சனி, 21 மே, 2011

Bhopal போபால் விஷவாயுக் கசிவு, தீர்ப்பு

போபால் விஷவாயுக் கசிவு, 26 வருடங்களுக்குப் பிறகு அளிக்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இதில் அப்போதைய யூனியன் கார்பைட் இந்தியா சேர்மன் கேசுப் மஹீந்திரா முதற்கொண்டு 7 பேருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

ஒரு கம்பெனி என்ற அமைப்பில் பங்குதாரர்கள் (Shareholders), இயக்குனர்கள் (Directors), நிர்வாகம் (Management) என்று மூன்று தளங்கள் உள்ளன. பங்குதாரர்கள்தான் பணம் போட்டு நிறுவனத்தை ஆரம்பிப்பவர்கள். கம்பெனியாக இந்தியாவில் நிறுவப்பட்டால் (கம்பெனீஸ் ஆக்ட்டின்படி), அந்த நிறுவனத்தை வழிநடத்த என்று சில இயக்குனர்கள் நியமிக்கப்படுவார்கள். இயக்குனர்கள் இரண்டுவகை. எக்சிகியூட்டிவ் டைரெக்டர்ஸ் - அதாவது செயல் இயக்குனர்கள். மற்றொருவகை நான்-எக்சிகியூட்டிவ் இயக்குனர்கள். எக்சிகியூட்டிவ் இயக்குனர்கள் தினசரி நிர்வாகத்தில் நேரடியாக ஈடுபடுபவர்கள். மற்ற இயக்குனர்கள் தினம் தினம் நடக்கும் அலுவலக வேலைகளில் எந்தவகையிலும் ஈடுபடாதவர்கள். போர்ட் மீட்டிங் எனப்படும் இயக்குனர் சந்திப்பில் மட்டும் கலந்துகொள்பவர்கள். அடுத்ததாக நிர்வாகத்தினர். மேல்மட்ட நிர்வாகத்தினர்தான் தினம் தினம் கம்பெனியை நடத்துபவர்கள். இவர்களில் ஓரிருவர் இயக்குனர்களாகவும் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான நிர்வாகத்தினர் இயக்குனர்கள் கிடையாது.

பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்றால் இரண்டு இயக்குனர்கள் போதும். வெளியார் யாரையும் இயக்குனர்கள் ஆக்கவேண்டியதில்லை. அப்பா, பிள்ளை அல்லது கணவன், மனைவி என்று குடும்பத்தில் இரண்டு பேரை இயக்குனர்கள் ஆக்கி கம்பெனியை ஆரம்பித்துவிடலாம். அதுபோன்ற நேரங்களில் பொதுவாக பங்குதாரர், இயக்குனர்கள், கம்பெனியின் நிர்வாகிகள் எல்லாமே ஒரு குடும்பத்துக்குள்ளேயே போய்விடும். ஆனால் பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளின் நிலை வேறு. அங்கு இண்டிபெண்டெண்ட் டைரெக்டர்கள் தேவை. கம்பெனிச் சட்டப்படி, அந்நியர்கள் சிலரை நிறுவன இயக்குனர்களாக ஆக்கவேண்டும். அப்படி யூனியன் கார்பைட் இந்தியாவின் இயக்குனராக வந்தவர்தான் கேசுப் மஹீந்திரா. இப்படி நான்-எக்சிகியூட்டிவ் இயக்குனராக இருந்த கேசுப் மஹீந்திரா, இயக்குனர் குழுமத்துக்குத் தலைவராக, நிறுவன சேர்மனாகவும் இருந்தார். இவர் மஹீந்திரா அண்ட் மஹீந்திரா குழுமத்தை ஆரம்பித்தவர். இந்தக் குழுமம் இன்று டிராக்டர்கள், கார்கள் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது. நொந்துபோன சத்யம் கம்ப்யூட்டர் குழுமத்தை விலைக்கு வாங்கி மஹீந்திரா சத்யம் என்று நடத்துவது.

ஆண்டுக்கு நான்கு முறை (அல்லது ஆறு முறை) இயக்குனர்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருப்பார் கேசுப் மஹீந்திரா. நிறுவன லாபத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இருந்திருக்காது. போர்ட் மீட்டிங்கில் கலந்துகொள்ள போகவரச் செலவு கொடுத்து, ஒரு சந்திப்புக்கு இவ்வளவு என்று கொஞ்சம் பணம் கொடுத்திருப்பார்கள். அதற்காகவா அவரை ஜெயிலுக்கு அனுப்பவேண்டும்?

கம்பெனிச் சட்டப்படி, பொதுவாக ஒரு நிறுவனத்தின் குற்றங்களுக்கு அதன் இயக்குனர் குழுமம்தான் பொறுப்பு. பங்குதாரர்களுக்கு நேரடியான பொறுப்பு கிடையாது. அப்படிப் பார்த்தால் விஷவாயுச் சம்பவம் நடந்தபோது யூனியர் கார்பைட் (அமெரிக்கா) நிறுவனத்தின் சேர்மனும் மேனேஜிங் டைரெக்டருமாக இருந்த வாரன் ஆண்டர்சனுக்கு என்ன பொறுப்பு?

வாரன் ஆண்டர்சனை ஓடிப்போக விட்டுவிட்டார்கள் என்று பிலாக்காணம் படிக்கிறோம். விஷவாயுவைப் பரப்பு என்று அவர் எங்காவது சொன்னாரா?

***

உண்மையில் யார் மீதுதான் குற்றம்? வாரன் ஆண்டர்சன், கேசுப் மஹீந்திரா ஆகியோர் மீது குற்றமே இல்லை என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார், அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை ஆராயாமல் ‘ஹை புரொஃபைல் ஆட்கள்’ என்ற காரணத்தாலேயே அவர்கள்மீது குற்றம் சாட்டுவது இந்தியக் குணம்.

கார்பாரில் என்ற பூச்சிக்கொல்லியைத் தயாரிக்க, மீதைல் ஐசோசயனேட் என்ற (விஷப்) பொருளைப் பயன்படுத்தாமல் வேறு சில வழிகளும் உள்ளன. ஆனால் அந்த வழிகள் அதிகச் செலவு பிடிப்பவை. அபாயம் வரக்கூடும் என்ற நிலையிலும் மீதைல் ஐசோசயனேட்டைத் தொடர்ந்து பயன்படுத்தியது யூனியன் கார்பைட் செய்த தவறு. இந்தத் தவறுக்கு யூனியன் கார்பைட் (அமெரிக்கா) காரணமா? அல்லது யூனியன் கார்பைட் (இந்தியா) காரணமா?

இதை அடுத்து, மாநில, மத்திய, நகராட்சி அமைப்புகளின் தொழிற்சாலைக் கண்காணிப்பாளர்கள் மீதும் நாம் குற்றம் சொல்லவேண்டும். விஷப் பொருள்கள், எரியக்கூடிய, வெடிக்கக்கூடிய பொருள்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இருக்கவும் இந்தியாவில் குறைந்தபட்சம் 20 சட்டங்கள் உள்ளன. (The Indian Explosives Act, 1884, The Explosive Substances Act, 1908, The Destructive Insects and Pests Act, 1914, The Poisons Act, 1919, The Drugs and Cosmetics Act, 1940, The Factories Act, 1948, The Industries (Development & Regulation) Act, 1951, The Inflammable Substances Act, 1952, The Air (Prevention and Control of Pollution) Act, 1981 ஆகியவை ஒருசில. 1984-க்குப் பிறகு மேலும் பல சட்டங்கள் வந்துள்ளன.) இந்தச் சட்டங்களை எல்லாம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தாத அரசாங்கத்தின்மீது குற்றம் இல்லையா?

இந்தியர்கள் பாதுகாப்பு பற்றி சிறிதும் கவலைப்படுவதே இல்லை. சாலையைக் கடக்கும்போது, தெருவில் சர் புர்ரென்று வண்டிகளை ஓட்டிச் செல்லும்போது, வீட்டில் நெருப்பைக் கையாளும்போது என்று எங்கும் அந்த கவனக்குறைவு தெரிகிறது. யூனியன் கார்பைட் இந்தியாவின் போபால் ஆலையில் வேலை செய்த ஊழியர்களின் கவனக்குறைவுக்கு யாரைக் குறை சொல்வது?

இவை அனைத்தையும் தாண்டி யூனியன் கார்பைட் இந்தியா நிர்வாகிகள்மீது குற்றம் சாட்டியாகவேண்டும். ஆனால் அந்தக் குற்றம் சிறையில் அடைக்கக்கூடிய ஒன்றா?

நிறுவனங்களின் செயல்பாடுகளை சரியான வழியில் கொண்டுசெல்ல, முக்கியமான ஆயுதம் ஒன்று உள்ளது. அதுதான் கடுமையான அபராதம். இந்தியச் சட்டங்கள் எல்லாம் பல ஆண்டுகாலமாக மாற்றப்படாமல் தூசு படிந்து உள்ளவை. அதனால்தான் 2 ஆண்டுகாலச் சிறை + சில ஆயிரம் ரூபாய் அபராதம் என்றெல்லாம் உள்ளது. மாறாக அபராதம் பல லட்சங்கள் அல்லது சில கோடிகள் என்று ஆகிவிட்டால், நிறுவனங்கள் கொஞ்சம் கவனமாக இருக்கத் தொடங்கும். மோசமான நடத்தை கொண்ட நிர்வாகத்தை அபராதத்தின்மூலமே திவாலாக்க முடியும். திவால் ஆகிவிடுவோம் என்ற பயம் இருந்தால் அது ஒன்றே அந்த நிறுவனத்தை சரியான பாதையில் பயணிக்க உதவும். ஆனால் அத்துடன் லஞ்ச லாவண்யத்தையும் ஒழிக்கவேண்டும். இல்லாவிட்டால் லஞ்சம் கொடுத்துத் தப்பிக்கவே நிறுவனங்கள் முயற்சி செய்யும்.

போபால் விஷவாயு வழக்கில் என் கணிப்பில் மிகப்பெரிய குற்றவாளி இந்திய அரசுதான். 1984-ல் யூனியன் கார்பைடிடம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்ட இந்திய அரசு, 1999-ல் 450 மில்லியன் டாலர் போதும் என்று ஒப்புக்கொண்டது. மாறாக, இந்திய அரசு, 3.3 பில்லியன் டாலருக்கு ஒரு துளியும் குறையாமல் யூனியன் கார்பைடிடம் கறந்திருக்கவேண்டும். அப்படி அந்தப் பணத்தைப் பெற்று - அல்லது அந்தப் பணத்தைக் கையில் வாங்குவதற்கு முன்னமேயே - பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்குமாறு செய்திருக்கவேண்டும். செத்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் (இன்றைய பணத்தில்); உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையில்... என்றால் ஓரளவுக்கு அது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்.

அதைச் செய்யாமல், இன்று ப.சிதம்பரம் தலைமையில் மற்றொரு கமிட்டி போட்டு ஒரு பிரயோசனமும் இல்லை.

சிங்கப்பூர் துணை பிரதமராக தமிழரான தர்மன் சண்முகரட்ணம் தேர்வு

இலங்கையின் யாழ்ப்பாணத்து வம்சாவளித் தமிழரான தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூர் நாட்டின் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிங்கப்பூர் நாட்டின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக இருப்பவர் தர்மன் சண்முகரட்ணம். தர்மன் சண்முகரட்ணம் 1957 ஆம் ஆண்டு பிறந்தவர்.

இவரது மூதாதையர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். தர்மன் சண்முகரட்ணத்தின் அப்பப்பா ஊரெழு கிராமத்தைச் சேர்ந்தவர்.

சிங்கப்பூரில், கடந்த 2001 ஆம் ஆண்டு தொடக்கம் முழு நேர அரசியல் ஈடுபட்ட இவர் ஏராளமான அமைச்சுப் பதவிகளை வகித்து வந்துள்ளார்.

மேலும், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் நிதி அமைச்சராக உள்ளார். நேற்று முன் தினம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது இவரது நிதி அமைச்சர் பதவியில் மாற்றம் செய்யப்படவில்லை.

இவர் 2005 ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்து இருந்தார். இவர் ஒரு பொருளாதார நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English summary
Dharmam Sanmugarathnam has been appointed as the deputy prime minister of Singapore on May 18th.

நெடியவனை ஒப்படைக்க வேண்டும்: இலங்கை கோரிக்கை

கொழும்பு, மே.21: கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் நெடியவனை ஒப்படைக்க வேண்டும் என்று நார்வே அரசிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை இணையதளங்கள் இதைத் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் இயக்கப் பிரமுகர் நெடியவன் கடந்த இருபதாம் தேத நார்வேயில் கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தது தொடர்பான விசாரணைகள் அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நார்வேயிடம் இலங்கை அரசு கோரியுள்ளது. பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டமைக்காக நெடியவன் எனப்படும் சிவபரன் பேரின்பநாயகம் இலங்கையால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர் என்று அரசு சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் நெடியவன் கைது செய்யப்பட்டது தொடர்பான அனைத்து விபரங்களையும் தங்களிடம் சமர்ப்பிக்குமாறும் இலங்கை அரசு நார்வேயிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கனிமொழிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி

கனிமொழி எம்.பி.யின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, அதற்கான காரணங்களை 144 பக்க உத்தரவில் விளக்கி கூறி இருந்தார்.
 முடிவில், இந்த வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் கனிமொழி கண்ணியமாக நடந்து கொண்டதற்கு தனது சிறப்பு பாராட்டை தெரிவித்துக்கொண்டார்.

