என அடுத்தடுத்து தமிழகத்தைப் புரட்டிப்போட்ட சமூகப் பிரச்னைகளை 9-ம் தேதி அதிகாலை முதல் பின்னுக்குத்தள்ளிவிட்டது, வருமான வரித்துறையினர் ரெய்டு.  வருமான வரித்துறை ரெய்டு என்பது தமிழகத்திற்கு புதிதல்ல. ஆனால்,  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தொடர்பான இடங்களில் இரண்டு நாளாகத் தொடரும் ரெய்டு, ஆச்சர்யமும் அதிர்ச்சியுமானது. ஆம்,  2000 அதிகாரிகள் 189 இடங்கள் என்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல; வருமான வரித்துறைக்கும் இதுதான் முதல்முறை என்கிறார்கள். 'தமிழக அரசியலில் கடந்த ஒரு வருடமாக நடந்துவரும் விஷயங்கள், ஒரு பரபரப்பு சினிமாவுக்கே உரிய அம்சங்கள். விறுவிறுப்பான  இந்தப் படத்தின் இறுதிக் காட்சியாகத்தான் இப்போது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் புகுந்திருக்கிறது வருமானவரித்துறை எனக் கூறுகின்றனர். ரெய்டுமூலம் சசிகலா குடும்பத்தினர் மீதான தாக்குதலின் முக்கிய கட்டத்தை பா.ஜ.க எட்டியுள்ளது என்கிறார்கள், அரசியல் நோக்கர்கள்.>சசிகலா குடும்பத்தை ஏன் குறிவைக்கிறது டெல்லி மேலிடம்..? கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் போவோம்....

தினகரன் சகோதரர் வீட்டில் 7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் ! பாஸ்கரன் வீட்டில்

மாலைமலர் :சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை சுமார் 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்னபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம் மற்றும் மன்னார் குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சசிகலா ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டன. சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 1800 அதிகாரிகள் மொத்தமாக இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது./

தமிழிசை : வருமானவரி சோதனைக்கும் அரசியல் முடிச்சு போடுவது தேவையற்றது:

மோடி நிச்சயமாக திமுகவின்  காலை பிடிக்கிறார், 2019 பொதுத்தேர்தல் தோல்வி பயம் பிடித்து ஆட்டுகிறது.  தினகரன் சசிகலா ரெயிடுகள் அரசியல் ரீதியானதுதான் ,, திமுகவுக்கு கொடுக்கப்படும் சிக்னல் என்று அவதானிகள் கருதுகின்றனர் .  தினத்தந்தி : சென்னை, சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் என ஏறக்குறைய 180 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் நேற்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 1800 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்திலும் பிற பகுதிகளிலும் ஒரே நாளில் இவ்வளவு அதிகமாக இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமான வரித்துறை சோதனைக்கு மத்திய அரசு மீது அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் ஐ டி தொழிலாளர்களுக்கு யூனியன்

நிறுவனங்களின் அராஜகம்Prasanna VKo GoodReturns : இந்தியாவில் மற்ற அனைத்துத் துறைகளை விடவும் ஐடி துறையில் ஊழியர்கள் அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், இவர்களது வேலைக்கான உத்திரவாதம் என்பது சற்று குறைவாகவே உள்ளது.
இதனைத் தடுக்கவே தமிழகத்தைத் தொடர்ந்து தற்போது கர்நாடக அரசும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது."ஐடி நிறுவனங்கள் நினைத்தால், எப்போது வேண்டுமானாலும் ஏதாவது காரணத்தைக் கூறி பெரிய அதிகாரிகள் முதல் ஆரம்பக்கட்ட ஊழியர்கள் வரையில் எவ்விதமான ...""நிறுவனங்களின் அராஜகம்" நிறுவனங்களின் அராஜகம் ஐடி நிறுவனங்கள் நினைத்தால், எப்போது வேண்டுமானாலும் ஏதாவது காரணத்தைக் கூறி பெரிய அதிகாரிகள் முதல் ஆரம்பக்கட்ட ஊழியர்கள் வரையில் எவ்விதமான தடையுமின்றி வேலையைவிட்டு அனுப்பும் நிலை நிலவி வருகிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் பிரியன் காலமானார்

