சனி, 29 ஆகஸ்ட், 2020

50 வருடங்களுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சிதான்! குலாம் போர்க்கொடி

minnambalam : காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை எதிர்த்து கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமைக்கு எதிராக வெளிப்படையான போர்க்கொடி ஏந்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்டு 24 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தபோது சோனியாவுக்கு எதிராக கடிதம் எழுதிய 23 தலைவர்கள் பாஜகவோடு கூட்டு வைத்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுவதாக ராகுல் காந்தி பேசினார் என்று தகவல்கள் வந்தன. அதற்கு குலாம் நபி ஆசாத், நான் பாஜகவோடு கூட்டு சேர்ந்துள்ளதை நிரூபித்தால் கட்சியை விட்டே விலகிவிடுவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆகஸ்டு 28 ஆம் தேதி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் பொதுச் செயலாளரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நியமிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவருக்கு கட்சியில் ஒரு சதவிகிதம் ஆதரவு கூட இருக்காது. மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் தொகுதித் தலைவர்கள் பதவிகளுக்கு கட்சித் தேர்தலை எதிர்ப்பவர்கள் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்று அஞ்சுபவர்களாகத்தான் இருப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு கட்சியை வழிநடத்தினால் கட்சியின் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும், இல்லையெனில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சியில்தான் அமரும்" என்று ஆசாத் கூறினார். 

வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று இல்லை- நேற்று எடுத்த பரிசோதனை முடிவில் தகவல்

எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று இல்லை- நேற்று எடுத்த பரிசோதனை முடிவில் தகவல்     உயிரிழந்த எச்.வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா தொற்று இல்லை என்று நேற்று காலை எடுத்த பரிசோதனை முடிவில் தெரிய வந்தது. 

சென்னை: காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் அறிகுறியற்ற கொரோனா பாதிப்புடன் கடந்த 10-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடலில் கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து அவ்வப்போது பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 10.44 மணிக்கு அவருடைய சளி மாதிரியை எடுத்து மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.     இந்த பரிசோதனையில், எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று முடிவு வந்தது. எனினும் ஏற்கனவே அவரது உடலில் கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தால் நுரையீரலில் சளி தொந்தரவு ஏற்பட்டு, நிமோனியா தொற்று தீவிரமாக உருவெடுத்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.maalaimalar.com

அமித்ஷா பூரண குணமடைந்து விட்டார் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை

.maalaimalar.com :  புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுகள் பரவலாக பலரை பாதித்துள்ளன.  பல்வேறு மாநில மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா பாதிப்புகள் விட்டு வைக்கவில்லை.      இதனிடையே கடந்த 2ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு (வயது 55) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. 

கொரோனா ஊடரங்கு: செப்டம்பர் 30வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு

BBC : கொரோனா பொது முடக்கம்: செப்டம்பர் 30வரை தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கலாம் என்றும் உள்துறை அமைச்சகம் இன்று புதிதாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் புதிய வழிகாட்டுதல்கள் என்ன என்பது விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை செப்டம்பர் 30ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும். எனினும், ஆன்லைன் கல்வி, தொலைதூர கல்வி ஆகியவை தொடர்ந்து நடத்தப்படுவது ஊக்கவிக்கப்படும். ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏதுவாக, 50 சதவீத ஆசிரியர்கள், ஆசியரியர்கள் அல்லாதவர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கலாம். அவர்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ளவர்கள் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளுக்கு வரலாம்.

கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் மதிப்பெண்: ஸ்டாலின் கோரிக்கை

latest tamil news

dinamalar.com : சென்னை: கட்டணம் செலுத்தாத மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளுக்கும், தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்க வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.     இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் பாடங்களின் தேர்வுக்கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தாலும், அது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கு பயனளிப்பதாக இல்லை என்பது மிகவும் கவலை அளிக்கிறது.

பின்லாந்து கல்வி முறை.... ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது... உலகில் தலை சிறந்த

Swaminathan V Vaithilingam :  · உலகில் தலை சிறந்த பின்லாந்து கல்வி முறை..  சிறிது நீண்ட பதிவு என்றாலும் அனைவரும் கட்டாயம் படித்து அறிய வேண்டிய நல்ல பதிவு. முழுவதும் படிப்பது நலம் பயக்கும்.

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ? 

👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது..

 😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை... 😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...

👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...

இந்தியா ... டாப் 100 கல்லூரிகளில் தமிழக கல்லூரிகள் 32... குஜராத் வெறும் 2

Ramesh Durai : மத்திய அரசு வெளியிட்டுள்ள டாப் 100 கல்லூரிகளின் பட்டியலில் திராவிட கட்சிகள் ஆண்ட தமிழ் நாட்டில் 32கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன. குஜராத்திலிருந்து வெறும் 2 கல்லூரிகள் மட்டுமே இடம் பிடித்துள்ளன. 

 1. P.D.பட்டேல் கல்லூரி         2. செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி நம்ம ஜி 

3 முறை முதலமைச்சரா இருந்த மாநிலம்வேற. தமிழ்நாடு  இந்திய அளவில் கல்லூரிகளை அதன் தரத்திற்கேற்ப வரிசைப்படுத்தி தர வரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு வெளியிடும். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள டாப் 100 இந்திய கல்லூரிகளில் இடம்பிடித்த தமிழக கல்லூரிகளின் பெயர்கள் தர வரிசை எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி சேர்க்கை நடைபெற உள்ள இந்த காலகட்டத்தில் இது மாணவர்களுக்கு உதவக்கூடும்.

5 - மாநில கல்லூரி - சென்னை
6 - லயோலா கல்லூரி - சென்னை
10 - PSGR மகளிர் கல்லூரி - கோவை
17 - மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி - சென்னை
22 - தியாகராஜர் கல்லூரி - மதுரை

அமெரிக்க குடியுரிமையை துறந்து சத்தீஸ்கரில் சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா?

 Ambethkar Thangaraj : ‘மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா?’ பிரதமர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகக் குற்ற ம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட 5 சமூகச் செயற் பாட்டாளர்களில் ஒருவர் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ். பெரிய இடத்துப் பெண்ணாக சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டவர். கான்பூர் ஐஐடியில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்று அங்கு வாழ்ந்து வந்தவர். இந்திய பழங்குடி மக்களின் சொல்லொண்ணா துயரங்களைக் கண்டு அவர்கள் வாழ்வை மீட்டெடுப்பதற்காகவே சட்டம் படித்தவர். அமெரிக்க

குடியுரிமையை உதறித் தள்ளிவிட்டு இந்தியா வந்து சத்தீஸ்கர் மாநில பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்துக்காகச் சட்ட போராட்டம் நடத்தியவர். 

டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியையாக பணியாற்றி வந்த தொழிற்சங்கவாதி, சமூகச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் வழக்கறிஞர்தான் சுதா பரத்வாஜ். மாவோயிஸ்ட் என்று பழிசுமத்தப்பட்டு பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இவருடைய உடல் நிலை மிகவும் மோசடைந்துள்ளது.  

சிவ சிவ லிங்க வழிபாடு... அர்த்தம் தெரிந்தால் உங்களுக்கு கோபம் வரும்!

  Dhinakaran Chelliah : · “சிவ-சிவ” இதன் அர்த்தம் தெரிந்தால் என்மீது உங்களுக்கு கோபம் வரும்! உங்களது கோபம் நியாயமானது என்றால், சிவபுராணத்தை படியுங்கள் என வேண்டி கேட்டுக் கொள்வேன். உருவ வழிபாட்டை ஆதரிக்காத வேதங்கள், லிங்க வழிபாட்டை சிஸ்ன வழிபாடு என இகழ்ந்தன. Post vedic text வரிசையில் வரும் 18 புராணங்களில் ஒன்றான சிவ புராணம் லிங்க வழிபாட்டை புகழ்கிறது. சமரசம் செய்வதிலும், பிற கருத்துக்களை உள்வாங்கி அதைத் தனதாக்கிக் கொள்வதில் வைதீகம், வேத புராண காலத்திலிருந்தே பழகிவிட்டது என்பதற்கு லிங்க வழிபாடு சிறந்த உதாரணம். சிவலிங்க வழிபாடு பற்றிய ஆபாசமான கதையை சிவபுராணத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம் சிவ புராணம் நான்கு பாகங்களைக் கொண்டது. சிவ புராணம், மூன்றாவது பாகம், கோடிருத்ர சம்ஹிதை பகுதியில் பன்னிரெண்டாவது அத்தியாயம் முழுக்க முழுக்க சிவலிங்கம் உருவான கதையைக் கூறுகிறது. சுதா முனிவரும் பிரம்மாவும் உரையாடுவது போன்று இந்த அத்தியாயம் எழுதப் பட்டுள்ளது. இந்தப் புராணத்தில் ஏகப்பட்ட இடங்களில் ஆபாசம் மிகுந்துள்ளது. அதில் ஒரு sample ல் தான் இந்தப் பதிவு.இந்த அத்தியாயத்தில் உள்ளவற்றை அப்படியே எழுதினால் பலரது மனது புண்பட்டு விடுகிறது. நூல்களில் உள்ளவற்றை, உண்மையை எழுதாமலும் இருக்க முடியாது.

90s Kids ஏன் வலதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்படுகின்றனர்.

Kandasamy Mariyappan : · 90s Kids ஏன் வலதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்படுகின்றனர். காரணம் நம்மிடம் இன உணர்வு (Ethnic pride), மொழி உணர்வு (Linguistic pride), கலாச்சார உணர்வு (cultural pride) குறைந்து விட்டது. இந்திய ஒன்றியத்தில் விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தெற்கே குறிப்பாக தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய இன உணர்வு போராட்டம் நடைபெற்றது 1. தென்னிந்தியாவில் ஒரு மிகப்பெரிய மருத்துவராகவும் சென்னையில் ஒரு மிகப்பெரிய மருத்துவமனைக்கு உரிமையாளராகவும் உருவாகியிருக்க வேண்டிய டாக்டர். நடேசன் (முதலியார்) அவர்கள் இன உணர்வால் 1912ல் திராவிட மக்களுக்காக, உரிமைகள் சார்ந்த சொத்துதான் அவசியம் என்று தனது பயணத்தை, உரிமை போராட்டத்தை கையில் எடுக்கிறார்.

2. தென்னிந்தியாவின் பிரபல மருத்துவராகவும் சென்னையில் மற்றும் ஒரு மிகப்பெரிய மருத்துவமனைக்கு உரிமையாளராகவும் உருவாகியிருக்க வேண்டிய டாக்டர். மாதவன் (நாயர்) திராவிட இன உணர்வின் காரணமாக 1917ல் தனது வாழ்க்கையை இன உணர்வுக்காக அர்ப்பணிக்கிறார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் திராவிட இன நிலைப்பாட்டை பிரிட்டிஷ் அரசிடம் எடுத்து கூறுவதற்காக இங்கிலாந்து சென்ற டாக்டர். மாதவன் (நாயர்) அங்கே இறந்து விடுகிறார்.

