தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வரும் பவானி சிங், கடந்த 23-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்த செய்தி நேற்று முன் தினம் ‘தி இந்து'வில் வெளியானது. இந்நிலையில், தான் ராஜினாமா செய்யவில்லை என்று திடீரென பல்டி அடித்துள்ளார். இதன் பின்னணியில் என்ன நடந்தது என நீதிமன்ற வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை பவானி சிங் தனது ராஜினாமா கடிதத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் ஐஜி குணசீலனி டம் கொடுத்துள்ளார். உடனே சொத்துக் குவிப்பு வழக்கை கவனிப்பதற்காக ஜெயலலிதா நியமித்துள்ள வழக்கறிஞர் செந்திலுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து செந்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை யைச் சேர்ந்த குணசீலன், சம்பந்தம் ஆகியோர் பவானி சிங்கை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினர்.இந்த அரசு வழக்கறிஞர்  தொடர்ந்து  ஆஜாராக வேண்டும் என்பதில்  ஜெயலலிதாவுக்கு இருக்கும்  நிர்பந்தம் புரிந்து கொள்ள கூடியதே.