பெண் என்பதற்காக ஜாமீன் மனுவில் சலுகை காட்ட முடியாது என்று கூறியபின், இந்த பாராட்டை நீதிபதி தெரிவித்தார்.

கனிமொழியின் கண்ணியமிக்க நடத்தைக்காக அவருக்கு சில சலுகைகளை வழங்க விரும்புவதாகவும் அப்போது நீதிபதி சைனி குறிப்பிட்டார்.

Spectrum-Tata- Ambani. ஸ்பெக்ட்ரம் வழக்கில் அனில் அம்பானி, ரத்தன் டாடாவையும் சேர்க்கக்கோரி மனு

டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்ற வக்கீல் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,

"ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், அரசியல் பெண் தரகர் நீரா ராடியா, தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, ரத்தன் டாடா, தயாளு அம்மாள் ஆகியோருக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் சி.பி.ஐ. மேற்கொள்ளவில்லை.
 எனவே குற்றப்பத்திரிகையில் அவர்களுடைய பெயரையும் சேர்த்தால்தான் உண்மை வெளிவரும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை வருகிற 30-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது

தன்னை நிரூபித்திருக்கிறார் ஸ்டாலின்


தி.மு.க. தோற்றுப் போனாலும், புதிய தொகுதியில் போராடி வெற்றி பெற்று தன்னை நிரூபித்திருக்கிறார் ஸ்டாலின். தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க ஸ்டாலின் வந் தபோது, அவருக்கான மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்பதை உணர முடிந்தது.
தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் இந்தமுறை சென்னையை விட்டு இடம் பெயர்ந்து போட்டியிட்டனர். ஸ்டாலினும் ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுவிட்டு கொளத்தூரில் போட்டியிட்டார். அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமி அவரை எதிர்த்து போட்டியிட, எதிர்ப்பு பலமானது.

வாக்கு எண்ணும் நாளன்று, இருவருக்கும் கடும்போட்டி நிலவியது. மாறி, மாறி இருவரும் முன்னிலை வகித்தனர். வாக்குப் பெட்டிகளில் வேறு பிரச்னை ஏற்பட, பரபரப்பு அதிகமானது. தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தோல்வியால் துவண்டிருந்த தொண்டர்கள் ஸ்டாலினாவது வெற்றிபெற வேண்டும் என எதிர்பார்க்கத் தொடங்கினர். ஸ்டாலின் வெற்றி என அறிவிக்கப்பட்டதும் தான் அவர்களுக்கு உயிர் வந்தது.

தி.மு.க. தோல்வியால் கட்சியின் தலைவர்கள் எல்லாம் துவண்டு போயிருக்க, அதை உதறிவிட்டு தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தார் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். மூன்று நாட்களாக, கொளத்தூர் தொகுதியில் ஒரு சந்துகூட விடாமல் அனைத்து மக்களையும் சந்தித்து தனக்கு ஓட்டு போட்டதற்காக நன்றி தெரிவித்தார். தோல்வியை உதறிவிட்டு, அவர் இப்படி கிளம்பியது தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதைக் காண முடிந்தது.
ஆளுயர மாலைகள், பட்டாசுகள் என ஸ்டாலினை திணறடித்து விட்டார்கள் தொண்டர்கள். அவருடன் சென்னை மேயர் மா.சுப்பிரமணியனும், வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபுவும் வந்திருந்தனர். தொகுதிக்குள் ஒவ்வொரு தெருவிலும் நின்று அமைதியாகவும், தெளிவாகவும் மக்களிடம் பேசினார் ஸ்டாலின். தங்கள் தொகு தியின் குறைகளை மக்கள் அவரிடம் தெரிவிக்க, பொறுமையாக கேட்டுக் கொண்டார்.

தி.மு.க.வின் அம்பத்தூர் வேட்பாளர் ரங்கநாதனின் வீட்டைக் கடக்கும்போது வண்டியை நிறுத்தி விட்டு, அவரது வீட்டிற்குள் சென்றார் ஸ்டாலின். உடன் மேயரும் செல்ல, வி.எஸ்.பாபு மட்டும் உள்ளே போக மறுத்துவிட்டார். ‘‘தோத்துட்டா ஒரு மரியாதையும் இல்லை. ஜெயிச்சாதான் மரியாதை’’ என ஒரு தொண்டர் சத்தமாகவே சலித்துக் கொண்டார்.

‘‘இந்த முறை தி.மு.க. தோல்விக்கு தலைவரோட குடும்பத்து ஆட்கள்தான் காரணம். ஆனாலும் மக்களுக்கு ஸ்டாலின் மேல் எந்தக் கோபமும் இல்லை. அவரோட சுறுசுறுப்பு, துணை முதல்வரா அவர் செயல்பட்ட விதம் எல்லாமே மக்களை ரொம்பவே கவர்ந்திருந்தது. குடும்பத்தை அரசியல்ல இருந்து விலக்கி வைச்சாதான் அடுத்து ஆட்சி அமைப்பது பற்றி யோசிக்கலாம்’’ என அடித்துச் சொல்கிறார் தி.மு.க. தொண்டர் ஒருவர்.
thanks kumudam.

கொழுப்பால் கொலஸ்ரோலா? தக்காளிச் சாறு அருந்துங்கள்! விஞ்ஞானிகள் தகவல்


சமைக்கப்பட்ட தக்காளி அல்லது தக்காளிச் சாறில் காணப்படும் இரசாயனம் இரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கும், உயர் குருதி அழுத்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் சிறந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய பிரச்சினை உள்ளவர்களுக்கு பொதுவாக statins மருந்து வகைகள் சிபார்சு செய்யப்படுகின்றன.

இந்த மருந்துகளில் காணப்படும் இரத்தக் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு இரசாயனத்தை போலவே சமைக்கப்பட்ட தக்காளியும், தக்காளிச் சாறும் பயன் தரக் கூடியவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டுமே இதயத்தில் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியவை.


இத்தகைய நோயாளிகள் தினசரி இரண்டு அவுன்ஸ் தக்காளிச் சட்னி அல்லது ஒரு பைன்ட் தக்காளிச் சாறை உட்கொள்வதன் மூலம் பெரும் பயனை அடைய முடியும்.

நன்கு பழுத்த தக்காளியில் சிவப்பு நிற பளபளப்பு ஏற்படக் காரணமாக இருப்பது அதில் பொதிந்துள்ள lycopene என்ற இரசாயனமாகும். இந்த சக்தி மிக்க இரசாயனம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது.

அத்தோடு மாரடைப்பு பக்கவாதம் என்பனவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lycopene என்ற இந்த இரசாயனம் பற்றி நடத்தப்பட்டுள்ள 14 சர்வதேச ஆய்வுகளை கடந்த 55 வருடங்களாக நன்கு ஆராய்ந்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

உடம்பிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரோலுக்கு இது இயற்கையான பாதுகாப்பை வழங்கக் கூடியது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

பிரிட்டனில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொலஸ்ட்ரோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு statins மருந்து வகைகளே வழங்கப்படுகின்றன

அல்லக்கைகளும் அடிப்பொடிகளும்,இவற்றின் செம்மொழி அந்தஸ்து


சென்னையின் நம்பர்1 சுற்றுலாத்தலம்
நடந்து முடிந்த பொதுத் தேர்தல் காரணமாக செந்தமிழுக்கு இரண்டு புதிய அருஞ்சொற்கள் கிடைத்திருக்கின்றன – அல்லக்கை, அடிப்பொடி. இவை பழைய சொற்களே என்று வாதிடுவோரும் இவற்றின் செம்மொழி அந்தஸ்து இப்போது ஏற்பட்டதுதான் என்பதை ஒப்புக்கொள்வார்கள்.
அல்லக்கைகளின் ஆதிக்கத்தைப் பிடுங்கி அடிப்பொடிகளின் வசமாக்கியிருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருங்குடி மக்கள்.
கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, ஆட்சி வந்தாலும் போனாலும் உணர்ச்சிவசப்படுவதை விட அந்த அ & அ கும்பல்கள் உணர்ச்சிவசப்படுதல் ரொம்பவே அதிகம்.
‘மதுரையில் இருக்கும் போது மருதக்காரனாக இரு’ என்பதைப் போல சில ஊடகங்கள் கடந்த ஐந்து வருடங்களாக ‘அல்லக்கை’யாக இருந்து ஓவர் நைட்டில் ‘அடிப்பொடி’யாக மாறியிருக்கலாம். ஆனால் ஒரிஜினல் அல்லக்கைகள் ஒரு போதும் அடிப்பொடியாக மாறுவதில்லை. வைஸ்-வெர்ஸா!
ஐந்தாண்டுக் கால ஆட்சியில் அல்லக்கைகள் டாட்டா சுமோ போன்ற கட்சி வேட்டிகளுக்காகவே இந்தியாவில் உற்பத்தியாகும் ‘கனரக’  வாகனங்களில் சர் புர்ரென்று டோல் காசு கட்டாமல் பறப்பதற்கென்றே கட்சிக் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு சென்றதைக் கண்கூடாகக் கண்டோம். கடந்த 13-ம் தேதியன்று அடிப்பொடிகள் அதையே பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள். இப்போதெல்லாம் டோலில் அல்லக்கைகள் காசு கட்டித்தான் ஆக வேண்டுமாம். அடிப்பொடிகளுக்கு தான் ஓசி!
இப்படிப் பல விஷயங்களில் அல்லக்கைகள் பின்பற்றிய அதே அரசியல் அரிச்சுவடியை அடிப்பொடிகள் பின்பற்றினாலும் தலைவர்கள் விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கிறது.
காதலர்களுக்கு ஏசி வசதி
கருணாநிதி கட்டினார் என்பதற்காக ஆயிரத்து சொச்சம் கோடி செலவு தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா. கருணாநிதிதான் வேண்டாம், போகட்டும். பழைய கோட்டையைப் புதிய நூலகமாக்கிக் கொண்டுவைத்த அந்தப் பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் என்ன பாவம் செய்தன? அத்தனையும் கருணாநிதி கரம் பட்டவை என்றுகூடச் சொல்லமுடியாதே? யாரும் பார்க்காத நூலகத்தில், யாரும் தொட்டுத் தடவி, எடுத்துப் புரட்டி வாசிக்கத் தொடங்காத புத்தகங்கள் எத்தனை எத்தனை ஆயிரங்கள்! இனி அவற்றின் கதி என்ன? [கோட்டூர்புரத்தில் உலகத்தரத்தில் ஒரு நூலகம் வேறு கட்டியிருக்கிறார் கருணாநிதி. இன்னும் ஒரு சில தளங்களுக்கு மேலே வேலையே முடியவில்லை. புத்தகங்களும் இன்னும் அடுக்கி முடித்தபாடில்லை. அந்தப் பலநூறு கோடியும்கூடப் பாழா என்ற கேள்வி எழாமலில்லை.]
புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் இப்போதே சுற்றுலாத் தலமாகிக்கொண்டிருக்கிறது என்று நாளிதழ்கள் சொல்கின்றன. இன்னும் சுண்டல் கடைகள் மட்டும்தான் வரவில்லை. கோட்டூர்புர நூலக வளாகத்தில் சைக்கிள் சுக்கு காப்பிவாலாக்கள் வரத்தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. காந்தி மண்டபக் காதலர்கள் செண்ட்ரலைஸ்ட் ஏசி வசதியுடன் இனி காதல் புரியலாம். ஆட்சி மாற்றம்!
கருணாநிதி அரசு தயாரித்தது என்பதற்காக சமச்சீர் கல்வி புத்தகங்களில் பல பாடங்களுக்கு ‘கட்’ கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. (’ஜிங்ஜாக்’க்குகள் தான் கட் என்பது தனிக் கதை! ஆனால் அடுத்த வருடம் அது ‘ஜாக்ஜிங்’காகப் புதிதாகப் புகாமல் இருந்தால் சரி!)
சமச்சீர் கல்வி முறையே அடுத்தக் கல்வியாண்டில் இருக்காது என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு அதை ரத்து செய்ய நேரம் போதாதாம்! ஏன் போதாது? வேண்டுமானால் பள்ளிக்கூடங்களையே ஒரு ரெண்டு மாதம் கழித்துத் திறக்கச் செய்து அதை ரத்து செய்ய வேண்டியது தானே? 50 கோடி ரூபாய் செலவில் பழைய (புதிய?!) தலைமைச் செயலகம் சென்றவருக்கு இதையா செய்ய முடியாது? கல்வியாவது ஒண்ணாவது?! கல்வியை அரசியலாக்கியது போதாது என்று இப்போதெல்லாம் கல்வியிலும் அரசியல் புகுத்துகிறார்கள்!
கேள்வி கேட்டால் ‘அவர்கள் செய்யவில்லையா?’ என்று அடிப்பொடிகளும், ‘இவர்களும் தானே செய்தார்கள்?’ என்று அல்லக்கைகளும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவார்கள். உலகறிந்தபடியே, அடிப்பொடிகளும் அல்லக்கைகளும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான்!
கண்கள் படாமல், கைகள் தொடாமல் - செம்மொழி நூலகம்
ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறும்போது அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். அவர்களைப் போலவே சில இடப் பெயர்களும் பந்தாடப்படுகின்றன. உதாரணம் : கே.கே. நகர் – கலைஞர் நகர் – கே.கே. நகர்!
பேருந்துகளினுள் ஒட்டப்பட்ட நாம், நான், உதடு ஸ்டிக்கர்களை இரவோடு இரவாகப் பிய்த்தெடுக்க ரொம்பவே மெனக்கெட்டிருப்பார்கள் பேருந்து ஊழியர்கள்!
போன ஆட்சிக்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியையும் தாண்டி பேரும் புகழும் பெற்றுத் தந்தது மின் வெட்டு! இந்த ஆட்சி வந்து நான்கைந்து நாட்கள் ஆகியும் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் மாநிலமெங்கும் தொடருகின்றன என்று மக்கள் புலம்புகிறார்கள். இப்படி ஒரே நாளில் சரி செய்ய முடிகிற பிரச்னையா என்ன அது?! அமெரிக்க மின் சாதனங்களை இப்போதெல்லாம் சென்னையில் வோல்டேஜ் கன்வர்ட்டர்கள் இல்லாமலேயே உபயோகிக்க முடிகிறதாம். சதா சர்வ காலமும் 110 வோல்ட் அளவிலேயே லோ-வோல்டேஜாக இருந்தால் அப்படித்தான்!
இலவசங்களுக்கான பிள்ளையார் சுழியாக வருகிற 1-ம் தேதியிலிருந்து இலவச அரிசி உத்தரவுக்கு கையெழுத்து போட்டாகி விட்டது!
14-ம் தேதியே ரேஷன் கடைக்குச் சென்று ‘இலவச அரிசி எங்கேய்யா?’ என்று மக்கள் கேள்வி கேட்ட கூத்து பல நாளிதழ்களில் வந்திருந்தது.
தேன் நிலவு கொண்டாட ஜெ.வும் தமிழக அரசும் புதுமணத் தம்பதிகள் அல்ல. ஏற்கெனவே இரண்டு முறை ஆண்டு முடித்தவர்கள்தானே?

உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலை மகாராஷ்டிராவில்

மும்பை: உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலை மகாராஷ்டிராவில் அமையவுள்ளது. மகாராஷ்டிர மின்துறை கழகம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் இந்த சோலார் மின் உற்பத்தி ஆலையில் சுமார் 150 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பிருதிவ்ராஜ் சவான் கூறினார். இது தொடர்பாக மகாராஷ்டிரா அமைச்சரைக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் சவான் பேசுகையில், மகாராஷ்டிராவின் வடக்கு பகுதியான துலே மாவட்டத்தில் உள்ள சிவாஜி நகர் தாலுகாவில் , சூரிய ஒளி மின்சாரம் உற்பத்திய செய்யும் திட்டம் துவங்கப்படவுள்ளது. மொத்தம் 1987 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் துவங்கப்படவுள்ளது. இதில் 20 சதவீத பங்கினை மாநில அரசும், (397.40 கோடி) மீதம் ஜெர்மனைச் சேர்ந்த மெஸ்சர் கே.வி.ட.பிள்.யூ. என் நிதி நிறுவனம் முதலீடு செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 150 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும் , இதே போன்று இப்பகுதியில் சந்திராப்பூரில் 1முதல் 4 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால் உலகில் மிகப்பெரிய சோலார் மின் உறத்தி நிலையம் என் பெருமையினை மகாராஷ்டிர ‌பெறும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் மின்சார உற்பத்தி தொடங்கப்படும். சாதாரண மின் உற்பத்திக்கு ஒரு மொ வாட் மின்சாரத்திற்கு ரூ. 17.91 பைசா செலவாகும், ஆனால் சோலார் மின் உற்பத்திக்கு ஆகும் செலவு ஒரு மொவாட்டிற்கு ரூ. 12 தான் செலவு.

பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் கோரும் 140 வீத சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது : உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க!


பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க ஒன்றியம் கோரும் 140 வீத சம்பள அதிகரிப்பை அரசினால் வழங்க முடியாது. அவ்வாறு வழங்குவதென்றால் நாம் அத்தியாவசிய பொருட்களுக்கு வரியினை அதிகரிக்க வேண்டியேற்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே உயர்கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் அமைச்சர் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க ஒன்றியம் சம்பள உயர்வுகோரி மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கருத்துதெரிவிக்கையில், அரசு, அரச ஊழியர்களுக்கு 5 சதவீத சம்பள உயர்வினை வழங்க உள்ள அதேவேளை, பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு 36.2 சத சம்பள உயர்வை வழங்கியுள்ளது.
இந்நிலையில் அவர்கள் மொத்தமாக 140 சதவீத சம்பள உயர்வு கோருவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. வழங்கப்பட்டுள்ள சம்பள உயர்வுகள் பல கலந்துரையாடல்களின் பின்பே வழங்கப்பட்டன. பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒன்றியத்தின் தொழிற் சங்க நடவடிக்கை பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை குழப்புவதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே, விரிவுரையாளர்கள் இந்த தொழிற்சங்கத்தின் சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ள வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளத்தை 140 வீதமாக அதிகரிப்பதென்றால் அதற்காக நிதியினை பெற பல்கலைக்கழகங்கள் வருமானம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றம் பெறவேண்டும். இதனாலேயே வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதன் மூலம் தேவையான வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும்.
அப்பல்கலைக்கழகங்களில் எமது மாணவர்களுக்கு 20% இலவச அனுமதியையும் பெற்றுக்கொடுக்க முடியும். இவ்வாறான ஒரு நிலையில் விரிவுரையாளர்கள் மாதம் 5 இலட்சம் ரூபாய் அளவில் வேதனமாகப் பெறும் வாய்ப்பும் ஏற்படும்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தாம் கோரும் சம்பள உயர்வு நியாயமானதா என்று சிந்திக்க வேண்டும். எமது நாட்டின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்திவிட்டு சம்பள உயர்வு வழங்குவதா என்று நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன் என்றார்.

யாழில் மாட்டிக்கொண்ட கொள்ளையர்

யாழ்ப்பாணத்துக்கும், கண்டிக்கும் இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்ஸில் பெண்ணின் தங்கச்சங்கிலி களவாடப்பட்டது. சாரதி, நடத்துநரின் புத்திசாதுரியத்தால் சில மணித்தியாலங்களில் அது மீட்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: நேற்றுக்காலை 6.15 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இயக்கச்சிப் பகுதியில் நான்கு பெண்கள் பஸ்ஸை மறித்து ஏறியுள்ளனர். குறிப்பிட்ட தூரத்தைக் கடந்ததும் அந்த நான்கு பேரும் இறங்கிவிட்டனர். சற்று நேரத்தில் பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணொருவர் தனது சங்கிலியைக் காணவில்லையென்று அலறினார். இயக்கச்சியில் ஏறிய பெண்கள் மீது சந்தேகம் கொண்ட சாரதி பஸ்ஸை திருப்பி அவர்கள் இறங்கிய இடத்தை நோக்கிச் செலுத்தினார். அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து வன்னி நோக்கி வந்துகொண்டிருந்த பஸ்ஸில் அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தததை அவதானித்தார். சாரதியும் நடத்துநரும் பஸ்ஸை மறித்து குறித்த நான்கு பெண்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர். அப்போது அதில் இரண்டுபேர் ஓடி விட்டதாகவும் ஏனையோர் பஸ்ஸுக்குள் இருந்து எடுத்ததாகக் கூறி அந்தச் சங்கிலியை ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது

வெள்ளி, 20 மே, 2011

அழகிரி டெல்லி விரைகிறார்

இந்நிலையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கலைஞர் அழைத்ததால் மதுரையில் இரவு 7 மணிக்கு விமானத்தில் ஏறினார்.

இன்று இரவு சென்னையில் கலைஞருடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் நாளை காலை சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார்.

அங்கு கனிமொழியை ஜாமீனில் எடுப்பது விசயமாக முயற்சிகள் மேற்கொள்வார் என்று தெரிகிறது.

கனிமொழியும் கைது-இனியும் காங். கூட்டணியில் திமுகவால் நீடிக்க முடியுமா?

முன்னாள் அமைச்சர் ராசாவைத் தொடர்ந்து, கனிமொழியும் தற்போது கைதாகியுள்ளதால், இனியும் காங்கிரஸுடனான கூட்டணியில் திமுகவால் நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு மேலும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க முடியாது என்ற நெருக்கடியான நிலையும் ஏற்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை கிட்டத்தட்ட திமுகவுக்கு எதிரான பிரம்மாஸ்திரமாகவே பயன்படுத்திக் கொண்டது காங்கிரஸ். இது அரசியல் தெரிந்த அனைவருக்கும் நன்றாகப் புரிய கூடியதாகும்.

ஆரம்பத்தில் இந்த விவகாரத்திலிருந்து திமுகவைக் காக்க காங்கிரஸ் முயன்றது போல காட்டிக் கொண்டது அக்கட்சி. ஆனால் உண்மையில், பிரச்சினையை வலுவாக்கி, திமுகவை நிரந்தரமாக சிக்கலில் ஆழ்த்தும் காங்கிரஸின் முயற்சி அது என்பது காங்கிரஸின் போக்கை உற்றுப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.

முதலில் ராசா பதவியிழந்தார். பின்னர் கைதும் செய்யப்பட்டார். இப்போது கனிமொழியும் கைது செய்யப்பட்டுவிட்டார்.

இதனால் திமுக வட்டாரமும், முதல்வர் கருணாநிதியின் குடும்பமும், குறிப்பாக கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராசா, கனிமொழி என இரு முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு விட்ட நிலையில் அடுத்து தயாளு அம்மாளையும் இந்த வழக்கில் இணைக்க தீவிர முயற்சிகள் நடைபெறும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பும் நிலவுகிறது. எனவே இனியும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் திமுக நீடிக்குமா, நீடிக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸின் மனம் கோணாமல்தான் நடந்து வந்தார் கருணாநிதி. முள் மீது விழுந்து விட்ட சேலையை பத்திரமாக எடுப்பது மட்டுமே அவரது ஒரே கவனமாக இருந்து வந்தது.

காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது அதிக சீட்களைக் கேட்டபோதும் கூட பொறுத்துக் கொண்டு கொடுத்தார். காங்கிரஸை தூக்கி எறியலாம் என்று திமுக முன்னணித் தலைவர்கள் கூறியபோதும் கூட அவர் அமைதி, பொறுமை காத்தார். காரணம், கனிமொழி. சமீபத்தில் நடந்த திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தின் போதும் கூட காங்கிரஸுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும், எச்சரிக்கையையும் திமுக நிறைவேற்றவில்லை.

மாறாக மென்மையான அணுகுமுறையையே திமுக கடைப்பிடித்தது. கனிமொழியை பத்திரமாக மீட்க வேண்டும் என்ற காரணத்தால் இந்த அமைதியை கடைப்பிடித்தது திமுக.

ஆனால் தற்போது கனிமொழி சிறைக்குப் போகும் நிலையில் கருணாநிதி பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். திமுகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதற்கு மேலும் திமுக கூட்டணியில் நீடிக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், கூட்டணியை விட்டு வெளியேறினால், அந்த இடத்தை அதிமுக நிரப்புவதோடு, தங்கள் மீதான மத்திய அரசின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்ற அச்சமும் திமுகவிடம் உள்ளது.

ஆனால் இதற்கு மேலும் இந்தக் கூட்டணிக்கு அர்த்தம் இருக்காது என்ற நிலையில், கருணாநிதி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகியுள்ளது.

கனிமொழியை பாதுகாப்பதா அல்லது திமுகவின் எதிர்காலத்தை காப்பாற்றுவதா என்ற கொடுமையான நிலைமையில் உள்ளார் கருணாநிதி.
English summary
Will DMK continue in Congress alliance anymore? This is the big question now after Kanimozhi has been arrested. DMK and particularly Karunanidhi and his wife Rajaathi Ammal in big shock. Political observers say that DMK may not conitnue its alliance with Congress anymore. The time has come to snap the ties for both parties.

அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா?

யாருமே எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் படத்திற்குப் போய் இத்தனை விருதுகள் குவியும் என்று. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என கையில் கிடைத்த விருகளையெல்லாம் எடுத்துக் கொடுத்து தேசிய விருதுகளையே பெரும் கேலிக்கூத்தாக்கியுள்ளது 58வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் கமிட்டி.

சத்தியமாக இந்த விருதுகளை ஆடுகளம் குழுவினரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திரைக்கு வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிய படம் ஆடுகளம். மக்களால் சுத்தமாக ரசிக்கப்படாத ஒரு படம். வெறும் விளம்பரத்தை மட்டுமே வைத்து ஓட்டிப் பார்க்க முயன்ற சன் பிக்சர்கஸ் தயாரித்த படம் இது.

படம் தரக்குறைவானது என்று கூற முடியாவிட்டாலும் கூட விருதுகளுக்குரிய தகுதிகள், அதுவும் இத்தனை விருதுகளை அள்ளும் அளவுக்கு இந்த படம் உள்ளதா என்பதுதான் அத்தனை பேரின் மனதிலும் ஓடும் கேள்விகள்.

காரணம், இந்த ஆண்டு பல நல்ல படங்களைக் கண்டது தமிழ்த் திரையுலகம். நந்தலாலா, அங்காடித் தெரு, மைனா, விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டனம், களவாணி என இந்த வரிசை நீண்டது.

களவாணி படத்தில் நடித்த விமலின் நடிப்பை இயக்குநர் கே.பாலச்சந்தர் இப்படி விமர்சித்திருந்தார் - இயல்பான, எதார்த்தமான நடிப்பு, அருமையான நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளார்.

அங்காடித் தெரு படத்தைப் பார்த்து கலங்காத, பதறாத மனங்களே கிடையாது. பிரகாசமான வெளிச்சத்திற்கு மத்தியில் இருட்டு வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து போட்டு, மனங்களை உலுக்கியெடுத்த அருமையான படம்.