வடகொரியா கிம்மின் சகோதரி பொது நிகழ்ச்சிகளில் இல்லை ... நடப்பதெல்லாம் மர்மம்

Kim Jong Un’s younger sister, Kim Yo Jong, has vanished from public view in what could be another sign that she’s taken more control in the regime, an expert said.  இலக்கியா .com  : வடகொரியாவின் புதிய தலைவராக கிம் ஜாங் உன்னின் சகோதரி முடிசூட்டுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர் திடீரென பொதுவெளியில் தோன்றாமல் மாயமாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக, கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் அவருடைய சகோதரி கிம் யோ , தனது சர்வாதிகார சகோதரரான கிம் ஜாங் உன்னால் பழிவாங்கப்பட்டு விடுவார் என்கிற பயத்தில் அவர் வெளியில் தோன்றாமல் மாயமாகி இருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களில் 32 வயதான, கிம்மின் சகோதரி கிம் யோ வடகொரியாவின் முக்கிய பொறுப்புகளுகு கொண்டுவரப்பட்டார். அவருடைய சகோதரருடன் பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி தென்பட்ட அவர் தென்கொரியாவுக்கு எதிராக கடுமையான அறிக்கைகளையும் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

அமரர் வசந்தகுமார் .. அதானி ((பொன்னார்) பண பலத்தை முறியடித்து தேர்தலில் வெற்றி மக்கள் தொண்டன்

 Raj Dev : · நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மரணம் அடைந்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த போது அவர் ஒதுங்கி இருந்ததாக கடும் விமர்சனங்களை எதிர் கொண்டார். அதன் பின்னர் வெளியில் வந்து சில உதவிகளை செய்தார். அப்பொழுது தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிகிறது.   காங்கிரசுக்கு இனி எதிர்காலமில்லை; தேசிய கட்சியின் இடத்தில் இனி பாஜக தான் என்று காங்கிரசின் முக்கியப் புள்ளிகளை காவி கும்பல் வலை வீசிய நேரத்தில் வசந்தகுமார் காங்கிரசின் பக்கம் உறுதியாக நின்றார்.

 2014 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழகக் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதிலிருந்து பின் வாங்கிய நேரத்தில் வெற்றி தோல்வி பற்றிய கவலையின்றி நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் பொன்னாரை மிகவும் நெருங்கி வந்தார். 

திராவிட இயக்கங்கள் மீதும் தமிழகத்தின் மீதும் சேறு வாரி வீசுகிறார்களா ...... ஈழத்தமிழர்கள்?

Kalai Selvi : குருபரன் குமரவடிவேல் : திராவிட முன்னேற்ற கழகத்தை பாருங்கோ ! திமுகவை சொல்லிப் போட்டன் என்றதுக்காகாக கோவிக்க போறாங்க. ... தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தொடர்பாக நாங்கள் எவ்வளவு கழுவி ஊத்தினாலும் ...... 

 மேற்கண்ட வரிகளை உதிர்த்தவர் யாழ்ப்பாண பல்கலை கழக சட்ட விரிவுரையாளர் குருபரன் குமரவடிவேல் என்பவராகும். அதென்ன திமுகாவை சொல்லிப்போட்டன் என்பதற்காக கோபிக்க போகிறார்கள்? அதென்ன தமிழ்நாட்டு அரசியலை நாங்கள் எவ்வளவு கழுவி ஊத்தினாலும்? இதுதான் யாழ்ப்பாண குறுந்தேசிய ஆதிக்கம் புலிகள் வளர்த்த பாசிச கலாச்சாரம்! கொஞ்சம் கூட நன்றியோ தராதரமோ அற்ற வார்த்தைகள்..

இவர் மட்டுமல்ல அநேகமான புலம் பெயர் ஈழத்தமிழர்கள் குறிப்பாக புலி ஆதரவாளர்கள் இது போன்ற வரிகளை பொதுவெளியில் அரங்கேற்றுபவர்கள்தான்.

அது அவர்களின் கல்வி தகமை மற்றும் கடந்த கால தவறான அரசியல் பாதை போன்றவற்றின் பக்க விளைவுகள் என்று கருதி கொண்டோம்.     எவ்வளவு காலத்துக்குத்தான் தமிழகம் இந்த நன்றி கொன்றவர்கள் நய வஞ்சக பரப்புரைக்கு மௌனமாக இருப்பது?

எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதை இந்த புலி ஆதரவாளர்கள் இதை புரிந்து கொள்ளவேண்டும்.

பழைய பேருந்துகளை பெண்கள் கழிவறைகளாக மாற்றும் திட்டம். கர்நாடக அரசு துவக்கியுள்ளது.

கர்நாடக அரசின் ‘ஸ்த்ரீ டாய்லெட்’ ஸ்மார்ட் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.   கர்நாடக மாநில போக்குவரத்தில் இயங்கப்படாமல் உள்ள பழைய பேருந்துகளை பெண்களின் மொபைல் கழிவறையாக மாநில அரசு மாற்றி வருகிறது. 

இதற்காக ஒரு பேருந்துக்கு முறையே தலா 12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி மாற்றப்படும் பேருந்துகளுக்குள் மூன்று இந்திய முறை கழிவறைகள், இரண்டு வெஸ்டன் கழிவறைகள் உள்ளன. மேலும், தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கக்கூடிய அறையும், சானிட்டரி நாப்கின் வசதிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த ‘ஸ்த்ரீ டாய்லெட்’ பேருந்துகள் முழுவதும் சோலார் மூலம் இயங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் முதல் பேருந்தை மாநில துணை முதல்வர் லக்ஷ்மன் சவாடி கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) திறந்து வைத்தார். இந்த ‘ஸ்த்ரீ டாய்லெட்’ பேருந்து மெஜஸ்டிக் மத்திய பேருந்து நிலையத்தில் பயன்பாட்டுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2016ல் பூனாவில் 3 பேருந்துகள் மொபைல் கழிவறையாக மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியை நீக்குங்க.. நீக்க முடியலன்னா 22 மொழிகளையும் சேருங்க".. பெங்களூர் மெட்ரோவுக்கு கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம்

Hemavandhana -tamil.oneindia.com: பெங்களூரு: "எல்லா இடத்துலயும் இருக்கிற ஹிந்தியை மொத்தமாக நீக்க வேண்டும்" என்று பெங்களூரு மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திடம் ஒரு உத்தரவிடப்பட்டுள்ளது.. "ஒன்று ஹிந்தியை நீக்குங்க, இல்லையென்றால், 22 மொழிகளையும் அதுகூட சேர்த்து வைங்க" என்று கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் இந்த உத்தரவில் அதிரடியாக உள்ளது. கர்நாடகாவில், தாய்மொழியான கன்னடத்தை பலப்படுத்தவும், மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.. அதில் ஒன்றுதான் கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் என்பது! யாரெல்லாம் கன்னட மொழி பேசாத ஊழியர்கள் இருக்கிறீர்களோ, அவர்கள் 6 மாசத்துக்குள்ள கன்னட மொழியை கற்க வேண்டும், இல்லாவிட்டால் டிஸ்மிஸ்தான் என்று வங்கிகளில் பணிபுரிபவர்களுக்கு உத்தரவு ஒன்றுகூட 2 வருடத்துக்கு முன்பு போடப்பட்டது.
கன்னட மொழி கன்னட மொழி இது சம்பந்தமாக முன்னாள் முதல்வர் சித்தராமையா பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்திருக்கிறார்.. மேலும் முன்பை விட சமீப காலமாக கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் வேகமாக செயல்பட்டு வருகிறது..  

பாஜகவில் முதல் கூட்டம்: அண்ணாமலை மீது வழக்குப் பதிவு!

 

பாஜகவில் முதல் கூட்டம்: அண்ணாமலை மீது வழக்குப் பதிவு!

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  கர்நாடகாவில் 10 வருடங்களாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய கரூரைச் சேர்ந்த அண்ணாமலை, கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பினார். தனது 60 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகத் தெரிவித்த அவர், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விஷயங்களில் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை உண்டாக்கியது.               இந்த நிலையில் டெல்லியில் கடந்த 25ஆம் தேதி பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு நேற்று கோவை மாவட்டம் சித்தாப்புதூரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்த அண்ணாமலைக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்போது பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டுக்கு மாற்றுப்பாதை தேவை. தமிழ்நாட்டில் பாஜக முக்கியமான சக்தியாக உருவெடுக்கும். தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை” என்று தெரிவித்தார். தமிழ்நாடு கடந்த 20 வருடங்களில் வளர்ச்சி இல்லாமல் நின்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநிலங்கள் சீராய்வு மனு.. மஹாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மே.வங்கம்

dhinamalar : புதுடில்லி: நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் எனக்கோரி, மஹாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மே.வங்கம் மாநிலங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

செப்டம்பர் முதல் வாரத்தில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஹால் டிக்கெட் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் தேர்வு நடத்துவதற்கு பா.ஜ., ஆளாத மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், தேர்வை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மஹாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மே.வங்கம் மாநிலங்கள் சார்பில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை நடத்த அனுமதி அளித்து ஆக.,17 ல் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் 5 குழுந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த தாய்

இலங்கையில் 5 குழுந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த தாய்
ilakkiyainfo.com : இலங்கையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை 29 வயது மதிக்கத்தக்க தாயொருவர் பெற்றெடுத்துள்ளார். கொழும்பு 08, டி சொய்சா மகளிர் வைத்தியசாலையிலேயே பெபிலியாவல பகுதியைச் சேர்ந்த 29 வயதான தாய், இன்று (வெள்ளிக்கிழமை) காலை, 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார். வைத்தியசாலையின் துணை இயக்குநர் டாக்டர் புஷ்பா கமலாட்ஜ், இது தாயின் முதல் கர்ப்பம் என்றும் கூறியுள்ளார். அத்துடன், குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதேநேரத்தில் இயல்பை விட சற்றே குறைந்த எடை கொண்டவர்கள். அவர்கள் வைத்தியசாலையில் குழந்தை பிரிவில் கவனிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார் ! கொரானா பாதிப்பில் மருத்துவ மனையில்.

மாலைமலர் : : கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை:  காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் விஜய் வசந்த் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

கொரோனா வைரஸ் அந்தமானை சேர்ந்த பழங்குடியினரையும் தாக்கியது

zeenews.india.co : புதுடெல்லி: இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளை மட்டுமல்ல, கொரோனா வைரஸ் நாட்டின் தொலை தூர இடங்களிலும் ஆழமாகப் பரவியுள்ளதோடு,அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் க்ரேட் அந்தமான் பழங்குடியினரையும் பாதித்துள்ளது. 

