சனி, 14 ஜூலை, 2018

காமராஜர் பிறந்தநாள் ஜூலை15.. ராஜாஜியை கவிழ்த்து காமராஜரை அரியணை ஏற்றிய திராவிடம்!

ஆலஞ்சியார் : காமராஜரை எல்லோரும் காங்கிரஸ்காரர் என்று தான்
அறிந்திருப்பார்கள் .. ஆனால் திராவிட கருத்தியலை சார்ந்தவர் அவரென்பது அவரின் அரசியல் வாழ்வியல் உணர்த்தும்..
..
தேசிய நீரோட்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தார் King maker of India ..என்று அவரை சொன்ன காலமும் உண்டு.. திரு.சத்தியமூர்த்தியின் சீடராக அரசியலில் நுழைந்தாலும் மிகப்பெரிய அங்கீகாரம் அவருக்கு ஆரம்பத்தில் கிடைக்கவில்லை ராஜாஜியின் ஆதிக்கத்தின்/ஆளுமையின் முன்பு அறியபடாதவராக அல்லது அதிகம் பேசபடாதவராகவே இருந்தார்.. ராஜாஜியின் வரலாற்றுப்பிழை இவருக்கு பிரகாசமான அரசியல் வாழ்வை தந்தது .. குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி அறிமுகபடுத்திய போது வெகுண்டெழுந்த பெரியார் .. கிரேசின் தீப்பெட்டியுமாக காத்திருங்கள் ..எப்போது நான் சொல்கிறோனே அப்போது அக்ரஹாரத்தை கொளுத்தலாம் என்றார் பெரியார் இவ்வளவு கடுமையாக நடந்துக்கொண்டதில்லை.. சூழிநிலை மிக மோசமாவது கண்டு ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கைவிட்டார்.. ..
ராஜாஜியை மாற்றிய தீரவேண்டும் அந்த இடத்திற்கு மீணிடும் பார்பனன் வந்துவிட கூடாது என்பதிலே பெரியார் மிக எச்சரிக்கையாக காய் நகர்த்தினார்.. காமராஜரை முன்னிலைப் படுத்தினார் ஆதரிப்பதாக அறிக்கை வந்தது.. காமராஜரை குடியாத்ததில் நிற்க சொன்னார்.. அப்போது காமராஜர் நான் மிகவும் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவன் குடியாத்ததில் முதலியார்களும் முஸ்லீமான்களுமே அதிகம் வசிக்கிறார்கள் என்ற போது உன்னை எப்படி ஜெயிக்கவைப்பதென்று எனக்கு தெரியும் எனகூறி பச்சை தமிழனை நிறுத்தியிருக்கிறேன் அவரை தமிழர்கள் எல்லோரும் ஆதரிக்கவேண்டுமென்றார்...
தி.கழகத்திலிருந்து பிரிந்து திமுகவை நிறுவிய அண்ணாவும்.. காமராஜரை அந்த தேர்தலில் ஆதரித்தார்.. குணாளா மணாளா குலக்கொழுந்தே ..சென்றுவா குடியாத்தம் வென்று வா கோட்டைக்கு என்றார்.. கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்தும் ஆதரித்தார்.. காமராஜர் வென்றார்..

நடிகை சன்னி லியோன் ...கவுர் என்ற சீக்கிய பெயரை பயன்படுத்துவதை சீக்கிய மதவாதிகள் ... சோ ஆங்க்ரி...

மின்னம்பலம்: நடிகை சன்னி லியோன்
‘கவுர்’ என்ற பெயரை
பயன்படுத்தியதற்கு, பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீக்கிய அமைப்பினர் வலியுறித்தி உள்ளனர்.
உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இந்தியாவின் மத்தியதர சீக்கிய குடும்பத்தில் பிறந்து கனடாவுக்கு இடம் பெயர்ந்தார் சன்னி லியோன். கனடாவின் ஆபாசப் பட உலகில் மிகப் பெரிய நட்சத்திரமாக உருவாகி உலகளவில் ரசிகர்களைப் பெற்றார். பின் பாலிவுட்டில் நடித்து வருகிறார். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்போது வீரமாதேவி என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். சன்னியின் இயற் பெயர், கரன்ஜித் கவுர் வோரா.
தற்போது‘கரன்ஜித் கவுர் : தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்’ என்ற பெயரில் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸாக தயாராகிவருகிறது. இந்த தொடர் ஜூலை 16ஆம் தேதி முதல் வெளியாகிறது.

தியேட்டர்களில் வீட்டு தின்பண்டங்களுக்கு அனுமதி மகாராஷ்டிரா ..

தியேட்டர்களில் வீட்டு தின்பண்டங்களுக்கு அனுமதி!மின்னம்பலம்: மகாராஷ்டிராவிலுள்ள மல்டிப்ளெக்ஸ்
தியேட்டர்களில் வீட்டிலிருந்து எடுத்துவரும் தின்பண்டங்களுக்குத் தடையில்லை என்று அறிவித்துள்ளது அம்மாநில அரசு. அவ்வாறு அனுமதி மறுக்கும் தியேட்டர் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
சினிமா பார்க்கச் செல்லும் ரசிகர்களைக் கவரும் விதமாக, பல நிறுவனங்கள் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களை நாடெங்கும் இயக்கி வருகின்றன. இவற்றில் படம் பார்ப்பது புதுவித அனுபவத்தைத் தருவதாகக் கருதுகின்றனர் ரசிகர்கள். ஒரு படத்தின் வசூல் மட்டுமே தியேட்டருக்குப் பிரதான வருமானம் என்ற நிலை, மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களின் வரவுக்குப் பிறகு மாறிவிட்டது. இவற்றில் விளம்பரம் மற்றும் இதர வழிகள் மூலம் 40 சதவீதத்துக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்படுகிறது. நொறுக்குத்தீனி அல்லது தின்பண்டங்கள் விற்பனை அதற்குக் காரணமாக இருக்கிறது.

