Seshathiri Dhanasekaran : திராவிட லெனின் டாக்டர் டி எம் நாயர் 154 பிறந்தநாள் இன்று.
டாக்டர் டி.எம்.நாயர் நீதிக்கட்சியின் மூளையாக விளங்கி 1868 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையில் பிறந்தார்.
டாக்டர் டி.எம்.நாயர் தனது பள்ளிக்க்லவியை கேரளத்தில் முடித்த பின்பு உயர்கல்வி பெற சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அறிவியலை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்த டி.எம்.நாயர் சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். மெட்ரிகுலேசன் படித்த போது மூன்று ஆண்டுகளில் படிக்க வேண்டிய படிப்பை இரண்டு ஆண்டுகளில் முடித்தார். பள்ளிப்பருவத்திலேயே கூர்மையான அறிவும் கற்றுக் கொள்வதில் அதீத ஆர்வமும் அவருக்கு இருந்தது.
அறிவியல் ஆராய்ச்சிக்கு தகுதியான மாணவர் இவர் என்று அவருடைய பேராசிரியர்களால் பாராட்டப்பட்ட டாக்டர் டி.எம்.நாயர் சென்னை மருத்துவக் கல்லூரியில் சிறிது காலம் பயின்றார்.மேல்நாட்டில் மருத்துவப் படிப்பைத் தொடர எண்ணி இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எம்.பி.சி.எம் பட்டம் பெற்றார்.
சனி, 15 ஜனவரி, 2022
டாக்டர் டி எம் நாயர் 154 பிறந்தநாள்! .தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்னும் நீதிக்கட்சி யைத் தொடங்கினர்.
குடியுரிமை விழிப்புணர்வு பொங்கல்! இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்
இதனை உலகத்தமிழ் சொந்தங்களான அனைத்து தரப்பினருக்கும் உணர்த்துவதற்காகவும் ஆதரவு திரட்டவும் மறுவாழ்வு முகாம் மக்கள் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் அரசியல் பிரமுகர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பல்கலைக்கழக துறைசார் பேராசிரியர்கள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், மத்திய மாநில அரசு அதிகாரிகள் முதற்கொண்டு அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றனர். தற்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களிடமும் இது குறித்து கோரிக்கை வைத்திருந்தனர்.
முல்லைப் பெரியாறு: இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மின்னம்பலம் : பென்னிகுயிக் சிலை இங்கிலாந்தில் நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்தநாள் இன்று.
பாமகவில் மீண்டும் இணையும் தி.வேல்முருகன்.??? டாக்டருக்கு நெருக்கமானவர்கள் தூது.
கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் பாமகவில் இணைக்கும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், தன்னையும் பலர் அனுகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர் என்றும், ஆனால் இதுவரை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசிடமிருந்து நேரடியாக அழைப்பு வரவில்லை என்றும் தவக தி.வேல் முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 23,989 பேருக்கு கரோனா தொற்று: சென்னையில் 8978 பேர் பாதிப்பு; 10.988 பேர் குணமடைந்தனர்
.hindutamil.in :சென்னை: தமிழகத்தில் இன்று 23,989 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 29,15,948. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 6,34,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,47,974 .
இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 37 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 77,45,735 பேர் வந்துள்ளனர்.
சென்னையில் 8978 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 15,011 பேருக்குத் தொற்று உள்ளது.
* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 252 தனியார் ஆய்வகங்கள் என 321 ஆய்வகங்கள் உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை பைலட் சினிமா தியேட்டர் ஒன்று இருந்தது
Sivasankaran Saravanan : சென்னை ராயப்பேட்டையில் பைலட் சினிமா தியேட்டர் ஒன்று இருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். நிறைய ஆங்கிலப்படங்கள் அதில் தான் ரிலீஸ் ஆகும்.
அதன் பெயர்க்காரணம் குறித்து எனக்கு எப்போதும் சுவாரசியம் உண்டு.
சென்னையின் வரலாறுகளை தொகுத்துவருபவரான திரு. ஶ்ரீராம் அவரது வலைப்பக்கத்திலிருந்து தெரிந்துகொண்டபோது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
Pilot என்பது ஜப்பானை சேர்ந்த மிகப்பெரிய பேனா தயாரிக்கும் நிறுவனம். குறிப்பாக மையூற்றி எழுதும் fountain பேனாக்கள். இன்றும் pilot பேனா மற்றும் இங்க் வகைகள் முன்னணியில் உள்ளன.
1952ம் ஆண்டு சென்னையை சேர்ந்த திரு. பரஞ்சோதி ஆரோக்கியசாமி சஞ்சீவி என்பவர் ஜப்பான் பைலட் பேனா கம்பெனியிடம் லைசென்ஸ் பெற்று சென்னையில் The Pilot Pens Co Ind Pvt Ltd என்ற இங்க் பேனா தயாரிக்கும் தொழிலில் கால் பதிக்கிறார்.
நடிகை நந்திதா தாஸ் : நான் நடிச்சதுலயே ‘அழகி’ படம் மட்டும் தான் ஹிட் – அழகி 2 பற்றி மனம் திறந்த கதாநாயகி
tamil.behindtalkies.com : தமிழ் சினிமா வரலாற்றிலேயே பொன் மகுடம் சூடிய அழகி படம் வெளியாகி இன்றோடு 20 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது.
இதை கொண்டாடும் விதமாக பலரும் சோசியல் இதை வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமா உலகில் வெளிவந்த பிரபலமான படங்களில் ஒன்றாக அழகி படம் திகழ்கிறது.
இந்த படத்தை இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தது
மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்று சொல்லும். இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
தி.மு.க அரசு புதிரை வண்ணார் மக்களின் குரலுக்கு செவிமடுக்குமா?
Arumugam Selvi : தி.மு.க. அரசின் விடியல் பட்டியல் இனத்தவர்களுக்கு மட்டும் விடியவே மறுக்கிறதே?
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில் தென்மாவட்ட மக்களின் மிகவும் பிரசித்த பெற்ற புனிதமான கோவில்.