குறைந்தது 10 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 6 பேர் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. தொலை தூர தீவு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக தொலைதூர தீவுக்கூட்டத்தில் உள்ள பிற பழங்குடியின மக்களின் பாதுகாப்பு குறித்து அரசு கவலை கொண்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் தீவுக்குச் சென்று பழங்குடியின உறுப்பினர்கள் அனைவருக்கும் பரிசோதனையை மேற்கொண்டபோது இந்த கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. நோய்தொற்று ஏற்பட்டவர்கள் போர்ட் பிளேயரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அறிகுறிகள் இல்லாமல் இருந்தால், 10 நாட்களுக்கு பிறகு, அவர்கள் மீண்டும் தங்கள் தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள், அங்கே அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார்கள்.

கியூபா .. வாழ்க்கை செலவு குறைந்த சுவாரசியமான நாடு .. வீடியோ

..  கியூபா பற்றி எல்லோரும் ஓரளவு அறிந்திருப்போம்   அவற்றை இந்த காணொளியில் கொஞ்சம் விலாவாரியாக பார்ப்போமா?  

உலகில் கியூபாவில் மட்டுமே மிக பழைய கார்கள் இன்றும் ஓடிக்கொண்டு இருக்கின்றது . .. உல்லாச பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான ஒரு நாடு என்ற பெயரை அது பெற்று இருக்கிறது . மேலும் அமேரிக்கா கனடா போன்றநாடுகளில் உள்ளவர்கள் .மிகவும் விரும்பி செல்லும் இடமாக அது மாறிவருகிறது .      குறிப்பாக இந்த நாடுகளில் உள்ள தெற்கு ஆசியர்களை மிகவும் கவர்ந்த இடமாக இது உள்ளது .     அமேரிக்கா கனடா வாழ் பல இலங்கை இந்தியர்கள் இங்கு தற்காலிக சின்னவீடுகள் செட்டப் பண்ணி உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது . .. கமலாகர் 

5 மாதம் ரகசியமாக திட்டமிட்ட 23 மூத்த காங்கிரஸ் தலைவர்கள்

காங்கிரஸ் கூட்டத்தில் கடிதம் ஏற்படுத்திய பரப்பரப்பு; 5 மாதம் ரகசியமாக திட்டமிட்ட 23 மூத்த தலைவர்கள்    .dailythanthi.com:   காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்கள் கடந்த 5 மாதமாக ரகசியமாக திட்டமிட்டு ஆலோசனை நடத்தில் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

 புதுடெல்லி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், சோனியா காந்தி இடைக் கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.                                    அவர் இடைக்கால தலைவர் பொறுப்பை ஏற்று கடந்த 10-ந் தேதியுடன் ஓராண்டு ஆகிறது. சோனியா காந்தியே தலைவராக இருக்க வேண்டும் என்று கட்சியில் ஒரு பிரிவினர் கூறி வரும் நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சியில் உள்ள இளம் தலைவர்கள் பலர் சமீப காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.                    இந்த நிலையில், காங்கிரசுக்கு சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய, கட்சி அலுவலகங்களுக்கு வரக்கூடிய முழுநேர தலைமை தேவை என்றும், கட்சியின் முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் கோரி மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 23 பேர் சமீபத்தில் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள்.             இந்த கடிதத்தில் குலாம்நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, மிலிந்த் தியோரா மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் முதல்-மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

RSS IAS, IPS கோச்சிங் சென்டரி்ல் படித்தவர்தான், அண்ணாமலை.

அண்ணாமலை உனது முழு மாக்ஸையும் கூட்டினால்.. உன்னோட மெயின்ஸ் மாக்ஸ் வந்து 927 வருகிறது. அந்த வருஷம் வந்து மெயின்ஸ்ல 1190 வரைக்கும் வாங்கினவங்க எல்லாம் இருக்கிறாங்க . அதில இன்டெர்வியூவில 270 பேர் செலெக்ட்டாகி இருக்கிறாங்க . அதில ஒருத்தர் கூட 240 மாக்ஸ் வங்கல. உனக்கு வந்து இன்டெர்வியு மார்க் வந்து 240 . அதாவது செலெக்ட்டானவங்கள்ள 270 பேர்ல யாருக்குமே கொடுக்காத நிலையில நீ மட்டும் எப்படி இன்டெர்வியூவில 240 மாக்ஸ் வாங்கின? ஐ ஏ எஸ் வாங்கினவன் கூட 240 வங்காள . ஐ பி எஸ் ஹோம் காடர் வாங்கினவன் கூட 240 வங்கல இப்படி யாருமே 240 வங்கல நீ மட்டும் எப்படி வாங்குனேன்னு பார்த்தா .. உனக்கு பொருளாதார இடஒதுக்கீடு .. EWS பற்றி அடிப்படை புரிதலே இல்ல .. அப்புறம் காமராஜர் எப்போ முதலமைச்சரான இருந்தார்ன funder mental விஷயமே தெரியல்ல . இப்படி அடிப்படையான பல விஷயங்கள் உனக்கு தெரியல்ல .. நீ எப்படி இன்டெர்வியூவில 240 மாக்ஸ் வாங்கினே? நீ வந்து அந்த ஆர் எஸ் எஸ் நடத்திய சங்கல்ப் என்ற இன்ஸ்டிடியூட்ல படிச்சதால .. அவங்க இன்புளூயன்ஸ் பண்ணி உன்னை ... அண்ணாமலையே இதற்கு நீ விளக்கம் கொடு .. அப்ப இருந்தே நீ அரசியலுக்கு வர்றதற்காக ஆர் எஸ் எஸ் உன்னை தயார் படுத்தி ..... சொல்லு அண்ணாமலை சொல்லு

Swaminathan V Vaithilingam : #சங்கல்ப்_என்ற_அமைப்பு #RSSசின் #துணை_அமைப்பு, * IAS மற்றும் IPS கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறது,சங்கல்ப்(Sangalp). 

* இவர்கள் நடத்தும் IAS, IPS கோச்சிங் சென்டரி்ல் படித்தவர்தான், அண்ணாமலை.

* 2019 ஆம் வருடம்,இந்த அமைப்பின் கோச்சிங் சென்டரில் படித்தவர்கள், 600 பேருக்கு மேல் தேர்வு பெற்றுள்ளனர்..! 

* சங்கல்ப் என்ற அமைப்பின் மூலம் படிச்ச அண்ணாமலை, எழுத்துத் தேர்வுல குறைந்த மதிப்பெண் வாங்கினாலும், நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இப்படிப் பல IAS ,IPS அதிகாரிகள் அறிவுத் தகுதி இல்லாமல் இருக்கின்றனர்!

சரி!இந்த சங்கல்ப் அமைப்பு யாருதுன்னு தெரியுமா?
*
மருத்துவத்துக்கு நீட் தேர்வு வர வேண்டும் என்று,வழக்கு போட்டு, அதை தமிழகத்துக்கும் திணித்து விட்ட அதே அமைப்பு தான்...!

யார் இந்த MGR? மறைக்கப்பட்ட உண்மைகள்.. நடுநிலை பார்வை


 Kalidasan Swaminathan
: கலைஞருக்கு எதிரா சர்க்காரியா கமிசன் மட்டுமே.ஆனா MGR க்கு எதிரா பால்கமிசன், ரே கமிசன் எரிசாராய முறைகேடு, மருத்துவ கல்லூரி சீட்டு முறைகேடு, பால்டிகா கப்பல் நிலக்கரி பேர முறைகேடு,ராபின் மெயின் முறைகேடு, பாஸிச அடக்குமுறை ஆட்சி, ஏகப்பட்ட துப்பாக்கி சூடுகள், பொருளாதார நாசம், பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு, நீதித்துறை மிரட்டல் என எண்ணற்ற குற்றச்சாட்டுகள். ஆனால் எதுவுமே பேசப்படவில்லையே ஏன்? 

இவர் சினிமாவில் நடிகராக உத்தமர், வீரர், மக்கள் போராளி, குடியை எதிர்ப்பவர் என பல வேசங்களில் வலம் வந்தவர். ஆனால் உண்மையில் அவர் யார்? திமுகவின் பொருளாளராக அனைத்து அதிகாரத்துடன் இருந்த MGR கணக்கு கேட்டாராம். ஆனா கலைஞர் கணக்கு தரவில்லையாம். அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்களாம். வேடிக்கையா இருக்குமே?      ஆனால் ஊரெல்லாம் இதே பேச்சுதான். எல்லோரும் நம்பினர். ஆனா இந்திராவின் மிரட்டல்தான் MGR ரின் இந்த பேச்சுக்கும் நடத்தைக்கும் காரணம். MGR ஒன்னாம் நம்பர் பயந்தாங்கொள்ளி. மத்தியில் யார் பிரதமரோ யாரிடம் வருமானவரித்துறை இருக்கிறதோ அவர்களை கண்டாலே நடுக்கம்தான். அப்படித்தான் இந்திராவின் அடிமையாக மாறி திமுகவை பிரித்தார்.  

MGR ன் அடிமைத்தனத்தால் கச்சத்தீவை இந்திரா கொடுத்தபோது திமுக மட்டுமே அதை எதிர்த்தது. அதிமுக அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டது. சட்டமன்ற தீர்மானத்தை கூட ஆதரிக்கவில்லை.

2016 ல் ஜெ சட்டமன்றத்தில் கச்சத்தீவை பற்றி வாய்கிழிய பேசியபோது MGR ன் கோழைத்தனத்தை பற்றி பேசாதது ஏன்? 

பிரான்ஸ் நிர்வாண கடற்கரையில் கொரோனா பாதிப்பு

ceylonmirror.net : பிரான்சின் தெற்கே பிரபலமான நிர்வாண ரிசார்ட் ஒன்றில் கூடிய பொதுமக்களில் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கவலை அளிப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்சின் மான்ட்பெல்லியர் பகுதியில் இருந்து சுமார் 30 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள Cap d’Agde ரிசார்ட் சென்று திரும்பியவர்களில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 பேர் அறிகுறிகளுடன் பரிசோதனை கூடங்களை நாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ரிசார்ட் செல்லும் பொதுமக்களுக்கு சுகாதார   அதிகாரிகளால் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  அங்கு செல்லும் மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் முகக்கவசம் கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கடந்த வாரம் திங்களன்று குறித்த ரிசார்ட்டுக்கு விஜயம் செய்தவர்களில் 194 பேருக்கு சொரோனா சோதனை மேற்கொண்டதில், 38 பேர் மட்டும் பாதிப்பின்றி தப்பினர். 

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

நீட் தேர்வு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு; உடல் வெப்பம் 99.4 டிகிரிக்கு மேல் இருந்தால் தனி அறையில் தேர்வு

dailythanthi.com : நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுத உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்பட்டது. உடல் வெப்பம் 99.4 டிகிரிக்கு மேல் இருந்தால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) கூறியிருக்கிறது. 