டி.ராஜேந்தர் : நடிகை ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுக்களுக்கு இயக்குனர்களும் நடிகர்களும் பதில் கூறவேண்டும்

ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக டி.ஆர்மின்னம்பலம்: நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறியுள்ள இயக்குநர்களும், நடிகர்களும் அந்தப் புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாகத் தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு மற்றும் போராட்டங்களில் தென் இந்திய சினிமாவே சிக்கி இருக்கிறது. இனி வரும் தலைமுறை நடிகைகளுக்கு இது போன்று நிகழக்கூடாது என்ற நோக்கில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகிறார் ஸ்ரீ ரெட்டி.
தற்போது தெலுங்கு திரையுலகைத் தாண்டி, தமிழ் திரையுலகிலும் சிலரது பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக இன்று(ஜூலை 14) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், “திரைப்படத்தில் 1979ஆம் ஆண்டு எண்ட்ரி ஆனேன்.

வெற்றிகரமான தமிழ்நாடு மாடல்,,, சிதைகிறது! ...ஜெய் ராம் ரமேஷ் உரை

மின்னம்பலம்: ஜெய்ராம் ரமேஷ் உரை - காங்கிரசின் அறிவுஜீவிகள் பிரிவு என்று பொதுவாக
அழைக்கப்படும் புரொஃபஷனல்  காங்கிரசின் தமிழ்நாடு கிளை சார்பில், ‘முன்னேற்றத்துக்கான தமிழ்நாடு மாடல்’ என்ற தலைப்பில் நேற்று (ஜூலை 13) சென்னையில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.
புரொஃபஷனல் காங்கிரசின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மோகன் குமாரமங்கலம் இந்தக் கருத்தரங்கத்துக்குத் தலைமை வகித்தார். காங்கேயம் காளை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேயன் சிவசேனாபதி, சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம், அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த கருத்தரங்கரத்தில் முன்னாள் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் விரிவான நிறைவுரை ஆற்றினார்.
அழகான ஆங்கிலத்தில் அமைந்த வளமான அவரது உரை இன்றைய அரசியல்வாதிகளுக்கும், அரசியலில் புழங்கும் புதியவர்களுக்கும் ஒரு பாடத் திட்டம் போலவே அமைந்திருந்தது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊடகங்கள் இந்த நிகழ்ச்சி யைக் கண்டுகொள்ளாத நிலையில் தமிழ்நாட்டின் இப்போதைய நிலை பற்றி ஜெய்ராம் ரமேஷின் உரையை அப்படியே வாசகர்களுக்குத் தருகிறது மின்னம்பலம்.
இதோ உங்களுடன் ஜெய்ராம் ரமேஷ்

வெற்றிகரமான தமிழ்நாடு மாடல்!
நான் மூன்று மாடல் அரசுகளைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். கேரளா மாடல் என்பது உயர்ந்த சமூக வளர்ச்சி,
குறைந்த தொழில் வளர்ச்சி. குஜராத் மாடல் என்பது உயர்ந்த தொழில் வளர்ச்சி, குறைந்த சமூக வளர்ச்சி,
தமிழ்நாடு மாடல் என்பது உயர்ந்த தொழில் வளர்ச்சி, உயர்ந்த சமூக வளர்ச்சி.

முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்சைத் தொடர்ந்து.. விஷால் மீது ஸ்ரீரெட்டி....


தமிழ்ப் பிரபலங்கள்: tamil.filmibeat.com -rajendra-prasath.: லாரன்சைத் தொடர்ந்து.. விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்! Sri Reddy points next at vishal சென்னை : தமிழ்த் திரையுலகில் தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றியவர்கள் பற்றிய பட்டியலை வெளியிடுவது தொடர்பாக, நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இதேபோல் தமிழ் சினிமா உலகிலும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு, வாய்ப்பு அளிக்காதவர்களின் பட்டியலை வெளியிடப்போவதாக கூறியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக இவர் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறத் தொடங்கியுள்ளார்.

கேரளா ராமயணம் கம்யுனிசம் .. காவிகளுக்கும் செங்காவிகளுக்கும் இருக்கும் இன்னொரு ஒற்றுமை.... ?

LR Jagadheesan : காவிகளுக்கும் செங்காவிகளுக்கும் இருக்கும் இன்னொரு
ஒற்றுமை கூசாமல் பொய்சொல்வது. ஆர் எஸ் எஸ்ஸின் இந்துராஷ்டிரத்தை அமைக்க உழைப்பதற்காக திடீர் திடீரென புதுசு புதுசா அமைப்புகள் உருவாகும். ஆனால் எல்லா அமைப்புகளுக்கும் ராமனே மூலக்கடவுள். அவருக்கு பாபர்மசூதி இடித்த இடத்துலயே கோவில் கட்டணும்னு சொல்வதில் ஆர் எஸ் எஸ் மாதிரியே இந்த அமைப்புகளும் தெளிவான கொளுகையை முன் வெப்பாங்க.