குறிப்பாக தென் மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் கிராமங்களில் இருந்து வந்து தங்கள் பிள்ளைகளுக்கு குலசாமியாக கும்பிட்டு தல முடி எடுத்து பெயர் சூட்டுவது வழக்கம்.
அவ்வாறு திரண்டு வருகிற ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு அவர்களின் குழந்தைகளுக்கு தலைமுடி இறக்கம் செய்வது பட்டியல் சாதியான புதிரை வண்ணார் மக்கள்,
நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள்.
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்த கோவில் நிர்வாகம் பெயர் அளவிற்கு நான்கைந்து பேரை மட்டுமே முடிஇறக்கம் செய்பவர்களாக பதிவேடுகளை பராமரித்து வருகிறது.
அவுஸ்திரேலியாவில் ஆணவக்கொலை முயற்சி - இலங்கை இளைஞனை காதலித்த பாகிஸ்தானிய பெண் மீது சரமாரி கத்திக்குத்து
sbs.com.au தமிழ் : அவுஸ்திரேலியளவில் அடிலெய்ட் என்ற இடத்தில் இலங்கை இளைஞனைக் காதலித்த பாகிஸ்தான் பெண்ணை குடும்பமே சேர்ந்து 'ஆணவக்கொலை' செய்வதற்கு முயற்சித்தார்கள் என்று தெரிவிக்கப்படுகின்ற சம்பவத்தில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணையை நிராகரித்த நீதிமன்றம் வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம்வரை ஒத்திவைத்துள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியா - அடிலெய்ட்டின் Blair Athol பிரதேசத்தில் வசித்துவந்த - பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட - 21 வயது முஸ்லிம் யுவதி ஒருவர், இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட - கிறிஸ்தவ இளைஞரைக் காதலித்தார் என்று கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாகக் கல்விகற்ற பல்கலைக்கழகத்தில் இந்தக் காதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளி, 14 ஜனவரி, 2022
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:24 காளைகளை பிடித்த கார்த்திக் முதலிடம்
BBC : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை பிடித்து முதலிடத்தை பிடித்திருக்கிறார், அந்த மண்ணில் பிறந்த இளைஞரான கார்த்திக்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது.
தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த கொரோனா தடுப்பு வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இந்த போட்டியில் 624 காளைகள் பங்கேற்றன.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு சுற்று என்று 25 பேர் என மொத்தம் 300 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
ஆறு சுற்றுகளில் சிறப்பாக மாடுகளைப் பிடித்த 25 வீரர்கள் 7வது சுற்றில் பங்கேற்றனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையாளர் உயிரிழப்பு!
மாலைமலர் : அவனியாபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மீடுபிடி வீரர்கள் பிடித்து விதவிதமான பரிசுகளை வென்றவண்ணம் உள்ளனர். இதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் முஸ்லீம் தோழர் அனீஸ் ஜாமீனில் விடுதலை!
ரிஷ்வின் இஸ்மத் : நன்றி அறிவிப்பு! செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.(101 : திருக்குறள்)
இன்று 13-1-2022 மாலை 5மணிக்கு தோழர் அனீஸ் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் அதிகமானோர் பங்களிப்பு உண்டு முகநூலில் அந்த செய்தியை மக்களிடம் கொண்டு சென்றவர்களில் திரு ஸ்ரீதர் சுப்ரமணியன் அவர்கள் திரு TVசோமு அவர்கள் திரு ஷாஜஹான் R அவர்கள் மற்றும் ஏனைய நட்பு சகோதரர்கள் முகநூலில் ஆதரவு தந்தார்கள்.
அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள், 300 வீரர்கள் களம் காணுகின்றனர்...!
தினத்தந்தி : மதுரை, பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான (இன்று) நடக்கிறது.
பாலமேட்டில் நாளையும், அலங்காநல்லூரில் 17-ந் தேதி நடக்கிறது. இந்தாண்டு கொரோனா காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 150 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும், பார்வையாளர்கள், மாடு பிடிவீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் என அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட்டு இருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
74 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த சகோதரர்கள் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் விளைவு
கலைஞர் செய்திகளை : பிறகு நெகிழ்ச்சி சந்திப்பு.. மகிழ்ச்சியில் கட்டித்தழுவி நினைவுகளை பகிர்ந்த சகோதரர்கள் !
ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் அரை நூற்றாண்டிற்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
1947ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளாக பிரிந்தது. இந்த பிரிவினைக் காரணாம இந்திய நாட்டைச் சேர்ந்த பலரும் பாகிஸ்தானிலும், பாகிஸ்தானைச் சேர்ந்த பலரும் இந்தியாவில் வசிக்கத் தொடங்கின.
அந்தவகையில், ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் அரை நூற்றாண்டிற்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் தற்போது நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சித்திக் மற்றும் ஹபீப். இவர்கள் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது குழந்தையான சித்திக் பாகிஸ்தானிலும், அவரது மூத்த சகோதரர் ஹபீப் இந்தியாவிலும் தங்கியுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் அங்கொடை லொக்காவிற்கும் புலிகளுக்கும் தொடர்பு?
ilakkiyainfo.con: விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் செயற்பாட்டாளரான சபேசன் உள்ளிட்ட சிலருக்கும், இலங்கை நிழல உலகதாதா அங்கொட லொக்காவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையைச் சேர்ந்த பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கோவையில் தலைமறைவாக இருந்தபோது கடந்த 2020 ஜூலையில் திடீர் மாரடைப்பால் இறந்தார்.
அவரது உடல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட்டமை தொடர்பாக அங்கொட லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையை சேர்ந்த வழகறிஞர் சிவகாம சுந்தரி, அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பொங்கல்: சென்னையிலிருந்து 6 லட்சம் பேர் பயணம்!