சென்னை, கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடைபெற இருந்த நீட் தேர்வு, மாணவர்களின் நலன் கருதி ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்யவேண்டும் என்றும், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்தநிலையில் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.), அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி தேர்வு நடக்கும் என்று அறிவித்தது. அதற்கான ஏற்பாடுகளில் தேர்வு முகமை தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் நாடு முழுவதும் எவ்வளவு மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள் என்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

கொரொனா தொற்று, மரணங்கள் குறித்து பொய்யான புள்ளிவிவரங்கள் கொடுக்கும் தமிழக அரசு

LR Jagadheesan : · நீண்டநாட்களாக ஒரு பொய்யான பிம்பத்தை இங்கே சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் திராவிட, அம்பேட்காரிய, தலித்திய முற்போக்காளர்களே இதில் அதிக முன்னணியில் நின்று தீவிரமாக களமாடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக சுகாதாரத்துறை கோவிட்.19 தொற்றை மிகச்சிறப்பாக கையாள்வதாகவும் தமிழ்நாட்டு சுகாதாரத்துறை இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்வதாகவும் செய்யப்படும் தொடர்ச்சியான வெற்றுப்பீத்தல்கள் வேதனையை தருகின்றன ஆனால் அதற்கு மாறான சில அடிப்படை தரவுகளை, சம்பவங்களை, தகவல்களை இவர்கள் பெரும்பாலும் பேசுவதில்லை. பொதுசுகாதாரத்துறையின் சில சில தனிப்பட்ட சாகச சம்பவங்களைக்காட்டி தமிழ்நாட்டில் எல்லாமே மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதாக இவர்கள் உருகும் உருகல் முழு உண்மையல்ல. முழுப்பொய்களைவிட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை. அதுவும் கொள்ளைநோய்காலத்தில்.

தமிழ்நாட்டின் இன்றைய 69% இட ஒதுக்கீட்டிற்கும் சமூகநீதிக்கும்.. பெரியார்.. கலைஞர்!

  LR Jagadheesan : · கலைஞரின் மகத்தான வரலாற்று சாதனைகளில் இன்னொன்றுக்கு இந்திய உச்சநீதிமன்றம் இன்று முதற்கட்ட அங்கீகாரம் அளித்திருக்கிறது. சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் இன்றைய 69% இட ஒதுக்கீட்டிற்கும் சமூகநீதிக்கும் இரண்டே இரண்டுபேர் தான் முதன்மையான காரணகர்த்தாக்கள். சமூகநீதிக்காவலர்கள். 

ஒருவர் பெரியார். அடுத்தவர் கலைஞர். அந்த இருவரும் தான் 24 மணிநேரமும் சமூகநீதி குறித்து உண்மையான அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் மாறும் சமூக தேவைக்கேற்ப சமூகநீதியை புதுப்புது வடிவத்தில் நிறுவனமயமாக்கிய சாதனையாளர்கள். சரி. இப்போது இன்னொரு முக்கிய கேள்வி எழுகிறது. தலித் என்கிற அரசியல் அடையாளத்துக்குள் இருக்கும் அல்லது இருப்பதாக சொல்லப்படும் அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்த்து இந்த வழக்கை தொடுத்தது யார்? அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அணிதிரண்டு ஆதரித்த கட்சிகள், அமைப்புகள், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள், கல்விநிலையங்கள், அறிவுஜீவிகள் யார்? ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்ட அருந்ததியர்களுக்கான ஆகக்குறைந்தபட்ச நீதியான இந்த உள் ஒதுக்கீட்டையும் கூட கொடுக்கக்கூடாது என்று இவர்கள் இவ்வளவு வன்மமாக எதிர்க்க வேண்டிய தேவை என்ன? அதன் பின்னிருக்கும் உளவியல் எது?    

இ-பாஸ் இன்னும் ரத்து செய்யப்படவில்லை ..திமுக தேர்தல் பணிகளை தொடங்கக் கூடாது என்பதற்காகத்தான்...

வெப்துனியா :  தமிழகத்தின் ஏன் இ-பாஸ் இன்னும் ரத்து செய்யப்படவில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள காரணம் நகைப்புக்கு உள்ளாகியுள்ளது. 

 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணங்களால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.          இந்நிலையில் இபாஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மக்கள் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் விதமாக தளர்வுகள் வழங்கப்பட்டன.        இதனிடையே மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் மாநிலங்களுக்கு இடையிலோ அல்லது மாவட்டங்களுக்கு இடையிலோ பயணிக்க மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.       இ-பாஸ் முறையை ரத்து செய்யலாமா? வேண்டாமா? என முதல்வர் வரும் 29 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.        இந்நிலையில் இ-பாஸ் ரத்து செயப்படாதது இதற்காக தான் என ஒரு காரணத்தை உதயநிதி கூறியுள்ளார்.      அவர் கூறியதாவது, திமுக தேர்தல் பணிகளை தொடங்கக் கூடாது என்பதற்காகத்தான் இ-பாஸ் முறையை தமிழக அரசு நீட்டித்து வருகிறது. 

அருந்ததியர் பிரிவினருக்கான உள் இடஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

.maalaimalar.com:  புதுடெல்லி: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தமிழக அரசு அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2011-ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த ஜே.யசோதா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மாற்றல் மனு ஒன்றை 2015-ம் ஆண்டில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி கடந்த 2015-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினித் சரண், எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வு கடந்த மாதம் 16-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.     

வாய்ப்புகளே பார்ப்பனர்களை மேற்கத்திய நாடுகளை நோக்கி நகர்த்தியது... பி டிஆர் பி தியாகராஜன்


   ptrmadurai.com : தமிழ் பிராமணர்களின் குடியேற்றம் பொதுவுடைமை மற்றும் அடையாள அரசியலால் அல்ல, வாய்ப்புகளால் இயக்கப்பட்டது. 

சமூக நீதி இயக்கத்தின் மூலமாக இணையற்ற, அனைவரையும் உள்ளடக்கிய பயன்களை தமிழ்நாடு அடைந்துள்ளது. இது அனுபவங்களால் மட்டுமல்ல அசைக்கமுடியாத தரவுகளின் அடிப்படையிலும் ஊர்ஜிதமாகிறது.

August 26, 2020 திரு. துமேவின் "கமலா ஹாரிஸ் தனது தாயின் பின்னணியைப் பற்றி என்ன சொல்லவில்லை" (WSJ, 20 ஆகஸ்ட் 2020) என்ற கட்டுரை மேலோட்டமானதாகவும், சிக்கலான பிரச்சனைகள் குறித்த தவறான புரிதலோடு இருப்பதாலும் ஏமாற்றமளிக்கிறது. ருமதி ஹாரிஸின் இந்திய வம்சாவளியை பற்றி உரையாற்ற முனைவர் துமே தேர்வு செய்தபோது, அவரது பார்வை பரந்ததாக இருக்க வாய்ப்பிருந்தது. பல முக்கியமான பிரச்சனைகள் குறித்து அவர் பேசியிருக்கலாம். சாதி மற்றும் பொருளாதார வர்க்கத்தின் பரிணாமம், சமூக நீதி பற்றிய மாறுபட்ட கருத்துக்கள், சமத்துவமான வாய்ப்பின் செயல்திறன், நடைபாதை சாலைகளின் நீள அளவு அல்லது தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற எளிய பொருளாதார புள்ளிவிவரங்கள் மூலம் சமூக மேம்பாட்டு குறிகாட்டிகளைக் கொண்டு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் உள்ள சமூக விளைவுகளை ஒப்பிட்டிருக்கலாம்.

சுஷாந்த் சிங் மரணம்.. கசிந்தது வாட்ஸ் அப் உரையாடல்.. நடிகை ரியா மீது போதை தடுப்பு பிரிவு வழக்கு


 Velmurugan&nbsp - /tamil.oneindia.com : டெல்லி: நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் அடுத்த திருப்பமாக அவரது காதலி ரியா மீது டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் திடீர் திருப்பமாக ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வுசெய்தத்தில் நடிகை போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரியா சக்போர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட தொடர்ச்சியான வாட்ஸ்அப் செய்திகளில் எம்.டி.எம்.ஏ, மரிஜுவானா போன்ற போதைப்பொருட்களை ரியா அடிக்கடி பயன்படுத்துவதாக கூறப்பட்டது. அதில் ஒரு உரையாடலில், ரியா கவுரவ் அய்ரா என்ற போதைப்பொருள் வியாபாரிக்கு பேசியிருக்கிறார். "நாங்கள் கடினமான மருந்துகளை அதிகம் எடுத்துகொண்டது இல்லை. எம்.டி.எம்.ஏவை ஒரு முறை முயற்சித்தேன்", "உங்களிடம் எம்.டி இருக்கிறதா?" என கேட்கிறார். 

எல்லா வகை கொரோனாவையும் தடுத்து நிறுத்தும் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

எல்லா வகை கொரோனாவையும் தடுத்து நிறுத்தும் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கொரோனா வைரஸ்

BBC : ராஜிவ் காந்தியை புலிகள்தான் கொன்றனர் என ஆன்டன் பாலசிங்கம் தெரிவித்தார் .. எரிக் சொல்ஹெய்ம்

ராஜீவ் கொலை வழக்கு: ஆன்டன் பாலசிங்கம் கூறியதாக நார்வே முன்னாள் தூதர் பதிவிடும் சம்பவங்கள்bbc  :இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் என தன்னிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான நார்வே முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.   டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.     இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி வந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.     இலங்கைக்குள் தனி நாட்டை உருவாக்க இந்தியா ஆதரவளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.           ராஜீவ் காந்தியை கொலை செய்த புலிகள் மீது அவர் எந்தவித அன்பையும் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.    இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நார்வே 10 ஆண்டுகளாக இந்தியாவுடன் பேசியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.        முன்னதாக, ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை என டுவிட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.        

எரிக் சொல்ஹெம்   அவ்வாறு ராஜீவ் காந்தியை கொலை விடுதலைப் புலிகள் கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் இருப்பின் உலகிற்கு வெளிப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். 

எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை; நீட் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு

எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை; நீட் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு .dailythanthi.com/ :எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய சோனியா காந்தி, ‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.        அத்துடன் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் முதல்-மந்திரிகள் முடிவு செய்து உள்ளனர். 

 புதுடெல்லி, மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு வருகிற செப்டம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழகத்தில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதேபோல் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.   கொரோனா காரணமாக இந்த தேர்வுகளை தள்ளிவைக்குமாறு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. இதேபோல் இந்த தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையும், தேர்வு அட்டவணையை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது.

ஐ பி எஸ் அண்ணாமலை மீது மதுக்கூர் செட்டி ஐ பி எஸ் அதிகாரியின் மர்மமரண சந்தேகம்? ??

