ஞாயிறு, 31 டிசம்பர், 2017

வீரமணி :அரசிலையும், ஆன்மிகத்தையும் சம்மந்தப்படுத்தக் கூடாது...

அரசியல்+ ஆன்மீகம் = குழப்பம்!ஆன்மீக அரசியல் என்று ரஜினிகாந்த் சொல்வது அவரது குழப்பத்தை எடுத்துக் காட்டுகிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்திருக்கிறார்; மேலும் அவர் ஆன்மிக அரசியலில் ஈடுபடுவதாகவும் சொல்லியிருக்கிறார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி,
’’எந்த ஓர்அமைப்பும், யாரும் அரசியலுக்கு வரலாம்; அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அதே நேரத்தில், அவர்கள் அரசியலுக்கு வந்து கட்சியைத் தொடங் கும்போது, அந்தக் கட்சிக்கு என்ன கொள்கை? என்ன செயல் முறை? எதை நோக்கி அவர் பயணம் செய்கிறார்? என்பதைப் பொறுத்துத்தான் அந்தக் கட்சிக்கு மக்களுடைய வரவேற்போ, எதிர்ப்போ இருக்கும்.
எங்களைப் போன்றவர்கள், அரசியலில் மிகப்பெரிய அளவிற்கு வரக்கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும், சமூகநீதியையும், பகுத்தறிவு அடிப்படையில், பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பை மய்யப்படுத்துவதாக இருந்தால், நிச்சயமாக அதனை வரவேற்கக்கூடிய நிலையில், தெளிவாக கருத்துகளைக் கூறுவோம்.
அதேநேரத்தில், ஆன்மிக அரசியல் என்று அவர்கள் சொல்வது இருக்கிறதே,

ஆர் கே நகர் ... 120 திமுக நிர்வாகிகள் நீக்கபட்டுள்ளனர்... மேலும் பல மாவட்டங்களுக்கு தொடரும் ?

மின்னம்பலம் :ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்த விவகாரம் தொடர்பாக தொகுதியிலுள்ள திமுக நிர்வாகிகள் 120பேர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருந்த ஆர்.கே.நகருக்கு கடந்த 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. முடிவில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சி வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்தார். தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் 24,651 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார். இந்த விவகாரம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தோல்வி குறித்து 25ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின், " தொகுதியில் திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், வகுக்கப்பட்ட வியூகங்கள், அவை செயல்படுத்தப்பட்ட விதம், எங்கெங்கே கவனக்குறைவு, எவரெவரிடம் அலட்சியம், திமுக வாக்குகளில் ஏற்பட்ட சரிவு இவை அனைத்தும் முழுமையான ஆய்வுக்குட்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சுப. உதயகுமார் :ரஜினிக்கு என்ன கொள்கை இருக்கிறது?

Mohan Prabhaharan - Oneindia Tamil : நெல்லை : ரஜினியின் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பு தமிழக மக்களிடையே எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தெரிவித்து உள்ளார். தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக ரஜினி இன்று அறிவித்து உள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு  அவர் பதிலளித்தார். கூடங்குளம்  அணு உலை கூடங்குளம் அணு உலை மத்திய தணிக்கை குழு அறிக்கையிலேயே கூடங்குளம் அணு உலைகள்  முதல் இரண்டு யூனிட்டுகள் தரமற்றவையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை தான் நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இதற்காக இந்த அரசு எங்களின் மீது பல்வேறு வழக்குகளை போட்டு உள்ளது. இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னமும் பாதிக்கப்பட்டு உள்ளது. அணு உலை கட்டுமானம் அணு உலை கட்டுமானம் இதனால் எங்களின் மீது போடப்பட்டு உள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

குருமூர்த்தி: ரஜினியின் அரசியல் 50 ஆண்டு திராவிட அரசியலை மாற்றும்

Gurumurthyஞாயிறு, ரஜினியின் அரசியல் வருகை 60 ஆண்டுகால திராவிட அரசியலை மாற்றும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஜினி இன்று காலை அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து பலரும் அவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரது அரசியல் நிலைபாடு குறித்து விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் வருகை திராவிட இயக்கங்களின் 60 ஆண்டுக்கால அரசியலை மாற்றும். ரஜினியின் ஆன்மீக அரசியல் என்ற கருத்து பிரதமர் மோடியின் அரசியலுக்கு நெருக்கமானதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்<

சு.சாமி பாஜகவுக்கு எச்சரிக்கை : ரஜினியுடன் கூட்டணி வைத்தால் ..... ? தினகரன் அணிக்கு சென்றுவிடுவேன் என்கிறார்?

எனது எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் கூட்டணி வைத்தால் வேறு மாநிலத்துக்கு சென்றுவிடுவேன் என சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று இன்று காலை அறிவித்தார். தனி கட்சி தொடங்க உள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:- ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் அவரிடம் எந்த கொள்கைகளோ, கோட்பாடுகளோ இல்லை. தமிழக மக்கள் புத்திசாலிகள். என் எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் பாஜக கூட்டணி வைக்க கூடாது. அதையும் மீறி வைத்தால் நான் வேறு மாநிலத்துக்கு செல்வேன். ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றும் மாறாது என்று கூறியுள்ளார். வெப்துனியா

கரூர் மூன்று ஆட்டோகாரர்கள் கூட்டு பலாத்காரம் செய்து கொலை ..

karurவெப்துனியா :கணவனைப் பிரிந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்மணியை கொலை செய்த மூன்று ஆட்டோ ஓட்டுனர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.கரூரைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி பர்வீன் பானு. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பர்வீன் பானு கடந்த 2015 ஆம் ஆண்டு  மாயமாகி உள்ளார். இதனையடுத்து இளையராஜா தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.போலீஸார் பர்வீனின் தொலைபேசி அழைப்புகளைக் கொண்டு விசாரணையை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.கணவனை விட்டு ஓடிவந்த பர்வீனுக்கு சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களான ராஜா மற்றும் மாணிக்கம் என்பவர்களுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின், மறைமலை நகரில் வேறோருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் வெல்லம் கிடையாது ,, அஸ்கா கம்பனிகளிடம் கமிஷன் ... வெல்ல உற்பத்தியாளர வயிற்றில் அடி

சர்க்கரைக்குப் பதில் வெல்லம்!மின்னம்பலம் ::‘கரும்பு விவசாயிகள் வளம்பெறவும், சிறு தொழிலான வெல்ல உற்பத்தி மேம்படவும் தமிழக அரசின் பொங்கல் பரிசில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் வழங்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு அறிவித்துவருகிறது. அதன்படி வரும் பொங்கல் பண்டிகைக்காக ஒரு கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை இடம்பெற்றுள்ளது. ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் இந்தப் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தயாரிப்பாளர்களுக்கு அடி கொடுத்த அஜித் - விஜய் படங்கள் !