இப்படி ஒரு கதையை தமிழ் சினிமாக்காரர்கள் ஏன் இத்தனை காலமாக மக்களுக்குக் கொடுக்கவே இல்லை என்று அத்தனை பேரும் அதிசயித்துப் போன படம் அங்காடித் தெரு. அபாரமான நடிப்பு, அருமையான திரைக்கதை, இயல்பான இசை, இயற்கையான நடிப்பு என படம் முழுக்க சிறப்புகள்தான் அதிகம்.

அதேபோல இசைக்காக பேசப்பட்ட படம் நந்தலாலா. அதன் கதை, வேறு ஒரு இடத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டது என்றாலும் கூட படத்தின் பி்ன்னணி இசை மிகப் பிரமாதமாக இருந்ததாக அத்தனை பேராலும் பேசப்பட்ட படம் நந்தலாலா. இசைஞானி இளையராஜா என்ற ஒரே ஒரு மனிதரின் அபாரமான இசைதான் இந்தப் படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்தியது என்று கூறலாம். இந்த இசைக்கு விருது தரப்படவில்லை.

பிறகு மைனா. இந்தப் படத்தைப் பாராட்டாத வாய்களே இல்லை. கமல்ஹாசன் படத்தின் ரிலீஸுக்கு முன்பே கூறி விட்டார். தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும், நான் நிம்மதியாக தூங்குவேன் என்று கூறி விட்டார். படம் வெளியான பின்னர் அதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ, இந்தப் படத்தில் நான் நடிக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கப்பட்டார். படத்தைப் பார்த்த அத்தனை பேரும் பாராட்டிய விஷயம், இயல்பான கதை, அருமையான திரைக்கதை, அபாரமான நடிப்பு, அழகான இசை ஆகியவற்றைத்தான்.

இதேபோல ஒரு சாதாரண கதையை மிக மிக அழகாக, கவிதை போல வடித்திருந்தார் இளம் இயக்குநர் விஜய் தனது மதராசபட்டணம் படத்தில். இப்படத்தின் கதையும் சரி, அதில் நடித்த எமி ஜாக்சனும் சரி, இசையும் சரி எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தைப் பற்றி பல பக்கங்கள் கொண்ட மிக நீண்ட விமர்சனத்தை எழுதி சிலாகித்திருந்தார் கே.பாலச்சந்தர். உலகின் மிகச் சிறந்த இயக்குநர் வரிசையில் விஜய் அமருவார் என்றும் புகழாரம் சூட்டியிருந்தார். விஜய்யின் இயக்கம் அவ்வளவு அபாரமானதாக இருந்தது.

இப்படி எத்தனையோ படங்கள், சிறப்பான படங்கள், அபாரமான படங்கள், சிறந்த நடிப்பு, இசை, இயக்கம், திரைக்கதை என வந்திருந்தும் இந்தப் படங்களுக்கு ஒரு விருது கூட தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் வியப்பாக உள்ளது. சிறப்புக் குறிப்பில் கூட இந்தப் படங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. அதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

உட்கார்ந்து யோசித்தாலும், படுத்தபடி யோசித்தாலும் கூட ஆடுகளத்திற்கு இத்தனை விருதுகள் எப்படி கிடைத்தன என்பதற்கு சத்தியமாக விடை தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா?
English summary
6 National Awards to Aadukalam has created sense of shock and disappointment among the fans and film critics. There were so many good films including the beautiful Angadi Theru and Myna. Nandalala recieved so many praises for its music by Ilayaraja. Angadi Theru's story and screenplay recieved well by all walks of life. But these movies have not got even a word of praise by Awards committee. This has created a big question of the quality of the awards committee's selection process.

கனிமொழி கைது : கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமாரும் கைது

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்கிறது.

அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.

இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப் பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. முறைகேடாக ஸ்பெக்டரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி ரியாலிட்டியின் (இதன் இயக்குனர் ஷாகித் உசேன் பல்வா) இன்னொரு நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இது கனிமொழிக்குத் தரப்பட்ட லஞ்சம் தான் என்று சிபிஐ கூறியுள்ளது. கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மே 6ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன்ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார்.

அடுத்த நாளும் விசாரணை நடந்தது.அதன் பின்னர் மே 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார் கனிமொழி. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நீதிபதி ஷைனியிடம் தெரிவிக்கப்பட்டது. தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கனிமொழி கூறவே அதை ஏற்ற நீதிபதி அவர் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இதையடுத்து அவர் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்குப் பின்னர் மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த நிலையில் இன்று கனிமொழி முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஷைனி அறிவித்தார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றம் வந்தார். அவருடன் கணவர் அரவிந்தனும் உடன் வந்திருந்தார்.

காலையில் நீதிபதி ஓ.பி.ஷைனி கூறுகையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். இந் நிலையில் இந்தத் தீர்ப்பு 2.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்ட்டது.

அதன்படி பிற்பகல் இரண்டரை மணியளவில் நீதிபதி தனது உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது கனிமொழியின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார் நீதிபதி. மேலும் கனிமொழியை உடனடியாக கைது செய்து 15 நாட்கள் சிறையில் வைக்க சிபிஐக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பாடியாலா நீதிமன்ற லாக்-அப்பில் கனிமொழி அடைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு 6வது சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

கனிமொழியைப் போலவே கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் முன்ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவையும் நீதிபதி ஷைனி நிராகரித்து விட்டார். இதனால் அவரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.

இந்தச் சிறையில் தான் திமுக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண் கலங்கிய கனிமொழி:

முன்னதாக நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியவுடன் கனிமொழி கண் கலங்கினார். தனது கணவர் அரவிந்தன் பக்கம் திரும்பிய அவரது கண்களில் நீர் வழிந்தது. அவருக்கு அரவிந்தன் சமாதானம் கூறினார்.

முன்னதாக இன்று காலை கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கனிமொழி, எந்த உத்தரவு வந்தாலும் அதை சந்தித்தாக வேண்டிய நிலையில் நான் உள்ளேன். உத்தரவுக்காக காத்திருக்கிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன், எந்தப் பதட்டமும் இல்லை என்றார் அவர்.

சிறையில் யார் யார்?:

இதுவரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாஹித் பல்வா, அதன் இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திரா பொபாரா, கெளதம் ஜோஷி, டிபி ரியாலிட்டியின் நிர்வாகியும் ஷாகித் உசேன் பல்வாவின் உறவினருமான ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோர் இணைகின்றனர்.

உயர் நீதிமன்றத்தில் அப்பீல்?:
  Read:  In English 
இந் நிலையில் கனிமொழிக்காக வாதாடி வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி கூறுகையில், இந்த விஷயத்தில் கைது நடவடிக்கைகையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கனிமொழி மனு தாக்கல் செய்யலாம் என்றார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளதால் கனிமொழியை நாளை காலை 10 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி சைனி உத்தரவிட்டுள்ளார். இதனால் அவர் நாளை நீதிமன்றம் அழைத்து வரப்படவுள்ளார்.
English summary
Delhi special CBI court will pronoune its verdict on Kanimozhi's advance bail petition today. If bail granted Kanimozhi will escape from arrest. Otherwise she will immediatley arrested and lodged in Tihar jail.

மாணவர்களுக்கு இலவச "Laptop': கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு

பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச, "லேப்-டாப்' வழங்குவதற்காக, மாவட்ட வாரியாக மாணவர்கள் குறித்த விவரங்களை கணக்கெடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் முதல், ஆகஸ்ட் வரை, இந்த கணக்கெடுப்பு நடைபெறும். அதனடிப்படையில், வரும் டிசம்பருக்குள், 14 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக, "லேப்-டாப்' வழங்கப்பட உள்ளன.

சட்டசபை தேர்தலையொட்டி, அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அனைவருக்கும், இலவசமாக, "லேப்-டாப்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆட்சியை பிடித்துள்ள நிலையில், "தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகள் அனைத்தும், ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து உள்ளார். இதனால், துறை வாரியாக நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்து, அந்தந்த துறை அமைச்சர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு இலவச, "லேப்-டாப்' வழங்கும் திட்டம் குறித்து, நேற்று முன்தினம், சென்னையில் நடந்த கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விரிவாக ஆய்வு செய்தார். தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அமலில் இருக்கிறது. ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஜூன் முதல், ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களுக்கு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இது முடிந்தபின், மாவட்ட வாரியாக பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், மாணவியர் குறித்த விவரங்களை கணக்கெடுத்து அளிக்குமாறு, பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் நிதிச் செலவுகள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும், "லேப்-டாப்'கள் தரமான நிறுவனத்திடம் இருந்து வாங்குவது குறித்தும், ஆராயப்பட்டன. மேலும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, 1,000 முதல், 5,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விதிமுறைகள் குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. கடந்த பிளஸ் 2 தேர்வை, ஏழு லட்சத்து, 16 ஆயிரத்து, 543 பேர் எழுதினர். வரும் கல்வியாண்டில், பிளஸ் 2 வகுப்பில் ஏழரை லட்சம் மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில், 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழுமையான புள்ளி விவரம், ஆகஸ்ட் இறுதியில் தெரியவரும். எனினும், 14 லட்சம் பேருக்கு இலவச, "லேப்-டாப்'கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதேபோல், உயர் கல்வித்துறை சார்பாகவும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச, "லேப்-டாப்'கள் வழங்கப்பட உள்ளன.

இந்து சமூத்திரத்தில் மீன்பிடி:ஐரோப்பிய ஒன்றியம் தோற்கடிக்கப்பட்டது

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மீன்பிடிப்பதற்கான தமக்கான ஒதுக்கீட்டினை அதிகரிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியமும் ஏனைய சில முதன்மையான மீன்பிடி நாடுகளும் ரூணா ஆணைக்குழுவிடம் முன்வைத்த வேண்டுகையினை அது நிராகரித்திருப்பதாக சிறிலங்காவினது மீன்பிடித்துறை அமைச்சர் கூறுகிறார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ரூனா எனப்படும் சூரை மீன் பெருமளவில் அழிக்கப்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், தென்கொரியா மற்றும் ஏனைய மீன்பிடி நாடுகள்தான் பொறுப்பு என சிறிலங்காவினது மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தின பி.பி.சியின் சிங்கள சேவையான சந்தேசியவிடம் கூறியிருக்கிறார்.

"உலங்குவானூர்திகள் மற்றும் செய்மதித் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தும் இந்த நாடுகள் சூரை மீன்களைப் பிடிப்பதற்காக மாத்திரம் பெரும் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தவில்லை. மாறாக அவர்கள் குறிப்பிட்ட மீன்வகையினையே இல்லாது செய்யும் வகையிலேயே செயற்படுகிறார்கள்" என்றார் அவர்.

"மீன்வளத்தினைப் பாதுகாக்கும் எங்களது திட்டத்திற்கு மிகவும் தீங்கானதாக அமைகிறது"

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மீன்பிடிப்பதற்கான ஆசிய நாடுகளுக்கான ஒதுக்கீட்டினைக் குறைத்துவிட்டு தமக்கான ஒதுக்கீட்டினை அதிகரிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முயற்சியை ஏனைய 17 நாடுகளுடன் இணைந்து சிறிலங்கா முறியடித்திருக்கிறது என்றார் அவர்.

"மீனினங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என வெளிப்படையாக வாய்கிழியக் கத்துபவர்கள் யாரோ அவர்கள்தான் இங்கு மீன் வளத்தையே இல்லாதுசெய்யும் வகையில் செயற்படுகிறார்கள்" என்றார் அமைச்சர்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கான ரூணா ஆணைக்குழுவின் 15வது கூட்டத்தொடர் கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகிறது.

"இந்து சமுத்திரப் பிராந்திய ரூணா ஆணைக்குழுவில் ஐரோப்பிய ஒன்றியம் தோற்கடிக்கப்பட்டமை இதுதான் முதல்முறை' என அமைச்சர் சேனாரத்தின தொடர்ந்து தெரிவித்தார். சின்ன நாடுகளாக இருக்கலாம் அன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் யப்பான் போன்ற பெரிய நாடுகளாக இருக்காலாம்.. யார் மீன் வளத்தினைச் சிதைத்தாலும் அது குற்றம் குற்றம்தான்" என்றார் அவர்.

இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் எதிர்ப்பினை அடுத்து அடுத்துவரும் சில ஆண்டுகளுக்கு ஒதுங்கீட்டு முறையினைக் கொண்டுவருவதில்லை என ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சிறிலங்காவினது மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தின கூறுகிறார்.

ரஜினியின் ஜாதகப்படி தற்போது மிகவும்

ரஜினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது முதல் கவலையாக இருந்தது…ரஜினி ஜாதகத்தை பார்த்தால் என்ன என்று தோன்றியது..

அதன் முடிவுகள் என்னை அதிரவே செய்தன….ரஜினி ரசிகர்கள் மனம் தளரவோ..கோபப்படவோ வேண்டாம்..நான் கற்ற ஜோதிடத்தின் பார்வையில்,ஒரு ஜோதிடனாக…

இந்த பதிவை எழுதியிருக்கிறேன்…ரஜினி ரசிகனாக அல்ல..உங்கள் மனம் வருந்தும்படி இப்பதிவில் நிறைய தகவல்கள் இருக்கின்றன…அதற்காக உண்மையில் நான் வருந்துகிறேன்….ரஜினி ரசிகனாக!.