 
ரூபன் சக்கரவர்த்தி :
அண்ணாமலை

ஆடு மேய்க்கவெல்லாம் வேலையை ரிசைன் பண்ணிட்டு வரல. அவன் வெளியே வந்த முக்கிய காரணம் அவனோட உயர் அதிகாரி மதுக்கர் ஷெட்டி அவர்களின் மரணம். மதுக்கர் ஷெட்டி எப்படி இறந்தாரு அப்படிங்கறது மர்மமாவே இருக்கு. அதோட விசாரணை இன்னும் போய்ட்டு இருக்கு. அதை பற்றிய உண்மைகள்
வெளிவராமலிருக்க, அதிலிருந்து தப்பிக்க இவன் வேலையை ராஜினாமா பண்ணிட்டு வந்து பாஜகவில் அடைக்கலம் ஆகி இருக்கார் . 

ரங்கநாதன் செஞ்சி :  கொலை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் தமிழக பாஜக வில் சேர வேண்டும் என்று மிரட்டி சேர்க்க பட்டுள்ளார் 

 இவர்  தாமாகவே வேலையை விட்டு வரவில்லை. இவன் காக்கி உடையில் இருந்து கொண்டு காவி பாஜக வுக்கு மாமா வேலை பார்ப்பதை பொறுக்க முடியாத கன்னடத்து பொதுமக்கள்தான் போராட்டம் நடத்தி இவரை  துரத்தியடித்திருக்கிறார்கள்

புதன், 26 ஆகஸ்ட், 2020

நடிகை வனிதாவின் கணவர் பீட்டர் பால் வீடு திரும்பினார்

<p>வனிதாவின் 3 ஆவது கணவர் பீட்டர்பாலுக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன.</p>
tamil.asianetnews.com: உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீட்டர் பால் குறித்து வனிதா நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீட்டர் பால் குறித்து வனிதா நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்." வனிதாவின்  கணவர் பீட்டர்பாலுக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் இதுகுறித்து, வனிதாவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், “தன் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி, நிச்சயம் இந்த கடுமையான காலத்தை கடந்து வந்துவிடுவேன். கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. நிச்சயம் அற்புதம் நடக்கும், பீட்டர் பாலை மீட்டு கொண்டு வருவேன்” என உருக்கமாக பதிவிட்டார்.

BBC : வீட்டுக்கு தகரத்தடுப்பு: நடந்தது என்ன? கொரோனா சிகிச்சைக்கு பிறகு திரும்பியவரின் வீடு

BBC -முரளிதரன் சாசிவிஸ்வநாதன்: சென்னை குரோம்பேட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரது வீட்டின் வாயிலை நகராட்சியைச் சேர்ந்தவர்கள் தகரத்தை வைத்து முழுமையாக மூடிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது? சென்னை குரோம்பேட்டை புருஷோத்தமன் நகரில் இருக்கிறது 'பாதல் பேலஸ்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு. இங்கு உள்ள 'பி பிளாக்'கில் வசித்து வருகிறார் ஹேம்குமார். இவருக்கு கடந்த ஆகஸ்ட் 14 தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ரெலோ என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். 

கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் அன்று மாலையில் அவரது வீட்டிற்கு வந்த பல்லாவரம் நகராட்சியைச் சேர்ந்தவர்கள், வீட்டு வாயிலை முழுமையாக மறைக்கும்படி தகரத்தை அடித்து மூடுவதைப் போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.">இதனால், "அவசர தேவைக்கு எங்களால் வெளியே செல்ல முடியவில்லை" என ஹேம்குமார் கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. இந்த விவகாரம் பெரிதானதையடுத்து அந்தத் தகரம் அகற்றப்பட்டது. அவர்கள் பேச மறுத்துவிட்டனர். "அவர்கள் நேற்றே தகரத்தை அகற்றிவிட்டனர். இதைத் தயவுசெய்து பெரிதாக்காதீர்கள்" என்று மட்டும் கூறினர்.

அரியர் மாணவர்களுக்கு நற்செய்தி..அனைத்து தேர்வுகளும் ரத்து.. Tamil Nadu College exam: Arrear exam cancelled

tamil.oneindia.com- Dhana Lakshmi  சென்னை: தமிழ்நாட்டில் இறுதியாண்டு இறுதித் தேர்வு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்து இருக்கிறார். தமிழ்நாட்டில் கல்லூரி இறுதியாண்டின் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்து இருந்தார். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.  நாட்டில் கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல்கலைக் கழகங்கள், கல்லூரி தேர்வுகள் இதனால் பாதிக்கப்பட்டு, தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற சூழல் இன்றும் நிலவி வருகிறது. பல்கலைக் கழகங்களில் தேர்வுகளை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
இதன் மீதான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வெளியிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரி தேர்வுகள் நடக்குமா, நடக்காதா என்ற கேள்வி எழுந்தது. தேர்வுகளை ரத்து செய்து, கடந்த கல்வி ஆண்டில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதித் தேர்வுக்கான மதிப்பெண்களை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

உனது உடலைவிட உனக்கு வேறு பெரிய சொத்து கிடையாது.

 

இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் உடல்தான் அதிக பெறுமதி வாய்ந்த தலையாய சொத்தாகும்.  இந்த உலகத்தில் உனது உடலைவிட உனக்கு பெரிய சொத்து வேறு எதுவும் கிடையாது.
எனவேதான் எல்லா உயிர்களும் தங்கள் உடலை பாதுகாப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன.
ஆனால் மனிதர்கள் மட்டும் இந்த இயற்கை விதியில் இருந்து விலகி தங்களை ஏதோ ஒரு அடிப்படை அறிவாளிகள் என்பதாக எண்ணிக்கொண்டு தங்கள் உடலை தாங்களே மிகவும் பாரதூரமாக சிதைக்கின்றனர்.
மனித உடலின் பெறுமதியை மிகவும் மலினப்படுத்திய முதல் குற்றவாளிகள்  மதவாதிகள்தான்.
மதங்கள் உருவாக்கிய காலச்சாரம் பாரம்பரியம் போன்றவை எல்லாம்  மனித உடலுக்கு உரிய மரியாதையை வழங்கவில்லை.  உடலை விட ஆத்மா உயர்ந்தது அல்லது அந்த ஆத்மாவை விட கடவுள் பெரியது என்பதாகதான் எல்லா மதங்களும் மீண்டும்  மீண்டும் பிரசாரம் செய்கின்றன
இந்த மதங்களின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தொடர்ச்சியான பிரசாரங்களால் மனிதமனத்தின் மிகவும் ஆழத்தில் தனது உடல் ஒரு பெறுமதி இல்லாத பொருள் என்ற எண்ணம் பதிந்து விட்டது.
மனிதர்களை நல்வழிக்கு அழைத்து செல்வதாக கூறிகொள்ளும் மதங்கள் இறுதியில் மனிதனின் உடலை வெறும் வழி தேங்காயை எடுத்து தெருவில் உடைப்பது போன்று மனிதர்களின் உடல் பற்றிய கரிசனையை குழி  தோண்டி புதைத்து விட்டன.
உலகில் உள்ள எந்த விலை உயர்ந்த அதி பெறுமதி வாய்ந்த சிலையையும் விட மனிதனின் உடல் அற்புதமான உயிருள்ள சிலையாகும்..
இறைவனை வணங்குவதை விட தமது உடலை முதலில் வணங்குவதே மிகவும் சரியான ஒரு வழிபாடாக இருக்கமுடியும். அதற்கு அடுத்ததுதான் மீது வழிபாடெல்லாம். உடல் இருந்தால்தானே உன்னால் மீதி வழிபாடெல்லாம் தொடர முடியும் !

எஸ்.பி.பி. 'பிசியோதெரபி' துவக்கம்.. , உடல்நிலையில் முன்னேற்றம்

.dinamalar.com :சென்னை : பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கான, 'பிசியோதெரபி' நேற்று துவங்கியது. கொரோனா தொற்றுக்குள்ளான பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 75, சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு, 'எக்மோ' உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி.பி., மகன் சரண், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் பேசினேன்; அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மயக்க நிலையில் இருந்து, 90 சதவீதம் மீண்டுள்ள அவர், சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கிவருகிறார்.என் அப்பா குணமடைய அனைவரும் காட்டும் அன்பு, அக்கறை மற்றும் பிரார்த்தனைகளுக்கு எங்கள் குடும்பம் கடமைப்பட்டிருக்கிறது.அப்பா மீண்டுவர, தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அவர் விரைவில் மீண்டுவருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஸ்டெர்லைட்: உச்ச நீதிமன்றத்தை நாடிய வேதாந்தா!

    minnamblam: ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது ஆலை நிர்வாகம்.   தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018 மே மாதத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குத் தமிழக அரசு சீல் வைத்தது.இந்நிலையில் ஆலையைத் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடி அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி ஆலை நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஆக்ஸ்போர்டு கோவிஷீல்டு தடுப்பூசி - சென்னையில் பரிசோதிக்க முதலமைச்சர் உத்தரவு

maalaimalar.com: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பூசியை சென்னையில் பரிசோதிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
முதலமைச்சர் பழனிசாமி
சென்னை:கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து பரிசோதனை செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன.அதன்படி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது.
இந்த தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.முதல் கட்டமாக, சென்னையில் 300 பேரிடம் கோவிஷீல்டு செலுத்தி பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் பரிசோதிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நித்தியானந்தாவின் கைலாஸா அந்தமான் நிக்கோபார் தீவுகளில்தானோ? BSNL Connection கூட்டி கழித்து பாருங்க

 S
ukirtha Rani :
பல மாதங்களாக எவ்வித சத்தமும் இல்லாதிருந்த நித்யானந்தாவும் அவனுடைய சீடைகளும் கடந்த பத்து நாட்களாகத்தான் அதிகமாக வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். BSNL நிறுவனம் கடந்த ஆகஸ்ட் பத்தாம் தேதி அதிவேக இணைய சேவையை அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு வழங்கியுள்ளது. சரியாக அதன்பிறகுதான் நித்தியின் சீடைகளும் நித்தியும் வீடியோக்களை பகிர ஆரம்பிக்கிறார்கள். தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, தம் ஆட்களுடன் அந்தமானில் உள்ள ஏதோ ஒரு தீவில்தான் தங்கியிருக்க வேண்டும் அங்கிருந்துதான் அவன் கைலாஷா, தனி நாடு, தனி வங்கி, தனி நாணயம் என கதை அளந்து கொண்டிருக்கிறான். தேடப்படும் குற்றவாளியான அவன் இவ்வளவு தைரியமாகப் பேசிக் கொண்டிருக்கிறான் என்றால் ஆளும் பாஜக அரசின் ஆதரவு அவனுக்கு இருக்கிறதோ என்னும் ஐயப்பாடு எழுகிறது.