அஜித் - விஜய் படங்கள் ஏற்படுத்திய நஷ்டம்!
மின்னம்பலம்: இராமானுஜம் தமிழ் சினிமா தயாரிப்பில் 201 படங்கள் 2017இல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்த படங்கள் வழக்கம்போல இந்த வருடமும் குறைவு.
முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் தமிழ் சினிமாவின் வியாபாரத்துக்கு ஏற்ற பட்ஜெட்டில் தயாரிக்காமல் கூடுதல் செலவு செய்யப்பட்டுத் தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும் நஷ்டத்துக்கு ஆளாக்கியுள்ளன. அளவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு திரைக்கதை சொதப்பலாகி மக்களால் நிராகரிக்கப்பட்ட படங்களும் இதுபோன்ற நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்திகளாக இருப்பவர்கள் விஜய் - அஜித். இவர்களது படத்துக்கு ஓப்பனிங் இருக்கும். படம் வெளியான முதல் வார முடிவில் அசலில் 70 சதவிகிதத் தொகை தியேட்டர் வசூல் மூலம் கிடைத்துவிடும். இந்த வருடம் அஜித் நடிப்பில் ‘விவேகம்’, விஜய் நடிப்பில் ‘பைரவா’, ‘மெர்சல்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது.
2017இல் வெளியான படங்களில் அதிகமாக நஷ்டம் ஏற்படுத்திய படங்களில் முதலிடம் அஜித் குமாருக்குக் கிடைத்துள்ளது. இவர் நடித்த படங்களின் புரமோஷனுக்கு வர மாட்டார். பத்திரிகையாளர்களைச் சந்திக்க மாட்டார். பேசிய சம்பளத்தை முழுமையாக செட்டில் செய்தால்தான் டப்பிங் பேச வரக்கூடியவர் அஜித் குமார்.

ரஜினி காந்த் : 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் .. தனிகட்சி ஆரம்பிப்பித்து .. ஆன்மீக அரசியல் ... ஜெ ஹிந்த்!

நக்கீரன் :; நான் அரசியலுக்கு வருவது உறுதி - ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனி கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நான் நிற்பேன்.
அரசியலுக்கு பணத்திற்கோ, பெயருக்கோ வரவில்லை. பதவிக்கு ஆசை இருந்தால் 1996 ல் அது தேடி வந்திருக்கும். 68 வயதில் பதவி ஆசை வருமா? அப்படி வந்தா நான் பைத்தியக்காரன் இல்லையா? பதவிக்காக இல்லை. அப்ப வேறு எதற்காக? அரசியல் ரொம்ப கொட்டுபோய்விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டு போய்விட்டது.
கடந்த ஒரு ஆண்டில், தமிழ்நாட்டில் நடந்த சில சம்பவங்கள் எல்லா மக்களையும் தலைகுணிய வைத்துள்ளது. இந்த நேரத்தில் நான் இந்த முடிவு எடுக்கவில்லை என்றால், என்னை வாழ வைத்த மக்களுக்கு நான் எதுவும் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு என்னை உறுத்தும். சிஸ்டமை மாற்ற வேண்டும். ஒரு ஆன்மீக அரசியலை உருவாக்க வேண்டும். இது சாதாரண விஷயம் இல்லை. நடுகடலில் மூழ்கி முத்து எடுப்பது மாதிரி.. ஆண்டவனின் அருள்.. மக்களின் ஆதரவு.. இரண்டும் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.

காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவின் தோல்வியின் பின்னணியில் யாருடைய கரங்கள் இருந்தன ?

அறிஞர் அண்ணா  1962 தேர்தலில்  தன் சொந்தத் தொகுதியான காஞ்சிபுரத்தில் நடேச  முதலியார் என்ற பஸ் முதலாளியிடம் தோற்றார்.
ராஜா ஜி i : கர்மவீரரின் தோல்வியில் காலத்தின் கரங்கள் இருந்தன.
அறிஞர் அண்ணாவின்  தோல்வியின் பின்னணியில் யாருடைய கரங்கள் இருந்தன?
Nanda Kumar :அவர்கள் சொல்லும் வரலாற்று பக்கங்கள்.
என் ஆதங்கம் :காமராஜரை தோற்கடித்தீர்களே தோற்கடித்தீர்களே என்று 1967 ம் ஆண்டு தேர்தலில் காமராஜர் தோற்றதற்கு ஆயாசப்படும் மக்களுக்கு என் வினா-
1964முதல் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அரிசி தட்டுப்பாடு ரேஷனில் அரிசி, மண்ணெண்ணையாகிய அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு.
அதனால் வாரம் ஒரு இரவு அரிசி உணவு தவிர்க்கவேண்டும் எனும் கட்டாயம்,
நாட்டின பொருளாதார சீர்திருத்தம் என்று சொல்லி 22 காரட் தங்கம் விற்பனை கூடாது 14 காரட் தங்கம் தான் விற்பனை
அதன் காரணமாக பொற்கொல்லர்களின் தற்கொலை இப்படியாக நாட்டுமக்கள் பசியிலும் பஞ்சத்திலும் தவித்த அவலம்.
அனைத்துக்கும் மேலாக 1965 ம் வருடம் சுனாமி போல் தமிழ்நாட்டில் எழுந்த இந்தி எதிர்ப்பு போராட்டம். இதன் விளைவாக அன்றைய காங்கிரஸ் கட்சியின் மேல் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக, அந்த காங்கிரஸ் வேட்பாளராக நின்ற காமராஜர் 1967ல் நடந்த பொது தேர்தலில் ஐனநாயக முறையில் தோற்கடிக்கப்பட்டார்.

வேலு நாச்சியாரும் வள்ளுவருக்கு பூணூல் போட்ட வேணுகோபால் வாரிசுகளும்?


Karuppu Neelakandan : வேலுநாச்சியாரை 'ஷோ'காட்டி விளம்பர பிழைப்பை பெருக்கிக்கொண்டேயிருக்கும் ஶ்ரீராம்சர்மா யாருன்னா.... 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்' என்ற நம் சமூகத்தின் மகாகவி வள்ளுவனுக்கு பூணூல் மாட்டிவிட்ட வேணுகோபால் சர்மாங்குற பார்ப்பனரின் புதல்வராம்....
இது நாச்சியாரை ஆத்துக்கு அழைச்சிண்டு போயி மாமியாக்கும் யத்தனமா.....
பார்ப்பனர்- முக்குலத்தோர் அரசியல்/அதிகார உறவை பலப்படுத்தும் கலைவளர்ச்சியா?
'நம்மாளப் பத்திய நாடகம்' என நாடகத்தை விதந்து திரியும் 'ஜாதிய மொக்கை'களை தாண்டி அரசியல் பூர்வமாக நாடகத்தை கண்டுணர்ந்து எழுதப்பட்ட விமர்சனங்கள் ஏதேனும் உண்டா ?
ஜாதியொழிப்பில் நம்பிக்கையுள்ள நண்பர்கள் உரைத்தால் கேட்டுக்கொள்கிறேன்.
 Govindarajan Vijaya Padma :சரியாக சொன்னீர்கள் . கிட்ட தட்ட இருபது வருடமாக ஷர்மாவை எனக்கு தெரியும் .பல பக்தி பாடல்களை எழுதியவர் அவர் . அப்பா முதன் முதலாக வரைந்த பூணுல் திருவள்ளுவரை வெளிநாட்டிற்கு விற்று காசாக்க இன்றுவரை துடித்துக் கொண்டு இருப்பவர். அவர் வேலு நாச்சியாரை வைத்து மடக்கி வைத்து இருக்கும் ஏமாந்த சோணகிரி வைகோ . அவர்தான் இவருக்கு பொருளுதவி .

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது ? எகிறி பாயும் ஜெயமோகன் ...