தங்கபதக்கம் வென்ற ஹிமா தாஸ் ...சர்வதேச தடகள போட்டியில்,,, பணமில்லை பயிற்சி இல்லை .. வயலில் ஆடிய கால்கள்

வறுமையும் பசியும் இன்று இந்த தேசதுக்கு தங்கப்பதக்கத்தை வாங்கி கொடுத்தது. மூன்று வேளை சாப்பாடு போடுறதா இருந்தா என் பொண்ண எங்க வேணா கூட்டிட்டு போங்க என்றார் அவள் அப்பா...
கலைமோகன் - நக்கீரன் ":பின்லாந்தில் நடந்துவரும் 20 வயதோருக்கான சர்வதேச
தடகள போட்டியில் இந்தியாவை சேர்ந்த பெண் வீரர் ஹிமா தாஸ்
ஹீமா தாஸ் .. தாய்
ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனைபடைத்து வாழ்த்துக்களை குவித்துவருகிறார்.
நேற்று நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 51.46 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பெற்று சர்வதேச தடகள போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பெண்வீரர் என்ற சிறப்பை ஹிமா தாஸ் பெற்றுள்ளார்.
இதற்குமுன் 2002 சீமா புனியாவும் 2014லில் நவஜீத் கவுரும் இந்தியா சார்பில் வெண்கலபதக்கம் பெற்றனர். இதனை தொடர்ந்து அவரின் இந்த சாதனைக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமைச்சர் ராம்நாத் சிங், நடிகர் அமிதாப் பச்சன், அக்ஷய்குமார் என பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி ... அலிபாபா ஜாக்கை பின்தள்ளினார்

மின்னம்பலம்: அலிபாபா குழுமத்தின் ஜாக் மாவைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் மிகப்
பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு ஜூலை 12ஆம் தேதி 1.6 சதவிகிதம் உயர்ந்து பங்கு ஒன்றின் விலை ரூ.1,099.8 ஆக அதிகரித்து, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 44.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உருவெடுத்துள்ளதாக புளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியல் கூறுகிறது. சீனாவின் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜேக் மாவின் சொத்து மதிப்பு 44 பில்லியன் டாலராக உள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் ஜூலை 11ஆம் தேதி பங்கு மதிப்பு அடிப்படையில் அம்பானி இந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.

திமுக மாநில சுயாட்சி மாநாட்டில் சோனியா ...

மின்னம்பலம் : கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக
மத்திய பாஜக அரசு தொடர்ந்து
செயல்படுவதைக் கண்டித்து திமுக மாநில சுயாட்சி மாநாட்டை நடத்த இருக்கிறது. இதுபற்றி ஏற்கனவே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
வரும் ஆகஸ்டு 30ஆம் தேதி மாநில சுயாட்சி மாநாட்டை சென்னையில் திமுக செயல் தலைவர் கூட்டியிருக்கிற நிலையில், இம்மாநாட்டுக்காக அகில இந்திய தலைவர்கள் பலருக்கும் அழைப்பு அனுப்பியுள்ளார். கடந்தவாரம் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா டெல்லி சென்று அகில இந்திய தலைவர்களை சந்தித்து, ஸ்டாலின் எழுதிய கடிதத்தைக் கொடுத்து மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூத்த தலைவர்களான சரத்பவார், உமர் அப்துல்லா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒரே தளத்தில் கொண்டு வரும் திமுகவின் இந்த மாநாட்டில் காங்கிரஸ் சார்பில் யார் கலந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் தேர்தல் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 100க்கும் அதிகமானோர் மரணம்

BBC : தென் மேற்கு பாகிஸ்தானில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஒரு தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 128 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.2014-ல் இருந்து அந்நாட்டில் நடந்த மிகக்கோரமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
மாஸ்துங் நகரத்தில் நடந்த இத்தாக்குதலில் உள்ளூர் வேட்பாளரும் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் குழு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக, பண்ணு நகரத்தில் நடந்த இதே போன்றதொரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் நடந்த குண்டு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் வரும் ஜூலை 25 அன்று பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இத்தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதற்கிடையில் பிரிட்டனில் இருந்து நேற்று பாகிஸ்தானுக்கு திரும்பிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கைது செய்யப்பட்டார் .
அவருடன் வந்த அவரது மகள் மரியமும் கைது செய்யப்பட்டார். மரியமுக்கும் சமீபத்திய ஊழல் வழக்குத் தீர்ப்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்த நவாஸ் ஷெரீஃப் விமானம் மூலம் லாகூர் வந்து இறங்கினார்.

சீமான் குருமூர்த்தியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறாரா?

Murugan Kanna : "நாம் தமிழர் இயக்கம்" என்று இந்த
இயக்கத்தை தொடங்கியது யார்? என்று
கேட்டால் சி.பா.ஆதித்தனார் என்று அரசியல் தெரிந்தவர்கள் உடனே சொல்லி விடுவார்கள்...
சி.பா.ஆதித்தனார் தொடங்கிய ஒரு இயக்கத்தை சீமான் எனும் ஒரு சாதாரண சினிமாவில் நடிக்கும் நபருக்கு யாராவது தருவார்களா?.
அப்படி கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு சிபாரிசின் பின்னணி எவ்வளவு கனமாக இருக்க வேண்டும்!!.?.
தினத்தந்தியின் ஆடிட்டர் S.குருமூர்த்தி.
கையெழுத்து போடுபவர் வேறாக இருந்தாலும் நம்ம தலை இல்லாமல் தமிழகத்தில் அணு கூட அசையாது.
தமிழில் நன்றாக தேர்ச்சி பெற்று அதை வளர்க்க தகுதியான ஒரு சிறந்த நபர் இருக்கிறார். அவருக்கு இந்த பெயரை எனக்காக நீங்கள் தர வேண்டும் என்று ஒப்புதல் வாங்குகிறார் S.G.
சீமானை இயக்கமாக தொடங்க வைத்து விசுவாசத்துக்கு பின்னர் கட்சியாக மாற்றுகிறார்.சீமான் திருமணத்திற்கு தினத்தந்தி டிரஸ்ட் செலவு செய்த தொகை மட்டும் ரூ40 லட்சம். மற்றவை தனி.
எதற்காக சொல்கிறேன் என்றால் பிரதமருக்கு எதிராக பேசு என்றால் பேசுவார்.
பெரியாரை புகழ் என்றால் புகழ்வார்.திட்டு என்றால் திட்டுவார்.
விடுதலை புலிகளை பற்றி பேசு என்பார்.பேசுவார். இயற்கையை பற்றி பேசு என்பார். பேசுவார்.