மின்னம்பலம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் 6 லட்சம் பேர் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வேலை,கல்வி காரணமாக சென்னை உள்ளிட்ட வெளியூரில் தங்கியிருப்பவர்கள் பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட விரும்புவார்கள். அதன் காரணமாக பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கில் சென்னையிலிருந்து மக்கள் வெளியேறுவார்கள்.
வியாழன், 13 ஜனவரி, 2022
மனைவி மாற்றும் குழுக்களில் இணைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கணவரை பிரிந்தனர்
மாலைமலர் : திருவனந்தபுரம் கேரள மாநிலம் கோட்டயம் கருக்கச்சால் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது கணவரே நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியதாக போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
கோட்டயம் போலீஸ் சூப்பிரண்டு இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவரை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, கேரளாவில் மனைவி மாற்றும் குழுக்கள் ரகசியமாக செயல்பட்டது தெரிய வந்தது.
பல்வேறு பெயர்களில் இன்ஸ்டாகிராம், டெலிகிராம், வாட்ஸ் அப்களில் இக்குழுக்கள் இயங்கி வந்ததும், இதில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரதமர் மோடியிடம் (ஆங்கிலத்தில்) விவரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! கொரோனாவை தடுப்பதில் தமிழகத்தின் பங்கு..
கலைஞர் செய்திகள் : தடுப்பதில் தமிழகத்தின் பங்கு: பிரதமர் மோடியிடம் ஆங்கிலத்தில் விவரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கொரோனா அலையை நிர்வகிப்பதில் ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழ்நாடு துணை நிற்கும் என பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (13-1-2022) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால பிணை கிடைத்தது
Jeyalakshmi C - Oneindia Tamil : டெல்லி: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் 4 வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார்.
“நகை பணத்துடன் சென்ற பெண்- காதலன் உள்ளிட்ட 4 பேரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு.. நெல்லியடி இலங்கை
வீரகேசரி : தவறுதலான தொலைபேசி அழைப்பின் (மிஸ்ட் கோல்) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது பெண்ணை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர்,
பெண்ணை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண்,
நேற்று முன்தினம் (11) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யுவதியின் தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.
நீட் விலக்கு: பிரதமரிடம் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின் .. மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் ..
மின்னம்பலம் : நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்தின் மத்திய நிறுவன கட்டடத்தையும் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது தமிழக அரசின் திட்டங்களைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், “மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசுக்கும் - குறிப்பாக, இந்தியப் பிரதமருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கயானா நாட்டு பொருளாதார கலாசார வாய்ப்புக்களை நழுவ விட்ட அதிமுக அரசு! அந்நாட்டு பிரதமர் வீராசாமி நாகமுத்து (தமிழர்) ..flashback news
ராதா மனோகர் : அதிமுக ஆட்சியாளர்கள் தவறவிட்ட நல்வாய்ப்புக்களில் இதுவும் ஒன்று.
தென் அமெரிக்காவில் உள்ள கயானா நாட்டு பிரதமராக இருந்த The Hon. Moses Veerasammy Nagamootoo MP (Tamil: மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் பற்றிய ஒரு செய்தி
இவர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அங்கு பிரதமராக இருந்தார்
அந்த காலக்கட்டங்களில் இவர் தமிழ்நாட்டோடு உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்ற ஆவலோடு தமிழக அரசோடு தொடர்பு கொண்டிருந்தார்
தமிழ் நாட்டோடு கல்வி பொருளாதார கலாசார மொழி தொடர்புகளை பேணுவதற்கு கயானா நாட்டு தமிழ் பிரதமர் வீராசாமி நாகமுத்து அவர்கள் கோரிக்கை விடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன .
புதன், 12 ஜனவரி, 2022
உத்திரபிரதேசம் - தேசத்தின் படுகுழி? மும்முனை நான்முனை போட்டிகளால்.. :
Satva T : உத்திரபிரதேசம் - தேசத்தின் படுகுழி:
உத்திரபிரதேசம் எனும் ஒரே மாநிலத்தில் 80 நாடாளமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 80 ல் 2014 ஒன்றிய தேர்தலில் 71/80 என்று பி.ஜே.பி வென்றது. அதேபோல 2019 ல் 61/80 என்று வென்றது. அதுமட்டுமல்லாது கடந்த பத்து ஆண்டுகளாக அங்கு பி.ஜே.பி மாநில ஆட்சி நடத்தி வருகின்றது.
இவ்வாறு ஒரே மாநிலத்தில் கணிசமான வெற்றியை பெறுவதால் ஒன்றியத்தில் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 ல் கணிசமான இடங்கள் அவர்களுக்கு ஒரே மாநிலத்தில் கிடைத்து விடுகிறது.
இவ்வாறு பி.ஜே.பி அங்கு தொடர்ந்து பாரிய வெற்றி பெறுவதற்கு ஒரே காரணம் தான் உள்ளது. அது உத்திரபிரதேசத்தில் எப்போதும் மும்முனை போட்டி அல்லது நான்கு முனை போட்டி இருக்கின்றது என்பதாகும்.
எடுத்துக்காட்டாக 2017 மாநில தேர்தலில் பி.ஜே.பி 39.6%, சமாஜ்வாதி+காங்கிரஸ் 21.8%, பகுஜன் சமாஜ் 22.2%, என்று வாக்குகள் பெற்றனர்.
லெஸ்பியன்.. உறவினர்கள் சூழ மோதிரம் மாற்றி கரம்பிடித்த 2 பெண் டாக்டர்கள்.. நெகிழ்ச்சியான காதல் கதை!
Shyamsundar - Oneindia Tamil :பஞ்சிம்: கோவாவில் தன்பாலின ஈர்ப்பு கொண்ட இரண்டு பெண் மருத்துவர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் தன்பாலின உறவு உட்பட அனைத்து வகையான "எல்ஜிபிடிக்யூ +" உறவுகளும் சட்ட ரீதியாக சரியானதே என்று கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுக்க பல நாடுகள் இந்த முற்போக்கான தீர்ப்பை வரவேற்றது.