ரஜினி ஜாதகம்;

தேதி;12.12.1950

நேரம்;11.45 இரவு.

இடம்;பெங்களூர்

ராசி;மகரம்

நட்சத்திரம்;திருவோணம்

ரஜினி ஜாதக கட்டம்;ரஜினி ஜாதகம் மிக சக்தி வாய்ந்தது..தெய்வ அருள் நிரம்பியது…ஐந்தாம் இடத்தில் சுக்கிரன்,புதன் இணைந்து ஸ்ரீவித்யா யோகம் அமைந்துள்ளது..இது லட்சுமி,சரஸ்வதி யோகம்…அருள் ஒருங்கே அமைவதாகும்..இதன் மூலம் செல்வம்,ஞானம் இரண்டுமே கிட்டும்…. 4க்குடையவன் செவ்வாய் வலுத்ததால் நிறைய சொத்துக்கள் சேர்க்கையும் உண்டானது….7ல் குரு நின்றதால் புலிப்பாணி பாடலின் படி,சகல தோசங்களும் நிவர்த்தி…..

7க்குடையவன் ஞானக்காரகன் கேதுவுடன் கூடியதால்…ஞானக்குருவாக மனைவி அமைந்தார். சுக்கிரன்,புதன் இணைவு கலைத்துறையின் உச்சம் தொட்டார்…அதுவும் வெற்றி ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தில் இணைவு.இருவரும் இணைந்து 11 ஆம் இடத்தில் பார்வை செய்ததால் உலகப்புகழ் .இரண்டுக்கு அதிபதிக்கு இரண்டில் செவ்வாய் உச்சம்..பணத்துக்கு மேல்..பணம்..புகழுக்கு மேல்..புகழ்….

7ல் குரு நின்றதால் மனைவி வந்தப்பிறகுதான் மனிதன் ஆனார்….அவ்வளவு கெட்டப்பழக்கங்களுக்கு காரணம் நாலில் சூரியன்..இரண்டில் சனி,கேது…ஆறில் செவ்வாய்….சந்திரன்….. ஜாதகத்தின் இன்றைய நிலை; எண்ணிய ஒண்ணின் கோள் ஆறாமிடத்து கோளுடன் உன்னிய ராகு கேது ஒரு தளத்தில் நிற்க,கண்டம் தன்னுடல் சுகமில்லாமல் சஞ்சல மனதனாகி மின்னலாய் வியாதியஸ்தன் என விளம்பலாமே..! -

துய்ய கேரள ஜோதிடம் என்னும் பழைய ஜோதிட நூலில் இருந்து…. இந்த பாடல் சொல்லும் விளக்கம் ரஜினி ஜாதகத்திற்கு பொருந்தி போகிறது. ரஜினிக்கு இப்போது சனி திசையில் சந்திர புத்தி வரும் 2.7.2011 வரை நடக்கிறது. இந்த பாடலின் படி ஆறாம் அதிபதியுடன் ராகுவோ,கேதுவோ சேர்ந்திருந்தால் ,6,8,12 க்குடையவன் திசையில் மின்னலாய் நோய் தாக்கி முடங்குவான் என்கிறது…. ரஜினி ஜாதகத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் கேது இணைந்து இரண்டாம் இடத்தில் உள்ளது….

நடப்பது ஆறுக்குடையவன் திசை..நடப்பது 12க்குடைய விரயாதிபதி சந்திரன்..புத்தி. சனி-முடக்கும் கிரகம் ஆறாம் இடம்-வயிறை குறிக்கிறது…நோயை குறிக்கிறது… இவர் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் செவ்வாய் உள்ளது…இது ரத்தம் மற்றும் மர்ம உறுப்பை குறிக்கிறது…

ஆறில் உள்ள செவ்வாய் மற்றும் சந்திரன் தனது புத்தியில் இந்த உறுப்புகளை முடக்குகிறது..சிறுநீரகம் பாதிப்பு கிட்னி பாதிப்பையும் குறிக்கும்…. சந்திரன் விரயாதிபதி மட்டுமல்ல..உடல்,மனக்காரகன்…ஆக உடலும் மனமும் முடங்கி இருக்கிறது. பாதிப்பு;சிறுநீரகத்தில்….காரணம்..

செவ்வாய் ஆறில். ரஜினி இப்போதைய நிலை; கோட்சாரப்படி சனி கன்னி வீட்டில் இருக்கிறது…ரஜினி பிறக்கும் போது சனி கன்னியில்தான் இருந்தது!…சனி ஒரு முறை சுற்றி தன் ஸ்தானத்திற்கு வர முப்பது வருடம் ஆகும்…இது இரண்டாம் சுற்று…

ஒரு தீய கிரகம் ஒரு ஜாதகன் பிறந்த ஸ்தானத்தில் எங்கு இருக்கிறதோ..அங்கு மீண்டும் வரும்போதெல்லாம் ஒரு கெடுதல் நடந்தே தீரும் என என் குரு சொல்லியிருக்கிறார்..அதன்படி இந்த ஜாதகத்திற்கு பிறந்தபோது இருந்த இடத்திற்கு வந்திருக்கிறார்…

இது கெடுதலே தரும்…. ரஜினி மருத்துவமனையில் எப்படி இருக்கிறார்; ஜோதிட பாடல் குறிப்பிடுவதை பார்த்தால் மின்னலாய் நோய் தாக்கி,வியாதியஸ்தன் ஆவான்…தன்னுடல் சுகமில்லாமல்,சஞ்சல மனதனாகி என்கிறது..ரஜினி முடங்கி இருக்கிறார்…அவர் சிரித்து பேசினார் என்பதும்,டிஃபன் சாப்பிட்டார் என்பதும் பொய்.அவர் தாள முடியாத வயிற்று வேதனையில் இருக்கிறார்..

மனதில் அதிக கவலையும் குழப்பமும் இருக்கிறது…..அதன் படி ரஜினி மருத்துவமனையில் மோசமான நிலையில்தான் இருக்க வேண்டும். கிட்னி பாதிப்பிற்காக அவசர சிகிச்சை நடப்பதாக சொல்கிறார்கள்…மருத்துவமனையில்.. சந்திர புத்தி முடியும் வரை கண்டம் என்கிறது ஜாதகம்.இதை வேதனையுடன்தான் சொல்கிறேன்.

நோய் அகலும் என ஜாதக கணிப்பு சொல்ல வில்லை..அதிகம்தான் ஆகிறது….கேட்டை..பூரட்டாதி,உத்திரட்டாதி,திருவாதிரை,மிருகசிரீடம் நட்சத்திரங்கள் இவருக்கு கெடுதல் செய்யும் நட்சத்திரங்கள். நடந்து முடிந்த குருப்பெயர்ச்சி இவருக்கு சாதகம் இல்லை.இவர் லக்கினபடி…குரு…அஷ்டமாதிபதி..கெட்டவன்..

இவர் ஜாதகத்தில்,உயிர் ஸ்தானமாகிய லக்கினத்தை இப்போது பார்ப்பது..சரியில்லை…வரும் ஐப்பசி மாதம்…சனிப்பெயர்ச்சி தாண்டிவிட்டால் உயிருக்கு கண்டம் இல்லை..ஆனால் சிகிச்சை தொடரும்..அதிக செலவில்…
rajani யின் ஜாதகப்படி தற்போது மிகவும் 

மீனாக்ஷி கங்குலி: இரகசியமாகக் கிசுகிசுத்தார்கள்.புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வலயத்தை விட்டு வெளியேற அனுமதி கிடையாது

             -மீனாக்ஷி கங்குலி-
Meenakshi_Gangulyஸ்ரீலங்காவின் தென்பகுதியிலிருந்து அதன் வடபகுதியின் முனை வரை நீண்டு ஓடும் ஏ-9 நெடுஞ்சாலை, நாங்கள் இராணுவத்தினரது கடைசிச் சோதனைச் சாவடியையும் கடந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகத்தை அடைந்ததும், அவர்களின் கட்டுப்பாட்டுக்கள் இருக்கும் பிரதேசமாகிய வன்னிக்குள் நுழைவதற்காக அவர்கள் எங்கள் ஆவணங்களை பரிசீலித்தனர்.
2002ல் இது நடந்தது. அந்தச் சில நடவடிக்கைகள் அவர்கள் இரண்டு வேறுபட்ட தேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றியது. ஸ்ரீலங்காவின் பெரும் பகுதியும் பழகிப்போன ஜனநாயகம். கலகலப்பான ஊடகங்கள், உரிமைப் பிரச்சனைகளுக்காக சூடாக வாதமிடும் செயற்பாட்டாளர்கள், மாறுபட்ட அரசியல் விசுவாசமுள்ள குடிமக்கள், பொருளாதார வாய்ப்புகளுக்காக நடத்தப்படும் கலந்துரையாடல்கள் என பெரிய விடயங்களில் நிதானமாக நடைபோடும் நாட்டின் உணர்வுகள். ஸ்ரீலங்கா அரசாங்கப் படைகளுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனால் முன்னடத்தப்படும் பிரிவினைவாத தமிழ் புலிகளுக்கும் இடையேயான இரண்டு தசாப்தங்கள் நீண்ட கொடிய போர் இவை யாவற்றையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்ததைப் போலத் தோன்றியது.
வேறு விதமாகச் சொன்னால் ஒரு சுதந்திரத் தமிழீழம் எப்படித் தோற்றமளிக்கும் என்பதைப் போன்ற அடையாளங்கள் அச்சத்தை ஏற்படுத்தின. தலைவர் பிரபாகரனின் உருவப் படங்கள் எங்கும் காணப்பட்டன. அவருடைய படை வீரர்கள் எல்லா இடத்திலும் பிரசன்னமாகி இருந்தார்கள். அதே போல அவருக்குத் தகவல் தெரிவிக்கும் உளவாளிகளும். சுகாதாரம், உணவு, வாழ்க்கைத் தொழில் அல்லது கல்வி போன்ற சகல உதவிகளுக்குமான வழிகள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகளாலேயே தீர்மானிக்கப் பட்டன. தமிழ் புலிகளின் புகழினைப்பாடும் ஒற்றை இராகத்தினையே ஊடகங்கள் பாடின.
கிராமவாசிகள் பெரும்பாலும் எங்களை தனிமையான மூலைகளுக்குள் இழுத்துச் சென்று வேறுயாரும் கேட்காதபடி தங்கள் முறைப்பாடுகளை இரகசியமாகக் கிசுகிசுத்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வலயத்தை விட்டு வெளியேற அனுமதி கிடையாது. அப்படி வெளியேற வேண்டுமாயின் குடும்ப அங்கத்தினர்களை பிணைக் கைதியாக வைக்க வேண்டும், என அவர்கள் எங்களிடம் சொன்னார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பதின்ம வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள் என முணுமுணுத்தார்கள். ஏனெனில் விரைவிலேயே அவர்களும் யுத்தத்தில் ஈடுபடுத்தப் படுவார்கள். ஏராளமானவர்கள் ஏற்கனவே தங்கள் பிரியப் பட்டவர்களை இழந்து விட்டார்கள். கேள்விகளுக்கோ மாறுபடுவதற்கோ அங்கு இடமில்லை.
பிரபாகரனின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக வேண்டி நாங்கள் அங்கு சென்றிருந்தோம். ஆயிரக்கணக்கான கொடூரமான கொலைகளை இயக்கிய அந்த மனிதர் சிறிது பச்சாத்தாபத்துக்கு உட்பட்டிருப்பது போலத் தோன்றியது. மனிதாபிமானத் துஷ்பிரயோகங்கள் பற்றிய பொறுப்புக்கூறும் தன்மைகளின் தேவைகளைப் பற்றி கவனத்தில் எடுப்பதற்கு அவர் விருப்பப் படவில்லை. ஏனெனில் தன்னுடையது ஒரு சாதாரண போராட்டமே என்கிற விளக்கத்தில். அவர் வெற்றி பெறமுடியும் என அநேகர் நம்பினார்கள். ஆயுதங்களும் பணமும் அவருக்கு கிடைப்பதற்கு நிறைய வழிகள் இருந்தன. அவருக்கு நிறைய நண்பர்களும் இருந்தார்கள்.
மே 2009 ல் நிலமை மிகவும் தீவிரமாக மாற்றமடைந்த போது பிரபாகரன் மற்றும் அவரது உயர் மட்டத் தலைவர்கள் மரணமடைய நேரிட்டது. ஸ்ரீலங்கா இராணுவத்தின் தீர்மானமான உந்துதலினால் தோல்வி ஏற்பட்டது. மூன்று வருடத்துக்கும் சற்று அதிகமான காலம் மிக மோசமுள்ள கடுமையான யுத்தம் நடைபெற்றது. பெரும்பாலான ஸ்ரீலங்காவாசிகளுக்கு  நாடு சமாதானம் மற்றும் செழிப்பான எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவதற்கான காலம் கனிந்துவிட்டது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் தருணமாக அது இருந்தது.