நவாஸ் ஷெரீப், மகள் மரியம் அதிரடி கைது! ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாக். முன்னாள் பிரதமர்

  Veera Kumar - ONEINDIA TAMIL பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவர் மகள் மரியம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இஸ்லாமாபாத் சிறையில் அடைக்கப்பட்டனர். 
இதையொட்டி பாகிஸ்தான் முழுக்க பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பனாமா பேப்பர்ஸ்  ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.74 கோடி அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 நவாஸ் ஷெரிப், மகள் மரியம், மருமகன் சப்தார், இவர்களின் மகன்கள் ஹசன், ஹூசைன் ஆகியோரும் நீதிமன்றத்தால், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மரியத்துக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்டது. 

கொங்கு மண்டல ஆண்களுக்கு மணமகள் கிடைப்பதில்லை ... ஆண்கள் மட்டுமே அலைமோதும் கவுண்டர் சுயம்வரங்கள்

Thagadoor Sampath : பெண் குழந்தைகள் என்றாலே கள்ளிப்பால் ஊற்றியும்,
பாலையும், நெல்லையும் கலந்து ஊட்டி கொன்ற கூட்டம் இந்த கூட்டம். பார்ப்பனர்கள் கூட அடுத்தவர்களை த்தான்   கொல்வார்களே அன்றி , தங்களை அழித்துக் கொள்ளமாட்டார்கள்.
இன்று பெண் பிள்ளைகள் இன்றி தத்தளிக்கிறார்கள்.
முற்பகலில் விதைத்தது பிற்பகலில் விளைந்து கொல்கிறது.

வெள்ளி, 13 ஜூலை, 2018

கர்நாடக அணைகள் நிரம்பி .. ஆபத்து கட்டத்தில் .. நீரை திறந்து விட்டதை பாராட்டும் கன்னட அமைப்புக்கள் ..

tamil.thehindu.com/ இரா.வினோத் : தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட திறக்கக்கூடாது என காலங்காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த கன்னட அமைப்பினர், இப்போது காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவது நல்ல முடிவு என பாராட்டி வருகின்றனர்.
கர்நாடகாவில் கடந்த 2 மாதங்களாக தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்ப்பதால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த ஒரு வாரமாக கடலோர கர்நாடகா, மலநாடு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி, கபினி, ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.< காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்வதால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 4 அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கின்றன. நீர்வரத்து அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் அணையில் தொடர்ந்து நீரை தேக்கினால் பேராபத்து ஏற்படும் என கர்நாடக பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரித்தது.

திடீரென நிலத்திற்குள் புதைந்த கிணறு ... விடியோ .. அதிர்ச்சியில் கேரளா


கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.கனமழை தீவிரமடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள கிணறொன்று, நேற்று திடீரென பூமிக்குள் மூழ்கிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியுறச் செய்துள்ளது. கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் காரணமாக கிணறு பூமிக்குள் மூழ்கியுள்ளது என இதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து அச்சத்தில் உறைந்துள்ளதாக கூறப்படுகிறது.- முகநூல்

சீமான் ஒப்புதல் வாக்குமூலம் : ராஜாஜியிடம் தவறுகள் இல்லை .... குலக்கல்வி ....

Bilal Aliyar : ராஜாஜியிடம் குலக்கல்வி திட்டத்தை தவிர வேறு தவறுகள்
இல்லை: சீமான்
சமத்துவமும், பரந்த சமூக பொருளாதார, அரசியல் நிலையும் ஏற்பட வேண்டுமென்றால் சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்று நீதி கட்சி முதல், திராவிட இயக்கங்கள் அனைத்தும் செயல்பட்டு, அந்த சாதிய கட்டமைப்பை தூக்கி பிடித்து கொண்டிருந்த குலக்கல்வியையும், அதை நிறைவேற்ற துடித்த, பின்வாசல் வழியாக ஆட்சி பொறுப்பேற்ற ராஜாஜியையும் தீவிரமாக எதிர்க்காமல், மிக சாதாரணமாக கடந்து செல்ல சொல்வதன் மூலம் சீமான் அம்பலப்பட்டு நிற்கிறார்.
மாடு மேய்ப்பதற்கும், பால் கறப்பதற்கும், புண்ணாக்கு கணக்கு எழுதுவதற்கும் அரசு வேலை தரப்படும் என்று மேடையில் சிரித்து கொண்டே முழங்கியவர் தான், சீமான். அவரிடம் இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ மனு! வேதாந்தா வழக்கில் என்னையும் மனுதாரராக சேருங்கள்.

tamil.oneindia.com/kalai-mathi.:டெல்லி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தேசிய
பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கிராம மக்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து கடந்த மே மாதம் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது. தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி வேதாந்தா குழுமம் தெரிவித்தது.

சீரியல் நடிகைகளுக்கு வலை விரித்த விபச்சார புரோக்கர் - முக்கிய அமைச்சரின் மகன் சிக்கினார்

serial
வெப்துனியா :வாட்ஸ் ஆப் மூலம் நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வலை வீசிய இரண்டு புரோக்கர்களை சீரியல் நடிகை ஜெயலட்சுமி சாதுரியமாக போலீஸாரிடம் சிக்க வைத்துள்ளார்.
messageசினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் பல நடிகைகள் சினிமா துறையில் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளி உலகத்திற்கு சொல்லி வருகின்றனர். சமீபத்தில் கூட தெலுங்கு நடிகைகளை மூளைச்சலவை செய்து, புரோக்கர் ஒருவன் அமெரிக்காவில் பாலியல் தொழிலில்  ஈடுபடுத்தியதற்காக கைது செய்யப்பட்டான். இந்நிலையில் சென்னையில்  புரோக்கர் கும்பல் ஒன்று நடிகைகளுக்கு,  வாட்ஸ் ஆப் மூலம் கொச்சையான மெசேஜ்களை அனுப்பி வந்தன. அதில் தாங்கள் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அரசியல் பிரமுகர்கள், விஐபி, விவிஐபியுடன் நீங்கள் ரிலேஷன்ஷிப் வைத்துக் கொண்டால் சுலபமாக 30000 ரூபாயிலிருந்து 3 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என பல நடிகைகளுக்கு வலை வீசியுள்ளன.