இலங்கையில் பத்திரிகைகள் மூடப்படும் அபாயம் - காசுமில்லை, காகிதமும் இல்லை BBC
ரஞ்சன் அருண் பிரசாத் - பிபிசி தமிழுக்காக :
இலங்கையில் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக, நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் செய்தித் தாள்களை அச்சிடும் கடதாசிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஊடகத் தொழில் நலிவடையும் என்பதையும் கடந்து, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற வசதிகள் இல்லாத பின் தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் நாட்டு நடப்பு என்ன என்பதை அறிவதற்கான வாய்ப்புகளும் பறிபோகும் என்ற அச்சம் உண்டாகியுள்ளது.
ஆனால், ஊடக நிறுவனங்கள் இத்தகைய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளதை இதுவரை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.
தந்தை மீது வழக்கு - மகன் தற்கொலை: நீதி கிடைக்குமா?.. அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின்னம்பலம் : திருத்தணியில் தந்தை மீது வழக்குப் பதிவு செய்ததற்காகத் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த மகன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சரவணப்பொய்கை திருக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தன். இவர் அதிமுக திருத்தணி 15 ஆவது வட்ட துணைச் செயலாளராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது மகன் குப்புசாமி.
தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வரும் நிலையில், சரவணப்பொய்கை திருக்குளம் அருகே உள்ள ரேஷன் கடையில் பரிசு தொகுப்பை வாங்கியுள்ளார் நந்தன்.
அமைச்சர்கள் துறைகள் மாற்றம்: புதிய துறை!
மின்னம்பலம் : தமிழகத்தில் 3 அமைச்சர்களின் ஒருசில துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பைத் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்த சர்க்கரை ஆலைகள் துறை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கும்,
போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த விமான போக்குவரத்து, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும்
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தானிடம் இருந்த ஓஎம்சிஎல் எனப்படும் அயலக பணியாளர் கழகம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வசமும் மாற்றப்பட்டுள்ளது.
அதுபோன்று, புதிதாக இயற்கை வளத்துறை உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் துறையில் இருந்து சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் துறை பிரிக்கப்பட்டு, இயற்கை வளத்துறை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு 4,534 காளைகள், 1,999 மாடுபிடி வீரர்கள்... குவிந்த விண்ணப்பங்கள்! முன்பதிவு நிறைவு..
கலைஞர் செய்திகள் : மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு முன்பதிவு நிறைவடைந்த நிலையில் 4,534 காளைகளுக்கும், 1,999 மாடுபிடி வீரர்களும் என மொத்தம் 6,533 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு முன்பதிவு நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
கொரனோ பரவல் காரணமாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
Cafe Coffee Day சித்தார்த்தின் தற்கொலையில் இருந்து நிறுவனத்தை மீட்ட மனைவி! மாளவிகா சித்தார்த் ஹெக்டே
Cafe Coffee Day Owner சித்தார்த் இரண்டாண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த தொழில்கடன்களின் அழுத்தம் தாங்காமல் ஒருநாள் எல்லோரையும் விட்டு விலகிச் சென்று தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் ஒட்டுமொத்த தொழில் உலகத்தையே அதிர்ச்சியில் தள்ளியது.
தென் தமிழக தொழில் வளர்ச்சிக்கு பிரேக்: மெகா நிலவேட்டைக்காரரா கிருஷ்ணப்பிள்ளை?
ஆனால் சமீப காலமாக இம்மாவட்டங்களில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலைகளில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் தயங்குகின்றன என்றும், இங்கிருந்து வட இந்தியாவுக்கு சென்றுவிடுகிறார்கள் என்றும் தொழில் துறை வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
காற்றாலை மின் ஆலைகளுக்கு இங்கே என்ன பிரச்சினை? அவர்கள் ஏன் வெளிமாநிலங்களைத் தேடி ஓடுகிறார்கள் என்பதற்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபர் வளன் குமார் ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் போட்ட ரிட் மனுவுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் 5 பாஜக எம்.எல்.ஏக்கள் (ஒரு அமைச்சர் )சமாஜ்வாதி கட்சியில் (அகிலேஷ்) இணைந்தனர்!
Mathivanan Maran - Oneindia Tamil : லக்னோ: சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மெளரியா மற்றும் 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.
ஒரே நாளில் அதுவும் 4 மணிநேரத்தில் மொத்தம் 5 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது பாஜக மேலிடத்தை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அனைத்து கட்ட வாக்குகளும் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
திமுக ஆதரவாளர்களிடையே நீயா நானா? பெரியாரா? அம்பேத்கரா? .. ஏனிந்த போட்டி?
Vijayabaskar S : காலங்காலமாக பெரியாரும் அம்பேத்கரும் இணைந்து செயல்பட்டடவர்கள். அன்றைய நீதிகட்சி, திராவிடர் கழகம், திமுக தொடங்கி, இன்றைய திமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட மற்ற திராவிடர் இயக்கங்கள் அனைத்தும் பெரியாரையும் அம்பேத்கரையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக பார்க்கின்றன.
அம்பேத்கர் எழுதியதை பெரியார் எழுதியது எனவும்,
பெரியார் எழுதியதை அம்பேத்கர் எழுதியது எனவும் மாற்றினாலும் இரண்டும் ஒன்றுபோல் இருக்குமளவுக்கு கருத்தொற்றுமை உள்ளவர்கள் அவர்கள்.
தலித் மக்கள் அண்ணல் அம்பேத்கரை ஒப்பற்ற தலைவராக, கடவுளுக்கு இணையாக அல்லது மேம்பட்டவராக அன்றும் இன்றும் கருதுகிறார்கள்.
செவ்வாய், 11 ஜனவரி, 2022
உ.பி தேர்தலில் மாயாவதி போட்டியிடவில்லை! பாஜகவின் வெற்றிக்கு வசதியாகாவா?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச தேர்தலில் மாயாவதி போட்டியிடவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எம்பி சந்திரா மிஸ்ரா கூறியதாவது:-
உ.பியின் முன்னாள் முதல்வர் மாயாவதி வரும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. இருப்பினும் உ.பி.யில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும்.
மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் கும்பலில் இணைந்த 750 ஜோடிகள்- கேரளா - முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பு
மாலைமலர் : திருவனந்தபுரம்: மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் நிகழ்ச்சி நடந்த இடங்களில் போதை பொருட்கள் பரிமாற்றம் நடந்ததா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே கருக்காச்சல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த வாரம் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் தனது கணவர், அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்துவதாகவும், அதற்கு மறுத்தால் கொடுமைப்படுத்துவதாகவும் கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நேற்று முன்தினம் அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர்.
நீட் விடயம் அமித் ஷா எதிர்க்கட்சி எம்பிக்களை சந்திக்க இணக்கம் ! குடியரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்ற ஆலோசனை..
நீட் விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் குழுவை சந்திப்பதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இசைவு தெரிவித்துவிட்டார். வரும் ஜனவரி 17 ஆம் தேதியன்று தமிழக எம்பிக்கள் குழுவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்கிறார்.
கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட நீட் விலக்கு சட்ட மசோதா உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த மசோதா ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படவில்லை.
பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை.. உலகில் முதல் தடவையாக
கலைஞர் செய்திகள் : உலகில் முதல் தடவையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம், மனிதனுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
57 வயதான டேவிட் பென்னட் என்ற அமெரிக்க நபருக்கு இந்த அறுவை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழுவினால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கே பன்றியின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது.
07 மணித்தியாலங்கள் அறுவை சிகிச்சை இடம்பெற்றதுடன் குறித்த நபர், நலமுடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 17 ஆம் தேதி அரசு விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தினத்தந்தி : தமிழ்நாட்டில் வரும் 17 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 17 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 18 ஆம் தேதி தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை என்பதால், 17 ஆம் தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 17 ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால், வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !
வினவு -புதிய ஜனநாயகம் : எல்லாவிதமான விதிகளையும் சட்டங்களையும் தகர்த்து தமிழகத்தில் ஒரு பாசிச ஆட்சிக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஆர்.என் ரவி.
ஆர்.என். ரவி, நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்தபோது அந்த மாநில அரசு நிர்வாகத்தை சீர்குலைத்து பா.ஜ.க. ஆதரவு கட்சிகளுக்கு ஆள்பிடித்தவர். அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அடியாட்களை நிரப்பியவர். உளவுத்துறை அதிகாரியான அவர் நாகா போராளிக் குழுக்களிடம் நெருங்கி, அவர்களை சீரழித்து போர் நிறுத்த அறிவிப்பை ஏற்படுத்தியவர். நாகாலாந்திலிருந்து ஆளுநர் ரவி வெளியேறிய நாளை மக்கள் வெடிவைத்துக் கொண்டாடினர். ரவியின் பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சியினை பத்திரிகைகள் புறக்கணித்தன. இப்படிப்பட்ட இழிபுகழ் வாய்ந்தவரும் பாசிஸ்டுகளின் கையாளுமான ஆர்.என். ரவி, தமிழகத்தில் தான் பதவியேற்றது தொடங்கி இன்றுவரை தனக்கு கொடுக்கப்பட்ட கையாள் வேலையை கனகச்சிதமாக அமல்படுத்தி வருகிறார்.
கேரளா நடிகை பாவனா திலீப் மீதான பாலியல் வழக்கு பற்றி பேட்டி
மின்னம்பலம் : கேரளாவில் 2017ஆம் ஆண்டு, படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
கேரள அரசியல் வட்டாரத்தையும், திரையுலகையும் இந்த சம்பவம் அதிர வைத்தது. இது சம்பந்தமான வழக்கு தற்போது வேகமெடுத்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட நடிகை பாவனா ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தான் எதிர்கொண்ட அவமானங்களைப் பற்றி சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஜோடியை மாற்றும் குடும்ப விழா; மனைவிகளை விற்கும் ஆண்கள்.. கேரளாவில்
நக்கீரன்: சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் குரூப் இன்டர்காம் குரூப் என ஏற்படுத்தி, அதன்மூலம் அறிமுகமாகும் நபர்களுக்கு தங்களது மனைவிகளை விபசாரத்துக்கு அனுப்பி தொழில் செய்யும் ஏழு வாலிபர்களை கேரளா பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரில் வசிக்கும் ஒரு இளைஞர் தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் வாங்கி வா என கூறி துன்புறுத்தியுள்ளார்.
திங்கள், 10 ஜனவரி, 2022
உதயநிதி- சபரீசன் பிரிக்க முயற்சி: குடும்பப் பதற்றம்
மின்னம்பலம் : வைஃபை ஆன் செய்ததும் டெலிகிராமில் சில படங்கள் வந்து விழுந்தன. திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் மாப்பிளை சபரீசன் ஆகியோரின் படங்கள்தான் அவை.
என்ன திடீரென இவர்கள் படம் வருகிறதே என்று யோசிப்பதற்குள், அடுத்த டெலிகிராமில் செய்தி வந்தது.
“கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுக தலைவரான ஸ்டாலினின் மகன் உதயநிதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஐபேக் ஆலோசனை கொடுத்தது. ஆனால் உதயநிதி திருவாரூரில் நிற்கப் போகிறார் என்று திமுகவினர் பேசத் தொடங்கினர். இது பெரும்விவாதமாகவே மாறியது. இந்நிலையில் திருவாரூர் போன்ற தொகுதியில் நிற்பதை விட சென்னைக்குள்ளேயே சேஃப்டியான தொகுதியான தனது தாத்தா கலைஞர் வெற்றிபெற்ற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் நின்றார் உதயநிதி ஸ்டாலின். அந்தத் தொகுதியை குறிவைத்து கிட்டத்தட்ட பணிகளை தொடங்கி செய்துகொண்டிருந்த பாஜகவின் குஷ்பு திடீரென தொகுதி மாற்றப்பட்டார்.