எஸ்.எம்.எம்.பஷீர்:மேற்குலக (தமிழரின்) மே பதினெட்டும் மேன்மையிழந்த (தமிழ்) சிறார்களும்

பயங்கரவாதத்துக் கெதிரான இலங்கை அரசின் யுத்தத்தில் வெற்றி பெற்ற நாளாக பிரபாகரனை கொன்ற மே பதினெட்டாம் திகதியை இலங்கை அரச படைகளின் வெற்றி நாளாக  பிரகடனப்படுத்தினார்கள் , ஏனெனில் அன்றுதான் புலிப்பயங்கரவாததுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மே மாதம் முழுவதும் அல்லது அதற்கு சற்று முன்பாகவும் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அழைப்பையும் மீறி புலிகளுடன் இழுத்து செல்லப்பட்ட மக்கள் இறுதியில் பரிதாபகரமாக தங்களின் உயிர்களை அவயங்களை இழந்து போன துயரமான மாதமாக மே மாதம் திகழ்கிறது. அவ்வாறே இலங்கையின் இறைமையை மீட்க பயங்கரவாத புலிகளுடன் மோதி உயிரிழந்த , அவயமிழந்த இலங்கை இராணுவத்தினரும் அவர்களின் குடும்பங்களும் அந்த மாதத்தின் துயர இழப்புக்களை சந்தித்தவர்கள். பிரபாகரனும் அவரின் முக்கிய தலைவர்களும் அழிக்கப்பட்டு புலிகள் இராணுவ ரீதியில் முற்றாக தோல்வியுற்றதால் இலங்கை மக்கள் மீண்டும் சுதந்திரம் அடைந்ததாக கருதி சகல மக்களும் கடந்த மூன்று தசாப்பதங்களாக அனுபவித்த துயரங்களுக்கு முடிவு காணப்பட்டதாக  இந்த மே பதினெட்டை  ஒரு வெற்றி நாளாகவே கொண்டாடினார்கள். இப்போது பிரபாகரன் உயிரிழந்ததை வெளியே சொல்ல முடியாமல் விழுங்கி கொண்டு புலிகள் அந்த யுத்தத்தில் செய்த மனித படுகொலைகளை மனச்சாட்சியற்று மறைத்துக்கொண்டு புலிகளின் தாகத்தை தமது (தமிழரின்) தாகமாக வரித்துக் கொண்டு மீண்டும் மிடுக்குடன் மேற்குலக நாடுகளின் நகரங்களை புலம் பெயர் புலிகள் ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கிரார்கள். ஆக இந்த நேரத்தில் இவர்களின் பயணத்துக்கு பக்க பலமாக இருப்பது ஐக்கிய நாடுகளின் அறிக்கையும் மேற்குலக நாடுகளிலுள்ள அரசியல்வாதிகள் சிலரும்.மேற்குலக நாடுகளின் இராக் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனம் மீதான மனித உரிமை மீறல்களை கண்டிக்க திராணியில்லாத மனித உரிமை நிறுவனங்களும்தான் .   

இந்த நாளில் இன்று மேற்குலக நாடுகளில் அகதி அந்தஸ்து பெற்று தமது குடும்பங்களை சுக போக வாழ்கையில் வாழவைத்துக் கொண்டு  இலங்கையில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு அங்கு பல ஆயிரக்கணக்கான சிறார்களை புலிப்  பயங்கரவாதிகளாக்கி அழித்தொழித்த இந்த புலம் பெயர் தமிழீழ கனவு காணும் கனவான்களின் மனச்சாட்சியற்ற நேர்மையற்ற சாட்சியமாக திகழும் நூற்றுக்கணக்கான  இளமையும் இனிமையும் இழந்துபோன புலி சிறார்கள் சிலரின் முகங்களை உங்களின் பார்வைக்கு வைப்பதுடன் புலிகள் தமது படைகளில் சேர்த்த ஆயிரக்கணக்கான சிறார்களை மறைத்த மறுத்த அதற்கு நிதி உதவியளித்த சகலரும் தமது இறுதிக்காலத்தில் கழிவிரக்கம் கொள்வார்களா என்று பார்த்தால் பாதர் இம்மானுவேல் , முதியவர் உயிரோடை வானொலி தாசீசியஸ் தீபம் காணொளி நிகழ்சிகளில் இனவாதம் கக்கும் முதியவர் ஜெயசிங்கம் கலாநிதி வசந்தகுமார் என சகலரும் இறுதிவரை இனவாதிகளாகவே திகழ்வார்கள்  என்பது மாத்திரம் துல்லியமாக தெரிகிறது. அங்கே, சின்னம் சிறுசுகளை வஞ்சமூட்டி அழித்த இந்த  வகையறாக்கள்இங்கு வாழும் சிறார்களுக்கும் நஞ்சூட்டும் பணியில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள்.

நோர்வேயில் நெடியவன் ஜரோப்பிய பயங்கரவாத சட்டபடி கைது

nediyavan
நோர்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யபட்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நீதிமன்றில் நிறுத்தபட்டுள்ளார்.

கொலன் நாட்டில் இருந்து வந்த சர்வதேச பொலிசாரால் நெடியவனின் வீடு சுற்றி வளைக்கபட்டு தேடுதலுக்கு உள்ளாக்கபட்டு நெடியவன் கைது செய்பட்டதுடன் அவர் உடனடியாக நோர்வே தலைநகரம் ஒஸ்லோவுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரபட்டு நீதிமன்றில் நிறுத்தபட்டார்.

நெடியவன் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு தினங்களாக ஜரோப்பிய பயங்கரவாத சட்டபடியான வழக்கை எதிர் நோக்கி வருகின்றார். இது தொடர்பாக இன்று நோர்வே தொலைக்காட்சியான ரிவி2 செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது...

நோர்வே நாட்டில் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்து வருகிறார் நெடியவன். புலி பயங்கரவாதத்திற்கு பல மில்லியன் பணத்தை இவர் ஜரோப்பாவில் இருந்து கையாள்வதாக கொலன் நாட்டு பொலிசார் நோர்வே நாட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

கொலன் நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டபடி இரகசிய நீதிமன்ற வழக்கு ஒண்றை நோர்வே நாட்டின் நீதிமன்றில் கொலன் அரசாங்கம் நடத்தி வருகிறது.

கொலன் நாட்டின் பயங்கரவாத நிபுணரின் குற்றச்சாட்டுபடி நெடியவன் மிகவும் பலம் பொருந்திய முக்கியமான முதுகெலும்பாக புலிகள் இயக்த்திற்கு செயல்பட்டுள்ளதுடன் முக்கிய பாத்திரமும் வகித்துள்ளார்.

நெடியவனின் வீடு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நோர்வேயில் முற்றுகை


நோர்வேயின் தலைநகரத்திற்கு வெளியே பேகன் என்ற மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு பிராந்தியத்தில் வாழ்ந்துவரும் நெடியவனின் வீடு கொலன் நாட்டு பொலிசாரால் முற்றுகையிடப்பட்டதுடன் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தினர்.

கொலன் நாட்டில் இருந்து வந்த பொலிசார் நெடியவனின் வீட்டை நீதிமன்ற அனுமதியுடன் சோதனை செய்தனர். புலிகள் ஜரோப்பிய சட்டபடி பயங்கரவாதிகளாக அறிவிக்கபட்டுள்ளதால் புலிகளின் பணத்தை கையாண்ட நெடியவன் பயங்கரவாத சட்டபடி இந்த தேடுதல் வேட்டைக்கும் விசாரணைக்கும் உட்டபட்டதாக ரிவி2 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

நோர்வே பாராளுமன்றத்திற்கும் வந்திருந்தார்

2003ஆம் ஆண்டு நடுபகுதியில் இருந்து நெடியவன் புலிகளின் தூதுக்குழுவில் ஒரு அங்கத்தவராக பல தடவை நோர்வே வந்திருந்தார். இவர்கள் நோர்வே பாராளுமன்றத்தில் எரிக் சொல்கைம்மை சந்தித்தித்திருந்தனர்.

நோர்வேயில் புலிகள் பகிரங்கமாக செயற்பட்டு வருகின்றனர். அமெரிக்காவிலும் அவுஸ்ரேலியாவிலும் ஜரோப்பிய நாடுகளிலும் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யபட்டுள்ளது.

நோர்வேயின் அமெரிக்காவுக்கு ஆதரவான கொள்கை உடைய கென்சவேரிவ் (நோர்வேயின் எதிர்கட்சி) கட்சியினர் புலிகளை ஜரோப்பிய நாடுகள் 27இல் பயங்கரவாதிகளாக அறிவித்ததை போன்று அறிவிக்க வேண்டும் என பகிரங்கமாக நோர்வேயில் அறிவித்துள்ளனர்.

கென்சவேட்டிக் கட்சியினரின் காலத்திலேயே புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் நோர்வே அரசின் ஆதரவுடன் பேச்சகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது தொழில் கட்சி ஆட்சி நடத்தியும் வருகின்றது

வியாழன், 19 மே, 2011

Midnight's Children மிட் நைட் சில்ரன் இலங்கையில் படமாக்கப்பட்டது

சல்மான் ருஷ்டியின் பரிசு பெற்ற மிகப் பிரபலமான நாவலான மிட் நைட் சில்ரன் படபடிப்பு இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் பயர், வாட்டர், போன்ற சர்ச்சைக்குரிய திரைப்படங்களை இயக்கிய தீபா மேத்தா இறங்கியிருந்தார்.

இத்திரைப்படத்தில் ஷபனா ஆஷ்மி, நந்திதா தாஸ், சீமா பிஸ்வால், இர்பான் கான், சோகா அலி கான், சந்தன் ரோய் சஞ்சய் போன்றோர் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

முதலில் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்த பின்னர் குறித்த படப்பிடிப்பு குழு மற்றும் நடிகை மற்றும் நடிகர் குழு நம்பிக்கை பிரேரணையொன்றில் கையெழுத்து இட்டபின்னர் படப்பிடிப்பு வாய்ப்பளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த படப்பிடிப்புக்கு ஈரான் எதிர்ப்பினை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொரிஷியஸ்,லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு, ஏமாற்றுதல், கமிஷன் வாங்கிய ஆட்கள்

மொரிஷியஸ் எப்படி இந்தியாவின் செல்லப்பிள்ளையானது ?

அதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இளையராஜா தமிழில் கோலோச்சிய 80களில் ஆரம்பிக்கக் கூடிய கதை. சரியாய் 1983. மொரிஷியஸிற்கும் இந்தியாவுக்கும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதன்படி மொரிஷியஸில் நிறுவனங்கள் வைத்து, இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் வருமானத்தினை மொரிஷியஸ் அரசாங்கம் வரி விதிக்கும். ஒரு வேளை இந்தியாவில் வரி விதிக்கப்பட்டிருந்தால், அவை மொரிஷியஸில் வரி விதிக்கப்படாது. இதற்கு இரட்டை வரி நிறுத்த உறவு (Double Taxation Avoidance Treaty) என்று பெயர். இந்திரா காந்தி செத்துப் போவதற்கு ஒரு வருடத்திற்கு முன் வந்த இந்த உறவு தான் நம் மொரிஷியஸ் கனவுகளுக்கு ஆரம்பம்.
இப்போது சிபிஐ குடாய்ந்தெடுக்கும் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மொரிஷியஸுக்கு தான் பெரிய பங்கு. அங்கிருந்து தான் பல “கைகளுக்கு” பல “டம்மி” நிறுவனங்கள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது என்பது சிபிஐயின் வாதம். மொரிஷியஸ் என்றவுடனேயே எல்லாமே கருப்பு என்பதும் கிடையாது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் தங்கள் நிதியினை மொரிஷியஸ் வழியாகவே கொண்டு வருகின்றன. கொஞ்சம் கூர்ந்து எகனாமிக் டைம்ஸ் படித்தால், இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான கையகப்படுத்துதல், நிறுவனங்களை வாங்குதல், விற்றல், லாபத்தினைப் பங்கு போடல் என எல்லா சங்கதிகளிலும் மொரிஷியஸிற்கு ஏதாவது ஒரு பங்கு இருக்கும்.
மொரிஷியஸிலிருந்து மட்டும் 40% அன்னிய முதலீடு நமக்கு வந்திருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையொன்று சொல்கிறது. மொரிஷியஸ், கேமென் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், பெர்மூடா என்கிற குட்டித் தீவுகள் தான் இந்தியாவின் அன்னிய முதலீட்டில் கிட்டத்திட்ட 75-80% வரைக்கும் கொண்டு வந்து கொட்டுகின்றன. இந்தியாவின் பிரச்னை, நாம் பெரும்பாலான குட்டித் தேசங்களோடும், இரட்டை வரி நிறுத்த உறவினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது தான் சிக்கலின் ஆரம்பம். வெறும் அன்னிய முதலீடுகளுக்காக ஏற்படுத்தப்பட்ட வசதியானது, பின்னாளில் இங்கே லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு, ஏமாற்றுதல், கமிஷன் வாங்கிய ஆட்கள் எல்லாம் தங்களுடைய பணத்தினை வெவ்வேறு வழிகளில் இம்மாதிரியான குட்டித் தீவுகளுக்கு கொண்டு போய், நாம்கேவாஸுக்கு பேப்பர் நிறுவனங்களை அமைத்து அதன் மூலம், மீண்டும் இந்தியாவிற்கு அரசு மரியாதையோடு பணத்தினை தங்களுடைய பினாமி நிறுவனங்களிலேயே முதலீடு செய்கிறார்கள் என்பதுதான் கருப்புப் பண சுழற்சியின் மிக முக்கியமான தொழில்முறை ரகசியம்.
சுலபமாய் அறிந்துகொள்ள உங்கள் ட்ராவல் ஏஜெண்டிடம் சிங்கப்பூர், துபாய், லண்டன், ஹாங்காங் இந்த நான்கு நகரங்களுக்கும் ஒரு நாளில் இந்தியாவிலிருந்து எத்தனை விமானங்கள் போகின்றன என்று கேளுங்கள். அவர் சொல்லும் விடைக்கும் மேலே படித்தவற்றுக்கும் இருக்கும் சம்பந்தத்தினை இதழோரம் தவழும் புன்னகை சொல்லும்.
So now what?
இரண்டு உலகளாவிய நிறுவனங்கள் இந்த வரிகளற்ற சொர்க்கங்களைப் பயன்படுத்தி எப்படி வரிகளை ஏய்க்கின்றன, அதன் மூலம் அரசுக்குச் சேர வேண்டிய பணம் எப்படி தனியார் நிறுவனங்களுக்குப் போய்ச் சேருகிறது என்று பார்ப்போம்.
கூகிள். இணையத்தின் நெ.1 நிறுவனம். கூகிள் உலகெங்கிலும் கிளை பரப்பிய ஆலமரம். அதன் விழுதுகள் வீழாத இடங்கள் அட்லஸில் இல்லை என்று சொல்லலாம். ஒரு வருடத்திற்கு $30 பில்லியன் டாலர்கள். ஐரோப்பா அதன் மிகப் பெரிய சந்தை. இத்தனை கோடானுகோடி தொகையும் அதன் விளம்பர வருவாயிலிருந்து வருவது. ஐரோப்பாவில் நிறுவன வரி விதிப்பு அதிகம். ஆனால் சாமர்த்தியமாய் கூகிள், தன்னுடைய ஐரோப்பிய வருமானம் அனைத்தையும் அயர்லாந்து > நெதர்லாந்து > பெர்மூடா என்கிற வழிகளைக் கொண்டு, அந்த நாடுகளின் வரி சட்டங்களில் இருக்கக்கூடிய ஓட்டைகளைப் பயன்படுத்தி வெறும் 2.4% மட்டுமே வரியாகக் கட்டுகிறது. மொத்த ஐரோப்பாவும் இதைக் கசப்பாகப் பார்க்கிறது. இதன் மூலம் கூகிள் வருடத்திற்கு கிட்டத்திட்ட $3.1 பில்லியன் வருமானத்தினை (ரூ.13,950 கோடிகள்)“வரிகளற்று” நேரடியாய் தன்னுடைய பாலன்ஸ் ஷீட்டில் கேஷாக வைத்திருக்கிறது. “Don’t be Evil” என்பது கூகிளின் கொள்கை என்பதறிக.
முதலில் ஹட்ச் நாய், பின் சூசூக்கள் என்று இந்தியாவில் கொண்டாடப்படும் வோடாஃபோன். ஹட்சினை கையகப்படுத்திய வோடஃபோன் ஒரு பன்னாட்டு நிறுவனம். அதற்கும், இந்திய வருமான வரித்துறைக்கும் நான்கு வருடங்களாக டக்கப்-வார் மும்பை நீதிமன்றத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. காரணம்: வோடஃபோன் இந்தியாவில் வரியாக செலுத்த வேண்டிய $1.7பில்லியன் ( ரூ.7,650 கோடிகள்). வருமான வரித்துறை அது இந்தியாவை சார்ந்தது என்கிறது. வோடாஃபோனோ, அதன் மொரிஷிய நிறுவனங்களின் வழியே இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட தொகையின் லாப ஈட்டுத்தொகையின் வரியைத் தான் மொரிஷியிஸில் தான் கட்டுவேன் என்கிறது. மொரிஷியஸில் கிட்டத்திட்ட 0% என்பதறிக.
மேலே சொன்ன இரண்டு உதாரணங்கள் தான் ஆரம்பம். வரி ஏய்ப்பு இப்படி தான் உலகளாவிய அளவில் இன்றைக்கு நடக்கிறது. இதன் மூலம் போகும் பணம், நிறுவனங்களுக்கு, தனி நபர்களுக்கு, அரசாங்களுக்கு என பங்கு பிரிக்கப்பட்டு பின்னர் வேறு வழியாக மீண்டும் தன்னுடைய நாட்டுக்கே whiter than white ஆக வரும்.
இந்தப் பணம் எப்படி இந்த வரிகளற்ற சொர்க்கங்களுக்குக் கொண்டு போகப் படுகிறது என்பது அடுத்த வாரம்.