நிர்மலா தேவி .. 1160 பக்கக் குற்றப் பத்திரிகை!

நிர்மலா தேவி வழக்கில் 1160 பக்கக் குற்றப் பத்திரிகை!மின்னம்பலம்: மாணவிகள் விவகாரம்
தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில், இன்று (ஜூலை 13) விருதுநகர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர் சிபிசிஐடி போலீசார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலா தேவி மீது, அந்தக் கல்லூரி மாணவிகள் சிலரைப் பாலியல் விவகாரத்தில் சிக்க வைக்க முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதன் பேரில், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மதுரை பல்கலைக்கழகத் துணைப்பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாகினர். இந்த விவகாரத்தில் மதுரைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆளுநர் மாளிகையைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட்டார் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்.

கோவை கல்லூரி மாணவி உயிரிழப்பு: பயிற்சியாளர் கைது! அதிமுக எம்பி தம்பிதுரையின் கல்லூரியில் ...

கல்லூரி மாணவி உயிரிழப்பு: பயிற்சியாளர் கைது!மின்னம்பலம்: கோவையில் பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பயிற்சியாளர் ஆறுமுகத்தைக் காவல்துறை கைது செய்துள்ளது. இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கோயம்புத்தூர் மாவட்டம் நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி. இவர், கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று (ஜூலை 12) இக்கல்லூரியில் என்எஸ்எஸ் பயிற்சி முகாம் தொடங்கியது. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் உட்பட மூன்று பேர், இந்த முகாமில் பயிற்சியளித்தனர். இந்தப் பயிற்சியின்போது மாணவி லோகேஸ்வரி இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதிக்கும்போது காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், அவர் மரணமடைந்ததாகத் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நீலகிரி யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும்

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் தினத்தந்தி  : நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. புதுடெல்லி,
நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள பகுதியில் யானைகளின் வழித்தடத்தில் நில ஆக்கிரமிப்பு செய்து ஓய்வு இல்லங்கள் (ரிசார்ட்) மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு தடை விதிக்குமாறு கோரி சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, முன்பு யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விவசாயிகள், ஓய்வு இல்லங்களின் உரிமையாளர்கள், குடியிருப்புவாசிகள் காலி செய்து, நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2011–ம் ஆண்டு உத்தரவிட்டது.

சசிதரூர் : இந்து பாகிஸ்தான்’ என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன்

மாலைமலர் :  இந்து பாகிஸ்தான்’ என்ற தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன்
என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா இப்போது உள்ள பலத்துடன் வெற்றியை பெற்றால், நம்முடைய ஜனநாயகம் பெரும் அழிவை எதிர்கொள்ளும். இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியது சர்ச்சையாகியுள்ளது. சசிதரூர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜனதா, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே சசிதரூர் தன்னுடைய கருத்தில் ஸ்திரமாக உள்ளார். ‘இந்து பாகிஸ்தான்’ என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறும் சசிதரூர் இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

வியாழன், 12 ஜூலை, 2018

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடைகளை திறக்க உயர்நீதி மன்றம் அனுமதி

மாலைமலர் : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சன்னிதி பகுதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்க அனுமதி வழங்கி ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்குள்ள கடைகளில் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இதனால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், அறைநிலையத்துறை முறையாக செயல்படவில்லை எனவும் குற்றம்சாட்டின.
இதையடுத்து, கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், முறையாக கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

10 தீர்மானங்கள் .. திராவிடர் கழக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அதிரடி ....

Devi Somasundaram: : சாரட்டு வண்டிக்கு கதறினதுல பத்தில ஒரு பங்கு
மாநாட்டு தீர்மானத்தை பற்றி பேசுவதில் பார்ப்பனியர்கள் அக்கரை காட்ட வாய்ப்பில்லை. ..நீங்களுமா??? ... நம்மை வளர்த்து கொள்ள நாமே அக்கரை காட்லன்னா பார்ப்பான் வந்து தடவி வளர்த்து விடுவானா.. ...
1.. ஜாதிமறுப்புத் திருமணம், விதவை மறுமணம், மணவிலக்குப் பெற்றோரை மறுவாழ்வுத் திருமணம் செய்துகொள்வேன். வர(ன்)தட்சணை வாங்குவது சுயமரியாதை இழக்கும் கொத்தடிமை முயற்சி, என்னை நான் ஒருபோதும் விற்க மாட்டேன் என்று சூளுரைக்கிறேன்.
2. கடவுள், மதம், ஜாதி, சினிமா, மது, மருந்து என்ற பலவகைப் போதைகளும், மூடநம்பிக்கைகளும் என் வாழ்வை அண்டாத பெரு நெருப்பாகவே வாழ்வேன்.
3. சுற்றுச் சூழலைத் தூய்மையாக்குவதிலும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படாது காக்கும் பொழுது ஒழுக்கத்தை நிலைநாட்டவும் என்னையே நான் ஒரு சமூகக் காவலனாக ஆக்கிக் கொண்டு வாழ்வேன்.
4. நல்ல உடல் நலமே, நல்ல உள்ளத்திற்கான ஊற்றுக்கண். உளநலத்திற்கான ஊற்றுக்கண் என்பதை உணர்ந்து வாழ்வதுடன் ஊர் நலம், உலக நலம் ஓம்பும் மானுடத்தின் உண்மைத் தொண்டனாக என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்வேன்.