முத்தையா முரளிதரன் வேடத்தில் ஸ்லம் டோக் தேவ் படேல் .. ஆங்கிலத்திலும் வெளியாகிறது " 800" - Dev patel replacing Vijay Sethupathi in Muththia Muralidharan bio pic?
பிரச்சனையை வளர்க்க விரும்பாத விஜய்சேதுபதி அந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில், பிரபல நடிகர் ஒருவர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
muttaiah-muralidharan - Dev patel இந்திய சினிமா தொடங்கியதே ஹரிச்சந்திர மகாராஜாவின் பயோபிக்கில் தான். கர்ணன், கட்டபொம்மன் என ஏகப்பட்ட பயோபிக் படங்களை பார்த்து வளர்ந்த ரசிகர்கள் தற்போது விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் மீது ஆர்வம் கொண்டுள்ளனர்.
60 வயது மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே வந்து பூஸ்டர் தடுப்பூசி!
நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10/01/2022) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், அரசு முதன்மைச் செயலாளர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மாநகராட்சியின் சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது
மாலைமலர் : 300 மாடுபிடி வீரர்களை கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.
சென்னை: ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.
இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு.
தோழர் இளஞ்செழியன் .. இலங்கை சமூகநீதி சுயமரியாதை திராவிட இயக்கங்களின் முன்னோடி! தமிழ் பௌத்த சங்க நிறுவனர்!
“எனது வாழ்நாள் முழுவதும், தந்தை நாட்டிற்காகவும் புரட்சிக்காகவும் உள்ளத்தாலும் உடலாலும் சேவை செய்துள்ளேன். இந்த உலகத்திலிருந்து நான் மறையும் போது, இன்னும் நீண்ட நாள் இருந்து மேலும் அதிக சேவை செய்ய முடியாமல் போய் விட்டதே என்பதற்hககவே அல்லாமல் வேறு எதற்காகவும் வருந்த மாட்டேன். நான் இறந்த பின், எனது இறுதி சடங்குகளைப் பெரியளவில் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். முக்களின் நேரமும் பொருளும் விரையமாக்கப்படாமல் இருப்பதற்காகவே இதைக் கூறுகின்றேன். “
என ஹோ சி மின் தம் உயில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
தோழர் காத்தமுத்து இளஞ்செழியன் பற்றி எழுத நினைக்கின்ற போது மேற்குறித்த நினைவுகள் நெஞ்ஞை நெருடுகின்றது. அவர் வாழ்ந்த காலம், காலத்தின் சூழ்நிலை, அச்சூழ்நிலையில் அவர் இயங்கியமுறை எளிமையான வாழ்க்கை, மக்களை நேசிக்கின்ற பண்பு என்பன ஹோ சி மின்னுடைய வாழ்வின் சில பகுதிகளோடு பொருத்திப் பார்க்க கூடியதாக உள்ளது. எவர்ரொருவருடைய வாழ்வும் பணிகளும் மனித வாழ்வின் சிறந்த இலக்கணமாக திகழ்கின்றதோ அத்தகையோரின் வாழ்வு சமூக முக்கியத்துவம் உடையவையாகின்றது. இளம்செழியன் இத்தகையோரில் ஒருவராவார். அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்வாழ் நாள் ப+ராவும் ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்தவர்.
நடிகையின் அலறல் வீடியோவை நடிகர் திலீப் திரும்ப திரும்ப பார்த்து ரசித்தார் - பிரபல இயக்குனர் பகீர் வாக்குமூலம்
tamil.asianetnews.com : நடிகை கடத்தல் வழக்கு குறித்து இயக்குனர் பாலசந்திரகுமாரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் கொச்சியில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாக்கு மூலம் அளித்தார்.
கேரளாவில் 2017 ஆம் ஆண்டு நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இதில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலையாள நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஓபன்னீர்செல்வம் மீதும் மகன் ரவீந்திரநாத் மீதும் வழக்குப்பதிவு!
மின்னம்பலம் : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் மற்றும் போடி தொகுதியில் போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்து தவறான தகவல்களை அளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி செயலாளர் மிலானி என்பவர் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
ரூ.70 திருடியதாக கொடூர தண்டனை.. 10 வயது சிறுமி உயிரிழப்பு.. போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்
Vigneshkumar - e Oneindia Tamil : திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமி குறித்த போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் சமீபத்தில் வாய் மற்றும் வலது தொடையில் சூட்டுக் காயங்களுடன் 10 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அச்சிறுமி சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதால் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி மருத்துவமனைக்கு வந்த போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பான விசாரணையைத் தொடங்கினர். அப்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
மனித நேயத்தை பரப்பும் சுத்த சன்மார்க்க நெறி! தனி வழிபாட்டு முறையாக அங்கீகரிப்பதே சரி!
makkalathikaram.com - மக்கள் அதிகாரம் - : மனித தன்மையற்ற சனாதன பிடியிலிருந்து பெரும்பான்மை மக்களை விடுவிப்பதற்காக பல்வேறு தத்துவஞானிகள் போராடியுள்ளனர். அந்த பார்ப்பன சனாதன எதிர்ப்பு மரபில் மிக முக்கியமானவர் வள்ளலார்.
மனித நேயத்தை பரப்பும் சுத்த சன்மார்க்க நெறி!
தனி வழிபாட்டு முறையாக அங்கீகரிப்பதே சரி!
பொதுக்கூட்டம்- கலை நிகழ்ச்சி – ம.க.இ.க கலைக்குழு
ஜனவரி 22, 2022 சனிக்கிழமை, மாலை 5 மணி
வடலூர் பேருந்து நிலையம் அருகில், வடலூர்.
“சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்” என்று நான்கு வர்ணங்களையும் சாதி ரீதியான அடக்குமுறைகளையும் நியாயப்படுத்தும் கீதை, மனுநீதி வழிவந்தவர்களுக்கு எதிராக “சாதியும் மதமும் தவிர்ந்தேன் சாத்திரக்குப்பையும் தணர்ந்தேன்” என்று சாதியும் மதமும் தவிர்த்து தனி வழியைக் கண்டவர் வள்ளலார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி வரும் கொடூரமான, மனித தன்மையற்ற சனாதன பிடியிலிருந்து பெரும்பான்மை மக்களை விடுவிப்பதற்காக பல்வேறு தத்துவஞானிகள் போராடியுள்ளனர். அந்த பார்ப்பன சனாதன எதிர்ப்பு மரபில் மிக முக்கியமானவர் வள்ளலார்.