NDTV :பிரபல ஒளிப்பதிவாளர் பிரியன் இன்று (நவம்பர் 9-ஆம் தேதி) காலமானார். விருதுநகரில் பிறந்த பிரியன் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவிடம் சில படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பின், 1995-ஆம் ஆண்டு வெளியான ‘தொட்டாச்சிணுங்கி’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இதனையடுத்து ‘பொற்காலம், தெனாலி, வல்லவன்’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் பிரியன். இயக்குநர் ஹரியின் ‘வேங்கை’ தவிர்த்து, மற்ற அனைத்து படங்களுக்கும் பிரியன் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, ஹரி இயக்கி வரும் விக்ரமின் ‘சாமி 2’ படத்தில் பிரியன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். 55 வயதான பிரியனுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பூஜ்யங்களை நூறுகளாக கொண்டாடும் அயோக்கியர்கள்

க.கனகராஜ் : வெற்றி என தம்பட்டம் அடிப்பதற்கு எல்லாவற்றையும் உதிர்த்து விட்ட ஒரு மனோ நிலை தேவை. அது மோடி வகையறாவிற்கு இருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர ஒரு தம்பிடி காசு கருப்பு பணம் கூட அரசின் கஜானாவிற்கு வந்து சேரவில்லை. பூஜ்ஜியங்களை நூறுகளாக கொண்டாடும் மனநிலையை என்னவென்பது.
வழக்கம் போலவே ஆர்.எஸ்.எஸ். -பாஜக பரிவாரத்தின் ‘சாதனைகள்’ என்று போலியான சிலவற்றை பட்டியலிட்டு, நவம்பர் 8அன்று பல பத்திரிகைகளில் முழுப்பக்கம் விளம்பரங்களை கொடுத்திருந்தது மோடி தலைமையிலான பாஜக அரசு. பணமதிப்பு நீக்க துயரங்களை முன்வைத்து நாடுமுழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும், திமுக. காங்கிரஸ், விசிக உள்ளிட்டகட்சிகளும் அமைப்புகளும் நவம்பர் 8 கறுப்பு நாளாககடைபிடித்தனர். போராடினர். இதற்கு போட்டியாக பிடிவாதமும் மூர்க்கத்தனமும் கொண்ட மோடி வகையறாக்கள், ஜனநாயக உணர்வுகளை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், பணமதிப்புநீக்கத்தின் ஓராண்டு நிறைவைகொண்டாடினார்கள். அரசுப்பணத்தில் - ஏழை, எளிய மக்களின் பணத்தில் விளம்பரம் செய்தார்கள். அது அரசு விளம்பரம் என்ற சிந்தனையே இல்லாமல் காவிக்கலரில் வடிவமைத்திருந்தார்கள். அந்த விளம்பரங்களில் தங்களது சாதனைபோல சித்தரித்துள்ள ஒவ்வொரு அம்சமும், அவர்களை வெட்கம் கெட்டவர்களாக வெளிச்சம் போட்டு காட்டியது.

சுப்பிரமணியன் சாமி சசிகலா தினகரன் அணிக்காக கண்ணீர்!


மாலைமலர் :ஆலந்தூர், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜெயா டி.வி. உள்பட சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. இவ்வாறு ஒருதலைப்பட்சமாக சோதனை நடத்தினால் பல சந்தேகங்கள் வரும். அதனால் டெல்லியில் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இதுபற்றி நான் விசாரிக்க உள்ளேன். மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக நடப்பதாக தெரியக்கூடாது. எந்த பக்கத்திலும், எங்கு ஊழல் நடந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கருணாநிதியை பிரதமர் சந்தித்தது, அரசியல் நாகரிகத்துடன் நடந்தது.

மும்பையில் விற்பனையாகாத 3.5 லட்சம் குடியிருப்புகள்..