அமித் ஷா :விருந்தாளிகளை வரவேற்றால் தான் சொர்க்கம் கிடைக்கும்

ஆலஞ்சியார் : விருந்தாளிகளை வரவேற்றால் தான் சொர்க்கம்
கிடைக்கும்..அமித்ஷா..
விருந்தாளி என்ற பெயரில் விஷம் கொண்டு வருகிறவனிடம் பாசம் காட்ட முடியாது பகைதான் காட்டமுடியும்.. வாயை திறந்தாலே பொய் .. ஊழலற்ற ஆட்சியாம்... சொல்கிறவரின் மகன் ஒரே வருடத்தில் 10000 மடங்கு பணம் சம்பாதித்த கதை தெரியாமல் இல்லை.. சொல்கிறவர் தலைமையில் செயல்படும் கூட்டிறவு வங்கியில் ஒரே வாரத்தில் ₹740 கோடி கருப்புபணம் முதலீடு செய்யபட்டதே அதற்கென்ன பெயர்...ஒருவன் ₹2000 கோடி பணத்தோடு பிடிபடுகிறான் .. மக்கள் ₹2000 ரூபாய்க்கு தெருவில் அல்லாடியபோது இவனுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது.. கரூரில் ₹500 கோடி கண்டெய்னர் பணம் .. எங்கிருந்து வந்தது போலீஸ் பாதுகாப்பில்லாமல் ₹10 கோடிக்கு மேல் பண இடமாற்றம் செய்யகூடாதென்ற விதி இருக்கும் போது .. போலியான வாகன எண்ணில் பணம் கடத்தபட்டதே யாருடையது இதெல்லாம் ஊழலில் சேராதா.. இந்தியா கண்ட மிக மோசமான ஆட்சி மோடி உடையதென்று விவரம் தெரிந்தவர்கள் கதைக்கிறார்களே ஏன் பதிலில்லை..

ஜாதிய குழுமங்களே எம்ஜிஆரின் அரசியல் முதுகெலும்பு..... வரலாறு

தேவர் எம்ஜியார் ஜானகி
LR Jagadheesan : எம்ஜிஆரின் ரசிகர் மன்றங்கள் ஜாதிகடந்தவை. அதற்கு ற்ற தமிழ்நாட்டின் பகுதிகள் எவை என்று ஒரு பட்டியல் போடுங்கள். தமிழ்நாட்டில் இன்னமும் ஜாதிவெறி தலைவிரித்தாடும் பகுதிகள் எவை, ஜாதித்திமிர் கொலைகள் நடக்கும் தமிழக பகுதிகள் எவை என்றொரு பட்டியலையும் போடுங்கள். 
காரணம் சினிமா என்கிற நவீனகலை வடிவத்தின் அடிப்படை இயல்பு அது. ஆனால் எம்ஜிஆரின் அரசியல் என்பது முழுக்க முழுக்க ஜாதி அரசியல். அல்லது ஜாதிபாதுகாப்பு அரசியல். திமுக என்கிற ஜாதிமறுப்பை வலுவாக பேசிய, ஆட்சியில் முன்னெடுத்த அரசியல் கட்சியின் வெம்மை தாங்காமல் அடைக்கலம் தேடி அலைபாய்ந்த "ஜாதி உணர்வுமிக்க" மூன்று அல்லது நான்கு முக்கிய ஜாதியக்குழுமங்களே எம்ஜிஆரின் அரசியல் முதுகெலும்பு.

வரலாற்று ரீதியில் எம்ஜிஆரின் அதிமுக அரசியல் செல்வாக்கு பெ
இவை இரண்டும் பெருமளவு பொருந்திப்போவது யதேச்சையானதல்ல.

கால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி !

வியாசர்பாடி முல்லைநகர் கால்பந்தாட்டக் குழுவினர், எதிரணிகளுக்கு எதிராக பந்து விரட்டுவதோடு மட்டுமல்ல, தமக்கு முட்டுக்கட்டையிடும் மேட்டுக்குடி ஆதிக்கத்துக்கு எதிராகவும் வாழ்க்கையை விரட்டுகின்றனர்.
Vyasarpadi football team
இங்கு வயது வித்தியாசம் தேவையில்லை, ஆர்வம் மட்டுமே போதுமானது
வினவு :உலகம் முழுவதும் 7.6 பில்லியன் மக்கள் தொகை இருக்குமென்றால் அதில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். ஆனால் ரசியாவில் நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா இல்லை. இனியும் இல்லை என்றே சொல்லலாம். ஏன் என்பது அனைவரும் அறிந்ததே!
கால்பந்து விளையாட்டு என்றாலே வீரர்கள் பிரேசிலின் நெய்மர், அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி, போர்ச்சுகல் கிறிஸ்டியானோ ரேனால்டோ ஆகியோர் நினைவில் வருவார்கள்.இவர்களைப் போல் “உலக கோப்பைப் போட்டியில் இந்தியாவிற்காக விளையாட வேண்டும்” என்ற கனவோடு சென்னை வியாசர்பாடி முல்லைநகர் கால்பந்து மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் தருண், ஏழாவது படிக்கும் மணிகண்டன், பத்தாம் வகுப்பு பாலமுருகன், மாணவிகள் விஜி, பூஜா, ……. இன்னும் நூற்றுக்கணக்கானோர். அந்த கால்பந்து மைதானத்தில் “STEDS” என்ற தங்கள் அணியின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸி டீ-சர்ட்டுகளை அணிந்துகொண்டு பந்தை  துரத்துகிறார்கள். அவர்களுக்கு இணையாக சிறுமிகள், பள்ளி-கல்லூரி மாணவிகள் என்று பாலின வேறுபாடு இன்றி பந்தை, மைதானம் முழுக்க விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆச்சரியம் நிரம்பிய நம் கண்கள் மைதானம் முழுக்க விரிகிறது!

ஜியோ பல்கலைக்கழகம் : என்னாது கெணத்தக் காணோமா ?