டாஸ்மாக் பார் ஏலத்தில் செந்தில் பாலாஜியும், சபரீசனும் கூட்டணியா?
கட்சிக்காரர்களையே காயடிக்கிறார்களா?
ஆளும் கட்சித் தலைமை ஒரு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது என்பதற்கு டாஸ்மாக் பார் டெண்டர் விவகார அணுகுமுறையே சாட்சி!.
கட்சித் தலைமையின் தலைக்குள் கார்ப்பரேட் முதலாளி வந்து உட்கார்ந்து கொண்டுள்ளதன் அடையாளமாகத் தான் இதை பார்க்க முடிகிறது என்கிறார்கள் இரண்டாம் கட்டத் தலைவர்கள்!
ஞாயிறு, 9 ஜனவரி, 2022
வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் அவர்களின் ஒரே நம்பிக்கை..' மவுனம் கலைத்த மாயாவதி- திடீர் அட்டாக் ஏன்
Vigneshkumar - Oneindia Tamil : லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இதுவரை அமைதியாக இருந்து வந்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி திடீரென பாஜகவைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபைத் தேர்தல் குறித்த தேர்தல் ஆணையம் சமீபத்தில் தான் அறிவித்தது.
வரும் பிப். 10 முதல் தேர்தல் தொடங்குகிறது.
இதில் பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகள் பேச்சை நம்பி வேலை தேடி தமிழ்நாடு வந்த இலங்கை இளைஞர்: கைது செய்த காவல்துறை
பிரபுராவ் ஆனந்தன் - பிபிசி தமிழுக்காக : இலங்கை சிறையில் தமிழக மீனவர்களுடன் ஏற்பட்ட நட்பினால் வேலை தேடி தமிழ்நாடு வந்த இலங்கை இளைஞர் ஒருவர் வேலையும் கிடைக்காமல் மீண்டும் தன் தாய் நாட்டுக்கு திரும்பவும் முடியாமல் தவிர்த்து வந்தார். அவர் மீண்டும் இலங்கைக்கே கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்ற போது ராமேஸ்வரம் தமிழ்நாடு கடலோர காவல் குழும போலீசாரிடம் பிடிபட்டார்.
இந்திய நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா!
மின்னமலம் : பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், 400க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பாதிப்பில் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லியில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் தான் இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 4 முதல் 8ஆம் தேதி வரை நாடாளுமன்ற ஊழியர்கள் 1,409 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 402 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களது மாதிரிகள் தற்போது ஒமிக்ரான் மாறுபாடு உறுதிப்படுத்தலுக்காக மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் தொலைந்த குழந்தை பல மாதங்களுக்கு பிறக மீட்பு
BBC : ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் அவசரத்தில் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்துக்கு இடையே தொலைந்து போன குழந்தை பல மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
காபூல் நகரம் தாலிபன்களின் வசம் சென்ற பிறகு, ஆப்கானிஸ்தானை விட்ட வெளியேற பல்லாயிரக்கணக்கானோர் விமானநிலையத்துக்கு விரைந்து கொண்டிருந்தபோது பிறந்து இரண்டு மாதமே ஆகியிருந்த, சோஹைல் அஹமதி என்ற அந்தக் குழந்தை காணாமல் போனது.
அந்த குழந்தையை காபூல் நகரைச் சேர்ந்த ஹமீத் சஃபி என்ற டாக்சி ஓட்டுநர் தனது வீட்டுக்கு கொண்டு சென்று பராமரித்து வந்திருக்கிறார். கடந்த நவம்பரில் குழந்தையின் புகைப்படத்துடன் ராய்ட்ர்ஸ் செய்தி வெளியிட்ட பிறகு அவரிடம் குழந்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன் : நான் பெரியாரின் கொள்கைகளை விட்டு விலகமாட்டேன்
செல்லபுரம் வள்ளியம்மை : முன்னாள் அமைச்சர் திருமதி சுப்புலெக்ச்சுமி ஜெகதீசன் : நான் எந்த கோயிலுக்கும் செல்வதில்லை நான் எந்த சாமியையும் கும்பிடுவதில்லை.
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பிறந்தவள் என்ற முறையில் தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு
நான் மட்டுமல்ல என் தந்தையும் பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதன் காரணமாக ஊர் தடை போட்ட நேரத்திலும் என்னை உயர்கல்வி கற்பதற்கு திருச்சியில் கொண்டுவந்து என்னை ஒரு கல்லூரியில் சேர்த்தார்
சாதாரண நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்த எங்கள் வழக்கம் எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் பெண்பிள்ளைகளை கல்வி கற்க அனுமதிக்க மாட்டார்கள்.
அப்படியும் மீறி சில பணக்கார குடும்பங்களில் இருக்க கூடிய குழந்தைகள் பள்ளி இறுதிவரை படிப்பார்கள். அதற்கு மேல் வெளியூருக்கு எல்லாம் அனுப்பி கல்வி கற்கின்ற வாய்ப்பே கிடையாது
தோழர் பாருக் கொலைக்கு பெரியார் இயக்கங்களும் ஒரு காரணமா?
பெரியாரிய இயக்கங்கள் சிறுபான்மை ஆதரவு என்ற பெயரில் செய்யும் மடத்தனங்கள் அளவற்றது.
இஸ்லாமிய அடிப்படை வாதத்தை பெரியார் இயக்கங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை!