மும்பையில் விற்பனையாகாத குடியிருப்புகள்!
மின்னம்பலம் : உலக அளவில் மிகப் பிரபலமான நகரங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் முதன்மையான மெட்ரோ நகரமாகவும் கருதப்படும் மும்பையில் 3.5 லட்சம் குடியிருப்புகள் விற்பனையாகாமல் இருப்பதாக ஆய்வொன்று கூறுகிறது.
சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனமான குஷ்மேன் & வேக்ஃபீல்டு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான பிராப்ஸ்டேக் ஆகஸ்ட்டிலிருந்து தற்போது வரை மும்பை பெருநகரத்தில் குடியிருப்புகளுக்கான மகாராஷ்டிரா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (ஆர்.இ.ஆர்.ஏ) பதிவு செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது. அந்த ஆய்வறிக்கையில், “மகாராஷ்டிரா ஆர்.இ.ஆர்.ஏவில் ஆகஸ்ட் முதல் தற்போது வரை 6,70,339 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 52 சதவிகிதம் விற்பனையாகாமல் உள்ளன. அதாவது 3,50,713 குடியிருப்புகள் இதுவரையில் விற்பனையாகவில்லை.

Jazz Cinema 1000 கோடி ..சசிகலாவின் ஜாஸ் சினிமாஸ் ... இரவு வரை நடந்த ஐடி ரெய்டு!

Veera Kumar  Oneindia Tamil  :  ரூ.1000 கோடி சர்ச்சைக்குள்ளான சசிகலாவின் ஜாஸ்.. அங்கும் ஐடி ரெய்டு!- 
 சென்னை: சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களுக்கு சொந்தமான சுமார் 190 இடங்களில் இன்று ஐடி ரெய்டு நடைபெற்றது. சென்னை, பெங்களூரு, மன்னார்குடி, டெல்லி, கர்நாடகா தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுக்கொண்டது.
அதேபோல, வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 
ரூ.1000 கோடி சர்ச்சை ரூ.1000 கோடி சர்ச்சை வேளச்சேரியில் ஃபினிக்ஸ் மாலில் உள்ள 11 திரையரங்குகளை, முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ரூ.1000 கோடிக்கு வாங்கியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. 
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், திரையரங்குகளை வாங்கியிருந்தால் எத்தனை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டன? அந்தப் பணம் எங்கிருந்து, எதன் மூலம் கிடைத்தது? அந்தத் திரையரங்குகள் மிரட்டி வாங்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு உண்மையா? அந்தத் திரையரங்கங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் திட்டமிட்டுத் தாமதப்படுத்தப்பட்டனவா? 

10 இலட்சம் வெளிநாட்டவர்கள் கனடாவில் குடியேற அனுமதிக்கப்பட உள்ளனர்.


Thavam Pakkiyam : அடுத்து வரும் மூன்று வருடங்களில் 10 இலட்சம் வெளிநாட்டவர்கள் கனடாவில் குடியேற அனுமதிக்கப்பட உள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என உலக நாடுகள் வெளிநாட்டில் இருந்து குடிபெயர்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் கனடாவின் இந்த முடிவு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பை கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, 2018ஆம் ஆண்டு 310,000 வெளிநாட்டவர்களுக்கும், 2019ஆம் ஆண்டில் 330,000 வெளிநாட்டவர்களுக்கும், 2020ஆம் ஆண்டு 340,000 வெளிநாட்டவர்களுக்கும் கனடாவில் குடிபெயர அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் அகமது ஹுசேன் தெரிவித்துள்ளார்.

NEET Murders நீட் 60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில்

நீட் தன் கடமையை அனிதாவோடு நிறுத்தாமல் தொடர்கிறது!!!! மருத்துவத்துக்கான பயிற்சி மய்யங்களில் 60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை! இவர்கள் அனைவரும் தமது பாடத்திட்டத்தில் 90% க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்கள்! பாடச்சுமை அதீத அளவு என்பதால் தற்கொலை!! இது தெலுங்கானா மாநிலத்தில். :- சன் செய்தி தமிழகத்திலும் இந்தத் தற்கொலை மய்யங்கள் (நீட்டுக்கான தனியார்,அரசு பயிற்சி மய்யங்கள்) நீட்டின் கடமைக்கு உறுதுணையாக நிற்கும் என எதிர்பார்க்கலாம்!!!!! Tnx: frm wp