சென்னை: சென்னையில் பாதாம் கொட்டையைப் பறிக்க முயன்ற சிறுவன் தில்ஷன் மீது கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலை செய்த வழக்கில் கைதான முன்னாள் ராணுவ அதிகாரி ராமராஜுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
சென்னை தீவுத் திடல் பகுதியில் உள்ள ராணுவக் குடியிருப்புக்கு அருகே உள்ள பகுதியில் வசித்து வந்த சிறுவன் தில்ஷன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13 வயதான தில்ஷனும், இன்னும் சில சிறுவர்களும் ராணுவக் குடியிருப்புக்குள்ள உள்ள வாதாம் மரத்திலிருந்து பழங்களை பறிக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னல் கந்தசாமி ராமராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் தில்ஷன் பரிதாபமாக உயிரிழந்தான்