Thameem Tantra : திராவிடர் விடுதலை கழகத்தை சார்ந்த பாரூக் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலையை செய்ததாக அஸ்ரத் என்பவர் கோர்ட்டில் சரணடைந்துள்ளார். பாரூக் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தீவிரமாக எதிர்த்தவர். அதை பொறுத்துகொள்ளமுடியாமல் அமைதி மார்க்கத்தின் வழியில் பாரூக்கை அல்லாஹ்விடம் பேச அனுப்பிவைத்தார் அஸ்ரத். சரி இந்த கொலைக்கு எந்த அளவு இஸ்லாமிய அடிப்படைவாதம் காரணமோ, அதே அளவு பெரியாரிய இயக்கங்களும் காரணம் என்று நான் உறுதியாக சொல்லுவேன்.
பெரியாரிய இயக்கங்கள் சிறுபான்மை ஆதரவு என்ற பெயரில் செய்யும் மடத்தனங்கள் அளவற்றது.
Noam Chomsky அமெரிக்காவில் இருந்து கொண்டே அதன் கண்களில் விரலை விட்டு ஆட்டுபவர்.
சுமதி விஜயகுமார் : மொழியியலாளர், தத்துவவியலாளர், அறிவாற்றல் விஞ்ஞானி, வரலாற்றாசிரியர். அரிசோனா பல்கலைக்கழகம், Massachusetts Institute of Technologyகளில் பேராசிரியராக பணிபுரிந்தவர்.
150 நூல்களுக்கு மேல் எழுதியவர். இதற்காகவெல்லாம் அவரை இந்த உலகம் கொண்டாடவில்லை. அமெரிக்காவின் காலடியில் இருந்து கொண்டே அதன் கண்களில் விரலை விட்டு ஆட்டிய கியூபாவை இந்த உலகம் எதற்காக கொண்டாடுகிறதோ அதற்காக தான் இவரையும் கொண்டாடுகிறது.
இவர் அமெரிக்காவில் இருந்து கொண்டே அதன் கண்களில் விரலை விட்டு ஆட்டுபவர்.
கேரளா பள்ளிகளில் இனி டீச்சர் என்றே அழைக்கவேண்டும்! No சார் - மேடம் - பாலின சமத்துவத்துக்கான அடுத்த படி
கலைஞர் செய்திகள் : ஆசிரியர்களை சார் அல்லது மேடம் என அழைக்கக் கூடாது என பாலக்காட்டில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்று அறிவித்துள்ளது.
மாணவர்களிடையே பாலின பாகுபாட்டை களையும் வகையில் அண்மையில் கேரளாவில் இருபாலின மாணாக்கர்களுக்கும் பொதுவான சீருடை அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து தற்போது அதே மாநிலத்தில் ஆசிரியர்களை சார் அல்லது மேடம் என அழைக்கக் கூடாது என பாலக்காட்டில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்று அறிவித்துள்ளது.
மதிமுக ஓ பி சி தீர்ப்பை வரவேற்று அறிக்கை. ஆனால் திமுகவை குறிப்பிட மறுப்பு.. கூட்டணி மாறுகிறதா மதிமுக?
துரை வைகோ அறிக்கை: அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) 27 சதவிகிதமும், பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கி, கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி மத்திய அரசு ஆணை வெளியிட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வை எழுதிய மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்ததால் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தமுடியவில்லை. இதன்காரணமாக, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதைக் கண்டித்து, கடந்த டிசம்பரில் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
எம்.ஜி.ஆர் முதல் வடிவேலு வரை இணைந்து நடித்த ரெங்கம்மா பாட்டியின் இன்றய நிலை
tamil.indianexpress.com/ : எம்.ஜி.ஆர் முதல் வடிவேலு வரை படங்களில் குணச்சிதிர வேடத்தில் நடித்துவந்த பிரபல நடிகை இப்போது உடநிலை பாதிக்கப்பட்டு தனது சொந்த கிராமத்தில், இருப்பதற்கு வீடுகூட இல்லாமல் விதிக்கு வந்துள்ள சம்பவம் வெளியாகி சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் தோல்வியடைந்தவர்கள் மட்டுமல்ல சில சமயங்களில் வெற்றி அடைந்தவர்களும் பிரபலமானவர்களும் கூட நலிந்து போவது உண்டு. அதுதான் சினிமா என்ற மாய உலகத்தின் யதார்த்த முகமாக உள்ளது. ஒரு திரைப்படத்தின் ஹீரோ, ஹீரோயின், வில்லன் நடிகர்களைப் போல குணச்சித்திர நடிகர்களும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.
முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள பாரிய கடற்கலம் !
வீரகேசரி : முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் இன்று (08) பாரிய கடற்கலம் ஒன்று தலைகீழாக புரண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது.
சுமார் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாக காணப்படும் இந்த கடற்கலம் செம்மலை கிழக்கு நாயாறு கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் கடலில் தலைகீழாக புரண்ட நிலையில் கரை ஒதுக்கியுள்ளது.
இன்று அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள் குறித்த கடற்கலம் கரை ஒதுங்கியுள்ளதை கண்டு உரிய தரப்புகளுக்கு அறிவித்துள்ளனர்.
போத்தீஸ் - சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ...
Govindaraji Rj | Samayam Tamil : சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஜவுளிக்கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இதுவரை சுமார் 22 கோடி பேரை தாக்கியுள்ளது. இந்தியாவில் 3,071 பேர் தற்போது வரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 41,986-ஐ கடந்துள்ளது.
இந்த நிலையில், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் என்பது மூன்றாவது அலை பரவல் மற்றும் சமூக பரவலாக உருவெடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு 11,000-ஐ நெருங்கியுள்ளது. சென்னையில் ஒருநாள் பாதிப்பு ஐந்தாயிரத்தை கடந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றும் ஓடிடி தளங்கள் - யாருக்கு லாபம்? BBC
ஆனால் இப்போது ஓடிடியில் படம் பார்ப்பவர்கள் மட்டுமல்ல தங்கள் படம் வெளிவர வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா வர்த்தகத்தையே மாற்றியமைத்துள்ளது இந்த 'ஓவர் த டாப்' (over the top) என்று சொல்லக்கூடிய ஓடிடி தளங்கள்.