ஜெயமோகன் :வைரமுத்துவின் ஞானபீட முயற்சிகளைப் பற்றி மலையாளம் தமிழ் இரு மூலங்களிலிருந்து அறிந்தேன். அதை பொதுவில் வைக்கவேண்டும் என்றும் ஒரு தமிழ் எழுத்தாளர் என்னிடம் கேட்டுக்கொண்டார். வைரமுத்து அதற்காக முயல்கிறார் என்பதும் அதன்பொருட்டே பாரதிய ஜனதாவின் பிரமுகர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரியாத எவரும் தமிழில் இல்லை. அவர் எப்போதுமே எல்லா வழியிலுமே சுய முன்னேற்றத்திற்காக முயல்பவர், ஆகவே அதில் அதிர்ச்சி கொள்ளவும் ஏதுமில்லை
ஞானபீடம் ‘நல்ல’ எழுத்துக்காக அளிக்கப்படுவது அல்ல. ஒரு காலகட்டத்தின் குரலாக, ஒர் இலக்கியச்சூழலின் அடையாளமாக, ஒரு உச்சசாதனையாளாக கருதப்படும் ஒருவருக்கு அளிக்கப்படுவது. வைரமுத்து அவ்வாறு இந்தியச்சூழலில் அடையாளப்படுத்தப்படுவார் என்றால் அது தமிழுக்கு மிகப்பெரிய சிறுமை. எளிதில் களையப்படக்கூடியது அல்ல அது. அதையே நான் குறிப்பிட்டேன்.

எடப்பாடி பன்னீரின் நிம்மதியை குலைக்கும் நம்பர் கணக்கு ... சுயேச்சை எம் எல் ஏ தினகரன் கையில் ..

Ravi Raj : ஆட்சி கலைப்பு ஏற்படுமா? 18+1 = 19, 99+19 = 118 அரசியலை தீர்மானிக்கும் தினகரனின் முடிவு!
வெற்றிகரமாக நடந்து முடிந்த இடைதேர்தல், வரும் ஜனவரி 8 ஆம் தேதி கூடும் வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஆளும் கட்சியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போய், இப்போது ஆளும்கட்சிக்கு எதிராக களத்தில் குதித்து வெற்றிபெற்றிருக்கும் முதல்முறையாக சட்டசபைக்கு தனிஒருவனாக செல்லவிருப்பதால், எடப்பாடி – பன்னீர் கூடாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.
ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்வதற்கு முதல்நாள் கடைசியாக தினகரனை சந்தித்த பன்னீர்செல்வம், இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாவதற்கு முதல் நாள் தினகரனை பார்த்த எடப்பாடி பழனிச்சாமி இப்படி மூவரும் வெகு நாட்களுக்குப்பின் வரும் 8 ஆம் தேதி சட்டசபையில் நேருக்கு நேராக சந்திக்கப் போகிறார்கள். என்ன நடக்கும்?
ஆட்சி கலைப்பு ஏற்படுமா ? என்ற கேள்வி பலரிடமும் எழுவதை பார்க்க முடிகிறது. ஆட்சி கலைப்பு ஏற்படுமா ? என்று கேட்டால், அது தினகரன் கைகளில் தான் உள்ளது. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தில் தினகரனுக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ தீர்ப்பு வந்தாலும், ஓ.பி.எஸ் தரப்பின் 12 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கில் 12 பேருக்கும் எதிராகவே தீர்ப்பு வரும்.

நெற்பயிரை அழித்த டி எஸ் பியின் அக்கிரமம்,,,, விவசாயி கண்ணீர் ....

Special Correspondentநெல் ஸ்பெல்கோ : வயலில் டிராக்டரை ஓட்ட உத்தரவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அவ்வீடியோவில் ''நெல் வயலை அழிக்க வேண்டாம்....'' கதறியபடி டிராக்டருக்கு நடுவே பெண் விவசாயி விழும் காட்சி பார்ப்பவர் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.

சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய வீடியோவில் டி.எஸ்.பி ஜெரீனா பேகம், 'உன் கையை ஒடித்துவிடுவேன்... ' என மிரட்டும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து "நெற்பயிரை அழிப்பது, அநியாயம்... உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் பெற்றது.
இதுதொடர்பாக இன்று சேதப்படுத்தப்பட்ட நெல் வயலைப் பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைய மாவட்ட நீதிபதி மகிழேந்தி, வழக்கு நிலுவையில் இருக்கும்போது டி.எஸ்.பி ஜெரீனா பேகம் எடுத்த நடவடிக்கை மனித உரிமைகளுக்கு எதிரானது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கச் செயல். உறவினர்களுக்குள் இருக்கும் பிரச்னைக்காக நெல் வயலை உழுதது ஏற்றுக் கொள்ள முடியாது. இது குறித்து டி.எஸ்.பி ஜெரீனா பேகம் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மீனவர்களை விற்று காசு பார்க்கும் சென்னை மீம்ஸ்?

Shalin Maria Lawrence :மீனவர்களுக்கென்று சொல்லி காசு வாங்கிய நல்லவர்கள். Is chennai memes a registered company? If registered you cannot collect money in an individual account. If not registered you cannot collect money itself. So எப்படி பார்த்தாலும் fraud தான்.
Shivakkumar TD : கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக பிரதமர் விளம்பரப்படுத்தும் பேடிஎம் மூலம் வசூல் செய்தது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது ஒரு தனி நபர் தொலைபேசி எண் கொண்ட கணக்கில் பணம் வசூல் செய்ததை யாரும் கேள்வி கேட்காதது ஆச்சரியம் அளிக்கிறது

Subhash Chandran : savefarmersல அடிச்ச கொள்ள புண்ண சொறிஞ்சவன் கை சும்மா இருக்காது... அது மாதிரி இப்ப savefishermen
 Dhivya Balachandar : That's the big question mark. Yaara ketaalum naan illa avan dhan nu solraanunga! After the Jalikattu issue, they hired some paid admins. The old admins are blaming these guys. And these guys don't know what exactly happened. All the old admins should be enquired.

சனி, 30 டிசம்பர், 2017

தினகரன் செய்திகளில்... ? கலைஞர் எப்போதும் செய்திகளில் நடுநாயகமாக ? ஸ்டாலின் விட்டு கொடுக்கிறாரா?

Veera Kumar - Oneindia Tamil ஸ்டாலின் செய்ய தவறியது இதுதான்!- வீடியோ சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வாக்குகள் இரண்டாக பிரியும் என நினைத்திருந்தபோதிலும், திமுகவால் 3வது இடத்திற்கே வர முடிந்தது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா அரசுக்கு எதிராக தீவிர எதிர்ப்பலை இருந்தபோதிலும், அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இதற்கு முன்பாக நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் திமுக ஒரு சீட்டை கூட வெல்ல முடியவில்லை. ஆனால் பாஜக கன்னியாகுமரியிலும், பாமக தருமபுரியிலும் வெற்றி பெற்று திமுகவுக்கு கூடுதல் ஷாக். 
தகராறுகள் நடுவே அதிமுக தகராறுகள் நடுவே அதிமுக இது பரவாயில்லை. அப்போதாவது ஜெயலலிதா என்ற ஆளுமை திமுக தோல்விக்கு காரணமாக இருந்தது. ஆனால் இப்போது அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் என பிரிந்து பிறகு சேர்ந்து, தினகரன் தரப்பு ஒருபக்கம் தனி ஆவர்த்தனம் பாடி.. சொல்லும்போதே மூச்சு முச்சு முட்டும் இத்தனை தகராறுகளுக்கு நடுவே நடந்த ஒரு இடைத் தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு போயுள்ளது.

பிரான்சுக்கு சென்ற 22 பள்ளி மாணவர்களை காணவில்லை .. மேற்கு நாடுகளுக்கு அகதியாகி ...?