முகேஷின் மனைவியை கண்டு மயங்கிய மூமென்ட்
நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அம்பானியின் ஜியோ கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது மோடி அரசு. இதில் கூத்து என்னவெனில் ஜியோ பல்கலைக்கழகம் என்ற ஒரு பல்கலைக்கழகமே இன்னும் கட்டப்படக்கூட இல்லை.
ஜியோ பல்கலைக்கழகம்
ஆர்.எஸ்.எஸ். சேவகர் கோபால்சாமி

வினவு. மத்திய அரசு மூன்று அரசுக் கல்வி நிறுவனங்களையும் மூன்று தனியார் கல்வி நிறுவனங்களையும் “மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள்” (Institutions of Eminence) என அறிவித்துள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்கள் இந்த தகுதியைப் பெற விண்ணப்பித்திருந்த நிலையில்,  அவற்றில் இருந்து சிறப்பான கல்வி நிறுவனங்களைத் தெரிவு செய்வதற்காக திரு என். கோபால்சாமி தலைமையில் ஒரு சிறப்பு வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. தலைமைத் தேர்தல் ஆணையராக முன்பு பணியாற்றிய கோபால்சாமி, தற்போது ஆர்.எஸ்.எஸ்-ன் பரிவார அமைப்பான விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் வரும் யூ.ஜி.சி மேற்படிக் குழுவால் தெரிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களின் யோக்கியதைகளை ஆராய்ந்த பின் “சிறந்த கல்வி நிறுவனங்கள்” என அறிவித்துள்ளது.
இவ்வாறு தெரிவு செய்யப்படும் கல்வி நிறுவனங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் உலகளவில் முதல் 500 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பிடிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.

கிழிந்த ஜக்கியின் முகமூடி. எப்படித்தான் மக்கள் இந்த மாதிரி திருடர்களிடம் ....?

ஜாக்கி வாசுதேவ் பழைய படம்

.savukkuonline.com : 2013ம் ஆண்டு.  அந்த ஆண்டின் தொடக்கமே எனக்கு மிகுந்த மனச்சோர்வாக இருந்தது.  தனிப்பட்ட முறையில் பல்வேறு சிக்கல்கள்.  எனது நிலையைப் பார்த்த எனது நண்பர், உடனடியாக ஈஷா யோகாவில் சேர் என்றார்.  எனக்கு இந்த சாமியார்களை கண்டாலே அலர்ஜி என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.  இருந்தாலும் போய் சேர் என்றார்.  எனக்கு எரிச்சல். இருந்தாலும் அவர் பேச்சை தட்ட முடியவில்லை.  யோகா வகுப்புக்கு கட்டணம் 500 ரூபாய் என்றார்.
நானும் சரியாக 500 ரூபாய் எடுத்துக் கொண்டு  மாம்பலத்தில் நடந்த ஒரு ஈஷா யோகா வகுப்புக்கு சென்றேன்.  அவர்கள் கட்டணம் 750 ரூபாய் என்றார்கள்.   எனக்கு எரிச்சல் இன்னும் அதிகமானது.  நாளை தருகிறேன் என்று சொன்னதற்கு, இல்லை அண்ணா உடனே கட்ட வேண்டும் அண்ணா என்றார் அந்த ஆன்ட்டி.
உடனே நண்பரை அழைத்து, கட்டணம் 750 ரூபாய்.  என்னிடம் 500 ரூபாய்தான் இருக்கிறது என்றேன்.  அவர், சங்கர், கோவிச்சுக்காம ஏடிஎம் போய் எடுத்து அந்த க்ளாஸ்ல ஜாயின் பண்ணு என்றார்.  எரிச்சலோடு பணம் எடுத்து வந்து யோகா வகுப்புக்கு கட்டணம் செலுத்தினால், நீங்கள் அளித்த நன்கொடைக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80 Gயின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று இருந்தது.  எனக்கு இது திருட்டுத்தனம் என்று உடனே தோன்றியது. 

பெண் எஸ்.ஐக்கு ரூ.3 லட்சம் அபராதம்! நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கினார்

நக்கீரன்  : விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கிய பெண் எஸ்.ஐக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. சென்னை, மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அஷ்ரப். இவர் சென்னை மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, என் மகனுக்கும் முன்னாள் போலீஸ்காரரான ஜபாருல்லாகான் மகளுக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தேன். ஜபருல்லாகானும் அவரது மகனும் அளித்த ஆசை வார்த்தைகளை கேட்டு என் மகனும் அவர்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்துள்ளான். அதை வைத்து அவர்களும் 20 லட்சம் மதிப்பில் வீடு வாங்கியுள்ளனர். மேலும், என் மகனின் மாத சம்பளத்தையும் ஏமாற்றி வந்தனர். இதை என் மகன் என்னிடம் சொல்லி அழுதான், பின்னர் அவன் வேலை சம்பந்தமாக வெளிநாட்டுக்கு சென்றான்.

ராமநாதபுரம் 1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 12 வயதுச் சிறுவன்! ஆடு மேய்க்கவாம் ..

1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 12 வயதுச் சிறுவன்!மின்னம்பலம்: ராமநாதபுரத்தை அடுத்த இடையர் வலசு கண்மாய் பகுதிக்குள் 12 வயதுச் சிறுவன் ஒருவன் நீண்ட நாட்களாக ஆடு மேய்ப்பதாக "Child Line" அதிகாரிகளுக்கு இன்று (ஜூலை 12) தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மற்றும் சார்பு வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில், சிறுவன் புதுக்கோட்டை மாவட்டம், பேராவூரணி பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவரது மகன் என்பது தெரியவந்துள்ளது.