ஏனென்றால் இந்து மதத்தை இந்துத்துவத்தை முன்வைத்து ஆண்டு கொண்டிருக்கும் அரசுக்கு நித்தியைப் போன்ற சாமியார்களின் துணையும் தொடர்பும் தேவையான ஒன்று. 

அமெரிக்காவில் மீண்டும் கறுப்பு இளைஞர் மீது துப்பாக்கி சூடு .. கலவரம் வெடித்தது

maalaimalar : அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் கருப்பினத்தைச் சேர்ந்தவரின் முதுகில் பொலிஸ் சரமாரியாக சுட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. 

கெனாஷா நகரில் நேற்று உள்ளூர் பிரச்சனை தொடர்பாக ஜக்கப் பிளேக் (Jacob Blake)என்ற கருப்பினத்தவரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டனர். தனது குழந்தைகள் உள்ள காரை திறந்து உள்ளே செல்ல முயன்ற பிளேக்கின் முதுகில் பொலிஸார் 7 முறை சுட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.      இது தொடர்பாக வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிசை கண்டித்தும், இன மற்றும் நிறவெறிக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் பல அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கருப்பினத்தவர் சுடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கலவரம் காரணமாக கெனோஷா கவுண்டியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளன.    

வனிதா விஜயகுமாரின் கணவர் மருத்துவமனையில்.. பீட்டர் பாலுக்கு நெஞ்சு வலி

<p>லாக்டவுன் காரணமாக வனிதாவின் யூ-டியூப் சேனல் சிக்கலில் மாட்ட, அந்த பிரச்சனையில் இருந்து அவருக்கு உதவ வந்த பீட்டர் பாலுடன் காதல் மலர்ந்தது. மகள்களின் சம்மதத்துடன் பீட்டர் பாலை காதலிப்பதை ஒப்புக்கொண்டார். </p>
<p><br />
வனிதாவின் 3வது திருமணத்தில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அவருடைய வாழ்க்கை நல்ல படியாக நகர வேண்டும் என்றே அவருடைய ஆதரவாளர்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்தனர்.</p>
tamil.asianetnews.com :வனிதா விஜயகுமாரின் கணவர் பீட்டர் பால் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான வனிதா, அதன் பின்னர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி வாகை சூடினார்.

ஏற்கனவே இரண்டு கணவர்களை விவாகரத்து செய்துள்ள வனிதா, மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த புகழைப் பயன்படுத்தி, சமையலுக்கான தனி யூ-டியூப் சேனலை நடத்தி வருகிறார்.    லாக்டவுன் காரணமாக வனிதாவின் யூ-டியூப் சேனல் சிக்கலில் மாட்ட, அந்த பிரச்சனையில் இருந்து அவருக்கு உதவ வந்த பீட்டர் பாலுடன் காதல் மலர்ந்தது. மகள்களின் சம்மதத்துடன் பீட்டர் பாலை காதலிப்பதை ஒப்புக்கொண்டார்.

கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரே பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பிள்ளைகள் இருப்பது வெளியே வந்தது.

விஜயகாந்த் இனி ‘கிங்’ ஆகத்தான் இருப்பார்” - பிரேமலதா அதிரடி பேட்டி

“விஜயகாந்த் இனி ‘கிங்’ ஆகத்தான் இருப்பார்” - பிரேமலதா அதிரடி பேட்டி     தினத்தந்தி  : “விஜயகாந்த் இனி ‘கிங்’ ஆகத்தான் இருக்க வேண்டும் என்பது தே.மு.தி.க. நிர்வாகிகளின் விருப்பம்” என்று பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாக தெரிவித்து உள்ளார். சென்னை, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று தனது 68-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதையொட்டி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிறந்தநாள் விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. இதில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் உறவினர்கள்-நண்பர்கள் கலந்துகொண்டனர். ;விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கியும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

14 வ‌ய‌து கிறிஸ்தவ சிறுமியை கடத்திய முஸ்லீம் இளைஞரோடு வாழுமாறு பாகிஸ்தானிய நீதிமன்றம் உத்தரவு

 Fazil Freeman Ali : ம‌ரியா வெறும் 14 வ‌ய‌தே நிர‌ம்பிய‌, பைச‌லாபாத் ந‌க‌ரில் வ‌சிக்கும் ஏழை குடும்ப‌த்தை சார்ந்த‌ கிருஸ்த‌வ‌ பாக்கிஸ்தானிய‌ சிறுமி. இந்த‌ வ‌ருட‌ம் ஏப்ர‌ல் மாத‌ம் (April 2020) ப‌ல‌வ‌ந்த‌மாக‌ க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ம‌ரியா அந்த‌ ப‌குதியில் செல்வாக்குள்ள‌ ஷ‌ஹ்பாஸ் என்ற‌ இஸ்லாமிய‌ருக்கு திரும‌ண‌ம் முடித்து வைக்க‌ப்ப‌டுகிறார். திரும‌ண‌த்திற்குமுன் க‌ட்டாய‌ ம‌த‌மாற்ற‌மும் ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து. ம‌ரியாவிற்கு ம‌ண‌முறிவு அளிக்க‌க்கோரியும் அவ‌ரை ஒரு பெண்க‌ள் காப்ப‌க‌த்தில் சேர்க்க‌க்கோரியும் தொட‌ர‌ப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கில் பைச‌லாபாத் ந‌க‌ர நீதிம‌ன்ற‌ம் ம‌ரியாவுக்கு சாத‌க‌மாக‌ நீதிவ‌ழ‌ங்கிய‌ நிலையில், அர‌சிய‌ல் ம‌ற்றும் பொருளாதார‌ செல்வாக்குள்ள‌ ஷ‌ஹ்பாஸ் லாகூர் உய‌ர்நீதிம‌ன்ற‌த்தில் மேல் முறையீடு செய்கிறார்.

வ‌ழ‌க்கை விசாரித்த‌ ஹைக்கோர்ட் நீதிப‌தி நீதிப‌தி ராஜா முக‌ம்ம‌து (Judge Raja Muhammad Shahid Abbasi) அதிர்ச்சிக‌ர‌மான‌ தீர்ப்பை தெரிவித்திருக்கிறார். அதாவ‌து...

விஜயகாந் சகோதர்கள் வறுமையில் .. ஊருக்கு Hero வேஷம் போடும் ... 2015 விஜயகாந்தின் தம்பி (Lale) பால்ராஜ் வறுமையில் அதிமுகவில்

விஜயகாந்தைவிட வடிவேல் எவ்வளவோ மேல் என அதிமுவில் இணைந்த விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜ் 

Vijayakanth Brothers and Sister

Thamizhan Elango : · என்னங்கடா.. ஒரேயடியா "பில்டப்" கொட்டுறிங்க.. இவன் வண்டவாளம் மதுரைக்காரன்..  அதுவும் சினிமா தியேட்டர்ல மேலாளரா இருந்த எனக்குத் தெரியாதா..  அப்பாவிகள் ஏமாந்த ஜூனியர் கறுப்பு பொரச்சி தலையன்.. மதுரை சென்ட்ரல் சினிமா சாணி மூத்திர கவுண்ட்டர் சந்துல கஞ்சாவுலயே பொரண்டு திரிஞ்ச மாகாளிபட்டி அழகர்சாமி நாயுடு ரைஸ்மில் கார ர் மகன் விசய ராசன் வண்டவாளத்த தெரியுமா?

முதல் ரசிகர் மன்ற கரிமேடு முத்து கதை தெரியுமா.. இந்த மனநோயாளி பொம்மைக்கு சென்டு பூசுறானுக.. இவன் பட சம்பளம் அப்படியே துல்லிதமா வருமான வரிக்கு காட்னவனா..டுபாக்கூரு..
தையல்மிசினு..மிக்சி கொடுத்து சி.எம்..ஆக நெனச்ச இவன் வானத்தை போல படத்துல ஆஸ்கார் ரவிகிட்ட 50 லட்சத்த அதிகாரமா ஆட்டைய போட்ட சம்பவம் தெரியுமா..
கோயம்பேடு சொர்ணலதா பேச்சை கேட்டு ராவுத்தர வெரட்ன கதை..
நம்பர் 2 கணக்குல வாங்குன கறுப்பு சம்பளத்து கணக்க காட்டுவானா..
இவனோட ரெண்டு தம்பிகள வீட்டை விட்டு ஏன் பத்துனான்..
நிறைய சம்பவங்க இருக்குடா தம்பிகளா..

பஹ்ரைன் ..கணபதி சிலைகளை துண்டாக உடைத்த பெண் கைது

  பஹ்ரைன்  நாட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பர்கா அணிந்த ஒரு பெண் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கணபதி சிலைகளை தூக்கி ஏறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் அந்த நாட்டு காவல்துறையின் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
பஹ்ரைனின் தலைநகர் மனாமாவின் ஜுஃபைர் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த அராஜகப் போக்கை அருகில் நின்ற ஒரு பெண் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இன்னும் சில நாட்களில் உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதூர்த்திக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளை, பர்கா அணிந்த ஒரு பெண் இது முஸ்லிம் நாடு இங்கே யார் இந்த சிலைகளை வாங்குவார்கள் என ஆதிக்கப்போக்குடன் சிலைகளை ஒவ்வொன்றாக உடைத்துள்ளார்.

சூரரைப் போற்று ! நஷ்டமானாலும் பரவாயில்லை!” – ஓடிடி-க்கு ஏன் வந்தது ....?

  தேவன் சார்லஸ்- விகடன்.com : சூரரைப் போற்று முதல்முறையாக பெரிய பட்ஜெட் படம், அதுவும் பெரிய ஸ்டாரான சூர்யாவின் ப
சூரரைப் போற்று
டம் நேரடி ஓடிடி ரிலீஸூக்கு வந்திருப்பது சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பொன்மகள் வந்தாள்’ படம் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் புதுக்கணக்கைத் தொடங்கிவைத்தவர் சூர்யா. முதல் பெரிய பட்ஜெட் + பெரிய ஸ்டார்காஸ்ட் கொண்ட படமாக ‘பொன்மகள் வந்தாள்’ ஓடிடி-யில் நேரடி ரிலீஸ் ஆனது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முதல்முறையாக மிகப்பெரிய தொகைக்கு நேரடி ஓடிடி ரிலீஸூக்கு விற்கப்பட்டிருக்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’.