The CBI has registered an FIR after 22 minors from Punjab, Haryana and Delhi were allegedly illegally taken to France by three travel agents last year in the garb of giving them rugby coaching and went missing, agency officials said ...
மின்னம்பலம் ;ரக்பி விளையாட்டு பயிற்சிக்காக ஃபிரான்ஸ் சென்ற 22 இந்திய மாணவர்கள் மாயமானது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து நேற்று (டிசம்பர் 29) விசாரணையைத் தொடங்கியது.
2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபிரான்சில் நடைபெற்ற சர்வதேச ரக்பி போட்டியில் கலந்துகொள்ள டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த 13 முதல் 18 வயதுடைய 25 பள்ளி மாணவர்கள் சென்றுள்ளனர். ஃப்ரெஞ்ச் குழுவிடம் இருந்து வந்த அழைப்பின் அடிப்படையில் மாணவர்கள் பாரிசுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு ஒரு வாரம் பயிற்சி வகுப்பை முடித்த அவர்கள் இந்தியா திரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயால், “பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடக்கும் ரக்பி விளையாட்டு பயிற்சிக்கு இந்திய மாணவர்கள் 25 பேரை அழைத்துச் செல்வதாக, அவர்களின் பெற்றோரை பரீதாபாத் மற்றும் டெல்லியில் உள்ள டிராவல் ஏஜென்ட்கள் அணுகியுள்ளனர். ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமிருந்து 25 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்துள்ளனர்.

திரிஷா :கழிவறை பயன்படுத்துவது பெண்களின் மரியாதைக்கு அவசியமானது... ரஜினி கட்டி கொடுப்பார்?

மாலைமலர் :காஞ்சிபுரத்தில் யூனிசெப் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய திரிஷா, கழிவறை பயன்படுத்துவது பெண்களின் பாதுகாப்புக்கும், மரியாதைக்கும் அவசியமானது என்றார். காஞ்சிபுரம்: நடிகை திரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவருக்கு யூனிசெப்பின் நல்லெண்ண தூதராக கொரவம் வழங்கப்பட்டுள்ளது.& இந்த பதவியில் இருந்தபடி அவர் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமண முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றை தடுக்கும் முயற்சியில் திரிஷா ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் வடநெமிலியில் யூனிசெப் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழிவறை கட்டும் நிகழ்ச்சியில் திரிஷா கலந்துகொண்டார்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் அரசுடைமையாகிறது .... எடப்பாடி பன்னீர் அதிரடி ...

tamilthehindu :சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) காலை முதல் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
வீட்டை அளவிடும் பணி நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் ஆய்வை ஒட்டி போயஸ் கார்டன் இல்லத்தைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரசு அறிவிப்பும் அடுத்தடுத்த நகர்வுகளும்..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீட்டை, அவரது மறைவுக்குப் பிறகு  நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனையடுத்து அந்த வீடு அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நினைவிடமாக்கும் பணியையும் வருவாய் துறையினர் தொடங்கினர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை முழுமையாக அரசுடைமையாக்கி, நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் இன்று தொடங்கின.

இர்பான் ஹபிப் CP- M : பிரகாஷ் காரத் பாஜகவுக்கு மறைமுக ஆதரவு .... பாஜகவையும் காங்கிரசையும் ஒரே தட்டில்தான் வைக்க வேண்டுமாம்

நக்கீரன் :பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி அமைப்பதை பிரகாஷ் காரத் விரும்பவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வரலாற்று அறிஞர் இர்பான் ஹபிப் குறைகூறியிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா கூறியிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பாஜகவையும் காங்கிரஸையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க வேண்டும் என்று கூறி வருகிறார். பாஜகவை எதேச்சாதிகார கட்சி என்றோ, மதவாத பாசிசக் கட்சி என்றோதான் கருத வேண்டும். பாசிசிஸ்ட்டுகள் என்று கூறக்கூடாது என்கிறார் பிரகாஷ் காரத். இது தவறான போக்கு என்று இர்பான் ஹபிப் கூறியதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது. 3மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் ஜனவரி 19 ஆம் தேதி கொல்கத்தாவில் கூடவிருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் ஒன்றில் இர்பான் ஹபிப் பேசினார். அப்போது பாஜகவையும் ஆர்எஸ்எஸ்சையும் நாஜிகளோடு ஒப்பிட்டார்.

நம்ம மக்களுக்கு முன்னோர் தான் தெய்வம்! CIFF விருது இயக்குனர் சுரேஷ் சங்கையா

நக்கீரன் :சர்வதேச  திரைப்பட விழா கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.  ஜெர்மன் படங்கள், கொரிய திரைப்படங்கள், இந்தியன் பனோரமா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தமிழ் படங்கள் பிரிவில் ஒரு கிடாயின் கருணை மனு, 8 தோட்டாக்கள், அறம், குரங்கு பொம்மை, கடுகு உள்ளிட்ட  12 படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டன. அதில் 'ஒரு கிடாயின் கருணை மனு' படம் சிறந்த தமிழ் படத்திற்கான  விருதைப்  பெற்றது. உலகப் படங்கள் என்ற பெயரில் ஹாலிவுட்டை பின்தொடராமல் நம் மண்ணின் தெய்வங்களை, பழக்கவழக்கங்களை அடிப்படையாக வைத்து உண்மையான உலகப்படத்தைக் கொடுத்த படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா அவர்களிடம் பேசினோம்...

கலைஞர் : இவ்வழக்கு முடியும் பொழுது இப்போது சொல்லபட்ட கதைகள், படுபயங்கர கற்பனை பொய்கள்

Flashback - கலைஞர் :"இவர்கள் செய்யும் காரியங்களை எல்லாம் பார்க்கும்பொழுது, தந்தை முத்துவேலருடன் அக்காலத்தில் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்த நினைவு வருகின்றது
அன்று படம் மட்டும் ஓடும், இசையும் குரலும் சேர்ந்து வராது. பின்னால் இருந்து ஒருவன் காட்சியினை ஒலிபெருக்கியில் விளக்குவான்
அப்படி அன்று பார்த்த படத்தில் பராகசுரன் என்றொருவன் திரையில் வந்தான், காட்சியினை விளக்குபவனோ பாருங்கள் அசுரனின் பல் 10 அடி நீளம், கால் 50 அடி உயரம் அவன் எடை பல்லாயிரம் கிலோ, அவன் தலைமுடியிலே ஊஞ்சல் கட்டலாம், அவன் கையால் அடித்தால் மலை உடையும்" என்றெல்லாம் பேசிகொண்டிருந்தான்
இந்த நபர் அந்த அசுரனை கண்டவனா? என்றாவது அவனை அளந்து பார்த்தவனா என்றால் இல்லை, அவன் போக்கிற்கு திரையரங்கு மக்களை ஏமாற்ற என்னவோ சொல்லிகொண்டிருந்தான்
இவர்கள் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆளாளுக்கு ஒவ்வொரு அளவுகளை, பொய்களை சொல்ல சொல்ல அந்த டூரிங் டாக்கீஸில் கதை சொன்னவன் நினைவுதான் வருகின்றது

தினகரன் அறைகூவல் : ஆட்சி கலையாமல் இருக்கவேண்டுமாயின் என் பக்கம் வந்து விடுங்கள்

Lakshmi Priya - Oneindia Tamil பதவியேற்ற பின் டிடிவி தினகரன் கொடுத்த பர பர பேட்டி- 
சென்னை: அதிமுக ஆட்சி கலையாமல் அதன் முழு பதவிக் காலத்தை அடைய வேண்டும் என்றால் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களுக்கு தினகரன் யோசனை தெரிவித்தார். ஆர்கே நகரில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி வெற்றார். அவர் இன்றைய தினம் பதவியேற்க சட்டசபைக்கு வந்தார். சபாநாயகர் தனபால் அறையில் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்யப்பட்டது. அப்போது சபாநாயகர் தினகரனுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தினகரன் பேட்டி தினகரன் பேட்டி ஆர்கே நகர் எம்எல்ஏவாக தினகரன் பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வரலாற்றில் என்றுமே துரோகம் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. சசிகலா தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக. மக்களின் பிரதிபலிப்பு மக்களின் பிரதிபலிப்பு ஆர்கே நகர் வெற்றி மூலம் 6.5 கோடி மக்களின் பிரதிபலிப்பு வெளிப்பட்டுள்ளது.