Tamil cinema record 14 National awards for the first time.மொத்தம் 14 விருதுகளை

இதுவரை இல்லாத அளவு மிகப் பெரிய அளவில் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகள் பெருமளவில் கிடைத்துள்ளன. மொத்தம் 14 விருதுகளை தமிழ் சினிமா தட்டிச் சென்றுள்ளது.

இத்தனை விருதுகளை தமிழ் சினிமா இதுவரை பெற்றதாக நினைவில்லை. அந்த அளவுக்கு 58வது தேசிய விருதுகளை தமிழ் சினிமா சுனாமி போல வந்து வாரிச் சுருட்டிக் கொண்டு போய் விட்டது.

இத்தனைக்கும் எந்திரன், ஆடுகளம், மைனா, தென் மேற்குப் பருவக் காற்று ஆகிய நான்கு படங்கள் மட்டுமே இத்தனை விருதுகளையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படங்கள் எந்திரன், ஆடுகளம் ஆகியவை. மைனா படம், உதயநிதி ஸ்டாலினின் படம். அதிக அளவிலான பாராட்டுக்களைப் பெற்ற படம் தென் மேற்குப் பருவக் காற்று.

தனுஷ் ஆடுகளத்தை விட மிகச் சிறப்பான நடிப்பைக் கொடுத்த படங்கள் இதற்கு முன்பே வந்துள்ளன. ஆனால் அவற்றுக்குக் கிடைக்காமல் ஆடுகளத்துக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

அதேபோல சரண்யாவின் நடிப்பும் இதற்கு முன்பு பலமுறை பாராட்டுக்களை வாரிக் குவித்துள்ளது. அதேசமயம், இந்தப் படங்கள் அத்தனையையும் சேர்த்து ஒரே படத்தில் கொடுத்தது போல தென் மேற்குப் பருவக் காற்றில் அபாரமான நடிப்பைக் கொடுத்திருந்தார் சரண்யா. அவருக்கு விருது நிச்சயம் என்று அப்போதே பேசப்பட்டது. ஆனால் இப்போதோ சிறந்த நடிகைக்கான விருது கிடைத்து விட்டது.

ஆடுகளம் மொத்தம் ஆறு விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது. அதேபோல எந்திரன் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.

அனைவராலும் பாராட்டப்பட்ட மைனா படத்துக்கு ஒரே ஒரு விருதுதான் கிடைத்துள்ளது. அதேசமயம், அத்தனை பேரின் பாராட்டுக்களையும் வாரிக் குவித்தவரான தம்பி ராமையாவுக்கே அந்த விருது கிடைத்திருப்பது ஆறுதல் தருவதாக உள்ளது.

விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற படம் தென் மேற்குப் பருவக் காற்று. இப்படத்திற்கு சிறந்த பாடலாசிரியர், சிறந்த நடிகை, தமிழில் சிறந்த படம் என மூன்று விருதுகளை அள்ளியுள்ளது. ரஜினி படத்துக்கு நிகராக இந்தப் படமும் மூன்று விருதுகளை அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவுக்கு இத்தனை விருதுகள் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

விருதுகளை பெருமளவில் அள்ளிய ஆடுகளம், தென் மேற்குப் பருவக் காற்று, மைனா ஆகிய மூன்றுமே தமிழ் மணம் வீசும், மண்வாசனைப் படங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தரமும், மண்மணமும் நிறைந்திருந்தால் நிச்சயம் விருதுகள் ஓடி வரும், தேடி வரும் என்பதை இந்தப் படங்கள் நிரூபித்துள்ளன.

சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்,தேசிய விருதுகள்

டெல்லி: 58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார்.

அதேபோல தென் மேற்குப் பருவக் காற்று படத்தில் சிறப்பாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மித்தாலியுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார்.

58வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகர் தனுஷ்

அதன்படி ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை அவர் நடிகர் சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து பெறுகிறார்.

சிறந்த நடிகை சரண்யா

இதேபோல சிறந்த நடிகைக்கான விருது சரண்யாவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இவர் மித்தாலி என்ற மராத்தி நடிகையுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.

சிறந்த இயக்குநர் வெற்றி மாறன்

சிறந்த இயக்குநருக்கான விருது வெற்றி மாறனுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான தங்கத் தாமரை விருதை அவர் பெறுகிறார்.

சிறந்த திரைக்கதை - வெற்றி மாறன்

சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வெற்றி மாறனே தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகர் தம்பி ராமையா

சிறந்த துணை நடிகருக்கான விருது தம்பி ராமையாவுக்குக் கிடைத்துள்ளது. காமெடியனாக, இயக்குநராக அறியப்பட்ட தம்பி ராமையா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த படம் மைனா. இந்தப் படத்துக்காக தம்பி ராமையா, சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகை சுகுமாரி

சிறந்த துணை நடிகை விருது சுகுமாரிக்குக் கிடைத்துள்ளது. நம் கிராமம் என்ற படத்துக்காக அவர் இதைப் பெறுகிறார்.

சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து

சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவரைத் தேடி வந்துள்ளது.

சிறந்த தமிழ்ப் படம்

தமிழில் சிறந்த படமாக தென் மேற்குப் பருவக் காற்று திரைப்படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த நடன அமைப்பு திணேஷ்

ஆடுகளம் படத்தில் நடன வடிவமைப்பு செய்திருந்த திணேஷுக்கு சிறந்த நடன அமைப்புக்கான விருது கிடைத்துள்ளது.

எந்திரனுக்கு 2 விருதுகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறப்பு ஸ்பெஷல் எபக்ட்ஸுக்காக ஸ்ரீனிவாஸ்மோகன் விருது பெறுகிறார்.

சிறந்த கலை-தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபு சிரில் விருது பெறுகிறார்.

ஆடுகளத்திற்கு 6 விருதுகள்

ஆடுகளம் மொத்தம் ஆறு விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது.

சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடன வடிவமைப்பு, சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருது ஆகியவை ஆடுகளம் படத்துக்குக் கிடைத்துள்ளது.

அதேபோல சிறந்த எடிட்டிங்குக்கான விருதும் ஆடுகளம் படத்திற்காக கிஷோருக்குக் கிடைத்துள்ளது.

ஈழக் கவிஞருக்கு சிறப்பு விருது

ஆடுகளத்தில் தனுஷின் குருவாக நடித்தவரான ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் ஜெயபாலனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary
The national award for the best actor is shared by Dhanush for Adugalam and Saleem Kumar. Actress Saranya has received the national award for the best actress, Thambi Ramaiyah is the best supporting actor and actress Sukumari is the best supporting actress. Vetrimaran has got the best director award for Adugalam, Vairamuthu for best lyrics and the movie Thenmerku Paruva katru is selected as the best Tamil film.

ரங்கசாமியின் துரோகம்: ஜெயலலிதா கடும் கண்டனம்

புதுவை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி தனித்தே ஆட்சி என்று அறிவித்திருப்பதன் மூலம் அதிமுகவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:   “தனித்தே ஆட்சி” என்று தன்னிச்சையாக புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர்  என். ரங்கசாமி அறிவித்திருப்பதைப் பார்க்கும் போது, “சொல்வது ஒன்று, செய்வது ஒன்று” என்ற பழமொழி தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்று  கூறிய  ரங்கசாமி, தேர்தலுக்குப் பிறகு அதே துரோகத்தை அதிமுகவுக்கு இழைத்திருக்கிறார்.நடந்து முடிந்த புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அதிமுகவுடன் இணைந்து ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. தேர்தல் சமயத்தில், தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்த நான், புதுச்சேரிக்கு சென்று என். ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு அளிக்குமாறு புதுச்சேரி வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொண்டேன்.  இது மட்டுமல்லாமல், தேர்தலுக்கு முன்பு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்தும், கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை மனதில் வைத்தும் தான் புதுச்சேரி மக்கள் அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர். அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.கழகக்  கூட்டணி வெற்றி பெற்றதும், புதுச்சேரி யூனியன் பிரதேச வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் என்.ஆர். ரங்கசாமி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் நான் தெரிவித்திருந்தேன். ஆனால், ரங்கசாமி அவர்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவிக்கக்கூட மனமில்லை.  நன்றி மறந்து நாணயமற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார் ரங்கசாமி.  எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை என்ற வள்ளுவரின் வாய்மொழியை இந்தத் தருணத்தில் நான் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அதிமுக ஆதரவுடனும், செல்வாக்குடனும் வெற்றி பெற்றுவிட்டு ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரச் செல்லும் போது ஒரு வார்த்தை கூட எனக்குத் தெரிவிக்காமல், கழக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினரின் ஆதரவுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருப்பது கூட்டணி தர்மத்திற்கு விரோதமான செயல் ஆகும். நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி. முதுகில் குத்துவதில் எல்லோரையும் மிஞ்சிவிட்டார்  ரங்கசாமி.  கூட்டணிக் கட்சியுடனேயே நாணயமற்ற முறையில் நடந்து கொண்டுள்ள ரங்கசாமி மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்? புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் ஏமாற்று நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆளும்  கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தை கண்டிப்பது, ஆளும் கட்சியினால் ஏற்படும் அவதியை எடுத்துக் காட்டுவது, ஆளும் கட்சியின் சட்ட திட்டங்களும், நிர்வாக முறைகளும் நாட்டை எவ்விதத்தில் கெடுக்கிறது என்பதை எடுத்துரைப்பது, உரிமையும், உடமையும் பறிபோகும் போக்கில் ஆளும் கட்சி நடந்து கொள்ளும் போது அதனைக் கண்டிப்பது, எதிர்த்து கிளர்ச்சி நடத்துவது போன்றவை தான் எதிர்க்கட்சிக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதற்கிணங்க, ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக புதுச்சேரியில் செயல்படும் என்பதையும், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் அதிமுக தொடர்ந்து பாடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Infosys Narayanamoorthi இன்போசிஸ் நாராயணமூர்த்தி விலகுகிறார்

"இன்போசிஸ் நிறுவனத்துக்கும், எனக்கும் இடையிலான உறவு, திருமணம் முடிந்து, தாய் வீட்டை பிரிந்து செல்லும் பெண்ணை வழியனுப்புவது போன்றது' என்று இதன் நிறுவனரும், தலைவருமான என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்போசிஸ் நிறுவன தலைவர் பொறுப்பிலிருந்து இதன் நிறுவனர் நாராயணமூர்த்தி விலகுகிறார். இவருக்கு பதில், தலைவர் பொறுப்பை, வரும் ஆகஸ்ட் 21ம் தேதி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண்மை இயக்குனருமான கே.வி.காமத் ஏற்கிறார்.