முதல்முறையாக பெரிய பட்ஜெட் படம், அதுவும் பெரிய ஸ்டாரான சூர்யாவின் படம் நேரடி ஓடிடி ரிலீஸூக்கு வந்திருப்பது சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

நீட் எழுதாத டாக்டர்கள்! உயிரை பணயம் வைத்துபோராடும் தமிழக மருத்துவர்கள்

Sivasankaran Saravanan : · திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வட இந்திய இளைஞர் விக்ரம் குமார் (வயது 20) சாலை விபத்தில் படுகாயமடைகிறார். அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். விபத்தில் வயிறு கிழிந்து வயிற்றின் உள்ளே குடலில் துளை ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. ஆனாலும் சிகிச்சை முழு வெற்றியைத்தரவில்லை. ரத்தக்கசிவு தொடர்ந்து இருந்தபடியே இருக்கிறது. எனவே அவசர அவசரமாக அந்த நபர் ஆம்புலன்ஸ் மூலம் கோயம்பத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். 

 கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதி நள்ளிரவு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் , டாக்டர் முருகதாசன் , மயக்க மருந்து டாக்டர் உள்ளிட்ட மருத்துவக்குழு அந்த இளைஞருக்கு அறுவைசிகிச்சையை தொடங்குகிறார்கள். வயிற்றுப்பகுதியை ஓப்பன் செய்து குடலில் துளை ஏற்பட்ட இடத்தை நீக்கி இரண்டு குடல்களை ஒன்றாக இணைக்கிற பெரிய அறுவைசிகிச்சை அது. நள்ளிரவு 2 மணிக்கு தொடங்கிய ஆபரேசன் முடிய காலை 6 மணி ஆனது. சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த வெற்றிகரமான அறுவைசிகிச்சையில் அந்த இளைஞர் உயிர் காப்பாற்றப்பட்டது.

உதயநிதியின் பிள்ளையார் சிலை விவகாரம்

உதயநிதி+மகள் தன்மயா
உதயநிதியின் பிள்ளையார் சிலை விவகாரம் ஒரு விடயத்தை மிக தெளிவாக காட்டி இருக்கிறது. திமுகவில் என்னதான் அதிகார மையத்தில் இருப்பவராக இருந்தாலும் கடுமையான விமர்சனங்களை அவர்களும் சந்தித்தே தீரவேண்டும்.

இந்த ஜனநாயக பண்பு திமுக ஆதரவாளர்களிடையே இன்னும் நெருப்பாக இருக்கிறது. அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய மட்டில் இந்த அளவு ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்களை வேறு எந்த கட்சியிலும் பார்க்க முடியாது என்றெண்ணுகிறேன்.

எல்லா கட்சிகளையும் தனித்தனியாக கேள்விக்கு உட்படுத்துவது எனது நோக்கம் அல்ல . ஓரளவு லாங் ஷாட் பார்வையில் எனது கருத்தை கூறுகிறேன்.

காங்கிரஸ் ஒரு மட்டுப்படுத்தப்படட ஜனநாயக கட்சியாக கருதப்படுகிறது . அதாவது அதற்குள் நடப்பது எல்லாம் வெறும் பதவிக்கான சண்டைகள்தான் . பாஜகவை பற்றி பேசவே வேண்டாம்  அது ஒரு கட்சியே அல்ல . அது ஒரு சாபம்.

கொரோனா பரவல் .. உலக ரோல் மாடல்களும் - போட்டோ மாடல் பிரதமரும்

 K
arthikeyan Fastura
: கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும்போது இத்தாலி பிரதமர் கண்ணீர் விட்டு அழுதார். கொஞ்ச காலம் தான் பிறகு சுதாரித்துக்கொண்டு மடமடவென்று வேலையை பார்த்து கட்டுக்குள் கொண்டுவந்தார் ஐரோப்பிய நாடுகளின் பெண் பிரதமர்கள் பலகட்ட நடவடிக்கைகள் எடுத்து கட்டுக்குள் கொண்டுவந்து சாதித்தார்கள். கனடிய பிரதமர் தினமும் மக்களை எல்லா மீடியாக்கள் வழியாக சந்தித்து ஆறுதல் கொடுத்து, தேவையான நிதி உதவிகளை அறிவித்து, சிறுசிறு விஷயங்களிலும் கவனம் செலுத்தி வெற்றி கொண்டார். சீன பிரதமர் உறுதியான நடவடிக்கை எடுத்து மிக விரைவில் கட்டுப்படுத்தினர். மருந்து கண்டுபிடிக்க அனைத்து பல்கலைக்கழக ஆய்வாளர்களையும் ஒருங்கிணைத்து மருந்து கண்டுபிடிக்க வைத்து அதை 3ஆம் சோதனை கட்டத்திற்கு கொண்டுவந்தார்.

ரஷ்ய அதிபர் மருந்து கண்டுபிடித்ததாக அறிவித்து அதை புழக்கத்துக்கு கொண்டுவர உத்தவுமிட்டார்.

மடகாஸ்கர் பிரதமர் அலோபதிக்கு மாற்றாக இயற்கை மருத்துவத்தின் வழியே எதிர்த்து கட்டுப்படுத்தி காட்டியது மட்டுமல்லாமல் உலக சுகாதார நிறுவனத்திற்கே சவால் விட்டார்.

சாத்தான்குளம் - ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழப்பு - சிபிஐ தகவல்

    webdunia :சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவிலான கவனத்தை பெற்றுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தலையீட்டின் பெயரில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது. அதன்படி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் திருநெல்வேலி வழியாக கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்றபோது கங்கைகொண்டானில் பிடிபட்டார். இந்நிலையில் காவலர் முத்துராஜ் சிபிசிஐடியின் கைகளில் சிக்காமல் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை தேடி பிடிக்க வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் விளாத்திகுளம் அருகே கீழமங்கலம் காட்டு பகுதியில் கேட்பாற்று கிடந்த காவலர் முத்துராஜின் இருசக்கர வாகனம் முதலில் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் பின்னர் விளாத்திக்குளம் அருகே பூசனூர் என்ற பகுதியில் வைத்து காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டார்.

BBC: மகாராஷ்டிரா கனமழை: ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; பலர் பலி

கனமழையின் காரணமாக மும்பையிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஹத் என்ற பகுதியில் 5 தளங்களைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்துள்ளது.

இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 47 வீடுகள் உள்ளதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர். இதுவரை இடிபாடுகளில் சிக்கி இருந்த 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் 70திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ராய்கட் மாவட்டத்தில் இடிந்து விழுந்த இந்த அடுக்குமாடி குடியிருப்பு 10 ஆண்டுகள் பழமையானது.   இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 18 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்றும் ராய்கட் மாவட்ட ஆட்சியர் நிதி சவுதிரி ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

குட்கா .. திமுக-வினருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து- சென்னை உயர்நீதிமன்றம்

 மாலைமலர் : தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்கள் தாராளமாக தமிழகத்தில் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தி.மு.க.வினர் கொண்டு சென்று சபாநாயகரிடம் காண்பித்தனர். 

இதையடுத்து தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்து, அந்த நோட்டீசுக்கு தடை பெற்றனர். பின்னர் இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.  இந்நிலையில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதற்காக உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிப்பதாக தெரிவித்தது.

உதயநிதி : எனக்கு, என் மனைவிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை- ட்விட்டரில் விநாயகர் சிலை படம் மகளுக்காக

tamil.oneindia.com - Mathivanan Maran : சென்னை: எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை இல்லை; நான் ட்விட்டரில் பகிர்ந்தது அம்மா வைத்து வழிபாடு செய்த விநாயகர் சிலையைத்தான் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாலை தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிறுமி விநாயகர் சிலையை கையில் பிடித்தபடி இருக்கும் படத்தை பதிவிட்டிருந்தார். அதில் வேறு எந்த வாசகமும் இடம்பெறவில்லை. உதயநிதியின் இந்த ட்விட்டர் பதிவை முன்வைத்து ஒரே அதகளமாகிவிட்டது சமூக வலைதளங்கள். உதயநிதி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறார்; இதெல்லாம் தேவையா? அமைதியாகவே இருந்திருக்கலாம் என அத்தனை விமர்சனங்களும் ஒரே நாளில் கொட்டி குவிந்துவிட்டன

இந்நிலையில் சர்ச்சை குறித்து உதயநிதி 2 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை: மத்திய பாசிச பாஜக மற்றும் மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் குறித்து நான் பகிரும்போது அவற்றை எடுத்து விவாதித்து பேசு பொருளாக்காதவர்கள் தற்போது பிள்ளையார் சிலையின் புகைப்படத்தை பகிர்ந்ததைப் பரபரப்பாக விவாதிக்கிறார்கள்.

BBC : "தலித்" ஊராட்சி மன்ற பெண் தலைவருக்கு மிரட்டல் - வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு

கோவை : மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா, சாதி ரீதியாக தான் தாக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுத்தொகுதியாக இருந்த இப்பகுதி, கடந்த உள்ளாட்சி தேர்தல் முதல், தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில், ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த  சரிதா ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், "தலித்" சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பலரும் தன்னை மிரட்டி வருவதாக தெரிவிக்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்த நாளில் இருந்து தொடர்ந்து பலவிதத்தில் என்னை மற்ற சாதியினர் மிரட்டி வருகின்றனர்.வெற்றி பெற்று பொறுப்பேற்ற பின்னர், என் மீதான தாக்குதல்களும், பொய் புகார்களும் அதிகரித்துள்ளன. 

மக்களுக்காக செய்ய வேண்டிய பணிகள் பல இருந்தபோதும், மற்ற சாதியினர் தரும் பிரச்னைகளால் எல்லா வேலைகளும் தடைபடுகின்றன"

ஒரு மாதமாக கொரோனா தடுப்பூசி செலுத்திவரும் சீனா - அதிர்ச்சி .. சீனாவின் ஒரு பகுதியில்

தினத்தந்தி :  சோதனை முயற்சியில் உள்ள கொரோனா தடுப்பூசியை கடந்த ஒரு மாதமாக தங்கள் நாட்டை சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு சீனா செலுத்தி வருகிறது.
தங்கள் நாட்டை சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு கடந்த ஒரு மாதமாக கொரோனா தடுப்பூசி செலுத்திவரும் சீனா - அதிர்ச்சி தகவல்
கொரோனா சிகிச்சை மையத்தில் சீன அதிபர் ஜூ ஜுங்பிங் பிஜுங்: 
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் இறுதிகட்ட பணியில் உள்ளதாக பல நாடுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது.  
கொரோனா உருவான சீனாவும் தான் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பல நாட்களாக தெரிவித்து வருகிறது.ஆனால் அங்கு சோதனை கட்டத்தில் உள்ள தடுப்பூசியை அந்நாட்டு அரசு குறிப்பிட்ட பிரிவினருக்கு கடந்த ஜூலை 22 ஆம் தேதி முதல் செலுத்தி வருவது தெரியவந்துள்ளது.    
இது தொடர்பாக சீனாவின் தேசிய சுகாதாரத்துறை அமைப்பின் சேங் ஹூவாங்வி கூறியதாவது:-

கோமாவில் வடகொரியா சர்வாதிகாரி...கிம் ஜாங் உன்...ஆட்சியில் சகோதரி!!

vanthana Lakshm - tamil.oneindia.co : சியோல்: சமீபத்தில் வெளியாகி இருந்த வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னின் புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை என்று தென் கொரியாவின் மறைந்த முன்னாள் அதிபருக்கான முன்னாள் உதவியாளர் சாங் சாங் மின் தெரிவித்துள்ளார். 
மேலும், கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். Kim கோமாவில் இருக்கிறார்..அதனால் தான்...!-Korean Herald கூறுகிறது | Oneindia Tamil இவரது சகோதரி கிம் யோ ஜாங்க் தற்போது அந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்தான், அமெரிக்கா, தென்கொரியா நாடுகளுடன் ராஜாங்க உறவுகளை கவனித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. பொருளாதாரம் மற்றும் ராணுவப் பணிகள் நம்பிக்கையான அதிகாரிகளுடன் கிம் ஜாங் உன் பகிர்ந்து கொண்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
வடகொரியா நாட்டின் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் கடந்த பல மாதங்களாக பொது வெளியில் தலையை காட்டுவதில்லை. எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பது அனைத்தும் மர்மமாக இருக்கிறது.  