வெள்ளி, 29 டிசம்பர், 2017

கன்னட நடிகர் சுப்ரண்யா காதலிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் ....

வெப்துனியா : தன்னுடைய காதலியை கற்பழித்து விட்டு அவரை திருமணம் செய்து கொள்ள தயங்கிய நடிகரை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடகாவை சேர்ந்த இளம் நடிகர் சுப்ரண்யா. இவர் ‘ஹோம்பன்னா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் பேஸ்புக் மூலம் ஒரு இளம்பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார்.  அதன்பின் அது காதலாக மாறியுள்ளது. இது இருவரின் குடும்பத்திற்கும் தெரிய வர திருமணம் பேச்சுகள் எழுந்தன. ஆனால், தன்னுடைய முதல் படமான ஹோம்பன்னா வெளிவந்த பின்னரே திருமணம் எனக்கூறி சுப்ரமண்யா தட்டிக் கழித்துள்ளார்.<>அதன் பின்பு படம் வெளியான பின்பும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. சொந்தமாக ஒரு வீடு கட்டிய பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

அரசு கேபிள் மோசடியும் ஆபத்தும் ... டிவிகளின் ஜால்ராவும்

ராஜா ஜி : ஒரு பிரபல சேனலில் பணிபுரியும் தோழரிடம் பேசியது-மீள்....
அண்ணே பெரியார் பத்தி பேச உங்களைப்போலுள்ளோர் வாங்கண்ணே!
- தம்பி நாங்களெல்லாம் நுனிப்புல் மேயுறோம்- அப்படி பேச வந்தா அவங்களை பேசவே விடறதில்லையே தம்பி.
நாங்கள் நடத்தும் விவாத தலைப்பையே இந்துத்துவா அமைப்புகள் மாற்றச்சொல்லி போனெல்லாம் வரும்ணே----
- இதையெல்லாம் சொல்லலாம்ல.

பாலிஷா நடக்கும்போதே இப்படி சொன்னா சேனலே நடக்காதுணே!
- இப்படியெல்லாமா நடக்கும்?
சம்பளத்தை குறைச்சுட்டாங்கண்ணே!
- ஏன் உங்க சேனல் நல்லாத்தானே போவுது?
அவ்வப்போது நடுநிலை காட்டவேண்டி புரோக்ராம் நடத்துவாங்க! உடனே தமிழகத்தின் சில பகுதியில கேபிளில் தெரியாது- TRP குறையும் - குறைஞ்சா வருமானம் போயிறும்- சம்பளத்தை குறைப்பாங்க.
மூனு மாசம் முன்னாடி பாலிமர் டிவி நம்பர் ஒன்னுன்னு பேரு வாங்குச்சே எப்படி தம்பி - அதுல அவ்வளவு நல்ல புரோக்ராம் இல்லையே!!
TRP யை ஏற்ற ரெண்டு சேனலை கட் பன்னி அரசு கேபிள் செஞ்ச வேலைணே.
- அரசு கேபிள் ஆபத்தும் டிவிகளின் ஜால்ராவும் புரியுது தம்பி.
அரசு கேபிள் உள்ளவரை திமுகவுக்கு நல்ல பெயரே வராது.
இருக்கும் பெயரையும் கெடுப்பான்.
நாம் வலைத்தளங்களில் புலம்புவோம்.  அரசு கேபிள் மீது வழக்கு போடலாம். இதற்கான தரவுகள் உள்ளது.  ஆனால் கேட்கத்தான் ஆளே இல்லை

தமிழக அரசின் தூக்கத்தை கெடுக்கும் "சிலிப்பர் செல் கனவுகள்"

டிஜிட்டல்  திண்ணை!மின்னம்பலம்: “அடையாறில் தொடங்கி கோட்டை வரை திருவிழா போல இருந்தது. ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தினகரன் பதவி ஏற்றுக்கொண்டார். அதற்காகத்தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாடு முழுவதுமிருந்து தினகரன் ஆதரவாளர்களைச் சென்னைக்கு வரச் சொல்லி இரண்டு தினங்களுக்கு முன்பே தகவல் சொல்லியிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அவர்கள் வருவது, தங்குவது என அத்தனை ஏற்பாடுகளையும் பக்காவாகச் செய்திருந்தார் செந்தில் பாலாஜி. திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள லாட்ஜ்கள், மேன்ஷன்கள் என மொத்தமும் நேற்று இரவிலிருந்தே புக் செய்யப்பட்டுவிட்டன.
தினகரன் வீட்டிலிருந்து கிளம்புவது தொடங்கி கோட்டை வரை, அவர் வரும் வழியெல்லாம் தொண்டர்களை நிறுத்த வேண்டும் என்பதுதான் செந்தில் பாலாஜி திட்டம். அதற்கான ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர் அவர்தான். ‘கடலூர் மாவட்டத்துக்காரங்க பட்டினப்பாக்கம் சிக்னலில் இருந்து சங்கீதா ஹோட்டல் வரை நிற்கணும். அடுத்து அப்படியே விழுப்புரம் மாவட்டத்துக்காரங்க நின்றுடுங்க... எல்லோருடைய கையிலும் தினகரன் போட்டோ இருக்கணும். அவர் வண்டி வரும்போது பூவும் தூவுங்க... முடிஞ்ச வரைக்கும் டிராபிக் ஆகணும்.

திமுக :முறையாக தேர்தல் பணி ஆற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை

தினத்தந்தி : சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை  நடைபெற்றது.  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற  இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள்  பங்கேற்றனர். இந்த செயல்திட்டக்குழு கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீரமானங்கள் பின்வருமாறு:- 1.புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு ரூ.13,520 கோடி வழங்க வேண்டும் என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
2.பெரும்பான்மையை இழந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான அதிமுக அரசு ஜனநாயகத்திற்கு களங்கம் என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

தினகரன் எம் எல் ஏ : பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே ஆட்சி கவிழும்

tamilthehindu :ஜனவரி இறுதிக்குள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நீக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு வரும். பிப்ரவரி அல்லது மார்ச்சில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஒரு முடிவு வரும். ஆகவே அதிக நாட்கள் இவர்கள் நீடிக்க முடியாது என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் மக்கள் மாபெரும் நல்ல தீர்ப்பை வழங்கிவுள்ளனர். நான் தேர்தலில் வாக்கு சேகரித்தபோது இந்த தொகுதி ஜெயலலிதாவின் தொகுதி அவர் விட்டுச்சென்ற பணியை தொடர எனக்கு வாய்ப்பு அளியுங்கள் என்றே கேட்டேன். தமிழகத்தில் இன்று நடைபெறுகின்ற மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ஏழரை கோடி மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற தேர்தல் என்று தெரிவித்தேன்.
ஆர்.கே.நகர் மக்கள் ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு ஆதரவான மக்கள். அவர்கள் வழியிலே சசிகலா தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிற ஒன்றரைகோடி தொண்டர்கள் கொண்ட நங்கள்தான் உண்மையான அதிமுக என்பது நிரூபணம் ஆகியுள்ளது. வெறும் சின்னமும் கட்சியின் பெயரும் இருந்தால் போதாது.

BBC : பெண் போலீஸ்காரரை அறைந்து அறை வாங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.