இந்நிலையில், 2010 - 2011ம் ஆண்டுக்கான, நிறுவனத்தின் அறிக்கையில் வெளியாகியுள்ள பங்குதாரர்களுக்கான கடிதத்தில் நாராயணமூர்த்தி கூறியிருப்பதாவது: இன்போசிஸ் நிறுவனத்துக்கும், எனக்கும் இடையிலான உறவு, திருமணம் முடிந்து, தாய் வீட்டை விட்டு மணமகன் வீட்டிற்கு செல்லும் பெண் போன்றது. பெண்ணுக்கு தேவைப்படும் போது உதவ, பெற்றோர் தயாராக இருப்பர். புதிய சூழலை, புதிய பரபரப்பு வாழ்க்கையை துவங்குவதை பார்த்து பெற்றோர் சந்தோஷப்படுவர். ஆனால், என் மகள், மகனிடம் நான் அவர்களை அதிகமாக நேசித்ததாகக் கூறியபோது, அதை அவர்கள் நம்பத் தயாரில்லை. எதை அதிகம் நேசித்தேன் என்று அவர்கள் ஒரு முடிவு செய்திருந்தனர். அந்தளவிற்கு, தினமும் 16 மணி நேரம் வீதம், நிறுவனத்திற்கு 30 ஆண்டு காலம் உழைத்துள்ளேன். ஆண்டில் 330 நாட்கள், வேலை காரணமாக குடும்பத்தை விட்டு விலகி இருந்துள்ளேன். இன்போசிசில் இருந்து நான் பிரிக்க முடியாதவன் என்று என்னுடன் பணியாற்றியவர்கள் கூறியுள்ளனர். நிறுவனத்தின் முக்கிய முடிவுகள் எடுப்பதில் நான் தான் முதல் நபர். இவ்வாறு நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை-தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

சென்னை: சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால், ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து ரத்த சுத்திகரிப்புக்காக அவருக்கு நேற்று டயாலிசிஸ் சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், நேற்று நள்ளிரவில் மருத்துவனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மூச்சு விடுவதை எளிதாக்குவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் உள்பட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வகிறது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

சுவாசப் பாதை நோய்த் தொற்று, நிமோனியா காய்ச்சல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால், மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.

ஆனால், நுரையீரல் பாதிப்பின் விளைவால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு 7வது மாடியில் உள்ள தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது.
  Read:  In English 
இந்த சுவாச பிரச்சனையால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து நுரையீரலில் தேங்கியுள்ள நீரை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந் நிலையில் சிறுநீரகங்களிலும் பிரச்சனை ஏற்பட்டதால் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English summary
Actor Rajinikanth's condition worsened on Wednesday with doctors putting him through dialysis at a Chennai hospital, two days after he underwent a procedure to drain fluid accumulated in his lungs. He was also shifted to the hospital's intensive care unit from the private ward where he was being treated since Saturday.

கூகுள் எவ்வளவு வரி கட்டுகிறது?வரிகளற்ற சொர்க்கங்கள் என்றால்?


பணக்காரர்கள் எப்படி பணக்காரர்களாகவே இருக்கிறார்கள்? அடிப்படை சம்பளம் வாங்கும் நமக்கே பத்தாயிரம் பிக்கல் பிடுங்கல்கள். அப்படியிருக்கையில் ஒரு பணக்காரனுக்கு எவ்வளவு இருக்கும் ? அரசியல்வாதிக்கு, நடிகனுக்கு, தொழிலதிபர்களுக்கு, தனவந்தர்களுக்கு, அதிகாரிகளுக்கு மட்டும் எப்படி பணம் சடாலென வளர்கிறது ?
நேர்மையான முறையில் பணத்தினைப் பெருக்க, வளர்க்க நாயடி, பேயடி படவேண்டுமென்பதுதான் நிதர்சனம். ஆனால், நியாயமாய் சம்பாதிக்காத பணத்தினை எப்படி நியாயமான வருமானமாகக் காட்டுவீர்கள்? அங்கே தான் இந்த “வரிகளற்ற சொர்க்கங்கள்” தன் வாசற்கதவை பெரும்பணக்காரர்களுக்கும், நிறுவனங்களுக்கும், அரசியல் / சர்வாதிகாரிகளும் திறந்து காட்டி ரத்தினக் கம்பளம் விரிக்கிறது.

வரிகளற்ற சொர்க்கங்கள் என்றால்?

இவை ஒரு நாடாகவோ, மாநிலமாகவோ, ஒரு கட்டமைப்பின் கீழ் வரும் பகுதியாகவோ இருக்கலாம். வரிகளற்ற இடங்களைக் கண்டறிவது சுலபம்.
 • இங்கே வரிகள் குறைவாக அல்லது பூஜ்யமாக இருக்கும்
 • அன்னிய நாட்டு வரித் துறையோடு பெரும்பாலும் தொடர்புகள் இருக்காது
 • அந்த ஊரில் இருக்கவேண்டுமென்கிற கட்டாயங்கள் இருக்காது
 • சட்டங்கள், அரசு, பரிவர்த்தனைகள், ஆளுமை எதுவுமே “வெளிப்படையாக” இருக்காது
 • தங்கள் இருப்பிடத்தை Offshore Financial Center என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்வார்கள்
   இந்த வரிகளற்ற சொர்க்கத்தின் தலைமையகம் – லண்டன்சூரியன் அஸ்தமிக்காத பரம்பரைதான் தன்னுடைய ‘காலனி’ நாற்றினை உலகமெங்கும் நட்டு அது இப்போது வளர்ந்து செழித்தோங்கி குட்டி சொர்க்கங்களாக மாறியிருக்கின்றன. இரண்டாம் உலகப் போர் முடிந்த காலக்கட்டத்தில் பிரிட்டன் பல நாடுகளிலிருந்து வெளியேறினாலும், இன்னமும் பல நாடுகள், தீவுகள் ஆஸ்திரேலியா உட்பட “மாட்சிமை தாங்கிய ராணியை” தலையில் வைத்துக் கொண்டு நிர்வாகம் செய்யும் தேசங்கள்.  லண்டன் – பிரிட்டனின் தலைநகரமென்பது மூணாம் வகுப்பு பாப்பா கூட சொல்லும். சொல்லாதது, லண்டன் வைத்திருக்கும் வரிகளற்ற சொர்க்கங்களின் மறை மூடிய சிலந்தி வலைப்பின்னல். இதை இரண்டாகப் பிரிக்கலாம். உள்வட்ட அதிகாரத்தின் கீழ் இருப்பவை; வெளிவட்டத்தில் இருப்பவை – சுருக்கமாய் உள்வீடு / வெளிவாசல். உள்வீட்டில், பிரிட்டனுக்கு பக்கத்திலேயே இருந்துகொண்டு – ஆனால் கொஞ்சம் “சுயமாகவும்” நிதிக்கான சட்டதிட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கும் பிரதேசங்கள்; ஜெர்ஸி (Jersey), க்வர்ன்சே (Guernsey) மற்றும் ஐஸல் ஆப் மேன் (Isle of Man)- இவை அனைத்தும் பிரிட்டனின் ராஜபரம்பரையினை அண்டி வாழும் மாகாணங்கள். இது தவிர கேமென் தீவுகள் (Cayman Islands), பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் (British Virgin Islands – BVI). வெளியே இருந்தாலும், இன்னமும் உள்வீட்டு காலனி தான். வெளி வாசலில், ஹாங்காங், ஒரளவுக்கு சிங்கப்பூர், துபாய் எல்லாம் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனி தேசமாய் இருந்து, விடுதலைப் பெற்று இன்னமும் பிக்பென் பார்த்து ராகு காலம், எம கண்டம் குறிக்கும் தேசங்கள். அமெரிக்காவிற்குப் பக்கத்தில் இருக்கும் பெர்மூடா, ஹவாய் போன்ற தேசங்களிலும் பிரிட்டனின் மகத்துவம் பெரிது. லண்டன் உலக நிதி வர்த்தகத்தின் தலைநகரம் [இதை கொஞ்சநாள் நியுயார்க் வைத்திருந்தது. 2008 பொருளாதார சீர்குலைவிற்கு பின், அந்த நிலை மாறிவிட்டது] இங்கே தான் எல்லா முக்கிய முடிவுகளும், மாற்றங்களும் நடக்கும். பக்கத்து ஊரான அயர்லாந்து பொருளாதார மந்தத்தில் மோசமாய் அடிப்பட்ட நாடு. காரணம் ஊரான் பணத்தில் வாழ்ந்த நாடது. எதற்காக லண்டன் இந்த மாதிரியான ஒரு கட்டமைப்பினைக் கையில் வைத்துக் கொண்டு, ஆனால் உலக நிதி உத்தமர் என்று போஸ் கொடுக்க வேண்டும்? சூட்சுமமே அங்கு தான் இருக்கிறது. லண்டனிலிருந்து ஆட்கள் எல்லா கால, நேர சூழல்களிலும் வணிகம் செய்யமுடியும். இந்த பக்கம் சிங்கப்பூர், ஹாங்காங், துபாய், மொரிஷியஸ். அந்த பக்கம் ஜெர்ஸி, கேமென் தீவுகள், பெர்முடா – இது 24 மணி நேரமும் பணம். பணம். பணம். பணத்தினை எப்படிக் கொண்டு வருவது, எப்படி சேர்ப்பது, எப்படி கைமாற்றுவது, எந்த நாட்டுக்கு அனுப்புவது மட்டுமே. இதில் நல்ல, கெட்ட, யோக்கிய, அயோக்கிய, நியாமான, அநியாயமான, அதர்மமான எல்லாவிதமான பணமும் அடங்கும். எத்தியோப்பியாவில் சர்வாதிகாரத்தால் ஆபத்து என்று நினைக்கும் தொழிலதிபரும், ம.பி, உ.பி, இ.பி யில் அரசியல்வாதிகள் குவிக்கும் பணமும் ஒரே மாதிரி தான் பார்க்கப்படும். ஒரே மாதிரி ஹவாலா + மாற்று வழிகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு போய் அங்கிருந்து இன்னொன்று, அங்கிருந்தும் வேறு என்று ஊர் உலகம் சுற்றி பின் அந்த நாட்டுக்கே “அன்னிய நேரடி முதலீடாக” (Foreign Direct Investment)போய்ச் சேரும். எல்லா அன்னிய முதலீடுகளும் மோசமானவை கிடையாது. ஆனால், இது தான் ரூட். எப்படி இந்தியாவில் கிளம்பி, சிங்கப்பூரிலோ, துபாயிலோ கொடுக்கப்பட்டு, அங்கிருந்து கேமென் தீவுகளுக்கோ, பிரிட்டிஷ் விரிஜின் தீவுகளுக்கோ போய், அமெரிக்க முகம், பிரிட்டிஷ் பாஸ்போர்ட் சகிதம் மொரிஷியஸிற்கு வந்து கம்பெனி நிறுவி, டெல்லி ஹில்டனில் ரூம் போட்டு, கோட்-சூட் மனிதர்களோடு கை குலுக்கி, போட்டோ எடுத்து, மறுநாள் எகனாமிக் டைம்ஸில் இன்னார் நிறுவனம், இந்த துறையில் 2000 கோடி முதலீடு செய்ய இந்தியாவில் உத்தேசித்து இருக்கிறது என்பதற்கு பின்னிருக்கும் கதையினை, திரில்லராக எழுத முடியும். சரி போகட்டும். 2ஜி அலைக்கற்றை ஊழல் வெளிவந்தவுடன் அடிக்கடி எல்லாரும் உச்சரிக்கும் ஒரு பெயர் மொரிஷியஸ். என்ன இருக்கிறது மொரிஷியஸில்?

   மொரிஷியஸ்

   நம்பர் 1, கேதீட்ரல் ஸ்கொயர், போர்ட் லூயிஸ் என்பது மிக முக்கியமான முகவரி. மொரிஷியஸிற்கு போகும் பெரும் தனவந்தர்கள், இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர்கள், ஹெட்ஜ் பண்ட் ஆட்கள், இன்ன பிற தரகர்களின் மெக்கா இந்த இடம் தான். இங்கிருக்கும் கியுபிக்கிள்களில் தான் தினமும், பல மில்லியன் டாலர்கள் உள்வந்து, வெளியேறுகின்றன. மொரிஷியஸ் இந்திய கருப்பு / வெள்ளை மற்றும் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் “வெள்ளையான” பணத்தின் தாயகம்.

    நாளை மொரிசியஸ் எப்படி இதில் சம்பந்தப்படுகிறது என்று பார்ப்போம்.