பூ பறித்த தலித் சிறுமி, 40 குடும்பத்துக்கு தண்டனை அளித்த சாதி இந்துக்கள் – ஒடிஷா... வீடியோ

சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்தியாவில் தலித்துகளின் வாழ்க்கை நிலையை விவரிக்கிறது , ஒடிசாவின் டேங்கனால் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம். டேங்கனால் மாவட்டத்தில் ஒரு சிறிய விஷயத்தால் ஆரம்பித்த பிரச்சனை காரணமாக, ஆதிக்க சாதியான சவர்ணாக்கள், சமூக ரீதியாக தலித்துகளை புறக்கணித்தனர். இதன் காரணமாக அவர்களின் நிலைமை மிகவும் கடினமாகிவிட்டது. புறக்கணிப்பு நடந்து நான்கு மாதங்களுக்குப் பின்னர், ஊடகங்களில் செய்திகள் வெளியான பிறகு, நிர்வாகம் இப்போது இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளது. உயர் சாதியினர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.   

இருப்பினும், சமூக புறக்கணிப்பு குற்றச்சாட்டுகளை சவர்ணாக்கள் மறுத்துள்ளனர். தங்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்றும் கூறியுள்ளனர். 

இலங்கை கடலுக்குள் இழுவை படகுகளை தடுக்க புதிய திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

BBC : இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சியில் இன்று ஊடகவியாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி – இரணை தீவு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் பிரவேசம் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆட்சி காலத்தில் அதனை தடுக்க எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இந்திய இழுவைப்படகு பிரச்சினை இரணைதீவு பகுதியில் மாத்திரமல்லாது, அது இலங்கையின் வட மாகாணத்திற்கே பாரிய அச்சுறுத்தலாகியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். 

மும்பை அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 70 பேர் உயிரோடு புதைந்தனர் விடிய, விடிய மீட்பு பணி

  தினத்தந்தி :  மும்பை அருகே 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த துயர விபத்தில் 70 பேர் உயிரோடு புதைந்து இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் விடிய, விடிய மீட்பு பணி நடந்தது. மும்பை, > மராட்டிய மாநிலத்தில் தலைநகர் மும்பை அருகே உள்ள ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புரா பகுதியில் தாரிக் கார்டன் என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடத்தில் சுமார் 45 வீடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 6.50 மணியளவில் கட்டிடத்தின் மேல் 3 மாடிகள் திடீரென இடிந்து விழ தொடங்கியது. இதையடுத்து கீழ் தளத்தில் வசித்து வரும் மக்கள் அலறி அடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இந்தநிலையில் சில நிமிடங்களில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து வெளியேறிய புழுதியால் அந்த பகுதியே புகை மண்டலம் போல ஆனது.

6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி

 dinamalar ": கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி

வாஷிங்டன்:  அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி வெளியாகி உள்ளது.  லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள் கடலில் பேரதிசயத்தைக் கண்டனர்.    ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்று இந்தக் காட்சி இருந்ததாக இதனைப் படம் பிடித்தவர்கள் தெரிவித்துள்ளனர்

திமுக கொடுத்த 'ஷாக்'! அதிர்ச்சியில் காங்கிரஸ்..!

 nakkeeran :  காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி இன்று காலை டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சோனியா காந்தி தொடர வேண்டும் என காரிய கமிட்டி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பலர் வலியுறுத்தியுள்னர். இதனிடையே, அடுத்து நடைபெறக்கூடிய பீகார் மற்றும் தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக இன்று நடக்க உள்ள காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுப்பதால் ஆரம்ப கட்டமாக தி.மு.க.வை சேர்ந்த ஒரு குழுவுடன் சோனியாகாந்தி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டும் என தொடங்கிய சோனியா காந்தியிடம், 10 சீட்டுதான் உங்களுக்கு என தி.மு.க. குழு பேசிவிட்டு சென்றுள்ளது என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

சாமியாரை புரட்டி எடுத்த அமெரிக்க பெண்!.. திருவண்ணாமலையில்

 அத்துமீறல்: தி.மலையில் சாமியாரை புரட்டி எடுத்த அமெரிக்க பெண்!

 மின்னம்பலம் : ஆன்மீகத் தலமாகவும்,  சித்தர்கள் வாழும் இடமாகவும் திருவண்ணாமலை அறியப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளதால் இங்கு வெளிநாட்டுப் பக்தர்களும் வந்து செல்வர். ஆன்மீக பக்தி கொண்ட பலரும் இங்கு வந்து தங்கி தியானம் குறித்தும், சாதுக்கள் குறித்தும் ஆய்வு செய்வார்கள்.   இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்து, கிரிவலப்பாதையில் உள்ள அருணாச்சலா நகரில் கடந்த 5 மாதங்களாக அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.  வெளிநாடு செல்ல திட்டம்

இந்த பகுதியில் ஏராளமான சாமியார்களும் வசித்து  வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருமலை பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற சாமியாரும் வசித்து வந்துள்ளார். அமெரிக்கப் பெண் வசித்துவந்த வீட்டிற்குச் சென்று மணிகண்டன் அடிக்கடி அவரைப் பார்த்து வந்துள்ளார். அதோடு கடந்த ஒரு மாதமாக அப்பெண்ணின்  நடவடிக்கைகளை நோட்டமிட்டு வந்துள்ளார்.  இந்த நிலையில், அவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாடு செல்லும் கனவில் சாமியார் மிதந்துகொண்டு இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே நேற்று காலை அப்பெண் தங்கியிருந்த வீட்டுக்குச் சாமியார் மணிகண்டன், தங்க தாலி மற்றும் அரிவாளுடன் சென்றுள்ளார்.  அப்பெண்ணை அரிவாளைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். 

காங்., கட்சிக்குள் பூகம்பம்: தலைவராக சோனியாவே தொடர முடிவு

 தினமலர் :  புதுடில்லி: டில்லியில் இன்று 7 மணி நேரம் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், இடைக்கால சோனியா நீடிப்பார் எனவும், அடுத்த 6 மாதத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடிதம் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து, தலைவர் பதவியில் இருந்து ராகுல் பதவி விலகினார். இதனையடுத்து இடைக்கால தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று ஓராண்டை கடந்து விட்ட நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்கும் திறமையுள்ள தலைமை தேவை என ஒரு பிரிவினர் கடிதம் எழுதினர்

விலக தயார்.....இந்நிலையில், இன்று டில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மூத்த நிர்வாகிகளின் கடிதம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து சோனியா அனுப்பிய கடிதத்தை, காங்., மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் வாசித்தார். அதில், தலைவர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாகவும், புதிய தலைவரை தேர்வு செய்யும்படியும் சோனியா குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த தலைவர்கள் எழுதிய கடிதத்திற்கு மன்மோகன் சிங் மற்றும் ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

காங்கிரஸ் கட்சியின் பதவியை துறந்தார் சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார். 

மேலும் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக, அவர் தனது இராஜினாமா கடிதத்தையும் கட்சியிடம் கையளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமை தொடர்பான விடயத்தில் கட்சிக்குள் இரு வேறு கருத்துகள் வலுவாக எழுந்துள்ளன.       அதாவது, நிலையான முழுநேரத் தலைமை தேவை என மறைமுகமாக சோனியா காந்தியின் தலைமைக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதில் மற்றொரு தரப்பினர், சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி தலைமையை ஏற்க வேண்டுமென காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக நிற்கின்றனர். மேலும், அடுத்தடுத்து தேர்தல் வரும் நிலையில், தலைமைப்பதவிப் பிரச்சினைக்கு உரிய தீர்மானத்தை எட்டாதமையினால் காங்கிரஸ் கட்சி பலமற்ற கட்சியாக காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி, பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதை குறிப்பிடத்தக்கது.

"பா.ஜ.க.வுடன் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு" -ராகுல்காந்தி குற்றச்சாட்டு?

CONGRESS PARTY MEETING RAHUL GANDHI SPEECHnakkheeran.in - nakkheeran :அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று (24/08/2020) காணொளி காட்சி மூலம் தொடங்கியது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி.செல்லக்குமார் காணொளி மூலம் கலந்து கொண்டார். ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ள நிலையில், சோனியா காந்தியே தொடர வேண்டும் என கபில் சிபல், சசிதரூர், குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவான், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். மேலும் நேரு குடும்பத்தை அல்லாத ஒருவர் தலைவராக நியமிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர். 

 இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது குறித்து கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியிருந்தது.   

இரட்டைத் தலைநகர்! பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பாகப்பிரிவினைத் திட்டம்! தமிழகத்தை குறி வைத்து

nakkheeran.in - இரா. இளையசெல்வன் :  தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக மதுரையை உருவாக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிறைவேற்றி அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கும் அனுப்பி வைத்துள்ளார் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.இவரது தீர்மானத்திற்கு அரசியந்ல் கட்சிகள், சமுக அமைப்புகள், தொழிற் நிறுவனங்கள் என பல தரப்பிலிருந்தும் ஆதரவு குரல்கள் அதிகரித்தாலும், அமைச்சர் உதயக்குமாரின் தீர்மானத்தின் பின்னbjpணியில் மத்திய பா.ஜ.க. அரசின் மெகா ப்ளான் இருப்பதாக டெல்லியிலிருந்து தகவல்கள் கசிகின்றன.   தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மே மாதம் இரண்டாம் வாரத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான பணிகளில் வேகம் காட்டி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம். மேற்கண்ட மாநிலங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை ஜனவரியில் வெளியிட வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடந்த வாரம் அறிவுறுத்தியுள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கரோனா நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலையில் தேர்தலை நடத்துவது குறித்த கருத்துருக்களை அனுப்பி வைக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்.