அந்த மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இது குறித்து ஆய்வு நடத்துவதற்கான கூட்டம் ஒன்று இமாச்சலப்பிரதேசத் தலைநகர் சிம்லாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வந்திருந்தார்.
இந்தக் கூட்டத்துக்கு வந்த டல்ஹௌசி தொகுதியின் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ஆஷா குமாரி கூட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நிகழ்விடத்துக்கு வெளியே கூட்டத்தில் சிக்கிக்கொண்ட அவர் பெண் போலீஸ்காரர் ஒருவரை அறைந்துள்ளார். இதையடுத்து அந்த போலீஸ்காரரும் அவரைத் திரும்பி அறைந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, காங்கிரஸ் அகிம்சை வழியில் செயல்படும் கட்சி என்றும், எந்தவொரு தலைவரும் கட்சியின் கொள்கைகளை மீறி நடப்பதை அனுமதிக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ரஜினி பேச்சு ,,, 700 ஏக்கரில் ஆஸ்ரமம் இருக்கிறது. அது சொர்க்கம்...

tamilthehindu :சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரர் கல்யாண மண்டபத்தில் நான்காவது நாளாக இன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த். மிகுந்த உற்சாகத்துடன் ரஜினியை வரவேற்று ஆரவாரம் செய்தார்கள் ரசிகர்கள். காலமும் நேரமும் மாறும். மாறியே தீரும் என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசினார்.
அப்போது ரஜினி பேசியதாவது :
’நான்காவது நாளாக உங்களைச் சந்திக்கிறேன். இன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது (என்று சொல்லி நிறுத்தினார். உடனே கைத்தட்டலும் விசில் சத்தமும் பறந்தது). பிறகு இரண்டுநாள் என்றால்... நான் உங்களைப் பார்ப்பது. அப்புறம் உங்களை நான் மிஸ் பண்ணுவேன். அதைச் சொன்னேன்.
கோயம்புத்தூரில் இருந்து வந்திருக்கிறீர்கள். என் வாழ்வில் முக்கியமான இடம் பிடித்த ஊர் இது. நிறைய நண்பர்கள் அங்கே இருக்கிறார்கள். என் குருநாதர்கள் இருக்கிறார்கள். சுவாமி சச்சினாந்தரின் ஆஸ்ரமம் இருக்கிறது. மிகப்பெரிய ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய படித்தவர். ஒருகட்டத்தில், பழனி சுவாமிகள் என்பவரிடம் சிஷ்யனாகச் சேர்ந்தார். பிறகு இமயமலைக்குச் சென்றார். அங்கே சிவானந்த சுவாமிகளிடம் தீட்சை வாங்கி, சச்சிதானந்த சுவாமிகளானார். பிறகு அவரின் குருநாதர் வழிகாட்டுதலின்படி, அமெரிக்காவுக்குப் போய் ஆன்மிகமும் தியானமும் பரப்பு என்று சொல்ல, அங்கே சென்றார்.

புத்தரின் தாய் மகா மாயாவை, ஆத்தா மகமாயி என்றாக்கி

ஜீவகன்: மோசடி என்பது..
புத்தரின் தாய் மகா மாயாவை, ஆத்தா மகமாயி என்றாக்கி, பராசக்தியெனப் புனைந்து வைத்தது.
மோசடி என்பது..
அட்சய பாத்திரம் ஏந்தி உணவளித்த மணிமேகலையை..
அன்ன பூரணியம்மாள் ஆக்கியது.

மோசடி என்பது..
பவுத்தத்தில் முழு விழிப்புணர்வை எட்டி, மலர்ந்த நிலையைக் குறிக்கப் பயன்பட்ட தாமரையை, கட்சிச் சின்னமாக்கியது.
மோசடி என்பது..
சயனகோல புத்தரின் வடிவத்தை,
பாம்புப் படுக்கை விஷ்ணுவாக மாற்றி வைத்தது.
மோசடி என்பது..
தலையை மொட்டையடிக்கும் புத்த பிக்குச் சடங்கினை 'முடி காணிக்கை' ஆக மாற்றி, உண்டியலை நிரப்புவது.
மோசடி என்பது..
புத்தர் தனது சந்நியாசிகளுக்கு வழங்கிய ஆரஞ்சு நிற உடையைத் திருடி, காவியாக்கி வைத்துக் கொண்டது.
மோசடி என்பது...  புத்தம் சரணம் கச்சாமி யை  சாமியே சரணம் ஐயப்பானு
மாற்றியது.  ஜீவகன்

சமுகவலை தளங்கள் - current news social media வில் இருந்து தான் மட்டுமே வருகிறது .

Venkat Ramanujam : வயல் வீடியோ FB twitter Instagaram வைரல் ஆனதை தொடர்ந்து மனித உரிமை நீதிபதி வயலில் டிராக்டர் விட்ட தமிழக போலீஸ் DSP க்கு விட்ட நோட்டீஸ் எதை காட்டுகிறது ..
இன்றைய ஊடக தர்மம் என்கிற " தட்டி கேக்கும்" கொள்கையை சமூக வலைதளத்தில் மட்டுமே காண முடிகிறது என்பதை ..
திமுகவில் இல்லாத ஒருவர் Vrs திமுக செயல் தலைவர் பற்றிய விவாதம் சூடாக நடப்பதில் தப்பில்லை .,
ஆனால் ஒரு ஆர்எஸ்எஸ் தீவிரவாத கொள்கை கொண்ட ஒருவரால் தமிழக முதல்வர் துணை முதல்வர் ஐ ஆண்மையற்றவன் என்று பகிரங்கமாக கூற முடிகிறது அதனை மைக் எடுத்து கேள்வி கேக்க துப்பற்ற ஊடகங்கள் .. ரஜினி வந்தால் யாருக்கு பாதகம் என்று ஜாதகம் பார்க்க தொடங்கி உள்ளன .
இப்போவே current news social media வில் இருந்து தான் மட்டுமே வருகிறது . காலையில் எழுந்து செய்தி தாளை பார்த்தால் எல்லாமே ஆறிப்போன கஞ்சிகளாக செய்திகள் அதுவும் அரசு சார்போடு ., அரசு தரும் விளம்பர பணத்தில் மார்ச்சரி பிணமாய் ஊடகங்கள் ..
ஆனால் இதனை கண்டுகொள்ளாத சமூகவலைத்தளம் விடியோவை வைரல் ஆக்கி அநியாயத்தை தட்டி கேட்டு போராடும் விவசாயி பெண்மணிக்கு நியாயம் வழங்கி உள்ளது ..

என்னிடம் 60 எம்.எல்.ஏக்கள், நான் தான் முதல்வர்: எடப்பாடியின் தூதுவுக்கு தினகரன் பதிலடி

webdunia : ஆர்.கே.நகரில் தினகரன் பெற்ற அபாரமான வெற்றி அவரை ஒரு தலைவராகவே ஆக்கிவிட்டது. இதுவரை திமுக, அதிமுக என்று இருந்த தமிழக அரசியல் தற்போது தினகரனா? எடப்பாடியா? என்ற நிலைக்கு போய்விட்டது. இந்த நிலையில் தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்தபோதே, தினகரனுக்கு எடப்பாடியிடம் இருந்து தூது போனதாம். ஓபிஎஸ் வகிக்கும் துணை முதல்வர் பதவியை தினகரனுக்கு அளிக்க தயார் என்றும் உடனே இன்னொரு இணைப்பை நடத்தலாம் என்றும் கூறப்பட்டதாம்
ஆனால் தினகரனோ ‘இப்போதே என் கைவசம் 60 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். நான்தான் முதலமைச்சர். எனக்கு யாரும் துணை முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கத் தேவையில்லை’ என்று கூறியதோடு, என்னால் முதலமைச்சர் ஆனவர் எனக்கே துணை முதல்வர் பதவி தருகிறாரா? என்று எக்காளமாக கேட்டதாக கூறப்படுகிறது. சட்டமன்றத்திற்குள் தினகரன் சென்றவுடன் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாகவே அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.