குரேஷியாவின் வெற்றி! உலக கோப்பை இறுதி போட்டிக்கு இங்கிலாந்தை வென்று ..


tamilthehindu :ரஷ்யாவில் நடந்து வரும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை குரேஷியா வெளியேற்றியது.  இதன் மூலம் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு குரேஷியா முதன் முதலில் முன்னேறியது.
பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, உருகுவே, போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நட்சத்திர வீர்ர்கள் இடம்பெற்றிருந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத நிலையில் குரேஷிய அணி முதன்முதலில்  இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கால்பந்து ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.< குரேஷியா அணியின் வெற்றியை அந்நாடு முழுவதும்  கால்பந்து ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஸ்டாலின் : 12 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு கஜானாவை அ.தி.மு.க அரசு காலி பண்ணியிருக்கிறது

M. K. Stalin : அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக அலங்கோலங்கள் குறித்து 2016-17
ஆம் ஆண்டிற்கான இந்திய தலைமை தணிக்கை கணக்காளரின் (சி.ஏ.ஜி) அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளில் வைக்கப்பட்ட இந்த அறிக்கையில் நிதி மேலாண்மை மற்றும் நிர்வாக தோல்விகள், அரசு கஜானாவிற்கு ஏற்படுத்திய பெருத்த நஷ்டங்கள் என்று அ.தி.மு.க அரசின் ஒட்டுமொத்த தோல்விகளும் அணிவகுத்து நிற்கின்றன.
இந்த தோல்விகளும், காலியாகிக் கொண்டிருக்கும் அரசு கஜானாவும் அ.தி.மு.க அமைச்சர்களும், அ.தி.மு.க முதலமைச்சர்களும் இந்த மாநிலத்தில் “கோமாளித்தனமான” ஆட்சியை எப்படி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற விவரங்கள் அடங்கிய ஒரு “என்சைக்ளோபீடியாவாக” தற்போது சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள சி.ஏ.ஜி. அறிக்கை அமைந்திருக்கிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அக்டோபர் 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1599.81 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்ட நாளில் உள்ள விலைக்குப் பதிலாக நிலக்கரியை இறக்குமதி செய்யும் நாளில் இருந்த விலையை மின் பகிர்மானக்கழகம் கொடுத்ததாலும், தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததாலும் இந்த மோசமான இழப்பை சந்திக்க வேண்டியதாகி விட்டது என்று சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
“நிலக்கரியின் சர்வதேச விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருந்த நேரத்தில் விலையை அதிகரித்துப் போடுங்கள் என்று ஒப்பந்ததாரர்களை மின் பகிர்மானக் கழகமே கேட்டுக் கொண்டுள்ளது" என்ற சி.ஏ.ஜி.யின் அறிக்கை பேரதிர்ச்சியாக இருக்கிறது.

இந்திய தேசிய இனங்களும் பார்ப்பனர்களும்

Palanivel Manickam : இந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில்
பார்ப்பனர்கள் எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்...
இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பார்ப்பனர்களுக்கு என்று சொந்தமாக நிலப்பகுதியோ அல்லது தனி மொழியோ இல்லை,
இந்தியா முழுவதும் அவர்கள் சிறுபான்மையாக சிதறி கிடக்கிறார்கள்
இந்தியா உடைந்து அந்தந்த தேசிய இனங்களின் கைகளில் செல்லுமானால் மிக மோசமாக பாதிக்கப்பட போவது பார்ப்பனர்கள் மட்டுமே.
இதை அவர்கள் நன்கு உணர்ந்தே வந்துள்ளார்கள்...!
வங்காள பார்ப்பனன் மீன் சாப்பிடவில்லை என்றால் செத்து போவான்,
கன்னட பார்ப்பனன் மீனை பார்த்தாலே செத்துப்போவான் என்பார்கள்...
உள்ளுக்குள்ளேயே அய்யர், அய்யங்கார், ராவ், சாஸ்திரி, சர்மா, பானர்ஜி, வடகலை, தென்கலை என பல்வேறு முரண்பாடு உள்ளவர்கள்....
ஆனால் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இவர்களை ஒன்றிணைப்பது பார்ப்பனியம், அந்த ஒற்றை புள்ளியில் தான் ஒன்று திரளுகிறார்கள்..!!
தேசிய இனங்களை அழித்தாவது இவர்கள் வாழ உருவாக்கப்பட்டதுதான் இன்றைய இந்தியா...

50,000 கடனுக்காக குடும்பத்துடன் கொத்தடிமையாக்கப்பட்ட இளைஞரின் கதை

BBC : முருகேசன் 'என் பதின்பருவத்தை கரும்பு தோட்டத்தில்
கொத்தடிமையாக வேலை செய்து தொலைத்துவிட்டேன். என் கல்வி, என் குடும்பம், என் சுதந்திரம் என எல்லாம் வெறும் ரூ.50,000 கடனுக்கு அடகுவைக்கப்பட்டது,'' மூன்று ஆண்டுகளாக வெளியுலகத்தைப் பார்க்காமல் கொத்தடிமையாக வேலைசெய்த 22 வயது முருகேசனின் வார்த்தைகள் இவை.
மீட்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, முருகேசன் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் கொத்தடிமை கண்காணிப்பு குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கொத்தடிமையாக வேலைக்கு செல்லவதை எதிர்த்து விழிப்புணர்வு ஊட்டுவது, மீண்டுவந்தவர்களுக்கு நிவாரணத்தொகை பெற்று கொடுப்பது என தன்னார்வலராக மாறியுள்ளார்.
வீடு கட்டிய கடனுக்காக அடிமையான குடும்பம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்பாடி கிராமத்தில் விவசாயக்கூலி குடும்பத்தை சேர்ந்த முருகேசன், அவரது தாய்,தந்தை மற்றும் அக்காவின் குடும்பத்தினர் என ஒன்பது நபர்கள், தங்களுக்கென ஒரு அறை கொண்ட வீட்டை கட்டுவதற்காக வாங்கிய ரூ.50,000 கடனுக்காக ஸ்ரீராமலு என்பவரிடம் மூன்று ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறுகிறார்.