Raj - tamil.filmibeat.com : சென்னை: பிரபுதேவா திருமணம் செய்துகொண்டது உண்மைதான் என்று அவர் சகோதரர் ராஜூ சுந்தரம் தெரிவித்துள்ளார். பிரபுதேவா திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. மணமகள் பிசியோதெரபிஸ்ட் என்றும் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது.
டான்ஸ் மாஸ்டராக இருந்து ஹீரோவானவர் பிரபு தேவா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். 'இந்து' படம் மூலம் நடிகராக அறிமுகமான அவர்,தொடர்ந்து காதலன், விஐபி, பெண்ணின் மனதை தொட்டு, டபுள்ஸ், சார்லி சாப்ளின், காதலா காதலா, தேவி 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ரவுடி ரத்தோர் ரவுடி ரத்தோர் இந்தி, தமிழ், தெலுங்கில் சில படங்களை இயக்கியுள்ளார். விஜய் நடித்த போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி படங்களை இயக்கிய பிரபுதேவா, இந்தியில் சல்மான் கான் நடித்த வான்டட், அக்ஷய்குமார் நடித்த ரவுடி ரத்தோர், ஆக்ஷன் ஜாக்ஷன், தபாங் 3 படங்களை இயக்கியுள்ளார்.