2017இல் கோடிகளைக் குவித்த இந்தியர்கள்!... புதிய ஏழைகளும் கோடிக்கணக்கானோர் ....

2017இல் கோடிகளைக் குவித்த இந்தியர்கள்!2017ஆம் ஆண்டில் பல்வேறு உச்சங்களைத் தொட்ட இந்தியாவின் பங்குச் சந்தையானது செயல்பாட்டு அடிப்படையில் ஆசியாவின் இரண்டாவது சிறந்த பங்குச் சந்தையாக உருவெடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் மாபெரும் பணக்காரர்கள் எவ்வளவு சொத்துகளைச் சேர்த்தனர் என்ற விவரத்தைப் புளூம்பெர்க் ஊடகம் வெளியிட்டுள்ளது. அதுகுறித்துப் பார்க்கலாம்...
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது ரூ.2,52,282 கோடியாக உள்ளது. இவர் 2017ஆம் ஆண்டில் தனது சொத்து மதிப்பில் ரூ. 1,11,638 கோடியைச் சேர்த்துள்ளார். சுமார் 14 கோடி சந்தாதார்களைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் சேவை வாயிலாகவே முகேஷ் அம்பானி தனது சொத்து மதிப்பைப் பெருமளவில் உயர்த்தியுள்ளார். அம்பானியைத் தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி வர்த்தக நிறுவனமான அதானி குழுமத்தின் சொந்தக்காரரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.36,315 கோடிகள் உயர்ந்து, ரூ.66,085 கோடியாக உள்ளது.

ரபேல் விமான பேரம் – மோடியின் தேசபக்தி... சவுக்கு

by Jeevanand Rajendran :15 வருடங்களாக இழுபறியில் இருந்த  ரபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அதிரடியாக மோடி முடித்து வைத்தார், இது  நம் இந்திய விமான படைக்கு கிடைத்த பரிசு என்று 2015 ஆம் ஆண்டு முன்னணி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.  2009 -14 UPA-2 ஆட்சியில் அதிகப்படியான ஊழல் புகார்கள் குவிந்ததால், மத்திய அரசாங்கம் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க பயந்து காலம் தாழ்த்த துவங்கியது. முடிவுகளை ஒத்திப் போட்டது. ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் பெருநிறுவன முதலாளிகள் “பாலிசி பாராலிஸிஸ்”, கொள்கை முடக்கம் என்று விமர்சனம் செய்து கொண்டிருந்த நேரம். ஒரு சிறிய ஒப்புதலுக்கே பல மாதம் காத்து கிடக்க நேர்ந்த காலத்தோடு ஒப்பிடுகையில், பிஜேபி அரசு எடுத்த துரித முடிவு அதிரடி மாற்றமாகவே பார்க்கப்பட்டது.
இது உண்மையாகவே தேசத்திற்கான அதிரடி மாற்றமா அல்லது அரண்மனைக்கு நெருங்கிய ஒரு சில முதலாளிகளுக்கு பயனளிக்க எடுக்கப்பட்ட முடிவா ? இல்லை எதேச்சையாக எடுக்கப்பட்ட முடிவா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

ஆ.ராசா :என்னை கைது செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என மன்மோகன் சிங் நினைத்தார்..

Shyamsundar - Oneindia Tamil மன்மோகன் சிங்கை திட்டும் ஆ.ராசா- வீடியோ நீலகிரி: 2ஜி வழக்கை மன்மோகன் சிங்க சரியாக புரிந்து கொள்ளவில்லை என ஆ.ராசா குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். நேற்று மேட்டுப்பாளையத்தில் தனது தொகுதி மக்களை சந்திக்க சென்ற ராசா இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். 2ஜி வழக்கில் கடந்த 21ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் சிக்கி இருந்த 19 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கி உள்ளார். ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 
இந்த தீர்ப்பிற்கு பின் ராசா நேற்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு திமுக தொண்டர்களால் பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவர் மேட்டுப்பாளையத்தில் மக்கள் முன்னிலையில் 2ஜி வழக்கு குறித்து பேசினார். அதில் "இந்த 2ஜி வழக்கை எதோ பெரிய ஊழல் என்று சித்தரித்தார்கள். இதை பற்றி பேசி, பேசி இரண்டு முறை எங்களை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தார்கள். மன்மோகன் சிங் நல்ல ஆட்சி நடத்தினார். ஆனால் இதனால் அவரும் பாதிக்கப்பட்டு ஆட்சியை இழந்தார்'' என்று குறிப்பிட்டார்.

அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி ... பலரும் இன்னும் சரியாக அறியாத பட்டுகோட்டை அழகிரி

Image திராவிட அரசியல் வரலாற்றில் அஞ்சாநெஞ்சன், தளபதி இந்த இரண்டு அடைமொழிகளாலும் அழைக்கப்பட்டவர் ஒரே ஒருவர்தான். அவர்தான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள். திராவிட இயக்கத்தின் முன்னோடி தலைவர்களுள் முக்கியமானவர். பெரியாரின்  அண்ணா உள்ளிட்ட 12 சீடர்களில் வாழ்நாளில் அதிக நாட்களை பெரியாருடன் சுயமரியாதை இயக்கத்திற்காக செலவிட்டவர்.<
பெரியாருக்கு முன்பாகவே சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர். அவரை நேரில் பார்த்து பழகிய முக்கிய ஆளுமைகளில் சம காலத்தில் நம்மிடையே வாழ்பவர்  கலைஞர் கருணாநிதி அவர்கள். கலைஞருடனான அழகிரியாரின் சந்திப்பு மிகவும் தற்செயலானது ஆனால் அது திராவிட அரசியல் வரலாற்றின் கெயொஸ் தியரி.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தை இறந்து விட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள வாவிடைமருதூர் கிராமத்தில் வளர்ந்தார். அங்கேயே பத்தாம் வகுப்பு வரை படித்தார்.
துள்ளித்திரியும் இளமை பருவத்திலேயே பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்து 1914 முதல் 1918 வரை நடந்த முதலாம் உலகப்போரில் சண்டையிட்டவர்.

கண்ணீர் கடல் ... மக்களை உறையவைத்த... அரசுகள் அலட்சியம் காட்டிய .. கதை .. ஆவணப்படம்


ன்னியாகுமரி மீனவர்களின் வாழ்வை புரட்டிப் போட்டிருக்கிறது ஒக்கிப் புயல். இந்த புயலால் ஏற்பட்ட உயிர்ச்சேதமும், உடைமைச் சேதமும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தில் இருந்து மீனவர்கள் மீண்டு வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்கும் என்பது தெரியாது. காணாமல் போன மீனவர்கள் இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என அவர்களது குழந்தைகளும், மனைவியும், தாய் தகப்பனும் கதறலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கடல் விமானத்தில் வந்து இறங்கி பவுசு காட்டினார் மோடி. ஆனால் துயரில் ஆழ்ந்திருக்கும் மீனவர்களைப் பார்க்க எந்த வாகனத்திலும் வரமுடியாதாம்.
புயலுக்கான முன்னறிவிப்பு எச்சரிக்கை கொடுப்பதில் தொடங்கி மீட்புப் பணி வரையிலான அனைத்துக் கடமைகளிலும் மெத்தனம் காட்டியது அரசு. விளைவு, 150-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணம் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை. கொதித்துப் போன மீனவ மக்கள் போராடினார்கள். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.

கதிராமங்கலம் நிலத்தடிநீர் ஆய்வறிக்கை – முனைவர் சேதுபதி..வினவு

கதிராமங்கலத்தில் எந்த ஒரு சிறு அல்லது பெரு தொழிற்சாலைகளோ அல்லது சாயப்பட்டறைகளோ இல்லை. ஆதலால் இங்கு நிலத்தடிநீர் திடீரென குறைவதற்கும், மாசுபடுவதற்கும், பெட்ரோலிய/ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களைத் தவிர வேறு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. ஒ.என்.ஜி.சி (ONGC) நிறுவனம் 2002ஆம் ஆண்டு முதல், கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுத்து வருகின்றனர். ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு குழுவை சந்திக்கவும், களநிலவரத்தை ஆராயவும் கதிராமங்கலம் சென்றிருந்தபோது மக்கள் பருகும் நிலத்தடி நீர் ஆதாரங்கள் மிக அதிக அளவில் மாசடைந்துள்ளதை கண்டு அதிர்ந்தேன். 100 முதல் 150 அடி ஆழ்குழாய் கிணற்றிலிருந்து வெளிவரும் நீரின் தன்மை எவ்வாறு இருக்கிறதென்றால், குடிநீரின் மேல்பரப்பில் கச்சாஎண்ணெய் (crude oil) படர்ந்திருந்தும், பெட்ரோல் நெடி கொண்டதாகவும், பழுப்பு நிறம் கொண்டதாகவும் மற்றும் சிறு சிறு மண்/தூசித்துகள்கள் கலந்ததாகவும் இருக்கிறது. அதே நீரை மறுநாள் பருக முடியாதபடி, குடிநீரின் நிறம் அடர்ந்த பழுப்பு நிறம் கொண்டதாக மாறிவிடுகிறது.

வியாழன், 28 டிசம்பர், 2017

BBC :ஜாதவ் மனைவியின் செருப்பில் சிப் இருந்தது: பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவின் குல்பூஷன் ஜாதவை சந்திக்கச் சென்ற அவரது மனைவியின் செருப்பில் உலோக சிப் இருந்ததாகவும், அது ஆராயப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் காவாஜா முகம்மது ஆசிஃப் கூறியுள்ளார். ஜாதவை சந்திக்கச் சென்றபோது அவரது குடும்பத்தினர் நடத்தப்பட்ட விதம் குறித்தும், சந்திப்புக்குப் பின் ஜாதவின் மனைவியின் செருப்பு திருப்பி அளிக்கப்படாதது குறித்தும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், சுஷ்மா-வின் குற்றச்சாட்டுகள் முழுவதையும் மறுத்தார்.
"கமாண்டர் ஜாதவை அவரது மனைவியும், தாயும் சந்திக்க அனுமதித்தது முற்றிலும் மனிதாபிமான அடிப்படையிலானது. எல்லா இடைஞ்சல்களையும் தாண்டி இந்த சந்திப்பு நடைபெற்றுவிட்டது. இதை ஒப்புக்கொள்ளவேண்டும். இந்த சந்திப்புக்கு முதலில் 30 நிமிடமே அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களின் வேண்டுகோளை ஏற்று இது 40 நிமிடமாக நீட்டிக்கப்பட்டது. ஜாதவின் தாய் பாகிஸ்தானுக்கு நன்றி சொன்னதில் இருந்தே இந்த சந்திப்பின் வெற்றி தெரியும்,"என்று ஆசிஃப் தெரிவித்தார்.

முத்தலாக் மசோதா பெண்களை பாதுகாக்கிறோம் என்று சொல்வதை ஒரு ....

Parthiban Pakirisamy : முத்தலாக் மசோதா உள்நோக்கம் கொண்டதா ....?!!
RSS கூடாரம் ஒருநாளும் சாமானியனின் அல்லது சிறுபான்மையினரின் நலன்கருதியோ அல்லது குறைந்தபட்சமாக ஒரு துரும்பைக்கூட கனவில் மறந்தும் கிள்ளிப்போடாது என்பது 1925 ல் இருந்து நாம் பார்த்துவருவதே; இந்நிலையில் முத்தலாக் மசோதா என்கிறபெயரில் பெண்களை பாதுகாக்கிறோம் என்று சொல்வதை ஒரு புத்திசுவாதீனமில்லாதவன் கூட ஏற்கமாட்டான் எதிர்த்து கேள்விகள் கேட்பான்!
ஆடுகளை என்றுமே ஓநாய்கள் பாதுகாப்பதில்லை! ஒருவேளை அப்படி பாதுகாக்கிறோம் என்று சொல்லுமேயானால் மிகப்பெரிய கொலைகார சதித்திட்டம் அங்கே அரங்கேறப்போகிறது என்றுதான் பொருளேத்தவிர; பொது சிவில் சட்டத்திற்கான அடித்தமிடுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கல்ல!
ஒரு மதத்தின் மீது கொண்டுவரும் இத்தகைய செயல்பாடுகளை சம்மந்தப்பட்ட மதத்தலைவர்களை அணுகாமல் குறைந்தபட்சம் அவர்களின் ஒட்டுமொத்த எண்ண உணர்வுகளையே கேட்டறியாமல்; சுமார் 20 கோடி மக்கள் வாழும் ஒரு இந்தியத்துணைக்கண்டத்தில் வெறும் நூற்றுக்கும் குறைவான வழக்குகள் இருப்பதை சுட்டிக்காட்டி, இத்தகைய படுபாதக செயலை செய்கிறார்கள் என்றால்; உண்மையில் இவர்கள் பெண்களின் நலனில் அக்கறைகொண்டவர்கள் என்று ஒரு பைத்தியக்காரன் கூட நம்பமாட்டான்.

நீதிமன்றம் :லதா ரஜினிகாந்த் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம் வாடகையை ஏற்காவிட்டால் ..

tamilthehindu :மாநகராட்சி உயர்த்திய கடையின் வாடகையை லதா ரஜினிகாந்த் ஏற்காவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் ஒன்றில், கடந்த 25 ஆண்டுளாக, ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா' தனியார் டிராவல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வாடகையாக மாதம் 3702 ரூபாயை செலுத்தி வந்தனர். இந்நிலையில், திடீரென வாடகை தொகையை 21160 ரூபாயாக உயர்த்தி சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் தொடர்ந்த வழக்கில், மாநகராட்சி அளித்த பதிலில், குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கடைவாடகை மாற்றியமைக்கப்படுவதாகவும், இதுவரை முறையாக செலுத்திவந்த லதா ரஜினிகாந்த் திடீரென எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், உயர்த்தபட்ட வாடகையை செலுத்த விருப்பமில்லாவிட்டால் கடையை காலி செய்துவிட்டு பொது ஏலத்தில் பங்கேற்று கடையை பெறும் முயற்சியில் லதா ரஜினிகாந்த் ஈடுபடலாம் எனவும் மாநகராட்சி தெரிவித்தது.

ராஜேந்திரபாலாஜி : ரஜினி பாஜகவுடன் கூட்டணிக்கு அமைக்க வாய்ப்பிருக்கிறது

ரஜினிக்கு அரசியல் சரிப்படாது!மின்னம்பலம் :ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், போர் வரும்போது பார்த்துக்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி முதல் மீண்டும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். தொடக்க நாளில் பேசிய ரஜினி, வரும் 31ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். நேற்றைய பேச்சிலும் இன்னும் நான்கு நாட்கள் காத்திருங்கள் என்றே குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று (டிசம்பர் 28) செய்தியாளர்களை சந்தித்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "அரசியல் என்றாலே பல சித்து விளையாட்டுகள் தெரிய வேண்டும். ரஜினி ஒரு வெகுளி. அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது. அவருடைய ரசிகர்கள் அனைத்து இயக்கங்களிலும் உள்ளனர். அனைவரையும் சரிசெய்து அரசியல் செய்யும் நிலையை அவர் தாண்டிவிட்டார்.